செவ்வாய், 24 ஏப்ரல், 2012

சரண்யா பொன்வண்ணன் பிறந்த‌ நாள் ஏப்ரல் 26,




சரண்யா பொன்வண்ணன் பிறப்பு: ஏப்ரல் 26, 1970) பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். சரண்யா, மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார்[. ராம்,(2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது; சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளும் கிட்டின. 2010ஆம் ஆண்டுக்கான இந்தியத் தேசியத் திரைபட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.
சரண்யா சக நடிகரான பொன் வண்ணனைத் திருமணம் புரிந்துள்ளார்.
விருதுகள்
தேசியத் திரைப்பட விருதுகள்
2011 - சிறந்த நடிகை, தென்மேற்குப் பருவக்காற்று
பிலிம்பேர் விருதுகள்
2005 - சிறந்த துணை நடிகை (தமிழ்), தவமாய் தவமிருந்து
2006 - சிறந்த துணை நடிகை (தமிழ்), எம் மகன்

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

எஸ். ஜானகி பிற‌ந்த‌ நாள் ஏப்ரல் 23,


எஸ். ஜானகி  பிற‌ந்த‌ நாள் ஏப்ரல் 23,
எஸ். ஜானகி (பிறப்பு: ஏப்ரல் 23, 1938) இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு.
ஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.
1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.
குடும்பம்.
இவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
விருதுகள்.
1986 இல் தமிழ்நாடு அரசின் கலை மாமணி விருது
2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது
நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது
1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது.
தேசிய விருதுகள்
நான்கு தடவைகள் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுகள் கிடைத்தன.
1976, பதினாறு வயதினிலே படத்தில் செந்தூரப் பூவே பாடல்
1980, ஒப்போல் மலையாளத் திரைப்படத்தில் எட்டுமனூரம்பழத்தில் பாடல்
1984, சித்தாரா தெலுங்குப் படத்தில் வென்னெல்லோ கோடாரி அந்தம் பாடல்
1992, தேவர் மகன் படத்தில், இஞ்சி இடுப்பழகா பாடல்.
எஸ்.ஜானகி பாடிய சில பாடல்கள்:
1.மச்சானை பார்த்திங்களா ( அன்னக்கிளி ) பாடல் : பஞ்சு அருணாச்சலம்
2.வாழவைக்கும் காதலுக்கு ஜே ( அபூர்வ சகோதரர்கள் ) பாடல் : வாலி
3.தாஜ்மகால் தேவையில்லை ( அமராவதி )
4.இரவு நிலவு ( அஞ்சலி )
5.தூங்காத விழிகள் ( அக்னி நட்சத்திரம் )
6.சிறிய பறவை சிறகை ( அந்த ஒரு நிமிடம் )
7.கண்ணிலே என்ன ( அவள் ஒரு தொடர்கதை ) பாடல் : கண்ணதாசன்
8.ரோஜாப்பூ நாடி ( அக்னி நட்சத்திரம் )
9.ராசாவே உன்னை விடமாட்டேன் ( அரண்மனைக்கிளி )
10.ஆயிரம் தாமரை மொட்டுகளே ( அலைகள் ஒய்வதில்லை )
11.மாதா உன் கோயிலில் ( அச்சாணி )
12.என்னைப் பாடச் சொல்லாதே ( ஆண்பாவம் )
13.விளக்கு வைப்போம் ( ஆத்மா )
14.தானாத் தலையாடுண்டா ( ஆராரோ ஆரிரரோ )
15.தூக்கம் உன் கண்களை ( ஆலயமணி )
16.கண்மணியே காதல் ( ஆறிலிருந்து அறுபது வரை )
17.ஒரு கிளி உருகுது ( ஆனந்த கும்மி )
18.வசந்தம் பாடிவர ( இரயில் பயணங்களில் )
19.வானுயர்ந்த சோலையிலே ( இதய கோயில் )
20.நான் ஆளான ( இது நம்ம ஆளு )
21.பன்னீரில் நனைந்த ( உயிரே உனக்காக )
22.தேனே தென்பாண்டி ( உதய கீதம் )
23.தாலாட்டு மாறிப் போனதே ( உன்னை நான் சந்தித்தேன் )
24.ஒரு நாள் உன்னோடு ( உறவாடும் நெஞ்சம் )
25.இந்த மாமனோட மனசு ( உத்தம ராசா )
26.நெஞ்சினிலே நெஞ்சினிலே ( உயிரே )
27.ஜெர்மனியின் செந்தேன் ( உல்லாச பறவைகள் )
28.சொர்க்கமே என்றாலும் ( ஊரு விட்டு ஊரு வந்து )
29.ஒரு சந்தன காட்டுக்குள்ளே ( எல்லாமே என் ராசாதான் )
30.பஞ்சு மிட்டாய் சீல ( எட்டுபட்டி ராசா )
31.ஒரு நாளும் உன்னை ( எஜமான் )
32.கட்டி வச்சுக்கோ ( என் ஜீவன் பாடுது )
33.எங்கிருந்தோ என்னை ( ஐ லவ் இந்தியா )
34.மலரே மெளனமா ( கர்ணா )
35.அடி ஆத்தாடி இள ( கடலோர கவிதைகள் )
36.மாங்குயிலே பூங்குயிலே ( கரகாட்டக்காரன் )
37.எந்தன் நெஞ்சில் ( கலைஞன் )
38.குயிலே கவிக்குயிலே ( கவிக்குயில் )
39.பட்டு வண்ண ரோசாவாம் ( கன்னி பருவத்திலே )
40.காலம் காலமாய் பெண் ( கற்பூரதீபம் )
41.வானிலே தேன்நிலா ( காக்கிச் சட்டை )
42.நாதம் என் ஜீவனே ( காதல் ஓவியம் )
43.எர்ராணி குர்ரதான்னி ( காதலன் )
44.ஒரு வானவில் போலே ( காற்றினிலே வரும் கீதம் )
45.பூவரசம் பூ பூத்தாச்சு ( கிழக்கே போகும் ரயில் )
46.விழிகள் மேடையாம் ( கிளிஞ்சல்கள் )
47.உன்னை நானறிவேன் ( குணா )
48.தென்றல் காத்தே ( கும்பக்கரை தங்கைய்யா )
49.பேரைச் சொல்லவா ( குரு )
50.ரோஜா ஒன்று ( கொம்பேறி மூக்கன் )
51.தாலாட்டும் பூங்காற்று ( கோபுர வாசலிலே )
52.பள்ளிக்கூடம் போகலாமா ( கோயில் காளை )
53.மார்கழி திங்களல்லவா ( சங்கமம் )
54.பூட்டுக்கள் போட்டாலும் ( சத்ரியன் )
55.காக்கிச் சட்ட ( சங்கர் குரு )
56.நேத்து ராத்திரி ( சகலகலா வல்லவன் )
57.அடடட மாமரக்கிளியே ( சிட்டுக் குருவி )
58.கூண்டுக்குள்ள என்ன ( சின்ன கவுண்டர் )
59.என்னை மானமுள்ள ( சின்ன பசங்க நாங்க )
60.ராதைக்கேற்ற கண்ணணோ ( சுமைதாங்கி )
61.சலக்கு சலக்கு சேலை ( செம்பருத்தி )
62.வளையல் சத்தம் யம்மா ( சேலம் விஷ்ணு )
63.ராத்திரியில் பூத்திருக்கும் ( தங்க மகன் )
64.சுந்தரி கண்ணால் ( தளபதி )
65.சந்தைக்கு வந்த கிளி ( தர்மதுரை )
66.நீதானா நீதானா ( தாலாட்டு பாட வா )
67.சும்மா நிக்காதிங்க ( தூங்காதே தம்பி தூங்காதே )
68.இஞ்சி இடுப்பழகா ( தேவர்மகன் )
69.தேவ மல்லிகை பூவே ( நடிகன் )
70.கொட்ட பாக்கும் ( நாட்டாமை )
71.பெண் மானே சங்கீதம் ( நான் சிகப்பு மனிதன் )
72.பிள்ளை நிலா ( நீங்கள் கேட்டவை )
73.என் ஜீவன் பாடுது ( நீ தானா அந்தக்குயில் )
74.மணி ஓசை கேட்டு ( பயணங்கள் முடிவதில்லை )
75.அசைந்தாடும் காற்றுக்கும் ( பார்வை ஒன்றே போதுமே )
76.கருத்த மச்சான் ( புது நெல்லு புது நாத்து )
77.மெட்டி மெட்டி ( புள்ளக்குட்டிக்காரன் )
78.நெஞ்சிக்குள்ளே இன்னாருன்னு ( பொன்னுமணி )
79.ஆசை அதிகம் வச்சு ( மறுபடியும் )
80.கன்னி மனம் கெட்டு ( மணமளே வா )
81.முதல்வனே ( முதல்வன் )
82.செக்க செக்க செவந்த ( வல்லரசு )
83.பொன்மேனி உருகுதே ( மூன்றாம் பிறை )
84.ஊருசனம் தூங்கிருச்சு ( மெல்ல திறந்தது கதவு )
85.வா வா பூவே வா ( ரிஷி )
86.வெள்ளை புறாவொன்று ( புதுக்கவிதை )
87.கோழி கூவும் நேரத்துல ( வண்ண வண்ண பூக்கள் )
88.சின்ன ராசாவே ( வால்டர் வெற்றிவேல் )
89.வா வா அன்பே பூஜை ( ஈரமான ரோஜாவே )
90.பாம்பே டையிங் ( சிஷ்யா )
91.இவளொரு இளங்குருவி ( பிரம்மா )
92.தாலாட்டுதே ( கடல் மீன்கள் )
93.காற்றில் எந்தன் கீதம் ( ஜானி )
94.ஒட்டகத்தை கட்டிக்கோ ( ஜென்டில்மேன் )
95.காதல் கடிதம் தீட்டவே ( ஜோடி )
96.கண்ணன் மனம் ( வசந்த ராகம் )
97.மஞ்சள் பூசும் ( சக்கரை தேவன் )
98.மூக்குத்தி பூ மேலே ( மெளன கீதங்கள் )ஞு
99.மந்திரம் சொன்னேன் ( வேதம் புதிது )
100.மல்லியப்பூ பூத்திருக்கு ( தாய் மேல் ஆணை )

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

விக்ரம் பிறந்த நாள்., 17 ஏப்ரல்.


விக்ரம் பிறந்த நாள்., 17 ஏப்ரல்.
விக்ரம் (பிறப்பு. விக்ரம் வினோத், 17 ஏப்ரல், 1966) தமிழ்த் திரைப்பங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் ஐந்து பிலிம் பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். மிலான் பல்கலைக்கழகம் மே 2011 அன்று இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இவரது நடிப்புத்திறனால் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றுக் கொண்ட நடிகர் இவர்
விக்ரம் 1990ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவற்றுள் பல திரைப்பட ரசிகர் மத்தியில் பிரபலம் இல்லை. இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேதுஎன்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற வெற்றிமிக்க மசாலா படங்களில் நடித்து மானா வாரியான ரசிகர்களை தன் வசம் கொண்டார். இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர். அதன் பின் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன்என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சங்கனளையும் பெற்றுத் தந்தது அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு ராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011ம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்து பல பாராட்டுகள் பெற்றார்.
விக்ரம் வெவ்வேறு சமூக நிகைச்சிகளை முன்னேர்த்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவணம் மூலம் பல நலத் திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்.
இளமை
விக்ரம்,வினோத் ராஜுக்கும் ராஜேஸ்வரிக்கும் தமிழ் நாட்டில் உள்ள பரமக்குடியில், 17ம் ஏப்ரல் 1966 அன்று பிறந்தார். சிறு வயதிலே இவர் கென்னெடி என்னும் பெயர் மாற்றம் பெற்று கிறித்தவம் தழுவினர். இவரது தந்தையும் ஒரு நடிகர் ஆவார்.  விக்ரமுக்கு அனிதா என்கிற தமக்கையும் அர்விந்த் என்கிற அண்ணனும் உள்ளனர்.
விக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார். திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் M.B.A படிப்பை இலயோலாக் கல்லோரியில் படித்து முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்தவமனையிலிருந்தார். தன் கால் செயலிழக்காமிலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.

நடித்த திரைப்படங்கள்
நடிகராக
ஆண்டு திரைப்படம்   பாத்திரம்      மொழி குறிப்புகள்
1990        என் காதல் கண்மணி        தமிழ் 
1991        தந்துவிட்டேன் என்னை      ராஜு  தமிழ் 
1992        காவல் கீதம்  அசோக்       தமிழ் 
மீரா   ஜீவா  தமிழ் 
1993        துருவம்      பத்ரன் மலையாளம் 
சிருன்னவுலா வரமிஸ்தாவா        தெலுங்கு    
மாபியா       ஹரி ஷங்கர் மலையாளம் 
1994        சைன்யம்     கேடட் ஜீஜி   மலையாளம் 
பங்காரு குடும்பம்           தெலுங்கு    
புதிய மன்னர்கள்     சத்யமூர்த்தி   தமிழ் 
1995        ஸ்ட்ரீட்             மலையாளம் 
அடால மஜாக்கா            தெலுங்கு    
1996        மயூர ந்ரிடம்         மலையாளம் 
அக்கா பாகுன்னாவா         தெலுங்கு    
இந்திரப்ரச்தம் பீட்டர் மலையாளம் 
ராசபுத்திரன்   மனு   மலையாளம் 
1997        இது ஒரு சிநேஹகதா       ராய்   மலையாளம் 
உல்லாசம்    தேவ்  தமிழ் 
குரல்ல ராஜ்ஜியம்           தெலுங்கு    
1998        கண்களின் வார்த்தைகள்            தமிழ் 
1999        ஹவுஸ் புள்  ஹமீது       தமிழ் 
சேது  சியான் (எ) சேது     தமிழ்  வென்றவர்: சிறந்த நடிகர், தமிழ் நாடு மாநில பட விருது (சிறப்பு பரிசு)
2000        ரெட் இந்தியன்ஸ்           மலையாளம் 
2001        இந்த்ரியம்           மலையாளம் 
9 நேலாலு    வீரேந்திரா     தெலுங்கு    
யூத்          தெலுங்கு    
விண்ணுக்கும் மண்ணுக்கும் விக்ரம் தமிழ் 
தில்   கனகவேல்    தமிழ் 
காசி   காசி   தமிழ்  வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2002        ஜெமினி      ஜெமினி      தமிழ்  வென்றவர்: ஐ டி எப் எ சிறந்த நடிகருக்கான விருது
சாமுராய்     தியாகராஜன்  தமிழ் 
கிங்   ராஜா சண்முகம்     தமிழ் 
2003        தூள்   ஆறுமுகம்    தமிழ் 
காதல் சடுகுடு சுரேஷ் தமிழ் 
சாமி   ஆறுசாமி     தமிழ்  பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
பிதாமகன்    சித்தன் தமிழ்  வென்றவர்: சிறந்த நடிகருக்கான தேசிய சினிமா விருது
வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
வென்றவர்: சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது
2004        அருள் அருள்குமரன் தமிழ் 
2005        அந்நியன்     இராமானுசம்
அந்நியன்
ரெமோ தமிழ்  வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
மஜா  அறிவுமதி    தமிழ் 
2008        பீமா   சேகர்  தமிழ்  பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2009        கந்தசாமி     கந்தசாமி     தமிழ்  பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2010        ராவணன்     வீரையா      தமிழ் 
ராவன் தேவ் பிரதாப் சர்மா   ஹிந்தி
2011        தெய்வத்திருமகள்    கிருஷ்ணன்   தமிழ் 
2011        ராஜபாட்டை   'அனல்' முருகன்      தமிழ் 
2012        மெரினா      தானாகவே (பாடல் விளம்பரத்தில் ) தமிழ் 
2012        கரிகாலன்    கரிகால் சோழன்     தமிழ்  படமெடுக்கப்பட்டு வருகிறது
2012        தாண்டவம்    சிவா  தமிழ்  படமெடுக்கப்பட்டு வருகிறது
2012        டேவிட்       டேவிட்       இந்தி  படமெடுக்கப்பட்டு வருகிறது.

திங்கள், 2 ஏப்ரல், 2012

சிம்ர‌ன் பிற‌ந்தநாள் ஏப்ரல் 4,


சிம்ரன் (பிறப்பு:ஏப்ரல் 4, 1976), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தொடக்கத்தில் இந்தி,மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த சிம்ரன் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்குஅறிமுகமானார். இந்தி,மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் படங்களில் 2000 - ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர். சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி (2003), துள்ளாத மனமும் துள்ளும் பல விருதுகளை பெற்று தந்தன. VIP(1997), நேருக்கு நேர்(1997), நட்புக்காக(1998), துள்ளாத மனமும் துள்ளும்(1998), கண்ணெதிரே தோன்றினாள்(1998), வாலி(1999) , ஜோடி(1999), பிரியமானவளே (2000), பார்த்தேன் ரசித்தேன்(2000), தமிழ்(2002), பஞ்சதந்திரம் (2002), ரமணா(2002), கன்னத்தில் முத்தமிட்டால்(2002), நியூ(2004), வாரணம் ஆயிரம்(2008), போன்ற படங்கள் வணிகரீதியாக வெற்றிப்படங்கள் ஆகும்.

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

பாடகர் ஹரிஹரன் பிற‌ந்த‌நாள் ஏப்ர‌ல் 03


ஹரிஹரன் திரைப்பட பின்னணி பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழி படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். கசல் பாடல்களை பாடுவதில் தேர்ச்சி பெற்ற இவர், கலோனியல் கசினிஸ் என்ற இசைக் குழுவின் உறுப்பினர். லெஸ்லி லூயிசும் ஹரிஹரனும் சேர்ந்து நடத்தும் இந்தக் குழு பல தனி பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 2009ல் மோதி விளையாடு என்ற தமிழ்ப்படத்திற்கு பின்னணி இசையும் அமைத்துள்ளது.
அறிமுகம்
இவர் 1992ம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் செய்யபட்டது. இவர் ரோஜா என்ற திரைப்படத்தில் தமிழா தமிழா.நாளை என்ற பாடல் பாடினார். இத்திரைப்படம் ஏ. ஆர். ரகுமானுக்கும் அறிமுக படம்.

பிரபுதேவா பிற‌ந்த‌நாள் ஏப்ர‌ல் 03


பிரபுதேவா ( ஏப்ரல் 3, 1973, சென்னை) இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதாலவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் 100 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சாரக் கனவு திரைப்படத்திற்கான சிறந்த தேசிய நடன விருதையும் பெற்றுக் கொண்டார்.
முழுநேர நடிகராவதற்கு முன்னர் திரைப்படங்களில் நடனமாடி வந்தார். இவர் முதலாவது திரை கதாநாயகனாக இந்து திரைப்படத்தில் ரோஜாவுடன் நடித்தார். தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பிரபு தேவா பெற்றுக் கொண்டார்.
நடன ஆசிரியர் (டான்ஸ்மாஸ்டர்) சுந்தரத்தின் மகனான இவர் நடனத்தை மிகவும் ஆர்வத்துடன் செய்வார். நடனத்துறையில் இருந்து நடிப்புலகிற்கு வந்தார். மற்றவர்களால் முடியாத நடனத்தின் போது அடியெடுக்கும் முறையினால் இவர் ஓர் கொலிவூட் திரைப்படவுலகில் நட்சத்திரம் (ஸ்ரார்) ஆக விளங்கினால். தமிழ் தெலுங்குத் திரைப்பட உலகில் இவரது நடனம் மிகவும் பிரசித்தி பெற்றது.
தேசியவிருது
மின்சார கனவு திரைபடத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு நடனம் மூலம் தேசியவிருது தனக்கு சொந்தமக்கிறார்.
திரையுலகில்...
ஜெண்டில்மேன் திரைப்படத்தில் ஜெண்டில்மேன் பாடலிற்காக ஓர் குறுகிய அறிமுகம் கிடைத்தது. சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. மணிரத்னத்தினால் இயக்கப்பட்ட அக்கினி நடசத்திரம் திரைப்படத்தில் ராஜ ராஜாதி ராஜா பாடலிற்குப் பின்னணியில் ராஜூ சுந்தரத்துடன் நடனமாடினார். இத்திரைப்படத்திற்கு டான்ஸ்மாஸ்டராக இவரது தந்தையே இருந்தார். இதை அடுத்து ஷங்கரின் இயக்கத்தில் உருவான காதலன் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இது தமிழில் மட்டும் அன்றி மொழிபெயர்ப்புகளும் வெற்றியடைந்தன. இவரது நடன அசைவுகள் இவரை எலும்பற்ற ஓர் அதியப்பிறவியாகவே கணித்தனர். இவர் பலபடங்களில் நடித்தபோதும் இவரது நடிப்புத்திறமை ஏழையின் சிரிப்பிலே திரைப்படத்திலேயே வெளிக்காட்டப்பட்டது. இப்படத்திலே இவர் ஓர் பஸ்கூலி வேலையாள நடித்தார்.
நடித்த சில திரைப்படங்கள்
இந்து
காதலன்
மிஸ்டர் ரோமியோ
அள்ளித்தந்த வானம்
காதலா காதலா
மனதைத் திருடிவிட்டாய்
லவ் பேட்ஸ் (தமிழ்)
மின்சார கனவு (தமிழ்)
விஐபி (தமிழ்)
நாம் இருவர் நமக்கு இருவர் (தமிழ்)
பெண்ணின் மனதை தொட்டு
காதலா காதலா (தமிழ்)
ஜேம்ஸ்பாண்ட் (தமிழ்)
டபிள்ஸ் (தமிழ்)
சுயம்வரம் (தமிழ்)
டைம் (தமிழ்)
ஏழையின் சிரிப்பிலே (தமிழ்)
சந்தோஷம் (தெலுங்கு)
தோட்டிகாங் (தெலுங்கு)
அக்னி வர்ஷா (தெலுங்கு)
பெண்ணின் மனதைத் தொட்டு (தமிழ்)
எங்கள் அண்ணா (தமிழ்)
சுக்காலோ சந்டுரு (தெலுங்கு)
ஸ்டைல் (தெலுங்கு)
வானத்தைப் போல
இயக்குனராக
நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா (2005, தெலுங்கு)
பௌர்ணமி (2006, தெலுங்கு)
போக்கிரி (2007, தமிழ்)
வில்லு (2009, தமிழ்)
வாண்டட் டெட் அண்டு அலைவ் (2009, தமிழ்)
எங்கேயும் காதல் (2011, தமிழ்)
வெடி (2011, தமிழ்)
நடனமாடுபவராக
இதயம் (தமிழ்)
வால்டர் வெற்றிவேல்
பாபா (தமிழ்)
சூரியன் (தமிழ்)
ஜெண்டில்மேன் (தமிழ்)
லக்ஸ்ஷயா (ஹிந்தி)
புகார் (ஹிந்தி)
ஸக்தி தி பவர் (ஹிந்தி)
நுவோஸன்ரனேட்டே நினோடண்ட்ட (தெலுங்கு)
அக்கினி நட்சத்திரம்
ந‌ன்றி விக்கிபிடியா.