செவ்வாய், 31 ஜனவரி, 2017

இயக்குநர் ஏ. நாராயணன் நினைவு தினம் பிப்ரவரி 01 ,1939.



இயக்குநர் ஏ. நாராயணன் நினைவு தினம் பிப்ரவரி 01 ,1939.

சிவகங்கை ஏ. நாராயணன் (1900 - பெப்ரவரி 1, 1939) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் தமிழகத்தின் முதல் பேசும் பட ஒலிக் கலையகத்தை அமைத்தவர் ஆவார். நாராயணன் இயக்கித் தயாரித்த ‘சீனிவாச கல்யாணம்’ உட்பட ஐந்து பேசும் படங்களுக்கு இவரது மனைவி மீனாம்பாள் ஒலிப்பதிவு செய்தார். திரைப்படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த முதல் இந்தியப் பெண் ஒலிப்பதிவாளர் என்ற பெருமை உடையவர் மீனாம்பாள் ஆவார்.

வாழ்க்கை

தமிழ்நாட்டின் சிவகங்கையில் 1900 ஆம் ஆண்டு ஏ. நாராயணன் பிறந்தார். பட்டப் படிப்புவரை படித்து முடித்த இவர், பின்னர் பம்பாயில் ஆயுள் காப்பீட்டு முகவராக பணியில் சேர்ந்தார். அங்கே அந்நிய மவுனப் படங்களை வாங்கி இந்தியா முழுவதும் விநியோகித்துவந்த கே.டி.பிரதர்ஸ் & கோ என்ற நிறுவனத்துடன் நாராயணனுக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நட்பால் மவுனப் படங்களை வாங்கி கல்கத்தாவில் விநியோகிக்கத் தொடங்கினார். கல்கத்தாவில் பிரபலமான திரையரங்கான ‘க்வின்ஸ் சினிமா’ என்ற அரங்கை குத்தகைக்கு எடுத்து சிலகாலம் நடத்தி, பின்னர் மதராஸ் திரும்பினார்.

திரைப்பட வாழ்வு

மதராஸ் திரும்பியபின் ‘எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ்’ என்ற பெயரில் தென்னிந்தியாவின் முதல் பட விநியோக நிறுவனத்தைத் தொடங்கி மவுனப் படங்களை வாங்கித் தென்னகமெங்கும் திரையரங்குகளுக்கு விநியோகித்து, திருவல்லிக்கேணியில் திரையரங்கை நடத்தினார். இந்தத் தொழில்களில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் நாராயணனுக்கு படங்களைத் தயாரிக்க வேண்டும், இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 1928 ஆம் ஆண்டு ஆலிவுட் சென்று அங்கே ஓராண்டு காலம் தங்கி சினிமா தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். ஹலிவுட் செல்லும்போது ‘அனார்கலி’யின் கதையை அதே பெயரில் மவுனப் படமாக எடுத்துச் சென்று ஆலிவுட்டில் திரையிட்டார். சென்னை திரும்பிய நாராயணன் 1929 ஆம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையில், ‘ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற திரைப்பட படப்பிடிப்புத் தளத்தை தொடங்கினார். அடுத்துவந்த மூன்று ஆண்டுகளில் (1927-30) சுமார் இருபதுக்கும் அதிகமான மவுனப் படங்களைத் தயாரித்தார்.பேசும் படங்கள் வந்த பிறகு பல தமிழ் பேசும் படங்களை இயக்கினார்.

இயக்கிய மௌனப் படங்கள்

    கருட கர்வபங்கம் (1929)

இயக்கிய பேசும் படங்கள்

    திரௌபதி வஸ்திராபகரணம்
    மாதா சம்பிரானி
    தெனாலிராமன்
    ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி
    மச்சாவதாரம்
    துளசி பிருந்தா
    விப்ர நாராயணா
    விஸ்வாமித்ரா
    ராஜாம்பாள்
    கிருஷ்ண துலாபாரம்
    ஸ்ரீ ராமானுஜர்
    ஞானசௌந்தரி
    மீராபாய்
    தாராச சங்கம்
    ஸ்ரீநிவாச கல்யாணம்
    தூக்குத் தூக்கி


தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: சினிமாவின் கோட்டையாகச் சென்னையை மாற்றியவர்!

 தமிழின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ ஹெச்.எம்.ரெட்டி இயக்கத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் 31 அன்று மதராஸின் கினிமா சென்ட்ரல் திரையரங்கில் வெளியானது. தமிழ் சினிமா பேசத் தொடங்கிய பிறகும் அதன் உள்ளடக்கத்தில் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. புராண, இதிகாசக் கதைகளும் கதாபாத்திரங்களுமே திரைப்படங்களாகியிருந்தன. கோவில்கள், கச்சேரிகளில் இசைக்கப்பட்டுவந்த பஜன்களும் கீர்த்தனைகளும் தரமான ஒலிப்பதிவுடன் திரையிலும் ஒலித்தன. இது பார்வையாளர்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. ‘பாடக நடிகர்கள்’திரையில் தோன்றிப் பாடுவதே அன்றைய பக்திபூர்வ ரசிகர்களுக்குப் பெரும் தெய்வீக அனுபவமாக இருந்தது.

பொங்கியெழுந்த நாராயணன்

1930-களில் தொடங்கி 1940-கள் வரையிலும் ரசிகர்களின் ரசனை பக்திமயமாக இருந்தது என்றால், பேசும்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களோ பாம்பே, கல்கத்தா ஸ்டுடியோ முதலாளிகளின் பிடியில் இருந்தார்கள். ஒரு பேசும் படத்தை எடுக்க, அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், நளபாக கோஷ்டி, இன்ன பிற செட் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு பெரும் குழுவாக ரயிலில் நான்கு நாள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பெரிய குழுவைக் கட்டி இழுத்துச் செல்வதும் பராமரிப்பதும் படத் தயாரிப்பாளருக்குப் பெரிய சுமையாக இருந்தது.

இதனால் பேசும்படங்கள் வந்துவிட்ட பிறகும் பலர் மவுனப் படத் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினர். மவுனப் படக் காலத்தில், தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியத் தயாரிப்பாளர்கள் ஒரு கட்டத்துக்குமேல் பாம்பே, கல்கத்தா ஸ்டூடியோக்களைச் சார்த்திருக்கவில்லை. ஆனால், பேசும் படங்கள் உருவாக்க சவுண்ட் கேமராவும் சவுண்ட் நெகட்டிவ் அச்சிடும் இயந்திரங்களும் தேவைப்பட்டன.

அவை பாம்பே, கல்கத்தா முதலாளிகளிடமே இருந்தன. இவர்கள் அநியாயக் கட்டணங்களைத் தென்னிந்தியப் படங்களுக்கு வசூலித்தனர். “மதராஸிகளுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை” என்ற மனப்பாங்கு அவர்களிடம் இருந்தது. இதைக் கண்டு பொங்கியெழுந்து தமிழகத்தின் முதல் பேசும் பட ஸ்டுடியோவை (சவுண்ட் ஸ்டுடியோ) அமைத்தவர்தான் சிவகங்கை ஏ. நாராயணன்.

தமிழகத்தில் தயாரான முதல் பேசும்படம்

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சீனிவாஸ் சினிடோன் என்ற தமிழகத்தின் முதல் பேசும்பட ஸ்டுடியோவை அமைத்து 1934, ஏப்ரல் 1 அன்று திறப்பு விழா நடத்தினார் சிவகங்கை ஏ.நாராயணன். ‘சவுண்ட் சிட்டி’ என்று அழைக்கப்பட்ட அந்த ஸ்டூடியோவில் ‘சீனிவாச கல்யாணம்’ என்ற பேசும்படத்தை இயக்கித் தயாரித்து வெளியிட்டார். இது தமிழ் சினிமா வரலாற்றின் மைல் கல். நாராயணன் துணிச்சலுடன் பாதை அமைத்ததைக் கண்ட தென்னகப் பட முதலாளிகள், அடுத்த இரண்டே ஆண்டுகளில் (1935-36) மதராஸிலும் தமிழகத்தின் வேறுபல ஊர்களிலும் பல ஸ்டுடியோக்களைத் திறந்தனர்.

அவற்றில் மதராஸில் அமைக்கப்பட்ட வேல் பிக்ஸர்ஸ், நேஷனல் மூவி ஸ்டோன், மீனாட்சி மூவிடோன், நேஷனல் மூவிடோன், மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆகியவையும், மதராஸுக்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் ஸ்டுடியோ என்ற பெருமைபெற்ற வேலூர் சத்துவாச்சாரி சுந்தரபாரதி ஸ்டுடியோவும், சேலத்தின் மார்டன் தியேட்டரும், கோம்புத்தூரில் சென்ட்ரல் ஸ்டுடியோவும் முக்கியமானவை.

இப்படி தென்னிந்திய சினிமா உலகம் மதராஸைத் தலைமையிடமாகக் கொண்டதுடன், லாபம் கொழிக்கும் பொழுதுபோக்கு வர்த்தகத் தொழிலாகத் திரைப்படத் தயாரிப்பு ஏற்றம்பெற்றது. இதற்கு சீனிவாஸ் சினிடோன் மூலம் சிவகங்கை ஏ. நாராயணன் வழிவகுத்த தன்னம்பிக்கை மிகுந்த தற்சார்பு நிலையே காரணம். ‘சீனிவாச கல்யாணம்’ படத்துடன் நின்றுவிடாமல் ‘தாராசசாங்கம்’, ‘ஞானசுந்தரி’, ‘தூக்கு தூக்கி’, ‘விக்கிரமாதித்தன்’, ‘துளசிபிருந்தா’, ‘விசுவாமித்ரா’, ‘ராஜாம்பாள்’, ‘சிப்பாய் மனைவி’, ‘விப்ரநாராயணா’, ‘கிருஷ்ண துலாபாரம்’, ‘ராமானுஜர்’ ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

ஆயுள் காப்பீட்டிலிருந்து பட விநியோகத் தொழில்
காரைக்குடியை அடுத்த சிவகங்கையில் 1900-ம் ஆண்டு செல்வாக்கு மிகுந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர் நாராயணன். பட்டப் படிப்பை முடித்ததும் ஆயுள் காப்பீட்டு முகவராக பம்பாயில் பணியில் சேர்ந்தார். அங்கே ஹாலிவுட்டிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் வரும் அந்நிய மவுனப் படங்களை வாங்கி இந்தியா முழுவதும் விநியோகித்துவந்த கே.டி.பிரதர்ஸ் & கோவுடன் நாராயணனுக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நட்பைப் பயன்படுத்திப் பல மவுனப் படங்களை வாங்கி கல்கத்தாவில் விநியோகிக்கத் தொடங்கினார்.

பிறகு கல்கத்தாவின் பிரபலமான திரையரங்காக விளங்கிய ‘க்வின்ஸ் சினிமா’வைக் குத்தகைக்கு எடுத்து நடத்தினார். பின்னர் மதராஸ் திரும்பி ‘எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ்’ என்ற தென்னிந்தியாவின் முதல் பட விநியோக நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் மவுனப் படங்களை வாங்கித் தென்னகமெங்கும் திரையரங்குகளுக்கு விநியோகித்தார். பின்னர் திருவல்லிக்கேணியில் பாப்புலர் திரையரங்கை நடத்தினார். அதுவே பின்னாளில் ஸ்டார் டாக்கீஸ் திரையரங்காக மாறியது.

பட விநியோகம் லாபம் தந்தாலும் படங்களைத் தயாரிக்க வேண்டும், அவற்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் சுழலத் தொடங்கியது. 1928-ம் ஆண்டு ஹாலிவுட் சென்ற நாராயணன் அங்கே ஓராண்டு காலம் தங்கி சினிமா தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்களைத் திறம்படக் கற்றுக்கொண்டார். ஹாலிவுட் சென்றபோது ‘அனார்கலி’யின் கதையை அதே பெயரில் மவுனப் படமாக எடுத்துச் சென்று ஹாலிவுட்டில் திரையிட்டு அமெரிக்கர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

ஹாலிட்டின் பிரமாண்டத் தயாரிப்பு முறை நாராயணனைப் பாதித்தது. ஹாலிவுட்டிலிருந்து திரும்பி வந்த கையோடு 1929-ம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையில், ‘ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் பிரமாண்டமான சினிமா ஸ்டுடியோவை தொடங்கினார். அடுத்துவந்த மூன்று ஆண்டுகளில் (1927-30) சுமார் இருபதுக்கும் அதிகமான மவுனப் படங்களைத் தயாரித்து தென்னிந்தியப் படவுலகைத் தன்பக்கம் திருப்பினார்.

முதல் பிரமாண்ட தயாரிப்பாளர், இயக்குநர்

தமிழ் மவுனப் பட யுகம் கடைசி நாட்களில் இருந்த கால கட்டத்தில் ஹாலிவுட்டில் கற்றுக்கொண்ட தொழில்நுட்பம் மற்றும் பட நிர்வாகத்தைப் பயன்படுத்தி தமிழ் சினிமாவின் பிரமாண்ட மவுனப் படத்தைத் தயாரித்து இயக்கினார் நாராயணன். 18-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவரான ஜி.டபிள்யூ.எம்.ரேனால்டு எழுதிய புகழ்பெற்ற நாவலுக்கு தமிழ் சினேரியோ எழுதினார் நாராயணன். அதை ரூபாய் 75 ஆயிரம் செலவில் ‘மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா’ என்ற தலைப்பில் பிரமாண்டப் படமாகத் தயாரித்தார். அதை ஒரே நேரத்தில் பிரிட்டீஷ் இந்தியாவின் பல நகரங்களிலும் ரங்கூனிலும் வெளியிட்டு வெற்றிகண்டார்.

துணைக்குச் சுதந்திரம்

சினிமா ஆர்வம் கொண்ட தன் மனைவி மீனாம்பாளின் திறமையைக் கண்டு அவரையும் திரைப்படத் துறையில் ஈடுபடச் செய்தார். நாராயணன் இயக்கித் தயாரித்த ‘சீனிவாச கல்யாணம்’ உட்பட ஐந்து பேசும் படங்களுக்கு மீனாம்பாள் ஒலிப்பதிவு செய்தார். திரைப்படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த முதல் இந்தியப் பெண் ஆடியோகிராபிஸ்ட் என்ற பெருமை மீனாம்பாளுக்குக் கிடைத்தது. தேர்ந்த பட விநியோகஸ்தர், திரையரங்க நிர்வாகி, இயக்குநர், தயாரிப்பாளர், சினிமாவை ஒரு தொழில்துறையாக உயர்த்த வழிகாட்டியாக விளங்கியவர் என்று பல சாதனைகளைச் செய்த சிவகங்கை ஏ.நாராயணன், 1939-ம் ஆண்டு, பிப்ரவரி 1-ல் மறைந்தார். ஆனால் அவர் பதித்துச்சென்ற அடிக்கற்கள் தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் மறையாதவை.
நன்றி -விக்கிபீடியா ,தமிழ் தி இந்து .

நடிகர் நகேஷ் நினைவு தினம் ஜனவரி 31

நடிகர் நகேஷ் நினைவு தினம் ஜனவரி 31.

நாகேஷ் ( செப்டம்பர் 27 , 1933 - ஜனவரி 31 ,
2009 ) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரவார். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு , தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார் .
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை
பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தான் அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின. நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் எழுத்தராகப் பணிபுரிந்தார். புதுவசந்தம் , சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த
ஆனந்த்பாபு இவர்தம் மகனாவர்.
நடிப்புத் துறையில்
சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.
1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர்
மனோரமா ஆவார்.
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்
திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன் ,
எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
கதாநாயகனாக
நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம் , நவக்கிரகம் ,
எதிர் நீச்சல் , நீர்க்குமிழி , யாருக்காக அழுதான் , அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கமல்ஹாசன் உடனான நட்பு
கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல
கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார்.
மைக்கேல் மதன காமராஜன் , மகளிர் மட்டும் ,
அவ்வை சண்முகி , பஞ்சதந்திரம் போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப் படம்
தசாவதாரம் ஆகும், இதுவும் கமலஹாசன் படமாகும்.
புதுவசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த்பாபு இவர்தம் மகனாவர்.
இதனையும் காண்க
நாகேஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் விவரம் பார்க்க, நாகேஷ் நடித்த தமிழ் திரைப்படங்கள்

ஜனவரி.31 - நாகேஷ் நினைவு தினம் - 25 நினைவுகள்..
நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!...

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!

* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!

* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது.

*நகைச்சுவை நடிகர் நாகேஷ்*

அவர்களின்,

*தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...*

வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..

*வானொலி:*

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

*நாகேஷ்:*

நான் கவலையே படமாட்டேன் சார்.

ஒரு கட்டடம் கட்டும் போது,

சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,

குறுக்குப் பலகைகள் போட்டு,

அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,

கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,

அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,

கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து,

*கிரஹப் பிரவேசத்தன்று*

கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,

அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால்,

எங்கயோ மறைத்து வைத்துவிட்டு,

வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு *கிரஹகப் பிரவேசம்* நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.

இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.

ஆடுமாடுகள் மேயும்.

குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.

பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.

அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்குமரம்....

வியாழன், 26 ஜனவரி, 2017

நடிகர் எஸ். வி. சுப்பையா நினைவு தினம் ஜனவரி 29 .

நடிகர் எஸ். வி. சுப்பையா நினைவு தினம் ஜனவரி 29 .

எஸ். வி. சுப்பையா (இறப்பு: 29 சனவரி 1980) தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர்.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

    விஜயலட்சுமி (1946)
    கஞ்சன் (1947)
    ஏகம்பவாணன்‎ (1947)
    ராஜகுமாரி (திரைப்படம்)‎ (1947)
    திருமழிசை ஆழ்வார் (1948)[1]
    மாயாவதி (1949)
    வேலைக்காரன் (1952)
    ராணி (1952)
    புதுயுகம்‎ (1954)
    சுகம் எங்கே‎ (1954)
    போர்ட்டர் கந்தன் (1955)
    வள்ளியின் செல்வன்‎ (1955)
    மங்கையர் திலகம் (1955)
    கோகிலவாணி (1956)
    நானே ராஜா‎ (1956)
    ரம்பையின் காதல் (1956)
    சௌபாக்கியவதி‎ (1957)
    மணாளனே மங்கையின் பாக்கியம்‎ (1957)
    அவன் அமரன் (1958)
    நான் வளர்த்த தங்கை‎ (1958)
    வஞ்சிக்கோட்டை வாலிபன்‎ (1958)
    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை‎ (1959)[2]
    நான் சொல்லும் ரகசியம்‎ (1959)
    பாகப்பிரிவினை (1959)[3]
    வாழவைத்த தெய்வம்‎ (1959)[4]
    இரும்புத்திரை (1960)
    பார்த்திபன் கனவு‎ (1960)
    களத்தூர் கண்ணம்மா‎ (1960)
    பாதை தெரியுது பார்‎ (1960)
    பெற்ற மனம்‎ (1960)
    யானைப்பாகன் (1960)
    கப்பலோட்டிய தமிழன் (1961)
    பாவ மன்னிப்பு ‎ (1961)
    கண் கண்ட தெய்வம்‎ (1967)
    காவல் தெய்வம் (1969)‎.


 
செங்ட்டைகோ வி. சுப்பையா.

சுப்பையாவின் பணிவு மிகவும் குழைவாக இருக்கும். " முதலாளி" என்று துண்டை இடுப்பில் கட்டும் பணிவு, அதே முதலாளியிடம் கோபத்தைக்காட்டும் போது நெஞ்சை நிமிர்த்தி அவர் கோபப்பார்வை பார்க்கும் போது மற்றொரு எதிர்மறை சுப்பையாவாகி விடுவார்.

கனிவாய் சாந்தமாய் பார்க்கும் சுப்பையா ஒரு எல்லை என்றால் அருவருத்து எரிமலையாய் மாறி அரிவாளைத்தூக்கிவிடும்போது மற்றொரு எல்லையில் நிற்பார்.

வாய் திறந்து  அழாமல் கண் கலங்கி கண்ணை மூடித் திறந்து கண்ணீரை சிந்தும் உருக்கம்.


பாகப்பிரிவினை படத்தில் பாலையாவுக்கு தம்பியாக வாயில் துண்டை வைத்து அழுகையை அடக்கும் சுப்பையா

"வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று மறைவது தான் வாழ்வில் பாதி!
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்று தான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்று தான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்று தான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்"
- களத்தூர் கண்ணம்மாவில் சாவித்திரியின் அப்பாவாக கண்ணீர் வடிக்கும் சுப்பையா

 கண் கண்ட தெய்வம் படத்தில் ரெங்காராவுக்கு தம்பியாக, தான் சாவதற்கு கொஞ்சம் முன் அண்ணன் ரெங்காராவிடம் வந்து சுப்பையா" உன்னை பார்க்கனும்னு தோணுச்சி. பாத்துட்டேன். வர்றேன்."


 கப்பலோட்டிய தமிழன் படத்தில் மகாகவி பாரதியாக கோர்ட்டில் " எமக்குத் தொழில் எழுத்து, இமைப் பொழுதும் சோராதிருத்தல்!"
 பாரதி பாடல் காட்சிகளில் சுப்பையா கண்ணை இமைக்கவே மாட்டார்.

"ராமு" படத்தில் மன நிலை பிறழ்ந்த தமிழாசிரியராக -
சிறுவன் ராமுவின் அன்பில் நெகிழ்ந்து
"தெய்வத்துக்கு ஆயிரம் கையிருக்குன்னு சொல்வாங்க. அதில் ஒரு கை கூட என் கண்ணீரைத் துடைத்ததில்லை. எனக்கு ஒரு வாய் சோறு கொடுத்ததில்லை. "

'சொல்லத்தான் நினைக்கிறேன்' - 'மன நோயாளி' எஸ்.வி.சுப்பையாவிற்கு மூன்று பெண் மக்கள்.
பெண் பார்க்க வருபவர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று சொன்ன மகளை  நோக்கி சைகையில் (ரெண்டே வார்த்தை பேசிக்கிறேன்...ரெண்டே வார்த்தை..) கெஞ்சும் சுப்பையா, பேச அனுமதி கிடைத்ததும் செய்யும் கர்ஜனை
" எழுந்திருச்சி வெளியே போங்கடா முண்டங்களா"
அடுத்த முறை பெண் பார்க்கும் படலத்தின் முடிவில் வேதனையுடன் கண்ணை மூடி அமைதியாக சொல்வார்
 " பொண்ணாப் பிறக்கறதே பாவம்.. பொண்ணாப் பிறக்கறதே பாவம்.."

"அரங்கேற்றம்" -  எம்.என்.ராஜன்'ஆம்பளைங்கறது மரத்துப் போச்சின்னு சொல்றா..'  சுப்பையா ' இன்னொருக்கச் சொல்லு..இன்னொருக்கச் சொல்லு..'
'ஆம்பளைங்கறதே மரத்துப் போச்சின்னு சொல்றா'
சுப்பையா முகம் பிரகாசமாகி ' ஆம்பளைன்றது மறந்து போச்சின்னு சொல்றாடி.. அவ அம்பாள்டி!'

'தாலியா சலங்கையா?' படத்தில் தன்னுடைய illegitimate daughter வாணிஸ்ரீயை சந்திக்கிற காட்சியில் சுப்பையாவின் கனிவான நடிப்பு.

நடிகர் ஆக இல்லாமல் சுப்பையா என்ற மனிதரின் சொந்த வாழ்வு பற்றி நடிகர் சிவகுமார் " இது ராஜ பாட்டையல்ல" நூலில்
சில மிக அபூர்வத் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.அவற்றைப் படித்தால் சித்தர் போன்றவர் சுப்பையா என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

சுப்பையாவிற்கு மறையும்போது  வயது ஐம்பத்தேழு. அவருக்கு பாலகனாக ஒரு மகன் அப்போது இருந்தான்.
நன்றி -விக்கிபீடியா ,ஆர்பி .ராஜநாயகம் .

நடிகை சுருதிஹாசன் பிறந்த நாள் ஜனவரி 28 .



நடிகை சுருதிஹாசன் பிறந்த நாள் ஜனவரி 28 .

சுருதிஹாசன் (Shruti Haasan, பிறப்பு: சனவரி 28, 1986) பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.

இளமைப்பருவம்

சுருதிஹாசன் 1986, சனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார்.பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.

கலைத்துறை
பாடகர்


சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹேராம் (தமிழ் மற்றும் இந்தி), என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.

நடிப்பு

இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்ப்பார்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது.2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.
இசையமைப்பு

2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.

பாடிய பாடல்கள்.

ஆண்டு     பாடல்     படம்
1992     போற்றிப் பாடடி பெண்ணே     தேவர் மகன்
1997     சாகோ கோரி     சாச்சி 420
2000     ராம் ராம்     ஹேராம்
2002     ரோட்டோர பாட்டுச்சத்தம் கேட்குதா     என்மன வானில்
2008     அடியே கொல்லுதே     வாரணம் ஆயிரம்
2009     ஆசுமா     லக்
உன்னைப்போல் ஒருவன்     உன்னைப்போல் ஒருவன்
வானம் எல்லை
அல்லா சானே
அல்லா சானே     ஈநாடு
ஈநாடு
நிங்கி ஹட்டு
2010     செம்மொழியான தமிழ் மொழியாம்    
நெனபிடு நெனபிடு (Nenapidu Nenapidu)     ப்ரித்வி
பெயொண்ட் த ச்னகே (Beyond The Snak)     ஹிச்ச்ஸ் (Hisss)
2011     இவான் இவான்     உதயன் (தெலுங்கு)
எல்லே லாமா     7ஆம் அறிவு
ஸ்ரீசைதன்யா ஜூனியர் கல்லூரி     ஓ மை பிரண்ட்
சொக்குபொடி     முற்பொழுதும் உன் கற்பனை
2012     கண்ணழகா காலழகா     3
தன் யே மேரா     3 (ஹிந்தி)
கண்ணுலதா காலுலதா     3 (தெலுங்கு)
2013     அல்விட     டீ டே (D Day)
ஷட் அப் யுவர் மௌத்     என்னமோ ஏதோ
நடித்த படங்கள்
ஆண்டு     படம்     கதா பாத்திரத்தின் பெயர்     மொழி     குறிப்புகள்
2000     ஹேராம்     ஷ்ருதி ராஜேஷ்     தமிழ்
இந்தி    
2009     லக்     ஆயிஷா குமார்,
நடாஷா குமார்     இந்தி    
2011     அனகனாக ஒ தீறுடு     பிரியா     தெலுங்கு    
தில் தோ பச்சா ஹை ஜி     நிக்கி நரங்க்     இந்தி    
ஏழாம் அறிவு     சுபா ஸ்ரீனிவாசன்     தமிழ்     வெற்றி:- சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரை:- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
ஓ மை ஃப்ரிஎண்ட்     ஸ்ரீ சந்தன     தெலுங்கு    
2012     3     ஜனணி     தமிழ்     ஆசியாவிசியன் சிறப்பான திரைப்பட விருது-தமிழ்.
பரிந்துரை:- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
காப்பர் சிங்     பாக்யலக்ஷ்மி     தெலுங்கு    
2013     ராமையா வாஸ்தவையா     சோனா     இந்தி    
வலுப்பு     ஷ்ருதி     தெலுங்கு    
டீ டே     சுரையா     இந்தி    
இராமய்யா வாஸ்தவாய்யா     அமுல்லு     தெலுங்கு    
2014     யெவடு         தெலுங்கு    
ரேஸ் குர்ரம்         தெலுங்கு    
ஆகடு         தெலுங்கு     சிறப்பு தோற்றம்
பூஜை     திவ்யா     தமிழ்    
2015     தேவர்         இந்தி     சிறப்பு தோற்றம்
காப்பர்     தேவகி     இந்தி    
வெல்‌கம் பேக்     ரஞ்ச்கன     இந்தி    
ஸ்ரிமந்துடு     சருசீல     தெலுங்கு
புலி     பவழமல்லி     தமிழ்    
ராக்கி ஹண்ட்சாம்         இந்தி     படபிடிப்பு நடைபெறுகிறது
யாரா         இந்தி     படபிடிப்பு நடைபெறுகிறது
வேதாளம்         தமிழ்    

இசையமைத்த படங்கள்


ஆண்டு     படம்
2009     உன்னைப்போல் ஒருவன்.

இயக்குனர் கோமல் சுவாமிநாதன் பிறந்த தினம் ஜனவரி 27 .



இயக்குனர் கோமல் சுவாமிநாதன் பிறந்த தினம் ஜனவரி 27 .

கோமல் சுவாமிநாதன் (1935 - 1995) ஒரு தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் இதழாளர். தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராகக் கருதப்படுபவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார். இவரது எழுத்தில் பாலச்சந்தரால் இயக்கபெற்ற தண்ணீர் தண்ணீர் முக்கியமான திரைப்படம் ஆகும்.

வாழ்க்கை

கோமல் சுவாமிநாதன் 1935ல் காரைக்குடியில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆடுதுறைக்கு அருகே கோமல் என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள். 1957 ல் நாடக ஆசையால் பெற்றோருடனேயே ஊரைவிட்டு வந்து சென்னையில் எஸ். வி. சகஸ்ரநாமத்தின் நாடக்குழுவில் சேர்ந்தார். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவில் நடித்த கோமல் 1960 அவர்களுக்காகப் 'புதிய பாதை' என்ற முதல் நாடகத்தை எழுதினார். 1957 முதல் இறுதி வரை சென்னையிலுள்ள மேற்கு மாம்பலத்தில் வாழ்ந்தார்.

திரைத்துறையில் நுழைந்த கோமல் 1963ல் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் வசன உதவியாளராகப் பணியாற்றினார். திரையில் அவருக்கு வாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை. அவரது சிலநாடகங்கள் படமானாலும் பெரிதாக கவனிக்கப்படவில்லை.

1971ல் திரையுலகில் இருந்து விலகி சொந்தமாக நாடககுழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்காக மொத்தம் 33 நாடகங்கள் எழுதி மேடையேற்றினார். அவற்றில் பதினைந்து நாடகங்கள் நூறு முறைக்கு மேல் மேடையேறின. கோமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஆரம்ப காலத்தில் சில நகைச்சுவை நாடகங்களை எழுதிய இவர், பொதுவாக சமகால அரசியல் பிரச்சினைகளையும் அறப் பிரச்சினைகளையுமே எழுதினார். தீவிரமான இடதுசாரிப் பிடிப்புடையவராக இருந்தார்.

1980ல் இவர் எழுதிய [தண்ணீர் தண்ணீர்] என்ற நாடகம் கே. பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி இவருக்குப் பெரும் புகழ் சேர்த்தது. அதைத் தொடர்ந்து அவரது பல நாடகங்கள் படமாக ஆயின. கோமல் யுத்த காண்டம் (1982), அனல் காற்று (1982), ஓர் இந்தியக்கனவு (1983) ஆகிய மூன்று படங்களை இயக்கினார்.

இதழியல்

வாழ்க்கையின் கடைசியில் கோமல் முதுகெலும்புப் புற்றுநோயால் அவதிப்பட்டார். தன் நாடகக் குழுவைக் கலைத்து விட்டு இதழியலில் ஈடுபட்டார். முன்னரே அவருக்கு இலக்கிய ஆர்வம் உண்டு. சி. சு. செல்லப்பாவின் நண்பராக எழுத்து இதழில் பங்கு பெற்றிருந்தார். ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்திவந்த சுபமங்களா இதழை எடுத்து இலக்கிய இதழாக நடத்தினார். சுபமங்களா தமிழில் மிகப் பெரிய இலக்கிய அலையை உருவாக்கிய இதழ். சிற்றிதழ்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த எழுத்தாளர்களைப் பரவலாக வாசகர்களுக்கு அது அறிமுகம் செய்தது. நடுத்தர இதழ்களுக்கு முன்னோடியாக விளங்கியது

கோமல் படைப்புகள்

    சன்னதித் தெரு, 1971,

    நவாப் நாற்காலி, 1971 (சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் படமாகியது),

    மந்திரி குமாரி, 1972,

    பட்டணம் பறிபோகிறது, 1972,

    வாழ்வின் வாசல், 1973,

    பெருமாளே சாட்சி, 1974 (தமிழில் குமார விஜயம் என்ற பெயரிலும் மலையாளத்தில் பாலாழி மதனம் என்ற பெயரிலும் படமாகியது),

    ஜீஸஸ் வருவார், 1974,

    யுத்த காண்டம், 1974 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),

    ராஜ பரம்பரை, 1975 (பாலூட்டி வளர்த்த கிளி என்ற பெயரில் பி. மாதவன் இயக்கத்தில் படமாகியது. இளையராஜா இசையமைத்த இரண்டாவது படம்),

    அஞ்சு புலி ஒரு பெண், 1976,

    கோடு இல்லாக் கோலங்கள், 1977 (இவரால் முதலில் "இலக்கணம் மீறிய கவிதைகள்" என வழங்கப் பெற்றது),

    ஆட்சி மாற்றம், 1977,

    சுல்தான் ஏகாதசி, 1978,

    சொர்க்க பூமி, 1979 (அனல் காற்று என்ற பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),

    செக்கு மாடுகள், 1980 (சாதிக்கொரு நீதி என்ற பெயரில் படமாகியது),

    தண்ணீர் தண்ணீர், 1980 (அதே பெயரில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் படமாகியது),

    ஒரு இந்தியக் கனவு, 1982 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),

    அசோகவனம், 1983 (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

    நள்ளிரவில் பெற்றோம், 1984,

    இருட்டிலே தேடாதீங்க, 1985, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

    கறுப்பு வியாழக்கிழமை, 1988,

    நாற்காலி, 1989, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

    கிராம ராஜ்யம், 1989,

    மனிதன் என்னும் தீவு, 1989,

    அன்புக்குப் பஞ்சமில்லை, 1992,

பணியாற்றிய மற்ற படைப்புகள்,

    புதிய பாதை, (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)

    மின்னல் கோலம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)

    தில்லை நாயகம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)

    டாக்டருக்கு மருந்து,

    கல்யாண சூப்பர் மார்க்கெட், (எம்.என். நம்பியாரின் நாடகக் குழு )

    டெல்லி மாமியார் ,(மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு) (பின்னாளில் "கற்பகம் வந்தாச்சு" என்ற பெயரில் படமாகியது),

    அவன் பார்த்துப்பான், (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)

    அப்பாவி, (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)

    கிள்ளியூர் கனகம், (மனோரமாவின் நாடகக் குழு)

    என் வீடு, என் கணவன், என் குழந்தை (மனோரமாவின் நாடகக் குழு) (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),



புதன், 25 ஜனவரி, 2017

நடிகை கல்பனா ரஞ்சினி நினைவு தினம் ஜனவரி 25 .


நடிகை கல்பனா ரஞ்சினி நினைவு தினம் ஜனவரி 25 .

கல்பனா ரஞ்சினி என்ற கல்பனா (அக்டோபர் 5, 1965 - சனவரி 25, 2016) திரைத்துறையில் அறிமுகமான நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனிச்சல்ல ஞான் என்ற படத்திற்காக 60வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.
இவர் எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய மஞ்சு திரைப்படத்தில் 1983இல் முதன்முதலாக நடித்தார். தமிழில் சின்ன வீடு திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்தார். 1995இல் சதிலீலாவதி என்ற திரைப்படத்திலும், பம்மல் கே. சம்பந்தம், டும் டும் டும் ஆகியத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
2016 ஜனவரி 25-ஆம் தேதி திங்கட்கிழமை காலை ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார்.

குடும்ப வாழ்க்கை

திரைப்பட இயக்குனரான அனிலை திருமணம் செய்துகொண்டார். ஊர்வசி, கலாரஞ்சினி ஆகியோர் இவரது சகோதரிகள். இவர் ஞான் கல்பனா என்றொரு மலையாள நூலை எழுதியுள்ளார்.

திரைப்படங்கள்

திரைப்படம் ஆண்டு வேடம்
தனிச்சல்ல ஞான் 2012 ரசியா பீவி
முல்லைச்சேரி மாதவன்குட்டி நேமம் பி.ஒ. 2012
இந்தியன் ரு 2011 மேரி
சீனியர் மாண்ட்ரெக் 2010
டுவன்டி20 2008 சுவர்ணம்மா
அஞ்சில் ஒராள் அர்ஜுனன் 2007 சாந்தா
கிருத்யம் 2005 விக்டோரியா
அற்புதத்தீவு 2005 மல்லிக
பங்களாவில் ஔதா 2005
பைவ் பிங்கர்ஸ்‌ 2005 மேரிக்குட்டி
இதயத் திருடன் (தமிழ்) 2005
மாம்பழக்காலம் 2004 நீலிமா
விஸ்மயத்தும்பத்து 2004 மாயா
தாளமேளம் 2004 கனகவல்லி
வரும் வருன்னு வன்னு 2003 வேலைக்காரி
மிழி ரண்டிலும் 2003 சாரதா
மேல்விலாசம் சரியாணு 2003 சரசம்மா பி. வர்க்கீஸ்‌
வெள்ளித்திரை 2003 புஷ்பம்
பம்மல் கே. சம்பந்தம் (தமிழ்) 2002
சிரிக்குடுக்க 2002 சீமந்தினி
காக்கே காக்கே கூடெவிடெ 2002
கண்ணகி 2002 கனகம்மா
காசில்லாதெயும் ஜீவிக்காம் 2002
கிருஷ்ண கோபாலகிருஷ்ணா 2002 சுஜாதா
ஊமைப்பெண்ணின்‌ உரியாடாப்பய்யன் 2002 கன்யகா
இஷ்டம் 2001 மரியாம்மா தோமஸ்
டும் டும் டும் (தமிழ்) 2001
அமேரிக்கன் அம்மாயி 1999
சந்தாமாமா 1999 கொச்சம்மிணி
சார்ளி சாப்லின் 1999
சுவஸ்தம் கிருஹபரணம் 1999 சரளா
அலிபாபாவும் ஆறரைக்கள்ளன்மாரும் 1998 தங்கி
கிராம பஞ்சாயத்து 1998 பங்கஜாட்சி
ஜூனியர் மான்ட்ரேக் 1997
கல்யாண உண்ணிகள் 1997 லூசி
கோட்டப்புறத்தெ கூட்டுகுடும்பம் 1997 சந்திரிகா
மன்னாடியார் பெண்ணின் செங்கோட்ட்டை செக்கன் 1997
நியூஸ்பேப்பர் பாய்‌ 1997
உல்லாசப்பூங்காற்று 1997
எஸ்க்யூஸ் மீ ஏது கோளேஜிலா 1996
காதில் ஒரு கின்னாரம் 1996 மணிக்குட்டி
களிவீடு 1996 மேரி
குடும்பக்கோடதி 1996 குண்டூர் பார்வதி
மலையாள மாசம் சிங்கம் ஒன்னு 1996
காட்டிலெ தடி தேவருடெ ஆனை 1995 கனகா
களமசேரியில் கல்யாண யோகம் 1995 செம்பகச்சேரி சகுந்தளா
பை பிரதர்ஸ் 1995 கோமளம்
புன்னாரம் 1995
சதிலீலாவதி 1995 லீலாவதி
திரீமென் ஆர்மி 1995 இந்திர தேவி
சி.ஐ.டி. உண்ணிக்ருஷ்ணன் பி.ஏ., பி.எட்.]] 1994 கிளாரா
குடும்பவிசேஷம் 1994 ஏலிக்குட்டி
பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு 1994 பொன்னம்மா
பூச்சய்க்காரு மணி கேட்டும் 1994 கார்த்திகா
பட்டர்பிளைஸ் 1993
காந்தர்வம் 1993 கொட்டாரக்கரை கோமளம்
இஞ்சக்காடன் மத்தாயி & சண்ஸ் 1993 அன்னக்குட்டி
காபூளிவாலா 1993 சந்த்ரிக
காவடியாட்டம் 1993
பொன்னுச்சாமி 1993
உப்புகண்டம் பிரதர்ஸ் 1993 ஏலம்மா
என்னோடிஷ்டம் கூடாமோ 1992 பாக்கியம்
இன்ஸ்பெக்டர் பல்ராம் 1991 தாட்சாயணி
இன்னத்தெ புரோக்ராம் 1991 மினிகுட்டி
பூக்காலம் வரவாயி 1991 டியூஷன் டீச்சர்
சவுஹ்ரதம் 1991 அன்னம்மா
டாக்டர் பசுபதி 1990 யூ டி சி குமாரி
கௌதுகவார்த்தைகள் 1990 கமலூ
மாலையோகம் 1990 சுபத்ரா
ஒருக்கம் 1990 ஆலீஸ்‌
சாந்திரம் 1990 அன்னா
ஒரு சாயாஹ்னத்தின்றெ சுவப்னம் 1989 தங்கமணி
பெருவண்ணாபுறத்தெ விசேஷங்கள் 1989 மோகினி
சின்னவீடு (தமிழ்‌) 1985
இது நல்ல தமாஷ் 1985 சுந்தரி
மஞ்ஞு 1983 ரஸ்மி

நடிகை ஊர்வசி பிறந்த நாள் ஜனவரி 25, 1967.


நடிகை ஊர்வசி பிறந்த நாள் ஜனவரி 25, 1967.

ஊர்வசி (பிறப்பு: ஜனவரி 25, 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி. திரையுலகில் இவருடைய ஊர்வசி என்ற பெயரே மிகப் பிரபலமானது. இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

குடும்பம்

இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவருடனான சச்சரவு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் தனிமையில் வாழ்ந்த அவர் 2014ஆம் ஆண்டு தனது 50ஆம் வயதில் சிவ பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 

செவ்வாய், 24 ஜனவரி, 2017

நடிகை ரியா சென் பிறந்த தினம் ஜனவரி 24, 1981)


நடிகை ரியா சென் பிறந்த தினம் ஜனவரி 24, 1981)

ரியா சென் (வங்காள: রিয়া সেন; இந்தி: रिया सेन, உச்சரிப்பு பெயர் [ˈrɪ.aː ˈʃeːn]) (பிறப்பில் ரியா தேவ் வர்மா ஜனவரி 24, 1981) ஒரு இந்திய திரைப்பட நடிகையும் மாடலும் ஆவார். பாட்டி சுசித்ரா சென், தாய் மூன் மூன் சென் மற்றும் சகோதரி ரெய்மா சென் ஆகிய திரை நட்சத்திரங்களின் குடும்பத்தில் இருந்து வந்தவரான ரியா சென் தனது நடிப்பு வாழ்க்கையை 1991 ஆம் ஆண்டில் விஷ்கன்யா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் துவக்கினார். வர்க்கரீதியாக அவரது நடிப்புலக வாழ்க்கையின் முதல் வெற்றிப் படம் ஸ்டைல் , 2001 ஆம் ஆண்டில் இந்தியில் வெளிவந்த இப்படம் என். சந்திரா இயக்கிய ஒரு செக்ஸ் காமெடி திரைப்படம் ஆகும். தயாரிப்பாளர் பிரிதிஷ் நந்தி இயக்கிய இசைப் படமான ஜான்கார் பீட்ஸ் (2001), இந்தி மற்றும் ஆங்கிலக் கலப்பாக ஹிங்கிலிஷில் வெளிவந்த ஷாதி நம்பர். 1 (2005), மலையாள திகில் படமான ஆனந்தபத்ரம் (2005) ஆகியவை அவர் நடித்த பிற படங்களில் சில.

ஃபால்கனி பதக்கின் இசை வீடியோவான யாத் பியா கீ ஆனே லகி யில் பதினாறு வயதில் நடித்த போது அவர் முதலில் ஒரு மாடலாகத் தான் அறியப்பட்டார். அப்போது முதல், அவர் இசை வீடியோக்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும், ஃபேஷன் ஷோக்களிலும், மற்றும் பத்திரிகை அட்டைகளிலும் தோன்றியுள்ளார்.

ரியா ஒரு பொது ஆர்வலராகவும் இருந்து, எய்ட்ஸ் நோய் குறித்து மக்களிடம் இருந்த தவறான கருத்துகளை அகற்றும் நோக்கில், எய்ட்ஸ் விழிப்புணர்வு இசை வீடியோ ஒன்றில் தோன்றினார். குழந்தைகள் கண் பாதுகாப்புக்கும் அவர் நிதி திரட்ட உதவினார். நடிகர் அஷ்மித் படேலுடனான எம்எம்எஸ் வீடியோ துண்டு, புகைப்பட நிபுணர் தபூ ரத்னானியின் வருடாந்திர காலண்டரில் அரை நிர்வாண புகைப்படம், மற்றும் கலாச்சார பழம்பெருமை மிக்க இந்திய திரைத் துறையில் துணிச்சலான திரை முத்தங்கள் ஆகிய சர்ச்சைகளை ரியா சந்தித்துள்ளார்.
நடிப்பு வாழ்க்கை

முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில் விஷ்கன்யா திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக ரியா தோன்றினார், அதில் அவர் இளம் வயது பூஜாவாக நடித்தார். 15 வயதில் அவர், தேசிய திரைப்பட விருதுகள் வென்ற இயக்குநர் பாரதிராஜாவின் தாஜ்மஹால் (2000) என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்தார், ஆனால் இப்படம் வர்த்தகரீதியாக வெற்றி பெறவில்லை.[1] அக்‌ஷய் கன்னா ஜோடியாக லவ் யூ ஹமேசா திரைப்படத்தின் மூலம் அவரது பாலிவுட் அறிமுகம் நடைபெற இருந்தது; ஆனால் அந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டதால், 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த என்.சந்திராவின் ஸ்டைல் திரைப்படம் அவரது முதல் இந்தி திரைப்படமாக அமைந்தது.[2] குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்த செக்ஸ் காமெடி[3][4] திரைப்படம் தான் அந்த இயக்குநருக்கு பத்துவருட காலத்தில் முதல் வெற்றி திரைப்படமாக அமைந்தது.[5] சக புதுமுகங்களான ஷர்மான் ஜோஷி, ஷாகில் கான் மற்றும் ஷில்பி முத்கல் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து ரியா நடித்த இந்த படம் ரியாவுக்கு ஒரு அறிமுக தளத்தை அமைத்துக் கொடுத்ததோடு, இந்தியாவில் குறைந்த பட்ஜெட் படங்கள் வர்த்தகரீதியாக வெற்றி பெறும் போக்கிற்கு ஒரு முன்னோடியாகவும் அமைந்தது.[6][7] ஸ்டைல் திரைப்படத்தின் தொடர்ச்சி அத்தியாயமாக வந்த எக்ஸ்கியூஸ் மீ திரைப்படத்தில், ரியா மற்றும் படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு பதிலாக வளரும் நடிகைகளான சுனாலி ஜோஷி மற்றும் ஜெயா சீல் ஆகியோர் நடித்தனர்.[8][9]

அவரது அடுத்த வெற்றித் திரைப்படம் ஜான்கார் பீட்ஸ் , இது பழம்பெரும் இசையமைப்பாளரான ஆர் டி பர்மனின் இசையைச் சுற்றி நடக்கும் ஒரு காமெடிப் படம், இதில் அவர் ஷயான் முன்ஷி, ஜூஹி சாவ்லா, ராகுல் போஸ், ரிங்கி கன்னா மற்றும் சஞ்சய் சூரி ஆகியோருடன் இணைந்து ஒரு சிறிய கவர்ச்சி பாத்திரத்தில்[10] நடித்திருந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் வெளியீட்டு இயக்குநராக இருந்த பிரிதிஷ் நந்தியால் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம்,[11] 25 மில்லியன் ரூபாய் (525,000 அமெரிக்க டாலர்கள்) பட்ஜெட்டில் தயாரானது,[11] பிரிதிஷ் நந்தி கம்யூனிகேஷன்ஸ் (PNC) தயாரித்த சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களில் ஆறாவதாய் இது அமைந்தது.[12] வித்தியாசமான கதையம்சத்துடன் ஒரு அலை போல் வெளிவந்த திரைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக இருந்தது, இத்தகைய திரைப்படங்கள் பெரும்பாலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமல் போயின என்றாலும்,[13][14] இத்திரைப்படம் வெளிவரும் சமயத்தில் மக்கள் கவனத்தைப் பெற்றதால், குறிப்பிட்ட வகை பார்வையாளர்களை மட்டும் கருத்தில் கொண்டு இருபது நகரங்களில் தேர்ந்தெடுத்து வெளியிட்டதில் இந்த படம் வர்த்தகரீதியான வெற்றியைக் கண்டது.[12][15] ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து பேசும் ஹிங்கிலீஷில் வெளிவந்த முதல் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.[16][17] 2005 ஆம் ஆண்டில் இவர் ஷாதி நம்பர் 1 திரைப்படத்தில் நடித்தார், இதில் கதாநாயகிகளே இல்லை.[18] நவீன திருமணங்களை கருவாகக் கொண்ட இந்த காமெடி படம், இந்த வகையான படங்கள் எடுப்பதில் புகழ்பெற்ற ஒரு இயக்குநராக இருந்த, டேவிட் தவான் இயக்கத்தில் வந்ததாகும்.[19][20]

ஸ்டைல் , ஜான்கார் பீட்ஸ் போன்ற திரைப்படங்கள் வர்த்தகரீதியாக வெற்றி பெற்றன என்றாலும், அவரது பிந்தைய கால திரைப்படங்கள் குறைந்த அளவு வருமானத்தையே தந்தன.[21][22] அவற்றில் ஏராளமான படங்கள் முடிக்கப்படாமலேயும் இருக்கின்றன. அவரது படங்கள் பலவற்றிலும் அவர் கவர்ச்சி நடிகையாகவோ அல்லது கொஞ்ச நேரம் வந்து போகும் பாத்திரங்களிலோ தான் நடித்திருந்தார் என்றாலும்,[23][24][25] அவர் கதாநாயகியாக நடித்த சில திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களாகவே இருந்திருக்கின்றன.[26] தில் வில் பியார் வியார் (2002), கயாமத் (2003) மற்றும் பிளான் (2004) ஆகிய திரைப்படங்களில் அவர் சிறு பாத்திரங்கள் தான் ஏற்றிருந்தார் என்றாலும், இந்த மூன்று படங்களிலுமே அவரது கவர்ச்சி பாடல்கள் பெரும் கவனத்தை ஈர்த்தது, அதிலும் குறிப்பாக கயாமத் படத்தில் அவர் குமிழ்-குளியல் செய்யும் காட்சி.[21][27][28] இவை தவிர, ராம் கோபால் வர்மா கேட்டுக் கொண்டதன் பேரில் ஜேம்ஸ் (2005) திரைப்படத்திலும் அவர் கவர்ச்சி நடிகையாக நடித்தார், சமீரா ரெட்டி, இஷா கோபிகர் மற்றும் கோயனா மித்ரா போன்ற நடிகை-மாடல்களை இதே போன்ற பாத்திரங்களில் நடிக்க வைத்த வரலாறு ராம் கோபால் வர்மாவுக்கு உண்டு.[29] இது போக, சஜித் கானின் ஹே பேபி (2007) திரைப்படத்திலும் அவர் ஒரு நடனக் காட்சியில் பங்குபெற்றார், இந்த திரைப்படத்தில் ஏழு பிரதான பாலிவுட் நடிகைகள் நடித்திருந்தனர்.[30]
இந்தியல்லாத திரைப்படங்கள்

பாலிவுட் திரைப்படங்கள் தவிர, ரியா பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களிலும் தோன்றினார். மனோஜ் பாரதிராஜா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்த பாரதிராஜாவின் தாஜ்மஹால் , பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த மனோஜ் பட்னாகரின் குட்லக் ஆகிய தமிழ் திரைப்படங்கள் மூலம் மிகப் பிரகாசத்துடன் அவரது சினிமா வாழ்க்கை துவங்கியது. இரண்டு திரைப்படங்களுமே வர்த்தகரீதியாக தோல்வியுற்றன, அதற்குப் பின் என்.மகாராஜனின் அரசாட்சி திரைப்படத்தில் ஒரேயொரு பாடல் காட்சிக்கு ஆடி தமிழ் திரைப்படங்களில் அவரது குறுகிய மறுபிரவேசம் அமைந்தது.

அவரது முதல் ஆங்கில மொழி திரைப்படம் இட் வாஸ் ரெய்னிங் தேட் நைட் என்பதாகும், இது சுதேஷ்னா ராய் எழுதி மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கிய ஹேய் ப்ரிஷ்திர் ராத் எனும் பெங்காலி திரைப்படத்தின் தழுவலாகும். இந்த திரைப்படத்தில் அவர் தாய் மூன் மூன் சென் உடன் நடித்தார்.[31] பெங்காலி ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் தயாரான அஞ்சன் தத்தாவின் தி போங் கனெக்‌ஷன் திரைப்படத்தில் ரியா தனது சகோதரியுடன் நடிப்பதாக இருந்தது, ஆனால் இறுதியில் அவர் இப்படத்திலிருந்து கழற்றி விடப்பட்டு அவருக்கு பதிலாக பியா ராய் சவுத்ரி இடம்பெற்றார்.[32] இரண்டு சகோதரிகளும் பின்னர் இயக்குநர் அஜய் சின்ஹாவின் தி பேச்சலர் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர், இந்த பெங்காலி திரைப்படம், 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, இன்னும் முடிவடையாததாக இருந்தது.[33]

இந்தியல்லாத மொழிகளில் அவரது திரைப்படங்களில் பெரிய வெற்றி பெற்றது சந்தோஷ் சிவனின் ஆனந்தபத்ரம் (2005) திரைப்படமாகும். ரியா மற்றும் சிவன் இருவருக்குமே முதல் மலையாளத் திரைப்படமாக அமைந்த இது,[34][35] விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. கேரள மாநில விருதுகள்[36] ஐந்தினை வென்ற இந்த திரைப்படம் அந்த ஆண்டில் மிகப் பெரும் வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.[37][38] அதில், திகாம்பரன் எனும் கொடிய மந்திரவாதியால் ஏமாற்றப்படும் கிராமத்துப் பெண் பாமா பாத்திரத்தை இவர் ஏற்றிருந்தார், மந்திரவாதியாக மனோஜ் கே. ஜெயன் நடித்தார். பாமாவை திகாம்பரன் மந்திரச் சடங்குகளுக்கான ஒரு ஊடகமாக மாற்றும் பாடல் நடனக் காட்சியில், நடன இயக்குநர் அபர்ணா சிந்தூர் கதகளி அசைவுகளை ஏராளமாகப் பயன்படுத்தியிருந்தார்.[39] கலாச்சார நடன மறுமலர்ச்சியின் ஒரு உயர்ந்த அம்சமாக கதகளியைப் பயன்படுத்துவதென்பது,[40] ஷாஜி கருணின் வானபிரஸ்தம் (1999) மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணனின் காலமண்டலம் ராமன்குட்டி நாயர் (2005) உள்ளிட்ட மற்ற பெரிய இந்திய திரைப்படங்களிலும் இருந்திருக்கிறது.[41][42] ரியாவின் முதல் தெலுங்கு திரைப்படமான நேனு மீகு தெலுசா....? படத்தில் மனோஜ் மஞ்சுவுக்கு ஜோடியாக அவர் நடித்தார்.
மாடலிங் வாழ்க்கை

பிரபல பாடகர்களின் இசை வீடியோக்களில் தோன்றியதையடுத்து ரியா ஒரு பிரபலமான மாடலாக இருந்தார், ஃபல்குனி பதக்கின் யாத் பியா கீ ஆனே லகி (வேறொரு தலைப்பு: சுடி ஜோ கன்காயி ), ஆஷா போஸ்லேயின் ஜூம்கா கிரா ரே , ஜக்ஜித் சிங் மற்றும் போஸ்லேயின் ஜப் சாம்னே தும் மற்றும் கஹின் கஹின் சே , லதா மங்கேஷ்கர், போஸ்லே மற்றும் சிங்கின் தில் கஹின் ஹோஷ் கஹின் , சோனு நிகமின் ஜீனா ஹை தேரே லியே மற்றும் ஷானின் சுட்டா மரோ ஆகியவை இந்த வீடியோக்களில் அடக்கம். தனது முதல் இசை வீடியோவான யாத் பியா கீ ஆனே லகீ க்கு பதினாறு வயதில் அவர் நடித்தார்.[43][44] இதனால் அவரது ஆரம்ப தொழில் வாழ்க்கையில் அவர் முதன்மையாக இசை வீடியோக்களுக்கான ஒரு நடிகையாக அடையாளம் காணப்பட்டார்,[45] இந்த ஒரு பிம்பத்தை போக்க வேண்டும் என்று 2005 இல் அவர் விரும்பினார்.[46] ஃபெமினா , எலான் ,[47] மேன்'ஸ் வேர்ல்டு ,[48] கிளாட்ராக்ஸ் , ஸேவி மற்றும் எலே , மாக்சிம் மற்றும் காஸ்மோபொலிட்டன் ஆகியவற்றின் இந்திய பதிப்புகள் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளில் அட்டைப்படங்களிலும்,[49] அத்துடன் லக்மே ஃபேஷன் வீக் (2005-07) மற்றும் வில்ஸ் ஃபேஷன் வீக் (2006-07)போன்ற பெரும் ஃபேஷன் ஷோக்களின் காட்சிநடைகளிலும் ரியா இடம்பெற்றிருக்கிறார். தனது மூத்த சகோதரியான ரெய்மா சென்னுடன் இணைந்து இவர் ஃபேஷன் ஷோக்களில் பங்குபெற்றிருக்கிறார்.[50] மாடலிங் தவிர, விளம்பர உலகிலும் ரியா முயற்சி செய்திருக்கிறார். அவரது மாடலிங் வாழ்க்கையின் ஒரு உச்ச கட்டம் 2006 ஆம் ஆண்டில் வந்தது, அந்த ஆண்டில் அவர் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக குளிர்பானமான லிம்காவின் விளம்பரத் தூதரானார்.[51][52] கோல்கேட், டாபர் வாடிகா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், காட்பரி டெய்ரி மில்க் சாக்கலேட், மற்றும் நிர்மா ஆகியவையும் அவர் தூதராக இருந்த பிற முக்கியமான விளம்பரங்களாகும்.

2004 ஆம் ஆண்டில், இந்தியாவின் முன்னணி புகைப்பட நிபுணரான தபூ ரத்னானியின் வருடாந்திர காலண்டரில் அவர் பாதி நிர்வாணமாக காட்சி தந்தார், இது இந்திய கவர்ச்சி உலகில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது.[53][54] தபூ கூற்றின் படி, "அவரது தாயார் காலண்டர் வெளிவந்த பிறகு தாமதமாகத் தான் பார்த்தார். அது ரொம்பவும் கவர்ச்சியாக இருப்பதாகவும் ரியா அதனை செய்திருக்கக் கூடாது என்றும் அவர் நினைத்தார். ஆனால் இந்த புகைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. தனது அடுத்த விளம்பர படத்திலும், இதில் செய்ததைப் போன்ற அதே வெளிச்சத்தில் தன்னைக் காட்டும் படி என்னை கேட்டுக் கொள்ளும் அளவுக்கு ரியா மிகவும் மகிழ்ச்சியுற்றார்."[55] ஒரு மாடல் நடிகையின் தொழில்வாழ்க்கையின் சிறப்பம்சமாக,[56] ரத்னானி அவரை தனது வருடாந்திர காலண்டருக்கென மூன்று வருடங்கள் ஒப்பந்தம் செய்வதற்கு அது இட்டுச் சென்றது.[57] காலண்டரில் அடுத்தடுத்து ஐந்து வருடங்கள் (2003-07) தொடர்ந்து இடம்பிடித்த ஒரே பெண் இவர் தான்.[58][59]
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம்

மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா நகரில் ஜனவரி 24, 1981 இல் பிறந்த ரியா சென் முன்னாள் நடிகை மூன் மூன் சென்னின் மகளாவார்,[21][60] பெங்காலி சினிமாவில் ஒரு பழம்பெரும் நடிகையான சுசித்ரா சென்னின் பேத்தி.[61] மும்பைக்கு இடம்பெயரும் முன்னதாக, கொல்கத்தாவில் தனது பெற்றோர் மற்றும் சகோதரி ரெய்மா சென்னுடன் அவர் வசித்து வந்தார், ரெய்மா சென்னும் ஒரு நடிகையே. அவரது தந்தை பாரத் தேவ் வர்மா திரிபுராவின் ராஜ குடும்ப உறுப்பினராவார்.[62] அவரது தந்தை வழி பாட்டியான இலா தேவி, கூச் பேஹார் சமஸ்தானத்தின் இளவரசி, அவரது இளைய சகோதரியான காயத்ரி தேவி ஜெய்பூர் மகாராணி.[62] அவரது தந்தை வழி பாட்டியான இந்திரா தான் பரோடா மகாராஜா மூன்றாம் சயோஜிராவ் கேக்வாட்டின் ஒரே மகள்.[63][64] ரியாவின் தாய்வழி கொள்ளுத்தாத்தாவான ஆதிநாத் சென் ஒரு புகழ்பெற்ற கொல்கத்தா வணிகர், அவரது தந்தை தினாநாத் சென் - இவர் முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரான அஷோக் குமார் சென்னின் உறவினராவார் - திரிபுரா மகாராஜாவிடம் திவான் அல்லது மந்திரியாக இருந்தார்.[65] பாட்டியின் ஆரம்ப பெயர் தான் இந்த சகோதரிகளுக்கு திரையில் கொடுக்கப்படுகிறது, ஆயினும் அவர்களது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எல்லாம் தேவ் வர்மா என்னும் துணைப் பெயர் தான் உள்ளது.[66]

ரியா தனது பள்ளிப் படிப்பை லோரெடோ ஹவுஸ் மற்றும் ராணி பிர்லா கல்லூரியில் முடித்தார், இவை இரண்டுமே கொல்கத்தாவில் தான் உள்ளன.[62] அதற்குப் பின் தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப கழகத்தில் படித்த அவர்,[67] நகை வடிவமைப்பை தனது பொழுதுபோக்காக கொண்டார்.[68] திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் தான் அணியும் ஆடைகளில் அநேகமானவை இவரே வடிவமைப்பதாகும்.[69] கதக்கில் ரியா பயிற்சி பெற்றுள்ளதோடு இப்போதும் விஜய்ஸ்ரீ சவுத்ரியிடம்[70] அதனைத் தொடர்ந்து பயின்று வருகிறார், மற்றும் குத்துச்சண்டையிலும் பயிற்சி எடுக்கிறார், (பெல்லி நடனத்தின் 5 நிலைகளில் முதலாவது நிலையை நிறைவு செய்துள்ளார்).[10][71] பகுதி நேர மாடலிங் வாய்ப்புகள் மூலம் திரைப்படத் துறையில் நுழைந்த ரியா, தனது ஆரம்ப கால வாழ்க்கையில் கொல்கத்தாவிற்கும் மும்பைக்கும் இடையே பொதுப் போக்குவரத்தின் மூலமே பயணம் செய்து வந்தார்.[21][72][73] திரைப்படத் துறையில் கால்பதித்ததும், தெற்கு கொல்கத்தாவில் இருக்கும் பாலிகன்கே சர்குலர் சாலையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தார்.[74] ஜூஹூவில் உள்ள குடும்ப வீட்டிற்கு இடம்பெயர்ந்த அவர், தனது சகோதரியுடன் அங்கு வசித்து வருகிறார்.[73][75] அவர் மும்பையில் தங்கியிருந்த போது, ஊடகங்கள் அவரை மாடல் மற்றும் நடிகராக இருக்கும் ஜான் ஆபிரகாமுடன் இணைத்து பேசின.[76] இந்தி திரையுலக பத்திரிகைகளில், 2008 ஆம் ஆண்டில், அவர் நாவல் எழுத்தாளரான சல்மான் ருஷ்டியுடன் இணைத்து பேசப்பட்டார், ஆனாலும் இருவரும் தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே என்று கூறினர்.[77]

ரியா ஏராளமான எதிர்பாராத சம்பவங்களில் சிக்கியுள்ளார். பிரான்சில் ஷாதி நம்பர் 1 படப்பிடிப்பின் போது, ஒரு சண்டைக்காட்சி நடிகரின் மோட்டார்பைக் எதிர்பாராது மோதியதில் அவர் சுய உணர்வில்லாத நிலைக்கு சென்று விட்டார், ஆனாலும் அவருக்கு மோசமான காயம் எதுவும் ஏற்படவில்லை.[78] ரியா தனது ஆண் நண்பரான அஷ்மித் படேலுடன் இணைந்து நடித்த சில்சிலே திரைப்படம் வெளியாவதற்கு கொஞ்சம் முன்னால், மல்டிமீடியா குறுஞ்செய்தி சேவையிலும் (MMS) இணையத்திலும், இருவரும் படுநெருக்கமாக இருக்கும் ஒரு 90 விநாடி வீடியோ கிளிப் ஒன்று புழங்கியது.[50][79] கேமரா கைபேசிகளைப் பயன்படுத்தி பிரபலங்களை இதுபோன்ற சூழ்நிலைகளில் படம்பிடித்து வெளியான ஏராளமான சர்ச்சைகளில் இதுவும் ஒன்றாக இருந்தது.[80][81] அந்த எம்எம்எஸ் வீடியோவில் இருப்பது தானல்ல என்று ரியா மறுத்த போதிலும், இந்த சம்பவத்திற்கு பிறகு,[82][83] இருவரும் பிரிந்து விட்டனர்.[81] இந்த வீடியோ செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒரு விளம்பர பல்டி என்று ஒரு விமர்சகர் கருத்து தெரிவித்தார்.[84] 2007 ஆம் ஆண்டில், சாக்கலேட் மயக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு பாங்காக்கில் அவர் ஒரு குறுகிய போதையகற்ற அமர்வை எடுத்துக் கொண்டார்.[85]
பொது ஆளுமை

ரியாவின் திரைப்பட நடிப்பு அவரை இந்தியாவில் ஒரு பால் அடையாளமாகவும் (செக்ஸ் சிம்பல்) இளைஞர்களின் முன்னோடி உருவமாகவும் ஸ்தாபித்திருக்கிறது.[10][86][87] திரைப்படத் துறையில் நுழைந்தது முதல், ஷாதி நம்பர் 1 [88][89] திரைப்படத்தில் நீச்சலுடையில் தோன்றியதற்காகவும், சில்சிலே திரைப்படத்தில் அஷ்மித் படேலுடனும் ஸ்டைல் படத்தில் ஷர்மான் ஜோஷி உடனும் திரையில் முத்தக்காட்சியில் நடித்ததன் மூலம் அவர் கவனம் பெற்றிருக்கிறார். இந்திய சினிமா ஓரளவு பழமை கலாச்சாரத்தில் ஊறியது என்பதாலும், இது போன்ற காட்சிகள் குறித்த ரியாவின் சொந்த கருத்துகளாலும் இத்தகைய சம்பவங்கள் எல்லாம் கவனத்தை பெற்றன.[24][90][91] சினிமா பிரபலமாகும் முன்பே, பார்ட்டிகளில் நிறைய கலந்து கொள்ளும் பெயர் அவருக்கு இருந்தது, இது அவரது பதினைந்தாம் வயதில் தொடங்கி விட்டது.[92][93] ரியாவின் பொது ஆளுமை அவரது தாயார் மூன் மூன் சென் உடன் ஒப்பிடப்படுகிறது, அவரது காலத்தில் அவரும் பால் அடையாளமாகவே காணப்பட்டார்,[50][94] ரியாவின் சகோதரி ரெய்மா பெரும்பாலும் அவரது பாட்டியான சுசித்ராவுடன் ஒப்பிடப்படுகிறார்.[60][95]

அவரது திரைத்துறை வாழ்க்கை இன்னும் பெரிய அளவிலான வெற்றிகளை சாதித்து விடவில்லை என்றாலும், ரியா பெருமளவில் ஊடக கவனம் பெற்றவராக இருக்கிறார். பெமினா பத்திரிகையின் செப்டம்பர் 2007 பதிப்பில் வெளியான பெமினா 50 மிக அழகிய பெண்கள் பட்டியலில் ரியா ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். மிஸ்டர் இந்தியா போட்டியின் 2008 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் அவரும் தீர்ப்புக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[96] ஹாத் ஸே ஹாத் மிலா , என்னும் எச்ஐவி/எயிட்ஸ் விழிப்புணர்வு இசை வீடியோவில் பாலிவுட் நட்சத்திரங்களான வஹீதா ரஹ்மான், ஷில்பா ஷெட்டி, தியா மிர்ஸா, ரவீனா தாண்டன், ஜாக்கி ஷெராப், நஸ்ருதீன் ஷா, தபு மற்றும் லாரா தத்தாவுடன் சேர்ந்து ரியாவும் தோன்றினார்.[87][97] 2003 ஆம் ஆண்டில் உலக குழந்தையர் வாரத்தின் போது (நவம்பர் 14-20) குழந்தைகள் கண் பாதுகாப்பிற்காக மெக்டொனால்டு இந்தியா நடத்திய நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் அவர் பங்குபெற்று உதவினார்.[98]
திரைப்பட விவரம்
ஆண்டு     திரைப்படம்     இயக்குநர்     பாத்திரம்     சக கலைஞர்கள்     மொழி     பிற குறிப்புகள்
1991     விஷ்கன்யா     ஜக் முந்த்ரா     இளம் நிஷி     பூஜா பேடி, கபீர் பேடி, மூன் மூன் சென்     இந்தி     குழந்தை நட்சத்திரமாக
1999     தாஜ் மஹால்     பாரதிராஜா     கதாநாயகி     மனோஜ் பாரதிராஜா     தமிழ்    
குட்லக்     மனோஜ் பட்னாகர்     பிரியா     பிரசாந்த், ரகுவரன், சுஹாசினி மணிரத்னம்     தமிழ்    
2001     ஸ்டைல்     என்.சந்திரா     ஷீனா     ஷர்மான் ஜோஷி, ஷாகில் கான், ஷில்பி முத்கல், தாரா தேஷ்பான்டே     இந்தி    
2002     தில் வில் பியார் வியார்     ஆனந்த் மஹாதேவன்     கவுரவின் நண்பி     ஆர்.மாதவன், சஞ்சய் சூரி, நம்ரதா ஷிரோத்கர், ஜிம்மி ஷெர்கில், சோனாலி குல்கர்னி, ஹிரிஷிதா பட்     இந்தி     குணச்சித்திர வேடம்
2003     சாஜீஸ்     ரஜத் ரவய்ல்     —     மிலிந்த் சோமன், ஆர்யன் வய்த், ரேஷ்மி கோஷ், உஷா பசானி, சுஹாஸ் கன்ட்கே, ரஜ்பல் யாதவ்     இந்தி    
கயாமத் : சிட்டி அன்டர் த்ரட்     ஹாரி பவேஜா     ஷீத்தல்     அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி, சஞ்சய் கபூர், அர்பாஸ் கான், இஷா கோபிகர், நேஹா தூபியா     இந்தி    
ஜான்கார் பீட்ஸ்     சுஜாய் கோஷ்     பிரீத்தி     சஞ்சய் சூரி, ராகுல் போஸ், ஜூஹி சாவ்லா, ஷயான் முன்ஷி, ரிங்கி கன்னா     ஹிங்கிலிஷ்     படத்தின் மொழி இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த ஹிங்கிலீஷ்
2004     தில் னே ஜிஸே அப்னா கஹா     அதுல் அக்னிஹோத்ரி     காமினி     சல்மான் கான், ப்ரீத்தி ஜிந்தா, பூமிகா சாவ்லா, ஹெலன், ரதி அக்னிஹோத்ரி, ரேணுகா சஹானே     இந்தி     குணச்சித்திர தோற்றம்
ப்ளான்     ஹிரிடே ஷெட்டி     ஷாலினி     சஞ்சய் தத், சஞ்சய் சூரி, டினோ மொரியா, பிரியங்கா சோப்ரா, சமீரா ரெட்டி     இந்தி     கவர்ச்சி நடிகை
அரசாட்சி     என்.மகாராஜன்     இருபது வயசு     அர்ஜூன் சர்ஜா, லாரா தத்தா, ரகுவரன், விவேக், லட்சுமி     தமிழ்     கவர்ச்சி நடிகை
2005     ஆனந்தபத்ரம்     சந்தோஷ் சிவன்     பாமா     காவ்யா மாதவன், பிரித்விராஜ் சுகுமாரன், மனோஜ் கே. ஜெயன், கலாபாவன் மணி, பிஜூ மேனன், ரேவதி     மலையாளம்    
ஷாதி நம்பர் 1     டேவிட் தவான்     மாதுரி     சஞ்சய் தத், ஃபர்தீன் கான், சயீத் கான், ஷர்மான் ஜோஷி, இஷா தியோல், சோஹா அலி கான், ஆயிஷா தாகியா     இந்தி    
தும்... ஹோ நா!     என்.எஸ்.ராஜ் பரத்     ரீமா     பிரீத்தி கங்குலி, சுமித் நிஜாவன், நேத்ரா ரகுராமன், ஜாக்கி ஷெராப்     இந்தி    
ஜேம்ஸ்     ரோகித் ஜூக்ராஜ்     —     மோகித் அலாவத், மோகன் அகாசே, ஸ்னேஹல் தாபி, நிஷா கோத்தாரி     இந்தி     கவர்ச்சி நடிகை
சில்சிலே     காலீத் முகமது     அனுஷ்கா     தபு, பூமிகா சாவ்லா, ஜிம்மி ஷெர்கில், ராகுல் போஸ், செலினா ஜெட்லி, அஷ்மித் படேல், திவ்யா தத்தா     இந்தி    
இட் வாஸ் ரெய்னிங் தேட் நைட்     மகேஷ் மஞ்ச்ரேகர்     —     ரியாஸ் அகமது, விக்டர் பானர்ஜி, மகேஷ் மஞ்ச்ரேகர், டான் மொல்லர், மூன் மூன் சென், சுஷ்மிதா சென்     ஆங்கிலம்    
2006     அப்னா அப்னா மணி மணி     சங்கீத் சிவன்     ஷிவானி     ரித்தேஷ் தேஷ்முக், செலினா ஜெட்லி, அனுபம் கேர், கொயனா மித்ரா, சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப்     இந்தி    
தி பேச்சலர்     அஜய் சின்ஹா     நிஷா     ஷர்மான் ஜோஷி, ரெய்மா சென், மனோஜ் பஹ்வா, ஹிமானி ஷிவ்புரி, மனிஷ் நாக்பால்     இந்தி     நிறைவடையவில்லை
ரோக்தா     ரமேஷ் கோதார்     —     அர்ஷத் வர்சி, அஷ்மித் படேல், ஆசிஷ் சௌத்ரி, ஷமிதா ஷெட்டி, தனுஸ்ரீ தத்தா     இந்தி     நிறைவடையவில்லை
லவ் யூ ஹமேஷா     கைலாஷ் சுரேந்திரநாத்     மேக்னா     ரிஷ்மா மாலிக், சோனாலி பிந்த்ரே, அக்‌ஷய் கன்னா, நிருபா ராய்     இந்தி     ரியா தேவ் வர்மா நடித்தது என 1999 ஆம் ஆண்டிலேயே வெளிவரத் திட்டமிடப்பட்டிருந்த படம்
2007     ஹே பேபி     சாஜித் கான்     —     அக்‌ஷய் குமார், ஃபர்தீன் கான், ரித்தேஷ் தேஷ்முக், வித்யா பாலன்     இந்தி     கவர்ச்சி நடிகை
2008     நேனு மீகு தெலுசா....?     அஜய் சாஸ்திரி     —     மனோஜ் மஞ்சு, ஸ்னேகா உல்லால்     தெலுங்கு     தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
ஹீரோஸ்         —     சல்மான் கான், ப்ரீத்தி ஜிந்தா, சோஹைல் கான்     இந்தி    
ஜோர் லகா கே... ஹயா     கிரிஷ் கிரிஜா ஜோஷி     —     மிதுன் சக்கரவர்த்தி, மகேஷ் மஞ்ச்ரேகர், சீமா பிஸ்வாஸ், குல்ஷன் குரோவர்     இந்தி     நிறைவடையவில்லை
லவ் கிச்டி     ஸ்ரீனிவாஸ் பாஷ்யம்     —     ரந்தீப் ஹூடா, ரிதுபர்னா செங்குப்தா, திவ்யா தத்தா, ராக்கி சாவந்த்     இந்தி     அறிவிக்கப்பட்டது
2009     பேயிங் கெஸ்ட்ஸ்     பரிதோஷ் பெயிண்டர்     ஆவ்னி     ஜி.அஸ்ரானி,சயாலி பகத்,ஆசிஷ் சௌத்ரி,நேஹா தூபியா,ஜாவேத் ஜாப்ரி,செலினா ஜெட்லி,விஜூ கோதெ,இந்தர் குமார்,ஜானி லீவர்,பெயிண்டால்,சங்கி பான்டே,டெல்னாஸ் பால்,வட்சல் சேத்,ஸ்ரேயாஸ் தல்படே     இந்தி     வெளியீட்டு நாள்: ஜூன் 19, 2009