சனி, 31 மார்ச், 2018

நடிகர் ராம்கி பிறந்த நாள் மார்ச் 31, 1962 .



நடிகர் ராம்கி பிறந்த நாள்  மார்ச் 31, 1962 .

ராம்கி ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நிலவே முகம் காட்டு, பாளையத்து அம்மன் ஸ்ரீ ராஜராஜேசுவரி, படைவீட்டு அம்மன், குற்றப்பத்திரிக்கை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நிரோசா என்ற நடிகையைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல படங்களில் இணைந்தே நடித்தனர்.

பிறப்பு ராமகிருஷ்ணன்
31 மார்ச்சு 1962 (அகவை 55)
சங்கரநத்தம், சாத்தூர் ,
தமிழ்நாடு
பணி திரைப்பட நடிகர்
செயல்பட்ட
ஆண்டுகள்
1987–2002
2013–தற்போதும்
வாழ்க்கைத்
துணை
நிரோசா (தி.1995–தற்போதும்)

வியாழன், 29 மார்ச், 2018

இயக்குநர் விக்ரமன் பிறந்த நாள் மார்ச் 30 1966.


இயக்குநர் விக்ரமன் பிறந்த நாள் மார்ச் 30 1966.

விக்ரமன் ( ஆங்கிலம் : Vikraman) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இவருடைய திரைப்படங்கள் இனிமையான பாடல்களுக்காகவும் குடும்பப் பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காகவும் அறியப்படுகின்றன.  இவருடைய படங்களில் பெண்களின் மீதான சமூக அக்கறை அதிகமாகவே இருக்கும். தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

பிறப்பு மார்ச் 30 1966
பணி இயக்குனர்
செயல்பட்ட
ஆண்டுகள்
1989 – தற்சமயம் வரை

வாழ்க்கைக் குறிப்பு

இவர் சென்னையில் வசிக்கிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
திரைப்பட வரலாறு
புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
திரைப்படங்கள்
எண் ஆண்டு படம் மொழி குறிப்புகள்
1 1990 புது வசந்தம் தமிழ்
சிறந்த
இயக்குனர்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
சிறந்த திரைப்படத்திற்கான
பிலிம்பேர் – தமிழ்
2 1991 பெரும்புள்ளி தமிழ்
3
1993 கோகுலம் தமிழ்
சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. ( மூன்றாம் இடம்)
4 நான் பேச நினைப்பதெல்லாம் தமிழ்
5 1994 புதிய மன்னர்கள் தமிழ்
6 1996 பூவே உனக்காக தமிழ்
7 1997 சூரிய வம்சம் தமிழ்
சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
சிறந்த இயக்குனர்க்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
8 1998
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
தமிழ்
சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாவது இடம்)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர்க்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
9 2000 வானத்தைப் போல தமிழ்
சிறந்த மனமகிழ்ச்சிதரும் பிரபல திரைப்படத்துக்கான
தேசிய திரைப்பட விருது
சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
10 2002 உன்னை நினைத்து தமிழ்
சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
- (மூன்றாவது இடம்)
11
2003
பிரியமான தோழி தமிழ்
12 வசந்தம் தெலுங்கு
பிரியமான தோழி திரைப்படத்தின் மறு ஆக்கம்.
13 2004 செப்பவே சிறுகாலி தெலுங்கு
உன்னை நினைத்து திரைப்படத்தின் மறு ஆக்கம்.
14 2006 சென்னைக் காதல் தமிழ்
15 2009 மரியாதை தமிழ்
16 2013 நினைத்தது யாரோ தமிழ்

புதன், 28 மார்ச், 2018

நடிகை சி. கே. சரஸ்வதி நினைவு தினம் மார்ச் 29 : 1997.



நடிகை சி. கே. சரஸ்வதி நினைவு தினம் மார்ச் 29 : 1997.

சி. கே. சரஸ்வதி (இறப்பு: 1997) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் நகைச்சுவை, குணசித்திரப் பாத்திரங்களிலும், பின்னர் வில்லி கதைப்பாத்திரங்களில் நடித்தார். சரஸ்வதி 1950 தொடங்கி 1990 வரை ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

1. என் மகன் (1945)
2. நல்லவன் (1945)
3. திகம்பர சாமியார் (1950)
4. மருதநாட்டு இளவரசி (1950)
5. சுதர்ஸன் (1951)
6. மாப்பிள்ளை (1952)
7. அழகி (1953)
8. இன்ஸ்பெக்டர் (1953)
9. குமாஸ்தா (1953) [1]
10. ரோஹிணி (1953)
11. லட்சுமி (1953)
12. மாமன் மகள் (1955)
13. மேனகா (1955)
14. சதாரம் (1956)
15. சமய சஞ்சீவி (1957)
16. சௌபாக்கியவதி (1957)
17. நல்ல இடத்து சம்பந்தம் (1959) [2]
18. காவேரியின் கணவன் (1959)
19. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (1959)
20. நான் சொல்லும் ரகசியம் (1959)
21. பாகப்பிரிவினை (1959)
22. மரகதம் (1959)
23. எங்கள் செல்வி (1960)
24. பொன்னித் திருநாள் (1960)
25. படித்தால் மட்டும் போதுமா (1962)
26. நானும் ஒரு பெண்.

சி.கே.சரஸ்வதி – இவரை அக்காலத்து ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க இயலாது. வில்லியாகவே பல படங்களில் நடித்துள்ளார். அந்த அந்த பாத்திரமாகவே மாறும் வல்லமை படைத்தவர். தில்லானா மோகனாம்பாள் படத்தில் வடிவாம்பாளாக பத்மினியின் தாயாராக வருவார். பருத்த உடலமைப்பு. வசன உச்சரிப்பில் கணீரென்ற குரலில் ஏற்ற இறக்கத்துடன் பேசும் பாங்கு இவருக்குக் கை வந்த கலை. வாணி ராணி படத்தில் முதற்பகுதியில் அமைதியான வாணிஸ்ரீயின் கொடுமைக்கார சித்தியாக வந்து ஆட்டிப்படைப்பார். பிற்பகுதியில் மற்றொரு ஆர்ப்பாட்டமான வாணிஸ்ரீயிடம் செம அடிவாங்குவார். லட்சுமி கல்யாணம் படத்தில் நிர்மலாவுக்குக் கல்யாணம் ஆகாமல் தடுக்க இவர் ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது. படங்களில் வில்லியாக ஆட்டம் போட்டு பெண்களிடம் சாபங்களை வாங்கிய சி.கே.சரஸ்வதி அவர்களால் தன் குடும்பத்தினரிடம் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதித் தருவாயில் வறுமையில் வாடினார்.
எம்.என்.நம்பியாருடன் குலமா குணமா உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இவ்விருவரும் பொருத்தமான ஜோடி என பல படங்களை ரசித்து ரசிகர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இவர் நடித்த படங்களில் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
ராஜகுமாரி, மாங்கல்ய பாக்கியம்,சோப்பு சீப்பு கண்ணாடி , பொன்முடி, திகம்பர சாமியார், எங்க மாமா, தூக்கு தூக்கி, தாய், மகேஸ்வரி, வண்ணக்கிளி, பூலோக ரம்பை, கண்ணே பாப்பா, மங்கள வாத்தியம்,, உழைக்கும் கரங்கள், வாணி ராணி, சிங்காரி,லட்சுமி கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், பார்த்தால் பசிதீரும், நானும் ஒரு பெண், மன்னிப்பு, இரு கோடுகள், இதோ எந்தன் தெய்வம், கல்யாண ஊர்வலம், தாயே உனக்காக, சௌபாக்கியவதி, படித்தால் மட்டும் போதுமா, உரிமைக்குரல்
சி.கே.சரஸ்வதி 1997-இல் காலமானார்.

செவ்வாய், 27 மார்ச், 2018

நடிகை சோனியா அகர்வால் பிறந்த நாள் - மார்ச் 28 ,1982


நடிகை சோனியா அகர்வால் பிறந்த நாள் - மார்ச் 28 ,1982 

சோனியா அகர்வால் (பிறப்பு - மார்ச் 28 ,1982 , பஞ்சாப் ), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார்.


 தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை (நடிகர் தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15 , 2006 அன்று திருமணம் செய்து கொண்டார்.


 பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாறு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன.


நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

2006 - புதுப்பேட்டை
2006 - திருட்டுப்பயலே


2005 - ஒரு நாள் ஒரு கனவு
2005 - ஒரு கல்லூரியின் கதை


2004 - 7ஜி ரெயின்போ காலணி
2004 - மதுர
2003 - கோவில்
2003 - சக்செஸ் (Success)
2003 - காதல் கொண்டேன்

நடித்த சின்னத்திரை தொடர்கள்
2009 - நாணல் (கலைஞர் தொலைகாட்சியில்)
2013 - மல்லி (புதுயுகம் தொலைகாட்சியில்)


நடிகர் சித்தூர் வி. நாகையா பிறந்த தினம் மார்ச் 28 1904


நடிகர் சித்தூர் வி. நாகையா பிறந்த தினம் மார்ச்  28  1904

சித்தூர் வி. நாகையா (இயற்பெயர்:  வுப்பலதடியம் நாகையா , தெலுங்கு: వుప్పలదడియం నాగయ్య; 28 மார்ச் 1904 - 30 டிசம்பர் 1973) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் பங்காற்றியவர்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

அசோக் குமார் (1941)
மீரா (1945)
நவஜீவனம் (1949)
என் வீடு (1953)
எதிர்பாராதது (1954)
பெண்ணின் பெருமை (1956)
அமரதீபம் (1956)
நிச்சய தாம்பூலம் (1962)
காலம் வெல்லும் (1970)
கண்மலர் (1970)
ராமன் எத்தனை ராமனடி (1970)
இரு துருவம் (1971)
சம்பூர்ண ராமாயணம்
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
கலைமாமணி விருது (1962 - 1963)
பத்மசிறீ விருது , 1965 .


மறக்க முடியுமா சித்தூர் வி. நாகையாவை?
ரா. சுந்தர்ராமன்
பத்திரிகையாளர், நாடக மற்றும் திரைப்பட நடிகர், பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்டு தென்னிந்திய திரைப்படங்களில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தாலும் இறுதிக் காலத்தில் வறுமையில் வாடி தனது 69வது வயதில் காலமான சித்தூர் வி. நாகையாவின் 113வது பிறந்த தினம் இன்று (28-03-2017).
இந்தத் தலைமுறையினருக்கு சித்தூர் வி. நாகையாவைப் பற்றி தெரியுமா என்பது கேள்விக்குறியே. எல்லாப் பிரபலங்களையும் ஞாபகம் வைத்துக்கொள்வது என்பது இயலாத ஒன்று. ஆனால், சினிமாவை நேசிப்பவர்கள் இவரைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.
நாகையாவின் இளமைப் பருவத்தைத் திரும்பிப் பார்த்தோமென்றால், 1904ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 28ஆம் நாள் தெலுங்குப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர் ராமலிங்க சர்மா தாயார் பெயர் லக்ஷ்மாம்பா.
அவருடைய குடும்பம் ஆந்திராவிலுள்ள குப்பம் என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்தது, பின்பு, திருப்பதியில் குடியேறியது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய கல்வி உதவித் தொகையில் பட்டப்படிப்பு முடித்தார்.
அப்போதைய ஆந்திர அரசாங்கத்தின் அலுவலகத்தில் சிறிதுகாலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார், பின்பு, ஆந்திரப் பத்திரிகை ஒன்றில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார்.
சுதந்திரப் போராட்ட வீரராக…
தென்னிந்தியாவில் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்களான சத்தியமூர்த்தி மற்றும் எஸ். சீனிவாச அய்யங்கார் போன்றோரின் சுதந்தர வேட்கையால் ஈர்க்கப்பட்டு 1925ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு தேசபக்திப் பாடல்களை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாடினார். இதற்கிடையே பல சிறந்த தேசத் தலைவர்கள் கூடியிருந்த மாநாட்டுப் பந்தலில் அழகிய ஆடை அணிந்த சிறுமி எல்லோரிடமும் இனிமையாக ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். நாகையா பாடி முடித்ததும், அந்தச் சிறுமி நாகையா அருகே வந்து, இப்போது பாடிய பாடல்களை எந்த மொழிகளில் பாடினீர்கள் என்று கேட்டார், அந்தச் சிறுமி வேறு யாருமல்ல, மறைந்த நமது பாரத பிரதமர் இந்திரா காந்தி. அதன் பின்பு, நாகையாவிற்கு அலகாபாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அலகாபாத்தில் உள்ள ஆனந்த பவனில் 10 நாட்கள் தங்கினார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் சுதந்திர வேட்கைப் பேச்சு நாகையாவை வெகுவாகக் கவர்ந்தது. இதன் விளைவாக 1930ஆம் ஆண்டு நடைபெற்ற தண்டி யாத்திரையில் சுதந்திர போராட்ட வீரராகக் கலந்து கொண்டு தனது சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தினார்.
ரமணமகரிஷியின் பக்தராக..
மனைவி குறுகிய காலத்தில் இறந்தபோது, நாகையாவுக்கு உலகமே இருண்டதுபோல் இருந்தது. பகவத் கீதையை மீண்டும் மீண்டும் படித்தார். மனைவி இறந்த துக்கத்தை மறக்க நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் ஒரு சில இசைக் கச்சேரிகள் செய்தார். திடீரென்று ஒரு நாள் வீட்டை விட்டு புறப்பட்ட நாகையா திசை தெரியாமல் திரிந்து இறுதியில் ரமணமகரிஷியின் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். ஆசிரமத்துக்குள் நுழைந்தபோது பூலோகத்தில் உள்ள சொர்க்கத்தில் நுழைவதுபோல் இருந்தது என்றார் நாகையா. ஆசிரமத்தில் மகரிஷியைச் சுற்றி நிலவிய ஆழ்ந்த அமைதிதான் என்னை அங்குத் தங்க வைத்தது. மேலும் எனக்குத் தேவையான அமைதியும் ஒய்வும் ஆசிரமத்தில் கிடைத்தன. அங்கிருந்த ஆங்கிலேயர் பால் புருடன் நாகையாவுக்கு நண்பர் ஆனார். இருவரும் மகிழ்ச்சியாக ஆன்மீகத்தில் நாள்களைக் கழித்தனர்.
ஒருநாள் சித்தூரிலிருந்த வந்த நாகையாவின் நண்பன் அவரைப் பார்த்து விட்டு, என்னுடைய படத்துக்கு இசையமைக்க வேண்டும். உடனே என்னுடன் வா என்றான். ஆனால், நாகையாவோ, மகரிஷி உத்தரவு தந்தால்தான் நான் வருவேன் என்று மகரிஷியின் வார்த்தைக்காகக் காத்திருந்தார். மகரிஷியோ நீ செல்லலாம், உனக்கு இது தவிர பல வேலைகள் காத்திருக்கின்றன என்றார். மகரிஷி சொன்ன வார்த்தைகள் அப்போது நாகையாவுக்குப் புரியவில்லை. ஆனால், நண்பனுக்குச் செய்து கொடுத்த இசையமைப்பு நாகையாவைத் திரைப்பட உலகுக்கு அழைத்துச் சென்றது. அதன்பிறகு திரைப்பட உலகில் பேரும் புகழும் நாகையாவுக்குத் தேடி வந்தன. எனக்குப் புதிய வாழ்க்கை கொடுத்தவர் ரமண மகரிஷி என்றார் நாகையா.
திரைப்பட வாழ்க்கை
1938ல் வெளிவந்த “கிருகலக்ஷ்மி” என்ற தெலுங்கு திரைப்படத்தில்தான் நாகையாவின் திரைப்பட வாழ்க்கை ஆரம்பித்தது. தமிழில் “அசோக்குமார்” என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு தென்னிந்திய மொழிகளில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றார். நாகையா நடித்த மொத்தத் திரைப்படங்கள் 285. அதில் தெலுங்கு 177, தமிழ் 93, மீதமுள்ள படங்கள் மற்ற மொழிப்படங்கள். இது தவிர 29 படங்களுக்கு இசையமைத்துள்ளார். 160 பாடல்கள் பாடியுள்ளார்.
தெலுங்கில் இவர் நடித்த “தியாகையா” படம் சூப்பர் ஹிட்டான படம். இந்தத் திரைப்படத்தைச் சிறப்புக் காட்சியாக அப்போதைய மைசூர் மாகாணத்தை ஆட்சி செய்த ராஜா குடும்பத்துக்குக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த பின்பு வெள்ளித்தட்டில் 101 தங்கக் காசுகளை வைத்து நாகையாவுக்குப் பரிசாக அளித்தனர் மைசூரி மகாராஜா.
தெலுங்கில் வெளிவந்த “பக்த பொத்தன்னா” படத்தைப் பார்த்த நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி டி.ஏ. மதுரம் நாகையாவிடம், நாங்கள் கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்கள், ஆனால், கடவுளை உங்கள் ரூபத்தில் காண்கிறோம் என்று சொல்லி, வெள்ளித்தட்டில் பட்டுத் துணிகளை வைத்துக் கொடுத்தனர்.
தமிழில் அசோக்குமார், மீரா, சக்ரதாரி, நவஜீவனம், ஏழை படும்பாடு, சர்வாதிகாரி, தாய் உள்ளம், என் வீடு, ராமு, தெய்வமகன், இரு மலர்கள், நம்நாடு, பாவ மன்னிப்பு, ஆலயமணி, பச்சை விளக்கு, பறக்கும் பாவை, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் நடித்துள்ளார்
தென்னிந்தியாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் சினிமாக் கலைஞர் என்ற பெருமை சித்தூர் வி. நாகையாவுக்கு உண்டு. சினிமாத்துறையில் பலரும் பத்ம விருது பெற்றதற்காக அவர் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர். அப்போது வாழ்த்த வந்தவர்களிடம் பேசிய நாகையா, மத்திய அரசு தென்னிந்த்தியாவில் உள்ள வயதான சினிமாக் கலைஞனுக்கு அதுவும் தென்னிந்திய மொழிகளில் நடித்த ஒருவனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து எனக்குக் கொடுத்திருக்கலாம் என்றார் நாகையா. மேலும், தென்னிந்திய திரைப்படத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் இவ்விருதைச் சமர்ப்பணம் செய்வதாக கூறினார்.
1943ல் ரேணுகா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து “பாக்யலஷ்மி” என்ற படத்தைத் தெலுங்கில் தயாரித்தார். நாகையா தன் திரைப்பட வாழ்க்கையில் இருமுறை குழப்பமான மன நிலையில் இருந்துள்ளார். முதலாவதாக, சென்னை விருகம்பாக்கத்தில், தான் வாங்கிய 52 ஏக்கர் நிலத்தில் ஸ்டூடியோ கட்ட நினைத்தபோது. அந்தக் காலகட்டத்தில்தான், நாகையா ஸ்டூடியோ கட்ட நினைத்த இடத்துக்கு அருகில் பி.என்.ரெட்டி மற்றும் நாராயணசாமியும் இணைந்து வாகினி ஸ்டூடியோவைக் கட்டிக்கொண்டிருந்தனர். அதனால், குழப்பமான மனநிலையில் இருந்த நாகையா, ஸ்டுடியோ கட்டும் திட்டத்தை கைவிட்டார்.
பின்னர், 52 ஏக்கர் நிலத்தையும் விற்றுவிட்டார். ஒரு ஸ்டூடியோ கட்ட நினைத்த இடத்தில் இரண்டு ஸ்டுடியோக்கள் வந்தன. ஆம் “சியாமளா” மற்றும் “கற்பகம்” ஸ்டுடியோக்கள் கட்டப்பட்டன. மீதமுள்ள இடத்தில் ஏவிஎம் நிறுவனம் கல்வி நிறுவனங்களை அமைத்தன. ஆனால், இப்போது, இரு ஸ்டுடியோக்கள் இருந்த இடம் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டன. வாகினி ஸ்டுடியோவும் போரம் விஜயா மாலாக மாறிவிட்டன.
நாகையா, “பக்த போதன்னா” என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, நண்பர்கள் எல்லாம் சேர்ந்து தயாரிப்பு கம்பெனியை ஆரம்பிக்க வற்புறுத்தினார்கள். மீண்டும் குழப்பம், ஆனால், தன் நண்பரும் வணிகருமான துவ்வூர் நாரயண ரெட்டியுடன் இணைந்து ரேணுகா பிலிம்ஸ் என்ற திரைப்பட கம்பெனியைத் தொடங்கி பாக்யலஷ்மி என்ற தெலுங்குப் படத்தைத் தயாரித்தார்.
“பாக்யலஷ்மி” தெலுங்குத் திரைப்படம், ஒட்டுமொத்த தெலுங்குப் திரைப்படங்களின் 100வது திரைப்படமாகும்.
1945ல் வெளிவந்த “சுவர்க்கசீமா” என்ற தெலுங்குத் திரைப்படத்துக்கு இசை சித்தூர் வி. நாகையா. இப்படத்தில்தான் கண்டசாலவைப் பிண்ணனிப் பாடகராக அறிமுகம் செய்திருப்பார் சித்தூர் வி. நாகையா. 1946ல் தெலுங்கில் வெளிவந்த “ தியாகையா” திரைப்படத்தில்தான் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
1950ல் ஏழை படும் பாடு என்ற தமிழ்ப் படத்தில் நடித்து புகழின் உச்சாணிக்கே சென்றார். இந்தப்படம் பிரெஞ்சு மொழியில் வெளிவந்த நாவலின் தழுவலாகும். இந்தப் படத்தைப் பார்த்த புதுச்சேரியில் வாழும் பிரெஞ்சு இன மக்கள், இவருக்கு விழா எடுத்ததாகப் பழம் பெரும் கதை வசனகர்த்தா ஆருர் தாஸ் கூறுகிறார். அந்த விழாவில், பிரெஞ்சு வாழ் மக்களின் சங்கத்துக்கு ரூ.25,000/- கொடுத்ததாக ஆருர்தாஸ் கூறுகிறார்.
இப்படிப் பத்திரிக்கையாளராக, அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக, சுதந்திரப் போராட்ட வீரராக, திரைப்படத்துறையில் பல்துறை வித்தகராக, இல்லாதவருக்கு கொடுத்து உதவி புரிந்த கொடையாளராக வாழ்ந்து மறைந்த சித்தூர் வி. நாகையா இன்று சென்னை தியாகராயநகரில் உள்ள பனகல் பார்க் அருகில் சிலையாகக் காட்சியளிக்கிறார்.
இளம் வயதிலியே மனைவி காலமாகிவிட்டதால், நாகையா தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. ஒருவேளை குழந்தைகள் இருந்திருந்தால் குறைந்தபட்சம் நாகையாவின் பிறந்த நாளிலாவது சிலைக்கு மாலை அணிவிப்பார்கள். எனவே விஷால் தலைமையில் இயங்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் குறைந்தபட்சம் நாகையாவின் பிறந்த தினமான மார்ச் 28 அன்று அவருடைய சிலைக்கு மாலையிட்டுத் திரைப்படத்துறைக்கு நாகையா ஆற்றிய தொண்டினை நினைவு கூர வேண்டும் என்பதே தென்னிந்திய சினிமா ரசிகர்களின் விருப்பம்.

நடிகை ஜெயந்தி இன்று காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகை ஜெயந்தி இன்று காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகை ஜெயந்தி.

பிரபல நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகை ஜெயந்தி.
இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ‘படகோட்டி’, ‘முகராசி’ ஆகிய படங்களிலும், சிவாஜி கணேசனுடன் இணைந்து ‘கர்ணன்’, ‘இருவர் உள்ளம்’ உள்ளிட்ட சில படங்களிலும், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ஆகிய ஹீரோக்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் 1945-ம் ஆண்டு பிறந்த நடிகை ஜெயந்தி கமலாகுமாரி ஜெயந்தி என்ற பெயருடன் சினிமாவில் நுழைந்தார். தனது முதல் கன்னட படமான ஜூனு கூடு என்ற படத்தை இயக்கிய பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார்.
‘மிஸ் மாலினி’ என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கையால் தேசிய விருதும், கர்நாடகா மாநில அரசின் தேசிய விருதும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், திடீர் மூச்சுத்திணறல் காரணமாக நடிகை ஜெயந்தி, பெங்களூரில் இருக்கும் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார், இச்சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயந்தி என்ற கமலாகுமாரி 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 11 இல் பிறந்தார் . இவர் ஒரு இந்திய நடிகை. கன்னடம் ,
தெலுங்கு , தமிழ் , மலையாளம் , ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் உள்ளிட்ட படங்களில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத் திரைப்படத் துறை ஜெயந்தியை அபினயா சாரதேஎன்ற அடைமொழியுடன் கௌரவித்தது. தமிழில் அபிநய சரஸ்வதி என்று சரோஜா தேவி என்ற கன்னட நடிகை அன்புடன் அழைக்கப்பட்டார் .
பிறப்பும் ,இளமை பருவ ஏழ்மையும்
கமலாகுமாரி பிரிட்டிஷ் இந்தியாவில் மெட்ராஸ் ராஜதானியில் பெல்லாரியில் 1945 ,அக்டோபர் 11 இல் பிறந்தார் . அவரது தந்தை பாலசுப்ரமணியம் பெங்களூரில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கிலம் பேராசிரியராக பணிபுரிந்தார். அவரது தாயார் பெயர் சந்தான லட்சுமி . இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளின் மூத்தவராய் கமலா குமாரி இருந்தார் . மிக சிறிய வயதில் தந்தையுடன் படப்பிடிப்பிற்கு சென்று என் .டி .ராமாராவின் மடிமேல் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர் கமலா குமாரிமூன்று மூத்த உடன்பிறந்த பெண்களில் மூத்தவர், இது போக இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர். கமலா குமாரியின் இளம் வயது வாழ்வு மிகவும் சிரமம் ஆக இருந்தது .தகப்பனார், தாயார் மற்றும் ஐந்து பிள்ளைகளையும் தவிக்கவிட்டு பிரிந்து சென்றார் .எனவே புது வாழ்க்கையை தேடி தாயார் சென்னைக்கு குடி பெயர்ந்தார். கமல குமாரி யின் தாயார் தன் மகளை ஒரு பாரத நாட்டிய நடனக் கலைஞராக ஆக்குவதில் ஆர்வம் கொண்டிருந்ததால் சந்திரகலா நடன பள்ளியில் சேர்ந்தார் .அப்போது கோபி சந்தா என்ற மாணவியை அங்கு சந்தித்தார் .அவர் பின்னாளில் மனோரமா என்ற பெயரில் சிரிப்பு நடிகை ஆனார் கமலகுமாரி சற்று பருமனாக இருந்ததால் அவருக்கு நடனம் ஆடுவதில் தேர்ச்சி பெறவில்லை . எனவே மனத்தளவில் நொறுங்கி போனார் .
தெலுங்கு சினிமா வாழ்கை
மிக சிறிய வயதில் தந்தையுடன் படப்பிடிப்பிற்கு சென்று என் .டி .ராமாராவின் மடிமேல் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர் .பின்னாளில் ஜெகதேகவீருணி கதா ,குலா கெளரவம் ,கொண்டவீதி சிம்மம் ,ஜஸ்டிஸ் சவுத்ரி படங்களில் கதாநாயகியாக நடிக்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது . இளம் பருவ வயதிலேயே சிலதமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே நடிப்பை நன்றாக கற்று தேர்ந்து மதிப்பிற்குரியவர் ஆனார் .


கன்னட திரைப்படத் துறையும்,பெயர் மாற்றமும்
கன்னட திரைப்படத் துறையில் கன்னட நடிகர் ராஜ்குமார் உடன் சுமார் முப்பது படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் . கன்னட இயக்குநரான ஒய் .ஆர். ஸ்வாமி அவரை ஓர் நடன ஒத்திகையில் கண்டார் .அவர் ஜெனு குடு படத்தில் அறிமுகம் செய்ததோடு கமல குமாரி என்ற பெயரை
ஜெயந்தி என்று மாற்றினார் . ஜெயந்தி அன்றைய புகழ் பெற்ற நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்துள்ளார் . கே .எஸ் .அஸ்வத் ,பண்டாரி பாய் ,ஜெயஸ்ரீ ,உதயகுமார் ,கல்யாண்குமார் மாறும் ராஜ்குமாருடன் மட்டும் 45 படங்கள் கதாநாயகியாக நடித்துள்ளார் . இவர் நடித்த படங்களில் மிஸ் லீலாவதி மிகவும் சிறப்பு வாய்ந்தது .இந்த படத்தில் சிறு வயது பெண்ணாக நடித்தார் .இது தேசிய விருது பெற்ற திரைப்படம் ஆகும் .
ஆடை ,ஸ்டைல் ,கவர்ச்சியின் முன்னோடி
மிஸ் லீலாவதி கன்னட திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஜெயந்தி (நடிகை) , ஸ்கர்ட் , டி-ஷர்ட்ஸ் மற்றும் இரவு நேர உடைகளை அறிமுக படுத்தினார் .கன்னடத் திரையில் முதன்முதலாக நவீன காலணிகளை மிகவும் அறிமுகப்படுத்தியதற்காக அவர் பாராட்டப்பட்டார். அவர் தான் கன்னடத்தில் முதன் முதலாக நீச்சலுடைஅணிந்து நடித்தார் .தமிழ் சினிமாவில் பட்டினத்தில் பூதம் என்ற படத்தில் கே. ஆர். விஜயா முதன் முதலில் நீச்சல் உடையில் தோன்றினார் .
தமிழ் சினிமாவில் இவரது பங்கு
இவர் இயக்குனர் கே .பாலசந்தரின் ஆஸ்தான கதாநாயகி ஆனார் . எதிர் நீச்சல் ,இரு கோடுகள் ,பாமாவிஜயம் ,புன்னகை ,
வெள்ளிவிழா , கண்ணா நலமா போன்ற படங்களிலும் ,ம. கோ. இராமச்சந்திரன் உடன்
படகோட்டி (திரைப்படம்) மற்றும் முகராசி யிலும் நடித்தார் .அதிக படங்களில்
ஜெமினி கணேசன் உடனும் , முத்துராமன் ,ஜெய்சங்கர் படத்திலும் நடித்துள்ளார் .
சொந்த வாழ்க்கை
இவரது முதல் கன்னட படம் ஜீனு கூடு .இந்த படத்தின் இயக்குனர் பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற ஒரு மகன் இருக்கிறார்
மறக்க முடியாத சம்பவம்
மிஸ் லீலாவதி வெற்றி பெற்று ,டில்லியில் அதற்காக தேசிய விருது வாங்க சென்றார் . இந்திரா காந்தியின் கையால் அதனை பெற்று கொண்டார் . பரிசு வாங்கி செல்கையில் மறுபடியும் திரும்ப அழைத்து இவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார் .

திங்கள், 26 மார்ச், 2018

நடிகை சுகுமாரி நினைவு தினம் - மார்ச் 26,2013.



நடிகை சுகுமாரி நினைவு தினம் - மார்ச் 26,2013.

சுகுமாரி ( அக்டோபர் 6 , 1940 - மார்ச் 26,2013 ) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தார்.
நாகர்கோவிலில் பிறந்த இவர் தன்னுடைய 10-வது வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கினார். பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் 2003 ஆம் ஆண்டுக்கான
பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். 2010ம் ஆண்டு
நம்ம கிராமம் என்ற படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.
பிறப்பும் வளர்ப்பும்
1940-ல் நாகர்கோவிலில் பிறந்தவர் சுகுமாரி. அத்தையும் நடிகை பத்மினியின் தாயுமான சரஸ்வதி அம்மாளிடம், சென்னையில் வளர்க்கப்பட்டதால், சிறு வயதிலேயே நடனம் மற்றும் நடிப்புத் துறையில் அவர் நுழைந்துவிட்டார். தனது 11-வது வயதில்
ஓர் இரவு என்ற படத்தில் அறிமுகமாகி, சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த சுகுமாரி தனது 19-வது வயதில் பிரபலத் தமிழ் இயக்குநர் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார்.
மலையாள மனோரமா
திருமணத்துக்குப் பிறகு பீம்சிங் சுகுமாரியை நடிக்க அனுமதிக்க…. தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் ஏறத்தாழ 2,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலானவை மலையாளப் படங்கள். தமிழில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிகை மனோரமா தூள் கிளப்பியதுபோல், மலையாளத்தில் நடிகை சுகுமாரி பலதரப்பட்ட வேடங்களில் ஏராளமாக நடித்ததால், அவர் ‘மலையாள சினிமாவின் மனோரமா’ என்று அழைக்கப்பட்டார்.


தனித்துவ நடிப்பும் முக பாவனைகளும்
மலையாளத்தில் 1974-ல் வெளிவந்த ‘சட்டைக்காரி’ படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்மணியாக நடித்திருந்த சுகுமாரியின் ஆங்கிலம் கலந்த மலையாளப் பேச்சும் நடிப்பும் அனைவரையும் கவர்ந்து, மலையாளத் திரையுலகில் அவர் ஒரு தனித்துவமான இடத்தை அடைந்தார். 1984-ல் வெளிவந்த இயக்குநர் பிரியதர்ஷனின் ‘பூச்சாக்கொரு மூக்குத்தி’ என்ற மலையாளப் படத்தில் மேல்தட்டு மாடர்ன் பெண்போல் தன்னைக் காட்டிக்கொண்டு, எப்போதும் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி, அலட்டலாக நடித்த சுகுமாரியின் அருமையான நகைச்சுவை நடிப்பு, அவரை முன்னணி நகைச்சுவை நடிகையாகவும் மாற்றியது.
இத்துடன் குணச்சித்திர வேடங்களிலும் சுகுமாரி மகா அற்புதமாக நடித்துள்ளார். குறிப்பாக ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ படத்தில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் சுகுமாரி தன் மகனிடம் ஃபோனில் தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறும் காட்சியில் சுகுமாரியின் நடிப்பு இன்றும் பேசப்படுகிறது. அதேபோல் ‘தசரதம்’ மலையாளப் படத்தின் இறுதிக் காட்சியில்; மோகன்லால், அவர் வீட்டு வேலைக்காரியான சுகுமாரியிடம், “என்னை மகனாக ஏற்றுக்கொள்வீர்களா?” என்ற கேட்கும்போது, சட்டென்று அந்த வேலைக்காரி முகபாவத்திலிருந்து விடுபட்டு, தாய்மையின் முகபாவத்துக்கு மாறும் நடிப்பு நினைவில் இருக்கிறது. தொடர்ந்து பல மலையாளப் படங்களில் சுகுமாரி அம்மாவாக நடித்தது பற்றி மலையாள நகைச்சுவை நடிகர் ஜெகதி, “சுகுமாரி ஒரு செட்டு முண்டு உடையை பையில எடுத்துகிட்டு வந்து, எல்லா செட்டுக்கும் போய் அம்மா வேடத்தில் நடித்துவிடுவார்” என்று கூறியிருக்கிறார்
தமிழிலும்எம்.ஜி.ஆர் .
சிவாஜியிலிருந்து தனுஷ்வரை பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் சுகுமாரியைக் , ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் பாட்டியாக. பிறகு சுகுமாரி தனுஷை அவரது கணீரென்ற வெண்கலக் குரலில் விரட்டியபோது. சுகுமாரியின் குரல் அவ்வளவு தனித்துவமான, உறுதியான குரல்.
வருஷம் 16 படத்தில் கார்த்திக்,
குஷ்புவுக்கு குளியலறையில் முத்தம் கொடுத்து மாட்டி, குடும்பத்தாரிடம் அவமானப்பட்டு நிற்கும்போது, கார்த்திக்கின் பாட்டியாக வரும்சுகுமாரி கார்த்திக்கிடம், “வருத்தப்படாதய்யா. இங்க என்ன பெருசா நடந்துடுச்சு…. போ” என்று நடந்தது ஒரு சாதாரண விஷயம் போன்ற முகபாவத்துடன் கூறி அனுப்பிவிட்டு, கார்த்திக் சென்றவுடன் சட்டென்று முகபாவம் மாறி, நடந்தவற்றின் தீவிரத்தை உணர்ந்து அவர் கண்ணீர் விடும் காட்சியைப் பார்த்தபோது, பல்லாண்டு காலமாகத் திரைத் துறையில் தொடர்ந்து இயங்கிவரும், ஒரு பரிபூரணமான நடிகையால் மட்டுமே இம்மாதிரியாக நடிக்க முடியும் .
பட்டிக்காடா பட்டணமா படத்தில் ஜில்லென்று மேக் அப்போட்டு ஜெயலலிதாவுடன் நடிப்பில் வெளுத்து வாங்கி வி கே ராமசாமியை ஓரம் கட்டியிருப்பார் .வசனங்கள் பேசும்போது கண்களில் துறுதுறுப்பும் ,உதட்டு சுழிப்பும் அவருடைய தனி முத்திரை .
வசந்த மாளிகையில் தலையை கொஞ்சம் கூட அசைக்காமல் சூடு சூடு வசனம் பேசிவிட்டு கிண்டல் பார்வை வீசுவது இவரது தனி முத்திரை .
மறைவு
தீக்காயம் பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுமாரி[3][4] 2013 மார்ச் 26-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்த நாள் மார்ச் 26 , 1965 .


நடிகர் பிரகாஷ் ராஜ்  பிறந்த நாள்  மார்ச் 26 , 1965 .

பிரகாஷ் ராஜ் ( கன்னடம் : ಪ್ರಕಾಶ್ ರೈ பிறப்பு: மார்ச்சு 26 , 1965 ), இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் கன்னடம் , தமிழ் , மலையாளம் , மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்  . அத்துடன் இவர்
இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.

திரைப்படங்கள்

தெலுங்கு
நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா
சீத்தம்மா வகிட்லோ சிரிமல்லி செட்டு
அத்தடு
ஒக்கடு
மிஸ்டர் பெர்ஃபக்ட்
தமிழ்
அபியும் நானும்
காஞ்சிவரம்
சந்தோஷ் சுப்பிரமணியம்
பீமா
அழகிய தீயே
சொக்கத்தங்கம்
எம். குமரன் தா/பெ மகாலஷ்மி
வில்லு
பாரிஜாதம்
வானம்
கையளவு மனசு
ஆசை
வேங்கை
சகுனி
ராசி
பொன்னர் சங்கர்
தீராத விளையாட்டுப் பிள்ளை
பிறந்த நாள்
சின்ன சின்னக் கண்ணிலே
லிட்டில் ஜான்
டூயட்
நிலா
காதல் அழிவதில்லை
சார்லி சாப்ளின்
கௌரவம்
பம்பாய்
அறிந்தும் அறியாமலும்
சிவகாசி
கில்லி
ஐயா
போக்கிரி
இருவர்
கன்னத்தில் முத்தமிட்டால்
அந்நியன்
வேட்டையாடு விளையாடு
மொழி
ரிலாக்ஸ்
அப்பு
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
ஆதி
அள்ளித்தந்த வானம்
சென்னையில் ஒரு நாள்
ஐ லவ் யூ டா
ரோஜாக்கூட்டம்
தயா
இந்தி
டபாங் 2

சனி, 24 மார்ச், 2018

நடிகர் சி. எல். ஆனந்தன் நினைவு தினம் மார்ச் 25, 1989.


நடிகர் சி. எல். ஆனந்தன் நினைவு தினம் மார்ச் 25, 1989.

சி. எல். ஆனந்தன் (இறப்பு: மார்ச் 25, 1989) தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் 1960 ஆம் ஆண்டில் விஜயபுரி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். சண்டைக் காட்சிகளில் இவர் சிறந்து விளங்கினார்.

நடிப்புத் துறையில்

1960ல் சிட்டாடல் பிலிம்சின் விஜயபுரி வீரன் படத்தில் ஜோசப் தளியத் இயக்கத்தில் ஆனந்தன் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ஹேமலதா இப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். குதிரைச் சவாரி, கத்திச் சண்டைகளில் இவர் நடித்தார். இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. காட்டு மல்லிகை என்ற படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் அவரே நடித்தார். 1962 ஆம் ஆண்டில் வீரத்திருமகன் படத்தில் குமாரி சச்சுவுடன் இணைந்து நடித்தார்.

கொங்கு நாட்டு தங்கம், யானை வளர்த்த வானம்பாடி மகன் , நீயா நானா, நானும் மனிதன் தான் , காட்டு மல்லிகை, அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப் பூவே ஆகியவை ஆனந்தனின் குறிப்பிடத்தக்க படங்கள்.
பிற்காலத்தில், எம். ஜி. ஆருடன் இணைந்து
தனிப்பிறவி, நீரும் நெருப்பும் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஆனந்தனின் பட வாய்ப்புகள் குறைந்தன.
தயாரிப்பாளராக
நண்பர்களுடன் சேர்ந்து ஆனந்தன் மூவிஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நானும் மனிதன் தான் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் பெரு வெற்றி பெறவில்லை.

மறைவு

ஆனந்தன் 1989 மார்ச் 25 இல் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு தனது 56வது அகவையில் காலமானார்.  ஆனந்தனின் மனைவி பெயர் லட்சுமி அம்மாள். 3 மகன்கள். 4 மகள்கள். பிற்காலத்தில் நடன நடிகையாக விளங்கிய
டிஸ்கோ சாந்தி அவரது மகள்களில் ஒருவர். இன்னொரு மகள் லலிதா குமாரி
பிரகாஷ் ராஜை திருமணம் செய்தார்.  லலிதாகுமாரியும் மகன் ஜெய்ராமும் திரைப்படங்களில் நடித்தனர்.

நடித்த திரைப்படங்கள்
விஜயபுரி வீரன்
வீரத்திருமகன்
கொங்கு நாட்டு தங்கம்
யானை வளர்த்த வானம்பாடி மகன்
காட்டு மைனா
காட்டு மல்லிகை
தனிப் பிறவி
நீரும் நெருப்பும்
நீயா நானா
நானும் மனிதன் தான்

வெள்ளி, 23 மார்ச், 2018

பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் நினைவு தினம்- மார்ச் 24, 1988


பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் நினைவு தினம்- மார்ச் 24, 1988

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (ஜனவரி 19, 1933 - மார்ச் 24, 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு.
பெயர் :சி.கோவிந்தராசன்
பிறப்பு:19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988.
பெற்றோர்:சிவசிதம்பரம்,அவையாம்பாள்
ஆரம்ப கல்வி:வாணிவிலாஸ் பாடசாலை,சீர்காழி
இளமைப் பருவத்தில் விரும்பிப்பாடிய பாடல்கள் சில:
தியானமே எனது -தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
வதனமே சந்திர பிம்பமோ-தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
செந்தாமரை முகமே-பி.யூ.சின்னப்பா பாடிய பாடல்
கோடையிலே இளைப்பாறி-எல்.ஜி.கிட்டப்பா பாடிய பாடல்
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா,பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்:இசைமணி,சங்கித வித்வான்
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்:1953 இல் பொன்வயல் என்வற படத்துக்காக சிரிப்புதான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஒளவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார்,திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
பிடித்த ராகங்கள்:லதாங்கி,கல்யாணி,சங்கராபரணம்
சிவசிதம்பரம், அவையாம்பாள் ஆகியோருக்கு சீர்காழியில் பிறந்த கோவிந்தராசன் தனது ஆரம்பக்கல்வியை சீர்காழி வாணிவிலாஸ் பாடசாலையில் பயின்றார்.
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா,பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்:இசைமணி, சங்கீத வித்வான்
திரைப்படப் பாடகர்
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த அவ்வையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
திரைப்படத்துக்காக பாடிய பிரபல பாடல்கள் சில...
பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
அமுதும் தேனும் எதற்கு - படம்:தை பிறந்தால் வழி பிறக்கும்,இசை :கே.வி.மகாதேவன்
மாட்டுக்கார வேலா - படம்:வண்ணக்கிளி,இசை :கே.வி.மகாதேவன்
வில் எங்கே கணை இங்கே - படம்:மாலையிட்ட மங்கை,இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்,இராமமூர்த்தி
வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே - படம்:கோமதியின் காதலன்,இசை :ஜி.இராமநாதன்
கொங்கு நாட்டுச் செங்கரும்பே - படம்:கோமதியின் காதலன்,இசை :ஜி.இராமநாதன்
மலையே என் நிலையே - வணங்காமுடி ,இசை :ஜி.இராமநாதன்
ஜக்கம்மா - வீரபாண்டிய கட்டபொம்மன்,இசை :ஜி.இராமநாதன்
பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில..
பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை
காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை
ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு!)
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கானஅனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.
நிலவோடு வான்முகில்,இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)
வண்டு ஆடாத சோலையில் ,ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
சிரிப்பது சிலபேர் ,யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)
ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்)ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
அழுத்தமான தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களை ஈர்த்த பாடல்கள்...
ஒற்றுமையாய் வாழ்வதாலே (பாகப்பிரிவினை 1959)
எங்கிருந்தோ வந்தான் (படிக்காத மேதை 1960)பாரதியார் பாடல் ,இசை:கே.வி.மகாதேவன்
ஓடம் நதியினிலே (காத்திருந்த கண்கள்)
கோட்டையிலே ஒரு ஆலமரம் (முரடன் முத்து)
நல்ல மனைவி நல்ல பிள்ளை (நம்ம வீட்டு லட்சுமி 1966)
பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா (அக்கா தங்கை 1969)
கண்ணான கண்மணிக்கு அவசரமா(ஆலயமணி 1962)
கண்ணன் வந்தான் (ராமு)
பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்...
கண்ணன் வந்தான் (படம் ராமு)(உடன் பாடியவர் டி.எம்.சௌந்திரராஜன்)
தேவன் வந்தான் (படம் குழந்தைக்காக) (உடன் பாடியவர் டி.எம்.சௌந்திரராஜன் மற்றும் பி.பி.ஸ்ரீனிவாஸ்)
வெள்ளிப் பனிமலையின் (படம் கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர் திருச்சி லோகநாதன்)
இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்)
ஆயிரம் கரங்கள் நீட்டி (படம் கர்ணன்) (உடன் பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ்)


வெண்கலக் குரலோன் புகழ்பெற்ற பிரபல கர்னாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (Sirkazhi S.Govindarajan) நினைவு தினம் இன்று . அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l நாகை மாவட்டம் சீர்காழியில் (1933) பிறந்தவர். தந்தை நடத்தும் ராமாயண இசை நாடகத் தில் சிறு வயது ராமனாக நடித்து பாடல்கள் பாடி அனைவரையும் கவர்ந்தார் குழந்தையாக இருந்த கோவிந்தராஜன்.
l சீர்காழி வாணிவிலாஸ் பாட சாலையில் பயின்றார். இளம் வயதில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கிட்டப் பாவின் பாடல்களை விரும்பிக் கேட்டு தானும் பாடுவார். தேவி நாடகக் குழு, பாய்ஸ் நாடக கம்பெனியில் இணைந்து நடிப்புத் திறன், இசைத் திறனை வளர்த்துக்கொண்டார்.
l ‘சினிமா உலகம்’ என்ற பத்திரிகையை நடத்திவந்த பி.எஸ்.செட்டியார், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் துணை நடிகராக இவரை சேர்த்துவிட்டார். ஓய்வு நேரத்தில் இவர் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும், இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று வாழ்த்தினார்கள்.
l பி.எஸ்.செட்டியார் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். 1949-ல் இசைமாமணி பட்டம், 1951-ல் சங்கீத வித்வான் பட்டம் பெற்றார். சிறந்த புல்லாங்குழல் கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடம் பயிற்சி பெற்று இசைத் திறனை வளர்த்துக்கொண்டார்.
l கச்சேரிகளுக்கு இவரையும் உடன் அழைத்துச் செல்லும் சுவாமிநாத பிள்ளை, இவரை தன் மகன் என்றே மற்றவர்களிடம் அறிமுகம் செய்வாராம். கடும் உழைப்பாளியான சீர்காழி, அயராத சாதகம் மூலம் இசை உலகில் நிலைத்த இடம் பெற்றார். சென்னை மியூசிக் அகாடமியில் 1951-ல் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.
l 1953-ல் பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் ‘சிரிப்புத்தான் வருதையா’ என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதற்கு முன்னரே ஔவையார் திரைப்படத்துக்காக ‘ஆத்திச்சூடி’ பாடியிருந்தார்.
l ‘பட்டணந்தான் போகலாமடி’, ‘அமுதும் தேனும் எதற்கு’, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’, ‘கண்ணன் வந்தான்’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, ‘தேவன் கோவில் மணியோசை’ போன்ற பாடல்கள் இவருக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுத் தந்தன. ஏராளமான பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.
l சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்ம உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1983-ல் சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. சென்னை தமிழ் இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.
l இசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்களையே பாடியவர். இலங்கை, லண்டன், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
l 30 ஆண்டுகளுக்கு மேல் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் மாரடைப்பால் (1988) காலமானார்.

நன்றி :))) விக்கிபிடியா

பாடகர் டி. எம் சௌந்தரராஜன் பிறந்த தினம்: மார்ச் 24, 1922.


பாடகர் டி. எம் சௌந்தரராஜன் பிறந்த தினம்: மார்ச் 24, 1922.

‘டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்தர், நாகேஷ், என்.டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா, ஜக்கையா போன்றோருக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர். பின்னணித் துறையில், ‘டி.எம்.எஸ்’ மற்றும் ‘பி.சுசீலா’ அவர்களது ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு திரைப்பாடல்களைப் பாடியுள்ளனர். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, பல பக்திப் பாடல்களையும் பாடிய டாக்டர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: மார்ச் 24, 1922
பிறந்த இடம்: மதுரை, தமிழ்நாடு, பிரிட்டிஷ் இந்தியா
இறப்பு மே 25, 2013 (அகவை 91
தொழில்: பாடகர், நடிகர்
நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், தமிழ்நாட்டில் மதுரையில், மார்ச் 24 ஆம் தேதி, 1922 ஆம் ஆண்டில், மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாக ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரது மூத்த சகோதரர், வேத நூல்களைக் கற்று அறிஞராகத் திகழ்ந்தவர்.
ஆரம்ப கால வாழ்க்கை
தன்னுடைய ஏழு வயதில் இருந்தே, தனது குரல்வளத்தின் மீது அக்கறைக் காட்டத் தொடங்கிய அவர், மதுரையிலுள்ள சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியராக இருந்த சின்னகொண்டா சாரங்கபாணி பாகவதர் என்பவரிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். பின்னர், காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக, இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்ற அவர், தனது 21வது வயதிலிருந்து தனியாக கச்சேரிகளில் பாடி வந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரிகளில் பாடிய அவரை, சுந்தரராவ் நட்கர்னி என்ற இயக்குனர் கவனித்தார். ஆகவே, அவரது அடுத்த படமான ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். இந்தப் படம், 1946ல் எடுக்கப்பட்டிருந்தாலும், 1950ல் தான் வெளியானது. இதில், டி.எம்.எஸ். அவர்கள் ஐந்து பாடல்கள் பாடியுள்ளார். இதுவே அவர் திரையுலகில் நுழைவதற்கான ஒரு வழியை வகுத்தது.


திரையுலக வாழ்க்கை

1950ல் வெளியான ‘கிருஷ்ண விஜயம்’ படத்தைத் தொடர்ந்து, அதே ஆண்டில் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், ‘மந்திரி குமாரி’ என்ற படத்தில், ‘அன்னமிட்ட வீட்டிலே’ என்ற பாடலைப் பாடினார். பிறகு ‘தேவகி’, ‘சர்வாதிகாரி’ போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. 1951ல் வெளியான ‘தேவகி’ என்ற படத்தில் வந்த ‘தீராத துயராலே’ என்ற பாடலைப் பாடி, நடிக்கவும் செய்திருந்தார். 1952ல், ‘வளையாபதி என்னும் படத்தில், ஜமுனா ராணியுடன் இணைந்து இரண்டு பாடல்களைப் பாடினார். இதற்குப் பின், சில ஆண்டுகள் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருந்ததால், கே.வி. மகாதேவனுடன் இணைந்து பக்திப் பாடல்கள் பாடினார். 1955ல் வெளியான ‘செல்லபிள்ளை’ என்ற திரைப்படத்தில், ஆர். சுதர்சனம் அவர்களின் படைப்பான இரண்டு டூயட் பாடல்களை, எம்.எஸ். ராஜேஸ்வரியுடன் சேர்ந்து பாடினார்.
இதற்கிடையில், சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பின்னணிப் பாடிய சி.எஸ். ஜெயராமனுக்கு பதிலாக, டி.எம்.எஸ் அவர்களைப் பாட வைக்கும் நோக்கமாக மருதகாசி அவர்கள், அவரை இசையமைப்பாளார் ஜி. ராமநாதன் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘சிவாஜி கணேசன் அவர்களுடைய குரலுக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்துமா?’ என்று ஐயம் கொண்டார், இசையமைப்பாளார். ஆகவே, சிவாஜிக்கு, டி.எம்.எஸ்சை அறிமுகம் செய்து வைத்தார். ஒரிரண்டு சந்திப்புகளிலேயே, அவரது குரலைப் படித்த அவருக்கு, ‘சுந்தரி சௌந்தரி’ மற்றும் ‘ஏறாத மலைதனிலே’ என்ற பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் குரலைப் போலவே, அவர் பாடியதால், மிகவம் மகிழ்ச்சி அடைந்த ஜி. ராமநாதன், அப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாட வாய்ப்பு வழங்கினார். மேலும், அப்படத்தின் எல்லா பாடல்களும் வெற்றிப் பெற்று, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், டி.எம்.எஸ் அவர்கள் மிகவும் பிரபலமானார். பின்னர், ஆர். ஆர். பிலிம்ஸ் தயாரிப்பான ‘கூண்டுக்கிளி’ என்ற படத்தில், ‘கொஞ்சும் கிளியானப் பெண்ணை’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பைக் கைப்பற்றினார், டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ராமசந்திரன் அவர்கள், அவரது குரல் வளத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவரது அடுத்த படமான ‘மலைக்கள்ளன்’ என்ற திரைப்படத்தில், தஞ்சை ராமையா தாஸ் எழுதிய ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். இந்தக் காலக்கட்டங்களில், இவருக்கு ‘வேடன் கண்ணப்பா’, ‘ரிஷி ஸ்ரிங்கார்’, ‘நீள மலைத் திருடன்’ போன்ற பாடங்களில் பாட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தது. பின்னர், ‘குமுதம்’ என்ற படத்தில், எம்.ஆர்.ராதா அவர்களின் குரலைப் பின்பற்றும் விதமாக, ‘சரக்கு இருந்தா அவுத்து விடு’ என்ற பாடலை, அவரைப் போலவே பாடி அனைவரின் மனத்தையும் கவர்ந்தார். 1955 ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிவாஜி அவர்களின் வற்புறுத்தலின் பேரில், அவருக்குப் பின்னணிப் பாடினார். 1977 ஆம் ஆண்டு வரை, எம்.ஜி.ஆரின் மறைவு வரை, மற்றும் 1995 வரை சிவாஜியின் மறைவு வரை அவர்கள் இருவருக்கும், அவரே பின்னணிப் பாடி வந்தார். 1950 களில் இருந்து 1980 வரை, தமிழ்த் திரையுலகின் பின்னணித் துறையில், முடிசூடாமன்னனாகத் திகழ்ந்தார்.


விருதுகளும், அங்கீகாரங்களும்
11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2500 பக்திப் பாடல்களையும் பாடி, பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து, பல பாடல்களுக்கு இசையமைத்து, ‘பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்’, ‘கல்லும் கனியாகும்’ & ‘கவிராஜ காலமேகம்’ போன்ற சில தமிழ்ப் படங்களில் நடித்த டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பெற்ற விருதுகளும், அங்கீகாரங்களும் எண்ணிலடங்காதவை.
அவருக்குக் கிடைத்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்களில் சில
2012 – ‘கைராலி ஸ்வராலயா யேசுதாஸ் விருது’
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி விருது’ பெற்றார்.
“பாரத் கலாச்சார் ” விருது
“சவுராஷ்டிரா சமூக அங்கீகாரம்” விருது
வாழ்நாள் சாதனையாளர் எம்.ஜி. ஆர் நினைவு விருது
வாழ்நாள் சாதனையாளர் சிவாஜி நினைவு விருது
‘பாடகர் திலகம்’, சிங்கக் குரலோன்’, ‘இசை சக்கரவர்த்தி’, இசைக்கடல்’, ‘எழிலிசை மன்னர்’, ‘குரலரசர்’, ‘டாக்டர்’ பட்டம் போன்ற பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார்.
1964 – “அறிஞர் அண்ணாத்வாரியா அங்கீகாரம்” பெற்றார்.
மலேசிய, சிங்கப்பூர், பிரஞ்சு, ஐக்கிய ராஜ்யம், கனடா, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், மற்றும் பெர்த்தில் வாழும் தமிழ் ரசிகர்களின் அங்கீகாரத்தையும் பல முறைப் பெற்றுள்ளார்.
மறைந்த பிரதமர் திருமதி. இந்திரா காந்தி மற்றும் மொரார்ஜி தேசாய் அவர்களிடமிருந்து தனிப்பட்ட பாராட்டுப் பெற்றார்.
இந்திய ஜனாதிபதிகளான டாக்டர் சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன், வி.வி.கிரி, ஆர் வெங்கட்ராமன், மற்றும் ஜெயில் சிங் போன்றோரிடமிருந்தும் தனிப்பட்ட பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், தனது 24வது வயதிலேயே, அதாவது மார்ச் 28 ஆம் தேதி, 1946 ஆம் ஆண்டில், சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மாகங்களும், மூன்று மகள்களும் உள்ளனர். தற்போது, அவர் தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள மந்தவளிப்பாக்கத்தில் வாழ்கிறார்.


மிகப் பிரபலமானப் பாடல்களில் சில
‘வசந்த முல்லை’ – சாரங்கதாரா
‘யாரடி நீ மோகினி’ – உத்தம புத்திரன்
‘முத்தைத்தரு’ – அருணகிரிநாதர்
‘பாட்டும் நானே’ – திருவிளையாடல்
‘வாழ நினைத்தால்’ – பலே பாண்டியா
‘கொடி அசைந்ததும்’ – பார்த்தால் பசி தீரும்
‘ஒளிமயமான எதிர்காலம்’ – பச்சை விளக்கு
‘மலர்களைப் போல் தங்கை’ – பாசமலர்
‘எத்தனை காலம்தான்’ – மலைக்கள்ளன்
‘திருடாதே பாப்பா’ – திருடாதே
‘காசேதான் கடவுளப்பா’ – சக்கரம்
‘தூங்கதே தம்பி’ – நாடோடிமன்னன்
‘பூ மாலையில்’ – ஊட்டி வரை உறவு
‘பொன்மகள் வந்தாள்’ – சொர்கம்
‘நிலவைப்பார்த்து வானம்’ – சவாளே சமாளி
‘எங்கே நிம்மதி’ – புதிய பறவை
‘அங்கே சிரிப்பவர்கள்’ – ரிக்சாகாரன்
‘ஏன் பிறந்தாய் மகனே’ – பாகப்பிரிவினை
‘உலகம் பிறந்தது எனக்காக’ – பாசம்
‘அதோ அந்த பறவை போல’ – ஆயிரத்தில் ஒருவன்
‘அன்று வந்ததும் அதே நிலா’ – பெரிய இடத்துப் பெண்
‘ஒரு ராஜா ராணியிடம்’ – சிவந்த மண்
‘மலர் கொடுத்தேன்’ – திரிசூலம்
‘தெய்வமே’ – தெய்வ மகன்
‘யாருக்காக’ – வசந்த மாளிகை
‘நான் ஆணையிட்டால்’ – எங்க வீட்டுப் பிள்ளை

காலவரிசை

1922: மதுரையில், மார்ச் 24 ஆம் தேதி ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.
1946: தனது 24வது வயதிலேயே, அதாவது மார்ச் 28 ஆம் தேதி, சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1946: ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தமானார்.
1952: ‘வளையாபதி என்னும் படத்தில், ஜமுனா ராணியுடன் இணைந்து இரண்டு பாடல்களைப் பாடினார்.
1955: 1955ல், வெளியான ‘செல்லபிள்ளை’ என்ற திரைப்படத்தில், எம்.எஸ். ராஜேஸ்வரியுடன் சேர்ந்து இரண்டு டூயட் பாடல்களைப் பாடினார்.
1977: 1977 ஆம் ஆண்டு வரை, எம்.ஜி.ஆரின் மறைவு வரை அவருக்குப் பின்னணிப் பாடினார்.
1995: 1995 வரை சிவாஜியின் மறைவு வரை அவருக்குப் பின்னணிப் பாடி வந்தார்.
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.

பெற்ற விருதுகள்

பத்மசிறீ
கலைமாமணி விருது

மறைவு

இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25-ம் தேதி மாலை 3.50 மணிக்கு அவர்
சென்னையில் காலமானார்.



இசைக்காக எதையும் விட்டுக்கொடுக்காதவர் டி.எம்.எஸ்!
.:எஸ்.கிருபாகரன்

‘கௌரவம்’ படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக படப்பிடிப்புக்கு தளத்துக்கு வந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த அந்த பாடலின் ஒலிப்பேழையை ஓடவிட்டார் உதவி இயக்குநர். காட்சிக்கான உடைகளை அணிந்தபடி சிவாஜி பாடலை கேட்கத் துவங்கினார். ஒருதடவையல்ல... இருதடவையல்ல; கிட்டதட்ட 11 முறைக்கும் மேலாக பாடலை ஓடவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி பாடலை கேட்டு முடித்த சிவாஜி படத்தின் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து “சுந்தரா கொஞ்சம் டயம் கொடு...அப்புறம் சூட் பண்ணிக்கலாம்...”

எந்த பாடலையும் அதிகபட்சம் ஓரிருமுறை கேட்டுவிட்டு நடிக்கத் தயாராகும் சிவாஜியின் இந்த மாற்றத்தை கண்டு குழம்பிய சுந்தரம் “என்னண்ணே ஏதாவது பிரச்னையா...சூட்டிங்கை இன்னொரு நாள் வெச்சிடலாமா...? என்றார் பதறியபடி. “இல்லை சுந்தரா, அண்ணன் எனக்கு பெரிய சவாலை கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை, தேர்ந்த நடிகனுக்குரிய உணர்ச்சிப் பிரவாகத்தோடு பாடியிருக்கிறார். பல்லவியில் ஒரு விதமான பாவம், ஆக்ரோஷம்…அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி. மற்ற சரணத்தில்…இன்னொரு பரிமாணம்…என பிச்சு உதறியிருக்கிறார். ஒரே வரியையே இரண்டு இடங்களில் இரண்டு விதமான தொனிகளில் பாடி அற்புதம் செய்திருக்கிறார். ஒரு நடிகனின் வேலையை அவர் செய்திருக்கும்போது ஒரு நடிகனாக நான் இன்னும் அதிகம் மெனக்கெட்டால்தான் நான் அவர் சவாலை எதிர்கொள்ளமுடியும்... காட்சியும் எடுபடும். அதனால் எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடு பிறகு நடித்துக்கொடுக்கிறேன்” என ஓய்வறைக்குள் புகுந்துகொண்டார் சிவாஜி.


உச்சி முதல் உள்ளங்கால்வரை நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் திலகத்துக்கு, தம் குரலிலேயே சவால் கொடுத்த அந்த பாடகர் டி.எம். சௌந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.!
கவுரவம் படத்தில் இடம்பெற்ற “ நீயும் நானுமா... கண்ணா நீயும் நானுமா...” என்ற அந்த பாடலில் சிவாஜிக்கு சவால் தந்த டி.எம்.எஸ்க்கு தபால் தலைவெளியிட்டு கவுரவம் செய்திருக்கிறது மத்திய அரசு. கடந்த 30-ம் தேதி இந்திய அளவில் இசைத்துறையில் சாதனை படைத்த 10 ஆளுமைகளுக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய கலைஞர் டி.எம்.எஸ் மட்டுமே.
தமிழ்சினிமாவின் சாகாவரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரரான டி.எம். சவுந்தரராஜன், மதுரையில் 1923- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி பிறந்தார். பிரபல வித்வான் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றார். இசை ஞானம் அடைந்தபின் தன் அறிவை பெருக்கிக்கொள்ள சிறியதும் பெரியதுமான கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். தன் திறமையை மெருகேற்றிக்கொள்ள மதுரை சுற்றுப்புறங்களில் கோயில் பஜனைகளில் கூட சங்கடங்கள் இன்றி பாடுவார். டி.எம்.எஸ் திரையுலகில் நுழைய காரணம் அவரது குரல்வளம். ஆம் அவரது குரல் அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் குரலை ஒத்திருக்கும். “டேய் உன் குரலுக்கு பாகவதர் போல் நீ எங்கேயோ போகப்போறெ” என அவருக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை நண்பர்கள் ஏற்படுத்திவைத்தனர். கச்சேரிகளில் அவர் பாடுகிறபோது சற்று கண்ணை மூடிக்கேட்டால் தியாகராஜ பாகதவர்தான் நினைவுக்கு வருவார். தெய்வாதீனமாக அமைந்த இந்த குரல்வளம்தான் அவருக்கு சினிமா உலக கதவு திறக்க காரணமானது. புகழின் உச்சியில் இருந்த சமயம் தியாகராஜ பாகவதர் திருச்சியில் கச்சேரி செய்ய வந்திருந்தார். அதே கச்சேரியில் அவருக்கு முன்பு பாடிய சிறுவன் ஒருவனது குரல் அவரை ஈர்த்தது. ஆச்சர்யத்துடன் சிறுவனை அழைத்து பாடச் சொன்னார் பாகவதர். பாகவதரின் புகழ்பெற்ற பாடல் ஒன்றை அட்சரம் பிசகாமல் பாடிக் காண்பித்தான் சிறுவன். “சென்னைக்கு வா தம்பி நல்ல எதிர்காலம் இருக்கு” என வாஞ்சையாய் தலையை தொட்டு ஆசிர்வதித்தார் தியாகராஜபாகவதர். திரையுலக கனவில் மிதக்க ஆரம்பித்த சிறுவன் டி.எம்.சௌந்தரராஜன் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.
சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளியான கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரல் ஒலித்த முதல்பாடல். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடினார்.
மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆருக்கு பாடிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடல் பட்டிதொட்டியெல்லாம் டி.எம்.எஸ் என்ற மந்திரக்குரலோனை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து திரையுலகில் டி.எம்.எஸ்ஸின் சகாப்தம் துவங்கியது.
எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்கவியலாதவர். எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவை. தம் குரல் வளம், இசைஞானம் இவற்றுக்கிடையில் எல்லை தாண்டாத மற்ற பாடகர்களிடமிருந்து டி.எம்.எஸ் முற்றிலும் மாறுபட்டார். திரையுலகின் அன்றைய இருபெரும் ஆளுமைகளுக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல...அதன்பின் இருந்த அவரது உழைப்பு அளப்பரியது.
உரத்த குரலும் அழுத்தமான பேச்சு வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும் இடத்திலிருந்து பாடுவார்...ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன் சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு கண்டத்திலிருந்து சில ஃபார்முலாவில் பாடி அசரடிக்கும் திறமைசாலியாக உலாவந்தவர் டி.எம்.எஸ்.
பாடல்களை பாடுகிறபோது இசையமைப்பாளர் சொல்லிக்கொடுத்ததுபோல் நில்லாமல் பாடலை மெருகேற்ற பெரும் சிரத்தை எடுத்துக்கொள்வார் டி.எம்.எஸ். அதற்காக பாடலின் இசை அம்சங்களை தவிர்த்து பாடல்காட்சியின் சூழலையும் இயக்குநரிடம் கேட்டு தெரிந்துகொண்டு பாடுவது அவரது குணம். 'உயர்ந்த மனிதன்' படத்தில் இடம்பெறும் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் நடுத்தர வயதைக் கடந்த கதாநாயகன் தன் பால்ய நினைவுகளை சுமந்தபடி தன் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து பாடுவதாக காட்சி. படத்தின் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக இயக்குநர் காட்சியை சித்தரித்திருந்தார். அதைக்கேட்டுக்கொண்ட டி.எம்.எஸ் ரிக்கார்டிங் நடந்த அறையில் பாடலை பாடியபடி தேவைப்பட்ட நேரத்தில் பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார். காட்சிக்கு தக்கபடி டி.எம்.எஸ் குரல் தத்ரூபமாக பாடல் காட்சிக்கு பொருந்தி பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.
வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும்,மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். முருகனுக்காக அவர் பாடி இசையமைத்த பாடல்கள் சாகாவரம்பெற்றவை.
மேதைகள் குழந்தைத்தன்மை கொண்டவர்கள் என்பதற்கு டி.எம்.எஸ் -ம் விதிவிலக்கல்ல . திரையுலகில் யார்மீதும் அவர் பொறாமை கொண்டவரல்ல அவர். மாறாக திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின் பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி 'சென்னைக்கு வாய்யா உனக்கு எதிர்காலம் இருக்கு' என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார். அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி. பாடகரான டி.எம்.எஸ் தேர்ந்த சமையற்கலைஞர் என்பது பலரும் அறியாதது. தன் குரலின் இனிமைக்காக பல சமையற்குறிப்புகளை அறிந்துவைத்ததோடு ஓய்வு நேரத்தில் தானே சமைத்து குடும்பத்தினருக்கு பரிமாறுவார்.
“டி.எம்.எஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி, நான் உட்பட அரசியலில் பங்கெடுத்த நடிகர்களின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; அரசியல் வாழ்க்கையிலும் டி.எம்.எஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஆம்...தேர்தல் பிரசாரங்களுக்கு நாங்கள் செல்லும் இடங்களில் எத்தனை மணிநேரங்கள் நாங்கள் தாமதமாக சென்றாலும் மக்களை காத்திருக்கச்செய்தது, எங்களுக்காக அவர் குரல் கொடுத்து பாடிய பாடல்கள்தான். இப்படி எங்கள் அரசியல்வாழ்விலும் அவர் பங்கு முக்கியமானது" என வெளிப்படையாக சொன்னார் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இது நிதர்சனமும் கூட.
ஆனால் தன்னால் பயனடைந்த கதாநாயகர்கள் பின்னாளில் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தபோதுகூட அவர்களின் சிறு பரிந்துரைக்கு கூட சென்று பல் இளிக்காத பண்பாளராக இறுதிவரை திகழ்ந்தார் டி.எம்.எஸ்.
கதாநாயகர்களுக்காக குரல் கொடுத்த டி.எம்.எஸ் 1962-ம் ஆண்டு 'பட்டினத்தார்' என்ற படத்தில் தானே க(தை)தாநாயகனாக நடித்தார்.
அருணகிரிநாதர் என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்த டி.எம்.எஸ். அதில் முருகனை புகழ்ந்து “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடலை பாடியிருந்தார். தான் பாடும் பாடலின் பொருளை அறிந்தபின்னரே பாடும் வழக்கமுடைய டி.எம்.எஸ் இந்த பாடலை பாடும் முன் கிருபானந்தவாரியாரிடம் நேரில் சென்று அதற்கான பொருளைக் கேட்டறிந்த பின்னரே பாடினார். புகழ்பெற்ற அந்த பாடலைக் கேட்ட அவரது பையன்களில் ஒருவர், “அப்பா, உனக்கு சிவாஜி குரல் கொடுத்தாரா” என கேட்க விழுந்து விழுந்து சிரித்தாராம் டி.எம்.எஸ்.
“வடநாட்டுக்கு ஒரு முகமது ரஃபி என்றால் தென்னாட்டுக்கு டி.எம்.சவுந்தரராஜன் என ஒரு முறை டி.எம்.எஸ் குறித்து சிலாகித்த வாலி, கர்நாடக பாடகர்களே கூட சமயங்களில் சுருதி விலக்கக்கூடும். டி.எம்.எஸ் எப்போதும் அதை செய்யமாட்டார். அத்தனை இசைஞானம்” என புகழ்ந்தார்.
“ லட்ச ரூபாய் கொடுப்பதாக சொன்னாலும் டி.எம்.எஸ் சுருதி விலகி பாடமாட்டார். அதுதான் டி.எம்.எஸ்” என இன்னும் ஒரு படிமேலாக டி.எம்.எஸ் பற்றி எம்.எஸ்.வி குறிப்பிட்டார் ஒருசமயம்.
உண்மைதான், இசைக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயங்காதவர் டி.எம்.எஸ். தான் இசையமைத்த ஒரு படத்தில் தன் இருமகன்கள் இசையுலகில் தலையெடுத்த நேரத்திலும் பாடலின் சுவைக்காக அவர்களை தவிர்த்து மற்றொரு புகழ்பெற்ற பாடகர் திருச்சி லோகநாதனின் மகனான டி.எல்.மகராஜனை பாடவைத்தார். பாடகருக்கு புகழ் கிடைக்கும் பாடல் என்று தெரிந்தும் இசைக்கே முக்கியத்துவம் அளித்து வேறொருவரை பாடவைத்த அவரது பண்பு ஆச்சர்யமானது.
தமிழை அட்சர சுத்தமாக அழகாக உச்சரித்து தமிழுக்கு பெருமை சேர்ந்த டி.எம்.எஸ், தமிழை தாய்மொழியாக கொண்டவரல்ல என்பது ஆச்சர்யமான தகவல்.
2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “செம்மொழியான தமிழ்மொழியாம்” என பாடியதுதான் இசையுலகில் டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடல். 3 தலைமுறையினரை தன் இனிய குரலால் மகிழ்வித்த 'மதுரை மாங்குயில்' டி.எம்.எஸ்ஸின் புகழ் தமிழர்கள் காதுகள் இல்லாது பிறக்கும் காலம் வரை நீடித்து நிலைக்கும்.



'அந்த நாள் ஞாபகம்' - வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ் #BirthdaySpecial

திரையிசை உலகின் வெண்கலக்குரலோன் என்று போற்றப்படுபவர் டி.எம்.சௌந்தரராஜன் என்னும் டி.எம்.எஸ். இவர் பாடினால் தமிழ் இனிக்கும்; உணர்ச்சிகள் சிலிர்க்கும். தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் எனும் டி.எம்.எஸ் 1922- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி மதுரையில் பிறந்தார். ஆம், இன்று அவருடைய பிறந்த தினம் என்பதால் அவருடனும் நெருங்கிப்பழகிய இயக்குனர் விஜயராஜிடம் அவருடைய சிறப்புகளைக் குறித்துக் கேட்டோம்...
11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடி நம்மையெல்லாம் பரவசப்படுத்திய டி.எம்.எஸ் அவர்களின் வாழ்க்கையே நமக்கெல்லாம் ஒரு பாடம் தான். அவர் தனது கடைசி காலம் வரை தனக்கான வேலைகளை தானே செய்து கொண்டவர். அவர் ஓய்வு எடுத்து நான் பார்த்ததே இல்லை. 'நாம் அரசு ஊழியர் இல்லை, ஓய்வெடுக்க. ஒரு கலைஞன் தன்னை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது அவன் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்' என்று கூறுவார். அப்படி அவர் சொல்லும்போதே அவர் 90 வயதை தொடவிருந்தார். பாடுவதைப்போலவே அவர் சமையலிலும் கைதேர்ந்த கலைஞர். அவர் ரசம் வைத்தால் தெரு முழுக்க மணக்கும் என்பார்கள். நிஜமாகவே ஒரு அற்புதமான ரசனைக்காரர் அவர். அவர் விரும்பியே தனது ஒவ்வொரு கணத்தையும் வாழ்ந்தார். எல்லா செயலிலும் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதற்காக உழைப்பார்.
Advertisement
டி.எம்.எஸ் அவர்களின் 90-வது பிறந்த நாள் தொடக்கத்தை மலேசியாவின் பத்துமலை முருகன் கோயிலில் அவரோடு கொண்டாடினோம். அங்கு அவர் பாடிய கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் பாடல்களின் சிடியை கோயிலில் கொடுத்தோம். அவர்கள் அதை உடனே கோயிலில் ஒலிபரப்பி அவரை பெருமைப்படுத்தினார்கள். அப்போது முருகப்பெருமானின் கருணையை எண்ணி வியந்து நெகிழ்ந்துப்போனார். தான் முருகப்பெருமானுக்காக உருகி உருகிப்பாடிய பாடல்களையெல்லாம் சொல்லி கண்கலங்கினார். முருகப்பெருமானின் பாடல்கள் என்றாலே டி.எம்.எஸ் தான் என்று நாம் நினைப்பதற்குக் காரணம் நிஜமாகவே அவர் முருகனின் பக்தராக இருந்தது தான். எத்தனையோ பாடகர்கள் வரலாம், என்றாலும் டி.எம்.எஸ்...
டி.எம்.எஸ் தான்' என்றார்.
ஆம், மல்லிகைப் பூவை மறைத்துவிட முடியும்! வாசத்தை?


டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலில் திரைக்கு வராமலே பிரபலமான முருகன் பாடல்கள்!

த மிழ் சினிமாவுக்கு அப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக புது வெளிச்சம் பாயத்தொடங்கிய நேரம். நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பக்தி ரசத்தால் தமிழ்சினிமா ததும்பிக் கிடந்தது.
கிட்டப்பா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜ பாகவதர் என கர்னாடக இசையும் தமிழிசையுமாக கலந்துகட்டி தமிழகத்துப் பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தார்கள்.

ஊர் பெரியவர், ஊர் மிராசுதாரர் என ஒரு சிலர் வீடுகளில்தான் வானொலிப் பெட்டி இருக்கும். இல்லாவிட்டால், ஊர்த்திருவிழா, கல்யாண வீடுகள், டூரிங் டாக்கீஸ்கள் என எங்கோ தொலைதூரத்தில் குழாய் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்கள் இவைதான் அன்றைய மனிதர்களின் மன இறுக்கத்தைப்போக்க வந்த மகிழ்வான நிகழ்வுகள்.
இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில்தான் வராது வந்த மாமணி போல் வந்து சேர்ந்தார் டி.எம்.எஸ் என்கிற டி.எம்.சௌந்தரராஜன். சிம்மகுரலெடுத்து அவர் பாடிய பாடல்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி எனத் திரையுலகின் இரு ஆளுமைகளுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ்க்கொடி வீசிப்பறந்தன. இவர் பாடிய சினிமாப் பாடல்கள் பலவிதங்களில் ஹிட் அடித்தவை. ஆனால், திரைக்கு வராமலே இவர் பாடி தமிழர்களின் வாழ்வில் கலந்த 'முருகன் பக்திப்பாடல்கள்' சாகா வரம்பெற்றவை. முருகனின் ஆறுபடை வீடுகளிலும் இன்றும் இரவு பகல் பாராது எந்நேரமும் ஒலிப்பவை. இத்தனைச் சிறப்புமிக்க தனிப்பாடல்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...
'உள்ளம் உருகுதைய்யா' என்னும் இந்தப் பாடலைக் கேட்கும்போது, கேட்பவரின் கவலைகள் யாவும் காற்றில் பறக்கும்பஞ்சாக பறந்துபோகும். இறைவன் மேல் இந்த அளவு கசிந்துருகி எவரும் இனிப் பாட முடியுமா என்பதே பெரும் கேள்விக்குறிதான். இந்த லிங்க்கில்
'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' எனக் கேட்கும்போதே நம் மனம் திருச்செந்தூர் கடற்கரையில் கால் நனைக்கும்.
'முருகா..., முருகா, அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா' பாடலைக் கேட்கும்போதே முற்றிலும் நாம் கரைந்து போய்விடுவோம். எளிய இசைக்கருவிகளுடன் கனிவான டி.எம்.எஸ்ஸின் குரல் கல்நெஞ்சையே கரைய வைக்கும். தமிழ்க்கடவுள் முருகன் கசிந்துருக மாட்டாரா என்ன?

`சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா... சுவையான அமுதே செந்தமிழாலே...’ இந்தப் பாடலும் கேட்கும்போதே மனம் லயித்துப்போகும். அத்தனை அருமையான பாடல். தமிழ் வார்த்தைகளும், அவரது உச்சரிப்பும் நம் மனதை மயக்குபவை.
'அன்று கேட்பவன் அரசன் மறந்தால், நின்று கேட்பவன் இறைவன்' அதிகார சக்திகளால், அவதூறு மனிதர்களால் சாதாரண மனிதர்களுக்கான நீதி மறுக்கப்படும்போது பெருத்த ஆறுதலாக இந்தப் பாடல் வரிகள் அமைந்திருக்கும். மனக் கவலைகளெல்லாம் ஈரத்துண்டைப் பிழிந்து காயவைத்ததுபோல் நம் மனத்தை இந்தப் பாடல் ஆக்கிவிடும்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திருவரங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னிடமிருந்த பாடலைக் காண்பித்து, 'நன்றாக இருக்கிறதா? எனப் பார்த்து சொல்லுங்கள்' என்கிறார். பாடலைப் படித்துப் பார்த்த டி.எம்.எஸ்ஸின் மனம் மலர்கிறது. அவருக்கு மிகவும் பிடித்த
முருகப்பெருமானைப் பற்றியப் பாடல். விடுவாரா? அந்த இளைஞருடைய பாடலைத் தானே பாடினார். பாடலும் புகழ்பெற்றது. எழுதிய கவிஞரும் புகழ்பெற்றார் அவர்தான் கவிஞர் வாலி.
'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற பாடல்தான் அது.

நனறி- விகடன்.


நடிகர் பி. வி. நரசிம்ம பாரதி பிறந்த தினம் மார்ச் 23, 1924 .


நடிகர் பி. வி. நரசிம்ம பாரதி பிறந்த தினம்  மார்ச் 23, 1924 .

பி. வி. நரசிம்ம பாரதி (மார்ச் 23, 1924 - 11 மே 1978) சௌராட்டிர சமூகத்திலிருந்து நடிப்புத்துறைக்கு வந்த கலைஞர். 1947-இல் கன்னிகா திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமாகி 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தனது நண்பரான பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜனுக்கு தான் நடித்த படங்களில் பின்னணி பாட, இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடுவிடம் பரிந்துரை செய்து வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரையைச் சேர்ந்த நரசிம்ம பாரதி சிறு வயதிலேயே நடிப்புத் திறமையைக் கொண்டிருந்தார். சிறு வயதிலேயே சௌராட்டிர சபையில் சேர்ந்து அவர்கள் நடத்தி வந்த நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது அவருக்கு பாரதி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.  பின்னர் வெள்ளியங்குன்றம் ஜமீந்தார் ஆரம்பித்த பாய்ஸ் கம்பனியின் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்தார். இதன் பின்னர் புளியமாநகர் பி. எஸ். சுப்பா ரெட்டியாரின் கம்பனியில் சேர்ந்து மலாயா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். உலகப் போர் ஆரம்பித்த போது மலேயாவில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்ட கடைசிக் கப்பலில் நரசிம்ம பாரதியும் சேர்ந்து இந்தியா வந்து சேர்ந்தார்.

திரைப்படங்களில் நடிப்பு

இந்தியா திரும்பிய பின்னர் பக்த மீராவில் (1945) சாது வேடத்தில் நடித்தார். ஜுப்பிட்டர் பிக்சர்சின் ஏ. எஸ். ஏ. சாமி இவருக்குத் தனது படங்களில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார். வால்மீகி திரைப்படத்தில் விட்டுணு, ராமன், வேடன் ஆகிய பாத்திரங்களிலும், ஸ்ரீ முருகனில் (1946) விட்டுணுவாகவும், கஞ்சன் படத்தில் குமாரசாமியாகவும், கன்னிகா (1947) படத்தில் நாரதராகவும் நடித்தார். இதன் பின்னர் நடித்த அபிமன்யுவில் (1948) கிருஷ்ணனாக நடித்தும் புகழ் பெற்றார். கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்திலும் கிருஷ்ணனாக நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம்
1947 கன்னிகா
1948 அபிமன்யு
1950 கிருஷ்ண விஜயம்
1950 திகம்பர சாமியார்
1950 பொன்முடி
1952 என் தங்கை
1952 மாப்பிள்ளை
1952 சின்னத்துரை
1953 மதன மோகினி
1953 முயற்சி
1953 திரும்பிப்பார்
1954 புதுயுகம்
1956 குடும்பவிளக்கு
1958 சம்பூர்ண ராமாயணம்
1960 நான் கண்ட சொர்க்கம்
1960 தோழன்

பாடகர் விஜய் யேசுதாஸ் பிறந்த நாள் மார்ச் 23, 1979.


பாடகர் விஜய் யேசுதாஸ் பிறந்த நாள் மார்ச் 23, 1979.

விஜய் யேசுதாஸ் கட்டசேரி ( மலையாளம் : വിജയ് യേശുദാസ്, ஆங்கிலம் : Vijay Yesudas )(பிறப்பு மார்ச் 23, 1979) தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியுள்ள ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ் ,
மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் மற்றும்
துளு மொழிகளில் பாடியுள்ளார்.



தனிவாழ்வு

விஜய் யேசுதாஸ் புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பிரபாவிற்கு இரண்டாவது மகனாக சென்னையில் மார்ச் 23,1979 அன்று பிறந்தார். சனவரி 21, 2007 அன்று தமது நீண்டநாள் நண்பர் தர்சனாவை
திருவனந்தபுரத்தில் திருமணம் செய்தார். இருவருக்கும் அம்மெயா என்ற மகள் உள்ளனர்.


நடிகர்

 படைவீரன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

நடிகர் செந்தில் பிறந்த நாள்: மார்ச் 23 ,1951.



நடிகர் செந்தில் பிறந்த நாள்: மார்ச் 23 ,1951.

செந்தில் (பிறப்பு: மார்ச் 23 , 1951 ), தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும்
அரசியல்வாதியும் ஆவார். இவர் 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில்
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.  இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர்.

வாழ்க்கைக் குறிப்பு

செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23ஆம் தியதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை இராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும். இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இதில் செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை தூற்றியக் காரணத்தால் தனது 12ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்பு நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதுவே அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்ற இவரை இன்முகத்துடன் வரவேற்க்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர்.
செந்தில் நடித்த சில திரைப்படங்கள்
இவர் ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.

திரைப்படம் வருடம்

ஒரு கோவில் இரு தீபங்கள் 1979
ஆடுகள் நனைகின்றன 1981
இன்று போய் நாளை வா 1981
அர்ச்சனைப்பூக்கள் 1982
தூறல் நின்னு போச்சு 1982
நிஜங்கள் 1982
மஞ்சள் நிலா 1982
சாட்சி 1983
சாட்டை இல்லாத பம்பரம் 1983
பகவதிபுரம் ரெயில்வே கேட் 1983
மலையூர் மம்பட்டியான் 1983
மாறுபட்ட கோலங்கள் 1983
24 மணி நேரம் 1984
அம்பிகை நெரில் வந்தாள் 1984
அவள் ஒரு மாதிரி 1984
இங்கேயும் ஒரு கங்கை 1984
குவா குவா வாத்துகள் 1984
சத்தியம் நீயே 1984
தலையணை மந்திரம் 1984
நல்ல நாள் 1984
நான் பாடும் பாடல் 1984
நேரம் நல்ல நேரம் 1984
மண்சோறு 1984
மதுரை சூரன் 1984
மன்மத ராஜாக்கள் 1984
வைதேகி காத்திருந்தாள் 1984
அண்ணி 1985
அவன் 1985
அன்பின் முகவரி 1985
ஆகாய தாமரைகள் 1985
இரண்டு மனம் 1985
உதயகீதம் 1985
உரிமை 1985
கீதாஞ்சலி 1985
சித்திரமே சித்திரமே 1985
சிவப்பு நிலா 1985
செல்வி 1985
திறமை 1985
தென்றல் தொடாத மலர் 1985
நல்ல தம்ப்ய் 1985
பிரெம பாசம் 1985
மருதாணி 1985
யார் 1985
ராஜா யுவராஜா 1985
வெற்றிக்கனி 1985
வேஷம் 1985
ஹெல்லோ, யார் பேசறது? 1985
அம்மன் கோயில் கிழக்காலே 1986
ஆயிரம் பூக்கள் மலரட்டும் 1986
உனக்காகவே வாழ்கிறேன் 1986
என்றாவது ஒரு நாள் 1986
கண்ணே கனியமுதே 1986
காலமெல்லாம் உன் மடியில் 1986
குங்கும பொட்டு 1986
கொயில் யானை 1986
டிசம்பர் பூக்கள் 1986
தர்ம பத்தினி 1986
நம்ம ஊரு நல்ல ஊரு 1986
நிலவே மலரே 1986
பதில் சொல்வாள் பத்ரகாளி 1986
பாரு பாரு பட்டணம் பாரு 1986
பிறந்தேன் வளர்ந்தேன் 1986
புதிய பூவிது 1986
பூக்களை பரிக்காதே 1986
மந்திர புன்னகை 1986
மறக்கமாட்டேன் 1986
ரசிகன் ஒரு ரசிகை 1986
அருள் தரும் ஐயப்பன் 1987
ஆண்களை நம்பாதே 1987
ஆயுசு நூறு 1987
ஆனந்த ஆராதனை 1987
இது ஒரு தொடர்கதை 1987
இவர்கள் இந்தியர்கள் 1987
இனிய உறவு பூத்தது 1987
உழவன் மகன் 1987
உள்ளம் கவர்ந்த கள்வன் 1987
ஊர்க்குருவி 1987
எங்க ஊரு பாட்டுக்காரன் 1987
ஒரே ரத்தம் 1987
கல்யாண கச்சேரி 1987
கிருஷ்ணன் வந்தான் 1987
கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா 1987
சிறைப்பறவை 1987
சின்னகுயில் பாடுது 1987
சொல்லுவதெல்லாம் உண்மை 1987
தங்கச்சி 1987
தீர்த்த கரையினிலே 1987
துளசி 1987
நல்ல பாம்பு 1987
நினைக்க தெரிந்த மனமே 1987
நினைவே ஒரு சங்கீதம் 1987
பரிசம் போட்டாச்சு 1987
பூ மழை பொழியுது 1987
பூப்பூவா பூத்திருக்கு 1987
பூவிழி வாசலிலே 1987
மனிதன் 1987
முப்பெரும் தேவியர் 1987
மேகம் கருக்குது 1987
மைக்கேல் ராஜ் 1987
ராஜ மரியாதை 1987
ரேகா 1987
வாழ்க வளர்க 1987
வெளிச்சம் 1987
வேலுண்டு வினையில்லை 1987
வேலைக்காரன் 1987
இது எஙள் நீதி 1988
இரண்டில் ஒன்று 1988
உழைத்து வாழ வேண்டும் 1988
உள்ளத்தில் நல்ல உள்ளம் 1988
எங்க ஊரு காவக்காரன் 1988
என் வழி தனி வழி 1988
என்னை விட்டு பொகாதே 1988
ஒருவர் வாழும் ஆலயம் 1988
கண் சிமிட்டும் நேரம் 1988
கல்யாண பறவைகள் 1988
காலையும் நீயே மாலையும் நீயே 1988
குங்கும கோடு 1988
கைநாட்டு 1988
கொயில் மணி ஓசை 1988
சக்கரைப்பந்தல் 1988
சுதந்திர நாட்டின் அடிமைகள் 1988
செண்பகமே செண்பகமே 1988
செந்தூரப்பூவே 1988
த்ங்க கலசம் 1988
தம்பி தங்க கம்பி 1988
தாய்மேல் ஆணை 1988
நம்ம ஊர் நாயகன் 1988
நான் சொன்னதே சட்டம் 1988
நெருப்புநிலா 1988
பட்டிக்காட்டு தம்பி 1988
பாட்டி சொல்லை தட்டாதே 1988
பாய்மரக்கப்பல் 1988
பார்த்தால் பசு 1988
பாலைவனத்தில் பட்டாம்பூச்சி 1988
பூவும் புயலும் 1988
மனைவி ஒரு மந்திரி 1988
ராசாவே உன்னை நம்பி 1988
வளைகாப்பு 1988
ஜாடிக்கேத்த மூடி 1988
அத்தைமடி மெத்தையடி 1989
அன்புக்கட்டளை 1989
எங்க ஊரு மாப்பிள்ளை 1989
எங்கள் அண்ணன் வரட்டும் 1989
ஒரே தாய் ஒரே குலம் 1989
கரகாட்டக்காரன் 1989
காவல் பூனைகள் 1989
சம்சாரமே சரணம் 1989
தங்கமான ராசா 1989
அம்மன் கோவில் திருவிழா 1990
ஆத்தா நான் பாஸாயிட்டேன் 1990
ஆவதெல்லாம் பெண்ணாலே 1990
இணைந்த கைகள் 1990
ஊரு விட்டு ஊரு வந்து 1990
எங்க ஊரு ஆட்டுக்கரன் 1990
எனக்கு ஒரு நீதி 1990
சிலம்பு 1990
தங்கைக்கு ஒரு தாலாட்டு 1990
நீங்களும் ஹீரோதான் 1990
பாட்டாளி மகன் 1990
பாலம் 1990
புது பாட்டு 1990
மருதுபாண்டி 1990
மல்லுவேட்டி மைனர் 1990
முதலாளியம்மா 1990
வெற்றிமாலை 1990
ஜகதல பிரதாபன் 1990
அண்ணன் காட்டிய வழி 1991
அதிகாரி 1991
அபூர்வ நாகம் 1991
அர்சனா I.A.S. 1991
அன்பு சங்கிலி 1991
ஆத்தா உன் கோவிலிலே 1991
ஈசுவரி 1991
ஊரெல்லாம் உன் பாட்டு 1991
எங்க ஊரு சிப்பாய் 1991
என் ராசாவின் மனசிலே 1991
ஒயிலாட்டம் 1991
சேரன் பாண்டியன் 1991
தாயம்மா 1991
தூதுபோ செல்லக்கிளியே 1991
தை பூசம் 1991
நாடு அதை நாடு 1991
நான் புடிச்ச மாப்பிள்ளை 1991
நான் வளர்த்த பூவே 1991
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு 1991
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் 1991
பொண்டாட்டி பொண்டாட்டிதான் 1991
மரிக்கொழுந்து 1991
மில் தொழிலாளி 1991
மூக்குத்தி பூமேலே 1991
வாசலிலே ஒரு வெண்ணிலா 1991
வெற்றிக்கரங்கள் 1991
வைதேகி கல்யாணம் 1991
அபிராமி 1992
உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் 1992
ஊர் மரியாதை 1992
சின்ன கவுண்டர் 1992
சின்ன பசங்க நாங்க 1992
உத்தமராசா 1993
எஜமான் 1993
கோயில் காளை 1993
சின்னஜமீன் 1993
பேண்ட் மாஸ்டர் 1993
பொறந்தவீடா புகுந்த வீடா 1993
பொன்னுமணி 1993
மகராசன் 1993
ராக்காயி கோயில் 1993
ஜென்டில்மேன் 1993
கட்டப்பொம்மன் 1993
சேதுபதி ஐ.பி.எஸ் 1994
சத்யவான் 1994
சின்ன மேடம் 1994
சீமான் 1994
செந்தமிழ் செல்வன் 1994
டூயட் 1994
தாய் மனசு 1994
நம்மவர் 1994
நாட்டாமை 1994
நிலா 1994
பூவரசன் 1994
மேட்டுப்பட்டி மிராசு 1994
ரசிகன் 1994
ராஜகுமாரன் 1994
ராஜபாண்டி 1994
வரவு எட்டணா செலவு பத்தணா 1994
வனஜா கிரிஜா 1994
வீரப்பதக்கம் 1994
வீரா 1994
ஜல்லிக்கட்டு காளை 1994
ஜெய் ஹிந்த் 1994
அசுரன் 1995
கூலி 1995
கோலங்கள் 1995
சந்த்தைக்கு வந்த கிளி 1995
சந்திரலேகா 1995
சின்ன வாத்தியார் 1995
தமிழச்சி 1995
நாடோடி மன்னன் 1995
முத்து 1995
இந்தியன் 1996
உள்ளத்தை அள்ளித்தா 1996
கோயம்புத்தூர் மாப்ளே 1996
அருணாச்சலம் 1997
ஜீன்ஸ் 1998
படையப்பா 1999
வானத்தைப்போல 2002
பாய்ஸ் 2003
விசில் 2003
ஜெயம் 2003
எங்கள் ஆசான் 2009
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் 2009
அன்பே அன்பே 2010
எல்லைச்சாமி 2010
சத்யம் 2010
தங்க மனசுக்காரன் 2010
சின்னத்தாயி 2012
உன்ன நினச்சேன் பாட்டு படிச்சேன்
என்றும் அன்புடன்
ஒன்னா இருக்க கத்துக்கணும்
சித்து
சின்னவர்
சேவகன்
தாய்மாமன்
புன்னகைப்பூவே
ரோஜாவை கிள்ளாதே
ஹெலோ
தானா சேர்ந்த கூட்டம் 2018
இவரது நகைச்சுவையான வசனங்கள் சில:
அந்த இன்னொன்னு தாண்ணே இது (கரகாட்டக்காரன்)
நேர்மை எருமை கருமை
பாட்றி என் ராசாத்தி
டேய் அண்ணனுக்கு பொற வைடா அண்ணன் நன்றி உள்ளவரு
டேய்! அண்ணன் சிகப்புடா கோயில் காளை
புலிகுட்டி தம்பி பூனகுட்டி, பூனகுட்டி தம்பி புலிகுட்டி
இது மந்திரிச்சு விட்ட தாயத்து இல்ல, இது தான் சயனைடு சப்பி
ம்ம்ம்ம்ம்ம், ர்ர்ர்ர்-அ விட்டுட்டே ( இந்தியன் )
அய்யய்யய்யய்யோ, அறிவுக்கொளுந்துண்ணே நீங்க
கோழி முட்ட மாதிரி இருக்கு, இதுல எப்படிண்ணே லைட் எரியும்!... ... ... என்னண்ணே உடைச்சிட்டீங்க! ( வைதேகி காத்திருந்தாள் )
ஸ்பேனர் புடிச்சவன் எல்லாம் மெக்கானிக்குன்னு சொல்றான் ( சேரன் பாண்டியன்)
அண்ணே! ஆத்தா பல்லு ஏண்ணே அப்படி இருக்கு! ( சின்ன கவுண்டர்)