வியாழன், 24 மே, 2012

ம‌னோர‌ம்மா பிற‌ந்த‌ நாள் மே 26,






மனோரம்மா (பி. 26 மே 1943, மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியா) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது.இவர் தமிழ்த் திரையுலகினராலும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ஆச்சி என அன்போடு அழைக்கப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதல் அமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, முத்துவேல் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா ஜெயராம் மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
பெற்ற விருதுகள்
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
பத்ம ஸ்ரீ - 2002
தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
மனோரம்மா கலைப்பயணங்கள்.
ஆண்டிப்பட்டி அரசம்பட்டி(2006) (அறிவிப்பு)
அழகேசன் (2004)
பேரழகன் (2004)
சாமி (2003) .... புவனாவின் பாட்டி வேடம்
ஜெயா (2003)
புகழ் (2003)
விசில் (2003)
ஆச்சி இண்டெர்நேஷனல்(2002) தொலைக்காட்சித் தொடர் .... ஆச்சி
கார்மேகம் (2002)
ஜெமினி (2002)
காதல் வைரஸ் (2002)
முசிராமா (2002) தொலைக்காட்சித் தொடர்
ஒற்றன் (2002)
பிரியாத வரம் வேண்டும் (2001)
மாயி (2001)
பாண்டவர் பூமி (2001)
பூவெல்லாம் கேட்டுப்பார் (2001)
சீறிவரும் காளை (2001)
டபுள்ஸ் (2000)
கண்ணன் வருவான்(2000)
சிநேகிதியே (2000)
எதிரும் புதிரும்(1999)
பெரியண்ணா (1999)
புதிய பாதை(1999)
பரதேசி (1998)
மறுமலர்ச்சி (1998)
பூந்தோட்டம் (1998)
அருணாச்சலம் (1997)
லவ் பேர்ட்ஸ்(1997)
இந்தியன் (1996)
முத்துக் காளை(1995)
நான் பெத்த மகனே(1995) .... ஆண்டாள்
நந்தவனத் தேரு(1995)
நாட்டுப்புறப் பாட்டு(1995) .... பாரிஜாதத்தின் தாய் வேடம்
ரிக்சாவோடு (1995) .... பாமா வேடம்
காதலன் (1994)
மே மாதம்(1994)
போலிஸ் பிரதர்ஸ்(1994)
ஷோபாவின் ரசிகன்(1994)
வியட்னாம் காலனி (1994)
ஜெண்டில்மேன்(1993) .... கிட்டுவின் தாய் வேடம்
அலரி பிரியுடு(1993)
எஜமான் (1993)
ஜ லவ் இந்தியா (1993)
அண்ணாமலை (1992) .... தாய் வேடம்
மகுடம் (1992)
சிங்காரவேலன் (1992) .... தாயம்மா வேடம்
நாட்டுக்கு ஒரு நல்லவன் (1991)
இரவு சூரியன் (1991)
ஆகாச கோட்டையிலே சுல்தான் (1991) .... குமுதம் வேடம்
சின்ன கவுண்டர் (1991) ....
சின்னத் தம்பி (1991) .... கண்ணம்மா வேடம்
இதயம் (1991)
மைக்கேல் மதன காமராஜன் (1991) .... கங்கா பாய் வேடம்
எங்கிட்ட மோதாதே (1990)
கிழக்கு வாசல் (1990)
மன்னன் (1990)
நடிகன் (1990)
மீனாக்சி திருவிளையாடல் (1989)
அபூர்வ சகோதரர்கள் (1989) .... முனியம்மா வேடம்
தம்பி தங்கக்கம்பி (1988)
குரு சிஷ்யன் (1988)
இது நம்ம ஆளு (1988)
பாட்டி சொல்லத் தட்டாதே (1988)
உன்னால் முடியும் தம்பி (1988)
Aankiliyude Tharattu (1987)
பேர் சொல்லும் பிள்ளை (1987)
அன்னை என் தெய்வம் (1986)
நம்பினார் கெடுவதில்லை (1986)
மரகத வீணை (1986)
நான் அடிமை இல்லை (1986)
சம்சாரம் அது மின்சாரம் (1986) .... கண்ணம்மா
ஸ்ரீ ராகவேந்தர் (1985)
குடும்பம் (1984)
Bhooka Sher (1984)
மெட்ராஸ் வாத்தியார் (1984)
மாமன் மச்சான் (1984)
நாளை உனது நாள் (1984)
வெள்ளைப் புறா ஒன்று (1984)
கௌரி கல்யாணம் (1983)
அடுத்த வாரிசு (1983)
பாயும் புலி (1983)
சிவப்பு சூரியன் (1983)
தங்க மகன் (1983)
சட்டம் சிரிக்கிறது (1982)
போக்கிரி ராஜா (1982)
சிம்லா ஸ்பெஷல் (1982)
வாழ்வே மாயம் (1982)
தீ (1981)
காளி (1980)
பில்லா (1980)
நான் போட்ட சவால் (1980)
ரிஷி மூலம் (1980)
சுபோதயம் (1980)
குப்பத்து ராஜா (1979)
புதிய வார்ப்புகள் (1979)
என் கேள்விக்கு என்ன பதில் (1978)
சங்கர் சலீம் சைமன் (1978)
ஆயிரம் ஜென்மங்கள் (1978)
பைரவி (1978)
ஒரு வீடு ஒரு உலகம் (1978)
வாழ நினைத்தால் வாழலாம் (1978)
வணக்கத்துக்குரிய காதலியே (1978)
ஆறுபுஷ்பங்கள் (1977)
அந்தமான் காதலி (1977)
பத்ர காளி (1976)
ஜெய் பாலாஜி (1976)
குன்வார பாப் (1974) .... ஷீலா வேடம்
அவளும் பெண் தானே(1974)
ஞான ஒலி(1972)
காசேதான் கடவுளடா(1972)
முகமது பின் துக்லக்(1971)
Vidhyarthigale Ithile Ithile (1971)
எங்கள் தங்கம்(1970)
வா ராஜா வா(1969)
பொம்மலாட்டம் (1968)
கலாட்டாக் கல்யாணம் (1968)
கணவன் (1968)
தில்லானா மோகனாம்பாள்(1968) .... ஜில் ஜில் சுந்தரி வேடம்
ஆலயம்(1967)
அனுபவி ராஜா அனுபவி(1967)
கந்தன் கருணை(1967)
தாய்க்குத் தலைமகன்(1967)
தங்கத் தம்பி(1967)
அன்பே வா(1966)
எங்க வீட்டுப் பெண்(1965)
கொஞ்சும் குமரி(1963)
ரக்த திலகம்(1963)
மகாவத் (1962)
நெஞ்சில் ஓர் ஆலயம்(1962)
புதிய பாதை (1960)
மரகதம் (1959)
மாலையிட்ட மங்கை (1958).
பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்
பெயர் மனோரமா
தந்தை பெயர் காசி கிளார்க்குடையார்
தாயார் பெயர் ராமாமிர்தம்மாள்
பிறந்த ஆண்டு 1939
பிறந்த ஊர் ராஜமன்னார்குடி
வளர்ந்த ஊர் காரைக்குடி அண்மையில் உள்ள பள்ளத்தூர்
முதன் முதல் நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய ஆண்டு 1952 முதல் நாடகம் 'யார் மகன்?'. நடித்த மொத்த நாடகங்கள் சுமார் 5000க்கும் மேல்.
திரையுலகில் முதல் படம் நடித்த ஆண்டு 1958 முதல் படம் 'மாலையிட்ட மங்கை'. நடித்த மொத்த திரைப்படங்கள் 1200க்கு மேல். உலக சாதனையாளர் பட்டியலில் 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
நடித்த மொழிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம்.
தயாரித்த படம் இவர் தயாரித்த 'தூரத்துச் சொந்தம்' படம் இந்தியன் பனோரமா விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
இசை நிகழ்ச்சி இவர் தனது மகன் பூபதியுடன் இணைந்த 'மியூசிரமா' என்ற இசைக் குழுவின் மூலம் இந்தியாவிலும் உலகில் பல நாடுகளிலும் பாடி, நடித்து, நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
நடித்துள்ள டி.வி. தொடர்கள் 'காட்டுப்பட்டிச் சத்திரம்', 'அன்புள்ள அம்மா', 'தியாகியின் மகன்', 'வானவில்', 'ஆச்சி இன்டர்நேஷனல்', 'அன்புள்ள சிநேகிதி', 'அல்லி ராஜ்யம்', 'அவள்', 'ரோபோ ராஜா', 'மனுஷி', 'வா வாத்தியாரே', 'டீனா மீனா' போன்ற இன்னும் பல.
நடிப்பில் பெற்ற பரிசுகள் 1. சிறந்த குணச்சித்திர நடிகை, புதிய பாதை படத்தில் நடித்ததிற்காக 1990ல் இந்திய அரசு பரிசு.
  2. 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளதைப் பாராட்டி தமிழ் நாடு பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் 'TANSJA' விருது.
  3. தெலுங்கு 'Sambayya' படத்தில் சிறப்பாக நடித்ததைப் பாராட்டி 'AFJA' விருது.
  4. சிறந்த குணச்சித்திர நடிகையாக அண்ணா விருது, என்.எஸ்.கே. விருது, எம்.ஜி.ஆர் விருது, ஜெயலலிதா விருது ஆகியவை தமிழக அரசினால் வழங்கப்பட்டன.
சிறப்பு விருது மற்றும் பட்டங்கள் 1. இந்திய குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ, தமிழ் நாடு அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச் செல்வம், நவரச நாயகி, மக்கள் கலை அரசி, முத்தமிழ் வித்தகி.
  2. மலேசிய அரசின் டத்தோ சாமுவேல் 'சரித்திர நாயகி' விருது. (டத்தோ சாமுவேல் சாதனையாளர் விருது).
  3. அமெரிக்காவின் வாஷிங்டன் D.C. விருது.
  4. கேரள கலா சாகர் விருது.
  5. பிலிம் ஃபேன்ஸ் விருது 28, சாதனையாளர் விருது.
  6. பிலிம் ஃபேர் சாதனையாளர் விருது.
  7. சினிமா எக்ஸ்பிரஸ் விருது.
ஐந்து முதல்வர்களுடன் நடித்தது 'அண்ணா', 'கலைஞர்', 'புரட்சித் தலைவர்', 'ஜெயலலிதா', தெலுங்கில் 'என்.டி.ஆர்'.
இந்த சாதனை நாயகியின் சாதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது!

புதன், 23 மே, 2012

கவுண்டமணி பிற‌ந்த‌ நாள் மே 25,


கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.
இளமையும் வாழ்க்கையும்.
கவுண்டமணி இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் கிராமத்தில் 1950-ல் பிறந்தார். அவரது நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது.அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர் பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது கொங்கு தமிழ் பேச்சும் வெறுப்பு கலந்த உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது.
இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள்:
இவர் சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன. இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள் பின்வருமாறு
கரகாட்டக்காரன்
சின்னக்கவுண்டர்
* உள்ளத்தை அள்ளித் தா
மேட்டுக்குடி
நடிகன்
தங்கம்
மன்னன்
இந்தியன்
நாட்டாமை
மாமன் மகள்
உனக்காக எல்லாம் உனக்காக
முறை மாமன்
சூரியன்
இவரது நகைச்சுவை சொல்லாடல்கள் சில:
நாராயணா.. இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி..
ஊ இஸ் த டிஸ்டபென்ஸ்” (சூரியன்)
சொரி புடிச்ச மொன்ன நாயி” (கோயில் காளை)
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா “(சூரியன்)
ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சாணிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிர“ (வைதேகி காத்திருந்தாள்)
நான் ரொம்ப பிஸி “ (சூரியன்)
ஒரு எளனிய எவ்ளோ நேரம்டா உறிஞ்சுவ போடா” (கோயில் காளை)
இந்த டகால்டி தானே வேணாங்கிறது
வாட் எ பியூட்டி யெங் கேள் ” (உனக்காக எல்லாம் உனக்காக)
டேய் தகப்பா ” (நாட்டாமை)
ஐயா தீஞ்ச மண்ட தர்மம் போடுங்க” (கோயில் காளை)
நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடிலப்பா” (மன்னன்)
இந்த நாயே 6 ஆங் கிளாஸ்ல அஞ்சு தடவ பெயில் ” (முறைமாமன்)
நாயக் கல்நாயக்” (கர்ணா)
எங்கயோ கொழுத்து வேல செஞ்சுட்டுருந்த கம்முனாட்டி பையன் நீ ” (சின்ன தம்பி)
நான் எங்க எப்படி இருக்க வேண்டியவேன்
"நாலு வீடு வாங்கி திங்குற நாய்க்கி பழமய பாரு பேச்ச பாரு" (சின்ன கவுண்டர்)
பழமொழிய ஏண்டா சொல்றீங்க நாய்ங்களா ” (கரகாட்டகாரன்)
மொச புடிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியாதா
கவுண்டமணி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...      
·         `சுப்பிரமணியாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!.  
·         கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். `பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளிஎன்பார் இயக்குநர் மணிவண்ணன்!    
·         பாரதிராஜாதான் `கவுண்டமணிஎனப் பெயர் மாற்றினார். `16 வயதினிலேதான் அறிமுகப் படம்!  
·         அம்மாவை `ஆத்தாஎன்று தான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்! 
·         கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது `மிஸ்டர் பெல்என்று கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்தத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!      
·         மிகப் பிரபலமான கவுண்டமணி செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!    
·         இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.      
·         கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு . எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட `சரிஎன்பார். `இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ் கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!     
·         உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு, `பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பாஎன நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!       
·         திருப்பதி ஏழுமலையான் தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம், நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைந்திருக்கிறார் கவுண்டமணி!  
·         சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜீன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்! 
·         கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகன் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டு கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!      
·         புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது தனிமை விரும்பி!       
·         ஓஷோவின் புத்தங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசு செய்வார்!     
·         கவுண்டமணி தி.நகர் ஆபீஸீக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்து பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!  
·         கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டு கொள்ளப் பிடிக்காது. `என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம், அவருக்கு பட்டம் கிடையாதுடா!என்பார்.      
·         ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு! 
·         ஷீட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!    
·         கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். `நம் செளகர்யம் பார்த்தா பத்தாது.... ஜனங்க நடமாட செளகர்யம் கொடுக்கணும்என்பார்!    
·         எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்‌ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!   
·         டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார், `மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்றுவேலைஎன்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!
         கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் `ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ `வரவு எட்டணா செலவு பத்தணா’, `நடிகன்’, அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானுஎன சுய எள்ளலும் செய்துகொள்வார்!     
         `மறக்கவேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களைஎன அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!    
·         சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருந்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருந்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!     
·         ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!

வியாழன், 10 மே, 2012

நமிதா பிறந்த நாள் மே 10,


நமிதா பிறந்த நாள் மே 10,
நமிதா (பிறப்பு. மே 10, 1981), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நமிதா (Namitha) 1981 ஆம் வருடம் மே 10 ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தார். அவரின் முழுப்பெயர் நமிதா கபூர். நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ்.இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெயிட்லி , மூன்றாம் இடம் பெற்றவர் த்ரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் 'எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார். நமிதாவிற்கு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் விளையாட பிடிக்கும். அவர் சிறிது காலம் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். வெள்ளை ரோஜா
அவரின் விருப்பமான மலர் ஆகும்.
நமிதா நடித்துள்ள படங்கள்
1. சொந்தம் - (தெலுங்கு) -2002
2. ஜெமினி - (தெலுங்கு) - 2002
3. ஒக்க ராஜு ஒக்க ராணி - (தெலுங்கு) - 2003
4. எங்கள் அண்ணா - (தமிழ்) - 2004
5. ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி - (தெலுங்கு) - 2004
6. அய்த்தே எண்டி - (தெலுங்கு) - 2005
7. ஏய் - (தமிழ்) 2005
8. சாணக்யா - (தமிழ்) - 2005
9. பம்பரக் கண்ணாலே - (தமிழ்) - 2005
10. நாயக்குடு - (தெலுங்கு) - 2005
11. ஆணை - (தமிழ்) - 2005
12. இங்கிலீஷ்காரன் - (தமிழ்) - 2005
13. கோவை பிரதர்ஸ் - (தமிழ்) - 2006
14. பச்சைக் குதிரை - (தமிழ்) - 2006
15. தகப்பன்சாமி - (தமிழ்) - 2006
16. நீ வேணுண்டா செல்லம் - (தமிழ்) - 2006
17. நீலகண்டா - (கன்னடம்) - 2006
18. வியாபாரி - (தமிழ்) - 2007
19. நான் அவன் இல்லை - (தமிழ்) - 2007
20. அழகிய தமிழ் மகன் - (தமிழ்) - 2007
21. பில்லா 2007 - (தமிழ்) - 2007
22. சண்ட - (தமிழ்) - 2008
23. பாண்டி - (தமிழ்) - 2008
24. இந்திரா - (கன்னடம்) - 2008
25. பெருமாள் - (தமிழ்) - 2009
26. தீ - (தமிழ்) - 2009
27. 1977 - (தமிழ்) - 2009
28. பில்லா - (தெலுங்கு) - 2009
29. இந்திரவிழா - (தமிழ்)
30. ஜகன்மோகினி - (தமிழ்)
31. பிளாக் ஸ்டாலோன் - (மலையாளம்)
32. தேசதுரோகி - (தமிழ்)(தெலுங்கு)
33. மாயா - (ஆங்கிலம்)
34. கெட்டவன் - (தமிழ்) - தயாரிப்பில்

வியாழன், 3 மே, 2012

டி.ஆர் ராஜகுமாரி பிற‌ந்த‌ நாள் மே 5.



டி.ஆர் ராஜகுமாரி (மே 5, 1922 - செப்டம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ் பெற்ற இசை (சங்கீத) மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரைப் பறிகொடுத்தவர். இவர் திருமணமே செய்து கொள்ளாமல் தன் சகோதரர் டி. ஆர். ராமண்ணா குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.
திரைப்படத்துறையில்
1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மந்தாரவதி, சூர்யபுத்ரி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது.
சிவகவி (1943) படத்தில் ராஜகுமாரி
ராஜகுமாரி பல புகழ் பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். பி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் எம். கே. ராதாவுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ”ஜிப்சி” நடனம் மற்றும் உச்ச கட்ட காட்சியில் ஆடிய ”டிரம்ஸ்” நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.
கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்த சேனையாக இவர் தோன்றி நடித்திருந்தார். எம். கே. தியாகராஜா பாகவதர், பி. யூ. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி. சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவர்தான்.
எம்.ஜி.ஆருடன் பணக்காரி (1953) இலும், சிவாஜியுடன் அன்பு படத்திலும் இணைந்து நடித்தார். தனது 37ஆவது வயதில் 1959 இல் சிவாஜியுடன் இணைந்து தங்கப்பதுமையில் நடித்திருந்தார்.
இவர் 1963 இல் கடைசியாக இரண்டு படங்கள் நடித்தார். கவியரசர் கண்ணதாசன் தயாரித்த வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாகவும், டி. ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த பெரிய இடத்துப் பெண் படத்தில் எம். ஜி.ஆருக்குச் சகோதரியாகவும் நடித்திருந்தார். அதற்குப் பின் படங்களில் நடிக்கவில்லை.
இவர் நடித்த திரைப்படங்கள்.
குமார குலோத்துங்கன்
மந்தாரவதி
சூர்யபுத்ரி
சதி சுகன்யா
மனோன்மணி
சிவகவி
குபேர குசேலா
சாலிவாஹன்
பிரபாவதி
ஹரிதாஸ்
வால்மீகி
விஸ்வாமித்ரா
பங்கஜவல்லி
விகடயோகி
சந்திரலேகா
கிருஷ்ணபக்தி
பவளக்கொடி
விஜயகுமாரி
இதயகீதம்
வனசுந்தரி
தங்கமலை ரகசியம்
மனோகரா

புதன், 2 மே, 2012

திரிஷாபிறந்த‌ நாள் மே 04


திரிஷா (பிறப்பு - மே 4, 1983, சென்னை), தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி முதலிய திரைப்படங்களில் நடித்ததின் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 2000ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திரைப்படங்கள்
வருடம் திரைப்படம் பாத்திரத்தின் பெயர் மொழி மேலும் தகவல்கள்
1999 ஜோடி காயு நண்பி தமிழ்
2002 மௌனம் பேசியதே சந்தியா தமிழ் Winner, Filmfare Best Tamil Female Debut Award
2003 மனசெல்லாம் மலர் தமிழ்
சாமி புவனா தமிழ்
லேசா லேசா பாலமணி தமிழ் Winner, ITFA Best New Actress Award
அலை மீரா தமிழ்
எனக்கு 20 உனக்கு 18 ப்ரீத்தி தமிழ்
2004 வர்ஷம் சைலஜா தெலுங்கு Winner, Filmfare Best Telugu Actress Award
Winner, Santosham Best Actress Award
கில்லி தனலட்சுமி தமிழ்
ஆய்த எழுத்து மீரா தமிழ்
2005 திருபாச்சி சுபா தமிழ்
Nuvvostanante Nenoddantana Siri தெலுங்கு Winner, Filmfare Best Telugu Actress Award
Winner, Nandi Award for Best Actress
Winner, CineMAA Award for Best Actress
ஜி புவனா தமிழ்
நந்து Puri தெலுங்கு Nominated, Filmfare Best Telugu Actress Award
Allari Bullodu Trisha Rao தெலுங்கு
ஆறு மகாலட்சுமி தமிழ்
2006 ஆதி அஞ்சலி தமிழ்
Pournami Pournami தெலுங்கு
Bangaram Cameo தெலுங்கு Cameo appearance
உன்னகும் என்னாகும் Something Something கவிதா தமிழ் Winner, Vijay Award for Favourite Heroine
Stalin Chitra தெலுங்கு
சைனிகுட வரலக்ஷ்மி தெலுங்கு
2007 Aadavari Matalaku Ardhalu Verule Keerthi தெலுங்கு Winner, CineMAA Award for Best Actress
Winner, Filmfare Best Telugu Actress Award
கிரீடம் திவ்யா தமிழ் Nominated, Vijay Award for Favourite Heroine
2008 Krishna Sandhya தெலுங்கு Nominated, Filmfare Best Telugu Actress Award
பீமா ஷாலினி தமிழ்
வெள்ளி திரை திரிஷவகா தமிழ் சிறப்புதோற்றம்
குருவி தேவி தமிழ்
Bujjigadu Chitti தெலுங்கு
அபியும் நானும் அபி ரகுராம் தமிழ் Winner, Tamil Nadu State Film Special Award for Best Actress
Nominated, Filmfare Best Tamil Actress Award
Nominated, Vijay Award for Favourite Heroine
கிங் சரவணி தெலுங்கு
2009 சர்வம் சந்தியா தமிழ் Nominated, Vijay Award for Favourite Heroine
Sankham Mahalakshmi Pasupathi தெலுங்கு
2010 Namo Venkatesa Pooja தெலுங்கு
விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி தேக்குட்டு தமிழ்
Ye Maaya Chesave Herself தெலுங்கு சிறப்புதோற்றம்
Khatta Meetha Gehna Ganphule Hindi
மன்மதன் அம்பு அம்புஜம் தமிழ் படபிடிப்பில்
2011 Khushiga தெலுங்கு படபிடிப்பில்
மங்காத்தா தமிழ் படபிடிப்பில்
Untitled Gautham Menon Project Hindi படபிடிப்பில்
விருதுகள்
கலை
கலைமாமணி

எழுத்தாள‌ர் சுஜாதா பிற‌ந்த‌ நாள் மே 3,
சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.
வாழ்க்கைக் குறிப்பு
ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
புனைபெயர்

இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.
ஆக்கங்கள்
சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.
புதினங்கள்
பதவிக்காக
ஆதலினால் காதல் செய்வீர்
பிரிவோம் சந்திப்போம்
அனிதாவின் காதல்கள்
எப்போதும் பெண்
என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோ
நிலா நிழல்
கரையெல்லாம் செண்பகப்பூ
யவனிகா
கொலையுதிர் காலம்
வசந்த் வசந்த்
ஆயிரத்தில் இருவர்
பிரியா
நைலான் கயிறு
ஒரு நடுப்பகல் மரணம்
மூன்று நிமிஷம் கணேஷ்
காயத்ரி
கணேஷ் x வஸந்த்
அப்ஸரா
மறுபடியும் கணேஷ்
வீபரீதக் கோட்பாடுகள்
அனிதா இளம் மனைவி
பாதிராஜ்யம்
24 ரூபாய் தீவு
வசந்தகாலக் குற்றங்கள்
வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
கனவுத்தொழிற்சாலை
ரத்தம் ஒரே நிறம்
மேகத்தைத் துரத்தினவன்
நிர்வாண நகரம்
வைரம்
ஜன்னல் மலர்
மேற்கே ஒரு குற்றம்
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
நில்லுங்கள் ராஜாவே
எதையும் ஒருமுறை
செப்டம்பர் பலி
ஹாஸ்டல் தினங்கள்
ஒருத்தி நினைக்கையிலே
ஏறக்குறைய சொர்க்கம்
என்றாவது ஒரு நாள்
நில் கவனி தாக்கு
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
பெண் இயந்திரம்
சில்வியா"
கம்ப்யுட்டர் கிராமம்
குறும் புதினங்கள்
"ஆயிரத்தில் இருவர்"
"தீண்டும் இன்பம்"
"குரு பிரசாத்தின் கடைசி தினம்"
"ஆகாயம்"
சிறுவர் இலக்கியம்
"பூக்குட்டி"
சிறுகதைத் தொகுப்புகள்
ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
நிஜத்தைத் தேடி
சிறுகதை மற்றும் குறும் புதினத் தொகுப்புகள்
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
கவிதைத் தொகுப்பு
நைலான் ரதங்கள்
நாடகங்கள்
Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
கடவுள் வந்திருந்தார்
பாரதி இருந்த வீடு
ஆகாயம்
கட்டுரைத் தொகுப்புகள்
கணையாழியின் கடைசி பக்கங்கள்
கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5]
கடவுள் இருக்கிறாரா
தலைமை செயலகம்
எழுத்தும் வாழ்க்கையும்
ஏன் ? எதற்கு ? எப்படி ?
சுஜாதாட்ஸ்
இன்னும் சில சிந்தனைகள்
தமிழ் அன்றும் இன்றும்
உயிரின் ரகசியம்
நானோ டெக்னாலஜி
கடவுள்களின் பள்ளத்தாக்கு
ஜீனோம்
திரைக்கதை எழுதுவது எப்படி?
திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
காயத்ரி
கரையெல்லாம் செண்பகப்பூ
ப்ரியா
விக்ரம்
வானம் வசப்படும்
ஆனந்த தாண்டவம்
பணியாற்றிய திரைப்படங்கள்
ரோஜா
இந்தியன்
ஆய்த எழுத்து
அந்நியன்
பாய்ஸ்
முதல்வன்
விசில்
கன்னத்தில் முத்தமிட்டால்
சிவாஜி த பாஸ்
எந்திரன்
வரலாறு (திரைப்படம்)
செல்லமே
மறைவு
உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29.02.2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.