ஞாயிறு, 18 மார்ச், 2012

கவிஞர் முத்துலிங்கம் பிற‌ந்த‌ நாள் மார்ச் 20


கவிஞர் முத்துலிங்கம் (பிறப்பு: மார்ச் 20, 1942) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதியவர், கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.
வாழ்க்கைக் குறிப்பு
கவிஞர் முத்துலிங்கம் சிவகங்கை மாவட்டம், கடபங்குடி என்னும் சிற்றூரில் 1942இல் பிறந்தார். சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தவர். தனது 15ஆவது வயதில் முதல் கவிதை எழுதினார்.
திரைப்படத் துறையில் ...
1966 இல் முரசொலி இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். தி.மு.கவிலிருந்து 1972 இல் எம்.ஜி.ஆர் விலகியதை அடுத்து, எம்.ஜி.ஆர் ரசிகனாயிருந்த இவர், முரசொலியிலிருந்து விலகி "அலையோசை" பத்திரிகையில் சேர்ந்தார். அங்கிருந்தபோது இயக்குனர் பி.மாதவனின் அறிமுகம் கிடைத்தது. மாதவன் தயாரித்த பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாட்டை முதன் முதலாக எழுதினார்.
அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார். உழைக்கும் கரங்கள் படத்தில் கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில் என்ற பாடல் தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினார்.
இயற்றிய சில பாடல்கள்..
சங்கீத மேகம் (உதய கீதம்)
தஞ்சாவூரு சீமையிலே (பொண்ணுக்கு தங்க மனசு)
தங்கத்தில் முகமெடுத்து (மீனவ நண்பன் 1977)
வெள்ளிப் பணங்களை (கூட்டுப்புழுக்கள்)
காஞ்சிப் பட்டுடுத்தி (வயசுப்பொண்ணு 1978-79 ஆண்டுக்கான சிறந்த பாடலுக்கான விருதை தமிழக *அரசிடமிருந்து பெற்ற பாடல்)
ஆறும் அது ஆழமில்ல (முதல் வசந்தம்)
பட்டுக்கன்னம் தொடடுக்கொள்ள (காக்கிச்சட்டை)
இதழில் கதை எழுதும் (உன்னால் முடியும் தம்பி)
கூட்டத்திலே கோயில்புறா (இதயக்கோயில்)
சின்னஞ்சிறு கிளியே (முந்தானை முடிச்சு)
தேவன் கோயில் தீபம் ஒன்று (நான் பாடும் பாடல்)
மணியோசை கேட்டு எழுந்து (பயணங்கள் முடிவதில்லை)
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் (ஊருக்கு உழைப்பவன்)
மாஞ்சோலை கிளிதானோ (கிழக்கே போகும் ரயில் 1978 தமிழக அரசின் தங்கப்பதக்கம் பெற்ற பாடல்)
இன்னும் பாடல்கள் பல ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக