புதன், 28 மார்ச், 2012

சோனியா அகர்வால் பிற‌ந்த‌ நாள் மார்ச் 28,



சோனியா அகர்வால் (பிறப்பு - மார்ச் 28, 1982, பஞ்சாப்), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை (நடிகர்தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாறு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன.




நடித்த தமிழ்த் திரைப்படங்கள் 
2006 - புதுப்பேட்டை
2006 - திருட்டுப்பயலே
2005 - ஒரு நாள் ஒரு கனவு
2005 - ஒரு கல்லூரியின் கதை
2004 - 7ஜி ரெயின்போ காலணி
2004 - மதுர
2003 - கோவில்
2003 - சக்செஸ் (Success)
2003 - காதல் கொண்டேன்

டி. கே. பட்டம்மாள் பிற‌ந்த‌ நாள் மார்ச் 28,


டி. கே. பட்டம்மாள் பிற‌ந்த‌ நாள் மார்ச் 28,
டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் (மார்ச் 28, 1919 - ஜூலை 16, 2009) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப்பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். 1962-ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடெமி விருது, 1971-ல் பத்மபூசன், 1998ம் ஆண்டில் பத்மவிபூசன், தேசியகுயில், சங்கீதகலாநிதி, கலைமாமணி என பல விருதுகளை வென்றவர். புகழ் பெற்ற பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர்[2][3]. மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.
வாழ்க்கைக் குறிப்பு 
அலமேலு என்ற இயற்பெயருடைய “பட்டா” எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள் தமிழ்நாடு காஞ்சிபுரத்திற்குஅருகில் உள்ள தாமல் என்ற ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர். தாயார் காந்திமதி (ராஜம்மாள்) ஒரு சிறந்த பாடகி. அக்காலக் குடும்ப மரபுக்கேற்ப ராஜம்மாள் என்றும் பொது மேடைகளிலோ அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களின் முன்னிலையிலோ பாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் அந்த மரபுகளையும் தாண்டி பட்டம்மாள் தனது 4 ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார். அவருடன் உடன்பிறந்த மூன்று சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி.கே. ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள். பட்டம்மாள் 1939 ஆம் ஆண்டில் ஆர். ஈசுவரன் என்பாரைத் திருமணம் செய்ய்துகொண்டார்.
இசைத் துறையில்
பட்டம்மாள் முறையாக கருநாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார். தெலுங்குஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார். 1929 ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், 1932 இல் எழும்பூர்மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார்[4]. பின்னர் காங்கிரஸ் கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக்கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார்.பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர் பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார். பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள் ஜப்பான், சிங்கப்பூர், பிரான்சு, ஜெர்மனி,அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய 'அகிகோ'வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.

ஞாயிறு, 18 மார்ச், 2012

கவிஞர் முத்துலிங்கம் பிற‌ந்த‌ நாள் மார்ச் 20


கவிஞர் முத்துலிங்கம் (பிறப்பு: மார்ச் 20, 1942) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதியவர், கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.
வாழ்க்கைக் குறிப்பு
கவிஞர் முத்துலிங்கம் சிவகங்கை மாவட்டம், கடபங்குடி என்னும் சிற்றூரில் 1942இல் பிறந்தார். சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தவர். தனது 15ஆவது வயதில் முதல் கவிதை எழுதினார்.
திரைப்படத் துறையில் ...
1966 இல் முரசொலி இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். தி.மு.கவிலிருந்து 1972 இல் எம்.ஜி.ஆர் விலகியதை அடுத்து, எம்.ஜி.ஆர் ரசிகனாயிருந்த இவர், முரசொலியிலிருந்து விலகி "அலையோசை" பத்திரிகையில் சேர்ந்தார். அங்கிருந்தபோது இயக்குனர் பி.மாதவனின் அறிமுகம் கிடைத்தது. மாதவன் தயாரித்த பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாட்டை முதன் முதலாக எழுதினார்.
அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார். உழைக்கும் கரங்கள் படத்தில் கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில் என்ற பாடல் தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினார்.
இயற்றிய சில பாடல்கள்..
சங்கீத மேகம் (உதய கீதம்)
தஞ்சாவூரு சீமையிலே (பொண்ணுக்கு தங்க மனசு)
தங்கத்தில் முகமெடுத்து (மீனவ நண்பன் 1977)
வெள்ளிப் பணங்களை (கூட்டுப்புழுக்கள்)
காஞ்சிப் பட்டுடுத்தி (வயசுப்பொண்ணு 1978-79 ஆண்டுக்கான சிறந்த பாடலுக்கான விருதை தமிழக *அரசிடமிருந்து பெற்ற பாடல்)
ஆறும் அது ஆழமில்ல (முதல் வசந்தம்)
பட்டுக்கன்னம் தொடடுக்கொள்ள (காக்கிச்சட்டை)
இதழில் கதை எழுதும் (உன்னால் முடியும் தம்பி)
கூட்டத்திலே கோயில்புறா (இதயக்கோயில்)
சின்னஞ்சிறு கிளியே (முந்தானை முடிச்சு)
தேவன் கோயில் தீபம் ஒன்று (நான் பாடும் பாடல்)
மணியோசை கேட்டு எழுந்து (பயணங்கள் முடிவதில்லை)
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் (ஊருக்கு உழைப்பவன்)
மாஞ்சோலை கிளிதானோ (கிழக்கே போகும் ரயில் 1978 தமிழக அரசின் தங்கப்பதக்கம் பெற்ற பாடல்)
இன்னும் பாடல்கள் பல ....

ஞாயிறு, 4 மார்ச், 2012

நாசர் பிறந்த நாள் மார்ச் 05


நாசர் (பிறப்பு - மார்ச் 05, 1958, செங்கல்பட்டு), புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.திரைக்கதை,வசனம்,பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அனைத்துவகை வேடங்களிலும் சிறப்புற நடித்து தடம் பதித்தவர்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் நத்தம் என்னும் கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த நாசர், செங்கல்பட்டிலுள்ள புனித யோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C.)யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் சென்னைக்கு குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார்.
கலை வாழ்க்கைப் பயணம்
தமது நாடக பட்டறிவை முன்வைத்து திரையுலகில் கால் பதிக்க முயன்று தோற்றார்.வறுமை தாங்காது தாஜ் கோரமண்டல் விடுதியின் சேவைப்பகுதியில் சே,ஃந்து பணியாற்றியிருக்கிறார். திரைத்துறைக்கு முயன்ற அதே நேரம் கதை,கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தார்.அவற்றில் சில பிரசுரமானது.
சென்னை திரைப்பட கல்லூரியில் பயின்று நடிப்புத்துறையில் பட்டயம் பெற்றார். இதன் முன்னர்,தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் நடிப்பு பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார். இவரது ஆர்வத்தினால் இயக்குனர் கே.பாலசந்தர் கல்யாண அகதிகள் என்ற படத்தில் வாய்ப்பளித்தார்.அன்று துவங்கி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
மகேந்திரனின் தொலைக்காட்சிப்படம் காட்டுப்பூக்கள் மற்றும் சேனாதிபதி இயக்கிய பனகாடு இவரது நடிப்புத்திறனை உலகிற்கு பறை சாற்றியது. 1995இல் அவதாரம் என்ற திரைப்படத்தை தாமே இயக்கி நடித்தார். தேவதை என்ற படத்தை 1997இல் இயக்கி நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
அவரது குறிப்பிடத்தகுந்த படங்கள்: தேவர் மகன் (1992), குருதிப்புனல் (1996), பம்பாய் (1995).
பிற சிறப்பு படங்கள்
ஏகன் (2008)
குவிக் கன் முருகன் (இந்தி/தமிழ்)
ஒன்பது ரூபா நோட்டு
பிராக் (இந்தி)
ஏக் - த பவர் ஆப் ஒன் (இந்தி)
குரு மிதுன் சக்கரவர்த்திக்கு தமிழ் டப்பிங்
நாயகன்
வேலைக்காரன்
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
தேவர் மகன்
கோபுர வாசலிலே
மைக்கேல் மதன காமராசன்
ரோஜா
வரவு எட்டணா செலவு பத்தணா
மகளிர் மட்டும்
அவதாரம்
கோவில்
தமிழன்
போக்கிரி
படையப்பா
வர்ணஜாலம்
குருதிப்புனல்
அவ்வை சண்முகி
இருவர்
காதலர் தினம்
ஜீன்ஸ்
புதிய பாதை
முகம்
ஹே ராம்
பூவெல்லாம் கேட்டுப்பார்
தில்
விரும்புகிறேன்
அன்பே சிவம்
Morning Raga (ஆங்கிலம்)
ஜோடி
சந்திரமுகி
மும்பை எக்ஸ்பிரஸ்
அன்னியன்
திஷ்யூம்
சண்டி (தெலுங்கு)
கௌதம் SSC (தெலுங்கு)
இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
பொய் சொல்லப் போறோம்.
இயக்குனராக
பாப்கார்ன் (2003)
மாயன் (2001)
தேவதை (1997)
அவதாரம் (1995)
விருதுகள்
நந்தி விருதுகள்
அவரது தெலுங்கு திரைப்படம் சண்டியில் நடிப்பிற்காக நந்தி விருது பெற்றார்.
தமிழக அரசு விருதுகள்
சிறந்த நடிகர் - ஆவாரம் பூ
சிறந்த எதிர்மறை நடிகர் - தமிழ்
சிறந்த துணை நடிகர் எம் மகன்
ஆந்திர அரசு விருதுகள்
சிறந்த எதிர்மறை நடிகர் - சண்டி
பட்டங்கள்
தமிழக அரசின் கலைமாமணி
தென்னிந்திய நடிகர் சங்கம் - கலைச்செல்வன்
ந‌ன்றி விக்கிபீடியா