வியாழன், 31 மே, 2018

நடிகர் ஆர். மாதவன் பிறந்த நாள்: ஜூன் 1 , 1970 ,


நடிகர் ஆர். மாதவன் பிறந்த நாள்: ஜூன் 1 , 1970 ,

ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1 , 1970 ,
ஜாம்ஷெட்பூர்), இந்தியத் திரைப்பட நடிகர் ,
எழுத்தாளர் , படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்த வந்த இவர்
மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த 3 இடியட்ஸ் படம் வெற்றி பெற்றது.

மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:
அலைபாயுதே
கன்னத்தில் முத்தமிட்டால்
ஆய்த எழுத்து
மின்னலே
ரன்
என்னவளே
தம்பி
அன்பே சிவம்
பிரியசகி
ஜேஜே
ப்ரியமான தோழி
நள தமயந்தி
பார்த்தாலே பரவசம்
டும் டும் டும்
லேசா லேசா
வாழ்த்துகள்
நடித்த திரைப்படங்கள்
வருடம் திரைப்படம் பாத்திரத்தின் பெயர் மொழி மேலும் தகவல்கள்
1996 இஸ் ராத் கி சுபாக் நகின் கிளப் பாடகர் இந்தி புகழ்பெறாப் பாத்திரம்
1997 இண்பெர்னோ ரவி ஆங்கிலம்
1999 சாந்தி சாந்தி சாந்தி சித்தார்த் கன்னடம்
2000 அலைபாயுதே கார்த்திக் தமிழ்
என்னவளே ஜேம்சு வசந்த் தமிழ்
2001 மின்னலே ராஜேஷ் சிவகுமார் தமிழ்
டும் டும் டும் ஆதித்யா தமிழ்
பார்த்தாலே பரவசம் மாதவா தமிழ்
ரகுனா கை தில் மெய்ன் மாதவ் சாஸ்திரி இந்தி பரிந்துரை, சிறந்த அறிமுக நடிகருக்கான ஜீ சினி விருது
பரிந்துரை, மிகச் சீரிய புதுமுக ஆண் நட்சத்திரத் திரை விருது
2002 கன்னத்தில் முத்தமிட்டால் திருசெல்வன் தமிழ் வெற்றியாளர் ,
சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
மேலும் ரன் , அன்பே சிவம்
ரன் சிவா தமிழ் வெற்றியாளர் ,
சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
மேலும் கன்னத்தில் முத்தமிட்டால் , அன்பே சிவம்
தில் வில் பியார் வியார் கிரிஷ் இந்தி
2003 அன்பே சிவம் அன்பரசு தமிழ் வெற்றியாளர் ,
வெற்றியாளர் , ஜடிஎஃப்ஏ சிறந்த துணைநடிகர் விருது
வெற்றியாளர் ,
சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
மேலும் கன்னத்தில் முத்தமிட்டால் , ரன்
பரிந்துரை, தமிழின் சிறந்த துணைநடிகருக்கான பிலிம்பேர் விருது
நள தமயந்தி ராம்ஜி தமிழ்
லேசா லேசா தேவ நாராயணன் தமிழ் கெளரவ தோற்றம்
ப்ரியமான தோழி அசேக் தமிழ்
ஜேஜே ஜெகன் தமிழ்
2004 நத்திங் பட் லைப் தாமஸ் ராபர்ட்சு மலையாளம்
எதிரி சுப்பிரமணி தமிழ்
ஆய்த எழுத்து இன்பா சேகர் தமிழ் வெற்றியாளர் , தமிழின் சிறந்த துணைநடிகருக்கான பிலிம்பேர் விருது
2005 பிரியசகி சந்தான கிருஷ்ணன் தமிழ்
ராம்ஜி லண்டன்வாலே ராம்ஜி திவாரி இந்தி மேலும் எழுத்தாளர்
2006 ரங் தே பசந்தி அஜய் ரதோட் ஹிந்தி சிறப்புத் தோற்றம்
தம்பி வேலு தொண்டைமான் தமிழ்
ரெண்டு சக்தி,
கண்ணன் தமிழ்
2007 குரு சியாம் சக்சேனா இந்தி
தில்லி ஹைட்ஸ் அவராக ஹிந்தி அவராக தோன்றல்
ஆர்யா ஆர்யா தமிழ்
தட் போர்-லட்டர் வேர்டு அவராக ஆங்கிலம் அவராக தோன்றல்
எவனோ ஒருவன் சிறீதர் வாசுதேவன் தமிழ் வெற்றியாளர் ,
ஐடிஎஃப்ஏ சிறந்த நடிகர் விருது
மேலும் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்
2008 வாழ்த்துகள் கதிரவன் தமிழ்
மும்பை மேரி ஜான் நிகில் அகர்வால் இந்தி
திப்பு கன்யன் திப்பு கிரி அவராக மலையாளம் அவராக தோன்றல்
2009 யாவரும் நலம் மனோகர் தமிழ் ஒரே நேரத்தில்
13பீ என்று இந்தி தயாரிக்கப்பட்டது
பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் விருது
13பி மனோகர் இந்தி அதேவேளையில் தமிழில், யாவரும் நலம்
குரு என் ஆளு குரு தமிழ்
சிக்கந்தர் ராஜேஸ் ராவ் இந்தி
3 இடியட்சு ஃபர்ஹான் குரேஷி இந்தி பரிந்துரை, சிறந்த துணை நடிகருக்கான
பிலிம்பேர் விருது
பரிந்துரை, ஐஐஎஃப்ஏ சிறந்த துணை நடிகர் விருது
2010 ஓம் சாந்தி மேடி தெலுங்கு கெளரவ தோற்றம்
டீன் பாட்டி சந்தானு இந்தி
ஜூடா ஹி ஜாகி இந்தி (கெளரவ தோற்றம்)
மன்மதன் அம்பு தமிழ்
சண் கிளாஸ்(திரைப்படம்) இந்தி
2011 தனு வெட்ஸ் மனு மனு இந்தி பிந்தைய தயாரிப்பு
நான் அவள் அது ஆதித்யா தமிழ் தாமத வருகை

செவ்வாய், 29 மே, 2018

பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார்! மே 29, 2018.


பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார்! மே 29, 2018.

பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
1958 -ம் ஆண்டு 'முதலாளி' என்ற படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் முக்தா சீனிவாசன். பின், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரை வைத்துப் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். ரஜினி நடித்த 'பொல்லாதவன்' படத்தை இயக்கியவரும் இவரே. ஜெயலலிதாவின் 100 -வது படமான 'சூரியகாந்தி' படத்தையும் இவர்தான் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 65 படங்களை இயக்கிய இவர் தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றுள்ளார். 'நாயகன்' உட்பட ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.


முக்தா சீனிவாசன் (Muktha Srinivasan, பிறப்பு: 31 அக்டோபர் 1929) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.

ஜெயலலிதாவின் 100ஆவது படமான ‘சூர்யகாந்தி’ உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார். இவர் இயக்குனர் மட்டுமன்றி சிறந்த எழுத்தாளரும் ஆவார்.
திரைப்படத்துறை பங்களிப்புகள்
இயக்கிய திரைப்படங்கள்
முதலாளி
பாஞ்சாலி
நாலு வேலி நிலம்
தாமரைக் குளம்
ஓடி விளையாடு பாப்பா
மகனே கேள்
பனித் திரை
இதயத்தில் நீ
பூஜைக்கு வந்த மலர்
தேன் மழை
நினைவில் நின்றவை
பொம்மலாட்டம்
ஆயிரம் பொய்
நிறை குடம்
அருணோதயம்
தவப் புதல்வன்
சூரியகாந்தி
அன்பைத் தேடி
சினிமா பைத்தியம்
அந்தரங்கம்
பேரும் புகழும்
பலப்பரிட்சை
அந்தமான் காதலி
இமயம்
ஸ்ரீராமஜெயம்
அவன் அவள் அது
பொல்லாதவன்
கீழ் வானம் சிவக்கும்
சிம்லா ஸ்பெஷல்
பரிட்சைக்கு நேரமாச்சு
சிவப்பு சூரியன்
தம்பதிகள்
இரு மேதைகள்
ஒரு மலரின் பயணம்
கதா நாயகன்
வாய் கொழுப்பு
சின்ன சின்ன ஆசைகள்
பிரம்மச்சாரி
ராஜபாண்டி
தயாரித்த திரைப்படங்கள்
கோடை மழை
நாயகன்
எதிர்காற்று
கண்களின் வார்த்தைகள்
Pathayeram Kodi [3]
எழுத்துத்துறை பங்களிப்புகள்
முக்தா சீனிவாசன் திரைப்படம், வரலாறு, அறிவியல், இலக்கியம், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும் நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். 1994இல் தமிழ்த் திரைப்படத்துறை குறித்த கலைக்களஞ்சியத்தை தமிழ் திரைப்பட வரலாறு என்ற தலைப்பில் தொகுத்துள்ளார்; இது "துக்ளக்" இதழில் வெளிவந்தது.
இருபதாம் நூற்றாண்டின் கதைகள் பாகம் I -V
தேஜஸ்வி
தலைமுறை கதைகள்
உத்தமி
தண்டனைக்குத் தப்பிய குற்றங்கள்
மனு
முக்தாவின் சிறுகதைகள்
ஆத்மா வென்றது
சொல்லாத இரகசியம்
திருமணம் புனிதமானது
மன சந்திப்பு
மனுஷ்ய தர்மம்
கூத்துக்காரன் தோப்பு
முக்தாவின் கட்டுரைகள்
மனிதநேயக் கதைகள்
எதிர்வீட்டு ஹேமா
கால வெள்ளம்
பாரம்பரியம்
உலகத்தின் சிறந்த கதைகள் பாகம் – I & II
இலக்கியத்தில் இணையும் இந்தியா
தமிழ் திரைப்பட வரலாறு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வரலாறு
கலைஞர்களோடு நான்
கதாசிரியர்களோடு நான்
அறிஞர்களோடு நான்
நினைவு ஏடுகள்
கோபமும் சிரிப்பும்
சமூக நீதி போராட்டங்கள்
மானுடம் கண்ட மகா ஞானிகள்
இணையற்ற சாதனையாளர்கள் பாகம் I – V
நூல்கள் தரும் நுண்ணறிவு பாகம் I & II
இராமாயணத்தில் துணை கதா பாத்திரங்கள்
மாணவர்களுக்கான இந்திய சுதந்திரப் போராட்டம் – தமிழ்
மாணவர்களுக்கான இந்திய சுதந்திரப் போராட்டம் – ஆங்கிலம்
பாரதியின் ஞான செம்மல்
தமிழ் தயாரிப்பாளர்களின் வரலாறு பாகம் I & II
திரைப்பட சேம்பர் வரலாறு – தமிழிலும் ஆங்கிலத்திலும்
காளிதாசனின் மேகதூதம்
வடமொழி இலக்கியம்
நான் சந்தித்த கலைஞர்கள்
இரகுவம்ச மகா காவியம்
இன்னும் சில கதைகள்
அரசியல்
சீனிவாசன் துவக்கத்தில் பொதுவுடமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கட்சிப்பணிகளில் பங்கேற்று வந்தார். 1946இல் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டபோது, அரசு அலுவலராக இருந்த சீனிவாசன் வேலையிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். திரைப்படத்துறையில் இருந்த இவரது தமையனார் இராமசாமியின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு திரைப்படத்துறையில் நாட்டம் செலுத்தினார். இவரது துவக்க கால திரைப்படங்களான முதலாளி, நாலு வேலி நிலம், தாமரைக் குளம் ஆகியன பொதுவுடமைக் கருத்துக்களின் தாக்கம் கொண்டவையாக அமைந்தன.
பொதுவுடமைக்கட்சி இரண்டாக பிளவுபட்டபோது 1961இல் இந்தியத் தேசிய காங்கிரசில் இணைந்தார். 1996இல் கருப்பையா மூப்பனாரின் தலைமையில் பிரிந்த தமிழ் மாநில காங்கிரசில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். தற்போது இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக உள்ளார். இவர் பொறுப்பேற்ற பதவிகள்:
மாவட்ட காங்கிரசுத் தலைவர்
தமிழ்நாடு காங்கிரசு குழு (TNCC) துணைத்தலைவர்
மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரசின் பொதுச் செயலாளர்
விருதுகள்
முதலாளி திரைப்படத்திற்காக தேசிய விருது[4]
பலப்பரிட்சை - தமிழக அரசின் 1977-78க்கான சிறந்த திரைப்பட விருது
1981-82 கீழ் வானம் சிவக்கும்' - தமிழக அரசின் 1981-82க்கான சிறந்த திரைப்பட விருது
பரிட்சைக்கு நேரமாச்சு - தமிழக அரசின் 1981-82க்கான சிறந்த திரைப்பட இயக்குநர் விருது

வெள்ளி, 25 மே, 2018

நடிகை மனோரமா பிறந்த தினம் மே 26 , 1937


நடிகை மனோரமா பிறந்த தினம் மே 26 , 1937 

மனோரமா (26 மே 1937 - 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். [2] இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை , மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா
தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். [3] தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். தந்தை காசி கிளாக்குடையார் மனோரமாவின் தாயின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்தார். [4] இதனை அடுத்து கணவனால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் மனோரமாவுடன் வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். [5] ஆறாம் ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். [6] அங்கு அவர்கள் பலகாரம் சுட்டு விற்பனை செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள். [4] தனது பனிரெண்டாவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். [7] "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்டார். [8] நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.
ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில்
புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின்
மணிமகுடம் ,[8] தென்பாண்டிவீரன் ,
புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார். [9] மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். [1] பின்னர் ராஜேந்திரன்,
தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.

பெற்ற விருதுகள்
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.
பத்ம ஸ்ரீ – 2002
தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது - 2015
புதிய தலைமுறை (தொலைக்காட்சி) சக்தி விருதுகள்

சொந்த வாழ்க்கை

மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். ராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி எனும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று,
சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
மறைவு
மனோரமா தனது 78 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

திரைத்துறைப் பங்களிப்புகள்

முதன்மை கட்டுரை: மனோரமா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
மனோரமா நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)
1950களில்
வருடம் திரைப்படம் குறிப்புகள்
1958
மாலையிட்ட மங்கை கதாநாயகி
பெரிய கோவில்
1959 மரகதம்
1960களில்
வருடம் திரைப்படம் குறிப்புகள்
1960 களத்தூர் கண்ணம்மா
1963
கொஞ்சும் குமரி [1]
பார் மகளே பார்
லவ குசா
1964 மகளே உன் சமத்து
1965 திருவிளையாடல்
1966
அன்பே வா
சரஸ்வதி சபதம்
கந்தன் கருணை
1968
எதிர்நீச்சல்
கலாட்டா கல்யாணம்
தில்லானா மோகனாம்பாள்
ஜில் ஜில் சுந்தரி ரமாமணி
கணவன்
1969 ஆயிரம் பொய்
1970களில்
வருடம் திரைப்படம் குறிப்புகள்
1970 தலைவன்
1972
பட்டிக்காடா பட்டணமா
காசேதான் கடவுளடா
நீதி
1973 ராஜ ராஜ சோழன்
1976
அக்கா
உனக்காக நான்
உண்மையே உன் விலை என்ன
ரோஜாவின் ராஜா
நீ ஒரு மகாராணி
மோகம் முப்பது வருஷம்
கிரஹபிரவேசம்
பத்ரகாளி
வாழ்வு என் பக்கம்
உங்களில் ஒருத்தி
பேரும் புகழும்
பாலூத்தி வளர்த்த கிளி
ஒரு கொடியின் இரு மலர்கள்
நல்ல பெண்மணி
முத்தான முத்தல்லவோ
மேயர் மீனாட்சி
குல கெளரவம்
ஜானகி சபதம்
1977
ஆளுக்கொரு ஆசை
ஆறு புஷ்பங்கள்
ஆசை மனைவி
துர்க்கை
1978
குப்பத்து ராஜா
சிட்டுக்குருவி
பைலட் பிரேம்நாத்
ஆயிரம் ஜென்மங்கள்
பைரவி (இறைவி)
1979
தியாகம்
அலங்காரி
இமயம்
கல்யாணராமன்
1980களில்
வருடம் திரைப்படம் குறிப்புகள்
1980 பில்லா
பூந்தளிர்
1981
தீ
சவால்
மங்கம்மா சபதம்
1982
வாழ்வே மாயம்
சிம்லா ஸ்பெஷல்
தாய் மூகாம்பிகை
சங்கிலி
தீர்ப்பு
மணல் கயிறு
மருமகளே வாழ்க
கண்ணோடு கண்
கைவரிசை
ஜோடி புறா
போக்கிரி ராஜா
பக்கத்து வீட்டு ரோஜா
1983
சட்டம்
சிவப்பு சூரியன்
மிருதங்க சக்கரவர்த்தி
நீதிபதி
நிரபராதி
தங்க மகன்
அடுத்த வாரிசு
பாயும் புலி
1984
எனக்குள் ஒருவன்
கைராசிக்காரன்
மண்சோறு
ஓ மானே மானே
அன்பே ஓடி வா
1985
ஸ்ரீ ராகவேந்திரா
விதி
நினைவுகள்
சிதம்பர ரகசியம்
ஜான்சி
1986
விக்ரம்
சம்சாரம் அது மின்சாரம் கண்ணம்மா
அம்புலிமாமா
1987
பேர் சொல்லும் பிள்ளை
நான் அடிமை இல்லை
1988
குரு சிஷ்யன்
பாட்டி சொல்லை தட்டாதே
என் ஜீவன் பாடுது
உன்னால் முடியும் தம்பி
இது நம்ம ஆளு
தம்பி தங்கக்கம்பி
1989
அபூர்வ சகோதரர்கள்
முனியம்மா வேடம்
புதிய பாதை
1990களில்
வருடம் திரைப்படம் குறிப்புகள்
1990
மைக்கேல் மதன காமராஜன்
எதிர்காற்று
நடிகன்
வேடிக்கை என் வாடிக்கை தமிழ்
1991
சின்ன கவுண்டர்
சின்னத் தம்பி கண்ணம்மா வேடம்
இதயம் கங்கா பாய் வேடம்
மைக்கேல் மதன காமராஜன்
1992
மன்னன்
நீ பாதி நான் பாதி
சிங்கார வேலன் தாயம்மா வேடம்
அண்ணாமலை தாய் வேடம்
1993
எஜமான்
ஜென்டில்மேன் கிட்டுவின் தாய் வேடம்
பொன்னுமணி
உத்தமராசா
தர்மசீலன்
செந்தூரப் பாண்டி
1994
காதலன்
தேவா
ஜெய்ஹிந்த்
சரிகம பதநி
ரசிகன்
நாட்டாமை
1995
முறை மாமன்
மருமகன்
கூலி
பெரிய குடும்பம்
நந்தவன தேரு
நான் பெத்த மகனே ஆண்டாள்
சைதன்யர்
வேலுச்சாமி
மிஸ்டர். மெட்ராஸ்
முத்துக்காளை
மாமன் மகள்
1996
பரம்பரை
இந்தியன்
லவ் பேர்ட்ஸ்
1997 அருணாச்சலம்
வள்ளல்
1998
பூவேலி
நட்புக்காக
வீர தாலாட்டு
மறுமலர்ச்சி
1999
ரோஜாவனம்
உன்னை தேடி
பெரியண்ணா
கும்மிப்பாட்டு
சிம்மராசி
2000களில்
வருடம் திரைப்படம் குறிப்புகள்
2000
கண்ணால் பேசவா
வெற்றிக் கொடி கட்டு
திருநெல்வேலி
கண்ணன் வருவான்
சிநேகிதியே
உன்னருகே நானிருந்தால்
மாயி
2001 கிருஷ்னா கிருஷ்னா
2002
தமிழ் (திரைப்படம்)
ஜெயா
ஜெமினி
2003
சாமி புவனாவின் பாட்டி வேடம்
திவான்
விசில்
அன்பே அன்பே
2004
பேரழகன்
7ஜி ரெயின்போ காலனி தமிழ்
2005 கற்க கசடற
2006
இம்சை அரசன் 23ம் புலிகேசி
பாசக்கிளிகள்
2007 ஆழ்வார்
தாமிரபரணி
2008 உளியின் ஓசை
2009 லாடம்
அ ஆ இ ஈ
2010களில்
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2010 சிங்கம் காவியாவின் பாட்டி
2013 சிங்கம் 2 காவியாவின் பாட்டி
வேறு மொழித் திரைப்படங்கள்
சிங்களத் திரைப்படம்
மஸ்தானின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்
மலையாளத் திரைப்படங்கள்
மில்லினியம் ஸ்டார்ஸ்
சீதா கல்யாணம்
தெலுங்குத் திரைப்படங்கள்
பாவா நச்சாடு
கிருஷ்னார்ஜுனா
அருந்ததி
இந்தித் திரைப்படங்கள்
குன்வாரா பாப் 1974, ஷீலா வேடம்

.
பாடிய பாடல்கள்
"தாத்தாதாத்தா பொடி கொடு" ( மகளே உன் சமத்து )
"வா வாத்தியார்" ( பொம்மலாட்டம் )
"தில்லிக்கு ராஜானாலும்" ( பாட்டி சொல்லை தட்டாதே )
"மெட்ராச சுத்தி பாக்க" ( மே மாதம் )
"தங்கையெனும் பாசக்கிளி" ( பாசக்கிளிகள் )
"தெரியாதோ நோக்கு தெரியாதோ" ( சூரியகாந்தி )
"பார்த்தாலே தெரியாதா" ( ஸ்ரீ ராகவேந்திரா)
மஞ்சள்கயிறு

நடிகர் கார்த்திக் பிறந்த நாள் மே 25 , 1977


நடிகர் கார்த்திக் பிறந்த நாள் மே 25 , 1977

கார்த்திக் சிவகுமார் , சுருக்கமாக கார்த்தி, ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ;
இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் நடித்த முதல் திரைப்படம் பருத்தி வீரன் ஆகும். இவரது மிகச்சிறந்த திரைபடமாக பருத்திவீரன் தீரன் அதிகாரம் ஒன்று. ஆகிய படங்களை குறிப்பிடலாம் 2018 வரை. இதை தவிர தோழா படத்தில் இரண்டு நாயகர்கள் கதைப்படி மற்றொரு நாயகனாக தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா உடன் சேர்ந்து நடித்தார் இருவருக்கும் சமமான கதைக்களமான போதிலும்.தெலுங்கு திரை உலகில் முன்னணி நட்சத்திரமான நாகார்ஜூனாவுக்கு சமமாக தனது அமைதியான நடிப்பில் உள்ளம் கவர்வார்.

இளமைக்காலமும் கல்வியும்

கார்த்தி 1977, மே 25 ஆம் நாளில் நடிகர்
சிவகுமார் , லட்சுமி அவர்களுக்கும்
சென்னையில் பிறந்தார். இவர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்து முடித்தார். இவர் நடிகர்
சூர்யாவின் தம்பியும் ஆவார்.

திருமணம்

இவரது திருமணம் திரு சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியுடன்,
சூலை மாதம் 3 ஆம் தேதி 2011 அன்று
கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2007 பருத்தி வீரன் பருத்தி வீரன்
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
தமிழக அரசு சிறந்த நடிகர் விருது
விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2010
ஆயிரத்தில் ஒருவன் முத்து
பையா சிவா
நான் மகான் அல்ல
ஜீவா பிரகாசம்
2011
சிறுத்தை
ரத்னவேல் பாண்டியன்,
ராக்கெட் ராஜா
கோ கார்த்திக் சிவகுமார்
(சிறப்பு தோற்றம்)
2012 சகுனி கமலக்கண்ணன்
2013
அலெக்ஸ் பாண்டியன்
அலெக்ஸ் பாண்டியன்
ஆல் இன் ஆல் அழகு ராஜா அழகுராஜா 2013 தீபாவளி வெளியிடு
பிரியாணி சுகன்
2014 மெட்ராஸ் காளி
2015 கொம்பன் கொம்பையா பாண்டியன்
2016 தோழா சீனு
2016 காஷ்மோரோ காஷ்மோரோ ,

புதன், 23 மே, 2018

நடிகர் ரகுமான் பிறந்த நாள் மே 23-1967


நடிகர் ரகுமான் பிறந்த நாள்  மே 23-1967

ரகுமான் 1967, மே 23-ல் அபுதாபியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர்
ரசின் ரகுமான் என்பதாகும். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். 1983-ல் வெளிவந்த கூடுவிடே என்ற மலையாளப் படம் மூலம் அறிமுகம் ஆனார்.

பிறப்பு ரசின் ரகுமான்
அபுதாபி
செயல்பட்ட
ஆண்டுகள்
1983 - தற்போது
உயரம் 6 அடி
சமயம் இஸ்லாம்
வாழ்க்கைத்
துணை
மெஹ்ருனிசா
பிள்ளைகள் ருஸ்டா, அலிசா
வலைத்தளம்
http://www.actorrahman.com

புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் பாலச்சந்தர் இவரை வைத்து இயக்கினார்.

ஞாயிறு, 20 மே, 2018

நடிகர் மோகன்லால் பிறந்த நாள் மே 21 . 1960


நடிகர் மோகன்லால் பிறந்த நாள் மே  21 . 1960

மோகன்லால் விஸ்வநாதன் நாயர் (பிறப்பு 21 மே 1960), [1] மோகன்லால் ( மலையாளம் : മോഹന്ലാല്), இந்தியத் திரைப்பட நடிகர் , திரைப்பட தயாரிப்பாளர். இவர் பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 5 முறை தேசிய விருதுகளைப் பெற்றவர், இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதுகளையும், ஒரு தனிப்பட்ட நடுவர் குழு விருதும் ஓர் சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றவர். மேலும் ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை
ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றிருக்கிறார், இவர் இந்திய திரைப்பட உலகத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில்
இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 2009 ஆம் ஆண்டில், இந்தியத் தரைப்படை இவரை கௌரவிக்கும் வகையில் லெப்டினன்ட் காலோனல் பதவியை வழங்கியது, இவ்விருதை பெரும் முதல் இந்திய நடிகர் இவரே. [2] மேலும் காலடி என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்க்ரித பல்கலைக்கழகம் இவருக்கு
கௌரவ டாக்டர் வழங்கி கௌரவித்தது . [3] . தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்கான மிகவும் அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவரேயாவார். கேரளா மாநிலம், கோழிக்கூடு பல்கலைக்கழகம் சார்பில் சனவரி 29, 2018 ஆம் ஆண்டு இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. [4]
முன்பருவ வாழ்க்கை (1960–1977)
மோகன்லால் கேரளத்திலுள்ள
பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூர் என்ற இடத்தில், வழக்கறிஞரும் அரசு ஊழியருமான விஸ்வநாதன் நாயர் - சாந்தகுமாரி தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். பிறகு இவர்களுடைய குடும்பம் திருவனந்தபுரத்திலுள்ள முடவன்முகள் என்ற இடத்தில் அமைந்திருக்கும் அவருடைய தாயாரின் வீட்டிற்கு இடம் பெயர்ந்தது. முடவன்முகளில் 'LP' பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார், அதற்குப்பின் திருவனந்தபுரத்தில் உள்ள மாடல் ஸ்கூலில், தனது படிப்பைத் தொடர்ந்தார். [5] பள்ளிக்கூட படிப்பில் சராசரி மாணவனாகத்தான் திகழ்ந்தார், அதே சமயம் கலை உலகம் அவர் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது; பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார். பொதுவாக பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களே சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் ஆறாவது வகுப்பு மாணவரான மோகன்லால் பள்ளிக்கூடத்தில் சிறந்த நடிகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், . [5]
பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் தமது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இவர் நடிப்புடன் கொண்டிருந்த இணைப்பை தொடர்ந்துவந்தார் மேலும் சிறந்த நடிப்பிற்கான பல விருதுகளை இவர் வென்றார். இங்குதான் இவர் நாடகத்தின் மீதும் திரைப்படங்களின் மீதும் பற்றுகொண்ட சக மாணவநண்பர்களுடன் நட்பு ஏற்பட்டது. [6] அவர்களில் சிலர் இவருடைய முதல் சாதனைக்கு வித்திட்டனர், அவர்களில் ப்ரியதர்ஷன் ,M.G.ஸ்ரீகுமார் மற்றும்
மணியன்பிள்ளராஜு போன்றவர்கள் மிகவும் பிரபலமான இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும் உருவெடுத்தார்கள்.
திரைப்படத்துறை வாழ்க்கை
Mohanlal: filmography
ஆரம்ப காலங்கள் (1978–1985)
மோகன்லால் முதன் முதலில் "திறநோட்டம்" (1978) என்ற படத்தில் நடித்தார். தணிக்கைக் குழுவினருடன் (சென்சார் போர்ட்) ஏற்பட்ட தகராறுகள் காரணமாக இப்படம் ஓரிடத்தில் மட்டும் வெளியானது . 1980 ஆம் ஆண்டில் இவர் ''மஞ்சில் விரிஞ்ச பூக்கள்'' என்ற மாபெரும் வெற்றிபடத்தின் மூலம் ஒரு முரண்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து சாதனைப் படைத்தார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இவர் படிப்படியாக தனக்கு முக்கியத்துவம் நிறைந்த பாத்திரங்களை ஏற்று நடித்தார். 1983 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 25 க்கும் மேலான திரைப்படங்களில் நடித்தார். அந்த காலக் கட்டத்தில் பிரபலமான எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் எழுதி ஐ.வி சசி இயக்கிய படமான உயரங்களில் என்ற படத்தில் நடித்தார், அதன் கதை ஏமாற்றுவது மற்றும் துரோகம் இழைத்தலை கருத்தாகக் கொண்டது, இது அவருடைய சிறப்பை உயர்த்திக்காட்டிது. அதற்குப்பிறகு அவரது நண்பனும் கல்லூரியில் சக மாணவருமான இயக்குநர்
ப்ரியதர்ஷனின் அறிமுகத் திரைப்படமான
பூச்சைக்கு ஒரு மூக்குத்தி என்ற படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.
பொன்னான காலகட்டம் (1986-1995)
1986 ஆம் ஆண்டு முதல் 1995 வரையிலான கால கட்டம் பரவலாக மலையாளத் திரைப்பட உலகின் பொன்னான காலகட்டமாகக் கருதப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்கள் விரிவான திரைக்கதைகள், தெளிவான விவரணம் மற்றும் அருமையான நோக்கங்கள் நிறைந்த படங்களாக சிறப்பித்தன. கலை ரீதியிலான படங்களுக்கும், வணிக ரீதியில் எடுத்த படங்களுக்கும் இடையிலேயான இடைவெளியை மிகவும் குறுக்கியது. [7] . படிப்படியாக உயர்ந்து வரும் இளம் கலைஞர்களில் ஒருவரான திறமை வாய்ந்த மோகன்லால், பல தரப்பட்ட உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தக்கூடிய அழகான பல வேடங்களில் நடிக்கும் வாய்ப்புக்களைப் பெற்றதோடல்லாமல், இவர் மலையாளத் திரை உலகில் பிரபலமடைந்த பல எழுத்தாளர்களுடனும் இயக்குனர்களுடனும் நல்லுறவை மேம்படுத்திக் கொண்டார்.
1986 ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் சிறந்த ஆண்டாக விளங்கியது. சத்யன் அந்திக்காடு அவர்களின் டி.பி. பாலகோபாலன் எம்.ஏ. என்ற திரைப்படம் அவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை முதன்முறையாக பெற்றுத்தந்தது. இவர் நிழலுலக தாதாவாக நடித்த ராஜாவின்டே மகன் என்ற படம் மலையாளத் திரையுலகில் மோகன்லால் ஒரு சூப்பர் ஸ்டாராக வெளிப்படுவதை உறுதி செய்தது. அதே வருடத்தில் இவர், தாளவட்டம் என்ற படத்தில் காப்பிடத்தில் இருக்கும் மனநிலை குன்றியவராக நடித்திருக்கிறார்,
சன்மனசுள்ளவர்க்கு சமாதானம் படத்தில் பெரும் தொல்லைகள் கொடுக்கும் வீட்டு உரிமையாளர் கதாபாத்திரத்திலும் , எம்.டி. வாசுதேவன் நாயரின்
பஞ்சாக்னியில் பத்திரிகையாளர் வேடத்திலும், நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் படத்தில் காதல் வசப்பட்ட பண்ணையாளராகவும், காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட் படத்தில் வேலையில்லாது தவிக்கும் இளைஞன் கூர்காவாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதை சித்தரிக்கும் கதப்பாதிரமாக, என பல்வேறுவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்தார்.
எழுத்தாளர் - இயக்குனர் ஜோடியாக திகழ்ந்த ஸ்ரீநிவாசன் , சத்யன் அந்திக்காடு ஆகியோர் போன்ற சமூக பொறுப்போடு, சமுதாய சீர்கேடுகளை நையாண்டி செய்து சிந்திக்க வைக்கும் ஆற்றல் படைத்தவர்களுடன், இணைந்து பணியாற்றிய படம் நாடோடிக்கட்டு , இதில் வேலையில்லா இளைஞனாக நடித்தார்.
''வரவேல்பு'' என்ற படத்தில் இவர் அரபு நாட்டில் இருந்து திரும்பி வரும் நாயகனாக நடித்தார், பேராசை கொண்ட உறவினர்களும் , பகைமை உணர்வுடன் நடத்தும் நாட்டுநிலவரத்தைக் கண்டு அஞ்சும் தொழில்முனைவோர் வேடத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ப்ரியதர்ஷனின் இயக்கிய சித்ரம் , கிலுக்கம் படங்களில் வசீகரமான காதல் கதாப்பாத்திரங்களில் நடித்து இளம் ரசிகர்களுக்கிடையே மிகவும் பிரபலமானார். இத்திரைப்படங்கள் இசைக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்திய கதாநாயகர்கள் வழக்கமான கதாப்பாதிரங்கலையே ஏற்று நடித்து வந்த நேரத்தில் தூவானத்தும்பிகள் என்ற படத்தில் இரு பெண்களிடம் காதல் கொண்டு அவதிப்படும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் முதல் நாயகியிடம் அடி வாங்கிய மறு கணமே இன்னொரு பெண்ணிடம் காதல் வசப்படும் கோமாளி நாயகனாக இவர் நடிக்கத் துணிந்தார். அம்ரிதம்கமைய என்ற படத்தில் இவர் கல்லூரியில் நையாண்டி செய்து அறியாமல் கொன்று விட்ட ஒரு சிறுவனின் வீட்டிற்கே அவர் கடைசியில் வந்துசேரும் கதாப்பாத்திரம் . தாழ்வாரம் என்ற படம் இந்த கால கட்டத்தில் வெளிவந்த குறிப்பிடத்தக்கப் படமாகும்.
எழுத்தாளர் லோஹிததாஸ் மற்றும் இயக்குனர் சிபி மலையில் ஆகியோர் இணைந்து ஜோடியாக தயாரித்த படங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமான மனம் கவரும் பாத்திரங்களைப் பெற்றுத்தந்தன.
கிரீடம் என்ற படத்தில் சேது மாதவன் எனும் ஒருவன் போலீஸ்காரனாக வேண்டும் என்ற கனவு கண்டு கடைசியில் குற்றவாளியாக கூண்டில் நிற்பவனாக நடித்திருந்தார், இது அவருக்கு சிறப்பு நடுவர் குழு விருதைப் பெற்றுத் தந்தது. இதற்கு அடுத்த வருடத்தில், பாரதம் என்ற படத்தில் இவர் ஒரு மரபார்ந்த பாடகர் வேடத்தில் நடித்தார், இதில் பாடகரான தன் சகோதரன் மீது பொறாமை கொல்வதும், அவருடைய இறப்பால் மனம் வெதும்பும் வேடத்தில் நடித்ததற்கு இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
90 ஆம் ஆண்டுகளிலும் இவர் தமது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாஹ் போன்ற மனதைக் கொள்ளை கொள்ளும் (மனோரஞ்சிதமான) படங்கள் வெளியானது, இதில் இவர்
இஸ்லாமியராக நடித்தார், அதில் நம்பூதிரி வேடம் பூண்டு ஒரு ராஜவம்சத்தினனைக் கொல்லத்துணிகிறார். இந்த கால கட்டத்தில் வணிக ரீதியாக வெற்றியடைந்த இதர திரைப்படங்கள் மிதுனம் ,
மின்னாரம் , தேன்மாவின் கொம்பத்து போன்ற படங்கள் 80 ஆம் ஆண்டுகளைப்போலவே மரபு சார்ந்த நல்ல திரைப்பட கதைகள் கொண்டவையாகவும், நல்ல பாத்திர அமைப்பு பெற்றவையாகவும் திகழ்ந்தன.
தேவாசுரம் , ரஞ்சித் எழுதி ஐ.வி சசியின்இயக்கத்தில் உருவானது, மத்திய கேரளாவில் இராணுவ ஆட்சியின் காலத்தை சுட்டி காட்டும், அப்படத்தில் மோகன்லால் திமிர் பிடித்த, பணக்கார முரட்டுத்தனம் நிறைந்த வாலிபனாக தோன்றி வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் காரணமாக சஞ்சலமடைந்து கொஞ்சம் கொஞ்சமாக அடக்கமானவராக மனம் மாறும் பாத்திரத்தை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். இயக்குனர் பத்ரனின் ஸ்படிகம் என்ற படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் புதுமையாக அமைந்து மாபெரும் வெற்றி படமானது. [8] சிறந்த படங்கள் குறைவாக வந்துக்கொண்டிருந்த இக்கால கட்டத்தில் மணிசித்திரத்தாழ் , போன்ற கலை மற்றும் வியாபார ரீதியான வெற்றிப்படங்கள் வெளிவந்தன
மனிச்சித்திரத்தாழ் படத்தில் நடித்ததற்காக
சோபனா சிறந்த நடிகிக்கான தேசிய விருதைப்பெற்றார்.
பிந்தைய வருடங்கள் (1996-தற்பொழுது)
அவருடைய திரைப்பட வாழ்க்கையின் இந்த கால கட்டத்தில் கேரளாவில் மோகன்லால் அடைந்த அளவற்ற மக்கள் செல்வாக்கின் காரணமாக, படத் தயாரிப்பாளர்கள் அவரை திரைப்படங்களில் எதற்குமே அஞ்சாத, யாராலும் வெல்ல முடியாத, நிஜ வாழ்க்கையை மிஞ்சும் கதாநாயகனாக பல படங்களில் நடிக்க வைத்து வியாபாரமாக்கினர். அந்த நாயக அந்தஸ்த்தை பயன்படுத்தி ஆறாம் தம்புரான் , நரசிம்ஹம் , ராவணப்பிரபு,
நரன் போன்ற திரைப் படங்களைத் தயாரித்தனர். அவை யாவும் வெற்றிப்படங்களாகவே திகழ்ந்தன. ஆரம்பத்தில் அவை புதுமையாக காணப்பட்டாலும், காலப்போக்கில் இவ்வாறான படங்கள் நிஜ வாழ்க்கைக்கு ஒவ்வாமலும், மோகன்லாலை சுற்றியே வடிவமைந்ததாகவும் பல இடங்களில் இருந்து கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டது. 90 களின் இறுதியில் வெளிவந்த இயக்குநர் ப்ரியதர்ஷனின்
காலாபானி இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தில் அந்தமான் தீவில் உள்ள குறுகிய சிறைகளில் அடைத்து சித்திரவதைக்கு உட்பட்ட கைதிகளைப்பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது), லோஹிததாஸ் அவர்களின் கண்மடம் படமும் இவர் நடித்த சில பெயர்பெற்ற படங்களாகும்.
இந்த நேரத்தில் தான் மலையாளம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தியாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் மொழிப்படமான
இருவரில் நடித்தார். இந்தப் படத்தில் மோகன்லால் அவரது அண்டை மாநிலமான
தமிழ் நாட்டில் தனக்கென தனிப்பெரும் செல்வாக்கு பெற்ற நடிகர் எம்ஜிஆர் (தமிழக முன்னாள் முதல்வர்) அவர்களின் வேடத்தில் நடித்தார் .பின் இந்திய-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பான வானப்ரஸ்தம் என்ற படத்தில், தமது அடையாளத்தையே இழந்த கதகளி நாட்டிய விற்பன்னராக வேடம் புனைந்தார், இது அவருக்கு சிறந்த நடிகருக்கான இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுத்தந்தது, மேலும் உலக அளவில் அவரது திறமையை அறியவைத்த முதல் படமாக இது திகழ்ந்தது. கான்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் பிரிவில் இப்படம் தெரிவு செய்யப்பட்டு திரையிடப்பட்டது, அவரது நடிப்பு பல திறனாய்வாளர்களின் பாராட்டைப் பெற்றது. [9] .
2002 ஆம் ஆண்டில், மோகன்லால் அவரது முதல் பாலிவுட் படமான, கம்பெனி யில் நடித்தார், இப்படம் இந்தியாவில் பரவலாக பேசப்படும் ஹிந்தி மொழி ரசிகர்களிடம் அவரை அறிமுகப்படுத்தியது. இப்படம் வணிக ரீதியில் சிறப்பான வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. 2006 ஆம் ஆண்டில், இவர் நடித்த தன்மாத்ரா ("மொலிக்யுள்") என்ற படத்தில்,
அல்செய்மர்ஸ் நோயால் (முதுமை வியாதி) அவதியுறும் ஒரு பாத்திரத்தின் நடிப்பு அவருக்கு கேரள மாநிலத்தின் சிறந்த நடிகாருக்கான விருதைப் பெற்றுத்தந்தது. அவரது இரண்டாவது பாலிவுட் திரைப்படம் ராம் கோபால் வர்மா கி ஆக் , இப்படம் 1975 ஆம் ஆண்டில் வெளிவந்த வெற்றிப்படமான ஷோலே படத்தின் மறு தயாரிப்பாகும் மேலும் அதில் சஞ்சீவ் குமார் அவர்கள் நடித்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் தோன்றினார்.
பரதேசி என்ற படத்தில் வலியகத்து மூசா என்ற வேடத்தில் நடித்ததற்காக மோகன்லால் அவர்களுக்கு கேரள மாநிலத்தின் மிகச் சிறந்த நடிகருக்கான விருது 2007 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. தேசிய அளவில் பரதேசி என்ற படத்தில் அவருடைய நடிப்பிற்கு கிடைக்கவேண்டிய சிறந்த நடிகருக்கான விருதை மோகன்லால் அவர்கள் ஒரே ஒரு வோட்டு வித்தியாசத்தில் இழந்தார். [ சான்று தேவை ] 2009 ஆம் ஆண்டில் மோகன்லால் டாக்டர் கமல் ஹாசனுடன் தமிழ் படமான உன்னைப்போல் ஒருவனில் நடித்தார். அவரது நடிப்பை தமிழ் ரசிகர்கள் மிகவும் போற்றினர். 2010 ஆம் ஆண்டை இவர் மிகவும் நல்ல முறையில் துவங்கினார், ஓர் உண்மையான குடும்பக் கதையை சித்தரிக்கும் [ சான்று தேவை ] குடும்பப் படமான இவிடம் ஸ்வர்கமாணு என்ற ரோஷன் ஆண்ட்ர்யூஸ் இயக்கிய வெற்றிப் படத்தில் இவர் நடித்துள்ளார்.
நாடகத்துறை
இதர இந்தியத்திரைப்பட நடிகர்களைப் போல மோகன்லால் அவர்களுக்கு திரைப்படத்திற்கு முந்தைய நாடக அனுபவம் இல்லை. இருந்தாலும் அவர் சில நாடகங்களில் நடித்துள்ளார். நியூ டெல்லியில் நேஷனல் தியேட்டர் பெஸ்டிவல் என்ற பெயரிலான தேசிய நாடக விழாவில் பங்குபெற்ற ஒரு நாடகமான கர்ணபாரம் என்ற சமஸ்க்ரித மொழி நாடகத்தில் அவர் கர்ணன். ( மகாபாரதம் எனப்படும் இந்திய புராண இதிகாசத்தில் வரும் ஒரு பாத்திரம்) வேடத்தில் நாடகமேடையில் முதன்முதலாகத் தோன்றினர். இந்த நாடகம்
குருக்ஷேத்திரத்தில் நடக்கவிருக்கும் போரின் முந்தைய நாள் அன்று, கர்ணனின் மனதில் காணப்படும் சஞ்சலத்தை, அவருடைய கடந்த கால நிகழ்வுகள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி அவர் நினைக்கும் பொழுது அவர் படும் மன உளைச்சலை சித்தரிப்பதாகும். [10]
கதையாட்டம் என்ற வகைப்பாட்டில் மோகன்லால் மலையாள காவியங்களில் இருந்து தெரிவு செய்த பத்து மறக்க முடியாத பாத்திரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைச் சித்தரித்தார். அதை அவர் தமது தாய் மொழிக்கு சமர்ப்பணம் செய்வதாகக் குறிப்பிட்டார். திரைப்பட இயக்குனர் டி.கே. ராஜீவ் குமார் கற்பனையில் உதித்த இந்தக்காட்சியின் வடிவமைப்பு, மேடை நாடக நடிப்பு, திரைப்படத்திற்கான முகத்தோற்றம், ஒலி மற்றும் ஒளி அமைப்பு தொழில் நுட்பங்கள் மற்றும் இசை நயம் அனைத்தும் கொண்ட ஓர் அற்புத கலவையாகும். [6] 'காளிதாசா விசுவல் மேஜிக்' என்ற பெயரில் மோகன்லால் மற்றும் அவருடன் புகழ் பெற்ற நடிகரான முகேஷும் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் தற்போது மிகவும் அண்மையில்
சாயாமுகி என்ற நாடகத்தைத் தயாரித்தது. மோகன்லால் பீமன் வேடத்திலும் முகேஷ் கீசகன் வேடத்திலும் நடித்தார்கள். 12 மார்ச் அன்று இந்த நாடகம் முதல் முதலாக திருச்சூரில் அரங்கேறியது. [11]
தொழில் நிறுவனங்கள்
விஸ்மயாஸ் மாக்ஸ் என்ற பெயரில்,
திருவனந்தபுரத்தில் உள்ள கழக்கூட்டம் என்ற இடத்தில் படத்தயாரிப்பிற்குப்பின் வரும் ஸ்டுடியோ மற்றும் ஒலிச்சேர்க்கை வினைஞர்களுக்கான கல்லூரி, அதாவது பிலிம் போஸ்ட் புரொடக்சன் ஸ்டூடியோ அண்ட் காலேஜ் ஃபார் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் என்ற கல்லூரி கின்ஃப்ரா ஃபிலிம் மற்றும் விடியோ பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
'பிரணவம் ஆர்ட்ஸ் என்ற பெயரில், ஒரு பட தயாரிப்பு நிறுவனம் (தற்பொழுது செயல்படவில்லை)
பிரணவம் , பட விநியோக நிறுவனம் (தற்பொழுது செயல்படவில்லை)
யுனி ராயல் மரைன் எக்ஸ்போர்ட்ஸ் ,
கோழிக்கோடு -என்ற இடத்தில் உள்ள கடலுணவு ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பங்குதாரர்.
துபாய் நகரத்தில் நிறுவிய
மோகன்லால்ஸ் டேஸ்ட்பட்ஸ் என்ற பெயரில் விளங்கும் சங்கலித்தொடர் உணவகங்கள்
திருவாங்கூர் கோர்ட், என்ற பெயரிலான கொச்சியில் உள்ள ஒரு மூன்று நட்சத்திர உணவகம்.
மாக்ஸ்லாப் சினிமாஸ் அண்ட் என்டர்டைன்மென்ட்ஸ் திரைப்பட விநியோக நிறுவனத்தின் பங்ககுதாரர்.
பெங்களூரில் உள்ள தி ஹார்பர் மார்க்கெட் என்ற உணவகம்.
மோகன்லால்ஸ் டேஸ்ட்பட்ஸ் , ஊறுகாய் மற்றும் குழம்புப் பொடிகள் தயாரிப்பு நிறுவனத்தின்[12] பங்குதாரர்
ஜோஸ் தாமஸ் பெர்போர்மிங் ஆர்ட்ஸ் சென்டர் (JtPac) என்ற நிறுவனத்தின் தலைவர்.
விமர்சனம்
2007 ஆம் ஆண்டில் கேரளாவில் ஒரு குறிப்பிட்ட மது தயாரிப்பு நிறுவனத்திற்கான விளம்பரங்களில் அவர் நடித்ததற்காக விமரிசகர்களால் மிகவும் சர்ச்சைக்குள்ளானார். [13] இந்தியாவில் மதுபானங்களிற்கான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இந்த தடையையும் மீறி தங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்வதற்கு பல தரப்பட்ட உத்திகளைக் கையாண்டு வருகின்றன, அவற்றில் ஒரு முறையானது மது பானங்களைப் போலவேயுள்ள இதர மது சாரா பானங்களை அதே குறியீட்டுகளுடன் தயாரித்து விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்வது. உள்ளூர் தொலைகாட்சி மற்றும் திரை அரங்குகளில் மிகவும் பரவலாக விளம்பரமான இந்த குறிப்பிட்ட விளம்பரத்தில், ஒரு மதுபானம் சார்ந்த குறியீடு கொண்ட நேந்திரங்காய் வறுவலுக்காக மோகன்லால் நடித்தார்.
மோகன்லால், அவர் நடிக்கும் படங்களை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்கிறார், மேலும் அவர் நடிக்கும் பொழுது அவர் உள்ளுணர்வு சொல்வதை நம்பியே நடித்து வருகிறார் மற்றும் நிகழ்வுகளை அதன் போக்கில் விட்டு விடுவதையே அவர் விரும்புகிறார். [14] அவரது தொடக்கக் காலங்களில் இருந்தே அவருடன் நெருக்கமாக பழகிய மக்கள் குழுமத்துடன் சேர்ந்து மலையாளத் (திரைப்படத்) துறையில் நடிப்பதையே அவர் விரும்புகிறார், அதில் அவர் மிகவும் ஆனந்தம் அடைகிறார். [15] அவருடைய மிகவும் சிறந்த பள்ளி, கல்லூரி நண்பர்கள் இன்றும் அவருடன் திரைப்படத்துறையில் உள்ளனர். அவர்களில் பட இயக்குனர் ப்ரியதர்ஷன், பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமார், நடிகர் ராஜு மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் குமார் போன்றோர் அடங்குவர்.
மோகன்லால் ஒரு தன்னியல்புடன் கூடிய நடிகராக, ஒரு பாத்திரத்தின் உள்ளுணர்வுகள் மற்றும் மனக்குமுறல்களை எளிதாகவும் மிகவும் விரைவாகவும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவராவார் [16] பட இயக்குனரின் விருப்பத்திற்கிணங்கும் நம்பக்கூடிய முக பாவங்களை சித்தரிக்கக்கூடிய நடிகராக திரை உலகில் அறியப்படுகிறார். [17] . அவர் பிற மொழிப்படங்களில் நடிக்கும் பொழுது கொஞ்சம் மன உளைச்சலுடன் காணப்படுகிறார், அம்மொழிகளில் அவருக்கு முழுமையாக ஈடுபாடு இல்லாததாலும், மேலும் அதற்கான காரணம் அவருக்கு அந்தந்த மொழிகளில் காணப்படும் சிக்கல்களை அவர் அறியாதிருப்பதே என்பதை உணர்ந்துள்ளார். [14]
விருதுகளும் சாதனைகளும்
List of awards and nominations received by Mohanlal
1997 ஆண்டிற்கான மிகச்சிறந்த வேற்றுமொழிப் படங்களுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான அதிகாரபூர்வமான இந்தியப் படமாக மோகன்லால் நடித்த ஒரு படம் தெரிவு செய்து பரிந்துரைக்கப்பட்டது.
2001 ஆண்டில் இந்திய அரசு மோகன்லால் அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.
2006 ஆண்டில் சிஎன்என்-ஐபிஎன் நிறுவனம் நடத்திய தேர்வில் கேரளத்தின் மிகவும் பிரபலமான மனிதராக மோகன்லால் தெரிவு செய்யப்பட்டார்.
2009 ஆண்டில் இந்தியத் தரைப்படை மோகன்லால் அவர்களுக்கு லெப்டினன்ட் கலோனல் (கலோனல் துணைநிலை படை அதிகாரி) பட்டத்தை அளித்து கௌரவித்தது.
2009 ஆண்டில் ஸ்ரீ சங்கரா சமஸ்க்ரித பல்கலைக் கழகம் மோகன்லால் அவர்களுக்கு மதிப்பியலான பேரறிஞர் பட்டம் (டாக்டரேட்) அளித்து கௌரவித்தது.
நடிப்பு வாழ்க்கை
Mohanlal: filmography மோகன்லால் சுமார் 300 மலையாள, இந்தி , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் 12 படங்களை தயாரித்துள்ளார்.

இயக்குநர் பாலு மகேந்திரா பிறந்த தினம் மே 20 , 1939.


இயக்குநர் பாலு மகேந்திரா பிறந்த தினம் மே 20 , 1939.

பாலு மகேந்திரா ( Balu Mahendra , 20 மே 1939 - 13 பெப்ரவரி 2014) இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.

பிறப்பு பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன்
மே 20 , 1939
மட்டக்களப்பு , இலங்கை
இறப்பு பெப்ரவரி 13, 2014 (அகவை 74)
சென்னை , இந்தியா
இருப்பிடம் சென்னை , இந்தியா
பணி திரைப்பட இயக்குநர் , ஒளிப்பதிவாளர் ,
எழுத்தாளர் , தயாரிப்பாளர்


பிறப்பு

1939 மே 20 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர்.தனது ஆரம்ப கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார்.
லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 ல் தங்கப்பதக்கம் பெற்றார்.

முதல் தாக்கம்

தான் பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றார். பின்னர் ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்( Bridge of river kwai ) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும் போது பாலகன் பாலு மகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகின்றது.


திரைப்பட நுழைவு

அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை ' செம்மீன் ' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த
ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம்
முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சின்னத்திரையில் பாலு மகேந்திரா
கதை நேரம் எனும் தொலைக்காட்சி தொடரினை சன் தொலைக்காட்சிக்காக பாலு மகேந்திரா இயக்கினார்.இத்தொடர்கள் 52 கதைகளை கொண்டிருந்தன அவற்றில் 10 கதைகள் எழுத்தாளர் சுஜாதாவினுடையதாகும்.

நுண்ணுணர்வும் படைப்பாற்றலும்

பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக்கொண்டிருக்கும்.ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது.

விருதுகளும் பாராட்டுக்களும்
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியா ராகம் ,
வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன.
ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவராவார்.

தேசிய திரைப்பட விருதுகள்

ஆண்டு திரைப்படம் மொழி துறை
1978 கோகிலா கன்னடம் ஒளிப்பதிவு
1983 மூன்றாம் பிறை தமிழ் ஒளிப்பதிவு
1988 வீடு தமிழ் இயக்கம்
1990 சந்தியா ராகம் தமிழ் இயக்கம்
1992
வண்ண வண்ண பூக்கள்
தமிழ் இயக்கம்

மாநில அரசு விருதுகள்

ஆண்டு திரைப்படம் மாநில அரசு துறை
1974 நெல்லு கேரளம் ஒளிப்பதிவு
1975 பிரயாணம் கேரளம் ஒளிப்பதிவு
1977 கோகிலா கர்நாடகம் திரைக்கதை
பிலிம்பேர் விருதுகள்
ஆண்டு திரைப்படம் மொழி துறை
1983 மூன்றாம் பிறை தமிழ் இயக்கம்
1983 ஓலங்கள் மலையாளம் இயக்கம்
1988 வீடு தமிழ் இயக்கம்

நந்தி விருதுகள்

ஆண்டு திரைப்படம் மொழி துறை
1978 மனவூரி பண்டவலு தெலுங்கு ஒளிப்பதிவு
1982 நீர்க்காசனா தெலுங்கு ஒளிப்பதிவு
பாராட்டாக கிடைத்த காட்சிக் காணி
பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளருமாக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது காட்சிக் காணியை பரிசாக வழங்கியுள்ளார்.

இயக்குனரான உதவியாளர்கள்

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா ", "பிதாமகன் " போன்ற படங்களை இயக்கிய பாலா , பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். சீனுராமசாமி , ராம், வெற்றி மாறன் , சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. பாலு மகேந்திரா இயக்கிய 'கதைநேரம்' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது.

உந்தப்பட்டவர்கள்

சந்தோஷ் சிவன் , ரவி கே.சந்திரன் ஆகியோர் இவரால் உந்தப்பட்ட சில பிரபல ஒளிப்பதிவாளர்களாகும்.

இயக்கிய திரைப்படங்கள்

1. கோகிலா
2. அழியாத கோலங்கள்
3. மூடுபனி
4. மஞ்சு மூடல் மஞ்சு ( மலையாளம் )
5. ஓலங்கள் (மலையாளம்)
6. நீரக்ஷ்னா ( தெலுங்கு )
7. சத்மா ( ஹிந்தி )
8. ஊமை குயில்
9. மூன்றாம் பிறை
10. நீங்கள் கேட்டவை
11. உன் கண்ணில் நீர் வழிந்தால்
12. யாத்ரா
13. ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
14. ரெட்டை வால் குருவி
15. வீடு
16. சந்தியாராகம்
17. வண்ண வண்ண பூக்கள்
18. பூந்தேன் அருவி சுவன்னு
19. சக்ர வியூகம்
20. மறுபடியும்
21. சதி லீலாவதி
22. அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)
23. ராமன் அப்துல்லா
24. என் இனிய பொன் நிலாவே
25. ஜூலி கணபதி
26. அது ஒரு கனாக்காலம்
27. தலைமுறைகள்

மறைவு

பாலு மகேந்திரா பெப்ரவரி 13, 2014 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

துணுக்குகள்

பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர். [ சான்று தேவை]
இவர் புனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான "செங்கோட்டை" யை கொழும்பு "சவோய்" திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார். [ சான்று தேவை] சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார்.

வெள்ளி, 18 மே, 2018

நடிகர் முரளி பிறந்த தினம் மே 19, 1964


  நடிகர் முரளி பிறந்த தினம் மே 19, 1964

முரளி ( மே 19 , 1964 - செப்டம்பர் 8 , 2010 ) தமிழ்த் திரைப்பட நடிகர்  . கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 -ல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 -ல் வந்த “புதுவசந்தம் ”, 1991 -ல் வந்த “இதயம்”, படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள் ” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.

பிறப்பு மே 19, 1964 (அகவை 53)
பெங்களூரு , இந்தியா
இறப்பு செப்டம்பர் 8, 2010 (அகவை 46)
சென்னை , இந்தியா
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1984 - 2010
துணைவர் ஷோபா

வாழ்க்கைக் குறிப்பு

சொந்த வாழ்க்கை
முரளியின் தந்தை சித்தலிங்கையா
கன்னடர் ஆவார். அவர் பல படங்களைத் தயாரித்துள்ளார். முரளியின் தாயார்
தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா , ஆகாஷ் என்ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். இவர் வண்ணார் சமுகத்தை சேர்ந்தவரவார்.
அதர்வா “பாணா காத்தாடி ” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.

திரை வாழ்க்கை

இவர் சிவாஜி கணேசன் , விஜயகாந்த் ,
பிரபு , கார்த்திக் , சத்யராஜ் , பிரபுதேவா ,
சூர்யா , பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா , சிம்ரன் ,
ரோஜா, தேவயானி , லைலா , ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை

இவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார்.


நடித்த திரைப்படங்கள்
எண் ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்

1984
பிரேம பர்வா கன்னடம்
2 பூவிலங்கு பாண்டியன் தமிழ்
3 இங்கேயும் ஒரு கங்கை காத்தமுத்து தமிழ்
4 புதியவன் மனோகர் தமிழ்
5
1985
பகல் நிலவு செல்வம் தமிழ்
6 கீதாஞ்சலி ஜேம்ஸ் தமிழ்
7 அந்தஸ்து தமிழ்
8 அஜேயா கன்னடம்
9 இளங்கன்று தமிழ்
10
1986
புதிர் தமிழ் முதல் இரட்டை வேடம்
11 ஒரு மலரின் பயணம் தமிழ்
12 மண்ணுக்குள் வைரம் தமிழ்
13 காலமெல்லாம் உன் மடியில் தமிழ்
14
1987
வண்ணக்கனவுகள் மூர்த்தி தமிழ்
15 வளையல் சத்தம் தமிழ்
16 துளசி சிவா தமிழ்
17 அவள் மெல்ல சிரித்தால் தமிழ்
18 மீண்டும் மகான் தமிழ்
19
1988
புயல் பாடும் பாட்டு தமிழ்
20 குடும்பம் ஒரு கோவில் தமிழ்
21 தப்புக்கணக்கு தமிழ்
22
1989
தங்கமணி ரங்கமணி ரங்கமணி தமிழ்
23 கைவீசம்மா கைவீசு தமிழ்
24 நினைவுச்சின்னம் தமிழ்
25
1990
புது வசந்தம் பாலு தமிழ்
26 பாலம் தமிழ்
27 வெற்றிமாலை தமிழ்
28 சிலம்பு தமிழ்
29 நானும் இந்த ஊருதான் தமிழ்
30 நாங்கள் புதியவர்கள் தமிழ்
31 சிறையில் சில ராகங்கள் தமிழ்
32 புதியக்காற்று தமிழ்
33 நம்ம ஊரு பூவாத்தா தமிழ்
34
1991
சாமி போட்ட முடிச்சு தமிழ்
35 இதயம் ராஜா தமிழ்
36 குறும்புக்காரன் தமிழ்
37 இரவுச்சூரியன் தமிழ்
38
1992
தங்க மனசுக்காரன் முருகேஷ் (முருகன்) தமிழ்
39 சின்ன பசங்க நாங்க முத்துக்காளை தமிழ்
40 தங்கராசு தங்கராசு தமிழ்
41 என்றும் அன்புடன் தமிழ்
42 தாலி கட்டிய ராசா தமிழ்
43 1993 மணிக்குயில் தமிழ்
44 தங்கக்கிளி மூர்த்தி தமிழ்
45
1994
மஞ்சுவிரட்டு தமிழ்
46 அதர்மம் தமிழ்
47 என் ஆசை மச்சான் சுப்ரமணி தமிழ்
48 சத்யவான் தமிழ்
49 1995 ஆகாயப் பூக்கள் தமிழ்
50 தொண்டன் தமிழ்
51 1996 பூவே உனக்காக அவராகவே தமிழ் சிறப்புத் தோற்றம்
52 பூமணி தமிழ்
53
1997
காலமெல்லாம் காதல் வாழ்க தமிழ்
54 பொற்காலம் மாணிக்கம் தமிழ்
55 ரோஜா மலரே கண்ணன் தமிழ்
56
1998
காதலே நிம்மதி மோகன் தமிழ்
57 தினம்தோறும் தமிழ்
58 வீரத்தாலாட்டு தமிழ்
59 ரத்னா ரத்னா, முத்துவேல் தமிழ்
60 பூந்தோட்டம் தமிழ்
61 என் ஆச ராசாவே தமிழ்
62 உன்னுடன் சந்தோஷ் தமிழ்
63 தேசியகீதம் தமிழ்
64
1999
கனவே கலையாதே ஆனந்த் தமிழ்
65 ஊட்டி பாலு தமிழ்
66 பூவாசம் தமிழ்
67 இரணியன் இரணியன் தமிழ்
68 2000
வெற்றிக் கொடி கட்டு சேகர் தமிழ்
69 மனுநீதி முரளி தர்மா
70
2001
கண்ணுக்கு கண்ணாக தர்மா தமிழ்
71 சொன்னால் தான் காதலா முரளி தமிழ்
72 ஆனந்தம் மாதவன் தமிழ்
73 சமுத்திரம் தங்கராசு தமிழ்
74 அள்ளித்தந்த வானம் மாதவன் தமிழ்
75 கடல் பூக்கள் கருத்தையா தமிழ்
சிறந்த நடிகருக்கான
தமிழக அரசு திரைப்பட விருது
76
2002
சுந்தரா டிராவல்ஸ் கோபிகிருஷ்ணா தமிழ்
77 காமராசு காமராசு தமிழ்
78 நம்ம வீட்டு கல்யாணம் ரவி தமிழ்
79 2003 காதலுடன் கல்யா தமிழ்
80 2004 அறிவுமணி அறிவுமணி தமிழ்
81 2006 பாசக்கிளிகள் செவத்தய்யா தமிழ்
82
2009
எங்கள் ராசி நல்ல ராசி விஜய் தமிழ்
83 நீ உன்னை அறிந்தால் கோபால் தமிழ்
84 2010 பாணா காத்தாடி 'இதயம்' ராஜா தமிழ் சிறப்புத் தோற்றம்
மறைவு
இவர் 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு
செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்


பாடகி பி. லீலா பிறந மே 19 , 1934

பி. லீலா என அழைக்கப்படும் பொறயாத்து லீலா (19 மே 1934 – 31 அக்டோபர் 2005) பிரபலமான தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவருக்கு 2006 ஆம் ஆண்டு இறப்பிற்குப் பின்னர் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.

பின்னணித் தகவல்கள்
இயற்பெயர் பொறயாத்து லீலா
பிறப்பு மே 19 , 1934
சிற்றூர், பாலக்காடு மாவட்டம் , பாலக்காடு , இந்தியா
இறப்பு 31 அக்டோபர் 2005 (அகவை 71)
சென்னை , இந்தியா
இசை வடிவங்கள் இந்திய பாரம்பரிய இசை , பின்னணிப் பாடகர்
தொழில்(கள்) பாடகர்
இசைக்கருவி(கள்) பாடகி
இசைத்துறையில் 1949–2005


வாழ்க்கைக் குறிப்பு

பி. லீலா கேரள மாநிலம் , பாலக்காடு அருகில் சித்தூர் என்ற ஊரில், வி.கே.குஞ்சன்மேனன், லட்சுமி அம்மாவுக்கு மூன்றாவது கடைசி மகளாக பிறந்தார். சாரதா, பானுமதி என்ற இரு அக்காள். அப்பா மேனன் ராமவர்மா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். லீலாவுக்கு மணிபாகவதர் முதல் குருவாக இருந்து முறையான இசைப் பயிற்சி அளித்தார். பின்னர் பத்தமடை கிருஷ்ணா அய்யர், ராமபாகவதர், செம்பை வைத்தியநாத பாகவதர் என பல மேதைகளிடம் பயின்று தனது இசைத் திறமையை வளர்த்துக் கொண்டார்.
12 வயதில் ஆந்திர மகளிர் சபையில் லீலா கச்சேரி செய்து துர்கா பாய் தேஷ்முக் அவர்களிடம் பாராட்டையும், பரிசையும் பெற்றார். பின்னர் தென்னிந்தியா முழுக்க பல கச்சேரிகள் செய்தார். 1948ல் திரைத்துறையில் நுழைந்தார். எண்ணற்ற காலத்தால் அழியாத பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பாடினார். நீண்ட இடைவெளிக்கு பின்னர்
இளையராஜாவின் இசையில் கற்பூர முல்லை என்ற படத்திற்காக "ஸ்ரீசிவ சுத பத கமல" என்ற பாடலைப் பாடினார்.
இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.
விருதுகள்
ஞானகோகிலம், ஞானமணி, கலாரத்னம், கானவர்சினி என பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டார் பி.லீலா. தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார். கேரள, தெலுங்கு திரை உலகமும் பல விருதுகளை அளித்து இவரை கௌரவித்தன. இவர் இறந்த பின்னர் மத்திய அரசு 2006ல் பத்ம பூசன் விருதை அளித்தது.
மறைவு
சென்னை டிபென்ஸ் காலனியில் தனது உறவினர்கள் வீட்டில் வாழ்க்கை நடத்தி வந்த பி.லீலா தனது 76ஆவது வயதில் 2005ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
பாடிய பாடல்கள்
எங்குமே ஆனந்தம் ( பலே ராமன் , 1957)
மாப்பிள்ளை டோய் ( மனம்போல் மாங்கல்யம் , 1953)
தேன்சுவை மேவும் ( டாக்டர் சாவித்திரி, 1955)
காத்திருப்பான் கமலக்கண்ணன் ( உத்தமபுத்திரன் , 1958)
சில சில ஆண்டுகள் ( எங்கள் செல்வி , 1960)
ராஜாமகள் ரோஜாமலர், வெண்ணிலவே ( வஞ்சிக்கோட்டை வாலிபன் )
கன்னங்கறுத்த கிளி ( சிவகங்கை சீமை)
எண்ணம் எல்லாம் ( சக்கரவர்த்தி திருமகள் , 1957)
மாயமே நானறியேன், எனையாளும் மேரிமாதா ( மிஸ்ஸியம்மா]], 1955)
கண்ணே கமலப்பூ ( பெரிய கோயில், 1958)
அமிர்தயோகம் ( அன்பு எங்கே , 1958)
ஆடி பிழைத்தாலும் ( படிக்காத மேதை , 1960)
தென்றல் உறங்கி ( சங்கிலித்தேவன் , 1960)
சிறுவிழி குறுநகை ( இல்லற ஜோதி, 1954)
கானகமே எங்கள் ( யானை வளர்த்த வானம்பாடி , 1959)
மனமோகனா ( புதுமைப்பித்தன், 1957)
ஏட்டில் படித்ததோடு ( குமார ராஜா , 1961)
மேற்கோள்கள்

வியாழன், 17 மே, 2018

நடிகர் பசுபதி பிறந்த நாள் மே 18, 1969.



நடிகர் பசுபதி பிறந்த நாள் மே 18, 1969.

பசுபதி , தமிழ்த் திரைப்பட, மேடை நாடக நடிகர் ஆவார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். இயல்பான பன்முக நடிப்புத் திறனுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமன்றி மலையாள, தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பிறப்பு பசுபதி ராமசாமி
மே 18, 1969 (அகவை 48)
மதுரை , தமிழ் நாடு , இந்தியா
செயல்பட்ட
ஆண்டுகள்
1999 இல் இருந்து - இன்று வரை
வாழ்க்கைத்
துணை சூர்யா


இவர் நடித்துள்ள திரைப்படங்கள் சில...

அரவான்(திரைப்படம்) (2011)
வெடிகுண்டு முருகேசன் (2008) - உருவாக்கத்தில்.
குசேலன் (2008) - உருவாக்கத்தில்.
வெயில் (2006)
ஈ (2006)
மஜா (2005)
மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
விருமாண்டி
இயற்கை
தூள்

பாடகி கே. ஜமுனா ராணி பிறப்பு தினம் 17 மே 1938.


பாடகி கே. ஜமுனா ராணி பிறப்பு தினம் 17 மே 1938.

கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, பிறப்பு: 17 மே 1938) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

பாடிய சில பாடல்கள்

காளை வயசு, இவர்கானா, தாரா தாரா வந்தாரா ( தெய்வப்பிறவி)
செந்தமிழ் தேன்மொழியால் ( மாலையிட்ட மங்கை)
பாட்டொன்று ( பாசமலர் )
காட்டில் மரம், பெண் பார்க்கும் மாப்பிள்ளை ( கவலை இல்லாத மனிதன் )
ஆசையும் என் நேசமும் ( குலேபகாவலி )
சித்திரத்தில் பெண் ( ராணி சம்யுக்தா )
சின்ன சின்ன கட்டு ( சிவகங்கை சீமை )
என் கண்ணைக் கொஞ்சம் ( கைதி கண்ணாயிரம் )
காலம் சிறிது ( தை பிறந்தால் வழி பிறக்கும் )
வாழ்க வாழ்க ( ஆளுக்கொரு வீடு )
காதல் என்றால் என்ன, மேலே பறக்கும் ராக்கெட்டு ( அன்பு எங்கே )
வருவாளோ இல்லையோ ( பாசமும் நேசமும் 1964)
காவேரி தாயே ( மன்னாதி மன்னன் 1960)
நெஞ்சில் நிறைந்த ( நகரத்தில் சிம்பு 1961)
காமுகர் நெஞ்சம் ( மகாதேவி 1957)
உங்க மனசு ஒரு தினுசு ( மகளே உன் மனசு )
எந்த நாளும் சந்தோஷமே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு )

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

கலைமாமணி விருது

நடிகை பி. சாந்தகுமாரி பிறந்த தினம் மே 17.


நடிகை பி. சாந்தகுமாரி பிறந்த தினம் மே 17.

பி. சாந்தகுமாரி என அழைக்கப்படும் பூவுலதாசு சாந்தகுமாரி( P. Santhakumari , 17 மே 1920 – 16 சனவரி 2006) தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்த தென்னிந்திய நடிகையாவார். ஏறத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனரான பி. புல்லையா சாந்தகுமாரியின் கணவராவார்.

பிறப்பும் தொடக்க வாழ்வும்

சுப்பம்மா எனும் இயற்பெயரைக் கொண்ட சாந்தகுமாரி, கடப்பா எனும் மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் சீனிவாசராவ், பெட்ட நரசம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை ஒரு நடிகர், தாயார் கருநாடக இசைப் பாடகி. சிறு வயதிலேயே சாந்தகுமாரிக்கு இசைப் பயிற்சி வழங்கப்பட்டது. கடப்பையில் நான்காம் பாரம் வரை தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.
கருநாடக இசையில் மேலும் பயிற்சி பெறுவதற்காக 1934 இல் சென்னை வந்தார். பேராசிரியர் சாம்பமூர்த்தியிடம் மாணவியாகச் சேர்ந்து வாய்ப்பாட்டும் வயலின் வாசிப்பும் கற்றார். அப்போது சக மாணவியாக இருந்தவர் டி. கே. பட்டம்மாள் ஆவார்.

தனது 13ஆவது வயதில் கருநாடக இசையில் வாய்ப்பாட்டு, வயலின் வாசிப்பில் தேர்ச்சி பெற்றார். தனது 15ஆவது வயதில், தென்னிந்தியா முழுவதும் இசைக் கச்சேரிகளை செய்ய ஆரம்பித்தார். 16-வது அகவையில்
அனைத்திந்திய வானொலியில் பாடகியானார். சென்னையில் வித்தியோதயா பள்ளியில் இசையாசிரியராக சேர்ந்தார். வானொலியில் இசையமைப்பாளர் எஸ். இராஜேசுவரராவ் உடன் இணைந்து பாடினார். கச்சேரி ஒன்றில் சாந்தகுமாரியை சந்தித்த பி. வி. தாஸ் எனும் இயக்குநர், மாயா பஜார் அல்லது சசிரேகா பரிணயம் (1936) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.  அடுத்த ஆண்டில் பி. புல்லையா தயாரித்த சாரங்கதாரா திரைப்படத்தில் நடித்தார். அதே ஆண்டில் புல்லையாவைத் திருமணம் செய்து கொண்டார்.
திரைத்துறைக்கான பங்களிப்புகள்
திரைப்படங்களில் தாய் வேடமேற்று நடிப்பதில் புகழ் பெற்றிருந்தார். திரைப்படங்களில் சாந்தகுமாரியின் மகனாக நடித்த நடிகர்கள், திரைப்படத்திற்கு வெளியே இயல்வாழ்விலும் 'மம்மி' (அம்மா) என இவரை அழைத்தனர்.

இருவரும் இணைந்து பத்மசிறீ பிக்சர்சு என்ற நிறுவனத்தை ஆரம்பித்து (பத்மா என்பது இவர்களின் மகளின் பெயர்) பல வெற்றிப் படங்களைத் தயாரித்தனர். சாந்தகுமாரி கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் ஏறத்தாழ 250 திரைப்படங்களில் நடித்தார். அவற்றுள் 60 தமிழ்த் திரைப்படங்கள் அடங்கும்.

பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும்

திரைப்பட நடிப்பிலிருந்து விலகிய பிறகு, பக்திப் பாடல்களை எழுதுவதிலும், அவற்றிற்கு இசையமைப்பதிலும் ஈடுபட்டார். இப்பாடல்களை பாலமுரளிகிருஷ்ணா பாடினார்.

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

தெலுங்குத் திரைப்படத்துறைக்கான சிறப்பான பங்களிப்பிற்காக, இரகுபதி வெங்கையா விருது (1999); வழங்கியது: ஆந்திர அரசாங்கம் .

நடித்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

1. பக்த ஜனா (1948)
2. அம்மா (1952)
3. பொன்னி (1953)
4. மனம்போல் மாங்கல்யம் (1953)
5. பெண்ணின் பெருமை (1956)
6. பொம்மை கல்யாணம் (1958)
7. சாரங்கதாரா (1958)
8. கலைவாணன் (1959)
9. நெஞ்சில் ஓர் ஆலயம் (1962)
10. சிவந்த மண் (1969)
11. வசந்த மாளிகை (1972)

நடிகர் சாயா சிங் பிறந்த நாள் மே 16 ,1981.



நடிகர் சாயா சிங் பிறந்த நாள் மே 16 ,1981.

சாயா சிங் (பிறப்பு 16 மே 1981) இந்திய திரைப்பட நடிகராவார். தமிழ், கன்னட, மலையாள, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் திருடா திருடி படம் மூலம் அறிமுகம் ஆனார்.

திரைப்பட விபரம்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2000 முன்னாடி உனிசா கன்னடம்
2001 சிட்டி சாந்தி கன்னடம்
சிறப்பான சமூக கருத்தை வெளிப்படுத்தியதற்கான இந்திய தேசிய விருது
2002 ஹசீனா கன்னடம்
2002 குட்டு ஷ்ரேயா கன்னடம்

கவிஞர் கபிலன் பிறந்த நாள்: மே 16, 1977.



கவிஞர் கபிலன் பிறந்த நாள்: மே 16, 1977.

கபிலன் (பிறப்பு: மே 16, 1977) என்பவர் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞராவார் .
எழுதிய பாடல்கள்
ஆண்டு படம் பாடல்கள்
2003 பாய்ஸ்
எகிறிகுதித்தேன் & பூம் பூம் சிக்கு
2004
கில்லி அர்ஜீனரு வில்லு
பேரழகன் காதலுக்கு பள்ளிக்கூடம்
2005
அந்நியன் கண்ணும் கண்ணும்
சந்திரமுகி அண்ணனோட பாட்டு
2007 போக்கிரி ஆடுங்கடா என்ன சுத்தி
2009
வில்லு ஏ ராமா ராமா & வாடா மாப்பிள்ள
வேட்டைக்காரன்
நான் அடிச்சா தாங்க, கரிகாலன் காலப்போல & புலி உறுமுது
2010 சுறா
நான் நடந்தால் அதிரடி, வங்கக் கடல் எல்லை & தமிழன் வீரத் தமிழன்
2011
காவலன் பட்டாம் பூச்சி
கோ கல கல
வெடி இச்சு இச்சு
ஏழாம் அறிவு யம்மா யம்மா
2012 அட்டகத்தி
ஆடிபோனா ஆவணி &ஆசை ஓர் புல்வேளி
2013 மரியான் இன்னும் கொஞ்ச நேரம்
2014
மெட்ராஸ்
ஆகாயம் தீ & சென்ன வடசென்ன


மெரசலாயிட்டேன் & என்னோடு நீயிருந்தால் [3]
2015
திரிஷா இல்லனா நயன்தாரா
என்னாச்சு ஏதாச்சு
2016 கபாலி TBD

செவ்வாய், 15 மே, 2018

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிறந்த நாள்: 15 மே 1983.


இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்  பிறந்த நாள்: 15 மே 1983.

சந்தோஷ் நாராயணன் (பிறப்பு: 15 மே 1983) ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும் ,
பீட்சா II: வில்லா, குக்கூ , ஜிகர்தண்டா,
மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
பட்டியல்
ஆண்டு தலைப்பு மொழி குறிப்புகள்
2008
நேனு மீக்கு தெலுசா? தெலுங்கு பின்னணி இசை மட்டும்
என்னை தெரியுமா? தமிழ் பின்னணி இசை மட்டும்
2012
அட்டகத்தி தமிழ்
உயிர் மொழி தமிழ்
பீட்சா தமிழ்
2013
சூது கவ்வும் தமிழ்
சிறந்த பின்னணி இசை
பரிந்துரை—
சிறந்த இசையமைப்பாளர்
லூசியா கன்னடம் பின்னணி இசை மட்டும்
பீட்சா II: வில்லா தமிழ்
பில்லா ரங்கா தெலுங்கு
2014
குக்கூ தமிழ்
ஜிகர்தண்டா தமிழ்
மெட்ராஸ் தமிழ்
எனக்குள் ஒருவன் தமிழ்
இறுதி சுற்று தமிழ்
விருதுகள்
2013ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இரண்டு விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த பின்னணி இசைக்கான ஒரு விருதை வென்றார்.

ஞாயிறு, 13 மே, 2018

இசையமைப்பார் ராஜேஷ் முருகேசன் பிறந்த நாள் 14 மே, 1988.


இசையமைப்பார் ராஜேஷ் முருகேசன்  பிறந்த நாள் 14 மே, 1988.

ராஜேஷ் முருகேசன் (பிறப்பு 14 மே, 1988) ஓர் இந்தியத் திரைப்பட
இசையமைப்பாளர் ஆவார். மலையாளம் ,
தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். 2015ஆம் ஆண்டில், இவரது இசையமைப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் சிறப்பான வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

வாழ்க்கைக் குறிப்பு

ராஜேஷ் முருகேசன், கேரளத்தின்
எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு தமிழ்ப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார்.
கொச்சி ரெபினெரிசு பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், 2008ஆம் ஆண்டில்
சென்னை எஸ்.ஏ.இ பன்னாட்டுக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

திரை வாழ்க்கை

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டில் தமிழ் , மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற பிஸ்தா பாடலின் மூலமாக பரவலாக அறியப்பட்டார். தொடர்ந்து 2015ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாளத் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சிறப்பான வரவேற்பு பெற்றதுடன், மலரே பாடல்
யூடியூபில் உடனடியாக 5 இலட்சத்திற்கும் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்ட பாடலாக அமைந்தது.
திரைப்பட விபரம்
குறும்படங்கள்
கட்டன் காபி (2014)
தி ரேட் (2011)
வைன்ட் (2011)
பிளாக் அன்ட் ஒயிட் (2011)
ரெக் வி (2011)
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் மொழி பாடல் பின்னணி இசை குறிப்புகள்
2013
நேரம் மலையாளம் ஆம் ஆம்
மலையாளத்தில் முதலாவது திரைப்படம்
நேரம் தமிழ் ஆம் ஆம்
தமிழில் முதலாவது திரைப்படம்
2015 பிரேமம் மலையாளம் ஆம் ஆம்

நடிகை ஷீலா பிறந்த நாள் மே 14, 1989 .


நடிகை ஷீலா பிறந்த நாள் மே 14, 1989 .

சீலா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் நந்தா மற்றும் வீராசாமி போன்ற திரைப்படங்களில் நடித்ததிற்காக அறியப்பட்டார். இவர் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.


திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
1996 பூவே உனக்காக
தமிழ் மொழி
குழந்தை நட்சத்திரம்
2001
நந்தா சித்ரா தமிழ் குழந்தை நட்சத்திரம்
டும் டும் டும் தமிழ் குழந்தை நட்சத்திரம்
2006
இளவட்டம் லக்ஷ்மி தமிழ்
சீதாகொக்க சிலுக்கா தெலுங்கு



2007
வீராசாமி செந்தமிழ் தமிழ்
ராஜூ பாய் அஞ்சலி தெலுங்கு
சீனா தானா 001 பிரியா தமிழ்
ஹலோ ப்ரேமிஸ்தாரா நந்தினி தெலுங்கு
மாயாபசார் மாயா மலையாளம்
கண்ணா அண்ணபூரனி ரகுநாதன் தமிழ்
2008
வேதா வேதா தமிழ்
பருகு மீனாக்ஷி நீலகணடன் தெலுங்கு



2009
மஸ்கா மஞ்சு சிம்ஹாச்சலம் தெலுங்கு
ப்ரேம் கஹானி சந்தியா கன்னடம்
2010
அதுர்ஸ் இந்து தெலுங்கு
தன்தொன்னி ஹெலன் மலையாளம்
மேக்அப் மேன் சூர்யா மலையாளம்
2011 பரம் வீர் சக்ரா சீலா தெலுங்கு

சனி, 12 மே, 2018

கவிஞர் கு. மா. பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் மே 13, 1920.


கவிஞர் கு. மா. பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் மே 13, 1920.

கு. மா. பாலசுப்பிரமணியம் (மே 13, 1920 - நவம்பர் 4, 1994) திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 'கு.மா.பா' என்று திரையிசை ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

1920 இல் திருவாரூர் அருகேயுள்ள வேளூக்குடியில் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்தார். இவரது தாயார் தேவாரம் , திருவாசகம் , பக்திப் பனுவல்களை இசைக்கக்கூடியவராக இருந்தார். தாயைப் போல பிள்ளை என்பதற்கேற்ப தாய் பாடிய பாடல்கள்தான் தனது தமிழார்வத்தையும், இசை வேட்கையையும் தூண்டியதாக கு.மா.பா பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலக்ஷ்மித் 1947 ல் திருமணம் செய்து, ஐந்து ஆண் மக்களையும், இரண்டு பெண் மக்களையும் பெற்றார். இவரது இளைய மகன் கு. மா. பா. கபிலன் ஆவார்.
சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின்
தமிழரசுக் கழகத்தில் அரசியல் பணியாற்றியவர். அக்கழகத்தின் பொதுச்செயலாலராகவும் கடமையாற்றியுள்ளார். 1974 முதல் 1980 வரை தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
பாரதிதாசன் மீது தீவிர அபிமானம் கொண்டிருந்தவர்.

எழுதிய சில திரைப்படப் பாடல்கள்

யாரடீ நீ மோகினி ( உத்தம புத்திரன், 1958)
சின்னையா என்றழைத்த ( தங்கமலை ரகசியம் படத்துக்காக நேரிசை வெண்பாவாக இயற்றினார்)
சித்திரம் பேசுதடி
அன்பே என் ஆராவமுதே வாராய்
குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே (மரகதம் படத்தில் இடம்பெற்று நடிகர் சந்திரபாபுவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாடல்)
அமுதைப் பொழியும் நிலவே (தங்கமலை ரகசியம்)
மாசிலா நிலவே நம் காதலை (அம்பிகாபதி)
நெஞ்சினிலே நினைவு முகம் ( சித்ராங்கி )
சிரிக்கத் தெரியுமா ( குழந்தைகள் கண்ட குடியரசு , 1960)
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் இயற்றினார்.

புதன், 9 மே, 2018

நடிகை நமிதா பிறந்த நாள் மே 10 , 1981.


நடிகை நமிதா பிறந்த நாள் மே 10 , 1981.

நமிதா ( ஆங்கிலம் : Namitha , பிறப்பு: மே 10 , 1981 ), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகப் பங்குப் பெற்றுள்ளார்.


நமிதா குஜராத் மாநிலம் , சூரத்தில் பிறந்தார். அவரின் வீட்டில் நமிதா கபூர் என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெயிட்லி ,
மூன்றாம் இடம் பெற்றவர் திரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் ' எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.


இயற் பெயர் நமிதா முக்கேஷ் வன்கவாலா
பிறப்பு மே 10, 1981 (அகவை 37)
வேறு பெயர் நமிதா கபூர், பைரவி
தொழில் நடிகை
நடிப்புக் காலம் (2002-2017)
துணைவர் வீரேந்திர சௌத்ரி (2017-தற்போது வரை)


திருமணம்

நவம்பர் 24, 2017 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்பட நடிகரான 'வீரேந்திர சௌத்ரி' என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார்.


நமிதா நடித்துள்ள படங்கள்

1. சொந்தம் - (தெலுங்கு) -2002
2. ஜெமினி - (தெலுங்கு) - 2002
3. ஒக்க ராஜு ஒக்க ராணி - (தெலுங்கு) - 2003
4. எங்கள் அண்ணா - (தமிழ்) - 2004
5. ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி - (தெலுங்கு) - 2004
6. அய்த்தே எண்டி - (தெலுங்கு) - 2005
7. ஏய் - (தமிழ்) 2005
8. சாணக்யா - (தமிழ்) - 2005
9. பம்பரக் கண்ணாலே - (தமிழ்) - 2005
10. நாயக்குடு - (தெலுங்கு) - 2005
11. ஆணை - (தமிழ்) - 2005
12. இங்கிலீஷ்காரன் - (தமிழ்) - 2005
13. கோவை பிரதர்ஸ் - (தமிழ்) - 2006
14. பச்சைக் குதிரை - (தமிழ்) - 2006


15. தகப்பன்சாமி - (தமிழ்) - 2006
16. நீ வேணுண்டா செல்லம் - (தமிழ்) - 2006
17. நீலகண்டா - (கன்னடம்) - 2006
18. வியாபாரி - (தமிழ்) - 2007
19. நான் அவன் இல்லை - (தமிழ்) - 2007
20. அழகிய தமிழ் மகன் - (தமிழ்) - 2007
21. பில்லா 2007 - (தமிழ்) - 2007
22. சண்ட - (தமிழ்) - 2008
23. பாண்டி - (தமிழ்) - 2008
24. இந்திரா - (கன்னடம்) - 2008
25. பெருமாள் - (தமிழ்) - 2009
26. தீ - (தமிழ்) - 2009
27. 1977 - (தமிழ்) - 2009
28. பில்லா - (தெலுங்கு) - 2009
29. இந்திரவிழா - (தமிழ்)
30. ஜகன்மோகினி - (தமிழ்)
31. பிளாக் ஸ்டாலோன் - (மலையாளம்)
32. தேசதுரோகி - (தமிழ்)(தெலுங்கு)
33. மாயா - (ஆங்கிலம்)
34. கெட்டவன் - (தமிழ்) - தயாரிப்பில்


நமிதா நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள்

எங்கள் அண்ணா (2004)
ஏய் (2005)
சாணக்கியா (2005)
பம்பரக்கண்ணாலே (2007)
ஆணை (2005)
இங்கிலீஷ்காரன் (2005)
கோவை பிரதர்ஸ் (2006)
பச்சக் குதிர (2006)
தகப்பன்சாமி (2006)
நீ வேணுன்டா செல்லம் (2006)
வியாபாரி (2007)
நான் அவன் இல்லை (2007)
அழகிய தமிழ் மகன் - (2007)
பில்லா - (2007)


மனிதநேய நடவடிக்கைகள்

நமிதா பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான ஆதரவாளராக இருக்கிறார். ஜூன் 2012 இல், அவர் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த நடிகர் பரத் உடன் கூட்டுச்சேர்ந்தார்.  இவர் அரசியலுக்கு வரப்போவதாக 2015 ஆம் ஆண்டு அறிவித்தார்.


இயக்குநர் லோகிததாஸ் பிறந்த தினம் மே 10 , 1955.



இயக்குநர் லோகிததாஸ் பிறந்த தினம் மே 10 , 1955.

அ. க. லோகிததாசு (அம்பலத்தில் கருணாகரன் லோகிததாஸ்) அல்லது ஏ. கே. லோகிததாஸ் மலையாளத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 1985ஆம் ஆண்டு 'சிந்து சாந்தம் ஆகி ஒழுகுனு' என்ற நாடகத்தின் மூலம் மாநில அரசு விருதோடு தன் கலை உலக வாழ்க்கையைத் துவங்கியவர்.

. "தனியாவர்த்தனம்" படம் மூலம் திரைக்கதையாசிரியர் ஆனார். இப்படத்தில் ஒரு சாதாரண மனிதன் சமூகத்தால் எப்படி மனநிலை தவறியவனாக ஆக்கப்படுகிறான் என்பதை தனது துல்லியமான திரைக்கதையால் காட்சிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படம் மம்முட்டியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இவருடைய படைப்பில் வந்த சில படங்கள், எழுதாபுரங்கள், கிரீடம் , முத்ரா, ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா, பரதம், கமலாதலம், தனம், தசரதம், செங்கோல், பூதக்கண்ணாடி, கண்மதம், காருண்யம், கஸ்தூரி மான், அரையன்னங்களுடவீடு, நைவேத்தியம் போன்றவையாகும் .

அ. க. லோகிததாஸ்
A. K. Lohithadas
பிறப்பு அம்பழத்தில் கருணாகரன் லோகிததாஸ்
மே 10 , 1955
சாலக்குடி,
கேரளம் , இந்தியா
இறப்பு சூன் 28, 2009 (அகவை 54)
கொச்சி , கேரளம் , இந்தியா
தேசியம் இந்தியர்
மற்ற பெயர்கள் லோகி
குடியுரிமை இந்தியா
பணி மலையாளத் திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர்
செயல்பட்ட
ஆண்டுகள்
1987–2009

லோகிததாஸ் மற்றும் இயக்குநர்

சிபிமலையில் இருவரும் இணைந்து பல மலையாளத் திரைப்படங்கள் படைத்துள்ளனர். சிபிமலையிலுடன் இவர் சேர்ந்து பணியாற்றிய 'கிரீடம்', 'பரதம்' என அனைத்துப் படங்களும் மிகவும் வெற்றி பெற்றவையாகும். இவர் இதுவரை தனது திரைக்கதைக்காக 14 முறையும், இயக்கத்திற்காக 4 முறையும் ஃபிலிம் கிரிட்டிக் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர் திலீப் , மீரா ஜாஸ்மின் ,மஞ்சுவாரியர் என்று பல்வேறு திறமையாக கலைஞர்களை திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய ‘நைவேத்தியம்' திரைப்படம்கூட சிறந்த திரைப்படம், சிறந்த கதை ஆகிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. தமிழில் இவர் கஸ்தூரிமான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.


வாழ்க்கைக் குறிப்பு

லோகிததாஸ் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவர். எம்.டி.வாசுதேவன்நாயர் .பி.பத்மராஜன் ஆகியோருக்குப்பின் லோகிததாஸ் மலையாளத்தின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் எனப்படுகிறார். முழுபெயர் அம்பழத்தில் கருணாகரன் லோகிததாஸ் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள முரிங்ஙூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் லோகிததாஸ். எரணாகுளம் மகாராஜாஸ் காலேஜில் பட்டப்படிப்பு முடித்தபின் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வக உதவியாளர் படிப்பை முடித்தார். சிறிதுகாலம்டரசு மருத்துவமனை ஊழியராகப் பணியாற்றினார்.
ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்தார். மலையாள நாடக ஆசிரியரும் இடதுசாரி தலைவருமான தோப்பில் பாசி நடத்திவந்த கெ.பி.ஏ.சி (கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட் கிளப்) க்காக ஒரு நாடகத்தை 1986ல் லோகிததாஸ் எழுதினார். சிந்து அமைதியாக ஓடுகிறது (சிந்து சாய்தமாய் ஒழுகுந்நு) என்ற அந்நாடகம் பரவலாக கவனிப்பு பெற்றது. அதற்கு மாநில அரசின் சிறந்த நாடகத்துக்கான விருது கிடைத்தது. பிற்பாடு ‘ கடைசியில் வந்த விருந்தாளி (அவசானம் வந்த அதிதி) கனவு விதைத்தவர்கள் (ஸ்வப்னம் விதச்சவர்) போன்ற நாடகங்களையும் எழுதினார்.
நாடக நடிகராக இருந்து சினிமாவில் புகழ்பெற்றிருந்த திலகன் லோகித தாஸை சினிமாவுக்குக் கூட்டிவந்தார். சிபி மலையில் இயக்கிய தனியாவர்த்தனம் லோகிததாஸின் முதல் படம். ஒரு பாரம்பரிய நாயர் குடும்பத்தில் இருந்துவரும் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் பள்ளி ஆசிரியரைப்பற்றிய அந்தப்படம் மிகப்பரவலான கவனத்தைப்பெற்று லோகிததாஸை பிரபலப்படுத்தியது. 1997ல் பூதக்கண்ணாடி என்ற படத்தை லோகிததாஸ் இயக்கினார். இதுதான் இயக்குநராக அவரது முதல் முயற்சி. லோகிததாஸின் மனைவி பெயர் சிந்து, ஹரிகிருஷ்ணன் விஜயசங்கர் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள்.

படைப்புகள்

திரைக்கதை எழுதிய படங்கள்

1987 தனியாவர்த்தனம் 1987 எழுதாப்புறங்ஙள் 1988 குடும்பபுராணம் 1988 விசாரண 1988 முக்தி 1989 கிரீடம் 1989 ஜாதகம் 1989 தசரதம் 1989 முத்ர 1989 மஹாயானம் 1990 சஸ்னேகம் 1990 மாலயோகம் 1990 ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா 1990 குட்டேட்டன் 1991 தனம் 1991 பரதம் 1991 அமரம் 1991 கனல்காற்று 1992 வளையம் 1992 கமலதளம் 1992 ஆதாரம் 1992 கௌரவர் 1993 வெங்கலம் 1993 செங்கோல் 1993 வாத்ஸல்யம் 1994 சகோரம் 1994 சாகரம் சாட்சி 1995 ஸாதரம் 1996 சல்லாபம் 1996 தூவல்கொட்டாரம் 1997 பூதக்கண்ணாடி 1997 காருண்யம் 1998 ஓர்மசெப்பு 1998 கன்மதம் 1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள் 1999 அரயன்னங்ஙளுடே வீடு 2000 ஜோக்கர் 2001 சூத்ரதாரன் 2003 கஸ்தூரிமான் 2003 சக்ரம் 2006 சக்கரமுத்து 2007 நிவேத்யம்
இயக்கிய படங்கள்
1997 பூதக்கண்ணாடி 1997 காருண்யம் 1998 ஓர்மச்செப்பு 1998 கன்மதம் 2000 அரயன்னங்களுடே வீடு 2000 ஜோக்கர் 2001 சூத்ரதாரன் 2003 கஸ்தூரிமான் 2003 சக்ரம் 2005 கஸ்தூரிமான் [தமிழ்] 2006சக்கரமுத்து 2007 நைவேத்யம்
நடித்த படங்கள்
1992 ஆதாரம் 1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள் 2002 ஸ்டோப் வயலன்ஸ் 2005 தி காம்பஸ் 2005 உதயனாணு தாரம்
தயாரித்தபடம்
2005 கஸ்தூரிமான் [தமிழ்]
பாடல் எழுதிய படங்கள்
2000 ஜோக்கர். பாடல் ‘அழகே நீ பாடும்’ 2000 ஜோக்கர் ‘செம்மானம் பூத்தே’ 2003 கஸ்தூரிமான் ‘ராக்குயில்பாடி 2007 நிவேத்யம் ‘கோலக்குழல் விளி கேட்டுவோ

விருதுகள்

திரைக்கதைக்கான கேரள அரசு விருது தனியாவர்த்தனம் 1987 நல்ல திரைபப்டத்துக்கான கேரள அரசு விருது 1997 மிகச்சிறந்த அறிமுக இயக்குநர் படத்துக்கான தேசிய விருது பூதக்கண்ணாடி 1997
பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைக்கதை
தனியாவர்த்தனம் [1987] தசரதம் [1989] கிரீடம் [1990] பரதம் [1991] செங்கோல் [1993] சகோரம் [1994] சல்லாபம் [1994] தூவல்கொட்டாரம் [1996] பூதக்கண்ணாடி [1997] ஓர்மச்செப்பு [1998] ஜோக்கர்[ 1999] வீண்டும் சில வீட்டுகாரியங்ஙகள் [2000] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]
பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைப்படம்
பூதக்கண்ணாடி [1997] ஜோக்கர்[ 1999] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]

மறைவு

இவர் தன்னுடைய 55ஆம் வயதில் கொச்சியில் 2009 சூன் 28ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இவருடைய மறைவிற்குப் பிறகு பல்வேறு திரைக்கலைஞர்கள் இவரைப் பற்றிக் கூறியவை:

சேரன்

"ஆட்டோகிராஃப் பார்த்துவிட்டு என்னிடம் நட்பாக நெருங்கினார் லோகி. வாழ்வின் அடித்தட்டு மக்களின் மேல் அவர் மிகவும் பரிவுகொண்டு இருந்தார். அவரது வெற்றி பெற்ற திரைக்கதைகளில் அந்தப் பரிவு பளிச்சென்று தெரியும். அவரோடு இணைந்து ஒரு படமாவது செய்ய வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. லோகிததாஸின் மரணம் மொழிகளைக் கடந்து படைப்பாளிகள் அத்தனை பேருக்குமான இழப்பு.

கமலகாசன்

இவர் முதல் படத்துக்குத் திரைக்கதை எழுதியதில் இருந்தே 'எனக்கொரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிக் கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். போன மாதம்கூட 'சந்திப்போமா?' என்று கேட்டு போன் செய்தேன். 'வருகிறேன்' என்றார். சந்திக்காமலேயே விடைபெற்றுவிட்டார். லோகி என்னுடைய நண்பர் எனச் சொல்வது சரியில்லை. அவர் என் நெருங்கிய உறவினர்