வியாழன், 30 மார்ச், 2017

திரைப்படத் தயாரிப்பாளர் இராம. அரங்கண்ணல் பிறந்த தினம் மார்ச் 31 , 1928 .


திரைப்படத் தயாரிப்பாளர் இராம. அரங்கண்ணல் பிறந்த தினம்  மார்ச் 31 , 1928 .

இராம. அரங்கண்ணல் ( மார்ச் 31 , 1928 - ) ஒரு தமிழக எழுத்தாளார், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

அரங்கண்ணல் தஞ்சை மாவட்டம் கோமல் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் இராமகிருஷ்ணன் - ருக்மணி. பள்ளி நாட்களில் காங்கிரசு ஆதரவாளராக இருந்தவர். பின் திராவிட இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டார். பள்ளி இறுதி வகுப்புத் தேறியவுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்பில் (இண்டர்மீடியேட்) சேர்ந்தார். ஆனால் அதனை முடிக்க வில்லை. பதினெட்டாவது வயதில் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ ஏடான
முஸ்லிம் இதழில் துணை ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார்.
1949 முதல் திராவிடநாடு இதழில் பணியாற்றினார். பின் ”அறப்போர்” என்ற இதழையும் தாமே நடத்தினார். 1949 இல்
திராவிடர் கழகத்திலிருந்து
அண்ணாதுரை வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் (திமுக) தொடங்கிய போது அவரை ஆதரித்த முக்கிய தலைவர்களுள் அரங்கண்ணலும் ஒருவர். 1950களிலும் 60களிலும் இவர் எழுதிய சிறுகதைகள் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்ட போது அவற்றுக்குத் திரைக்கதை, வசனமும் எழுதினார். அவ்வாறு வெளியான திரைப்படங்கள்: செந்தாமரை , மகனே கேள்,
பொன்னு விளையும் பூமி, பச்சை விளக்கு மற்றும் அனுபவி ராஜா அனுபவி. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
1962 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். 1967 தேர்தலில் மீண்டும் இதே தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 தேர்தலில்
எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1976 இல் திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பின்னர்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இணைந்தார். 1984 இல் மீண்டும் திமுகவில் சேர்ந்தார்.
2007-08 ஆம் ஆண்டு இவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.
கலைமாமணி விருது வழங்கியும் சிறப்பித்துள்ளது.

படைப்புகள்

(முழுமையானதல்ல)
புதினங்கள்
வெண்ணிலா
அறுவடை
கடிகாரம்
நினைவுகள்
இதய தாகம்
சிறுகதைகள்
பச்சை விளக்கு
மகளே கேள்
செந்தாமரை
அபுனைவு
நினைவுகள் (தன்வரலாறு)

நடிகர் ராம்கி பிறந்த நாள் மார்ச் 31.



நடிகர் ராம்கி பிறந்த நாள் மார்ச் 31.

ராம்கி
பிறப்பு ராமகிருஷ்ணன்
31 மார்ச்சு 1962
(அகவை 55)
சங்கரநத்தம், சாத்தூர் ,
தமிழ்நாடு
பணி திரைப்பட நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள்
1987–2002
2013–தற்போதும்
வாழ்க்கைத் துணை
நிரோசா (தி.1995–தற்போதும்).

ராம்கி ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நிலவே முகம் காட்டு, பாளையத்து அம்மன் ஸ்ரீ ராஜராஜேசுவரி, படைவீட்டு அம்மன், குற்றப்பத்திரிக்கை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நிரோசா என்ற நடிகையைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல படங்களில் இணைந்தே நடித்தனர்.

புதன், 29 மார்ச், 2017

நடிகை தேவிகா ராணி பிறந்த தினம் மார்ச் 30.1908.



நடிகை தேவிகா ராணி பிறந்த தினம் மார்ச் 30.1908.

தேவிகா ராணி சௌத்திரி ரோரிக் ( Devika Rani Chaudhuri Roerich , வங்காள: দেবিকা রাণী) ( தெலுங்கு : దేవికా రాణి) (30 மார்ச்சு 1908 – 9 மார்ச்சு 1994) இந்தியத் திரைப்பட உலகின் துவக்க காலங்களில் நடிகையாக புகழ்பெற்றவர்.

பணிவாழ்வு

தேவிகா ராணி வால்டேர் என்றழைக்கப்பட்ட விசாகப்பட்டிணத்தில் சிறப்புமிகுந்த குடும்பமொன்றில் மார்ச்சு 30, 1908இல் பிறந்தார். நோபல் பரிசு பெற்ற இந்தியர் இரவீந்திரநாத் தாகூரின் குடும்பத்துடன் தொடர்புடையவர். தேவிகாவின் தந்தை எம். என். சௌத்திரி மதராசின் முதல் இந்திய தலைமை அறுவை மருத்துவராக (Surgeon-General of Madras) பணியாற்றியவர். தாயார் பெயர் லீலாவாகும்.
1920களில் தனது துவக்க பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் நாடகக் கலைக்கான வேந்திய அகாதமி யிலும் (RADA) வேந்திய இசை அகாதமியிலும் உதவித் தொகைகளுடன் பயின்றார். தவிரவும் கட்டிட வடிவமைப்பு, நெசவுப்பொருட்கள், உள்வடிவமைப்பு போன்றவற்றிலும் கல்வி கற்று எலிசபெத் ஆர்டென் கீழ் பயிற்சிப் பணியாற்றி வந்தார். இங்குதான் பிற்காலத்தில் அவரது பல வெற்றித் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய நிரஞ்சன் பாலை சந்தித்தார்.
1929ஆம் ஆண்டில் இந்தியத் தயாரிப்பாளரும் நடிகருமான இமான்ஷூ ராயை திருமணம் புரிந்தார். இருவரும் 1933ஆம் ஆண்டில் வெளிவந்த கர்மா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். தொடர்ந்து பம்பாய் டாக்கீஸ் என்ற திரைப்பட தயாரிப்புத்தளத்தை நிறுவினர். நிரஞ்சன் பால் மற்றும் பிரான்சு ஓஸ்டென் ஆகியோருடன் இணைந்து சாதி அமைப்புகளை சாடி திரைப்படங்கள் எடுத்தனர். இந்த காலகட்டத்தில் இவர்களுடன் நடித்தவர்களில் அசோக் குமார் , மதுபாலா குறிப்பிடத் தக்கவர்கள்.

1936இல் தன்னுடன் நடித்து வந்த காதலர் நஜம் உல் அசனுடன் தேவிகா ராணி ஓடிவிட்டார்.இருப்பினும் கணவர் ராய் அவரை மீளவும் அழைத்துக்கொண்டார். ஆனால் நஜம் அசன் திரும்பாதநிலையில் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த அசோக் குமாரை முதன்மை வேடத்தில் நடிக்க வைத்து திரைப்படத் தயாரிப்பைத் தொடர்ந்தார்.
அச்சுத் கன்யா என்ற அந்தத் திரைப்படத்தில் அசோக் குமார் பிராமண இளைஞராகவும் தேவிகா தீண்டத்தகாத இனப்பெண்ணாகவும் நடித்தனர்.
தனது கணவருடன் நடித்த கர்மா திரைப்படத்தில் திரைப்பட உலகிலேயே சாதனையாக நீண்ட நேரம் இதழோடு இதழ் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். நான்கு நிமிடநேரம் நீடித்த அந்த முத்தம் கட்டுப்பெட்டியான இந்திய சமூகத்தில் அப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

பிந்தைய வாழ்க்கை

1940இல் கணவனை இழந்தபிறகு அவரது
பம்பாய் டாக்கீஸ் படப்பிடிப்புத் தளத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். ஆனால் அதன் நிர்வாகத்தை சசாதர் முகர்ஜியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று. 1943ஆம் ஆண்டில் சசாதர், அசோக்குமார் மற்றும் பிற பம்பாய் டாக்கீஸ்காரர்கள் பிரிந்து சென்று
பிலிம்ஸ்தான் என்ற திரைப்பிடிப்பு தள நிறுவனத்தை உருவாக்கினர். இதன்பின்னர் பம்பாய் டாக்கீஸ் மெதுவாக மங்கத் துவங்கியது. 1945ஆம் ஆண்டில் தேவிகா இசுவேதோசுலாவ் ரோரிக்கை திருமணம் புரிந்து பெங்களூருவில் வாழத் தொடங்கினார். கனகபுரா சாலையில் அமைந்திருந்த பரந்த டாடாகுனி எஸ்டேட்டில்1994ஆம் ஆண்டில் தமது மறைவு வரை வாழந்திருந்தார். அவரது மறைவிற்குப் பின்னர் இந்த எஸ்டேட்டின் உரிமை குறித்து இந்திய உருசிய அரசுகளிடையேயும் உறவினர்களிடையேயும் பெரும் பிணக்கு ஏற்பட்டு நீதிமன்றம் சென்றனர்.
1958ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது. 1969ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படத்துறையின் மதிப்புமிக்க விருதான தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டபோது அதனைப் பெற்ற முதல் கலைஞராக பெருமை பெற்றார். அவரது மறைவின்போது அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது.



தேவிகா ராணி ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகை ஆவார். திரைப்படத்துறையில், அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பத்ம ஸ்ரீ” விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இந்தியாவின் சிறந்த நடிகையாக போற்றப்பட்ட அவர், இந்திய திரையுலகின் முதல் பெண் நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார். இந்திய திரையுலகில் “தாதாசாகேப் பால்கே” விருது பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவராக விளங்கிய தேவிகா ராணி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: மார்ச் 30, 1908
இடம்: விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம், இந்தியா
பணி: திரைப்பட நடிகை
இறப்பு: மார்ச் 9, 1994
நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

“தேவிகா ராணி சௌத்ரி” என்ற இயற்பெயர் கொண்ட தேவிகா ராணி அவர்கள், 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள், இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில், எம்.என் சௌத்ரி என்பவருக்கும், லீலாவுக்கும் மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை மதராசின் முதல் இந்திய தலைமை அறுவை மருத்துவராக பணியாற்றியவர். அதுமட்டுமல்லாமல், இவருடைய குடும்பம் ‘நோபல் பரிசு’ பெற்ற ரவீந்தரநாத் தாகூரின் குடும்பத்துடன் தொடர்புடையதாகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சிறுவயதிலேயே சிறந்த மாணவியாக விளங்கிய தேவிகா ராணி அவர்கள், 1920 ஆம் ஆண்டு தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு லண்டனில், ரேடாவில் ஸ்காலர்ஷிப் பெற்ற அவர், ஐக்கிய ராஜ்யத்தின் நாடகக் கலைக்கான வேந்திய அகாதமியிலும் மற்றும் வேந்திய இசை அகாதமியிலும் பயின்றார். அவர் எலிசபெத் ஆர்டென் கீழ் பயிற்சிப் பெற்றது மட்டுமல்லாமல், கட்டிட வடிவமைப்பு, நெசவுப்பொருட்கள், உள்வடிவமைப்பு போன்றவற்றிலும் கல்விக்கற்று வந்தார். இங்குதான் இவருடைய பல வெற்றித் திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதிய நிரஞ்சன் பால் என்பவரை சந்தித்தார்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை

1929 ஆம் ஆண்டு இந்திய திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான இமான்ஷூ ராயைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு தன்னுடைய திரைப்படங்களில் நடித்து வந்த நஜம் உல் அசனுடன் ஏற்பட்ட காதலால், 1936 ஆம் ஆண்டு தேவிகா ராணி நஜம் உல் அசனுடன் இணைந்தார். ஆனாலும், தேவிகா ராணி மீண்டும் தன்னுடைய கணவரான இமான்ஷூ ராவிடமே வந்து சேர்ந்தார். பிறகு, தன்னுடைய கணவரின் மறைவுக்கு பிறகு, 1945 ஆம் ஆண்டு இசுவேதோசுலாவ் ரோரிக்கை திருமணம் செய்துக் கொண்டார்.

திரைப்படத்துறையில் தேவிகா ராணியின் பயணம்.

1933 ஆம் ஆண்டு வெளிவந்த கர்மா திரைப்படத்தில் தன் கணவருடன் இணைந்து நடித்தார். தனது கணவரான இமான்ஷூ ராயுடன் நடித்த “கர்மா” என்ற திரைப்படத்தில் நீண்ட நேரம் இதழோடு இதழ் முத்தக்காட்சியில் நடித்திருப்பார். இந்திய சினிமாவில், இதற்கு முன் எந்த சினிமாவிலும் முத்தக்காட்சி எடுக்கப்பட்டது கிடையாது. இந்தக் காட்சி, இக்காலக் கதாநாயகிகளுக்குப் போட்டிபோடும் வகையில் நடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
1934 ஆம் ஆண்டு தன்னுடைய கணவருடன் இணைந்து “பம்பாய் டாக்கிஸ்” என்ற திரைப்படத்தலத்தை நிறுவினார். அந்தக் காலக்கட்டத்தில், பாம்பே டாக்கிஸின் வருகையால், இந்திய திரைப்படங்களுக்கு ஒரு உத்வேகம் கொடுத்ததாக அமைந்தது. ‘அச்சுத் கன்யா’, ‘ஹமாரி பாத்’ (1943), ‘துர்கா’ (1939), நிர்மலா’ ‘(1938), ‘வசன்’ (1938), ‘இஜத்’ (1937), ‘ஜீவன் ப்ரபாட்’ (1937) போன்ற திரைப்படங்களில் நடித்த தேவகா ராணி அவர்கள், இந்தியாவின் மிகப் பெரிய திரைப்பட நடிகை என அனைவராலும் பாராட்டப்பட்டார்.
1940 ஆம் ஆண்டு தன்னுடைய கணவர் இமான்ஷூ ராய் இறந்த பிறகு, பாம்பே டாக்கிஸ் நிர்வாகத்தை, சசாதர் முகர்ஜியுன் பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், சசாதர் முகர்ஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் பாம்பே டாக்கிஸ் நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்து, பிலிம்ஸ்தான் என்ற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினர். இதனால் பாம்பே டாகிஸின் வளர்ச்சி சற்று குறைந்தது எனக் கூறப்படுகிறது.

விருதுகளும், மரியாதைகளும்

1958 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.
1970 ஆம் ஆண்டு இந்திய திரைப்படத்துறையில், தேவிகா ராணியின் பங்களிப்பை பாராட்டி, ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு “கௌரவ பல்கேரிய பதக்கம்” வழங்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டு மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் ஆண்டு சயின்ஸ் இந்திய அகாடமியிலிருந்து ‘சிறப்பு விருது’ வழங்கப்பட்டது.

இறப்பு

தன்னுடைய கணவரின் இறப்புக்கு பிறகு, 1945 ஆம் ஆண்டு இசுவேதோசுலாவ் ரோரிக்கை திருமணம் செய்துக் கொண்டு பெங்களூரில் வாழ்ந்து வந்த தேவிகா ராணி அவர்கள், 1994 மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி தன்னுடைய 86 வது வயதில் மறைந்தார்.

செவ்வாய், 28 மார்ச், 2017

நடிகை சி. கே. சரஸ்வதி நினைவு தினம் மார்ச் 29.





நடிகை சி. கே. சரஸ்வதி நினைவு தினம் மார்ச்  29.

சி. கே. சரஸ்வதி தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் தீய எண்ணங்கொண்ட கதைப்பாத்திரங்களில் நடித்தார். சரஸ்வதி ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

1. என் மகன் (1945)
2. நல்லவன் (1945)
3. திகம்பர சாமியார் (1950)
4. மருதநாட்டு இளவரசி (1950)
5. சுதர்ஸன் (1951)
6. மாப்பிள்ளை (1952)
7. அழகி (1953)
8. இன்ஸ்பெக்டர் (1953)
9. லட்சுமி (1953)
10. ரோஹிணி (1953)
11. மாமன் மகள் (1955)
12. மேனகா (1955)
13. சதாரம் (1956)
14. சமய சஞ்சீவி (1957)
15. சௌபாக்கியவதி (1957)
16. நல்ல இடத்து சம்பந்தம் (1959)
17. காவேரியின் கணவன் (1959)
18. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (1959)
19. நான் சொல்லும் ரகசியம் (1959)
20. பாகப்பிரிவினை (1959)
21. மரகதம் (1959)
22. எங்கள் செல்வி (1960)
23. பொன்னித் திருநாள் (1960)
24. படித்தால் மட்டும் போதுமா (1962)
25. நானும் ஒரு பெண்.



சி.கே.சரஸ்வதி – இவரை அக்காலத்து ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க இயலாது. வில்லியாகவே பல படங்களில் நடித்துள்ளார். அந்த அந்த பாத்திரமாகவே மாறும் வல்லமை படைத்தவர். தில்லானா மோகனாம்பாள் படத்தில் வடிவாம்பாளாக பத்மினியின் தாயாராக வருவார். பருத்த உடலமைப்பு. வசன உச்சரிப்பில் கணீரென்ற குரலில் ஏற்ற இறக்கத்துடன் பேசும் பாங்கு இவருக்குக் கை வந்த கலை. வாணி ராணி படத்தில் முதற்பகுதியில் அமைதியான வாணிஸ்ரீயின் கொடுமைக்கார சித்தியாக வந்து ஆட்டிப்படைப்பார். பிற்பகுதியில் மற்றொரு ஆர்ப்பாட்டமான வாணிஸ்ரீயிடம் செம அடிவாங்குவார். லட்சுமி கல்யாணம் படத்தில் நிர்மலாவுக்குக் கல்யாணம் ஆகாமல் தடுக்க இவர் ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது. படங்களில் வில்லியாக ஆட்டம் போட்டு பெண்களிடம் சாபங்களை வாங்கிய சி.கே.சரஸ்வதி அவர்களால் தன் குடும்பத்தினரிடம் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதித் தருவாயில் வறுமையில் வாடினார்.
எம்.என்.நம்பியாருடன் குலமா குணமா உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இவ்விருவரும் பொருத்தமான ஜோடி என பல படங்களை ரசித்து ரசிகர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இவர் நடித்த படங்களில் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
ராஜகுமாரி, மாங்கல்ய பாக்கியம்,சோப்பு சீப்பு கண்ணாடி , பொன்முடி, திகம்பர சாமியார், எங்க மாமா, தூக்கு தூக்கி, தாய், மகேஸ்வரி, வண்ணக்கிளி, பூலோக ரம்பை, கண்ணே பாப்பா, மங்கள வாத்தியம்,, உழைக்கும் கரங்கள், வாணி ராணி, சிங்காரி,லட்சுமி கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், பார்த்தால் பசிதீரும், நானும் ஒரு பெண், மன்னிப்பு, இரு கோடுகள், இதோ எந்தன் தெய்வம், கல்யாண ஊர்வலம், தாயே உனக்காக, சௌபாக்கியவதி, படித்தால் மட்டும் போதுமா, உரிமைக்குரல்
சி.கே.சரஸ்வதி 1997-இல் காலமானார்.

திங்கள், 27 மார்ச், 2017

நடிகர் சித்தூர் வி. நாகையா பிறந்த தினம் மார்ச் 28.



நடிகர் சித்தூர் வி. நாகையா பிறந்த தினம்  மார்ச் 28.

சித்தூர் வி. நாகையா (இயற்பெயர்:
வுப்பலதடியம் நாகையா , தெலுங்கு: వుప్పలదడియం నాగయ్య; 28 மார்ச் 1904 - 30 டிசம்பர் 1973) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் பங்காற்றியவர்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்.

அசோக் குமார் (1941)
மீரா (1945)
நவஜீவனம் (1949)
என் வீடு (1953)
எதிர்பாராதது (1954)
பெண்ணின் பெருமை (1956)
அமரதீபம் (1956)
நிச்சய தாம்பூலம் (1962)
காலம் வெல்லும் (1970)
கண்மலர் (1970)
ராமன் எத்தனை ராமனடி (1970)
இரு துருவம் (1971)
சம்பூர்ண ராமாயணம்
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
கலைமாமணி விருது (1962 - 1963)
பத்மசிறீ விருது , 1965

பாடகி டி. கே. பட்டம்மாள் பிறந்த தினம் மார்ச் 28 ,



பாடகி டி. கே. பட்டம்மாள் பிறந்த தினம் மார்ச் 28 ,

டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் ( மார்ச் 28 , 1919 - ஜூலை 16 ,
2009.ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் , இவரது பேத்தி ஆவார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர்  மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும்
எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அலமேலு என்ற இயற்பெயருடைய “பட்டா” எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள்
தமிழ்நாடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தாமல் என்ற ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர். தாயார் காந்திமதி (ராஜம்மாள்) ஒரு சிறந்த பாடகி. அக்காலக் குடும்ப மரபுக்கேற்ப ராஜம்மாள் என்றும் பொது மேடைகளிலோ அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களின் முன்னிலையிலோ பாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் அந்த மரபுகளையும் தாண்டி பட்டம்மாள் தனது 4 ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார்  . அவருடன் உடன்பிறந்த மூன்று சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி. கே. ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள். பட்டம்மாள்
1939 ஆம் ஆண்டில் ஆர். ஈசுவரன் என்பாரைத் திருமணம் செய்ய்துகொண்டார்.
இசைத் துறையில்
பட்டம்மாள் முறையாக கருநாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார். தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
பட்டம்மாள் (வலது) தனது சகோதரர் டி. கே. ஜெயராமனுடன், 1940களில்
1929 ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், 1932 இல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார் . பின்னர் காங்கிரஸ் கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். பாபநாசம் சிவன் ,
கோபாலகிருஷ்ண பாரதி மற்றும்
முத்துத் தாண்டவர் பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார்.
பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள்
ஜப்பான் , சிங்கப்பூர் , பிரான்சு, ஜெர்மனி ,
அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய ' அகிகோ 'வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.

விருதுகள்

சங்கீத நாடக அகாடெமி விருது , 1962
பத்ம பூசண் , 1971
இசைப்பேரறிஞர் விருது , 1973
சங்கீத கலாசிகாமணி விருது , 1978, வழங்கியது: தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
பத்ம விபூசண் , 1998
தேசியகுயில்
சங்கீத கலாநிதி
கலைமாமணி விருது
காளிதாஸ் சம்மன் விருது

நடிகை சோனியா அகர்வால் பிறந்த நாள் - மார்ச் 28 ,1982.



நடிகை சோனியா அகர்வால் பிறந்த நாள் - மார்ச் 28 ,1982.

சோனியா அகர்வால் (பிறப்பு - மார்ச் 28 ,
1982 , பஞ்சாப் ), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை (நடிகர்
தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15 ,
2006 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாறு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன.



நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

2006 - புதுப்பேட்டை
2006 - திருட்டுப்பயலே
2005 - ஒரு நாள் ஒரு கனவு
2005 - ஒரு கல்லூரியின் கதை
2004 - 7ஜி ரெயின்போ காலணி
2004 - மதுர
2003 - கோவில்
2003 - சக்செஸ் (Success)
2003 - காதல் கொண்டேன்
நடித்த சின்னத்திரை தொடர்கள்
2009 - நாணல் (கலைஞர் தொலைகாட்சியில்)
2013 - மல்லி (புதுயுகம் தொலைகாட்சியில்)

ஞாயிறு, 26 மார்ச், 2017

நடிகர் ராம் சரண் பிறந்த நாள் மார்ச் 27.



நடிகர் ராம் சரண் பிறந்த நாள் மார்ச் 27.


பிறப்பு ராம் சரண் தேஜ்
27 மார்ச்சு 1985
(அகவை 32)
சென்னை , தமிழ்நாடு ,
இந்தியா
இருப்பிடம் திரைப்பட நகர், ஹைதெராபாத், ஆந்திர பிரதேசம் , இந்தியா
பணி நடிகர்
தயாரிப்பாளர்
செயல்பட்ட ஆண்டுகள்
2007–அறிமுகம்
உயரம் 5 feet 9 inches (1.75 m)
பெற்றோர் சிரஞ்சீவி
சுரேகா
வாழ்க்கைத் துணை
உபாசனா காமினேனி (m.2012–அறிமுகம்)
உறவினர்கள் அல்லு ராமா (தாய்வழி தாத்தா)
நாகேந்திர பாபு (தந்தை வழி மாமா)
பவன் கல்யாண் (தந்தை வழி மாமா)
ரேணு தேசாய் (அப்பா வழி அத்தை)
அல்லு அரவிந்த் (மாமா)
அல்லு அர்ஜுன் (cousin)


ராம் சரண் இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது ,
பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இவர் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் சென்னை , தமிழ்நாடுல் பிறந்தார், இவரின் தந்தை சிரஞ்சீவி மற்றும் தாய்
சுரேகா சிரஞ்சீவி ஆவார். இவரின் குடும்பம் ஒரு திரைப்பட கலை குடும்பம் ஆகும். இவர் டிசம்பர் 1ம் திகதி 2011ம் ஆண்டு உபாசனா காமினேனி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமா வாழ்க்கை
2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விருது வென்றார். இந்த திரைப்படம் தமிழ் மொழியில் சிறுத்தை புலி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2012ம் ஆண்டு வெளியானது.
2009ம் ஆண்டு மாவீரன் என்ற திரைப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை இராஜமௌலி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மெகா ஹிட் திரைப்படம் ஆகும், மற்றும் வசூலிலும் மிக பெரிய வெற்றி கண்டது.
மாவீரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2010ம் ஆண்டு ஆரஞ்சு , 2012ம் ஆண்டு ரச்சா , 2013ம் ஆண்டு நாயக் , 2014ம் ஆண்டு Yevadu போன்ற தெலுங்கு திரைப்படத்திலும் Zanjeer என்ற ஒரு ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து இருந்தார், இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து இருந்தார், இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் Thoofan என்ற மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
இவர் தற்பொழுது Govindudu Andarivadele என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார். இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார்.
திரைப்படங்கள்
ஆண்டு தலைப்பு மொழி
2007 சிறுத்தை தெலுங்கு
2009 மாவீரன் தெலுங்கு
2010 ஆரஞ்சு தெலுங்கு
2012 ரச்சா தெலுங்கு
2013 நாயக் தெலுங்கு
2013 Zanjeer
Thoofan
ஹிந்தி
தெலுங்கு
2014 Yevadu தெலுங்கு
2014 Govindudu Andarivadele தெலுங்கு
விருதுகள்
நந்தி விருது
நந்தி சிறப்பு நடுவர் விருது சிறந்த நடிகர் - சிறுத்தை (2007)
நந்தி சிறப்பு நடுவர் விருது சிறந்த நடிகர் - மாவீரன் (2009)
பிலிம்பேர் விருதுகள்
வெற்றி
பிலிம்பேர் விருது சிறந்த புதுமுக நடிகர் - (சிறுத்தை) (2007)
பிலிம்பேர் விருது சிறந்த நடிகர்
தெலுங்கு - மாவீரன் (2009)
பரிந்துரைகள்
பிலிம்பேர் விருது சிறந்த நடிகர்
தெலுங்கு - ரச்சா (2012)
சினிமா விருதுகள் / CineMaa Awards
வெற்றி
சினிமா விருது சிறந்த புதுமுக நடிகர் - சிறுத்தை (2007)
சினிமா விருது சிறந்த நடிகர் - மாவீரன் (2009)
பரிந்துரைகள்
சினிமா விருது சிறந்த நடிகர் - ரச்சா (2012)
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
பரிந்துரைகள்
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருது சிறந்த நடிகர் - ரச்சா (2012)

சனி, 25 மார்ச், 2017

நடிகை சுகுமாரி நினைவு தினம் மார்ச் 26 .2013 .



நடிகை சுகுமாரி நினைவு தினம் மார்ச் 26 .2013 .

சுகுமாரி ( அக்டோபர் 6 , 1940 - மார்ச் 26
2013 ) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தார்.
நாகர்கோவிலில் பிறந்த இவர் தன்னுடைய 10-வது வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கினார். பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் 2003 ஆம் ஆண்டுக்கான
பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். 2010ம் ஆண்டு
நம்ம கிராமம் என்ற படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.


மறைவு

தீக்காயம் பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுமாரி  2013 மார்ச் 26-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நடிகை மதுபாலா பிறந்த நாள் மார்ச் 26, 1972.



நடிகை மதுபாலா பிறந்த நாள் மார்ச் 26, 1972.

மதுபாலா (முழுப்பெயர்: மதுபாலா ரகுநாத் , பிறப்பு:மார்ச் 26, 1972) ஓர்
தென்னிந்தியத் திரைப்பட நடிகை. மதுபாலா மலையாளம் , இந்தி , தமிழ் ,
தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகை
மதுபாலாவின் நினைவாக பெற்றோர் இவருக்கு இந்தப்பெயர் சூட்டினர். அசோக் குமார் , தேவ் ஆனந்த் , மோகன்லால் ,
மம்முட்டி , அக்க்ஷய் குமார் , ரிஷி கபூர் ,
ஜீதேந்திரா , நசிருத்தீன் ஷா , அர்ஜூன் ,
பிரபு தேவா, பிரபு , மிதுன் சக்கரவர்த்தி ,
ஜாக்கி செராஃப் , கோவிந்தா , அஜய் தேவ்கான் , சைய்ஃப் அலி கான் , நானா படேகர் எனப் பலருடன் நடித்துள்ளார்.

மதுபாலாவின் முதல் திரை அறிமுகம் மலையாளத் திரைப்படம் ஒத்தயாள் பட்டாள த்தில் நிகழ்ந்தது. தமிழ் திரைபடங்களில் முதன்முதலாக
கே.பாலச்சந்தரின் "அழகன் " திரைப்படத்தில்
மம்முட்டி , பானுப்பிரியா மற்றும் கீதா ஆகியோருடன் நடித்தார். இந்தித் திரைப்படங்களில் முதல் படமாக மற்றொரு புதுமுக நடிகராக அறிமுகமான அஜய் தேவ்கன்னுடன் இணையாக நடித்த "பூல் ஔர் கான்ட்டே" என்ற திரைப்படம் அமைந்தது. 1992ஆம் ஆண்டில் வெளியான
மணிரத்தினத்தின் ரோஜாவில் கதாநாயகியாக நடித்தது அவரைப் பரவலாக அறிய வைத்தது. பெப்ரவரி 19,1999 அன்று ஆனந்த் ஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமேயா (நவம்பர் 16, 2000), கீயா (நவம்பர் 9, 2002) என்ற இரு பெண்கள் உள்ளனர். 2010-11ல் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செளந்திரவல்லி தொடரின் மூலம் தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமானார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்த நாள் மார்ச் 26.



நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்த நாள் மார்ச் 26.

பிரகாஷ் ராஜ் ( கன்னடம் : ಪ್ರಕಾಶ್ ರೈ பிறப்பு: 1965 ), இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர். இவர் கன்னடம், தமிழ் , மலையாளம் , மற்றும்
தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது
காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான
தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார் . அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.
திரைப்படங்கள்
தெலுங்கு
நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா
சீத்தம்மா வகிட்லோ சிரிமல்லி செட்டு
அத்தடு
ஒக்கடு
மிஸ்டர் பெர்ஃபக்ட்
தமிழ்
அபியும் நானும்
காஞ்சிவரம்
சந்தோஷ் சுப்பிரமணியம்
பீமா
அழகிய தீயே
சொக்கத்தங்கம்
எம். குமரன் தா/பெ மகாலஷ்மி
வில்லு
பாரிஜாதம்
வானம்
கையளவு மனசு
ஆசை
வேங்கை
சகுனி
ராசி
பொன்னர் சங்கர்
தீராத விளையாட்டுப் பிள்ளை
பிறந்த நாள்
சின்ன சின்னக் கண்ணிலே
லிட்டில் ஜான்
டூயட்
நிலா
காதல் அழிவதில்லை
சார்லி சாப்ளின்
கௌரவம்
பம்பாய்
அறிந்தும் அறியாமலும்
சிவகாசி
கில்லி
ஐயா
போக்கிரி
இருவர்
கன்னத்தில் முத்தமிட்டால்
அந்நியன்
வேட்டையாடு விளையாடு
மொழி
ரிலாக்ஸ்
அப்பு
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
ஆதி
அள்ளித்தந்த வானம்
சென்னையில் ஒரு நாள்
ஐ லவ் யூ டா
ரோஜாக்கூட்டம்
தயா
இந்தி
டபாங் 2

வியாழன், 23 மார்ச், 2017


பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் நினைவு தினம் மார்ச் 24 , 1988 .

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் ( ஜனவரி 19 ,
1933 - மார்ச் 24 , 1988 ) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
பெயர் : சி. கோவிந்தராசன்
பிறப்பு: 19 ஜனவரி 1933
இறப்பு: 24 மார்ச் 1988.
பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்
பிறப்பிடம்: சீர்காழி
ஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி
இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:
தியானமே எனது - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
வதனமே சந்திர பிம்பமோ - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
செந்தாமரை முகமே - பி. யூ. சின்னப்பா பாடிய பாடல்
கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்
பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம்.

திரைப்படப் பாடகர்

திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.


திரைப்படத்துக்காக பாடிய பாடல்கள்
( பட்டியல் முழுமையானதன்று )
எண் பாடல் பாடலாசிரியர்
1 பட்டணந்தான் போகலாமடி ... எ
2
அமுதும் தேனும் எதற்கு ...
க ம
3 மாட்டுக்கார வேலா ...
க ம
4 வில் எங்கே கணை இங்கே ...
எ வ இ
5
வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே ...

6
கொங்கு நாட்டுச் செங்கரும்பே ...
மாயவநாதன் ஜ
7 மலையே என் நிலையே ... ஜ
8 ஜக்கம்மா ... ஜ
9 பட்டணந்தான் போகலாமடி ... எ
10 ஒற்றுமையாய் வாழ்வதாலே ...
க ம
11 எங்கிருந்தோ வந்தான் ... பாரதியார் க ம
12 ஓடம் நதியினிலே ...
13 கோட்டையிலே ஒரு ஆலமரம் ...
14 நல்ல மனைவி நல்ல பிள்ளை ...
15
பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா ...
16
கண்ணான கண்மணிக்கு அவசரமா ...
17 கண்ணன் வந்தான் ...

பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில

பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை
காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை
ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு )
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.
நிலவோடு வான்முகில், இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)
வண்டு ஆடாத சோலையில் , ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
சிரிப்பது சிலபேர், யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)
ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்) - ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்
கண்ணன் வந்தான் (படம்: ராமு)(உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
தேவன் வந்தான் (படம்: குழந்தைக்காக) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்)
வெள்ளிப் பனிமலையின் (படம்: கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர்: திருச்சி லோகநாதன்)
இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
ஆயிரம் கரங்கள் நீட்டி (படம்: கர்ணன்) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)

விருதுகள்

சங்கீத நாடக அகாதமி விருது , 1980
இசைப்பேரறிஞர் விருது , 1984



வெண்கலக் குரலோன் புகழ்பெற்ற பிரபல கர்னாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (Sirkazhi S.Govindarajan) பிறந்த தினம் இன்று (மார்ச்  உ422  உ 2  ). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l நாகை மாவட்டம் சீர்காழியில் (1933) பிறந்தவர். தந்தை நடத்தும் ராமாயண இசை நாடகத் தில் சிறு வயது ராமனாக நடித்து பாடல்கள் பாடி அனைவரையும் கவர்ந்தார் குழந்தையாக இருந்த கோவிந்தராஜன்.
l சீர்காழி வாணிவிலாஸ் பாட சாலையில் பயின்றார். இளம் வயதில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கிட்டப் பாவின் பாடல்களை விரும்பிக் கேட்டு தானும் பாடுவார். தேவி நாடகக் குழு, பாய்ஸ் நாடக கம்பெனியில் இணைந்து நடிப்புத் திறன், இசைத் திறனை வளர்த்துக்கொண்டார்.
l ‘சினிமா உலகம்’ என்ற பத்திரிகையை நடத்திவந்த பி.எஸ்.செட்டியார், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் துணை நடிகராக இவரை சேர்த்துவிட்டார். ஓய்வு நேரத்தில் இவர் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும், இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று வாழ்த்தினார்கள்.
l பி.எஸ்.செட்டியார் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். 1949-ல் இசைமாமணி பட்டம், 1951-ல் சங்கீத வித்வான் பட்டம் பெற்றார். சிறந்த புல்லாங்குழல் கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடம் பயிற்சி பெற்று இசைத் திறனை வளர்த்துக்கொண்டார்.
l கச்சேரிகளுக்கு இவரையும் உடன் அழைத்துச் செல்லும் சுவாமிநாத பிள்ளை, இவரை தன் மகன் என்றே மற்றவர்களிடம் அறிமுகம் செய்வாராம். கடும் உழைப்பாளியான சீர்காழி, அயராத சாதகம் மூலம் இசை உலகில் நிலைத்த இடம் பெற்றார். சென்னை மியூசிக் அகாடமியில் 1951-ல் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.
l 1953-ல் பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் ‘சிரிப்புத்தான் வருதையா’ என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதற்கு முன்னரே ஔவையார் திரைப்படத்துக்காக ‘ஆத்திச்சூடி’ பாடியிருந்தார்.
l ‘பட்டணந்தான் போகலாமடி’, ‘அமுதும் தேனும் எதற்கு’, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’, ‘கண்ணன் வந்தான்’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, ‘தேவன் கோவில் மணியோசை’ போன்ற பாடல்கள் இவருக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுத் தந்தன. ஏராளமான பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.
l சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்ம உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1983-ல் சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. சென்னை தமிழ் இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.
l இசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்களையே பாடியவர். இலங்கை, லண்டன், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
l 30 ஆண்டுகளுக்கு மேல் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் மாரடைப்பால் (1988) காலமானார்.

திரைப்படத் தொகுப்பாளர் கிஷோர் பிறந்த தினம் மார்ச் 24 1978 -



திரைப்படத் தொகுப்பாளர் கிஷோர் பிறந்த  தினம் மார்ச் 24 1978 -

கிஷோர் ( Kishore Te , 24 மார்ச் 1978 - 6 மார்ச் 2015) தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் .] தமிழ், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றியவர். ஆடுகளம் தமிழ்த் திரைப்படத்துக்காக இவருக்கு 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது.

பணி

தன் 21 ஆம் வயதில் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், வி. டி. விஜயனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 70 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு இந்தித் திரைப்படங்களில் உதவிப் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.

இறப்பு

வெற்றிமாறனின் படத்தைத் தொகுத்துக்கொண்டிருக்கையில் மயங்கிவிழுந்த கிஷோரின் மருத்துவ ஆய்வில் மூளை உறைகட்டியிருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றி 6 மார்ச் 2015 ல் உயிரிழந்தார்.

தொகுத்த திரைப்படங்கள்

ஆண்டு படம் விருது
2009 ஈரம்
2010 ஆனந்தபுரத்து வீடு
2011 ஆடுகளம் தேசிய விருது
2011 பயணம்
2011 ஆடு புலி
2011 மாப்பிள்ளை
2011 உதயன்
2011 காஞ்சனா
2011 180
2011 எங்கேயும் எப்போதும்
2012 தோனி
2012 ஆரோகணம்
2012 அம்மாவின் கைப்பேசி
2013 பரதேசி
2013 எதிர் நீச்சல்
2013 உதயம் என்.எச்4
2013 மதயானைக் கூட்டம்
2014 வெற்றிச் செல்வன்
2014 நெடுஞ்சாலை
2014 புலிவால்
2014 வானவராயன் வல்லவராயன்
2014 உன் சமையலறையில்
2015 காஞ்சனா 2
2015 காக்கா முட்டை
2015 விசாரணை

பாடகர் டி. எம். சௌந்தரராஜன் பிறந்த தினம் மார்ச் 24 , 1923 .



பாடகர் டி. எம். சௌந்தரராஜன் பிறந்த தினம் மார்ச் 24 , 1923 .


டி. எம். சௌந்தரராஜன் ( மார்ச் 24 , 1923 - மே 25 , 2013 ) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2003இல் பத்மசிறீ விருதைப் பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார்.

வாழ்க்கைச் சுருக்கம்

சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் தொ. அ. மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். சௌந்தரராஜன் 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன்
காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது
கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி , தேவகி , சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.

சிறப்புகள்

இவர் சிவாஜி , எம்.ஜி.ஆர் , ஜெமினி ,
ஜெய்சங்கர் , ரவிச்சந்திரன் ,
முத்துராமன்,எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்னில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர் வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார்.
2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும்.



நடிகராக

1962 ஆம் ஆண்டு வெளியான பட்டினத்தார் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக இவர் நடித்துள்ளார். அருணகிரிநாதர் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து, முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடல் குறிப்பிடத்தக்க புகழடைந்தது.

செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள்

மாசிலா நிலவே நம் ( அம்பிகாபதி 1957 )
வசந்த முல்லை ( சாரங்கதாரா 1958 )
மோஹன புன்னகை ( வணங்காமுடி 1957 )
ஒன்றா இரண்டா ( செல்வம் 1966 )
ஏரிக்கரையின் மேலே ( முதலாளி 1957 )
மணப்பாறை மாடுகட்டி ( மக்களை பெற்ற மகராசி 1957 )
யாரடி நீ மோகினி ( உத்தம புத்திரன் 1958 )
சித்திரம் பேசுதடி ( சபாஷ் மீனா 1959)
உள்ளதை சொல்வேன் ( படிக்காத மேதை 1960 )
நினைச்சது ஒண்ணு ( தை பிறந்தால் வழி பிறக்கும் 1958 )
இசை கேட்டால் ( தவப் புதல்வன் 1972 )
நான் பெற்ற செல்வம் ( தவப் புதல்வன் 1972 )
நினைத்து நினைத்து ( சதாரம் 1956 )
முத்தைத்தரு ( அருணகிரிநாதர் 1964 )↑
பாட்டும் நானே ( திருவிளையாடல் 1965 )
சிந்தனை செய் மனமே ( அம்பிகாபதி 1957 )
சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் 1964 )
முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப் பதுமை 1958 )
டிங்கிரி டிங்காலே ( அன்பு எங்கே )
முத்துக் குளிக்க வாரிங்களா ( அனுபவி ராஜா அனுபவி )
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் ( என் கடமை )
கை விரலில் பிறந்தது நாதம் ( கல்லும் கனியாகும் )
என்னருமை காதலிக்கு ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் )
வெண்ணிலா வானில் ( மன்னிப்பு )
வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
மயங்கிவிட்டேன் ( அன்னமிட்டகை )
கொடி அசைந்ததும் ( பார்த்தால் பசி தீரும் )
மெல்ல மெல்ல அருகில் ( சாரதா )
குயிலாக நான் ( செல்வமகள் )
மனம் ஒரு குரங்கு ( செல்வமகள் )
ஒளிமயமான எதிர்காலம் ( பச்சை விளக்கு )
பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
மலர்களைப் போல் தங்கை ( பாசமலர் )
முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும் வரை )
கல்லெல்லாம் மாணிக்க ( ஆலயமணி )
ஞாயிறு என்பது ( காக்கும் கரங்கள் )
எத்தனை காலம்தான் ( மலைக்கள்ளன் )
திருடாதே பாப்பா ( திருடாதே )
காசேதான் கடவுளப்பா ( சக்கரம் )
தூங்கதே தம்பி ( நாடோடிமன்னன் )
ஒரு பக்கம் பார்க்கிறா ( மாட்டுக்கார வேலன் )
ஓடி ஓடி உழைக்கணும் ( நல்ல நேரம் )
மெல்லப்போ மெல்லப்போ ( காவல்காரன் )
கண்ணுக்கு தெரியலயா ( அதே கண்கள் )
அடி என்னடி ராக்கம்மா ( பட்டிக்காடா பட்டணமா )
அம்மாடி பொண்ணுக்கு ( ராமன் எத்தனை ராமனடி )
அடுத்தாத்து அம்புஜத்தை ( எதிர் நீச்சல் )
பூ மாலையில் ( ஊட்டி வரை உறவு )
நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )
அஹா மெல்ல நட ( புதிய பறவை )
அன்புள்ள மான் விழியே ( குழந்தையும் தெய்வமும் )
யார் அந்த நிலவு ( சாந்தி )
சிவப்புக்கல்லு மூக்குத்தி ( எல்லோரும் நல்லவரே )
பொன்மகள் வந்தாள் ( சொர்கம் )
என்ன வேகம் நில்லு பாமா ( குழந்தையும் தெய்வமும் )
உன்னை அறிந்தால் ( வேட்டைக்காரன் )
சத்தியம் இது ( வேட்டைக்காரன் )
சத்தியமே ( நீலமலைத் திருடன் )
நிலவைப்பார்த்து வானம் ( சவாளே சமாளி )
எங்கே நிம்மதி ( புதிய பறவை )
தரைமேல் பிறக்க வைத்தான் ( படகோட்டி )
சோதனை மேல் சோதனை ( தங்கப் பதக்கம் )
நண்டு ஊறுது ( பைரவி )
அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )
ஓராயிரம் பார்வையிலே ( வல்லவனுக்கு வல்லவன் )
உலகத்தின் கதவுகள் ( இரவும் பகலும் )
எங்கே அவள் ( குமரிக் கோட்டம் )
ஒரு தரம் ( குமரிக் கோட்டம் )
யாரை நம்பி ( எங்க ஊரு ராஜா )
அங்கே சிரிப்பவர்கள் ( ரிக்சாகாரன் )
மனிதன் நினைப்பதுண்டு ( அவன்தான் மனிதன் )
ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை )
உலகம் பிறந்தது எனக்காக ( பாசம் )
அதோ அந்த பறவை போல ( ஆயிரத்தில் ஒருவன் )
அன்று வந்ததும் அதே நிலா ( பெரிய இடத்துப் பெண் )
ஒரு ராஜா ராணியிடம் ( சிவந்த மண் )
முத்தமோ மோகமோ ( பறக்கும் பாவை )
மல்லிகை முல்லை ( அண்ணன் ஒரு கோவில் )
நான் பாடும் பாடல் ( நான் ஏன் பிறந்தேன் )
மலர் கொடுத்தேன் ( திரிசூலம் )
கட்டித்தங்கம் ( தாயைக் காத்த தனையன் )
அந்தப் புறத்தில் ஒரு மஹராணி ( தீபம் )
நீயும் நானும் ( கெளரவம் )
தெய்வமே ( தெய்வ மகன் )
யாருக்காக ( வசந்த மாளிகை )
நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டுப் பிள்ளை )
பூமழைத் தூவி ( நினைத்ததை முடிப்பவன் )
வடிவேலன் மனசு ( தாயில்லாமல் நானில்லை )

பெற்ற விருதுகள்

பத்மசிறீ
கலைமாமணி விருது

மறைவு

இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25-ம் தேதி மாலை 3.50 மணிக்கு அவர்
சென்னையில் காலமானார்.



தெய்வப் பாடகர் ‘டி.எம்.எஸ்’ அவர்களின் பிறந்த தினம் தெய்வப் பாடகர் ‘டி.எம்.எஸ்’ அவர்களின் பிறந்த தினம் இன்றாகும்.
‘டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்தர், நாகேஷ், என்.டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா, ஜக்கையா போன்றோருக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர். பின்னணித் துறையில், ‘டி.எம்.எஸ்’ மற்றும் ‘பி.சுசீலா’ அவர்களது ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு திரைப்பாடல்களைப் பாடியுள்ளனர். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, பல பக்திப் பாடல்களையும் பாடிய டாக்டர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: மார்ச் 24, 1922
பிறந்த இடம்: மதுரை, தமிழ்நாடு, பிரிட்டிஷ் இந்தியா
தொழில்: பாடகர், நடிகர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், தமிழ்நாட்டில் மதுரையில், மார்ச் 24 ஆம் தேதி, 1922 ஆம் ஆண்டில், மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாக ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரது மூத்த சகோதரர், வேத நூல்களைக் கற்று அறிஞராகத் திகழ்ந்தவர்.
ஆரம்ப கால வாழ்க்கை
தன்னுடைய ஏழு வயதில் இருந்தே, தனது குரல்வளத்தின் மீது அக்கறைக் காட்டத் தொடங்கிய அவர், மதுரையிலுள்ள சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியராக இருந்த சின்னகொண்டா சாரங்கபாணி பாகவதர் என்பவரிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். பின்னர், காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக, இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்ற அவர், தனது 21வது வயதிலிருந்து தனியாக கச்சேரிகளில் பாடி வந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரிகளில் பாடிய அவரை, சுந்தரராவ் நட்கர்னி என்ற இயக்குனர் கவனித்தார். ஆகவே, அவரது அடுத்த படமான ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். இந்தப் படம், 1946ல் எடுக்கப்பட்டிருந்தாலும், 1950ல் தான் வெளியானது. இதில், டி.எம்.எஸ். அவர்கள் ஐந்து பாடல்கள் பாடியுள்ளார். இதுவே அவர் திரையுலகில் நுழைவதற்கான ஒரு வழியை வகுத்தது.
திரையுலக வாழ்க்கை
1950ல் வெளியான ‘கிருஷ்ண விஜயம்’ படத்தைத் தொடர்ந்து, அதே ஆண்டில் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், ‘மந்திரி குமாரி’ என்ற படத்தில், ‘அன்னமிட்ட வீட்டிலே’ என்ற பாடலைப் பாடினார். பிறகு ‘தேவகி’, ‘சர்வாதிகாரி’ போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. 1951ல் வெளியான ‘தேவகி’ என்ற படத்தில் வந்த ‘தீராத துயராலே’ என்ற பாடலைப் பாடி, நடிக்கவும் செய்திருந்தார். 1952ல், ‘வளையாபதி என்னும் படத்தில், ஜமுனா ராணியுடன் இணைந்து இரண்டு பாடல்களைப் பாடினார். இதற்குப் பின், சில ஆண்டுகள் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருந்ததால், கே.வி. மகாதேவனுடன் இணைந்து பக்திப் பாடல்கள் பாடினார். 1955ல் வெளியான ‘செல்லபிள்ளை’ என்ற திரைப்படத்தில், ஆர். சுதர்சனம் அவர்களின் படைப்பான இரண்டு டூயட் பாடல்களை, எம்.எஸ். ராஜேஸ்வரியுடன் சேர்ந்து பாடினார்.
இதற்கிடையில், சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பின்னணிப் பாடிய சி.எஸ். ஜெயராமனுக்கு பதிலாக, டி.எம்.எஸ் அவர்களைப் பாட வைக்கும் நோக்கமாக மருதகாசி அவர்கள், அவரை இசையமைப்பாளார் ஜி. ராமநாதன் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘சிவாஜி கணேசன் அவர்களுடைய குரலுக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்துமா?’ என்று ஐயம் கொண்டார், இசையமைப்பாளார். ஆகவே, சிவாஜிக்கு, டி.எம்.எஸ்சை அறிமுகம் செய்து வைத்தார். ஒரிரண்டு சந்திப்புகளிலேயே, அவரது குரலைப் படித்த அவருக்கு, ‘சுந்தரி சௌந்தரி’ மற்றும் ‘ஏறாத மலைதனிலே’ என்ற பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் குரலைப் போலவே, அவர் பாடியதால், மிகவம் மகிழ்ச்சி அடைந்த ஜி. ராமநாதன், அப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாட வாய்ப்பு வழங்கினார். மேலும், அப்படத்தின் எல்லா பாடல்களும் வெற்றிப் பெற்று, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், டி.எம்.எஸ் அவர்கள் மிகவும் பிரபலமானார். பின்னர், ஆர். ஆர். பிலிம்ஸ் தயாரிப்பான ‘கூண்டுக்கிளி’ என்ற படத்தில், ‘கொஞ்சும் கிளியானப் பெண்ணை’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பைக் கைப்பற்றினார், டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ராமசந்திரன் அவர்கள், அவரது குரல் வளத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவரது அடுத்த படமான ‘மலைக்கள்ளன்’ என்ற திரைப்படத்தில், தஞ்சை ராமையா தாஸ் எழுதிய ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். இந்தக் காலக்கட்டங்களில், இவருக்கு ‘வேடன் கண்ணப்பா’, ‘ரிஷி ஸ்ரிங்கார்’, ‘நீள மலைத் திருடன்’ போன்ற பாடங்களில் பாட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தது. பின்னர், ‘குமுதம்’ என்ற படத்தில், எம்.ஆர்.ராதா அவர்களின் குரலைப் பின்பற்றும் விதமாக, ‘சரக்கு இருந்தா அவுத்து விடு’ என்ற பாடலை, அவரைப் போலவே பாடி அனைவரின் மனத்தையும் கவர்ந்தார். 1955 ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிவாஜி அவர்களின் வற்புறுத்தலின் பேரில், அவருக்குப் பின்னணிப் பாடினார். 1977 ஆம் ஆண்டு வரை, எம்.ஜி.ஆரின் மறைவு வரை, மற்றும் 1995 வரை சிவாஜியின் மறைவு வரை அவர்கள் இருவருக்கும், அவரே பின்னணிப் பாடி வந்தார். 1950 களில் இருந்து 1980 வரை, தமிழ்த் திரையுலகின் பின்னணித் துறையில், முடிசூடாமன்னனாகத் திகழ்ந்தார்.
விருதுகளும், அங்கீகாரங்களும்
11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2500 பக்திப் பாடல்களையும் பாடி, பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து, பல பாடல்களுக்கு இசையமைத்து, ‘பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்’, ‘கல்லும் கனியாகும்’ & ‘கவிராஜ காலமேகம்’ போன்ற சில தமிழ்ப் படங்களில் நடித்த டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பெற்ற விருதுகளும், அங்கீகாரங்களும் எண்ணிலடங்காதவை.
அவருக்குக் கிடைத்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்களில் சில
2012 – ‘கைராலி ஸ்வராலயா யேசுதாஸ் விருது’
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி விருது’ பெற்றார்.
“பாரத் கலாச்சார் ” விருது
“சவுராஷ்டிரா சமூக அங்கீகாரம்” விருது
வாழ்நாள் சாதனையாளர் எம்.ஜி. ஆர் நினைவு விருது
வாழ்நாள் சாதனையாளர் சிவாஜி நினைவு விருது
‘பாடகர் திலகம்’, சிங்கக் குரலோன்’, ‘இசை சக்கரவர்த்தி’, இசைக்கடல்’, ‘எழிலிசை மன்னர்’, ‘குரலரசர்’, ‘டாக்டர்’ பட்டம் போன்ற பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார்.
1964 – “அறிஞர் அண்ணாத்வாரியா அங்கீகாரம்” பெற்றார்.
மலேசிய, சிங்கப்பூர், பிரஞ்சு, ஐக்கிய ராஜ்யம், கனடா, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், மற்றும் பெர்த்தில் வாழும் தமிழ் ரசிகர்களின் அங்கீகாரத்தையும் பல முறைப் பெற்றுள்ளார்.
மறைந்த பிரதமர் திருமதி. இந்திரா காந்தி மற்றும் மொரார்ஜி தேசாய் அவர்களிடமிருந்து தனிப்பட்ட பாராட்டுப் பெற்றார்.
இந்திய ஜனாதிபதிகளான டாக்டர் சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன், வி.வி.கிரி, ஆர் வெங்கட்ராமன், மற்றும் ஜெயில் சிங் போன்றோரிடமிருந்தும் தனிப்பட்ட பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், தனது 24வது வயதிலேயே, அதாவது மார்ச் 28 ஆம் தேதி, 1946 ஆம் ஆண்டில், சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மாகங்களும், மூன்று மகள்களும் உள்ளனர். தற்போது, அவர் தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள மந்தவளிப்பாக்கத்தில் வாழ்கிறார்.
மிகப் பிரபலமானப் பாடல்களில் சில
‘வசந்த முல்லை’ – சாரங்கதாரா
‘யாரடி நீ மோகினி’ – உத்தம புத்திரன்
‘முத்தைத்தரு’ – அருணகிரிநாதர்
‘பாட்டும் நானே’ – திருவிளையாடல்
‘வாழ நினைத்தால்’ – பலே பாண்டியா
‘கொடி அசைந்ததும்’ – பார்த்தால் பசி தீரும்
‘ஒளிமயமான எதிர்காலம்’ – பச்சை விளக்கு
‘மலர்களைப் போல் தங்கை’ – பாசமலர்
‘எத்தனை காலம்தான்’ – மலைக்கள்ளன்
‘திருடாதே பாப்பா’ – திருடாதே
‘காசேதான் கடவுளப்பா’ – சக்கரம்
‘தூங்கதே தம்பி’ – நாடோடிமன்னன்
‘பூ மாலையில்’ – ஊட்டி வரை உறவு
‘பொன்மகள் வந்தாள்’ – சொர்கம்
‘நிலவைப்பார்த்து வானம்’ – சவாளே சமாளி
‘எங்கே நிம்மதி’ – புதிய பறவை
‘அங்கே சிரிப்பவர்கள்’ – ரிக்சாகாரன்
‘ஏன் பிறந்தாய் மகனே’ – பாகப்பிரிவினை
‘உலகம் பிறந்தது எனக்காக’ – பாசம்
‘அதோ அந்த பறவை போல’ – ஆயிரத்தில் ஒருவன்
‘அன்று வந்ததும் அதே நிலா’ – பெரிய இடத்துப் பெண்
‘ஒரு ராஜா ராணியிடம்’ – சிவந்த மண்
‘மலர் கொடுத்தேன்’ – திரிசூலம்
‘தெய்வமே’ – தெய்வ மகன்
‘யாருக்காக’ – வசந்த மாளிகை
‘நான் ஆணையிட்டால்’ – எங்க வீட்டுப் பிள்ளை
காலவரிசை
1922: மதுரையில், மார்ச் 24 ஆம் தேதி ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.
1946: தனது 24வது வயதிலேயே, அதாவது மார்ச் 28 ஆம் தேதி, சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1946: ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தமானார்.
1952: ‘வளையாபதி என்னும் படத்தில், ஜமுனா ராணியுடன் இணைந்து இரண்டு பாடல்களைப் பாடினார்.
1955: 1955ல், வெளியான ‘செல்லபிள்ளை’ என்ற திரைப்படத்தில், எம்.எஸ். ராஜேஸ்வரியுடன் சேர்ந்து இரண்டு டூயட் பாடல்களைப் பாடினார்.
1977: 1977 ஆம் ஆண்டு வரை, எம்.ஜி.ஆரின் மறைவு வரை அவருக்குப் பின்னணிப் பாடினார்.
1995: 1995 வரை சிவாஜியின் மறைவு வரை அவருக்குப் பின்னணிப் பாடி வந்தார்.
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.

புதன், 22 மார்ச், 2017

நடிகர் பி. வி. நரசிம்ம பாரதி பிறந்த தினம் மார்ச் 23, 1924 -





நடிகர் பி. வி. நரசிம்ம பாரதி பிறந்த தினம் மார்ச் 23, 1924 -

பி. வி. நரசிம்ம பாரதி (மார்ச் 23, 1924 - 11 மே 1978) சௌராட்டிர சமூகத்திலிருந்து நடிப்புத்துறைக்கு வந்த கலைஞர். 1947-இல் கன்னிகா திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமாகி 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தனது நண்பரான பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜனுக்கு தான் நடித்த படங்களில் பின்னணி பாட, இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடுவிடம் பரிந்துரை செய்து வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
மதுரையைச் சேர்ந்த நரசிம்ம பாரதி சிறு வயதிலேயே நடிப்புத் திறமையைக் கொண்டிருந்தார். சிறு வயதிலேயே சௌராட்டிர சபையில் சேர்ந்து அவர்கள் நடத்தி வந்த நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது அவருக்கு பாரதி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.  பின்னர் வெள்ளியங்குன்றம் ஜமீந்தார் ஆரம்பித்த பாய்ஸ் கம்பனியின் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்தார். இதன் பின்னர் புளியமாநகர் பி. எஸ். சுப்பா ரெட்டியாரின் கம்பனியில் சேர்ந்து மலாயா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். உலகப் போர் ஆரம்பித்த போது மலேயாவில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்ட கடைசிக் கப்பலில் நரசிம்ம பாரதியும் சேர்ந்து இந்தியா வந்து சேர்ந்தார்.

திரைப்படங்களில் நடிப்பு

இந்தியா திரும்பிய பின்னர் பக்த மீராவில் (1945) சாது வேடத்தில் நடித்தார். ஜுப்பிட்டர் பிக்சர்சின் ஏ. எஸ். ஏ. சாமி இவருக்குத் தனது படங்களில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார். வால்மீகி திரைப்படத்தில் விட்டுணு, ராமன், வேடன் ஆகிய பாத்திரங்களிலும், ஸ்ரீ முருகனில் (1946) விட்டுணுவாகவும், கஞ்சன் படத்தில் குமாரசாமியாகவும், கன்னிகா (1947) படத்தில் நாரதராகவும் நடித்தார். இதன் பின்னர் நடித்த அபிமன்யுவில் (1948) கிருஷ்ணனாக நடித்தும் புகழ் பெற்றார்.  கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்திலும் கிருஷ்ணனாக நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம்
1947 கன்னிகா
1948 அபிமன்யு
1950 கிருஷ்ண விஜயம்
1950 திகம்பர சாமியார்
1950 பொன்முடி
1952 என் தங்கை
1952 மாப்பிள்ளை
1952 சின்னத்துரை
1953 மதன மோகினி
1953 முயற்சி
1953 திரும்பிப்பார்
1954 புதுயுகம்
1956 குடும்பவிளக்கு
1958 சம்பூர்ண ராமாயணம்
1960 நான் கண்ட சொர்க்கம்
1960 தோழன்.



சிவாஜி எனும் மாபெரும் கலைஞனைத் தந்த படம் ‘பாரசக்தி’ (1952). அந்தப் படத்தை விஞ்சும் முயற்சியாக அடுத்த வருடமே கலைஞர்-சிவாஜி கூட்டணியில் வெளியான மற்றொரு திராவிட சினிமா ‘திரும்பிப்பார்’(1953). புராணக் கதையான ‘அகலிகை’யைத் தழுவி, அதைச் சமகாலத்தின் சமூக, அரசியல் நையாண்டிக் கதையாக்கினார் கலைஞர். ‘பராசக்தி’யில் கதையின் நாயகனாக நடித்த சிவாஜி, ‘திரும்பிப்பார்’ படத்தில் வில்லனாக நடித்தார்.
வில்லன் என்றால் மிக மோசமான, முழுமையான வில்லன். பெண் பித்தர் கதாபாத்திரம். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சிவாஜியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ஒருவர். அவர் அந்தப் படத்தின் கதாநாயகன் பி.வி. நரசிம்ம பாரதி. நாயகன் என்றால் ‘பொன்முடி’, ‘என் தங்கை’, ‘மாப்பிள்ளை’, ‘ மதன மோகினி’ என வரிசையாக வெற்றிகளைக் கொடுத்துவந்த நாயகன். மார்டன் தியேட்டர் அதிபர் டி.ஆர். சுந்தரத்துக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். எல்லீஸ் ஆர். டங்கன் விரும்பித் தேர்ந்தெடுத்த ஹீரோ.
நானொரு சிங்கம்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘எதிர்பாராத முத்தம்’ குறுங்காவியத்தை நாடகமாக நடத்திக்கொண்டிருந்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். பாரதிதாசனுடன் நல்ல நட்புகொண்டிருந்த மார்டன் தியேட்டர் சுந்தரம் அதைப் படமாகத் தயாரிக்க விரும்பினார். பாரதிதாசனே கதை, வசனம் எழுதிக் கொடுத்தாலும் கதைக்கு மட்டும் பெயர் போட்டால் போதும் என்று கூறிவிட்டார். இயக்குநராக எல்லீஸ் ஆர். டங்கனை அமர்த்தினார் சுந்தரம். திரைக்கதையைப் படித்த டங்கன், தனக்கு அழகான கதாநாயகன் தேவை என்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.வி. நரசிம்மபாரதி உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான நடிகர்களை ஸ்டூடியோவில் திரட்டி வரிசையாக நிற்கவைத்தார் சுந்தரம். டங்கன் ஒவ்வொருவரையும் கூர்ந்து நோட்டமிட்டபடியே நரசிம்ம பாரதியின் அருகில் வந்து நின்றார். நரசிம்ம பாரதியைப் பார்த்து “யார் நீ?” என்றார் ஆங்கிலத்தில். அதற்கு “நானொரு சிங்கம்” என்று கம்பீரமாக ஆங்கிலத்தில் பதில் சொன்னார் நரசிம்ம பாரதி. “சிங்கத்தால் காதல் வசனம் பேச முடியுமா?” என்று டங்கன் கேட்க, “காதல் வசனம் பேசும்போது நான் ஜோடியைப் பிரியாத பொன்மான்” என்றார் நரசிம்ம பாரதி. “இவர்தான் என் ஹீரோ” என்றார் டங்கன்.
‘பொன்முடி’யின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. சேலம் மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில் வண்டி வண்டியாக மணலைக் கொட்டி பிரம்மாண்ட கடற்கரை செட்டை உருவாக்கினார் தயாரிப்பாளர் சுந்தரம். அதில் நாயகன் நரசிம்ம பாரதி, நாயகி மாதூரி தேவி இருவரும் மணலில் ஓய்வாகப் படுத்திருந்தபடியே டூயட் பாடி காதல் செய்யும் பாடல் காட்சியை நெருக்கமாகப் படமாக்கினார் டங்கன். படம் வெளியாகி பெரும் பரபரப்பையும் பதைபதைப்பையும் உருவாக்கியது. “ஒரு வெள்ளைக்கார இயக்குநர், மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ளதுபோல காதல் காட்சிகளைப் படமாக்கி தமிழ்க் கலாச்சாரத்தைக் கெடுக்கிறார்” என்று கண்டனக் குரல்கள் எழுந்தன. பல பத்திரிகைகள் காதலர்களின் நெருக்கத்தைப் படமாக்கிய விதம் ‘அபசாரம்’ எனக் கண்டித்தன. ஆனால் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. “நரசிம்ம பாரதியும் மாதூரி தேவியும் நிஜக் காதலர்கள் போலவே நடித்திருக்கிறார்கள்” என்ற பாராட்டு மழையும் கண்டனத்துக்கு நடுவே கொட்டியது. நரசிம்ம பாரதி மாதுரிதேவியை இணைத்துக் கிசுகிசுக்களும் கிளம்பின. படத்தின் நாயகன் நரசிம்ம பாரதி பெண்கள் விரும்பும் நடிகராக மாறினார்.
நடிகர் திலகத்துடன் மட்டுமல்ல எம்.ஜி.ஆர்., கலைஞர், என்.டி.ராமாராவ் ஆகிய மூன்று முதல்வர்களோடும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரோடும், மாதுரிதேவி, ஜமுனா, பண்டரிபாய் போன்ற அன்றைய முன்னணிக் கதாநாயகிகளுடன் நடித்துப் புகழ்பெற்ற நரசிம்ம பாரதி மதுரையின் மைந்தர். 9 படங்களில் கதாநாயகனாகவும் 15 படங்களில் இணை, துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தாலும் மறக்கப்பட்ட நடிகர்களில் ஒருவர்.
பெயருடன் ஒட்டிக்கொண்ட பாரதி
பட்டுநெசவு செய்யும் ஏழை சௌராஷ்ட்ரா குடும்பத்தில் வெங்கடாஜலபதி ஐயர் - பாக்கியலட்சுமி தம்பதிக்கு 24 - 03 1923-ல் பிறந்தார். அதே நாளில், நரசிம்மன் பிறந்து ஒரு மணிநேரம் கழித்து, பக்கத்து வீட்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் தமிழ்த் திரையிசையில் பிற்காலத்தில் தன் கம்பீரக் குரலால் கோட்டை கட்டிய டி.எம். சௌந்தர்ராஜன். பால்யம் முதலே நரசிம்மனும் சௌந்தர்ராஜனும் நண்பர்கள். மதுரை சௌராஷ்ட்ரா தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 11 வயது நரசிம்மனை வள்ளிக்குன்றம் ஜமீன்தார் ‘பாய்ஸ்’ கம்பெனி நாடகக் குழுவில் சேர்த்துவிட்டார் அவருடைய தந்தையார். நரசிம்மனின் அழகைக் கண்ட ஜமீன்தார் 12 வயது முதல் அவரைச் சிறுமி வேடங்களில் நடிக்கவைத்தார். நரசிம்மனுக்கு ஜமீன்தார் ஓய்வுகொடுக்கும் நாட்களில் மாலை 5 மணிக்கெல்லாம் காணாமல் போய்விடுவார். எங்கே போகிறார் என்று யாருக்கும் தெரியாது. அது மவுனப் படங்கள் வந்துகொண்டிருந்த காலம். மதுரை தெற்குமாசி வீதியில் திருமலை நாயக்கர் மன்னரின் இசை மன்றமாக இருந்து பள்ளிக்கூடமாக மாறிய ‘நவபத் கானா’ மண்டபத்தை அடுத்து அமைக்கப்பட்டிருந்த ‘டெண்டு கொட்டகையில்’ மவுனப் படங்கள் திரையிடப்பட்டு வந்தன. என்றாலும் நாடகங்களுக்குத்தான் மவுசு.
பாய்ஸ் கம்பெனி அப்போது ‘பதி பக்தி’ என்ற சௌராஷ்ட்ரா நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தது. சரஸ்வதியாக நடித்தவர் கடும் காய்ச்சல் கண்டு படுத்துவிட்டார். அப்போது கொஞ்சமும் யோசிக்காமல் நரசிம்மனைக் கூப்பிட்டார் ஜமீன்தார். ஆனால் ஆளைக் காணோம். நரசிம்மனை அழைத்துவரக் கணக்குப் பிள்ளை மிதி வண்டியில் பறந்தார். வீட்டிலும் ஆள் இல்லை. தெருவில் விளையாடிக்கொண்டிருந்த டி.எம். சௌந்தர்ராஜனிடம் “உன் சினேகிதன் எங்கே?” என்று கணக்குப் பிள்ளை கேட்க, யோசிக்காமல் “டெண்டு கொட்டாய்” என்று சௌராஷ்ட்ர மொழியில் பதிலளித்தார் சிறுவனாக இருந்த சௌந்தர்ராஜன். நிம்மதிப் பெருமூச்சுடன் டிக்கெட் வாங்கிக்கொண்டு கொட்டகைக்குள் நுழைந்த கணக்குப் பிள்ளைக்கு நரசிம்மனின் பிசிறில்லாத பிஞ்சுக்குரல் காதுகளில் வந்து விழுந்தது. அங்கே திரையில் ஓடிக்கொண்டிருந்த மவுனப் படத்தின் காட்சிகளுக்கு வர்ணனை செய்துகொண்டிருந்தார் நரசிம்மன்.
கணக்குப் பிள்ளை ஆச்சரியப்பட்டுப்போனார்! நாடகத்தில் வேஷம் கட்டாத நாட்களில் நரசிம்மனுக்கு விரும்பமான வேலை மவுனப் படங்களுக்கு வர்ணனை செய்து இரண்டனா சம்பாதிப்பதுதான். வாத்தியார் அழைக்கிறார் என்றதும் பதறியடித்து ஓடிவந்த நரசிம்மனை, அன்றைய நாடகத்தில் சரஸ்வதி வேடம் போடச் சொன்னார். வாத்தியாரின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? சரஸ்வதியாக (பாரதி) வேடம் போட்டு நரசிம்மன் நடித்ததைப் பார்த்த ஊரின் தலைக்கட்டுகளும் தனவந்தர்களும் “சரஸ்வதியின் வேடத்தில் சிறப்பாக நடித்த நரசிம்மனுக்கு ‘பாரதி’ என்ற பட்டத்தை அதே மேடையில் கொடுத்தார்கள். அன்றுமுதல் பி. வி. நரசிம்மன், நரசிம்ம பாரதியானார்.
திரையுலகுக்கு டி.எம். சௌந்தர்ராஜனை அறிமுகப்படுத்திய நரசிம்ம பாரதி, என்.டி. ராமராவுக்கே ஒருகட்டத்தில் போட்டியாக மாறினார

பாடகர் விஜய் யேசுதாஸ் பிறந்த நாள் மார்ச் 23, 1979.



பாடகர் விஜய் யேசுதாஸ் பிறந்த நாள் மார்ச் 23, 1979.

விஜய் யேசுதாஸ் கட்டசேரி ( மலையாளம் : വിജയ് യേശുദാസ്, ஆங்கிலம் : Vijay Yesudas )(பிறப்பு மார்ச் 23, 1979) தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியுள்ள ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ் ,
மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் மற்றும்
துளு மொழிகளில் பாடியுள்ளார்.
தனிவாழ்வு
விஜய் யேசுதாஸ் புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பிரபாவிற்கு இரண்டாவது மகனாக சென்னையில் மார்ச் 23,1979 அன்று பிறந்தார். சனவரி 21, 2007 அன்று தமது நீண்டநாள் நண்பர் தர்சனாவை
திருவனந்தபுரத்தில் திருமணம் செய்தார். இருவருக்கும் அம்மெயா என்ற மகள் உள்ளனர்.

ஒரு பேட்டியில்....

சிறுவயசுல எப்படி இருந்தீங்க?
இப்படியேதான். இவ்வளவு உயரம் இல்லை. இவ்வளவு சைஸ் இல்லை. இப்ப எப்படி ஜாலியா இருக்கேனோ அது மாதிரிதான் அப்பவும் இருந்தேன்.
திரைத்துறையில் வாரிசுகளுடைய வருகை அதிகமாயிருக்கு. இதை எப்படி பாக்குறீங்க?
இருக்கலாம். ஆனா அதை விட செகண்ட் ஜெனரேஷனை சேர்ந்தவங்க, டோட்டலி ஃப்ரெஷர்ஸ் நிறைய வந்திருக்காங்க. உண்மை என்னனா எங்களை மாதிரி ஆட்களுக்குத்தான் இன்னும் கஷ்டம். என்னோட அப்பா வந்து எனக்கு இன்ட்ரடக்ஷன் கொடுத்து இந்த இன்டஸ்ட்ரிக்குள்ள வரல. என்னைத் தேடி வந்த வாய்ப்புகள சரியா பயன்படுத்திட்டுத்தான் வந்திருக்கேன்.
உங்களோட ஃப்ர்ஸ்ட் ரெக்கார்டிங் பத்தி சொல்லுங்கள். .
என்னோட ஃபர்ஸ்ட் ரெக்கார்டிங் வித்யா சாகர் மியூசிக்ல ஒரு மலையாளப் பாட்டு. தமிழ்ல ஃப்ர்ஸ்ட் ரெக்காடிங் தேவா சார்கிட்டதான். ஃப்ர்ஸ்ட் ரிலீஸ்னு பாத்தீங்கன்னா இளையராஜா சார் கிட்ட ஃப்ரண்ட்ஸ் படத்துல 'வானம் பெரிசு'தான் பாட்டு. இது அருண்மொழி, எஸ்.பி.பி, நான் மூணு பேரும் சேர்ந்து பாடிய பாடல். அதுலயே 'ருக்கு ருக்கு ரூபிக்யா'ங்ற பாட்டுதான் ஹிட்டாச்சு.
ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கைல மறக்க முடியாத விஷயம் இருக்கும். உங்களுக்கு மறக்க முடியாத விஷயம்?
ஜனவரி 21. என்னோட ஃப்ர்ஸ்ட் வெடிங் ஆனிவர்ஸரி. அன்னைக்கு என்னோட மலையாளம் சாங்குக்கு ஒரு அவார்டு கிடைச்சது. இது முழுக்க முழுக்க மக்களால இன்டர்நெட் மூலமா ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப் பட்டது. அந்த பாட்டை பாடுனவங்க, இசையமைச்சவங்க, எழுதுனவங்க எல்லாருக்குமே கிடைச்சது. அன்னைக்கு என் மாமனார், மாமியார், அப்பா, அம்மா எல்லாரும் கூட இருந்தாங்க. பொதுவா நேஷனல் அவார்டு, ஸ்டேட் அவார்டு எல்லாம் ஜூரி செலக்ட் பண்ற மாதிரிதான் இருக்கும். அது மோஸ்ட்லி பாப்புலர் சாங்காவும் இருக்காது. ஆனா ஒரு மோஸ்ட் பாப்புலர் சாங்க மக்கள் தேர்ந்தெடுத்தாங்க. அந்த சாங்குக்கு கேரளா ஸ்டேட் அவார்டும் கிடைத்தது. அது பெரிய சந்தோஷம். மறக்க முடியாத விஷயம்.
முறைப்படி கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டீங்களா? இல்ல அப்பாகிட்ட இருந்து வந்ததா?
அப்பாகிட்ட இருந்து வந்ததானு தெரியாது. ஆனா இப்பதான் முறைப்படி கத்துக்கிட்டிருக்கேன். கத்துக்கிட்டாதான் இம்ப்ரூவ் பண்ண முடியும். நமக்கு ஒரு டைமண்ட் கிடைச்ச பிறகு அத இன்னும் பட்டை தீட்டுற மாதிரிதான்.
உங்களுக்கு பிடிச்ச ராகம் எது?
கீரவாணி, தோடி, பகாடி.
உங்களைக் கவர்ந்த பாடகர்கள் யார்?
என்னோட அப்பா, சுஜாதா அக்கா, பி.சுசீலா அம்மா, சமீபமா சங்கர் மகா தேவன் சார். அவரோட ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ் ரியலி அமேஸிங்.
ஏதாவது ஒரு பாட்டு இது நமக்குக் கிடைச்சிருந்தா நல்லா இருக்குமேனு நினைச்சதுண்டா?
அப்டிலாம் கிடையாது. ஒரு குறிப்பிட்ட பாடல்கள பாடணும்னு ஆசைப்பட்டதும் இல்ல. எல்லா சாங்கும் நம்ம பாடினா எப்டி இருக்கும்?னு யோசிப்பேன். அப்டி யோசிச்ச பாட்டுனா வெயில் படத்துல 'உருகுதே மருகுதே' பாடல்தான்.
பிறமொழிப்பாடகர்கள் குறித்து உங்க கருத்து என்ன? மற்ற மொழிகள்ல இருந்து தமிழ் மொழிக்கு பாட வர்றவங்கள பத்தி கேக்குறேன். நீங்களும் இதில் அடக்கம் தானே. .
கண்டிப்பா. அதுல நானு ஒரு ஆளுதான். நான் வளந்தது எல்லாமே சென்னையில தான். நானும் ஒரு அவுட்சைடு சிங்கர் தான். அப்பா நிறைய பாடியிருக்கார். ஸ்ரேயா கோஷல், சோனா நீகம் இவங்கள்லாம் தமிழ்ல பாடும் போது அசிங்கமா பாட மாட்டாங்க. தி மேக் ஸ் பெர்ஃபக்ட். ஈவன்தோ மியூஸிக் டைரக்டர் வொர்க்கிங் வித் தெம். நிறைய இம்ப்ரூவ் பண்ணிதான் பாடுறாங்க. அது மாதிரி எல்லாரும் பண்றாங்க. ஆனா நாம ஹிந்தில பாடும்போது ஏத்துக்க மாட்டாங்க. அதே மாதிரி நாமளும் எஃபர்ட் எடுத்து சவுத் இன்டியன் அக்சன்ட் இல்லாம பாடுனா அக்சப்ட் பண்ணுவாங்க.
உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
பேசுறதுக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம், கொஞ்சம் ஹிந்தி அவ்ளோதான் தெரியும். பாடுறதுக்கு தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஸ்பானிஷ், ஜெர்மன், ஃப்ரெஞ்ச்.
உங்க அப்பா பாடிய பாடல்கள்ல உங்களுக்குப் பிடிச்சது ?
அது ரொம்ப கஷ்டமான விஷயம். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் பாட்டு பிடிக்கும்.
ஆங்கில வார்த்தைகளில் கலப்போடு பாடுவதை எப்படி உணருகிறீர்கள் ?
அது நல்லபடியா வந்தா சரிதான். ஒரு நல்ல ஆங்கிலப் பாடல் சவுண்ட் எப்படி இருக்கணுமோ அப்டி இருக்கும் போது நல்லாதான் இருக்கும். ஆனா சில நேரங்கள்ல தேவையில்லாம வந்தா நல்லா இருக்காது. என்னோட 'தாவணி போட்ட தீபாவளி' பாடல்ல கடைசில 'ஆனாலும் நீ ஏஞ்சலு'னு வரும். அப்டி ஒரு வார்த்தைய யூஸ் பண்ணா பரவாயில்ல. ரைமிங்கா நல்லா இருக்கும். சில பாடல்ல இங்கிலீஷ் ஃபுல்லா வரும் போது நல்லா இருக்கும். டிஃபரண்ட் டைப் ஆஃப் சவுண்ட் வரணும்னா அதுமாதிரிதான் இருக்கணும். மோஸ்ட்லி எவிரிபடி கரெக்ட்டா பண்றாங்க. யுவன், மணிசர்மா, ஸ்ரீகாந்த் தேவா, பிரேம்ஜி, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாருமே நல்லா பண்றாங்க. வலுக்கட்டாயமா வராம இயல்பா வந்தா பரவாயில்லை.
உங்களை மூத்த பாடகர்கள் யாராவது பாராட்டியதுண்டா?
சமீபத்துல நாம் ஃப்ளைட்ல போகும் போது பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களை ரெண்டு தடவை பாத்தேன். ஏர்போர்ட்டுல தொடர்ந்து ரெண்டு நாளா பாக்குற வாய்ப்பு கிடைச்சது. அப்ப ‘உன்னைப் பாத்ததுல ரொம்ப சந்தோசமா இருக்கு. வெஸ்டர்ன் மியூஸிக் கத்துக்க. ரொம்ப முக்கியம் அது. நம்ம இன்டஸ்ட்ரியில வெஸ்டர்ன் நிறைய இருக்கு. ஆனா வெஸ்டர்ன்ல நம்ம மியூஸிக் அவ்ளோ இல்ல. இந்தியர்கள் வெஸ்டர்ன்ஸ நல்லா யூஸ் பண்ணிருக்கோம். வெஸ்டர்ன் ஆல்பம்ல அங்க இங்க நம்ம மியூஸிக் வந்துட்டு போகும். நம்ம மியூஸிக் இவ்ளோ ஹைலெவல்ல இருக்கும் போது ஏன் மத்தவங்கள ஃபாலோ பண்ணனும்.’னு சொன்னாரு. யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
உங்க துறையில நீங்க என்ன புதுமை செய்ய விரும்புறீங்க?
நம்ம செய்ற விஷயத்த சிறப்பா செய்யணும். எல்லாருமே புதுமை புதுமைனு சொல்லி ரொம்ப அதிகமா யூஸ் பண்றாங்க. இது புதுசா இருக்கும், வித்தியாசமா இருக்கும்னு சொல்றோமே தவிர நிறைய பேர் பண்றதில்ல. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் காலத்துல யுவன் வந்தாரு. டி.எம்.எஸ். காலத்துல கூட அப்பா, எஸ்.பி.பி அங்கிள் வந்தாங்க. இப்ப எல்லாத்துக்கும் ஒரு எக்ஸ்போர்ஷர் இருக்கு. டிவி. ரேடியோ அப்டினு நிறைய ஸ்பேஸ் இருக்கு. முன்னாடி அப்டி கிடையாது. நிறைய பேர் இருக்குறதால போட்டி அதிகமாக இருக்கு. ஆரோக்யமான போட்டிதான். அது இருந்தாதான் நல்லா இருக்கும்.
நீங்க பாடகரா இல்லாட்டா யாரா மாறியிருப்பீங்க?
தெரியாது. ஒருவேளை நடிகரா ஆகியிருப்பேன். அதுக்கு அழகு மட்டும் போதாதுல. நடிக்கவும் தெரியணுமே.
உங்களுடைய பொழுது போக்குகள் ?
ஸ்போர்ட்ஸ், டிவி, மியூஸிக் கேக்குறது, படம் பாக்குறது.
உங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடு எப்படி இருக்கும் ?
எப்பவும் எல்லா விஷயத்திலயும் பாஸிட்டிவ் திங்கிங் உண்டு. ரொம்ப நல்ல விஷயங்களைப் பத்தித்தான் அதிகம் யோசிப்பேன். மத்தவங்கள்ல கூட தப்பு பாக்குறது ரொம்ப கம்மி. ஒருத்தவங்கள பத்தி மத்தவங்க தப்பா சொன்னா கூட நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன். நம்மளோட தவற நாம சரி பண்ணிக்கணும். எனக்கு புறம் பேசுறது பிடிக்காது. எனக்கு ரெண்டு, மூணு ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. அதுல ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை. அதனால ரெண்டு பேரையும் தனித்தனியா சந்திக்க வேண்டியதிருக்கு. மத்தவங்கள குறை சொல்லிட்டே இருக்கக்கூடாது. நம்ம பெர்ஃபக்ட்டானு பாக்கணும். அப்படி யாராலும் இருக்க முடியாது.
உங்களுடைய தனித்துவமா எதை நினைக்கிறீங்க ?
அப்படி ஒண்ணுமில்ல. வாழ்க்கைய முழுமையா அனுபவிச்சு வாழ்றதுதான் என்னோட தனித்துவம்.
ஃபாஸ்ட் சாங் பிடிக்குமா? மெலடி பிடிக்குமா?
ஸ்டேஜ்ல அதிகமா ஃபாஸ்ட் சாங்தான் பாடுற மாதிரி இருக்கும். எனக்கு ரெண்டுமே பிடிக்கும். வித்யாசாகர், யுவன், இளையராஜா இவங்களோட ஃபாஸ்ட் சாங்ஸ் பிடிக்கும். ரஜினி சாரோட பொதுவாக எம்மனசு தங்கம் பாட்டுல லேசா மெலடியும் இருக்கத்தான் செய்யும். பீட் மட்டும் இருந்து ரிதம் ஒண்ணுமே இல்லனா பிடிக்காது.
உங்க அப்பாவுக்கு பிடிச்ச பாடல்?
எனக்கு தெரியல. ஒருவேளை 'உன்னிடம் மயங்குகிறேன்' பாடல்.
உங்க அப்பா பாடல்கள உங்களுக்கு பிடிச்சது ?
அப்பாவும் நானும் சேர்ந்து பாடுன ராம் படப்பாடல் 'மனிதன் சொல்கின்ற நியாயங்கள்'. தனித்தனியா ரெக்கார்டிங் பண்ணப்பட்ட பாடல்தான் அது. அதுல அப்பாவோட 'ஆராரிராரோ' எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த படத்துல நான் தனியா பாடுனது 'நிழலினை நிஜமும் கடந்திடுமா?'.
இந்த மாதிரி ரெண்டு பேர் பாட வேண்டிய பாடல தனித்தனியா பாடும் போது அந்த ஃபீல் இருக்குமா ?
ஒண்ணா பாடும் போது சில டைம்ல கன்டினியுட்டி இருக்காது. அதுமட்டுமில்ல அவங்கவங்க ஃப்ரீ டைம்ல வந்து பாடிட்டு போறது வசதியா இருக்கு.
உங்க பாடல்களைப் பாடும் போது அதில் இருக்கும் வரிகளை ரசித்ததுண்டா?
'எனக்குப் பிடித்த பாடல்' மாதிரி பாடல்ல வரிகளை ரசித்ததுண்டு. அதுல எவ்ளோ இருக்கு. மியூஸிக்கும், லிரிக்ஸும் சேரும் போது அதுல அவ்ளோ ப்யூட்டி இருக்குது. அந்த மாதிரி 'சிவாஜி' படத்துல 'சஹாரா பூக்கள் பூக்குதோ' பாடலும் ரொம்ப பிடிக்கு. 'நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது'.
ஒரே குடும்பத்துல உருவ ஒற்றுமை சகஜம்தான். ஆனா குரல் ஒற்றுமை உங்க அப்பாக்கும், உங்களுக்கும் இருக்கே எப்படி?
அவர் கண்டிப்பா என்னோட அப்பாதான்னு ப்ரூஃப். சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். சில சமயங்கள்ல பாடும் போது அப்பா மாதிரி வரும். பிரேம்ஜி ஒருதடவை அப்பா மாதிரியே பாடுறேன்னு சொன்னாரு. எல்லா சாங்கும் அந்த மாதிரி வராது.
ரொம்ப பிடிச்ச பண்டிகை எது ?
அமெரிக்காவுல கிறிஸ்துமஸ் ட்ரெடிஷனலா கொண்டாடுவாங்க. அது எனக்குப் பிடிக்கும். அங்க பெரிய பெரிய வீடுகள்ல அலங்காரம் பண்ணுவாங்க. அதுவும் ரொம்ப பிடிக்கும்.

நடிகர் செந்தில் பிறந்த நாள் மார்ச் 23 , 1951 .



நடிகர் செந்தில்  பிறந்த நாள் மார்ச் 23 , 1951 .


செந்தில் (பிறப்பு: மார்ச் 23 , 1951 ), தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் .
வாழ்க்கைக் குறிப்பு
செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் இராமமூர்த்தி. செந்திலின் இயற்பெயர் முனுசாமி. இவரது உடன்பிறப்புகள் ஆறு பேர். செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாவது வகுப்பு வரை படித்தார். தந்தை திட்டிய காரணத்தால் தனது 12ஆம் வயதில் ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு
மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்னர் நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டார். இது அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்றார். அவர்களால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் மணிகண்ட பிரபு. இவர் பல் மருத்துவர். மற்றொருவர் ஹேமச்சந்திர பிரபு. மணிகண்ட பிரபு, ஜனனி பிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

செந்தில் நடித்த சில திரைப்படங்கள்

இவர் ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.
திரைப்படம் வருடம்
ஒரு கோவில் இரு தீபங்கள் 1979
ஆடுகள் நனைகின்றன 1981
இன்று போய் நாளை வா 1981
அர்ச்சனைப்பூக்கள் 1982
தூறல் நின்னு போச்சு 1982
நிஜங்கள் 1982
மஞ்சள் நிலா 1982
சாட்சி 1983
சாட்டை இல்லாத பம்பரம் 1983
பகவதிபுரம் ரெயில்வே கேட் 1983
மலையூர் மம்பட்டியான் 1983
மாறுபட்ட கோலங்கள் 1983
24 மணி நேரம் 1984
அம்பிகை நெரில் வந்தாள் 1984
அவள் ஒரு மாதிரி 1984
இங்கேயும் ஒரு கங்கை 1984
குவா குவா வாத்துகள் 1984
சத்தியம் நீயே 1984
தலையணை மந்திரம் 1984
நல்ல நாள் 1984
நான் பாடும் பாடல் 1984
நேரம் நல்ல நேரம் 1984
மண்சோறு 1984
மதுரை சூரன் 1984
மன்மத ராஜாக்கள் 1984
வைதேகி காத்திருந்தாள் 1984
அண்ணி 1985
அவன் 1985
அன்பின் முகவரி 1985
ஆகாய தாமரைகள் 1985
இரண்டு மனம் 1985
உதயகீதம் 1985
உரிமை 1985
கீதாஞ்சலி 1985
சித்திரமே சித்திரமே 1985
சிவப்பு நிலா 1985
செல்வி 1985
திறமை 1985
தென்றல் தொடாத மலர் 1985
நல்ல தம்ப்ய் 1985
பிரெம பாசம் 1985
மருதாணி 1985
யார் 1985
ராஜா யுவராஜா 1985
வெற்றிக்கனி 1985
வேஷம் 1985
ஹெல்லோ, யார் பேசறது? 1985
அம்மன் கோயில் கிழக்காலே 1986
ஆயிரம் பூக்கள் மலரட்டும் 1986
உனக்காகவே வாழ்கிறேன் 1986
என்றாவது ஒரு நாள் 1986
கண்ணே கனியமுதே 1986
காலமெல்லாம் உன் மடியில் 1986
குங்கும பொட்டு 1986
கொயில் யானை 1986
டிசம்பர் பூக்கள் 1986
தர்ம பத்தினி 1986
நம்ம ஊரு நல்ல ஊரு 1986
நிலவே மலரே 1986
பதில் சொல்வாள் பத்ரகாளி 1986
பாரு பாரு பட்டணம் பாரு 1986
பிறந்தேன் வளர்ந்தேன் 1986
புதிய பூவிது 1986
பூக்களை பரிக்காதே 1986
மந்திர புன்னகை 1986
மறக்கமாட்டேன் 1986
ரசிகன் ஒரு ரசிகை 1986
அருள் தரும் ஐயப்பன் 1987
ஆண்களை நம்பாதே 1987
ஆயுசு நூறு 1987
ஆனந்த ஆராதனை 1987
இது ஒரு தொடர்கதை 1987
இவர்கள் இந்தியர்கள் 1987
இனிய உறவு பூத்தது 1987
உழவன் மகன் 1987
உள்ளம் கவர்ந்த கள்வன் 1987
ஊர்க்குருவி 1987
எங்க ஊரு பாட்டுக்காரன் 1987
ஒரே ரத்தம் 1987
கல்யாண கச்சேரி 1987
கிருஷ்ணன் வந்தான் 1987
கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா 1987
சிறைப்பறவை 1987
சின்னகுயில் பாடுது 1987
சொல்லுவதெல்லாம் உண்மை 1987
தங்கச்சி 1987
தீர்த்த கரையினிலே 1987
துளசி 1987
நல்ல பாம்பு 1987
நினைக்க தெரிந்த மனமே 1987
நினைவே ஒரு சங்கீதம் 1987
பரிசம் போட்டாச்சு 1987
பூ மழை பொழியுது 1987
பூப்பூவா பூத்திருக்கு 1987
பூவிழி வாசலிலே 1987
மனிதன் 1987
முப்பெரும் தேவியர் 1987
மேகம் கருக்குது 1987
மைக்கேல் ராஜ் 1987
ராஜ மரியாதை 1987
ரேகா 1987
வாழ்க வளர்க 1987
வெளிச்சம் 1987
வேலுண்டு வினையில்லை 1987
வேலைக்காரன் 1987
இது எஙள் நீதி 1988
இரண்டில் ஒன்று 1988
உழைத்து வாழ வேண்டும் 1988
உள்ளத்தில் நல்ல உள்ளம் 1988
எங்க ஊரு காவக்காரன் 1988
என் வழி தனி வழி 1988
என்னை விட்டு பொகாதே 1988
ஒருவர் வாழும் ஆலயம் 1988
கண் சிமிட்டும் நேரம் 1988
கல்யாண பறவைகள் 1988
காலையும் நீயே மாலையும் நீயே 1988
குங்கும கோடு 1988
கைநாட்டு 1988
கொயில் மணி ஓசை 1988
சக்கரைப்பந்தல் 1988
சுதந்திர நாட்டின் அடிமைகள் 1988
செண்பகமே செண்பகமே 1988
செந்தூரப்பூவே 1988
த்ங்க கலசம் 1988
தம்பி தங்க கம்பி 1988
தாய்மேல் ஆணை 1988
நம்ம ஊர் நாயகன் 1988
நான் சொன்னதே சட்டம் 1988
நெருப்புநிலா 1988
பட்டிக்காட்டு தம்பி 1988
பாட்டி சொல்லை தட்டாதே 1988
பாய்மரக்கப்பல் 1988
பார்த்தால் பசு 1988
பாலைவனத்தில் பட்டாம்பூச்சி 1988
பூவும் புயலும் 1988
மனைவி ஒரு மந்திரி 1988
ராசாவே உன்னை நம்பி 1988
வளைகாப்பு 1988
ஜாடிக்கேத்த மூடி 1988
அத்தைமடி மெத்தையடி 1989
அன்புக்கட்டளை 1989
எங்க ஊரு மாப்பிள்ளை 1989
எங்கள் அண்ணன் வரட்டும் 1989
ஒரே தாய் ஒரே குலம் 1989
கரகாட்டக்காரன் 1989
காவல் பூனைகள் 1989
சம்சாரமே சரணம் 1989
தங்கமான ராசா 1989
அம்மன் கோவில் திருவிழா 1990
ஆத்தா நான் பாஸாயிட்டேன் 1990
ஆவதெல்லாம் பெண்ணாலே 1990
இணைந்த கைகள் 1990
ஊரு விட்டு ஊரு வந்து 1990
எங்க ஊரு ஆட்டுக்கரன் 1990
எனக்கு ஒரு நீதி 1990
சிலம்பு 1990
தங்கைக்கு ஒரு தாலாட்டு 1990
நீங்களும் ஹீரோதான் 1990
பாட்டாளி மகன் 1990
பாலம் 1990
புது பாட்டு 1990
மருதுபாண்டி 1990
மல்லுவேட்டி மைனர் 1990
முதலாளியம்மா 1990
வெற்றிமாலை 1990
ஜகதல பிரதாபன் 1990
அண்ணன் காட்டிய வழி 1991
அதிகாரி 1991
அபூர்வ நாகம் 1991
அர்சனா I.A.S. 1991
அன்பு சங்கிலி 1991
ஆத்தா உன் கோவிலிலே 1991
ஈசுவரி 1991
ஊரெல்லாம் உன் பாட்டு 1991
எங்க ஊரு சிப்பாய் 1991
என் ராசாவின் மனசிலே 1991
ஒயிலாட்டம் 1991
சேரன் பாண்டியன் 1991
தாயம்மா 1991
தூதுபோ செல்லக்கிளியே 1991
தை பூசம் 1991
நாடு அதை நாடு 1991
நான் புடிச்ச மாப்பிள்ளை 1991
நான் வளர்த்த பூவே 1991
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு 1991
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் 1991
பொண்டாட்டி பொண்டாட்டிதான் 1991
மரிக்கொழுந்து 1991
மில் தொழிலாளி 1991
மூக்குத்தி பூமேலே 1991
வாசலிலே ஒரு வெண்ணிலா 1991
வெற்றிக்கரங்கள் 1991
வைதேகி கல்யாணம் 1991
அபிராமி 1992
உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் 1992
ஊர் மரியாதை 1992
சின்ன கவுண்டர் 1992
சின்ன பசங்க நாங்க 1992
உத்தமராசா 1993
எஜமான் 1993
கோயில் காளை 1993
சின்னஜமீன் 1993
பேண்ட் மாஸ்டர் 1993
பொறந்தவீடா புகுந்த வீடா 1993
பொன்னுமணி 1993
மகராசன் 1993
ராக்காயி கோயில் 1993
ஜென்டில்மேன் 1993
கட்டப்பொம்மன் 1993
சேதுபதி ஐ.பி.எஸ் 1994
சத்யவான் 1994
சின்ன மேடம் 1994
சீமான் 1994
செந்தமிழ் செல்வன் 1994
டூயட் 1994
தாய் மனசு 1994
நம்மவர் 1994
நாட்டாமை 1994
நிலா 1994
பூவரசன் 1994
மேட்டுப்பட்டி மிராசு 1994
ரசிகன் 1994
ராஜகுமாரன் 1994
ராஜபாண்டி 1994
வரவு எட்டணா செலவு பத்தணா 1994
வனஜா கிரிஜா 1994
வீரப்பதக்கம் 1994
வீரா 1994
ஜல்லிக்கட்டு காளை 1994
ஜெய் ஹிந்த் 1994
அசுரன் 1995
கூலி 1995
கோலங்கள் 1995
சந்த்தைக்கு வந்த கிளி 1995
சந்திரலேகா 1995
சின்ன வாத்தியார் 1995
தமிழச்சி 1995
நாடோடி மன்னன் 1995
முத்து 1995
இந்தியன் 1996
உள்ளத்தை அள்ளித்தா 1996
கோயம்புத்தூர் மாப்ளே 1996
அருணாச்சலம் 1997
ஜீன்ஸ் 1998
படையப்பா 1999
வானத்தைப்போல 2002
பாய்ஸ் 2003
விசில் 2003
ஜெயம் 2003
எங்கள் ஆசான் 2009
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் 2009
அன்பே அன்பே 2010
எல்லைச்சாமி 2010
சத்யம் 2010
தங்க மனசுக்காரன் 2010
சின்னத்தாயி 2012
உன்ன நினச்சேன் பாட்டு படிச்சேன்
என்றும் அன்புடன்
ஒன்னா இருக்க கத்துக்கணும்
சித்து
சின்னவர்
சேவகன்
தாய்மாமன்
புன்னகைப்பூவே
ரோஜாவை கிள்ளாதே
ஹெலோ

இவரது நகைச்சுவையான வசனங்கள் சில:

அந்த இன்னொன்னு தாண்ணே இது (கரகாட்டக்காரன்)
நேர்மை எருமை கருமை
பாட்றி என் ராசாத்தி
டேய் அண்ணனுக்கு பொற வைடா அண்ணன் நன்றி உள்ளவரு
டேய்! அண்ணன் சிகப்புடா கோயில் காளை
புலிகுட்டி தம்பி பூனகுட்டி, பூனகுட்டி தம்பி புலிகுட்டி
இது மந்திரிச்சு விட்ட தாயத்து இல்ல, இது தான் சயனைடு சப்பி
ம்ம்ம்ம்ம்ம், ர்ர்ர்ர்-அ விட்டுட்டே ( இந்தியன்)
அய்யய்யய்யய்யோ, அறிவுக்கொளுந்துண்ணே நீங்க
கோழி முட்ட மாதிரி இருக்கு, இதுல எப்படிண்ணே லைட் எரியும்!... ... ... என்னண்ணே உடைச்சிட்டீங்க! ( வைதேகி காத்திருந்தாள் )
ஸ்பேனர் புடிச்சவன் எல்லாம் மெக்கானிக்குன்னு சொல்றான் ( சேரன் பாண்டியன்)
அண்ணே! ஆத்தா பல்லு ஏண்ணே அப்படி இருக்கு! ( சின்ன கவுண்டர்)

நடிகர் ஜெமினி கணேசன் நினைவு தினம் மார்ச் 22, 2005.


நடிகர் ஜெமினி கணேசன் நினைவு தினம் மார்ச் 22, 2005.
ஜெமினி கணேசன் ( 17 நவம்பர் 1920 – 22 மார்ச் 2005 ) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு , மலையாளம் ,
கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு.
தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் இராமசுவாமி ஐயர், கங்கம்மா இணையருக்குப் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா வரலாறு மிஸ் மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும்
மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.
அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ , நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும்
வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் " காதல் மன்னன் " என்றே அழைத்தனர். அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.
ஜெமினி கணேசனின் திரை வரலாறு
ஆரம்ப காலத் திரை வாழ்க்கை
திரையுலகுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பாகச் சில காலம் ஜெமினி கணேசன் ஆசிரியப் பணியாற்றி வந்தார். ஜெமினி நிறுவனத்தில் அவர் மேலாளராகச் சேர்ந்தபோது, திரையுலகுடனான அவரது வாழ்க்கைப் பயணம் துவங்கியது. பின்னாளில் எந்த நிறுவனத்தின் பல வெற்றிப் படங்களில் அவர் நாயகனாக நடித்தாரோ, அதே நிறுவனத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு வருபவர்களை நேர்காணல் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்!
1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் சிறிய வேடம் தாங்கினார். ஆனால், திரையுலகத்தின் பொற்கதவுகள் அவருக்கு உடனடியாகத் திறந்து விடவில்லை. பலரது கவனத்தையும் ஈர்த்து மஞ்சள் ஒளி அவர் மீது விழ வைத்தது 1952ஆம் ஆண்டின் வெளியீடான தாயுள்ளம். ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாகவும், எம்.வி.ராஜம்மா கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தில் அவர் காண்பவர் மனம் மயங்கும் வண்ணம் கவர்ச்சி வில்லன் வேடம் ஏற்றிருந்தார். (பின்னாளில் அவர் கதாநாயகனாக நடிக்கையில் மனோகர் வில்லன் கதாபாத்திரங்களில் நிலை பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)
ஜெமினி கணேசன் கதாநாயகன் வேடம் தரித்த முதல் படம் 1953ஆம் ஆண்டு வெளியான "பெண்". இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார். வைஜயந்தி மாலாவும் நடித்த இப்படத்தில், வீணை வித்வானாகவும், புதுமை இயக்குனராகப் புகழ் பெற்றவருமான
எஸ்.பாலச்சந்தர் ஜெமினி கணேசனின் நண்பனாக வேடம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது 1953ஆம் ஆண்டின் "மனம்போல மாங்கல்யம்". இதில் அவர் முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். பெரும் வெற்றியடைந்த இது, அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின்போதுதான், இதில் தன்னுடன் நடித்த, பின்னாளில் நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற
சாவித்திரியை அவர் மணந்து கொண்டார்.
காதல் மற்றும் குடும்பக் கதைகளில் பெயர் பெறத்துவங்கிய ஜெமினி கணேசனை அதிரடி நாயகனாகவும் அறிமுகம் செய்தது அவரது தாய் நிறுவனமான ஜெமினி. வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாகவும் முன் நிறுத்தியது. இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர் கொட்டும் மழைச் சூறாவளியில் கப்பலின் பாய்மரத்தினை ஏற்றும் காட்சி அக்கால கட்டத்தில் புல்லரிக்க வைப்பதாக அமைந்த ஒன்று.
இயக்குனர்களின் நாயகன்.
ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன் எந்த ஒரு கட்டுக்குள்ளும் சிக்காதபோதிலும், தனக்கென்று ஒரு ரசிகர் குழாமை அவர் வைத்திருந்ததுதான். இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், இயக்குனர்களின் நடிகனாக விளங்கினார். எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது. இத்தகைய இயக்குனர்களில்,
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் , ஸ்ரீதர் ,
கே.பாலச்சந்தர் , பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குனர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய "கற்பகம்", "சித்தி", "பணமா பாசமா", "சின்னஞ்சிறு உலகம்" ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.
புதுமை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர் ஒரு இயக்குனராக அறிமுகமான
கல்யாணப் பரிசு திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குனரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், "மீண்ட சொர்க்கம்", "சுமை தாங்கி" போன்ற பல படங்களை இயக்கினார்.
கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். "தாமரை நெஞ்சம்", "பூவா தலையா", "இரு கோடுகள்", "வெள்ளி விழா", "புன்னகை", "கண்ணா நலமா", "நான் அவனில்லை" எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. "நான் அவனில்லை" திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார்.
பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஜெமினி தயங்கியவர் அல்லர். நடிகர் திலகம் என இறவாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய பெருமை ஜெமினி கணேசனுக்கு உண்டு. "பாசமலர்", "பாவமன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களே இதற்கு சான்று. இவற்றில், ஜெமினியின் நடிப்பும் ஜொலித்தது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது.
எம்.ஜி.ஆர் உடன் ஜெமினி கணேசன்
"முகராசி" என்ற ஒரே படத்தில் மட்டுமே இணைந்து நடித்தார்.
தமக்குப் பின்னர் திரைக்கு வந்த
ஜெய்சங்கர் , ஏ. வி. எம். ராஜன் , முத்துராமன் ஆகியோருடனும் ஜெமினி கணேசன் பல படங்களில் இணைந்து நடித்தார்.
திரை நாயகியர்
எந்த ஒரு நட்சத்திர நடிகையுடனும் இயல்பாகப் பொருந்தி விடும் திறன் கொண்டமையாலேயே காதல் மன்னன் என்றும் அவர் அறியப்பட்டார். அவருடன் மிக அதிகமான படங்களில் நடித்தவர்களில் சாவித்ரி, அஞ்சலிதேவி, பத்மினி, சரோஜாதேவி மற்றும் ஜெயந்தி ஆகியோரைக் குறிப்பிடலாம்.
சாவித்ரியுடன் அவர் நடித்த முதல் படம் "மனம்போல மாங்கல்யம்". இதன் படப்பிடிப்பு நடைபெறும் வேளையில்தான் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இதன் பிறகும், இருவரும் இணைந்து "பாசமலர்", "பாதகாணிக்கை", "ஆயிரம் ரூபாய்", "யார் பையன்" போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். இவற்றிற்கு முந்தைய படமான "மிஸ்ஸியம்மா"வும் மிகப் பெரும் புகழ் பெற்ற படமாகும்.
சரோஜாதேவி முதன் முறையாக முழுநீளக் கதாநாயகியாக அறிமுகமானது, ஜெமினியை நாயகனாகக் கொண்ட "கல்யாணப்பரிசு". இதன் பின்னரும் இந்த ஜோடி, "ஆடிப்பெருக்கு", "கைராசி", "பனித்திரை" "பணமா பாசமா" போன்ற பல திரைப்படங்களில் வெற்றிக் கொடி நாட்டியது.
அஞ்சலிதேவி ஜெமினி கணேசனுடன் இணைந்த பல படங்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்த மாய மந்திர அடிப்படையிலானவை. "மணாளனே மங்கையின் பாக்கியம்", "கணவனே கண் கண்ட தெய்வம்" ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
பின்னணிப் பாடகர்கள்
பின்னணிப் பாடகர்களில் மிகப் பெரும் பெயர் பெற்று விளங்கிய டி.எம். சௌந்தரராஜன் ஜெமினி கணேசனுக்காகச் சில பாடல்கள் பாடியதுண்டு. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" படத்தின் "என்னருமைக் காதலிக்கு", "சதாரம்" படத்தின் "நினைந்து நினைந்து நெஞ்சம்" மற்றும் "ராமு'வில் "கண்ணன் வந்தான்" போன்று அவை புகழ் பெற்றதும் உண்டு. ஆயினும், அவரது திரைக்குரலாகவே அறியப்பட்டவர்கள் இருவர்: முதலாமவர், அவரது ஆரம்பகாலப் படங்களில் பின்னணி அளித்த ஏ. எம். ராஜா . இரண்டாமவர், பன்மொழி வித்தகரான பி. பி. ஸ்ரீநிவாஸ் . இயல்பாகவே மென்மையான குரல் கொண்டிருந்த ஜெமினி கணேசனுக்கு இவர்கள் இருவரது குரலும் மிக அற்புதமாகப் பொருந்துவதானது. மனம்போல மாங்கல்யம் திரைப்படத்தில் "மாப்பிள்ளை டோய்" துவங்கிப் பல படங்களில் ஏ.எம். ராஜா அவருக்குப் பின்னணி பாடினார். "கல்யாணப் பரிசு" திரைப்படத்தில்தான் அவர் முதன் முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இதன் பிறகு, "ஆடிப்பெருக்கு" போன்ற சில படங்களில் அவருக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.
அறுபதுகளின் இறுதியில் வெளிவரத்துவங்கிய ஜெமினி கணேசனின் படங்களில், பி.பி.ஸ்ரீனிவாஸ் அவரது பாடற்குரலானார். சுமைதாங்கி போன்ற படங்களில் ஜெமினிக்காக அவர் பாடிய பாடல்கள் இறவா வரம் பெற்றவை.
1970ஆம் வருடங்களின் இறுதியில், "சாந்தி நிலையம்" போன்ற சில படங்களில் அப்போது பெயர் பெறத் துவங்கியிருந்த எஸ்.பி.பி. என்று அன்புடன் அழைக்கப்படும்
எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜெமினிக்குப் பின்னணி பாடியுள்ளார்.
குணச்சித்திர வேடங்கள்...
ஸ்ரீதரின் "அவளுக்கென்று ஓர் மனம்" மற்றும் "சாந்தி நிலையம்" ஆகிய படங்கள் வெளியாகும் கால கட்டத்தில் ஒரு நாயகனாக ஜெமினிக்குச் சற்று இறங்கு முகம்தான். அவர் நாயகனாக நடித்த கடைசிப்படம் சுஜாதாவுடன் நடித்து 1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளிவந்த "லலிதா".
சில வருடங்களுக்குப் பிறகு குணசித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிக்கலானார். அவற்றில் மிகச் சிறப்பாக அமைந்த இரண்டு படங்களுமே கமல்ஹாசன் நாயகனாக நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சிரஞ்சீவியின் தந்தையாக அவர் நடித்த ருத்ரவீணா தமிழில் உன்னால் முடியும் தம்பி என மறுவாக்கம் செய்யப்பட்டபோது, அதில் கமல்ஹாசனின் பிடிவாதம் மிக்க தந்தையாக, கருநாடக இசைத் தூய்மையில் விடாப்பிடி கொண்டவராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மற்றொன்று அவரது கடைசிப் படமான
அவ்வை சண்முகி .


நடித்த திரைப்படங்களின் பட்டியல்
தமிழ்த் திரைப்படங்கள்
-
1941 - 1950
1. மிஸ் மாலினி (1947)
2. சக்ரதாரி (1948)
1951 - 1960
1. தாய் உள்ளம் (1952)
2. மூன்று பிள்ளைகள் (1952)
3. ஆசை மகன் (1953)
4. மனம்போல் மாங்கல்யம் (1953)
5. கணவனே கண்கண்ட தெய்வம் (1955)
6. குணசுந்தரி (1955)
7. நீதிபதி (1955)
8. மகேஸ்வரி (1955)
9. மாமன் மகள் (1955)
10. மிஸ்ஸியம்மா (1955)
11. மாதர் குல மாணிக்கம் (1956)
12. பெண்ணின் பெருமை (1956)
13. மர்ம வீரன் (1956)
14. காலம் மாறிப்போச்சு (1956)
15. ஆசை (1956)
16. சதாரம் (1956)
17. சௌபாக்கியவதி (1957)
18. யார் பையன் (1957)
19. மாயா பஜார் (1957)
20. இரு சகோதரிகள் (1957)
21. மணாளனே மங்கையின் பாக்கியம் (1957)
22. மல்லிகா (1957)
23. கடன் வாங்கி கல்யாணம் (1958)
24. பதி பக்தி (1958)
25. குடும்ப கௌரவம் (1958)
26. திருமணம் (1958)
27. வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
28. வாழவைத்த தெய்வம் (1959)
29. வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
30. நல்ல தீர்ப்பு (1959)
31. பெண்குலத்தின் பொன் விளக்கு (1959)
32. கல்யாண பரிசு (1959)
33. புதிய பாதை (1960)
34. களத்தூர் கண்ணம்மா (1960)
35. பார்த்திபன் கனவு (1960)
36. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)
37. கைராசி (1960)
38. மீண்ட சொர்க்கம் (1960)
1961 - 1970
1. கப்பலோட்டிய தமிழன் (1961)
2. தேன் நிலவு (1961)
3. பனித்திரை (1961)
4. பாக்கிய லட்சுமி (1961)
5. பாசமலர் (1961)
6. பாத காணிக்கை (1962)
7. பார்த்தால் பசி தீரும் (1962)
8. காத்திருந்த கண்கள் (1962)
9. கொஞ்சும் சலங்கை (1962)
10. கற்பகம் (1963)
11. இதயத்தில் நீ (1963)
12. ஏழை பங்காளன் (1963)
13. ஆயிரம் ரூபாய் (1964)
14. வாழ்க்கை வாழ்வதற்கே (1964)
15. சுமை தாங்கி (1965)
16. ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் (1965)
17. ராமு (1966)
18. அண்ணாவின் ஆசை (1966)
19. சின்னஞ்சிறு உலகம் (1966)
20. கந்தன் கருணை (1967)
21. பட்டத்து ராணி (1967)
22. பெண் என்றால் பெண் (1967)
23. தாமரை நெஞ்சம் (1968)
24. பணமா பாசமா (1968)
25. சாந்தி நிலையம் (1969)
26. தங்க மலர் (1969)
27. அவரே என் தெய்வம் (1969)
28. இரு கோடுகள் (1969)
29. ஐந்து லட்சம் (1969)
30. குலவிளக்கு (1969)
31. குழந்தை உள்ளம் (1969)
32. பூவா தலையா (1969)
33. காவியத் தலைவி (1970)
34. சிநேகிதி (1970)
35. எதிர்காலம் (1970)
36. கண்மலர் (1970)
37. சங்கமம் ((1970)
38. மாலதி (1970)
1971 - 1980
1. ரங்க ராட்டினம் (1971)
2. வெகுளிப் பெண் (1971)
3. திருமகள் (1971)
4. புன்னகை (1971)
5. தெய்வம் (1972)
6. சக்தி லீலை (1972)
7. கண்ணா நலமா (1972)
8. குறத்தி மகன் (1972)
9. கங்கா கௌரி (1973)
10. ஸ்கூல் மாஸ்டர் (1973)
11. நான் அவனில்லை (1974)
12. உறவுக்கு கை கொடுப்போம் (1975)
13. இதயமலர் (1976)
14. தசாவதாரம் (1976)
1981 - 1990
1. உன்னால் முடியும் தம்பி (1988) (தெலுங்கில் ருத்ரவீணா)
2. பொன்மன செல்வன் (1989)
1991 - 2000
1. வீரமணி (1994)
2. அவ்வை சண்முகி (1996)


பிற மொழிப் படங்கள்...
தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நாயகனாகவும், இரண்டாம் நாயகனாகவும் பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார்.
அவரது கல்யாணப்பரிசு இந்தி மொழியில் நஸ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் நாயகனாக நடிக்க மறுவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழில் நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் அவர் நடித்தார். இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் "மிஸ் மேரி" (தமிழில் மிஸ்ஸியம்மா) போன்றவற்றிலும், அஞ்சலி தேவியுடன் அவர் நடித்த சில படங்களின் இந்தி மறுவாக்கத்திலும் கதாநாயகனாகவே நடித்தார். தமிழ் நடிகைகள் வெற்றிக் கொடி நாட்டிய
பாலிவுட் தமிழ் நடிகர்களை வெகு காலத்திற்கு வரவேற்றதில்லை. ஜெமினி கணேசனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதர மொழிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியில் அவரது பங்களிப்பு மிகக் குறைவே.
ஜெமினி கணேசன் நினைவாக வெளியிடப்பெற்ற அஞ்சல் தலை
அஞ்சல் தலை வெளியீடு
தமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.
துணுக்குகள்...
ஆரம்பகாலப் படங்களில் ஜெமினி கணேசனின் பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. பராசக்தி (திரைப்படம்) மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர் கொண்டிருந்தமையால், மாறுபடுத்துவதற்காக, இவர் தனது பெயருடன் தனது தாய் நிறுவனத்தின் பெயரை இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.
ஜெமினி கணேசன் தயாரித்த ஒரே படம் நான் அவனில்லை. இது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றாலும், வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப்படம் தமிழிலேயே ஜீவன் நடிப்பில், செல்வா இயக்கத்தில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றி கண்டது.
ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் இதய மலர். கமல்ஹாசன் மற்றும் சுஜாதாவுடன் இதில் அவரும் நடித்திருந்தார். ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த தாமரை மணாளன் இணைந்து இயக்கியிருந்தார்.
தாய் உள்ளம் படத்திற்குப் பிறகு ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த (அநேகமாக) ஒரே படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "வல்லவனுக்கு வல்லவன்". இதில் ஜெமினி கணேசன் எதிர்பாராத விதமாக இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார் என்பதும், வில்லனாக அறியப்பட்டிருந்த அசோகன் இதன் கதாநாயகன் என்பதும், துவக்கத்தி்ல் வில்லன் போலக் காணப்படும் மனோகர் காவல்துறை அதிகாரியாக வெளிப்படுகிறார் என்பதும் சுவையானவை. இத்திரைப்படத்தில் ஒரே ஒரு பாடற்காட்சியில் சாவித்ரி கௌரவ நடிகையாகத் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெமினி கணேசன் சொந்தக் குரலிலும் அற்புதமாகப் பாடக் கூடியவர் என்றும், அந்நாளைய இந்திப் பாடகர் சைகால் பாடல்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடுவது அவர் வழக்கம் என்றும் அவரது பல பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தாம் இயக்கிய "இதயமலர்" திரைப்படத்தில் "லவ் ஆல் " என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இதுதான்.
ஜெமினி கணேசன் இந்தி மொழியை மிக நன்றாக அறிந்திருந்தமையால், 1980ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான ஹம்லோக் சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் அவர் தமிழில் முன் கதைச்சுருக்கம் அளித்தார்.
இந்திப் படவுலகில் நுழைந்து 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருந்த
ரேகா தாம் ஜெமினி கணேசன் - புஷ்பவல்லியின் மகள் என அறிவித்தார். ஜெமினி இதை ஒப்புக் கொண்டார்.
ரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக
நினைவெல்லாம் நித்யா என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு அளித்துள்ளார்.
ஜெமினி கணேசனின் மகளான கமலா செல்வராஜ் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவச் சிகிச்சை முறைமையின் முன்னோடிகளில் ஒருவராக பெரும் ஆராய்ச்சிகளும், பங்களிப்பும் அளித்துள்ளார்.
மறைவு
சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு காலமானார். இவரது பூதவுடல் அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்ட்டது.