ஞாயிறு, 26 ஜூன், 2016

பின்னணி பாடகர் ஏ .எம் .ராஜா பிறந்த நாள் ஜூலை 01



பின்னணி பாடகர் ஏ .எம் .ராஜா பிறந்த நாள் ஜூலை 01 
ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா (ஜூலை 1, 1929 - ஏப்ரல் 7, 1989) தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி.

வாழ்க்கைக் குறிப்பு
ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார்.

திரையிசைப் பாடகராக
இசையார்வம் கொண்ட ஏ.எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார் கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச்.எம்.வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வு செய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப் பகுதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்றைக் கேட்க நேர்ந்த ஜெமினி எஸ். எஸ். வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப்படமான சம்சாரம் திரைப்படத்தில் தலைப்புப் பாடலைப் பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.

1951 இல் கே.வி. மகாதேவன் ஏ.எம்.ராஜாவை அவரது குமாரி என்ற படத்தில் அழியாத காதல் வாழ்வில்... என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கருநாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப்பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான முகமது ரஃபி மற்றும் தலத் மெக்மூத் ஆகியோர் பாடும் முறைமைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடாது தனக்கே உரித்தான பாணியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா.

துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ. எம். ராஜாவை தமிழில் நீங்காப் புகழ்பெறச்செய்தன. சிற்பி செதுக்காத பொற்சிலையே, தென்றல் உறங்கிய போதும் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். மேலை இசையின் சாயல்கொண்ட துள்ளலான ஆடாத மனமும் ஆடுதே, பாட்டுப் பாடவா பார்த்துப் பேச வா, ஓகோ எந்தன் பேபி போன்ற பாடல்களிலும்கூட ஒரு இனிமையான மென்மையைச் சேர்ப்பது அவரது குரல். மைனர் லைஃப் ரொம்ப ஜாலி போன்ற பாடலகளையும் அவர் தன் பாணியில் பாடியுனார். முறையான கர்நாடக இசைப்பயிற்சி உள்ளவரென்பதனால் ஏ. எம். ராஜா மரபானமுறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக்கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித் தெளிவுடன் இயல்பாக பாடினார். மீண்ட சொர்க்கம் படத்தில் வரும் கலையே என் வாழ்க்கையின் வாகீச்வரி ராகத்தில் அமைந்த பாடல். தேன்நிலவு படத்தில் வரும் காலையும் நீயே ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தது.

அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட வாடிக்கை மறந்ததும் ஏனோ, கண்மூடும் வேளையிலும் போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட நிலவும் மலரும், இதய வானின் உதய நிலவே, கண்ணாலே நான் கண்ட கணமே போன்றவை அவரது குரலின் அழகை முழுக்கக் காட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ. எம். ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மாசிலா உண்மைக்காதலே (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்),, கண்களின் வார்த்தைகள் புரியாதோ' (களத்தூர் கண்ணம்மா) போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.

ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ. எம். ராஜா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. பி. பி. ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகி, ஜெமினி கணேசனுக்காகப் பாடத்துவங்கும் வரையிலும், ஜெமினியின் பாடற்குரலாகவே விளங்கியவர் ஏ. எம். ராஜா. ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய படங்களில், கல்யாணப்பரிசு, மிஸ்ஸியம்மா, மனம் போல மாங்கல்யம், பூலோக ரம்பை, ஆடிப்பெருக்கு ஆகியவை புகழ்பெற்றவை.

நடிகராக
ஏ.எம்.ராஜா சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக்கலைஞனைப் பற்றிய படமான 'பக்க இந்தி அம்மாயி' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். அந்தப்படம் இந்தியில் பாடோசான் என்றபேரில் மறுவாக்கம் செய்யப்பட்டபோது அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப்படம் சிலகாலம் கழித்து மீண்டும் 'பக்க இந்தி அம்மாயி' என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஏ.எம்.ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் நடித்தார்.

1955இல் மகேஸ்வரி என்ற படத்தின் அழகு நிலவின் பாவனையிலே என்ற பாடலின் ஒத்திகையின்போது ஏ.எம்.ராஜா பாடகி ஜிக்கியிடம் தன் காதலை தெரிவித்தார். அது திருமணத்தில் முடிந்தது. ஜிக்கி ஏ.எம்.ராஜா தம்பதியின் குழந்தைகளில் சந்திரசேகர் ஓரளவு தந்தையின் குரலையும் இசைத்திறனையும் கொண்டவர்.

ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் தான் பம்பாய்க்குச் சென்று இந்திப்படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப்பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் 'ன்' படத்துக்காக. இதேபடத்தின் தெலுங்கு தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். பகுத் தின் ஹயே போன்ற படங்களுக்கும் அவர்கள் பாடினர். ராஜாவின் பாடும் முறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். கன்னடத்தில் அதி மதுர அனுராகா போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ.எம்.ராஜா பாடினார். சிங்களப் படத்தில்கூட அவர் பாடியிருகிறார்.

இசையமைப்பாளராக
இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த "சோபா". அது ஒரு பெரும் வெற்றிப்படம். 1960ல் வெளிவந்த பெல்லி காணுகா அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக்கியது. 1959இல் வந்த கல்யாணப்பரிசு இயக்குநர் ஸ்ரீதரின் முதல் படம். அக்காலத்து மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்று அது. தமிழில் இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவுக்கும் அதுவே முதல் படம்.

ஸ்ரீதரின் இயக்குனத் திறமைக்காக மட்டுமன்றி பாடல்களுக்காகவும் மிக்க புகழ் பெற்றிருந்த படம் இது. "வாடிக்கை மறந்தது ஏனோ" போன்ற காதல் பாடல்கள் "காதலிலே தோல்வியுற்றாள்" போன்ற துயரப்பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, தேன் நிலவு, விடி வெள்ளி போன்ற ஸ்ரீதரின் படங்களுக்கும் ஆடிப் பெருக்கு போன்ற பல வேறு படங்களுக்கும் இசை அமைத்தார்.

ஆடிப்பெருக்கு என்ற படத்தில் பி. சுசீலா பாடிய 'காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..' என்ற பாடல். சுசீலாவின் உச்சத்திற்குபோகும் திறனுக்குப் பதிலாக ஆழத்திற்குச் (base) செல்லும் திறனை வெளிப்படுத்தும்.

பிற திரைப்படங்கள்
விடிவெள்ளி (திரைப்படம்)
வேறு மொழிகளில்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்மொழிகளிலும் உச்சப்புகழுடன் இருந்த பாடகர் ஏ.எம்.ராஜா மட்டுமே. 1952இல் தட்சணாமூர்த்தியின் இசையமைப்பில் 'லோகநீதி' என்ற படம் வழியாக மலையாளத்தில் ஏ.எம்.ராஜா நுழைந்தார். அவர் தெலுங்கராக இருந்ததால் சில மலையாளச்சொற்களை உச்சரிப்பதில் குளறுபடி இருந்தது. ஆனாலும் மலையாளிகள் அவரை தங்கள் சொந்தப்பாடகராக ஏற்றுக் கொண்டனர். கேரளத்தின் முதல் 'சூப்பர் ஸ்டாரா'ன சத்யனின் குரலாக புகழ்பெற்ற ஏ.எம்.ராஜா அறுபதுகளில் கிட்டத்தட்ட ஒரு நட்சத்திரப் பாடகராகவே விளங்கினார். .

ராஜாவின் பல முக்கியமான பாடல்களுக்கு தேவராஜன் இசையமைத்தார். ராஜா பாடிய பெரியாறே பெரியாறே போன்றபாடல்கள் தமிழ்நாட்டிலும் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தன. பொதுவாக எவரையும் புகழ்ந்து சொல்லாதவரும் குறைவாகப் பேசுபவருமான தேவராஜன் ராஜாவின் குரலின் இனிமையையும் சுருதி சுத்தத்தையும் மட்டுமில்லாது அவரது இனிய குணத்தையும், அர்ப்பணிப்பையும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். வடக்கு கேரளத்தின் காதல்பாட்டுகளான 'மாப்பிளைப்பாட்டு'களின் சாயலில் அமைந்த பல பாடல்களை ராஜா பாடியிருக்கும் விதம் அந்தப் பண்பாட்டின் சாரத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்து இன்றும் மலையாளிகளின் நெஞ்சங்களில் வாழ்கிறது. உதாரணமாக 'உம்மா' படத்தில் வரும் 'பாலாணு தேனாணு ' என்றபாடலில் என் சைனபா ! என்ற அழைப்பில் ராஜா தன் குரல்மூலம் அளிக்கும் உணர்ச்சிகரமான நெகிழ்வு அதை மறக்கமுடியாத காதல்பாடலா க்குகிறது. கேரளத்தின் என்றும் அழியாத இசைப்பாடல்களில் பல ஏ.எம்.ராஜாவின் குரலில் ஒலிப்பவையே. காச கங்கையுடெ கரையில்.. போன்றபாடல்களை மலையாளத் திரையிசையின் 'கிளாசிக்'குகளாகவே சொல்லலாம்.

தெலுங்கில் ஏ.எம்.ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சரித்திரம் படைத்த வெற்றிகள். 1959ல் அப்பு சேஸி பாப்பு கோடு படத்தில் இடம்பெற்ற 'மூகாவைனா எமி லே' [தமிழில் 'போதும் இந்த ஜாலமே' ]இன்றும் ந்திராவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். 1954 'விப்ரநாராயணா' படத்தில் இடம்பெற்ற 'சூடுமடே செலியா' 'பாலிஞ்சர ரங்கா', 1957ல் அக்கா செல்லுலு ப்டத்தில் இடம்பெற்ற அந்து மாமிடி போன்றபாடல்களை தெலுங்கு திரையிசை மறக்கவேயில்லை. தமிழில் நீங்காப் புகழ்பெற்ற 'மாசிலா உண்மைக்காதலே' தெலுங்கில் வந்த 'பிரியதமா மனசு மரேனா' என்ற பாடத்தான். [லிபாபா 40 தொங்கலு]. அலாதீன் அற்புத தீபம் படத்தில் இடம்பெற்ற 'அண்டால கொனெட்டிலோனா' [1957] 'அமர சந்தேசம் 'படத்தில் இடம்பெற்ற 'ஏதோ நவீன பாவம்' என அவரது அழியாப்பாடல்களின் பட்டியலைப் பெரிதும் நீட்டமுடியும்.

பிற்காலம்
நடுவே திரைவாழ்க்கையில் ஏ.எம்.ராஜாவுக்கு ஓர் இடைவெளி விழுந்தது. தன் மெல்லிசைக்கச்சேரிகள் வழியாக அவர் வாழ்க்கையை நடத்தினார். பல வருடங்கள் கழித்து எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைபபளர் வி. குமார் ஏ.எம்.ராஜாவை அவரே அமைத்துக்கொண்ட அஞ்ஞாதவாசத்திலிருந்து மீட்டு பாடவைத்தார். ரங்கராட்டினம் படத்துக்காக ஏ.எம்.ராஜா பாடிய முத்தாரமே உன் ஊடல் என்னவோ? அன்று மிகப்பெரிய ஒருஅலையாக நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டது. புகுந்தவீடு படத்துக்காக ராஜா பாடிய செந்தாமரையே செந்தேனிதழே... அடுத்த அலை. இரு பாடல்களுமே சங்கர் கணேஷ் இசையமைத்தவை. 1973ல் வீட்டுமாப்பிள்ளை படத்தின் வழியாக இசையமைப்பாளராகவும் ஏ.எம்.ராஜா மறுவருகை புரிந்தார். அதில் வந்த ராசி நல்ல ராசி ஒரு வெற்றிப்பாடல். 1975ல் 'எனக்கொரு மகன் பிறப்பான்' படத்திற்காகவும் ஏ.எம்.ராஜா இசையமைத்தார். இக்காலகட்டத்தில் 'தாய்க்கு ஒரு பிள்ளை', 'வீட்டுக்கு வந்த மருமகள்', 'பத்துமாத பந்தம்', 'அன்பு ரோஜா', 'இது இவர்களின் கதை' போன்ற பல படங்களுக்காக தொடர்ந்து பாடினார். 1970ல் ஏ.எம்.ராஜா மலையாளத்தில் 'அம்ம எந்ந ஸ்திரீ' படத்திற்கு இசையமைத்தார். ஜிக்கியும் எழுபதுகளில் ஒரு மீள்வரவை நிகழ்த்தினார். 1970ல் 'காதலெனும் காவியம்' முதல் 1993 ல் இளையராஜா- விஸ்வநாதன் இசையில் 'செந்தமிழ்பாட்டு' படத்தில் 'வண்ணவண்ண மெட்டெடுத்து' வரை அந்த பயணம் நீண்டது.

மறைவு
ஏ.எம்.ராஜா தன் கடைசிநாள்வரை பாடகராக இயங்கிக்கொண்டு இருந்தார். 1989, ஏப்ரல் 7 ஆம் நாள் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டாலுமூடு என்ற ஊரில் உள்ள பகவதி கோயிலில் இசைநிகழ்ச்சி முடிந்து தன் குழுவினருடன் தொடருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். உதவியாளனாக வந்த ஒரு புதிய பையன் தொடருந்தைத் தவறவிட்டு விட்டான் என்று எண்ணி கவலைகொண்டு நாகர்கோயில் - நெல்லை நடுவே வள்ளியூர் என்ற ஊரில் புகையிரத நிலையத்தில் இறங்கி தேடினார். ரயில் புறப்படவே ஓடிவந்து ஏறமுயன்றவர் கால்தவறி ரயிலின் அடியில் விழுந்து நசுங்கி உருக்குலைந்து இறந்தார்.


மெல்லிசை பாடுவதில் இந்திப் பாணியைப் புகுத்தியவர் ஏ.எம்.ராஜா. இவரது பாட்டும் இசை அமைப்பும், சலசலப்பு இல்லாத சுகமான ராகம். ஐம்பதுகளின் ராஜா இவர். இன்னிசையை விரும்பும் பலர், இன்றும் இவரது ஒலிநாடாக்களை நாடுகிறார்கள்.... தென்றலில் தவழ்ந்துவரும் குரல்களைக் கேட்டிருப்பீர்கள், குரலில் தவழ்ந்து வரும் தென்றலைக் கேட்டதுண்டா? மென்மையான மெல்லிசையைக் கேட்டிருப்பீர்கள், மென்மையே மெல்லிசை ஆனதைக் கேட்டதுண்டா? சுமார் அரை நூற்றாண்டுக்கு முன், மந்தமாருதமாய் வீசத் தொடங்கிய ஏம்.எம்.ராஜாவின் மெல்லிசையை நீங்கள் செவிகுளிரக் கேட்டிருந்தால் நிச்சயம் உண்டு.... ! இந்த ராஜா, ஜெமினி வாசனின் மோதிர விரலால், குட்டு வாங்கி அல்ல, ‘ஷொட்டு‘ வாங்கி, பின்னணி பாடத் தொடங்கியவர். பின்னணிப் பாடகர்கள் சிறந்த இசை அமைப்பாளர்கள் ஆவதில்லை என்கிற பொது விதியை மாற்றி, தான் இசை அமைத்த ஒரு சில படங்களிலேயே முத்திரை பதித்தவர். நாட்காட்டி இரண்டாயிரத்தை தாண்டி குதித்தோடிக் கொண்டிருக்கும் இன்றும், நம் செவி மடங்களில் சதிராடிக் கொண்டிருக்கும் குளு குளு சங்கீதத்திற்கு சொந்தக்காரர். மேலோட்டமான மெல்லிசை என்பது புல்லின் இதழில் நழுவும் பனித்துளி. காலச்சூரியன் கண் சிமிட்டுவதற்க முன் அது காணாமல் போகும். ஆனால் ராஜாவின் மெல்லிசைப் பாணி, அழகான மெட்டுக்கள், கருத்துள்ள வரிகள் என்ற பலங்களுடன் வந்ததால், காதுக்கு மட்டுமல்ல, கருத்திற்கும் குளர்ச்சியாக உள்ளது.

      ஏ.எம்.ராஜா பிறந்தது ஆந்திரப் பிரதேசத்தின் தென் மாவட்டமான சித்தூர். களி தெலுங்கும் கவின் தமிழும் கலந்தொலிக்கும் அந்த மாவட்டத்தில் ராமாபுரம் என்றொரு ஊர்.

மன்மதராஜுவின் வேண்டுதல்

      இந்த நூற்றாண்டின் முற்பகுதியில், அங்கே வாழ்ந்தவர் மன்மதராஜு அவருக்கும் பக்கத்து ஊரான ரேணுகாபுரத்து லக்ஷமம்மாவிற்கும் பிறந்த முதல் குழந்தை நாகம்மா. அதன் பிறகு, ஏழு ஆண்டுகளுக்கு வேறு பிள்ளை இல்லை. ஆண் பிள்ளை வேண்டுதலுடன் ரேணுகாபுரத்தில் ஒரு பிள்ளையார் கோவில் கட்டினார் மன்மதராஜு அவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆண் குழந்தை பிறந்தது.

மனிதன் நினைப்பதுண்டு....

        வாரிசைக் கொடுத்த கடவுள், மன்மதராஜுவின் ஆயுசை எடுத்துக் கொண்டான். குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் மன்மதராஜு மரணம் அடைந்தார். ஒரு மாதக் குழந்தையாக தந்தையை இழந்தவர் ஏ.எம்.ராஜா. ஏமல மன்மதராஜு ராஜா. ரேணுகாவுரத்தில் ராஜாவின் பள்ளி நாட்கள் தொடங்கின. படிப்பு நன்றாக வந்தது. நல்ல பாட்டும் வந்தது. ‘ராஜா சிறுவனாக இருந்த போதே அவன் எங்கு சென்றாலும் அவனைப் பலர் பாடச் சொல்லுவார்கள்‘ என்று நினைவு கூர்கிறார் ராஜாவின் மூத்த சகோதரி நாகம்மா. (ராஜாவைப் பற்றி ஜிக்கியிடம் பேசிக் கொண்டிருந்த போது தற்செயலாக நாகம்மாவை சந்திக்க நேர்ந்தது. ராஜாவின் பிறப்பு / இளம் பிராயம் குறித்து அரிய தகவல்கள் கிடைத்தது.) படிப்பும் பாட்டுப் பயிற்சியும் பத்தாவது முடித்து, இன்டர்மீடியட் படிப்பிற்காக வேலூரில் உள்ள ஊரீஸ் கல்லூரியில் ராஜா சேர்ந்தார். படிப்பிலும் கவனத்தைச் சிதறவிடாமல், வேலூர் தமிழ் இசைக் கழகத்தில் நரசிம்மலு நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். “வேலூரில் முஸ்லிம்கள் நிறைந்த கஸ்பா பகுதியில் இருந்தோம். ஜன்னல் பக்கத்தில் உக்காந்துகிட்டு, புல்புல் தாராவை வாசிப்பான். அப்படியே இந்தி சினிமாப் பாட்டையெல்லாம் ராஜா பாடுவான். அவன் பாட்டைக் கேட்க ஜன்னலுக்கு வெளியே ஒரு கூட்டம் சேர்ந்துடும். சினிமாப் பார்க்க காசில்லேன்னா, கொட்டகைக்குப் பின்னால் நின்னுகிட்டு பாட்டை யெல்லாம் கேப்பான்.“ தமக்கை நாகம்மாவின் நினைவுகள் இவை. பட்டப்படிப்பிற்காக, சென்னை வந்தார் ராஜா. பச்சையப்பன் கல்லூரியின் விடுதியில் தங்கி பி.ஏ. படித்து வந்தார். கல்லூரி இசைப் போட்டியில் வென்ற ராஜாவின் குரலைப் பதிவு செய்ய விரும்பியது ஹெச்.எம்.வி. இசை நிறுவனம்.

ஜெமினி வாசனின் அழைப்பு

       ‘ஓ....ஹ்ருதய ராணி‘, ‘எந்த தூரம் ஈ பயணம்‘ என்று தாய்மொழி தெலுங்கில் ராஜா எழுதி, மெட்டமைத்து பாடிய பாடல்கள் பதிவாயின. ‘ஓ.... ஹ்ருதய ராணி‘ பாடலை பலர் விரும்பிப் கேட்டார்கள். இந்தக் கால கட்டத்தில் சம்சாரம் என்ற படத்தை தெலுங்கிலும் தமிழிலும் எடுத்துக் கொண்டிருந்தார் ஜெமினி எஸ்.எஸ். வாசன். தெலுங்கு சம்சாரத்தில் பாடிய கண்டசாலாவின் தமிழ் உச்சரிப்பு வாசனுக்கு திருப்தி அளிக்காத தருணத்தில், ‘ஓ....ஹ்ருதய ராணி‘ பாடலை வானொலியில் தற்செயலாக கேட்டார் வாசன். கூப்பிட்டனுப்பினார்.

‘சம்சாரம் சம்சாரம், சகல தர்ம் சாரம்‘

        ராஜாவின் தமிழ் உச்சரிப்பிள் எந்த இடைஞ்சலும் இல்லை என்று ஜெமினியில் உறுதி செய்து கொண்டார்கள். படப்பாடல் பதிவானது. இசை அமைப்பாளர் ஈமனி சங்கர சாஸ்திரி. ‘சாம்சாரம், சம்சாரம், சகல தர்மசாரம்‘ என்ற பாடல். 1951 – ல் வந்த சம்சாரம் பெண்களின் கண்ணீரைக் கசக்கிப் பிழிந்த படம். ராஜாவின் முதல் பாடல் இன்றும் அவ்வப்போது நம் காதில் விழுந்துகொண்டு தான் இருக்கிறது. நல்ல வேளை பாட்டில் அதிகமான ஒப்பாரி இல்லை. சில பின்னணிப் பாடகர்கள் அழுது தீர்ப்பார்கள். ராஜாவிடம் அது கிடையாது. அவர் இன்றும் விரும்பப்படுவதற்கு அவர் பாட்டில் உள்ள ஒரு சௌக்கியம்மதான் காரணம். ஏ.எம்.ராஜா பின்னணி பாடி, வெளிவந்த முதல் படம் சம்சாரம். ஆனால், அவர் ஒப்பந்தமான முதல் படம் குமாரி (1952) என்கிறது, துர்காராவ என்பவரை ஆசிரியராகக் கொண்டு 1956 – ல் வெளியான ஒரு தென்னிந்திய திரைப்பட டைரக்டரி.

எம்.ஜி.ஆருக்குப் பின்னணிப் பாட்டு

      எம்.ஜி.ஆரும் மாதுரி தேவியும் நடித்த ராஜா – ராணி படமான குமாரியில் ஏ.எம்.ராஜா ஒரு பின்னணிப் பாடகியுடன் இணைந்து டூயட் பாடினார். அந்தப் பாடகியின் பெயர் ஜிக்கி. ராஜாவின் வருங்கால மனைவி. கே.வி.மகாதேவன் இசையில், குமாரியில் ராஜாவும், ஜிக்கியும் இணைந்து பாடிய முதல் பாட்டு ‘இருளிலே நிலவொளிபோல் அவர் வருவார்‘. அதைத் தவிர, ‘அழியாத காதல்‘, ‘காதல்சோலை‘ என்று தொடங்கும் இரண்டு ஸோலோ பாடல்களையும் குமாரியில் ராஜா பாடினார். (நல்ல நடிகர்களை வீணடித்த படம். விமர்சனத்திற்கு அருகதையற்ற படம் அன்று அந்நாளைய பேசும் படம் கமாரியை விளாசியது.)

பதிமூன்று பாடகர்களின் ‘உலகம்‘

    வாய்ப்புகளின் விரிவடைந்த வட்டமாய் வந்தது 1953. ஆசை மகன் படத்தில், ராஜா – லீலாவின் குரல்களில் காதல் லீலையில் குதூகலித்த பாடல் ‘ஓடமீதிருந்தே, காதல் கனாவிலே‘ சதுஸ்ர கதியில் சதிராடிவரும் மெட்டு. எல்லோரும் மறந்து போன இசை அமைப்பாளர் ஞானமணியின் இசை அமைப்பில் உலகம் என்றொரு படம். கே.வி.மகாதேவன் உட்பட 13 பாடகர்கள் பின்னணி பாடிய படம். இதில், ஏ.எம். ராஜா, எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலில் ஒலிக்கிறது காதலின் சோகத்தை பிரதிபலிக்கும் ஒரு பாடமல். ‘என் பிரேம ராணி, காதலினாலே உள்ளம் உடைந்தேனே!‘ உலகம் படத்திலோ ராஜா பாடிய இன்னொரு பாடல் – இது பி.லீலாவுடன் – ‘இசை பாடி நாளுமே ஆசையாக ஆடுவோம்!“ ‘பெற்ற தாய்‘ படத்தில் பி. சுசீலாவுடன் வசீகரமான டூயட் ‘ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு – ஏதும் அறியாதவன் போல‘. இது சுசீலா திரை உலகில் பாடிய முதல் பாடல். படத்திற்கு இசை பெண்டியாலா நாகேஸ்வர ராவ்.

எம்.எஸ்.வி.யின் முதல் படத்தில் ராஜா

        இதே 1953ல் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தியுடன் இணையும் முன்பே இசை அமைத்த முதல் படம் ஜெனோவா வெளிவந்தது. படத்தில் ராஜாவிற்கு குறைந்தது நான்கு பாடல்கள். சுரதாவின் வரிகளும், லீலாவின் குரலும், ராஜாவுடன் இணைந்த பாடல். ‘கண்ணுக்குள் மின்னல் காட்டும் தெய்வ காதல்.‘ (ஜெனோவாவிற்கு இசை அமைத்தவர்கள் பற்றிய குறிப்பு, விஸ்வநாதன் – ராமமூர்த்தி மீதான கட்டுரையில் காணலாம்). கலைஞர் மு. கருணாநிதியின கதை வசனத்தில் எம்.ஜி.ஆர். குத்துச் சண்டை வீரராக நடித்த படம், நாம் (1953). ஜூபிடருக்காக மேகலா பிக்சர்ஸ் தயாரித்தது. இதில் கலைஞரின் பாடல் வரிகளுக்கு அவரது மைத்துனர் சி.எஸ். ஜெயராமன் இசை அமைக்க, ஏ.எம்.ராஜா – ஜிக்கி பாடினார்கள்: ‘பேசும் யாழே பெண் மானே – வீசும் தென்றல் நீதானே‘. எம்.ஜி.ஆர். –வி.என்.ஜானகி பாடுவதாக அமைந்த பாடல் இது. மு.க.வின் கற்பனையில் உதித்த பாடல் என்பதற்கு பேசும் யாழேவில் கொஞ்சம் தர்க்கமும் உண்டு --- ‘யாழே நான் என்றால் நாதம் நீ தானே‘ என்றாள் தலைவி. அதை ஏற்கமாட்டான் தலைவன் – ‘நாதத்தில் பேதம் உண்டு, நமக்கது வேண்டாமே‘ ..என்பான்! சட்டசபை விவாதம்போல் இதுவுமொரு சர்ச்சை போலும். ராஜாவின் பாட்டு வழக்கம்போல் அனாயாசமாகச் செல்லும். ‘பெண்‘ என்பது மட்டும் ‘பென்‘ என்று ஒலிக்கும். ஒரு சுழி குறைந்ததால் பொருள் விபரீதமாகிவிடவில்லை.

பாடல் தரும் நீரலைகள் பார்

        காமாந்தகாரனாக நடிகர் திலகம் நடித்த படம் திரும்பிப்பார் (1953). மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய படத்திற்கு இசை அமைத்தவர் ஜி. ராமநாதன். இந்தப் படத்தில் கானாம்ருதமாய் பொழியும் ஒரு பாடல், ‘கன்னியரின் வெள்ளை மனம் போல், காதல்தரும் நீரலைகள் பார்‘. கண்ணதாசனின் கபடமில்லாத வரிகளை, குளிர்ந்த நீரலைகளாய் வழங்கும் குரல்கள்: ராஜா – கே.ராணி.

சின்ன சின்ன வீடு கட்டி: ஒரு சின்ன கதை

       மருமகள் (1953) படத்தில் ‘சின்ன சின்ன வீடு கட்டி‘ எனறு அமைதியும் இனிமையும் நிறைந்த ஒரு பாடல். பழம்பெரும் நடிகையும் பாடகியுமான பி.ஏ. பெரியநாயகியும் ராஜாவும் இணையும் பாடல் இது. பெரியநாயகியின் குரல் பழங்காலதது வெண்கல சாரீரம். ராஜாவின் குரலோ சங்கீத சாமரம். இருந்தும் இந்த இணைவில் ஒரு சுகம்! இந்தப் பாடலுக்குப் பின்னணியாக ஒரு சின்ன கதை. இசை மேதை சி. ஆர். சுப்பராமனின் இசையில் ஒரு பழம் பெரும் பாடகர் இந்தப் பாடலை பாடவிருந்தார். ஆனால், அவரது உச்சரிப்பில் பாடலின் முதல் இரண்டு வரியில் ‘கட்டி‘ என்பது ‘கட்சி‘ என்று ஒலித்ததாம். ஏ.எம்.ராஜாவைப் பாட வைக்கலாம் என்று சுப்பராமன் எண்ணினார். “பாடுபவர் என்னை விடத் தெளிவாகப் பாடினால்தான் ஒப்புக் கொள்வேன். இல்லை என்றால் நானே பாடுவேன்,‘ என்றார் அந்தப் பழம் பெரும் பாடகர். ராஜா வந்தார். அட்சர சுத்தமாகப் பாடினார். பெருந்தன்மையுடன் ஒதுங்கிக் கொண்ட முதல் பாடகரின் அனுமதியுடன் ராஜா பெரியநாயகிக் குரல்களில் சின்னச் சின்ன வீடு கட்டி பாடல் பதிவானது. மறைமுக வார்த்தைகள் எதற்கு? சி.எஸ். ஜெயராமன் ஒரு எழுத்தை உச்சரிப்பதில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்திருக்கலாம். ஆனால் அவரும் பெரியநாயகியும் இணைந்து அந்தப் பாடலைப் பாடியிருந்தாலும் நன்றாகவே இருந்திருக்கும் என்பதுதான் என் அபிப்பிராயம்.

ராஜா – ஜிக்கிக்கு ராஜ்கபூர் அழைப்பு

        ராஜாவிற்கு 1953ல் நல்ல பாடல்களைத் தந்த இன்னொரு படம் அன்பு. டி.ஆர்.பாப்பாவின் இசை அமைப்பில் சிவாஜி கணேசனுக்கு ராஜா குரல் கொடுத்த இந்தப் படத்தில், ராஜாவிற்குப் பலவிதமான பாடல்கள். இவற்றுள் 45 வயதாகியும் இளமை குன்றாத ஒரு பாடல் ‘எண்ண எண்ண இன்பமே, வாழ்வினில் என்னாளும்‘ பாடியவர்கள் ராஜா – ஜிக்கி. அன்பு வந்த ஆண்டிலேயே இந்தப் பாட்டு ஜோடிக்கு அகில இந்திய அழைபபு வந்தது. அழைப்பு விடுத்தவர் ராஜ்கபூர். தமிழிலும தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வந்த தன்னுடைய ஆஹ் படத்திற்கு இரண்டு மொழியிலும் பாட ராஜா – ஜிக்கியை அவர் தேர்ந்தெடுத்தார். சங்கர் – ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூர் – நர்கீஸ் ஜோடிக்கு இந்தியில் முகேஷும், லதாவும் பாடினார்கள். பம்பாய்க்குப் பறந்து சென்று ராஜாவும் ஜிக்கியும் அதே பாடல்களை தமிழ் / தெலுங்கில் பாடினார்கள்.

கம்பதாசனின் காவிய வீச்சுக்கள்

         உதட்டசைப்பிற்கும், மெட்டிற்கும் தக்கபடி அமைய வேண்டிய பாடல் வரிகள் என்றாலும், கம்பதாசன் பாடல்களில் காவிய வீச்சு தெரிந்தது. சங்கர் ஜெய்கிஷனின் மெட்டுக்களில் அழகுக்கு அழகு செய்வது போன்ற பாடல்கள். ‘அன்பே வா, அழைக்கின்ற தெந்தன் மூச்சே‘ (ராஜா-ஜிக்கி), ‘கண்காணாததும் மனம் கண்டுவிடும்‘ (ராஜா – ஜிக்கி), ‘மின்னல் போல் ஆகும் இந்த வாழ்க்கையே வானவில் போலும், இளமை ஆனதே ஆம்‘ (ராஜா)...இத்யாதி. (கம்பதாசன் புனைந்த இந்தப் பாடல்களை எழுதியவர் ‘மினு கத்ரக்‘ என்கிறது ‘ஆசையினாலே மனம்‘ என்ற தலைப்பில் எச்.எம்.வி. நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஒலிநாடா தொகுப்பு. மினு கத்ரக், இந்தப் பாடல்களை பம்பாயில் ஒலிப்பதிவு செய்த வடநாட்டு சௌன்ட் இன்ஜினீயர் (ஒலிப்பதிவு பொறியாளர்) என்று தெரிகிறது. இவரைப் பாடலாசிரியர் என்று எப்படிக் குறிப்பிட்டார்கள் என்று புரியவில்லை.)

புது வீடு வந்த நேரம்

       வாய்ப்புகளும் வளமும் குவிந்த காலத்தில் ராஜா ஊதாரித்தனமாக நடக்கவில்லை. சென்னை ஜி.என். செட்டி சாலையில் மேற்கே, சின்னையா தெருவில் தனக்கொரு பங்களா கட்டிக் கொண்டார். ‘A.M Rajah. B.A.’ என்ற பெயர் பலகையுடன் அமைந்த வீட்டின் பெயர் ‘லட்சுமி இல்லம்.‘ ராஜாவின் தாயார் பெயர் லக்ஷமம்மா. பேசும் படம் சினிமா பத்திரிகையின் 1953க்கான சிறந்த பின்னணிப் பாடர் விருது ராஜாவிற்கு வழங்கப்பட்டது. (1952ல் அது சி. எஸ். ஜெயராமனுக்கு அளிக்கப்பட்டிருந்தது). “சென்ற வருஷத்தின் படங்க்ள் பலவற்றிலும் பின்னணியில் பாடியிருக்கிறார் ஏ.எம்.ராஜா. அவரது குரலினிமை ரசிகர்களை வெகுதூரம் கவர்ந்திருக்கிறது. ஆகவே அவரைச் சிறந்த பின்னணிப் பாடகர் என்று தேர்ந்தெடுத்து கௌரவிக்கிறோம்“ என்கிறது பேசும் படம். தமிழ்த் திரையின் தலைசிறந்த பின்னணிப் பாடகர் என்ற பெயருடன் முன்னேறிய ஏ.எம்.ராஜாவை, 1954லும் பல வெற்றிப் பாடல்கள் எதிர்கொண்டு அழைத்தன. மனோகரா, ரத்தபாசம், எதிர்பாராதது, இல்லற ஜோதி என்று ராஜாவின் மென்மையான குரலால் மெருகேறிய பாடல்கள் பல. ‘சிங்கார பைங்கிளியே பேசு, செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு‘ என்ற உடுமலை நாராயண கவியின் வரிகளை முதுபெரும் இசைஅமைப்பாளர் எஸ்.வி. வெங்கடராமனின் இசையில் ராஜாவும், ஆர் ஜெயலட்சுமியும் பாடினார்கள். பணம் படுத்தும் பாடு படத்தில் சோகம் இழையோடு ஒரு சிரஞ்சீவி காதல் பாடல் ‘என் நெஞ்சின் பிரேம கீதம் இரு கண்ணில் காணுவாயே‘. ஓர் அழகான காதல் கீதம் இது.

பொற்சிலையை சிற்பி எப்படி செதுக்குவான்?

          எதிர்பாராதது படத்தில் காதல் வேதனையைக் கனிந்து சொல்லும் பாடல் – ‘சிற்பி செதுக்காத பொற்சிலையே‘. சி.என். பாண்டுரங்கம் இசை. கவிஞர் காமாட்சிசுந்தரத்தின் பாடல். ராஜாவின் ரம்மியமான ராகம். இந்தப் பாடல் உருவாக்கப்படும் போது படத்தின் பாகஸ்தர்களில் ஜி. உமாபதி ஒருவர். ‘பொற்சிலையை சிற்பி எப்படி செதுக்குவான்...கற்சிலையே என்று மாற்றுங்கள்‘ என்றாராம் உமாபதி. கவிஞர் காமாட்சி, கதை வசனகர்த்தா ஸ்ரீதர்...போன்றோர் இதை ஏற்கவில்லை. கோபித்துக் கொண்ட உமாபதி படத்தயாரிப்பிலிருந்து விலகிக்கொண்டார். கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். கவிதை, இசை போன்றவற்றில் சொல்லின் பொருள் ஒரு சட்டத்திற்குள் அடங்கும் படமல்ல. எல்லைகளை மீறுவதுதான் கலை. அடுத்த ஆண்டு பல மாபெரும் திருப்பங்களைக் கொண்டு வந்தது. எம்.ஜி.ஆருக்காக குலேபகாவலியில் ராஜா இசைத்த காதல் கீதம். ‘மயக்கும் மாலை பொழுதே நீ போ போ‘ மிகப் பெரிய அளவில் வெற்றி கண்டது. இனிமையான பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த இந்தப் பாடல், ராகத்தில் ராஜா – ஜிக்கி குரல்களில் ஒலிக்கும் ஒரு நாத ஜாலம். மெட்டமைப்பு கே.வி.மகாதேவன். (விஸ்வநாதன் – ராமமூர்த்தி தெரிவித்த தகவல்). இப்படி திரை உலகில் நடந்துவிடுவது உண்டு. வெளியே தெரிவிப்பவர்கள் குறைவு. தெலுங்குத் திரையிசையில் பல சரித்திரங்கள் படைத்த எஸ். ராஜேஸ்வர ராவின் இசையில் விஜயாவின் மிஸ்ஸியம்மா வெளி வந்தது.
நன்றி - விக்கிபீடியா ,  லஷ்மன் ஸ்ருதி ,

செவ்வாய், 21 ஜூன், 2016

இயக்குனர் இராம.நாராயணன் நாராயணன் நினைவு நாள் ஜூன் 22


இயக்குனர் ராம நாராயணன் நினைவு நாள் ஜூன் 22
ராம நாராயணன், (ஏப்ரல் 3, 1949 - சூன் 22, 2014) இந்தியத் திரைத்துறையைச் சார்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். இவரது திரைப்படங்களில் பலவற்றில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.  36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளது ஓர் உலக சாதனையாகும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஒரு மலேய மொழிப் படத்தை இயக்கியுள்ளார்.சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இராம.நாராயணன், தமிழ், தெலுங்கு, ஒரியா, வங்காளி, மராத்தி, கன்னடம், குஜராத்தி, இந்தி, போஜ்புரி ஆகிய 9 மொழிகளில் 126 படங்களை இயக்கி செய்து சாதனை படைத்துள்ளார். வேறு எவரும் இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட படங்களை 9 மொழிகளில் இயக்கியதில்லை.

இராம.நாராயணன் வாழ்க்கை வரலாறு

இராம.நாராயணனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. தந்தை பெயர் இராமசாமி. தாயார் மீனாட்சி ஆச்சி. ராமசாமி சென்னையில் மருந்துக்கடை (பார்மசி) நடத்தி வந்தார். இராம.நாராயணன் காரைக்குடியில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.யு.சி படித்தார்.

சிறு வயதிலேயே திரைப்படத் துறைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வமும், வேகமும் இராம.நாராயணனுக்கு இருந்து வந்தது. எப்படியாவது பட உலகில் நுழைந்து, சினிமாவுக்குப் பாட்டு எழுதவேண்டும், கதை-வசனம் எழுதவேண்டும் என்று விரும்பிய அவர், பி.யு.சி. தேறியதும், சென்னைக்கு புறப்பட்டார்.

இராம.நாராயணனின் தந்தையின் மருந்துக்கடை சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தது. அந்த மருந்துக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார். கடையநல்லூரைச் சேர்ந்த காஜாவும், பட வாய்ப்பு தேடி அலைந்து கொண்டு இருந்தார். அப்போது எம்.ஏ.காஜாவுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒரே நோக்கத்தில் இருந்ததால் விரைவில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். எப்படியாவது பட உலகில் புகுந்து விடவேண்டும், எந்தத் துறையானாலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முடிவுடன், பட வாய்ப்புக்காக இருவரும் தீவிரமாக முயற்சி செய்தனர்.

சினிமா வாய்ப்பு

1976-ம் ஆண்டு 'ஆசை 60 நாள்'' என்ற படத்திற்கு கதை-வசனம் எழுதும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. இராம.நாராயணனும், எம்.ஏ.காஜாவும் சேர்ந்து கதை-வசனத்தை எழுதினார்கள். படத்தில் கதை, வசனம் என்று டைட்டில் கார்டு போடும்போது தங்களது பெயரை 'ராம்-ரகீம்' என்று குறிப்பிட்டனர்.

விஜயகுமார் கதாநாயகனாக நடித்த இந்தப்படம், வெற்றிப் படமாக அமைந்தது. படத்தை துரை இயக்கினார். உமா சித்ரா பிலிம்ஸ் தயாரித்தது. அதே தயாரிப்பில் 'ரகுபதி ராகவ ராஜாராம்' என்ற படத்திற்கும் ராம்-ரகீம் என்கிற பெயரில் கதை, திரைக்கதை, வசனத்தை இந்த இரட்டையர்கள் எழுதினார்கள். இந்த படத்தையும் துரை இயக்கினார்.

1977-ல் தேவிப்பிரியா என்ற பட நிறுவனத்தை, இராம நாராயணன் தொடங்கினார். சிவகுமார் கதாநாயகனாக நடிக்க, துர்காதேவி' என்ற படத்தை தயாரித்தார். திரைக்கதை, வசனத்தை இராம.நாராயணனும், காஜாவும் சேர்ந்து `ராம்-ரகீம்' என்ற பெயரிலேயே எழுதினார்கள்.

இதேபோல் 1979-ம் ஆண்டு, 'மாந்தோப்பு கிளியே' என்ற படத்தை எம்.ஏ.காஜா தயாரித்து இயக்கினார். இதன் கதை-வசனம் 'ராம்-ரகீம்.' நகைச்சுவை நடிகர் சுருளிராஜனுக்கு பெரிய புகழ் தேடிக்கொடுத்த படம் இது. அடுத்தபடியாக இராம.நாராயணன் "ஒரு தொடர்கதை ஒரு விடுகதை'' என்ற படத்தை தயாரித்தார். படத்தை எம்.ஏ.காஜா இயக்கினார். நடிகர் விஜயனும், ஷோபாவும் நடித்தனர்.

1978-ம் ஆண்டு இராம.நாராயணன் தேவி பிரியா பிலிம்ஸ் சார்பில் மீனாட்சி குங்குமம்' என்ற படத்தை தயாரித்தார். அதை காரைக்குடி நாராயணன் இயக்கினார். அதனைத் தொடர்ந்து வேலும் மயிலும் துணை, பவுர்ணமி நிலவில்' ஆகிய படங்களையும் இராம. நாராயணன் தயாரித்தார்.

தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கிய இவர் தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். குரங்கு, பாம்பு உள்ளிட்ட விலங்குளை வைத்து ரசிக்கும் படியான திரைபடங்களை எடுப்பது இவருக்கு வை வந்த கலை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தவர்.

இதுவரை 126 திரைப்படங்களை இயக்கியுள்ள இராம.நாராயணன் இந்தியாவிலேயே அதிக திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


திரைப்படங்கள்
குட்டிப் பிசாசு (தமிழ், தெலுங்கு, கன்னடம்), சுமை, ஆடிவெள்ளி, சிவப்பு மல்லி, சிங்கக்குட்டி, வேங்கையின் மைந்தன், சிவந்த கண்கள், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கந்தா கடம்பா கதிர்வேலா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ஆகிய திரைப்படங்களில் பணி புரிந்துள்ளார்.

மரணம்
இராம நாராயணன் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சூன் 22, 2014 அன்று சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூரில் மரணமடைந்தார்.
நன்றி-விக்கிபீடியா 

நடிகை தேவயானி பிறந்த நாள் ஜூன் 22.


நடிகை தேவயானி பிறந்த நாள் ஜூன் 22.
தேவயானி (Devayani, பிறப்பு: சூன் 22, 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

திருமணம் வாழ்க்கை
தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் ஏப்ரல் 9, 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் காலை 9.30 மணிக்கு நடந்தது. இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1993 சாத் பென்சொமி வங்காளம் சுஷ்மா அறிமுகம்
1994 கின்னாரி புழையோரம் மலையாளம்
1995 தொட்டா சிணுங்கி ரம்யா தமிழ்
தில் கா டாக்டர் இந்தி
ஆசான் ராஜாவு அப்பன் ஜிதாவு மலையாளம்
திரி மென் ஆர்மி சுபா மலையாளம்
காக்கக்கும் பூசாக்கும் கல்யாணம் லதா .எஸ்.பிள்ளை மலையாளம்
1996 கல்லூரி வாசல் நிவிதா தமிழ்
சோட்டா சா கர் இந்தி
காதல் கோட்டை கமலி தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது.
பூமணி தமிழ்
சிவசக்தி தமிழ்
மகாத்மா சரஸ்வதி மலையாளம்
கின்னம் கட்ட கள்ளன் மலையாளம்
மிஸ்டர். கிலியன் மலையாளம்
காதில் ஒரு கின்னரம் மலையாளம்
1997 விவசாயி மகன் தமிழ்
காதலி தமிழ்
பெரிய இடத்து மாப்பிள்ளை தமிழ்
சூரிய வம்சம் நந்தினி தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
1998 சுஷ்வாகதம் சந்யா தெலுங்கு
உதவிக்கு வரலாமா மைதிலி தமிழ்
கிழக்கும் மேற்கும் தமிழ்
மறுமலர்ச்சி தமிழ்
சொர்ணமுகி சொர்ணமுகி தமிழ்
நினைத்தேன் வந்தாய் சாவிதிரி தமிழ்
மூவேந்தர் வைதேகி தமிழ்
பூந்தோட்டம் தமிழ்
செந்தூரம் தமிழ்
உனக்கும் எனக்கும் கல்யாணம் தமிழ்
என் உயிர் நீ தான் தமிழ்
புதுமை பித்தன் ஆர்தி தமிழ்
சிரிமதி வொல்லோஸ்தா தெலுங்கு
1999 தொடரும் சீதா ஆனந்து தமிழ்
கும்மிப்பாட்டு தமிழ்
நீ வருவாய் என நந்தினி தமிழ்
ஒருவன் நந்தினி தமிழ்
பிரேமோத்சவா கன்னடம்
நிலவே முகம் காட்டு கஸ்தூரி தமிழ்
பாட்டாளி சகுந்ததலா தமிழ்
மாணிக்யம் தெலுங்கு
2000 முதல் 2013 வரை[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2000 வல்லரசு அஞ்சலி வல்லரசு தமிழ்
அப்பு சீதா தமிழ்
என்னம்மா கண்ணு காயத்திரி தமிழ்
பாரதி செல்லமால் பாரதி தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
தெனாலி சைலஜா கைலாஸ் தமிழ்
2001 கண்ணுக்கு கண்ணாக தேவி தமிழ்
என் புருசன் குழந்தை மாதிரி தமிழ்
விண்ணுக்கும் மண்ணுக்கும் தேவயானி தமிழ்
ஆனந்தம் பாரதி தமிழ் பரிந்துரை—சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
பிரண்ட்ஸ் பத்மினி அரவிந்து தமிழ்
சுந்தரபுருஷன் மலையாளம்
நினைக்காத நாளில்லை கவிதா தமிழ்
2002 விவரமான ஆளு அப்பு தமிழ்
அழகி வளர்மதி சண்முகம் தமிழ் வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான ஐடீஎஃஏ விருது
கோட்டை மாரியம்மன் தமிழ்
பஞ்சதந்திரம் நிர்மலா தமிழ்
தென்காசிப் பட்டணம் சங்கீதா தமிழ்
குருவம்மா குருவம்மா தமிழ்
சமஸ்தானம் திவ்யா தமிழ்
படை வீட்டம்மன் சாமுண்டி தமிழ்
சென்னகேசவா ரெட்டி தெலுங்கு
2003 காதலுடன் கவிதா தமிழ்
பீஷ்மர் கௌரி பீஷ்மர் தமிழ்
பாலேட்டன் ராதிகா மலையாளம்
2004 நானி நானியின் அம்மா தெலுங்கு
நியூ பப்புவின் அம்மா தமிழ்
கிரி தமிழ்
செம ரகளை தமிழ்
செந்தாழம் பூவே தமிழ்
சௌம்யம் மலையாளம்
2005 நரன் ஜானகி மலையாளம்
2009 ஐந்தாம் படை கல்பனா தமிழ்
2010 ஒரு நாள் வரும் ராஜலெட்சுமி மலையாளம்
2011 சர்க்கார் காலனி மலையாளம்
2013 திருமதி தமிழ் தமிழ் ராஜலெட்சுமி மலையாளம்
வங்காளம் திரைப்படம்
துஷொர் கோ துளி
தொலைக்காட்சி
ஆண்டு நாடகம் பாத்திரம் மொழி தொலைக்காட்சி இணைப்பு
2003–2009 கோலங்கள் அபினயா தமிழ் சன் தொலைக்காட்சி
2007-08 மஞ்சள் மகிமை சௌந்தர்யா தமிழ் கலைஞர் தொலைக்காட்சி
2010-11 கொடி முல்லை மலர்க் கொடி/அன்னக்கொடி தமிழ் ராஜ் தொலைக்காட்சி
2011-12 முத்தாரம் ரஞ்சனி தேவி / சிவரஞ்சனி தமிழ் சன் தொலைக்காட்சி
விருதுகள்[தொகு]
2000 - ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது
2004 - சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதுகள். - கோலங்கள்
2008 - முதல் இடம் - சிறந்த நடிகைக்கான விவெல்லின் சின்னத்திரை விருதுகள் - (கோலங்கள்)
2010 - நியமிக்கப்படுதல் - சிறந்த நடிகைக்கான சன் குடும்பம் விருது - (கோலங்கள்)
2010 - ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது
2011 - பிக் ஃஎப்எம்மின் தமிழ் பொழுதுபோக்கு மிகுந்த பொழுதுபோக்குத் தொலைக்காட்சி நடிகைக்கான விருதுகள் - (கொடி முல்லை)

நன்றி -விக்கிபீடியா

திங்கள், 20 ஜூன், 2016

நடிகை பூஜா பிறந்த நாள் ஜூன் 25


நடிகை பூஜா பிறந்த நாள் ஜூன் 25
பூஜா தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகையாவார். இவர் மணிரத்னத்தின் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியிலும் பங்குபற்றுகிறார். ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

திரைப்பட விபரம்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2003 ஜே ஜே சீமா தமிழ் வெற்றி, அமிர்தசுரபி விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)
2004 அட்டகாசம் சுவப்னா தமிழ்
2005 உள்ளம் கேட்குமே தமிழ்
2005 ஜித்தன் பிரியா தமிழ்
2006 அஞ்சலிகா அஞ்சலிகா,
உத்ரா சிங்களம் பரிந்துரை, சிறந்த நடிகைக்கான சரசவிய விருது
பரிந்துரை, அதிக செல்வாக்கான நடிகைக்கான சரசவிய விருது
2006 பட்டியல் சந்தியா தமிழ்
2006 தம்பி அர்ச்சனா தமிழ்
2006 தகப்பன்சாமி மரிக்கொழுந்து சண்முகம் தமிழ்
2007 பொறி பூஜா தமிழ்
2007 பந்தயக் கோழி செண்பகம் மலையாளம்
2007 ஆசை மண் பியபன்னா ரன்ம்லி / மலீசா சிங்களம் பரிந்துரை, சிறந்த நடிகைக்கான சரசவிய விருது
பரிந்துரை, அதிக செல்வாக்கான நடிகைக்கான சரசவிய விருது
2007 ஓரம் போ ராணி தமிழ்
2007 யகலூவோ மனோராணி சிங்களம்
2009 நான் கடவுள் அம்சவள்ளி தமிழ் வெற்றி, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
சிறந்த கதாபாத்திரத்திற்கான தமிழநாடு அரசுத் திரைப்பட விருது
விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
சிறந்த தமிழ் நடிகைக்கான உலக மலையாளிகள் பேரவை விருது
பரிந்துரை: சிறந்த நடிகைக்கான தேசிய விருது
2009 தநா -07 AL 4777 தமிழ் சிறப்புத் தோற்றம்
2010 சுவந்த தெனுன ஜீவிதே ரேஷ்மி சிங்களம்
2010 துரோகி ரோஜா தமிழ் சிறப்புத் தோற்றம்
2010 ஆரஞ்ச் மீனாட்சி தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2011 ஸ்மோக்கிங் கில்ஸ் பூஜா ஆங்கிலம் குறும்படம்
2012 குச பிரபா பபாவதி சிங்களம் அதிக செல்வாக்கான நடிகைக்கான தெரண லக்சு விருது
பரிந்துரை: சிறந்த நடிகைக்கான தெரண லக்சு விருது
பரிந்துரை: அதிக செல்வாக்கான நடிகைக்கான ஹிரு தங்க விருது
2012 மிராஜ் பிரியா ஆங்கிலம் குறும்படம்
2013 விடியும் முன் ரேகா தமிழ் வெற்றி, நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் (சிறந்த நடிகை)
வெற்றி, விகடன் விருதுகள் (சிறந்த நடிகை)
வெற்றி, சிறந்த நடிகைக்கான Behindwoods Gold Sumit விருது
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
பரிந்துரை, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரை, எடிசன் விருதுகள் (சிறந்த நடிகை)
பரிந்துரை, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (சிறந்த நடிகை)
2014 கடவுள் பாதி மிருகம் பாதி சிறப்புத் தோற்றம் தமிழ் சிறப்புத் தோற்றம்
2016 பத்தினி கண்ணகி சிங்களம்
பூஜா நடித்துள்ள இந்திய திரைப்படங்கள்
ஜே ஜே -ஆ. மாதவன்
அட்டகாசம் -அஜித் குமார
உள்ளம் கேட்குமே -ஸாம்
ஜித்தன் -ரமேஸ்
பட்டியல் -பரத்
தம்பி -ஆ. மாதவன்
தகப்பன்சாமி -பிரசாந்த்
பொறி -ஜீவா
ஓரம் போ -ஆர்யா
நான் கடவுள் -ஆர்யா
மிராஜ் (ஆங்கிலம் திரைப்படம்) -அபிஷேக்

ஞாயிறு, 19 ஜூன், 2016

மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த நாள் ஜூன் 24


மெல்லிசை மன்னர்  எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த நாள் ஜூன் 24 
மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan), அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 - 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி). விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

வாழ்க்கை
தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.. இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.

இசை பயணம்[தொகு]
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள் . தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள் . ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார் . 1963ம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது

நடிகராக விஸ்வநாதன்
கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா, அ. இ. ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் .

இசையமைத்த திரைப்படங்கள்
தமிழ் - 800 திரைப்படங்கள்
மலையாளம் - 80 திரைப்படங்கள்
தெலுங்கு - 30 திரைப்படங்கள்
கன்னடம் - 15 திரைப்படங்கள்
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
முதன்மைக் கட்டுரை: எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
இராமமூர்த்தியுடன் இணைந்து சுமார் 750 திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான சில பாடல்கள் :
எங்கே தேடுவேன் (பணம்)
மயக்கும் மாலை (குலேபகாவலி)
குறுக்கு வழியில் (மகாதேவி)
முகத்தில் முகம் (தங்கப்பதுமை)
செந்தமிழ் தேன்மொழியாள் (மாலையிட்ட மங்கை)
தென்றல் உறங்கிடும் (பெற்ற மகனை விற்ற அன்னை)
ஆடைகட்டி (அமுதவல்லி)
ஏன் பிறந்தாய் மகனே (பாகப்பிரிவினை)
தங்கத்திலே ஒரு குறை (பாகப்பிரிவினை)
ஆடாத மனமும் (மன்னாதி மன்னன்)
பிறக்கும் போதும் (கவலை இல்லாத மனிதன்)
பாலிருக்கும் பழமிருக்கும் (பாவமன்னிப்பு)
அத்தான் என்னத்தான் (பாவமன்னிப்பு)
ஜல் ஜல் ஜல் (பணம்)
காலங்களில் அவள் (பாவமன்னிப்பு)
மாலைப் பொழுதின் (பாக்யலெட்சுமி)
மலர்களைப்போல் தங்கை (பாசமலர்)
நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)
பால்வண்ணம் (பாசம்)
பாலும் பழமும் (பாசம்)
உடலுக்கு உயிர்காவல் (மணப்பந்தல்)
வாராய் என் தோழி (பாசமலர்)
அத்திக்காய் காய் (பலே பாண்டியா)
தேவன் கோயில் (மணியோசை)
எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்)
கல்லெல்லாம் மாணிக்க (ஆலயமணி)
கொடி அசைந்ததும் (பார்த்தால் பசி திரும்)
மனிதன் என்பவன் (சுமைதாங்கி)
ஓடம் நதயினிலே (காத்திருந்த கண்கள்)
பொன்னை விரும்பும் (ஆலயமணி)
பொன்னொன்று (படித்தால் மட்டும் போதுமா)
பூஜைக்கு வந்த மலரே (பாதகாணிக்கை)
நினைப்பதெல்லாம் ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
பொறந்தாலும் ( போலிஸ்காரன் மகள் )
ரோஜா மலரே ( வீர திருமகன் )
சொன்னது நீதானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
உள்ளம் என்பது ஆமை ( பார்த்தால் பசி திரும் )
வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
வீடுவரை உறவு ( பாத காணிக்கை )
இந்த மன்றத்தில் ( போலிஸ்காரன் மகள் )
அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
அத்தை மடி ( கற்பகம் )
அவள் பறந்து போனாளே ( பார் மகளே பார் )
கண்கள் எங்கே ( கர்ணன் )
நெஞ்சம் மறப்பதில்லை ( கர்ணன் )
நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
பார் மகளே பார் ( ஆனந்த ஜோதி )
பனி இல்லாத ( ஆனந்த ஜோதி )
பாரப்பா பழனியப்பா ( பெரிய இடத்துப் பெண் )
பக்கத்து வீட்டு ( கற்பகம் )
பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
உள்ளத்தில் நல்ல உள்ளம் ( கர்ணன் )
ஆடவரெல்லாம் ( கருப்புப் பணம் )
ஆயிரத்தில் ( கை கொடுத்த தெய்வம் )
ஆரோடும் மண்ணில் ( பழனி )
அமைதியான நதி ( ஆண்டவன் கட்டளை )
அவளுக்கென்ன ( சர்வர் சுந்தரம் )
அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
அவள் மெல்ல சிரித்தாள் ( பச்சை விளக்கு )
அத்தை மகள் ரத்தினத்தை ( பணக்கார குடும்பம் )
அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
எனக்கொரு மகன் ( பணம் படைத்தவன் )
என்ன பார்வை ( காதலிக்க நேரமில்லை )
ஹலோ மிஸ் ( என் கடமை )
சிட்டுக் குருவி ( புதிய பறவை )
அண்ணன் என்னடா ( பழனி )
இந்த புன்னகை ( தெய்வத் தாய் )
நான் ஒரு குழந்தை ( படகோட்டி )
ஒளிமயமான எதிர்காலம் ( பச்சைவிளக்கு )
கண் போன போக்கிலே ( பணம் படைத்தவன் )
பறக்கும் பந்து பறக்கும் ( பணக்கார குடும்பம் )
பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் )
மூன்றெழுத்தில் என் ( தெய்வத்தாய் )
தொட்டால் பூ மலரும் ( படகோட்டி )
தங்கரதம் ( கலைக்கோயில் )
அதோ அந்த பறவை ( ஆயிரத்தில் ஒருவன் )
சின்ன சின்ன கண்ணனுக்கு ( வாழ்க்கை படகு )
என்ன என்ன வார்த்தைகளோ ( வெண்ணிற ஆடை )
காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
கண்ணன் வருவான் ( நெஞ்சிருக்கும் வரை )
குமரிப் பெண்ணின் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
நேற்றுவரை நீ யாரோ ( வாழ்க்கைப் படகு )
உன்னை நான் சந்தித்தேன் நீ ( ஆயிரத்தில் ஒருவன் )
யார் அந்த நிலவு ( சாந்தி )
ஹலோ மிஸ்டர் ஜமின்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
நான் மாந்தோப்பில் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
சித்திரமே ( வெண்ணிற ஆடை )
பூ முடிப்பாள் ( நெஞ்சிருக்கும் வரை )
விண்ணோடும் முகிலோடும் ( புதையல் )
பெற்ற விருதுகள்
இசைப்பேரறிஞர் விருது, 2003
கலைமாமணி விருது
மதிப்புறு முனைவர் பட்டங்கள் - 2
மறைவு
எம். எஸ். விஸ்வநாதன் 14 சூலை 2015 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் வாழ்க்கைக் குறிப்பு:

* கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் (1928) பிறந்தவர். 4 வயதில் தந்தையை இழந்தவர், கண்ணனூரில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படித்ததில்லை. தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். 13 வயதில் மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.

* நடிகர், பாடகராக வரவேண்டும் என்பது அவரது விருப்பம். அது நிறைவேறவில்லை. சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். பிறகு, இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர்.

* சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை 700 திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்தனர்.

* எம்எஸ்வி தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து 3 படங்களுக்கு இசையமைத்தார். ‘கண்ணகி’, ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உட்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

* பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகிய 4 இயக்குநர்களிடம் அதிகம் பணிபுரிந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

* ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார். ‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர்.

* கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

* இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.

* ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையிலேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார்.

* மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர்.

நன்றி-விக்கிப்பீடியா ,தமிழ் தி இந்து 

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24


கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

குடும்பம்
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு
அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

மறைவு
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[7] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

படைப்புகள்
திரையிசைப் பாடல்கள்
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்
கவிதை நூல்கள்
காப்பியங்கள்
மாங்கனி
பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
ஆட்டனத்தி ஆதிமந்தி
பாண்டிமாதேவி
இயேசு காவியம்
முற்றுப்பெறாத காவியங்கள்
தொகுப்புகள்
கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2.
கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, காவியக்கழகம், சென்னை
கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி
பாடிக்கொடுத்த மங்களங்கள்
சிற்றிலக்கியங்கள்
அம்பிகை அழகுதரிசனம்
தைப்பாவை
ஸ்ரீகிருஷ்ண கவசம்
கிருஷ்ண அந்தாதி
கிருஷ்ண கானம்
கவிதை நாடகம்
கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு
பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
பஜகோவிந்தம்
புதினங்கள்
அவளுக்காக ஒரு பாடல்
அவள் ஒரு இந்துப் பெண்
சிவப்புக்கல் மூக்குத்தி
ரத்த புஷ்பங்கள்
சுவர்ணா சரஸ்வதி
நடந்த கதை
மிசா
சுருதி சேராத ராகங்கள்
முப்பது நாளும் பவுர்ணமி
அரங்கமும் அந்தரங்கமும்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
தெய்வத் திருமணங்கள்
ஆயிரங்கால் மண்டபம்
காதல் கொண்ட தென்னாடு
அதைவிட ரகசியம்
ஒரு கவிஞனின் கதை
சிங்காரி பார்த்த சென்னை
வேலங்காட்டியூர் விழா
விளக்கு மட்டுமா சிவப்பு
வனவாசம்
பிருந்தாவனம்
சிறுகதைகள்
குட்டிக்கதைகள்
வாழ்க்கைச்சரிதம்
எனது வசந்த காலங்கள்
வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
கட்டுரைகள்
கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்
சமயம்
அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
நாடகங்கள்
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை
உரை நூல்கள்
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

பகவத் கீதை
அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
திருக்குறள் காமத்துப்பால்
சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
விருதுகள்
சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)

அர்த்தங்களின் சுமையற்ற கண்ணதாசனின் வரிகள் தருவது தித்திப்பும் மயக்கமும்…

அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்னையில் ஒருநாள் காலையில் பெட்டிக்கடையில் செய்தித்தாள் வாங்கிக்கொண்டு நிமிர்ந்தேன். எதிர்ப்புறச் சாலையோரத்தில் மஞ்சள் கொன்றையொன்று தகதகக்கும் மலர்களோடு நின்றுகொண்டிருந்தது. எட்டு மணி வாக்கில் சூடில்லாத வெயிலில் மஞ்சள் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு பாடலின் வரிகள் சம்பந்தமில்லாமல் வந்து விழுந்தன: 'வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்'

எத்தனையோ முறை நான் கேட்ட பாடல் அது. அழகான சொற்களைக் கொண்டு நிரப்பப்பட்ட பாடல் அது என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்று அந்த மஞ்சள் கொன்றை அந்தப் பாடலை எனக்குத் திறந்து காட்டியது. அந்த மஞ்சள் கொன்றையின் மலர்கள்தான் வசந்த காலத்தின் வைரமணி நீரலைகள் என்று எனக்குத் தோன்றியது. மனம் எவ்வளவு விசித்திரமானது. தனது நினைவறையில் எல்லாவற்றையும் கொட்டிவைத்து, சம்பந்தமில்லாததுபோல் தோன்றும் இரு விஷயங் களுக்குள்ளும் உறவு இருக்கிறது என்பதை ஏதோ ஒரு தருணத்தில் திடீரென்று உணர்த்திவிடுகிறது. மஞ்சள் கொன்றை அந்தப் பாடலைத் திறக்க, அந்தப் பாடல் எனக்கு வசந்த காலத்தைத் திறந்தது. நிழற்சாலை ஒன்றின் நடைபாதையில் பரவசத்துடன் நடக்க ஆரம்பித்தேன். கொய்யா, மாம்பழம், நாவற்பழம், சப்போட்டா, சீத்தாப்பழம் என்று வசந்தத்தின் வெவ் வேறு வண்ணங்கள் அந்த நடைபாதையில் போகும் வழியெல்லாம் தள்ளுவண்டிகளில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தன. வசந்தம் இன்னும் விரிந்து கொண்டே போனது. அன்று, வசந்தத்துக்கு என் கண்களைத் திறக்கச் செய்தார் கண்ணதாசன்.

காதுகளின் கவிஞன்

கண்ணதாசன் பாடல்களில் இசையையும் தருணங்களையும் அகற்றிவிட்டு வெறும் வரிகளாக வாசிக்கும் விமர்சகர்களுக்குப் பலமுறை அவரது வரிகள் ஏமாற்றம் தரலாம். ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. கண்ணதாசன் கண்களின் கவிஞன் அல்ல; செவியின் கவிஞன். கவிதைகள் காலம்காலமாகச் செவிக்கு உரியவையாகத்தான் இருந்திருக்கின்றன. செவிநுகர் கனிகள் என்று கம்பன் சொல்லியது கவிதைகளுக்குத்தான் முற்றிலும் பொருந்தும். நீரில் நீலம் பிரியும் மைத்துளி போல செவியில் விழும் சொற்கள் மனதுக்குள் விரியும். எழுத்து, அச்சு என்பவையெல்லாம் அந்தச் சொற்களின் ஆவணக்காப்பகங்கள் போன்றுதான்.

தற்போது கவிதைகள் தமக்குரிய இசைத் தன்மையை விட்டுப் பார்வையை நோக்கித் திரும்பி விட்டன. கவிதைகள் காட்சிகளையே பெரிதும் தற்போது உருவாக்குகின்றன. கண்ணதாசன் அந்தக் காலத்துப் பாணர்களின் தொடர்ச்சி. அவரது பாடல்களைப் படிப்பதைக் காட்டிலும் இசையோடு கேட்கும்போது ஏற்படும் பரவசம் விளக்க முடியாதது. அது இசையால் மட்டுமே வருவதல்ல. முதற்காரணம், கண்ணதாசனின் வரிகள்தான். எடுத்துக்காட்டாக, 'போலீஸ்காரன் மகள்' என்ற திரைப்படத்தில் வரும் 'இந்த மன்றத்தில் ஓடிவரும்…' பாடலைப் பார்க்கலாம். அழகான மெட்டு, பி.பி. ஸ்ரீநிவாஸ், ஜானகி இருவரின் மதுரக் குரல்கள். இப்படி இருக்கும்போது இந்த வரி 'இந்தச் சபைதனில் ஓடிவரும்…' என்றோ, 'இந்தத் தோட்டத்தில் ஓடிவரும்…' என்றோ இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! 'மன்றம்' என்ற எளிய சொல்லில் இசை வந்து விழும்போது மாயாஜாலம் நிகழ்கிறது. மேலும், விசித்திரமான சூழலைக் கொண்டது அந்தப் பாடல். ஒரு தங்கை தன் காதலனை நினைத்து இப்படிப் பாடுகிறாள்:

நடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கிறாள்

அவள் விடிந்த பின் துயில்கின்றாள்

என் வேதனை கூறாயோ?

ஒருத்தி தன் காதல் வேதனையைச் சொல்லும் இந்தப் பாடலின் இடையே அவளுடைய அண்ணன் வேறு நுழைந்துகொள்கிறான். தென்றலிடம் தன் தங்கைக்காக அவனும் தூதுவிடுகின்றான். இந்த அண்ணனையே மறந்துபோகும் அளவுக்கு அவள் அளப்பரிய காதல் கொண்டிருக்கிறாள் என்று அவளுடைய காதலின் ஆழத்தைச் சொல்லும் அதே வேளையில், தனது தங்கைக்கு இந்த அண்ணனின் நினைவு இல்லாமல் போய்விட்டதே என்பதையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறான். காதல் பாடலில் அண்ணன் வந்தாலே ஓர் அபஸ்வரம்போல் ஆகிவிடும், இதில் அவன் தனது பொறாமை உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறானே! ஆனால், இசகுபிசகான இந்தத் தருணத்தையே பாடலுக்கு உயிரூட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இப்படி எழுதியிருக்கிறார் கண்ணதாசன்:

தன் கண்ணனைத் தேடுகிறாள்

மனக் காதலைக் கூறுகிறாள்

இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று

அதனையும் கூறாயோ...

தேன்பனி!

சொற்கள் இசைக்கு உயிர்கொடுக்க வேண்டுமே யொழிய, சொற்களுக்கு இசை உயிர்கொடுக்கக் கூடாது. அதனால்தான் 'மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்றான் பாரதி. கண்ண தாசனுடையதோ பனி போன்ற சொல்லின்பம். சொல்லின்பம் என்பது சொல்லில் அதிக அர்த்தத்தை ஏற்றும்போது வருவதல்ல. சொற்களின் சுமையை நீக்கும்போது இனிமை தானாகவே வந்துசேரும். லெப்பர்டி என்ற இத்தாலியக் கவிஞனின் வரிகளைப் பற்றி இதாலோ கால்வினோ இப்படிச் சொல்கிறார்: 'அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத் தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.' இது சில சமயங்களில் கண்ணதாசனுக்கும் பொருந்தும்.

பனி என்றால் தேன் கலந்த பனி! அப்படித்தான் சொல்ல வேண்டும் கண்ணதாசனின் வரிகளை. 'பனிபோல் குளிர்ந்தது கனிபோல் இனித்ததம்மா' என்ற வரிகளை வேறு எப்படிச் சொல்வது? இந்த வரிகளின் அர்த்தம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் சொற்களை மெலிதாக முணுமுணுத்துப் பாருங்கள். எவ்வளவு தண்மை! எவ்வளவு தித்திப்பு! இதேபோல் சொல்லின்பம் தரும் ஒரு சில உதாரணங்களையும் பாருங்கள்:

'மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு'

(பால்வண்ணம் பருவம் கண்டு - பாசம்)

'பாலாடை போன்ற முகம் மாறியதேனோ

பனிபோல நாணம் அதை மூடியதேனோ'

(பாவாடை தாவணியில் - நிச்சயத் தாம்பூலம்) 'முதிராத நெல்லாட ஆடஆட

முளைக்காத சொல்லாட ஆடஆட'

(கட்டோடு குழலாட- பெரிய இடத்துப் பெண்)

'இளைய கன்னிகை மேகங்கள் என்னும்

இந்திரன் தேரில் வருவாளாம்'

(நாளாம் நாளாம்… - காதலிக்க நேரமில்லை)

தேன்மூடிய சிருங்காரம்

காதல், காம உணர்வுகளைப் பூடகமாகவும் இனிக்கஇனிக்கவும் சொன்னவர் கண்ணதாசன். ஒரு பெண் தன்னுடைய காம உணர்வுகளைச் சொல்வதைச் சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், 'அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்' என்ற வரிகள் கண்ணதாசன் சொற்களில் சுசீலாவின் குரலில் வந்து விழும்போது ஒழுக்கவாதிகளுக்கும் மயக்கம் வருமே, அதை என்னவென்று சொல்ல! ஆரம்பத்தில் வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன வளுக்கு, அவன் 'ஒன்று' தந்த பிறகு உன்மத்தம் ஏறிக்கொள்கிறது. பிறகு, போதாது இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறாள். உண்மையில் அவள் வேண்டாம் என்று சொன்னதெல்லாம் கட்டுப் பாடுகளுக்குப் பயந்தல்ல; தனக்கு உன்மத்தம் ஏறி விடும் என்று பயந்துதான் என்பது பிறகு தெரிகிறது:

'தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்

ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்

அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள்

ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள், போதாதென்றாள்...

அர்த்தத்துக்கு அடுத்த இடம்தான்

கண்ணதாசன் இப்படியெல்லாம் மயக்கம் தரும்போது அர்த்தத்தை யார்தான் தேடிக்கொண் டிருப்பார்கள். இப்படிச் சொல்வது கண்ணதாசன் அர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவரில்லை என்பது அர்த்தம் அல்ல. அவரது தத்துவப் பாடல் களுக்குள் புகுந்தால் அவற்றிலிருந்தும் மீள முடியாது. சொற்களிலே கவிஞன் கிறுகிறுக்க வைக்கும் போது அங்கே அர்த்தம் நமக்கு இரண்டாம் பட்சமாகப் போய்விடும். 'உன்னை நான் கொல்லவா?' என்பதை கண்ணதாசன் தனக்கேயுரிய மொழியில் கேட்டால் 'கொல்லுங்கள்' என்றுதானே நமக்குச் சொல்லத் தோன்றும்.

கண்ணதாசனுக்குத் திரைப்படம், இசை, 'சிச்சுவேஷன்' எல்லாம் தனது உணர்வுகளையும், சோகங்களையும் கொட்டுவதற்கு ஒரு வாய்ப்பு. கண்ணதாசன் தனது இறுதிப் பாடலில் இப்படி எழுதியிருப்பார்:

உனக்கே உயிரானேன்

எந்நாளும் எனை நீ மறவாதே!

உண்மையில், இது நம்மை நோக்கி அவர் வைக்கும் வேண்டுகோள். எப்படி மறக்க முடியும் கண்ணதாசன், உங்களை!

கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
*காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்...


` *கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.

` *சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.

*`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

*எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

*`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

*வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

*`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

*’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

*கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
*கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.

*காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!

*ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

*முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

*படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

*`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

*`உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’

*தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

*காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.

*திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

*திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.

*`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

*`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

*தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!
*`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்

*இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...
  `ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
   அவன் பாட்டை எழுந்து பாடு!


நன்றி-விக்கிப்பீடியா ,தமிழ் தி இந்து .லக்ஷ்மன்  ஸ்ருதி .

நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22


நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22 

இளைய தளபதி விஜய்யின் இயற்பெயர் ஜோஸப் விஜய் சந்திர சேகர். ஜூன் 22, 1974-ல் சென்னையில் பிறந்தவர். திரைப்பட நடிகர், நடனக் கலைஞர், பாடகர், தயாரிப்பாளர் என பல முகங்கள் உண்டு. அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா . நாயகனாக அறிமுகமானது, அப்பாவின் இயக்கத்தில் 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தில். நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு நடித்த செந்தூரப் பாண்டி, விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதை இப்பவும் ஒப்புக்கொள்வார் விஜய், 'புலி' வரை 58 படங்கள் வெளியாகி உள்ளன. அட்லி இயக்கத்தில் 59-வது படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

வாழ்க்கை!

ஆகஸ்ட் 25-ம் தேதி 1999-ம் ஆண்டு சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை திருமணம் செய்தார். 2000-ல் சஞ்சய் என்ற மகனும், 2005-ல் திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது சொந்த காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்கு வரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய். திடீரென்று நினைவு வந்தால் நண்பர்களோடு காரில் வந்து ஆசையாக லயோலா கல்லூரி வகுப்பு பெஞ்சில் உட்கார்ந்துவிட்டுச் செல்வார் விஜய். இப்போது இருக்கும் புகழ், ரசிகர்களின் அன்பு ஆகியவற்றால் பொது இடங்களுக்குச் செல்லும்போது நிறைய இடையூறுகள் ஏற்படுவதால், அதைத் தவிர்த்து வருகிறார். அவரின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கம். வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கிளம்பி வந்து, அன்று முழுவதும் அம்மாவுடனும் குடும்பத்தாருடனும் நேரம் செலவுசெய்வது விஜய்யின் பழக்கம். கொஞ்சம் அம்மா பிள்ளை.


ஷூட்டிங் முடிந்து வந்தாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்குவார். சூப்பர் டூப்பர் படம் முதல் அட்டர் பிளாப் படங்கள் வரை தவறாது பார்த்துவிடுவார். ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் பெருவாரியான சி.டி. கலெக்‌ஷன் அவர் வீட்டில் உண்டு. மாமிச உணவுகளின் மேல் விஜய்க்குப் பிரியம் உண்டு. டிராமிசு எனப்படும் இத்தாலி கேக்கை விரும்பிச் சாப்பிடுவார் என காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் கூறியுள்ளார். அம்மா சமைத்த அசைவ உணவுகளுக்கு விஜய் அடிமை! இந்தியில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். அவர் நடித்து வெளியாகிற இந்திப் படங்களுக்கு முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆசைப்படும் விஜய்க்கு இப்போதெல்லாம் அது முடியவில்லை. மனைவி சங்கீதாவை 'ஹாய் கீஸ்' எனச் செல்லமாகக் கூப்பிடுவார். எப்போதாவது கொஞ்சம் கோபமாக இருந்தால், 'வாங்க... போங்க...' தான்! வருஷத்துக்கு ஒரு தடவையாவது மனைவி, குழந்தைகளுடன் நிச்சயம் லண்டன் டிரிப் உண்டு. லண்டனில் சங்கீதாவின் அப்பா வீட்டில் கொஞ்ச நாள் இருந்த பிறகு, அதற்கடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் ட்ரிப் விரிவடையும். எந்த நாட்டுக்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது பையனும் பெண்ணும்தான். வீட்டில் டென்னிஸ். இப்போது இவருக்கு விடாப்பிடியாக ஜோடி கட்டுவது அவரது மகன் சஞ்சய்தான்! சஞ்சய்யின் ஒவ்வொரு வயது கூடும்போதும் அவரது நடவடிக்கைகளை வீடியோவில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். இப்போது பெண்ணுக்கும் அதே வீடியோக்கள், புகைப்படங்கள் சேகரிப்பு ஆரம்பம். நெருக்கமான கல்லூரி நண்பர்களை 'மச்சி' என்று அழைப்பார். மற்றவர்களை 'என்னங்கண்ணா'! கிச்சன் பக்கமும் எட்டிப் பார்ப்பார் விஜய். சின்னச் சின்ன சாப்பாடுகளை செய்து குடும்பத்தாரை அசத்துவது ஓய்வு நேர வேலை. அவர் தயாரித்துத் தருகிற காபி விசேஷ சுவையாக இருக்கும் எனப் பலர் சொல்லியிருக்கிறார்கள். எப்போதும் விரும்பிச் சாப்பிடுவது மட்டன் குருமா, தோசை. இளம் தோசையாக இருந்தால் இன்னும் பிடித்தமாகச் சாப்பிடுவார்! வீட்டின் வராந்தாவில் காத்திருக்கும் எல்லா கார்களின் நிறமும் கறுப்பு. அம்மா ஷோபா சந்திரசேகரை இசைக் கச்சேரிகளில் பாட ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்துவார். அம்மாவின் கச்சேரிகளுக்கு எப்போதும் முதல் ஆளாக ஆஜர் ஆவார். மகன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருகிறார் விஜய்.

சினிமா வாழ்க்கை!

எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிறமொழிப் படங்களில் நடிக்கச் சம்மதிப்பது இல்லை விஜய். தமிழில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார். விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. தற்சமயம், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா. நிறைய புதுமுகங்களோடு ஜோடி சேர்ந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஜாலியாக ரெக்கார்டிங்கில் உட்கார ஆசைப்படுவார் விஜய். எப்பவும் அவரது சமீபத்திய பாடல்களில் முணுமுணுப்போடுதான் காணப்படுவார் விஜய். கொக்கோ கோலா, சன் ஃபீஸ்ட், போத்தீஸ் என, பல விளம்பரங்களில் நடித்தவர். விஜய் அப்பாவிடம் முதலில் சினிமாவில் நடிக்கிற ஆசையைச் சொல்ல, பேசிக் காட்டியது அண்ணாமலை பட வசனம்தான். அதனால் இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசிக் காட்டுவார். நடனத்தில் மிகவும் பெயர் பெற்ற விஜய்க்கு பிடித்த நடனக்காரர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், மாதுரி தீட்சித் தான். காதலுக்கு மரியாதை (1998) படத்துக்காகவும், திருப்பாச்சி (2005) படத்துக்காகவும் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருதை இருமுறை பெற்றவர். 'விஜய் டி.வி"-யின் விருதுகளை 5 முறை வென்றுள்ளார். இவை தவிர, கில்லி (2004) - 'சென்னை கார்ப்பரேட் கிளப்'-பின் சிறந்த நடிகர் விருது, கில்லி (2004) - 'தினகரன்' நாளிதழின் சிறந்த நடிகர் விருது, கில்லி (2004) - 'ஃபிலிம் டுடே' சிறந்த நடிகர் விருது, பொதுச்சேவை அறிவிப்புக்கு (2005) வெள்ளி விருது, போக்கிரி (2007) - தமிழின் சிறந்த நடிகருக்கான 'அம்ரிதா மாத்ருபூமி' விருது, போக்கிரி (2007 )- சிறந்த நடிகருக்கான 'இசை அருவி' தமிழ் இசை விருது, வேட்டைக்காரன் (2009) - சிறந்த நடிகருக்கான 'இசை அருவி' தமிழ் இசை விருது, துப்பாக்கி, நண்பன் (2012) - விகடன் சிறந்த நடிகர் விருது... என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ’புலி’ படத்தின் 'ஏண்டி ஏண்டி' பாடலுடன் சேர்த்து 29 பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் இவருக்கு முதலில் பாடும் வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் தேவா இசையில் மட்டும் பத்து பாடல்களைப் பாடியிருக்கிறார். 'கத்தி' படத்தின் வசூல் 100 கோடிகளைத் தொட்டதில் தமிழில் ரஜினிக்குப் பிறகு 100 கோடி க்ளப்பில் இணைந்த நாயகன் விஜய்தான்.
நன்றி - சினிமா விகடன் .

வியாழன், 16 ஜூன், 2016

இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் நினைவு நாள் ஜூன் 21.


இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்  நினைவு நாள் ஜூன் 21.
கே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - சூன் 21, 2001), ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.

வாழ்க்கைக் குறிப்பு 
தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.

பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.

திரைப்படத் துறையில் 
1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார். மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடினார்.

விருதுகள்
சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1967, கந்தன் கருணை) (இவ்விருதின் முதல் பெறுநர்)
சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது (1969, அடிமைப் பெண்)
சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1980, சங்கராபரணம்)
சிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர் விருது (தெலுங்கு) (1992, சுவாதி கிரணம்)
கலைமாமணி விருது
மறைவு
கே. வி. மகாதேவன் 2001 சூன் 21 இல் தனது 83வது அகவையில் சென்னையில் காலமானார்.

கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)

1941 - 1950
பக்த கௌரி (1941)
மனோன்மணி (1942)
பக்த ஹனுமான் (1944)
1951 - 1960[தொகு]
மதன மோகினி (1953)
நல்ல காலம் (1954)
டவுன் பஸ் (1955)
சம்பூர்ண ராமாயணம் (1956)
முதலாளி (1957)
நல்ல இடத்து சம்பந்தம் (1958)
நீலாவுக்கு நெறஞ்ச மனசு (1958)
நாலு வேலி நிலம் (1959)
சொல்லுத்தம்பி சொல்லு (1959)
பாஞ்சாலி (1959)
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (1959)
ஆட வந்த தெய்வம் (1960)
பாவை விளக்கு (1960)
படிக்காத மேதை (1960)
கைதி கண்ணாயிரம் (1960)
எங்கள் செல்வி (1960)
சிவகாமி (1960)
தங்கம் மனசு தங்கம் (1960)
தங்கரத்தினம் (1960)
1961 - 1970
தாய் சொல்லை தட்டாதே (1961)
தாயைக்காத்த தனயன் (1962)
கவிதா (1962)
குடும்பத்தலைவன் (1962)
சாரதா (1962)
வடிவுக்கு வளைகாப்பு (1962)
வளர் பிறை (1962)
மாடப்புறா (1962)
அன்னை இல்லம் (1963)
இருவர் உள்ளம் (1963)
லவகுசா (1963)
வானம்பாடி (1963)
குலமகள் ராதை (1963)
குங்குமம் (1963)
கன்னித்தாய் (1965)
எங்க வீட்டுப் பெண் (1965)
திருவிளையாடல் (1965)
தாலி பாக்கியம் (1966)
சரஸ்வதி சபதம் (1966)
கந்தன் கருணை (1967)
திருமால் பெருமை (1968)
தில்லானா மோகனாம்பாள் (1968)
தெய்வீக உறவு (1968)
எதிரொலி (1970)
விளையாட்டுப் பிள்ளை (1970)
1971 - 1980
வசந்த மாளிகை (1972)
உத்தமன் (1976)
சத்யம் (1976)
1980 - 1990
பதில் சொல்வாள் பத்ரகாளி (1986)
வெளியான ஆண்டு தெரியாதவை
அக்கினி புராண மகிமை
கே.வி.மகாதேவன் 10
# கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன் கோவிலில் (1918) பிறந்தவர். தந்தை கோட்டுவாத்திய இசைக் கலைஞர். சிறு வயதிலேயே இவருக்கு இசையில் நாட்டம் இருந்ததால் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை.

# தந்தையிடம் இசை பயின்றார். பிறகு பூதபாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக குருகுல முறையில் சில ஆண்டுகள் இசை பயின்றார். அங்கரை விஸ்வநாத பாகவதரின் குழுவில் இணைந்து டெல்லி, மும்பை, ஹைதராபாத், நாக்பூர் ஆகிய நகரங்களில் கச்சேரி செய்தார்.

# ஸ்ரீபாலகந்தர்வ கான சபாவில் 13 வயதில் சேர்ந்தார். பெண் வேடமேற்று பாடி, நடித்தார். வேறு சில நாடக கம்பெனிகளிலும் நடித்தார். சென்னையில் சில காலம் ஒரு ஹோட்டலில் வேலை செய்தார். நாடக ஆசிரியர் சந்தானகிருஷ்ண நாயுடு சிபாரிசில் வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது.

# பிரபல இசை அமைப்பாளர் டி.ஏ.கல்யாணம் இவரது இசை ஞானத்தை அடையாளம் கண்டு தன் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். 1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நிரந்தர இசை அமைப்பாளராகச் சேர்ந்தார். 1942-ல் மனோன்மணி திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார்.

# 1950-களின் மத்தியில் டவுன் பஸ், முதலாளி, மக்களைப் பெற்ற மகராசி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பேரும் புகழும் பெற்றார். பாடலுக்குப் பொருத்தமான இசையை வழங்குவது இவரது சிறப்பம்சம். சுமார் ரகப் படங்கள்கூட, கண்ணதாசன் வரிகளாலும், இவரது இசையமைப்பாலும் தோல்வியைத் தழுவாமல் தப்பித்தன.

# தமிழகத்தில் மட்டுமின்றி, தெலுங்கு மண்ணிலும் பெரிதும் கொண்டாடப்பட்ட இசை அமைப்பாளராக முத்திரை பதித்தார். இவரது நீண்ட நெடிய இசைப் பயணத்தில் யார் மனதும் புண்படும்படி இவர் நடந்துகொண்டதே இல்லை.

# ராகங்களின் அழகைச் சிதைக்காமல், அவற்றின் பாவங்கள் வெளிப்படும் வகையில், மாறிவரும் நவீனத் திரையிசை சூழலுக்கு ஏற்ப கச்சிதமாகப் பொருந்தும் வகையில் இசையமைத்தார். பாடலாசிரியர்கள் விரும்பும் இசையமைப்பாளர் என்றும் புகழப்பட்டார்.

# ‘திரையிசைத் திலகம்’ என்று போற்றப்பட்ட இவருடைய பாடல்கள் சங்கீத நுட்பம் நிறைந்ததாக இருக்கும். திரை இசையில் சாஸ்திரிய இசை, நாட்டுப்புற இசை, மெல்லிசை என்று ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்தார்.

# மதன மோகினி திரைப்படத்தில் பி.லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். கந்தன் கருணை, சங்கராபரணம் படங்களுக்காக இவருக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதுகள் கிடைத்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழில் 218 படங்களுக்கு இசை அமைத்தார்.

# தனது அற்புதமான இசையமைப்பில் ஏராளமான பாடல்களை வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற கே.வி.மகாதேவன் 83 வயதில் (2001) மறைந்தார்.
நன்றி -விக்கிபிடியா, தி தமிழ் இந்து .