புதன், 29 நவம்பர், 2017

நடிகை கே. ஆர். விஜயா பிறந்த நாள் நவம்பர் 30. 1948.


நடிகை கே. ஆர். விஜயா பிறந்த நாள் நவம்பர் 30. 1948.

கே. ஆர். விஜயா ஓர் இந்திய நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர்.
கே. ஆர். விஜயாவின் தாய் கேரளாவையும் தந்தை ஆந்திரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான கற்பகம் 1963 இல் வெளிவந்தது.

கே. ஆர். விஜயா
பிறப்பு 1948 (அகவை 68–69)
திருவனந்தபுரம்
கேரளம் ,
இந்தியா
பணி நடிகை
செயல்பட்ட ஆண்டுகள்
1963–1966
1969–தற்போது வரை
வாழ்க்கைத் துணை
எம். வேலாயுதன் (தி.1966-தற்போது வரை)
பிள்ளைகள் ஹேமலதா (பி.1967)
உறவினர்கள் கே. ஆர். சாவித்திரி,
கே. ஆர். வத்சலா


நடித்த திரைப்படங்கள்
1. அக்கா
2. அக்கா தங்கை
3. அவள் சுமங்கலிதான்
4. இரு மலர்கள்
5. எதிரொலி
6. என் தம்பி
7. கண்ணன் கருணை
8. கண்ணே பாப்பா
9. கந்தன் கருணை
10. கல்யாண ஊர்வலம்
11. கற்பகம்
12. காட்டு ராணி
13. குறத்தி மகன்
14. கை கொடுத்த தெய்வம்
15. சங்கமம்
16. சத்ய சுந்தரம்
17. சபதம்
18. சர்வர் சுந்தரம்
19. சரஸ்வதி சபதம்
20. செல்வம்
21. சொந்தம்
22. சொர்க்கம்
23. தசாவதாரம்
24. தர்மராஜா
25. தராசு
26. திருமால் பெருமை
27. தீர்க்கசுமங்கலி
28. தொழிலாளி
29. நத்தையில் முத்து
30. நல்ல நேரம்
31. நாணல்
32. நான் ஏன் பிறந்தேன்
33. நீலமலர்கள்
34. பஞ்சவர்ணக்கிளி
35. பணம் படைத்தவன்
36. பதில் சொல்வாள் பத்ரகாளி
37. பொன்னான வாழ்வு
38. மிட்டாய் மம்மி
39. யாருக்காக அழுதான்
40. ராமன் எத்தனை ராமனடி
41. ராமு
42. விவசாயி
43. ஊட்டி வரை உறவு

பாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள் நவம்பர் 30 ,1945.



பாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள்  நவம்பர் 30 ,1945.

வாணி ஜெயராம் (பிறப்பு: நவம்பர் 30 ,1945 ) திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர்
தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.  வாணி ஜெயராம் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடி வருகிறார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
சொந்த வாழ்க்கை மற்றும் பின்னணி வாணிஜெயராம் தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தாயார் பெயர் பத்மாவதி.

தொடக்கம்

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய
மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை ம. சு. விசுவநாதன் இசையில் பாடினார்.அதன் பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது செல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில், போன்ற கடினமான பாடல்களை தமிழ்த்திரையுலகில் பதிவுசெய்துள்ளார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார்.இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

பாடல்கள்
1.நித்தம் நித்தம் நெல்லு சோறு! 2.மல்லிகை என் மன்னன் மயங்கும்.. 3.என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்.. 4.ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்! 5.என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்! 6.வேறு இடம் தேடி போவாளோ? தனிப்பாடல்கள் தவிர டூயட் பாடல்களை முன்னணி பாடகர்களோடு பாடியிருக்கிறார். "ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்", "பாரதி கண்ணம்மா", "பூந்தென்றலே...", "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்" என இவர் பாடிய ஒவ்வொன்றும் முத்து முத்தனாவை. , இவ்வளவு சிறந்த பாடல்கள் பலவற்றை கொடுத்த வாணி ஜெயராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

பெற்ற தேசிய விருதுகள்
1975 – தேசிய விருது – சில பாடல்கள் ( அபூர்வ ராகங்கள்)
1980 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – சில பாடல்கள் ( சங்கராபரணம் )
1991 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "அனத்திநீயர ஹர" ( சுவாதி கிரணம்)



வாணி ஜெயராமின் இந்த க்ளாஸிக்குகளை கேட்டிருக்கிறீர்களா? #HBDvanijayaram

பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்தவர் இவர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், வேலை பார்த்தது வங்கி ஊழியராக... வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்ற இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்டது ஹிந்தி திரையுலகம். பின்பு, தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னடம், குஜராத்தி,மராத்தி, ஒடியா என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாடிய பல மொழிகளில் அம்மாநிலத்தின் உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார்.
கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக பாடலாக இருந்தாலும் சரி, பாடலின் நயங்களால் மக்களை அந்த இடத்திலிருந்தே உணர வைப்பதில் வல்லவர். தமிழக இசை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர். காதல் பாடலாக இருந்தாலும், பெண்களின் மனதை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும் , டூயட் பாடலாக இருந்தாலும், அந்த காதாபாத்திரமாகவே மாறி பாடக்கூடியவர். இந்நாளில் அவருடைய சிறந்த பாடல்கள் சிலவற்றை பார்ப்போம்.
நித்தம் நித்தம் நெல்லு சோறு!

தமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாத பாடல் இது. பாடல் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை அப்படியே ஒரு கிராமத்து பெண் பாடுவது போலவே பாடி முடித்திருப்பார். இந்தப்பாடலை கேட்டு முடித்த பிறகும் அதிலிருந்து மீண்டு வர சில நேரம் ஆகும். அப்படியான இசையும், குரலும், வரிகளும் பின்னிப் பிணைந்து இருக்கும்.
"பச்சரிசி சோறு.. உப்பு கருவாடு...
சின்னமனூரு வாய்க்கா செலு கொண்ட மீனு
குருத்தான மொல கீற வாடாத சிறு கீற
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆச வந்து என்னை மீறுது"
என இளையராஜாவின் இசையில்,  கங்கை அமரனின் வரிகளில் மனதை மயக்கும் பாடல் இதோ!
மல்லிகை என் மன்னன் மயங்கும்....
கணவனுக்கு பிடித்த மல்லிகை பூவை சூடிக்கொள்ளவா ? என மனைவி கேட்டு பாடும் பாடல் இது.
"குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி
கொஞ்சிப் பேசியே அன்பை பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம் தான்
கையோடு நான் அள்ளவோ"
என மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பெண்களின் மனம் கவர்ந்த பாடல் இதோ!
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்...

ஒரு பெண் காதல் வயப்படும்போது உணரும் உணர்ச்சிகளை குரலிலேயே தந்து அசத்தியிருப்பர் வாணி ஜெயராம். ரோசப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வரும் இப்பாடல் காட்சிக்கு பின்னே ஓடும். ஆனால் கதாநாயகியின் உணர்ச்சிகளை பாட்டு வெளிப்படுத்தும்.
"என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் கேட்கிறது
ஆனால் அதுவும் ஆனந்தம்"
என தொடங்கும் இப்பாடல் கவிஞர் புலமைப்பித்தன் எழுதி இசைஞானி இளையராஜா இசையமைத்ததாகும்.
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!
வாணி ஜெயராம் அவர்கள்,  இந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் சாங் இது. இந்த பாடல் தவிர்த்து, கேள்வியின் நாயகனே பாடலும் வாணி ஜெயராம் பாடியதுதான். படத்தின் முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் வாணி ஜெயராமிடம் இயக்குநர் ஒப்படைத்திருக்கிறார் என்றால் பாருங்கள், அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் அளவுகோலை!  இந்த பாடலை தத்துவப் பாடல் என்றே சொல்லலாம். கவிஞர் கண்ணதாசனின்,
"ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்"
என்ற வரிகளில், எம்.எஸ்.விசுவநாதன் இசையில் அந்த பாடல் இதோ!
என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்!
காதலனை பார்த்து உருகி பாடும் பாடல் இது. காதலை கூறும்போது வெட்கத்துடன் நளினத்துடன் கூறுகிறாள் இந்த நங்கை. அது வேறு யாருமல்ல நம் பாடகி தான்.
"உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ
சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும் நல்ல சஙீதம் தான்………"
என இளையராஜாவின் இசையில் நனைந்திட அப்பாடல் இதோ!
வேறு இடம் தேடி போவாளோ?
பாடல்களில் பல்வேறு உணர்ச்சிகளை கொடுப்பவர் வாணி ஜெயராம் என்று முன்பே கூறியதற்கு உதாரணம் இப்பாடல். இயலாமையில், வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் பெண்ணின் மனக்குரலை பதிவு  செய்திருக்கிறார். உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் மனதை கணமாக்கும்.
"சிறு வயதில் செய்த பிழை
சிலுவையென சுமக்கின்றாள்
இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ
மலரெனவே முகிழ்ப்பாளோ"
என்ற ஜெயகாந்தனின் கனத்த வரிகளோடு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அந்த பாடல் இதோ!
தனிப்பாடல்கள் தவிர டூயட் பாடல்களை முன்னணி பாடகர்களோடு பாடியிருக்கிறார். "ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்", "பாரதி கண்ணம்மா", "பூந்தென்றலே...", "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்" என இவர் பாடிய ஒவ்வொன்றும் முத்து முத்தனாவை. இவ்வளவு சிறந்த பாடல்கள் பலவற்றை கொடுத்த வாணி ஜெயராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!


வாணி Honey ஜெயராம்

70வதுகளில் பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி,எஸ்.ஜானகி என்று கேட்ட குரல்களையே கேட்டு புளித்துப் போய் இருந்த காலக் கட்டத்தில் வந்தவர் வாணி ஜெயராம்.இவர்களிடமிருந்து மாறுபட்ட வித்தியாசமான குரல்."என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்” பாட்டைக் கேளுங்கள் தெரியும்.
ஒரு மாதிரி ஜலதோஷம் பிடித்த ”தமிழ்ந்துஸ்தானி” கலவைக்குரல். மனதைக் கொள்ளை கொள்ளும் ஹோம்லி  குரல்.ஜானகியிடம் இருக்கும் வசீகரம் இவரிடம் இருந்ததா? ஆனால் இவரிடம் வேறு விதமாக இருந்தது.(தங்கத்தில் முகம் எடுத்து)
அப்போது குடும்பப் பாட்டு = சுசிலா, குடும்பம +செமிகுடும்பம் =ஜானகி,கிளப் டான்ஸ் பாட்டு =ஈஸ்வரி, என்ற பார்முலா இருந்தது. இவர் குடும்பப் பாட்டுக்கு முதலில் செட்டாகி பின்னால் பார்முலாவை மீறி சில பாடல்கள் பாடினார்.
எல்லா வித இசையும் கைப்பிடியில் வைத்திருந்ததால் எல்லா வித பாடல்களையும் சிரமமின்றிப் பாடினார்.ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழிகள் ப்ளஸ் வேறு மொழிகளிலும் பாடி நிறைய அவார்டுகள் வாங்கினார்.இவர் குரல் எல்லா மொழிக்கும் ஓரளவு பொருந்தி வந்ததுதான் காரணம்.
எல்லா மொழிப் பாடல்களைப் பாடினாலும் இவர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அச்சு அசல் தமிழ்அய்யங்கார் பெண் என்பதால உச்சரிப்பில் எந்த வித வட இந்திய சாயல் இல்லை.தமிழ் உச்சரிப்பும் அருமை.
முதல் படம் என்னவென்று தெரியவில்லை.
தமிழுக்கு வருவதற்கு முன் 1971ல் Guddi என்ற இந்தி படத்தில் இவர் பாடிய “போல் ரே பப்பிஹரா” மெகா ஹிட் பாடல். ஒரு பக்கத்து வீட்டு ஹைஸ் ஸ்கூல் பெண் ஹோம்லிகுரலில்இந்தியாவையே கிறங்கடித்தவர் வாணி ஜெயராம்.அப்போது இந்தி சினிமா மோகத்தில் இருந்த தமிழ்நாடும் பாட்டைக் கேட்டு சொக்கியது.ஆனால் தமிழிற்கு பின்னால்தான் வந்தார்.(1975ல் “ போல் ரே பப்பிஹரா” பாட்டு “என் உள்ளம் அழகான வெள்ளித்திரை” என்று தமிழில் சினிமா பைத்தியம் படத்தில் டவுன்லோட் ஆகி ”ஹிட்” ஆகியது.)
1973ல் வாணிஜெயராம் வந்தாலும் 1974ல்தான், “மல்லிகை என் மன்னன்” என்னும் தீர்க்க சுமங்கலி பட பாடல் குறிப்பாக தமிழ்நாட்டின் எல்லா ஹோம் மேக்கர்/ஹவுஸ் வைஃப்களுக்கு மிகவும் பிடித்துப்போய்  சூப்பர் ஹிட் ஆகியது.ஹோம் மேக்காதவர்களும் ரசிக்கத்தான் செய்தார்கள்.
இந்தப் பாட்டு(இசை- எம்எஸ்வி) வழக்கமான பி.சுசிலாவின் குடும்ப டைப்தான்.ஆனால் வாணி பாடியதும் வித்தியாசமாக இருந்து ரசிகர்கள் கிறங்கிப்போனார்கள்.அதற்கு பிறகு சுசிலா டைப் பாடல்கள் இவருக்குத் தாவின.வேறு டைப் பாடல்களும் பாடினார்.அடுத்து அப்போது வந்த நிறைய புது கதாநாயகிகளுக்கும் இவர் குரல் பொருந்தி வந்தது.
அப்போது தொடங்கி இவரின் கிராஃப் மேல் நோக்கிப் போக ஆரம்பித்தது.சுசிலாவும் ஜானகியும் சற்று பின் தங்கினார்கள்.
ஆனால் முதல் கட்டமாக என்னை இவரிடம் ஈர்த்தப் பாடல்கள்:
”மண்ணுலகில் இருந்து தேவன்”(புனித அந்தோனியார் - எம் எஸ் வி)
(கேட்ட இடம்,நேரம்,தேதி இன்னும் கூட இன்னும் ஞாபகம் இருக்கிறது)
”அன்பு மேகமே” (எங்கம்மா சபதம்-விஜய பாஸ்கர்)
”ஏழு சுவரங்களில்”(அபூர்வ ராகங்கள்- எம் எஸ் வி)
(மெகா ஹிட் பாடல். புல்லரிக்கும் ஆரம்ப ஆலாபனை)
“ஆடி வெள்ளி” “வசந்த கால நதி”(மூன்று முடிச்சு -எம் எஸ் வி)
“கங்கை நதி ஓரம்”(வரப்பிரசாதம்- வி.குமார்)
“ வேறு இடம் தேடிப் போவாளோ” (சில நேரங்களில் சில மனிதர்கள்) haunting melody.கிளாசிகல் டச்சோடு வாணி அருமையாகப் பாடி இருக்கிறார். எம் எஸ் வி
தன் இசைக்கோர்வையில்(orchestration) இன்னும் கூட சோக உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம்.தன்னுடைய புளித்துப்போன ஸ்டீரியோடைப் இசையே இதிலும் வருகிறது.
இதே காலக்கட்டத்தில் இவர் பாடிய ஹிட ஆகாத நிறைய டப்பா பாடல்களும் இருக்கிறது.எல்லாம் வீண்.
அடுத்த மெகா ஹிட் ”மேகமே..மேகமே..”(பாலைவனச்சோலை).
அடுத்தக் கட்டமாக இளையராஜா இவரை மெருகேற்றி/மேம்படுத்தி நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்தார்.அதே சமயத்தில் பல இசை அமைப்பாளரின் இசைகளிலும் பாடிக்கொண்டிருந்தார்.
வீணை சிட்டிபாபு இசையமைத்த ராஜாஜியின் “திக்கற்ற பார்வதி” படத்திலும் பாடியுள்ளார்.
ஹிட் ஆன பாடல்கள்:
1.யாரது சொல்லாமல் நெஞ்சு/இலக்கணம் மாறுதோ
2.ஒரே நாள் உனை /பாரதி கண்ணம்மா/அந்தமானைப் பாருங்கள்
3.என் உள்ளில் எங்கோ/தங்கத்தில் முகம் எடுத்து/பொங்கும் கடலோசை
4.மேடையில் ஆடிடும்/எத்தனை மலர்கள்/அமுத தமிழில் எழுதும்
5.கங்கை யமுனை/நானா பாடுவது நானா/அம்மாணை அழகு
"மண்ணுலகில் இருந்து” -புனித அந்தோனியார்- 1977
"அன்பு மேகமே” - எங்கம்மா சபதம் -1974
வித்தியாசமான மெட்டு. வாணி/பாலு இருவரும் அருமை.
”அம்மாணை அழகுமிகு கண்”-அவன் ஒரு சரித்திரம்-1977
(இந்தப் பாட்டின்(எம் எஸ் வி) தாக்கத்தில்தான் “பொன்மானே சங்கீதம் பாடவா”
பாட்டை ராஜா போட்டிருப்பார் என்பது என் யூகம்.)
என்னால் என்றும் மறக்க முடியாத மற்றொரு பாடல்:
"என் கல்யாண ” -அழகே உன்னை ஆராதிக்கிறேன்-1978
வாணியின் குரலைக் கேளுங்கள்.மிகவும் வித்தியாசமாக தெரியும் அருமை.ராஜாவின் இசைக்கோர்ப்பைக் கேளுங்கள்.மகழ்ச்சிக் கொப்பளிக்கும் இளம் பெண்ணின் காதல் மனத்தை பிரதிபலிக்கும் வண்ணமயமான துள்ளிக்குதிக்கும் இசை. மத்யமாவதி ராகத்தில் போடப்பட்டுள்ளது.

நடிகை வி. என் ஜானகி இராமச்சந்திரன் பிறந்த தினம் நவம்பர் 30, 1923.


நடிகை ஜானகி இராமச்சந்திரன் பிறந்த தினம் நவம்பர் 30, 1923.

ஜானகி இராமச்சந்திரன் (நவம்பர் 30, 1923 – மே 19, 1996) ( Janaki Ramachandran ) அல்லது வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , முன்னாள் தமிழக முதல்வர் பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார்.
பிறப்பு
வைக்கம் நாராயணி ஜானகி கேரள மாநிலம் திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த
நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1924 செப்டம்பர் 23 ஆம் நாள் பிறந்தார். இவருக்கு மணி என்ற நாராயணன் என்னும் தம்பி இருந்தார்.
கும்பகோணம் வாழ்க்கை
முன்னோர்களின் சூதாட்டம் கேளிக்கைகளால் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். எனவே ஜானகி தனது 12ஆவது வயதில், 1936 ஆம் ஆண்டில், தன் தாயாருடன்
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார்.
அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் பாபநாசம் சிவனுக்கு தம்பியான இராசகோபலய்யர் ஆவார். சிறிதுகாலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபலய்யருக்கு துணைவி ஆனார். 1936 ஆம் ஆண்டில் வெளிவந்த மெட்ராஸ் மெயில் திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபலய்யருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறினார். அதனால் ஜானகியும்
சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

திரை வாழ்க்கை

ஜானகி சென்னைக்கு வந்த பின்னர் திரைபடங்களில் நடிக்க விரும்பினார். ஆனால் நாராயணி அம்மாளுக்கு அதில் விருப்பம் இல்லை. இருப்பினும் இராசகோபாலய்யரின் ஊக்குவிப்பால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த படங்கள் பின்வருமாறு:
வ.எண் ஆண்டு திரைப்படம் வேடம்
01 1937 இன்பசாகரன் நடன மாது
02 1939 மன்மத விஜயம் நடன மாது
03 1940 கிருஷ்ணன் தூது
நடன மாது
04 1941 கச்ச தேவயானி நடன மாது
05 மும்மணிகள் நடன மாது
06 1941 சாவித்திரி நடன மாது
07 தெலுங்குப்படம் 1
நடன மாது
08 தெலுங்குப்படம் 2
நடன மாது
09 1942 அனந்த சயனம் சிறு வேடம்
10 1942 கங்காவதார் சிறு வேடம்
11 1943 தேவ கன்யா சிறு வேடம்
12 1944 ராஜா பர்த்ருஹரி
சிறு வேடம்
13 1945 மான சாம்ரட்சனம்
சிறு வேடம்
14 1946 பங்கஜவல்லி சிறு வேடம்
15 1946 சகடயோகம் கதைத் தலைவி
16 1947 சித்ர பகாவலி சிறு வேடம்
17 1947 தியாகி சிறு வேடம்
18 1947
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
கதைத் தலைவி
19 1948 சந்திர லேகா ஜிப்ஸி பெண்
20 1948 ராஜ முக்தி கதைத் தலைவி
21 1948 மோகினி
22 1949 லைலா மஜ்னு
23 1949 வேலைக்காரி கதைத் தலைவி
24 1950 மருதநாட்டு இளவரசி
கதைத் தலைவி
25 1951 தேவகி
26 1953 நாம் கதைத் தலைவி
நடனப் பள்ளியில்
அனந்த சயனம் திரைப்படத்தை இயக்கிய கே. சுப்பிரமணியம் நடன கலா சேவா என்னும் நாட்டியக் குழுவை அமைத்திருந்தார். ஜானகி இக்குழுவில் 1942ஆம் ஆண்டில் இணைந்தார். இக்குழுவில் கே. சுப்பிரமணியத்தின் மனைவியும் நடிகையுமான எஸ். டி. சுப்புலெட்சுமிக்கு அடுத்த நிலையில் இருந்தார். அவரோடு இணைந்து இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர்கள் நாட்டிய நாடகங்களை நடத்தினர். வள்ளி திருமணம் நாடகத்தில் ஜான்கி
முருகனாகவும் சுப்புலெட்சுமி
வள்ளியாகவும் நடித்தனர்.


மணவாழ்க்கை

முதல் திருமணம்
ஜானகி திரையுலகில் நுழைந்த சில காலத்திற்குள் நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதிபட் என்னும் கன்னடமொழிக்காருக்கு அறிமுகம் ஆனார். அவ்வறிமுகம் காதலாக மாறி, திருமணமாக முடிந்தது இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என்னும் ஆண்குழந்தை பிறந்தது.
இரண்டாவது திருமணம்
ஜானகி இராஜ முக்தி படத்தில் கதைத் தலைவியாக நடித்தபொழுது, இரண்டாவது கதைத் தலைவனாக எம். ஜி. ஆர். என்னும் ம. கோ. இராமசந்திரன் நடித்தார். ம. கோ. இரா.வுக்கு முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின் ஜானகி இருந்ததால், ம. கோ. இரா.வுக்கு இவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. [4] அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் ஜானகியும் ம. கோ. இரா.வும் காதலிக்கத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகிக்கு முதற்கணவரான கண்பதிபட்டின் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரை தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். இத்திருமணத்தை ம. கோ. இரா.வுக்கு அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும் குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். எனினும் ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம்திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே ம. கோ. இரா.வும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together). 12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் 1962 சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டைலிருந்து கிளம்பி இராமவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.

குழந்தைகள்

ஜானகிக்கு அப்பு என்கிற சுரேந்திரனைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. எனவே தன் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா, கீதா, சுதா. ஜானு, தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.

அரசியல் வாழ்க்கை

முதலமைச்சர்
ஜானகி தன் கணவர் ம. கோ. இரா. மும்முரமாக அரசியலில் ஈடுபட்டிருந்த காலங்களில் அதன் நிழல்கூட தன்மீது படாத அளவிற்கு விலகி இருந்தார். ம. கோ. இரா. 1984 ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட பின்னர் அவருக்குத் துணையாக அவரோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். ம. கோ. இரா. 1987 திசம்பர் 24 ஆம் நாள் மரணமடைந்த பின்னர் ஜானகி 1988 சனவரி 7 ஆம் நாள் ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால் சட்ட மன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 சனவரி 30 ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார்.
தேர்தலில் போட்டி
ம. கோ. இரா.வின் மறைவிற்குப் பின்னர் அவரைப் பொதுச்செயலாளராகக் கொண்டு இயங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நான்கு பிரிவுகளாகப் பிரிந்தது. இதில் ஜானகி, ஜெயலலிதா தலைமையிலான அணிகள் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் போட்டி இட்டன. இதில் ஆண்டிபட்டித் தொகுதியில் ஜானகி போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அ. இ. அ. தி. மு. க. இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டதால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பை இழந்தது. எனவே அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெருமுயற்சி செய்து ஜானகி,. ஜெயலலிதா தலைமையிலான அணிகளை இணைத்தனர். ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். ஜானகி அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகினார்.
இவற்றையும் பார்க்க
எம்.ஜி.ஆர் உருவாக்கிய காதுகேளதாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக் காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், கடந்த 1996 மே மாதம் 19-ம் தேதி 73-வது வயதில் மறைந்தார் [6] .
மறைவு
ஜானகி அரசியலில் இருந்து விலகி ம. கோ. இரா.வின் இராமவரம் தோட்டத்தில் தன் மகனோடும் வளர்ப்புப் பிள்ளைகளோடும் வாழ்ந்தார். 1996 மே 19 ஆம் நாள் காலமானார்.



தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் வி.என். ஜானகி...பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என். ஜானகி அம்மாளின் 94-வது பிறந்த நாள் இன்று....
தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்ற வி.என். ஜானகி அம்மாளின் சொந்த ஊர், கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வைக்கம். அங்கு 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறந்தார். இவருடன் பிறந்தவர் மணி என்ற நாராயணன். வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கம்தான் வி.என். ஜானகி.
Advertisement
கர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியரான பாபநாசம் சிவனின் தம்பி ராஜகோபால் ஐயரின் மகள் வி.என். ஜானகி. பாடலாசிரியரான ராஜகோபால் எதிர்பாராதவிதமாக குடும்பச் சொத்துக்களை இழந்து, மிகவும் வறுமைக்கு ஆளானார். சரியான வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்தவருக்கு 'மெட்ராஸ் மெயில்' என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்புக் கிடைத்தது. வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வதற்காக. உறவினர்கள் அறிவுரைப்படி 1936-ம் ஆண்டு குடும்பத்தினருடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறினார்.
கலைக் குடும்பம் என்பதால் இயல்பாகவே பாடல், நடனம் இவற்றில் ஈர்ப்பு கொண்டிருந்த மகள் ஜானகிக்கு, சென்னை வாழ்க்கை திசைமாற்றத்தை அளித்தது. ஆம். படிப்புடன் தனக்குப் பிடித்தமான பாடல், நடனம் இவற்றில் அவர் தீவிர கவனம் செலுத்தினார். முறையாக அவற்றை கற்றுத் தேர்ச்சியும் பெற்றார்.

குடும்ப நண்பரான பிரபல இயக்குநர் கே.சுப்ரமணியம் நடத்தி வந்த 'நடன கலா சேவா' என்னும் நாட்டியக் குழுவில் இணைந்து நடித்தார். இந்தியா முழுவதும் பல நகரங்களில் இந்தக் குழு நாட்டிய நாடகங்களை நடத்தியது. நடன கலா சேவா குழுவின் நாடகங்களில் மிகுந்த வரவேற்பு பெற்ற நாடகம் 'வள்ளி திருமணம்'. இதில் முருகன் வேடத்தில் ஜானகி நடித்தார். இயக்குநர் சுப்ரமணியத்தின் துணைவியார் எஸ்.டி சுப்புலட்சுமி. வள்ளியாக நடித்தார். ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஜானகிக்கு கிடைத்தது.
நாடகத் துறையில் கிடைத்த பிரபல்யத்தால். ஜானகியை சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. கே. சுப்ரமணியத்தின் 'மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்', 'இன்பசாகரன்' என்ற கதையை திரைப்படமாக தயாரித்தது. படத்தை இயக்கிய கே.சுப்பிரமணியம் வி.என்.ஜானகியை இதில் அறிமுகப்படுத்தினார். ஜானகிக்கு அப்போது வயது 13. துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத்தின் தயாரிப்பின்போது, ஸ்டுடியோ முற்றிலுமாகத் தீப்பற்றி எரிந்து படத்தின் மொத்த நெகடிவ்களும் எரிந்து சாம்பலாயின. அதைத் தொடர்ந்து 'கிருஷ்ணன் தூது' என்ற திரைப்படத்தில் நடன மாது கதாபாத்திரத்தில் நடித்தார் ஜானகி. தொடர்ந்து மன்மத விஜயம், கச்ச தேவயானி, மும்மணிகள், சாவித்திரி, அனந்த சயனம், கங்காவதார், தேவ கன்யா, ராஜா பர்த்ருஹரி, மான சாம்ரட்சனம் , பங்கஜவல்லி என படவாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. ஆனால் மேற்சொன்ன திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களோ அல்லது நடன நடிகையாகவோதான் ஜானகி நடித்தார். 'சகடயோகம்' என்ற திரைப்படத்தில்தான் முதன்முதலில் கதையின் நாயகியாக முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து சித்ர பகாவலி, தியாகி படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்தன.
நடிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பின், அவரது 18-வது படத்தில்தான் பிரதான கதாநாயகி வேடம் ஜானகிக்கு கிடைத்தது.
'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்ற திரைப்படம் ஜானகிக்கு பெயரும் புகழும் தேடிக் கொடுத்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், இன்றும் திரைப்பட ரசிகர்களால் பேசப்படும் திரைப்படமாகத் திகழ்கிறது. படத்தின் கதாநாயகன் பி.எஸ். கோவிந்தன், கதாநாயகி ஜானகி.
நாட்டின் இளவரசியாக வரும் சிந்தாமணி தனது மூன்று கேள்விகளுக்கு விடை சொல்பவரைத் தான் மணக்க வேண்டும் என தன் ராஜகுருவின் அறிவுரைப்படி முடிவெடுத்திருப்பார். அதன்படி ஒரு போட்டி வைப்பார். போட்டியில் கலந்து கொள்பவர்களிடம் 3 கேள்விகளைக் கேட்பார். கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தவறுபவர்களின் தலை வெட்டி வீழ்த்தப்படும். இப்படி சிந்தாமணியால் 999 பேர் வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பர். இவர்களில் தனது ஐந்து அண்ணன்களை சிந்தாமணியிடம் இழந்த நாயகன் கோவிந்தன் (புலிக்குட்டி கோவிந்தன் என அந்நாளில் அழைக்கப்பட்டவர்) சிந்தாமணியை தோற்கடிப்பதற்காக, அந்த கேள்விக்கு விடைதேடி மூன்று ஊர்களுக்குச் செல்கிறான். பதிலை அறிந்து வந்து சிந்தாமணியை திருத்தி, அவரது அத்தை மகனுக்கு மணமுடித்து வைத்து, அண்ணன்களை காளியின் அருளால் மீட்கிறான். இளவரசி கதாபாத்திரத்தில் நடித்த வி.என்.ஜானகி நடிப்பில் அசத்தியிருப்பார்.

மிகவும் நீளமான படம் என்றாலும் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் அலுப்பில்லாமல் இயக்கியிருப்பார் இந்த படத்தை. வெள்ளித்திரைக்கு அதிஅற்புதமான நடிகை கிடைத்தார் என சினிமா பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. படத்தில் கிடைத்த புகழால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன. அந்தக் காலத்தில் திரையுலக சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதருடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
1948-ல் வெளிவந்த 'ராஜ முக்தி' திரைப்படம் வி.என் ஜானகிக்கு பெரும்புகழ் தேடிக்கொடுத்ததோடு, அவரது வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தத்தை ஏற்படுத்தியது. அந்தப்படத்தில் துணை நடிகராக நடித்த எம்.ஜி.ஆருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. சாதாரணமான நட்பு, அதே ஆண்டில் வெளியான மோகினி படத்தில் இன்னும் நெருக்கமானது. பிரபல கதாநாயகியான ஜானகி புகழ்பெறாத சாதாரண துணை நடிகர் என்ற நிலையில் இருந்த எம்.ஜி.ஆரை விரும்ப ஆரம்பித்தார். துணை நடிகரான எம்.ஜி.ஆருக்கு, அந்தக் காதலை ஏற்பதில் சங்கடங்கள் இருந்தன.இடையில் 'லைலா மஜ்னு', 'வேலைக்காரி' ஆகிய படங்கள் வெளியாகின. இதற்கிடையில், திரைத்துறையில் எம்.ஜி.ஆர் கதாநாயக நடிகராக உயர்ந்திருந்தார். 1950-ல் 'மருதநாட்டு இளவரசி' திரைப்படத்தில் ஜானகிக்கு. எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தது. இருவருக்குள்ளும் இருந்த சங்கடங்கள் நீங்கி நெருங்கிய நண்பர்களாகினர். இருவரும் சேர்ந்து நடித்த கடைசிப்படம் 'நாம்'. அதன் பின்னர், திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜானகி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணையானார். எம்.ஜி.ஆர்- ஜானகி திருமணத்துக்கு சாட்சி கையெழுத்திட்டவர் படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர். 1962-ல் மனைவி சதானந்தவதியின் மரணத்துக்குப் பின், ராமாவரம் தோட்டத்துக்கு ஜானகியுடன் குடிபுகுந்தார் எம்ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் வாழ்வில் ஜானகிக்கு பெரும்பங்கு உண்டு. ஜானகியை ஜானு என நெஞ்சுருகி அழைப்பார் எம்.ஜி.ஆர். சமையலில் தேர்ந்தவரான ஜானகியின் கைப்பக்குவத்துக்கு எம்.ஜி.ஆர் தீவிர ரசிகர். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவரானாலும் கணவரின் உணவு விருப்பத்துக்காக பின்னாளில் தானும் மாறினார். அசைவப் பிரியரான எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான அசைவ உணவுகளை ஜானகியே சமைப்பார். சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் நிச்சயம் ஓட்டல் சாப்பாட்டை தவிர்த்து விட்டு பகல் 1 மணிக்கு எங்கிருந்தாலும் ராமாவரம் இல்லத்துக்கு வந்து விடுவார் எம்.ஜி.ஆர். அத்தனை கைப்பக்குவம் ஜானகிக்கு.
ராமாவரம் தோட்டத்துக்கு வந்தபின் குழந்தையில்லாத குறையை நிவர்த்தி செய்ய வி.என்.ஜானகியின் தம்பி நாராயணனின் பிள்ளைகளை தத்தெடுத்துக் கொண்டனர் எம்.ஜி.ஆர் -ஜானகி தம்பதி. கணவரின் உதவும் குணத்துக்கு ஜானகி எப்போதும் குறுக்கே நின்றதில்லை. ராமாவரம் தோட்டத்தில் தவறு செய்யும் ஊழியர்கள் மீது எம்.ஜி.ஆர் மிகுந்த கோபம் கொள்வார். அப்போதெல்லாம் அவரை சமாதானப்படுத்துவது ஜானகியின் முக்கியப் பணி. எம்.ஜி.ஆர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்களிலிருந்து ஒதுங்கி திரைத்துறையில் புகழ்பெற ஜானகி முக்கியக் காரணம். பிரபலமான கதாநாயகியாக இருந்தாலும் திரைத் துறையில் இருந்து ஒதுங்கிய பின் ஒரு குடும்பப் பெண்மணியாக எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பக்கபலமாக இருந்தவர் அவர். அண்ணா, கருணாநிதி முதற்கொண்டு அத்தனை தலைவர்களும் அவரின் கையால் சோறுண்டவர்கள். கருணாநிதி அவரை அக்கா என்று அன்பொழுக அழைப்பார். புகழ்பெற்ற நடிகரின் மனைவி, பின்னாளில் முதல்வர் மனைவி என்றாலும் வீட்டில் ஒரு எளிய இல்லப் பெண்மணிபோல் இருப்பார். எம்.ஜி.ஆரின் கைகள் 'கொடுத்து சிவந்தவை' என்பார்கள். உண்மையில் ஜானகியையும் அப்படியே குறிப்பிடலாம். பொது இடங்களில் தன் கைகளில் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தாலும், தனது வீட்டில் உதவி கேட்டு வருவோர் மற்றும் திருமணப் பரிசுகள் போன்றவற்றை மனைவி ஜானகியின் கைகளால்தான் கொடுக்கச் செய்வார் எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் எப்போதும் சமையல் அடுப்பு எரிந்த வண்ணம் இருக்கும். ஏழை-எளியவர் ஆனாலும் சொகுசு காரில் வந்திறங்கும் தொழிலதிபர்களானாலும் உண்ணாமல் அனுப்ப மாட்டார்கள் எம்.ஜி.ஆர்- ஜானகி தம்பதி. முதல்வரானபின் எம்.ஜி.ஆர் அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் மனைவி ஜானகிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. ஜானகியும் அதை விரும்பியதில்லை. படப்பிடிப்புக்காக வெளிநாடு பயணங்களின்போது, மனைவி ஜானகியையும் உடன் அழைத்துச் செல்வார் எம்.ஜி.ஆர். சில நாட்களுக்குக் கூட மனைவியைப் பிரிந்து அவரால் இருக்க முடியாது. அந்தளவுக்கு ஒருவருக்கொருவர் அன்பு கொண்டவர்கள்.

தனது திருமண நாளன்று எங்கும் செல்லாமல் மனைவி ஜானகி மற்றும் தானும் வீட்டில் உள்ள அத்தனை நகைகளையும் அணிந்து கொண்டு எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பார் எம்.ஜி.ஆர். அன்றைய தினம் தங்களின் ஆரம்ப கால சினிமா நாட்களை அசைபோடுவார்கள் இருவரும். அன்றைய தினம் உறவினர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். வெளியாட்களுக்கு அன்று அனுமதி கிடையாது. 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் எதிர்பாராதவிதமாக நோய்வாய்பட்டபோது, சத்தியவானை சாவித்திரி மீட்டது போன்ற ஒரு முயற்சியை ஜானகி மேற்கொண்டார். முதலில் அப்போலோவிலும் பிறகு அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனையிலும் எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஒரு தாயைப் போல் எம்.ஜி.ஆரை ஜானகி கவனித்துக் கொண்டவிதம் மருத்துவர்களையே ஆச்சர்யப்பட வைத்தது. எம்.ஜி.ஆர் உடல்நிலை சீராகி திரும்பி வந்ததற்கு ஜானகி அம்மையார் ஒரு முக்கியக் காரணம்.
ஜானகிக்கு 1986-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்நாளில் எம்.ஜி.ஆர் துடிதுடித்துப் போனார். அன்று முழுவதும் அவர் பூனைக்குட்டி போல, ராமாவரம் தோட்டத்தை சுற்றிச் சுற்றி வந்தார். உணவுகூட உண்ணவில்லை. “ஜானுவுக்கு ஒண்ணும் ஆகாதுல்ல” என பார்ப்பவர்களிடம் எல்லாம் பரிதவிப்போடு விசாரித்தார் எம்.ஜி.ஆர். அத்தனை அன்பு தனது துணைவியார் மீது.
1987 டிசம்பர் 24-ல், தமிழர்களை நிலைகுலைய வைத்த எம்.ஜி.ஆரின் மரணம் கட்சியையும் ஒரு கலக்கத்துக்கு உள்ளாக்கியது. கவர்னர் குரானாவின் அழைப்பை ஏற்று, முதல்வராக பதவி ஏற்றார் ஜானகி அம்மையார். ஆனால் அற்பாயுசில் முடிந்தது அந்த ஆட்சி. தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற வரலாற்றுப் பெருமை பெற்றார் ஜானகி அம்மையார்.


அ.தி.மு.க, ஜெயலலிதாவின் ஆதரவாளர்களால் கபளீகரம் செய்யப்படுவதைத் தடுக்க, ஜெயலலிதாவுக்கு எதிரான எதிர்ப்பு அணிக்கு தவிர்க்க முடியாமல் ஜானகி தலைமையேற்க நேர்ந்தது. அரசியல் களத்தை அதகளப்படுத்திய அக்காலகட்டத்தில், ஜானகி அம்மையாருக்கு தூக்கம் இருந்திருக்காது ஒருநாளும். அத்தனை போராட்டங்களை அந்நாளில் சந்தித்தார் அவர். எம்.ஜி.ஆரின் தீவிர அரசியல் களத்தில் ஆரம்ப நாட்களில் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்த அவருக்கு, இப்போது களத்தில் முதல் ஆளாக நிற்கும் கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட தலைவர்களின் வழிகாட்டுதலில் ஓரளவு நிலைமையை சமாளித்தார் அவர். ஆனாலும் அவருக்கு அது முற்றிலும் புதிய அனுபவம். என்றாலும் நாகரிகமாகவே எதிரணியை அணுகினார் ஜானகி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த 2 வருட பரபரப்பு, ஜானகியை பல யோசனைகளுக்குத் தள்ளியது. தன் கணவரின் உழைப்பினாலும், போராட்டங்களாலும் உருவான கட்சி சிதைந்து, தகர்ந்து போவதில் ஜானகிக்கு விருப்பமில்லை. இந்த எண்ணங்கள் மனதில் உருக்கொண்டிருந்த நேரத்தில், 1989-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆர் தோற்றுவித்த கட்சி, அ.தி.மு.க (ஜா), அ.தி.மு.க (ஜெ) என இரண்டு அணிகளாக தேர்தல் களத்தில் நின்றன.
சேவல் சின்னத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க ஜெ அணி 27 இடங்களில் வென்றது. ஜானகி அணியில் பி.ஹெச். பாண்டியன் மட்டுமே வெற்றிபெற்றார். வேறு ஒருவரும் வெற்றி பெறவில்லை. தனது கணவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, தொடர் வெற்றிகளைக் குவித்த அ.தி.மு.க என்ற ஒருகட்சி காணாமல் போவதை விரும்பாத ஜானகி அம்மையார், கவுரவமாக அரசியலில் இருந்து விலக முடிவெடுத்தார். தனது அணியையும், கட்சி அலுவலகத்தையும் முறைப்படி ஒப்படைத்து விட்டு, அரசியலில் இருந்து ஒதுங்கினார். அரசியல் களத்தில் ஒரு தெளிவு பிறந்தது. ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்தடுத்து அரசியல் களத்தில் அதிமுக பெற்ற வெற்றிகள் எழுத வேண்டிய அவசியமில்லாதவை. அந்தவகையில், பரபரப்புக்காக கத்தி வீசிக்கொண்டு கணவரின் கட்சியை காணாமல் போகச் செய்யாமல் கவுரவமாக அவர் எடுத்த முடிவுதான் பின்னாளில் அதிமுக என்ற கட்சி மறுபிறப்பெடுத்து வெற்றிகளை இன்றளவும் குவிக்கக் காரணமானது எனலாம்.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய காதுகேளதாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக் காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், கடந்த 1996 மே மாதம் 19-ம் தேதி 73-வது வயதில் மறைந்தார்.

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் டி. ஆர். இராமச்சந்திரன் நினைவு தினம் -நவம்பர் 30 , 1990.



பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் டி. ஆர். இராமச்சந்திரன் நினைவு தினம்  -நவம்பர் 30 , 1990.

டி. ஆர். இராமச்சந்திரன் ( சனவரி 9 , 1917  -நவம்பர் 30 , 1990 ) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது.

வாழ்க்கைச் சுருக்கம்

இராமச்சந்திரனின் கரூர் மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில் விவசாயியாக இருந்த ரங்காராவ், ரங்கம்மாள் ஆகியோருக்கு 1917 சனவரி 9 இல் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள். நான்கு வயதிலேயே தாய் இறக்கவே தந்தை மறுமணம் செய்து கொண்டார். இராமச்சந்திரன் பாட்டியாரின் ஊரான குளித்தலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தார்.

நாடகங்களில் நடிப்பு

இராமச்சந்திரனுக்குப் படிப்பில் ஈடுபாடு இருக்கவில்லை. குடும்ப நண்பர் இராகவேந்திரராவ் என்பவரின் நாடக அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது. தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம் ஆண்டில்
மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘ என்ற நாடகக் கம்பனி கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது அவர்களது நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். இக்கம்பனி சில காலத்திலேயே மூடப்பட்டதை அடுத்து உள்ளூரைச் சேர்ந்த மணி ஐயர் என்பவர் இக்கம்பனியை நடத்தி வந்தார். இவருடன் நாடகக் கம்பனியில் பணியாற்றிய எஸ். வி. வெங்கட்ராமன் (பின்னாளில் பிரபலமான இசை அமைப்பாளர்) புதிதாகத் தொடங்கிய நாடகக் கம்பெனி ஒன்றில் ராமச்சந்திரனும் அவரது குழுவினரும் சேர்ந்தனர். கருநாடகத்தில் கோலார் நகரில் தங்கியிருந்து நாடகங்களை நடத்தினர். அங்கும் அவர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படவே, வெங்கட்ராமன் திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பெங்களூர் சென்றார்.

திரைப்படங்களில் நடிப்பு

வெங்கட்ராமன் பெங்களூரில் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரை சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனம் நந்தகுமார் என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தது. இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு வெங்கட்ராமனின் நாடகக் கம்பெனி நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். டி. ஆர். ராமச்சந்திரன் டி. ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார். [4] 1938 இல் வெளிவந்த இப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும் இல்லாமல் காலத்தைக் கழித்த இராமச்சந்திரனுக்கு,
வாயாடி திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. [4] பின்னர் நவீன மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை, ஆகிய படங்களில் நடித்தார். [4] 1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான
சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் பெரு வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். இராமச்சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த இராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்திமாலாவுக்கு சோடியாக நடித்தார். [5] பி. ஆர். பந்துலு தயாரித்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்தார். சிவாஜி கணேசன் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். [6]
படங்கள் தயாரிப்பு
ராமச்சந்திரன் 1954 ஆம் ஆண்டில் சொந்தத்தில் படக்கம்பெனி தொடங்கி ‘பொன் வயல்’ என்ற படத்தைத் தயாரித்தார். இதில், ராமச்சந்திரனின் ஜோடியாக
அஞ்சலிதேவி நடித்தார். இத்திரைப்படத்திலேயே சீர்காழி கோவிந்தராஜன் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். எழுத்தாளர் தேவன் எழுதிய கோமதியின் காதலன் என்ற கதையை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரித்து, சாவித்திரியுடன் சோடியாக நடித்தார். [5]
சொந்த வாழ்க்கை
டி. ஆர். இராமச்சந்திரனின் திருமணம் 1948-ல் நடந்தது. ஜெயந்தி, வசந்தி என்று 2 மகள்கள். திரைப்படத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அமெரிக்காவில் மகளுடன் வசித்து வந்தார். அங்கு அவர் 1990 ஆம் ஆண்டில் காலமானார். [6]
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு படம் பாத்தி
1938 நந்தகுமார்
1940 வாயாடி கணவன் [8]
1941 சபாபதி சபாபதி எம்.
1942 கண்ணகி
1943 திவான் பகதூர்
1944 பிரபாவதி
1945 மானசம்ரட்சணம்
1945 ஸ்ரீ வள்ளி
1946 அர்த்தனாரி
1946 லவங்கி
1946 சகடயோகம்
1946 வித்யாபதி
1946 விஜயலட்சுமி
1946 விகடயோகி
1947 நாம் இருவர்
1947 கடகம்
1947 குண்டலகேசி
1947 மகாத்மா உதங்கர்
1947 ருக்மாங்கதன்
1948 கோகுலதாசி
1948 சம்சார நௌகா
1949 வாழ்க்கை
1949 கீத காந்தி
1949 நவஜீவனம்
1951 சௌதாமினி
1951 சிங்காரி
1952 மாப்பிள்ளை
1954
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி கணபதி[11]
1954 பொன்வயல்
1954 ராஜி என் கண்மணி
1955 எல்லாம் இன்ப மயம்
1955 கோமதியின் காதலன்
1955 கள்வனின் காதலி கமலபதி
1955 மேதாவிகள்
1957 மணமகன் தேவை
1957 சமய சஞ்சீவி
1957 தங்கமலை ரகசியம்
1957 யார் பையன்
1958 அன்பு எங்கே
1958 கடன் வாங்கி கல்யாணம்
1958 நீலாவுக்கு நெறஞ்ச மனசு
1959 நல்ல தீர்ப்பு
1959 பத்தரமாத்து தங்கம்
1959 பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
1959 ராஜ சேவை
1959 வண்ணக்கிளி
1960 பாக்தாத் திருடன்
எம்ஜிஆர் உட நகைச்சுவ வேடத்தில்
1960 அடுத்த வீட்டுப் பெண் கதாநாயகன்
1960 படிக்காத மேதை துணை நடி
1960 விடிவெள்ளி
1961 புனர் ஜென்மம்
1962 ஆலயமணி
1963 அறிவாளி
1963 நான் வணங்கும் தெய்வம்
1966 அன்பே வா
புண்ணியக ( சரோஜாதே தந்தை)
1966 சாது மிரண்டால்
1968 தில்லானா மோகனாம்பாள்
வரதன், மிருத வாசிப்பவர்
1968 திருமால் பெருமை
1982 தேவியின் திருவிளையாடல்
பெற்ற விருதுகள்
கலைமாமணி விருது.

டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ, சிவாஜி செகண்ட் ஹீரோ - டி.ஆர்.ஆர் நினைவு தினக் கட்டுரை
விகடன்.
'கண்ணால பேசிப் பேசிக் கொல்லாதே...காதால கேட்டுக் கேட்டுச் செல்லாதே...'என்ற பாடலில் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. 1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர் டி.ஆர். செல்வந்தர் குடும்ப
இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். ஒருவிதமான பதற்றம் கலந்த இவரது நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டது.
காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கிவைத்தவர் டி.ஆர். இவர் ஹீரோவாக நடித்த, 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் சிவாஜியே செகண்ட் ஹீரோதான். இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால், டி.ஆர்க்கு ஜோடி ராகினி. வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, சாவித்ரி எனப் பல முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை.
கரூர், திருக்காம்புலியூர் கிராமத்தில் 1917ம் ஆண்டு பிறந்தார் டி.ஆர். ராமச்சந்திரன். அப்பா ரங்காராவ் விவசாயி. சிறுவயதிலேயே அம்மாவை இழந்த டி.ஆர்.க்கு பள்ளிப் படிப்பு சுத்தமாகவே பிடிக்கவில்லை. திண்ணைப் பள்ளியில் படிக்கப் பிடிக்காமல் காணாமல் போய்விடுவார். பிறகு தேடிப் பிடித்துக் கூட்டி வருவார்கள். பிறகு குளித்தலையில் உள்ள குருகுலப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ' எனக்கு படிப்பு வேண்டாம். நாடகத்தில் நடிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்தார். காரணம். குடும்ப நண்பர் இராகவேந்திரராவ் என்பவரின் நாடக அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது.

பரீட்சை முடிந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம், மகனை வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள வைத்தார் அப்பா. வாய்ப்பாட்டுடன் ஆர்மோனியமும் கற்றுக்கொடுத்தவர் கரூர் ராகவேந்திராவ். இவர் நாடகங்களில் பின்பாட்டுப் பாடும் பாடகர். அவர் நடிப்பது போன்ற பாவனைகளுடன் பாடக் கற்றுக்கொடுக்க, ராமச்சந்திரனுக்கு நடிப்புமீது காதல் வந்துவிட்டது. பிறகு அப்பா அனுமதியுடன் ராகவேந்திரராவுடன் ஒட்டிக்கொண்ட ராமச்சந்திரன் திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று நாடகக் குழுக்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார். பிறகு மதுரையில் தங்கியபோது அங்கே நாடகக் கம்பெனியில் சேர அனுமதி கேட்டு அப்பாவுக்குக் கடிதம் எழுத, மகனின் விருப்பத்துக்கு அவர் தடை போடவில்லை.
தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம் ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘ என்ற நாடகக் கம்பெனி கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது, அவர்களது நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். ஜெகன்நாத ஐயர் வாத்தியாராகவும் முதலாளியாகவும் இருந்து நடத்திவந்த இந்த நாடகக் குழுவில் ஸ்திரீ பார்ட் போடுபவர்களுக்குத் தோழியாக நடிக்க ஆரம்பித்தார் ராமச்சந்திரன். தங்க இடம், மூன்று வேளை சாப்பாடு உட்பட மாதம் 3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது நடிப்புத்திறமையைக் கண்ட சக நடிகரான எஸ்.வி. வெங்கடராமன் (மீரா படத்துக்கு இசையமைத்தவர்) பின்னாளில் தனியாக நாடக கம்பெனி தொடங்கியபோது 25 ரூபாய் சம்பளத்துடன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு வந்தார். அங்கும் அவர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படவே, வெங்கட்ராமன் திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பெங்களூர் சென்றார்.


வெங்கட்ராமன், பெங்களூரில் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரை சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனம் நந்தகுமார் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வந்தது. இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு வெங்கட்ராமனின் நாடகக் கம்பெனி நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். காரைக்குடியில் வெங்கட்ராமன் குழு திறமையைக் கண்டார் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். அதிலும், தனித்துத் திறமையைக் காட்டிய ராமச்சந்திரனை செட்டியாருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. டி.ஆர். ராமச்சந்திரன், டி. ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார். 1938 இல் வெளிவந்த இப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும் இல்லாமல் காலத்தைக் கழித்த இராமச்சந்திரனுக்கு, வாயாடி திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் நவீன மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை ஆகிய படங்களில் நடித்தார்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார்.
1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். இராமச்சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த இராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்திமாலாவுக்கு ஜோடியாக நடித்தார்.
படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாள்வீச்சு தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர். சபாபதி படத்திற்காக 140 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிப் படமாகி பெரும் புகழ் தந்தது. இந்தப் படத்தில் 5 பாடல்களை சொந்தக் குரலில் பாடினார் டி.ஆர். சபாபதி படத்திற்கான மொத்த பட்ஜெட் 32,000 ரூபாய்.
டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில் நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. வானம்பாடி (1963) படத்தில் "யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தனது முதல் திரைப்பயணத்தை துவங்கினார். வித்யாபதி (1946) படத்தில்தான் முதன் முதலாக எம்.என்.நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே வி.என்.ஜானகி நாயகியாக நடித்த முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார். தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி (1941) (செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர் ஏ.டி.கிருஷ்ணசாமி).
திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின், அமெரிக்காவில் தன் மகள்கள் ஜெயந்தி, வசந்தி ஆகியோருடன் வசித்து வந்தார். 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானார். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

கவிஞர் ஏ.மருதகாசி நினைவு தினம் நவம்பர் 29.



கவிஞர் ஏ.மருதகாசி நினைவு தினம் நவம்பர் 29.

மருதகாசி ( பெப்ரவரி 13 , 1920 - நவம்பர் 29 ,
1989 ) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. தந்தை பெயர் அய்யம்பெருமாள் உடையார் தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார்.
1940 ஆம் ஆண்டில் திருமணமான இவரின் மனைவி பெயர் தனக்கோடி அம்மாள். மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள்.
நாடகப் பாடல்கள்
மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் "தேவி நாடக சபை"யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார்.
மு. கருணாநிதி எழுதிய மந்திரி குமாரி போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார்.
பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.
திரைப்படப்பாடல்கள்
1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்சார்
மாயாவதி என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி. ஆர். மகாலிங்கம் , அஞ்சலிதேவி இணைந்து நடித்த இந்தப்படத்தை டி. ஆர். சுந்தரம் இயக்கி வந்தார். இந்தப் படத்திற்குத் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ… என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். இதுவே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.
அதைத் தொடர்ந்து பொன்முடி ( 1950 ) படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன் , ஜிக்கி ஆகியோர்.
சுரதாவின் கதை-வசனத்திலும், எப். நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த
பாகவதரின் அமரகவி படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி. தொடர்ந்து அவர் எழுதிய சிவாஜியின் தூக்குத் தூக்கி படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அந்தக் காலக்கட்டத்தில் ஜி.ராமநாதன், கே. வி. மகாதேவன் , எஸ். தட்சிணாமூர்த்தி ,
விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.
எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல்
தேவரின் தாய்க்குப்பின் தாரம் படத்துக்கு
எம்.ஜி.ஆருக்கு புரட்சிகரமான கருத்துக்களுடன் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே என்ற பாடலை எழுதினார்.
இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில்
ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம்.
மருதகாசியின் பாடல்கள் அரசுடைமை
மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 இலட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
நினைவை விட்டு அகலாத சில பாடல்கள்
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா… ( நீலமலைத் திருடன் )
ஆளை ஆளைப் பார்க்கிறார் ( ரத்தக்கண்ணீர் )
சமரசம் உலாவும் இடமே ... ரம்பையின் காதல் (1939)
சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு ( ராஜா ராணி )
கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த ( தூக்குத் தூக்கி )
ஆனாக்க அந்த மடம்… ( ஆயிரம் ரூபாய் )
கோடி கோடி இன்பம் பெறவே ( ஆட வந்த தெய்வம் )
ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே ( பிள்ளைக்கனியமுது )
கடவுள் என்னும் முதலாளி ( விவசாயி )
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே ( மல்லிகா )
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல ( உத்தம புத்திரன் )
காவியமா? நெஞ்சின் ஓவியமா? ( பாவை விளக்கு )
பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்களின் பட்டியல்
1. சம்பூரண இராமாயணம் (1958) - அனைத்துப் பாடல்களும் இவர் எழுதியவை.
சான்றாவணங்கள்
நாட்டுடைமையாக்கப்பட்ட கவிஞர் அ.மருதகாசி எழுதிய நூல்கள்
உசாத்துணை
4,000 பாடல்களுக்கு மேல் எழுதிய மருதகாசி
"திரைக்கவித் திலகம்" கவிஞர் மருதகாசி , தினமணி, நவம்பர் 6, 2011


தமிழ் திரையுலகின் பிரபலமான பாடலாசிரியரும், திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்தவருமான ஏ.மருதகாசி
(A. Marudakasi) அவர்களின்
நினைவு தினம் இன்று.

அருணாச்சல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.

கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் தேவி நாடக சபா நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதிவந்தார். கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். அங்கு இசையமைத்து வந்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்குப் பாட்டு எழுதி வந்தார். பாடலாசிரியர் ராஜகோபால ஐயரிடம் உதவியாளராகவும் பணியாற்றினார்.

திருச்சி லோகநாதன் அவர்கள் மூலமாக
1949-ல் இவரது திரையுலகப் பயணம் தொடங்கியது. மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மாயாவதி’ படத்துக்காக ‘பெண் எனும் மாயப் பேயாம்’ என்ற பாடலுடன் தன் திரையிசைப் பயணத்தை தொடங்கினார்.

l 1950-ல் வந்த ‘பொன்முடி’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதினார். அனைத்தும் சூப்பர் ஹிட். பிறகு ‘மந்திரிகுமாரி’ படத்துக்கு பாடல்கள் எழுதினார். இவையும் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக இந்த படத்தில் வரும் ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’ பாடல்கள் மறக்க முடியாதவை.

l ‘அமரகவி’, ‘தூக்குத் தூக்கி’ திரைப்படப் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. பல்வேறு திரைப்பட நிறுவனங்களிடம் இருந்து இவருக்கு அழைப்புகள் குவிந்தன. மெட்டுக்கு விரைவாகப் பாட்டு எழுதுவதில் வல்லவர். எனவே அனைத்து இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடலாசிரியராகத் திகழ்ந்தார்.

l ‘எந்நாளும் வானிலே’, ‘மணப்பாறை மாடு கட்டி’, ‘மாசிலா உண்மைக் காதலே’, ‘சத்தியமே லட்சியமாய்’, ‘சமரசம் உலாவும்’, ‘ஏர்முனைக்கு நேர் இங்கே’, ‘கடவுள் எனும் முதலாளி’, ‘வருவேன் நான் உனது’, ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’, ‘இன்று போய் நாளை வாராய்’, ‘மனுஷனை மனுஷன்’ என்பது உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாகாவரம் பெற்ற திரைப்பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.

l தமிழ் திரையுலகில் கண்ணதாசன் அவர்களுக்கு முன்பே அதிகப் பாடல்கள் எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழ்பெற்றவர். 250 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

l சக கலைஞர்களை மதித்துப் போற்றியவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தன் தம்பி போல கருதி பாசம் கொண்டிருந்தார். உடுமலை நாராயண கவியை தன் அண்ணன் போலவும், குருவுக்கு சமமாகவும் மதித்தவர். ‘என் 2 ஆயிரம் பாடல்கள் கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது’ என்று தன்னடக்கத்தோடு கூறுவார்.

l எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உட்பட அனைத்து நடிகர்களுக்கும் அவரவருக்குப் பொருத்தமாகப் பாடல்களை எழுதினார். டி.எம்.சவுந்தரராஜனை சினிமாவுக்கு கொண்டுவந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. தன்னை தாய்போல ஆதரித்தவர் மருதகாசி என்று குறிப்பிட்டுள்ளார் வாலி
அவர்கள்.

l தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி பாடலாசிரியராகத் திகழ்ந்த ‘திரைக்கவித் திலகம்’ மருதகாசி, 69-வது வயதில்  நவம்பர் 29,1989-இல் மறைந்தார்.



இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதிய மருதகாசி - கோ.ஜெயக்குமார்.
மருதகாசி (பெப்ரவரி 13, 1920 - நவம்பர் 29, 1989) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.
சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.

இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-

'1950-ம் ஆண்டில் என் அண்ணன் 'மந்திரிகுமாரி'க்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.

அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.

1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள்.

1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். 'பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்' என்று தேவரிடம் சொல்லிவிட்டார்.

அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். 'நான் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் பெயர் 'மறுபிறவி.' எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும் மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4 ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு சென்னைக்கு வாருங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும், தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின் திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.

'மறுபிறவி' படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, 'தேர்த்திருவிழா' படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.

தேவருக்கு பெரும்பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.

எம்.ஜி.ஆர். என் அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன் திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.'

இவ்வாறு பேராசிரியர் முத்தையன் கூறினார்.

மருதகாசிக்கு கவிஞர் கா.மு.ஷெரீப் நெருங்கிய நண்பர். ஆரம்பத்தில் மருதகாசியும், கா.மு.ஷெரீப்பும் இணைந்து, பல பாடல்களை எழுதினார்கள். பிறகு தனித்தனியாக எழுதினார்கள்.

தமிழரசு கழகத்தின் முக்கிய பிரமுகராகவும், பேச்சாளராகவும் கா.மு.ஷெரீப் விளங்கினார். கட்சிப்பணி காரணமாக, அவர் அதிக பாடல்களை எழுதவில்லை. பாடல்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும், கருத்தாழம் மிக்க பாடல்கள்.

புலவர் ஏ.கே.வேலனும், மருதகாசியும் சம காலத்தவர்கள். இருவரும் தேவி நாடக சபையில் ஒன்றாக பணியாற்றினார்கள்.

ஏ.கே.வேலன் வசன கர்த்தாவாக உயர்ந்து, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கி 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதற்கு, 'தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்' என்ற பாடலை மருதகாசி எழுதினார்.

அதன் பிறகு, ஏ.கே.வேலன் தயாரித்த பல்வேறு படங்களுக்கும் ஏராளமான பாடல்களை மருதகாசி எழுதினார். 'பொன்னித்திருநாள்' என்ற படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதினார்.

உடுமலை நாராயணகவியை தன் குருவாக நினைத்தவர், மருதகாசி. 'என்னுடைய 2 ஆயிரம் பாடல்கள், கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது' என்று மனந்திறந்து பாராட்டுவார்.

அத்தகைய உடுமலை நாராயணகவி, மருதகாசி மீது அளவற்ற பாசமும், அன்பும் வைத்திருந்தார். அவருக்கு வந்த வாய்ப்புகள் பலவற்றை அவர் ஏற்க மறுத்த சந்தர்ப்பங்களில், 'இதற்கு பொருத்தமானவர் மருதகாசிதான். அவரை எழுதச் சொல்லுங்கள்' என்று கூறியிருக்கிறார்.

குறிப்பாக, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிரமாண்டமாகத் தயாரித்த 'தசாவதாரம்' படத்துக்கு பாடல் எழுத முதலில் அழைக்கப்பட்டவர் உடுமலை நாராயணகவிதான். அவர், 'மருதகாசிதான் இதற்கு நன்றாக எழுதக்கூடியவர். அவரைக் கூப்பிடுங்கள்' என்று கூறிவிட்டார்.

இதன் காரணமாக 'தசாவதாரம்' படத்துக்கு எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார்.
 மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார், மருதகாசி. சிலருடைய சூழ்ச்சியினால், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் மருதகாசிக்கு மோதல் ஏற்பட்டது. பிறகு உண்மையை அறிந்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்" படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுத வாய்ப்பளித்தார்.

கவிஞர் மருதகாசியும், சாண்டோ சின்னப்பதேவரும் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பணியாற்றியபோதே நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். பிறகு தேவர் சென்னைக்கு வந்து, தேவர் பிலிம்ஸ்' படக்கம்பெனியைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரை வைத்து "தாய்க்குப்பின் தாரம்" என்ற படத்தைத் தயாரிக்கத் தீர்மானித்தார்.

மருதகாசியை அழைத்து, "எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, புரட்சிகரமான கருத்துக்களுடன் ஒரு பாடலை எழுதுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். அதன்படி மருதகாசி எழுதிய பாடல்தான், "மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே" என்ற பாடல்.

1955-ல் சிவாஜிகணேசனும், பத்மினியும் நடித்த "மங்கையர் திலகம்" படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. இதில், சிவாஜிக்கு அண்ணியாக, குணச்சித்திர வேடத்தில் பத்மினி நடித்தார்.

இப்படத்தில் மருதகாசி எழுதிய "நீலவண்ண கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!" என்ற பாடலை, பத்மினிக்காக பாலசரஸ்வதி பாடினார். கருத்தாழம் மிக்க இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி.

இதே படத்தில், சிவாஜி பாடுவது போல் அமைந்த "நீ வரவில்லை எனில் ஆதரவேது?" என்ற பாடலையும் மருதகாசி எழுதினார். உருக்கமான இந்தப்பாடலை தெலுங்குப்பாடகர் சத்யம் பாடினார்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி நடிக்க, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பெற்ற மகனை விற்ற அன்னை" படம் சரியாக ஓடவில்லை. ஆனால், இப்படத்தில், மருதகாசி எழுதிய "தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும், கண்கள் உறங்கிடுமா?" என்ற பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

ஸ்ரீதரின் திரைக்கதை -வசனத்தில் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த "உத்தமபுத்திரன்" படத்தில், சிவாஜியும், பத்மினியும் படகில் செல்லும்போது பாடுவதுபோல அமைந்த "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே" என்ற பாடலை, ஜி.ராமநாதன் இசை அமைப்பில் மருதகாசி எழுதினார். ரசிகர்களின் உள்ளத்தை அள்ளியது இப்பாடல்.

இதே காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். நடித்த "மன்னாதி மன்னன்" படத்தில் எம்.ஜி.ஆர். பாட அதற்கேற்ப பத்மினி நடனம் ஆடும் ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் -ராமமூர்த்தி அமைத்து விட்டனர். ஆனால் அந்த மெட்டுக்கு பல்வேறு கவிஞர்கள் எழுதிய பாடல்கள், எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை.

பிறகு, விஸ்வநாதன் -ராமமூர்த்தியின் அழைப்பின் பேரில், "ஆடாத மனமும் உண்டோ?" என்ற பாடலை, மருதகாசி எழுதினார். அது எம்.ஜி.ஆருக்கு பிடித்துவிட, பாடல் பதிவு செய்யப்பட்டு, காட்சியும் படமாக்கப்பட்டது.

ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து "லட்சுமி பிக்சர்ஸ்" என்ற படக்கம்பெனியை தொடங்கி, "மக்களைப் பெற்ற மகராசி" படத்தைத் தயாரித்தனர். இதில் சிவாஜிகணேசனும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.

இந்தப்படத்தில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்களை மருதகாசி எழுதினார். குறிப்பாக, "மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏரு பூட்டி" என்ற பாட்டு, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் இது.

சிவாஜிகணேசன் பரதனாகவும், என்.டி.ராமராவ் ராமராகவும், பத்மினி சீதையாகவும், டி.கே.பகவதி ராவணனாகவும் நடித்த படம் "சம்பூர்ண ராமாயணம்." கே.சோமு டைரக்ஷனில் எம்.ஏ.வேணு தயாரித்தார்.

இந்தப் படத்துக்கான எல்லாப் பாடல்களையும், கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எழுதியவர் மருதகாசி. அனைத்துப் பாடல்களும் நன்றாய் அமைந்தன.

குறிப்பாக சிதம்பரம் ஜெயராமன், டி.கே.பகவதிக்காக பாடிய "இன்று போய் நாளை வாராய்..." என்ற பாடலும், ஒவ்வொரு ராகத்தையும் எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்த "சங்கீத சவுபாக்கியமே" என்ற பாடலும் பெரும் புகழ் பெற்றவை.

இதேபோல், என்.டி.ராமராவ் -அஞ்சலிதேவி நடித்த "லவகுசா" படத்திற்கும் எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். அதில், லவனும், குசனும் பாடுவதுபோல் அமைந்த "ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே - உங்கள் செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே" என்ற பாடலை, இப்போதும்கூட தொலைக்காட்சிகளில் காணமுடிகிறது.

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசி மீது அதிக அன்பு கொண்டிருந்தார். அதனால் அவர் தயாரிக்கும் படங்களுக்கெல்லாம் மருதகாசி பாடல் எழுதுவது வழக்கம்.

ஒருமுறை டி.ஆர்.சுந்தரம் வெளிநாடு சென்றிருந்தபோது, மருதகாசியிடம் பொறாமை கொண்டிருந்த ஸ்டூடியோ நிர்வாகி ஒருவர், வேறொரு கவிஞருக்கு அதிக தொகையும், மருதகாசிக்கு குறைந்த தொகையும் கொடுத்தார். இதனால் மனம் நொந்த மருதகாசி, "இனி மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை" என்ற முடிவுடன் சென்னைக்குத் திரும்பினார்.

வெளிநாடு சென்றிருந்த டி.ஆர்.சுந்தரம் திரும்பி வந்ததும், எம்.ஜி.ஆரையும், பானுமதியையும் வைத்து "அலிபாபாவும் 40 திருடர்களும்" படத்தை வண்ணத்தில் தயாரிக்க முடிவு செய்தார். "அலிபாபா" படம் ஏற்கனவே இந்தியில் வெளிவந்திருந்தது. புதிதாக ஒரு பாடலை இசை அமைப்பது என்றும், 9 பாடல்களுக்கு இந்தி அலிபாபா படத்தின் மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்வது என்றும் சுந்தரம் தீர்மானித்தார்.

பாடல்களை எழுத மருதகாசியை ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால் நிர்வாகியோ, "மருதகாசி முன்போல் இங்கு வருவதில்லை. சென்னை கம்பெனிகளுக்கு பாட்டு எழுதுவதில் பிசியாக இருக்கிறார்!" என்று கூறிவிட்டார்.

உடனே சுந்தரம், "அப்படியானால் உடுமலை நாராயணகவிக்கு போன் செய்து, பாடல்களை எழுத உடனே இங்கே வரச்சொல்லுங்கள்" என்று உத்தரவிட்டார்.

சுந்தரம் வரச்சொன்னார் என்று அறிந்ததுமே, அவருடன் உடுமலை நாராயணகவி டெலிபோனில் தொடர்பு கொண்டார். மருதகாசியிடம் சகோதர அன்பு கொண்டவர் உடுமலை நாராயணகவி. மருதகாசிக்கும், நிர்வாகிக்கும் ஏற்பட்ட தகராறை சுந்தரத்திடம் அவர் கூறினார். "சரி. அவரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்" என்றார், சுந்தரம்.

டி.ஆர்.சுந்தரத்தை உடுமலை நாராயணகவியும், மருதகாசியும் சந்தித்தனர்.

"அலிபாபாவில் வரும் பாடல்களுக்கு, இந்தி அலிபாபா மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்" என்று கூறிய சுந்தரம், சில இந்தி இசைத்தட்டுகளை கவிராயரிடம் கொடுத்தார்.

உடனே கவிராயர், "மெட்டுக்கு பாட்டு அமைப்பது எனக்கு சரிப்படாது. புதிதாக பாட்டு எழுதுவதானால் எழுதுகிறேன். மெட்டுக்கு பாட்டு என்றால், அது மருதகாசிக்கு கைவந்த கலை" என்றார்.

இதனால், "மாசில்லா உண்மைக் காதலே", "அழகான பொண்ணுதான்... அதற்கேற்ற கண்ணுதான்..." உள்பட 9 பாடல்களையும் மருதகாசியே எழுதினார்.

மாடர்ன் தியேட்டர்சுடன் மருதகாசிக்கு ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்தது.

மாடர்ன் தியேட்டர் "பாசவலை" படத்தை தயாரித்தபோது, பாடல் எழுத மருதகாசிக்கு அவசர அழைப்பு அனுப்பினார்கள். அப்போது சென்னையில் இரவு - பகலாக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார்.

உடனே அவர் டி.ஆர்.சுந்தரத்துக்கு போன் செய்து, "உடனடியாக தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அனுப்பி வைக்கிறேன். அவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் அறிமுகப்படுத்தப்பட்டவர். மிக நன்றாக பாட்டு எழுதக்கூடியவர். நான் நாலைந்து நாட்களுக்குப்பின் வந்து கலந்து கொள்கிறேன்" என்று சொன்னார்.

அதன்படி, பல பாட்டுகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். "குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம். குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்" என்ற பாடல் மூலம், கல்யாணசுந்தரம் பெரும் புகழ் பெற்றார்.

"அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை - அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை" என்ற  மருதகாசியின் பாடலும் 'ஹிட்' ஆயிற்று.

உடுமலை நாராயணகவியை தன் அண்ணன் போலவும், கல்யாணசுந்தரத்தை தம்பி போலவும் கருதி பாசம் செலுத்தியவர் மருதகாசி.

டைரக்டர் பீம்சிங் இயக்கத்தில் தயாரான "பதிபக்தி" படத்துக்கு "ரெண்டும் கெட்டான் உலகம் - இதில் நித்தமும் எத்தனை கலகம்" என்ற பாட்டை எழுதினார். இந்த பாடல் பீம்சிங்குக்கு பிடிக்கவில்லை. "இன்னும் சிறந்த பல்லவி வேண்டும்" என்றார். மருதகாசி சிறிது யோசித்துவிட்டு, "அண்ணே! நீங்கள் எதிர்பார்ப்பது போல எழுதக்கூடியவர் தம்பி கல்யாணசுந்தரம். அவரை வைத்து எழுதிக்கொள்ளுங்கள்" என்று கூறி, ஒதுங்கிக்கொண்டார்.

 "வாராய்... நீ வாராய்" - மந்திரிகுமாரி; "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல" - உத்தமபுத்திரன்; "காவியமா? நெஞ்சின் ஓவியமா?" - பாவை விளக்கு- 4,000 பாடல்களுக்கு மேல் எழுதிய மருதகாசி

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர், மருதகாசி. "திரைக்கவி திலகம்" என்று பட்டம் பெற்ற அவர், சினிமாவுக்காக 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

திருச்சி மாட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் 13-2-1920-ல் பிறந்தவர் மருதகாசி. தந்தை அய்யம்பெருமாள் உடையார். தாயார் மிளகாயி அம்மாள்.

உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்து, "இன்டர்மீடியேட்" வரை படித்தார்.

1940-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் தனக்கோடி அம்மாள்.

மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார்.

கல்லூரி படிப்புக்குப்பிறகு, குடந்தையில் முகாமிட்டிருந்த "தேவி நாடக சபை"யின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். அப்போது, இன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதைத்தொடர்ந்து, கருணாநிதி எழுதிய "மந்திரிகுமாரி" போன்ற நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.

இந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகராக திருச்சி லோகநாதன் கொடிகட்டிப் பறந்தார். "வானவில்" என்ற நாடகத்தின் பாடலுக்கு அவர் இசை அமைத்தபோது, மருதகாசியின் கவியாற்றலை நேரில் கண்டார். இதுபற்றி, மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் தெரிவித்தார்.

உடனே டி.ஆர்.சுந்தரம் மருதகாசியை சேலத்திற்கு வருமாறு அழைத்தார். இந்த சமயத்தில், மருதகாசியுடன் கவி. கா.மு.ஷெரீப் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு சேலம் சென்றார், மருதகாசி.

அப்போது (1949) சேலம் மாடர்ன் தியேட்டர்சார் "மாயாவதி" என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி.ஆர்.மகாலிங்கமும், அஞ்சலிதேவியும் இணைந்து நடித்த இந்தப்படத்தை டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்து வந்தார்.

இந்தப் படத்திற்கு தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். "பெண் எனும் மாயப் பேயாம்... பொய் மாதரை என் மனம் நாடுமோ..." என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.

இவ்வாறாக மருதகாசியின் திரை உலகப் பயணம், மாடர்ன் தியேட்டர்ஸ் "மாயாவதி" மூலமாகத் தொடங்கியது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய "எதிர்பாராத முத்தம்" என்ற குறுங்காவியத்தை, "பொன்முடி" என்ற பெயரில் மாடர்ன் தியேட்டர்சார் திரைப்படமாகத் தயாரித்தனர். வசனத்தை பாரதிதாசன் எழுதினார்.

இந்தப் பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார். எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். கதாநாயகனாக நரசிம்மபாரதியும், கதாநாயகியாக மாதுரிதேவியும் நடித்தனர்.

1950 பொங்கலுக்கு வெளிவந்த "பொன்முடி" படத்தின் பாடல்கள் ஹிட் ஆயின.

இதன் பிறகு கருணாநிதியின் கதை-வசனத்தில் மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்த படம் மந்திரிகுமாரி. இந்தப்படம் மாபெரும் வெற்றி

பெற்றது.இந்தப் படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக "வாராய்... நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!" என்ற கிளைமாக்ஸ் பாடலும், "உலவும் தென்றல் காற்றினிலே" என்ற பாடலும் மிகப்பிரமாதமாக அமைந்தன. இந்த டூயட் பாடல்களைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன் - ஜிக்கி.

இந்தக் காலக்கட்டத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும், இசை இலாகாவில் மருதகாசியும் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

மந்திரிகுமாரியில் மருதகாசி எழுதிய பாடல்கள் எம்.கே.தியாகராஜ பாகவதரை வெகுவாகக் கவர்ந்தன. சுரதாவின் கதை-வசனத்திலும், எப்.நாகூர் டைரக்ஷனிலும் உருவாகி வந்த தனது "அமரகவி" படத்துக்கு பாடல் எழுத மருதகாசியை அழைத்தார்.

அதன்படியே, சில பாடல்களை மருதகாசி எழுதினார்.

அருணா பிலிம்ஸ் பட நிறுவனம் "ராஜாம்பாள்" என்ற துப்பறியும் கதையை படமாக்கியது. இந்தப் படத்தில்தான் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்தப் படத்துக்கு மருதகாசி எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அதைத்தொடர்ந்து அருணா பிலிம்ஸ் அடுத்து தயாரித்த "தூக்குத்தூக்கி" படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பை மருதகாசி பெற்றார்.

இந்தப் படத்தில் சிவாஜிகணேசன், லலிதா, பத்மினி, ராகினி, டி.எஸ்.பாலையா என்று பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தது. ஆர்.எம்.கிருஷ்ணசாமி டைரக்ட் செய்த இந்த படத்துக்கு, ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.

இந்தப் படத்தில், சிவாஜிகணேசனுக்கு யாரைப் பின்னணியில் பாட வைப்பது என்ற கேள்வி எழுந்தது. "மந்திரிகுமாரி"யில், "அன்னமிட்ட வீட்டிலே, கன்னக்கோல் சாத்தவே..." என்று தொடங்கும் பாடலை, வெகு சிறப்பாக டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார். அவரைப் பாடச் சொல்லலாம் என்று மருதகாசியும், டைரக்டர் ஆர்.எம்.கிருஷ்ணசாமியும் கூறினார்கள். ஆனால், சிதம்பரம் ஜெயராமனைப் போடும்படி, சிவாஜி கூறினார்.

முடிவில் "3 பாடல்களை சவுந்தரராஜனை வைத்து பதிவு செய்வோம். சிவாஜிக்கு பிடிக்கிறதா என்று பார்த்து இறுதி முடிவு எடுப்போம்" என்று மருதகாசியும், கிருஷ்ணசாமியும் தீர்மானித்தார்கள்.
அதன்படியே, மூன்று பாடல்களை பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்கள். டி.எம்.சவுந்தரராஜனின் குரல் சிவாஜிக்குப் பிடித்து விட்டது. அன்று முதல், சிவாஜிக்கு தொடர்ந்து டி.எம்.சவுந்தரராஜன் பாடலானார்.
26-8-1954-ல் வெளியான "தூக்குத்தூக்கி", மகத்தான வெற்றிப்படமாக அமைந்து, வசூல் மழை கொட்டியது. எங்கு திரும்பினாலும், அந்தப் படத்தின் பாடல்கள் எதிரொலித்தன. மருதகாசிக்கு பல்வேறு படக்கம்பெனிகளில் இருந்து அழைப்பு வந்தது.
மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் மருதகாசி வல்லவர். எனவே, இசை அமைப்பாளர்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.
அந்தக் காலக்கட்டத்தில் ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.



கவிஞர் அ. மருதகாசி பாடல்கள்

நம்மில் பலருக்கு பழைய சினிமா பாடல்கள் என்றாலே கவிஞர் கண்ணதாசன்தான் நினைவுக்கு வருவார். ஏதாவது நல்ல தத்துவ சினிமாப் பாடல் என்றால் அவர் எழுதியதாகத் தான் இருக்கும் என்று நினைப்பார்கள். வாலி எழுதிய பாடலையே கண்ணதாசன் எழுதியது என்று நினைத்ததும் உண்டு. ஆனால் எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா போன்ற பிரபல நடிகர்களின் படங்களுக்கு கருத்தமைந்த இனிமையான பாடல்கள் எழுதிய கவிஞர் ஒருவர் உண்டு. அவர் திரைக்கவி திலகம் என்று பெயர் பெற்றவர். கவிஞர் அ. மருதகாசி அவர்கள். இவர் எழுதிய பாடல்கள் பலவற்றையும் கண்ணதாசன் எழுதியது என்று மாற்றிச் சொல்பவர்களும் உண்டு.

பழைய பிரிக்கப்படாத (ஒன்றுபட்ட) திருச்சி மாவட்டத்தில்  மேலக்குடிகாடு என்ற கிராமத்தில்  அய்யம்பெருமாள் உடையார் - மிளகாயி அம்மாள் என்ற விவசாய தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் நமது கவிஞர் அ. மருதகாசி அவர்கள்.   நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களில் இவரது ”திரைக்கவி திலகம் கவிஞர் அ. மருதகாசி  பாடல்கள்” என்ற தொகுப்பும் ஒன்று. இந்த நூலை நாம் இணையம் வழியே தரவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம். சுட்டி கீழே உள்ளது.

வாழ்வளித்த எம்ஜிஆர்:

தமிழ் சினிமா உலகில் பாட்டுக்கு தகுந்த மெட்டு, மெட்டுக்கு தகுந்த பாட்டு என்று இரண்டு வகையாக எழுதுவார்கள். இதில் மெட்டுக்கு தகுந்த பாட்டு எழுதுவது என்பது சற்று சிரமமான விஷயம்தான். இதில் வல்லவர் நமது கவிஞர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராக இருந்த கவிஞருக்கு, சினிமா உலகில் இருக்கும் எல்லோருக்கும் உண்டாகும் ஆசை வந்தது. சொந்தமாக படம் ஒன்றை எடுத்தார். கையைச் சுட்டுக் கொண்டார். கடனாளி ஆனார். இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-

“1950-ம் ஆண்டில் என் அண்ணன் “மந்திரிகுமாரி”க்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.  அந்தக் காலக் கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.  கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை. ”
( நன்றி: http://sudarcinema.net/7674 )

மறக்க முடியாத படங்கள்:



தமிழ் சினிமாவில் இன்றும் ஐம்பது – அறுபதுகளில் வெளியான பழைய படங்களுக்கும் , பழைய பாடல்களுக்கும் என்று மவுசு உண்டு. அந்த வகையில் பல படங்களுக்கு கவிஞர் அ.மருதகாசி அவர்கள் பாடல்கள் இயற்றி இருப்பதைக் காணலாம்.

தூக்கு தூக்கி, மக்களைப் பெற்ற மகராசி,  அறிவாளி, விவசாயி,  தை பிறந்தால் வழி பிறக்கும்,  சுகம் எங்கே,  வண்ணக்கிளி, சபாஷ் மாப்பிள்ளே, பங்காளிகள்,  அல்லி பெற்ற பிள்ளை,  சாரங்கதாரா,  பாவை விளக்கு,  மந்திரி குமாரி,  குமுதம்,  பெற்ற மகனை விற்ற அன்னை,  கைதி கண்ணாயிரம்,  பாகப் பிரிவினை, நினைத்ததை முடிப்பவன்,  பாசவலை,  நீலமலைத் திருடன், யார் பையன்,  சாரங்கதாரா, உத்தம புத்திரன், மருதநாட்டு வீரன்  –  என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

மறக்க முடியாத பாடல்கள்:

கீழே மறக்க முடியாத, அந்தக் கால இலங்கை வானொலியில் நான் கேட்ட கவிஞர் மருதகாசி அவர்களது சில பாடல்களின் முதல் வரிகளை மட்டும் தந்துள்ளேன். அடைப்புக் குறிக்குள் படங்களின் பெயர்கள்.

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே (பாகப்பிரிவினை)                    
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி (மக்களைப் பெற்ற
மகராசி)
விவசாயி விவசாயி (விவசாயி)                                                              
தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் (தை பிறந்தால் வழி பிறக்கும்)                                                                                                                                  
சின்ன பாப்பா எங்க சின்ன பாப்பா (வண்ணக்கிளி)
சின்ன அரும்பு மலரும் (பங்காளிகள்)
எஜமான் பெற்ற செல்வமே (அல்லி பெற்ற பிள்ளை)
மாமா மாமா மாமா (குமுதம்)
வசந்த முல்லை போலே (சாரங்கதாரா)
ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே (பாவை விளக்கு)
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி (பாவை விளக்கு)
வாராய் நீவாராய் போகுமிடம் வெகு தூரமில்லை  (மந்திரி குமாரி)
வண்டி உருண்டோட அச்சாணி தேவை (வண்ணக்கிளி)
தென்றல் உறங்கிய போதும் ( பெற்ற மகனை விற்ற அன்னை)
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா (குமுதம்)
எத்தனை எத்தனை இன்பமடா (யாருக்குச் சொந்தம்)
காட்டு மல்லி பூத்திருக்க … மாட்டுக்கார வேலா ( வண்ணக்கிளி)
கொஞ்சி கொஞ்சிப் பேசி  மதி மயக்கும் (கைதி கண்ணாயிரம்)
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும். (நினைத்ததை முடிப்பவன்)
இதுதான் உலகமடா மனிதா ( பாசவலை)
சமரசம் உலாவும் இடமே (ரம்பையின் காதல்)
ஆத்திலே தண்ணி வர ( வண்ணக்கிளி)
அடிக்கிற கைதான்  அணைக்கும் ( வண்ணக்கிளி)
இன்பம் எங்கே இன்பம் எங்கே (மனமுள்ள மறுதாரம்)
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா ( நீலமலைத் திருடன்)

செவ்வாய், 28 நவம்பர், 2017

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த நாள் நவம்பர் 29 , 1908 .





கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம்  நவம்பர் 29 , 1908 .

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.

இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியவர்.

காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

கொலைக் குற்றச்சாட்டு
அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்
பைத்தியக்காரன் (1947)
நல்ல தம்பி (1949)
அமரகவி (1952)
பணம் (1952)
டாக்டர் சாவித்திரி (1955)
நம் குழந்தை (1955)
முதல் தேதி (1955)
காவேரி (1955)
மதுரை வீரன் (1956)
நன்நம்பிக்கை (1956)
கண்ணின் மணிகள் (1956)
ஆசை (1956)
சக்கரவர்த்தி திருமகள் (1957)
புது வாழ்வு (1957)
அம்பிகாபதி (1957)
தங்கப்பதுமை (1959)
தோழன் (1960)

இவர் இயக்கிய படங்கள்
பணம் (1952)
மணமகள்
இவர் பாடிய பாடல்கள்[தொகு]
ஜெயிலிக்குப் போய் வந்த (பைத்தியக்காரன்)
பணக்காரர் தேடுகின்ற (பைத்தியக்காரன்)
ஆசையாக பேசிப் பேசி (பைத்தியக்காரன்)
ஒண்ணுலேயிருந்து (முதல்தேதி)
இடுக்கண் வருங்கால் (முதல்தேதி)
சங்கரியே காளியம்மன் (ரங்கோன் ராதா)
ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)
காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)
ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)
ஆரவல்லியே (ஆர்ய மாலா)
கண்ணா கமலக் கண்ணா (கண்ணகி)
கண்ணனெந்தன் (கண்ணகி)
இருக்கிறது பார் கீழே (மங்கையற்கரசி)
கண்ணே உன்னால் (அம்பிகாபதி)
சந்திர சூரியர் (அம்பிகாபதி)
தீனா...மூனா...கானா...(பணம்)
உன்னருளால் (ரத்னமாலா)
என் சாண் உடம்பில் (ரத்னமாலா)
சிரிப்பு இதன் சிறப்பை (ராஜா ராணி)
நாலுக் கால் குதிரை (ஆசை)
தாலி பொண்ணுக்கு வேலி (ஆசை)
சங்கரியே காளியம்மா (நன்னம்பிக்கை)
வாதம் வம்பு பண்ண (டாக்டர் சாவித்திரி)]
காசிக்கு போனா கருவுண்டாகுமென்ற (டாக்டர் சாவித்திரி)
கிந்தன் சரித்திரமே (நல்ல தம்பி)
ஏண்டிக் கழுதை (உத்தமபுத்திரன்)
தளுக்கான வால வயசு (உத்தமபுத்திரன்)
விடுதியில் மேய்திடுவோம் (ஜகதலப்ரதாபன்)
பெண்ணுலகிலே பெருமை (கிருஷ்ணபக்தி)
சங்கர சங்கர சம்போ (கிருஷ்ணபக்தி)
நித்தமும் ஆனந்தமே (பவளக்கொடி)
விஜய காண்டிப வீரா (பவளக்கொடி)
அன்னம் வாங்கலையோ (பவளக்கொடி)
இவனாலே ஓயாத தொல்லை (பவளக்கொடி)
சொந்தமாக நெனச்சு (வனசுந்தரி)
ஊன்னு ஒரு வார்த்தை (மனோன்மணி)
இன்னிக்கு காலையிலே (சகுந்தலை)
வெகுதூரக்கடல் தாண்டி (சகுந்தலை)
நல்ல பெண்மணி (மணமகள்)
ஆயிரத்திதொள்ளாயிரத்தி (மணமகள்)
சுதந்திரம் வந்ததுண்ணு (மணமகள்)
குடி கெடுத்த குடியொழிஞ்சுது (நல்லதம்பி)
மழையில்ல சீமையில் (தக்ஷயக்ஞம்)
சிவானந்த ரஸம் (தக்ஷயக்ஞம்)
இருவரும் ஒன்றாய் (தக்ஷயக்ஞம்)
சோனா இல்லன்னா (லைலா மஜ்னு)
சும்மா இருக்காதுங்க (நல்லகாலம்)
மறைவு
1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தனது 49வது வயதில் கலைவாணர் காலமானார்.

கலைவாணர் அரங்கம்
தமிழ்நாடு அரசு கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது.
//


என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

என்.எஸ். கிருஷ்ணன்... தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!...

 நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!

வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணரின் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம்!

 ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் என்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம் ஆனால், 'சதி லீலாவதி'யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே. அடுத்து நடித்த 'மேனகா' படமே முதலில் திரைக்கு வந்தது. மொத்தம் 122 படங்களில் நடித்திருக்கிறார்!
 'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதம் பூத்தது!
 தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை மணந்தார் என்.எஸ்.கே கலைவாணருக்கு ஏற்கெனவே திருணமான விஷயத்தை அவரது குழுவில் இருந்த புளிமூட்டை ராமசாமி என்பவர் மதுரத்திடம் போட்டு உடைக்க, இதனால் சில நாட்கள் கலைவாணரிடம் மதுரம் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்!
 என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை  கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம். சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.
 என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!
 'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!
 உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். 'உடுமலைக்கவியை' கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.
 1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். 'இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு  அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்' என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!
 'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். 'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!' – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!
 சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!
 சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், 'எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!' என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!
 ''என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!'' என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!
 கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல் அனுப்பினார், 'நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன்.
 ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார்!
 'தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!
 தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கல் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!
 கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.
 சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. 'நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!' என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!
 சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!
 கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்!
 ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி காலமானார். தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் மூழ்கிய தினம் அது!


எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கே.
ஒரு காலத்தில் ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் ஆச்சரியத்தோடு வியந்து பார்த்த வீடு அது.கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுப்பப்பட்ட முதல் கான்கிரீட் வீடும் அதுதான். மொசைக் தரை போட்ட அந்த வீட்டை பார்க்க மாட்டு வண்டி கட்டி வந்தவர்களும் அதிகம். வீட்டு கிரகப்பிரவேசம் அன்று சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கையே பல ஆயிரங்களை தாண்டும்.

இப்போதும் பழங்கால திரையரங்குகளை நினைவூட்டும் வகையில் கம்பீரம் குறையாமல், அதே நேரத்தில் பராமரிப்பு இன்றி நிற்கிறது நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மதுர பவனம்.

தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் பிறந்து நாடறிந்த திரைப்பட கலைஞர், சிரிப்பு நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது. இன்றும் அப்பகுதிவாசிகளின் அடையாள சின்னமாய் மாறி நிற்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீட்டில் இப்போது அவரது வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாளான இன்று (சனிக்கிழமை) அவர் குறித்த நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார் அவரது பேரன் என்.எஸ்.கே.கே.ராஜன்.

இவர் ‘நாகரீக கோமாளி’ திரைப்படத்தில் அறிமுகமானவர். இப்போது எழில் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பகல்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக உள்ளார்.

‘’தாத்தா ஆரம்ப காலத்தில் டென்னிஸ் கிளப்ல பந்து பொறுக்கி போடுற வேலைகூட பார்த்திருக்காங்க. பிற்காலத்தில் பெரிய நடிகனானதும் நாகர்கோவில் நகராட்சி சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்துனாங்க. அப்போ தாத்தாவுக்கு தனியா பெரிய நாற்காலி போட்டிருந்தாங்க. ஆனா அவர் அதில் உட்காரல. தரையில் போடப்பட்டிருந்த கடல் மண்ணில் போய் உட்கார்ந்தாரு. எல்லாரும் இது பத்தி கேட்டப்போ இந்த இடம்தான் எப்போதும் நிரந்தரம்ன்னு சொல்லிருக்காரு. அந்த எளிமைதான் அவரோட சிறப்பே. நாடகக் கொட்டகையில் சோடா விற்பவராக இருந்து படிப்படியாக உயர்ந்ததால்தான் அத்தனை பக்குவம்.

கலைவாணருக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது. கலைவாணர் உச்ச நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர். பெரிய நடிகராக பிற்காலத்தில் வருவார் என தட்டிக் கொடுத்திருக்கின்றார். கலைவாணர் மறைவுக்கு பின்பு அவரது தாயார் இசக்கியம்மாள் உயிருடன் இருந்தவரை எம்.ஜி.ஆர். பண உதவி செய்தார். கலைவாணர் ஈகை பண்பால் சேர்த்து வைத்த செல்வத்தையெல்லாம் கரைத்துவிட்டு மரண படுக்கையில் இருந்தார். அப்போதும் எம்.ஜி.ஆர் வந்து பார்த்து சென்றார்.

கலைவாணர் இறந்த பிறகு அவரது மகன் கோலப்பனையும் ‘பெரியஇடத்து பெண்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். கலைவாணரின் 2 மகள்களுக்கும் எம்.ஜி.ஆர்.தான் திருமணம் செய்து வைத்தார். கலைவாணரின் மறைவுக்கு பின்பு இந்த வீடு ஏலத்துக்கு போனபோதும் எம்.ஜி.ஆரே மீட்டுக் கொடுத்தார். கலைவாணர் இருந்த சமயம் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. அப்போது சித்திரை திருநாள் மகாராஜா மன்னராக இருந்தார். சமஸ்தானத்தில் உள்ள சில பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டபோது நாடகம் நடித்து அந்த பணத்தை சமஸ்தானத்துக்கு கொடுத்தார். மன்னருக்கு கலைவாணரின் நடிப்பு, சமூக சேவை பிடித்துப் போய் என்.எஸ்.கே.வுடன் படம் பிடித்துக் கொண்டார். அது இன்றும் இந்த வீட்டில் பொக்கிஷமாய் உள்ளது. தியாகராஜ பாகவதர்கூட இந்த வீட்டில் வந்து பாடல் பாடியுள்ளார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள நகராட்சி பூங்காவில் தாத்தா காந்தியடிகளுக்கு நினைவாக கட்டிக் கொடுத்த நினைவுத் தூண், இந்த வீடு ஆகியவை தாத்தா எங்களுடனே இருப்பதைப்போல் உணர்வை தருகின்றது” என்றார்.

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள மணிமேடை சந்திப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரால் திறக்கப்பட்ட சிலை கம்பீரமாக நின்று அவரது புகழை பரப்பிக் கொண்டிருக்கிறது.

நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. அவர் வாழ்வும் 49 ஆண்டுகளில் சுருக்கமாக முடிந்தாலும் வரலாறு அவர் பெயரை வாரி அணைத்துக் கொண்டது என்பது மட்டும் உண்மை.
நன்றி -விக்கிபீடியா, தி இந்து தமிழ்,லஷ்மன்ஸ்ருதி.