செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

நடிகர் குமரிமுத்து நினைவு தினம் 28 பிப்ரவரி 2016.


நடிகர் குமரிமுத்து நினைவு தினம் 28 பிப்ரவரி 2016.

குமரிமுத்து (இறப்பு: 28 பிப்ரவரி 2016) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் தமிழ் , தெலுங்கு ,
மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏறத்தாழ 1000 திரைப்படங்களில் நடித்தவர். . பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தினார்.

குமரிமுத்து
பிறப்பு காட்டுப் புதூர் , கன்னியாகுமரி மாவட்டம்,
பிரித்தானிய இந்தியா
இறப்பு 28 பிப்ரவரி 2016 (77 வயதில்)
சென்னை , தமிழ்நாடு, இந்தியா
அறியப்படுவது நாடக நடிகர் , திரைப்பட நடிகர் ,
அரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
புண்ணியவதி
பிள்ளைகள் ஐசக் மாதவராசன்
செல்வபுஷ்பா
எலிசபெத் மேரி
கவிதா
உறவினர்கள் நம்பிராஜன் (மூத்த சகோதரர்)
கே. எம். பாலகிருஷ்ணன் (மூத்த சகோதரர்)

மறைவு

நடிகர் குமரிமுத்து உடல்நலக் குறைவு காரணமாக 29 பிப்ரவரி 2016 அன்று தனது 77ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

நடிகை பத்மபிரியா பிறந்த நாள் பிப்ரவரி 28, 1980


நடிகை பத்மபிரியா பிறந்த நாள் பிப்ரவரி 28, 1980 

பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் , மலையாளம் , வங்காளம் , தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார். சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர்.

பிறப்பு பத்மபிரியா ஜானகிராமன்
பெப்ரவரி 28, 1980 (அகவை 37)
தில்லி , இந்தியா
தேசியம் இந்தியர்
மற்ற பெயர்கள் பத்மபிரியா, பிரியா
பணி திரைப்பட நடிகை , மாடல்
செயல்பட்ட
ஆண்டுகள்
2004 - தற்போது


பிறப்பு

பத்மபிரியா தில்லியில் வசித்த தமிழ் பெற்றோரின் மகள் ஆவார். இவரின் தந்தை ஜானகிராமன், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் மற்றும் தாய் விஜயா ஆவார். பத்மபிரியா தில்லியில் பிறந்து,
பஞ்சாப்பில் வளர்ந்தார்.
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2004 சீனு வசந்தி இலட்சுமி i வசந்தி தெலுங்கு
2004 அமிர்தம் சைனபா கோபிநாதன் மலையாளம்
2005 தவமாய் தவமிருந்து
வசந்தி ராமலிங்கம் தமிழ்
தென்னந்திய சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது
2006 பட்டியல் (திரைப்படம்) சரோஜா தமிழ்
2006 யேஸ் யுவர் ஹானர் மாயா ரவிசங்கர் மலையாளம்
கேரள மாநில இரண்டாவது நடிகைக்கான விருது
2007 அஞ்சில் ஒரல் அர்ஜூனன் பவித்ரா மலையாளம்
2007 சத்தம் போடாதே பானுமதி தமிழ்
2007 பரதேசி உசா மலையாளம்
2007 நாளு பெண்ணுங்கள்l குன்னிபெண்ணு மலையாளம்
2007 டைம் (2007 திரைப்படம்)
சுசன் மேரி தாமஸ் மலையாளம்
2007 மிருகம் (திரைப்படம்)
அழகம்மா அய்யனார் தமிழ்
சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு விருது பரிந்துரை —
விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
2008 லேப்டாப் (2008 திரைப்படம்) பயல் மலையாளம்
2009 பொக்கிசம் நதிரா தமிழ்
பரிந்துரை —
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரை - விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
2010
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்
பப்பாளி தமிழ்


2010 தமாசு (திரைப்படம்) டாக்டர். சாந்தி கன்னடம்
2011 சீனியர்ஸ் இந்து மலையாளம்
2011 சீனேகவீடு சுனந்தா மலையாளம்
2011 நாய்கா மலையாளம்
2012 அப்பரஞ்சித துமி குஹூ Bengali
2012 கோப்ரா மலையாளம்
2012 பேச்சுலர் பார்டி மலையாளம்
கப்பா கப்பா திரைப்பாடலுக்கு சிறப்புத் தோற்றம்
2012 நம்பர் 66 மதுர பஸ் சூரியா பத்மம் மலையாளம்
2012 இவன் மகாரூபன் அம்மினி மலையாளம்
2012 பாப்பின்ஸ் கந்தா மலையாளம்
2013 மேட் டேட் டாக்டர். ரஷ்யா மலையாளம்
2013
லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் (மலையாளத் திரைப்படம்)
மலையாளம்
2013 தங்க மீன்கள் தமிழ்

நடிகர் ஸ்ரீகாந்த் பிறந்த நாள் பிப்ரவரி 28, 1979.



நடிகர் ஸ்ரீகாந்த்  பிறந்த நாள் பிப்ரவரி 28, 1979.

ஸ்ரீகாந்த் ( ஆங்கிலம் : Srikanth , பிறப்பு: பெப்ரவரி 28, 1979) தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் தென்னிந்திய நடிகர் ஆவார். இவரது அறிமுகம் 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அமைந்தது. இவரது திரைப்படங்கள் பார்த்திபன் கனவு மற்றும் தெலுங்கில் ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெரும் வெற்றிப்படங்களாக விளங்கின. தெலுங்குத் திரைப்படங்களில் இவர் ஸ்ரீராம் என்று அறியப்படுகிறார்.
இதே பெயருள்ள மற்றவர்களு குறித்து அறிய, காண்க ஸ்ரீகாந்த் .
திரைவாழ்வு
ஸ்ரீகாந்த்தின் திரை நுழைவு
ரோஜாக்கூட்டம் என்ற சசியின் காதல் படத்தில் பூமிகா சாவ்லாவுடன் அமைந்தது. முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்து பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. இவரது அடுத்த வெற்றிப்படமாக
சினேகாவுடன் நடித்த ஏப்ரல் மாதத்தில் அமைந்தது. தொடர்ந்து கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவான பார்த்திபன் கனவு இவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது. பின்தொடர்ந்த படங்கள் தோல்வியைத் தழுவ சிலகாலம் வாய்ப்புகள் இன்றி இருந்தார். 2007ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் நடித்த ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற இயக்குனர் சங்கரின் நண்பன் உட்பட பல புதிய படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2002 ரோஜாக்கூட்டம் இளங்கோ தமிழ்
சிறந்த புது நடிகருக்கான விருது
2002 ஏப்ரல் மாதத்தில் கதிர் தமிழ்
2003 மனசெல்லாம் பாலா தமிழ்
2003 பார்த்திபன் கனவு பார்த்திபன் தமிழ்
தமிழ்நாடு திரைப்பட விருது
2003 ஜூட் ஈஸ்வரன் தமிழ்
2003 Okariki Okaru காமேஸ்வர ராவ் தெலுங்கு
தமிழில்
உன்னை பார்த்த நாள் முதல்
2004 போஸ் போஸ் தமிழ்
2004 வர்ணஜாலம் சக்திவேல தமிழ்
2005 கனா கண்டேன் பாஸ்கர் தமிழ்
2005 ஒரு நாள் ஒரு கனவு சீனு தமிழ்
2005 பம்பரக்கண்ணாலே முருகா தமிழ்
2006 மெர்க்குரி பூக்கள் கார்த்திக் தமிழ்
2006 உயிர் சுந்தர் தமிழ்
2006 கிழக்கு கடற்கரை சாலை சந்தோஸ் தமிழ்
2007 Adavari Matalaku Ardhalu Verule வாசு தெலுங்கு
2008 வல்லமை தாராயோ சேகர் தமிழ் கௌரவத் தோற்றம்
2008 பூ தங்கராசு தமிழ்
2009 இந்திரா விழா சந்தோஸ் சீனிவாசன் தமிழ்
2010 ரசிக்கும் சீமானே நந்து தமிழ்
2010 போலிஸ் போலிஸ் தெலுங்கு தமிழில்
குற்றப்பிரிவு
2010 துரோகி சாமி சீனிவாசன் தமிழ்
2010 மந்திரப் புன்னகை தமிழ் கௌரவத் தோற்றம்
2011
உப்புக்கண்டம் பிரதர்ஸ் பேக் இன் ஆக்சன்
பாபி மலையாளம் தமிழில் சத்ரிய வம்சம்
2011 தாதா ராஜீவ் தெலுங்கு
2011 சதுரங்கம் திருப்பதிசாமி தமிழ்
2012 நண்பன் வெங்கட் ராமகிருஷ்ணன் தமிழ்
2012 நி்ப்பு சிறீராம் தெலுங்கு தமிழில் ரவடி ராஜா
2012 ஹீரோ பிரேமானந்த் மலையாளம்
2012 பாகன் (திரைப்படம்) சுப்பரமணியம் தமிழ்
2013 புட்டி மலையாளம்
2014 எதிரி எண் 3 தமிழ் தயாரிப்பு நிலையில்
2014 ஓம் சாந்தி ஓம் தமிழ் படபிடிப்பில்
2014 நம்பியார் ராமச்சந்திரன் தமிழ் படபிடிப்பில்
2015 சௌகார்பேட்டை தமிழ்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

நடிகை திவ்யா பாரதி பிறந்த நாள் பிப்ரவரி 25. 1974 .


நடிகை திவ்யா பாரதி பிறந்த நாள் பிப்ரவரி 25. 1974 .

திவ்யா ஓம்பிரகாஷ் பாரதி அல்லது திவ்யா பாரதி ( இந்தி : दिव्या भारती), (25 பிப்ரவரி 1974 - 5 ஏப்ரல் 1993) ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார். அவர் போபிலி ராஜா திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் 1990 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படங்களிலிருந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பிறகு தென்னிந்தியாவில் சில திரைப்படங்கள் வெற்றிபெற்றன. அவர் 1992 ஆம் ஆண்டில் 'விஷ்வாத்மா' என்ற சராசரியாக ஓடிய
ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் இந்தி திரைப்படங்களில் நுழைந்தார். அந்த நேரத்தில் மிகப்பிரபலமானதாக இருந்த, அவரை மிகவும் புகழ்பெறச் செய்த சாத் சமுந்தார் பார் என்ற அவருடைய பாடல் அவருக்கு பெரும் பாராட்டுதலைப் பெற்றுத்தந்தது. அவர் ஒரு வருடத்திற்குள்ளாக 14 இந்தித் திரைப்படங்களில் நடித்திருந்தார், 1992 மற்றும் மத்திய 1993 ஆம் வருடத்திற்கு இடையேயான காலகட்டம் அறிமுகமான ஒருவருக்கு மிகப்பெரிய சாதனையைப் பெற்றுத்தந்த ஒன்றாக இருந்தது. அது ஒரு வருடத்திற்குள்ளாக அதிகத் திரைப்படங்களில் நடித்தவர் என்ற உலக சாதனையை அவருக்குப் பெற்றுத்தந்தது என்பதுடன் அந்தச் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமலேயே இருக்கிறது. அவர் 1992 இல் சஜித் நதியத்வாலாவைத் திருமணம் செய்துகொண்டார். அவருடைய வாழ்க்கை 1993 ஆம் ஆண்டு ஏப்ரலில் தனது 19 ஆம் வயதில் ஏற்பட்ட அவருடைய துயர மரணத்தோடு முடிவுக்கு வந்தது. அவர் எப்படி இறந்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாததால் அவருடைய மரணம் புதிரானதாக அறியப்படாமலேயே எஞ்சியது, எனவே அவருடைய மரணத்தை எப்படித் தீர்ப்பது என்பது சிக்கலானதாக இருப்பது நிரூபிக்கப்பட்டதால் அந்த வழக்கும் 1998 இல் மூடப்பட்டது.
ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்
திவ்யா இந்தியா மும்பையில் ஒரு காப்பீட்டு அலுவலரான ஓம்பிரகாஷ் பாரதிக்கும், மீரா பாரதிக்கும் (லோதி) மகளாகப் பிறந்தார். திவ்யா பாரதிக்கு(லோதி) குணால் என்ற இளைய சகோதரர் ஒருவர் இருக்கிறார். திவ்யாவின் தாயார் ஓம்பிராகாஷ் பாரதிக்கு இரண்டாவது மனைவியாவார்.
திவ்யா மும்பை ஜுஹூவில் உள்ள மானேக்ஜி கூப்பர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அங்கே திவ்யா 9 ஆம் வகுப்பை முடித்தார். திவ்யா தன்னுடைய பள்ளி நாட்களில் நடிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்கவில்லை. இருப்பினும், அவர் கணபதி திருவிழாவின்போது ஆடையலங்கார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என்பதோடு பள்ளியில் இருக்கும்போதே அதற்காக பல விருதுகளையும் வென்றிருக்கிறார்.
திவ்யா படிப்பில் சிறந்தவர், ஆனால் படிப்பு அல்லாத வேறு சில செயல்பாடுகளிலும் அவர் சிறந்து விளங்கினார். திவ்யாவும் அவருடைய சகோதரரும் மிகச்சிறந்த நீச்சல் வீரர்கள். அவர்கள் கார் ஜிம்கானா எனப்படும் மும்பையைச் சேர்ந்த கிளப்பிற்கு சாம்பியன்களாவர். திவ்யா கார் ஓட்டுவதிலும் தேறியவராவார். அவர் தன்னுடைய பதினான்காம் வயதிலேயே கார் ஓட்டக் கற்றுக்கொண்டார்.
திரைத்துறை வாழ்க்கை
பாலிவுட்டில் திருப்பம்
திவ்யாவுக்கு நடிப்பு வாய்ப்புகள் வரத்தொடங்கியபோது அவர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அவருடைய முகம் அந்த நேரத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்த ஸ்ரீதேவியின் முகத்தை நினைவூட்டுவதாக இருந்தது என்பதால் அவரை பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கவனிக்கத் தொடங்கினர். இதற்கு அவருடைய பெற்றோர்கள் முதலில் தயங்கினர், திவ்யாவும்கூட இதில் ஆர்வமில்லாமல் இருந்தார். டில் நந்து துலானி அவருக்கு குனாகன் கா தேவ்தாவில் வாய்ப்பு வழங்கினார். இறுதியாக, அவருடைய தாயார் அவரிடம் அவர் தன்னுடைய படிப்பை விட்டுவிட வேண்டியிருக்கும் என்று சொன்னபோது இதனால் மகிழ்ச்சியுற்ற திவ்யா திரைப்படத்துறையில் இறங்க உடன்பட்டார். 1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திவ்யாவிற்கு பதினான்கரை வயது.
அதேசமயத்தில், அதன்க் ஹை அதன்க் மற்றும் ருத்ர அவதார் ஆகிய படங்களில் அமீ்ர் கானுக்கு இணையாக ஒரு புதுமுகம் தலிப் ஷங்கருக்கு தேவைப்படுகிறது என்பதை ஒரு நண்பரின் வழியாக திவ்யா தெரிந்துகொண்டார். அவருடைய பெற்றோர்களின் ஒப்புதலோடு திவ்யா இரண்டு படங்களுக்கும் கையெழுத்திட்டார். அந்த நேரத்தில் கோவிந்தாவின் சகோதரரான கீர்த்தி குமார் வசீகரமான திவ்யாவை ஒரு வீடியோ லைப்ரரியில் பார்த்தார். அவரை வீடுவரை பின்தொடர்ந்து சென்ற அவர், அதற்கும் அடுத்திருந்த கட்டிடத்தில் வசித்து வந்த இயக்குநரான நந்து துலானியை அழைத்து திவ்யாவைப் பற்றி விசாரித்தார்.
ராதா கா சங்கம் அத்தியாயம்
பாரதி குடும்பம் தெரிந்துகொண்ட அடுத்த விஷயம் கீர்த்தி குமார் திவ்யாவை ராதா கா சங்கத்தில் கோவிந்தாவுடன் நடிக்க வைக்க விரும்புகிறார் என்பதுதான். தலிப் ஷங்கரை தனிப்பட்ட முறையில் சென்று சந்தித்த கீர்த்தி அவர்களுடைய ஒப்பந்தத்திலிருந்து திவ்யாவை விடுவிக்கச் செய்தார். ஷோடைம் பத்திரிக்கையில் கீர்த்தி "நான் தலிப்பிடம் அவர் வேறு எந்த பெண்ணை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் ஆனால் என்னால் மற்றொரு ராதாவை கண்டுபிடிக்க இயலாது என்று கூறினேன்" என்று தெரிவித்திருந்தார். கீர்த்தி அவருடைய பெயரை திவ்யா என்பதிலிருந்து ராதாவாக மாற்றினார். தயாரிப்பாளர் கீர்த்தி அவரை வைத்து நிறைய நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்தியா முழுவதும் தேடிய பின்னர் தான் எப்படி முழுமையான ராதாவைக் கண்டுபிடித்தேன் என்று அவர் பேட்டிகள் அளித்தார். பிறகு முதல் காட்சி படம்பிடிக்கப்படும் முன்பு அவரை கவர்ச்சிகரமானவராக மாற்ற முயற்சித்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் திவ்யா "ராதா" பாரதி அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜூஹி சாவ்லா நியமிக்கப்பட்டார். இந்தப் பிரச்சினைக்கு இரு தரப்பிலிருந்தும் சொல்லப்பட்ட காரணங்கள் வெவ்வேறாக இருந்தன.
இந்த நீக்கத்தின் பின்னணி குறித்து பல்வேறு பத்திரிக்கைகள் வெவ்வேறுவிதமாக எழுதின. "கீர்த்தி அவர் மீது மிகையான அன்பு கொண்டிருந்தார்" என்று கூறினர், மற்ற சிலரோ "இந்தப் படத்தை இயக்குவதாக இருந்த லாரன்ஸ் டிஸோசா இதிலிருந்து விலகிவிட்டார். அதனால் கீர்த்தியே இந்தப் படத்தை இயக்குவதென்று தீர்மானித்தார். இயக்கத்திற்கு புதியவரான அவர் தான் புதிதாக நடிக்க வந்தவரை இயக்க முடியாது என்பதால் திவ்யாவை நீக்கிவிட்டார்", என்று கூறினர், மற்ற பத்திரிக்கைகள் "திவ்யாவுக்கு கோவிந்தாவுடன் காதல் உறவு இருந்தது, இதை கீர்த்தியால் சகித்துக்கொள்ள முடியவில்லை" என்று எழுதின. மற்ற பத்திரிக்கைகளோ "திவ்யாவின் முதிர்ச்சியின்மைதான் அவரை இந்தப் படத்திலிருந்து நீக்கச் செய்தது" என்று எழுதின.
மறு-போராட்டம்
அவர் மற்ற இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு பச்சை விளக்கு காண்பிக்கப்பட்டது. அவர் போனி கபூர், மகேஷ் பட், ஷப்னம் கபூர், சேகர் கபூர் மற்றும் சுபாஷ் கை போன்ற பெரிய திரைத்துறையினரால் திரைச்-சோதனைக்கு அழைக்கப்பட்டார். அவர்கள் அனைவரும் அவரைப் பாராட்டிப் பேசினார் ஆனால் யாரும் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை, இதற்கு காரணமாக அவருடைய குழந்தைத்தனமான தோற்றம் முன்னின்றதாக வதந்தி பரவியது. பத்திரிக்கைகளில் அவர் இஷ்டம்போல் நடந்துகொள்கின்ற வெகுளித்தனமானவராக பெயர் பெற்றார். உண்மையில், தன்னுடைய பெரிய பட்ஜெட் படமான பிரேமில் போனி கபூர் திவ்யாவை ஒப்பந்தம் செய்தார். எட்டு நாட்களுக்குப் பின்னர் திவ்யா வெளியேற்றப்பட்டு தபு மறுஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் ஆமிர் கானுக்கு இணையாக சௌதாகர் படத்திற்கு அவரை சுபாஷ் கை அழைத்திருந்தார், 20 நாட்களுக்குப் பின்னர் அவர் வெளியேற்றப்பட்டு மனிஷா கொய்ராலாவும் விவேக் முஷ்ரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதன் காரணமாக இந்த மறுப்புக்கள் பதினைந்து வயதான திவ்யாவை பாதித்தது. அவர் ஏற்கனவே பள்ளியை வி்ட்டு வெளியேறிவிட்டதால் அவர்கள் அவரை மீண்டும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதன் காரணமாக அவர் சும்மாவே உட்கார்ந்திருந்தார். அதிர்ஷ்டவசமாக, தெலுங்கு சினிமாவின் பெரிய தயாரிப்பாளர்களுள் ஒருவரான டி.ராம்நாயுடு திவ்யாவின் கதவுகளைத் தட்டினார். அவர் தகுபதி வெங்கடேஷிற்கு இணையாக போபிலி ராஜா என்ற தெலுங்கு திரைப்படத்தில் திவ்யாவிற்கு வாய்ப்பளித்தார். உடனடியாக திவ்யாவிற்கு ஒரு தமிழ் திரைப்படமும் கிடைத்தது என்பதுடன் ராஜீவ் ராய் அவரை விஷ்வாத்மா திரைப்படத்திற்காக அணுகினார்.
தெலுங்கு சினிமாவில் நட்சத்திரமாக உயர்வு
பல பெரிய திரைப்படத் திட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் திவ்யா மன உளைச்சலுக்கு ஆளானார் என்பதோடு மும்பையை விட்டும் வெளியில் சென்றிருந்தார். அவர் திரும்பிவந்த மாலையில் போபிலி ராஜாவின் தயாரிப்பாளர் அவரைத் தேடி தன்னுடைய ஆட்களை அனுப்பியிருந்தார். அவர்கள் திவ்யா அன்று இரவே புறப்பட்டு வரவேண்டும் என்றனர். 1991 ஆம் ஆண்டு நவம்பர் "மூவி" பத்திரிக்கையில் தெரிவித்திருந்தபடி, "நான் போக விரும்பவில்லை. நான் இல்லை என்றேன் அம்மா ஆமாம் என்றார்கள். கற்பனை செய்துபாருங்கள், அந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது என்பதுடன் நான் சூப்பர்ஸ்டார் ஆனேன்". இது முற்றிலும் பலன் தந்தது. போபிலி ராஜா 1990ஆம் ஆண்டு கோடையில் வெளியிடப்பட்டு பிரம்மாண்டமான வெற்றிபெற்றது. அவர் புயலாக வந்து தென்னிந்தியாவைப் பிடித்தார், அங்கே அவர் ஒரு தேவதை. அவர் பெயரில் ஒரு கோயில்கூட கட்டப்பட்டிருக்கிறது. நிறைய வெற்றிப்படங்களோடு, அவர் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவரானார். பாக்ஸ்-ஆபீஸ் தரவரிசையில், போட்டியே இல்லாத விஜயசாந்திக்கு அடுத்தபடியாக வந்தார். அவருடைய சம்பளம் தி இன்சைடரின் கூற்றுப்படி ஒரு திரைப்படத்திற்கு 25 லட்சத்தைத் தொட்டது என்பதுடன் ஒவ்வொரு கூடுதலான நாளுக்கும் (படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டால் தென்னிந்திய தயாரிப்பாளர்கள் 15 நாளுக்கு 15 லட்ச ரூபாய் தந்தனர்) 1 லட்சம் என்ற அளவில் இருந்தது, இது 1991ஆம் ஆண்டில் மிகப்பெரிய தொகையாகும். பாலிவுட்டில், மாதுரி தீட்சித் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் மட்டுமே இந்த அளவிற்கு சம்பளம் பெற்றவர்களாவர். 1991ஆம் ஆண்டில் திவ்யா தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார்களான
சிரஞ்சீவி , பாலகிருஷ்ணா மற்றும் மோகன் பாபு உள்ளிட்ட சூப்பர்ஸ்டார்களுடன் ரவுடி அல்லுடு, தர்ம ஷேத்ரம் மற்றும் அசெம்பிளி ரவுடி உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றிகளைத் தந்தார். வட இந்தியாவில் அவர் தெலுங்கு சினிமாவின் ஸ்ரீதேவியாக பிரபலமடைந்திருந்தார். ஆனால், திவ்யா தேடியது இது அல்ல. அவர் இதை மும்பையில் செய்துகாட்ட விரும்பினார். அவர் ஒரு புதிய தீர்மானத்துடன் திரும்பி வந்தார். அதேசமயத்தில், அவர் தன்னுடைய தெலுங்கு ரசிகர்களை ஏமாற்ற விரும்பாமல் வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவிற்கு குறைத்துக்கொண்டார்.
பாலிவுட்டில் நட்சத்திரமாக உயர்வு
ராஜீவ் ராய் தனது விஷ்வாத்மா திரைப்படத்திற்கு சன்னி தியோலுக்கு இணையாக புதுமுகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்று திவ்யா கேள்விப்பட்டபோது, அவர் தன்னுடைய சுயவிவரத்துடன் துணிச்சலோடு ராஜீவ் ராயின் அலுவலகத்திற்கே சென்றார். அதே நாளில் அவர் அந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ராஜீவ் தனது திரிதேவ் வெற்றிப்படத்தை அடுத்து அதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார்.
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான திரைப்படத் தயாரிப்பாளர்களான திருமூர்த்தி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெடால் தயாரிக்கப்பட்டது. அவர்களுடைய திரைப்படங்கள் தற்போது சூப்பர்ஸ்டார்களாக இருக்கும் ஹேமா மாலினியை ஜானி மேரா நாம் மற்றும் அமிதாப்பச்சனை தீவார் ஆகிய திரைப்படங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. விஷ்வாத்மா பிரம்மாண்டமான முறையில் 1990ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. திரைப்பட நடிகர் தர்மேந்திரா தன்னுடைய மஹுரட் காட்சியை வழங்கினார். விரைவிலேயே திவ்யா நைரோபியில் ஒரு நீண்டகால வெளிப்புறப் படப்பிடிப்பிற்கு சென்றார். திவ்யா திரும்பிவந்த நேரத்தில் அவருக்கு பட வாய்ப்புக்கள் குவியத்தொடங்கின. இதுவரையில் ஒரு படம்கூட இல்லாதிருந்த திவ்யா 14 படங்களில் கையெழுத்திட்டார். அவர் ஷாரூக்கானின் முதன்மைக் கதாநாயகி என்ற பெயரையும் பெற்றிருந்தார், இவர்தான் தன்னை தீவானா மற்றும் தில் ஆஸ்னா ஹை ஆகிய திரைப்படங்களில் புகழ்பெறச் செய்தார் என்று ஷாரூக்கான் கூறியிருக்கிறார்.
1992ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி திவ்யாவிற்கு ஒரு மறக்கமுடியாத நாளாக இருந்தது. தன்னுடைய திரைப்படம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என அவர் விரும்பியதற்கு பல காரணங்கள் இருந்தன. விஷ்வாத்மா நன்றாக ஓடியது என்றாலும் இந்தப் படத்தின் வெற்றி திரிதேவின் வெற்றிக்கு அருகில் வரவில்லை என்பதால் தோல்விப்படமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் முதல்நாள் திரையிடலில் அமிதாப் பச்சன் , யாஷ் சோப்ரா, ஜாக்கி ஷெரஃப், ஜூஹி சாவ்லா , ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சன்க்கி பாண்டே உள்ளிட்ட நிறைய திரைப்பட ஆளுமைகள் கலந்துகொண்டனர். இருப்பினும், திவ்யா நடித்திருந்த "சாத் சமுந்தார் பார்" பாடல் பெரிய வெற்றி பெற்றது என்பதுடன் இன்றும்கூட ரசிகர்கள் அவரை இந்தப் பாடலால் நினைவு கூர்கின்றனர்.
ஏழு நாட்களுக்குப் பின்னர் திவ்யாவின் இசைத்தொகுப்பான தில் கா கியா கஸூர் வெளியிடப்பட்டது. இது அவரை ஒரு புகழ்பெற்ற கதாநாயகியாக உருவாக்கியிருக்கக்கூடியது என்றாலும் திரையரங்குகள் வெறிச்சோடி கிடந்தன. இந்தப் படம் இந்த அளவிற்கு மோசமான தோல்வியடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் தோல்வியுற்றது என்றாலும், ஃபிலிம்ஃபேர் பத்திரிக்கைகள் திவ்யாவை 1992 ஆம் ஆண்டின் முதல் பத்து சிறந்த நடிகைகள் பட்டியலில் சேர்க்கத் தொடங்கியிருந்தன. ஆச்சரியப்படும்படியாக, தற்போது நன்கு அறியப்பட்டுள்ள புதுவரவுகள் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் திவ்யாவின் அறிமுகமே பத்திரிக்கையின் தலைப்புச்செய்தியாக இருந்தது, வெற்றிப்படங்களில் நடித்திருந்த பூல் அவுர் கான்டேயில் மது மற்றும் சனம் பேவஃபாவில் சாந்தினி, ஆகியோர் நட்சத்திரமாகவில்லை, ஆனால் திவ்யாவின் தோல்விப்படம் அவரை ஒரு நட்சத்திரமாக்கியது. திவ்யா "நான் என்னை நிரூபிக்கவே விரும்புகிறேன். ஆனால் என் முகத்தின் மீதே வீழ்கிறேன். இப்போது, நான் மீண்டும் முற்றிலும் புதிதாக தொடங்கியிருக்கிறேன். ஒருநாள் வெற்றி என்னுடையதாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை", என்று கூறி தன்னை தற்காத்துக்கொண்டார் (ஸ்டார்டஸ்ட், மார்ச் 1992).
மேலும், திவ்யாவும்கூட இவ்வாறு புதுவரவுகள் மீதிருந்த நம்பிக்கையை நீக்கிக்கொண்டவராகக் காணப்பட்டார். பின்னர் பேலஜ் நிலானியின் ஷோலா அவுர் ஷப்னம் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் வெற்றிபெற்றது என்பதுடன் திவ்யா மீண்டும் உச்சத்திற்குச் சென்றார். இது திவ்யாவிற்கு மேன்மையான கதாப்பாத்திரத்தை மட்டுமின்றி கோவிந்தாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை வழங்கியதோடு டேவிட் தவானை ஒரு இயக்குநராக அங்கீகரிக்கச் செய்தது.
நான்கு மாதங்களுக்குப் பின்னர், ராஜ் கன்வரின் காதல் கதையான தீவானா 1992ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் அவர் ரிஷி கபூருடனும், இந்தப் படத்தில் அறிமுகமானவரும், பின்னாளில் பாலிவுட் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய சினிமாவின் அடையாளமாகவும் ஆன ஷாரூக்கானுடனும் நடித்திருந்தார். தீவானாவின் பெரிய வெற்றியால் திவ்யா தன்னுடைய புதுவரவு பட்டியலிலிருந்து விலகி முதல்நிலைப் பட்டியலில் இடம்பெற்றார். தீவானாவில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதே நேரத்தின்போது, திவ்யாவின் மற்ற படங்களான சுனில் ஷெட்டியுடன் பல்வான், கோவிந்தாவுடன் ஜான் சே பியாரா வெளியாகி நன்றாக ஓடின. அந்த வருடத்தின் முடிவில் ஹேமா மாலினியின் தில் ஆஷ்னா ஹை வெளியானது, அதில் திவ்யா தன்னுடைய தாயைத் தேடும் பார் நடனக்காரியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் தோல்வியடைந்தது என்றாலும் அவருடைய நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
திடீரென்று, அவரிடம் இருந்த பெரிய வெற்றிப்படங்களால் திவ்யா திரைத்துறையில் ஒரு மிகப்பெரிய சொத்தாகப் பார்க்கப்பட்டார். அவர் இந்த முதல்நிலைத் தகுதியை நீண்டநாட்களுக்கு தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று பலரும் கணித்தனர். உண்மையில் "மூவி", "ஸ்டார்டஸ்ட்" மற்றும் "ஃபிலிம்ஃபேர்" போன்ற திரைப் பத்திரிக்கைகள் செப்டம்பரில் அவரை சம்பளம், பிரபலம் மற்றும் மாதுரி தீ்ட்சித் மற்றும் ஸ்ரீதேவிக்கு அடுத்த நிலையில் இருப்பது ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு மூன்றாவது இடத்தை அளித்திருந்தன. ஆனால் விதி வேறு திட்டங்களை வைத்திருந்தது, 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 என்ற ஒரு விதிவசமான நாளில், பத்தொன்பது வயதே ஆகியிருந்த நிலையில் திவ்யா அவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.


சொந்த வாழ்க்கை

16 வயதே ஆன நிலையில், தன்னுடைய நண்பரான கோவிந்தாவைப் பார்ப்பதற்கு ஃபிலிம்சிட்டி படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சஜித் நதியத்வாலாவை 1990 இல் திவ்யா சந்தித்தார். ஷோலா அவுர் ஷப்னம் படப்பிடிப்பு தளத்தில் திவ்யா கோவிந்தா அஹூஜாவுடன் படப்பிடிப்பில் இருந்தார். கோவிந்தா தான் சஜித்தை திவ்யாவிற்கு அறிமுகம் செய்துவைத்தார். விரைவிலேயே படப்பிடிப்பு தளங்களில் படக்குழுவினர் தினமும் சஜித்தைப் பார்ப்பது தொடர்ந்தது.
1993 ஆம் ஆண்டு ஜூன் மூவி இதழில் சஜித் குறிப்பிட்டதன்படி "1992 ஆம் ஆண்டு ஜனவரி 15 இல் எங்கோ ஒரு இடத்தில் திவ்யா என்னிடம் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்". அடுத்த நாளே அவர் தன்னுடைய பெயர் எல்லா கதாநாயர்களுடனும் இணைத்துப் பேசப்படுவதாக படபடப்பில் இருந்தார். அவர் திருமணம் செய்துகொண்டு இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர விரும்பினார். நான் எல்லோருடனும் உறவு கொண்டிருப்பவளாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
பிறகு 1992 ஆம் ஆண்டு மே 20 இல் திவ்யா சஜித்தின் வெர்ஸோரா குடியிருப்பில் இருக்கும் துள்சி அடுக்ககத்தில் அவருடைய சிகையலங்கார நிபுணரான சந்தியா, அவருடைய கணவர் மற்றும் ஒரு இஸ்லாமிய சடங்காளரின் முன்னிலையில் சஜித்தை திருமணம் செய்துகொண்டார். அவர் இஸ்லாமிற்கு மதம் மாறியதோடு "சானா" என்ற புதிய பெயரையும் வைத்துக்கொண்டார். "அவருடைய திரைத்துறை வாழ்க்கையை இது பாதிக்கும் என்பதால் நாங்கள் இதை ரகசியமாகவே வைத்திருந்தோம். அவருடைய தயாரிப்பாளர்கள் அச்சமடைந்திருக்கக்கூடும். கடந்த காலங்களை நினைக்கையில் நாங்கள் இந்த உண்மையை சொல்லியிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். திவ்யா நாங்கள் திருமணம் செய்துகொண்டதை அறிவிக்கவே விரும்பினார் நான்தான் இன்னும் கொஞ்சநாள் போகட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். நான் அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவருடைய திரைப்படத்திற்கு முண்டியடிக்கும் கூட்டத்தைப் பார்த்து அவர், "இது தோற்றுப்போய் மக்கள் என்னை விலகும்படி கேட்டுக்கொள்வார்கள்" என்று முனகுவார். ஆனால் அது நடக்கவே இல்லை, அவருடைய திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிபெற்றன. 1993 ஆம் ஆண்டின் முடிவில் அவர் தன்னுடைய திரைப்பட வேலைகள் அனைத்தையும் முடித்திருப்பார்" என்று சஜித் குறிப்பிட்டிருந்தார்.
இறப்பு
1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவு, மும்பையில் திவ்யா தன்னுடைய கணவரின் அடுக்குமாடிக் குடியிருப்பான துள்சி 2 இல் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார். திவ்யாவின் இந்த திடீர் முடிவு குறித்து ஊடகத்தில் பல்வேறுவிதமான யூகங்கள் நிலவின, அதற்கு விபத்து, மரணம், தற்கொலை மற்றும் கொலையாகக்கூட இருக்கலாம் என்ற காரணங்கள் கற்பிக்கப்பட்டன. திவ்யாவின் ஆடை வடிவமைப்பாளர் அவர் மரணமடைந்த நேரத்தில் அந்த அடுக்ககத்தில் இருந்தார் என்று நம்பப்பட்டது, ஆனால் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் தவிர்க்க இயலாததாக இருந்தது. காவல்துறை அவர் மரணம் குறித்த விசாரணையை 1998ஆம் ஆண்டில் மூடியது, ஆனால் அவர் இறந்துபோன சூழ்நிலைகள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன.
அவருடைய உடல் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 இல் வழங்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. வெள்ளித்திரையில் மிக இளவயது கதாநாயகியாக இருந்தவரின் இறுதிச்சடங்கில் அனில் கபூர் ,
கோவிந்தா , கமல் சாதனா, ராஜ் பப்பர், யாஷ் சோப்ரா, ஜிம்மி நிருலா, சுதாகர் போகதே, முகேஷ் துக்கால், மகேஷ் ஆனந்த், அருணா இரானி, ராஸா முரத், விகாஸ் ஆனந்த், வெங்கடேஷ், ராம் மோகன், ஜாவத் கான், ராஜ் கன்வர், நிதின் மன்மோகன் மற்றும் அவருடைய முதல் வெற்றிப்படமான ஷோலா அவுர் ஷப்னத்தை உருவாக்கிய பேலஜ் நிலானி உள்ளிட்டவர்களும், ஹேமமாலினி, ஜெய பாதுரி, ஊர்மிளா மடோன்கர், சயிஃப் அலி கான்,
ஷாரூக்கான் , ஷில்பா ஷிரோத்கர், சோனு வாலியா, சோமி அலி, பபிதா, கரிஷ்மா கபூர், சங்கீதா பிஜ்லானி, தபு, மனிஷா கொய்ராலா மற்றும் ஆஷா பரேக் உள்ளிட்ட பெரிய திரை ஆளுமைகள் உட்பட 500 பேர் கலந்துகொண்டனர் என்பதோடு அவருடைய குடும்பத்தினருக்கு தங்களுடைய இரங்கல்களையும் தெரிவித்தனர். அவருடைய குடும்பத்தினரும் ஒரு நேர்காணலில், என்னுடைய மகள் போதை மருந்துகளை எடுத்திருந்தாலும் குடித்திருந்தாலும் அவரால் எப்படி ஒரு வருடத்திற்குள்ளாக 14 படங்களை முடித்திருக்க முடியும், இதுவே என்னுடைய திவ்யா குடிக்கவில்லை அல்லது போதைமருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது, அவள் முற்றிலும் குற்றமற்றவள் மற்றவர்களுக்கும் அவள் குற்றமற்றவள் என்றும் திறமையான பெண் என்றும் தெரியும் என்று குறிப்பிட்டனர்.
அவர் தன்னுடைய மரணத்திற்கு முன்பு
மோரா , லாட்லா , அந்தோலன் ,
அங்க்ராக்ஷாக் ,கார்தவ்யா (1995), மற்றும்
விஜபாத் ஆகிய படங்களில் நடிக்க திட்டமிட்டிருந்தார்; அவருடைய கதாபாத்திரங்கள் பின்னர் மாற்றியமைக்கப்பட்டன. திவ்யா தன்னுடைய மரணத்திற்கு முன்பு ஏறத்தாழ லாட்லா திரைப்படத்தின் 80 சதவிகிதத்தை முடித்துவிட்டார், ஆனால் அந்த முழுப்படமும் ஸ்ரீதேவியை வைத்து மீண்டும் எடுக்கப்பட்டது. அவர் நிறைவு செய்த அந்தத் திரைப்படத்தின் காட்சித்தொகுப்புகள் பல வருடங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டன. திவ்யா நிறைவு செய்த இந்தப் படம் 1993 இல் வெளியிடப்படுவதாக இருந்தது, ஆனால் இறுதியில் 1994 இல் வெளியிடப்பட்டது.
திவ்யா இறுதியாக நிறைவு செய்த இரண்டு திரைப்படங்களான ரங் மற்றும்
ஷத்ரன்ஞ் அவர் இறந்த சில மாதங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டன. இந்தத் திரைப்படங்கள்-மேலும் அவருடைய கணவர் சஜித் நதியத்வாலா தயாரித்த சில படங்களும்-அவருடைய நினைவுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
1998
1998ஆம் ஆண்டில், அவருடைய துயர மரணத்திற்கான உண்மையான காரணம் நிரூபிக்கப்பட இயலாததாக இருந்ததால் இந்த வழக்கு மூடப்பட தீர்மானிக்கப்பட்டது, ஆனால் இப்போதுவரை அவருடைய மரணம் ஒரு புதிராகவே இருக்கிறது என்பதுடன் இன்றும்கூட நினைவு கூறப்படும் அவருடைய ஆளுமையும் நடிப்பும் மறக்கப்பட முடியாததாகவே இருக்கிறது. மிகச் சிறப்பான நடிப்பால் அவர் இன்றும் விரும்பப்படுபவராகவும் மக்களால் நினைவு கூறப்படுபவராகவும் இருக்கிறார்.
திரைப்பட விவரங்கள்
ஆண்டு தலைப்பு உடன் நடித்தவர் மொழி வர்த்தகரீதியான வசூல்
1990 நிலா பெண்ணே ஆனந்த் தமிழ் தோல்வி
1990 போபிலி ராஜா வெங்கடேஷ் தெலுங்கு பெரிய வெற்றி
1992 ரவுடி அல்லுடு சிரஞ்சீவி தெலுங்கு பெரிய வெற்றி
1992 தர்ம ஷேத்ரம் பால்கிருஷ்ணா தெலுங்கு சராசரி
1992 அசெம்பிளி ரவுடி மோகன் பாபு தெலுங்கு பெரிய வெற்றி
1992 விஷ்வாத்மா சன்னி தியோல் இந்தி சராசரி
1992
ஷோலா அவுர் ஷப்னம்
கோவிந்தா இந்தி பெரிய வெற்றி
1992 தில் கா கியா கஸூர் ப்ரித்வி இந்தி சராசரி
1992 ஜான் ஸே பியாரா கோவிந்தா இந்தி வெற்றி
1992 தீவானா
ஷாருக் கான் மற்றும் ரிஷி கபூர்
இந்தி பெரிய வெற்றி
1992 பல்வான் சுனில் ஷெட்டி இந்தி வெற்றி
1992 துஷ்மன் சமானா அர்மான் கோலி இந்தி தோல்வி
1992 தில் ஆஸ்னா ஹை ஷாருக் கான் இந்தி சராசரி
1992 கீத் அவினாஷ் தோரத், நாஷிக் இந்தி சராசரி
1992 சித்தமா மோகுடு மோகன் பாபு தெலுங்கு தோல்வி
1993 தோலி முத்து பிரசாந்த் தெலுங்கு வெற்றி
1993 நா இல்லே நா சொர்க்கம்
கிருஷ்ணா, ரமேஷ் தெலுங்கு தோல்வி
1993 தில் ஹை டு ஹை ஜாக்கி ஷெராப் இந்தி வெற்றி
1993 காஸ்த்ரியா சஞ்சய் தத் இந்தி சராசரி
1993 ரங் கமல் சாதனா இந்தி வெற்றி
1993 சத்ரன்ஜ் ஜாக்கி ஷெராப் இந்தி சராசரி
விருதுகள்
ஃபிலிம்ஃபேர் விருது
முன்னர்
Raveena Tandon
for Patthar Ke Phool
லக்ஸ் புதுமுக விருது
for Deewana
1992
பின்னர்
Mamta Kulkarni
for Hindi Movie
முடிக்கப்படாத படங்கள்\மற்ற நடிகைகளைக் கொண்டு முடிக்கப்பட்டது
Year Of release
தலைப்பு உடன் நடித்தவர் மாற்றீடுகள் வர்த்தகரீதியான வசூல்
1993 தவான் அஜய் தேவ்கான்
கரிஷ்மா கபூர் சராசரி
1994 மோரா
அக்சய் குமார் மற்றும் சுனில் ஷெட்டி
ரவீணா டாண்டன் பெரிய வெற்றி
1994 லாட்லா அனில் கபூர் ஸ்ரீதேவி வெற்றி
1994 விஜபாத் அஜய் தேவ்கான் தபு வெற்றி
1995 அந்தோலன் கோவிந்தா மம்தா குல்கர்னி சராசரி
1995 கர்தவ்யா சஞ்சய் கபூர்
ஜூஹி சாவ்லா தோல்வி
1995 அங்ராக்ஷக் சன்னி தியோல் பூஜா பட் தோல்வி
1995 ஹல்ச்சல் அஜய் தேவ்கான் கஜோல் சராசரிக்கும் கீழே
1995 கன்யாதான் ரிஷி கபூர்
மனிஷா கொய்ராலா நின்றுபோனது
1995 தோ கதம் சல்மான் கான்
படம் தயாரிக்கப்படவில்லை
1995 பரிணாம் அக்ஷய் குமார்
படம் தயாரிக்கப்படவில்லை
1995 சல் பே சல் ஜாக்கி ஷெராப்
படம் தயாரிக்கப்படவில்லை
குறிப்புகள்
முடிக்கப்படாத படங்களின் பட்டியல் அனைத்தும் ஃபிலிம்ஃபேர் மற்றும் சினிபிளிட்ஸ் பத்திரிக்கைகளால் 1993 ஆம் ஆண்டு மேயில் பதிப்புரிமை பெறப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பிறந்த நாள்: பிப்ரவரி 25, 1973


இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பிறந்த நாள்: பிப்ரவரி 25, 1973

கௌதம் வாசுதேவ் மேனன் (பிறப்பு: பெப்ரவரி 25, 1973), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர்
ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து, மின்சார கனவு படத்தில் பணியாற்றினார். விளம்பர படங்கள் எடுப்பதற்காக இவர் உருவாக்கிய ஃபோட்டான் ஃபேக்டரி நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது. தனது தயாரிப்பில் வெளிவரும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் தூய தமிழில் பெயரிட்டுள்ளார்.
இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு பெயர் மொழி சிறப்புத் தோற்றம் குறிப்புகள்
2001
மின்னலே தமிழ்
கதைத் தலைவிக்குப் பூக்கள் கொண்டு தருகிறார்
முதல் திரைப்படம்
ரெஹனா ஹே தேரே தில் மேன் இந்தி கணினி ஆசிரியராக
மின்னலே திரைப்படத்தின் இந்திப் பதிப்பு
2003 காக்க காக்க தமிழ்
குற்றவாளிகளைச் சுட்டுக் கொல்லும் காவலராக
2004 கர்ஷனா தெலுங்கு
காக்க காக்க திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு
2006 வேட்டையாடு விளையாடு தமிழ்
மஞ்சள் வெயில் பாடலில் ஆட்டக்காரர்களில் ஒருவராக
2007 பச்சைக்கிளி முத்துச்சரம் தமிழ்
"காதல் கொஞ்சம்" பாடலில் பேருந்தில்
2008 வாரணம் ஆயிரம் தமிழ்
இதழாளரை ஒளித்து வைத்திருக்கும் இடத்தைச் சுட்டும் முகமூடி அணிந்தவர்
2010
விண்ணைத்தாண்டி வருவாயா தமிழ்
யே மாய செசாவே தெலுங்கு
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு
2011 நடுநிசி நாய்கள் தமிழ்
2012 ஏக் தீவானா தா இந்தி
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இந்திப் பதிப்பு
2012 நீ தானே என் பொன்வசந்தம் தமிழ்
2012 நித்யா தெலுங்கு
நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு
2012
ஏதோ வெளிப்போயிந்தி மனசு
தெலுங்கு
2015 என்னை அறிந்தால் தமிழ் காவல் துறை அதிகாரியாக
2015 அச்சம் என்பது மடைமையட  தமிழ்
2016 அச்சம் என்பது மடமை தமிழ் படப்பிடிப்பில்}
தயாரித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2011 நடுநிசி நாய்கள் தமிழ்
2011 வெப்பம் தமிழ்
2012 ஏக் தீவானா தா ஹிந்தி
2012 நீ தானே என் பொன்வசந்தம் தமிழ்
2013 தங்க மீன்கள் தமிழ்
2013
தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்
தமிழ்
2013 கொரியர் பாய் கல்யாண் தெலுங்கு
வெளி இணைப்புகள்
இணையத் திரைப்பட தரவுத்தளத்தில்
கௌதம் மேனன்
2016 எனனை நோக்கி பாயும் தோட்டா தமிழ் 2017 வெளியீடு
2017 துருவ நட்சத்திரம் தமிழ் படப்பிடிப்பில்

சனி, 24 பிப்ரவரி, 2018

நடிகை ஸ்ரீதேவி காலமானார் பிப்ரவரி 25, 2018.



நடிகை ஸ்ரீதேவி காலமானார் பிப்ரவரி 25, 2018.

நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.
துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றுள்ளார். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


ஸ்ரீதேவியின் அகால மரணத்தை அவருடைய மைத்துனர் சஞ்சய் கபூர் உறுதி செய்துள்ளார். ஸ்ரீதேவியின் கணவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர், மகள் குஷி இருவரும் உயிர்பிரியும் போது உடனிருந்திருக்கிறார்கள். மூத்த மகள் ஜான்வி திருமண விழாவுக்கு செல்லாததால் மும்பை இல்லத்தில் இருந்திருக்கிறார்.
54 வயதே நிரம்பிய ஸ்ரீதேவியின் திடீர் மரணச் செய்தி பாலிவுட், கோலிவுட் திரைப் பிரபலங்களை மட்டுமல்ல இந்திய சினிமா ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1969 ஆம் ஆண்டில் வெளியான துணைவன் திரைப்படத்தில் நான்கு வயது குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வெகுகாலம் கோலோச்சியவர்.
தமிழகத்தின் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி சிவாஜி, ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் பல படங்களில் நடித்தவர். இயக்குனர் பாலச்சந்தரின் வெளியான மூன்று முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 16 வயதினிலே மயில் கேரக்டர் ஸ்ரீதேவியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திய திரைப்படமாக அமைந்தது.
மூன்றாம் பிறை திரைப்படத்தில் கமலுக்கு இணையாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி.
மத்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ(2013), ஃபிலிம்பேர், இந்தி சினிமாக்களில் சிறந்த பங்களிப்பு செய்ததிற்கான ‘MAMI’ உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார்.




ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட நடிகை கவுதமி, அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் மறைவுச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது ரசிகர்களுக்கு இந்த நாள் கருப்பு தினம் என கூறியுள்ளார். வாழ்க்கை எத்தனை சிறியது என ஸ்ரீதேவியின் மரணம் உணர்த்துவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா, தனது வருத்தத்தை பதிவு செய்து கொண்டார். இவர்கள் தவிர இந்தி நடிகை, சுஷ்மிதா சென் உள்ளிட்ட பல்வேறு நடிகைகள், ‌தங்களின் இரங்கல் செய்தியை இணையதளங்களில் பதிவிட்டு ‌வருகின்றனர்.



வசீகர நாயகி ஸ்ரீதேவி

4 வயதில் திரையுலகில் அறிமுகமாகி தனித்திறமையாலும், கவர்ந்திழுக்கும் நடிப்பாலும் திரை ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. தமிழ், மலையாளம், கன்னடம், ஹந்தி என தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஸ்ரீதேவி. காலத்தால் அழியாத காந்த நடிப்பாற்றல் 13 வயதிலேயே கதாநாயகியாக நடித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, 1967-ஆம் ஆண்டு தமது 4 வயதில் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக
அறிமுகமானார். அசத்தும் நடிப்பாற்றல் காரணமாக தமது 13 வயதிலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் 1976-ஆம் ஆண்டு வெளிவந்த மூன்று முடிச்சு திரைப்படமே ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த திரைப்படம்.கமல், ரஜினி ஆகியோருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற வசந்தகால நதி தனிலே... வைரமணி நீரலைகள் என்ற பாடல் கேட்க ரசணையாவும், பார்க்க த்ரில்லாகவும் இருக்கும். ரஜினி, கமல் ரஜினியுடன் ஸ்ரீதேவியின் நடிப்பும் இந்த படத்தில் மிளிர்ந்தது.
மூன்று முடிச்சில் அறிமுகமானலும் பாரதிராஜா இயக்கத்தில் உருவான 16 வயதினிலே திரைப்படம் மூலம் தான் ஸ்ரீதேவி பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டார். இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள செந்தூரப்பூவே பாடலும். சப்பாணின்ன சப்புன்னு அடிச்சிரு என பேசிய வசனமும் ஸ்ரீதேவியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.


பின்னாளில் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பலமொழிகளிலும் தம் நடிப்பாற்றலால் ரசிர்களை கவர்ந்தார் ஸ்ரீதேவி. தமிழில் ஜொலிக்கத் தொடங்கிய பின் மலையாளத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ஆலிங்கனம், குட்டவும் சிக்ஷையும், ஆத்யபாடம், ஆ நிமிஷம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
1978 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினார் ஸ்ரீதேவி. இவர் நடித்த முதல் ஹிந்தி திரைப்படம் சோல்வா சாவன். ஹிந்தியில் அவரது இரண்டாவது படமான ஹிம்மத்வாலா பெரும் வெற்றியை பெற்றது. இதன்பின்னர் சத்மா, சாந்தினி ஆகிய திரைப்படங்களும் பெரும் வெற்றியை பெற்றன. புகழின் உச்சத்தில் இருந்த போது 1986-87களில் ஸ்ரீதேவியையும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியையும் இணைத்து சில வதந்திகள் பரவின.
பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை திரைப்படம் நடிப்பாற்றலில் ஸ்ரீதேவியின் மற்றொரு பரிமாணத்தையும், பரினாமத்தையும் வெளிப்படச் செய்தது. மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவி நடித்த அந்த வேடமும், சுப்ரமணி என்ற நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் பிஞ்சு மொழியை திரையில் பிரதிபலித்தன. இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அடுத்த தலைமுறை ரசிகர்களையும் அழ வைக்கும்.

பாலிவுட் நடிகர் அனில்கபூரின் அண்ணனும், திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூரை ஸ்ரீதேவி மணந்தார். திருமணத்திற்கு பின்னர் ஆறாண்டுகள்கழித்து சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். 14 ஆண்டுகளுக்கு பின் இங்க்லீஷ், விங்க்லீஷ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்குள் அவர் கால்பதித்தார். இந்த திரைப்படம் தமிழிலும், இந்தியிலும் தயாரிக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு வெளியானது. பின்னர் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
மீண்டும் கோகிலா, ப்ரியா என பலதிரைப்படங்களில் வெற்றிக்கொடி கட்டிய ஸ்ரீதேவிக்கு 2013 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. மீண்டும் கோகிலா திரைப்படத்திற்கு பிலிம்பேர் விருது கிட்டியது. தேவராகம் திரைப்படத்திற்காக டொரண்டோ விருதினை ஸ்ரீதேவி பெற்றார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார் ஸ்ரீதேவி..
கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு ரவி உதய்வார் இயக்கத்தில் மாம் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். அவரது 54 ஆவது பிறந்த நாளைகொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அவர் அறிமுகமான துணையான வெளியான அதே தினத்தில் 50 ஆண்டுகள் கழித்து மாம்வெளியானது. இப்படி தலைமுறை கடந்து ரசிகர்களின் மனதில் இளமையாக ஜொலிக்கும் ஸ்ரீதேவியின் இறுதி மூச்சு நின்றிருக்கிறது. எனினும் ரசிகர்களின் உணர்வுகளில் என்றும் ஈரக்காற்றாய் அவ்வவ்போது கடந்து செல்வார். நன்றி புதியதலைமுறை.


⚫இறப்பதற்கு முன் கடைசியாக அவர் அந்த திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.



வியாழன், 22 பிப்ரவரி, 2018

இயக்குநர் ஆர். சி. சக்தி நினைவு தினம் பிப்ரவரி 23, 2015.



இயக்குநர் ஆர். சி. சக்தி நினைவு தினம் பிப்ரவரி 23, 2015.

ஆர். சி. சக்தி இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் நடிகர்
ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தர்மயுத்தம் , விஜயகாந்த் நடித்த
மனக்கணக்கு , கமலஹாசன் நடித்த உணர்ச்சிகள் , மற்றும் ராஜேஷ் , லட்சுமி நடித்த சிறை ஆகிய திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்றார்.

ஆர். சி. சக்தி
இறப்பு பெப்ரவரி 23, 2015
இருப்பிடம் சென்னை , இந்தியா
பணி இயக்குனர் (திரைப்படம்)
நடிகர்
செயல்பட்ட
ஆண்டுகள்
1972–2015
வாழ்க்கைத்
துணை
லட்சுமி
பிள்ளைகள் செல்வகுமார், மகேசுவரி, சாந்த

வரலாறு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த புழுதிகுளத்தில் பிறந்த ஆர். சி. சக்தி, சிறுவயதிலேயே, கல்வியில் கவனத்தை செலுத்தாமல், சினிமாவில் ஆசையில் இருந்தார். இளைஞராக இருந்தபோதே, நண்பர்களுடன் இணைந்து நாடகக்கம்பெனியை துவங்கினார்
சென்னை வந்த சக்தி, சுப்பு ஆறுமுகம் குழுவில் சேர்ந்து, திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிவந்தார். தீவிர முயற்சிக்கு பிறகு, பொற்சிலை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் டான்ஸ் மாஸ்டர் தங்கத்துடன் இணைந்து, அன்னை வேளாங்கண்ணி படத்தில் திரைக்கதை எழுதினார். 1972ஆம் ஆண்டு, உணர்ச்சிகள் படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்தார். தனது முதல் படத்திலேயே, பால்வினை நோய்களை மையமாகக்கொண்டு படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. உணர்ச்சிகள் திரைப்படம் நடிகரான கமலஹாசனை உயரச்செய்தது.
இயக்கிய படங்கள்
ஆண்டு படத்தின் பெயர்
1976 உணர்ச்சிகள்
1978 மனிதரில் இத்தனை நிறங்களா?
1979 தர்மயுத்தம்
மாம்பழத்து வண்டு
1981 ராஜாங்கம்
1982 ஸ்பரிசம்
1983 உண்மைகள்
1984 சிறை
தங்கக்கோப்பை
1985
நாம்
சந்தோஷக் கனவுகள்
தவம்
1986 மனக்கணக்கு
1989 வரம்
1987 கூட்டுப்புழுக்கள்
தாலி தானம்
1989 வரன்
1990 அம்மா பிள்ளை
1993 பத்தினிப்பெண்


தர்மயுத்தம், சிறை, கூட்டுப் புழுக்கள் ஆர் சி சக்தியின் தனித்துவமிக்க படைப்புகள

ஆர் சி சக்தி... தனித்துவம் மிக்க தலைப்புகள், கருத்துகள் கொண்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர்.
நாடகம், வில்லுப்பாட்டு என்று இருந்த ஆர்சி சக்தி, மிகுந்த போராட்டத்துக்குப் பிறகுதான் பொற்சிலை என்ற படத்துக்கு உதவி இயக்குநர் ஆனார்.

உணர்ச்சிகள்
பின்னர் அவர் அன்னை வேளாங்கன்னி படத்துக்கு திரைக்கதை எழுதினார். அடுத்த இரு ஆண்டுகளில் அவர் தனியாகப் படம் இயக்க ஆரம்பித்தார். அவர் இயக்கிய முதல் படம் உணர்ச்சிகள். கமல்ஹாஸன் ஹீரோவாக நடித்த முதல் படம் இதுதான். இந்தப் படத்திலேயே அவர் பாலியல் ரீதியான சிக்கல்கள், பால்வினை நோய் தாக்குதல் என பிரச்சினைக்குரிய கதையைக் கையாண்டார். ஸ்ரீவித்யா நடித்திருந்தார்.
இந்தப் படம் மலையாளத்தில் ராசலீலா என்ற பெயரில் கமல் - ஜெயசுதா நடித்து வெளியாகி பெரும் வெற்றி வெற்றது.
மனிதரில் இத்தனை நிறங்களா
இந்தப் படத்தின் தலைப்பே பலரையும் கவனிக்க வைத்தது. இது எழுத்தாளர் ஜெயகாந்தன் நாவல் ஒன்றின் தலைப்பும் கூட.
படத்தில் கமல், ஸ்ரீதேவி, சத்யப்ரியா நடித்திருந்தனர். ஆனால் கமலுக்கு ஸ்ரீதேவி ஜோடியில்லை. தவறான பின்னணி கொண்ட, ஆனால் அப்பழுக்கற்ற ஒரு திருமணமாகாத பெண் எதிர்நோக்கும் சவால்களை மிக இயல்பாகச் சொல்லியிருந்தார் ஆர் சி சக்தி. ஷ்யாமின் இசை இந்தப் படத்துக்கு பெரும் சிறப்பு சேர்த்தது. மழை தருமோ... பாடல் இப்போது கேட்டாலும் பசுமையாய் இருக்கும்.
தர்மயுத்தம்
ரஜினி - ஸ்ரீதேவியை வைத்து ஆர்சி சக்தி இயக்கிய பெரும் வெற்றிப் படம் தர்மயுத்தம். ரஜினி அப்போது மிக மிக பிஸியாக இருந்த நேரம். 1978-ல் இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். அந்த ஆண்டு மட்டும் ரஜினி 20 படங்களில் நடித்திருந்தார். பெரும்பாலும் ஹீரோ வேடம்தான். அடுத்தடுத்த ஹிட் கொடுத்த அவர், கமல் சொன்னதால் ஆர் சி சக்தியின் கதையைக் கேட்டு ஓகே சொன்னாராம்.
இந்தப் படம் ரஜினிக்கு இன்னும் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. இளையராஜா இசையில் அத்தனைப் பாடல்களும் பெரும் பிரபலமடைந்தன. குறிப்பாக ஆகாய கங்கை மற்றும் ஒரு தங்க ரதத்தில்...
சிறை
அனுராதா ரமணன் எழுதிய சிறுகதையான சிறையை, அதே பெயரில் படமாக்கினார் ஆர்சி சக்தி. அன்றைக்கு வெளியான படங்களில் மிகவும் புரட்சிக் கருத்து கொண்ட படமாக விமர்சிக்கப்பட்டது இந்தப் படம்.
லட்சுமி, ராஜேஷ் இருவரும் உயர் தரமான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்கள். எம்எஸ்வியின் இசை, ஆர்சி சக்தியின் இயக்கம் போன்றவை இந்தப் படத்துக்கு ஒரு க்ளாஸிக் அந்தஸ்தைக் கொடுத்தன.
கூட்டுப் புழுக்கள்
ரகுவரன், அமலா, சந்திரசேகரன், இளவரசி நடிப்பில் 1987-ல் வெளியான படம் கூட்டுப் புழுக்கள். ஆர் சி சக்தி இயக்க, எம்எஸ்வி இசையமைத்திருந்தார்.
பெயரே கதையின் தன்மையைச் சொல்லிவிடும். நடுத்தர வர்க்கத்து கதை மாந்தர்கள், ஒரு நேர்மையான இளைஞனுக்கும் அழகான பெண்ணுக்குமிடையிலான காதலை மிகுந்த கண்ணியமாக சொன்ன படம் இது. 'இன்னிக்கு நடந்த நினைப்பிலே...' என்ற பாடல் மிக இனிமையாக இருக்கும்.
இவை தவிர சந்தோஷக் கனவுகள், மனக் கணக்கு, தாலி தானம், நாம், தவம், வரம் உள்பட 28 படங்களை இயக்கியுள்ளார் ஆர் சி சக்தி.
ரோஜாக்கள் ஐந்து..
கமலின் மருத நாயகம் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்கவிருந்தார் ஆர் சி சக்தி. 2013ம் ஆண்டு ரோஜாக்கள் ஐந்து என்ற தலைப்பில் ஒரு குறும் படத்தை இயக்க ஆரம்பித்தார் ஆர்சி சக்தி. இந்தப் படத்துக்காக கமல் ஹாஸன் ஒரு பாடலை இயற்றிப் பாடிக் கொடுத்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை.

நடிகர் சக்தி வாசுதேவன் பிறந்த நாள் பிப்ரவரி 23 ,1983.


நடிகர் சக்தி வாசுதேவன் பிறந்த நாள் பிப்ரவரி  23 ,1983.

சக்தி வாசுதேவன் (பிறப்பு: 23 பிப்ரவரி 1983) தமிழ் நடிகராவார். இவர் இயக்குனரான பி. வாசுவின் மகனாவார். குழந்தை நட்சத்திரமாக பி.வாசுவின் இயக்கத்தில் நடித்துள்ளார்.
1991 ல் சின்னத் தம்பி திரைப்படத்தில் இளைய வயது பிரபுவாக நடித்தார். இப்படம் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த முதல் படமாகும். நடிகன் திரைப்படத்தில் இளவயது சத்தியராஜாக நடித்தார்.
2007ல் தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். நினைத்தாலே இனிக்கும் துணை நடிகராக நடித்தார்.
திரைப்படங்கள்
ஆண்டு படம் கதாப்பாத்திரங்கள்
1991 சின்னத் தம்பி குழந்தை நட்சத்திரம்
1992 ரிக்சா மாமா குழந்தை நட்சத்திரம்
1992 செந்தமிழ் பாட்டு
குழந்தை நட்சத்திரம்
1992 இது நம்ம பூமி
குழந்தை நட்சத்திரம்
2007 தொட்டால் பூ மலரும் ரவி தியாகராஜன்
2008
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
மகேஷ்
2009 நினைத்தாலே இனிக்கும் சக்தி
2010 ஆட்டநாயகன் லிங்கம்
2011 கோ தானாக சிறப்புத் தோற்றம்
2011 யுவன் யுவதி சக்தி கௌரவத் தோற்றம்
2012 ஏதோ என்னை செய்தாய் அர்ஜூன்
2015 படம் பேசும் படபிடிப்பில்

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

நடிகர் கருணாஸ் பிறந்த நாள் பிப்ரவரி 21, 1970.


நடிகர் கருணாஸ் பிறந்த நாள் பிப்ரவரி 21, 1970.

கருணாஸ் (பிறப்பு: பெப்ரவரி 21, 1970) தமிழ்த் திரைப்பட நடிகரும் , இசையமைப்பாளரும் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பெப்ரவரி 21, 1970 ஆம் ஆண்டு பிறந்தார்.

அரசியல் வாழ்க்கை

இவர் "முக்குலத்தோர் புலிப்படை" என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்று
திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் அந்த தேர்தலில் 8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார்.


திரைத்துறை

நடிகராக
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
2001 நந்தா 'லொடுக்கு' பாண்டி
2002
காதல் அழிவதில்லை சாமி
ஏப்ரல் மாதத்தில் ஜாக்சன்
பாபா ஆப்ரிக்கா
123 ஆளவந்தான்
பேசாத கண்ணும் பேசுமே
வில்லன் கொடுக்கன்
ஜெயா
பாலா
2003
புதிய கீதை கணேஷ்
திருமலை
குத்து
காதலுடன் துரை
ரகசியமாய் சுரா கருப்பன்
ஆஹா எத்தனை அழகு
இயற்கை நந்து
இனிது இனிது காதல் இனிது
கையோடு கை
சக்சஸ்
பிதாமகன் கருவாயன்
இன்று
திருடா திருடி ராக்போர்ட் சந்துரு
சிந்தாமல் சிதறாமல்
2004
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் விமல்
என்னவோ பிடிச்சிருக்கு பீலா மகன்
வர்ணஜாலம் லோகு
நியூ விச்சு
ஜனா
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் அமிட்
அட்டகாசம்
உள்ளம் unreleased; direct-to-television
2005
தேவதையை கண்டேன் 'கடுப்பு' சுப்பிரமணி
காதல் எப் எம் சில்லி சிக்கன்
கஸ்தூரி மான்
காதல் செய்ய விரும்பு
ஈ டோனி
அது ஒரு கனாக்காலம்
2006
மெர்க்குரி பூக்கள்
சுதேசி
பிரதி ஞாயிறு 9.30 to 10.00 ரோமியோ
தகப்பன்சாமி
இது காதல் வரும் பருவம்
திருவிளையாடல் ஆரம்பம் டைகர் குமார்
2007
பொறி
மதுரை வீரன்
அற்புத தீவு
வேதா
முதல் கனவே
நீ நான் நிலா
நினைத்து நினைத்துப் பார்த்தேன்
என் உயிரினும் மேலான
தொல்லைப்பேசி
கற்றது தமிழ் யுவான் சுவாங்
மாமதுரை ஆறுமுகம்
பொல்லாதவன் ஆட்டோ குமார்
புலி வருது கருப்பு
2008
சாது மிரண்டா வெள்ளை
யாரடி நீ மோகினி கணேஷ்
வல்லமை தாராயோ
நேற்று இன்று நாளை
தனம்
திருவண்ணாமலை துரை சிங்கம்
சிலம்பாட்டம்
திண்டுக்கல் சாரதி சாரதி
பஞ்சாமிர்தம் பாண்டி
2009
சற்றுமுன் கிடைத்த தகவல்
அயன் தில்லி
இளம்புயல் கே எஸ் துரை
அடடா என்ன அழகு
ராஜாதி ராஜா கிருஷ்ணமூர்த்தி
மாசிலாமணி
ஆறுமுகம் வேலு
ராமேஸ்வரம்
2010
அம்பாசமுத்திரம் அம்பானி தண்டபாணி
ரெட்டச்சுழி மில்டரி ஆர்மி
பௌர்ணமி நாகம்
365 காதல் கதைகள்
பாணா காத்தாடி குமார்
எந்திரன் ரவி
உத்தம புத்திரன் ஜானகி
2011
இளைஞன்
காசேதான் கடவுளடா கருணா
மகாராஜா
2012
கழுகு நந்து
ஆதி நாராயணா
பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
2013
சந்தமாமா சந்தான கிருஷ்ணன் தயாரிப்பாளராகவும்
ரகளபுரம் வேலு தயாரிப்பாளராகவும்
மச்சான் ஆல் இன் ஆல் அழகுராஜா படபிடிப்பில்
இசையமைப்பாளராக
ஆண்டு திரைப்படம் குறிப்பு
2009 ராஜாதி ராஜா
2010 அம்பாசமுத்திரம் அம்பானி
2011 காசேதான் கடவுளடா
பாடகராக
ஆண்டு திரைப்படம் பாடல் இசை குறிப்பு
2007 சென்னை 600028 "ஜல்சா" (ரிமிஸ்) யுவன் சங்கர் ராஜா
2009 ராஜாதி ராஜா "காத்திருக்க" தனக்குத்தானே
2011 காசேதான் கடவுளடா "காசேதான்" தனக்குத்தானே
2013 சந்தமாமா "கோயம்பேடு சில்க் அக்கா"
சிறீகாந்த் தேவா பாடல்வரிகளும்
2013 ரகளபுரம் "ஒபாமாவும் இங்கேதான்"
சிறீகாந்த் தேவா

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

நடிகை சதா பிறந்த நாள் - பிப்ரவரி 17 , 1984.



நடிகை சதா பிறந்த நாள் - பிப்ரவரி 17 , 1984.

சதா (பிறப்பு - பெப்ரவரி 17 , 1984 ; இயற்பெயர் - சதாஃவ் முகமது சையது), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ் தெலுங்கு கன்னட மொழிப்படங்களை நடித்துள்ளார்.இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும்.


சதாஃவ் முகமது சையது
பிறப்பு பெப்ரவரி 17, 1984 (அகவை 34)
இரத்தினகிரி , மகாராஷ்டிரம், இந்தியா
பணி நடிகை
ஊதியம் Rs. 20 இலட்சம் (அண்ணளவு)
சொத்து மதிப்பு Rs. 5 கோடி (அண்ணளவு)


சதா நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்

ஜெயம்
எதிரி
வர்ணஜாலம்
அன்னியன்
பிரியசகி
திருப்பதி
உன்னாலே உன்னாலே

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் 17 .1985.


நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் 17 .1985.

சிவகார்த்திகேயன் ( ஆங்கிலம் : Sivakarthikeyan) என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3 , 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார். இவர் விளம்பர நிறுவனத்திற்காக மூன்று நாட்கள் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கவுள்ளார்.

பிறப்பு 17 பெப்ரவரி 1985 (அகவை 32)
சிங்கம்புணரி , சிவகங்கை மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா
பணி நடிகர் , மேடைச் சிரிப்புரையாளர் , தொலைக்காட்சித் தொகுப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ஆர்த்தி (2010–முதல்)

திரைப்பட விபரம்

நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2012 மெரினா செந்தில் நாதன்
2012 3 குமரன்
2012
மனம் கொத்திப் பறவை
கண்ணன்
2013
கேடி பில்லா கில்லாடி ரங்கா
பட்டை முருகன்
2013 எதிர்நீச்சல் குஞ்சிதபாதம் என்னும் ஹரீஷ்
2013
வருத்தபடாத வாலிபர் சங்கம்
போஸ் பாண்டி
2014 மான் கராத்தே பீட்டர்
2015 காக்கி சட்டை மதிமாறன்
2016 ரஜினி முருகன் ரஜினி முருகன்
2016 ரெமோ'
SK(சிவகார்த்திகேயன்) & ரெமோ (ரெஜினா மோத்வானி)
பாடிய பாடல்கள்
ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர்
2013
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
டி. இமான்
2014 மான் கராத்தே
ராயபுரம் பீட்டர்
அனிருத் ரவிச்சந்திரன்
2014 காக்கி சட்டை ஐயம் சோ கூல்
அனிருத் ரவிச்சந்திரன்
2015 ரஜினி முருகன்
ரஜினி முருகன் டி. இமான்
2015 மாப்பிள்ள சிங்கம்
எதுக்கு மச்சான் என். ஆர். ரகுநந்தன்

புதன், 14 பிப்ரவரி, 2018

நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்த நாள் : മീര ജാസ്മി பிப்ரவரி 15 .1982 .


நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்த நாள் : മീര ജാസ്മി பிப்ரவரி 15 .1982 .

மீரா ஜாஸ்மின் ( மலையாளம் : മീര ജാസ്മി) என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பெப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.
நடித்துள்ள படங்கள்
மலையாளம்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இயக்கம் நடிகர்கள்
2007 ஒரே கடல் தீப்தி சியாம பிரசாத் மம்மூட்டி
2007 வினோதயாத்ர அனுபமா சத்யன் அந்திக்காடு
திலீப் , சீதா ,
பார்வதி
2007 ராத்ரிமழை மீரர லெனின் ராஜேந்திரன் வினீத்
2006 ரசதந்திரம் கண்மணி சத்யன் அந்திக்காடு மோகன்லால்
2005 அச்சுவின்றெ அம்மை அசுவதி சத்யன் அந்திக்காடு ஊர்வசி, நரேன்
2004 பெருமழைக்காலம் ரசியா கமல்
திலீப் , வினீத்,
காவ்யா மாதவன்
2003 சக்கரம் இந்திராணி லோகிததாஸ் பிருத்விராஜ்
2003 பாடம் ஒன்னு: ஒரு விலாபம் ஷாகினா டி.வி. சந்திரன் மாமுக்கோயா
2003 சுவப்னக்கூடு கமலா கமல்
பிருத்விராஜ்,
குஞ்சாக்கோ போபன் ,
பாவனா ,
ஜயசூர்யா

2003 கஸ்தூரிமான் பிரியம்வதர லோகிததாஸ் குஞ்சாக்கோ போபன்
2003 கிராமபோன் ஜெனிபர் கமல் திலீப் , நவ்யா நாயர்
2001 சூத்ரதாரன் சிவானி லோகிததாஸ் திலீப்
2013 லேடீஸ் அண்டு ஜெண்டில்மேன் அச்சு சித்திக் மோகன்லால்
தமிழ்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இயக்குனர் நடிகர்கள்
2007 நேப்பாளி வி. கே துரை பரத்
2007
பரட்டை என்கிற அழகுசுந்தரம்
சுவேதா சுரேஷ் கிருஷ்ணா
தனுஷ் , அர்ச்சனா
2007 திருமகன் அய்யக்க ரத்னகுமார்
எஸ். ஜே சூர்ய, மாளவிகா
2006 மெர்க்குரி பூக்கள்
அன்புச் செல்வி
எஸ். எஸ். ஸ்டான்லி
ஸ்ரீகாந்த், சமிஷ்கா
2005 சண்டக்கோழி ஹேமா லிங்குசாமி விசால்
2005 கஸ்தூரி மான் உமா லோகிததாஸ் பிரசன்னா
2004 ஆய்த எழுத்து சசி மணிரத்னம்
மாதவன் ,
சூர்ய சிவகுமார் , இஷா டியோள், சித்தார்த்தன்
2004 ஜூட் மீரா அழகம் பெருமாள் ஸ்ரீகாந்த்
2003 ஆஞ்சனேயா திவ்யா மகாராஜன் அஜித்
2003 புதிய கீதை சுசி ஜகன்
விஜய், அமிஷா பட்டேல்
2002 பாலா ஆர்த்தி தீபக் ஸ்யாம்
2002 ரன் பிரிய லிங்குசாமி மாதவன்
தெலுங்கு
ஆண்டு படம் கதாப்பாத்திரம் இயக்குனர் நடிப்பு
2007
யமலோக மள்ளி மொதலயிந்தி
சீனிவாச ரெட்டி
ஸ்ரீகாந்த் , வேணு

2006 மகாரதி கல்யாணி பி. வாசு
பாலகிருஷ்ணா, சினேகா, ஜெயப்பிரதா
2006 ராராஜு ஜோதி உதய் சங்கர் கோபிசந்து, அங்கிதா
2005 பத்ரா அனு போயாபதி சீனு ரவி தேஜா
2004 குடும்ப சங்கர் கௌரி வீர சங்கர் பவன் கல்யாண்
2004 அம்மாயி பாகுந்தி ஜனனி/சத்யா பாலசேகரன் சிவாஜி
கன்னடம்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் இயக்குனர் நடிப்பு
2006 அரசு ஐசுவரியா மகேஷ் பாபு
புனீத் ராஜ்குமார் ,
ரம்யா
2004 மௌரியா அலமேலு எஸ். நாராயண்
புனீத் ராஜ்குமார்
மலையாளம்
சுவப்ணக் கூடு
ஒரே கடல்
திருமணம்
இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 அன்று
திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது.

திங்கள், 12 பிப்ரவரி, 2018

இயக்குநர் பாலு மகேந்திரா நினைவு தினம் பிப்ரவரி 13 - 2014.


இயக்குநர் பாலு மகேந்திரா நினைவு தினம் பிப்ரவரி  13 - 2014.

பாலு மகேந்திரா ( Balu Mahendra , 20 மே 1939 - 13 பெப்ரவரி 2014) இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
பிறப்பு
1939 மே 20 ஆம் தேதி இலங்கையில்
மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர்.தனது ஆரம்ப கல்வியை
புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார்.
லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 ல் தங்கப்பதக்கம் பெற்றார்.


முதல் தாக்கம்
தான் பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றார். பின்னர் ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்( Bridge of river kwai ) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும் போது பாலகன் பாலு மகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகின்றது. [1]
திரைப்பட நுழைவு
அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை ' செம்மீன் ' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த
ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின்
இயக்குனராக மாறியவர். 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம்
முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சின்னத்திரையில் பாலு மகேந்திரா
கதை நேரம் எனும் தொலைக்காட்சி தொடரினை சன் தொலைக்காட்சிக்காக பாலு மகேந்திரா இயக்கினார்.இத்தொடர்கள் 52 கதைகளை கொண்டிருந்தன அவற்றில் 10 கதைகள் எழுத்தாளர் சுஜாதாவினுடையதாகும்.


நுண்ணுணர்வும் படைப்பாற்றலும்

பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக்கொண்டிருக்கும்.ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது."  .

விருதுகளும் பாராட்டுக்களும்

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியா ராகம் ,
வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன.
ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவராவார்.
தேசிய திரைப்பட விருதுகள்
ஆண்டு திரைப்படம் மொழி துறை
1978 கோகிலா கன்னடம் ஒளிப்பதிவு
1983 மூன்றாம் பிறை தமிழ் ஒளிப்பதிவு
1988 வீடு தமிழ் இயக்கம்
1990 சந்தியா ராகம் தமிழ் இயக்கம்
1992 வண்ண வண்ண பூக்கள் தமிழ் இயக்கம்



மாநில அரசு விருதுகள்

ஆண்டு திரைப்படம் மாநில அரசு துறை
1974 நெல்லு கேரளம் ஒளிப்பதிவு
1975 பிரயாணம் கேரளம் ஒளிப்பதிவு
1977 கோகிலா கர்நாடகம் திரைக்கதை
பிலிம்பேர் விருதுகள்
ஆண்டு திரைப்படம் மொழி துறை
1983 மூன்றாம் பிறை தமிழ் இயக்கம்
1983 ஓலங்கள் மலையாளம் இயக்கம்
1988 வீடு தமிழ் இயக்கம்
நந்தி விருதுகள்
ஆண்டு திரைப்படம் மொழி துறை
1978 மனவூரி பண்டவலு தெலுங்கு ஒளிப்பதிவு
1982 நீர்க்காசனா தெலுங்கு ஒளிப்பதிவு
பாராட்டாக கிடைத்த காட்சிக் காணி
பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளருமாக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது காட்சிக் காணியை பரிசாக வழங்கியுள்ளார்.

இயக்குனரான உதவியாளர்கள்

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா ", "பிதாமகன் " போன்ற படங்களை இயக்கிய பாலா , பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். சீனுராமசாமி , ராம்,வெற்றி மாறன் , சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. பாலு மகேந்திரா இயக்கிய 'கதைநேரம்' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது.
உந்தப்பட்டவர்கள்
சந்தோஷ் சிவன், ரவி கே.சந்திரன் ஆகியோர் இவரால் உந்தப்பட்ட சில பிரபல ஒளிப்பதிவாளர்களாகும்.


இயக்கிய திரைப்படங்கள்
1. கோகிலா
2. அழியாத கோலங்கள்
3. மூடுபனி
4. மஞ்சு மூடல் மஞ்சு ( மலையாளம் )
5. ஓலங்கள் (மலையாளம்)
6. நீரக்ஷ்னா ( தெலுங்கு )
7. சத்மா ( ஹிந்தி )
8. ஊமை குயில்
9. மூன்றாம் பிறை
10. நீங்கள் கேட்டவை
11. உன் கண்ணில் நீர் வழிந்தால்
12. யாத்ரா
13. ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
14. ரெட்டை வால் குருவி
15. வீடு
16. சந்தியாராகம்
17. வண்ண வண்ண பூக்கள்
18. பூந்தேன் அருவி சுவன்னு
19. சக்ர வியூகம்
20. மறுபடியும்
21. சதி லீலாவதி
22. அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)
23. ராமன் அப்துல்லா
24. என் இனிய பொன் நிலாவே
25. ஜூலி கணபதி
26. அது ஒரு கனாக்காலம்
27. தலைமுறைகள்
மறைவு
பாலு மகேந்திரா பெப்ரவரி 13, 2014 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

துணுக்குகள்

பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர்.
இவர் புனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான "செங்கோட்டை" யை கொழும்பு "சவோய்" திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார். [ சான்று தேவை] சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார்.

கவிஞர் மருதகாசி பிறந்த தினம் பிப்ரவரி 13 , 1920.

கவிஞர் மருதகாசி பிறந்த தினம் பிப்ரவரி 13 , 1920.

மருதகாசி ( பெப்ரவரி 13 , 1920 - நவம்பர் 29 , 1989 ) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. தந்தை பெயர் அய்யம்பெருமாள் உடையார் தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார்.
1940 ஆம் ஆண்டில் திருமணமான இவரின் மனைவி பெயர் தனக்கோடி அம்மாள். மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள்.
நாடகப் பாடல்கள்
மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் "தேவி நாடக சபை"யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார்.
மு. கருணாநிதி எழுதிய மந்திரி குமாரி போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார்.
பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.

திரைப்படப்பாடல்கள்

1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்சார்
மாயாவதி என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி. ஆர். மகாலிங்கம் , அஞ்சலிதேவி இணைந்து நடித்த இந்தப்படத்தை டி. ஆர். சுந்தரம் இயக்கி வந்தார். இந்தப் படத்திற்குத் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ… என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். இதுவே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.
அதைத் தொடர்ந்து பொன்முடி ( 1950 ) படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன் , ஜிக்கி ஆகியோர்.
சுரதாவின் கதை-வசனத்திலும், எப். நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த
பாகவதரின் அமரகவி படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி. தொடர்ந்து அவர் எழுதிய சிவாஜியின் தூக்குத் தூக்கி படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அந்தக் காலக்கட்டத்தில் ஜி.ராமநாதன், கே. வி. மகாதேவன் , எஸ். தட்சிணாமூர்த்தி ,
விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.
எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல்
தேவரின் தாய்க்குப்பின் தாரம் படத்துக்கு
எம்.ஜி.ஆருக்கு புரட்சிகரமான கருத்துக்களுடன் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே என்ற பாடலை எழுதினார்.
இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில்
ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம்.
மருதகாசியின் பாடல்கள் அரசுடைமை
மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 இலட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

நினைவை விட்டு அகலாத சில பாடல்கள்

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா… ( நீலமலைத் திருடன் )
ஆளை ஆளைப் பார்க்கிறார் ( ரத்தக்கண்ணீர் )
சமரசம் உலாவும் இடமே ... ரம்பையின் காதல் (1939)
சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு ( ராஜா ராணி )
கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த ( தூக்குத் தூக்கி )
ஆனாக்க அந்த மடம்… ( ஆயிரம் ரூபாய் )
கோடி கோடி இன்பம் பெறவே ( ஆட வந்த தெய்வம் )
ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே ( பிள்ளைக்கனியமுது )
கடவுள் என்னும் முதலாளி ( விவசாயி )
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே ( மல்லிகா )
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல ( உத்தம புத்திரன் )
காவியமா? நெஞ்சின் ஓவியமா? ( பாவை விளக்கு )
பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்களின் பட்டியல்
1. சம்பூரண இராமாயணம் (1958) - அனைத்துப் பாடல்களும் இவர் எழுதியவை.


"திரைக்கவித் திலகம்' கவிஞர் மருதகாசி

மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வரலாற்றில், கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர்.
 ÷திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு என்ற கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் அய்யம்பெருமாள், தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். அருணாசல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் எழுதும் தூண்டுதல் பெற்று சிறுவயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் "தேவி நாடக சபை'யின் நாடகங்களுக்கும் மு.கருணாநிதி எழுதிய "மந்திரிகுமாரி' நாடகத்துக்கும் பாடல்கள் எழுதினார். கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றியதுடன், அந்நாடகங்களுக்கு இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான ராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.
 ÷தலைசிறந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் "மாடர்ன் தியேட்டர்ஸ்' படத்துக்காக ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபோது அவர் முன்னால் திருச்சி லோகநாதன், மருதகாசியின் நாடகப் பாடலைப் பாடிக் காட்டினார். அருகிலிருந்த இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசியின் பாடலின் உட்கருத்தால் கவரப்பட்டு உடனே அவரை அழைத்து முதல் வாய்ப்பை வழங்கினார்.
÷1949-இல் வெளிவந்த "மாயாவதி' படத்தின் மூலம் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார் மருதகாசி. ""பெண் எனும் மாயப் பேயாம்... பொய் மாதரை என் மனம் நாடுமோ'' (மாயாவதி) என்று தொடங்கும் பாடல்தான் மருதகாசியின் முதல் பாடல். அந்தப் படத்தில் தொடங்கி சுமார் இருநூற்று ஐம்பது படங்களுக்கு மேல் பாடல்களை எழுதிக்குவித்தார். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தையும் தாண்டும்.
÷மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. உடுமலை நாராயண கவிக்கு மெட்டுக்கு எழுதுவது சிரமமாக இருந்ததால், இந்திப் பாடல்களின் தமிழ்மொழி மாற்றத்துக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராகவும் ஆனார்.
÷ஒருசில தமிழ்ச் சொற்களுடன் மிகுதியும் சம்ஸ்கிருதமும், சாஸ்திரியமுமாக பழைய கீர்த்தனைகளை அடியொற்றி உருவாகி வந்த திரையிசைப் பாடல்களில் இடம்பெற்ற பாகவதத் தமிழ், படிப்படியாகப் பாமரத் தமிழுக்கு முற்றிலும் தொனி மாறிய காலகட்டத்தில் பாடல் எழுத வந்தவர் மருதகாசி. திரைப்பாடல்களுக்கு இலக்கிய ரசிகர்களுக்கான சாளரத்தைத் திறந்து வைத்து, இசைத் தன்மையுடன் பொதுத் தன்மைக்கும் பாடல்களை நகர்த்திய முன்னோடிப் பாடலாசிரியர்களுள் தனிச் சிறப்புப் பெற்றவர் இவர் என்று சொல்லவேண்டும்.
 ÷""நீலவண்ண கண்ணா வாடா'' என்று மங்கையர் திலகம் படத்தில் இவர் எழுதிய பாடல் குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்களில் தீட்டப்பட்ட பாடல்களுக்கெல்லாம் மகுடம் எனக் கூறலாம். குழந்தைகளுக்கான திரைப்பாடல்களை அதிகம் எழுதியவரும் இவராகத்தான் இருக்கும்.
 ÷"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா', "சமரசம் உலாவும் இடமே', "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே', "ஏர் முனைக்கு நேர்முனை எதுவுமே இல்லை', "மணப்பாறை மாடுகட்டி', "ஆனாக்க அந்த மடம்', "வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே', "காவியமா? நெஞ்சின் ஓவியமா?' - முதலிய இவர் எழுதிய திரைப்பாடல்கள் நெஞ்சை விட்டு என்றும் அகலாதவை.
÷இவர், 1940-இல் தனகோடி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆறு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.
÷கவிஞர் வாலி வாய்ப்புத் தேடிய காலத்தில், "நல்லவன் வாழ்வான்' படத்துக்காக "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடலை எழுதினார். இயற்கைத் தடைகளால் அந்தப் பாடலின் ஒலிப்பதிவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதுப்பாடலாசிரியர் வாலி எழுதியதால், சகுனம் சரியில்லை; எனவே, பழம்பெரும் பாடலாசிரியர் மருதகாசியை வைத்து எழுத முடிவெடுத்தனர். மாற்றுப் பாடல் எழுத வந்த மருதகாசி, முதலில் வாலி எழுதிய பாடலைக்கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார்.
""புதுக்கவிஞர் வாலி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். இதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டாராம். வளர்ந்து வரும் கவிஞரான தன்னைத் தாய்போல் ஆதரித்த மருதகாசியின் சககவி நேசத்தை மனம் நெகிழ்ந்து கவிஞர் வாலி தனது "நானும் இந்த நூற்றாண்டும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல்கள் எழுதியுள்ளார்.
÷1960-களிலிருந்து கண்ணதாசனுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டதால், மருதகாசி பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஒருசில படங்களைத் தயாரித்து பண நஷ்டத்துக்கும், மனக் கஷ்டத்துக்கும் ஆளானார். அதனால் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றவர், எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார். கே.எஸ்.ஜி., தேவர் படங்களுக்கு மட்டும் பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
 ÷தேவர் பிலிம்ஸின் "விவசாயி' படத்தின் அத்தனை பாடல்களையும் இவரைக் கொண்டு எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர். "கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி', "இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை' போன்ற "விவசாயி' திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் கருத்துச் செறிவும், சமுதாயக் கண்ணோட்டமும் உடையதாகப் பாராட்டப்படுபவை. தேவர் பிலிம்ஸ் படங்களில் மருதகாசிக்கு நிச்சயமாக ஒரு பாடல் இருக்கும்.
÷டி.எம்.செüந்தரராஜனை சினிமாவுக்குக் கொண்டுவந்த பெருமை மருதகாசியையே சேரும்.
"திரைக்கவித் திலகம்' என்னும் பட்டம் பெற்றவர் மருதகாசி. மருதகாசியின் திரையிசைப் பாடல்களையும் புத்தகங்களையும் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்த மருதகாசி, 29.11.1989-இல் காலமானார்.
÷தமிழ் சினிமாவைப் பற்றிய பதிவுகளில் தவிர்க்க முடியாத பங்களிப்பு மருதகாசியுடையது. கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி இருவரும் அறுபதுகளிலிருந்து தமிழ் சினிமாவில் முன்னணிப் பாடலாசிரியர்களாக வலம் வந்தாலும்கூட, மருதகாசியின் பாட்டுகளுக்குத் தனித்துவமும், ஜனரஞ்சகமும் இருந்ததால், அவரை ஒட்டுமொத்தமாக ஓரம்கட்டிவிட முடியவில்லை. மருதகாசியின் திரையிசைப் பாடல்கள் புத்தகமாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

நடிகர் ஆரி பிறந்த நாள் பிப்ரவரி 12, 1986


நடிகர் ஆரி பிறந்த நாள் பிப்ரவரி 12, 1986

ஆரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.
தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர், இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி (2010) திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து
நெடுஞ்சாலை (2014), மாயா (2015) திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பரவலாக அறியப்படுகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
ஆரி
பிறப்பு ஆரி
பெப்ரவரி 12, 1986 (அகவை 31)
பழனி , திண்டுக்கல் மாவட்டம் ,
தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம் சென்னை , தமிழ்நாடு
பணி நடிகர் , Body Sculptor, உடல் பயிற்சியாளர்
செயல்பட்ட
ஆண்டுகள்
2010– தற்போதும்
வாழ்க்கைத்
துணை
நதியா (2015 - தற்போதும்)

நடித்த திரைப்படங்கள்
பெற்ற விருதுகள்
ஆண்டு திரைப்படம் பெற்ற விருது
2015 நெடுஞ்சாலை வி4 விருதுகள்
2014 நெடுஞ்சாலை
திரைப்பட ரசிகர்கள் கூட்டமைப்பின் 62ஆவது ஆண்டு விருத

நடிகர் ஜெய்கணேஷ் நினைவு தினம் பெப்ரவரி 11.


நடிகர் ஜெய்கணேஷ் நினைவு தினம் பெப்ரவரி 11.

ஜெய்கணேஷ் அல்லது ஜெய் கணேஷ் (1946 - பெப்ரவரி 11, 2001 ஆங்கிலம் : Jai Ganesh ) ஒரு தமிழ்த்திரைப்பட நடிகர். முதன்மை, துணை, எதிர்மறை எனப் பலவாறான பாத்திரங்களில் திரைப்படங்களிலும்
தொலைக்காட்சித் தொடர்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்தவர்.
பொறியாளரான அவர் அவள் ஒரு தொடர்கதை, ஆட்டுக்கார அலமேலு,
தாயில்லாமல் நானில்லை , அதிசயப் பிறவி முதலிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.
இயக்குனர் பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
சிவாஜி கணேசன் , கே. ஆர். விஜயா ,
ஜெய்சங்கர் , சிவகுமார் , முத்துராமன்,
சுமித்ரா , ஸ்ரீவித்யா , ரஜினிகாந்த்,
கமல்ஹாசன் , படாபட் ஜெயலக்சுமி ,
சத்யபிரியா, ஜெயமாலினி , அனுராதா,
விஜயகாந்த் , சத்யராஜ், கார்த்திக் , ராதிகா,
ரேவதி , விஜய், அஜீத் குமார் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.
ஜெய்கணேஷ் பெப்ரவரி 11, 2001ல் தன் 54ம் அகவையில் புற்றுநோயால் இறந்தார்.

நடித்தத் திரைப்படங்கள் சில

படம் ஆண்டு வேடம் கு
அவள் ஒரு தொடர்கதை 1974
அக்கா 1976
மகராசி வாழ்க 1976
மனமார வாழ்த்துங்கள் 1976
ஆட்டுக்கார அலமேலு 1977
பட்டினப் பிரவேசம் 1977
வருவான் வடிவேலன் 1978
பைலட் பிரேம்நாத் 1978
வணக்கத்திற்குரிய காதலியே 1978
வட்டத்துக்குள் சதுரம் 1978
சொன்னது நீதானா 1978
அன்னலட்சுமி 1978
தாயில்லாமல் நானில்லை 1979
நீயா 1979
அழகே உன்னை ஆராதிக்கிறேன் 1979
அன்பே சங்கீதா 1979
சித்திரச்செவ்வானம் 1979
சுப்ரபாதம் 1979
மாம்பழத்து வண்டு 1979
தேவைகள் 1979
பாப்பாத்தி 1979
அப்போதே சொன்னேனே கேட்டியா
1979
காளி கோயில் கபாலி 1979
பட்டாகத்தி பைரவன் 1979
திரிசூலம் 1979
பருவத்தின் வாசலிலே 1980
வேடனை தேடிய மான் 1980
கீதா ஒரு செண்பகப்பூ 1980
ஒரே முத்தம் 1980
ஒரு மரத்து பறவைகள் 1980
முழு நிலவு 1980
சொர்க்கத்தின் திறப்பு விழா 1981
தாய் மூகாம்பிகை 1982
காமன் பண்டிகை 1983
என் ஆசை உன்னோடு தான் 1983
சின்ன வீடு 1985
ஆகாயதாமரைகள் 1985
அண்ணி 1985
நம்பினார் கெடுவதில்லை 1986
பதில் சொல்வாள் பத்ரகாளி 1986
எங்க சின்ன ராசா 1987
தம்பி தங்கக் கம்பி 1988
அண்ணாநகர் முதல் தெரு 1988
உழைத்து வாழ வேண்டும் 1988
காளிச்சரண் 1988
குங்குமக்கோடு 1988
சிகப்பு தாலி 1988
கைநாட்டு 1988
வானம் 1988
ராஜா சின்ன ரோஜா 1989
தென்றல் சுடும் 1989
கைவீசம்மா கைவீசு 1989
பெண்புத்தி முன்புத்தி 1989
திராவிடன் 1989
அதிசயப் பிறவி 1990
அரங்கேற்ற வேளை 1990
கல்யாண ராசி 1990
நாட்டுக்கு ஒரு நல்லவன் 1991
ஆயுள் கைதி 1991
தங்கமான தங்கச்சி 1991
மகராசன் 1993
துருவ நட்சத்திரம் 1993
முதல் பாடல் 1993
ராசா மகன் 1994
சீமான் 1994
நிலா 1994
வீரமணி 1994
உங்கள் அன்பு தங்கச்சி 1994
முறைமாமன் 1995
வேலுசாமி 1995
பூவே உனக்காக 1996
உள்ளத்தை அள்ளித்தா 1996
இனி எல்லாம் சுகமே 1996
காத்திருந்த காதல் 1997
புதுமைப்பித்தன் 1998
மலபார் போலீஸ் 1999
உன்னைத் தேடி 1999
உனக்காக எல்லாம் உனக்காக 1999
நீ வருவாய் என 1999
திருவண்ணாமலை 2000
பிறந்த நாள் 2000
பார்த்தேன் ரசித்தேன் 2000
மகளிர்க்காக 2000
மாயி 2000