புதன், 31 ஆகஸ்ட், 2016

கவிஞர் மு. மேத்தா பிறந்த நாள் செப்டம்பர் 05,



 கவிஞர் மு. மேத்தா பிறந்த நாள் செப்டம்பர் 05,
மு. மேத்தா (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.

உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரைப் பின்பற்றி இளைஞர்கள் பலர் கவிதை எழுத ஆர்வம் கொண்டனர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.

"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்

இறப்பினில் கண் விழிப்பேன்

மரங்களில் நான் ஏழை

எனக்கு வைத்த பெயர் வாழை"

போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.

"வானம்பாடி" என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தா முன்னணியில் நிற்பவர்.


படைப்புக்கள்
கவிதை நூல்கள்


    கண்ணீர்ப் பூக்கள்
    மனச் சிறகு (1978)
    ஊர்வலம்
    திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
    நந்தவன நாட்கள்
    வெளிச்சம் வெளியே இல்லை
    ஆகாயத்துக்கு அடுத்த வீடு
    மு.மேத்தா கவிதைகள்
    ஒற்றைத் தீக்குச்சி
    என் பிள்ளைத் தமிழ்
    புதுக்கவிதைப் போராட்டம் (2004)
    பித்தன்

கட்டுரை நூல்கள்
    திறந்த புத்தகம்

நாவல்கள்

    சோழ நிலா

சிறுகதை தொகுப்புகள்

    கிழித்த கோடு
    மு.மேத்தா சிறுகதைகள்
    பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)

பரிசுகளும் விருதுகளும்

    "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
    "சோழ நிலா" (நாவல்) ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு
 இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ஈழப்பிரச்சனை குறித்து அன்று தொட்டு இன்றுவரை "தெளிவான" சிந்தனையோடு இயங்கும் மிகச்சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்ற மேலதிக காரணத்தால் மு.மேத்தா அவர்களின் மீது எனக்கு இன்னும் ஒருபடி அதிகப்படியான நேசத்தை என்னுள் விதைத்து வைத்திருக்கிறேன். ஒருமுறை ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றில் ஈழத்தமிழர் தரப்பின் நியாத்தை மறைபொருளாகச் சுட்டி எழுதியிருந்தார். அதற்கு முன்னரே ஈழத்தின் எண்பத்து மூன்றுகளின் அவலங்களை

"எல்லார்க்கும் விருந்தளித்து
ஏற்றம் பெற்ற எங்கள் இனம்
மரணதேவதையின் கோரப்பசிக்கு
விருந்து கொடுத்த பின்
அங்கே இப்போது அகதியானது"

போன்ற புதுக்கவிதைகள் தாங்கிய "திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்" என்ற தொகுதியில் கொடுத்திருப்பார்.

மு.மேத்தாவின் கவிதைகளை அவரின் "ஊர்வலம்" என்ற கவிதைத் தொகுதியே எனக்கு அறிமுகப்படுத்தியது. பின்னர் அவளுக்கு ஒரு கடிதம், நடந்த நாடகங்கள், முகத்துக்கு முகம், அவர்கள் வருகிறார்கள், கண்ணீர்ப்பூக்கள், வெளிச்சம் வெளியே இல்லை, நந்தவன நாட்கள், மு.மேத்தா முன்னுரைகள், மு.மேத்தா திரையிசைப்பாடல்கள் என்று வாங்கிக் குவித்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் "காதலர் கீதங்கள்" என்ற வானொலித் தொகுப்பைத் தயாரித்து வழங்கியபோது வெறுமனே காதல் பாடல்களை மட்டும் சேர்த்து இட்டு நிரப்பாமல், பின்னணி இசையோடு அவரின் கவிதைத் தொகுதிகளில் இருந்து இரண்டடி வரிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு அதற்கேற்ற சூழலுக்குப் பொருந்துமாற்போலப் பாடல்களை இணைத்துக் கொடுத்தேன். அந்தப் படைப்பு நேயர்களைக் கவரவே பின்னர் தாங்களும் ஈரடிக் கவிதையோடு பாடல்களை இணைத்து வானொலிப் பிரதியாக அனுப்பி நிகழ்ச்சி தயாரிக்க வைத்தார்கள். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இந்த நிகழ்ச்சியைச் செய்தேன்.

மு.மேத்தாவின் புதுக்கவிதைகளை நடிகர் முரளியின் ஏக்கம் கலந்த தொனியில் அந்தக் காதலன் உள்ளக்கிடக்கையாகக் கொடுத்த இதயம் படம் சிறப்பானது.அந்த ஒலிப்பகிர்வுகளை இங்கே கொடுத்திருக்கிறேன்.
http://www.radiospathy.com/2011/02/www-www.html

கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் உள்ளிட்ட வெற்றிகரமான திரையிசைப்பாடலாசிரியர்கள் தம் திரையிசை அனுபவங்கள், பாடல் பிறந்த கதைகளை நூலுருவில் கொடுத்தது போன்றே மு.மேத்தா அவர்களும் தனது திரையிசைப்பாடல்கள் நூலில் தன் ஆரம்பகாலப் படங்களின் பாடல்கள் உருவான சுவையான பின்னணி மற்றும் காட்சிக்குப் பொருந்திய பாடல் வரிகளின் நியாயத்தை எல்லாம் நிறுவியிருப்பார். அத்தோடு பிரபல வானொலி, தொலைக்காட்சிப் படைப்பாளர் பி.ஹெச்.அப்துல்ஹமீத் அவர்கள், கலைஞர் தொலைக்காட்சியில் படைத்த இன்னிசை மழை என்ற நிகழ்ச்சியிலும் மு.மேத்தாவின் பாடல் அனுபவங்கள் சிறப்பாகப் பதிவாகியிருக்கின்றன.

"அனிச்ச மலர்" என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் அறிமுகமான மு.மேத்தாவுக்கு "ஆகாய கங்கை" என்ற இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த படத்தின் "தேனருவியில் நனைந்திடும்" http://www.youtube.com/watch?v=lrCmn2WdRSE&sns=em என்ற பாடலே அதிக புகழைக் கொடுத்தது. அந்தப் பாடல் வாய்ப்பை மு.மேத்தாவின் நண்பர் கமல்ஹாசனே பெற்றுக் கொடுக்கக் காரணமாக அமைந்தாராம்.

தொடர்ந்து இதய கோவில் படத்தில் இடம்பெற்ற "யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ"   http://www.youtube.com/watch?v=jRCh-b-a334&sns=em
நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் இடம்பிடித்த "பெண்மானே சங்கீதம் பாடிவா"  http://www.youtube.com/watch?v=Dj-cimDzqoY&sns=em
சொல்ல துடிக்குது மனசு படத்தில் வந்த "வாயக்கட்டி வயித்தக் கட்டி"
http://www.youtube.com/watch?v=JVOdYtytRNk&sns=em
என் புருஷன் எனக்கு மட்டும் தான் படத்தில் வந்த "மனதில் ஒரே ஒரு பூப்பூத்தது"
http://www.youtube.com/watch?v=Q2VC0QoqHoc&sns=em
கோடை மழை படத்தில் இடம்பெற்ற "பல பல பல பல குருவி" http://www.youtube.com/watch?v=qWyuY1UQyjU&sns=em
போன்ற இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரர் மு.மேத்தா.
உதய கீதம் படத்தில் வந்த "பாடு நிலாவே தேன் கவிதை" http://www.youtube.com/watch?v=nrTKUhNQaWg&sns=em பாடலை நாயகி பாடுவது போல் ஆரம்பித்து நாயகனும் இணையும் வேளை நாயகனும் பாடு நிலாவே என்று பாடுவது பொருந்தாது ஏனென்றால் அவன் மூடிய சிறைக்குள் இருந்து அவளின் குரல்கேட்டுப் பாடுகிறானே எனவே "பாடும் நிலாவே" என்று மாற்றி பாடல் வரிகளில் நுணுக்கம் இருக்க வேண்டிய தேவையைச் சுட்டினாராம் இளையராஜா.

"ராஜராஜ சோழன் நான்" http://www.youtube.com/watch?v=7f1kEtA-xRM&sns=em என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலே மு.மேத்தாவைப் பரவலாகக் கொண்டு சேர்த்த இனிய பாடல். அந்தப் பாடல் ஒன்றே போதும் மு.மேத்தாவின் கவிச்சிறப்பைத் திரையில் காட்ட.

வேலைக்காரன் படத்தின் படக்குழு இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் வட நாட்டுக்குச் சென்றுவிட, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா சார்பில் இயக்குனர் கே.பாலசந்தரே ஒவ்வொரு பாடலுக்குமான கதைக்களனைச் சொல்லி மு.மேத்தாவை அனைத்துப் பாடல்களையும் எழுத வைத்து, இசைஞானி இளையராஜா இசையில் கொண்டுவந்தது ஒரு புதுமை. "தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்" என்று சமூக சிந்தனையை "வா வா வா கண்ணா வா" காதல் பாடலில் புகுத்தியிருப்பார் மு.மேத்தா.

தன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுகின்றார்.
"தென்றல் வரும் தெரு" http://www.youtube.com/watch?v=oeN1fVS-Psg&sns=em என்று சிறையில் சில ராகங்கள் படத்துக்குப் பாடல் எழுதினேன்.

இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.

நான் தயாரித்த "தென்றல் வரும் தெரு" திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.

இரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. "தென்றல் வரும் தெரு அது நீ தானே" என்ற பாடல் வரிகளை முதல் அடியாகக் கொண்டு "சிறையில் சில ராகங்கள்" திரைப்படம் 1990 இல் வெளியானது. அது நடிகர் முரளி, பல்லவி நடிப்பில் வெளியானது.அடிகள் பயன்பட்ட மு.மேத்தாவின் தயாரிப்பில் வந்த "தென்றல் வரும் தெரு" ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடிப்பில் வெளியானது. நான்கு ஆண்டுகள் கழித்து 1994 இல் தான் படம் வந்தது.
இந்தப் படத்திலும் தென்றல் வரும் தெரு http://www.youtube.com/watch?v=ZvtCLpjMnvw&sns=em என்று இன்னொரு பாடலை எழுதியிருப்பார் மு.மேத்தா.
மு.மேத்தாவின் திரையிசைப் பயணத்தில் இப்படிக் கிட்டிய எண்ணற்ற முத்துகள் ஏராளம்.

இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணிபுரியும் பாடலாசிரியர்களில் வாலிக்குப் பின்னர் இன்னமும் தொடர்ந்து சேர்ந்திசையாகப் பயணிக்க்கும் கவிஞர் மு.மேத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
நன்றி-விக்கிபீடியா ,ரேடியோஸ்  பதி

நடிகர் சுதீப் பிறந்த நாள் செப்டம்பர் 02.


நடிகர் சுதீப் பிறந்த நாள் செப்டம்பர் 02.
சுதீப் கன்னடத் திரைப்பட நடிகர். இவர் பின்னணிப் பாடகராகவும், கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்தவர். இவரின் சிறந்த திரைப்படங்களுக்காக விருதுகளைப் பெற்றவர். கர்நாடக அரசின் திரை விருது இவற்றுள் குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

    தாயவ்வ
    பிரத்யர்த
    ஸ்பர்ஷ
    ஹுச்ச
    கிச்ச
    பார்த
    தம்
    நந்தி
    சந்து
    ரங்கா எஸ்.எஸ்.எல்.சி
    ஸ்வாதிமுத்து
    மை ஆடோக்ராப்
    வாலி
    நம்மண்ணா
    குன்ன
    துண்டாட
    கேர் ஆப் புட் பாத்
    மி.தீர்த்த
    ஜஸ்ட் மாத் மாதல்லி
    மஸ்த் மஜா மாடி
    சை
    நல்ல
    திருப்பதி
    காசி பிரம் விலேஜ்
    மகாராஜா
    நம் 73 சாந்தினிவாசா
    கூளி
    காமண்ணன மக்களு
    மாதாடு மாதாடு மல்லிகை
    ஈ சதமானத வீர மதகரி
    முசஞ்சே மாது
    கிச்ச ஹுச்ச
    வீர பரம்பரை
    கெம்பேகௌடா
    விஷ்ணுவர்தனா
    பூங்க்
    பூங்க் 2
    ரண்
    ரக்த சரித்ர 1
    ரக்த சரித்ர 2
    ஈகா (தெலுங்கு) / நான் ஈ (தமிழ்)
" வரதநாயகா

    பாகுபலி (தெலுங்கு)

நடிகை கரீனா கபூர் பிறந்த நாள் செப்டம்பர் 01



நடிகை கரீனா கபூர் பிறந்த நாள் செப்டம்பர் 01
கரீனா கபூர் ( பிறப்பு செப்டம்பர் 01, 1980), அடிக்கடி செல்லமாக பெபோ , என்று அறியப்படுபவர், பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகையாவார். அவர் ஒரு திரைக் குடும்பத்தில் பிறந்தவர், அவருடைய பெற்றோர், தந்தை ரந்திர் கபூர் மற்றும் தாயார் பபிதா, அவருடைய முத்த சகோதரி கரிஸ்மா போன்றோர் திரைப்படங்களில் நடித்தவர்கள் ஆவார்கள், அதன் காரணமாக மிகவும் சிறிய வயதிலிருந்தே, கரீனா ஊடகத்தின் இடவொளியிலேயே திளைத்துக்கொண்டிருந்தார். இருந்தாலும், 2000 ஆண்டுவரை அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை, அவ்வாண்டில் அவர் முதன்முதலாக ரெப்யுஜீ என்ற படத்தில் தோன்றினார், மேலும் அதில் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது. அவர் நடித்த உணர்ச்சி மிக்க இன்ப முடிவுகொண்ட கபி குசி கபி கம் என்ற திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சந்தையில் மிகவும் அதிகமான தொகையை ஈட்டிய இந்தியப்படமாகும் மேலும் வணிகரீதியில் இன்று வரை அவருடைய மிகப்பெரிய வெற்றிப்படமுமாகும்.

2002 மற்றும் 2003 ஆண்டுகளுக்கிடையே திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடித்ததற்கு மக்களிடமிருந்து எதிர்மறை விமர்சனம் பெற்றதால், அச்சுமுகமாக தன் பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்காக அவர் துணிச்சலான பாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் விளைவாக, 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அவர் நடிப்பில் பெரும் பல்துறைத்திறமையை வெளிப்படுத்தியதற்காக ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பெற்றார்.[4] சமேலி (2004) என்ற படத்தில் அவர் ஒரு விலை மாதுவாக நடித்தது அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக திகழ்ந்தது மேலும் அதனால் அவருக்கு பிலிம்பேரின் சிறப்பு நடிகைக்கான பரிசும் கிடைத்தது.அதற்குப்பிறகு அவர் பிலிம்பேர் விழாவில், சிறந்த நடிகை என்று திறனாய்வாளர்களால் தெரிவுசெய்யப்பட்ட விருதுகளை தேவ் (2004) மற்றும் ஓம்காரா (2006) என்ற படங்களில் திறம்படத்தக்க என்று ஆர்பரிக்கப்பட்ட வகையில் நடித்ததற்கு இரண்டு விருதுகளை பெற்றார்.

2007 ஆம் ஆண்டில், இம்தியாஸ் அலி இயக்கிய ஜப் வீ மெட் என்ற காதல்நயம் கொண்ட நகைச்சுவைப் படத்தில் அவருடைய செயல்திறனுக்கு பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதை ஈட்டினார். அவர் நடித்த படங்களால் பாக்ஸ் ஆப்பீஸ் (கல்லாப்பெட்டி) பணப்பெட்டியில் குவிந்த வருமானத்தொகை மாறுபட்டிருந்தாலும், கரீனா தன்னை ஒரு முதன்மையான தற்காலத்து நடிகையாக இந்தி திரைப்பட உலகில் நிலைநாட்டியுள்ளார்.[6][7][8] கரீனாவின் நிஜ வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்தியாவில் ஊடகங்கள் காரணமாக எப்பொழுதும் செய்தி கிடைப்பதற்காக நிருபர்கள் பின்தொடர்ந்து சூழ்ந்துகொண்டே இருப்பதால் அவளைப் பற்றியும், அவளுடைய நண்பரான நடிகர் சைஃப் அலி கானைப் பற்றியும் அடிக்கடி கிசுகிசுக்கள் எழுந்துகொண்டே இருந்தன, அவர்கள் இருவரும் மணம் செய்துகொள்ளப்போவதாக வதந்திகள் பரவலாக உலவியது.


ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும்

பஞ்சாபி கத்திரி வம்சத்தை மூலமாகக்கொண்ட திரைக்குடும்பமான கபூரின் இல்லத்தில் மகாராட்டிரத்தில் உள்ள மும்பையில் பிறந்த அவர், நடிகர்களான ரந்தீர் கபூர் மற்றும் பபிதா (அல்லது சிவதாசினியின்) மிகவும் இளைய மகளாவார். அவர் நடிகரும் படத்தயாரிப்பாளருமான ராஜ் கபூரின் பேத்தியாவார், நடிகர் ப்ரித்திவிராஜ் கபூரின் கொள்ளுப் பேத்தியாவார், நடிகை கரிஸ்மா கபூரின் தங்கையாவார் மற்றும் நடிகர் ரிஷி கபூரின் உடன் பிறந்தவரின் மகளுமாவார். கரீனா சொல்வதன்படி, "கரீனா" என்ற பெயர் அன்ன கரேனினா என்ற புத்தகத்தில் இருந்து பிறந்ததாகும், அவளுடைய தாயார் அவளை கருவில் சுமந்த போது அந்த புத்தகத்தை அவர் படித்தார்.அவரை இயல்பாகவே அடிக்கடி பெபோ என்ற பெயரிலும் செல்லமாக அழைப்பதுண்டு.

குழந்தைகளாக இருக்கும் போதே, கபூர் சகோதரிகள் நடிகைகளாக வரவேண்டும் என்று கனவு கண்டனர். குறிப்பாக நடிகைகளான நர்கீஸ் மற்றும் மீனா குமாரி கபூரை மிகவும் கவர்ந்தவர்கள். இருந்தாலும், அவர்களுடைய குடும்பப்பின்னணி அப்படி அமைந்தபோதும், அவளுடைய தந்தை பெண்கள் படங்களில் நடிப்பதை விரும்பவில்லை ஏன் என்றால் அவ்வாறு செய்வதால் அவளால் தன குடும்பத்திற்குள்ள கடமையை சரிவர செய்ய இயலாமல் போகும் என்ற நம்பிக்கையே ஆகும்.இதனால் அவளுடைய பெற்றோர்களுக்கிடையே அடிக்கடி சண்டை வலுத்தது, முடிவில் கபூரின் தாயார் கரீனாவின் தந்தையை பிரிந்து வந்து விட்டார். 1991 ஆம் ஆண்டில் கரிஸ்மா ஒரு நடிகையாக அறிமுகமாகும்வரை, லோகன்ட்வாலா என்ற இடத்தில் அவரது தாயார் அவர்கள் இருவரையும் வளர்க்கும் சுமையை ஏற்றுக்கொண்டார் மேலும் அவர்களை கரையேற்ற பல இடங்களில் பணிபுரிந்தார்.

கரீனா முதலில் மும்பையிலுள்ள ஜமுனாபாய் நாற்சீ பள்ளிக்கூடத்தில் படித்தார், அதன் பிறகு தெஹ்ரா தூன்னில் உள்ள வெல்ஹாம் பெண்கள் விடுதிப்பள்ளியில் படிக்கச்சென்றார். மும்பையில் விலே பார்லெயில் உள்ள மிதிபாய் கல்லூரியில் அவர் இரண்டு வருடங்களுக்கு வர்த்தகம் படித்தார். இருந்தாலும், அங்கு படிப்பது அவருக்கு பிடிக்கவில்லை, ஆனால் அவர் தன் குடும்பத்தின் அருகாமையில் இருந்ததால் படிப்பதை தொடர்ந்து வந்தார். அதற்குப்பிறகு கரீனா அமேரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலை கழகத்தின் மைக்ரோ கம்ப்யுடருக்கான மூன்று மாத வேனில்காலத்து பயிற்சி வகுப்பிற்காக தன்னை பதிவுசெய்து கொண்டார். பிறகு சட்டப்படிப்பில் அவர் கவனம் சென்றது மேலும் சர்ச்கேட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். இருந்தாலும், சர்ச்கேட்டில் ஒரு வருடகாலம் முடிந்தபிறகு, கரீனா திரும்பவும் தனது நீண்டநாள் கனவான நடிகை ஆவதற்கு திட்டமிட்டார் மேலும் அந்தேரியிலுள்ள கிஷோர் நாமிட் கபூரின் நடிப்பு நிறுவனத்தில் பயிற்சிகள் பெறத்தொடங்கினார்.
 
தொழில் வாழ்க்கை
அறிமுகம் மற்றும் பெருவளர்ச்சி, 2000-2003

2000 ஆம் ஆண்டில் கரீனா முதலில் ராகேஷ் ரோஷனின் கஹோ நா... ப்யார் ஹை என்ற படத்தில், இயக்குனரின் மகன் ரித்திக் ரோஷனுக்கு எதிராக நடிப்பதாக இருந்தது. இருந்தாலும், படப்பிடிப்பு தொடங்கி பலநாட்கள் கழித்து, அவர் அத்திட்டத்தை கைவிட்டார் மற்றும் பின்னர் "விதிவசால் நான் அந்தப் படத்தில் நடிப்பதற்கு கொடுத்து வைக்கவில்லை" என்று குறைப்பட்டுக் கொண்டார். என்ன இருந்தாலும், அந்தப் படம் அவரது மகனை திரை உலகில் நிலை நிறுத்தும் நோக்குடன் தயாரித்த படமாகும். எல்லோர் கவனமும் மகன் மேல் தான் இருந்தது. இப்போது நான் அந்தப்படத்தில் நடிக்கவில்லை என்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்."

பிறகு அதே வருடத்தில் ஜெ.பி. தத்தாவின் ரெப்யுஜீ என்ற போர் குறித்த நாடகத்தில் கரீனா அறிமுகமானார். 1971 ஆண்டின் இந்திய-பாகிஸ்தான் போரை மையமாக கொண்ட அந்தப்படம், ரெப்யுஜீ என்று மட்டுமே அறியப்பெற்ற ஒரு மனிதனை சுற்றிவருவதாகும். (அந்த வேடத்தை முதன் முதலில் அறிமுகமான அபிஷேக் பச்சன் சித்தரித்தார்). அவன் சட்டவிரோதமாக மக்களை இந்தியா-பாகிஸ்தானின் எல்லைக்கு அப்பாலும் இப்பாலும் அழைத்துச்செல்கிறான். கரீனா அப்படத்தில் நாசை என்ற வங்க தேசத்துப் பெண்ணின் வேடத்தை ஏற்றார், அவர் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடிபெயருவதற்கு முயற்சி செய்யும் பொழுது, ரெப்யுஜீயிடம் காதல் வசப்படுகிறார். அவளுடைய அறிமுகத்தோற்றத்தை ரசிகர்கள் யாவரும் பாராட்டினார்கள்; இந்தியா எப் எம் (indiaFM) இன் தரன் ஆதர்ஷ் எழுதினார்: கரீனா கபூருக்கு ஒரு காந்த சக்தியுடைய ஆளுமை இருக்கிறது, அதன் காரணம் அவளை பார்த்தவுடன் ஒருவன் அவளிடம் காதல் கொள்வான். நீங்கள் எதிர்பாராதது என்ன என்றால் அது அவர் மிகவும் கடினமான காட்சிகளிலும் கூட எவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார் என்பதே [...]அவர் இயற்கையாகவே நடிப்புத்திறன் மிகுந்தவர் மேலும் அவர் படக்கருவிகளுடன் (காமெராவுடன்) நட்பு கொண்டவர் என்பதையும் மறுக்க இயலாது."[20] 2000 ஆம் ஆண்டில் ரெப்யுஜீ மிகையாக பண வருமானத்தை ஈட்டிய படங்களில் ஐந்தாவதாக இருந்ததுடன் கபூரின் நடிப்பு அவளுக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றுத்தந்தது.

2001 ஆண்டில் கரீனாவின் முதல் பாத்திரம் முஜே குச் கஹ்நா ஹை என்ற காதல்நயத்துடன் கூடிய நகைச்சுவைப் படத்திலாகும், அப்படம் அவ்வருடத்தில் மிகையான வருமானத்தை ஈட்டிக்கொடுத்தது.இந்து பத்திரிகையில் வெளிவந்த விமர்சனம், "கரீனா ஒரு கவனிக்கப்பட வேண்டிய ஒரு நடிகையாகும், அவர் அபிஷேக்குடன் அறிமுகமான ரெப்யுஜீ மற்றும் இப்போது முஜே குச் கஹ்நா ஹை ஒரு அடையாளம் என்றால் [...] படம் முழுதும் கரீனா பிரகாசிக்கிறார், இப்பொழுதே அவர் ஒரு பக்குவம் பெற்ற ஆறறிவாளர் போல வெளுத்துக் கட்டுகிறார்" என்று கருத்துரைத்தது.[23] அதற்கு அடுத்ததாக அவர் சுபாஷ் கையின் குடும்ப நாடகமான யாதென் என்ற படத்தில் ஜாக்கீ ஷராப் மற்றும் ஹ்ரித்திக் ரோஷனுடன் நடித்தார். இதன் கூத்தானது ராஜ் சிங் பூரி என்ற நடுத்தர வகுப்பை சார்ந்த ஒரு குடும்பத்தலைவன் மற்றும் அவன் பெற்ற பெண்களின் திருமண நிகழ்வுகளை சுற்றிவருவதாகும். இப்படத்தில் கரீனா மிகவும் இளைய மகளாக ரோஷனிடம் காதல் வயப்பட்ட, இஷா சிங் பூரியின் வேடம் பூண்டார். படம் வெளிவந்த பிறகு, மக்களிடம் அப்படம் ஒரு கலவையுடன் கூடிய எதிர்வினையை பெற்றது மற்றும் கல்லாப்பெட்டியில் (பாக்ஸ் ஆபீஸ்) சரியான பணவரவு பெறவில்லை.அதற்குப்பிறகு கரீனா அப்பாஸ்- மஸ்தானின் அதிர்வு தரும் படமான அஜநபீ யில் நடித்தார். 1992 ஆண்டின் கண்சென்டிங் அடல்ட்ஸ் (ஒப்புக்கொள்ளும் பெரியவர்கள்) என்ற படத்தை ஆதாரமாக கொண்ட இப்படம், இந்தியாவில் சுமாரான கல்லாப்பெட்டி (பாக்ஸ் ஆபீஸ்) வெற்றியை பெற்றுத்தந்தது.

பிறகு அதே வருடத்தில், அவர் சந்தோஷ் சிவனின் பழங்காலக்காவியமான அசோகா வில் நடித்தார், அப்படம் அசோகா தி கிரேட் என்ற மன்னரின் வாழ்க்கை முறையை சித்தரிக்கிறது. ஐக்கிய இராச்சியத்திலும் வடக்கு அமெரிக்காவிலும் இப்படத்திற்கு ஒரு நல்ல வலுவான வரவேற்பு இருந்தது. இப்படம் வெனிஸ் நகரத்தில் நடந்த (வெனிஸ் பிலிம் பெஸ்டிவல்) வெனிஸ் திரைப்பட திருவிழாவில் திரையிட்டனர் மற்றும் 2001 ஆம் ஆண்டில் நடந்த டொரோண்டோ அனைத்துலக திரைப்பட திருவிழாவிலும் திரையிட்டனர். அவருக்கு எதிராக ஷா ருக் கான் அசோகராக நடித்தார், கரீனா கவுர்வகி என்ற பாத்திரத்தை சித்தரித்தார், கலிங்க நாட்டு இளவரசியாகும் வரும் அவர் மீது ஷா ருக் கான் காதல் கொள்கிறார். படத்திற்கு பொதுவாக நல்ல விமரிசனம் கிடைத்தாலும், சில திறனாய்வாளர்கள் கரீனாவின் நடிப்பைப்பற்றி எதிர்வினை கலந்த கருத்துக்களை கொண்டிருந்தார்கள். ரிடிப்ப்.காம் முடிவானது என்ன என்றால், "முதல் பகுதியில் மிக்க நேரமும் ஓடிப்போன இளவரசர் மற்றும் கரீனாவுக்கிடையே மலரும் காதலை சித்தரித்தாலும், மற்றும் அவர்களுக்கிடையே படத்தில் ஒரு விதமான இராசயன சேர்க்கையினை அவர்கள் திறமையால் உருவாக்கினாலும், அவர் நடிப்புத்திறமையைப்பற்றி என்னால் இன்னும் கூற இயலவில்லை."இருப்பினும், அவர் நடிப்பை சில திறனாய்வாளர்கள் புகழ்ந்தார்கள் மேலும் பிலிம்பேர் விருது களுக்கான நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான வகையில் முதன்மை தெரிவை ஈட்டியது.

2001 ஆம் ஆண்டின் இறுதியில் கரீனா நடித்து வெளிவந்த படம் கபி குசி கபி கம் என்ற படமாகும், அதை கரன் ஜோஹர் இயற்றினார். இப்படம், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஷா ருக் கான், கஜோல் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் போன்றவர்களின் குழுவைக்கொண்டதாக இருந்தது, மேலும் அப்படம் அவ்வாண்டின் வணிகரீதியில் மிகையாக வெற்றிபெற்ற படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது மற்றும் கரீனாவின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அனைத்துலக அரங்கிலும் அது நல்ல வரவேற்பை பெற்றது மற்றும் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலிவுட்டின் வெற்றியாக திகழ்ந்தது, அதற்கு கிடைத்த தொகை மொத்தம் 1,000 மில்லியன்($22.5 மில்லியன்)ஆகும். அவர் சித்தரித்த 'பூ' என்ற கதாபாத்திரம் திறனாய்வாளர்களின் நன்மதிப்பை பெற்றது மேலும் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தெரிவையும் பெற்றது.

2002 மற்றும் 2003 ஆண்டுகளில், அவர் தனது தொழில்வாழ்க்கையில் ஒருசரிவைக் கண்டார். அவர் ஆறுபடங்களில் நடித்தார் - முஜே தோஸ்தி கரோகே ! , ஜீனா ஸிர்ப் மேரே லியே ,Talaash: The Hunt Begins... குசி, மை பிரேம் கி திவானி ஹூன், மற்றும் நான்கு மணிநேரப்போர் காவியமான எல் ஒ சி கார்கில் - அவையாவும் இந்தியாவில் இக்கட்டு நிறைந்ததாகவும், வணிகரீதியாக தோல்வியை தழுவியதாகவும் திகழ்ந்தது. கபூரின் நடிப்பு மிக்கவாறும் பல திறனாய்வாளர்களால் சுமாறானதாகவும், திரும்பத்திரும்ப ஒரேபோன்றதுமாகவும், உத்வேகம் குறைந்தும் இருந்ததாக அவர்கள் கருதினர். அவர் ஒரு அச்சுமுகமாக மாறி வருவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர் ஆனால் இவ்வகையான எதிர்மறை விமர்சனங்கள் அவரை ஒரு நடிகையாக இருப்பதற்கான ஒருமைப்பாட்டை வரும் காலத்தில் மேம்படுத்த தூண்டுவதற்கு அடிப்படை காரணிகளாக இருந்தன மற்றும் மேலும் உத்வேகத்துடன் கூடிய பாத்திரங்களில் நடிக்க ஊன்றுகோலாகவும் இருந்தன.
திருப்புமுனை, 2004–2006

கபூரின் தொழில்வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்மறை காலத்திற்கப்பால், 2004 ஆம் ஆண்டு முதல் அவர் மேலும் தீவிரமான பாத்திரங்களில் நடிக்கத்தொடங்கினார், அவை வணிகரீதியாக வெற்றிபெறவில்லையானாலும், அவற்றில் மிக்கவை அவருக்கு பெருமையை தேடித்தந்தன. சுதிர் மிஸ்ரா இயக்கிய சமேலி என்ற படத்தில் ராகுல் போசிற்கு எதிராக கரீனா ஒரு விலைமாதர் வேடத்தில் நடித்தார். இந்தப்படத்தில் ஒரு இளவயது விலைமாது ஒரு மனைவியை இழந்த முதலீட்டு வங்கியாளரை சந்திக்கிறார் மற்றும் இருவரும் அவர்களுடைய இடிந்துபோன வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துகொள்கின்றனர் மற்றும் அவர்களுடைய உறவு இவ்வாறு தொடர்ந்து வலுவடைகிறது. சமேலி படத்திற்கு மேம்பட்ட ஐயமில்லாத விமரிசனம் கிடைத்தது மற்றும் கபூரின் நடிப்பை பொதுவாக திறனாய்வாளர்கள் வரவேற்றனர், மற்றும் இந்தியா டைம்ஸி ன் விமரிசனம் "கரீனாவின் அருமையான உள்ளுணர்வுகளை" புகழ்ந்து, அவர் எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் மீறிவிட்டதாக சான்றுரைத்தது. இருந்தாலும், மற்றொரு திறனாய்வாளர் கபூரின் நடிப்பு உப்புசப்பில்லாததாக அச்சுவார்த்ததுபோல இருந்ததாகவும், மேலும் அவர் "ஒரு பதின்வயதினர்போல் நடித்ததாகவும், ஆனால் ஒரு செயலறிவற்ற, மனம் கனத்துப்போன தெருக்கூத்தாடியைப்போல் அது இருக்கவில்லை என்று குறைகூறினார் மற்றும் படத்தில் அவளுடைய நடையுடைபாவனைகள் ஒரு கேலிச்சித்திரம் போல் இருந்ததாகவும் சூளுரைத்தார்.[36] எனினும், கபூரின் நடிப்பு அவருக்கு பிலிம்பேரின் சிறப்பு நடிகைக்கான விருதை கிடைக்கவைத்தது, மேலும் அவரது தொழில்வாழ்க்கையின் போக்கில் ஒரு மாறுபாட்டை காண முடிந்தது.

அதற்குப்பிறகு கரீனா அமிதாப் பச்சன் மற்றும் பார்தீன் கானுடன் கோவிந்த் நிஹலானியின் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற தேவ் என்ற படத்தில் தோன்றினார், அப்படமானது இந்தியாவில் குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரங்களை மையமாக கொண்டதாகும். அதில் கரீனா ஆலியா என்ற ஒரு முஸ்லீம் பலியாட்டின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், அப்பாத்திரம் வடோதராவில் நடந்த பெஸ்ட் பேகரி வழக்கில் முக்கிய சாட்சியான ஜாகிரா ஷேக்கை ஆதாரமாக கொண்டதாகும். இந்தப்படம் அவருக்கு பிலிம்பேரின் திறனாய்வாளர்களின் சிறந்த நடிப்பிற்கான விருதைப் பெற்றுத்தந்தது, மேலும் வேறுபல விருது வழங்கும் விழாக்களில் சிறந்த நடிகை க்கான தெரிவிலும் அவர் பெயர் முன்மொழியப்பட்டது. தரன் ஆதர்ஷ் சொன்னது, "கரீனா கபூர் முதல் தரமாகும். கவர்சியில்லாத ஒரு நோக்குடன், இந்த நடிகை ஒரு பெரிய சாதனையே படைத்துவிட்டார். அமிதாப் பச்சனுடன் ஒரு காட்ச்சியில், (அவர் சாட்சிகளை முன்னுக்கு வருமாறு அழைத்தபோது) அவருடைய நடிப்பு ஒரு உயர்ந்த எடுத்துக்காட்டாகும்."

சிறிது நாட்களில், பிடா என்ற எழுச்சியூட்டும் படத்தில் முதல்முறையாக (சாகித் கபூர் மற்றும் பர்தீன் கானுக்கு எதிராக) தீயவள் வேடம் பூண்டார். இப்படம் வலைத்தளத்தில் திருட்டு நடப்பது மற்றும் மும்பையின் பாதாளவுலகம் போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கிறது. இப்படம் வணிகரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும், அவர் நடிப்புக்காக கரீனா நல்ல பாராட்டை பெற்றார், மேலும் சில திறனாய்வாளர்கள் அவளுடைய முந்தைய பாத்திரங்களை சுட்டிக்காட்டி தனிப்பட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டார்கள். அதற்குப்பின் வெளிவந்த அவளுடைய படங்களானது அப்பாஸ் மஸ்தானுடைய சுமாரான எழுச்சியூட்டும் படமான ஐத்ராஜ் மற்றும் பிரியதர்சனின் நகைச்சுவைப் படமான ஹல்ச்சல், அதுவே 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு கல்லாப்பெட்டி நிறைந்த முதல் வெற்றிப்படம்.

2005 ஆம் ஆண்டில், தர்மேஷ் தர்சன் இயக்கிய படமான பேவபா வில் நடித்தார். இப்படத்தில் கரீனா அஞ்சலி என்ற ஒரு இந்திய-கானடியப் பெண்ணாக தோன்றினாள், அவர் தன்னுடைய சகோதரியின் இறப்பிற்குப்பிறகு அவள் கணவனை மணக்கிறார், ஆனால் அந்த திருமணவாழ்க்கை மனதிற்கு ஒவ்வாதுபோனதால் அவர் தன்னுடைய முந்தைய நண்பனுடனான நட்பை மீண்டும் துவங்குகிறார். இந்தப்படம் எதிர்மறை விமரிசனங்களுக்கு ஆளாயிற்று மற்றும் கபூரின் நடிப்பு மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இந்தியா டைம்ஸி ன் நிகத் கஜ்மி கரீனா ஒரு தீவிரமான நடிகையாக ஆவதற்கான முயற்சியில், கரீனா பேவபா வில் ஒரு முதிர்ந்த மற்றும் தளர்ந்துவிட்ட பாத்திரத்தில் அவளுடைய வயதுக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் உருக்கொடுக்க நினைப்பது, அவள் வயதுள்ள பெண்களுக்கு விசித்திரமாக காட்சியளித்ததாக நம்புகிறார்.

அதற்க்கப்புறம் அந்த வருடத்தில், அவர் பிரியதர்சனின் காதல்நயம்கொண்ட படமான க்யோன் கி யில் நடித்தார். இந்தப்படம், மனநிலை சரியில்லாதோர்களுக்கான ஒரு மருத்துவமனையில் எடுத்தது, ஒரு மனநிலை குன்றிய நோயாளியின் காதல்கதையை சித்தரிக்கிறது, அவ்வேடத்தில் சல்மான் கான் நடித்தார், மேலும் அவருடைய மருத்துவராக, கரீனா கபூர் நடித்தார். இந்தப் படம் வணிகரீதியில் தோல்வியை தழுவியது,[43] ஆனால் கபூரின் நடிப்பு பொதுவாக திறநாய்வாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, மற்றும் பிபிசி தெரிவித்தது, "நடிப்பைப்பொறுத்த வரை அவர் ஒரு இயற்கையைப்போல் தூய்மையானவர் என்பதை சொல்லாமல் சொல்லலாம்" என்பதாகும். கரீனா அப்புறம் அக்ஷய் குமார், போபி தியோள், மற்றும் லாரா தத்தாவுடன் இணைந்து காதல் படத்தில்நடித்தார். இந்தியாவில் வெற்றிபெறவில்லை என்றாலும், அப்படம் 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் (யுனைடெட் கிங்டம்) மிகையாக வருவாயினை ஈன்றெடுத்த பாலிவுட் படமாகும்.

2006 ஆம் ஆண்டில், கரீனா மூன்று படங்களில் தோன்றினார். 36 சைனா டவுன் என்ற மனதை தூண்டும் படத்தில் முதலில் நடித்தார், அதற்குப்பின்னர் சுப் சுப் கே என்ற நகைச்சுவைப் படத்தில் நடித்தார், இரு படங்களும் நல்ல விமரிசனங்கள் பெற்றன. அடுத்ததாக வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ என்ற நாடகத்தைத்தழுவிய ஓம்காரா என்ற ஹிந்திப்படத்தில் அவர் டெஸ்டெமோனாவிற்கு சமமான பாத்திரத்தில் நடித்தார். விஷால் பரத்வாஜ் இயக்கிய இந்தப்படம், உத்தரப்பிரதேச அரசியல் முறைமையை பின்னணியாக கொண்டு மற்றும் பாலியல் சார்பான பொறாமை காரணமாக விளைந்த பெருந்துன்பத்தை சித்தரிக்கிறது. இந்தப்படத்தின் முதல் காட்சி 2006 ஆம் ஆண்டு நடந்த கான் திரைப்பட விழா வில் திரையானது மற்றும் கைரோ அனைத்துலக திரைப்பட விழா வில் திரையிடுவதற்கும் தெரிவானது. ஓம்காரா திறனாய்வாளர்களின் நன்மதிப்பை பெற்றது மற்றும் கபூரின் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள், அதன் மூலம் அவருக்கு நான்காவது பிலிம்பேர் விருது கிடைத்தது மேலும் முதன் முதலான ஸ்டார் ஸ்க்ரீன் விருதும் கிடைத்தது. ரிடிப்ப்.காம் வழங்கிய முடிவுரை, "அவர் நடித்த பாத்திரம் நடிப்பதற்கு மிகவும் கடினமான ஒன்றாகும், ஏன் என்றால் அவர் காதலிலும் சிக்கி பயபக்தியிலும் தவிக்கிறாள், அச்சமும் திகைப்பும் அவளை ஆட்கொள்கின்றன, தந்தையை எதிர்க்கவும் துணிகிறாள் மேலும் கடைசியில் அவளை ஆட்கொண்டவரிடம் பணிகிறாள். கரீனாவிற்கு பேசுவதற்கு (வசன)வரிகளில்லை, ஆனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஏராளமான சந்தர்ப்பங்கள் அமைகின்றன, மேலும் அவர் அதை மிகவும் சரியாக பயன்படுத்தியுள்ளார்." கரீனா அவர்களே ஓம்காரா வில் தான் நடித்த பாத்திரத்தை தனது தொழில்வாழ்க்கையில் ஒரு "புதிய மட்டக்குறி"யாக கருதுகிறார் மேலும் கரீனா டாலி என்ற பாத்திரத்தில் நடித்ததையும், மேலும் தன வாழ்க்கையில் அவர் ஒரு பெண்ணாக முதிர்ந்து வருவதையும் எண்ணி அவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

அண்மைக்காலப் பணி, 2007–முதல் தற்போது வரை.

2007 ஆம் ஆண்டில், கரீனா ஷாகித் கபூருக்கு எதிராக இம்தியாஸ் அலியின் காதல்நயம்கொண்ட நகைச்சுவைப்படமான ஜப் வீ மெட் டில் நடித்தார். இரு வேறுபட்ட மனோபாவங்கள் கொண்ட மக்கள் ரயிலில் பயணிக்கும்போது சந்தித்து மற்றும் இறுதியில் காதல்வயப்படும் இக்கதையில், கரீனா கீத் தில்லண் என்ற படைப்பில் முதன்மை வாய்ந்த, சீக்கியரினத்தை சார்ந்த, வாழ்க்கையை உற்சாகம் மிக்க ஆர்வத்துடன் ரசித்துவாழத்துடிக்கும் பெண்ணாக தோன்றுகிறார். இப்படம் திறனாய்வாளர்களால் நன்றாக வரவேற்கப்பெற்றது. மேலும் அவ்வருடத்தின் மிகவும் வெற்றிபெற்ற படங்களில் ஒன்றாக அது திகழ்ந்தது, அதன் மூலம் உள்நாட்டில் கிடைத்த மொத்த வருமானமானது ரூ 303 மில்லியன் (US$ 6.45 மில்லியன்) ஆகும்.கரீனா அவருடைய நடிப்பிற்காக பல விருதுகளைப்பெற்றார், அதில் பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதும் அடங்கும் மேலும் அவருக்கு அவருடைய இரண்டாவது ஸ்டார் சிறப்பு நடிகைக்கான திரைப்பட விருதும் கிடைத்தது. சிஎன்என்-ஐபிஎன் (CNN-IBN) னின் ராஜீவ் மசாந்த் குறிப்பிட்டது, "தடையில்லாமலும் இயல்பாகவும் நடித்த கரீனா கபூர் இப்படத்தின் ஆத்மாவாகும், இப்படத்தின் மிகப்பெரிய வலிமை, அவர் அந்த சூட்டிகையான வசனங்களோடு மட்டுமல்லாமல், இதர நடிகர்களிம் காண இயலாத ஒரு விதமான வெளிப்படைத்தன்மையுடன் அந்த பாத்திரத்தை சித்தரித்து உயிர்கொடுத்திருக்கிறார்."

ஜப் வீ மெட் டிற்குப்பிறகு, கரீனா அக்ஷய் குமார், ஸைப் அலி கான் , மற்றும் அணில் கபூருடன் தஷான் என்ற சண்டைக்காட்ச்சிகள் நிறைந்தபடத்தில் (2008) நடித்தார். இந்தியா எப்எம் (indiaFM) என்ற நிறுவனம் நடத்திய வாக்களிப்பு அப்படத்தை அவ்வருடத்தின் மிகுந்த எதிபார்ப்புகளுடன் கூடிய படமாக கோஷித்தபோதும், நாளடைவில் தஷான் வணிகரீதியிலும் மற்றும் உய்யநிலையிலும் தோல்வியை தழுவியது.அடுத்ததாக கரீனா யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னீ பிக்ச்சர்சின் கார்டூன் படமான ரோட்சைட் ரோமியோ (Roadside Romeo) வில் லைலா என்ற தெருநாய்க்கு குரல் கொடுத்தார், அந்த நாய் ரோமியோ என்ற தெருநாயின் காதல்நாயகியாகும். ஒரு ஹாலிவுட் ஸ்டுடியோவால் வடக்கு அமெரிக்காவில் வெளியிட்ட பாலிவுட்டின் இரண்டாவது படம் இதுவேயாகும்.[56] இதற்கு ஆயத்தம் செய்வதற்காக, கரீனா பல ஹாலிவுட் அசைவூட்டிய படங்களை பார்த்து நடிகர்கள் எப்படி குரல் கொடுத்தனர் என்பதை அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தார். கரீனா இதர திட்டங்களில் கவனம் செலுத்தியதால், இப்படத்தை சரியாக ஆதரிக்காமல் விட்டதற்காக திறனாய்வாளர்கள் குறை கூறினர்.

2006 ஆம் ஆண்டில் வெளிவந்த கோல்மால் என்ற படத்தை ஆதாரமாக கொண்டு, அதன் பின்தொடற்சியாக வந்த கோல்மால் ரிடேர்ன்ஸ் என்ற ரோஹித் ஷெட்டியின் நகைச்சுவைப் படத்தில் கரீனா அடுத்ததாக நடித்தார். அஜய் தேவ்கன், அர்ஷத் வார்சி, துஷார் கபூர், ஸ்ரேயஸ் தால்பாடே, அம்ரிதா அரோரா, செலினா ஜைத்லீ, மற்றும் அஞ்சனா சுகானி போன்றோர் அடங்கிய ஒரு நடிகர்களின் குழுமத்தின் அங்கமாக இருந்து, கரீனா தனது கணவனின் கற்பை சந்தேகிக்கும் மனைவியாக நடித்தார். இந்தப்படத்திற்கு திறநாய்வாளர்களிடமிருந்து ஒரு கலவையான விமரிசனம் கிடைத்தது மற்றும் கபூருக்கு கலவையுடன் கூடிய விமரிசனமே பெற்றுத்தந்தது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்தின் திரைக்கதை உயிரூட்டம் இல்லாததாக குறிப்பிட்டது மேலும் "கணவன் மீது சந்தேகம் கொண்ட ஒரு பெண்மணி குறிப்பாக தன் கணவன்மீது ஒரு கண் வைத்திருப்பது பெரிய நூதனமான விசயமல்ல, மேலும் அந்த பாத்திரத்தை கையாள்வதில் கரீனா புதுமை எதையும் புகுத்தவுமில்லை."இருந்தாலும், கோல்மால் ரிடேர்ன்ஸ் ஒரு பெரிய வெற்றிப்படமாக திகழ்ந்தது, ரூ 793 மில்லியன்($17.84 மில்லியன்) மற்றும் உள்நாட்டில் மட்டும் மேலாக வருமானம் ஈட்டியது.

2009 ஆம் ஆண்டில், கரீனா அக்ஷய் கானுடன் கம்பக்த் இஷ்க் என்ற சபீர் கானின் நகைச்சுவைப்படத்தில் நடித்தார். இரு வேறுபட்ட மனிதர்களிடையே நிலவும் உறவுகளை ஆராய்ந்து பார்க்கும் இப்படம், இந்தியப்பட வரலாறில் கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட்டின் யூனிவெர்சல் ஸ்டூடியோஸ் ஹாலிவுட் டில் படமானது மேலும் பல ஹாலிவுட் நடிகர்கள் சிறு வேடங்களில் அவ்வப்போது தோன்றினார்கள்.கரீனா சிம்ரிதா ராய் என்ற பாத்திரத்தில் நடித்தார், ஒரு பகுதிநேர முதன்மையான முன்மாதிரியாகவும், மற்றும் ஒரு அறுவை மருத்துவநிபுணராக விரும்பும் பெண்ணாகவும் அவர் இருந்தார். படம் வெளிவந்த பிறகு, படத்திற்கு எதிர்மறை விமரிசனங்கள் குவிந்தன மேலும் கபூரின் நடிப்பு சரிவர வரவேற்கப்படவில்லை. தி டைம்ஸ் ஒப் இந்தியா அவர் நடிப்பை "ஒரு முழுமையான ஏமாற்றம்" என்று விவரித்தது மட்டுமல்லாமல், "அவர் ஒரு முதன்மையான முன்மாதிரியாகவோ, அல்லது ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவோ, இருப்பதாக தெரியவில்லை" என்று சூளுரைத்தது. இருந்தாலும் இப்படம் பொருளாதார வெற்றி அடைந்தது, மேலும் உலகளவில் சுமாரான வருமானத்தை ஈட்டியதுரூ 840 மில்லியன்($18.9 மில்லியன்)

ஆகஸ்ட் 2009 வரையான நிலவரத்தின் படி, கரீனா பிரேம் சோனியின் படமான மை அவுர் மிஸ்ஸிஸ். கன்னா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, அதில் அவர் சல்மான் கானுடன் நடிக்கிறார். மேலும் அவர் ராஜ்குமார் ஹிரானியின் த்ரீ இடியட்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார், அதன் முக்கிய படப்பிடிப்பு ஜுலை 2008 ஆம் ஆண்டில் தொடங்கியது.
இதர பணி(கள்)

அவர் திரைப்படத்துறையில் இருந்த காலங்களில், கரீனா தனது நேரத்தை இதர கடமைகளில் செலவழிக்கத்தவறவில்லை, அவர் மனிதநேயப்பணிகளுக்காக தன் நேரத்தை செலவழித்தார் மற்றும் மேடை நாடகங்களில் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 2002 ஆம் ஆண்டில், கரீனா தனது முதல் உலகப்பயணத்தை மேற்கொண்டார், ஹார்ட்த்ரோப்ஸ் கான்செர்ட் (the Heartthrobs Concert) (இதயத்துடிப்புகளின் கச்சேரி), என்ற நிகழ்ச்சியில், ஹ்ரித்திக் ரோஷன், கரிஸ்மா கபூர், அர்ஜுன் ராம்பால், மற்றும் ஆப்தாப் ஷிவ்தாசனி போன்றோருடன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி அமெரிக்கா மற்றும் கனடா முழுதும் நடந்தது மேலும் அது வெற்றிவாகை சூடியது.[65] நவம்பர் 2003 ஆம் ஆண்டில், கரீனா உலக இளைஞர் அமைதி மாநாடுக்காக நிதி திரட்ட மார்கோ ரிச்சி ஈச் ஒன் ரீச் ஒன் பெனிபிட் கான்செர்ட் (the Marco Ricci Each One Reach One Benefit Concert) என்ற நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றார், மற்றும் 2005 ஆம் ஆண்டில், இதர பாலிவுட் நட்ச்சத்திரங்களுடன் ஹெல்ப் ! டெலேதோன் கான்செர்ட் (HELP!Telethon Concert) என்ற நிகழ்ச்சியில் 2004 ஆம் ஆண்டில் இந்திய மகாசமுத்திரத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கித்தவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பங்குகொண்டார்.[66] அதற்குப்பின் அந்த வருடத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் இதயமாகவுள்ள பாலைவனங்களுக்கு சென்று நமது ஜவான்களை ஊக்கமளிப்பதற்காக என்டிடிவி NDTV யின் காட்சியான, ஜெய் ஜவான் என்ற நிகழ்ச்சியில் ஹோலி பண்டிகை கொண்டாடும் வாரத்தை ஜவான்களுடன் குதூகலமாக கலந்து கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியானது, கேளிக்கை செய்வோர் மற்றும் நட்ச்சத்திரங்கள் என்டிடிவி யின் குழுமத்துடன் ஆங்காங்கே தனிமையில் வாடும் இந்திய துருப்பினரை சென்று கண்டு அவர்களை மகிழ்விப்பதேயாகும்.

2006 ஆம் ஆண்டில், கரீனா சல்மான் கான், சயெத் கான், ஜான் அப்ரகாம், ஷாகித் கபூர், ஏஷா தியோள் மற்றும் மல்லிகா ஷேரவாத் ஆகியோருடன் ரோக்ச்டார்ஸ் கான்செர்ட் (Rockstars Concert) நடத்திய உலகசுற்றுலாவில் கலந்துகொண்டார்.அதற்கடுத்த வருடத்தில், கரீனா, பிரியங்கா சோப்ராவுடன், கோன் பனேகா குரோர்பதி என்ற ((Who Wants to Be a Millionaire?) யார் கரோட்பதியாக விரும்புகின்றனர் என்பதன் இந்திய பதிப்பில்) வென்ற அவளுடைய பகுதி பங்கான ஐந்து மில்லியன் ரூபாயை, செய்ன்ட் அந்தோணியின் முதியோர் இல்லம் மற்றும் மவுண்ட் மேரியின் பாந்த்ராவிற்கு நன்கொடையாக வழங்கினார். ஜூன் 2008 ஆம் ஆண்டில், கரீனா விளையாட்டு நிகழ்ச்சியான க்யா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஜ் ஹைன்? என்ற நிகழ்ச்சியில் அவளுடைய நண்பன் ஸைப் அலி கானுடன் கலந்துகொண்டார், மற்றும் அவருக்கு வெற்றியின் காரணமாக கிடைத்த தொகையின் பகுதிபங்கை, பாந்த்ராவில் உள்ள செய்ன்ட் அந்தோணியின் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாகரூ5,000,000 ($112,500) வழங்கினார். 2009 ஆம் ஆண்டிலும், தஸ் கா தம் என்ற நிகழ்ச்சியின் மூலமாக வென்ற தொகையை, அவர் மீண்டும் செய்ன்ட் அந்தோணியின் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையா வழங்கினார்.

கரீனா பல வணிகச்சின்னங்களை ஆதரித்து வந்துள்ளார், அவற்றில் குர்குரே மற்றும் ஆடைகளின் சங்கலித்தொடரான க்லோபஸ் நிறுவனம் போன்றவை அடங்கும்.[72] கரீனா க்லோபஸ் என்ற வணிகச்சின்னத்தின் உலகளாவிய தூதராகும், மற்றும் அவ்வணிகச்சின்னத்தின் விளம்பரங்களில் தோன்றி வருகிறார்; அவர் தொடர்ந்துவந்ததில் இருந்து, அவ்வணிகச்சின்னத்தின் பொருட்களின் விற்பனை 75 விழுக்காட்டையும் தாண்டியுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை
ஒரு மனிதன் சூட் அணிந்தும் மற்றும் ஒரு பெண் சேலையணிந்தும்
கரீனா தனது பாய் ஃப்ரெண்ட் ஸைப் அலி கானுடன் 2008 ஆம் ஆண்டின் 53 ஆவது பிலிம்பேர் விருது விழாவில்.

2004 ஆம் ஆண்டில், கரீனா நடிகர் ஷாகித் கபூரை அடிக்கடி சந்திக்கத்தொடங்கினார், ஆனால் ஜப் வீ மெட் படப்பிடிப்பு நடக்கும்போது, 2007 ஆம் ஆண்டில் அவர் அவரிடமிருந்து ஒரேயடியாகப் பிரிந்தார். செப்டம்பர் 2007 ஆம் ஆண்டில், அவர் ஸைப் அலி கானை சந்திப்பதாக ஊகம் பரவலாக பரவியது. அக்டோபர் 18, 2007 ஆம் ஆண்டில், லக்மே பேஷன் வீக் என்ற நிகழ்ச்சியில் மனிஷ் மல்ஹோத்ராவின் பிரம்மாண்டமான இறுதிக்காட்சி நடைபெறுகையில், கான் அவர்கள் இருவரிடையே நிலவிய உறவினை ஊடகங்களுக்கு உறுதி செய்தார்.
கரீனா அவர் குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கம் கொண்டிருந்தார்,மற்றும் அவர் தாயார் பபிதாவுடன் வாழ்க்கையின் மிக்க நாட்களையும் கழித்தார். கரீனா அவர் தாயாருடன் லோக்ண்ட்வாலா வில் சேர்ந்து வாழ்ந்தார்கள் மற்றும் அதற்குப் பிறகு பல வருடங்களுக்கு மும்பையில் உள்ள பாந்த்ராவில் பார்க் அவேநியூவிலும் வசித்து வந்தார்கள். மேலும் 2008 ஆம் ஆண்டில், கரீனா மற்றும் அவர் தாயார், அக்ஷய் குமாரின் மனைவியான டிவிங்கிள் கன்னா வடிவமைத்த மும்பையிலுள்ள கார் என்ற இடத்தில் அடுத்தடுத்துள்ள கட்டிடங்களை வாங்கி அதில் வசித்தனர்.[80] கரீனா தமது ஒய்வு நேரங்களில் புத்தகப்புழுவாக இருப்பதாகவும் மற்றும் நீச்சல் குளத்தில் நீச்சலடிப்பதாகவும் கூறியுள்ளார்.

கரீனாவின் எடை மற்றும் பத்தியமுறை ஊடகங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய விஷயமாகும். 2006 ஆம் ஆண்டில், கரீனா தன் எடையைக் குறைப்பதற்காக சைவ உணவிற்கு மாறுவதாக தெரிவித்தார். கரீனா பசியின்மை காரணமாக தவிப்பதாகக் கூறும் வதந்திகளை மறுக்கிறார் மற்றும் தனது குறைவான எடைக்கு யோகா மற்றும் மிகவும் கவனத்துடன் கண்காணிக்கும் சமச்சீரான உணவே என்று வாதாடுகிறார். 2008 ஆம் ஆண்டில், தஷான் படப்பிடிப்பின்போது எடைகுறைந்து படப்பிடிப்பு மேடையில் மயங்கி விழுந்தபோது, ஊடகங்களில் அவளுடைய உடல்நலம் பற்றிய செய்திகள் பரவலாக இருந்தது. அவர் இந்நிகழ்ச்சியை ஒரு சாதாரண உடல் நல பாதிப்பே என்று கூறி முத்தாய்ப்பு வைத்துவிட்டார்.
ஊடகங்களில்

கரீனா அவர்கள் 2000 ஆம் ஆண்டிற்குப்பின்னரே படங்களில் நடிக்க அறிமுகமானாலும், திரைப்படத்துறையில் மிகவும் ஆழமாக வேரூன்றிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவளானதால், கரீனா தமது சிறு வயதினிலேயே ஊடகங்களின் இடைவொளிக்கு காரணமானார். குழந்தையாக இருக்கும் போதே, கரீனா அவர் தாயார் பபிதா மற்றும் சகோதரி கரிஸ்மா கபூருடன் பல விருது வழங்கும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் மற்றும் அவர் சகோதரியின் படப்பிடிப்பின் போதும் அவர் அவளுடைய சகோதரியுடன் கூட படப்பிடிப்புக்கு வருவார். முன்னதான வருடங்களிலேயே, ஊடகங்களின் யூகங்களை மனதில் கொண்டு, கரீனா ஊடகங்களுடன் ஒரு அமைதியான உறவுமுறைகளை பூண்டார் மற்றும் அவர் தன்னுடைய தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையைப்பற்றி ஒளிவுமறைவின்றி பேசும் திறமையை ஊடகங்களுடன் தடையில்லாமல் வளர்த்துக் கொண்டதற்கு பெயர்பெற்றவரானார்.

2005 ஆம் ஆண்டின் போது, கரீனா கரன் ஜோஹரின் பேட்டி நிகழ்ச்சியான காபி வித் கரன் (Koffee with Karan) என்ற நிகழ்ச்சியில் ராணி முகெர்ஜி யுடன் பங்கேற்றார், மேலும் இரு ஆண்டுகளுக்குப்பிறகு அவர் ஷாகித் கபூர் மற்றும் கரிஸ்மா கபூருடன் பேட்டி கொடுத்தார். அதற்கடுத்த வருடத்தில், அவர் பிரியங்கா சோப்ராவுடன் இந்தியன் ஐடல் என்ற பாட்டுத்திறமையை கண்டறியும் திறமை போட்டியினை சோதிக்கும் ஒரு விருந்தாளி நடுவராக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.பல மாதங்களுக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற பேஷன் வீக் 2006 என்ற நிகழ்ச்சியில், கரீனா மற்றும் நடிகர்களான ஷாகித் கபூர் மற்றும் உர்மிளா மடோன்கர் ஆகியோர் வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா வின் பேஷன் காட்சியான, பிரீடம் என்ற தலைப்புகொண்ட நிகழ்ச்சியில், மாதிரியாக இருந்து சரிவு மேடையில் உடைகளை காட்சிவைக்கும்படி நடந்துசெல்ல தெரிவு செய்யப்பட்டனர். 2007 ஆம் ஆண்டில், கரீனா மற்றும் பல்வேறு பாலிவுட்டை சார்ந்த பிரமுகர்கள் சண்டிகரில் கபில் தேவி ன் இந்தியன் கிரிக்கெட் லீகின் (ICL)  திறப்பு விழாவில் மேடையில் நிகழ்ச்சிகளை நடித்துக் காட்டினர். ஜூன் 2008 ஆம் ஆண்டில், கரீனா மறுபடியும் மனிஷ் மல்ஹோத்ராவின் பேஷன் கலைக்காட்ச்சிக்கு மாதிரியாக 2008 ஆம் ஆண்டின் ஐஐஎப்ஏ (IIFA) பேஷன் கலைவிழாவில் பங்கேற்றார்.

கரீனா ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஊடகங்கள் நடத்தும் வாக்களிப்பு தெரிவுகளில் பங்கேற்கிறார். 2004 ஆம் ஆண்டில், ரிடிப்ப் நடத்திய "முதன்மை பெற்ற பெண் நட்சத்திர நடிகைகளின்" பட்டியலில், கரீனா மூன்றாம் இடத்தை பிடித்தார். பிறகு அவர் 2005-2006 ஆண்டுகளில் ஏழாவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையாக பிடித்தார் மற்றும் 2007 ஆம் ஆண்டில், மீண்டும் மூன்றாம் இடத்திற்கு திரும்பி வந்தார். பெப்ரவரி 2007 ஆம் ஆண்டில், கபூர் இன்டியாடைம்ஸ் பட்டியலிட்ட "பாலிவுட்டின் முதன்மை பெற்ற முதல் 10 நடிகைகளின்" தர வரிசையில் நான்காவதாகவும்,  பிறகு அவ்வருடத்தில், இந்த நடிகை U.K. நாட்டு பத்திரிகையான ஈஸ்டேர்ன் ஐய்யில் "ஆசியாவின் மிகவும் விரும்பத்தக்க பெண்ணாக" எட்டாவது இடத்தில் தெரிவு செய்தது. கரீனா பல்வேறு சைவ உணவு விருதுகளையும் வலைதள ஆன்லைனில் பெற்றுள்ளார், பிஈடிஏ இந்தியா (PETA INDIA) நிறுவனம் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவின் "சைவ உணவு உண்ணும் அழகான பெண் பிரமுகியாக" தெரிவு செய்யப்பட்டார். மார்ச் 2009 ஆம் ஆண்டில், பிலிம்பேர் பத்திரிகையின் வருடாந்தர "சக்திவாய்ந்த மக்கள் பட்டியலில்", பாலிவுட்டின் மிகவும் சக்தி வாய்ந்த பத்து மக்களின் வரிசையில் பெண்களில் அவர் மட்டுமே இடம் பெற்றார்.
 
திரைப்பட விவரம்
ஆண்டு     (திரைப்படம்)     பாத்திரம்     மற்ற குறிப்புகள்
2000     அகதி     நஸ்நீன்

"நாஜ் " எம். அஹ்மத்
    வெற்றியாளர், பிலிம்பேர் சிறந்த பெண் அறிமுக விருது
2001     முஜே குச் கஹ்நா ஹை     பூஜா சாக்செனா    
யாதேன்     இஷா சிங்க் புரி    
அஜநபீ     பிரியா மல்ஹோத்ரா    
அசோகா (2001)     கவுர்வகி     பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
கபீ குசி கபீ கம்     பூஜா "பூ" ஷர்மா     பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது
2002     முஜ்ஸே தோஸ்தி கரோகே     டினா கபூர்    
ஜீனா சிர்ப் மேரே லியே     பூஜா /பிங்கி    
2003.     தலாஷ்: தி ஹன்ட் பெகின்ஸ் ...     போர்ட்லாந்து,ஆரிகன், டாக்கி, டினா பிரஸ்(2003).    
கபீ குசி கபீ கம்     குஷி சிங்க் (லாலி)    
மைன் பிரேம் கி திவானி ஹூன்     சஞ்சனா    
எல் ஒ சி கார்கில்     சிம்ரன்    
2004     சமேலி     சமேலி     வெற்றிபெற்றவர் , பிலிம்பேரின் சிறந்த நடிபிற்கான விருது.
யுவா     மீரா    
தேவ்     ஆலியா     சிறந்த நடிப்புக்கான பிலிம்ஃபேர் கிரிட்டிக்ஸ் விருது வென்றார்
ஜப் நஹி ஆயே தே தும் [98] என்ற பாடலை பின்னணியில் பாடியதற்கு விருது.
பிதா     நேஹா மெஹ்ரா     முதல் வில்லன் பாத்திரம்
ஐத்ராஸ்     ப்ரியா சக்சேனா/ மல்ஹோத்ரா    
ஹல்ச்சல்     அஞ்சலி    
2005     வேக்ஸ் மேன் , ஷேரன்(2005).     பேவபா     அஞ்சலி சகாய்    
கியூங் கி     டா.தன்வி குரானா    
தோஸ்தி: பிரிஎண்ட்ஸ் போறேவேர்     அஞ்சலி    
2006     36 சீனா டவுன்     பிரியா    
சுப் சுப் கே     ஸ்ருதி    
ஓம்காரா     டாலி ஆர். மிஸ்ரா     சிறந்த நடிப்புக்கான பிலிம்ஃபேர் கிரிட்டிக்ஸ் விருது வென்றார்
பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
டான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன்     காமினி     கேமியோ
2007     க்யா லவ் ஸ்டோரி ஹை     அவராகவே     இட்ஸ் ரோக்கிங் என்ற பாடலுக்காக சிறப்புத் தோற்றம்
ஜப் வீ மெட்     கீத் தில்லான்     வெற்றியாளர், பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
2008     ஹல்லா போல்     அவராகவே     சிறப்புத் தோற்றம்
தஷான்     பூஜா சிங்க்    
ரோட்சைட் ரோமியோ     லைலா (குரல்)     முதல் கார்டூன் படத்திற்கு குரல் கொடுத்தார்.
கோல்மால் ரிடேர்ன்ஸ்     ஏக்தா    
2009     லக் பை சான்ஸ்     அவராகவே     சிறப்புத் தோற்றம்
பில்லு     அவராகவே     மர்ஜானி என்ற பாடலுக்காக சிறப்புத் தோற்றம்
கம்பக்த் இஷ்க்     சிம்ரிதா ராய்    
மைன் அவுர் மிஸ்ஸிஸ் கன்னா     ரைனா கன்னா    
குர்பான்         பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது
திரீ இடியட்ஸ்     பியா     பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் ஆகஸ்ட் 31.


இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் ஆகஸ்ட் 31.
யுவன் சங்கர் ராஜா (ஆங்கிலம்: Yuvan Shankar Raja ; பிறப்பு: ஆகஸ்டு 31, 1979) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது திரைப்படமாகும். இவர் இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறினார்.

திருமண வாழ்க்கை
2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
2007 ஆம் ஆண்டு சுஜன்யாவிடமிருந்து விவாகரத்து செய்தார்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பதியில் ஷில்பா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஷில்பாவை விவாகரத்து செய்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்று அன்று ஜபருன்னிசாவைத் திருமணம் செய்தார்.
இவர் இசையமைத்துள்ள திரைப்படங்கள்
தமிழில்
அரவிந்தன் (1997) (அறிமுகம்)
வேலை (1998)
கல்யாண கலாட்டா (1998)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
தி பிளாஸ்ட் (திரைப்பட இசையல்லாத இசைக்கோப்பு)
உனக்காக எல்லாம் உனக்காக (1999)
ரிஷி (2000)
தீனா (2000)
[[துள்ளுவ தோ இளமை]] (பாடல்கள் மாத்திரம்) (2001)

மனதை திருடி விட்டாய் (2001)
நந்தா (2001)
ஜூனியர் சீனியர் (2002)
காதல் சாம்ராஜ்ஜியம் (2002)
ஏப்ரல் மாதத்தில் (2002)
பாலா (2002)
மௌனம் பேசியதே (2002)
புன்னகைப் பூவே (2002)
பாப் கார்ன் (2002)
வின்னர் (2003)
காதல் கொண்டேன் (2003)
புதிய கீதை (பாடல்கள் மாத்திரம்) (2003)
தென்னவன் (2003)
குறும்பு (2003)
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2003)
உள்ளம் (2004)
எதிரி (2004)
பேரழகன் (2004)
7 ஜி ரெயின்போ காலனி (2004)
மன்மதன் (2004)
போஸ் (2004)
அது (பின்னணி இசை மாத்திரம்) (2004)
ராம் (2005)
அறிந்தும் அறியாமலும் (2005)
தாஸ் (2005)
ஒரு கல்லூரியின் கதை (2005)
கண்ட நாள் முதல் (2005)
சண்டக்கோழி (2005)
கள்வனின் காதலி (2005)
அகரம் (2005)
புதுப்பேட்டை (2005)
பட்டியல் (2006)
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)
கேடி (2006)
வல்லவன் (2006)
திமிரு (2006)
பருத்திவீரன் (2006)
தாமிரபரணி (2006)
தீபாவளி (2007)
சென்னை 600028 (பாடல்கள் மாத்திரம்) (2007)
சத்தம் போடாதே (2007)
தொட்டால் பூ மலரும் (2007)
கண்ணாமூச்சி ஏனடா (2007)
கற்றது தமிழ் (2007)
வேல் (2007)
மச்சக்காரன் (2007)
பில்லா 2007 (2007)
வாழ்த்துகள் (2008)
சரோஜா (2008)
யாரடி நீ மோகினி (2008)
ஏகன் (2008)
சிலம்பாட்டம் (2008)
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009)
சிவா மனசுல சக்தி (2009)
சர்வம் (2009)
வாமணன் (2009)
முத்திரை (2009)
யோகி (2009)
பையா (2009)
தீராத விளையாட்டு பிள்ளை (2009)
கோவா (2010)
பாணா காத்தாடி (2010)
காதல் சொல்ல வந்தேன் (2010)
தில்லாலங்கடி (2010)
நான் மகான் அல்ல (2010)
பாஸ் (எ) பாஸ்கரன் (2010)
பதினாறு (2010)
வானம் (2011)
அவன் இவன் (2011)
ஆரண்ய காண்டம் (பின்னணி இசை மாத்திரம்) (2011)
மங்காத்தா (2011)
ராஜபாட்டை (2011)
வேட்டை (2012)
கழுகு (2012)
பில்லா 2 (2012)
சமர் (பாடல்கள் மாத்திரம்) (2013)
அமீரின் ஆதிபகவன் (2013)
மூன்று பேர் மூன்று காதல் (2013)
கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013)
தில்லு முல்லு (2013) (ம. சு. விசுவநாதனுடன் இணைந்து)
தங்க மீன்கள் (2013)
ஆதலால் காதல் செய்வீர் (2013)
ஆரம்பம் (2013)
பிரியாணி (2013)
வானவராயன் வல்லவராயன் (2014)
பேசு (2013)
காதல் 2 கல்யாணம் (2013)
வேட்டை மன்னன் (2014)
வை ராஜா வை (2014)
சிப்பாய் (2014)
வடக்கறி (2014)
தரமணி (2014)
விருதுகள்
சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (2006)
சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - 7 ஜி ரெயின்போ காலனி (2004)
விருப்பமான பாடலுக்கான விஜய் விருது - "என் காதல் சொல்ல" - பையா (2010)

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

இசைப் பாடகர் கொத்தமங்கலம் சீனு நினைவு தினம் ஆகஸ்ட் 30.


திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகர் கொத்தமங்கலம் சீனு நினைவு தினம் ஆகஸ்ட் 30.

கொத்தமங்கலம் சீனு (பெப்ரவரி 17, 1910- ஆகத்து 30, 2001) தமிழ் நாடகத், திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு
வி. எஸ். சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட கொத்தமங்கலம் சீனு, மதுரைக்கு அருகேயுள்ள வற்றாயிருப்பு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கருநாடக இசையில் பயிற்சி பெற்ற சீனு பிழைப்பைத் தேடி செட்டிநாடு பகுதியில் உள்ள கொத்தமங்கலம் வந்தார். ஆரம்பத்தில் கிராமபோன் இசைத்தட்டுகளில் இவரது பாடல்கள் வெளிவந்தன. பின்னர் பாடகரும் நடிகருமான கொத்தமங்கலம் சுப்புவுடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார். கருநாடக இசைக் கச்சேரிகளை நடத்தி வந்ததோடு, மாணவர்களுக்கு இசைப் பயிற்சியும் கொடுத்து வந்தார்.

இவரது குரல் இனிமை இவரை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. இவர் நடித்த முதல் திரைப்படம் சாரங்கதாரா. இது 1935 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் தாசி அபரஞ்சி, பக்த சேதா, விப்ரநாராயணா போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இவரது கடைசித் திரைப்படம் துளசி ஜலந்தர். இது 1947 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1947 இற்குப் பின்னர் இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தாலும், இதற்குப் பின்னர் அவர் எந்தத் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

பிற்காலத்தில் இவர் வானொலியிலும், மேடைக் கச்சேரிகளிலும் பாடி வந்தார்.

நடித்த திரைப்படங்கள்
சாரங்கதாரா (1935)
விப்ரநாராயணா (1938)
திருமங்கை ஆழ்வார் (1940)
மணிமேகலை (1940)
சூர்யபுத்திரி (1941)
கச்சதேவயானி (1941)
சோகாமேளர் (1942)
கிருஷ்ணபிடாரன் (1942)
தாசி அபரஞ்சி (1944)
பக்த சேதா
சகடயோகம் (1946)
பொன்னருவி (1947)
ஏகம்பவாணன் (1947)
மகாத்மா உதங்கர் (1947)
துளசி ஜலந்தர் (1947)

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம் ஆகஸ்ட் 30,


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம் ஆகஸ்ட் 30,
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.

இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியவர்.

காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

கொலைக் குற்றச்சாட்டு
அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்
பைத்தியக்காரன் (1947)
நல்ல தம்பி (1949)
அமரகவி (1952)
பணம் (1952)
டாக்டர் சாவித்திரி (1955)
நம் குழந்தை (1955)
முதல் தேதி (1955)
காவேரி (1955)
மதுரை வீரன் (1956)
நன்நம்பிக்கை (1956)
கண்ணின் மணிகள் (1956)
ஆசை (1956)
சக்கரவர்த்தி திருமகள் (1957)
புது வாழ்வு (1957)
அம்பிகாபதி (1957)
தங்கப்பதுமை (1959)
தோழன் (1960)

இவர் இயக்கிய படங்கள்
பணம் (1952)
மணமகள்
இவர் பாடிய பாடல்கள்[தொகு]
ஜெயிலிக்குப் போய் வந்த (பைத்தியக்காரன்)
பணக்காரர் தேடுகின்ற (பைத்தியக்காரன்)
ஆசையாக பேசிப் பேசி (பைத்தியக்காரன்)
ஒண்ணுலேயிருந்து (முதல்தேதி)
இடுக்கண் வருங்கால் (முதல்தேதி)
சங்கரியே காளியம்மன் (ரங்கோன் ராதா)
ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)
காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)
ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)
ஆரவல்லியே (ஆர்ய மாலா)
கண்ணா கமலக் கண்ணா (கண்ணகி)
கண்ணனெந்தன் (கண்ணகி)
இருக்கிறது பார் கீழே (மங்கையற்கரசி)
கண்ணே உன்னால் (அம்பிகாபதி)
சந்திர சூரியர் (அம்பிகாபதி)
தீனா...மூனா...கானா...(பணம்)
உன்னருளால் (ரத்னமாலா)
என் சாண் உடம்பில் (ரத்னமாலா)
சிரிப்பு இதன் சிறப்பை (ராஜா ராணி)
நாலுக் கால் குதிரை (ஆசை)
தாலி பொண்ணுக்கு வேலி (ஆசை)
சங்கரியே காளியம்மா (நன்னம்பிக்கை)
வாதம் வம்பு பண்ண (டாக்டர் சாவித்திரி)]
காசிக்கு போனா கருவுண்டாகுமென்ற (டாக்டர் சாவித்திரி)
கிந்தன் சரித்திரமே (நல்ல தம்பி)
ஏண்டிக் கழுதை (உத்தமபுத்திரன்)
தளுக்கான வால வயசு (உத்தமபுத்திரன்)
விடுதியில் மேய்திடுவோம் (ஜகதலப்ரதாபன்)
பெண்ணுலகிலே பெருமை (கிருஷ்ணபக்தி)
சங்கர சங்கர சம்போ (கிருஷ்ணபக்தி)
நித்தமும் ஆனந்தமே (பவளக்கொடி)
விஜய காண்டிப வீரா (பவளக்கொடி)
அன்னம் வாங்கலையோ (பவளக்கொடி)
இவனாலே ஓயாத தொல்லை (பவளக்கொடி)
சொந்தமாக நெனச்சு (வனசுந்தரி)
ஊன்னு ஒரு வார்த்தை (மனோன்மணி)
இன்னிக்கு காலையிலே (சகுந்தலை)
வெகுதூரக்கடல் தாண்டி (சகுந்தலை)
நல்ல பெண்மணி (மணமகள்)
ஆயிரத்திதொள்ளாயிரத்தி (மணமகள்)
சுதந்திரம் வந்ததுண்ணு (மணமகள்)
குடி கெடுத்த குடியொழிஞ்சுது (நல்லதம்பி)
மழையில்ல சீமையில் (தக்ஷயக்ஞம்)
சிவானந்த ரஸம் (தக்ஷயக்ஞம்)
இருவரும் ஒன்றாய் (தக்ஷயக்ஞம்)
சோனா இல்லன்னா (லைலா மஜ்னு)
சும்மா இருக்காதுங்க (நல்லகாலம்)
மறைவு
1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தனது 49வது வயதில் கலைவாணர் காலமானார்.

கலைவாணர் அரங்கம்
தமிழ்நாடு அரசு கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது.
//

என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

என்.எஸ். கிருஷ்ணன்... தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!...

நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!

வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணரின் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம்!

ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் என்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம் ஆனால், 'சதி லீலாவதி'யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே. அடுத்து நடித்த 'மேனகா' படமே முதலில் திரைக்கு வந்தது. மொத்தம் 122 படங்களில் நடித்திருக்கிறார்!
'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதம் பூத்தது!
தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை மணந்தார் என்.எஸ்.கே கலைவாணருக்கு ஏற்கெனவே திருணமான விஷயத்தை அவரது குழுவில் இருந்த புளிமூட்டை ராமசாமி என்பவர் மதுரத்திடம் போட்டு உடைக்க, இதனால் சில நாட்கள் கலைவாணரிடம் மதுரம் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்!
என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை  கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம். சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.
என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!
'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!
உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். 'உடுமலைக்கவியை' கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.
1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். 'இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு  அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்' என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!
'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். 'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!' – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!
சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், 'எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!' என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!
''என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!'' என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!
கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல் அனுப்பினார், 'நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன்.
ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார்!
'தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!
தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கல் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!
கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.
சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. 'நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!' என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!
சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்!
ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி காலமானார். தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் மூழ்கிய தினம் அது!

////

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கே.
ஒரு காலத்தில் ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் ஆச்சரியத்தோடு வியந்து பார்த்த வீடு அது.கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுப்பப்பட்ட முதல் கான்கிரீட் வீடும் அதுதான். மொசைக் தரை போட்ட அந்த வீட்டை பார்க்க மாட்டு வண்டி கட்டி வந்தவர்களும் அதிகம். வீட்டு கிரகப்பிரவேசம் அன்று சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கையே பல ஆயிரங்களை தாண்டும்.

இப்போதும் பழங்கால திரையரங்குகளை நினைவூட்டும் வகையில் கம்பீரம் குறையாமல், அதே நேரத்தில் பராமரிப்பு இன்றி நிற்கிறது நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மதுர பவனம்.

தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் பிறந்து நாடறிந்த திரைப்பட கலைஞர், சிரிப்பு நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது. இன்றும் அப்பகுதிவாசிகளின் அடையாள சின்னமாய் மாறி நிற்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீட்டில் இப்போது அவரது வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாளான இன்று (சனிக்கிழமை) அவர் குறித்த நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார் அவரது பேரன் என்.எஸ்.கே.கே.ராஜன்.

இவர் ‘நாகரீக கோமாளி’ திரைப்படத்தில் அறிமுகமானவர். இப்போது எழில் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பகல்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக உள்ளார்.

‘’தாத்தா ஆரம்ப காலத்தில் டென்னிஸ் கிளப்ல பந்து பொறுக்கி போடுற வேலைகூட பார்த்திருக்காங்க. பிற்காலத்தில் பெரிய நடிகனானதும் நாகர்கோவில் நகராட்சி சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்துனாங்க. அப்போ தாத்தாவுக்கு தனியா பெரிய நாற்காலி போட்டிருந்தாங்க. ஆனா அவர் அதில் உட்காரல. தரையில் போடப்பட்டிருந்த கடல் மண்ணில் போய் உட்கார்ந்தாரு. எல்லாரும் இது பத்தி கேட்டப்போ இந்த இடம்தான் எப்போதும் நிரந்தரம்ன்னு சொல்லிருக்காரு. அந்த எளிமைதான் அவரோட சிறப்பே. நாடகக் கொட்டகையில் சோடா விற்பவராக இருந்து படிப்படியாக உயர்ந்ததால்தான் அத்தனை பக்குவம்.

கலைவாணருக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது. கலைவாணர் உச்ச நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர். பெரிய நடிகராக பிற்காலத்தில் வருவார் என தட்டிக் கொடுத்திருக்கின்றார். கலைவாணர் மறைவுக்கு பின்பு அவரது தாயார் இசக்கியம்மாள் உயிருடன் இருந்தவரை எம்.ஜி.ஆர். பண உதவி செய்தார். கலைவாணர் ஈகை பண்பால் சேர்த்து வைத்த செல்வத்தையெல்லாம் கரைத்துவிட்டு மரண படுக்கையில் இருந்தார். அப்போதும் எம்.ஜி.ஆர் வந்து பார்த்து சென்றார்.

கலைவாணர் இறந்த பிறகு அவரது மகன் கோலப்பனையும் ‘பெரியஇடத்து பெண்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். கலைவாணரின் 2 மகள்களுக்கும் எம்.ஜி.ஆர்.தான் திருமணம் செய்து வைத்தார். கலைவாணரின் மறைவுக்கு பின்பு இந்த வீடு ஏலத்துக்கு போனபோதும் எம்.ஜி.ஆரே மீட்டுக் கொடுத்தார். கலைவாணர் இருந்த சமயம் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. அப்போது சித்திரை திருநாள் மகாராஜா மன்னராக இருந்தார். சமஸ்தானத்தில் உள்ள சில பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டபோது நாடகம் நடித்து அந்த பணத்தை சமஸ்தானத்துக்கு கொடுத்தார். மன்னருக்கு கலைவாணரின் நடிப்பு, சமூக சேவை பிடித்துப் போய் என்.எஸ்.கே.வுடன் படம் பிடித்துக் கொண்டார். அது இன்றும் இந்த வீட்டில் பொக்கிஷமாய் உள்ளது. தியாகராஜ பாகவதர்கூட இந்த வீட்டில் வந்து பாடல் பாடியுள்ளார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள நகராட்சி பூங்காவில் தாத்தா காந்தியடிகளுக்கு நினைவாக கட்டிக் கொடுத்த நினைவுத் தூண், இந்த வீடு ஆகியவை தாத்தா எங்களுடனே இருப்பதைப்போல் உணர்வை தருகின்றது” என்றார்.

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள மணிமேடை சந்திப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரால் திறக்கப்பட்ட சிலை கம்பீரமாக நின்று அவரது புகழை பரப்பிக் கொண்டிருக்கிறது.

நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. அவர் வாழ்வும் 49 ஆண்டுகளில் சுருக்கமாக முடிந்தாலும் வரலாறு அவர் பெயரை வாரி அணைத்துக் கொண்டது என்பது மட்டும் உண்மை.
நன்றி -விக்கிபீடியா, தி இந்து தமிழ்,லஷ்மன்ஸ்ருதி.

நடிகை ரிச்சா பலோட் பிறந்த நாள் ஆகஸ்ட் 30.


நடிகை ரிச்சா பலோட் பிறந்த நாள் ஆகஸ்ட் 30.
ரிச்சா பலோட் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதலாவதாக லம்மே என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். 2000 ஆம் ஆண்டு நுவ்வே கவாளி என்ற தொலுங்குப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமான பலோட் சாஜாகான் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.

திரைப்படத்துறை
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி சக-நடிகர் குறிப்பு
1991 லம்மே பூஜா இந்தி அணில் கபூர் குழந்தை நட்சத்திரம்
1997 பர்தேஸ் இந்தி சாருக் கான் குழந்தை நட்சத்திரம்
2000 நுவ்வே கவாளி மது தெலுங்கு தருன் குமார் சிறந்த நடிகை: பில்ம்பெயார்
2001 சிரு ஜாலு ராதிகா பிரசாத் தெலுங்கு தருன் குமார்
சாஜாகான் மாயே தமிழ் விஜய்
2002 அல்லி அர்ஜுனா சாவித்திரி தமிழ் மனோஜ்
குச் தும் கவோ குச் அம் கயேயின் மங்களா சோலங்கீ இந்தி பர்டீன்
ஓலி சந்தியா தெலுங்கு உதய் கிரண்
2003 காதல் கிருக்கன் மாகா தமிழ் பார்தீபன்
தும்சே மில்கே ரோங் நம்பர் மாயி மாதுர் இந்தி ராகேஷ் பாபட்
2004 சப்பாலே ஜானு கண்ணடம் சுனில் ராவோ
அக்னி பங்க் சுர்பீ இந்தி ஜிம்மி
கோன் ஏய் ஜோ சப்னோ மெயின் ஆயா மயேக் இந்தி ராகேஷ் பாபட்
2005 ஜோட்டா நந்தினி கண்ணடம் தயான்
நீல்ல என் நிக்கீ சுவீடீ இந்தி உதய சோப்ரா
2006 சம்திங் சந்திங் உனக்கும் எனக்கும் லலிதா தமிழ் ஜெயம் ரவி
2008 நல்வரவு தமிழ் வேனு

நடிகர் ஆனந்த் பாபு பிறந்த நாள் ஆகஸ்ட் 30.


நடிகர் ஆனந்த் பாபு பிறந்த நாள் ஆகஸ்ட் 30.
ஆனந்த் பாபு (பிறப்பு: ஆகஸ்டு 30, 1963 ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நன்கறியப்பட்ட தமிழ் நடிகர் நாகேஷின் மகனாவார். இவரது நன்றாக நடனமாடும் திறனுக்காகவும் அறியப்படுகிறார். இவர் 1983 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர். 2009ஆம் ஆண்டு முதல் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு
ஆனந்த் பாபு 1985 திசம்பர் 8 அன்று சாந்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவரது இளைய மகனான கஜேஷ் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். போதைப் பழக்கத்திற்கு ஆளானதால் 2006 ஆவது ஆண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் மொழி கதாபாத்திரம் குறிப்புகள்
1983 தங்கைக்கோர் கீதம் தமிழ்
1984 கடமை தமிழ்
1984 புயல் கடந்த பூமி தமிழ்
1984 நியாயம் கேட்கிறேன் தமிழ்
1985 பாடும் வானம்பாடி தமிழ் பாபு
1985 வெற்றிக்கனி தமிழ்
1985 உதய கீதம் தமிழ் ஆனந்த்
1985 பார்த்த ஞாபகம் இல்லையோ தமிழ்
1985 விஸ்வநாதன் வேலை வேண்டும் தமிழ்
1985 இளமை தமிழ்
1985 பந்தம் தமிழ்
1985 அர்த்தமுள்ள ஆசைகள் தமிழ்
1986 மௌனம் கலைகிறது தமிழ்
1986 பலேமித்ருடு தெலுங்கு
1988 கடற்கரை தாகம் தமிழ்
1989 தாயா தாரமா தமிழ்
1990 புரியாத புதிர் தமிழ் பாபு
1990 புது வசந்தம் தமிழ் மைக்கேல்
1990 எங்கள் சுவாமி அய்யப்பன் தமிழ் சிறப்புத் தோற்றம்
1990 எதிர் காற்று தமிழ் ஜனா (ஜனார்த்தன்)
1990 புதுப்புது ராகங்கள் தமிழ்
1991 சிகரம் தமிழ் கிருஷ்ணா
1991 சேரன் பாண்டியன் தமிழ் சந்திரன்
1991 இதய ஊஞ்சல் தமிழ்
1991 எம்ஜிஆர் நகரில் தமிழ்
1991 புத்தம் புது பயணம் தமிழ் பாபு
1991 அன்பு சங்கிலி தமிழ்
1991 ஈஸ்வரி தமிழ்
1991 ஒன்னும் தெரியாத பாப்பா தமிழ்
1991 தாயம்மா தமிழ்
1991 மாமஸ்ரீ தெலுங்கு
1991 இல்லு இல்லளு பிள்ளலு தெலுங்கு
1992 வானமே எல்லை தமிழ்
1992 ரெண்டு பொண்டாட்டி காவல்காரன் தமிழ் கிருஷ்ணன், ஆனந்த்
1992 காவலுக்கு கண்ணில்லை தமிழ்
1992 செவிலியர் மிகயல் மலையாளம் பிரெத்தி
1993 நான் பேச நினைப்பதெல்லாம் தமிழ் விஸ்வநாத்
1993 சூரியன் சந்திரன் தமிழ்
1993 என் இதய ராணி தமிழ்
1993 மா வறிகி பெல்லி தெலுங்கு
1994 மணிரத்னம் தமிழ்
1994 பட்டுக்கோட்டை பெரியப்பா தமிழ்
1994 வாட்ச்மேன் வடிவேலு தமிழ்
1994 கிஷ்கிந்தா கந்தா தெலுங்கு
1995 பதிலி தெலுங்கு
1996 லத்தி சார்ஜ் தெலுங்கு
1996 மெருப்பு தெலுங்கு
1996 வீட்டுக்குள்ளே
1997 ரோஜா மலரே தமிழ் அன்பு
1998 சந்தோசம் தமிழ் கார்த்திக்
1998 சேரன் சோழன் பாண்டியன் தமிழ் சோழன்
1999 அன்புள்ள காதலுக்கு தமிழ்
2009 ஆதவன் தமிழ் தரணி
2009 மதுரை சம்பவம் தமிழ்
2009 ஒளியும் ஒலியும் தமிழ்
2012 ஏதோ செய்தாய் என்னை தமிழ் வீரு
2014 1 நினொக்கதினே தெலுங்கு சந்திரசேகர்.
//
இதுதான் நான் 10: ஆடி அசத்துவார்... ஆனந்த் பாபு சார்!
‘பாடும் வானம்பாடி’னு ஒரு படம். அதில் ஆனந்த் பாபு சார்தான் ஹீரோ. தமிழ்ல மிகப் பெரிய ஹிட் ஆச்சு. படத்துக்கு அப்பாதான் டான்ஸ் மாஸ்டர். அந்த படத்துல ‘மூன் வாக்’, ‘கேமல் வாக்’னு ஆனந்த் பாபு சார் ஆடி அசத்துவார். அவரோட டான்ஸைப் பார்த்து ‘அட, என்னப்பா! இவருக்கு மட்டும் கால்கள் அங்கும் இங்கும் இப்படி ஜம்ப் அடிக்குதே’னு தோணுச்சு. அந்தப் படம் 100 நாட்கள் தாண்டி வெற்றிவிழா நடத்தினாங்க. அந்த ஃபங்ஷனுக்கு அம்மா, அப்பாவோட நானும் போயிருந்தேன். அது மாதிரி வெற்றிவிழா நிகழ்ச்சிகளுக்கு அப்பா அழைத்துப் போவார்.

நிகழ்ச்சியில பிரபலங்கள் பல பேர் வந்து கலந்துக்கிட்டாங்க. மேடையில் படத்தோட வெற்றியைப் பற்றி ஒவ்வொருத்தரும் பெருமையாப் பேசினாங்க. குறிப்பா, ஆனந்த் பாபு சாரோட டான்ஸைப் பற்றிதான் பேசி னாங்க. விழாவுக்கு வந்த சீஃப் கெஸ்ட் ஒருவர் ‘‘ஆனந்த் பாபு என்ன மாதிரி டான்ஸ் ஆடுறார்! இந்த மாதிரி யார் ஆடியும் நான் பார்த்தது இல்லை. இனியும் இப்படி ஒருத்தர் பிறக்கப் போறதுமில்லை!’’னு பாராட்டினார். அந்த ஹால் முழுக்க ஒரே கைதட்டல்.

அப்போ எல்லாம் நான் பரதநாட்டியம் டிரெயினிங்கில் இருக் கேன். என்னடா இது, ‘இனிமேல்தான் ஆட்டத்தை ஆரம்பிக்கணும்’னு கனவு கண்டுட்டிருக்கோம். இப்போ போய் இவர் இப்படி சொல்லிட்டாரே. நிஜமாவே ஆட முடியாதா?!’னு மனசுக்குள்ள ஒரு கேள்வி சுத்துச்சு. மைக்கேல் ஜாக்‌சனோட ஆட்டத்தை பார்த்துப் பிரமிச்சு நின்ன அந்த நேரத்துல, ஆனந்த் பாபு சாரும் வந்து இப்படி ஆடி அசத்துறாரேன்னு இருந்துச்சு. ஆனாலும், அந்த விழாவுக்கு வந்து பாராட்டிப் பேசின அந்த சீஃப் கெஸ் ட்டோட வார்த்தை அந்த வயசுல என் மனசுக்குள்ள ஆழமாப் பதிஞ்சிடுச்சு.

‘பாடும் வானம்பாடி’ படத்து வெற்றிவிழாவுல ஆனந்த் பாபு சாரோட ஆட்டத்துக்கு கிடைச்சப் பாராட்டை கேட்டதுக்குப் பிறகுதான் நாமலும் பெஸ்ட்டா ஆடிக் காட்டணும்னு தோணுச்சு. அதன் பிறகு டான்ஸ் ஆடுறப்போ ஒரு ஸ்டெப் சரியா வரலைன்னா அதை திரும்பத் திரும்ப ஆடிப் பார்க்க ஆரம்பிச்சேன். அன்னைக்கு தொடங்கின அந்தப் பழக்கத்தை இதோ இப்போ வரைக்கும் நான் ஃபாலோ பண்றேன்.

‘சார் உங்க அளவுக்கு யாரும் ஆட முடியாது’னு இப்போ எங்கிட்ட வந்து பலரும் சொல்லும்போது மனசுக்குள்ள லைட்டா சிரிச்சிப்பேன். நான் டான்ஸுக்குள்ள வரும்போதெல்லாம் ஏரியாவுக்கு ஒருத்தர்னு இருந்தாங்க. இப்போ வீட்டுக்கு ஒருத்தர் ஆடுறாங்க. அதுவும் பெஸ்ட்டா ஆடுறாங்க. நிச்சயமா அவர்களில் பல பேர் என்னைவிட பிரமாதமா ஆடுறாங்க. இது முடியாது? அது முடியாதுனு எதுவுமே இங்கே இல்லை. ஒரு பெஸ்ட் வந்தா, அதை அடித்து நொறுக்க இன்னும் 100 பெஸ்ட் வரும்.

ஆனந்த் பாபு சார் நடிச்சப் படங்களைப் போல அவரோட அப்பா நாகேஷ் சார் நடிச்ச பல படங்களுக்கும் என் அப்பா மாஸ்டரா இருந்திருக்கார் கே.பாலசந்தர் சாரோட முதல் படம் ‘நீர்க்குமிழி’ அப்புறம் ‘சர்வர் சுந்தரம்’ இப்படி பல படங்களுக்கு அப்பாதான் மாஸ்டர். இப்படி அப்பா, மகன் இருவரது படங்களுக்கும் என்னோட அப்பா மாஸ்டரா இருந்ததால அவங்களோட டான்ஸை அதிகம் பார்க்குற வாய்ப்பும் எனக்கு அமைஞ்சது. நாகேஷ் சார் காமெடி எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அதுவும் தலைவர் எம்.ஜி.ஆர் கூட அவர் சேர்ந்து நடிக்குறப்ப அடிச்ச காமெடி இருக்கே… அதெல்லாம் அப்படி ரசிக்கலாம். நாகேஷ் சார் ஒல்லியான அந்த உடம்பால ‘கேமல் வாக்’குன்னும், குதிகால்களை உயர்த்தி ஆடுறதுன்னும் அம்சமா ஆட்டம் போடுவார். அதெல்லாம் மணிக்கணக்கா பார்த்துக்கிட்டே இருக்கலாம். நாகேஷ் சார் 3ஜி வெர்ஷன்னா... ஆனந்த் பாபு சார் 4ஜி வெர்ஷன். நாகேஷ் சார் ஆட்டத்துல காமெடி கலந்திருக்கும். ஆனந்த் பாபு சார் ஆட்டத்துல ஒரு சீரியஸ் தெறிக்கும்.

இப்படி ஆட்டம் போட்டு என்னை பிரமிக்க வைத்த ஆனந்த் பாபு சார், சில வருஷங்களுக்கு முன்னாடி ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ டான்ஸ் ஷோ மேடையில வந்து ஆடினார். இருபது, இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆடி அசத்திய அந்த ஸ்டெப்ஸையெல்லாம் மீண்டும் கண்முன்னே கொண்டுவந்தார். என் னோட அந்தச் சின்ன வயசுல ஆனந்த் பாபு சாரோட டான்ஸை எப்படி பார்த்தேனோ... அப்படியே நினைச்சு அன்னைக்கும் பார்த்துக்கிட்டிருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்தது எனக்கு பெருமையாவும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாவும் இருந்துச்சு.

இப்போ ஆறு மாசத்துக்கு முன்னாடி கூட ‘பாடும் வானம்பாடி’ படத்துல கைகளை தரையில் வைத்து முட்டியை மேல் பக்கம் தூக்கி டிஃபிக்கல்டா ஆனந்த் பாபு சார் ஆடுற அந்த ஸ்டெப்ல ஒரு பிட் போட்டு ஆடிப் பார்த்தேன். அவ ரோட டான்ஸ்ன்னா எனக்கு அப்படி பிடிக்கும். இந்த அளவுக்கு அவரோட டான்ஸை நேசிச்ச எனக்கு, அப்பாகிட்ட வந்து அவர் டான்ஸ் கத்துக்கும்போது அதை பார்க்குற வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அது ஏன்?.

நன்றி-விக்கிபீடியா ,தி இந்து தமிழ் .

நடிகர் எம். கே. ராதா நினைவு தினம் ஆகஸ்டு 29 ,


நடிகர் எம். கே. ராதா நினைவு தினம் ஆகஸ்டு 29 ,
எம். கே. ராதா (20 நவம்பர் 1910 - 29 ஆகஸ்டு 1985), இந்தியத் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். ஜெமினி நிறுவனத்தில் நிரந்தர நடிகராகப் பணியாற்றியவர். இவர், அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து முத்திரை பதித்தார். மொத்தம் 50 திரைப்படங்களில் நடித்தார்.

இளமைக் காலம்
எம். கே. ராதா சென்னை, மைலாப்பூரில் எம். கந்தசாமி முதலியார் என்பவருக்குப் பிறந்தார்.

நாடகம்
தன் தந்தை கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் சேர்ந்து, எம். ஜி. ஆருடன் எம்.கே.ராதா நடித்து வந்தார்.

திரைப்படம்
1936இல் எஸ். எஸ். வாசன் எழுதிய சதிலீலாவதி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படத்தில் எம். ஜி. ஆர். ஒரு சிறு வேடத்தில் நடித்தார். பின்னர் மாயா மச்சேந்திரா, துளசிதாஸ் ஆகிய படங்களில் ராதா நடித்தார். அதை அடுத்து "இலங்கைக்குயில்" தவமணிதேவியுடன் வனமோகினி திரைப்படத்தில் நடித்தார்.

ஜெமினியின் தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி முதலான படங்களில் ராதா நடித்தார்.

1948இல் ஜெமினியின் சந்திரலேகா படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் இந்தியில் தயாரிக்கப்பட்ட சந்திரலேகாவிலும் கதாநாயகனாக நடித்தார்.

ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எம். கே. ராதா கதாநாயகனாக, பானுமதியுடன் இணைந்து இரட்டை வேடத்தில் நடித்தார்.

பின்னர் ஜெமினியின் சம்சாரம் படத்தில் புஷ்பவல்லியுடன் இணைந்து நடித்தார். ஜெமினியின் அவ்வையார் திரைப்படத்தில் பாரி மன்னனாக நடித்தார். பின்னர் நல்லகாலம், போர்ட்டர் கந்தன், கற்புக்கரசி, வணங்காமுடி, பாசவலை, கண்ணின் மணிகள் முதலிய படங்களில் நடித்தார்.

பிற திரைப்படங்கள்
சந்திர மோகனா அல்லது சமுகத்தொண்டு 1936
அனாதைப் பெண் 1938
சதி முரளி 1940
தாசி அபரஞ்சி 1944
ஞானசௌந்தரி (1948 திரைப்படம்) 1948
சௌதாமணி 1951
மூன்று பிள்ளைகள் 1952
நல்லகாலம் 1954
கிரகலெட்சுமி 1955
புதையல் 1957
நீலமலைத்திருடன் 1957
உத்தம புத்திரன் 1958
விருதுகளும் சிறப்புகளும்
1973இல் தமிழக அரசின் கலைமாமணி பட்டம்
2004இல் இந்திய அஞ்சல் துறை எம். கே. ராதா நினைவாக அவரது உருவப் படத்துடன் சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டது.
எம். கே. ராதாவின் நினைவைப் போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு, சென்னை, தேனாம்பேட்டை அருகில் உள்ள பகுதிக்கு எம். கே. ராதா நகர் என்று பெயரிட்டது.
குடும்பம் & மறைவு
எம்.கே.ராதாவுக்கு ஞானாம்பாள், ரத்தினம் என்ற 2 மனைவிகள். 6 மகன்கள், 2 மகள்கள். 29 ஆகஸ்டு 1985 அன்று மாரடைப்பால் காலமானார்.
//

சர்ச்சைக்கு நடுவே அறிமுகமான சாகச நடிகர்: எம்.கே. ராதா.

வரிசையாக மூன்று படங்கள் ஓடிவிட்டால் போதும். ஐந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கதாநாயகன் 5 கோடி சம்பளம் கேட்கும் காலம் இது. 1950களில் நிலைமையே வேறு. தியாஜராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என்று பெரிய நடிகர்கள் கோலோச்சிய கால கட்டத்தில், இவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் பெற்ற முன்னணி நாயகன். அதுவும் ஒரு ஆண்டோ இரு ஆண்டோ அல்ல; 1941-ல் தொடங்கி 1954 வரை சுமார் 13 ஆண்டுகள்.

அவர் ஜெமினி நிறுவனத்தின் கம்பெனி நடிகராக இருந்து பல புகழ்பெற்ற படங்களில் நடித்த ‘பத்மஸ்ரீ’ எம்.கே. ராதா. தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்டப் படமாகிய ‘சந்திரலேகா’விலும், ரசிகர்களை வாய்பிளக்க வைத்த இரட்டை வேடப் படமாகிய ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திலும் நடித்தார். திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சினிமாவுக்குள் வந்து பெயர் பெற்றவர்களே அதிகம். ஆனால் தன் அழகிய தோற்றத்துக்காக ‘சுந்தர புருஷன்’ என்று அழைக்கப்பட்ட எம்.கே. ராதா சென்னையில் பிறந்து வளர்ந்து சினிமாவில் நுழைந்து தலைநிமிர்ந்து நின்றவர். அவர் பெயரின் முன்னெழுத்தில் உள்ள எம், மெட்ராஸைக் குறிக்கிறது.

கலைக் குடும்பம்

புகழ்பெற்ற நாடகாசிரியராக இருந்தவர் எம். கந்தசாமி முதலியார். அவரது மகன்தான் எம்.கே. ராதா. 1909-ம் ஆண்டு பிறந்த ராதாவுக்கு அப்பாவின் நாடகக் கம்பெனி பெரும் தாக்கத்தை உருவாக்கியது. வீட்டில் நடக்கும் நாடக ஒத்திகைகள் அவருக்குள் மனப்பாடம் ஆகின. இன்றைய வடசென்னையின் ஒரு பகுதியாகிவிட்ட தங்கசாலையில் இருந்த ‘ஹிந்து பயலாஜிக்கல் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்தார். ஆனால் படிப்பில் ஆர்வம் செல்லாமல் நாடகத்தில் மேலோங்கிய மகனின் ஈடுபாட்டைக் கண்டு 9 வயதில் லோகிதாசன் வேடம் கொடுத்தார் அப்பா. வளர வளர வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் ராதா. கந்தசாமி முதலியாரின் நாடகக் கம்பெனியில் பிரகாசித்த பல நடிகர்கள் பின்னாளில் சினிமா உலகில் நுழைந்து புகழ்பெற்றார்கள். எனவே எம்.கே. ராதாவும் திரையில் நுழைய விரும்பியதில் ஆச்சரியமில்லை.

பரபரப்பான அறிமுகம்

மகன் சினிமாவில் நடிக்க விரும்புவதை அறிந்ததும் சினிமாவுக்கு ஏற்ற கதையைத் தேடினார் கந்தசாமி முதலியார். அப்போது கே.பி. கேசவன் நடித்து வந்த கிருஷ்ணசாமிப் பாவலரின் ‘பதி பக்தி’ என்ற நாடகம் புகழ்பெற்று விளங்கியது. அந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்றுப் படவேலைகளைத் தொடங்கினார். ஆனால் திடீரென்று உரிமையை ரத்து செய்தார் கே.பி. கேசவன். தன் நடிப்பில் அந்த நாடகத்தை சினிமாவாகத் தயாரிக்க கேசவன் விரும்பியதுதான் காரணம்.

கந்தசாமி அசரவில்லை. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான எஸ்.எஸ்.வாசன், தனது ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிவந்த ‘சதிலீலாவதி’ என்ற தொடர்கதை கவர்ந்தது. கந்தசாமி அதைப் படமாக்க விரும்பினார். கோயம்புத்தூர் மருதாசமல் செட்டியார் தயாரிக்க முன்வந்தார். கந்தசாமி வசனம் எழுதினார். பின்னாளில் ஜெமினி பிக்ஸர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி சாதனைகள் படைத்த வாசனுக்கு இதுவே முதல் படம். எம்.கே.ராதா முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்க, 19 வயது எம்.ஜி.ஆர். ‘ரங்கையா நாயுடு’ என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அறிமுகமானார். என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்கள். இயக்குநர் எல்லீஸ். ஆர். டங்கனுக்கும் அதிகாரபூர்வமான முதல் படமும் இதுவே.

படம் ரிலீஸுக்குத் தயாரானபோது கேசவன் தங்களது ‘பதி பக்தி’ கதையை திருடி ‘சதி லீலாவதி’ படத்தை எடுத்துவிட்டதாக வழக்குத் தொடுத்து படத்தின் வெளியீட்டைத் தடுத்தார். ஆனால் கதாசிரியர் வாசன் நீதிமன்றத்தில் “சதி லீலாவதி படத்தின் கதை ஹென்றி வுட் என்ற ஆங்கிலப் பெண் எழுத்தாளர் எழுதிய ‘டேன்ஸ்பரி அவுஸ்’ என்ற (Henry Wood's Danesbury House) நாவலின் தாக்கத்தில் எழுதப்பட்டது” என்று தெளிவுபடுத்தினார். பிரச்சினை தீர்ந்தது. தமிழ் சினிமாவில் கதையால் ஏற்பட்ட முதல் சர்ச்சையும் இதுவே.

இத்தனை பரபரப்புக்கு நடுவே 28.3.1936 ல் வெளியான ‘சதி லீலாவதி வெற்றி பெற்றது. படத்தின் நாயகி எம்.எஸ். ஞானாம்பாளையே காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் எம்.கே. ராதா.

பிரம்மாண்ட நாயகன்

சதி லீலாவதியின் வெற்றிக்குப் பிறகு அடுத்து வந்த இரு வருடங்களில் ‘மாயா மச்சீந்திரா’, ‘சந்திரமோகனா’ ‘துளசிதாஸ்’, ’ சதிமுரளி’ ஆகிய படங்களில் நடித்தார் . எல்லாம் சுமாரான வெற்றியைப் பெற்றன. அப்போது ‘இலங்கைக் குயில்’ என்று அழைக்கப்பட்ட சிங்களத் தாரகை தவமணிதேவியுடன் இணைந்து ‘ வனமோகினி’ என்ற படத்தில் நடித்தார். ஹாலிவுட்டில் அப்போது பிரபலமாக இருந்த டார்ஜான் வகைப் படமாக முழுக்க முழுக்கக் காட்டிலேயே படமாக்கப்பட்ட அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்தச் சமயத்தில் ஜெமினி ஸ்டூடியோவைத் தொடங்கிய வாசன் தனது கம்பெனியின் நிரந்தர நடிகராக எம்.கே. ராதாவை ஒப்பந்தம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்டத் தயாரிப்பாக ஜெமினி தயாரித்த ‘சந்திரலேகா’ படத்தின் நாயகனாக ராதா நடித்தார். ‘சந்திரலேகா’ வரலாறு காணாத வெற்றிபெற்றது. ராதாவுக்குப் பெரும்புகழையும் கொண்டுவந்து சேர்த்தது. ராதாவும், வில்லனாக நடித்த ரஞ்சனும் மோதும் கத்திச் சண்டைக் காட்சியைப் பார்த்து மிரண்ட ரசிகர்கள் திரும்பத் திரும்ப திரையரங்கு நோக்கிக் குவிந்தனர். தமிழ் சினிமாவின் முதல் சாகச நாயகன் (ஆக்‌ஷன் ஹீரோ) என்றும் எம்.கே. ராதாவைப் பேச வைத்தது இந்தப் படம்.

‘சந்திரலேகா’வை இந்தியிலும் தயாரித்த வாசன் அதிலும் ராதா - டி.ஆர். ராஜகுமாரி ஜோடியை நடிக்கவைத்து பாலிவுட்டிலும் பெரிய வெற்றியை ஈட்டினார். அதன் பின்னர் மீண்டும் ஒரு பிரமாண்டமாக ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தைக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்தார் வாசன். ராதா, விஜயன் - விக்ரமன் என்ற இரட்டையர்கள் வேடம் ஏற்றார். பானுமதி கதாநாயகியாக நடித்த இந்தப் படத்தில் ஆர். நாகேந்திர ராவ் என்ற கன்னட நடிகர் வில்லனாக அறிமுகமானார்.

1940-ல் பி.யு. சின்னப்பா நடிப்பில் வெளியான ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் ‘ மேன் இன் தி அயன் மாஸ்க்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேடப் படமாக வெளிவந்தது. ஆனால் ஆங்கிலப் படத்தில் பயன்படுத்தப்பட்ட கேமரா தந்திரங்களைத் தமிழில் துல்லியமாகக் கையாள முடியவில்லை. ஆனால் ‘அபூர்வ சகோதரர்கள்’ அந்தக் குறையைப் போக்கியது. ரசிகர்கள் இரட்டை வேடக் காட்சிகளை கண்டு வியந்தனர். விஜயனாகவும் விக்ரமனாகவும் வேறுபாடு காட்டிய ராதாவின் நடிப்பு உயர் தரமாக இருந்தது.

சமூக நடிப்பிலும் சாதனை

சந்திரலேகாவுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் படத்துக்குப் பிறகு பல சமூகக் கதைகளிலும் நடித்து சாதனை படைத்தார் ராதா. கம்பீரமான ராஜா வேஷங்களில் அசத்திய இவர் ‘சம்சாரம்’ என்ற படத்தில் சாமானிய மனிதனாக, நாடக பாணி நடிப்பின் தாக்கம் இல்லாமால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார்.

ராஜேந்திர ராவ் இயக்கிய ‘அன்பே தெய்வம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்த ராதாவுக்கு இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவின் தயாரான சந்தியா ஜோடியாக நடித்தார். 50 படங்களில் நடித்திருக்கும் இவர் மீது அளப்பரிய பாசமும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை விழா ஒன்றில் எம்.கே. ராதாவின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றார். மத்திய அஞ்சல் துறை ராதாவின் உருவப் படத்தை அஞ்சல் உறையில் வெளியிட்டு கவுரவம் செய்தது.


அபூர்வ தகவல்கள்-எம்.கே.ராதா
 எம்.கே.ராதா நாயகனாக நடித்த முதல் படம் சதிலீலாவதி (1936), இதே படம்தான் எம்.ஜி.ஆருக்கும் முதல்படம். இப்படத்தில் எம்.ஜி.ஆர். துணை வேடத்தில் அறிமுகமானார். அதேபோல் நடிகர் டி.எஸ். பாலையாவுக்கும் இதுதான் முதல்படம். அத்துடன், இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனுக்கும் இது முதல் பட வாய்ப்பாக அமைந்தது.
                                  
 பி.ஒய்.அல்டேகர் இயக்கத்தில் கே.பி.கேசவன் நடித்த பதிபக்தி (1936) என்ற படமும், சதிலீலாவதி படமும் ஒரே கதையைக் கொண்ட படங்களாக இருந்தன. இது சம்மந்தமாக இப்படத் தயாரிப்பாளர்களுக்குள் கோர்ட்டில் வியாஜ்ஜியம் (வழக்கு) நடந்தது. சினிமா கதை சம்மந்தமாக நடைபெற்ற முதல் வழக்கு இது.
                                 
 எம்.கே.ராதாவுடன் சதிலீலாவதி, மாயா மச்சீந்திரா ஆகிய இரு படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்.
                                 
 சிவாஜி நடித்த அம்பிகாபதி படத்தில் சிவாஜியின் தந்தை கம்பராக எம்.கே.ராதா நடித்தார். சிவாஜி இரு வேடங்களில் நடித்து பெரு வெற்றி பெற்ற "உத்தம புத்திரன்' படத்திலும் சிவாஜியின் தந்தையாக எம்.கே.ராதா நடித்திருந்தார். இவை தவிர, சிவாஜி நடித்த வணங்காமுடி, புதையல் ஆகிய படங்களிலும் எம்.கே.ராதா சிவாஜியுடன் நடித்துள்ளார்.
                                 
 மற்றும் பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், என்.எஸ்.கிருஷ்ணன், ஏ. நாகேஸ்வரராவ், ரஞ்சன், ஜெமினி கணேசன், டி.ஆர்.ராஜகுமாரி, பி.பானுமதி, அஞ்சலிதேவி ஆகிய பிரபல நடிகர் நடிகைகளுடன் நடித்துள்ளார் எம்.கே.ராதா.
                                 
 அரசு ஊழியர்களே மாத ஊதியமாக ரூ.100 பெற்று வந்த காலத்தில், ராதாவுக்கு மாத ஊதியமாக ரூ.300 வழங்கிய ஜெமினி ஸ்தாபனம் அவரைத் தங்கள் நிறுவனத்தின் நிரந்தர நடிகராக வைத்திருந்தது.
                                
 எம்.கே. ராதா நடித்த 30 படங்களில், தாஸி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி, ஞானசெüந்தரி, சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், மூன்று பிள்ளைகள், ஒüவையார் ஆகிய 8 படங்கள் ஜெமினி நிறுவனம் தயாரித்த படங்களாகும். சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், ஒüவையார் ஆகிய 4 படங்களும் ஜெமினி நிறுவனத்தின் வெற்றிப் படங்களாகி வசூலைக் குவித்தன.
                                
 1948 ஆம் ஆண்டிலேயே 30 லட்சம் ரூபாய்கள் செலவில், 1500 நடிகர்களை நடிக்க வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படம் சந்திரலேகா. டிக்கட் கெüண்டரில் சர்க்கஸ் செய்தாவது இப்படத்தின் சர்க்கஸ் காட்சியைக் கண்டு களித்தார்கள் ரசிகர்கள். ட்ரம் டான்ஸ் காட்சியில் ட்ரம்மிலிருந்து வந்த வீரர்கள், விரோதிகளை மட்டுமா தாக்கினார்கள், ரசிகர்களையும் அல்லவா தாக்கிவிட்டுச் சென்றார்கள். ராதாவும் ரஞ்சனும் செய்யும் கத்தி சண்டையானது, பிரிஸினர் ஆஃப் ஜெண்டா என்ற ஆங்கிலப் படத்தில் ரெனால்ட் கோல்மென் செய்யும் சண்டைக்கு நிகராக இருந்ததாக அப்போது விமர்சிக்கப்பட்டது.
                                  
 நல்ல காலம் என்ற படம் வெளியானபோது, ராதாவின் பெயருடன் "அகில உலகப் புகழ்' என்ற அடை மொழி இணைந்து வந்துள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சந்திரலேகா படம் கண்ட வெற்றியின் விளைவாக வந்த பரிசுதான் இந்த அடைமொழி.
                                 
 எம்.கே. ராதா நடித்த 16 படங்கள் சமூகக் கதையமைப்பினைக் கொண்ட படங்களாகவும், 14 படங்கள் சரித்திர கதையமைப்பினைக் கொண்ட படங்களாகவும் அமைந்துள்ளன.
                               
 23 படங்களில் நாயகனாகவும், 7 படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார் எம்.கே.ராதா. இவர் இரு வேடங்களில் நடித்தது அபூர்வ சகோதரர்கள் படம் மட்டுமே.
                              
 நாடகமேடைத் தாக்கம் இன்றி இயல்பாக நடிக்கக் கூடிய இவரின் அழகு, சினிமாவின் சுந்தர புருஷன் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது. திரைத் துறையில் இவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். இவருடன் நடிக்கும் மூத்த கலைஞர்கள் ஸ்டுடியோவிற்குள் வரும் பொழுது, இவர் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் சொல்வார்.
                               
 எம்.கே.ராதாவின் தந்தையார் கந்தசாமி முதலியார் நடத்திய நாடகக் கம்பெனியில் எம்.ஜி.ஆர். நடித்து வந்தார். குருவின் மைந்தர் ராதாவை எம்.ஜி.ஆர்., "அண்ணன்' என்று மரியாதையாகவே அழைப்பார். அந்த மரியாதையின் வெளிப்பாடாக, விழா ஒன்றில் ராதாவின் தாள்தொட்டு வணங்கினார் எம்.ஜி.ஆர்.
                              
 சதி லீலாவதி படத்தில் நாயகியாக நடித்த எம்.ஆர்.ஞானாம்பாளையே மணந்து கொண்டார் ராதா. முதல் மனைவி ஞானாம்பாளுக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி ரத்தினத்திற்கு 6 புதல்வர்களும் 2 புதல்விகளும் உள்ளனர். மனோகரன், ராஜா, கமலாசரன், விஜயன் ஆகிய நான்கு புதல்வர்கள் பொறியாளர்கள். ரவீந்திரன் என்ற புதல்வர் ஒளிப்பதிவாளராகவும், சுகுமார் என்ற புதல்வர் மருத்துவராகவும் உள்ளனர். கமலாம்பாள் என்ற ராதாவின் புதல்வி, நடிகை எம்.ஆர்.சந்தானலக்ஷ்மியின் மருமகளாவார். இந்திரா என்ற ராதாவின் புதல்வி, நடிகையும் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் துணைவியுமான ஈ.வி.சரோஜாவின் உறவினராவார்.
                                
 மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய கே.ஆர்.சுந்தரேசன் என்பவர் தயாரித்து இயக்கிய ரேவதி (அல்லது) தியாக உள்ளம் (1960) படத்தில் எம்.கே. ராதா, பி.எஸ்.சரோஜா, ஜமுனா ஆகியோர் நடித்தனர். தியாக உள்ளம் என்ற இப்படத்தின் தலைப்பு நான்கு முறை தியாகத்திற்கு உள்ளானது. சந்திப்பு என்ற பெயரில் இப்படம் தொடங்கப்பட்டது. தியாக இதயம் என்ற பெயரில் தணிக்கையானது. பின்பு தியாக உள்ளம் என்ற பெயரில் மலேசியாவில் திரையிடப்பட்டது. ரேவதி என்ற பெயரில் மறு தணிக்கைக்குள்ளாகி மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படியெல்லாம் நடந்தும் இப்படம் சென்னையில் திரையிடப்படவில்லை.
                                
 பாரதியாரின் கவிதையை நினைவூட்டும் தலைப்பில் அமைந்த கண்ணம்மா என் காதலி படத்திற்கு வசனம் பாடல்கள் எழுதி இயக்கியவர் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு. உலகப்போர் பின்னணி கதையமைப்பினைக் கொண்ட இப்படத்தில் ராதாவின் ஜோடியாக நடித்தவர், கொத்தமங்கலம் சுப்புவின் மனைவி எம்.எஸ்.சுந்தரிபாய்.
                                
 சதி லீலாவதி, பதி பக்தி படப்போட்டியில் இரு படங்களுமே வெற்றி இலக்கையடைந்தன. ஆனால், சிட்டாடல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஆர்.மகாலிங்கமும் எம்.வி.ராஜம்மாவும் நடித்து 21.05.1948 இல் திரைக்கு வந்த ஞானசெüந்தரி படத்துக்கு போட்டியாக, ஜெமினி தயாரிப்பில் எம்.கே.ராதாவும் வி.என்.சுசிலாவும் நடித்து 18.06.1948 இல் திரைக்கு வந்த ஞானசெüந்தரி படு தோல்வியடைந்தது. இரண்டும் ஒரே கதை. வரலாற்றுக் கதைகளுக்கு வழக்கும் தொடுக்க இயலாது. ராதாவுக்கு வேறொருவரின் கட்டைக் குரல் டப்பிங், கிறிஸ்துவ வரலாற்றுக் கதையில் அம்மதத்திற்கு சம்மந்தமே இல்லாத மாற்று கலாசார வசனம், போன்ற காரணங்களால் படம் தோல்வியடைந்தது. படத்தில் அளவுக்கதிகமாக ஒலித்த பாடல்களினால், இப்படத்தை கானசெüந்தரி என்று விமர்சித்தனர். தோல்வியைத் தாங்காத எஸ்.எஸ்.வாசன், படத்தின் அனைத்து தடயங்களையும் அப்பொழுதே அழித்து விட்டார்.
                               
 தரிசனம் படத்தின் ஏ.வி.எம்.ராஜன் போன்று, குடும்பச் சுமை தாளாமல் குடும்பத்தை விட்டு "சம்சாரம்' பட நாயகன் ஓடிப் போனது, சம்ஸ்காரமாய் விமர்சிக்கப்பட்டாலும், படம் சம்சாரங்களால் விரும்பப்பட்டு, ஜெமினிக்கு வசூலை வாரித் தந்தது. ஜெமினிக்கு வசூலைத் தந்தது போலவே, பிச்சைக்காரர்களுக்கும் வசூலைப் பெருக்க ஒரு வாய்ப்பளித்தது இப்படம். அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே என்ற இப்படப்பாடலை ரயில்களில் பாடியபடி பல ஆண்டுகளுக்கு தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டார்கள் பிச்சைக்காரர்கள்.
                              
 சினிமா உலகில் சுந்தர புருஷனாக இருந்த இவர், போர்ட்டர் கந்தன் படத்தில் சிரமப்படும் கூலி ஆளாக பொலிவற்ற தோற்றத்துடன் நடித்ததை ரசிகர்கள்  ஏற்கவில்லை. படம் தோல்வியில் அமைந்தது.
                              
 ஒüவையார் படத்தில் பாரி வள்ளல், தாஸி அபரஞ்சி படத்தில் விக்கிரமாதித்தன், பக்த துளஸிதாஸ் படத்தில் துளஸிதாஸர், ஞானசெüந்தரி படத்தில் பிலேந்திரன், அம்பிகாபதி படத்தில் கம்பர் போன்ற வேடங்களில் நடித்த ராதா, இவ்வேடங்கட்கு நேர் மாறான வேடங்களான குடிகாரன், திருடன், பொறுப்பில்லாதவன் போன்ற வேடங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையினை நன்கு வெளிப்படுத்தினார்.
                                
 கலைஞர் மு. கருணாநிதி வசனம் எழுதிய புதையல் படத்தில் நடித்துள்ளார் எம்.கே.ராதா., சந்திரலேகா படத்தில் நாடோடிப் பெண்ணாக நடித்துள்ளார் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி., சதிலீலாவதி, மாயா மச்சீந்திரா ஆகிய இரு படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்., ஆக, மூன்று தமிழக முதலமைச்சர்களுடன் கலைத் தொடர்பு கொண்டுள்ளார் எம்.கே.ராதா.


எம்.கே. ராதா நடித்த படங்கள்
 சதிலீலாவதி (1936) சந்திரமோகனா (அல்லது) சமூகத் தொண்டு (1936) பக்த துளஸிதாஸ் (1937) அனாதைப் பெண் (1938) மாயா மச்சீந்திரா (1939) சதி முரளி (1940) வனமோகினி (1941) பிரேமபந்தன் (1941) 9. தாஸி அபரஞ்சி (1944) 10. கண்ணம்மா என் காதலி (1945) ஞானசெüந்தரி (1948) சந்திரலேகா (1948) அபூர்வ சகோதரர்கள் (1949) செüதாமினி (1951) சம்சாரம் (1951) மூன்று பிள்ளைகள் (1952) ஒüவையார் (1953) நல்ல காலம் (1954) போர்ட்டர் கந்தன் (1955) கிருஹலட்சுமி (1955) கண்ணின் மணிகள் (1956) பாசவலை (1956) நீலமலைத் திருடன் (1957) அன்பே தெய்வம் (1957) அம்பிகாபதி (1957) புதையல் (1957) கற்புக்கரசி (1957) வணங்காமுடி (1957) உத்தம புத்திரன் (1958) ரேவதி (அல்லது) தியாக உள்ளம் (1960).

 சென்னை மயிலாப்பூரில் 1910 ஆம் ஆண்டில், நாடக ஆசான் கந்தசாமி முதலியாரின் மைந்தராக பிறந்தார், மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன் என்ற எம்.கே.ராதா. சென்னை தங்கசாலையிலுள்ள இந்து பயாலஜிகல் போர்டு ஹை ஸ்கூலில் படித்தார். 9 வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் துவங்கினார். இவரது தந்தை நாடக ஆசானாக இருந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, மற்றும் பாலமோகன ரஞ்சன சபா, டி.கே.எஸ். நாடக சபா ஆகிய நாடக கம்பெனியில் நடித்தார் ராதா.
 ராதா தமது 75 ஆம் அகவையில் 29.08.1985 இல் மாரடைப்பினால் காலமானார். அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், அவர் துணைவியார் வி.என்.ஜானகியும் மற்றும் அரசியல் கலையுலக பிரமுகர்களும் ராதாவிற்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்கள்.
 1960 இல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்தது. 1971 இல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்தது. இவரை கெüரவிக்கும் விதமாக, சென்னை சங்கரதாஸ் சுவாமிகள் மன்றம் இவரது பெயரில் "எம்.கே.ராதா விருது' வழங்கி கலைஞர்களை கௌரவித்து வருகிறது.

நன்றி -விக்கிபீடியா ,தி இந்து தமிழ்,சினிமா எஸ்பிரஸ் ,