செவ்வாய், 31 அக்டோபர், 2017

நடிகர் எம். கே. தியாகராஜ பாகவதர் நினைவு தினம் நவம்பர் 1 ,1959.


நடிகர் எம். கே. தியாகராஜ பாகவதர் நினைவு தினம் நவம்பர் 1 ,1959.

எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம். கே. டி என அழைக்கப்படும் இவர் ( மார்ச் 1 , 1910 - நவம்பர் 1 ,
1959 ) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். 1934 ஆம் ஆண்டு
பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான
ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.
சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு [1] சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1 , 1959 இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார் [1] . தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை [1] என்ற கருத்து அவருடைய ஆத்ம ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு.
வாழ்க்கைச் சுருக்கம்
தியாகராஜன் இந்தியாவின்
தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை), விசுவகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி - மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார். பல நாடகங்களில் பெண்வேடம் (அயன் ஸ்த்ரீ பார்ட்) புனைந்து பல நடித்த கிருஷ்ணமூர்த்தி தன் குடும்பத்துடன்
திருச்சிக்குச் சென்று உய்யக்கொண்டான் ஆற்றுப்பாலத்திற்கு நகைவேலை செய்தார். [2] தியாகராஜனுக்கு கோவிந்தராஜன் என்னும் தம்பியும் தங்கையும் இருந்தனர்.
சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.
எப். ஜி. நடேச அய்யர் தமது திருச்சி இரசிக இரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் அரங்கேற்றம் நடைபெற்றது. அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கருநாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். கருநாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார்.
கர்நாடக இசையில் தேர்ச்சி
தியாகராஜர், பிடில் வித்வான் பொன்னுவய்யங்கார், திருவையாறு ராமசாமி பத்தர் ஆகியோரிடம் இசைபயின்றார். [2] ஆறு ஆண்டுகள் பயிற்சி தரப்பட்டதும், தியாகராஜனுடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டு, இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத் திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். அவரையொட்டி, மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன. கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு "பாகவதர்" என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது.
நாடக நடிகராக
1926ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.இராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ். டி. சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர்.
திரைப்படத்தில் அறிமுகம்
1934ல் அவர்கள் நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது.
அதன்பிறகு பாகவதர் நடிப்பில், நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936 - பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது),
சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937),
திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1941),
சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக வெளிவந்தன.
லட்சுமிகாந்தன் கொலை
முதன்மை கட்டுரை: லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
இலட்சுமிகாந்தன் என்பவர் "சினிமா தூது" என்ற ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார். இந்தப் பத்திரிகை பின்னர் சட்டப்படி தடைசெய்ய்யப்பட்டது. அதன் பிறகு, "இந்து நேசன்" என்ற மற்றொரு பத்திரிகை மூலம் எழுதி வந்தார் லட்சுமிகாந்தன்.
1944 நவம்பர் 9ம் நாள் சென்னையில் இலட்சுமிகாந்தனை சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
1944 நவம்பர் 27ம் தேதி பாகவதரும்,
என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி இலட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்மீது மேலும் இலண்டன் பிரிவி கவுன்சிலுக்கு முறையீடு செய்யப்பட்டது. அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர்.
பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார்.
மீண்டும் நடிப்பில்
சிறையிலிருந்து வெளிவந்ததும், இராஜமுக்தி (1948), அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன.
நடிப்பு மற்றும் சங்கீதம்
பாட்டு
எம்.கே.டி யின் பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வழக்கமாக (ஆஸ்தான) பாடலெழுதும் பாடலாசிரியரான பாபநாசம் சிவன்[1] , இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராவார். இவரின் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. அவற்றில் சில,
உன்னை அல்லால் ,
நீலகண்டா ,
அம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்) ,
சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன் ,
ஞானக்கண் இருந்திடும் போதினிலே ,
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்,
மன்மத லீலையை வென்றார் உண்டோ,
தீன கருணாகரனே நடராஜா
ராஜன் மஹராஜன்
வதனமே சந்திரபிம்பமோ
போன்ற பல பாடல்கள் இவரின் புகழுக்கு சான்றாக உள்ளன. அவர் பாடல்களில் 4 1/2 கட்டை (குரல் தடிமன்) சுருதியில் (சுதி) பாடக்கூடியவர். குரலில் பெண்களின் நளினத்தன்மை மிகுந்திருக்கும் பல நேரங்களில் பெண் பாடுவது போல் தோன்றுவதுண்டு. சுருதியின் உச்சநிலையிலையிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். இறுதியில் வல்லினமெய் தெரியாமல் பாடக்கூடியவர்.
அவரின் கர்நாடக இசைக்கு சான்றாக
தஞ்சை அருகே நடந்த நிகழ்வை சான்றாக கூறுவர். தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில் [1] இசைக் கச்சேரி செய்யும் பொழுது இரவு அங்கிருக்கும் அரவை இயந்திர நிறுவனத்தின் வழக்கமான அறிவிப்புச் சங்கொலி முழங்கியது, அப்பொழுதும் பாடுவதை நிறுத்தாமால், அந்த சங்கொலிக்கு நிகராக தன் குரலை இழுத்து அது முடியும் வரை பாடினார்[1] . மக்களின் கவனம் முழுவதும் அவரின் குரலின் மீதுதான் இருந்தது.
அரிதாஸ் படத்தில் வரும் பாடலான
மன்மதலீலை [1] என்ற பாடல் சாருகேசி எனும் பாரம்பரிய இசையில் பாடப்பட்டது. அந்த பாடலுக்குப்பிறகே பிற கர்நாடக இசை வித்துவான்கள் சாருகேசி (26 வது மூலராகம்-(மேளகர்த்தா)) [1] இசையை கச்சேரியில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை பிரபல கர்நாடக இசை விமர்சகர்
சுப்புடு [1] "சாருகேசியை பிரபலமாக அறிமுகப்படுத்தியவர்" என்று தியாகராஜ பாகவதைரை இவ்வாறு வர்ணிக்கின்றார்.
அவரின் இசையை செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தன்ர்[1] . அனைவருக்கும் புரியும்படி பாடினார்.
நடிப்பு
அன்றைய நாட்கள் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக்கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக்கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும் [1] . ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சிபெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சிபெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்கு போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க மதுரை செல்வந்தரான நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வேங்கட கிருட்டிணன், மதுரை டாக்கிஸ் என்ற குழுஅமைத்து படமெடுக்க முன்வந்தார். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ் [1] நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றி பெற்றதினால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம்[1] என்று பெயர் பெற்று இன்றுவரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது.
அவரின் சிகையலங்காரம் பாகவதர் சிகையலங்காரம் என்று அனைவராலும் அன்றைய நிலையில் பின்பற்றபட்டு அனைத்து தரப்பினரும் அலங்கரித்து கொண்டனர்.
தமிழ்த்திரையுலகின் முதல் உயர் நட்சத்திரமாக (சூப்பர் ஸ்டார்) [1] கருதப்படுகின்றார். இவர் 1934 இல் பவளக்கோடியின் மூலம் அறிமுகமானவர் மறைவுக்கு முன் வரை 14 படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலும் வெற்றி பெற்றப் படங்களே. திருநீலகண்டர், அம்பிகாபதி, சிந்தாமணி , முதல் வெற்றியைக் கொடுத்த படங்கள். 1944 இல் வெளியிடப்பட்ட அரிதாஸ் 3 வருடம் ஒரே திரையரங்கமான பிராட்வே திரையரங்கில் ஒடி சாதனைப் படைத்தது. அவர் நடித்த கடைசி திரைப்படம்
சிவகாமி
மறைவு
சிவகாமி படத்தின் இறுதிக் காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காட்சிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார். கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்கத் தடுமாறினார் சிந்தாமணியில் பாடிய
“ ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே (பொழுதினிலே), ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ ”
என்று அவர் அப்படத்தில் பாடிய நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார் [1] .
இறுதியில் நவம்பர் 1 , 1959 , சென்னை பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார்.

இவர் நடித்த திரைப்படங்கள்
1. பவளக்கொடி (1934)
2. நவீன சாரங்கதாரா (1935)
3. சத்தியசீலன் (1936)
4. சிந்தாமணி (1937)
5. அம்பிகாபதி (1937)
6. திருநீலகண்டர் (1939)
7. அசோக்குமார் (1941)
8. சிவகவி (1943)
9. ஹரிதாஸ் (1944)
10. ராஜ முக்தி (1948)
11. அமரகவி (1952)
12. சியாமளா (1952)
13. புது வாழ்வு (1957)
14. சிவகாமி (1959)
இவரைப் பற்றிய நூல்கள்
எம். கே. டி. பாகவதர் கதை - விந்தன்
பாகவதர் வரலாறு - மாலதி பாலன்


எம்.கே.தியாகராஜ பாகவதர் 10.

தன் வசீகரக் குரலால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர், ‘எம்.கே.டி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் (M.K.Thyagaraja Bhagavathar) பிறந்த தினம் இன்று (மார்ச் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மாயவரத்தில் (1910) பிறந்தவர். தந்தை கிருஷ்ணமூர்த்தி. இவரது சிறு வயதிலேயே குடும்பம் திருச்சியில் குடியேறியது. இவருக்கு இசையில்தான் ஆர்வம் அதிகம் இருந்தது.


* 10 வயதில் திருச்சி ரசிக ரஞ்சன சபாவில் அரிச்சந்திரன் நாடகத்தில் நடித்தார். இவரது குரல் வளத்தைக் கண்ட வயலின் வித்வான் மதுரை பொன்னு ஐயங்கார், இவருக்கு கர்நாடக இசை கற்றுத் தந்தார். நாடக ஆசான் நடராஜ வாத்தியாரிடம் நடிப்புப் பயிற்சி பெற்றார்.

* 6 ஆண்டுக்குப் பிறகு, எம்.கே.டி.யின் மேடைக் கச்சேரி அரங்கேறியது. 4 மணி நேரம் நடந்த அந்த கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது. ‘‘தியாகராஜன் ஒரு பாகவதர்’’ என்று விழாவில் மிருதங்க வித்வான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார். அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்துகொண்டது.

* 1926-ல் திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக நடித்தார். 1934-ல் இந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக வந்தது. படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார். படம் 9 மாதங்கள் ஓடியது. இதையடுத்து, தமிழ்த் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.

* இவரது வெற்றிப் பயணத்தில் 1944-ல் ஒரு தடங்கல் ஏற்பட்டது. லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலை வழக்கில் எம்.கே.டி.க்கும் அவரது நண்பர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

* நீண்ட விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். 1948-ல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனாலும், இவரது பாடல்கள் பிரபலமடைந்தன.

* எம்.கே.டி. மனித நேயம், தயாள குணம் கொண்டவர். மற்றவர்களின் உதவியை விரும்பாத அவர், வாழ்க்கையின் நெருக்கடிகளை கம்பீரமாக எதிர்கொண்டார்.

* அவரது பாடல்கள், பாமரர்களும் ரசிக்கும் விதமாக இருந்தன. பல கோடி மக்களின் இதயங்களில் அப்பாடல்கள் இன்னமும் எதிரொலிக்கின்றன. இவரது சிகையலங்காரம் ‘பாகவதர் கிராப்’ என்று புகழ்பெற்றது.

* தமிழ்த் திரையுலகின் முதல் ‘சூப்பர் ஸ்டாராக’ பாகவதர் கருதப்படுகிறார். 1944-ல் வெளிவந்த இவரது ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, ‘3 தீபாவளி கண்ட திரைப்படம்’ என்ற சாதனையைப் படைத்தது.

* தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர், ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் 49 வயதில் உடல்நலக் குறைவால் (1959) மறைந்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பிறந்த நாள் நவம்பர் 1 , 1973 .


நடிகை ஐஸ்வர்யா ராய் பிறந்த நாள் நவம்பர் 1 , 1973 .

ஐஸ்வர்யா ராய் (பி. நவம்பர் 1 , 1973 ) பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார்.
அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் உயிரியலார், அம்மா இல்லத்தரசி. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படை ஒரு பொறியாளர் உள்ளார்.
ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார்.
சொந்த வாழ்க்கை
ஐஸ்வர்யா 1999ஆம் ஆண்டு முதல் இந்தி நடிகர் சல்மான்கானுடன் "Dating" எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த இணை பிரிந்த பொழுது ராய் பல்வேறு வகையில் துன்புற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் மறுத்துப் பேசியிருந்தார்.
2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும்
அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை மணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது
.

திரைப்பட வாழ்க்கை
ஆரம்பகாலம் (1997-98)
இவர் 1997 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில்
இருவர் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார், இப்படத்தில் இவர் மோகன்லால் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். ராய் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் நடிகை ஜெ. ஜெயலலிதா வேடங்களில் நடித்தார்.
இவர் நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்
வருடம் தலைப்பு மொழி க
1997 இருவர் தமிழ் ப க
1997 அவுர் பியார்ஹோ கயா இந்தி
1998 ஜீன்ஸ் தமிழ் ம
1999 ஆப் லாட் சாலன் இந்தி ப
1999 ஹம் தில் தே சுகே சனம் இந்தி ந
1999 ரவோயி சந்தமாமா தெலுங்கு
1999 தாள் இந்தி ம
2000 மேளா இந்தி ச
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தமிழ் மீ ப
2000 ஜோஷ் இந்தி
2000 ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹாய் இந்தி ப்
2000 தாய் அக்ஷார் பிரேம் கே இந்தி ச க
2000 முஹபத்தீன் இந்தி ம
2001 அல்பேலா இந்தி ச
2002 ஹம் துமாரே ஹெய்ன் சனம் இந்தி ச
2002 ஹம் கிசிசே கும் நஹி இந்தி க ர
2002 23 மார்ச் 1931:ஷாஹீத் இந்தி
2002 தேவ்தாஸ் இந்தி ப (ப
2002 சக்தி இந்தி ஐ
2003 சோகர் பலி வங்காளம் ப
2003 தில் க ரிஷ்தா இந்தி த
2003 குச் நா கஹோ இந்தி ந
2004 ப்ரைட் & ப்ரேசுடீஸ் ஆங்கிலம் ல
2004 காக்கி இந்தி ம
2004 க்யூன்..! ஹோகயா நா இந்தி த ம
2004 ரெயின்கோட் இந்தி நீ
2005 சப்த் இந்தி
அ வத
2005 பியூட்டி அவுர் பப்ளீ இந்தி
2005 தி மிஸ்ட்ரஸ் ஆஃப் ஸ்பீசிஸ் ஆங்கிலம் த
2006 உம்ராவ் ஜான் இந்தி உ
2006 தூம் 2 இந்தி ச
2007 குரு இந்தி ச
2007 ப்ரவோக்ட் ஆங்கிலம் க அ
2007 தி லாஸ்ட் லிஜின் ஆங்கிலம் மீ
2008 ஜோதா அக்பர் இந்தி ஜ
2008 சர்கார் ராஜ் இந்தி அ ர
2009 தி பிங்க் பாந்தர் 2 ஆங்கிலம் ச ச
2010 ராவண் இந்தி ர
2010 ராவணன் தமிழ் ர ச
2010 எந்திரன் தமிழ் ச
2010 ஆக்சன் ரீப்ளே இந்தி ம
2010 குஜாரிஷ் இந்தி ச ட
2012 லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் இந்தி
2012 ஹீரோயின் இந்தி
எம். எல். வசந்தகுமாரி ( M. L. Vasanthakumari , 03 சூலை 1928 - 31 அக்டோபர் 1990)
தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகராக இருந்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம். எல். வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார். தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர்.
சென்னையில் ஆங்கிலப்பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர், பிரபல பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்துவிட்டார்.
ஆக்கங்கள்
தெலுங்கு பாடல்கள்
ஆண்டு படம் பாடல்
1958 பூகாளிதாசு
1. தேவா மகாதேவா
2. முன்னீட்ட பவலிஞ்சு நாகசயனா
சுத
கோ
தமிழ்ப் பாடல்கள்
ஆண்டு படம் பாடல்
1948 ராஜ முக்தி
1. குலக்கொட தழைக்க
2. ஆராரோ நீ ஆராரோ
3. இங்கும் அங்கும் எங்க இன்பமே
4. என்ன ஆனந்
5. சந்தோசமா அன்பர் வருவ
1948 கிருஷ்ண பக்தி ராதா சமேத கிருஷ்ணா
1949 நல்லதம்பி கானலோலன் மதனகோபால
1949 வாழ்க்கை
கோபாலனோ நான் ஆடுவேனே
1949
1. புவி ராஜா
2. காண்பன யாவும் காவியம் போலே
சுப்பையா நாயுடு &
சுப்புராமன்
1950 மந்திரி குமாரி
1. இசைக் கலையே
2. காதல் பலியாகினி
3. ஆகாஆகா வாழ்விலே
4. எண்ணும் பொழுதில் இன்பம்
5. மனம் போல வாழ்வு பெறுவோம
1950 ஏழை படும் பாடு
1. யௌவனம இன்ப கீதம்
2. கண்ணன் ம நிலையே
1951 ஓர் இரவு அய்யா சாமி ஆவோஜி சா
1951 மணமகள்
1. எல்லாம் இன்பமயம்
2. சின்னஞ்சி கிளியே கண்ணம்மா
3.பாவியினு படுபாவி
4. திறந்த கூட்
1951 ராஜாம்பாள் 1. ஆகாஆகா மனைவியாவ
1952 தாய் உள்ளம்
1. கொஞ்சும் புறாவே
2. வெள்ளை தாமரை பூவ
3. கோவில் முழுதும் கண்டேன்
4. கதையைக் கேளடா
1952 புரட்சி வீரன் காரணம் தெரியாமல்
1952 பணம்
1. ஏழையின் கோயிலை நாடினேன்
2. குடும்பத்த விளக்கு
1952 அந்தமான் கைதி
காணி நிலம் வேண்டும் பராசக்தி
1953 மனிதன் குயிலே உன
1953 நால்வர்
1. வானமீதில
2. இன்பம் கொள்ளுதே
3. மயிலே
4.இருள் சூழ் வாழ்வில் ஒள வீசும் நிலவே
1953 மனிதனும் மிருகமும்
1. இன்பக்குயி குரலினிம
2. இமய மலைச் சாரலிலே
1953 இன்ஸ்பெக்டர்
1. வாராய் மனமோகனா
2. மதன சிங்க நீ வா
3. மூடி இரு என் விழியில்
1953 அன்பு
1. ஆடவரே நாட்டிலே
2. இசைபாடி
1953 என் வீடு
1. பூமியில ஒரு
2.கொஞ்சு மொழி
3. ராம ராம
1953 கண்கள் இன்ப வீணைய மீட்டுது
1954 வைர மாலை
1. வஞ்சம் இத வாஞ்சை இத
2. கூவாமல் கூவும் கோகிலம்
3. உன்னை எண்ணும் ப
4. செந்தாமர கண்ணனே
1954 ரத்தக் கண்ணீர்
1. கதவைச் சாத்தடி
2. அலையின் சங்கே நீ ஊதாயோ
1955 காவேரி மஞ்சள் வெயி மாலையிலே
1955 காவேரி மனதினிலே நான் கொண்ட
1955 கள்வனின் காதலி
தமிழ்த் திருநாடு தன்னைப் பெ
1956 கண்ணின் மணிகள்
கண்ணின் மணியே வா
1956 குலதெய்வம்
1. தாயே யசோதா
2. வாராயோ என்னைப் பாராயோ
3. ஆணும் பெண்ணும் வாழ்விலே
1956 மதுரை வீரன்
1. ஆடல் காணீ
2. செந்தமிழா எழுந்து வாராயோ
1956 தாய்க்குப்பின் தாரம்
நாடு செழித் நாளும் உழைத்திடடா
1957 சக்கரவர்த்தி திருமகள்
எந்தன் உள்ளம் கொள்ளை கொள்ள வந்த யாரோ
1957 இரு சகோதரிகள் தாயே உன் செயலல்லவ
1957 வணங்காமுடி சிரமதில் திகழ்வது
1957 கற்புக்கரசி
1. கனியோ பாகோ கற்கண்டோ
2. விழியோட விளையாடு
1959 மாமியார் மெச்சிய மருமகள்
1. மோகன ரங் என்னைப் பார
2.கண்ணா வா வா மணிவண் வா வா
3. மைத்துனர மைத்துனரே
4. விரல் மோத இங்கே....
5. இலவு காத் கிளிபோல்
1959 தங்க பதுமை வருகிறாய் உன்னைத் தே
1959 காவேரியின் கணவன்
வண்ணத்தமிழ் சொர்ணக்கிள
1959 கல்யாணிக்கு கல்யாணம்
ஆனந்தம் இன்ற ஆரம்பம்
1960 பார்த்தீபன் கனவு
1. அந்தி மயங்குதடி
2. வடிவேறி திரிசூலம் தோன்றும்
1960 மீண்ட சொர்க்கம் ஆடும் அருள் ஜோதி
1960 பெற்ற மனம் சிந்தனை செய்யடா
1960 மன்னாதி மன்னன்
1. கலையோட கலந்தது உண்
2. ஆடாத மனம உண்டோ
1960 ராஜ பக்தி கற்க கசடற கற்றபின்
1960 ராஜா தேசிங்கு பாற்கடல் அல மேலே
1961 கொங்கு நாட்டுத் தங்கம்
இருந்தும் இல்லாதவரே
1962 விக்கிரமாதித்தன் அதிசயம் இவ
1965 மகனே கேள் கலை மங்கை உருவம் கண்ட
மல்லிய மங்களம் அவரின்றி நானில்லை
மனசுக்குள்ள மறைச்சு வ முடியலே
தொழில் வாழ்க்கை
இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:
ஸ்ரீவித்யா
சுதா ரகுநாதன்
ஏ. கன்யாகுமரி
சாருமதி ராமச்சந்திரன்
மீனா சுப்ரமணியன்
சிறப்புகள்
சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு [ சான்று தேவை] . தனது 49 ஆவது வயதில் இவ்விருதினைப் பெற்றார்.
விருதுகள்
சங்கீத நாடக அகாதமி விருது , 1970 [1]
மதிப்புறு முனைவர் பட்டம், 1976 ; வழங்கியது: மைசூர் பல்கலைக்கழகம்
சங்கீத கலாநிதி விருது , 1977; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
இசைப்பேரறிஞர் விருது , 1978 [2]
பத்ம பூஷன் விருது
சங்கீத கலாசிகாமணி விருது , 1987, வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி

சனி, 28 அக்டோபர், 2017

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பிறந்த நாள் அக்டோபர் 29.1986.


நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பிறந்த நாள் அக்டோபர் 29.1986.

சிறீதேவி விஜயகுமார் (பிறப்பு 29 அக்டோபர் 1986) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் ரிக்சா மாமா திரைப்படத்தில் தோன்றினார். மேலும் இவர் தமிழ் , தெலுங்கு , கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.
வாழ்க்கை
சிறீதேவி விஜயகுமார், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர். இவருக்கு வனிதா ,
பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும்
அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளார்கள்.
18 ஜூன் 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.


திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
1992
ரிக்சா மாமா
அம்மா வந்தாச்சு
டேவிட் அங்கிள் தேவி
தெய்வ குழந்தை
சுகமான சுமைகள் பாபு
1997 ருக்மணி
2002 ஈஸ்வர் இந்திரா
காதல் வைரஸ் கீதா
2003.

பிரியமான தோழி ஜூலி
தித்திக்குதே அனு
நின்னே இஸ்டப்பட்டேனு கீதாஞ்சலிi
2004 தேவதையைக் கண்டேன் உமா
2005 நிரக்சனா அனு
கஞ்சரங்கா ஊர்மிளா
2006 ஆதி லட்சுமி சுரேக்கா
2007 Preethigaagi Mili
2008 Pellikani Prasad சுஜாதா கோபால்ராவ்
2009 மஞ்சீரா பீனா
2011
வீரா சத்யா
செல் போன் 2013

நடிகை ரீமா சென் பிறந்த நாள் அக்டோபர் 29.1981


நடிகை  ரீமா சென்  பிறந்த நாள் அக்டோபர் 29.1981

ரீமா சென் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். முதலாவதாக தெலுங்கு திரைப்படங்கள் இரண்டில் நடித்தார். மின்னலே திரைப்படம் மூலம்
தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கு , தமிழ் திரைப்படங்களுக்கு மேலதிகமாக இந்தி, வங்காள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பிறப்பு 29 அக்டோபர் 1981 (அகவை 36)
கொல்கத்தா , இந்தியா
தேசியம் இந்தியன்
இனம் பெங்காலி இந்து
பணி நடிகை , மாடல் அழகி
சமயம் இந்து மதம்

வியாழன், 26 அக்டோபர், 2017

நடிகர் சிவகுமார் பிறந்த நாள் அக்டோபர்27.1941



நடிகர் சிவகுமார் பிறந்த நாள் அக்டோபர்27.1941.

சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின்
கோயம்புத்தூர் அருகில் உள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.

சிவகுமார் பழனிச்சாமி
பிறப்பு பழனிச்சாமி கவுண்டர்
27 அக்டோபர் 1941
(அகவை 75)
காசிகவுண்டன்புதூர் ,
கோயம்புத்தூர் , தமிழ் நாடு , இந்தியா
வாழ்க்கைத் துணை
இலட்சுமி சிவகுமார்
பிள்ளைகள் சூர்யா , கார்த்தி மற்றும் பிருந்தா
திரைப்பட நடிகர்கள் சூர்யா , கார்த்தி ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.

நடித்துள்ள படங்கள் சில..

காக்கும் கரங்கள்
மோட்டார் சுந்தரம் பிள்ளை
தாயே உனக்காக
முதல் இரவு
சிந்து பைரவி
மறுபக்கம்
ரோசாப்பூ ரவிக்கைக்காரி
அன்னக்கிளி
காதலுக்கு மரியாதை
பொன்னுமணி
கவிக்குயில்
டைகர் தாத்தாச்சாரி
பூவெல்லாம் உன் வாசம்
புவனா ஒரு கேள்விக்குறி
கந்தன் கருணை
சேது
மோட்டார் சுந்தரம்பிள்ளை
கண்ணன் ஒரு கைக்குழந்தை
ஆணிவேர்
பூவெல்லாம் உன்வாசம்

தொலைக்காட்சித் தொடர்கள்

௭த்தனை மனிதர்கள் (1997)
சித்தி (1999-2001)
அண்ணாமலை (2002-2005)

நூல்கள்

இது ராஜபாட்டை அல்ல
கம்பன் என் காதலன்
டைரி(1945-1975)
தமிழ் சினிமாவில் தமிழ்
கம்பராமாயண சொற்பொழிவு
கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன..

நடிகை அமலா பால் பிறந்த நாள்: அக்டோபர் 26, 1991.


நடிகை அமலா பால் பிறந்த நாள்: அக்டோபர் 26, 1991.

அமலா பால் (பிறப்பு: அக்டோபர் 26, 1991) ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
2009 நீலதம்ரா பீனா
2010 வீரசேகரன் சுகந்தி
2010 சிந்து சமவெளி சுந்தரி
2010 மைனா மைனா
2011 இது நம்முடே கதா ஐஸ்வர்யா
2011 விகடகவி கவிதா
2011 தெய்வத் திருமகள்
சுவேதா ராஜேந்திரன்
2011 பெஜவாடா கீதாஞ்சலி
2012 வேட்டை ஜெயந்தி
2012
காதலில் சொதப்புவது எப்படி பார்வதி
2012 லவ் பெய்லியர்
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் சாருலதா
2012 ஆகாஷின்டே நிறம்


விருதுகள்
வருடம் விருது துறை த
2011
அம்ரிதா - எப். ஈ. ஈ. கே. ஏ திரை விருதுகள்
சிறந்த தமிழ் நடிகை
மை
எடிசன் விருதுகள்
சிறந்த புதுமுகம்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
சிறந்த நடிகை - தமிழ்
எம். ஜி. ஆர். - சிவாஜி விருதுகள்
சிறந்த புதுமுக நடிகை
விஜய் விருதுகள்
சிறந்த நடிகை
சிறந்த அறிமுகம்
2012 ஜெயா விருதுகள்
Youth Female Icon Of The Year தெ


திருமண அறிவிப்பு

அமலாபால் இயக்குநர் விஜய் உடன் யூன் 12ல் திருமணம் செய்துகொள்வதாக பத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பில் இருவரும் ஒருமனதாக அறிவித்தனர். 2016-ம் ஆண்டு மணமுறிவு பெற்றனர்.

நடிகை அசின் பிறந்த நாள் அக்டோபர் 26 , 1985.



நடிகை அசின் பிறந்த நாள் அக்டோபர் 26 , 1985.

அசின் தொட்டும்கல் ( மலையாளம் : അസിന് തോട്ടുങ്കല്), (பிறப்பு அக்டோபர் 26 , 1985
) பரவலாக அசின் என்ற பெயரால் அறியப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகையும், பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ஆவார்.
2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது முதல் வர்த்தகரீதியான வெற்றித் திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி ஆகும். அத்திரைப்படத்திற்காகச் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அவரது முதல் தமிழ் திரைப்படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி வெற்றித் திரைப்படமாக அமைந்தது. கஜினி (2005) திரைப்படத்தில் அவரது பாராட்டத்தக்க நடிப்பிற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
கஜினி (2005), வரலாறு (2006), " போக்கிரி " (2007), " வேல் " (2008), " தசாவதாரம் " (2008) ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான
கஜினி யின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால்பதித்தார், இதன்மூலம்
பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். தற்போது இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அறிமுகம்

சத்யன் அந்திக்காடின் மலையாளத் திரைப்படமான நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா (2001) படத்தில், 15 ஆவது வயதில் ஒரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமானார்.
பின்னர் ஓராண்டு காலம் படிப்பில் கவனத்தைச் செலுத்திய அசின், அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பினார்..
அவரது முதல் தெலுங்கு மொழிப் படமான இதில் ரவி தேஜாவுக்கு இணையாக,
தமிழ்ப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார், இப்படம் இவருக்கு சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. அதே ஆண்டில்,
சிவமணி, என்ற தனது இரண்டாவது தெலுங்குத் திரைப்படத்தில்
நாகார்ஜூனாவுக்கு இணையாக இவர் நடித்ததற்கு சந்தோசம் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.
அதனையடுத்து இவர் நடித்த, லட்சுமி நரசிம்மா மற்றும் கர்சனா ஆகிய இரண்டு
தெலுங்கு திரைப்படங்களும், வெற்றிப் படங்களாக அமைந்ததோடு தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இவரது இடத்தை வலுப்படுத்தியது.
தமிழ் மொழியில் அசினின் முதல் படம்
எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, இதில் இவர் ஜெயம் ரவிக்கு இணையாக நடித்தார். இது அம்மா நன்னா ஓ தமிழா அம்மயி படத்தின் தழுவல் திரைப்படமாகும்.


குடும்பம்

கேரள மாநிலத்தின் கொச்சியில் ஒரு
கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் யோசப்பு தொட்டும்கல், செலின் தொட்டும்கல் ஆவர்.
தொடுபுழாவைச் சேர்ந்த இவரது தந்தை யோசப்பு தொட்டும்கல் பல தொழில்நிறுவனங்களை நிர்வகித்து வந்தார். தற்போது அவர் மகளின் திரைப்படங்களில் அவருக்கு உதவியாக உள்ளார். அசினின் வெளிநாட்டு படப்பிடிப்புகளில் அசினுடன் செல்கிறார். அசினின் தாயார் செலின் தொடும்கல் தனது மகளுடன் வசிப்பதற்காக
கொச்சியிலிருந்து சென்னைக்கும் அங்கிருந்து மும்பைக்கும் தொடர்ந்து இடம் மாறினார். இருப்பினும் அவரது தனது மருத்துவத் தொழிலை தொடர்கிறார்.
தனது பெயரின் பொருள் "தூய்மையானது, களங்கமில்லாதது" என்று அசின் கூறியிருக்கிறார். தனது பெயரில் இருக்கும் முதலெழுத்து 'அ'
சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் அதற்கு "இல்லாதது" என்று பொருள் என்றும், சின் என்பது ஆங்கிலத்தில் இருந்து வந்தது என்றும் கூறினார்.

பாடகர் மனோ பிறந்த நாள் அக்டோபர் 26, 1965.



பாடகர் மனோ பிறந்த நாள்  அக்டோபர் 26, 1965.

மனோ ( தெலுங்கு : మనో) (பிறப்பு அக்டோபர் 26, 1965) தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடிவரும் ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ் ,
மலையாளம் , தெலுங்கு , கன்னடம் மற்றும்
இந்தி மொழிகளில் பாடியுள்ளார். தமது திரைவாழ்வை நடிகராகத் துவங்கி பின்னர் பின்னணிப் பாடகராக புகழ்பெற்றார். சின்னத் தம்பி என்ற படத்தில் "தூளியிலே" என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்றார்.

இளமை வாழ்வும் திரைவாழ்வும்
மனோ
மனோ தெலுங்கு இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் நாகூர் பாபு ஆகும். இவரது பெயரை பிற்காலத்தில் மனோ என்று
இளையராஜா மாற்றினார். தமது கருநாடக இசைப் பயிற்சியை பிரபல பாடகர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றார்.
துவக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து 15 தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்  . 1984ஆம் ஆண்டு தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் தொடங்கினார். 1984ஆம் ஆண்டு கற்பூரதீபம் என்ற படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது  . அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார். 1986ஆம் ஆண்டு
இளையராஜா பூவிழி வாசலிலே என்றத் தமிழ்த் திரைப்படத்தில் "அண்ணே அண்ணே" என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் திருப்புமுனை தந்த "செண்பகமே", "மதுரை மரிக்கொழுந்து வாசம்" மற்றும்
வேலைக்காரன் படத்தில் "வா வா கண்ணா வா", "வேலையில்லாதவன்" போன்ற பாடல்கள் மூலம் பரவலாக அறியப்படத் தொடங்கினார். சிங்கார வேலன் படத்தில் ஓர் வேடமேற்று நடித்துள்ளார்.
காதலன் படத்தில் "முக்காலா முக்காபலா",
முத்து படத்தில் "தில்லானா தில்லானா" மற்றும் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் "அழகிய லைலா" போன்ற பாடல்கள் பெருவெற்றி பெற்றன.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி குறி
1979 நீடா தெலுங்கு
1979 ரங்கூன் ரவுடி தெலுங்கு ராஜூ கதாபா
1992 சிங்கார வேலன் தமிழ் மனோவ
2003 எனக்கு 20 உனக்கு 18 தமிழ்
2003
நீ மனசு நாக்கு தெலுசு
தெலுங்கு
2014 வெற்றிச் செல்வன் தமிழ்
2015 சிவம் தெலுங்கு
பாடிய சில தமிழ் பாடல்கள்
திரைப்படம் பாடல் உடன் பாடியவ
பூவிழி வாசலிலே
அண்ணே அண்ணே நீ
சொல்ல துடிக்குது மனசு
தேன்மொழி ௭ந்தன் தேன்மொழி
சின்ன தம்பி அட உச்சந்தல உச்சியிலே
சின்ன தம்பி தூளியிலே ஆடவந்த
காதலன் முக்காலா முக்காபுலா சுவர்ணல
அமைதிப்படை
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சுவர்ணல
உள்ளத்தை அள்ளித்தா
அழகிய லைலா
சின்ன கண்ணம்மா
௭ந்தன் வாழ்க்கையின் அர்த்தம்


பாடகர் மனோ

பிரபல பின்னணி பாடகர் மனோவின் இயற்பெயர் நாகூர் பாபு. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சட்டேனபல்லியில் 1965 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை ரசூல், விஜயவாடா வானொலி நிலையத்தில் பணியாற்றியவர் . தாயார் ஷகீதா மேடை நடிகையாக இருந்தார். இதனால் சிறு வயதிலிருந்தே நடிப்பும், பாடும் திறனும் இவருக்கு இயல்பாகவே  அமைந்தது.

பிரபல பாடகர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் கர்நாடக இசையை பயின்ற இவர். 1970 ஆம் ஆண்டில் ரங்கூன் ரவுடி மற்றும் கேது Gadda போன்ற தெலுங்கு படங்களில் துணை பாத்திரங்களில் நடித்தார்  அதைத் தொடர்ந்து நாடகங்களிலும், பதினைந்துக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும் நடிக்க  இவருக்கு வாய்ப்பு கிடைத்தது .

தந்தையின் உதவியால், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அறிமுகம் கிடைக்க, அவரது இசையில்  பாடுவதற்காக சென்னை வந்தார்.இவர்  அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்த இவர்,  1984ஆம் ஆண்டுமுதல்  தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் ஆரம்பித்தார்.  அவரதி இசையில் உருவான கற்பூரதீபம் என்கிற படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா இசையில் ஒரு பாடலை பாடினர்.

1986ஆம் ஆண்டு தமிழில் பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற  "அண்ணே அண்ணே" பாடலைப் பாடும் வாய்ப்பை இவருக்கு வழங்கினார் இசைஞானி இளையராஜா. தொடர்ந்து எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் "செண்பகமே", "மதுரை மரிக்கொழுந்து வாசம்" பாடல்களைப பாடும் வாய்ப்ப்களை இவறுக்குத் தந்தார்  இளையராஜா. இந்தப் பாடல்கள் இவருக்கு பெரும் புகழை தந்தன .

ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் படத்தில் "வா வா கண்ணா வா", "வேலையில்லாதவன்" போன்ற பாடல்கலை பாடினர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் காதலன் படத்தில் "முக்காலா முக்காபலா", முத்து படத்தில் "தில்லானா தில்லானா" பாடல்களை பாடினர். சிற்பி இசையில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் "அழகிய லைலா", வித்யாசாகர் இசையில் கர்ணா படத்தில் "ஏ ஸபா" போன்ற பாடல்களை பாடினர். இந்தப் பாடல்கள் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரது இசையிலும் பாடும் வாய்ப்பினைப் பெற்றார் இவர் .

கே.எஸ் சித்ரா, ஸ்வர்ணலதா, ஜானகி ஆகிருடன் இணைந்து ஏராளமான டூயட் பாடல்கள் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, இந்தி ஆகிய மொழிகளில் 1,200 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் இவர்   250 நாடகங்களிலும், 3000 மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்

கமல் நடித்த அத்தனை படங்களுக்கும் தெலுங்கு மொழியில்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்தார் என்றால்   ரஜினி நடித்த பல படங்களுக்கு தெலுங்கில் குரல் கொடுத்தவர் இவர் .

அனைத்து இசையமைப்பாளர்களுடனும் அவர் பணியாற்றினாலும், இசைஞானி இளையராஜா இசையில்தான் இவர் அதிகம் பாடியுள்ளார். நாகூர் பாபு என்கிற இவரது பெயரை மனோ என்று மாற்றி வைத்தவரும்  இசைஞானி இளையராஜாதான்

கமல் நடித்த சிங்காரவேலன் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள இவர் இப்போது சின்னத்திரையில்  நடக்கும் இசைப் போட்டிகள் பலவற்றிற்கு நடுவராக இருக்கிறார்.

சின்னத் தம்பி படத்தில் பாடிய "தூளியிலே" என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்ற இவர். தமிழக அரசின் கலைமாமணி விருதையும்  ஆந்திர அரசின் நந்தி விருது, கண்டசாலா விருது போன்ற விருதுகளையும் பெற்ருள்ளார்

இவரது மனைவியின் பெயர்  ஜமீலா.  இவர்களுக்கு  ஷாகீர், ராபி என்கிற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மனோவின் பாடல்களில் மட்டுமின்றி பழகும் தன்மையிலும் இனிமை இருக்கும் இவரது வெற்றியின் ரகசியம் அதுதான் என்றால் அது மிகையில்லை  

திங்கள், 23 அக்டோபர், 2017

நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் நினைவு தினம் அக்டோபர் 24, 2014 .



நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் நினைவு தினம் அக்டோபர் 24, 2014 .

எஸ். எஸ். ஆர். அல்லது எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும்
சேடபட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன் (சனவரி 1928 - அக்டோபர் 24, 2014 ) தமிழகத் திரைப்பட நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளரும் பாடலாசிரியரும் அரசியல்வாதியும் ஆவார். இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர். 1950கள் , 60களில் தமிழ்த் திரையுலகில் தனது அழகு, அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு ஆகியவற்றால் புகழ்பெற்று விளங்கினார். சுமார் 85 படங்களில் நடித்தார். இவர் நடித்த
பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. 1962 ஆம் ஆண்டில் இவர்
தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது தன்வரலாற்றை நான் வந்த பாதை என்னும் பெயரில் நூலாக எழுதியிருக்கிறார்.
நாடகத் துறையில்
சே.சூ.இராசேந்திரன் சேடபட்டியில் தொடக்கக் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்க அடுத்துள்ள நகரப் பள்ளிக்குப் போக வேண்டும். குறைந்த வயதுடையவராக இராசேந்திரன் ஓராண்டு வீட்டிலேயே இருந்தார். அப்பொழுது அவர் தந்தைக்கு நண்பரான சுப்பு ரெட்டியார் என்பவரின் நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.
பின்னர், 'பாய்ஸ் நாடகக் கம்பெனி"யில் குழந்தை நடிகராகச் சேர்ந்தார். பின்னர்
தி. க. சண்முகம் சகோதரர்களின் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா வில் துணை நடிகராக நுழைந்து கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் அக்குழுவில் இருந்து வெளியேறினார்.
திரைப்படத் துறையில்
ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சே.சூ.இராஜேந்திரன், ஜி. இராமநாதனின் இசையமைப்பில் பின்னணிப்பாடகராக திரையுலகில் நுழைந்தார். [3] கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் கருணாநிதியின்
அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற
ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
1958 -இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்“ வெற்றிகரமாக ஓடியது.
எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் பேணி வந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
சாரதா என்னும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கே. எஸ். கோபாலகிருட்டிணனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.
திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலும் நாடகத்தின் தொடர்பை சே.சூ.இரா.விட்டுவிடவில்லை. எஸ்.எஸ்.ஆர்.நாடக சபா என்னும் அமைப்பின் வழியாக பல நாடகங்களை நடத்தினார். அதன் வழியாக பின்னாளில் திரைவுலகில் புகழ்பெற்ற மனோரமா, ஷீலா ஆகியோரை நடிகர்களாக அறிமுகம் செய்தார்.
சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் 1982ஆம் ஆண்டில் இரட்டை மனிதன் என்னும் படத்தில் நடித்தார். அதன் பின்னர் சில படங்களில் கெளரவ வேடமிட்டார். ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.
இலட்சிய நடிகர்
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார்.
தயாரிப்பாளர்
சே.சூ. இரா. தனது ராஜேந்திரன் பிக்சர்ஸ், எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் வழியாக முத்துமண்டபம், தங்கரத்தினம், மணிமகுடம், அல்லி ஆகிய ப்டங்களைத் தயாரித்தார். முத்துமண்டபம் படத்தில் கே. ஆர். விஜயாவை அறிமுகம் செய்தார். அதேபோல மனோரமாவை மற்றொரு படத்தில் அறிமுகம் செய்தார்.
இயக்குநர்
சே.சூ.இராசேந்திரன் தானே கதைத்தலைவனாக நடித்து தங்கரத்தினம் (1960), மணிமகுடம், அல்லி ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
நாடகக் குழு
சே. சூ. இரா. திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கியபொழுது எஸ். எஸ். ஆர். நாடக மன்றம் என்னும் நாடக நிறுவனத்தின் உரிமையாளாராக இருந்தார். அந்நிறுவனத்தில் நடிகர்களாக இருந்த மனோரம்மா , ஷீலா ஆகியோர் பின்னாளில் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்களாக விளங்கினார்கள். [2]
அரசியல்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சே.சூ.இராசேந்திரன் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
1958ஆம் ஆண்டில் தி.மு.க. அறிவித்த பிரதமர் நேருவிற்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தின் பொழுது முன்னெச்சரிகை நடவடிக்கையாக சே.சூ.இரா. கைதுசெய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். [4]
1965ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திப் போராட்டத்தின் பொழுது கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் 12நாள்கள் அடைக்கப்பட்டார்.
1962 இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் இவராவார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி. மு. க.வின் சார்பில் 1970 ஏப்ரல் 3 ஆம் நாள் முதல் 1976 ஏப்ரல் 2 வரை பணியாற்றினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தி.மு.க.விலிருந்து விலகி ம. கோ. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) தொடங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் சார்பாக பின்வரும் பதவிகளை வகித்தார்.
1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வேறுபாட்டில் இவர் வென்றார். [4]
1980ஆம் ஆண்டில் சிறுசேமிப்பு கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1984ஆம் ஆண்டில் ம.கோ.இரா. மருத்துவமனையில் இருந்தபொழுது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அக்கட்சியில் இருந்து பிரிந்துசென்று எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்.கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ] ம.கோ.இரா. நலம்பெற்ற பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ம.கோ.இரா. மறைவிற்கு பின்னர் 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் சட்டம்ன்றத் தொகுதியில் அ.தி.மு.க.(ஜெயலலிதா அணி) சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். [3] அதன் பின்னர் சு. திருநாவுக்கரசு தொடங்கிய எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சிறிதுகாலம் கழித்து அதிலிருந்து விலகி அரசியலில் இருந்தே ஒதுங்கினார்.
குடும்பம்
சூரிய நாராயண தேவர் - ஆதிலட்சுமி இணையர் மகனான சே.சூ.இராசேந்திரன் நாடகத்தில் தன்னோடு இணைந்து நடித்த கேரளத்தைச் சேர்ந்த பங்கசம் என்பவரை மணந்து கொண்டார். அவர்களுக்கு இளங்கோவன், ராஜேந்திர குமார், கலைவாணன், செல்வராஜ் என்னும் நான்கு மகன்களும் பாக்யலட்சுமி என்னும் மகளும் பிறந்தனர்.  1956ஆம் ஆண்டில் குலதெய்வம் படத்தில் தன்னோடு இணைந்து நடித்த சி.ஆர். விசயகுமாரியை அவ்வாண்டிலேயே களவுத் திருமணம் செய்துகொண்டார். அத்திருமணம் சில ஆண்டுகளில் வெளியே தெரியவந்தது. இவர்களுக்கு ரவிக்குமார் என்னும் மகன் பிறந்தார். பின்னர் இருவரும் மனமொத்து மணவிலக்குப் பெற்றுக்கொண்டனர். [2] மூன்றாவதாக தாமரைச்செல்வி என்பவரை சே.சூ.இரா. மணந்துகொண்டார். இவர்களுக்கு கண்ணன் என்னும் மகனும் ஒரு மகளும் பிறந்தனர்.

மறைவு
மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்.எஸ்.ஆர் அக்டோபர் 24, 2014 காலை 11 மணிக்கு சென்னையில் காலமானார்.

நடித்த திரைப்படங்கள்
சே.சூ.இரா. பின்வரும் படங்களில் நடித்திருக்கிறார்:
வ.எண். ஆண்டு திரைப்படம்
01 1947.09.26 பைத்தியக்காரன்
02 1948 ஸ்ரீ ஆண்டாள்
03 1952.10.17 பராசக்தி கதை தம்பி
04 1952.12.27 பணம்
05 1954.03.03 மனோகரா கதை நண்ப
06 1954 சொர்க்க வாசல்
07 1954.09.24 அம்மையப்பன்
08 1954.10.25 ரத்தக்கண்ணீர் கதை நண்ப
09 1956.02.25 ராஜா ராணி
10 1956.09.29 குலதெய்வம்
11 1956.11.01 ரங்கோன் ராதா
12 1957.10.22 முதலாளி கதை
13 1957 புதுவயல்
14 1958.01.14 தை பிறந்தால் வழி பிறக்கும்
15 1958.05.30 பிள்ளைக் கனியமுது
16 1958.05.30 பெற்ற மகனை விற்ற அன்னை
17 1958.07.16 தேடிவந்த செல்வம்
18 1958.12.12 அன்பு எங்கே
19 1958 பெரிய கோவில்
20 1959.02.14
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
21 1959.04.23 கல்யாணிக்கு கல்யாணம்
22 1959.05.19 சிவகங்கைச் சீமை போர்
23 1959.06.26 புதுமைப்பெண்
24 1959.07.10 பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
25 1959.07.17 நாட்டுக்கொரு நல்லவன்
26 1959.10.31 பாஞ்சாலி
27 1959
தலை கொடுத்தான் தம்பி
28 1959 உத்தமி பெற்ற ரத்தினம்
29 1959 அல்லி பெற்ற பிள்ளை
30 1959 சொல்லு தம்பி சொல்லு
31 1959
மாமியார் மெச்சிய மருமகள்
32 1959 பாண்டித்தேவன்
33 1959.12.11 சகோதரி
34 1960.04.13 தெய்வப்பிறவி
35 1960.05.27 சங்கிலித்தேவன்
36 1960.09.02 ராஜா தேசிங்கு
கதை நண்ப
37 1960.10.19 பெற்ற மனம்
38 1960.11.25 தங்கரத்தினம்
39 1960 பொன்னிர் திருநாள்
40 1960 தங்கம் மனசு தங்கம்
41 1961.04.27
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே
42 1961.07.29 குமுதம்
43 1961.11.7 பணம் பந்தியிலே
44 1961 முத்துப்பந்தல்
45 1962.03.16 சாரதா
46 1962.09.14 செந்தாமரை
47 1962.11.23 ஆலயமணி
48 1962 எதையும் தாங்கும் இதயம்
49 1962 முத்துமண்டபம்
50 1962 தெய்வத்தின் தெய்வம்
51 1963.03.09 வானம்பாடி
52 1963.03.15 நீங்காத நினைவு
53 1963.04.12 காட்டு ராஜா
54 1963.06.06 நானும் ஒரு பெண்
55 1963.08.02 குங்குமம்
56 1963.10.26 காஞ்சித் தலைவன்
57 1963.11.15 ஆசை அலைகள்
58 1963.12.25 கைதியின் காதலி
59 1963 வீரத் தளபதி வேலுதம்பி
60 1964 பூம்புகார் கதை
61 1964.04.03 பச்சை விளக்கு
62 1964.07.18 கை கொடுத்த தெய்வம்
63 1964.08.22 வழி பிறந்தது
64 1964.11.03 உல்லாச பயணம்
65 1964 அல்லி
66 1965.01.15 பழநி
67 1965.04.22 சாந்தி
68 1965.06.04 படித்த மனைவி கதை
69 1965.06.19 காக்கும் கரங்கள்
70 1965.07.17 வழிகாட்டி
71 1965.10.23 பூமாலை
72 1965.11.19 மகனே கேள்
73 1965.12.25 ஆனந்தி
74 1966.04.29 அவன் பித்தனா
75 1966.06.18 தேடிவந்த திருமகள்
76 1966.08.12 மறக்க முடியுமா கதை
77 1966.12.09 மணிமகுடம்
78 1969 பெண்ணை வாழ விடுங்கள்
79 1982 இரட்டை மனிதன்
80 1985.05.17 அன்பின் முகவரி
81 1996.04.17 ராஜாளி
82 1998.07.09 தர்மா முதல
83 2000.04.14 வல்லரசு
84 2001.02.16 ரிஷி முதல
85 2003 தம்.


அண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்
 
உணர்ச்சிகரமான நடிப்பாலும், கணீர் குரலாலும் தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.எஸ். ராஜேந்திரனின் நினைவு தினம் இன்று.

60 களில் எம். ஜி. ஆர், சிவாஜி என்ற மாபெரும் ஆளுமைகள் கொடிகட்டிப்பறந்தபோது, அவர்களிடமிருந்து தனித்து, தன் திறமையை வெளிப்படுத்தி, தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த சாதனையாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

மதுரையை அடுத்த சேடப்பட்டியில் 1928-ம் வருடம் பிறந்த ராஜேந்திரனுக்கு, சிறுவயதிலேயே நாடகங்களின் மீது காதல். கல்வித்துறையில் பணியாற்றி வந்த அவரது தந்தை சூரியநாராயணனுக்கு, மகனை அரசுப் பணியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை. வெற்றி என்னவோ ராஜேந்திரனுக்குதான் கிடைத்தது. தனது 6 வயதில் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார்.

தென்னிந்தியாவின் சிறந்த நாடக கலைக்கூடமாக திகழ்ந்த பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பயிற்சி பெற்றார். பின் அவரது தனிப்பட்ட குரல்வளத்தால் வெகுசீக்கிரத்தில் 'பால அபிமன்யு' என்ற நாடகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் தரப்பட்டது. தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சில வருடங்களில் அங்கிருந்து விலகி, நாடக உலகில் அப்போது புதுமைகளை புகுத்திவந்த பிரபல டி.கே.எஸ் சகோதரர்களின் நாடக மன்றத்தில் இணைந்தார். பின்னர் நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு நுழைந்தார்.

சிவாஜிகணேசனின் முதல்படமான 'பராசக்தி'தான் இவருக்கும் முதல் படம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்தில் ராஜேந்திரனுக்கு, நாயகன் சிவாஜியின் அண்ணன்  வேடம் தரப்பட்டது. தெள்ளிய தமிழில் கணீர் குரலோடு ஞானசேகரன் என்ற பாத்திரத்தில் வெளிப்பட்ட இவரின் நடிப்பு,  சிவாஜிக்கு அடுத்தபடியாக யார் இந்த நடிகன் என்று ரசிகர்களால் பேசப்பட்டது. அடுத்தடுத்து பல படங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார். எஸ்.எஸ். ஆர்.



'முதலாளி', 'தலைகொடுத்தான் தம்பி',  'எதையும் தாங்கும் இதயம்', 'குமுதம்', 'ரத்தக்கண்ணீர்', 'கை கொடுத்த தெய்வம்', 'பச்சை விளக்கு', 'குலதெய்வம்', 'தை பிறந்தால் வழிபிறக்கும்', 'தெய்வப்பிறவி', ராஜாராணி', 'காஞ்சித்தலைவன்', 'ராஜா தேசிங்கு', 'ரங்கூன் ராதா' என பல படங்கள் அவருக்கு புகழைத் தந்தன. கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'பூம்புகார்' அவரது சிறந்த திரைப்பட வரிசையில் ஒன்று. 'சிவகங்கை சீமை' திரைப்படத்தில் இவரது கணீர் குரல் வசனங்கள் அப்போது பிரபலம்.

பொதுவாக திரையுலகில் பிரபலமடைந்த பின் தனித்துவமான கதாநாயகனாக நடிப்பதையே பலரும் விரும்புவர். ஆனால் பிரபலமான கதாநாயகனான பின்பும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது கதாநாயகனாக தன் சக நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். அந்த படங்களில் தமிழ் உச்சரிப்பாலும், கணீர் குரலாலும் தனித்து தெரிந்தார் எஸ். எஸ். ஆர்.  வீரம், சோகம், அழுகை, நகைச்சுவை என எந்த பாத்திரமானாலும் தன் தனித்த நடிப்பால் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு வரவேற்பை பெற்றவர் ராஜேந்திரன்.

அவரைப்போன்று தமிழை தெளிவாக உச்சரித்தவர்கள் அன்றைய திரையுலகில் சொற்பமே. இயல்பில் திராவிட கொள்கையில் ஈர்ப்பு கொண்டவரான அவர், ஈரோட்டில் 'சந்திரோதயம்' நாடகம் நடத்த வந்த அண்ணாவுடன் பேசும் வாய்ப்பு கிடைக்க, அது இன்னமும் தீவிரமானது. பின்னாளில் திமுகவில் இணைந்தார்.

அண்ணாவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன், அவரையே தன் அரசியல் குருவாக ஏற்று இறுதிவரை அவரை கொண்டாடி மகிழ்ந்தவர். திமுக முதன்முறை போட்டியிட்ட 1957 தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வெற்றி கிட்டவில்லை. வெறுமனே உறுப்பினராக இல்லாமல், கட்சி மேடைகளில் அண்ணா புகழ்பாடி கட்சியை வளர்த்த அவர், திமுவிற்காக நாடகங்கள் நடத்தி நிதி திரட்டிக்கொடுத்திருக்கிறார்.

தன் இல்லத்தில் எந்த நிகழ்வானாலும் அண்ணா இன்றி நடத்தமாட்டார். தான் கட்டிய இல்லத்திற்கு அண்ணாவின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.

உச்சகட்டமாக தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு ஆதரவாக பகுத்தறிவு கொள்கையில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக புராண, இதிகாச படங்களில் இனி நடிப்பதில்லையென ஒருநாள் அறிவித்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு. காரணம், அப்போது புகழின் உச்சத்தில் அவர் இருந்தார். இதனாலேயே தமிழ்த்திரையுலகின் லட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றார்.

திரையுலகில் 50 களில் துவங்கி 60 களின் இறுதிவரை இருபெரும் ஆளுமைகளின் மத்தியில் தன்னிகரில்லாத நடிகனாக திகழ்ந்த ராஜேந்திரன், இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த முதல் நடிகர் என்ற புகழுக்குரியவர். 1962- ம் ஆண்டு தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். திரையுலகில் தன்னோடு இணைந்து பல படங்களில் நடித்த  பிரபல நடிகை விஜயகுமாரியுடன் காதல் வயப்பட்டு, அவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணம் நிலைக்கவில்லை. சில வருடங்களில்  குழந்தை பிறந்த கையோடு, இருவரும் மனமொத்து பிரிந்தனர்.

திரையுலகில் பிரபலமாகியிருந்தபோதே தனது பெயரில் நாடக மன்றம் ஒன்றை துவக்கி, அதில் திறமையான நடிகர்கள் பலருக்கும் வாய்ப்பளித்தவர் எஸ்.எஸ்.ஆர். அவரது நாடக மன்றம் பல பிரபலமான கதைகளை நாடகமாக அரங்கேற்றியது. அண்ணாவின் 'ஓர் இரவு', 'சந்திரமோகன்', மு.கருணாநிதி எழுதிய 'அம்மையப்பன்' ஆகிய நாடகங்களை நடத்தினார். திரையுலகில் அவரால் பலர் ஏற்றம் பெற்றனர். அவர்களில் சமீபத்தில் மறைந்த மனோரமா மற்றும் நடிகர் முத்துராமன் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழகத்தில் அறிமுகமாகி, பின்னாளில் கேரளாவில் பிரமலமடைந்த ஷீலா இவரது அறிமுகமே. அண்ணாவின் மறைவிற்கு பின் தி.மு.க.வில் அவருக்கு எதிராக எழுந்த சிக்கல்களால், ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி, எம். ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். 1980 -ம் ஆண்டு தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வென்றார். அந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவருக்கான அரசியல் களம் தெளிவற்ற நிலையில் போனது.  தி.மு.க., அ.தி.மு.க என இரு கழகங்களிலும் தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாமல், வேறு வழியின்றி அரசியலிலிருந்து ஒதுங்கினார் எஸ். எஸ். ஆர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

முதன்முறை சட்டமன்ற உறுப்பினரான எஸ்.எஸ்.ஆரை சந்தித்து வாழ்த்து சொன்ன சிவாஜி, “சம்பிரதாயமாத்தான் உங்களை வாழ்த்தறேன். பதவி, அதிகாரம்னு சினிமாவிலிருந்து ஒதுங்கிடாதீங்க. அதெல்லாம் வயசான பின்னாடி பார்த்துக்கலாம். திரும்பவும் நடிக்க வந்திடணும்” என்றார் வாஞ்சையாக. தொழில்முறை போட்டியாளரிடமும் அவர் பேணிய ஆரோக்கியமான நட்புக்கு இது சான்று.

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான 'முதலாளி'  எஸ்.எஸ்.ஆருக்கு திருப்புமுனை கொடுத்த திரைப்படம். மேகலா பிக்சர்ஸ் தயாரித்த 'மறக்க முடியுமா' திரைப்படத்தில் தன் சொந்த சகோதரியையே யார் எனத் தெரியாமல் பெண்டாள முயற்சிக்க,  அப்போது அவள் தன் கழுத்தை அறுத்துக்கொள்வாள். அப்போது எஸ்.எஸ்.ஆர் வெளிப்படுத்தும் உணர்ச்சிவயப்பட்ட நடிப்பை வேறு எந்த நடிகரிடத்தும் எதிர்பார்க்க முடியாதது. வெளிப்படங்களில் வாய்ப்பு குறைந்தபோது, தன் சொந்தப்பெயரில் படம் தயாரித்து நடித்தார் எஸ்.எஸ்.ஆர்.
திரையுலகில் அடுத்த தலைமுறை நடிகர்களாலும் நேசிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆர், அவர்கள் விரும்பி அழைத்தபோது அவர்களின் படங்களில் நடித்தார்.

தம் இறுதிநாளில் ஞாபக மறதி நோயால் சிரமப்பட்ட அவர், எம். ஜி. ஆர் ரசிகர்கள் ஏற்பாடு செய்த ஒரு மேடையில் கருணாநிதியை புகழ்ந்து பேசி சங்கடப்பட்டுப்போனார். காரணம் எல்லா காலங்களிலும் தனக்கு எதிரிகளாக யாரையும் வரித்துக்கொண்டு அரசியல் செய்யாமல், தனித்துவமாக விளங்கிய அவரது குணம். திரையுலகில் பந்தா இல்லாமல், சக நடிகர்களுடன் போட்டி மனப்பான்மையின்றி இணைந்து பணியாற்றியது அவரது சிறந்த குணத்திற்கு சான்று. ஒரு வகையில் அரசியலில் அவர் முழு வெற்றி பெறாததற்கும் அதுவே காரணம் எனலாம்.

திரையுலகில் எத்தனை புகழோடு விளங்கினாலும் அண்ணாவை நேசித்த தன் சக திரைக்கலைஞர்களைபோல  எஸ்.எஸ்.ஆர் அரசியலில் பெரும் உயரத்தை எட்டி பிடிக்க முடியாமல் போனதற்கு காரணம் ஒன்று உண்டு. அது, அண்ணாவை அவர் நிஜமாய் நேசித்ததுதான்! - எஸ்.கிருபாகரன்.

நடிகை மல்லிகா ஷெராவத் பிறந்த நாள் அக்டோபர் 24 ,


நடிகை மல்லிகா ஷெராவத் பிறந்த நாள் அக்டோபர் 24 ,

மல்லிகா ஷெராவத் ( இந்தி : मल्लिका शेरावत, பிறப்பு "ரீமா லம்பா", அக்டோபர் 24 ,
1981 ) ஒரு இந்திய நடிகையும் அழகியும் ஆவார். 2003ல் குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். இந்தி திரைப்படங்கள் தவிர சீன மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2008ல் வெளிவந்த
தசாவதாரம் என்ற திரைப்படம் இவரின் முதலாவது தமிழ் திரைப்படமாகும்.



நடித்த திரைப்படங்கள்
ஜீனா சிர்ஃப் மேரே லியே (இந்தி)
குவாஷிஷ் (இந்தி)
கிஸ் கிஸ் கீ கிஸ்மத் (இந்தி)
மர்டர் (இந்தி)
பச்கே ரேனா ரே பாபா (இந்தி)
த மித் ( சீன மொழி )
பியார் கே சைட் எஃபெக்ட்ஸ் (இந்தி)
ஷாதி சே பெஹ்லே (இந்தி)
டர்னா சரூரி ஹை (இந்தி)
குரு (இந்தி)
ப்ரீதி ஏகே பூமி மெலிதே (இந்தி)
ஆப் கா சுரூர் (இந்தி)
ஃபௌஜ் மேன் மௌஜ் (இந்தி)
வெல்கம் (இந்தி)
அன்வெயில்ட் (இன்று வரை வெளிவரவில்லை)
தசாவதாரம் ( தமிழ் )





நடிகை லைலா பிறந்த நாள் அக்டோபர் 24, 1980.

லைலா , தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தமிழ்திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். தில், தீனா, மவுனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இவர், இரானிய தொழில் அதிபரை காதலித்து மணம் செய்து கொண்டார்.


திரைப்படங்கள்

கள்ளழகர் (தமிழ்த் திரைப்பட அறிமுகம்)
ரோஜாவனம்
பார்த்தேன் ரசித்தேன்
தில்
தீனா
உன்னை நினைத்து
அள்ளித்தந்த வானம்
காமராசு
நந்தா
பிதாமகன்
மௌனம் பேசியதே (சிறப்புத் தோற்றம்)
திரீ ரோசஸ்
கம்பீரம்
பரமசிவன்
திருப்பதி (ஒரு பாடலுக்கு மட்டும் நடனம்)

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

நடிகர் பிரபாஸ் பிறந்த நாள் அக்டோபர் 23, 1979.



நடிகர் பிரபாஸ் பிறந்த நாள் அக்டோபர் 23, 1979.

பிரபாஸ் இராஜூ உப்பலபட்டி (பிறப்பு 23 அக்டோபர் 1979), என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள்.


இயற் பெயர் பிரபாஸ் இராஜூ உப்பலபட்டி
பிறப்பு அக்டோபர் 23, 1979
(அகவை 38)
சென்னை ,
தமிழ்நாடு, இந்தியா
வேறு பெயர் Young Rebel Star, Darling, Mr. Perfect
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 2002 முதல்
உறவினர் Krishnam Raju (Paternal uncle)
இணையத்தளம் www.darlingprabhas.com
திரைப்படங்கள்

ஆண்டு படம் பாத்திரம்
2002 ஈஸ்வர் ஈஸ்வர் த
2003 ராகவேந்திரா ராகவேந்திரா த
2004 வர்ஷம் வெங்கட் த
2004 அடவி ராமுடு ராமுடு த
2005 சக்ரம் சக்ரம் த
2005 சத்ரபதி சத்ரபதி த
2006 பௌர்ணமி சிவ கேசவா த
2007 யோகி யோகி த
2007 முன்னா முன்னா த
2008 புஜ்ஜிகாடு லிங்கராஜு (புஜ்ஜி) த
2009 பில்லா பில்லா த
2009 ஏக் நிரஞ்சன் சோட்டு த
2010 டார்லிங் பிரபாஸ் த
2011 மிஸ்டர் பர்ஃபெக்ட் விக்கி த
2012 ரிபெல் ரிசி த
2013 மிர்ச்சி ஜெய் த
2015 பாகுபலி பாகுபலி, சிவு
2017 பாக்மதி - த
2017 பாகுபலி 2 பாகுபலி, சிவு
2017 சாஹோ த.


நடிகர் பிரபாஸ் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள்!!

தெலுங்கு சினிமா டார்லிங்காக இருந்த நடிகர் பிரபாஸ் பாகுபலி முதல் பாகத்தின் வெளியீட்டுக்கு பிறகு தென்னிந்தியாவின் டார்லிங் ஆனார்.

பாகுபலி இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியாவின் டார்லிங் நடிகராக உருமாறி இருக்கிறார்.

ஒரே படத்தின் வெற்றியின் மூலம் 30 கோடி ஊதியம் பெரும் நடிகராக மாறியுள்ளார்.


இவ்வாளவு பெரிய தொகை ஊதியமாக இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணிவிட கூடிய அளவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி, நடிகர் பிரபாஸ் பற்றி பலரும் அறியாத சில உண்மைகளை இங்கு காணலாம்…

#1
நடிகர் பிரபாஸின் முழு பெயர் வெங்கட சத்யநாராயண பிரபாஸ் ராஜு உப்பலபத்தி!

#2
பிரபுதேவா இயக்கிய ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி இருப்பார் பிரபாஸ்.

#3
பாங்காக்கில் உள்ள மேடமே துஷாட்ஸ் எனும் வேக்ஸ் சிலை மியூசியத்தில் இடம்பெற்ற ஒரே தென்னிந்தியா நடிகர் பிரபாஸ் தான். இவரது பாகுபலி உருவ பொம்மை அங்கு நிறுவப்பட்டுள்ளது.
#4

பிரபாஸின் தந்தை சூர்யநாராயணா ராஜு ஒரு தயாரிப்பாளர். இவரது மாமா கிருஷ்ணம் ராஜு டோலிவுட் நடிகர்.

#5
ஆரம்பத்தில் நடிகர் பிரபாஸ், ஒரு ஹோட்டல் உரிமையாளர் ஆகவேண்டும் என்று தான் விரும்பினார். எதிர்பாராத விதமாக தான் இவர் நடிக்க வந்தார்.

#6
பிரபாசுக்கு பட்டர் சிக்கன், சிக்கன் பிரியாணி என்றால் மிகவும் பிரியம். ஒருவேளை இதற்காக தான் ஹோட்டல் உரிமையாளர் ஆக நினைத்தாரோ…?!!?

#7
பிரபாஸ் இந்தியாவின் முன்னணி இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் தீவிர ரசிகர். 3 இடியட்ஸ், முன்னா பாய் எம்.பி.பி.எஸ் போன்ற படங்களை 20 தடவைகளுக்கும் மேலாக பார்த்துள்ளாராம்.

#8
பாகுபலி நடிக்க கதை கேட்டு ஒப்புக்கொண்ட நாள் முதல், பிரபாஸ் வேறு எந்த கதைகளையும் கேட்கவும் இல்லை, நடிக்கவும் முற்படவில்லை என கூறப்படுகிறது. தனக்கு என்ன சம்பளம் என்று கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

#9
பாகுபலி நடிக்க கதை கேட்டு ஒப்புக்கொண்ட நாள் முதல், பிரபாஸ் வேறு எந்த கதைகளையும் கேட்கவும் இல்லை, நடிக்கவும் முற்படவில்லை என கூறப்படுகிறது. தனக்கு என்ன சம்பளம் என்று கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

#10
தனது உடல் எடையில் இருந்து முப்பது கிலோ அதிகம் ஏற்றினார். இதனால் உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் பெரும் அழுத்தத்திற்கு ஆளானார் பிரபாஸ். நான்கு வருடங்கள் தான் தாண்டி வந்த கஷ்டங்களை அவர் பெரிதாக யாரிடமும் கூறவில்லை.

#11
ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோவை தான் தனது ரோல் மடலாக பார்க்கிறார், மிகவும் விரும்புகிறார் நடிகர் பிரபாஸ்.

#12
தனது திருமணத்தை பாகுபலி படத்திற்காக தள்ளி வைத்திருந்தார். இந்த நான்கு வருடங்களில் இவருக்கு 6000 வரன்கள் வந்து குவிந்தனவாம். ஆனால், யாரையும் தேர்வு செய்யவில்லை பிரபாஸ். இடையே 23 வயது பொறியியல் மாணவியை தான் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள போகிறார் என புரளிகளும் வந்தன.

#13
பாகுபலி மொத்த ஷூட்டிங் முடித்த கையோடு ஐரோப்பிய சுற்றுலா சென்று விட்டனர்.

#14
பாகுபலி நடித்துக் கொண்டிருக்கும் போதும், இப்போது நடித்து முடித்த பிறகும் என தனக்கு வந்த பல கோடி விளம்பர நடிப்பு வாய்ப்புகளை உதறி தள்ளியுள்ளார் பிரபாஸ். பாகுபலி ஸ்பான்சர் விளம்பரங்களில் மட்டுமே சிறப்பு தோற்றத்தில் தோன்றி வருகிறார்.

#15
பாகுபலி நடித்துக் கொண்டிருக்கும் போதும், இப்போது நடித்து முடித்த பிறகும் என தனக்கு வந்த பல கோடி விளம்பர நடிப்பு வாய்ப்புகளை உதறி தள்ளியுள்ளார் பிரபாஸ். பாகுபலி ஸ்பான்சர் விளம்பரங்களில் மட்டுமே சிறப்பு தோற்றத்தில் தோன்றி வருகிறார்.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்த தினம் அக்டோபர் 21 .1937 .



நடிகர் தேங்காய் சீனிவாசன்  பிறந்த தினம்  அக்டோபர்   21 .1937 .

தேங்காய் சீனிவாசன் (21 அக்டோபர் 1937 – 9 நவம்பர் 1988) 1970-களிலும், 1980-களிலும் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர் ஆவார். இவர் கல் மணம் என்னும் நாடகத்தில்
தேங்காய் வியாபாரியாக நடித்ததால் தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

தேங்காய் ஸ்ரீநிவாசன், சென்னையைச் சேர்ந்த இராஜவேல் முதலியார் என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவைகுண்டத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் பிறந்தார். தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார். அவருடைய தந்தை எழுதிய 'கலாட்டா கல்யாணம்' மேடை நாடகத்தில் அறிமுகமானார். அதற்குப்பிறகு, ரவிந்தர், கே. கண்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு நாடகங்களில் நடித்தார். இவர் கே. கண்ணனின் கல் மணம் நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார். அதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த கே. ஏ. தங்கவேலு, இவரை தேங்காய் ஸ்ரீநிவாசன் என்றே எல்லாரும் அழைக்க வேண்டும் என்று கூறினார்; அவ்வாறே அழைக்கப்பட்டார்.

திரைத்துறை

தேங்காய் ஸ்ரீநிவாசன், ஒரு விரல் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இவர்
ம. கோ. இராமச்சந்திரன் , சிவாஜி கணேசன் ,
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சிவாஜி கணேசன் நடித்த கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.

மண வாழ்க்கை

ஸ்ரீநிவாசன் லக்ஷ்மி என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு கீதா, ராஜேஸ்வரி என்று இரு மகள்களும், சிவசங்கர் என்ற மகனும் உள்ளனர். கீதாவுடைய மகன் யோகி / சுவரூப்பும், சிவசங்கரின் மகள் ஸ்ருதிகாவும் திரைத்துறையில் நுழைந்தனர்.

இறப்பு

தேங்காய் ஸ்ரீநிவாசன் தன்னுடைய உறவினரின் ஈமச் சடங்கிற்காக
பெங்களூருவிற்குச் சென்றபோது,
மூளை குருதிப்பெருக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி, 50-ம் அகவையில் 1987-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் உயிரிழந்தார்.

குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள
உதய கீதம் (1985)
கை கொடுக்கும் கை (1984)
தங்க மகன் (1983)
ராம லக்ஷ்மன் (1981)
தில்லு முல்லு (1981)
டிக் டிக் டிக் (1981)
கழுகு (1981)
பில்லா (1980)
ஆறிலிருந்து அறுவது வரை (1979)
அன்பே சங்கீதா (1979)
தர்ம யுத்தம் (1979)
பிரியா (1978)
தியாகம் (1978)
வாழ நினைத்தால் வாழலாம் (1978)
அன்னக்கிளி (1976)
பல்லாண்டு வாழ்க (1975)
காசேதான் கடவுளடா (1972)
எதிர் நீச்சல் (1968)
ஒரு விரல் (1965)

நடிகை சங்கீதா கிரிஷ் பிறந்த நாள் அக்டோபர் 21 ,1978


நடிகை சங்கீதா கிரிஷ் பிறந்த நாள் அக்டோபர்  21 ,1978

சங்கீதா கிரிஷ் (பிறப்பு: 21 அக்டோபர் 1978) ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் பின்னணிப்பாடகியும் ஆவார். இவர் 90களின் இடைப்பகுதியில் நடிப்புத்துறையினுள் நுழைந்தார். உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்தமைக்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எ.ஆர்.ரகுமானுடனும் பணிபுரிந்திருக்கிறார்.

ஆரம்ப வாழ்க்கை

சங்கீதா சென்னையில் பிறந்தவர்.  இவரது பெற்றோர் அரவிந்த், பானுமதி. சங்கீதாவின் பாட்டனார் கே. ஆர் பாலன் திரைப்படத் தயாரிப்பாளர், 20க்கு மேற்பட்ட தமிழ்ப்படங்களை தயாரித்திருக்கிறார். இவரின் தந்தையும் பல படங்களை தயாரித்திருக்கிறார்.  இவருக்கு இரு சகோதரர்கள் உள்ளனர். [1] சங்கீதா ஓர் பரதநாட்டியக்கலைஞர். பரதத்தை தனது பள்ளிக்காலத்தில் பயின்றார் [3] இவர் பெசன்ட் நகர் சென் ஜேன்சு பள்ளியில் படித்தார்.

தொழில்

90களின் கடைசியில் நடிப்புத்தொழிலை தொடங்கினார். ஆரம்பத்தில் குறைந்த முதலீட்டு திரைப்படங்களில் நடித்தார், இவர் விக்ரம், சூரியாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருது பெற்றது. மாதவனுடன் இணைந்து எவனோ ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.
தொலைக்காட்சியில்
விஜய் தொ.கா நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக இருக்கிறார்.


சொந்த வாழ்க்கை

2009 ஆம் ஆண்டு, பிப்ரவரி முதலாம் தேதி அன்று திருவண்ணாமலைக் கோவிலில், தமிழ்ப் பின்னணிப் பாடகரான கிரிஷை சங்கீதா திருமணம் செய்துகொண்டார்.
திரைத்துறையினர் திருமணத்திற்கு வந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

திரைப்படத்துறை

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
1998
காதலே நிம்மதி
உதவிக்கு வரலாமா இசுடெலா
சமர் இன் பொத்லகெம்
பகவத் சிங்
1999
தீபாஸ்தம்பாம் மகாஸ்சரியம் பிரியா
வழுன்நொர் ரெபேக்கா
கெஸ்ட் ஹவுஸ்
அசலா சன்தடி
அன்புள்ள காதலுக்கு
இங்கிலீஸ் மீடியம்
2000
டபுள்ஸ் சங்கீதா
சரதா ஜெலிஜா
வர்னகழ்சகள்
2001
கபடி கபடி
நாவ்வுது பிரதகலிரா
மா அயன சுந்தராய்யா
2002 கத்கம் சீதாலக்ஷ்மி
2003
பெல்லம் ஓரெல்டெ சந்தியா
ஈ அப்பாயி சாலா மன்சூடு
ஜீவிதா
ஆயுதம் (திரைப்படம்) கல்யாணி
ஓரெ நீ பிரேமா பங்காரம் கானு சங்கீதா
பிதாமகன் கோமதி
நேனு பெல்லிகி ரெடி
பிரியா
டைகர் அரிச்சந்திரன் பிரசாத்
சுவாதி
2004
மா இன்டிகொஸ்டெ எம் டெஸ்தாரு-மீ இன்டிகொஸ்டெ எம் ஸ்தாரு
ஹாரிகா மாதவ்
குஷி குஷிகா சத்யபாமா
நல்ல பிரீத்தி
விஜயேந்திர வர்மா
2005
சங்கராந்தி
நா ஓபிரி கோவரி வேணு
அடிரின்டய்யா சந்ட்ரம்
பத்மவதி (பட்டு)
2006
உயிர் (திரைப்படம்)
அருந்ததி சத்யா
காசு பிரார்த்தனா
47ஏ பெசன்ட் நகர் வரை
2007
பானுமதி பானுமதி வெங்கட்ரமணா
எவனோ ஒருவன்
வத்சலா வாசுதேவன்
2008
காளை லட்சுமி
மா அயன சந்தி பில்லாடு சிந்தாமணி
நேபாளி
மேஜிக் லேம்ப் அல்போன்சா
நாயகன் மரு. சந்தியா விசுவநாத்
தனம் தனம் அனந்தராமன்
2009
நான் அவனில்லை 2 மஹாலக்ஷ்மி
மத்திய சென்னை
2010
சிறீமதி கல்யாணம்
சுவேதா / சீதா
குட்டி பிசாசு காயத்ரி
மன்மதன் அம்பு தீபா
தம்பிக்கோட்டை பீடா பாண்டியம்மா
2011
புத்திரன்
துர்கா
உச்சிதனை முகர்ந்தால்
நடேசனின் மனைவி

வியாழன், 19 அக்டோபர், 2017

இயக்குநர் ஸ்ரீதர் நினைவு தினம் அக்டோபர் 20 , 2008.


இயக்குநர் ஸ்ரீதர் நினைவு தினம் அக்டோபர் 20 , 2008.

ஸ்ரீதர் ( சூலை 22 , 1933 - அக்டோபர் 20 , 2008 ) புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு , கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பாலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டியவர் ஸ்ரீதர்.
வாழ்க்கைச் சுருக்கம்
ரத்தப்பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஸ்ரீதர். அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த இளங்கோவனின் வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடியவர் ஸ்ரீதர். தொடக்கத்தில் அமரதீபம், உத்தம புத்திரன், புனர் ஜன்மம், எதிர்பாராதது போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.
ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், சரோஜாதேவி கதாநாயகியாக முதலில் அறிமுகமான படம் என்பதும், அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த ஏ.எம். ராஜா ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் பாடல்களான "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் பெரும்புகழை ஈட்டின.
1961 ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் "தந்துவிட்டேன் என்னை".
ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள்
தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர். அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும் கே.பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் பெருமளவில் பாராட்டியுள்ளனர். ஸ்ரீதரின் ஆரம்பப்படங்கள் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் வின்செண்ட் என்னும் ஒளிப்பதிவாளர். நெஞ்சில் ஓர் ஆலயம் என்னும் திரைப்படத்தில், முத்துராமன் மற்றும் தேவிகாவின் நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் அன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன. சரோஜாதேவி (கல்யாணப்பரிசு), ரவிச்சந்திரன், காஞ்சனா (காதலிக்க நேரமில்லை), நிர்மலா, மூர்த்தி (வெண்ணிற ஆடை - இப்படமே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாகவும் இருந்து வருகிறது) ஆகியோர் ஸ்ரீதரால் அறிமுகமான நட்சத்திரங்கள்.
பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான கல்யாணப்பரிசு நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் , வைஜயந்தி மாலா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நெஞ்சில் ஓர் ஆலயம் (ராஜேந்திர கபூர், ராஜ்குமார், மீனாகுமாரி நடித்த தில் ஏக் மந்திர்), காதலிக்க நேரமில்லை (சஷிகபூர், கிஷோர் குமார் நடித்த பியார் கியா ஜாயே) ஆகியவையும் ஹிந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றிக் கொடி நாட்டின.
1960ஆம் ஆண்டுகளில் இறுதி வரை ஸ்ரீதர் குறிப்பிடத்தக்க பங்கினையளித்தார். நாடகபாணிக் கதைகளான கல்யாணப் பரிசு, விடி வெள்ளி போன்றவை தவிர, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம் போன்ற நகைச்சுவைப் படங்களையும் இயக்கிப் பெரும் புகழ் பெற்றார்.
ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள். அவரது முதல் படமான கல்யாணப்பரிசு தொடங்கி
இளையராஜா வுடன் அவர் இணைந்த இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன.


இயக்கிய திரைப்படங்கள் சில...

1957 கல்யாணப் பரிசு
1960 விடிவெள்ளி , மீண்ட சொர்க்கம்
1961 தேன் நிலவு
1962 நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள்
1963 நெஞ்சம் மறப்பதில்லை
1964 காதலிக்க நேரமில்லை
1965 சுமை தாங்கி , வெண்ணிற ஆடை
1967 ஊட்டி வரை உறவு
1968 கலாட்டா கல்யாணம்
1969 சிவந்த மண்
1971 உத்தரவின்றி உள்ளே வா
1972 அவளுக்கென்று ஒரு மனம்
1974 உரிமைக்குரல்
1978 இளமை ஊஞ்சலாடுகிறது
1979 அழகே உன்னை ஆராதிக்கிறேன்
1980 சௌந்தர்யமே வருக வருக
1981 நினைவெல்லாம் நித்யா

மறைவு

சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்தார். 2008, அக்டோபர் 20 இல் சென்னையில் தனது 80 ஆவது அகவையில் காலமானார்.


மயக்கமா?கலக்கமா?,மனதிலே குழப்பமா? ஸ்ரீதரின் நினைவுகள்! வால்பையன்.

ஸ்ரீதர் தமிழர்களின் வாழ்க்கையில்மறக்கமுடியாத ஒரு பெயர்!.இந்த கவர்ச்சிகரமான பெயர் அந்தக் கால எத்தனை இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் வெறித்தனமான வேகத்தைத் தந்தது!.சொல்லப் போனால் மிகுந்த மோகத்தையும் தந்தது!.
1933-ல் பிறந்த இவர் 1954 முதல் 1991 வரை உள்ள 35 ஆண்டுக் காலம் திரையுலகில் இருந்தார்.இவர் கோலச்சிய காலம் சுமார் 35 ஆண்டுகள்.இப்படி 35 ஆண்டு காலம் கோலோச்சிய இயக்குனர்கள் தமிழ் திரையுலகில் வெகு குறைவு. தன் திரையுல வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளைக் கண்டாலும்,தமிழ்த் திரையுலகை பல பரிமாணங்களுக்கு இட்டுச் சென்றவர்!.
திரு.இளங்கோவன் என்றால் யாருக்கும் தெரியாது,இரத்தக் கண்ணீர் வசனகர்த்தா என்றால் எல்லாருக்கும் பளீச் சென்று தெரியும்.ஸ்ரீதருடைய சொந்த ஊரைச் சேர்ந்தவர்.இவருடைய தாக்கத்தாலேயே ஸ்ரீதர் திரையுலகில் நுழைந்தார். ஆனால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,இளங்கோவனுடைய வசனங்கள் தீவிர தமிழ் வீச்சு உடையவை,அது போன்ற வசனங்களை ஸ்ரீதர் என்றுமே தன் பாணியாகக் கொண்டதில்லை.
இளங்ககோவனின் வசனங்களின் பாணியைப் பின் பற்றி அண்ணாவும், அவரது சீடரான கருணாநிதியும் பெரு வளர்ச்சி கண்டிருந்த நேரத்தில், அதற்க்கு நேர் மாறாக இயல்பான வசனங்களை எழுதி அதனால் தன்னை தமிழகமே திரும்பிப் பார்க்கும் படி செய்தவர் ஸ்ரீதர்!.
இரத்தபாசம் என்ற திரைப் படத்தின் மூலமாக 1954-ல் ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகில் நுழைந்த போது அவருக்கு வயது வெறும் இருபத்தி ஒன்றுதான்!.அந்த நேரத்தில் எம்ஜிஆரின் ம்லைக்கள்ளனும்,சிவாஜியின் மனோகராவும் வெளி வந்தன.இந்த இரண்டு படங்களுக்கு இடையேயும் T.K.சண்முகம் நடித்த இரத்த பாசம் பெரு வெற்றி பெற்றது.பிறகு அடுத்து வந்த வருடங்களில் எதிர் பாராதது,அமரதீபம் ,மகேஸ்வரி,எங்க வீட்டு மகாலட்சுமி,மஞ்சள் மகிமை,உத்தமபுத்திரன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.
இதில் எல்லாப் படங்கள் பெரு வெற்றி பெற்றன.ஸ்ரீதர் புகழ் பெற்ற வசனகர்த்தாக் களின் வரிசைப் பட்டியலில் இடம் பிடித்தார்.இதற்க்கடுத்து கல்யாணப் பரிசு படத்தை இயக்கியதும்,அதை இயக்கும் போது முதலில் ஏற்ப்பட்ட பிரச்சனை களும் அனைவரும் அறிந்ததே,அதனால் அதைப் பற்றி விஸ்தாரமாகப் பேச ஓன்றும் இல்லை!.
ஸ்ரீதருடை சினிமா கிராஃப் பல முறை மேலேறி கீழறங்கும் வித்தை கொண்டது. இவர் கல்யாணப் பரிசு போன்ற படங்களை கொடுத்த காலத்தில் சிவாஜி சொந்தப் படமான விடிவெள்ளி ஊற்றிக் கொண்டது,தேன்நிலவு போன்ற படங்கள் அப்போது தேல்வியைத் தழுவினாலும் இன்றும் பார்க்கும் போது ஆர்ச்சரியப் படவைக்கும் தன்மை கொண்டது.
அடுத்து சிலிர்த்தெழுந்த ஸ்ரீதர் சுமைதாங்கி போன்ற படங்களில் எழுந்தார்.பிறகு கொடிமலர் போன்ற படங்கள் அவரது சுமையை ஏற்றின.ஆனால் நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற படங்கள் ,அவரது திறமைக்குச் சான்றாக அமைந்தன. வெற்றியும் கண்டன.நெஞ்சம் மறப்பதில்லை ஒரு சராசரிப்படமாக இருந்தாலும் இன்றும் மக்களின் மனதில் நின்றபடம்!.
அடுத்த ஆட்டத்தை கலரில் ஆரம்பித்தார் காதலிக்க நேரமில்லை!.இதுவரைத் தமிழ்த் திரையுலகம் கண்டிராத காண்முடியாத அரும் பெரும் நகைச்சுவைப் படத்தை மக்களுக்கு அளித்தார்.அதுவரையில் பம்பாய் சென்றே கலர்ப் படங்களை பிரதியெடுத்தார்கள்.ஜெமினி நிறுவனம் தன்னுடைய கலர் லேப்பை ஆரம்பித்தவுடன் அதில் பிரதி எடுக்கப் பட்ட முதல் படம் இதுதான்!.
பிறகு ஊட்டிவரை உறவு,போன்ற படங்களையும் அவர் தந்தார்.வெண்ணிற ஆடையில் அவருக்கு அடி விழுந்தாலும் அதில் நடித்த கலைஞர்கள் மிகவும் புகழ் பெற்றனர்.
அடுத்த கட்டமும் அவருக்கு மிகவும் சோர்வைத் தந்தது , நெஞ்சிருக்கும் வரை,போன்ற படங்கள் வரிசையாக அடி வாங்கின!.அவளுக்கென்று ஒரு மனம்,சிவந்த மண் போன்ற படங்கள் வண்ணத்தில் எடுக்கப் பட்டாலும் பெரு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.இன்னமும் அவளுக்கென்று ஒரு மனம் படப் பாடல்கள் அழியாப் புகழ் பெற்றவையாகவே இருக்கின்றன.
70 களில் சிவாஜியை வைத்து வைரநெஞ்சம் என்றப் படத்தை உருவாக்கினார்.இது இவரது வாழ்க்கையிலேயே சிரமான கட்டம்தான் என்று சொல்ல வேண்டும்.இந்தப் படம் மகாத் தோல்வியைத் தழுவியது.மிகவும் சிரமத்திற்குள்ளான ஸ்ரீதர் அன்றைய சூப்ப்ர்ஸ்டார் திரு.எம்.ஜிஆரிடம் உதவியை நாடினார்.இவர் படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருமுறை கூட எம்ஜிஆரை வைத்து எடுத்ததில்லை.(ஒரு முறை அன்று சிந்திய ரத்தம் என்றப் படத்தை எம்ஜிஆரை வைத்து எடுக்க முயற்ச்சி செய்தார்..கைகூடி வரவில்லை) அதற்க்குக் காரணம் பல இருந்தன.ஸ்ரீதரைப் பொறுத்தவரை குறைந்த சம்பளம் உள்ள நடிகர்கள்,நல்ல தொழில் நுட்பக் கலைஞர்கள் ,நல்ல படம் ,நல்ல லாபம் என்ற அடிப்படைக் கொள்கையிலேயே இயங்கி வந்தார்.
இதனால் இவரது படங்கள் இயக்குனர் படம் என்றும் புகழ் பெற்றன.தம் தகுதியை அவர் அப்போது விட்டுக் கொடுக்காமலேயே இயங்கினார்.சிவாஜியை வைத்து இயக்கினாலும் அவர் இயக்குனர்களின் நடிகர் என்பதை மறக்கக் கூடாது.
தம்முடைய தொடர் தோல்வியினால் மனம் நொந்த நிலையில் எம்ஜிஆரை அணுகியதும் எம்ஜிஆர் தன்னுடைய பெருந்தன்மையை நிரூபித்தார்.அடுத்தது ஆரம்பமானது ஸ்ரீதருடைய அடுத்த பரிமாணம் .உரிமைக்குரல் முழுக்க முழுக்க எம்ஜிஆர் படமாக வெளிவந்தாலும் “விழியே கதையெழுது” என்ற பாடல் ஸ்ரீதருடைய “டச்”சிலேயே இருந்தது என்பது ஸ்ரீதர் ஆளுமைக்கு காரணமா?எம்ஜிஆருடைய பெருந்தன்மையா?.அல்லது வியாபார நோக்கில் இருவருடைய “காம்ரமைஸா” என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
படம் சூப்பர் டூப்ப்ர் வெற்றி!.தமிழகத்தில் அன்றுள்ள திரையுலக மந்தமான சூழ்நிலையில் பல விநியோகஸ்தர்களும்,திரைஅரங்கு உரிமையாளகளும் பிழைத்தனர்(அந்த சூழ்நிலைக்குக் காரணம் அரசியல் காரணமாக எம்ஜிஆரின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட கலைஞர்தான் என்பது வேறு விஷயம்....இதைப் பற்றிப் பேசப் போய் கட்டுரை வேறு பக்கம் போய் விடப் போகிறது..எனவே இதை இத்தோடு ஏறக்கட்டிவிடலாம்!)
பிறகு, எம்ஜிஆரை முதலமைச்சராக்க வந்தது மீனவ நண்பன்.இதுவும் சூப்ப்ர் டூப்பர் ஹிட்!.இந்த கால கட்டத்திலேயே ஸ்ரீதர் இயக்கத்தில் பூஜை போட்டு சில காட்சிகளும்,பாடல்களும் “அண்ணா நீ என் தெய்வம்” என்ற படம் எடுக்கப் பட்டது .எம்ஜிஆர் முதல்வர் ஆனதால் அது கைவிடப் பட்டது.இந்தப் படத்திலும் சில காட்சிகளை நாம் கண்டிருப்போம். எனென்றால் இது தான் பிற்பாடு பாக்கியராஜ் இயக்கத்தில் வெளி வ்ந்த “அவரச போலீஸ்”என்ற படத்தில் எம்ஜிஆர் வரும் காட்சிகளுக்காக உபயோகப்ப்டுத்தப் பட்டது !.
இந்தக் காலக்கட்டத்தில் ஸ்ரீதரின் அலைகள்,ஓ..மஞ்சு போன்ற படங்கள் வெளிவந்து தோல்வியைத் தழுவின.
அடுத்து எம்ஜிஆர் அரசியலுக்குச் சென்ற பிறகு தனது அடுத்த பரிமாணத்திற்கு செல்ல அன்றைய இளம் நடிகர்களான ரஜினியையும் கமலையும் வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தைக் கொடுத்தார்.அவரது வழக்கமான முக்கோணக் காதல் கதைதான் என்றாலும் தன் பழைய பாணியில் இருந்து மாறி 78 வருடத்திற்க்கேற்ப இளமையாகத் தந்தார்.படம் மெகா ஹிட் ஆனது.அடுத்து மீண்டும் விஜயகுமார்,ஜெய்கணேஷ் போன்றவர்களை வைத்து மீண்டும் ஒரு வித்தியாசமான காதல் கதையாக அழகே உன்னை ஆராதிக்கிறேன் வெளி வந்தது.இதுவும் மெகா ஹிட் ஆனது.இரண்டு படங்களிலும் இளையராஜா ஒரு ராக ரகளையே செய்து அசத்தியிருந்தார்.
மீண்டும் ஸ்ரீதருக்கு இறங்கு முகம்.இந்தக் காலக் கட்டத்தில் ஒரு ஓடை நதியாகிறது போன்ற படங்கள் வெளிவந்தன.ஆனால் எந்த படங்களும் வெற்றியைத் தொடவில்லை.
1985 வாக்கில் மைக் மோகனை வைத்து தென்றலே என்னைத் தொடு என்ற காமெடி கலந்த காதல் கதையை இயக்கினார்.இதில் தேங்காய் சீனிவாசன் தான் ஹீரோவோ என்ற அளவிற்கு கலக்கியிருந்தார்.படம் சூப்பர் ஹிட்!.இதற்கு பிறகு திரைக்கு வந்த ஆலயதீபத்துடன் ஸ்ரீதருடைய திரையுல வெற்றிகள் முடிந்து போயின.
ரஜினியுடம் துடிக்கும் கரங்கள்(இதில்தான் தமிழில் S.P.பாலசுப்ரமணியம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்).கமலுடன் நானும் ஒரு தொழிலாளி போன்ற படங்கள் ஸ்ரீதருக்கும் ரஜினி,கமலுக்கும் பெருமை சேர்க்கவில்லை.ஆர்ஜூன்,சதனா போன்ற அந்த காலத்தில் கடைநிலை ஹீரோ ஹீரோயின் களோடு இணைந்து ”குளிர் மேகங்கள்” போன்ற யாராலும் அறியப் படாத படங்களையும் எடுத்து தன்னயும்,மற்றவர்களையும் சிரமப்படுத்தினார்.என்னுடய படங்கள் ஏன் தோல்வியைத் தழுவுகின்றன என்றே தெரியவில்லை எனப் பத்திரிக்கைகளில் புலம்பும் அளவிற்க்கு தள்ளப் பட்டார்.திரையுலகை ஸ்டெடி செய்து மீண்டும் வெற்றி பெருவேன் என்றார்.
நீண்ட இடை வேளைக்குப் பின் 91-ல் விக்ரம்,ரோகிணியை வைத்து “தந்து விட்டேன் என்னை”என்ற படத்தைக் கொடுத்தார்.இதில்தான் விக்ரம் அறிமுகமானர்.இந்தப் படமும் பப்படம் ஆகவே, தன் நீண்ட திரையுலக வாழ்க்கையைத் துறந்து ஒரு தோல் பதனிடும் தொழிற்ச்சாலையை வெற்றிகரமாக நடத்தினார்.திரையுலகில் இருந்தவர் அதிலிருந்து வெளிவந்து வெற்றிகரமான தொழில் அதிபர் ஆனதிலும் நம் ஸ்ரீதர் புதுமை படைத்தார்.
பாரதிராஜாவுக்கு முன்பே டைரக்டர்களின் டைரக்டர் என்று பெருமை பெற்றவர் ஸ்ரீதர்.இவரால் பட்டறையில் இருந்து வெளிவந்த பல இயக்குனர்கள் பெரும் புகழ் பெற்றனர்.
P.மாதவன் போன்றோர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றனர்.பீம்சிங்கிற்குப் பின் சிவாஜியின் ஆஸ்தான டைரக்டர் ஆனார்,P.மாதவன்.
C.V.ராஜேந்திரனும் மிகப் பெரிய வெற்றியடைந்தார்.(இவர் ஸ்ரீதரின் (உறவினர்) தம்பி!)இவரும் சிவாஜியை வைத்து பல படங்கள் இயக்கினார்.ஸ்டாலினை வைத்து குறிஞ்சி மலர் என்ற தொலைக்காட்சித் தொடரை இயக்கினார்,என்பது கழகத் தோழர்களுக்கு ஒரு கூடுதல் தகவல்.
சக்ரவர்த்தி இவரும் பல படங்களை இயக்கினார்.உத்தரவின்றி உள்ளே வா, திக்குத் தெரியாத காட்டில் போன்றவை,குறிப்பிடத்தக்கவை(இவர் செல்வி ஜெயலலிதாவின் உறவினர் என்பது கூடுதல் தகவல்)
தற்காலத்தில் புகழ் பெற்ற டைரக்டர்களாக விளங்கும் P.வாசு,சந்தான பாரதி போன்றவர்களும் ஸ்ரீதரின் தாயாரிப்புகளே.
ஸ்ரீதர் அறிமுகம் செய்த நடிக,நடிகையரில் பட்டியல் மிக நீளமானது.தேன் நிலவில் புது நடிகையை அறிமுகம் செய்தார்.பெயர் தெரியவில்லை. பட்டதாரியான அந்தப் பெண் அதிகப் படங்களில் நடித்ததாகத் தெரியவில்லை. 71-ல் திமுகாவில் இருந்த காமராஜரைத் தோற்கடித்த சீனிவாசனை மணந்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.என்று நினைக்கிறேன்.அதன் பின் படத்தயாரிப்பாளராக மாறினார்.
சுமைதாங்கியில் விஜயலட்சுமி,காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன்,காஞ்சனா,ராஜஸ்ரீ.நாகேஷும் இவர் படங்களில் நடித்துத்தான் ஆரம்பகாலத்தில் புகழ் பெற்றார்.வெண்ணிற ஆடையில்,ஸ்ரீகாந்த்,ஜெயலலிதா, வெண்ணிற ஆடை மூர்த்தி,வெண்ணிற ஆடை நிர்மலா,ஆஷா(பிற்பாடு சைலஸ்ரீ என்று பெயர் மாற்றிக் கொண்டார்).நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் மாலி,அலைகள் படத்தின் மூலமாக தமிழுக்கு இன்று கன்னடத்தில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஷ்ணுவர்தன், ஓ...மஞ்சு படத்தில் கவிதா...இன்னும் எத்தனையோ பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம்.
வசனத்தில் மாற்றம் கொண்டு வந்தது(அடேய் பழி! போன்ற அந்தக் கால கல்லூரி மாணவர்களின் சொல்லாடலைப் பயன் படுத்தினார்,இந்த வார்த்தை சக மாணவனை மச்சி,மாம்ஸ் என்று அழைப்பது போன்றது),தமிழ் சினிமாவை ஸ்டூடியோவில் இருந்து வெளி உலகத்திற்க்கு கொண்டு வந்தது.வசன சினிமாவை காட்சி சினிமாவாக மாற்றியது,அழகிய வண்ணப் படங்களுக்கு தமிழ் சினிமா மாறக் காரணமாக இருந்தது,தமிழ் தொழில் நுட்பக் கலைஞர்களை வட நாட்டு சினிமா உலகம் ஆச்சரியமாகப் பார்க்கும் படி செய்தது, இன்னும் இது போன்ற எத்தனையோ சாதனைகளைச் செய்தவர் ஸ்ரீதர். வாழ்க வளர்க ஸ்ரீதரின் புகழ்!