வெள்ளி, 28 ஏப்ரல், 2017

நடிகை ஓவியா பிறந்த நாள் ஏப்ரல் 29, 1991 .



நடிகை ஓவியா பிறந்த நாள்  ஏப்ரல் 29, 1991 .
(ஹலென் நெல்சன் )

ஓவியா (பிறப்பு ஏப்ரல் 29, 1991 ஹலென் நெல்சன் ) இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். [2]

வாழ்க்கைக் குறிப்பு

திரை வாழ்க்கை
ஆண்டு படம் கதாப்பாத்திரம்
2007 கங்காரு ம
2008 அபூர்வா பூஜா ம
2010
மன்மதன் அம்பு (திரைப்படம்)
சுனந்தா தம
2011
முத்துக்கு முத்தாக (திரைப்படம்)
சுவேதா தம
கிருத்திகா நேத்ரா க
2012 மெரினா சொப்னசுந்தரி தம
2013
சில்லுனு ஒரு சந்திப்பு
கீதா தம
மூடர் கூடம் கற்பகவள்ளி தம
மத யானைக் கூட்டம் ரிது தம
2014
அகராதி தம
யாமிருக்கப் பயமேன் தம
புலிவால் மோனிகா தம

பாடகி சுவர்ணலதா பிறந்த தினம் ஏப்ரல் 29.



பாடகி சுவர்ணலதா பிறந்த தினம் ஏப்ரல்  29.

சுவர்ணலதா ( Swarnalatha, இறப்பு: செப்டம்பர் 12 , 2010 ) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. 1987 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ் , தெலுங்கு ,
கன்னடம் , இந்தி , உருது , மலையாளம் ,
பெங்காலி , ஒரியா , படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

கேரளாவின் பாலக்காட்டில் கே.சி.சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற ஆர்மோனியக் கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், மற்றும் கீபோர்ட ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார். சுவர்ணலதாவின் குடும்பத்தினர் பின்னர்
கர்நாடகாவில் உள்ள சிமோகா நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கேயே அவர் தனது உயர் கல்வியையும் கற்றர்.

பின்னணிப் பாடகியாக
சொர்ணலதா 1987 ஆம் ஆண்டில்
எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து உயர்ந்த மண் படத்தில் பி. சுசீலா பாடிய பால் போலவே என்கிற பாடலைப் பாடிக்காண்பித்தார். சொர்ணலதாவின் குரலில் தனித்துவம் தெரிய அதே ஆண்டில் மு. கருணாநிதி கதை வசனத்தில் வெளியான நீதிக்குத்தண்டனை படத்தில் பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்னும் பாடலை
யேசுதாசுடன் விசுவநாதன் பாடவைத்தார். அப்பொழுது சொர்ணலதாவிற்கு 14வயது மட்டுமே. பின் இவர் 1988இல் வெளியான குருசிஷ்யன் படத்தில் உத்தம புத்திரி நானு என்னும் பாடலை
இளையராஜாவின் இசையமைப்பில் பாடினார்.
பின் தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் புகழ்பெற்றன.

சிறப்புக் குறிப்பு

புகழ்பெற்ற இந்திப்படமான "மொகலே ஆசம்" படம் தமிழில் "அனார்கலி" என்ற பெயரில் வெளியானது. இந்திப்படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்றிருந்த கவாலி என்ற போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். இப்போட்டிப் பாடலை இரு வெவ்வேறு குரல்களிலும் சொர்ணலதா, சங்கர் கணேசின் இசையமைப்பில் பாடினார். சொர்ணலதாவின் திறமையை நவ்ஷாத் அலி பாராட்டினார். அத்துடன், தன்னுடைய மோதிரத்தையும் சொர்ணலதாவுக்கு விருதுபோல வழங்கினார்.

விருதுகள்

தேசிய விருது
1994 - இந்தியாவின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான வெள்ளித்தாமரை விருது - படம் :
கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி
தமிழக அரசு விருது
1991 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் :
சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்வோலம்
1994 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் :
கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி
தமிழக அரசு சிறப்பு விருது
1994 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான கலைமாமணி விருது
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
1991 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் :
சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்வோலம்
1995 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் :
காதலன் , பாடல் : முக்காலா முக்காபலா
1996 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் :
இந்தியன் , பாடல் : அக்கடானு நாங்க , மாயா மச்சிந்ரா
1999 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் :
முதல்வன் , பாடல் : உழுந்து விதைக்கையில
2000 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் :
அலைபாயுதே , பாடல் : எனனோ ஒருவன் வாசிக்கிறான்
ஃபிலிம்பேர் விருதுகள்
1991 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான
ஃபிலிம்பேர் விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்வோலம்
1995 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான
ஃபிலிம்பேர் விருது - படம் : காதலன் , பாடல் : முக்காலா முக்காபலா
1996 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான
ஃபிலிம்பேர் விருது - படம் : இந்தியன் , பாடல் : அக்கடானு நாங்க
2000 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான
ஃபிலிம்பேர் விருது - படம் :
அலைபாயுதே , பாடல் : எனனோ ஒருவன் வாசிக்கிறான்
2002 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான
ஃபிலிம்பேர் விருது - படம் : பூவெல்லாம் உன் வாசம் , பாடல் : திருமண மலர்கள்

மறைவு

நுரையீரல் பாதிப்பு காரணமாக
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவர்ணலதா 2010 ,
செப்டம்பர் 12 தனது 37வது அகவையில் காலமானார்

வியாழன், 27 ஏப்ரல், 2017

நடிகர் வினுச்சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் இன்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் 7 மணியளவில் காலாமானார். ஏப்ரல் 27.


நடிகர் வினுச்சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் இன்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் 7 மணியளவில் காலாமானார். ஏப்ரல் 27.
கருப்பு நிறம், கம்பீரமான குரல், கரைபுரண்ட நடிப்பு என தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்தவர் நடிகர் வினுச்சக்கரவர்த்தி.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் 7 மணியளவில் காலாமானார்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பங்காற்றியிருக்கிறார்.
இவர் வில்லன், காமெடியன், குணச்சித்திர வேடம் என 1000 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவருடைய ஆயிரமாவது படம்தான் முனி.
எங்க ஊரு பாட்டுக்காரன், மண்வாசனை, மண்ணுக்கேத்த பொண்ணு, மனிதன், குருசிஷ்யன் போன்ற ஏராளமான படங்களில் முக்கியமான பாத்திரங்களிலேயே நடித்திருக்கிறார்.
அவர் நடித்த கேரக்டரிலேயே அவருக்கு மிகவும் பிடித்தது. வேட்டைக்கு செல்லும் கிராம எல்லை தெய்வமான சுடலைமாடனாக ஒரு படத்தில் நடித்ததுதான். வினுச்சக்கரவர்த்தி அந்த வேடம் ஏற்று நடித்தபோது, அந்த கிராமத்தில் நிஜத்தில் ஆண்டுதோறும் அருள்வந்து வேட்டைக்கு செல்லும் சாமியாடியே இவரின் தோற்றத்தையும் நடிப்பையும் பார்த்து வணங்கினாராம்
இவர் சினிமாவுக்கு வருவதுக்குமுன் ரயில்வே துறையில் பணியாற்றியிருக்கிறார்.
அந்த சமயத்தில், இவர் பணியில் இருந்தபோது சில பெண்கள் இவருக்கு புரியாத தெலுங்கு மொழியில் எறுமை மாடு போல கறுப்பா இருப்பதாக நேராகவே திட்டியிருக்கின்றனர். அந்த வார்த்தைக்குள்ள அர்த்தத்தை பிறர் மூலம் தெரிந்துகொண்ட வினுச்சக்கரவர்த்தி மறுநாள் வழக்கம் போல அந்த பெண்கள் வரும்போது நான் சிவப்பா இருந்தாதானம்மா தப்பு, கறுப்பா இருப்பது தப்பு இல்ல காரணம், என் அப்பா அம்மா இருவருமே நல்ல கருப்பு என சாதாரணமாக சொல்லி அவர்களை சிந்திக்க வைத்தாராம் தனது கருப்புக்காக கலங்காத சக்கரவர்த்தி..
ரோஜாப்பு ரவிக்கைக்காரி படம் வித்தியாசமான கிராமிய கதையால் காவியமாக அமைந்த வெற்றிப்படம் அது வினுச்சக்கரவர்த்தியினுடைய திரைக்கதைதான்.


முதல்மரியாதை படத்தில் சிவாஜி நடிக்க வேண்டி, அவரை பாரதிராஜா சந்திக்க தயங்கியபோது, சினிமாவுக்கு வந்தபோது உன்னை யாருக்கும் தெரியாது. இப்போ, உன்னை இந்தியாவுக்கே தெரியும் அதனால், உன் விருப்பம் நிறைவேறும் என்று தன்னம்பிக்கையூட்டியவர் வினுச்சக்கரவர்த்திதான்.
வண்டிச்சக்கரத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த அவர், அதே படத்தில் சில்க்சிமிதாவை அறிமுகப்படுத்தினார். அவர் பிரபலமான கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். சில்க் இறந்தபோது அவருக்கு நண்பராக இருந்து வந்த வினுச்சக்கரவர்த்திக்கும் அதனால், சிக்கல் ஏற்பட்டது.
தமிழ் திரையுலகில் பலதுறைகளிலும் தனது திறமையால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வினுச்சக்கரவர்த்தி கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை உறவினர்களும் நண்பர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் நலம் விசாரித்து வந்தனர்.
1945 டிசம்பர் 15 ல் தோன்றி 2015 ல் மறைந்த வினுச்சக்கரவர்த்தி, தனது 70 வருட வாழ்க்கை பயணத்தில் திரைப்படங்களின் மூலம் மக்களை பல சுவையான பாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தார்.
சமீப காலமாக படவாய்ப்புகள் குறைந்து போனதால், தனது பிறவி கடமையை நிறைவு செய்த திருப்தியோடு ஓய்வில் தான் இருந்தார். இப்போது இறைவன் திருவடிகளில் இளைப்பாற சென்ற அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

புதன், 26 ஏப்ரல், 2017

நடிகர் சமுத்திரக்கனி பிறந்த நாள் ஏப்ரல் 26.


நடிகர் சமுத்திரக்கனி பிறந்த நாள் ஏப்ரல் 26.

சமுத்திரக்கனி ( ஆங்கிலம் : Samuthirakani ) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தொலைக்காட்சி நாடக இயக்குநரும் ஆவார்.
திரைப்பட வரலாறு
இயக்குனராக
ஆண்டு திரைப்படம் மொழி க
2003 உன்னை சரணடைந்தேன் தமிழ்
சிற வசன தமி மாந திர விர
2004 நெறஞ்ச மனசு தமிழ்
2004 நாலு தெலுங்கு
2009 நாடோடிகள் தமிழ்
விர இயக் விர
நிய சிற இயக்
பில விர
நிய
சிற இயக் விஜ
நிய
சிற திர எழு விஜ
2010 சம்போ சிவ சம்போ தெலுங்கு
2011 போராளி தமிழ்
சிற எழு விர
2012 யாரெ கோகடலி கன்னடம்
2014 ஜன்டா பய் கபிராஜு தெலுங்கு
நிம நில் சமய அத பதி ஜெ பதி நடித்
2014 நிமிர்ந்து நில் தமிழ்
2016 அப்பா தமிழ்
நடிகராக
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2001 பார்த்தாலே பரவசம்
2006 பொய்
2007 பருத்திவீரன்
2008 சுப்ரமணியபுரம் கனுக்கு
2010 சிக்கார் அப்துல்லா
2010 ஈசன் சங்கையா
2012 திருவாம்பாடி தாம்பன்
2012 சாட்டை டையலன்
2012 நீர்ப்பறவை உடுமன் கனி
2012 தி ஹிட் லிஸ்ட்
2013 தி ரிப்போர்டர் பார்த்தசாரதி
2013 பதிராமனல்
2013 டீ கம்பேனி
2014 வேலையில்லா பட்டதாரி
2015 விசாரணை
2016 ரஜினி முருகன்
2016 அம்மா கணக்கு
2016 அப்பா
தொலைக்காட்சி
ஆண்டு நிகழ்ச்சி மொழி குறிப்ப
2003 அன்னை தமிழ் தொ.கா த
2003 தற்காப்புக் கலை தீராத தமிழ் தொ கா த
ரமணி (எதிர்) ரமணி பகுதி II
தமிழ் தொ கா த
2005 தங்கவேட்டை தமிழ் விளையா காட்சி
2007 அரசி தமிழ் தொ கா த
பின்னணி குரல் கொடுத்தவைகள்
ஆண்டு திரைப்படம் நடிகர்
2011 ஆடுகளம் கிஷோர்
2012 தோனி முரளி ஷர்மா

சரண்யா பொன்வண்ணன் ( Saranya Ponvannan , பிறப்பு: ஏப்ரல் 26, 1970



நடிகை சரண்யா பொன்வண்ணன் ( Saranya Ponvannan , பிறப்பு: ஏப்ரல் 26, 1970

சரண்யா பொன்வண்ணன் ( Saranya Ponvannan , பிறப்பு: ஏப்ரல் 26, 1970) பெரும்பாலும்
தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் ஓர்
இந்திய திரைப்பட நடிகை ஆவார். சரண்யா,
மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார் .ராம் ,(2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும்
களவாணி (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது; சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளும் கிட்டின. 2010ஆம் ஆண்டுக்கான இந்தியத் தேசியத் திரைபட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.
சரண்யா சக நடிகரான பொன் வண்ணனைத் திருமணம் புரிந்துள்ளார்.

விருதுகள்
தேசியத் திரைப்பட விருதுகள்
2011 - சிறந்த நடிகை , தென்மேற்குப் பருவக்காற்று
பிலிம்பேர் விருதுகள்
2005 - சிறந்த துணை நடிகை (தமிழ்),
தவமாய் தவமிருந்து
2006 - சிறந்த துணை நடிகை (தமிழ்), எம் மகன்

இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம் பிறந்த தினம் 26 ஏப்ரல் 1914.



இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்  பிறந்த தினம் 26 ஏப்ரல் 1914.

ஆர். சுதர்சனம் (பிறப்பு: 26 ஏப்ரல் 1914) தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.
இசையமைத்த திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
1. ஸ்ரீ வள்ளி (1945)
2. நாம் இருவர் (1947)
3. வேதாள உலகம் (1948)
4. வாழ்க்கை (1949)
5. ஓர் இரவு (1951)
6. பராசக்தி (1952)
7. பெண் (1954)
8. செல்லப்பிள்ளை (1955)
9. பக்த இராவணா (1958)
10. மாமியார் மெச்சின மருமகள் (1959)
11. களத்தூர் கண்ணம்மா (1960)
12. தெய்வப்பிறவி (1960)
13. அன்னை (1962)
14. நானும் ஒரு பெண் (1963)
15. பூம்புகார் (1964)
16. அன்புக்கரங்கள் (1965)
17. கார்த்திகைத்தீபம் (1965)
18. பூமாலை (1965)
19. மணிமகுடம் (1966)
மலையாளத் திரைப்படங்கள் [4]
1. குடும்பம்
2. திரிச்சடை
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
கலைமாமணி விருது (1967 - 1968); வழங்கியது: தமிழ்நாடு அரசு

நடிகர் தி. க. சண்முகம் பிறந்த நாள் ஏபரல் 26.1912



நடிகர் தி. க. சண்முகம்  பிறந்த நாள் ஏபரல்  26.1912

திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்னும் ஔவை தி. க. சண்முகம் (26.4.1912 - 15.2.1973) 1918 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தமிழ் நாடகக்கலைக்கு நற்பணி ஆற்றியவர். நாடகத்துறையில் தொல்காப்பியர் என மு. கருணாநிதியால் புகழப்பட்டவர். ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய
தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர்.

பிறப்பும் கல்வியும்

சங்கரதாசு சுவாமிகளின் மாணவரும் நாடக நடிகருமான டி. எசு. கண்ணுசாமி பிள்ளை என்பவருக்கும் சீதையம்மாள் என்பவருக்கும் மூன்றாவது மகனாக திருவனந்தபுரத்தை அடுத்த புத்தன்சந்தையில் 1912 ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தவர் தி. க. சண்முகம். தி. க. சங்கரன் (1904 – 1948.03.31), தி.க. முத்துச்சாமி ஆகிய இருவரும் இவருக்கு அண்ணன்மார் ஆவர். தி. க. பகவதி (1917 - ) இவருக்கு தம்பி ஆவார். சுப்பம்மாள் (1920 - ), காமாட்சி (1921 - ) ஆகியோர் இவருக்குத் தங்கைகள் ஆவர். இவர்கள் நால்வரை தமிழ்நாடக உலகம் டி. கே. எசு சகோதரர்கள் என அழைத்தது.
இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் நாடகக்கலையின் தலைமையிடமாக
மதுரை திகழ்ந்தது. எனவே நாடக நடிகரான கண்ணுசாமிபிள்ளையின் குடும்பம் மதுரை சோற்றுக்கடைத் தெருவில் குடியிருந்தது. எனவே தி. க. சண்முகம் தெற்குச் சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பலம் என்னும் ஆரியவைசிய பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தனர்.

நாடக வாழ்க்கை

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில்
சங்கரதாசு சுவாமிகள் 1918 ஆம் ஆண்டில் மதுரையில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக நிறுவனத்தை உருவாக்கினார். அந்நிறுவனத்தில் 1918ஆம் ஆண்டில் தி. க. சங்கரன், தி. க. முத்துசாமி, தி. க. சண்முகம் ஆகிய மூவரும் அவர்தம் தந்தை கண்ணுசாமிபிள்ளையால் இளம் நடிகர்களாக இணைக்கப்பட்டனர். 1922ஆம் ஆண்டு ஆகத்து 3ஆம் நாள் இரவு அக்குழுவிலிருந்து அவர்கள் மூவரும் அவர்தம் தந்தையாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பால மனோகர சபையில்
தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட தி. க. சண்முகம் அவர் உடன்பிறந்தவர்களும் தெ. பொ. கிருட்டினசாமி பாவலர் நடத்திய பால மனோகர சபை என்னும் நாடகக் குழுவில் 1922 ஆகத்து 4ஆம் நாள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் விலகியதால் சங்கரதாசு சுவாமிகள் மனம்நொந்து இருப்பதாக அறிந்து, அக்டோபர் 15ஆம் நாள் பால மனோகர சபையிலிருந்து தி.க.ச. உடன்பிறவியர் மூவரும் அவர்தம் தந்தையால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மீண்டும் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில்
1922 அக்டோபர் 16ஆம் நாள் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்த தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் மீண்டும் தி.க.ச. உடன்பிறவியர் மூவரும் அவர்தம் தந்தையால் இணைக்கப்பட்டார். [6] 1924ஆம் ஆண்டில் தி. க. பகவதியும் அக்குழுவில் இளம் நடிகராக இணைக்கப்பட்டார். இதற்கிடையில் தி.க.ச. உடன்பிறவியரின் தந்தை கண்ணுசாமி பிள்ளை இறந்ததால், தம் சிற்றப்பா, மாமா ஆகிய இருவரின் பாதுகாப்பில் வளர்ந்தனர். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையின் முதலாளிகளில் ஒருவரான சுப்பிரமணியபிள்ளையிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக 1925 பிப்ரவரி 15ஆம் நாள் அந்நாடகக்குழுவிலிருந்து தி. க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தோரும் அவர்தம் பாதுகாவலர்களால் விலக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா தொடக்கம்
பின்னர் தி. க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தவர்களும் தம் சிற்றப்பாவை உரிமையாளரென அறிவித்து 1925 மார்ச்சு 31ஆம் நாள், திருவனந்தபுரத்தில்
ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா என்னும் நாடகக் குழுவை உருவாக்கினர். அக்குழுவின் முதல்நாடகமாக “கோவலன்” என்னும் நாடகம் அந்நாளிலேயே அரங்கேற்றப்பட்டது. [8] அப்பொழுது எம். கந்தசாமி முதலியாரிடம் நடிப்பாசிரியராக இக்குழுவில் பணியேற்றார். அவரிடம் தி. க. சண்முகம் நாடக நுட்பங்களைப் பயின்றார்.
தேச பக்தி
வெ. சாமிநாத சர்மா எழுதிய இந்திய சுதந்திர போராட்ட நாடகம் பாணபுரத்து வீரன் இதை பிரித்தானிய அரசு தடை செய்யவே தி. க. சண்முகம் அவரது நாடகக் குழு "பாணபுரத்து வீரன் நாடகத்தை
தேச பக்தி என பெயர் சூட்டி இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் போராட்டம் நடந்தது போல பாணபுரத்துக்கும், ஈசானபுரத்துக்கும் இடையே நடக்கும் விடுதலைப்போரை அடிப்படையாக் கொண்டது- தேச பக்தி நாடகம்" வெ. சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரன் நாடகத்தை எங்களுக்கு அறிமுகம் செய்து, இடை இடையே சில புதிய காட்சிகளையும், உணர்ச்சி மிகுந்த பாடல்கள், வசனங்களையும் எழுதிக் கொடுத்தது மதுரகவி பாஸ்கர தாஸ் அவர்கள் என தனது வாழ்க்கைக் குறிப்பில் கூறியுள்ளார்.
பாரதியின் பாடல்
பிரித்தானிய அரசு தடை செய்த "பாணபுரத்து வீரன் நாடகத்தை தேச பக்தி என பெயர் சூட்டி நாடகத்தை அரங்கேற்றியது மட்டுமல்லாது மகாகவி பாரதியின் "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்", "விடுதலை விடுதலை", ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே போன்ற தடை செய்யப்பட்ட தேச பக்திப் பாடல்களை தேச பக்தி நாடகத்தில் முதன்முதலாக பாடப்பட்டது.
முதற் கலைப்பு
1931ஆம் ஆண்டில் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியதால், நாடகங்களுக்கான மதிப்புக் குறைந்தது. போதுமான வருவாய் கிடைக்கவில்லை. எனவே தி. க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தோரும் 1932ஆம் ஆண்டில் தம் நாடகக்குழுவை ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் குத்தகைக்கு கோல்டன் கோவிந்தசாமி நாயுடு என்பவரிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவ்வொப்பந்தம் பதினோராம் மாதத்திலேயே முறிந்தது. தி. க. ச. உடன்பிறப்புகள் அந்நாடகக் குழுவை தற்காலிகமாகச் சில காலத்திற்குக் கலைத்தனர்.
தேவி பால சண்முகானந்த சபையில்
பின்னர் கொரடாச்சேரியைச் சேர்ந்த தர்மராஜபிள்ளை என்பவரின் தேவி பால சண்முகானந்த சபையில் தி. க. ச.வும் அவர் உடன்பிறந்தவர்களுடன் சென்று இணைந்தனர்.  சிறிது நாளில் தர்மராஜபிள்ளை சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனதால் அந்த நாடகக் குழுவை இவர்களே பொறுப்பேற்றுக் கலைத்தனர்.
சிறப்பு நாடகத்தில்
சிறிதுகாலம் நாடக வாழ்விலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என தி. க. ச. உடன்பிறந்தோர் நால்வரும் நாகர்கோவிலுக்குச் சென்று உறவினர்களுடன் வாழத் தொடங்கினர். அப்பொழுது அல்லி அர்ஜூனா, சதாரம் ஆகிய இரண்டு சிறப்பு நாடகங்களில் (Special Drama) தி. க. சண்முகம் நடித்தார். ஆனால் நாடக முறை அவருக்கு பிடிக்கவில்லை. எனவே, அதிலிருந்து விலகினார்.
இவ்வாறு இவர் 74 நாடகங்களில் 109 கதைமாந்தராக நடித்தார். 1935 ஆம் ஆண்டில் மேனகா என்னும் திரைப்படத்தின் வழியாக திரையுலகில் நுழைந்து கப்பலோட்டிய தமிழன் என்னும் படம் வரை பல்வேறு படங்களில் நடித்தார்.
இவர் தமிழகத்திற்கு வெளியே பம்பாய். தில்லி, கல்கத்தா, நாகபுரி, பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கும் இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் தன் குழுவினருடன் சென்று நாடகங்கள் நடத்தினார்.
ஔவையார் நாடகத்தில் ஔவையாராக வேடமேற்றுச் சிறப்பாக நடித்ததால் ஔவை சண்முகம் என அழைக்கப்பட்டார்.

திரைப்படத் துறை பங்களிப்புகள்

நடித்த திரைப்படங்கள்
மேனகா (1935)
பாலாமணி (1937)
பூலோக ரம்பை (1940)
குமாஸ்தாவின் பெண் (1941)
பில்ஹணன் (1948)
ஓர் இரவு (1951)
இன்ஸ்பெக்டர் (1953)
மனிதன் (1953)
ரத்த பாசம் (1954)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
கடவுளின் குழந்தை (1960)
கப்பலோட்டிய தமிழன் (1961)
பெற்ற பட்டங்கள்
தி. க . சண்முகம் தனது நாடகப்பணியால் பின்வரும் பட்டங்களைப் பெற்றார்.
ஆண்டு பட்டம் / விருது வழங்கியவர்
1941 முத்தமிழ் வித்வ ரத்தினம்
மதுரைத் தமிழ்ச் சங்கம்
1944 ஔவை
ஆர். கே. சண்முகம் செட்டியார்
நாடகவேந்தர்
நடிகர்கோ
கலைமாமணி
தமிழ் இயல் இசை நாடக மன்றம்
1962
சங்கீத நாடக அகாதமி விருது
சங்கீத நாடக அகாதமி
1972 நாடகத் தொல்காப்பியர்
மு. கருணாநிதி
1971 பத்மசிறீ இந்தியக் குடியரசு
1953 ஆம் ஆண்டில் மனிதன் என்னும் திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த தமிழ்ப்பட நடிகர் [10] என்னும் விருதை வழங்கியது.
1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கமும் 1962 ஆம் ஆண்டு புதுதில்லி
சங்கீத நாடக அகாதமி யும் சிறந்த நாடக நடிகர் என்பதற்கான விருதுகளை வழங்கின. [18]
பங்கேற்ற அமைப்புகள்
தி. க. சண்முகம் பின்வரும் அமைப்புகளில் முதன்மையான பொறுப்புகளை வகித்தார்: [3]
1. தமிழ் எழுத்தாளர் சங்கம்
2. தென்னிந்திய நடிகர் சங்கம்
3. தமிழ்நாடு சங்கீத நாடக அகாடமி
4. தமிழ்க் கலை மன்றம்
5. தமிழ் வரலாற்றுக் கழகம்
6. தமிழ் வட்டம் சமாதானக் குழு
7. சென்னை நாட்டியச் சங்கம் (துணைத் தலைவர்)
8. நடராஜா கல்விக் கழகம்
9. சங்கரதாச சுவாமிகள் நினைவு மன்றம் (தலைவர்)
10. இளங்கோ கலைக் கழகம் (தலைவர்)
11. பாரதியார் சங்கம் (பொதுச் செயலாளர்)
12. தமிழரசுக் கழகம் (பொதுச் செயலாளர்)

எழுதிய நூல்கள்

தி. க. சண்முகம் அறிவுச்சுடர் என்னும் கையெழுத்து இதழை தன் நாடகக் குழுவினருக்காக வெளியிட்டார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் திங்கள் இதழான நடிகன் குரல் ஏட்டின் பொறுப்பாசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்வரும் நூல்களை எழுதினார்:
1. தமிழ் நாடகத் தலைமையாசிரியர் (தவத்திரு சங்கரதாசு சுவாமி வரலாறு) 1955
2. நாடகக்கலை (சொற்பொழிவுகள்) 1959
3. நெஞ்சு மறக்குதில்லையே (நாடகமேடை அனுபவங்கள்)
4. எனது நாடக வாழ்க்கை (தன்வரலாறு) 1972
5. நாடகச் சிந்தனைகள் (கட்டுரைகளும் எழுத்துரைகளும்) 1978
தொகுத்துப் பதிப்பித்தவை
தி. க. சண்முகம் தன் குருநாதர் சங்கரதாசு சுவாமிகளின் பாடல்களைத் தொகுத்து
சங்கரதாஸ் சுவாமிகள் இன்கவித் திரட்டு என்னும் நூலையும் சங்கரதாசு சுவாமிகளின் நூற்றாண்டு விழா 1967ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபொழுது,
சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு மலர் ஒன்றையும் தொகுத்துப் பதிப்பித்தார்.
மாநாட்டுக் கட்டுரை
உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் சார்பில்
1966 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் மாநட்டில் கலந்துகொண்டு தமிழ் நாடக வரலாறு என்னும் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார்.
சட்டமன்ற மேலவை உறுப்பினர்
தமிழக சட்டமன்ற மேலவையின் உறுப்பினராக 1968 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

மறைவு

தி. க. சண்முகம் 1973 பிப்ரவரி 15 ஆம் நாள்
சென்னையில் காலமானார்.

தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ‘அவ்வை’ டி.கே.சண்முகம் (T.K.Shanmugam) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
திருவனந்தபுரம் அடுத்த புத்தன்சந்தை என்ற இடத்தில் (1912) பிறந்தார். முழு பெயர் திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம். 2-ம் வகுப்பு வரை பயின்றார். நாடக நடிகரான தந்தை இவரையும், சகோதரர்களையும் ஒரு நாடக நிறுவனத்தில் சேர்த்துவிட்டார்.
ஆறு வயதில் மேடை ஏறினார். இவரது நடிப்புத் திறனைக் கண்ட சங்கரதாஸ் சுவாமிகள், ‘அபிமன்யு சுந்தரி’ நாடகத்தில் அபிமன்யுவாக நடிக்க வைத்தார். சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், எம்.கந்தசாமி முதலியாரிடமும் நடிப்புப் பயிற்சி பெற்றார். தொடர்ந்து பல நாடகங்களில் நடித்தார்.
பத்து வயதில் ‘மனோகரா’ வேடத்தில் இவரது நடிப்பைப் பார்த்து ‘நாடகத் தந்தை’ பம்மல் சம்பந்தனார் பெரிதும் வியந்து பாராட்டினார். இவரது வசன உச்சரிப்பும், தோற்றப் பொலிவும் சேர்ந்து அந்த கதாபாத்திரத்தையே கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று பாராட்டப்பட்டார்.
வயதுமுதிர்ந்த சித்தர், மதுரகவி, அவ்வையார் ஆகிய பாத்திரங் களில் சிறுவயதிலேயே அபாரமாக மிளிர்ந்தார். அவ்வையார் வேடத்தில் ஜொலித்ததால் ‘அவ்வை’ சண்முகம் என்றே அழைக் கப்பட்டார். இவரும் சகோதரர்களும் இணைந்து 1925-ல்  பால சண்முகானந்த சபா என்ற நாடகக் குழுவைத் தொடங்கினர்.
அடுத்த 25 ஆண்டுகளில் இக்குழு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் ஏராளமான நாடகங்களை நடத்திப் புகழ்பெற்றது. இக்குழு மூடப்பட்ட பிறகு, டிகேஎஸ் நாடகக் குழு என்ற பெயரில் புதிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி நடித்தார்.
இவரது நாடகங்கள் தேசபக்தியைத் தட்டி எழுப்பின. சமூக மறுமலர்ச்சியையும் பிரதிபலித்தன. இவரது ‘தேசபக்தி’, ‘கதரின் வெற்றி’ ஆகிய நாடகங்களை ஆங்கிலேய அரசு தடை செய்தது. ‘மேனகா’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘மனிதன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது முயற்சியால் 1950-ல் நாடகக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராகச் செயல்பட்டார். இவரது முயற்சியால் நாடகத்துக்கான கேளிக்கை வரிக்கு விலக்கு கிடைத்தது. ‘நடிகன் குரல்’ மாத இதழின் பொறுப்பாசிரியராக 3 ஆண்டுகள் செயல்பட்டார்.
சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கப் பொருளாளர், சங்கீத நாடக சங்கம், டெல்லி சங்கீத நாடக அகாடமியின் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். நல்ல இசை ஞானம் கொண்டவர். சங்கரதாஸ் சுவாமிகளின் கீர்த்தனைகள், பாரதியாரின் பாடல்களைப் பாடி நடித்தார். தமிழக சட்ட மேலவை உறுப்பினராக 1968-ல் நியமிக்கப்பட்டார்.
கோலாலம்பூரில் 1966-ல் முதலாவது உலகத் தமிழ் மாநாட்டில் ‘தமிழ் நாடக வரலாறு’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். நாடகம், திரைப்படம் தொடர்பாக ஏராளமான கட்டுரைகள் எழுதினார். ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’, ‘நாடகக் கலை’, ‘நெஞ்சு மறக்குதில்லையே’, ‘எனது நாடக வாழ்க்கை’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
பாரதியாரிடம் அளவுகடந்த பற்றும் மதிப்பும் வைத்திருந்தார். முத்தமிழ் கலாவித்வ ரத்தினம், நாடக வேந்தர், நடிகர் கோ, பத்ம, சிறந்த நாடக நடிகர் விருது என ஏராளமான பட்டங்கள், விருதுகளைப் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேல் நாடகத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்ந்த ‘அவ்வை’ டி.கே.சண்முகம் 61-வது வயதில் (1973) மறைந்தார்.


செவ்வாய், 25 ஏப்ரல், 2017



நடிகர் ஜி. பட்டு ஐயர் (ஏப்ரல் 26, 1906 
ஜி. பட்டு ஐயர் (ஏப்ரல் 26, 1906 - ) தமிழ் நாடக, திரைப்பட நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் அம்மாஞ்சி பட்டு ஐயர் என்றும் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

பட்டு ஐயர் 1906 ஏப்ரல் 26 இல்
நாகப்பட்டினத்தில் பிரபலமான வணிகராக இருந்த என். கணேசய்யர் என்பவருக்குப் பிறந்தார். பள்ளியில் படிக்கும் போதே இசை, மற்றும் நாடகங்களில் இவருக்கு அதிக நாட்டம் இருந்தது. பள்ளிக்கூட நாடகங்களில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று பரிசுகளும் பெற்றிருக்கிறார். இவரும் நாகை மணி என்ற பெயரில் திரைப்படப் பாடல்கள் எழுதி வந்த எம். எஸ். மணி என்பவரும் மற்றும் சில நண்பர்களும் இணைந்து நாடகக் குழு ஒன்றை நிறுவி நாகப்பட்டினம், மாயவரம், திருவாரூர் போன்ற இடங்களில் நாடகங்களை நடத்தி வந்தனர்.

திரைப்படங்களில்

இவரது நாடகம் ஒன்றைக் காண வந்த ராவ்பகதூர் கே. எஸ். வெங்கட்ராமய்யர் என்பவர் இவரது நடிப்பைக் கண்டு, தனது பேத்தியின் கணவரான இயக்குநர் கே. சுப்பிரமணியத்திடம் இவரைத் திரைப்படங்களில் நடிக்கப் பரிந்துரைத்தார். அப்போது கே. சுப்பிரமணியம் மதுரை முருகன் டாக்கீசுக்காக கல்கத்தா சென்று நவீன சாரங்கதாரா என்ற திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். அப்படத்தில் பட்டு ஐயருக்கு நடிக்க சந்தர்ப்பம் கொடுத்ததோடு மட்டுமன்றி தன் உதவி இயக்குநராகவும் நியமித்தார். [1] நவீன சாரங்கதாராவில் கதாநாயகி எஸ். டி. சுப்புலட்சுமியின் தந்தை சித்திரசேனனாக நடித்தார். இத்திரைப்படம் 1936 இல் வெளிவந்தது. இதே வேளையில் கே. சுப்பிரமணியத்தின்
நவீன சதாரம் திரைப்படத்தில் கள்வர் தலைவனாக நடித்தார். இத்திரைப்படம் 1935 இல் வெளிவந்தது. பின்னர் பக்த குசேலாவில் எஸ். எஸ். மணி பாகவதர் சாந்தீப முனிவராக நடிக்க பட்டு ஐயர் அவரது சீடராக நடித்தார். ]இதன் பின்னர் மெட்ராஸ் யுனைட்டட் ஆர்ட்டிஸ்டு நிறுவனத்தின் மிஸ்டர் அம்மாஞ்சி (1937) என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் அம்மாஞ்சி என்ற பாத்திரத்தில் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். எஸ். டி. சுப்புலட்சுமி அத்தங்காளாக இதில் நடித்திருந்தார்.
சேவாசதனம் (1938) திரைப்படத்தில் வக்கீல் பத்மநாபனாக நடித்தார். பத்மநாபனின் மனைவியாக ஜெயலட்சுமி வரதாச்சாரி என்பவர் நடித்தார். தொடர்ந்து அனந்த சயனம் (1942) படத்தில் நாடோடி மக்களின் தலைவனாகவும், பர்த்ருஹரியில் விக்ரமாதித்திய மன்னனாகவும்,
மானசம்ரட்சணம் படத்தில் கதாநாயகி சுப்புலட்சுமியின் சகோதரனாகவும் நடித்தார்.
ரிஷ்யசிருங்கரில் விபாண்டக முனிவர் வேடத்தில் நடித்த பட்டு ஐயர்,
காமதேனுவில் வயதான சமீன்தார் வேடத்தில் நடித்தார். ஆர்.கே.எஸ் பிக்சர்சின் குண்டலகேசியில் நடித்த பின்னர் சிறீகமல் புரடக்சன்சாரின் மகாத்மா உதங்கர் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்ததோடு, அத்திரைப்படத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் (1949) திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான மருத்துவர் வேடத்தில் நடித்தார்.
பின்னாளில், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கர்ணனுக்கு உதவியாக படத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டார்.

குடும்பம்

பட்டு ஐயருக்கு ஒரு மகனும், மூன்று பெண்களும் உள்ளனர். இவரது சகோதரர் ஜி. ராமச்சந்திரன் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

நடித்த திரைப்படங்கள்

1. நவீன சதாரம் (1935)
2. உஷா கல்யாணம் (1936)
3. நவீன சாரங்கதாரா (1936)
4. பக்த குசேலா (1936)
5. கௌசல்யா பரிணயம் (1937)
6. காமதேனு (1941) [3]
7. குண்டலகேசி (1947)
8. அபூர்வ சகோதரர்கள் (1949)
9. அவ்வையார் (1953)
இயக்கிய திரைப்படங்கள்
1. மன்மத விஜயம்
2. மகாத்மா உதங்கர்

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

பாடகி எஸ்.ஜானகி பிறந்த நாள் ஏப்ரல் 23 , 1938



பாடகி எஸ்.ஜானகி பிறந்த நாள்   ஏப்ரல் 23 , 1938

எஸ். ஜானகி (பிறப்பு: ஏப்ரல் 23 , 1938 )
இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ் , தெலுங்கு , கன்னடம் ,
மலையாளம் , இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின்
குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார்.
நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த
விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில்
நீயாசா அடியார் என்ற பாடலை
கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி , துளு ,
சௌராஷ்டிரம் , இந்தி , வங்காளம் ,
சமஸ்கிருதம் , சிங்களம் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.
1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.

குடும்பம்

இவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன்
சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

2010களில்
ஜானகி சிறிய கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடல்கள் பாடியுள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் அம்மா அம்மா ௭ன்ற பாடலைப் பாடியிருக்கிறார். மேலும் இவர் பேபி, திருநாள் மற்றும் புதிய திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.திருநாள் திரைப்படத்தில் தந்தையும் யாரோ தாயாரும் யாரோ பாடலைப் பாடியுள்ளார்.

விருதுகள்

1986 இல் தமிழ்நாடு அரசின்
கலைமாமணி விருது
2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது
நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது
1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும்,
1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்மபூஷண் விருது மறுப்பு
௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.

இந்திய தேசிய விருதுகள்

வருடம் திரைப்படம் பாடல்
1976 பதினாறு வயதினிலே
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
1980 ஒப்போல் ௭ட்டுமனூரம்பழத்தி
1984 சித்தாரா வென்னெல்லோ கோடாரி அந்தம்
1992 தேவர் மகன் இஞ்சி இடுப்பழகா


எஸ்.ஜானகி பாடிய சில பாடல்கள்
ஆண்டு திரைப்படம் பாடல்
1962 கொஞ்சும் சலங்கை
சிங்கார வே தேவா
1962 பாதகாணிக்கை பூஜைக்கு மலரே வா
1962 சுமைதாங்கி
எந்தன் பார்வையின் கேள்விக்கு
1962 ஆலயமணி தூக்கம் உன் கண்களை
1962 போலீஸ்காரன் மகள்
இந்த மன்றத்தி ஓடிவரும்
1963 நெஞ்சம் மறப்பதில்லை
அழகுக்கும் மலருக்கும்
1965 திருவிளையாடல் பொதிகை ம உச்சியிலே
1969 அடிமைப்பெண் காலத்தை வென்றவன் நீ
1970 என் அண்ணன்
நீலநிறம் வானுக்கும் கடலுக்கும்
1970 எங்கிருந்தோ வந்தாள்
வந்தவர்கள் வ மற்றவர்கள் வர
1973 பொண்ணுக்கு தங்க மனசு
தஞ்சாவூர் சீமையிலே
1974 அவள் ஒரு தொடர்கதை
கண்ணிலே ௭ன்னவுண்ட
1976 அன்னக்கிளி மச்சான பாத்தீங்களா
1976 உறவாடும் நெஞ்சம்
ஒருநாள் உன்னோடு
1977 அவர்கள் காற்றுக்கெ வேலி
1977 கவிக்குயில் குயிலே கவிக்குயில
1978 அச்சாணி மாதா உன் கோவிலில்
1978 சிகப்பு ரோஜாக்கள் நினைவோ
1978 பிரியா ஏ பாடல் ஒன்ற ராகம்
1979 தர்மயுத்தம் ஆகாய கங்க பூந்தேன்
1980 மூடுபனி பருவகாலங்க கனவு நெஞ்
1980 ஜானி காற்றில் ௭ந்த கீதம்
1981 கிளிஞ்சல்கள் விழிகள் மேடையாம்
1981 அலைகள் ஓய்வதில்லை
ஆயிரம் தாமர மொட்டுக்கள
1982 காதல் ஓவியம் நாதம் ௭ன் ஜீவ
1982 பயணங்கள் முடிவதில்லை
மணியோசை கேட்டு
1983 ஆனந்த கும்மி ஒரு கிளி உருகுது
1983 மூன்றாம் பிறை பொன்மேனி உருகுதே
1983 இன்று நீ நாளை நான்
மொட்டுவிட்ட முல்லைகொ
1984 உன்னை நான் சந்தித்தேன்
தாலாட்டு ம போனதே
1985 கற்பூரதீபம் காலம் காலம
1985 ஆண்பாவம் ௭ன்னை பாட சொல்லாதே
1985 இதய கோவில் வானுயர்ந்த சோலையில
1985 குங்குமச்சிமிழ் நிலவு தூங் நேரம்
1985 அந்த ஒரு நிமிடம் சிறிய பறவ சிறகை விரி
1986 வசந்தராகம் கண்ணன் மனம்
1987 வேதம் புதிது மந்திரம் சொன்னேன்
1988 அக்னி நட்சத்திரம் ரோஜாப்பூ வந்தது
1988 தாய் மேல் ஆணை மல்லியப்பூ பூத்திருக்க
1988 ௭ன் ஜீவன் பாடுது கட்டிவச்சுக்க ௭ந்தன்
1989 அபூர்வ சகோதரர்கள்
வாழவைக்கு காதலுக்கு
1989 ஆராரோ ஆரிரரோ
தானாத் தலையாடு
1989 கரகாட்டக்காரன் மாங்குயில பூங்குயில
1991 புது நெல்லு புது நாத்து கறுத்த மச்சா
1992 குணா உன்னை நானறிவேன்
1992 வண்ண வண்ண பூக்கள்
கோழி கூவ நேரத்துல
1993 அரண்மனைக்கிளி
ராசாவே உன்னைவிட மாட்டேன்
1993 ஜென்டில்மேன் ஒட்டகத்த கட்டிக்கோ
1993 ௭ஜமான் ஒருநாளும் உனை மறவா
1994 காதலன் ௭ர்ராணி குர்ரதானி
1995 கர்ணா மலரே மௌ
1998 உயிரே நெஞ்சினில நெஞ்சினில
1999 முதல்வன் முதல்வனே
1999 சங்கமம் மார்கழி திங்களல்லவ
1999 ஜோடி காதல் கடிதம் தீட்டவே
2014 வேலையில்லா பட்டதாரி அம்மா அம்மா
2016 திருநாள்
தந்தையும் யாரோ தாயாரும் யாரோ


பின்னணிப் பாடகி தேசிய விருதை 4 முறை பெற்ற பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (S.Janaki) பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.
l வி.சந்திரசேகர் என்ற கலைஞரின் நாடக இடைவேளைகளில்தான் முதலில் பாடத் தொடங்கினார். 1956-ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் 2-ம் பரிசு பெற்றார். இதைத் தொடர்ந்து சென்னை வந்தவர், ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமனம் பெற்றார்.
l ‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
l முதல் ஆண்டிலேயே 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடினார். கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மனி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர்.
l ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்துக்காக பாடிய ‘சிங்கார வேலனே’ பாடல் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இசைத்தட்டு விற்பனையிலும் இது சாதனை படைத்தது.
l ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.
l பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’ போன்றவை காலத்தால் அழியாதவை.
l திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
l கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. 2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.
l அரை நூற்றாண்டுக்கு மேல் பாடிவரும் ஜானகி இன்று 78-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது சென்னையில் மகனுடன் வசிக்கிறார்.



சிறுவயது கமல் ஹாசன் தன் பிஞ்சு உதடுகளை அசைத்துத் திரையில் பாடும் `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’என்னும் பாடலுக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். இந்த மழலைக் குரலைக் கேட்டாலே சந்தோஷம் பொங்கும். களத்தூர் கண்ணம்மாவுக்குப் பிறகு, `மௌன கீதங்கள்’படத்தில் ‘டாடி.. டாடி.. ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே...’ பாடலைக் கேட்கும்போதுதான் மீண்டும் அத்தகைய சந்தோஷம் பொங்கியது. காரணம், காற்றை கவுரவப்படுத்தும் அந்தக் குரல் எஸ்.ஜானகினுடையது!
குழந்தையின் குரலா, குமரியின் குரலா, காதலியின் ஏக்கமா, காதலனோடு கிறக்கமா, `பழைய நெனப்புடா பேராண்டி.. பழைய நெனப்புடா..’ எனப் பாடும் கிழவியின் விசனமா? இப்படி எந்த உணர்ச்சியையும் குரலில் வடிக்கும் திறனைப் பெற்றிருந்த எஸ். ஜானகியே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய இசையமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாக இருந்தார்.
பிரபலப்படுத்திய பாடல்
1957-லிருந்து தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.
1962-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா...’ என்ற பாடல் தமிழில் அவரது முதல் வெற்றிப் பாடலாக அமைந்தது. தொழில்நுட்பம் பெரிதும் வளராத அந்தக் காலத்தில் இந்தப் பாடல் இரண்டு இடங்களில் பதிவானது. தயாரிப்பாளர் ராமன் ஸ்டூடியோவில் (மும்பை) எஸ்.ஜானகி பாட, பாடலோடு இணையாக ஒலிக்கும் நாகஸ்வரத்தை, நாகசுர மேதை காருக்குறிச்சி அருணாசலம் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் வாசித்து 2 டிராக்கில் பதிவு செய்யப்பட்டு, அதன் பின் மிக்ஸிங் செய்யப்பட்ட பாடல் அது. இந்தப் பாடலுக்குப் பின்தான் எஸ்.ஜானகியின் புகழ் பரவியது.
எஸ். ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணிப் பாடகியான பிறகு இசைக்கான எந்தப் பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை. தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும் எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கே உரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார். இந்தத் திறமையினாலேயே ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த பாடகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களையும் அம்மொழிகளில் கொடுத்தார். இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு இசை ரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என உரிமை கொண்டாடுகின்றனர்; யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராகவில்லை. இதைவிட ஒரு கலைஞருக்குப் பெரிய அங்கிகாரம் தேவையில்லை. தென்னிந்தியத் திரையிசைப் பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப் போல் எவருமில்லை.
இளையராஜாவின் பெருந்துணை
இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு உற்ற துணைகளில் ஒன்றாக ஜானகியின் பாடும் திறமை முன் நின்றது. அந்தத் திறமையைக் கண்டடைந்து அதைச் சரியாகப் பயன்படுத்தியவரும் இளையராஜாதான். கிராமியப் பாடலாக இருந்தாலும், கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடலாக இருந்தாலும் ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததைவிட ஒரு மடங்கு அதிகமாகவே தனது குரலில் பங்களிப்புச் செய்தார். சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப் பாடினார். ஒரு பாடல், அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு, திரையில் யார் வாயசைத்து நடிக்கப்போகும் நட்சத்திரம் யார் போகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப் பெற்ற பாடகியாக எஸ்.ஜானகி மிளிர்ந்தார்.

ஹம்மிங் பேர்ட்
பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார். ல, லா வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே நிறைய இருக்கின்றன. “லல்லா லல்லா லல்லா லல்லா ... சின்ன சின்ன வண்ணக்குயில்... (மெளனராகம்), “ லால லால ல ... ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது...( கிராமத்து அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா ... எந்தப் பூவிலும் வாசம் உண்டு... (முரட்டுக்காளை) “ என்று சொல்லிக்கொண்டே போகலாம். எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும் அலாதியான குரலிலேயே ஒலிக்கும்.
எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை, தாய்மை எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன.
“எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் .





வெள்ளி, 21 ஏப்ரல், 2017

நடிகை தேவிகா நினைவு தினம் ஏப்ரல் 22 , 2002 .



நடிகை தேவிகா நினைவு தினம் ஏப்ரல் 22 , 2002 .

தேவிகா (பி. 1943 - இறப்பு ஏப்ரல் 22 , 2002 ) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். இவர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்றோருடன் நடித்திருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா.
தமிழ்த் திரைப்பட இயக்குநரான ஏ. பீம்சிங்கிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய தேவதாசைத் திருமணம் செய்துகொண்டார்.
தேவிகா தெலுங்கு திரையுலகில் பிரபலமான ரகுபதி வேங்கையா நாயுடு என்பவரின் பேர்த்தி ஆவார்.
தேவிகாவின் மகள் கனகா தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட அனுபவம்

தேவிகா அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ராமச்சந்திரன் ,
சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் ,
எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார்.
அவர் நடித்த முதல் திரைப்படமான
முதலாளியில் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
எம். ஜி. ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சிவாஜியுடன் வரலாற்றுப் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும்,
குலமகள் ராதை , பலே பாண்டியா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த சுமைதாங்கி ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவையும், மற்றும் வாழ்க்கைப் படகு ,
வானம்பாடி என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
தேவிகா நடித்த கடைசிப்படம் இப்படியும் ஒரு பெண் ஆகும்.

திரைப்படங்கள்

தமிழ்
சத்யம் (1976)
இப்படியும் ஒரு பெண் (1975)
பிள்ளைச் செல்வம் (1974)
பாரத விலாஸ் (1973)
வெகுளிப் பெண் (1971)
அன்னை வேளாங்கண்ணி (1971)
எங்கிருந்தோ வந்தாள் (1970)
தேவி (1968)
தெய்வீக உறவு (1968)
பெண்ணே நீ வாழ்க (1967)
சரஸ்வதி சபதம் (1966)
மறக்க முடியுமா (1966)
திருவிளையாடல் (1965)
அன்புக்கரங்கள் (1965)
சாந்தி (1965)
பூஜைக்கு வந்த மலர் (1965)
நீலவானம் (1965)
பழனி (1965)
வாழ்க்கைப் படகு (1965)
முரடன் முத்து (1964)
கர்ணன் (1964)
ஆண்டவன் கட்டளை (1964)
வழி பிறந்தது (1964)
கலைக்கோவில் (1964)
நெஞ்சம் மறப்பதில்லை (1963)
இதயத்தில் நீ (1963)
ஆனந்த ஜோதி (1963)
குலமகள் ராதை (1963)
ஆயிரம் காலத்துப் பயிர் (1963)
வானம்பாடி (1963)
அன்னை இல்லம் (1963)
நெஞ்சில் ஓர் ஆலயம் (1962)
பந்த பாசம் (1962)
சுமைதாங்கி (1962)
பலே பாண்டியா (1962)
ஆடிப்பெருக்கு (1962)
குமார ராஜா (1961)
பங்காளிகள் (1961)
கானல் நீர் (1961)
பாவ மன்னிப்பு (1961)
நாகநந்தினி (1961)
பாவை விளக்கு (1960)
இருமனம் கலந்தால் திருமணம் (1960)
சிவகாமி (1960)
களத்தூர் கண்ணம்மா (1960)
இவன் அவனேதான் (1960)
பாஞ்சாலி (1959)
மாலா ஒரு மங்கல விளக்கு (1959)
பிரெசிடென்ட் பஞ்சாட்சரம் (1959)
சகோதரி (1959)
நாலு வேலி நிலம் (1959)
முதலாளி (1958)
அன்பு எங்கே (1958)
மணமகன் தேவை (1957)

தெலுங்கு
நாட்டியதாரா




தேவிகா பற்றி கண்ணதாசன் (படித்ததில் பிடித்தது)
சில பழைய கட்டுரைகளை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கும். அதிலும் ஒரு நடிகையை பற்றி பிரபலமான கவிஞர் சொல்லும் போது என்ன சொல்கிறார் என்ற ஆர்வம் ஏற்படும். இதை படிக்கும் போது அந்த நடிகையின் நடிப்பு நம் மனக்கண்ணில் ஓடுகிறது. நான் கூட அவரின் சில படங்களே பார்த்திருக்கிறேன். கவிஞர் கண்ணதாசன் இந்த கட்டுரையில் ஆத்மார்த்தமாக அவரை பற்றி சொல்கிறார்...
தேவிகா...
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு; கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு.
இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா.
அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைக்கிருக்கும் பல நடிகைகளைவிட, நன்றாகவே நடித்தார்; அழகாகவே இருந்தார். வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் வாழ்க்கையில் தோல்வியடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.
என்ன உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.
எந்தக் குடை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத் தானே நான் தேர்ந்தெடுக்க முடியும், என்பேன் நான்.
படப்பிடிப்பிற்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்யமாட்டார்.
தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.
என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுதுவிடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.
தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான இவர், தெலுங்கைவிடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.
குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று.
இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.
குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர்.
எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.
 “பாவி” என்றொரு சொல் தமிழில் உண்டு. இது ‘பாவி’ என்பதன் எதிர்மறை. ‘பிரதட்சிணம் அப்ரதட்சிணம்’ என்பது போல ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.
மனமறிந்து - அல்ல, தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.
‘ஆண்டவன் நல்லவர்களையே சோதிப்பான்’ என்றபடி அவருக்கும் சில சோதனைகள் வந்தன.
ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.
‘நந்தன் படைத்த பண்டம், நாய்பாதி, பேய்பாதி என்பார்கள் என் தாயார்.
அதுபோல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.
அதனை எண்ணி, தேவிகா துன்புறவில்லை.
எப்போது அவருக்கு என்ன துன்பம் வந்தாலும் எனக்குத்தான் டெலிபோன் செய்வார்.
என்னவோ ஆண்டவன், அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே அவருக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.
சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.
துரதிருஷ்டவசமாக எனது ‘மங்கல மங்கை’ப் படம் பாதியிலேயே நின்று விட்டது.
அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல, அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.
லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகை நடிகர்கள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுமையும் சுற்றுப் பயணம் செய்தேன்.
இரண்டு விமானப் படை விமானங்களில் தான் பயணம். விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும். எல்லோரும் மள மளவென்று ஏறிவிடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். எனக்குக் கை கொடுத்து விமானத்திற்குள், இழுத்துக் கொள்வது தேவிகாவே.
ஒரு படத்தில் அவருக்காக, “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடலை எழுதினேன்.
என்னிடம் செல்லமாகப் பாட வேண்டும் போல் தேவிகாவுக்குத் தோன்றினால் அந்தப் பாடலைத்தான் பாடுவார்.
வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடிவிடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.
சினிமாப் படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.
கதை, வசனம், பாட்டு டைரக் ஷன், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.
சமயங்களில், தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.
சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். - தேவிகா...
ஒருநாள் கூடப் படப் பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.
என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘ அண்ணனுக்கு என்ன கவலை? என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கிவிடும் தேவிகா.
அவர் ஒரு சினிமா நடிகைதான். ஆனால் பல குடும்பப் பெண்களைவிட உயர்ந்த குணம் படைத்தவர்.
“பிரமிளா” என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள் ?.


வாழ்க்கைப் படகு: 50 ஆண்டுகள் நிறைவு!
தமிழ்த் திரைப்படங்களில் ஜெமினி கணேசனுக்கு வாய்த்த சில நல்ல திரைப்படங்களில் ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த ‘வாழ்க்கைப் படகு’ முக்கியமானது. 1965-ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன், ரங்காராவ், டி.எஸ். பாலையா, நாகேஷ், மனோகர், பாலாஜி போன்ற நட்சத்திரப் பட்டாளத்துடன், அனைவருக்கும் ஈடுகொடுக்க வேண்டிய நிலையில் தேவிகா சவாலான கதாபாத்திரம் ஏற்று நடித்த படம். வேப்பத்தூர் கிட்டு இப்படத்தின் கருவை ஒரு ஃபிரெஞ்ச் நாவலிலிருந்து பெற்றார். இப்படம் 1962-ம் ஆண்டு ‘ஜிந்தகி’ என்ற பெயரில் இந்தியில் இதே ஜெமினி ஸ்டூடியோவால் தயாரிக்கப்பட்டது. இதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ‘வாழ்க்கைப் படகு’ ஆனது.
கற்பே கருப்பொருள்
இந்திய மனங்களில் உறைந்துபோன ‘கற்பு’ என்னும் கருத்தாடல் முக்கியமான சிக்கல். இந்திய மனம் ‘காதல்’ என்பதை ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் மட்டுமே உரித்தானதாகப் பார்க்கிறது. ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை என்பது இன்னொரு ஆண்மகனுடன் உள்ள எல்லாத் தொடர்புகளிலிருந்தும் துண்டித்துக்கொண்டு நிற்பதாகும். குடும்ப அமைதியின் ரகசியம் இங்குதான் அடங்கியுள்ளது. இதைப் பேணி நடக்கும் பெண் கற்புக்கரசியாகிறாள். இங்கு சிறிதளவு ஐயம் ஏற்பட்டாலும் அது குடும்ப வாழ்க்கையைச் சீரழித்துவிடுகிறது. இந்தப் பிடிமானத்தை அடிப்படையாக வைத்துத் திரைக்கதையாக்கப்பட்ட படம்தான் ‘வாழ்க்கைப் படகு’.
நடிகை எனும் அடையாளம்
வேலை தேடி அலைகிற சீதா (தேவிகா), தனக்கு வேலை கிடைத்திருப்பதாக அம்மாவிடம் சொல்லும் காட்சியில்தான் படம் தொடங்குகிறது. சீதா அந்த வேலை குறித்து அம்மாவிடம் சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியுடனும் திருப்தியடைந்தவளாகவுமே சொல்கிறாள்; ஆனால் அம்மாவோ திகைக்கிறார். காரணம், கிடைக்கிற வேலை நாடக நிறுவனத்தில்; அதுவும் நடிகையாக!
இந்த ஆரம்ப முரண் மிகவும் கவனிக்கத் தக்கது. அது மாறிவரும் இந்தியப் பெண் மனத்தின் சிந்தனை முறை. இளம் பெண்ணான சீதா தான் நடிகையாவதில் பழைய கோட்பாடுகளை மனதில் கொள்ளவில்லை; அவளைப் பொறுத்த அளவில் அதுவும் ஒரு வேலைதான் அரசுப் பணி போல அல்லது ஒரு நிறுவன ஊழியர்போல.ஆனால் பழமை மனம் கொண்ட அம்மா நாடக வேலை என்றதுமே துணுக்குற்றுவிடுகிறாள்.
சீதாவைக் காதலிக்கும் ராஜன் (ஜெமினி கணேசன்) ஜமீன்தார் ராவ் பகதூரின் (ரங்காராவ்) மகன். அவனுடைய காதலைத் தன் அதிகார அந்தஸ்தின் பொருட்டாக மட்டுமல்லாமல், அவள் ஒரு நடிகை என்ற நிலையிலும் ராவ் பகதூரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீதாவின் மனநிலையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பின் ராவ் பகதூர் ஒரு நிபந்தனையின் கீழ் தன் மருமகளாகச் சீதாவை ஏற்கிறார்.
திருமணத்தின் பின் நாடக இயக்குநர் கோபாலை எந்தக் காரணம் கொண்டும் சந்திக்கவோ பேசவோ கூடாது. சீதாவுக்கு ஏற்கெனவே அது ஒரு பிரச்சினையாக இல்லாததாலும், கோபால் ஒரு சிறந்த மனிதன் என்பதாலும் அவள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்கிறாள். எது நிபந்தனையாகிறதோ, அதுதான் பல துயரங்களையும் சோதனைகளையும் குடும்பத்துக்குள் கொண்டுவருகிறது.
ஏற்கெனவே ஒரு நடிகையின் மீது சமூகத்துக்கு (ஜமீன்தாருக்கும்) இருக்கும் வற்றாத அந்த உள்ளுறைந்த ஐயம் தன்னை மறுபடியும் ஆங்காரமாக நிலைநிறுத்தப் பார்க்கிறது. இதனால் சீதாவின் வாழ்க்கை, கடலில் சிக்கிய துடுப்பில்லாத படகாக ஆகிறது. இந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவதில் உள்ள சுழற்சிகள் நம் மனநிலைக்கு ஒத்தடம் கொடுத்து சமன்செய்கின்றன.
கண்ணதாசனின் பங்களிப்பு
இந்தப் படத்தின் பாடலாசிரியரான கண்ணதாசன் கிட்டத்தட்ட ஒரு வசனகர்த்தாவுக்கான பங்கையும் எடுத்துக்கொள்கிறார். கதையை நேர்க்கோட்டிலிருந்து பிறழ்ந்துவிடாமல் கொண்டுசெல்லும் பணி அவருக்கு உரித்தானதாகும். கதாநாயகிக்குச் சாதகமான மனநிலையை ரசிகர்களுக்கு உருவாக்குவதில் அவரின் கைவண்ணம் மிளிர்ந்திருக்கிறது.
கண்ணதாசன் தனிப்பட்ட முறையில் இந்திய ஆன்மிகப் பக்குவத்தைப் பெற்றவர்; கற்பு நிலை அவருக்கு உயிரானது. மனங்களின் தூய்மையையும் விரும்புகிறவர். ஆனால் ஒரு பெண்ணின் கற்புக்கு எப்போதும் சவால் விடுகின்ற நாடகக் கலையையும், அதில் நடிக்கும் பெண்ணையும் சமூகம் எந்த விதமாகப் பார்க்கும் என நன்றாகப் புரிந்துகொண்டு, பழமை மனங்களுக்கு நியாய உணர்வைப் போதிப்பதைப் போல பாடல்களை எழுதியிருக்கிறார். ஒரு பாடலில்..
“காதலித்தல் பாவமென்றால் கண்களே பாவமன்றோ
கண்களே பாவமென்றால் பெண்மையே பாவமன்றோ, பெண்மையே பாவமென்றால் மன்னவனின் தாய் யாரோ?”
என்று நாயகி உருகும்போது அந்த மனநிலைக்கு ஏற்ற உணர்வுகள் ரசிகர்களுக்குள் ஆழமாய் உட்புகுந்து கதையை மேலும் வலுப்படுத்த உதவியிருக்கின்றன.
பொதுவாக, ஜெமினி ஸ்டூடியோ தயாரிப்பு என்றால் பிரம்மாண்டமும் கதையம்சமும் கூடிய படங்கள் என்கிற எண்ணம் நமக்கு வரும். ஆனால் ‘வாழ்க்கைப் படகு’ பிரம்மாண்டமான படம் அல்ல; கதையம்சத்தில் கூடுதல் கவனம் செலுத்தி எடுக்கப்பட்டதை உணரலாம். எனினும் பிரம்மாண்டம் என்பதைக் காட்டாமல் போய்விடக் கூடாது என்பதாலோ என்னவோ ஒரு நிலநடுக்கக் காட்சியில் சற்றே சிரத்தை எடுத்துத் தங்களின் முத்திரையையும் பதித்திருப்பார்கள். இதை அந்தக் காலத்தில் வியந்து எழுதிய பத்திரிகைகளும் உண்டு. அந்த நிலநடுக்கம்தான் ராஜனுக்கும் சீதாவுக்கும் ராவ் பகதூருக்கும் நேரிடவிருந்த கவுரவப் பங்கத்தைச் சரிசெய்து காப்பாற்றுகிறது.
படத்தின் இயக்குநர் சீனிவாசன் என்று டைட்டில் கார்டு வருகிறது. ஒரு கணம் அதிர்ச்சி. யார் இந்த சீனிவாசன்? அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்று குழப்பம் வந்தது. யோசித்துப் பார்த்ததும் படத் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன்தான் அந்த சீனிவாசன் என்று தெளிந்தது. மக்களின் மனநிலையிலுள்ள ‘கற்பு’க்குப் பங்கம் வந்துவிடாமல் கதை சொல்ல வேண்டும்; இல்லையென்றால் ரசிகர்களின் கோப அலைகளில் சிக்கிக் கவிழ்ந்துவிட நேரும் என்பதால்தான் படத்துக்கு ‘வாழ்க்கைப் படகு’ என்று தலைப்பு வைத்தாரோ?




இன்றளவும் என்னை கவர்ந்த பழம்பெரும் நடிகை தேவிகா! இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், பெண்மைக்கே உரிய அச்சம்,
மடம், நாணம் மற்றும் பயிற்பு போன்ற நான்கையும் ஒருங்கே பெற்றிப்பவர். இவர் நடிக்கும் போதும் சரி, பாடல்வரிகளுக்கு வாயசைத்து நடிக்கும்போதும் சரி, முதலில் நடிப்பை வெளிப்ப டுத்துவது இவரது கண்களே எனலாம். ஆம், தேவிகா அவர் கள் நடித்த படங்களை இன்றும் நான் பார்க்கும்போதெல்லாம், ஒரு வித ஈர்ப்புடன் அந்த படங் களை பார்க்கத் தூண்டும் எத்தனை முறைவேண்டுமானாலும் பார் த்து ரசித்தும் இருக்கிறேன்.
தேவிகாவின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் ஆகும். இவருக்கு இவர
து பெற்றோர் வைத்த பெயர் பிரமீளா. தனது சொந்தப் பெயரிலேயே, இரண் டாவது கதாநாயகியாக நடித்து வெற் றி பெற்ற தெலுங்குப் படம், “நாட்டிய தாரா” என்ற பெயரில் தமிழிலும் வெ ளிவந்தது. அக் காலக்கட்டத்தில் தேவி காவையும் அவரது நடிப்பையும் பார்த் தவர் கள் “யார் இந்த அழகு தேவதை?” என்று கேட்டு வியந்தனர்.
தமிழ்ப்பட உலகில் நாட்டியப்பேரொளி, பத்மினியும், நடிகையர் தில கம் சாவித்திரியும் கொடி கட்டிப்பறந்த காலக்கட்டத்தில், இவர்களு க்கு அடுத்த இடத்தைப் பெற்று, தமிழிலும், தெலுங்கிலும் சுமார் 150-
க்கும் மேற்பட்ட திரைப்படங் களில் தேவிகா நடித்துள்ளார். இந்த சம யத்தில் நடிகை பானுமதி “மணமகன் தேவை” என்ற படத் தை தமிழில் தயாரித்தார். கதாநா யகன் சிவாஜிகணேசன். இப்படத் தில் இரண்டாவது கதாநாயகியா க பிரமீளா (தேவிகா) நடித்தார்.
தமிழ்த்திரைப்பட்டத்தின் மீதுள்ள காதலால் தமிழித்திரையிலும் புக ழ் பெறவேண்டும் என்ற ஆசை பிரமீளா (தேவிகா)வுக்கு ஏற்பட்டது. அதற்காக, நல்ல நடிப்பு பயிற்சிபெற விரும்பி, அக்காலக் கட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய எஸ். வி.சகஸ்ரநாமத்தின் “சேவா ஸ்டேஜ் ” நாடகக்குழுவில் சேர்ந் தார். இந்த சமயத்தில் சேவா ஸ்டேஜ் நாடகங்களில் நடிகர் முத்து ராமன் நடித்து வந்தார். பிரமீளா தன் பெயரை “தேவிகா” என்று மாற் றிக் கொண்டார். நாடகத்தில் நடித்ததன் மூலம் , தேவிகாவின் நடிப் பில் மெருகு ஏறியது. தமி ழை அழகாகவும், திருத்தமாகவும் பேசக் கற்று க் கொண்டார்.
Sumaithangi - Endhan Paarvayin song
1957-ல் எம்.ஏ.வேணு “முதலாளி” என்ற படத் தைத் தயாரித்தார். இதில் கதாநாயகன் எஸ். எஸ்.ராஜேந்திரன். கதாநாயகி தேவிகா. பல படங்களில் துணை டைரக்டராக இருந்த “முக்தா” சீனிவாசன் டைர க்டராக அறிமுகமா னார். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, 1957 தீபாவளிக்கு வெளி வந்த இப்படம், பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களையும்,
பெரிய பேனர் பட ங்க ளையும் தோற்கடித்து மகத்தான வெற்றி பெற்றது. “ஏரிக்கரை மேலே போறவளே பெண் மயிலே … ஆபோகி ராகத்தில் அமைந்த அந்த பாடலை எஸ் .எஸ். ராஜேந்திரன் (டி.எம். சவுந்தரராஜ ன் குரலில்) பாட தேவிகா வயல் வெளி யில் நடந் து செல்வார். பாட்டும், இந்தக் காட்சியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதன் விளை வாக தேவிகா நட்சத்திர அந்தஸ்தை எட்டி ப்பிடித்தார்.
“பாவமன்னிப்பு”, “பந்த பாசம்”, “அன்னை இல்லம்”, “குலமகள் ராதை
“, “ஆண்டவன் கட்டளை”, “கர்ணன்”, “முரடன் முத்து”, “சாந்தி”, “நீல வானம்”, “பழநி , பலே பாண்டியா போ ன்ற குறிப்பிடும் படியான நிறைய படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களு க்கு ஜோடியாக தேவிகா நடித்தார். . இவற்றில் நீல வானத்தில் தேவிகா நடிப்பு அற்புதம்.
“ஆண்டவன் கட்டளை” என்ற படத்தில் வரும் ஆழகே வா என்ற இந்த ப்பாடல், இக்கதையின் ஓட்டத்திற்கும், அந்த கதாபாத்ததி ரத்திற்கும்
கட்டாயமாகத் தேவைதான் . அதை அளவோடு தந்திருப்பார்கள். அது வும் தேவிகா அவர்கள் பெரிதாக கவர்ச்சி ஏதும் காட்டாமல் தனது கண்களிலே யே உணர்ச்சிகளைக் காட்டி, சிவாஜி யை மட்டுமல்ல அந்த பாடலை பார்க் கும் நம்மையும் சுண்டி இழுப் பார்.
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் தேவிகா நடித்த “நெஞ்சில் ஓர் ஆலயம், “நெஞ்ச ம் மறப்பதில்லை” ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்கள் ஆகும்.
hu nee thaanaa - Nenjil Oru Aalayam.
“நெஞ்சில் ஓர் ஆலயம், திரைப்படத்தில் சொன்னது நீதானா என்ற பாடல் வரிகளுக்கு வாயசைத்து நடித்ததோடு அல்லாமல் ஏதோ அவ ரே சிதார் இசைக்கருவியை இசைப்பது போலவே தனது விரல்க ளால் மீட்டுவதுபோல் நடித்திருப்பது அற்புதம்.
inda Maname - Ananda Jothi - Devika
காதல் மன்னன் ஜெமினிகணேசனுடன் தேவிகா ஜோடியாக நடித்த “
சுமைதாங்கி” மிகச்சிறந்த படம். இதை ஸ்ரீதர் டைரக்ட் செய்தார். எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் தேவிகா நடித்த “அன்பு எங்கே?”, ” வானம்பாடி”, “மறக்க முடியு மா?” ஆகிய படங்கள் குறிப்பிடத் தக்க வை. நாகேசுவரராவ், பாலாஜி, முத்து ராமன், ஜெய்சங்கர், ஆர்.எஸ். மனோகர், கல்யாணகுமார் ஆகியோருடன் இணை ந்து நடித்தவர் தேவிகா.
எம்.ஜி.ஆருடன் “ஆனந்தஜோதி” என்ற ஒரே ஒரு படத்தில் கதா நாயகியாக தேவிகா நடித்தார். பீம்சிங்கிடம் துணை டைரக்டராகப் பணியா ற்றிய தேவதாசுக்கும், தேவிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும்
திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய ஒரே மகள் கனகா. “வெகுளிப்பெண்” என்ற படத் தை தேவிகா சொந்தமா கத் தயாரித் தார்.
இதை டைரக்ட் செய்தவர் தேவதாஸ். கதை- வசன ம் கலைஞானம். மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த தேவிகாவுக்கு ம், தேவதாசுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இருவரும் பிரிந்த னர். தமிழ், தெலு ங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளிலும்
150-க்கு மேற்பட்ட படங்களில் நடி த்த தேவிகா, பின்னர் பட உலகில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தார்.
அம்மா, அக்கா போன்ற வேடங்களி ல் நடிக்கவில்லை. குடும்பப்பாங்கா ன படங்களில் நடிக்கப் பொருத்தமா னவர் என்ற பெயரை தேவிகா பெற் றிருந்தார். சென்னை ராஜா அண் ணா மலைபுரத்தில் உள்ள தன் வீட்டி ல் தேவிகா வசித்து வந்தார். நெஞ்சு வலி காரணமாக, ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்ட தேவிகா 1-5-2002 அன்று மரணம் அடைந்தார். தேவிகாவின் மகள் கனகா பல சினிமா படங்களில் நடித்தார். நடிகர் ராமராஜனுடன் அவர் நடித்த “கரகாட்டக்கார ன்” 52 வாரங்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்.



வியாழன், 20 ஏப்ரல், 2017

டி. ஆர். மகாலிங்கம் நினைவு தினம் - ஏப்ரல் 21.1978)


டி. ஆர். மகாலிங்கம்  நினைவு தினம் -   ஏப்ரல் 21.1978) 

தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் அல்லது பொதுவாக டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978) 1940 – 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் , பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.

வாழ்க்கைக் குறிப்பு
மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த மகாலிங்கம்  ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். சோழவந்தான் அருகே இருந்த செல்லூர் சேஷ அய்யங்கார் மிருதங்கமும் பாட்டும் மகாலிங்கத்துக்கு சொல்லிக் கொடுத்தார். அவரது குழுவுடன் மடங்களிலும் கோவில்களிலும் பஜனை பாடும் வாய்ப்பு மகாலிங்கத்துக்கு கிடைத்தது. பிரபல பாடகர் எஸ். சி. கிருஷ்ணன் அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் எஸ். ஜி. கிட்டப்பா, மகாலிங்கம், எஸ்.சி.கிருஷ்ணன் , எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் டி. எம். செளந்தரராஜன் வரை தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது.
பாய்ஸ் நாடகக் கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு எனப் புகழடைந்திருந்த மகாலிங்கத்துக்கு 13 ஆவது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 12 ஆவது வயதில் மகாலிங்கம் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்துப் போன ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் , தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1937ல் ஏவிஎம் இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின்
நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். எஸ். வி. வெங்கட்ராமன் இசை அமைத்த பாடலைப் பாடியபடியே அறிமுகமானார் மகாலிங்கம்.
கிருஷ்ணரைப் பற்றி தமிழ், இந்தி மற்றும்
மராத்தி மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் அதிக வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் பிரகலாதா , சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.
திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1945 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். அவர் நடிகராகவும் பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.

நடித்த திரைப்படங்கள்
1. பூலோக ரம்பை (1940)
2. சதி முரளி (1940)
3. தயாளன் (1941)
4. பிரகலாதா (1941)
5. நந்தனார் (1942)
6. மனோன்மணி (1942)
7. ஸ்ரீ வள்ளி (1945)
8. நாம் இருவர் (1947)
9. ஞானசௌந்தரி (1948)
10. வேதாள உலகம் (1948)
11. ஆதித்தன் கனவு (1948)
12. பவளக்கொடி (1949)
13. மாயாவதி (1949)
14. இதய கீதம் (1950)
15. லைலா மஜ்னு ) (1950)
16. மச்சரேகை (1950)
17. மோகனசுந்தரம் (1951)
18. வேலைக்காரன் (1952)
19. சின்னதுரை (1952)
20. விளையாட்டு பொம்மை (1954)
21. மாலையிட்ட மங்கை (1958)
22. அபலை அஞ்சுகம் (1959)
23. மணிமேகலை (1959)
24. அமுதவல்லி (1959
25. ரத்தினபுரி இளவரசி (1960)
26. ஆடவந்த தெய்வம் (1960)
27. கவலை இல்லாத மனிதன் (1960)
28. தந்தைக்குப்பின் தமையன் (1960)
29. ஸ்ரீ வள்ளி (1961)
30. திருவிளையாடல் (1965)
31. திருநீலகண்டர் (1972)
32. அகத்தியர் (1972)
33. ராஜ ராஜ சோழன் (1973)
34. ஸ்ரீ கிருஷ்ணலீலா (1977)
35. தெருப்பாடகன்
36. பண்ணையார் மகள்
37. என்னைப் பார்
38. திருமலை தெய்வம்

புதன், 19 ஏப்ரல், 2017

இயக்குனர் கே. சுப்பிரமணியம் பிறந்த தினம் , ஏப்ரல் 20, 1904 .


 இயக்குனர்  கே. சுப்பிரமணியம் பிறந்த தினம் , ஏப்ரல் 20, 1904 .

கிருஷ்ணசுவாமி சுப்பிரமணியம் ( Krishnaswami Subramaniam, ஏப்ரல் 20, 1904 – ஏப்ரல் 7, 1971) 1930களிலும் , 40களிலும் புகழ்பெற்று விளங்கிய தமிழ்த் திரைப்பட இயக்குனர். பொதுவாக கே. சுப்பிரமணியம் என அழைக்கப்பட்டவர். கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான இவர் 1936 இலிருந்து
1945 வரை பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கியவர். எம். கே. தியாகராஜ பாகவதர்,
எஸ். டி. சுப்புலட்சுமி , என். எஸ். கிருஷ்ணன் பி. யு. சின்னப்பா ஆகிய நடிகர்களைக் கொண்டு இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவான பல படங்களை இயக்கியவர். "தமிழ்த் திரையுலகின் தந்தை’ என்று வழங்கப்படுகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

கே. சுப்பிரமணியம் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் , பிரபல வழக்குரைஞராக இருந்த கிருஷ்ணசுவாமி ஐயருக்குப் பிறந்தார். தந்தையைப் போலவே சட்டம் படித்த இவர்,
கும்பகோணத்தில் வழக்குரைஞராகச் சிலகாலம் பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின் மீதுள்ள ஈடுபாட்டால் சென்னைக்கு வந்தார்.
திரைப்படத் துறையில்
தமிழ்த் திரைப்பட முன்னோடிகளுள் ஒருவரும், இயக்குனருமான ராஜா சாண்டோவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். அவருடன் இணைந்து பேயும் பெண்ணும் (1930), அநாதைப்பெண் (1930), இராஜேஸ்வரி (1931), உஷாசுந்தரி (1931) ஆகிய ஊமைப் படங்களில் பணியாற்றினார். பின்னர் இராம அழகப்பச் செட்டியாருடன் இணைந்து மீனாட்சி சினிட்டோன் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்து பவளக்கொடி என்ற தனது முதலாவது திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்திலேயே
தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் அறிமுகமானார்கள். சுப்புலட்சுமியை பின்னர் கே. சுப்பிரமணியம் மணந்து கொண்டார். சாதி அமைப்பைச் சாடி
பாலயோகினி (1937) என்ற திரைப்படத்தை எடுத்தார்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை
இயக்குநர் கே. சுப்ரமணியத்தின் இடைவிடாத முயற்சியின் பயனாய் 1939 ஆம் ஆண்டு ஏப்ரலில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தோன்றியது. அதன் முதல் தலைவராக எஸ். சத்தியமூர்த்தி இருந்தார்.
தியாக பூமிக்கு - கல்கியின் பாராட்டு
1939 மே-20ல் திரைக்கு வந்த "கல்கி"யின் தியாக பூமியைப்பற்றி கல்கியின் கருத்துரை-( ஆனந்த விகடனில் உள்ளபடியே) " இயக்குநர் சுப்ரமணியத்துக்கே முழுதும் சேர வேண்டிய இந்த பெருமையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு இஷ்டமில்லை. "தியாக பூமி" கதையில் இரண்டு மூன்று இடங்களில் அப்போது தேசத்தில் நடந்து வந்த சுதந்திர இயக்கத்தைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தியின் ஆத்ம சக்தியினால் நாடெங்கும் நடந்து வந்த அற்புதத்தை வெகு அழகாகவும், பொருத்தமாகவும் சித்திரித்திருக்கிறார்."காந்தி மகான் தலையை அசைத்தார், தேசத்தில் பெரிய புரட்சி ஏற்பட்டது."
இன்பசாகரன்
படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இப்படத்தின் படிகள் எரிந்து போயின. இதனால் இப்படம் வெளிவரவில்லை. தீ விபத்துக்குப் பிறகு (எம். யூ. ஏ. சி. ஸ்டூடியோ) படப்பிடிப்பு நிலையம் கடனில் மூழ்கி, ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் எடுத்த எஸ். எஸ். வாசன் அந்த இடத்தில் செமினியை நிர்மாணித்தார்
.
இயக்கிய படங்கள்
நவீன சாரங்கதாரா (1936)
பாலயோகினி (1937)
சேவாசதனம் (1938)
தியாகபூமி (1939)
இன்பசாகரன் (1939) [4]
பக்த சேதா (1940)
மானசம்ரட்சணம் (1945)
மிஸ்டர் அம்மாஞ்சி (கௌசல்யா பிரணயம்)
கச்சதேவயானி
அனந்தசயனம்
விகடயோகி
விசித்திரவனிதா
கோகுலதாசி
கீதகாந்தி
பாண்டித் தேவன்



இ யக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஸ்டுடியோ உரிமையாளர் ஆகிய பன்முக ஆளுமை கொண்ட இயக்குநர் கே.சுப்பிரமணியம்

தமிழ் திரைப்பட உலகின் முதல் புரட்சிக்காரர்

மொத்தம் 14 படங்களில் மட்டுமே நடித்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். அவரை நாடக மேடையில் இருந்து தேடிக் கண்டுபிடித்து தனது திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே.சுப்பிரமணியம். புரட்சி இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் முதல் படம் ''பவளக்கொடி"
அந்நாளில் புகழ்பெற்றிருந்தது, காரைக்குடி ஏ.நாராயணனின் ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் படத்தயாரிப்பு நிறுவனம். பம்பாய் ஹோக் ஹாப்பூர் நகரங்களில் தயாரிக்கப்பட்டு, சென்னை விநியோகத்திற்கு அனுப்பப்பட்ட படத்தயாரிப்புகளோடு ஒருகட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற இயலவில்லை. அதனால், அந்த நிறுவனம் நொடிய ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் உருவான 'அசோசியேட்டட் ஃபிலிம்ஸ்" என்ற படத்தயாரிப்பு ஸ்தாபனமும் நஷ்டத்தில் செயலற்று போய்விட்டது. இதைக் கேள்வியுற்ற நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராவ்பகதூர் கே.பி.வெங்கடராம அய்யர் என்பவர், தன் பொறுப்பில் அதை எடுத்து நடத்தினார். இந்த நிறுவனத்தில் பணியாற்ற கும்பகோணம் பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவரை நியமித்தார் வெங்கட்ராம அய்யர்.
அந்த இளைஞரும் ஒரு வழக்கறிஞர்தான். இருந்தாலும், அவருக்கு சினிமா மீது ஒருவித ஈர்ப்பு. இதனால் வழக்கறிஞர் தொழிலை கைவிட்டு சினிமாவில் இயங்க விரும்பினார். பாபநாசம் கிருஷ்ணசாமி சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்ட அவர்தான் பின்னாளில் தமிழ் சினிமாவின் முதல் புரட்சிகர இயக்குநர் என்ற புகழுக்குரிய டைரக்டர் கே.சுப்பிரமணியம். பாபநாசம் என்ற ஊரில் சி.எஸ்.கிருஷ்ணசாமி- வெங்கலட்சுமி என்ற தம்பதிக்கு 1904ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ந் தேதி (20.4.1904) மகனாக பிறந்தவர் சுப்ரமணியம்.

டைரக்டர் கே.சுப்பிரமணியம்

பின்னாளில் முதலாளி கே.பி.வெங்கடராம அய்யரின் பேத்தி மீனாட்சியை மணந்து அக்கம்பெனியின் முக்கிய பொறுப்பாளராக மாறினார். கே. சுப்பிரமணியம்தான் புகழ்பெற்ற இயக்குநர் ராஜா சாண்டோவை பாம்பேயிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து அசோசியேட்டட் ஃபிலிம்ஸில் வேலையில் சேர்த்தவர். ராஜா சாண்டோ இக்கம்பெனிக்கான 'அநாதைப்பெண்' 'பேயும் பெண்ணும்' 'உஷா சுந்தரி' ஆகிய மௌனப் படங்களை சென்னையில் தயாரித்தவர்.
இந்தப் படத்தயாரிப்பின்போது ராஜா சாண்டோவிடம் உதவி டைரக்டராக கே.சுப்பிரமணியம் பணியாற்றி சினிமா தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார். அவருடன் இணைந்து பேயும் பெண்ணும் (1930), அநாதைப்பெண் (1930), இராஜேஸ்வரி (1931), உஷாசுந்தரி (1931) ஆகிய ஊமைப் படங்களில் பணியாற்றினார்.
1934-ல் 'பவளக்கொடி' என்ற நாடகம் காரைக்குடி வட்டாரத்தில் வெற்றிகரமாக நடந்துவந்தது. எஸ்.எம்.லட்சுமண செட்டியார் என்கிற லேனா செட்டியார் மற்றும் அழகப்ப செட்டியார் இருவரும் கூட்டுசேர்ந்து நடத்திய இந்த நாடகத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும் எஸ்.டி.சுப்புலட்சுமியும் இணைந்து நடித்தனர். இருவரின் உணர்ச்சிகரமான நடிப்பால் இந்த நாடகம் தொடர்ந்து பல மாதங்கள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது. படம் தயாரிக்கும் எண்ணத்தில் இருந்த கே.சுப்பிரமணியம், லேனா செட்டியாருடன் சேர்ந்து ஒருநாள் அந்த நாடகத்தை காரைக்குடிக்கு சென்று பார்த்தார். அன்றே பவளக்கொடி நாடகத்தைப் படமாகத் தயாரிக்கும் உறுதியான முடிவுக்கு வந்தார்.

பவளக்கொடி நாடகத்தை பேசும் படமாக எடுக்கும் சுப்பிரமணியத்தின் திட்டத்திற்கு லேனா செட்டியாரும் அழகப்பச் செட்டியாரும் நிதியுதவி செய்ய முன்வந்தனர். பவளக்கொடி படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி அல்லியாகவும் எம்.கே.டி.பாகவதர் அர்ஜுனனாகவும், மணி பாகவதர் என்பவர் கிருஷ்ணராகவும் நடித்தனர். சென்னை அடையாறு மீனாட்சி சினிடோனில் படப்பிடிப்பு நடைபெற்றது. (இதுதான் "சத்யா ஸ்டுடியோ" வாகி இன்று ஜானகி எம்.ஜி.ஆர் கல்லுாரியாக இயங்கிவருகிறது).
சுப்ரமணியம் டைரக்ட் செய்து தயாரித்த "பவளக்கொடி" பல வாரங்கள் தென்னக திரையரங்களில் ஓடி வெற்றிகண்டது. அமோக வசூல் கண்டதில் பொருளாதார ஏற்றம் கண்டார் சுப்பிரமணியம். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ம்ஸ்டாரை எம்.கே.டி.தியாகராஜ பாகவதரை அறிமுகப்படுத்திய நிரந்தர பெருமைக்குரியவரானார் கே.சுபிரமணியம்.
முதல் படத்தில் கிடைத்த வெற்றியில் உந்தப்பட்டு "சாரங்கதாரா" என்ற திரைப்படத்தை கல்கத்தாவில் தயாரித்தார். இதில் எஸ்.டி.சுப்பு லட்சுமி, எம்.கே.டி. பாகவதர் ஜோடியை ஒப்பந்தம் செய்தார். இந்தப் படமும் வெற்றி. பவளக்கொடி படப்பிடிப்பின்போது எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் காதல் வயப்பட்ட கே.சுப்பிரமணியம், படம் முடிந்த தருவாயில் அவரை தன் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார்.

காதலும் திருமணமும்

முதல் இரண்டு படங்களில் கிடைத்த வருவாயைக் கொண்டு எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் இணைந்து 1935 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை துவங்கினார். இந்த கம்பெனி 19 நாட்களில் தயாரித்து வெளியிட்ட வெற்றிப் படம்தான் "நவின சதாரம்" அதற்கடுத்து அவர் தயாரித்தவை "பாலயோகினி" "பக்த குசேலா" "மிஸ்டர் அம்மாஞ்சி" "கௌசல்யா கல்யாணம்" முதலியவை.
1937 ஆம் ஆண்டு சென்னை வெள்ளாள தேனாம்பேட்டை பகுதியிலிருந்த "ஸ்பிரிங் கார்டன்" (Spring Garden) என்ற இடத்தில் "மோஷன் ஃபிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கன்பைன்ஸ்" என்ற பெயரில் தனது சொந்த படப்பிடிப்பு நிலையத்தைத் தொடங்கினார் கே. சுப்ரமணியம். இந்த ஸ்டுடியோவில் வங்காளத்தைச் சேர்ந்த சிறந்த கேமரா கலைஞரான சைலன்போஸ் பணியமர்த்தப்பட்டார்
உயர்ந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட படங்களை உருவாக்கும் எண்ணத்தில், வட நாட்டில் இருந்து சைலன்போஸ், கமால்கோஷ் போன்ற சிறந்த ஒளிப்பதிவாளர்களையும் ஒலிப்பதிவு கலையில் தேர்ச்சியுற்ற சி.எஸ்.நிகாம், "சரண் பஹதூர் போன்ற நிபுணர்களை தன் ஸ்டுடியோவில் பணியமர்த்தினார் கே.சுப்பிரமணியம்.

சேவாசதனம்

பிரபலமாக விளங்கிய கர்நாடக சங்கீத பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி சினிமா பிரவேசம் செய்த முதல் படம் "சேவா சதனம். 1938-ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் கே.சுப்பிரமணியம். கொடுமைப்படுத்தும் கணவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்காமல் வெளியேறி தன்னம்பிக்கையோடு வாழ முயற்சிக்கும் பெண்ணின் கதைதான் சேவா சதனம். இதில் மனைவி சுமதியாக எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்தார். படம் வெற்றிகரமாக ஓடியது.
இந்தப் படத்திற்கு " ஆனந்த விகடன் 8.5.1938 தேதியிட்ட இதழில் வெளியான விமர்சனத்திலிருந்து சில பகுதிகள்:
"சுப்பிரமணியத்தின் டைரக்ஷனில் சில விஷயங்களை எதிர்பார்த்துத்தான் ஆக வேண்டும். அவரது படங்களில் சமூக கொடுமைகளின் பிரதிபலிப்பு விசேஷமாக இருக்கும்...“இந்த டாக்கியைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் முடிவாகச் சொல்லிவிட வேண்டுமானால் 'போய்ப் பாருங்கள்" என்று சொல்வேன்".
விபத்து- நஷ்டம் -ஏலம்
இவர் தொடங்கிய "மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்" என்ற சினிமா ஸ்டுடியோவில் கோவை அய்யாமுத்து எழுதிய "இன்பசாகரன்" என்ற கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இன்பசாகரன் படத்தை கே.சுப்பிரமணியம் டைரக்ட் செய்தார். இந்த படத்தில்தான் எம்.ஜி.ஆரின் துணைவியாரும் முன்னாள் முதல்வருமான வி.என்.ஜானகி அறிமுகமானார்.
ஜானகிக்கு அப்பொழுது வயது 13. இந்தப் படத் தயாரிப்பின்போது துர்சகுனமாக ஒரு சம்பவம் நடந்தது. படம் முழுவதுமாகத் தயாரிக்கப் பெற்று வெளிவரும் நாளும் விளம்பரப்படுத்திவிட்ட சூழலில் எதிர்பாராதவிதமாக 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 21ந் தேதி அந்த ஸ்டுடியோ முற்றிலுமாகத் தீப்பற்றி எரிந்தது. அதில் 'இன்ப சாகரன்' படத்தின் நெகடிவ்களும் எரிந்து போயின. பெரும் நட்டத்திற்கு ஆளானார் சுப்ரமணியம். ஆனாலும் மனம் சஞ்சலம் அடையவில்லை சுப்பிரமணியம்.
கடனால் ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்தது. அதை ஏலத்தில் எடுத்தவர் அமரர் எஸ்.எஸ்.வாசன். ஏலத்தில் எடுக்கப்பட்ட அந்த இடத்தை புனர் நிர்மாணம் செய்து புது ஸ்டுடியோவை அவ்விடத்தில் அமைத்த எஸ்.எஸ்.வாசன். 'மூவிலேண்ட் ஜெமினி ஸ்டுடியோ' என்று தன் ஸ்டுடியோவிற்கு பெயர் சூட்டி ராஜா சர்.முத்தையா செட்டியாரைக் கொண்டு துவக்க விழா நடத்தினார்.




தியாகபூமி (1939)

தியாகபூமி என்ற சமூக கதை கல்கி அவர்களால் ஆனந்த விகடனில் இருபது வாரம் தொடராக வெளிவந்தது. வாசகர்களின் அமோக ஆதரவைப்பெற்ற இந்த நாவலை தொடராக வெளிவரும்போதே சுப்பிரமணியம் திரைப் படமாகவும் தயாரித்துக் கொண்டிருந்தார். தியாகபூமியில் 'சாவித்திரி' வேஷத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். சம்பு சாஸ்திரியாக பாபநாசம் சிவன் நடித்தார்.
படத்தில் ஓர் காட்சி, "சாவித்திரியிடம் சாஸ்திரி “இந்திய பூமி, தியாக பூமி. இங்கு மனைவிமார்கள் கணவர்களோடு வாழ்வதுதான் பண்பு" என்று எடுத்துக் கூறி கணவனோடு இணையச் சொல்கிறார். ஆனால் அதற்கு சாவித்திரி, "மனைவி சீதையாக இருக்க வேண்டுமானால், கணவன் ராமனாக இருக்க வேண்டும் என்று சொல்லி மறுத்து விடுகிறாள்.
நீதிமன்றத்தில் தன் கணவன் பிந்தரனோடு தன்னால் வாழமுடியாது என்று கூறும் சாவித்திரி, “வேண்டுமானால் ஆண்கள் மனைவிமார்களுக்கு அளிப்பதுபோல் தான் தன் கணவனுக்கு ஜீவனாம்சம் அளிப்பதாகவும் கூறுகிறாள். அக்காலத்தில் புரட்சிகர சிந்தனை கொண்டதாக பரபரப்பு ஏற்படுத்தியது இந்தப்படம்.
பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், படம் ஓடிக்கொண்டிருந்த நாட்களில் காங்கிரஸ் பிரசாரப் படம் என்று நினைத்து அரசு தடை செய்ய தீர்மானித்தது. இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்-இயக்குனர் கே.சுப்ரமணியம் படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையாக தடை உத்தரவு வரும் முன், அனுமதி இலவசம் என்று அறிவித்து தொடர்ந்து பல காட்சிகள் நடத்தினார்.
படத்தில் நாயகி, கடைசி காட்சியில் காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலம் சென்று பாடிக்கொண்டு செல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்ததுதான் இதற்கு காரணம். பாரதியார் பாடலை டி.கே.பட்டம்மாள் பாடியார். எதிர்பார்த்தபடி படம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டது. (சுதந்திரத்திற்கு பின் தடை நீக்கப்பட்டது)
எஸ்.டி.சுப்புலெட்சுமி இந்த படத்தின் மூலம் நடிப்பின் உச்சத்தை தொட்டார். சுப்பிரமணியம் புகழ் இப்படத்தின் மூலம் பன்மடங்கு பெருகியது.
படம் வெற்றிபெற்றபின் “டைரக்டர் சுப்ரமணியத்துக்கே முழுதும் சேர வேண்டிய இந்த பெருமையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு இஷ்டமில்லை” என்று தன் மேதைமையை வெளியிப்படுத்தியிருந்தார் எழுத்தாளர் கல்கி.


"மானசம்ரக்ஷணம்" (மானம் காத்தல்)

1945 ஆம் ஆண்டு யுத்த ஆதரவு படம் ஒன்றை கே.சுப்பிரமணியம் எடுத்து வெளியிட்டார். படத்தின் பெயர் "மானசம்ரக்ஷணம்" சுமார் 11000 அடிகளில் எடுக்கப்பட்ட பிரசாரப் படம் இது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் எடுத்த நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம், வெளிவந்த சில நாட்களில் தடைவிதிக்கப்பட்டது. பின்னர் தடை நீக்கிக் கொள்ளப்பட்டது. படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.
சென்னை கெயிட்டி தியேட்டரில் இப்படத்தின் இடைவேளைக் காட்சியின் போது படத்தின் நடித்த காளி என் ரத்தினம், எஸ்.டி.சுப்புலட்சுமி ஆகியோ சினிமா மேடையில் தோன்றி ரசிகர்களுக்கு காட்சியளித்தது அந்நாளில் பிரபலம். இப்படம் கே.சுப்பிரமணியத்திற்கு புகழ்சேர்த்த படங்களில் ஒன்று.
தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரியை திரையுலகில் அறிமுகம் செய்ததும் கே.சுப்பிரமணியம்தான். சுப்பிரமணியத்தின் "கச்ச தேவயானி" படத்தில் நடித்தபின் டி.ஆர்.ராஜகுமாரியின் "கவர்ச்சி புகழ்" தமிழகம் முழுவதும் பரவியது.
"பிரேம் சாகர்" என்ற இந்திப் படத்தை தமிழ்நாட்டில் தயாரித்த முதல் தென்னிந்தியரும் இவரே. 1960 ஆம் ஆண்டு "மோரக்" (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் கீழ் "பாண்டித்தேவன்" படத்தை தயாரித்தார்.
பால யோகினி படத்தில் சாதிக்கொடுமைகளை சாடியது, சேவாசதனம் திரைப்படத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்த அவசியத்தை முன்வைத்தது, "பக்தசேதாவில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தது போன்ற அந்நாளில் பேசத் தயங்கிய பல கருத்துக்களை சினிமாவில் முன்வைத்ததால் கே.சுப்ரமணியம், புரட்சி இயக்குனர் என்ற பெயர் பெற்றார்.
ஹாலிவுட், ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு தொழில் முறையாக சென்று வந்தார். ரஷ்ய அரசால் சிறப்பு விருந்தினராக ரஷ்யாவுக்கு அழைக்கப்பட்ட தென்னிந்திய கலைஞர்கள் குழுவில் கலைவாணர் என்.எஸ்.கே.வுடன் ரஷ்யா சென்று வந்தவர் டைரக்டர் கே.சுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.


இயக்கிய படங்கள்

நவீன சாரங்கதாரா (1936)
பாலயோகினி (1937)
சேவாசதனம் (1938)
தியாகபூமி (1939)
இன்பசாகரன் (1939)[4]
பக்த தேசா (1940)
மானசம்ரட்சணம் (1945)
மிஸ்டர் அம்மாஞ்சி (கௌசல்யா பிரணயம்)
கச்சதேவயானி
அனந்தசயனம்
விகடயோகி
விசித்திரவனிதா
கோகுலதாசி
கீதகாந்தி
பாண்டித் தேவன்

மறைவு

திரையுலகில் பல சாதனைகளை புரிந்த இயக்குனர் கே.சுப்ரமணியம் 1971 ஆம் ஏப்ரல் மாதம் 7ம் நாள் சென்னையில் மரணமடைந்தார். சுப்பிரமணியத்தின் சடலத்தை தாங்கிய பல்லக்கை எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சுமந்தனர். ஊர்வலம் அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்குப் பின்புறம் உள்ள மயானத்தை அடைந்தது. அங்கே சுப்ரமணியம் உடல் மீது ரோஜா மாலை வைத்து எம்.ஜி.ஆர். அஞ்சலி செலுத்தினார். நடிகர் சந்திரபாபு ஜெபம் செய்தார். அவரது இறுதிச்சடங்குகளை மத்திய அரசின் செய்திப் படப் பிரிவினர் படம் எடுத்தனர். தமிழ்ப் பட உலகில் ஒரு சகாப்தம் முடிந்தது.
1952 ஆம் ஆண்டு "அமெரிக்க சினி டைரக்டர்கள் கில்டு" உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த தகுதி மெடலை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியது. தென்னிந்திய ஃபிலிம்சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பில் நான்குமுறை தலைவராக பணியாற்றியுள்ளார். பாபநாசம் சிவனை "பக்த குசேலாவில்" நடிகராக அறிமுகப்படுத்தினார்.
அனந்தசயனம் என்ற (1942) படத்தில் சுப்பிரமணியம் கிருஷ்ணன் வேஷத்தில் நடித்தார். 1942 ல் நிருத்யோதயா என்ற நடனப்பள்ளியை ஆரம்பித்தனர். புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் இவரது மகள். மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் 19 நாட்களில் "நவின சதாரம்" என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்.
தன் திரைவாழ்க்கையில் கே.சுப்பிரமணியம் தயாரித்த படங்கள் மொத்தம் 22.. இதில் அவர் இயக்கியது 20 படங்கள். 2005- ல் கே.சுப்ரணியத்தை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. திரையுலகில் கே. சுப்ரமணியத்தின் இடத்தை இட்டுநிரப்ப யாராலும் இயலாது.
- நன்றி விகடன்.

திங்கள், 17 ஏப்ரல், 2017

இசையமைப்பாளர் டி. கே. இராமமூர்த்தி நினைவு தினம் ஏப்ரல் 17 .2013.



இசையமைப்பாளர் டி. கே. இராமமூர்த்தி நினைவு தினம்  ஏப்ரல்  17 .2013.


டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி ( Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, 1922 - 17 ஏப்ரல் 2013)
தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த
சாது மிரண்டால்.

இசையமைத்த திரைப்படங்கள்

19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:
சாது மிரண்டால்
தேன் மழை
மறக்க முடியுமா
நான்
தங்கச் சுரங்கம்
காதல் ஜோதி
ஆலயம்
சோப்பு சீப்பு கண்ணாடி
சங்கமம்
எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை
எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
விரிவான தரவுகளுக்கு .

மறைவு

இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார்.


டி. கே. இராமமூர்த்தி எனப்
புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி
கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி 1922 - 17 ஏப்ரல் 2013) இசையமைப்பாளர்
மற்றும் வயலின்  கலைஞர். இவரும் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும் இணைந்து
விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக
பல திரைப்படங்களுக்கு 1960/1970 ஆம்
வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள
திரைப்படங்களில் இசையமைத்து
முடிசூடா மன்னர்களாக விளங்கினர்.
விஸ்வநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு
ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த
படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால்.
சாது மிரண்டால், தேன்மழை,
மறக்கமுடியுமா உள்ளிட்ட 19 படங்களுக்கு
தனியாகவும் எம்.எஸ்.விஸ்வநாதன்
அவர்களுடன் இணைந்து 700 படங்களுக்கு
மேலும் இசை அமைத்துள்ளார்.
இரட்டையர்களாக இசையமைக்க ஆரம்பித்த
போது மூத்தவரான ராமமூர்த்தி
அவர்களின் பெயரே முதலில் வரவேண்டும்
என்று விரும்பினார் எம்.எஸ்.வி. அவர்கள்.
ஆனால், "விஸ்வநாதன் ராமமூர்த்தி" என
வரும்போதுதான் அழகாக, உச்சரிக்கச்
சுவையாக இருக்கிறதென்று கலைவாணர்
என்.எஸ்.கே. கேட்டுக்கொண்டதற்கிணங்க -
அடக்கமாக விட்டுக் கொடுத்த பெருந்தகை.
இவர் கைகளில் வயலினும், தபேலாவும்
களிநடம் புரிவதைப் பார்த்து அசந்து
போனவர்கள் ஏராளம் பேர். மெல்லிசை
மன்னர்களின் இசையமைப்பில் வயலினும்,
தபேலாவும் தனியாகத்
தெரிகிறதென்றால், அந்தப் பெருமை
இவருக்கே.
காலமும், சூழ்நிலையும் பிரித்து
வைத்தாலும், எந்த இடத்திலும், எந்த
சந்தர்ப்பத்திலும் இவர் எம்.எஸ்.வி. அவர்களைக்
குறை சொன்னதுமில்லை, விட்டுக்
கொடுத்ததும் இல்லை. அதேபோல்
எம்.எஸ்.வி. அவர்களும் இவரை, இவரின்
அசாத்திய திறமையை வாயாரப் புகழத்
தவறியதே இல்லை.
இவர்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த
காலம், தமிழ்த் திரை இசை உலகின்
பொற்காலம். அந்தக் காலத்தில் வாழ்ந்து,
இவர்களின் இசையை ரசிக்க, அனுபவிக்கக்
கொடுத்து வைத்த அனைவரும்
உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள்
என்பதில் ஐயமில்லை.
"அ" வரிசை, "ப" வரிசை, "த" வரிசை என்று
இவர்கள் இசையில், மக்கள் திலகம், நடிகர்
திலகம், காதல் மன்னன் உட்பட அனைத்துக்
கலைஞர்களின் படங்களும் வெற்றிக்கொடி
நாட்டியதற்கு இவர்களின் இசை
உறுதுணையாக, அச்சாணியாக
இருந்ததை யாரும் மறுக்கவோ,
மறைக்கவோ முடியாது.
அப்படிப்பட்ட இரட்டையர்களில் மூத்தவரான
ராமமூர்த்தி அவர்களை, எம்.எஸ்.வி.
அவர்களிடம் இருந்து பிரித்து வேடிக்கை
பார்த்து, நம்மை கலங்க வைத்த காலம், இன்று
நம் எல்லோரிடமும் இருந்து அவரைப்
பிரித்து அழவும், ஏங்கவும்
வைத்துவிட்டது.
பிறப்பும், இறப்பும் இயற்கைதான்
என்றாலும், நம்மை ஏதோ ஒரு விதத்தில்
மகிழ்ச்சிப்படுத்தியவர்கள் நம்மை விட்டுப்
பிரியும்போது ஏற்படும் ரணம் இலேசாக
மாறக் கூடியதல்ல. அதேவிதமாய், வெந்த
புண்ணில் வேல் பாய்ந்ததைப்போல்,
பி.பி.எஸ். அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த
ரணம் ஆறுமுன்னே காலம் அந்த ரணத்தை
இன்னும் மோசமாக்கி நம்மை
சோதிக்கிறது.
தமிழ் இசைக்கு மெருகூட்டி, உலகம்
உள்ளவரை நினைவில் இருக்கச் செய்த
இவர்கள் நம் இதயங்களில் என்றும்
வாழ்வார்கள். தமிழ் கூறும் நல்லுலகம்
நன்றிக் கடன் பட்டிருக்கும், அமரர்
ராமமூர்த்தி அவர்களுக்கு கண்ணீரால்
அஞ்சலி செய்து, அவர் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திப்போம் .