வெள்ளி, 29 டிசம்பர், 2017

நடிகை ஹீரா பிறந்த நாள் டிசம்பர் 29, 1971.



நடிகை ஹீரா பிறந்த நாள் டிசம்பர் 29, 1971.

ஹீரா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் , மலையாளம் , தெலுங்கு ,
கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

ஹீரா ராஜகோபால் சென்னையில் பிறந்தவர். இவர் சென்னையில் உள்ள
பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றார். அவர் 2002 ஆம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் மாதவ் நாட்டுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2006 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.


பிறப்பு ஹீரா ராசகோபால்
திசம்பர் 29, 1971
(அகவை 46)
இந்தியா
பணி நடிகர் , வலைப்பதிவர் , செயற்பாட்டாளர்
செயல்பட்ட
ஆண்டுகள்
1991–2000
வாழ்க்கைத்
துணை
புஷ்கர் மாதவ் (2002–2006)(மணமுறிவு பெற்றவர்)
வலைத்தளம்
http://www.heerarajagopal.com/index.html

வாழ்க்கை

ஹீரா ராஜகோபால், நடிகர் முரளியுடன் இணைந்து நடித்த இதயம் திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழிலும்
தெலுங்கிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. சஞ்சய் தத் நடித்த அமானத்
இந்தி திரைப்படத்தின் மூலம் இவர்
பாலிவுட்டில் அறிமுகமானார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த நிர்ணயம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் கமல் , மம்மூட்டி, சிரஞ்சீவி , அஜித் குமார் , நாகார்ஜுனா , பாலகிருஷ்ணா,
வினீத், கார்த்திக், ரவி தேஜா , ரமேஷ் அரவிந்த் , மற்றும் அனில் கபூர் போன்ற இந்திய முன்னணி திரைப்பட நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
1991 இதயம் த
நீ பாதி நான் பாதி த
1992 பப்ளிக் ரவுடி த
என்றும் அன்புடன் த
1993
தசரதன் த
முன்னறிவிப்பு த
பேண்டு மாஸ்டர் த
சபாஷ் பாபு த
திருடா திருடா ராஜாத்தி த
1994
நம்ம அண்ணாச்சி த
தாட்பூட் தஞ்சாவூர் த
தொங்கலா ராஜ்யம் த
அமானத் கீதா இ
தி ஜெண்டில்மேன் இ
1995
சதி லீலாவதி பிரியா த
நிர்ணயம் அன்னி ம
மின்னமினுகினும் மின்னுகெட்டு
பிங்கி மேனன் ம
ஒரு அபிபாஷகன்றே கேஸ் டயரி
இந்து ம
1996
லிட்டில் சோல்ஜர்ஸ் அனிதா த
ஸ்ரீ காரம் த
கிருஷ்ணா த
காதல் கோட்டை நேஹா த
மிஸ்டர் பீச்சரா ஆஷா வர்மா இ
ஔர் ஏக் பிரேம் கஹானி கோகிலா இ
அவ்வை சண்முகி ரத்னா த
1997
அஷ்வனம் த
கலாவிதா க
செலிகாது த
1998
ஆவிட மா ஆவிடே ஜான்சி த
அந்தப்புரம் த
படுத தியாகா த
யாரே நீனு செலுவே க
யுவரத்ன ராணா த
பூவேலி ஷாலினி த
சுந்தர பாண்டியன் ரம்யா த
1999
பெத்தமனுஷாலு த
தொடரும் த
அல்லுடு காடு வச்சாரு த
சுயம்வரம் (1999 திரைப்படம்)

புதன், 27 டிசம்பர், 2017

தயாரிப்பாளர் எஸ். பாலசுப்ரமணியன் பிறந்த நாள் டிசம்பர் 28, 1936.


தயாரிப்பாளர் எஸ். பாலசுப்ரமணியன் பிறந்த நாள் டிசம்பர் 28, 1936.

எஸ் எஸ் பாலன் என அறியப்படும் எஸ். பாலசுப்ரமணியன் ( S. Balasubramanyan , டிசம்பர் 28, 1936 - டிசம்பர் 19, 2014) திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும்,
விகடன் குழுமத்தின் உரிமையாளரும் ஆவார்.
ஜெமினி ஸ்டுடியோஸ் , விகடன் குழுமம் ஆகியவற்றின் நிறுவனர் எஸ். எஸ். வாசனின் மகனான இவர் சென்னையில் பிறந்தவர். லயோலா கல்லூரியில் படித்து இளங்கலைப் (பி.காம்) பட்டம் பெற்றார். விகடன் குழுமத்தில், 1956 ஆம் ஆண்டில் இணைந்த இவர் தந்தையின் மரணத்திற்கு பின் ஜெமினி, விகடன் குழுமத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

திரைப்படத் துறை பங்களிப்புகள்

தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். சிரித்து வாழ வேண்டும், எல்லோரும் நல்லவரே போன்றவை இவர் இயக்கிய சில திரைப்படங்களாகும்.

பத்திரிகைத் துறை பங்களிப்புகள்

1987ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்காக, அன்றைய
எம்.ஜி.ஆர் அரசு இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்கு தொடுத்து வெற்றிபெற்று, 1001 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார்.

குடும்பம்

இவருக்கு ஆறு பெண்களும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இவரின் மகன் பா. சீனிவாசன் தற்போது விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநராக உள்ளார்.
மறைவு
19 டிசம்பர் 2014 அன்று சென்னையில் மாரடைப்பினால் காலமானார்.

செவ்வாய், 26 டிசம்பர், 2017

நடிகை சாவித்திரி நினைவு தினம் டிசம்பர் 26 , 1981 .



நடிகை சாவித்திரி நினைவு தினம்  டிசம்பர் 26 , 1981 .

கொம்மாரெட்டி சாவித்திரி ( Kommareddy Savitri ) அல்லது சாவித்திரி கணேஷ் ( Savitri Ganesh , தெலுங்கு : సావిత్రి కొమ్మారెడ్డి; டிசம்பர் 6 ,
1935 – டிசம்பர் 26 , 1981 ), புகழ் பெற்ற ஒரு
தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ் , தெலுங்கு , கன்னடம் ,
இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில்
குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார் .

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
1. திருவிளையாடல்
2. எல்லாம் உனக்காக
3. கந்தன் கருணை
4. குறவஞ்சி
5. செல்லப்பிள்ளை
6. படித்தால் மட்டும் போதுமா
7. பரிசு
8. பாசமலர்
9. பாவ மன்னிப்பு
10. வேட்டைக்காரன்
11. காத்தவராயன்
விருதுகள்
கலைமாமணி விருது

திங்கள், 25 டிசம்பர், 2017

நடிகை நக்மா பிறந்த நாள் டிசம்பர் 25 , 1974



நடிகை நக்மா பிறந்த நாள் டிசம்பர் 25 , 1974

நந்திதா மொராஜி (நர்மதா சாதனா) அல்லது பிரபலமாக நக்மா ( இந்தி : नघमा)
தமிழ் , இந்தி ,தெலுங்கு திரைப்பட நடிகையாவார். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார்  . இவரது தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார்
இந்து மததையும் சேர்ந்தவராவர். இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரியாவர்.  இவர் நடிப்பை பாலிவூட்டில் ஆரம்பித்தார் எனினும் சிலத் திரைப்படங்களுக்குப் பின் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கு இவருக்கு நல்ல வரவேற்புக் கிட்டியது. இவர் இந்தி,
மராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவராவார். மேலும் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு,
கன்னடா, மலையாளம், வங்காளி ,
போஜ்பூரி , பஞ்சாபி , மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் மற்றும் காதலன் திரைப்படத்தில்
பிரபுதேவாவுடன் நடித்துப் புகழ் பெற்றார். காதலன் திரைப்படத்துக்காக இவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
அரசியல் அவதாரம்
2014ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில்
காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதில் போட்டியிட்டார்.
இயற் பெயர் நந்திதா மொராஜி
பிறப்பு திசம்பர் 25 , 1974
மும்பை, இந்தியா
வேறு பெயர் நர்மதா சாதனா
நடிப்புக் காலம் 1990 - தற்போதுவரை
விருதுகள்
பில்ம்ஃபெயார் விருதுகள்
சிறந்த நடிகை (தமிழ்): காதலன் (1994)


நடித்துள்ள திரைப்படங்கள்
நடித்துள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியல் கீழ்வருமாறு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
1994 காதலன் ஸ்ருதி
1995 பாட்சா பிரியா
1995 ரகசியப் போலிஸ்
1995 வில்லாதி வில்லன் ஜானகி
1996 லவ் பேர்ட்ஸ்
1996 மேட்டுக்குடி
1997 ஜானகிராமன் இந்து
1997 பெரிய தம்பி செல்வி
1997 பிஸ்தா வெண்ணிலா
1997 அரவிந்தன்
1998 வேட்டிய மடிச்சு கட்டு
2001 சிட்டிசன் சிபிஐ அதிகாரி
2001 தீனா குத்துப்பாடல் நடனக்காரியாக

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

நடிகர் பி. ஜி. வெங்கடேசன் நினைவு தினம் - டிசம்பர் 24, 1950



நடிகர் பி. ஜி. வெங்கடேசன் நினைவு தினம் - டிசம்பர் 24, 1950

பி. ஜி. வெங்கடேசன் (அண். 1910 - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார். தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான காளிதாசில் (1931) கதாநாயகனாக நடித்தவர்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் வெங்கடேசன். பி. யு. சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" எனத் திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.

நடித்த திரைப்படங்கள்

காளிதாஸ் (1931)
பட்டினத்தார் (1936)
அம்பிகாபதி (1937)
தாயுமானவர் (1938)
ஜோதி (1939)
சகுந்தலை (1940)
சதி முரளி (திரைப்படம்) (1940)
திலோத்தமா (1940)
பக்தி (அம்பரீஷன் சரித்திரம்) (1940)
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941)
வேதவதி (சீதா ஜனனம்) (1941)
சன்யாசி (1942)
மாயஜோதி (1942)
கங்காவதார் (1942)
பொன்னருவி (1947)
கங்கணம் (1947)
ஜம்பம் (1948)
ஞானசௌந்தரி (1948)
பிழைக்கும் வழி (1948)
கலியுகம் (1952)
பாடல்கள்
1939 இல் வெளியான ஜோதி திரைப்படத்தில் விபவசுகுண தேவா ,
பிரம்மன் எழுத்தினால் ,[அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆகிய பாடல்களைப் பாடினார்.
1940 இல் வெளிவந்த சகுந்தலை திரைப்படத்தில் வண்டிக்காரனாக நடித்து பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே என்ற பாடலைப் பாடினார்.
மறைவு
பி. ஜி. வெங்கடேசன் தனது 40 ஆவது அகவையில் மாரடைப்பால் சேலத்தில் காலமானார்.

வெள்ளி, 22 டிசம்பர், 2017

இயக்குனர் கே. பாலசந்தர் நினைவு தினம் டிசம்பர் 23 , 2014.


இயக்குனர் கே. பாலசந்தர் நினைவு தினம் டிசம்பர் 23 , 2014.

கைலாசம் பாலச்சந்தர் ( K. Balachander , கே. பாலச்சந்தர் , சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார்.
கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார்  . இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன் , எதிர் நீச்சல் ,
வறுமையின் நிறம் சிகப்பு , உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.
வாழ்க்கையும், கல்வியும்
இவரது சொந்த ஊர் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி . தந்தை கைலாசம் தாயார் காமாச்சியம்மாள். தந்தைக்கு கிராம முனிசிப் பணி. நன்னிலத்தில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. முடித்தார். இராம. அரங்கண்ணல் இவரது பள்ளித் தோழர். எம். எஸ். உதயமூர்த்தி இவரது கல்லூரித் தோழர். "கவிதாலயா " என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அறிமுகப்படுத்திய புதுமுகங்கள்
இயக்குனர் ஸ்ரீதரைப் போலப் பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவர் பாலச்சந்தர். அவர்களுள் மிக உச்சத்தை அடைந்தவர் ரஜினிகாந்த். கமலஹாசனை கதாநாயகனாக்கியது பாலச்சந்தர் அல்லவெனினும், வரிசையாக அவருக்கு வாய்ப்புக்களை அமைத்துக் கொடுத்தவர் பாலச்சந்தர்.
அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இது ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் ஒரு வெற்றிப்படமே.
மேலும், பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோர் அடங்குவர்.
வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் அறிமுகமான திலீப் மற்றும் நிழல் நிஜமாகிறது படத்தில் அறிமுகமான அனுமந்து ஆகியோர் எதிர்பார்த்த அளவில் திரையுலகில் முன்னேறவில்லை. பாலச்சந்தர் அவர்களை அறிமுகம் செய்த படத்தில் மிகுந்த அளவில் நற்பெயரைப் பெற்றிருந்தனர்.
எஸ். வி. சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு) மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி. மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை திரைக்கு பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். பாலச்சந்தரின் பல படங்களில் நடித்திருந்த
மேஜர் சுந்தரராஜன் ( மேஜர் சந்திரகாந்த் ) இவ்வாறு அறிமுகமானவரே. அவரது இடுபெயரான மேஜர் என்பது இப்படத்திலிருந்தே விளைந்தது.
எம். ஆர். ராதாவின் மகன் ராதாரவியை அறிமுகப்படுத்தியவர் இவரே.
சுவையான தகவல்கள்
தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன் , நாகேஷ் , மேஜர் சுந்தரராஜன் ,
கமலஹாசன் முத்துராமன் ஆகியோர்.
நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஸ்ரீதரைப் போல, பாலச்சந்தரும், தமது துவக்க மற்றும் இடைக்காலப் படங்களில் ஜெமினி கணேசனை வெகுவாகப் பயன்படுத்தியிருந்தார். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, வெள்ளி விழா, நூற்றுக்கு நூறு ஆகியவை அவற்றில் அடங்கும்.
இயக்குனர் ஸ்ரீதர் பல விடயங்களிலும் தமது முன்னோடி என அவர் உரைத்தது மட்டும் அன்றி, தமக்குப் பின்னர் வந்த
பாரதிராஜா, மணிரத்னம் போன்றோரையும் அவர் பல நேரங்களில் பாராட்டியுள்ளார். பாரதிராஜாவின்
புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவரது பாராட்டுப் பேச்சு ஒரு படைப்பாளியாக உணர்ச்சி வசப்படும் அவரது தன்மையை வெளிப்படுத்திப் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
சிவாஜி கணேசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி . 1971 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியுற்றது.
பாலச்சந்தர் வண்ணத்தில் இயக்கிய முதல் படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தோல்வியடைந்தது. இதற்குப் பின்னர், மீண்டும் கருப்பு வெள்ளைக்கே திரும்பி விட்ட பாலச்சந்தர் இயக்கிய அடுத்த வண்ணப்படம் முற்றிலும் புதுமுகங்களையே கொண்டிருந்த
பட்டினப் பிரவேசம் மற்றும் அதை அடுத்து கமலஹாசன் கதாநாயகனாக நடித்த மன்மத லீலை . பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம்
நிழல் நிஜமாகிறது.
துவக்க காலத்தில் நாடகபாணித் திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா ,
பாமா விஜயம் போன்றவை. இவை வெற்றிப்படங்களாக விளங்கிடினும், பிற்காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு (ரஜினிகாந்த் நடித்த இப்படம்
இந்தியில் அமோல் பாலேகர் நடித்த கோல்மால் என்னும் படத்தைத் தழுவியது), பொய்க்கால் குதிரை ஆகியவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
நான்கு சுவர்கள் படுதோல்வி அடைந்து, விமர்சன அளவிலும் ஒதுக்கப்பட்ட அதே கால கட்டத்தில் அவரது
நூற்றுக்கு நூறு வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.
அரசியல் களத்தைத் தொட்டுப் பார்த்த பாலச்சந்தரின் படங்கள் தண்ணீர் தண்ணீர் (இது கோமல் சுவாமிநாதனின் அதே பெயரைக் கொண்ட நாடகத்திலிருந்து உருவானது; திரைப்படத்தின் வசனத்திற்கும் கோமல் பங்களித்திருந்தார்), அச்சமில்லை அச்சமில்லை போன்றவை.
பல ஆண்டுகளுக்கு தயாரிப்பு, வசனம், இயக்கம் ஆகிய பலவற்றிலும் பாலச்சந்தரின் வலக்கரமாகச் செயல்பட்டு வந்தவர் அனந்து. கமலஹாசன் முதலிய நடிகர்கள் இவரைத் தமது குரு என்றே குறிப்பிடுவர்.
நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றியிருப்பினும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்திற்கு அவர் வசனம் மட்டும் அளித்திருந்தார். தெய்வத் தாய் என்னும் அத்திரைப்படம் ஆர். எம். வீரப்பன் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம். பி. மாதவன் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தமது பாத்திரத்திற்காக
சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார்.
இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஈட்டித் தந்த படம் இது.
சிரஞ்சீவியின் நடிப்பில் தெலுங்கில் பாலச்சந்தர் இயக்கிய ருத்ரவீணா வெற்றி பெறவில்லை எனினும், கமலஹாசன் நடிப்பில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் வெளியான அதன் தமிழாக்கம் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது.
கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும் . ஆயினும், இது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.
பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.
ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டப்பெறினும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.
பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு தற்போது மறுவாக்கத்தில் உள்ளது.
பாலச்சந்தர் இயக்கிய படங்கள்
நூல் வேலி
நீர்க்குமிழி
நாணல்
மேஜர் சந்திரகாந்த்
இரு கோடுகள்
பூவா தலையா
பாமா விஜயம்
தாமரை நெஞ்சம்
நான் அவனில்லை
புன்னகை
எதிர் நீச்சல்
சிந்து பைரவி
அபூர்வ ராகங்கள்
தண்ணீர் தண்ணீர்
அச்சமில்லை அச்சமில்லை
வறுமையின் நிறம் சிகப்பு
புதுப்புது அர்த்தங்கள்
பார்த்தாலே பரவசம்
நூற்றுக்கு நூறு
டூயட்
சிந்து பைரவி
சொல்லத்தான் நினைக்கிறேன்
ஒரு வீடு இரு வாசல்
ஜாதிமல்லி
பொய்
அக்னிசாட்சி
கல்கி
வானமே எல்லை
பாலச்சந்தர் இயக்கிய இந்தித் திரைப்படங்கள்
ஏக் தூஜே கே லியே - தெலுங்கில் மரோசரித்ரா
ஜரா சி ஜிந்தகி - தமிழில் வறுமையின் நிறம் சிகப்பு
ஏக் நயீ பஹேலி தமிழில் அபூர்வ ராகங்கள்
இவற்றில் முதலாவதைத் தவிர மற்றவை இரண்டும் பெரும் தோல்வியைத் தழுவின.
விருதுகள்
பத்மஸ்ரீ விருது , 1987
தாதாசாகெப் பால்கே விருது , 2010 [3] .
மறைவு
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாலசந்தர் திசம்பர் 23, 2014 அன்று காலமானார்

வியாழன், 21 டிசம்பர், 2017

நடிகை ஜெயமாலினி பிறந்த தினம் டிசம்பர் 22.



நடிகை ஜெயமாலினி பிறந்த தினம் டிசம்பர் 22.

ஜெயமாலினி தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் திரைப்படங்களில்
குத்தாட்டப் பாடல் மூலம் பிரபலமானார். இவர் 500க்கும் மேற்பட்ட தெலுங்கு , தமிழ் ,
மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இளமைக் காலம்
ஜெயமாலினி 1958 டிசம்பர் 22ல் ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.


திரைப்படம்
தமிழ்
அன்புக்கு நான் அடிமை
அன்னை ஓர் ஆலயம் (திரைப்படம்)
அந்த ஒரு நிமிடம் (1985)
டாக்டர். சிவா (1975)
என்னைப் பார் என் அழகைப் பார்
கந்தர்வக் கன்னி
கர்ஜனை (1981)
குரு (1980)
குடும்பம் (1967 திரைப்படம்)
நாம் இருவர்

புதன், 20 டிசம்பர், 2017

நடிகை தமன்னா Tamanna Bhatia , பிறந்த நாள் டிசம்பர் 21, 1989



நடிகை தமன்னா  Tamanna Bhatia , பிறந்த நாள் டிசம்பர் 21, 1989

தமன்னா ( Tamanna Bhatia , பிறப்பு டிசம்பர் 21, 1989) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசூடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார். இவர்
சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.
ஆரம்பகால வாழ்க்கை
தமன்னா சந்தோஷ் மற்றும் ரஜனி பாட்டியாவின் மகள். 1989 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம்
மும்பையில், இந்தியாவில் பிறந்தார். அவருக்கு ஆனந்த் என்ற ஒரு அண்ணன் உண்டு. அவரது தந்தை ஒரு வைர வியாபாரி ஆவார். அவர் சிந்தி வம்சாவழியில் வந்தவர் ஆவார். அவர் மும்பையில் உள்ள மனேக்ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளி இல் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு எண்கணித காரணங்களுக்காக அவரது திரைப் பெயர் மாற்றப்பட்டது(Tamannaah).


திரைவாழ்க்கை

ஆண்டு திரைப்படம் வேடம்
2005
சாந்த் சே ரோசன் செகரா
சியா
சிறீ சந்தியா
2006 கேடி பிரியங்கா
2007
வியாபாரி சாவித்திரி பிரகாசு
ஏப்பி டேய்சு மது
கல்லூரி சோபனா
2008
காளிதாசு அர்ச்சனா
ரெடி
நேற்று இன்று நாளை
சுவப்னா

2009
படிக்காதவன் காயத்ரி
கொஞ்சம் இசுட்டம் கொஞ்சம் கசுட்டம்
கீதா
அயன் யமுனா
ஆனந்த தாண்டவம் மதுமிதா
கண்டேன் காதலை அஞ்சலி



2010
பையா சாருலதா
சுறா பூர்ணிமா
தில்லாலங்கடி நிஷா
2011
சிறுத்தை ஸ்வேதா
பத்ரிநாத்
ஐ லவ் யு
வேங்கை ராதிகா
ராச்ச முனியாமாஹ்
2012 ராச்ச சைத்ரா (அம்மு)


நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா டிசம்பர் 21, 1985

ஆண்ட்ரியா ஜெரெமையா ( ஆங்கிலம் : Andrea Jeremiah) (தோற்றம்: டிசம்பர் 21 , 1985 ) பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின.

வாழ்க்கை

ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள ,
அரக்கோணத்தில் , ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர்,
நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார். இவருடைய தந்தை,
சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்கறிஞராக உள்ளார். இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார்.  ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் ( T he S how Must Go O n-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
பின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு,  அவருடைய அடுத்த படமான
பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில்
சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கொண்டது. ஆண்ட்ரியா கல்யாணி வெங்கடேசாகவும் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதால், பிணையக் கைதியாக நடித்தார். சிம்ரன் , சோபனா , தபு உள்ளிட்ட நடிகைகளின் நிராகரிப்புக்குப்பின் இக்கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதன் பிறகு,
செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகத்து 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார். இவர்,
கமல்ஹாசனுடன் , விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின் , வட சென்னை திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.


பிறப்பு ஆண்ட்ரியா ஜெரெமையா
திசம்பர் 21, 1985 (அகவை 31)
அரக்கோணம், தமிழ்நாடு,
இந்தியா
இருப்பிடம் சென்னை , தமிழ்நாடு,
இந்தியா
பணி பின்னணிப் பாடகர்,
நடிகை , பின்னணிக் குரல் கொடுப்பவர்
செயல்பட்ட
ஆண்டுகள்
2007—தற்போது

நடிகையாக

வருடம் திரைப்படம் கதாப்பாத்தி
2005 கண்ட நாள் முதல்
2007 பச்சைக்கிளி முத்துச்சரம்
கல்யானி வெங்கடேஷ்
2010 ஆயிரத்தில் ஒருவன்
லாவன்யா சந்திரமெளலி
2011 மங்காத்தா சபிதா ப்ரித்விராஜ்
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி
2012 புதிய திருப்பங்கள்
2012 வட சென்னை
2013 விஸ்வரூபம்_(2013_திரைப்படம்)
அஸ்மிதா சுப்பிரமணிய
2014 விஸ்வரூபம்_2_(_2014_திரைப்படம்_)
அஸ்மிதா சுப்பிரமணிய
பின்னணிப் பாடகியாக
வருடம் பாடல் திரைப்படம்
2005
கண்ணும் கண்ணும் நோக்கியா
அந்நியன் த
2006 வீ ஹேவ் எ ரோமியோ பொமரில்லு த
2006 கற்க கற்க வேட்டையாடு விளையாடு த
2006 சர சர ராக்கி த
2006 கிலி தேசமுத்துரு த
2008 ஓஹ் பேபி ஓஹ் பேபி
யாரடி நீ மோகினி த
2008 நேனு நீ ராஜா கிங் த
2009 அம்மாயிலு அப்பாயிலு கரண்ட் த
2010 மாலை நேரம் ஆயிரத்தில் ஒருவன் த 2010 ஓஹ் ஈசா
2010 ஏனோ ஏனோ ஆதவன் த
2010
தீராத விளையாட்டு பிள்ளை


2010 இது வரை கோவா த
2010 பூக்கள் பூக்கும் மதராசபட்டினம் த
2010 தேடியே தேடியே வ த
2010 ஹூ இஸ் த ஹீரோ? மன்மதன் அம்பு த
2010 நா பேரே மல்லீஸ்வரி சையி ஆட்டா த
2011 எனக்காக உனக்காக
காதல் 2 கல்யானம் த
2011 நோ மணி நோ ஹனி வானம் த
2011 திவாலி தீபானி தாதா த
2011 காதலிக்க வெடி த
2011 ஒரு முறை முப்பொழுதும் உன் கற்பனைகள் த
2012 யேலேலோ மெரீனா த
பின்னணிக் குரல் கொடுப்பவராக
வருடம் திரைப்படம் பிண்ணனி குரல்
2006 வேட்டையாடு விளையாடு
கமாலினி முகர்ஜி
2010 ஆடுகளம் டாப்ஸி [13]
2012 நண்பன் இலியானா

செவ்வாய், 19 டிசம்பர், 2017

பாடகி ஹரிணி ரவி Harini Ravi , பிறந்த நாள் டிசம்பர் 20 , 1994.



பாடகி ஹரிணி ரவி Harini Ravi , பிறந்த நாள் டிசம்பர் 20 , 1994.

ஹரிணி ரவி ( Harini Ravi , பிறப்பு: திசம்பர் 20 , 1994 ) ஒரு பாடகராகவும் குரல் வழங்குனராகவும் (Dubbing Artiste) அறியப்படுகின்றார். இவர் வயலின் இசைக் கலைஞர் வி. வி. ரவி மற்றும் குரல் வழங்குனர் விசாலம் ரவி ஆகியோரின் மகள்.
இளமைப்பருவம்
ஹரிணி ரவி 1994, டிசம்பர் 20 இல் சென்னை நகரில் பிறந்தார். சென்னை மைலாப்பூரில் உள்ள சர் சிவசுவாமி கலாலயா பள்ளியில் +2 படிப்பை முடித்தார்.
பள்ளியளவில் இவர் இசைத்துறை, விளையாட்டு, ஓவியக்கலை, பகவத் கீதைப் பாராயணம் போன்ற துறைகளில் பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.
பாடகர்
ஹரிணி ரவி 6-ம் வயதில் தனது முதல் குரல் வழங்கினார். அதன் பிறகு 2000-க்கும் மேற்பட்ட விளம்பர குறும்படங்களுக்கு குரல் வழங்கியுள்ள ஹரிணி
இளையராஜா , ஏ. ஆர். ரகுமான் ,
வித்யாசாகர், டி. இமான் , கே. பாக்யராஜ் ,
தீனா , விஜய் ஆன்டணி மற்றும் கவி பெரிய தம்பி போன்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் சேர்ந்திசையிலும் (கோரசிலும்) பாடியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், கண்ட நாள் முதல் திரைப்படத்தின் தலைப்பு பாடலையும் மைனா திரைப்படத்தில் வரும் கிச்சு கிச்சு தாம்பூலம் போன்ற பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.
பாடிய பாடல்கள்
பாடல் படம் ஆண்டு
சிக்கு சிக்கு பூம் பூம் மாசிலாமணி 2009
கிச்சு கிச்சு தாம்பூலம் மைனா 2010
கொத்தவரங்கா ஐவர் 2011
மண்வாசம் முத்துக்கு முத்தாக 2011
சுட்டி பெண்ணே
உச்சிதனை முகர்ந்தால் 2011
நான் சார்லி சாப்லின் பொண்ணு
சாப்லின் சாமந்தி 2012
ஜெயா தொலைக்காட்சியின் ராகமாலிகா, சன் தொலைக்காட்சியின் சப்த சுவரங்கள் நிகழ்ச்சியிலும் பொதிகையின் ஆஹா பாடலாம் ஆகிய நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று பாடியுள்ளார். யுனிசெப் அமைப்புடன் இணைந்து நலந்தா-வே தயாரித்து தமிழக ஆளுநர் திரு. சுர்ஜித் சிங் பர்னாலாவால் வெளியிடப்பட்ட ஷவுட் இட் அவுட் என்ற ஆல்பத்திலும் இவர் பாடியுள்ளார்.

நடிகை பார்வதி ஓமனகுட்டன் பிறந்த நாள் டிசம்பர் 20 ,1987.




நடிகை பார்வதி ஓமனகுட்டன் பிறந்த நாள் டிசம்பர் 20 ,1987.

பார்வதி ஓமனகுட்டன் ( மலையாளம்:പാര്വ്വതി ഓമനക്കുട്ടന്; பிறப்பு டிசம்பர் 20 ,
1987 ) ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை.


2008 ல் மிஸ் இந்தியா வேர்ல்டு பட்டத்தையும் பின்னர் மிஸ் வேர்ல்டு 2008 போட்டியில் இரண்டாவது இடத்தையும் பெற்றார். பார்வதி, ஓமனகுட்டன் நாயருக்கு முதல் குழந்தையாக கேரளாவில் உள்ள கோட்டயத்தில் டிசம்பர் 20 ,
1987 அன்று பிறந்தார். இவர் எஸ் சி டி பி உயர்நிலை பள்ளி பயின்றார். பின்னர் மும்பை மிதிபாய் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார்.


நிக்கோல் பரியாவின் தாயகம் திரும்பிய கொண்டாட்டத்தில் பார்வதி ஓமனகுட்டன்
பிறப்பு பார்வதி ஓமனகுட்டன்
திசம்பர் 20, 1987 (அகவை 29)
சங்கனாச்சேரி , கேரளா ,
இந்தியா
இனம் நாயர்
உயரம் 1.74 m (5)
பட்டம் மிஸ் இந்தியா வேர்ல்டு 2008,


பாடகர் யுகேந்திரன் பிறந்த நாள் டிசம்பர் 20 , 1976.



பாடகர் யுகேந்திரன்  பிறந்த நாள் டிசம்பர் 20 , 1976.

யுகேந்திரன் ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார். இவர் இது வரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.மேலும் இவர் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.

பிறப்பு யுகேந்திரன் வாசுதேவன் நாயர்
20 திசம்பர் 1976
(அகவை 40)
சென்னை , தமிழ் நாடு , இந்தியா
பணி நடிகர், பாடகர்
செயல்பட்ட
ஆண்டுகள்
1987-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
Hayma Malini

வாழ்க்கை

இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்
மலேசியா வாசுதேவனின் மகன். இவரது சகோதரி பிரசாந்தினி தமிழ் பின்னணிப் பாடகராக உள்ளார். இவர் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை வானொலியான
சுவர்ண ஒலியில் பங்கேற்றபோது தன் வாழ்க்கைத்துணையான ஹேம மாலினியைக் கண்டார். இவரது மனைவி
சிங்கப்பூரைச் சேர்ந்தவர், வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

இசைப்பயணம்

சிறு வயதிலேயே இசை கற்ற இவர்
சுவிட்சர்லாந்து , சிங்கப்பூர் , மலேசியா,
இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரது
உழவன் மகன் என்ற திரைப்படத்தில், தனது முதல் பாடலான ”செந்தூரப் பூவே”யில், ஆடுமேய்க்கும் சிறுவனின் குரலில் பாடினார். பொள்ளாச்சி சந்தையிலே என்னும் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராகினார். பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்குப் பாடியுள்ளார்.
திரைப்பயணம்
இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும் ”மேகலா” மற்றும் “இதயம்” ஆகிய தமிழ் நாடகங்களிலும் நடித்துள்ளார்.
நடிகராக
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திர
2001 பூவெல்லாம் உன் வாசம் கர்ணா
2002 யூத் பிரதாப்
பகவதி ஆனந்த்
2003
ஸ்டூடண்ட் நம்பர் 1 சத்யா
கையோடு கை
அன்பே அன்பே சிவா
2004
ஒரு முறை சொல்லிவிடு
மதுர ஜீவன்
2005
திருப்பாச்சி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி
உள்ளக்காதல்
அலையடிக்குது
2007 முதல் கனவே டேவிட்
2008
னெஞ்சத்தைக் கிள்ளாதே மெய்யப்பன்
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
ராஜு
பச்சை நிறமே
2009
ராஜாதி ராஜா
நியூட்டனின் மூன்றாம் விதி தேவா
2011 யுத்தம் செய் இன்பா
2012
காதலானேன்
காதல் சாம்ராஜ்ஜியம்
பாடகராக
பாடலின் பெயர் இசைக்கோவை இ ப
ஏ சம்பா ஏ சம்பா பாண்டவர் பூமி
சுப மஹ
ஆடி ஆடி வாம்மா இந்திரன் சிறீ
அடிடா கோவா சரண்
ஆட்டோகிராப் ஐ லவ் யூ டா ஷா
கரோலினா காதல் சடுகுடு கார்
செர்ரி செர்ரி லவ் சேனல் அனு சிறீர
என்ன பார்க்கிறாய் தவமாய் தவமிருந்து சுசி
கல்யாணம்தான் கட்டிகிட்டு சாமி
கே க சிறீ பார்
கிழக்கே பார்த்தேன் ஆட்டோகிராப்
கோடைமலை மேல வச்சு
கண்ணன் வருவான் சரண்,
கோழி வந்ததா ஆஹா
அனு சிறீர மலே வாச சுஜ மோ
மெக்கி மெக்கி காதல் திருடா அனு சிறீர
முல்லைப் பூ காதல் சாம்ராஜ்ஜியம்
சரண், பிரப
முதல் முதலாய் லேசா லேசா மது திப்ப
நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே பிர
ஒ ஷல்லல்லா ஜமாய் ஜூனியர் சீனியர்
பிர சங்கர்
ஓ.. மரியா காதலர் தினம் தேவ மணி
ஒரு மாதிரி கீ மோ பிரச
பார்த்தேன் பார்த்தேன்
பார்த்தேன் ரசித்தேன் ரேஷ்
பார்த்தே பார்த்தே ரிலாக்ஸ் குழ
பிகாசோ ஓவியம் ராயல் பேமிலி பிரச
பொட்டல்ல காதிலே காதல் ஜாதி யுவ ராஜ
ரோசாப்பூ உதட்டுல தமிழ் அனு சிறீர
சுடும்வரை நெருப்பு ஜனனம்
பால கார் டிம்ம
சுத்துதே சுத்துதே நேபாளி விஜ
பொள்லாச்சி சந்தையிலே ரோஜாவனம்
விளக்குவொன்னு திரிய பார்க்குது
தேவதையைக் கண்டேன் மால
இசை இயக்குனராக
ஆண்டு படம் மொழி குறிப்ப
2007 வீரமும் ஈரமும் தமிழ்
2008 நெஞ்சத்தைக் கிள்ளாதே தமிழ்
ஒரு பாடல் மட்டும்
2009 பலம் தமிழ்
2011 நெல்லை சந்திப்பு தமிழ்
2012 காதலானேன் தமிழ்

நடிகர் ராஜேஷ் பிறந்த நாள் டிசம்பர் 20, 1949.


நடிகர் ராஜேஷ் பிறந்த நாள் டிசம்பர் 20, 1949.

ராஜேஷ் தமிழ்த் திரையுலகில் கதாநாயக நடிகராக, குணசித்திர நடிகராக விளங்கியவர். 1979ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்னும் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.
காரைக்குடியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னையில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். சிறிது காலம் ராயபுரம் கண்ணப்ப நாயனார் கழகத்தில் இருந்து விட்டு புரசைவாக்கம் புனித பவுல் மேல் நிலைப்பள்ளியில் பணியாற்றினார். பின்னர் கெல்லட் மேல் நிலைப்பள்ளியில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

பிறப்பு திசம்பர் 20, 1949
(அகவை 68)
மன்னார்குடி
மற்ற பெயர்கள்
சுவார்ட்ஸ் வில்லியம்ஸ்
பணி நடிகர்
செயல்பட்ட
ஆண்டுகள்
1978 - present
வாழ்க்கைத்
துணை
ஜோன் சில்வியா
விருதுகள் கலைமாமணி
நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
கன்னிப்பருவத்திலே
அந்த 7 நாட்கள்
தாலி தானம்
சிறை
மெட்டி
அச்சமில்லை அச்சமில்லை

வெள்ளி, 15 டிசம்பர், 2017

நடிகை லலிதா பிறந்த தினம் டிசம்பர் 16 , 1930.



நடிகை லலிதா பிறந்த தினம் டிசம்பர் 16 , 1930.

லலிதா ,திருவிதாங்கூர் சகோதரிகளில் மூத்தவர், ( பத்மினி, ராகினி ஏனைய சகோதரிகள்).  இவர் தமிழ் ,மலையாளம் ,இந்தி , மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

லலிதா
பிறப்பு லலிதா
திசம்பர் 16 , 1930
திருவனந்தபுரம் ,
திருவிதாங்கூர்
இறப்பு 23 நவம்பர் 1983
சென்னை , தமிழ்நாடு , இந்தியா
சமயம் இந்து
பெற்றோர் கோபால பிள்ளை, சரசுவதியம்மாள்

வாழ்க்கைக் குறிப்பு

திருவனந்தபுரத்திலுள்ள பூஜாப்புராவில் (அன்றைய
திருவிதாங்கூர் சமஸ்தானம்) அமைந்துள்ள தரவாடு மலாயா குடிலில், 1930ஆம் ஆண்டு கோபால பிள்ளை, சரசுவதியம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பரதக்கலையை குரு.கோபிநாத், மற்றும் குரு.மகாலிங்கம் பிள்ளையிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார்.

திரைத்துறை

தனது 18ஆம் அகவையில் 1948ஆம் ஆண்டு "ஆதித்தன் கனவு"  என்ற தமிழ் திரைப்படம் மூலம் திரை உலகிற்கு வந்தார்.
இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
ஆதித்தன் கனவு (1948)
ஏழை படும் பாடு (1950)
மருமகள் (1953)
அம்மா(1952)
அன்பு (1953)
தூக்குத்தூக்கி (1954)
கனவு (1954)
கணவனே கண் கண்ட தெய்வம் (1955)
காவேரி (1955)
மேனகா (1955)
உலகம் பலவிதம் (1955)
வள்ளியின் செல்வன் (1955)
ராஜ ராஜன் (1957)
இவர் நடித்த மலையாளத் திரைப்படங்கள்
வெள்ளி நட்சத்திரம் (1949)
அம்மா (1952)
காஞ்சனா (1952)
பொன்கதிர் (1953)
மின்னல் படையாளி (1959)
அத்யாபிகா (1968)
இறப்பு
1983ஆம் ஆண்டு காலமானார்.

வியாழன், 14 டிசம்பர், 2017

நடிகர் ஆதி பிறந்த நாள் டிசம்பர் 14 1982.


நடிகர் ஆதி பிறந்த நாள் டிசம்பர் 14  1982.

ஆதி (இயற்பெயர்:சாய் பிரதீப் பினிஷேட்டி) (பிறப்பு 14 டிசம்பர் 1982), என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார், பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களிலும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடிக்கின்றார்.
தமிழ் திரைப்பட உலகில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார்.  பின்பு
ஷங்கரின் தயாரிப்பில் உருவான ஈரம் படம் புகழைத் தேடித்தந்தது.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்
2006 ஒக்க விசித்திரம் (திரைப்படம்) பலராம்
2007 மிருகம் (திரைப்படம்) அய்யனார்
2009 ஈரம் (திரைப்படம்) வாசுதேவ
2010 அய்யனார் பிரபா /அய்யனார்
2011 ஆடு புலி (திரைப்படம்) இதயக்கனி
2012 அரவான் (திரைப்படம்)
வரிபுலி / சின்னான்
2013 குண்டல்ல கோதாரி
மாலி 2013 மறந்தேன் மன்னித்தேன்
2013 கோச்சடையான் (திரைப்படம்)
2013 யாகாவாராயினும் நாகாக்க

புதன், 13 டிசம்பர், 2017

இயக்குநர் வசந்த் பிறந்த நாள் டிசம்பர் 14


இயக்குநர் வசந்த் பிறந்த நாள் டிசம்பர் 14.

வசந்த் பிரபலமான தமிழ்த் திரைப்பட இயக்குநர். தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் பிறந்தவர். இவர் தன்னுடைய பள்ளி கல்வியை புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலூர் இல் பயின்றார் . இவருடைய முதற்படமான கேளடி கண்மணி சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் 285 நாள் ஓடிச் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக கேளடி கண்மணி திரைப்படம் கருதப்படுகிறது.
வாழ்க்கை
வசந்த் சிறுகதை எழுதியும் பத்திரிக்கையாளராகவும் தனது வாழ்க்கையை தொடங்கினார். . பிறகு
கே.பாலசந்திரடம் சிந்து பைரவி ,
புன்னகை மன்னன் உட்பட 18 படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். பின் தன்னந்தனியாக விமர்சன ரீதியாக பாராட்டபட்டு 285 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நடிப்பில் வெளிவந்த
கேளடி கண்மணி திரைப்படத்தை 1990 ல் இயக்கினார். இவரது அடுத்த படம் முந்தைய படத்தில் இடம்பெற்ற பாடலின் தலைப்பை தாங்கி வந்த நீ பாதி நான் பாதி திரைப்படம் மணமாகாத தாய்மார்களை பற்றி பேசியது. இந்த படத்தில் வரும் 'நிவேதா' என்ற ஒற்றை வார்த்தையில் உருவாக்கப் பட்டிருக்கும் பாடல் படமாக்கபட்டிருக்கும் விதம் பரவலாக பேசப் பட்டது. இவரது மூன்றாவது படைப்பு த்ரில்லர் வகையை சார்ந்த ஆசை 1995 ம் ஆண்டு வெளியாகி 200 நாட்கள் ஒடி வணீக ரீதியாக புது பாதையை உருவாக்கியது . மணி ரத்னம் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம்
அஜித் குமாருக்கு வணிக ரீதியாலான மாற்றத்தை மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாகவும் வழிவகுத்தது . தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் ஒன்றான சிறந்த அறிமுக கதாநாயகி க்கான விருது
சுவலட்சுமிக்கும் , சிறந்த இயக்குனருக்கான விருது வசந்துக்கும் வழங்கப்பட்டது. 1997ல் அடுத்த திரைப்படமான நேருக்கு நேர் படத்தையும் மணி ரத்னமே தயாரித்தார். இத்திரைப்படத்தில் அப்பொழுது முன்னணியில் இருந்த விஜய்க்கு இணையான கதாநாயகனாக நடிகர்
சிவகுமாரின் மூத்த மகனான
சூர்யாவை அறிமுகம் செய்து சிம்ரனை கதாநாயாகிக்கினார். தொடர்ச்சியாக வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப் பார் (1999) திரைப்படத்தில் பின்னாளில் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவை முதன்முதலில் ஜோடியாக்கினார். இந்த திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வுக்கும் மிகப்பெரிய இசை வெற்றியை தந்தது. அடுத்த ஆண்டு
அப்பு , ரிதம் என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கினார். அப்பு திரைப்படத்தில்
திருநங்கையாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தது எல்லோராலும் பாராட்டப்பட்டது. ஒரே விபத்தில் தங்கள் துணை இழந்த இருவர் அந்த துக்கத்தில் இருந்து வெளியேறி புது உறவை ஏற்பது ரிதம் படமாகும். இந்த திரைப்படத்தில் ஐவகை நிலங்களை அடிப்படியாக கொண்ட பாடல்களுக்கு
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார்.
ரிதம் படமே தன் இதயத்துக்கு நெருக்கமான படம் என்று வசந்த் தெரிவித்துள்ளார். அடுத்த திரைப்படமான ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே (2002) வில் ஐந்து பாடல்களுக்கு ஐந்து புதுமுக இசையமைப்பாளர்களை அறிமுகம் செய்து இந்திய சினிமாவில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தினார் . 2007ல் இயக்கிய த்ரில்லர் படமான சத்தம் போடாதே படம் விமர்சன ரீதியாக பாராட்டபட்டு அதிக வசூலை பெற்று, தமிழ் மாநில திரைப்பட விருதான சிறந்த திரைக்கதாசிரியர் விருதையும் பெற்றார். மூன்று காதலை மையமாக கொண்ட மூன்று பேர் மூன்று காதல் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளிவந்தது . 2015ம் ஆண்டு தொடங்கிய பெண்களுக்கு ஆதரவாக சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்திற்கு பிரபல கர்னாடக இசை பாடகி
சுதா ரகுநாதனை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.
வசந்த் திரைப்படங்களுக்கிடையே நிறைய விளம்பர படங்கள், குறும் படங்கள் மற்றும் ஆவண படங்களையும் இயக்கியுள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலான சா.கந்தசாமி எழுதிய விசாரணை கமிஷனை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய தாக்கையின் மீது நான்கு கண்கள் எனும் குறும்படம் சிறந்த கற்பனை குறும்படத்திற்கான தேசிய விருதினை 2005ம் ஆண்டு பெற்றது இவரது கலைப் பணியில் கவனிக்கபட வேண்டியது. 40க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை பன்னாட்டு நிறுவன்ங்களுக்காக விஜய் டிவிக்காக மணி ரத்னத்துடன் சேர்ந்து இயக்கியுள்ளார். இதற்கிடையில் மாணவர்களுக்காக திரைப்பட தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பட்டறைகளையும் வசந்த் நடத்திவருகிறார்.
திரைப்பட விபரம்

இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பங்காற்ற
இயக்குநர் ஆச
1990 கேளடி கண்மணி
1991 நீ பாதி நான் பாதி
1995 ஆசை
1997 நேருக்கு நேர்
1999 பூவெல்லாம் கேட்டுப்பார்
2000 அப்பு
2000 ரிதம்
2003
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே
2007 சத்தம் போடாதே
2013 மூன்று பேர் மூன்று காதல்
2016
சிவரஞ்சனியும் சில பெண்களும்
தண்ணீர்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
2014 நினைத்தது யாரோ
2015 வை ராஜா வை
கார்த்தியின் தந்தை.

செவ்வாய், 12 டிசம்பர், 2017

இயக்குநர் கர்ணன் நினைவு தினம்: டிசம்பர் 13 , 2012 .


இயக்குநர் கர்ணன் நினைவு தினம்: டிசம்பர் 13 , 2012 .

கர்ணன் (இறப்பு: டிசம்பர் 13 , 2012 ) தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் ஆவார். ஏறத்தாழ 150 திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் 25 திரைப்படங்களில் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் கற்பகம் திரைப்படத்தில் அறிமுகமாகிய கர்ணன்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் , வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சிம்லா ஸ்பெஷல், பொல்லாதவன் , சிவப்பு சூரியன் உட்படப் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பல சாகசக் காட்சிகளைத் திறம்பட படம் பிடித்தவராக அறியப்படுகிறார். இவர் இயக்கிய ஜம்பு திரைப்படத்தில் நீரினடியே எடுக்கப்பட்ட காட்சிகளும் இவரது மேற்கத்திய பாணி திரைப்படங்களில் குதிரைத் துரத்தல்களை படம் பிடித்த விதமும் பெரிதும் பேசப்பட்டன.
இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் பாமா, தாரா என்ற இரு மகள்களும் உள்ளனர். தமது 79வது அகவையில் திசம்பர் 13, 2012இல் மாரடைப்பால் காலமானார்.

இயக்கிய திரைப்படங்கள் சில

காலம் வெல்லும் (1970)
ஜக்கம்மா (1972)
கங்கா (1972)
ஒரே தந்தை (1976)
எதற்கும் துணிந்தவர்கள் (1977)
புதிய தோரணங்கள் (1980)
ஜம்பு (1980)


கர்ணன் – ஒளிப்பதிவாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்

சாரதா, கற்பகம், சிம்லா ஸ்பெஷல் போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், ‘கங்கா’, ‘எங்க பாட்டன் சொத்து’, ‘ஜம்பு’ போன்ற பதினொரு படங்களுக்கு மேல் இயக்கியவரும், பெண்ணே நீ வாழ்க, பெண்ணை வாழ விடுங்கள் போன்ற படங்களைத் தயாரித்தவர் கர்ணன்.

வீரபாண்டிய கட்டபொம்மனைப் போன்ற கம்பீரம், முறுக்கிய வெள்ளை மீசை, எளிமையான ஆடை, புருவங்களுக்கிடையே குங்குமம். அவர்தான் கர்ணன்.

திரையுலகுக்கு வரவேண்டுமென்று விரும்பி வந்தவரில்லை இவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விருப்பப்பட்டார். பெற்றோர் விடவில்லை. இவர் சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். அந்தக் காலத்திலேயே சினிமாத்துறையைச் சார்ந்த அநேகர் கோடம்பாக்கத்தில் குடியிருந்தார்கள். அதனால் சுற்றுப்புற சூழ்நிலைகள் காரணமாக இவருக்கும் சினிமாத் துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

’படங்களை மொழி மாற்றம் செய்ய டப்பிங்கைக் கண்டுபிடித்தவர் சவுண்ட் இஞ்சினியர் சீனிவாச ராகவன். அவருக்குச் சொந்தமான ரேவதி ஸ்டூடியோவில் முதன்முதலாக அப்பிரண்டீஸ் உதவி ஒளிப்பதிவாளராக சேர்ந்தேன். இவர்களது தலைமை ஒளிப்பதிவாளர் என்.சி.பாலகிருஷ்ணன். அவர்தான் இவருக்கு வேலைப் பயிற்சியளித்தார். உதவி ஒளிப்பதிவாளராக இவர் பணிபுரிந்தது ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’. இந்த ஸ்டூடியோவில் காமிரா யூனிட்டில் இவர் பணிபுரிந்த காலத்தில் ரெஹ்மான், பி.எஸ்.ரங்கா, பி.என்.ராய், வின்செண்ட், போன்ற மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களுடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார்.

டபிள்யூ.ஆர்.சுப்பாராவிடம் உதவியாளராக பணிபுரிய வேண்டுமென்பதற்காக ரேவதி ஸ்டூடியோவிலிருந்து விலகினார். பிறகு ஏ.எல்.சீனிவாசன் நிர்வாகத்திலிருந்த பரணி ஸ்டூடியோவில் சுப்பாராவ், பி.ஆர்.பந்துலு ஆகியோரின் சிபாரிசின் பேரில் ஒளிப்பதிவாளராகச் சேர்ந்தார்.

இவர் சுயமாக ஒளிப்பதிவு செய்த முதல் படம் ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’. அந்தப் படத்தின் இயக்குநர் பீம்சிங்.

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் படமான ‘சாரதா’ வை இவர் ஒளிப்பதிவு செய்தார். அது போல இயக்குநர் பி.மாதவன் போன்ற பல முன்னணி இயக்குநர்களின் படங்களையும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

15.10.1982 சினிமா எக்ஸ்பிரஸ் திரையிதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

இவர் இயக்கிய படங்களின் பெயர்கள்:-

காலம் வெல்லும்
கங்கா
ஜக்கம்மா
எங்க பாட்டன் சொத்து
ஜம்பு
புதிய தோரணங்கள்
அவனுக்கு நிகர் அவனே
சட்டத்துக்கு ஒரு சவால்
இது எங்க பூமி
ஆண்டவன் சொத்து
ஜான்சி ராணி
கருப்புச் சட்டைக்காரன்

நடிகை லட்சுமி பிறந்த நாள் டிசம்பர் 13.



நடிகை லட்சுமி பிறந்த நாள் டிசம்பர் 13.

லட்சுமி தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரத ராவ் மற்றும் தாய் குமாரி ருக்மணி இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.

தேசிய விருது

1970-ம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப்படம் சட்டக்காரி (1974) அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975-ம் ஆண்டு ஜூலி என இந்தியிலும் மிஸ் ஜூலி பிரேம கதா என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருதும் வங்காள திரையிதழாளர்கள் விருதும் . கிடைத்தது.

1977-ம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற எழுத்தாளர் செயகாந்தனின் புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 1980-களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்தபோது துணைநடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவர்ந்தார்.400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.

சின்னத்திரையிலும்

அச்சமில்லை,அச்சமில்லை என்ற அரட்டைக்காட்சியில் தமது முத்திரையைப் பதித்தார். சமூகப்பிரச்சினைகளையும் தனிமனித அவலங்களையும் இத்தொடர் வெளிக்கொணர்ந்தது. தற்போது கன்னட சுவர்ணா தொலைக்காட்சியில் எது கதே அல ஜீவனா எனும் அரட்டைக்காட்சியை நடத்தி வருகிறார்.

குடும்பம்

தனது பதினேழாம் வயதில் பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார். ஐஸ்வர்யா 1990-களில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் உடன் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.



''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

மா டியில் இருந்து இறங்கி வரும்போது மகளா, அம்மாவா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அருகில் வந்ததும்தான் தெரிகிறது... அதே லக்ஷ்மிகரமான முகம்; அதே ஐஸ்வர்யம் பொங்குகிற சிரிப்பு!
தேகத்தைக் காக்கும் வித்தைகளை இங்கே விவரிக்கிறார், நடிகை லட்சுமி.
''தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம்னு சொல்லுவாங்களே... அதுமாதிரி, நம்ம உடம்பு பட்டுப்போல இருக்கணும்னா, பாரம்பரியத்தை விடவே கூடாது.
சமைக்கிறது, சாப்பிடறதோட வேலை முடிஞ்சுடறது இல்ல. சாப்பிட்ட இடத்தை சுத்தம் பண்றதுங்கறது மிகப்பெரிய கலை. குத்துக்காலிட்டு உக்கார்ந்துண்டு, லேசா தண்ணியைத் தெளிச்சு, தரையில கைவைச்சு, அப்படியே சாப்பிட்ட இடத்துல இருக்கிற பருக்கைகளை லாகவமா சேர்த்துக்கிட்டே வந்து, மொத்தமா எடுத்து முடிச்சதும், திரும்பவும் கொஞ்சம் தண்ணிவிட்டுப் பளிச்சுனு துடைக்கணும். அப்படி நேர்த்தியா துடைக்கிறதை வைச்சே, புகுந்த வீட்ல அந்தப் பொண்ணு எப்படி இருப்பா; மாமியார், நாத்தனார்கிட்டே நல்லபேர் வாங்குவாளாங்கறதையெல்லாம் பெத்தவ ஆரூடமாச் சொல்லிடுவா! அதே நேரம், அப்படிக் குனிஞ்சு, கையை ஊனி, வளைஞ்சு துடைக்கறது, அந்தக் கால எக்ஸர்சைஸ்! இதை இன்னி வரைக்கும் கடைப்பிடிச்சுக்கிட்டு வரேன்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் லட்சுமி.
''அடுத்தாப்ல உணவு. 'ஒரே சமயத்துல அதிகமா சாப்பிட்டா, கலோரி அதிகமாகி, உடம்புக்கு பிரச்னையைக் கொடுக்கும். அதனால, மூணு வேளைங்கறதுக்குப் பதிலா, ஆறு வேளையாப் பிரிச்சுக்கிட்டுச் சாப்பிடுங்க’ன்னு இன்னிக்கு நிறையப் பேர் சொல்றாங்க. ஒருவகையில பார்த்தா, இதுவும் அந்தக் காலத்து வழக்கம்தான்! காலைல எட்டு மணிக்கு ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி சாம்பார், ரசம், மோர்னு சாப்பாடு; மத்தியானம் இட்லியோ, தோசையோ டப்பால அடைச்சுக் கொடுப்பாங்க. அப்புறம் ஸ்கூல் விட்டு வந்ததும் ஒரு உணவு; விளையாடிட்டு வந்ததும், கைகால் அலம்பிட்டு ஸ்லோகம், ஸ்கூல் பாடம்; முடிஞ்சதும் இரவு உணவுன்னு அழகாத் திட்டமிட்டிருந்தாங்க, வாழ்க்கையை!
இன்னிக்கு, ஏழாவது படிக்கிற என் மகள் சம்யுக்தாவை ஸ்கூலுக்கு அனுப்பறபோது, இதையெல்லாம்தான் மனசுல வைச்சுக்கிட்டு ஒவ்வொண்ணாப் பண்றேன். அதேபோல, காலை உணவு எட்டு மணிக்குள்ள கண்டிப்பா சாப்பிட்டே ஆகணும், எனக்கு! குறைச்சலா, அதே நேரம் அதிக சத்துக்கள் இருக்கிற உணவா சாப்பிடுறதுதான் என் உணவுக் கொள்கை. இதை சினிமா, ஷூட்டிங்னு பரபரப்பா இருந்தபோதும் கடைப்பிடிச்சேன்'' என்கிறார் லட்சுமி.

''அப்புறம் இன்னொரு விஷயம்... தினமும் யோகா பண்றேன். சாயந்திரமானா, கண்டிப்பா எங்க ஏரியாவுல நான் வாக்கிங் போறதைப் பார்க்கலாம். காலைல குளிச்சு முடிச்சதும், பூஜையறைல அரைமணி நேரம், முக்கால் மணி நேரம் உட்கார்ந்து பூஜை பண்ணுவேன்; பிராணா யாமம் செய்வேன்; மனசுல இருக்கிற மொத்தப் பிரச்னை களையும், 'இந்தாப்பா... உங்கிட்டக் கொடுத்துட்டேன்; நீதான் பாத்துக்கணும்’னு பாபாகிட்ட மானசீகமாப் பேசுவேன். இது எல்லாமே, உடம்பையும் மனசையும் மலர்ச்சிப்படுத்தற அற்புதமான விஷயங்கள்!
ஒருமுறை, ஷூட்டிங் இடைவெளியில், கொஞ்சம் ரிலாக்ஸ்டா, முதுகை நல்லாச் சாய்ச்சு உட்கார்ந்திருந்தேன். இதைப் பாத்துட்டு, எம்.ஜி.ஆர். அவர்கள் எங்கிட்ட வந்து, 'நல்லா நிமிர்ந்து, முதுகை நேராக்கி உட்காரப் பழகு. சுவாசம் சீராகும்; அப்படிச் சீரான சுவாசம் இருக்கும் போது, சிந்திக்கிறது எதுவுமே தப்பாது; ஒழுங்காச் செயல் படுத்த முடியும். அதுமட்டுமில்லாம, தப்பா எதையுமே சிந்திக்கத் தோணாது’ன்னு அட்வைஸ் பண்ணினார். இதோ... இப்பக்கூட பாருங்க, நிமிர்ந்துதான் உட்கார்ந் திருக்கேன்'' என்று சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிக்கிறார், லட்சுமி.
''நம்ம வாழ்க்கைல எத்தனையோ சம்பவங்கள்; எத்தனையோ மனிதர்கள்; வெற்றிகள், தோல்விகள், சந்தோஷங்கள், காயங்கள்... நம்மளைக் கைதூக்கிவிட்ட வங்களுக்கு நன்றியைச் சொல்லியிருப்போமா? இந்த உலகத்துல நம்மைப் படைச்ச கடவுளுக்கும், நம்மை அடையாளப்படுத்திய நல்ல மனிதர்களுக்கும், தினமும் இரவுப் படுக்கைக்குப் போகும்போது மனசார நன்றி சொல்லிட்டுத் தூங்குவோமே!
அதுல நமக்கு கிடைக்கிற ஆத்மதிருப்தி, நம்ம உடம் பையும் மனசையும் லேசாக்கிடும்; அழகாக்கிடும். முக்கியமா, நம்மளை இத்தனை நெடுங்காலத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கிற நம்ம உடம்புக்கும் அப்படியே தினமும் தேங்க்ஸ் சொல்லுவோம்.
படுத்த உடனே தூங்கறவங்க அதிர்ஷ்டசாலிங்கன்னு சொல்லுவாங்க. அவங்க ஆரோக்கியசாலிகளும் கூடத்தான்! அந்த வகையில நான் அதிர்ஷ்டம் ப்ளஸ் ஆரோக்கியசாலி!'' என்று கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்தபடி சொல்கிறார் லட்சுமி; ஆரோக்கியலட்சுமி!

கவிஞர் ஆலங்குடி சோமு பிறந்த தினம் டிசம்பர் 12 ,1932.



கவிஞர் ஆலங்குடி சோமு பிறந்த தினம்  டிசம்பர் 12 ,1932.

ஆலங்குடி சோமு (12 திசம்பர் 1932 - 6 சூன் 1990) தமிழ்த் திரைப்படபாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது 1973 - 1974 பெற்றுள்ளார்.
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் ,
காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். [1960 இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.
தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை

சில பிரபல பாடல்கள்

ஆண்டவன் உலகத்தின் முதலாளி... (தொழிலாளி)
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்...
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை... ( அடிமைப் பெண் )
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று... (பத்தாம்பசலி)
ஒரு கொடியில் (காஞ்சித்தலைவன்)
பொட்டிருந்தும் பூவிருந்தும் (பூம்புகார்)
கத்தியை தீட்டாதே (விளக்கேற்றியவள்)
மலருக்கு தென்றல் (எங்க வீட்டுப் பிள்ளை)
என்னடி செல்லகண்ணு (தேன்மழை)
மேகங்கள் திரண்டுவந்தால் (நான் ஆணையிட்டால்)
வெள்ளி நிலா வானத்திலே (காதல் படுத்தும் பாடு)
ஆடலுடன் பாடலைக்கேட்டு (குடியிருந்த கோயில்)
என்னம்மா ராணி (குமரிக்கோட்டம்)
இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களைன் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.
==தயாரித்த படங்கள்--
பத்தாம் பசலி
வரவேற்பு

ஆலங்குடி சோமு [பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர்]
தமிழ்த் திரையுலகில் 1960-களில் நுழைந்து 1990-களின் இறுதிக் காலம் வரை திரையிசைப் பிரியர்களுக்குப் பல கருத்தாழம் நிறைந்த பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் ஆலங்குடி சோமு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் சோமு.
1932-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் திகதியன்று பிறந்தவர். திரைக்கதை எழுதவேண்டுமென்ற ஆவலோடு திரையுலகை நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித் தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த தேவர் இப்படத்திற்குப் பாடல் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஆலங்குடி சோமு எழுதிய முதற்பாடல் 1960-இல் வெளிவந்த ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தில் ஏ.எல்.இராகவனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய ’ஆம்பளைக்குப் பொம்பளை அவசியந்தான்’’ என்ற பாடல். இஃது ஓர் நகைச்சுவைப் பாடல். படத்தில் இப்பாடல் காட்சியில் நகைச்சுவைச் செம்மல் குலதெய்வம் ராஜகோபாலும் மனோரமாவும் நடித்திருந்தனர். பாடலும் வெற்றியைப் பெற்றது.
1961-இல் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ படத்துக்காக ’கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்’, 1963-இல் ‘கலையரசி’ படத்தில் ’நீல வானப் பந்தலில்’, ’காஞ்சித் தலைவன்’ படத்தில் ‘அவனியெல்லாம் புகழ் மணக்கும் அம்மன் அருள்’, பி.பானுமதி பாடிய ’மயங்காத மனம் யாவும் மயங்கும்’ போன்ற பாடல்கள் ஆலங்குடியாரின் பிரபலமான பாடல்களாகும்.
1964-ஆம் ஆண்டு இரண்டு படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். அவை ‘தொழிலாளி’, ‘தெய்வத்தாய்’. ‘தொழிலாளி’ படத்தில் ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி’ என்ற பாடல் பொதுவுடமை, சகோதரத்துவம், ஒற்றுமை என்பவற்றை அழகாக எழிய தமிழில் எடுத்துக் கூறிய பாடல். சோமு எம்.ஜி.ஆருக்காக எழுதிய முதல் பாடலும் இதுதான்.
1965-ஆம் ஆண்டு 10 படங்களுக்குப் பாடல் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. ‘இரவும் பகலும்’, ’எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒரு விரல்’, ‘கார்த்திகை தீபம்’, ‘எங்க வீட்டுப் பெண்’, ’பூஜைக்கு வந்த மலர்’, ‘நாணல்’, ’நீர்க்குமிழி’, ‘விளக்கேற்றியள்’ என்பவை அந்த பத்தில் அடக்கம். ‘இரவும் பகலும்’ படத்தில் ஆறு பாடல்களை எழுதினார். நடிகர் எஸ்.ஏ.அசோகன் பாடிய ஒரே பாடலான ‘இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான்’, ரி.எம்.எஸ்.பாடிய ‘இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்’ பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றப் பாடல்களாகும். இதே ஆண்டில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’க்காக இவர் எழுதிய எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினருடன் பாடிய கண்களும் காவடிச் சிந்தாகட்டும், காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்’ என்ற பாடலை எழுதித்தரும்படி கேட்டவுடன் ஏழே நிமிடங்களில் எழுதிக்கொடுத்தார் ஆலங்குடி சோமு. எம்.ஜி.ஆரிடம் ஆலங்குடி சோமுவை அறிமுகப்படுத்தியவர் நடிகர் எஸ்.ஏ.அசோகன். இதே படத்தில் வரும் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ’மலருக்குத் தென்றல் பகையானால்’ பாடலும் இவர் எழுதியதே.
1968-இல் வெளிவந்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் இவர் எழுதிய ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ என்ற ரி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய பாடலைக் கேட்டு ரசிக்காத உள்ளங்கள் இல்லையெனலாம். இப்படத்தின் பாடல்களை நான்கு கவிஞர்கள் எழுதினார்கள். திரையில் இந்தப் படத்தின் தலைப்புப் பட்டியலில் [டைற்றில்] ஆலங்குடி சோமுவின் பெயரும் இடம்பெற்றிருக்கும். இசைத்தட்டில் இந்தப் பாடல் கவிஞர் வாலி எழுதியதாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இணையதளங்களிலும், கவிஞர்களின் பாடல் பட்டியல்களிலும் ஆலங்குடி சோமு என்பதாகத்தானிருக்கும். இதே படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை’ என்ற பாடலும் இவர் எழுதியதுதான்.
1966-இல் ஆறு படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். ‘காதல் படுத்தும் பாடு’, ‘சாது மிரண்டால்’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’, ‘செல்வம்’, ‘தேன் மழை’, ‘நான் ஆணையிட்டால்’ ஆகிய படங்களே அவை. 1967-இல் ‘காவல்காரன்’, ‘அரசகட்டளை’, ‘பக்தப்ரஹலாதா’ போன்ற படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதினார். ரி.எம்.எஸ். பாடிய ‘அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரன்’ என்ற பாடல் மிக மிகப் பிரபலமானது. இதே படத்தில் மற்றொரு பாடல் ‘கட்டழகுத் தங்க மகள் திருநாளோ, அவள் கிட்டே வந்து கட்டி முத்தம் தருவாளோ’ என்ற பாடலும் மிகப் பிரசித்தம் பெற்றது. 1968-இல் ‘கணவன்’, ‘கண்ணன் என் காதலன்’, ’காதல் வாகனம்’, ‘சத்தியம் தவறாதே’, ‘தெய்வீக உறவு’, ‘பொம்மலாட்டம்’ படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். ‘பொம்மலாட்டம்’ படத்தில் சுசீலா பாடிய ‘மயக்கத்தைத் தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி’, பாடல் ரசிகர்களை மயங்கச்செய்தது.
1969-இல் ‘அடிமைப்பெண்’, ‘அத்தை மகள்’, ’கன்னிப்பெண்’, ‘மனசாட்சி’ ஆகிய படங்களுக்கு எழுதினார். 1970-இல் ‘பத்தாம் பசலி’, ‘சொர்க்கம்’, 1971-இல் ‘குமரிக்கோட்டம்’ என்ற ஒரேயொரு படம். 1972-இல் ‘உனக்கும் எனக்கும்’, ‘வரவேற்பு’, ‘திருமலை தெய்வம்’ என்ற 3 படங்களுக்கு எட்டு பாடல்கள் எழுதினார். 1973-இல் ‘பொன் வண்டு’ என்ற ஒரே படம். 1974-இல் ‘இதயம் பார்க்கிறது’, ‘தாய் பிறந்தாள்’, ‘திருமாங்கல்யம்’ ஆகிய படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. 1975-இல் ‘பணம் பெண் பாசம்’, 1976-இல் ’ஆசை 60 நாள்’, 1977-இல் ’மழை மேகம்’, ’16 வயதினிலே’, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ ஆகிய 3 படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
1960 தொடங்கி, 1997 வரை 35 ஆண்டுகளில் எண்பது படங்களுக்கு 170 பாடல்கள் எழுதியுள்ளார் ஆலங்குடி சோமு. இவர் கடைசியாக எழுதியது ‘பொற்காலம்’ படத்திற்கு எழுதியது 1997-இல் வெளிவந்தது. பிற்காலத்தில் பாரிஸவாத நோயினால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.
இவர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நாகேஷ், ஜெமினிகணேஷ், ராஜஸ்ரீ, பேபி ராஜி, வசந்தா, விஜயலலிதா நடித்த ‘பத்தாம் பசலி’ என்ற படத்தையும், ஜெய்சங்கர், ஜெயகௌசல்யா, ஜே.பி.சந்திரபாபு, சுருளிராஜன், மனோகர், ஏ.சகுந்தலா, ரமாபிரபா, ஜஸ்டின் நடித்த ‘வரவேற்பு’ என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவ்விரு படங்களும் வெற்றி பெறவில்லை. ஆனால் பத்தாம் பசலியில் இடம் பெற்ற ‘அம்மாடி எம்புட்டு தூரம் நடக்குறது’, ‘வெள்ளை மனம் கொண்ட பிள்ளையொண்ணு’, ’போடா பழகட்டும் ஜோடி’, ‘பத்தாம் பசலி மாமா…. மாமோய், அந்தப் பாடம் படிக்கலாமா’ ஆகிய பாடல்கள் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அது போல ‘வரவேற்பு’ படத்தில் இடம்பெற்ற ‘பொன் வண்ண மாலையில் நீ தொடும்போது’, ‘வரவேண்டும் மகராஜா தரவேண்டும் புதுரோஜா’, ‘ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்’ ஆகிய பாடல்களும் அன்றைய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும்.
1973-74-ஆம் ஆண்டில் இவருக்கு தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இலங்கை வானொலி, வர்த்தக சேவையின் ‘இன்னிசைச் சுவடுகள்’ நிகழ்ச்சியிலிருந்தும், இணையதளத்திலிருந்தும் இத்தகவல்கள் பெறப்பட்டன.

நடிகை சௌகார் ஜானகி பிறந்த நாள் டிசம்பர் 12, 1931 .



நடிகை சௌகார் ஜானகி பிறந்த நாள் டிசம்பர் 12, 1931 .

சௌகார் ஜானகி (பிறப்பு:திசம்பர் 12, 1931 தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர். குமுதம் , பாலும் பழமும் ,
பார்த்தால் பசிதீரும் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். புதிய பறவை படம் திரைப்பட உலகில் அவருக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்தியது.
பிறப்பும் வளர்ப்பும்
ஜானகி நடுத்தரமான தெலுங்கு பேசும் குடும்பத்தில் 1931 டிசம்பர் 12 இல் பிறந்தார். தனது 16 வது வயதில் சென்னை வானொலியில் பாடியும் உள்ளார். அப்போது சினியா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தும் ,திருமணம் செய்ய விருப்பதால் மறுத்து விட்டார். பின்னர் சங்கரமராஞ்சி சீனிவாச ராவ் என்பவரை 1947இல் திருமணம் செய்து கொண்டு மேகாலயாவில் தலைநகர் ஷில்லாங்கில் குடி புகுந்தார் .இவருக்கு கிருஷ்ணகுமாரி என்ற தங்கையும், ராமு என்ற தம்பியும் உண்டு . கிருஷ்ண குமாரி தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக விளங்கியவர்.

திரையுலக வாழ்க்கை

தெலுங்கில் முதல் படம்:சௌகார்; தயாரிப்பு:விஜயா புரடக்சன்ஸ். என். டி. ராமராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
கதாநாயகியாக ஏ. நாகேஸ்வர ராவ் , என். டி. ராமராவ், ஜக்கையா, சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் இவர்களுடன் நடித்துள்ளார்.
இவர், தெலுங்கு நடிகை கிருஷ்ணகுமாரியின் அக்கா ஆவார்.

நடித்த திரைப்படங்கள்

இது முழுமையான பட்டியல் அல்ல.
1. மகாகவி காளிதாஸ்
2. எதிர்நீச்சல் (1968)
3. திருநீலகண்டர் (1972)
4. ஸ்கூல் மாஸ்டர் (1973)
5. நீர்க்குமிழி
6. பார் மகளே பார்
7. காவியத் தலைவி
8. உயர்ந்த மனிதன்
9. இரு கோடுகள்
10. பாக்கிய லட்சுமி
11. ரங்க ராட்டினம்
12. தில்லு முல்லு
13. காவல் தெய்வம்
14. நல்ல பெண்மணி
15. இதயமலர்
16. உறவுக்கு கை கொடுப்போம்
17. தங்கதுரை
18. படிக்காத மேதை
19. பணம் படைத்தவன்
20. அக்கா தங்கை
21. உயர்ந்த மனிதன்
22. ஏழையின் ஆஸ்தி
23. கண்மலர்
24. காவேரியின் கணவன்
25. சவுக்கடி சந்திரகாந்தா
26. தங்கதுரை
27. திருமால் பெருமை
28. தெய்வம்
29. நல்ல இடத்து சம்பந்தம்
30. நான் கண்ட சொர்க்கம்
31. பணம் படுத்தும் பாடு
32. பாபு
33. மாணவன்
34. மோட்டார் சுந்தரம் பிள்ளை
35. ரங்க ராட்டினம்

நடிகர் சேரன் பிறந்த நாள் டிசம்பர் 12.


நடிகர் சேரன் பிறந்த நாள் டிசம்பர் 12. 

சேரன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவரது மூன்று
திரைப்படங்கள் தேசிய விருதைப் பெற்றுள்ளன. 2000 ஆம் ஆண்டில் 'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்துக்கும் , 2004 ஆம் ஆண்டில் 'ஆட்டோகிராப்' திரைப்படத்துக்கும் , 2005 ஆம் ஆண்டில் 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன .

பிறப்பும் ,இளமை பருவமும்

சேரன் மதுரைக்கு அருகில் உள்ள கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 12 இல் பிறந்தார்.இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் டூரிங் தியேட்டரில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார் .தாயார் கமலா தன் கிராமத்திலே தொடக்க பள்ளி ஆசிரியை ஆகவேலை பார்த்தார். இவருக்கு உடன் பிறந்த தங்கை இருவர் .சிறு வயது முதல் சினிமாவென்றால் உயிராக இருந்தார் .சிறிய வயதில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், ஜூன் 19, 2011 அன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்ட இரு துணைத்தலைவர்களில் சேரனும் ஒருவர்.
சினிமாவில் வேலையும் ,ஆர்வமும்
திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னை வந்தார். ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே .எஸ் .ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார் .தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார் .பின்னர் கமலஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இயக்குனர்

உதவி இயக்குனராக இருந்த அவர் பார்த்திபன் -மீனா நடித்த பாரதி கண்ணம்மாவை இயக்கினார் .இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கினாலும் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது .தொடர்ந்து பொற்காலம்,பாண்டவர் பூமி ,வெற்றிக்கொடி கட்டு போன்ற சமூக அவலங்களை சித்தரித்தே எடுத்தார். அனைத்து படங்களும் வசூலில் சோடை போகவில்லை . இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர்
முரண் எனும் திரைப்படத்தினை தயாரித்தார். 

நடிகர் சேரன்

சேரன் தங்கர் பச்சன் இயக்கிய சொல்லமறந்த கதையில் கதாநாயகனாக நடித்து பாராட்டு பெற்றார் .பின்னர் பொக்கிஷம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது .நடிகர் விக்ரம் நடிக்க ஆட்டோகிராப் படம் தயாரானது .கால்சீட் பிரட்சனையால் அதுவும் கைவிடப்பட்டு ,பின்னர் அதில் இவரே கதாநாயகனாக நடித்தார் .இவரே இயக்கவும் செய்தார் . இந்த படத்திற்காக மிக கடுமையாக உழைத்தார் .பலனாக இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது .அதன் பிறகு 2004 இல்பொ ஆரம்பித்த பொக்கிஷம் படம் 2009 இல் வெளி வந்தது

விமர்சனம்

ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சேரன் "இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே, நாங்கள் எல்லாம், திரையுலகமே குரல் கொடுத்துள்ளோம். .. எங்களுடைய எல்லாவற்றையும் இழந்துவிட்டுப் போராடியுள்ளோம்... ஏன் இதையெல்லாம் பண்ணினோம் என்று அருவருப்பாகவுள்ளது..."  என்று முறையற்ற டிவிடி மற்றும் இணையப் பதிவேற்றம் செய்பவர்களாக இலங்கைத் தமிழர்களைக் குறிப்பிட்டது சர்ச்சையை உருவாக்கியது. 

சேரன் இயக்கிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி வ
1997 பாரதி கண்ணம்மா தமிழ்
1998 தேசிய கீதம் தமிழ்
சிறந்த இயக்க பிலி – தமி
பொற்காலம் தமிழ்
2000 வெற்றிக் கொடி கட்டு தமிழ்
சமூக பகுப் திரை விரு
2001 பாண்டவர் பூமி தமிழ்
சிறந்த பிலி (தமிழ்
2004 ஆட்டோகிராப் தமிழ்
சிறந்த தமிழ் திரை சிறந்த பிலி (தமிழ் திரை பிலி (தமிழ்
2005 தவமாய் தவமிருந்து தமிழ்
குடு நலன்க திரை பகுப் இயக்க விரு
2007 மாயக்கண்ணாடி தமிழ்
2009 பொக்கிசம் தமிழ்
சிறந்த இயக்க விஜய் முன்ம
2011
ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை
தமிழ்
சேரன் நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பாத்திர
2002
காதல் வைரசு இயக்குநர் சேர
சொல்ல மறந்த கதை சிவதாணு
2004 ஆட்டோகிராப் செந்தில்
2005 தவமாய் தவமிருந்து
இராமலிங்கம் முத்தையா
2007 மாயக்கண்ணாடி குமார்
2008
பிரிவோம் சந்திப்போம் நடேசன்
ராமன் தேடிய சீதை வேணுகோப
2009 பொக்கிசம் லெனின்
2011
யுத்தம் செய் ஜே.கிருஷ்ண
முரண் நந்தா
ஆடும் கூத்து

திங்கள், 11 டிசம்பர், 2017

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் டிசம்பர் 12 , 1950


நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் டிசம்பர் 12 , 1950 

ரஜினிகாந்த்  என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் (பிறப்பு: டிசம்பர் 12 , 1950 ), மராட்டியில் : रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜீராவ் காயகவாட்) ஒரு புகழ்பெற்ற தமிழ்த்
திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர். ஆசியாவில் நடிகர்
ஜாக்கி சான்-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் இவர். [ சான்று தேவை] 2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூசண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

இளமை
ரஜினிகாந்த், டிசம்பர் 12 1950 அன்று
இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

குடும்பம்

16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா , செளந்தர்யா ஆகியோர் இரு மகள்கள் ஆவார். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா, அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார்.தற்பொழுது இவர்களுக்கு இடையே விவாகரத்து ஆனது...
திரைப்படத்துறை
திரைப்படங்களில்
நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே , காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர்
புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா , போக்கிரி ராசா , முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல
நகைச்சுவை நடிகர் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.
1980களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன் , மனிதன் ,
தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை , பாட்சா , படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த
பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த
சந்திரமுகிக்கும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2010ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் படம் பெரு வெற்றியைப் பெற்றது.
ரஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும்.
தமிழ் மொழியிலும், தெலுங்கு , இந்தி ,
கன்னடம் , மலையாளம் , வங்காள மொழி ,
ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 160 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
ரசிகர்களிடம் வரவேற்பு
ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு
தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு
ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
அரசியல் தொடர்பு
1990களில் ரஜினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக பரவலாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த தேர்தல்களில், ரஜினிகாந்த் எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரஜினிகாந்த் அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். ரஜினிகாந்த் 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது,
எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார். லிங்கா பட இசை வெளியீட்டின் போது "அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால் வருவேன்" எனக் கூறினார்
புத்தகங்கள்
ரஜினி சகாப்தமா? என்ற தலைப்பில் ரஜினியின் அரசியல் வாழ்க்கை குறித்து ஜெ. ராம்கி எழுதிய புத்தகம் 2005ல் வெளியானது
ரஜினியின் பஞ்ச் தந்திரம் என்ற தலைப்பில் இவரது படங்களில் உள்ள 30 முத்திரை வசனங்கள் மூலம் மேலாண்மை தத்துவங்களை எடுத்துக்கூறும் புத்தகம். இப்புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
பாட்சாவும் நானும் எனும் நூலில் ரஜினியை சந்தித்தது முதல் ரஜினியுடனான சம்பவங்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார்.
ரஜினி இதில் அபூர்வராகங்கள் முதல் எந்திரன் வரையான ரஜினியின் திரைப்பட விமர்சனங்கள் பைம்பொழில் மீரான் என்பவரால் எழுதப்பெற்றுள்ளன.

நடித்த திரைப்படங்கள்.

எண் திரைப்படத்தின் பெயர் மொழி
1 அபூர்வ ராகங்கள் தமிழ்
2 கதா சங்கமா கன்னடம்
3 அந்துலேனி கதா தெலுங்கு
4 மூன்று முடிச்சு தமிழ்
5 பாலு ஜீனு கன்னடம்
6 அவர்கள் தமிழ்
7 கவிக்குயில் தமிழ் த
8 ரகுபதி ராகவன் ராஜாராம் தமிழ்
9 சிலாக்கம்மா செப்பண்டி தெலுங்கு
10 புவனா ஒரு கேள்விக்குறி தமிழ்
11 ஒண்டு ப்ரேமடா கதே கன்னடம்
12 16 வயதினிலே தமிழ்
13 சகோதர சவால் கன்னடம் க
14 ஆடு புலி ஆட்டம் தமிழ்
15 காயத்ரி தமிழ்
16 குங்கும ரக்ஷே கன்னடம்
17 ஆறு புஷ்பங்கள் தமிழ்
18 தொலிரேயி காலிசண்டி தெலுங்கு
19 அம்மே கதா தெலுங்கு க
20 கலாட்டா சம்சாரா கன்னடம் சி
21 சங்கர் சலீம் சைமன் தமிழ்
22 கில்லாடு கிட்டு கன்னடம் க
23 அண்ணாடாமுல சவால் தெலுங்கு க
24 ஆயிரம் ஜென்மங்கள் தமிழ்
25 மாது தப்பட மகா கன்னடம் ப
26 மாங்குடி மைனர் தமிழ் வ
27 பைரவி தமிழ்
28 இளமை ஊஞ்சலாடுகிறது தமிழ்
29 சதுரங்கம் தமிழ்
30 வணக்கத்துக்குரிய காதலியே தமிழ் ஏ.
31 வயசு பிலிசிண்டி தெலுங்கு
32 முள்ளும் மலரும் தமிழ்
33 இறைவன் கொடுத்த வரம் தமிழ்
34 தப்பிடா தாலா கன்னடம்
35 தப்பு தாளங்கள் தமிழ்
36 அவள் அப்படித்தான் தமிழ்
37 தாய் மீது சத்தியம் தமிழ்
பாவத்தின் சம்பளம் தமிழ்
38 என் கேள்விக்கு என்ன பதில் தமிழ்
39 ஜஸ்டிஸ் கோபிநாத் தமிழ்
40 ப்ரியா தமிழ்
41 ப்ரியா கன்னடம்
42 குப்பத்து ராஜா தமிழ் ட
43 இத்தரு ஆசத்யுலே தெலுங்கு க
44 அலாவுதீனும் அற்புதவிளக்கும் மலையாளம்
45 நினைத்தாலே இனிக்கும் தமிழ்
தாயில்லாமல் நானில்லை தமிழ்
46 அந்தமைனா அனுபவம் தெலுங்கு
47 அலாவுதீனும் அற்புதவிளக்கும் தமிழ்
48 தர்ம யுத்தம் தமிழ்
49 நான் வாழவைப்பேன் தமிழ்
50 டைகர் தெலுங்கு
51 ஆறிலிருந்து அறுபது வரை தமிழ்
52 அன்னை ஓர் ஆலயம் தமிழ்
53 அம்மா எவரிகைனா அம்மா தெலுங்கு
54 பில்லா தமிழ் க
நட்சத்திரம் தமிழ்
55 ராம் ராபர்ட் ரஹிம் தெலுங்கு
56 அன்புக்கு நான் அடிமை தமிழ்
57 காளி தமிழ்
58 மயாதரி கிரிஷ்னுடு தெலுங்கு
59 நான் போட்ட சவால் தமிழ்
60 ஜானி தமிழ்
61 காளி தெலுங்கு
62 எல்லாம் உன் கைராசி தமிழ்
63 பொல்லாதவன் தமிழ்
64 முரட்டுக்காளை தமிழ்
65 தீ தமிழ் க
66 கழுகு தமிழ்
67 தில்லுமுல்லு தமிழ்
68 கர்ஜனை தமிழ் சி
69 கர்ஜனம் மலையாளம் சி
70 நெற்றிக்கண் தமிழ்
71 கர்ஜனே கன்னடம் சி
72 ராணுவ வீரன் தமிழ்
73 போக்கிரி ராஜா தமிழ்
74 தனிக்காட்டு ராஜா தமிழ் வ
75 ரங்கா தமிழ்
76 புதுக்கவிதை தமிழ்
நன்றி மீண்டும் வருக தமிழ்
77 எங்கேயோ கேட்ட குரல் தமிழ்
78 மூன்று முகம் தமிழ்
79 பாயும் புலி தமிழ்
உருவங்கள் மாறலாம் தமிழ்
80 துடிக்கும் கரங்கள் தமிழ்
81 அந்த கனூன் இந்தி
82 தாய் வீடு தமிழ்
83 சிவப்பு சூரியன் தமிழ்
84 ஜீத் கமாரி இந்தி
85 அடுத்த வாரிசு தமிழ்
86 தங்க மகன் தமிழ்
87 மெரி அடாலத் இந்தி
88 நான் மகான் அல்ல தமிழ்
89 தம்பிக்கு எந்த ஊரு தமிழ்
90 கை கொடுக்கும் கை தமிழ்
91 இதே நாசாவால் தெலுங்கு
92 அன்புள்ள ரஜினிகாந்த் தமிழ்
93 கங்க்வா இந்தி
94 நல்லவனுக்கு நல்லவன் தமிழ்
95 ஜான் ஜானி ஜனார்தன் இந்தி
ஞாயம் மீரே சேப்பலி தெலுங்கு ஜ
96 நான் சிவப்பு மனிதன் தமிழ் எ
97 மகாகுரு இந்தி எ
98 உன் கண்ணில் நீர் வழிந்தால் தமிழ் ப
99 வஃபாதார் இந்தி
100 ஸ்ரீ ராகவேந்திரா தமிழ்
101 பெவாஃபய் இந்தி
102 படிக்காதவன் தமிழ்
103 மிஸ்டர் பாரத் தமிழ்
104 நான் அடிமை இல்லை தமிழ்
105 ஜீவனா போராட்டம் தெலுங்கு
106 விடுதலை தமிழ்
107 பகவான் தாதா இந்தி
கோடை மழை தமிழ் ம
108 அஸ்லி நக்லி இந்தி
109 தோஷ்தி துஷ்மன் இந்தி
110 மாவீரன் தமிழ்
தகு ஹசின இந்தி
111 வேலைக்காரன் தமிழ்
112 இன்சப் கான் கரேகா இந்தி
113 ஊர்க்காவலன் தமிழ்
114 மனிதன் தமிழ்
மனதில் உறுதி வேண்டும் தமிழ்
115 உத்தர் டக்சன் இந்தி
116 தமச்சா இந்தி
117 குரு சிஷ்யன் தமிழ்
118 தர்மத்தின் தலைவன் தமிழ்
119 ப்ளட்ஸ்டோன் ஆங்கிலம்
120 கொடி பறக்குது தமிழ்
பிகாரி குன்டா இந்தி
121 ராஜாதி ராஜா தமிழ்
122 சிவா தமிழ்
123 ராஜா சின்ன ரோஜா தமிழ்
124 மாப்பிள்ளை தமிழ்
125 பரஷ்டச்சார் இந்தி
126 சால்பாஷ் இந்தி
127 பணக்காரன் தமிழ்
128 அதிசய பிறவி தமிழ்
129 தர்மதுரை தமிழ்
130 ஹம் இந்தி ம
131 ஃபரிஷ்டாய் இந்தி
132 கூன் கா கர்ஷ் இந்தி ம
133 ஃபூல் பனே அங்காரய் இந்தி
134 நாட்டுக்கு ஒரு நல்லவன் தமிழ்
135 தளபதி தமிழ்
136 மன்னன் தமிழ்
137 தியாகி இந்தி
138 அண்ணாமலை தமிழ் ச
139 பாண்டியன் தமிழ்
140 இன்சனியாத் கே தேவ்தா இந்தி
141 எஜமான் தமிழ் ஆ
142 உழைப்பாளி தமிழ்
143 வள்ளி தமிழ்
144 வீரா தமிழ் ச
145 பாட்ஷா தமிழ் ச
146 பெத்தராயுடு தெலுங்கு
147 அடாங் கி அடாங் இந்தி
148 முத்து தமிழ் க
149 பாக்ய தேபதா பெங்காலி
150 அருணாசலம் தமிழ்
151 படையப்பா தமிழ் க
152 புலாண்டி இந்தி
153 பாபா தமிழ் ச
154 சந்திரமுகி தமிழ்
155 சிவாஜி தமிழ்
156 குசேலன் தமிழ்
157 எந்திரன் தமிழ்
158 கோச்சடையான் தமிழ்
159 லிங்கா தமிழ் க
160 கபாலி தமிழ்
161 எந்திரன் 2 தமிழ் , இந்தி

விருதுகள்

இந்திய நடுவண் அரசின் விருதுகள்
பத்ம பூஷன் விருது, 2000
பத்ம விபூசன் விருது, 2016
தமிழக அரசின் விருதுகள்
1984 ஆம் ஆண்டு கலைமாமணி விருது
1989 ஆம் ஆண்டு எம்.ஜி. ஆர் விருது
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் ம
1978 முள்ளும் மலரும் காளி த
1982 மூன்று முகம்
அலெக்ஸ் பாண்டியன்,
அருண்,
ஜான்

1984 நல்லவனுக்கு நல்லவன் மாணிக்கம் த
1994 முத்து முத்து,
எஜமான் த
1999 படையப்பா ஆறுபடையப்பன் த
2005 சந்திரமுகி
டாக்டர். சரவணன் ,
கிங் வேட்டையன்

2007 சிவாஜி சிவாஜி ஆறுமுகம் த
2010 எந்திரன் டாக்டர். வசீகரன்,
சிட்டி த
பிலிம்பேர் விருதுகள்
வருடம் படங்கள் வகை பல
1977 புவனா ஒரு கேள்விக்குறி
சிறந்த திரைப்படம் வெற்
1978 முள்ளும் மலரும்
சிறந்த திரைப்படம் வெற்
1979
ஆறிலிருந்து அறுபது வரை
சிறந்த திரைப்படம் வெற்
1982 எங்கேயோ கேட்ட குரல்
சிறந்த திரைப்படம் வெற்
1984 நல்லவனுக்கு நல்லவன்
சிறந்த நடிகர் வெற்
1985 ஸ்ரீ ராகவேந்திரா
சிறந்த திரைப்படம் வெற்
1991 தளபதி சிறந்த நடிகர் வெற்
1992 அண்ணாமலை சிறந்த நடிகர் வெற்
1993 வள்ளி சிறந்த கதாசிரியர் வெற்
1995 பாட்ஷா ,
முத்து
சிறந்த நடிகர்
ஆனந்த விகடன் விருது
2017 ஆம் ஆண்டு கபாலி பட நடிப்புக்காக 'சிறந்த நடிகர்' விருது.



ரஜினி 67 #HBDRajinikanth

- ரஜினிக்கு எப்போதும் பிடித்த உடை கறுப்பு. ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது, " ரஜினி உனக்கு வொயிட் டிரெஸ் போட்டா நல்லா இருக்குமே" என்றார் இந்தி ஸ்டார் அமிதாப். அதில் இருந்து, வெள்ளை உடை அணிய ஆரம்பித்தார் ரஜினி.
- தன்னுடைய குருநாதர் கே.பாலசந்தர் போனில் பேசினால்கூட எழுந்து நின்று தான் பேசுவார் ரஜினிகாந்த்.
- எம்,.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில், சென்னையில் சினிமாக்காரன் என்றால் வீடே வாடகைக்கு தர மாட்டார்கள். ஆனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நம்பி நாடே கொடுத்து இருக்கிறார்கள் மக்கள் என பாராட்டிப் பேசினார்
- 'அவள் அப்படித்தான்' படத்தில் ருத்ரய்யா கொடுத்த சம்பளத்தை, ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்தார். அந்தப் பணத்தில் ருத்ரய்யா வாங்கிய வீட்டின் மதிப்பு இன்று பல கோடி
- நடிகர் சங்கக் கடனை முழுமையாக அடைக்க, தானே ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தார் ரஜினி. சங்கத்துக்குள் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அந்த வாய்ப்பை இழந்துவிட்டது நடிகர் சங்கம்.

- தான் நடிக்கும் சினிமாக்களின் திரைக்கதைகளில் தலையிடமாட்டார் ரஜினி. அதே நேரம் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து, ஒரு சில காட்சிகள் தன்னுடைய முத்திரையை பதிப்பார்.
- அப்போதும் சரி, இப்போதும் சரி, தன்னை சந்திக்கும் வரை பிரபலங்களை வாசல் வரை வந்து வீட்டுக்குள் அழைத்துச் செல்வார். அதே போலவே திரும்பவும் வாசல் வரை வந்து வழி அனுப்பி வைக்கும் பழக்கம் கொண்டவர் ரஜினி
- வைகோ மதிமுக கட்சி ஆரம்பித்தபோது, தனக்கு ஆதரவு கேட்டு போயஸ் கார்டன் போனார். அப்போது, பெரியவர் கலைஞர் இருக்கும் போது, உங்களுக்கு ஆதரவு தர இயலாது என நாசூக்காக சொல்லிவிட்டார்.
- தனது நண்பர் ஹிமாலயஸ் என்ற புத்தகத்தை அவருக்கு கொடுத்தார். அது தான் ரஜினியை இமயமலைக்கு பயணம் மேற்கொள்ள வைத்ததாம்.
- ஸ்டைல் என்பது எல்லோருக்குமே பிடித்தமான ஒன்று. ஆனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமான பிடித்தமான ஸ்டைலில் கலக்கியவர் ரஜினி தான்.
- கறுப்பு நிறம், கோரை முடி, சிறிய கண் என சினிமாவுக்கே சம்பந்தம் இல்லாத ஒட்டுமொத்த மைனஸ்களையும் ஒருங்கே பெற்று இருந்தாலும், அதை பிளஸ்ஸாக்கி சாதித்தவர் ரஜினி.


- 'பில்லா' படத்தில் ரஜினுக்கு நாயகியாக நடிக்க மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அழைத்தார்கள். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால், இவற்றை பற்றியெல்லாம் ஒருபோதும் ரஜினி வாய் திறந்து பேசியதில்லை.
- ரஜினி குறித்து எவ்வளவோ பாஸிட்டிவ்வான விஷயங்கள் இருக்கின்றன. சினிமாவில் போராடிய காலகட்டதில் எந்த கிசுகிசுக்களிலும் சிக்காத ஒரு ஹீரோக்களில் ரஜினியும் ஒருவர்.
- எம்ஜி ஆருக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை', எனக்கு 'பாட்ஷா' திரைப்படம் என தன் மெகா ஹிட் படமான 'பாட்ஷா' பற்றி சிலாகிப்பார் ரஜினி.
- பொதுவாக ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால், ரஜினிக்கு பிறகு கமல் வந்தால், அவருக்கு எழுந்து நின்று வணக்கம் தெரிவித்துவிட்டு, அவர் இருக்கையில் அமர்ந்த பின்னர் தான், இருக்கையில் அமர்வார் ரஜினி.
- ஃபோட்டொஜெனிக் ஃபேஸ், ரஜினியின் கம்பீரங்களில் ஒன்று.
- திருவிளையாடல் படத்தில், சிவாஜி நடந்த நடையை வீரநடை என்பார்கள்., சிவாஜிக்குப் பிறகு ரசிகர்களுக்கு பெரிதும் ஈர்த்தது, ரஜினியின் நடை தான்.
- சிவாஜியை பார்த்தபோது, புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அதனால், தன் ரசிகர்கள் யாரேனும், அவரை சந்திக்க வந்தால், புகைப்படம் எடுக்க மறுக்காமல், ஓகே சொல்வார் ரஜினி.
- வில்லன்+ ஹீரோ+ காமெடியன் என எல்லா கதாபாத்திரத்துக்கும் தேவையான முக அமைப்பைப் பெற்றவர் ரஜினி.
- அந்த காலத்தில் பி.எஸ். வீரப்பாவின் சிரிப்பு பிரசித்தி. அதன் பிறகு பல ஆண்டுகளாக ஹிட் எனில், அது ரஜினியின் சிரிப்பு தான்.
- தேசிய விருது வாங்கியவர் நடிகை ஷோபா. 'முள்ளும் மலரும்' படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார் ஷோபா, அவரை சந்திக்கும் போதெல்லாம், தங்கை என்றே அழைப்பார் ரஜினி.
- பொதுவாக சபைகளில் நடிக்கத் தெரியாத ரஜினி, தன் மன உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தி விடுவார்.
- தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் உயரத்தில் அவரைக் கொண்டாடினாலும், இன்றுவரை பாதுகாவலரே இல்லாமல், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் ரஜினி.
- தன் பெயரைச் சொல்லி, யாரேனும் சிபாரிசு கேட்டது ரஜினிக்கு தெரிந்துவிட்டால், அவர்கள் உடனான நட்பை கட் செய்துவிடுவார் ரஜினி..
- ரஜினிக்கு நண்டுக்கறி, தலைக்கறி தான் நான் - வெஜ்ஜில் ஃபேவரைட். ஆனால், இப்போது முழுமையாக வெஜ் உணவுக்கு மாறிவிட்டார்.
- 'அவள் ஒரு தொடர்கதை' தெலுகு பதிப்பில், ஜெய்கணேஷ் வேடத்தில் நடித்து கலக்கி இருப்பார் ரஜினிகாந்த்.
- தன் படத்தில் நடிக்க புதிதாக ஒப்பந்தம் ஆகி இருக்கும் நடிகர்களுக்கு, தானே மொபைல் செய்து வாழ்த்து சொல்வது ரஜினி ஸ்டைல்
- கிராமிய வேஷமோ , ஐஷ்வர்யா ராய்க்கு ஜோடியோ எதுவென்றாலும், கேமரா முன், நிஜத்தில் ஜொலிப்பார் ரஜினி
- 1996-ம் ஆண்டு, தனக்கு கிடைத்த அரசியல் வாய்ப்பை வேண்டாம் என மறுத்து உதறித் தள்ளியவர் ரஜினி.
- திமுக, அதிமுக , கம்யூனிஸ்ட் என தமிழர்களுக்கு பல அடையாளம் உண்டு.,, நான் ரஜினி ரசிகன் என்ற அடையாளத்தை கொடுத்தவர் ரஜினி தான்
- தமிழக அரசியலில் இறங்கச் சொல்லி மறைந்த பத்திரிகையாளர் சோ அழைத்த போதும், நாசூக்காக மறுத்தவர் ரஜினி
-யார்க்கேனும் வாக்கு கொடுத்துவிட்டால், அதை எப்படியாவது நிறைவேற்றிவிடுவார் ரஜினி.
- தன்னைவிட வயது குறைவானவராக இருந்தாலும், அவர்களை மரியாதையாக அழைப்பதே ரஜினி ஸ்டைல்.
- இப்போது தன்னை, மனரீதியாக கண்டெக்டராக நினைத்து எளிமையாக வாழ்பவர் ரஜினி.
- சினிமா இல்லாத வெண் தாடியுடன் தான் ரஜினி இருப்பார். ஷூட்டிங் சமயங்களில் யோகா செய்து, தனது முகப்பொலிவை மீட்டெடுப்பார் ரஜினி.
- சினிமாவில் வளரும் போதும் அவருக்கு உதவியாக இருந்த பலர், இப்பொது சினிமாவில் இல்லை. ஆனாலும், அவர்களுக்கும் உரிய மரியாதை தருவதை ரஜினி நிறுத்தியதே இல்லை.
- 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமானாலும், முதன்முதலாக முழு ஹீரோ ஆனது 'பைரவி' படம். பைரவியின் படைப்பாளி கலைஞானத்தை பார்க்கும்போதெல்லாம், எழுந்து நின்று மரியாதை செய்வார் ரஜினி.
- ஒருகாலத்தில் அருகில் இருந்து உதவி செய்த ஸ்ரீபிரியாவை, பெருந்தன்மையாக மரியாதைக்குரிய பெண்மணி என்றே தன் நெருங்கிய வட்டாராத்திடம் சொல்வார் ரஜினி.
- 'கபாலி' படத்தின் உணவு இடைவேளையின் போது மட்டுமே கேரவேன் செல்வார் ரஜினி.மற்ற நேரங்களில் ஒரு சேரில் அமர்ந்து கொண்டு நடித்தார்.
- தன் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் சிறப்பாக நடித்தால் , ஈகோ பார்க்காமல், ஷூட்டிங் ஸ்பாட்டிலே, கை தட்டி பாராட்டும் மனம் படைத்தவர் ரஜினி.
- எம்ஜிஆருக்கு வாலி பாடல் எழுதுவார், எனக்கு வைரமுத்து என சொல்லி வைரமுத்துவுக்கு எப்போதுமே ரஜினியிடம் தனி மரியாதை உண்டு
- தன்னை எதிரியாக பாவித்த, ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் இல்ல விஷேசங்களுக்குச் சென்று மனமார வாழ்த்தும் நல்ல மனசுக்காரர் ரஜினி.
- அதிமுக, திமுக இரண்டையும் தன்னுடைய நட்புக் கட்சியாக பாவித்துக் கொண்டவர் ரஜினி
- இசைஞானி இளையராஜாவை சந்தித்தால், சினிமா தவிர மணிக்கணக்கில் மற்ற விஷயங்களைத் தான் பேசுவார் ரஜினி
- தமிழகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர், "உங்களைப் பார்க்க வேண்டும்" என கூப்பிட்டால் , நானே வருகிறேன் என சொல்லி ஆச்சர்யப்படுத்துவது ரஜினி ஸ்டைல்
- விஜயின் 'திருப்பாச்சி' படத்தைப் பார்த்துவிட்டு, அவருக்கு ஆக்ஷன் + காமெடி இயல்பா வரும் என, சாமி பட விழாவில் மனதார பாராட்டினார் ரஜினி.
- தன்னைப்போலவே, பின்னணி எதுவும் இல்லாமல் முன்னணி நடிகராக வந்த அஜித் மீது, ரஜினிக்கு எப்போதும் தனி ப்ரியம் உண்டு. தன்னுடைய ஹிமாலயாஸ் புத்தகத்தை கையெழுத்து போட்டு, அஜித்துக்கு பரிசளித்தார் ரஜினி
- தன் வீட்டில் உள்ள காஸ்ட்லியான கார்களை விட, அந்தக்காலத்து அம்பாஸிடர் காரை எடுத்து இரவில் சுற்றுவதில் ரஜினிக்கு அலாதியான ப்ரியம்
- தமிழில் வெளிவந்த எத்தனையோ நாவல்களை படித்து ரசித்தாலும், ரஜினியின் ஃபேவரைட் வரலாற்று புதினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்
- எம்ஜிஆருக்குப் பிறகு, அரசியலில் இறங்கச் சொல்லி, ராம. வீரப்பன், திருநாவுக்கரசர், என்று எத்தனையோ நண்பர்கள் வற்புறுத்தியும், ஏனோ ரஜினி தவிர்த்துவிட்டார்
- தமிழ் சினிமாவில் ரஜினியை கே.பாலசந்தர் அறிமுகம் செய்தார் என்றாலும், பெரிய அளவில் தன்னை வளர்த்தவர் பஞ்சு அருணாசலம் தான் என்பதால் அவர் மீது ரஜினிக்கு அலாதி ப்ரியம்
- தமிழ் திரைப்பட உலகில் எத்தனையோ நடிகர்கள், முன்னணியில் இருந்தாலும், சினிமா மார்க்கெட் லெவலில் ரஜினி என்ற நடிகனுக்கு போட்டி ரஜினியைத் தவிர வேறு ஒருவனும் போட்டி இல்லை
- கடந்த 25 ஆண்டுகளாக இரவு நேர படப்பிடிப்புகளில் ரஜினி கலந்து கொண்டதில்லை, அதற்குப் பிறகு இப்போது தான் கபாலி, 2.0 என தொடர்ச்சியாக இரவு நேர படபிடிப்புகளில் கலந்து கொள்கிறார்.
- சினிமா படப்பிடிப்பு இல்லாத நாட்களில்,போயஸ் கார்டனில் ரஜினியை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரே நபர் தனுஷின் கடைக்குட்டி லிங்கா தான்.
- ரஜினி நடித்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில், ஸ்ரீவித்யா ரஜினிக்கு மனைவி, அதே நடிகை தளபதி படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்து இருப்பார். இதே ஒற்றுமை, நடிகை சுஜாதாவுக்கும் உண்டு.
- ரஜினி கமலுக்கு கடும் போட்டி நிலவிய காலம் அது,. அப்போது 'புன்னகை மன்னன்' நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்டு, கமல் ரசிகர்களிடம் கரவொலி வாங்கினார் ரஜினி.
. மறைந்த சான்றோ சின்னப்ப தேவர் மீது, ரஜினிக்கு மிகுந்த மரியாதை உண்டு . மூன்று பட அட்வான்ஸை ஒரே சமயத்தில் கொடுத்து ரஜினியை புக் செய்தவர்.
- ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால், சினிமாவில் நண்பர்கள் கூட்டம் மொய்த்துவிடும்.ஆனால், இன்றுவரை ரஜினிக்கு நெருக்கம் ஆனவர்கள் எல்லாம், ரஜினியின் கஷ்டமான சூழ்நிலையில் உடன் இருந்தவர்களே
நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர ரசிகரனான ரஜினி, 'தெய்வ மகன்' படத்தை 29 முறை பார்த்து இருக்கிறார்.
தமிழ், தெலுகு, இந்தி என பல மொழிகளில் நடித்தவர் ரஜினி. பிளட் ஸ்டோன் என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார் ரஜினி
- தனது நிஜமான உடல் தோற்றம், சினிமா தோற்றம், இரண்டையும் தெளிவாக உணர்ந்து, இயல்பாக இருப்பது ரஜினியின் சிறப்பு
- அம்மாவின் பாசம் கிடைக்காத ரஜினி, அந்த உணர்வை, மனைவி லதா, மகள்களிடம் பெற்று வந்தார்.
- சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை பெறுவதைவிட, அதை தக்கவைத்துக்கொள்வதே பெரும் போராட்டம் என சொல்வார் ரஜினி
- தனது ஒவ்வொரு பிறந்தாநாளின் போதும், வீட்டில் இருக்கும் தனி அறையில் சுற்றிலும் சூழப்பட்ட கண்ணாடி முன் அமர்ந்துகொண்டு, சுய பரிசோதனை செய்வார் ரஜினி
- இன்று கிடைத்து இருக்கும் சினிமா புகழ், இறைவன் கொடுத்த வரம், தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லையென, இப்போதும் சிவாஜிராவாக வாழ்பவர் ரஜினி.



‘அந்தக் காட்சி வேண்டாம்... அவர் எம்.ஜி.ஆர்!’ #ரஜினி #HBDRajini

த மிழ் சினிமா வரலாற்றை மட்டும் அல்ல, தமிழக அரசியல் வரலாற்றையும் ரஜினியைத் தவிர்த்துவிட்டு நிச்சயம் எழுதமுடியாது. அவர் தீவிர அரசியலில் இல்லைதான். அவர் பட வெளியீட்டு சமயத்தைத் தவிர, அவர் எப்போதும் அரசியல் பேசியதில்லைதான்... ஏன் அவர் ஒரு காலமும் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர் திண்ணமாக, தன் கருத்தைக் கூறியதில்லைதான். ஆனால், சினிமாவில் வணிக நோக்கத்துக்காகக் கட்டமைக்கப்பட்ட ரஜினி எனும் பிம்பத்தின் நிழல், அரசியல் களத்தில் இன்னும் படர்ந்துதான் இருக்கிறது. ஒரு யுகத்தின் பழமையைக் கடந்த நிமிடத்தின் மீது, அள்ளிப் பூசும்... ஒளியின் வேகத்துடன் போட்டி போட எண்ணும் இந்தச் சமூக ஊடக காலத்திலும்... ரஜினி என்னும் பிம்பம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. அதனால்தான் பிரதமர் வேட்பாளரே தமிழகத்துக்கு வந்தாலும், போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்குச் சென்று ஒரு புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு வெளியிடுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். தேர்தல் காலங்களில், சம்பந்தமே இல்லாமல் ரஜினி என் நண்பர் என அரசியல் தலைவர்கள் பேட்டி அளிக்கிறார்கள்.

சரி, ரஜினி என்னும் பிம்பம் உருப்பெற்றது எப்போது...? அந்தப் பிம்பம் திரை வணிகத்துக்கு எந்த அளவுக்குப் பயன்பட்டு இருக்கிறது என்பதை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
ரஜினி என்னும் பிம்பம் உச்சம்தொட்டது அண்ணாமலை திரைப்படத்துக்குப் பிறகுதான். அதற்கு முன்பே அவருக்கு சூப்பர் ஸ்டார் என்னு அடைமொழி அளிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு முன்பே அவர் பாக்ஸ் ஆஃபிஸில் முடிசூடா மன்னனாக இருந்தாலும், ரஜினி என்னும் ஆளுமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது அந்தத் திரைப்படம்தான்.
 “விளம்பரத் தட்டிகள் இல்லை”

சுரேஷ் கிருஷ்ணா “My days with Baasha" புத்தகத்தில் இவ்வாறாக எழுதுகிறார், “அண்ணாமலை திரைப்படம் வெளியான சமயத்தில், அரசியல் சூழல் ரஜினிக்கு சாதகமாக இல்லை. படம் வெளியாவது குறித்த எந்த போஸ்டர்களும், விளம்பர பதாகைகளும் இல்லை. ஆனால், படம் குறித்த இந்த மெளனம்தான், திரைப்படத்துக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது” என்கிறார். இதை படம் சார்ந்ததாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். எப்போதும் ரஜினியின் மெளனம் அல்லது அளந்து பேசுதல் தான்... ரஜினி என்னும் பிம்பத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றி இருக்கிறது. ரஜினியின் சமகாலத்து நாயகனாக இருக்கும் கமலின் பிம்பம் பேச்சால் கட்டமைக்கப்பட்டதென்றால்... ரஜினியின் பிம்பம் மெளனத்தால் கட்டமைக்கப்பட்டதுதான். மெளனத்தை சரியாக தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த நாயகன் ரஜினி.
ரஜினி என்னும் பிம்பத்தை வடிவமைப்பதில் இன்னொரு காரணி முக்கிய பங்காற்றி இருக்கிறது. அது அவரது ‘அப்பாவித்தனம்’. பணபலம், படைபலம் வைத்திருக்கும் வலிமையான வில்லனைதான் தன் திரைப்படங்களில் எதிர்த்துக் கொண்டிருப்பார். ஆனால், அதே சமயம், தன் அப்பாவித்தனத்தை திரைப்படங்களில் முன்னிலைப்படுத்துவதிலும் கவனமாக இருப்பார். பெரும்பான்மையான தமிழ் மனம், புத்திசாலிகளைவிட அப்பாவிகளைதான் விரும்பும். புத்திசாலிகள் ரசிகனுடைய ஈகோவுடன் மோதுகிறார்கள். ஆனால், அப்பாவிகள் ரசிகனின் மனதைக் கரைக்கிறார்கள். இந்த உளவியலை நன்கு அறிந்து வைத்திருந்தார் ரஜினி. தன் படங்களில் சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தாரோ. அதற்கு சற்றும் குறையாமல், அப்பாவித்தனமான காட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். மீண்டும் அண்ணாமலை படத்தையே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன். பால்காரரான ரஜினி, பால் விநியோகம் செய்வதற்காக பெண்கள் விடுதிக்கு செல்வார். அந்த சமயத்தில் அந்த விடுதியில் ஒரு பாம்பு நுழைந்து, விடுதியே அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்கும். பெண்கள் ரஜினி உதவியை நாடுவார்கள். ஆனால், ரஜினி அந்தப் பெண்களை விட அதிகம் பயம் கொள்வார். அதே நேரம், பெண்கள் ஒரு இக்கட்டில் இருக்கும்போது சினிமா மரபுப்படி நாயகன் விலகி செல்லல் ஆகாது. ரஜினி பயத்துடன் அந்த பாம்பைப் பிடிக்க எத்தனிப்பார். பாம்பு குளியலறை வழியாக வெளியே சென்றுவிடும். அந்த சமயத்தில் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் நாயகியை ரஜினி பார்த்துவிடுவார். அப்பாவித்தனமான வேடம் பூண்ட ரஜினி, தான் தவறு செய்துவிட்டதாக ஒரு விளையாட்டுதனமான ஒரு தோற்றத்தை பார்வையாளனுக்குக் கடத்த...“கடவுளே... கடவுளே...” என்ற வசனத்தை உச்சரித்துச் செல்வார். இந்த வசனத்தை இப்படத்துக்குள் கொண்டுவந்தது ரஜினி என்கிறார் அப்படத்தின் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா.
இக்கட்டுரைக்குச் சம்பந்தமில்லாவிட்டாலும், இன்னொரு தகவலையும் இங்கு பகிர்கிறேன், அண்ணாமலை படத்தில் ரஜினியின் மீது ஒரு பாம்பு ஏறும் அல்லவா...? அந்தப் பாம்பு விஷம் எடுக்கப்படாத பாம்பாம். அந்தக் காட்சி எடுத்து முடிக்கும்வரை இந்த தகவல் இயக்குநர், ரஜினி உட்பட யாருக்கும் தெரியாதாம். விஷயம் தெரிந்தவுடன் தான் பதறிவிட்டதாக, சுரேஷ் கிருஷ்ணா தன் புத்தகத்தில் பகிர்கிறார்.
“ரஜினி என்னும் பிராண்ட்”
சரி, மீண்டும் கட்டுரைக்கு வருவோம். ரஜினி இன்னொரு விஷயத்திலும் மிகத்தெளிவாக இருந்திருக்கிறார். தனக்காக திரைப்படங்களில் துதிபாடுவது எல்லைமீறிவிட கூடாது என்பது தான் அது. ‘மலை... அண்ணாமலை’ என்னும் வசனம் அண்ணாமலை திரைப்படத்தில் ஒரே ஒரு முறை தான் உச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அது போல பாட்ஷா படத்தில் வரும், காலங்கள் கடந்து நிற்கும் வசனமான, “நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற வசனம் அந்தப் படத்தில் அதிகப்பட்சமாக ஆறு முறை தான் வருகிறது. இது ஏதோ ஏதேச்சையானது அல்ல... திட்டமிட்ட ஒன்று. தனக்காகத் துதிபாடுவது எல்லைமீறிச் சென்றால், அது தனக்கே எதிராகப்போகும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் ரஜினி. அவருக்குப் பின்னால் வந்த, அவர் போல ‘பாக்ஸ் ஆஃபிஸ்’ நாயகன் ஆகவேண்டும் என்று ஆசைப்பட நாயகர்கள் தவறவிடும் இடம் இது தான்.
அவர் திரைப்படம் தொடங்கும்முன், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” என்ற வரைகலைக் காட்சி வரும் அல்லவா...? அது அண்ணாமலை படத்தில்தான் முதன்முதலாக வந்தது. இந்த வரைகலையை திரையில் போடுவதற்கு, முதலில் ரஜினி ஒப்புக்கொள்ளவில்லையாம். நீண்ட தயக்கத்துக்கு பின், பாலசந்தரின் வற்புறுத்தலுக்கு பின் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் மறுத்ததற்கு அவர் வைத்த வாதம், “ரஜினி ஒரு பிராண்ட் ஆகிவிட்டால்... அதற்கு நான் தொடர்ந்து தீனி போடவேண்டும். அது மிகவும் கடினம்” என்பதே... அவர் வாதம் பொய்க்கவில்லை, ரஜினி என்னும் பிராண்டின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யமுடியாத அண்ணாமலைக்குப் பிறகு வந்த பாண்டியன் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.
“பிம்பத்தை உடைத்து மீண்டும் எழுப்புதல்”
அண்ணாமலையில் கட்டமைக்கப்பட்ட பிம்பம் உடைவதைதான் ரஜினி விரும்பி இருக்கிறார். இதற்கு சினிமா என்னும் கலை சார்ந்த எந்தக் காரணமும் இல்லை. அந்தப் பிம்பம் உடைந்தால்தான், மீண்டும் அதை விட வலுவான பிம்பத்தைக் கட்டமைக்க முடியும் என்பதுதான் காரணம். அந்தப் பிம்பத்தை உடைக்க அவர் தேர்ந்தெடுத்தது, தெலுங்கு “அலரி மொகுடு” திரைப்படம். இரண்டு மனைவிகள் உள்ள ஒரு நாயகனின் கதை. இதைத் தமிழாக்கம் செய்யலாம் என்று ரஜினி கூறியபோது சுரேஷ் கிருஷ்ணா பதறிவிட்டாராம். அவர், “வேண்டாம். இது விஷப்பரிட்சை... நாம் முன்பே பேசியது போல ‘பாட்ஷா’ படத்தை செய்யலாம்” என்றிருக்கிறார். அதற்கு ரஜினி, “இல்லை... நாம் அண்ணாமலையில் உண்டாக்கிய பிம்பத்தை உடைக்க வேண்டும். மக்களை மறக்கச் செய்யவேண்டும். அப்போதுதான், பாட்ஷா பார்வையாளன் மனதில் நிற்பான். அதற்கு நாம் 'அலரி மொகுடு' திரைப்படத்தை தமிழாக்கம் செய்யவேண்டும்” என்றிருக்கிறார். பாட்ஷாவிற்காக அவர் வடிவமைத்த செயல்திட்டம் தோற்கவில்லை. ரஜினி என்னும் பிம்பத்தை வேறு வடிவில் வெளிப்படுத்திய, அலரி மொகுடின் தமிழ் பதிப்பான வீராவும் வெற்றி அடைந்தது. மீண்டும் ரஜினி பிம்பம் கட்டமைக்கப்பட்ட ‘பாட்ஷா’வும் மாபெரும் வெற்றி பெற்று, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் ஆனது.
வீராவில் அவர் இருமனைவிகளைக் கொண்ட நாயகனாக, குடும்பம் சார்ந்த ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அந்த படத்துக்குப் பிறகும் அவர் பிம்பம் அப்படியேதான் இருந்தது. எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் ஆர்.எம்.வீரப்பன் தான், ‘பாட்ஷா’ படத்தின் தயாரிப்பாளர். அவர், ரஜினியை ஆனந்த்ராஜ் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சிக்கு ஒப்புக்கொள்ளவே இல்லையாம். அவர் சொல்லிய காரணம், “எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த ஒரு பிம்பத்தை நான் ரஜினிக்கு பார்க்கிறேன். நிச்சயம் அவர் ரசிகர்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். என்னால், இந்தக் காட்சிக்கு சம்மதிக்கவே முடியாது” என்று கூறியுள்ளார். பின், ரஜினியே இதில் தலையிட்டுதான் இந்த காட்சிக்குச் சம்மதம் வாங்கி உள்ளார். “நாயகன் அந்தக் காட்சியில் அடிவாங்கினால் தான், பின் அந்த நாயகன் திரும்பி அடிக்கும் போது, ரசிகர்களின் மனநிலை உச்சத்தைத் தொடும்” என்றிருக்கிறார். அதுதானே நிகழ்ந்தது.
கபாலி வரை அதுதானே நிகழ்ந்து கொண்டும் இருக்கிறது. ரஜினி நிச்சயம் வெறும் சினிமா மட்டும் தெரிந்த நாயகன் இல்லை... ரசிகர்களின் உளவியல் அறிந்த நாயகன். அதனால்தான் அவரால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் சந்திரமுகியையும் தேர்ந்தெடுக்க முடிகிறது, வில்லனுக்குப் பயந்து ஓடும் வசீகரனாகவும் நடிக்க முடிகிறது. அவரது முடிவுகள் சில நேரம் பிசகி இருக்கலாம் மறுப்பதற்கில்லை. ஆனால், ஒப்பீட்டளவில் மற்ற நாயகர்களைவிட, எம்.ஜி.ஆருக்கு பின் ரஜினிதான் ரசிகர்களின் உளவியலை நன்கு அறிந்திருக்கிறார்.
ரஜினி... உளவியல் அறிந்த நாயகன்!


ரஜினி – எஸ்பி முத்துராமன்… மக்களை மகிழ்வித்த 25 படங்கள்!
ர ஜினி என்ற வைரத்தைக் கண்டெடுத்தது நான்தான் என்றாலும், வித விதமான வேடங்கள், எல்லையற்ற வாய்ப்புகளைத் தந்து அந்த வைரத்தைப் பட்டை தீட்டியவர் எஸ்பி முத்துராமன்” என்பார் இயக்குநர் கே பாலச்சந்தர் அடிக்கடி.
அது உண்மைதான் என்பது, ரஜினி – எஸ்பிஎம் இணைந்து பணியாற்றிய படங்களின் பட்டியலைப் பார்த்தாலே புரியும்.
புவனா ஒரு கேள்விக் குறியில் துவங்கி பாண்டியன் வரை, ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய பரிமாணத்தில் ரஜினியைக் காட்டியவர் எஸ்பிஎம். சினிமாவை ஆபாசமில்லாத, நல்ல பொழுதுபோக்காகவே கடைசி வரை தந்த பெருமைக்குரியவர்.
‘தயாரிப்பாளருக்கேற்ற இயக்குநர்… மிச்சம் பிடிப்பதில்தான் குறியாக இருப்பார். பெரிதாக கலையுணர்வுடன் எடுக்கமாட்டார்’ என்று அவரைப் பற்றி சிலர் விமர்சிப்பதைக் கேட்டிருக்கலாம். ஆனால் ரஜினியின் படங்களில் வரும் பல காட்சிகளைப் பார்த்தவர்களுக்கு இந்தக் கருத்து எத்தனை அபத்தமானது என்பது புரிந்திருக்கும். சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட மிக அழகாக வெளிப்படுத்தும்படியான காட்சிகளை அமைத்திருப்பார் எஸ்பிஎம். எங்கேயோ கேட்ட குரல் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
நெற்றிக் கண், புதுக்கவிதை, நல்லவனுக்கு நல்லவன், குருசிஷ்யன்… இப்படி ஒவ்வொரு சுவைக்கும் ஒரு படமாக ரஜினியை வைத்து நவரச ஹிட் கொடுத்தவர் அவர் ஒருவர்தான்.
‘என்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் பாதியை எஸ்பி முத்துராமனுடனே கழித்திருக்கிறேன்’ என்கிறார் ரஜினி.
ரஜினியுடனான தனது சினிமா அனுபவங்களை எப்போது கேட்டாலும் மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்பவர் எஸ்பிஎம். ஆனால், ரஜினி பற்றி பொதுவாகப் பேச அல்லது பேட்டி கேட்க முற்படுபவர்களை நாசூக்காக தவிர்த்துவிடுவார்.
“நான் ரஜினியின் குடும்பத்தில் ஒருவன்தான். என்னை ஒரு மூத்த சகோதரனாக அவர் நடத்துவதும், மிகுந்த உரிமையுள்ளவனாக என்னை அவர் வைத்திருப்பதும் உண்மைதான். அதனாலேயே நான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது. நான் ஏதாவது சொல்லி, அதனால் ரஜினி எந்த வகையிலும் சங்கடப்படக் கூடாது பாருங்கள்…” என்கிறார்.
ரஜினியுடன் பணியாற்றிய 25 படங்கள், அதிலேற்பட்ட சுவையான அனுபவங்கள் பற்றி தனது சுயசரிதையான ‘ஏவிஎம் தந்த எஸ்பிஎம்’ புத்தகத்தில் ஓரளவு சொன்னாலும் அவர் சொல்லாமல் விட்டது ஏராளம்.
“உண்மைதான்… நிறைய விஷயங்களை அதில் அடக்க முடியவில்லை. அதையெல்லாம் இன்னொரு சமயத்தில் சொல்லும் எண்ணம் இருக்கிறது” என்கிறார் எஸ்பிஎம்.
குணச்சித்திரம், ஆக்ஷன், நகைச்சுவை, சோகம், ரொமான்ஸ் – காதல், அரசியல் எள்ளல், தத்துவம், த்ரில்லர், பக்தி… என்ன மாதிரி படமானாலும் எஸ்பிஎம்மிடம் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
புவனா ஒரு கேள்விக்குறி, ஆடுபுலி ஆட்டம், ப்ரியா, ப்ரியா (கன்னடம்), ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக்காளை, கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, புதுக்கவிதை, எங்கேயோ கேட்ட குரல், பாயும் புலி, அடுத்த வாரிசு, நான் மகான் அல்ல, நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீராகவேந்திரா, மிஸ்டர் பாரத், வேலைக்காரன், மனிதன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜா சின்ன ரோஜா, அதிசய பிறவி, பாண்டியன்.
– இந்த 25 படங்களில் 22 படங்கள் நூறு நாள்கள் அல்லது வெள்ளிவிழா கண்டவை. மனிதன், ராஜா சின்ன ரோஜா போன்ற படங்கள் வெள்ளி விழாவையும் தாண்டி ஓடியவை!
ஒன்றிரண்டு படங்கள் ஓட்டத்தில் முன்னே பின்னே இருந்தாலும், அவை ரசிகர்களை, விநியோகஸ்தர்களை ஏமாற்றாதவை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இன்றைக்கு நாம் பார்க்கும் போலிச் சாமியார்கள் முகமூடியை, ஒரு ஜனரஞ்சகப் படம் மூலமும் அம்பலப்படுத்த முடியும் என நிரூபித்த கழுகு, மகான் ராகவேந்திரரே திரை அவதாரம் எடுத்து வந்ததைப் போன்ற பிரமிப்பைத் தந்த ஸ்ரீராகவேந்திரர், வாய்விட்டுச் சிரிக்க வைத்த அதிசயப் பிறவி போன்றவை அதிக நாட்கள் ஓடவில்லையே என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் ரசிகர்களை ஏமாற்றவில்லை அந்தப் படங்கள் என்பதை, சின்னத் திரையில் இன்றும் அந்தப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இத்தனை படங்களில் ஒரே இயக்குநருடன் ஒரு சூப்பர் ஸ்டார் இணைந்து பணியாற்றியது கோடம்பாக்கத்தில் புதிய சாதனைதான். ரஜினி – எஸ்பிஎம் கூட்டணிக்கு முன், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மட்டுமே, தேவர் பிலிம்ஸுக்காக இயக்குநர் எம்ஏ திருமுகம் இயக்கத்தில் 17 படங்களில் நடித்தார். 17 படங்களும் 100 நாள் கடந்து ஓடியவை என்பது குறிப்பிடத்தக்கது!
-சரி… இந்த கட்டுரையின் நோக்கம் என்ன என்கிறீர்களா…
ரஜினி – எஸ்பிஎம் கூட்டணியில் உருவான அந்த 25 படங்கள் குறித்தும் ஜூன் 1-ம் தேதி முதல் ‘என்வழி’யில் எழுதவிருக்கிறோம், புதிய தகவல்களுடன்!
சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள், நடித்தவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் என பல சுவாரஸ்யங்கள் அதில் இடம்பெறவிருக்கின்றன.
இதில் முக்கியமானது, அந்த காலகட்டத்தில் பரபரப்பாக இருந்த பத்திரிகையாளர்களின் பார்வையும் இதில் இடம்பெறும்!