வியாழன், 26 ஜூலை, 2012

சின்ன‌ குயில் சித்ரா பிற‌ந்த‌ நாள் ஜூலை 27.


சின்ன‌ குயில் சித்ரா 
திருவனந்தபுரத்தில் வானொலியில் பாடகராகப் பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயர் தம் மூத்தபெண் பீனாவின் அரிய குரலினிமையையும் , இசைத் திறமையையும் கண்டு அவரே தம் புகழை இசையுலகில் பட்டொளி வீசி பறக்கச் செய்வார் என்று கணக்கிட்டார். ஆனால் இறைவன் சித்தம் வேறாக இருந்தது. கிருஷ்ணன் நாயருடைய மனைவி சாந்தகுமாரி ஒரு வீணை வித்தகி. அவர் பள்ளியில் இசையும் கற்பித்து வந்தார். அபூர்வ குரலினிமையைப் பெற்றிருந்த பீனாவிற்கு சிறு வயது முதல் கவனத்துடன் தேவையான பயிற்சிகளெல்லாம் முறைப்படி அளிக்கப்பட்டது. ஆனால் திருவனந்தபுரத்தில் 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் பிறந்த சின்னஞ்சிறு சித்ரா கணக்கற்ற அபூர்வத் திறமைகளைத் தம்முள் பொதித்துக் கொண்டு அவருடைய தந்தையின் கனவுகளை எல்லாம் நனவாக்குபவர் என்பதைக் காலம் உலகிற்கு உணர்த்திற்று.

சித்ரா என்றாலே அவரது புன்னகை சிந்தும் முகமே ரசிகர்களின் கண் முன் தோன்றுகிறது. வாடாத மலரைப் போன்று மாறாத புன்னகை அவரின் தனித்த முத்திரையாகì காண்பவரை வசீகரிக்கிறது. குழந்தை சித்ரா வானொலியில் ஒலிபரப்பட்ட சுசீலா அம்மாவின் 'பிரியதமா பிரியதமா' என்ற பாடலைத் தன் பட்டு உதடுகளை அசைத்துப் பாட முயற்சித்த பொழுதே அவருடைய எதிர் காலம் இசை என்று எழுதப்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது.

பொம்மைகளை வைத்து விளையாடும் வயதில் பீனாவிற்கு சங்கீதம் கற்பிக்கப்பட்ட பொழுது சின்னஞ்சிறு சித்ரா தன் கேள்வி ஞானத்தினாலேயே கேட்ட பாடல்களை நினைவு படுத்திக் கொண்டு பாடும் திறமை படைத்தவராக இருந்தார். அவர் தம் ஐந்தாம் பிராயத்திலேயே அகில இந்திய வானொலி ஒரூ பரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார் என்பது வியக்க வைக்கிறது. பள்ளியில் பயின்ற நாட்களிலும் கையில் புத்தகத்துடன் தேர்விற்குô படிக்கும் வேளையிலும அவருடைய கவனம் படிப்பின் பால் செல்லாமல் பக்கத்து கோவிலிருந்து ஒலிக்கும் பாடலின் ஸ்வரங்களிலேயே லயித்து வந்தது. இதை கண்ட அவர் தந்தையார் தம் மகள் சார்பாக National Talent Search Scholarship க்கு பதிவு செய்தார். நேர்முகத் தேர்வுக்குî சென்றபொழுது இரண்டு வருடம் சங்கீதம் கற்றிருக்க வேண்டும் என்று குழுவினர் வலியுறுத்தியபோதும் பதிமூன்று வயது சித்ரா தோடி ராகத்தின் சிக்கலான ஸ்வரங்களை நிரவல் செய்து தம் தகுதியை நிரூபித்து ஏழு வருட scholarship ஐப் பெற்றார். பின்னர் இசை பட்டப்படிப்பில் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.

சித்ரா பேராசிரியர்.ஓமண்ணக்குட்டியிடம் இசை பயின்று வந்தார் அவருடைய சகோதரர் எம்.ஜி..ராதாகிருஷ்ணன் அவர்கள் திரைத்துறையில் புதுì குரல்வளம் கொண்டவர்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இருந்தார். ஓமண்ணக்குட்டி அவர்கள் சுட்டிப்பெண் சித்ராவின் பெயரை முன் மொழிய திரைப்பட பின்னணிப் பாடகியாகப் பிரவேசித்தார்.

தான் ஒரு முழு நேரப் பின்னணி பாடகியாவோம் என்று கனவிலும் தான் நினைக்கவில்லை என்றுரைக்கிறார் சித்ரா. பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது அவர் திரு.கே.ஜே.யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவ ருடைய முதல் திரைப்படப்பாடல் வெளிவரும் முன்னரே அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து திரு.யேசுதாஸ் அவர்களுடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும், 'தரங்கிணி' பதிப்புகளிலும் சித்ராவிற்குô பாடும் வாய்ப்புகள் வந்தன. தரங்கிணிக்கு வந்த இசையமைப்பாளர்கள் அப்புதுக்குரலால் ஈர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவரை நாடி வாய்ப்புகள் தொடந்து வந்தன. திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்கு வந்து குடி பெயர்ந்தால் கணக்கற்ற வாய்ப்புகள் பெற இயலும் என்று இசையமைப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து சித்ராவிடம் வலியுறுத்தி வந்தார்.

முகமறியாத இடத்திற்கு வர முதலில் சித்ராவிற்கு விருப்பமில்லை. ஒரு முறை 'குஷி ஔர் குஷி ' என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு S.P.வெங்கடேஷ் எழுதிய ஒரு பாடலை P.B.ஸ்ரீனிவாசுடன் இணைந்து பாடுவதற்காகî சென்னைககு வந்திருந்தார். அந்தத் திரைப்படம் வெளியிடப்படவில்லை. ஒரு முறை இயக்குனர் ஃபாஸில் தம்முடைய Nokkethadhoorathu Kannum Nattu என்ற வெற்றிப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய விரும்பினார். அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த இளையராஜா சித்ராவிற்கு அழைப்பு விடுததார். இளைய ராஜாவின் இசையமைப்பில் 'நீ தானா அந்தக்குயில் ' என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'பூஜைக்கேத்த பூவிது' என்ற பாடலும், 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ' என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன

1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் ('கீதாஞ்சலி ' திரைப்படத்தில் ' துள்ளி எழுந்தது பாட்டு சின்னக்குயிலிசை கேட்டு' , வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது ') சித்ராவின் இனிய குரலில் உயிர் பெற்றெழுந்தன. தமிழ் சேவையால் சூட்டப்பட்ட 'சின்னக்குயில் சித்ரா' என்ற பெயர் நிலைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட 'நானொரு சிந்து காவடிச்சிந்து' , 'பாடறியேன் படிப்பறியேன்' போன்ற பாடல்களை சிந்து பைரவியில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதைப் பெற்றார். தன்னுள் ஒளிந்திருந்த திறமையை உலகிற்கு வெளிக்கொணர்ந்து புடமிட்ட பொன்னாக ஒளிரச் செய்ததில் தான் திரு.இளையராஜா அவர்களுக்கு பெரிதும் கடமைப் பட்டிருப்பதாக சித்ரா அவர்கள் கூறுகிறார்.

அடுத்து 1985-1986ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் பல்சுவையாக சுவைக்கக் கிடைத்தன. இதைத் தொடர்ந்து. இசையமைப்பாளர்கள் பலரும் தம் பாடல்களுக்கு உயிரூட்ட சித்ராவின் குரலைப் பயன் படுத்தி தீஞ்சுவை விருந்தை படைக்கத் துவங்கினார்கள். சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய திரு.கங்கை அமரன், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், ஷங்கர் - கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா

எண்பதுகளின் பிற்பகுதியில் திரு.சந்திரபோஸின் இசைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அவருடைய இசையமைப்பில் திருமதி.சித்ராவிற்கு 'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', சின்னக்கண்ணா செல்லக்கண்ணா, 'பூ முடிக்கணும் ', 'வண்ணாத்திப்பூச்சி வயசென்னாச்சு போன்ற அரிய பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.

மேலும் வி.குமாரின் இசையமைப்பில் திரு எஸ்.பி.பியுடன் இணைந்து 'பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பூவெல்லாம் ' பாடிய சித்ரா அவர்கள் குன்னக்குடி வைத்யநாதனின் 'உலா வந்த நிலா ' திரைப்படத்தில் சில அரிய பாடல்களையும், டி.ராஜேந்திரனின் இசையில் சில' பாடல்களையும் பாடி அசத்தினார்.

சில இசையமைப்பாளர்கள் சித்ராவிற்காக காத்திருந்து தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். R.D.பர்மன் (நதியே நதியே நைல் நதியே), லக்ஷ்மிகாந்த் பியாரிலால் (அச்சமில்லா பாதையில்), பப்பி லஹரி (தக்கதிமிதானா), V.S. நரசிமமன் (விழிகளில் கோடி அபிநயம்), L.வைத்யநாதன்(என்னை விட்டுப் பிரிவது நியாயமாகுமா), தேவேந்திரன் (கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம்புது ஓலை வரும்), ஹம்ஸலேகா (ராக்குயிலே கண்ணிலே என்னடி கோபம், சேலை கட்டும் பெண்ணுக்கொரு), எம்.ரங்காராவ் (குடும்பம் ஒரு கோயில்), மனோஜ் - க்யான் (சின்னக்கண்ணன் தொட்டது பூவாக, கண்ணா நீ வாழ்க, உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும், அழகில் சொக்காத ஆண்களே) , பாக்யராஜ் (அம்மாடி இது தான் காதலா), S.P.B (உன்னைக் கண்ட பின்பு தான், இதோ என் பல்லவி), S.A.ராஜ்குமார் (ஆயிரம் திருநாள்) , தேவா (சந்திரலேகா, வேண்டும் வேண்Îம்), போன்றவர்களின் பாடல்கள் அவரின் பன்முகத்திறமைக்கு கட்டியம் கூறும் முகமாக அமைந்துள்ளன.

அடுத்து தொடர்ந்த பத்தாண்டுகளில் இசையரங்கில் A.R. ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர், சிற்பி, பரத்வாஜ் போன்றவர்களின் பிரவேசத்தினால் இசையின் பரிமாணத்தில் பல அற்புதமான மாற்றங்கள் காணத் துவங்கின. அவர்கள் தம் கற்பனை வளத்திற்கேற்ப இசைத்துறையில் பல புது முயற்சிகளில் இறங்கினர். இத்துறையில் முதன்மையாக நின்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சிதராவின் குரலில் ' புத்தம்புது பூமி வேண்டும்' , 'என் மேல் விழுந்த மழைத்துளியே' , 'தென் கிழக்குச் சீமையிலே', 'கண்ணாளனே' , ஊ லலலா,எங்கே எனது கவிதை போன்ற பல வெற்றிப்பாடல்களை வழங்கினார்

அன்னையின் 108 திருநாமங்களை மூச்சு விடாமல் தொடர்ந்து பாடும் 'ஒரு தாலி வரம்' என்ற பாடலை சித்ராவைப் பாட வைத்து இசை அமைப்பாளர் தேவா அவர்கள் சரித்திரம் படைத்தார். சித்ராவின் இசைப்பயணத்தில் இசையமைப்பாளர் மரகதமணியும் ஒரு மைல் கல்லாக நிற்கிறார். 'அழகன் ' படத்தில் தாம் 'தத்தித்தோம் ' என்ற பாடல் தமக்கு சவாலாக இருந்ததாக சித்ரா உரைக்கிறார். அவர் இயக்கத்தில் 'நாடோடி மன்னர்களே' , 'நீ ஆண்டவனா?' , ' கம்பங்காடே' (வானமே எல்லை) போன்ற பாடல்கள் அற்புதமானவை. 'உயிரே உயிரே' என்ற பாடலும், 'தேவராகம்' என்ற இரு மொழிப்படத்துப் பாடல்களும் அவருக்கென்றே இசையமைக்கப்பட்டவை.

பாலபாரதி (உன்னைத் தொட்ட தென்றல்), ஆதித்யன் (ஒயிலா பாடும் பாட்டிலே, வெள்ளி கொலுசு ஜதி போடுதே), மஹேஷ் (பூங்குயில் பாடினால்), சிற்பி (கன்னத்துல வை, I love you love you , தென்றல் தென்றல் தென்றல் வந்து) , ரஞ்சித் பாரொட் (மின்னல் ஒரு கோடி), ஆகோஷ் (தொலைவினிலே, முந்தானை சேலை), வித்யாசாகர் (பாடு பாடு பாரத பண்பாடு , அடி ஆத்தி , அன்பே அன்பே நீ என் பிள்ளை, நீ காற்று நான் மரம்), பரத்வாஜ் (ஒரு பூ வரையும் கவிதை , வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே , உன்னோடு வாழாத , ஒவ்வொரு பூக்களுமே), ரமேஷ் வினாயகம் (காதலை வளர்த்தாய்), எஸ்.ஏ.ராஜகுமார் (தொடு தொடு எனவே, இன்னிசை பாடி வரும்) போன்ற பல வேறு இசையமைப்பாளர்களின் இசையில் சித்ரா பாடிய பாடல்களின் தொகுப்பைô பார்க்கிறோம்.

இருபது ஆண்டுகளுக்கு மேல் மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி பி.லீலாவிற்குப் பிறகு கேரளாவிலிருந்து வந்து தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் நான்கிலும் ஒப்பாரும், மிக்காருமில்லாமல் செங்கோலோச்சி பல இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் இளையராஜா,ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், எஸ்.பி.பி, மனோ , ஜெயச்சந்திரன் என்று பலருடனும் இணைந்து பாடி வாலி, வைரமுத்து, பழனி பாரதி, பா.விஜய் போன்றவர்களின் வரிகளை தம் மந்திரக்குரலால் உயிர்ப்பித்த திருமதி .சித்ராவைப் பற்றி எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதலாம்.

தெலுங்கில் சித்ராவை ' பிரளயம்' திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய திரு.கே.வி.மஹாதேவன் 'ஸ்வாதி கிரணம்' என்ற திரைப்படத்தில் ' பிரணதி பிரணதி' என்ற பாடலை திரு.எஸ்.பி.பியுடனும், திருமதி.வாணி ஜெயராமுடனும் பாடும் அரிய வாய்ப்பைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து எஸ்.பி.பி,, இளையராஜா, கீரவாணி(மரகதமணி) போன்றவர்கள் அவரை தெலுங்கில் பல அற்புதமான பாடல்களைப் பாட வைத்தார்கள். முதலில் மொழி அறியாது அவர் சற்று சிரமப்பட்டாலும் எஸ்.பி.பி அவர்கள் மொழியை பொருளோடு புரியவைத்து உச்சரிக்கும் முறையைî சுட்டிக் காட்டியபொழுது கற்பூர புத்தி கொண்டவரான சித்ரா அவர்கள் வெகு விரைவில் கற்று திருமதி.பாலசரஸ்வதியும், பிறரும் பாரட்டும் வண்ணம் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் போன்றே அம்மொழிப் பாடல்களை மிகச் சிறப்பாகô பாடி பிற இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என உறுதியாகக் கூறலாம்.

பாலிவுட்டையும் திருமதி.சித்ராவின் குரல் வசீகரிக்கத் தவறவில்லை. இசையமைப்பாளர் ஆனந்த் மிலிந்த் 'ப்ரேம' என்ற தெலுங்கு படத்தை 'LOVE ' என்ற பெயரில் தயாரித்த பொழுது இளையராஜாவின் பாடல்களைப் பின்பற்றி இசை அமைத்து சித்ராவையும், எஸ்.பி.பியுடன் இணைந்து பாட வைத்த பாடல்கள் பல வடநாட்டில் விரும்பிக் கேட்கப்பட்டன. ஏ.ஆர்.ரஹ்மான் அநேக ஹிந்தி மொழிப்படங்களில் அவரைப் பாட வைத்தார். ராஜேஷ் ரோஷன், நாதீம் ஷ்ரவண், அனு மாலிக், நிகில் வினய், இஸ்மயில் தர்பார் போன்ற இசையமைப்பாளர்கள் அந்த காலகட்டத்தின் மிகச் சிறந்த பாடகி என்று திருமதி..சித்ராவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். லதா மங்கேஷ்கரின் எழுபத்தைந்தாம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது அந்தேரியில் நடந்த பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் லதாஜி கேட்டுக் கொண்டதற்கேற்ப சித்ரா அவர்கள் 'rasika balma' பாடலைப் பாடி விழாவைத் துவக்கி வைத்தார்.

சித்ரா அகில் இந்திய வானொலியிலும், தொலைகாட்சியிலும் Grade 'A' artiste ஆக பல வருடங்கள் இருந்ததோடு வங்காள, ஒரிய, பஞ்சாபி, வடுக மொழியிலும் அநேக பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடி வெளிவந்த திரையசை அல்லாத ஆல்பங்களும் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவர் சலீம் சுலைமானுடன் இணைந்து 'ராக ராகா ' என்ற Indipop தொகுப்பும், சாரங்கி வித்வான் உஸ்தான் சுல்தானுடன் இணைந்து வெளியிட்ட 'Piya Basanti' என்ற தொகுப்பும் விற்பனையில் சாதனை படைத்ததுடன் எம்.டி.வி விருதையும் பெற்றுத் தந்தன. 'Sunset Point' எனற தொகுப்பில் குல்சார் கதை சொல்லி வருகையில் இடையிடையில் பூபேந்திர சிங்கும், சித்ராவும் பாடுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அவர் தன் தாய் மொழியான மலையாளத்தில் பல பக்திப்பாடல் தொகுப்புகளில் பாடியுள்ளார். அவை கேரளக் கோவில்களில் திருவிழாக் காலங்களில் ஒலி பரப்பப் படுகின்றன. 'சலீல் சௌத்ரி' யின் இசையமைப்பில் உன்னி மேனனும் , சித்ராவும் 'Swarnarekha' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் 'அன்னை மூகாம்பிகையே ' என்ற தொகுப்பும், ஸ்வாதித் திருநாளின் பதங்களின் தொகுப்பான 'Enchanting Melodies' ம், ' ' கிருஷ்ணபிரியா'வும் அவருடைய மற்ற தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. இன்னிசையரசி எம்.எஸ் அவர்களின் நினைவிற்கு ஒரு அஞ்சலியாக 'My Tribute' என்னும் தொகுப்பில் எம்.எஸ் பாடி அமரத்துவம் பெற்ற ' குறை ஒன்றும் இல்லை' , ' பாவயாமி ரகுராமம்' , ' காற்றினிலே வரும் கீதம்' போன்ற பாடல்களைப் பாடியதோடு ' சுனாமி ' வெள்ள நிவாரண நிதிக்காக உஷா உதுப்' பின் 'We Believe in Now' என்ற தொகுப்பிலும் பாடியுள்ளார்.

'ஸ்ருதி' என்று பொருத்தமான பெயரில் சாலிகிராமத்தில் தனக்கென அழகுற கட்டிக் கொண்ட இல்லத்தில் 'விஜய ஷங்கர்' என்ற பொறி இயல் வல்லுனரான தன் கணவருடன் வாழ்ந்து வரும் சித்ராவின் சகோதரரும்., சகோதரியும் பெற்றோரின் மறைவிற்குப் பிறகு வெளி நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வாழ்கிறார்கள்.

திருமதி.சித்ரா வாங்கிய விருதுகள் கணக்கற்றவை. தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்ற நான்கு மாநில விருதுகளையும் பெற்ற ஒரே பின்னணிப்பாடகி அவரே. 1985ஆம் ஆண்டில் துவங்கி பதினைந்து முறை (ஜானகி அவர்கள் 12 முறை) அவர் கேரள மாநில விருதைப் பெற்றுள்ளார். அவர் ஆறு முறை ஆந்திர மாநில நந்தி விருதுகளையும், இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும் , நான்கு முறை தமிழ் நாடு மாநில விருதுகளையும் பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது. அவருக்கு ஆறு முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது. விராசத் ஹிந்தி படத்தில் paayalEn chunmun chunmun' பாடலின் மூலம் சித்ரா தென்னிந்தியப் பின்னணியில் இருந்து ஹிந்தி மொழியில் பாடி தேசீய விருது பெற்ற முதல் பாடகி என்ற சிறப்பைப் பெற்றார்

தேசிய விருது பெற்ற இவரது 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும், ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தெரிவிக்கிறார். 12000 பாடல்களுக்கு மேல் பாடிய சித்ரா அவர் S.P.சரண், விஜய் யேசுதாஸ் முதலிய அடுத்த தலை முறை பாடகர்களுடனும் பாடுகிறார்.

வெற்றித் திருமகள் வரிந்து வந்து புகழாரங்கள் சூட்டியபொழுதும் சித்ரா அவர்கள் தன்னுடன் பிறந்த விட்டகலாத மாறாத புன்முறுவலுடன் எளிமையாக , இனிமையாக எல்லாவற்றையும் சமசித்தத்துடன் ஏற்று காட்சிக்கு எளியவராக நிற்பது ஒரு அரும் பண்பாடல்லவா? அவர் தன்னை இச்சிகரத்தை அடைய உதவி செய்த ஒவ்வொருவருக்கும் தம் உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறார். திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா என்னும் மழலைக்கு தாயாகிய சித்ரா, மகளின் வருகைக்குப் பிறகு தன் வாழ்வு முழுமை பெற்றதாக உணருகிறார்

அவர் சாதனைகளின் சிகரமாக 2005ஆம் ஆண்டில் மார்ச் 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் திரு.அப்துல் கலாம் அவர்களிடமிருந்து 'பத்மஸ்ரீ' விருது பெற்றதைச் சொல்லலாம். புகைப்படக்காரர்களும், பத்திரிகைக்காரர்களும் அவருடைய ஒரு நிமிடப் பேட்டிக்காக வரிசையில் காத்து நின்ற பொழுது தன் சகோதரியின் குழந்தைகளுக்காக நடிகர் ஷாரூக்கானின் கையெழுத்தைப் பெறும் முயற்சியில் இருந்தார்.

"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓரளவு சங்கீதம் மட்டுமே. ஆனால் அந்த இசையே எனக்கு எல்லாம்" என்று கூறும் சித்ரா இன்னும் பல காலம் ் இசைத்துறையில் பல சாதனைகள் புரிய இறைவனை வேண்டுவோம்.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

சூர்யா பிற‌ந்த‌ நாள் ஜூலை 23,


சூர்யா (பிறப்பு - ஜூலை 23, 1975), தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார். மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று மணந்து கொண்டார். இவர்களிற்கு ஓர் பெண்குழந்தை 10 ஏப்ரல் 2007 இல் பிறந்தது.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள் இயக்குனர் பாத்திரத்தின் பெயர்
2011 ஏழாம் அறிவு சுருதி ஹாசன் ஏ. ஆர். முருகதாஸ் போதிதர்மர், அரவிந்த்
2010 ரத்த சரித்திரம் ப்ரியா மணி ராம் கோபால் வர்மா சூரி
2010 சிங்கம் அனுசுகா செட்டி ஹரி துரைசிங்கம்
2009 ஆதவன் நயன்தாரா K.S ரவிக்குமார் மாதவன்/ஆதவன்
அயன் தமன்னா K.V ஆனந்த் தேவா
2008 வாரணம் ஆயிரம் சமிரா, சிம்ரன், திவ்யா கௌதம் மேனன் சூர்யா, கிருஷ்ணன்
2007 வேல் அசின் ஹரி வெற்றிவேல், வாசு
2006 சில்லுனு ஒரு காதல் ஜோதிகா, பூமிகா சாவ்லா என். கிருஷ்ணா கௌதம்
ஜூன் R ஜோதிகா ரேவதி எஸ். வர்மா ராஜா
2005 ஆறு த்ரிஷா ஹரி ஆறு
கஜினி அசின் ஏ. ஆர். முருகதாஸ் சஞ்சய் ராமசாமி
மாயாவி ஜோதிகா சிங்கம்புலி பாலையா
2004 ஆய்த எழுத்து ஈஷா தியோல் மணிரத்னம் மைக்கேல்
பேரழகன் ஜோதிகா சசி சங்கர் சின்னா, கார்த்திக்
2003 பிதாமகன் லைலா பாலா சக்தி
காக்க காக்க ஜோதிகா கௌதம் மேனன் அன்புச்செல்வன்
2002 மௌனம் பேசியதே த்ரிஷா, லைலா அமீர் கௌதம்
ஸ்ரீ ஸ்ருதி நரசிம்மன் ஸ்ரீ
உன்னை நினைத்து ஸ்னேகா, லைலா விக்ரமன் சூர்யா
2001 நந்தா லைலா பாலா நந்தா
பிரெண்ட்ஸ் விஜயலட்சுமி சித்திக் சந்த்ரு
2000 உயிரிலே கலந்தது ஜோதிகா K.R ஜெயா சூர்யா
1999 பூவெல்லாம் கேட்டுப்பார் ஜோதிகா வசந்த் கிருஷ்ணா
பெரியண்ணா மானஸா எஸ். ஏ. சந்திரசேகர் சூர்யா
சந்திப்போமா ப்ரீதா விஜயகுமார் ரமேஷ்குமார் சந்துரு
1998 காதலே நிம்மதி கவிதா இந்திரன் சந்த்ரு
1997 நேருக்கு நேர் சிம்ரன் வசந்த் சூர்யா

ஸ்ரீவித்யா பிற‌ந்த‌ நாள் ஜூலை 24



ஸ்ரீவித்யா பிற‌ந்த‌ நாள் ஜூலை 24
பிறப்பு 1953 ஜூலை 24
சென்னை, தமிழ்நாடு,இந்தியா
இறப்பு 2006 அக்டோபர் 19
திருவனந்தபுரம், கேரளம்
 ஒரு புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரி அவர்களின் மகள். இவர் 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை நடித்து வந்தார். 2003ஆம் ஆண்டு மார்புப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட அவர் 2006, அக்டோபர் 19ஆம் தேதி இறந்தார்.
நடித்துள்ள திரைப்படங்கள்
இவர் நடித்துள்ள சில திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது முழுமையான பட்டியல் அல்ல என்பதை கவனத்தில் கொள்க.
தமிழ் சில திரைப்படங்கள் 
அபூர்வ ராகங்கள்
கண்ணெதிரே தோன்றினாள்
காதலுக்கு மரியாதை
நம்பிக்கை நட்சத்திரம்
ஆசை 60 நாள்
ஆறு புஷ்பங்கள்
துர்க்கா தேவி (திரைப்படம்)
ரௌடி ராக்கம்மா
இளையராணி ராஜலட்சுமி
அன்புள்ள மலரே
எழுதாத சட்டங்கள்
இவர்கள் வித்தியாசமானவர்கள்
நன்றிக்கரங்கள்
சித்திரச்செவ்வானம்
இமயம் (திரைப்படம்)
கடமை நெஞ்சம்
சிசுபாலன்
டில்லி டு மெட்ராஸ்
உறவுகள் என்றும் வாழ்க
தங்க ரங்கன்
திருக்கல்யாணம்
ராதைக்கேற்ற கண்ணன்
தளபதி

ஞாயிறு, 15 ஜூலை, 2012

சௌந்தர்யா பிற‌ந்த‌ நாள் ஜுலை 17.


சௌந்தர்யா (ஜூலை 17, 1971 - ஏப்ரல் 17, 2004) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். பொண்ணுமணி திரைப்படத்தின் மூலம் சவுந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் சவுந்தர்யா நடித்துள்ளார். ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உலங்கு வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் கொல்லப்பட்டார்.. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் சில..
தமிழ்
அருணாச்சலம்
படையப்பா
காதலா காதலா
பொன்னுமணி
தவசி
கன்னடம்
ஆப்தமித்ரா
தெலுங்கு
ஹலோ பிரதர்
அண்ணையா
ராஜா

இயக்குநர் இமயம் பாரதிராஜா பிற‌ந்த‌ நாள் ஜுலை 17.


தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயமாகத் திகழும் பாரதிராஜா தமிழ்நாட்டில், மதுரை மாவட்டம் அல்லி நகரத்தில் 1941- ம் வருடம் ஜூலைத் திங்கள் 17- ஆம் தேதி பிறந்தவர். இவருடைய தந்தை பெரிய மாயத் தேவர், தாயார் மீனாட்சியம்மாள் ( எ ) கருத்தம்மாள். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி, செல்லப் பெயர் பால்பாண்டி. இளம்வயதில் மான் வேட்டையிலும், இலக்கியங்களிலும் ஈடுபாடுக் கொண்டிருந்த பாரதிராஜா, பின் நாட்களில் நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் ஆர்வம் காட்டினார். "ஊர் சிரிக்கிறது", "சும்மா ஒரு கதை" எனும் அவர் எழுதிய நாடகங்களை தேனி, பழனி, செட்டிப்பட்டி கிராமங்களில் திருவிழா சமயங்களில் அரங்கேற்றியுள்ளார். ஆரம்ப நாட்களில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்த பாரதிராஜா, பள்ளிநாட்களிலிருந்தே தான் நேசித்து வந்த சினிமா ஆசையில் - தன் அம்மாவின் ஆசீர்வாதத்தையும், முந்நூற்று ஐம்பது ரூபாயையும் எடுத்துக் கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினார். சென்னையின் ஆரம்ப நாட்களில் மேடைநாடகம் ( "அதிகாரம்" ), வானொலி நிகழ்ச்சிகள், பெட்ரோல் பங்க் வேலை என இருந்தபடியே திரையுலகில் நுழைய முயற்சித்தவர் முதலில் இயக்குனர் பி. புல்லையாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து அவரின் பிரதான சீடரானார். அதன்பின் 1977- ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் திருப்புமுனை 'டிரெண்டு செட்டர்' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட "16 வயதினிலே" படத்தின் மூலம் இயக்குனராகி, இன்று இயக்குனர் இமயமாய் திகழ்கிறார். பாரதிராஜாவின் மனைவி பெயர் சந்திரா லீலாவதி, மகன் மனோஜ், மகள் ஜனனி, மருமகள் நந்தனா மற்றும் பேத்தி.
இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய படங்கள்.
திரைப்படத்தின் பெயர் வெளியான ஆண்டு ஓடியநாட்கள்
16 வயதினிலே 1977 30 வாரம்
கிழக்கே போகும் ரயில் 1978 52 வாரம்
சிகப்பு ரோஜாக்கள் 1978 25 வாரம்
புதிய வார்ப்புகள் 1979 25 வாரம்
நிறம் மாறாத பூக்கள் 1979 100 நாள்(இலங்கையில் 52 வாரம்)
ஸோல்வா ஸாவன்(ஹிந்தி) 1979 கல்கத்தாவில் 25 வாரம்
யார் குலாபி(தெலுங்கு) 1979
கல்லுக்குள் ஈரம்(கதாநாயகன்) 1980
நிழல்கள் 1980
நிறம் மாறாத பூக்கள்(மலையாளம்) 1980
ரெட் ரோஸஸ்(ஹிந்தி) 1980
அலைகள் ஓய்வதில்லை 1981 25 வாரம்
சீதாகோகா சில்லகே(தெலுங்கு) 1981 100 நாள்
டிக் டிக் டிக் 1981
காதல் ஓவியம் 1982
ராகமாலிகா 1982 100 நாள்
வாலிபமே வா வா 1982 131 நாள்
மண்வாசனை 1983 286 நாள்
லவ்வர்ஸ் (ஹிந்தி) 1983
புதுமைப்பெண் 1984 100 நாள்
மெல்லப் பேசுங்கள்(தயாரிப்பு) 1984 100 நாள்
சவரே வாலி கரடி(ஹிந்தி) 1984
தாவணிக் கனவுகள்(நடிப்பு மட்டும்) 1984 100 நாள்
ஒரு கைதியின் டைரி 1985 100 நாள்
முதல் மரியாதை 1985 130 நாள்
யுவதரம் பிலிசிந்தி(தெலுங்கு) 1985
ஈதரம் இல்லாளு(தெலுங்கு) 1985
கைதிபேட்டா (தெலுங்கு) 1985
கடலோரக் கவிதைகள் 1986 100 நாள்
நீதானா அந்தக் குயில்(திரைக்கதை மட்டும்) 1986 100 நாள்
வேதம் புதிது 1987
ஜமதக் கனி(தெலுங்கு) 1987 100 நாள்
கொடி பறக்குது 1988
நாற்காலிக் கனவுகள்(டப்பிங்) 1988
என் உயிர்த் தோழன் 1990
புது நெல்லு புது நாத்து 1991
நாடோடித் தென்றல் 1992
கேப்டன் மகள் 1993
கிழக்குச் சீமையிலே 1993
கருத்தம்மா 1994
பசும்பொன் 1995
தமிழ் செல்வன் 1996
அந்தி மந்தாரை 1996
தாஜ்மகால் 1999
கடல் பூக்கள் 2000
ஈர நிலம் 2003
கண்களால் கைது செய் 2004
கோதா ஜீவித்தாலு(தெலுங்கு)
ஆராதனா(தெலுங்கு)
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விருதுகளும் பாராட்டுகளும்.
திரைப்படத்தின் பெயர் வெளியான ஆண்டு விருதுகள்
16 வயதினிலே 1977 மத்திய அரசின் சிறந்த பாடலுக்கான தேசிய விருது. பாடல்-செந்தூரப்பூவே
கிழக்கே போகும் ரயில் 1978 சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது
புதிய வார்ப்புகள் 1979 தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது
கல்லுக்குள் ஈரம்(கதாநாயகன்) 1980 எஸ்.ஐ.எஃப்டி-யின் சிறந்த தொழில் நுட்பக் கலைஞருக்கான விருது
நிழல்கள் 1980 இந்தியன் பனோரமாவில் பிரவேசம்
அலைகள் ஓய்வதில்லை 1981 தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது
சீதாகோகா சில்லகே(தெலுங்கு) 1981 1. சிறந்த இயக்குநருக்கான ஸ்வர்ண கமலம் மற்றும் சித்தாரா விருது
2. ஆந்திர மாநில அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது
3. தெலுங்கில் சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான விருது
புதுமைப்பெண் 1984 சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது
முதல் மரியாதை 1985 சிறந்த இயக்கநர், தமிழில் சிறந்த மாநில மொழித் திரைப்படம் மற்றும் சிறந்த பாடலை இயற்றியது ஆகியவற்றுக்கான தேசிய விருது
கடலோரக் கவிதைகள் 1986 இந்தியன் பனோரமாவில் பிரவேசம்
வேதம் புதிது 1987 சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட சிறந்த படத்திற்கான தேசிய விருது
கருத்தம்மா 1994 குடும்பம் மற்றும் சமூக பொதுநலனைக் கொண்ட சிறந்த படத்திற்கான தேசிய விருது
அந்தி மந்தாரை 1996 சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது
கடல் பூக்கள் 2000 1. சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது
2. சாந்தாராம் விருது: 7 விருதுகள்(சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட)
தமிழக அரசின் கலைமாமணி விருது
இவற்றுடன் சாந்தோம். சதங்கை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், ரோட்டரி கிளப், ஜெய்சி போன்ற சமூக அமைப்புகள், இலக்கிய அமைப்புகள்,
சினிமா சங்கங்கள் வழங்கிய பல்வேறு பரிசுகளும் விருதுகளும்
தமிழ் சினிமா மற்றும் கலாசாரம் ஆகியவற்றுக்கு இவர் தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டி, முரசொலி அறக்கட்டளை இவருக்கு 'அண்ணா விருது'ம் ரூ.10,000/- ரொக்கமும் வழங்கியுள்ளது.
இயக்குநர் பாரதிராஜா அறிமுகப் படுத்திய நடிகர், நடிகையர்கள்.
சத்யஜித் (16 வயதினிலே) சுதாகர்
பட்டாளத்து விஜயன் நிழல்கள் ரவி
டைரக்டர் (ராபர்ட்) ராஜசேகர் கே. பாக்யராஜ்
டைரக்டர் ரா. சங்கரன் கவுண்டமணி
ஜனகராஜ் சந்திரசேகர்
கல்லாப்பெட்டி சிங்காரம் கே.கே. சௌந்தர்
ஷியாம் சுந்தர கார்த்திக்
கண்ணன் 'மண்வாசனை' பாண்டியன்
தியாகராஜன் லல்லு அலெக்ஸ்
தீபன் ராஜா (வெங்கடேஷ்)
டாக்டர் ராஜசேகர் மலேசியா வாசுதேவன்
தாசரதி ராஜா
வசீகரன் மனோஜ்
ராதிகா ரத்தி அக்னிஹோத்ரி
வடிவுக்கரசி உஷா
ராதா ரேவதி
அருணா விஜயசாந்தி
ரோகிணி சுபத்ரா
அனிதாபதன் ஸ்ரீலதா
லட்சுமிகலா ரஞ்சனி
ரேகா ஜென்ஸி
பானுப்ரியா கமலா காமேஷ்
அனுராதா வாசுதேவ் ரஞ்சிதா
உமா சிந்து
பிரியாமணி பாலகுரு
மணிவண்ணன கே. ரெங்கராஜ்
மனோபாலா ஜே. ராமு
சித்ரா லட்சுமணன் மனோகரன்
க. சந்திரசேகர் திலகர் மருது
நிவாஸ் கணேச பாண்டியன்
பி. கண்ணன் லதா ரஜினி காந்த்.

பாரதிராஜா பற்றி சுவையான சிறு குறிப்புகள்.
வேர்களை வெளிச்சமிட்டுக் காட்டிய கலைஞன். தமிழ் சினிமாவைப் புதிய திசைக்கு செலுத்திய இயக்குநர் பாரதிராஜாவின் பெர்சனல் பக்கங்கள்....
·         பாரதிராஜா அல்லிநகரத்தில் பிறந்தது 1941-ல் பெரிய சம்சாரிக் குடும்பம். அக்கா இரண்டு பேர், அண்ணன்கள் இருவர், ஒரு தம்பி, ஒரு தங்கை எனப் பெரிய குடும்பம். பெரிய மாயத்தேவர் – கருத்தம்மாவின் ஜந்தாவது வாரிசு!
·         சினிமாவுக்கு வருவதற்கு முன் `ஊர் சிரிக்கிறது’ `அதிகாரம்’ `சும்மா ஒரு கதை’ என நாடகங்கள் எழுதி திருவிழா காலங்களில் இயக்கி நடித்திருக்கிறார். பிறகு தான், புட்டண்ணா கனகலிடம் சினிமா கற்றார்!
·         சென்னையில் ஆரம்பத்தில் சேர்ந்து தங்கியிருந்த நண்பர்கள் இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ், கச்சேரித் தெருவில் சிறு வீட்டில் இருந்து இவர்களின் பயணம் தொடங்கியது. இப்பவும் கூடிப் பேசினால் அவர்களின் அனுபவங்கள் மேலே விரிந்து பரவும்!
·         இது வரை தமிழில் 31 படங்களும், தெலுங்கில் நான்கு படங்களும், இந்தியில் நான்கு படங்களும் இயக்கியிருக்கிறார் பாரதிராஜா!
·         பாரதிராஜா அறிமுகப்படுத்திய புதுமுகங்கள், பாக்யராஜ், ராதிகா, விஜயன், நிழல்கள் ரவி, கார்த்திக் ராதா, ரேவதி,பாபு, நெப்போலியன், ரஞ்சிதா என நீங்களும். அவரது உதவியாளர்கள் சினிமாவில் ஆதிக்கம் செய்த வரலாறும் அதிகம்!
·         சுடச்சுட சமைத்த நாட்டுக் கோழிக் குழம்புக்கு பாரதிராஜா அடிமை. நண்பர்களை ஞாயிற்றுக்கிழமை விருந்துக்கு அழைத்து உண்டு, பேசிச் சிரித்து மகிழ்வார்!
·         பாரதிராஜாவின் படைப்புலக வெற்றிக்கு தேசிய விருது, தமிழக அரசு விருது, ஆந்திர அரசு விருது, பத்மஸ்ரீ, கலைமாமணி, டாக்டர் பட்டம் என ஏராளமாகப் பெற்றிருக்கிறார்!
·         பாரதிராஜாவுக்கு அப்போது பிடித்த நடிகர் சிவாஜி, இப்போது ஆல் டைம் ஃபேவரைட் கமல் தான். இன்றைக்கும் வெளியிட்டால் பரபரப்பாக ஓடுகிற படமாக `16 வயதினிலே’ தான் இருக்கிறது!
·         மனைவி சந்திரலீலா, மாமன் மகள்தான், மனோஜ் கே.பாரதி, ஜனனி ஜ்ஸ்வர்யா என இரண்டு குழந்தைகள். ஜனனி திருமணமாகி சிங்கப்பூர் போய் விட மனோஜ் டைரக்டராகும் தீவிரத்தில் இருக்கிறார்!
·         பாரதிராஜாவின் படங்களில் அவருக்கே பிடித்தது `16 வயதினிலே’, `முதல் மரியாதை’, `வேதம் புதிது’, ஆத்ம திருப்தியாகப் பிடித்தது `காதல் ஓவியம்’, இனி எடுக்க இருக்கிற `அப்பனும் ஆத்தாளும்’ தான் உலக சினிமாவில் வைக்க வேண்டிய படம்  என நம்புகிறார் இயக்குநர்!
·         பாரதிராஜாவின் படங்களில் வெள்ளை உடை தரித்த பெண், சூர்யாகாந்திப் பூ, மலை அருவி, செம்மண், மாட்டு வண்டி, ஒற்றைப் பள்ளிக்கூடம், அதில் ஒற்றை வாத்தியார் கண்டிப்பாக இடம் பெறுவார்கள்!
·         புலிகள் தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்த இயக்குநர் பாரதிராஜா, ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை பாரதிராஜாவால் எடுக்க முடியும் என்று நம்பினார் பிரபாகரன். அதை இயக்குநரிடம் கேட்கவும் செய்தார். பாரதிராஜாவும் சம்மதம் சொன்னது வரலாறு!
·         எப்பவும் விரும்புகிற டிரெஸ் டி-ஷாட், ஜீன்ஸ் பேண்ட் சமீப காலமாக வெள்ளை ஜிப்பா, பேண்டைத் தேர்ந்தெடுக்கிறார்!
·         ரஷ்யா , அமெரிக்கா போன்ற நாடுகளின் அழைப்பின் பேரில் அங்கு சினிமாபற்றி வகுப்பு எடுத்து உரையாடி வந்திருக்கிறார் அல்லிநகரம் பாரதிராஜா!
·         `குற்றப் பரம்பரை’, `அப்பனும் ஆத்தாளும்’ என இரு படங்களின் திரைக்கதையை வடிவமைக்கிற வேலையில் தீவிரமாக இருக்கிறார். அநேகமாக அவரே பெரிய கேரக்டரில் நடித்துவிடுவார் எனப் பேசிக் கொள்கிறார்கள்!
·         அதிகம் வெளியில் தெரியாத விஷயம், சிறப்பாக ஓவியம் வரைவார். அதை நெருக்கமான நண்பர்களிடம் காட்டி மகிழ்வார். காட்சி அமைப்புகளை வரைந்துவைத்துக்கொள்கிற அளவுக்கு அவரது ஓவியம் நுட்பமானது!
·         1991 –ல் சிக்ரெட் புகைப்பதை நிறுத்தினார் பாரதிராஜா. நுரையீரல் பாதிக்கப்பட்டு. சிறு ஆபரேஷன் வரைக்கும் போனதுதான் அதற்குக் காரணம். இப்போது புகை இல்லாத உலகம் அவருடையது!
·         மத்திய அரசு, இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டி பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டீலும் அதைப் பெற்றுக் கொண்டு,ஒப்புதல்பெற்று கடிதம் எழுதினார்!
·         1986 –ல் தாஷ்கண்ட் படவிழாவில் `முதல் மரியாதை’ திரைப்படத்தை திரையிட்டார்கள். சப்டைட்டில் போட்டும் அந்தப் படத்தைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள் மக்கள். விழாவுக்குப் போயிருந்த ராஜ்கபூர், ரஷ்ய மொழியில் முழுக்க முழுக்க ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தார். பாராட்டினர் மக்கள். கண்கள் நனைந்தது பாரதிராஜாவுக்கு!
·         கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெ., என மூன்று முதல்வர்களிடமும் நெருங்கிய பழகியவர். எம்.ஜி.ஆர் அன்புடன் அழைப்பது `வாங்க டைரக்டரே’, கலைஞர் `என்னப்பா பாரதி’ ஜெ.... `மிஸ்டர் பாரதிராஜா’, அரசியலுக்கு அப்பாற்பட்டு நெருக்கமாக இருந்தார் பாரதிராஜா!
·         `16 வயதினிலே’ வில் ஆரம்பித்து `புதிய வார்ப்புக்கள்’ வரை பார்த்துவிட்டு எல்.வி.பிரசாத் தன்னை உதவி இயக்குநராக சேர்த்துகொள்ள முடியுமா என்று கேட்டதைத் தனது உச்சபட்ச கெளரவமாக எடுத்துக்கொள்வதாகச் சொல்வார் பாரதிராஜா!
·         பாரதிராஜாவைப் பாதித்த இயக்குநர்கள் ஸ்ரீதர், பாலசந்தர், பிடித்த இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், அகத்தியன், சேரன், பாலா, அமீர், பாலாஜி, சக்திவேல், வசந்தபாலன், வடக்கில் சாந்தாராமின் படைப்புக்கள்!
·         தன் அம்மாவின் பெயரில் எடுத்த `கருத்தம்மா’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, தன் தாயாரையே விருது வாங்கச் செய்தார் பாரதிராஜா. அந்தத் தாய் பெருமிதப்பட்டு மேடையிலேயே உணர்ச்சி வசப்பட்டது அருமையான நிகழ்வு!
·         நினைத்தால் தேனிக்குப் போய் அம்மா சமாதியில் உட்கார்ந்து தியானத்தில் இறங்கிவிடுவார் பாரதிராஜா. `அம்மா என்னை சின்ன வயதில் குளிக்கவெச்சு சாப்பாட்டு ஊட்டிவிட்டது அதையே அம்மா படுக்கையிலே கிடந்தபோது... நான் செய்து பெற்ற கடனை நிறைவேற்றினேன்’ என நெகிழ்வார் பாரதிராஜா!

வியாழன், 12 ஜூலை, 2012

ச‌ர‌த்குமார் பிற‌ந்த‌ நாள் சூலை 14,


சரத்குமார்,(பிறப்பு சூலை 14, 1954) தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். தற்போதைய தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர்.தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார்.இவர் 25/07/2001-31/05/2006 வரைநாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்வருகிறார்.
கோடீஸ்வரன் என்ற தொலைக்காட்சிப் பொது அறிவுப் போட்டியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
தனிப்பட்ட வாழ்க்கை
எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூரைச் சேர்ந்தவர்.
கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் படித்தார். இக்காலத்தில் சென்னை ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மணவாழ்க்கை
இவரது முதல் மனைவி சாயா சரத்குமார்.அவர் மூலமாக சரத்திற்கு வரலட்சுமி, பூஜா என இரு மகள்கள்.2001ஆம் ஆண்டில் திரைப்பட நடிகை ராதிகாவை மணம் புரிந்தார்.இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004இல் பிறந்துள்ளான்.தவிர ராதிகாவின் முதல் மகள் ரேயானிற்கும் வளர்ப்பு தந்தையாக உள்ளார்.
திரை வாழ்க்கை
சரத்குமார் ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடமொழிகளில் நடித்துள்ளார்.
இவர் நடித்த சில திரைப்படங்கள்:
புலன் விசாரணை
சேரன் பாண்டியன்
நட்புக்காக
சூரிய வம்சம்
நாட்டாமை
நேதாஜி
ரகசியப் போலீஸ்
கம்பீரம்
ஏய்
சாணக்யா
அரசியல் வாழ்க்கை
1996ஆம் ஆண்டு தி.மு.கவில் சேர்ந்தார்.அக்கட்சியின் வேட்பாளராக 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2002ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் பிணக்கு கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார். அதிமுகவில் மனைவி ராதிகாவுடன் இணைந்து அக்கட்சிக்காக தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவரது மனைவி ராதிகா அதிமுகவிலிருந்து கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006ல் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடந்து சரத்தும் நவம்பர் 2006இல் திரைப்பட வேலைகளை காரணமாக்கி வெளியேறினார்.
31 ஆகத்து 2007 அன்று, சரத்குமார் புதிய கட்சியை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துவக்கினார். காமராசர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது இக்கட்சியின் நோக்கமாகும்.

புதன், 11 ஜூலை, 2012

கவிஞர் வைரமுத்து பிற‌ந்த‌ நாள் ஜூலை 13,


வைரமுத்து (ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு இரு மகன்கள்,பெயர்கள் மதன் கார்க்கி, கபிலன்.
படைப்புகள்
கவிதைத் தொகுப்பு
வைகறை மேகங்கள்
சிகரங்களை நோக்கி
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
தமிழுக்கு நிறமுண்டு
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
இதனால் சகலமானவர்களுக்கும்
இதுவரை நான்
கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
பெய்யென பெய்யும் ம‌ழை
நேற்று போட்ட கோலம்
ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
ஒரு மெளனத்தின் சப்தங்கள்
நாவல்
தண்ணீர் தேசம்
கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
விருதுகள்
சாகித்ய அகாதமி விருது
சிறந்த பாடலாசிரியருக்கன தேசிய விருது (ஆறு முறை). விருது பெற்ற திரைப்படங்கள் (பாடல்கள்)
முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா)
ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை)
கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...)
சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)
கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)
தென்மேற்கு பருவக்காற்று (பாடல்:கள்ளிக்காட்டில் பிறந்த தாயே)
கலைமாமணி விருது (1990)

செவ்வாய், 10 ஜூலை, 2012

இய‌க்குன‌ர் பாலா பிற‌ந்த‌ நாள் ஜூலை 11.




  பாலா (ஜூலை 11, 1966.), ஒரு குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

இயக்கிய திரைப்படங்கள்
சேது (1999)
நந்தா (2001)
பிதாமகன் (2003)
நான் கடவுள் (2009).
அவன் இவன் (2011).
புத்தகம்.
இவன் தான் பாலா (2004)