ஞாயிறு, 29 ஜனவரி, 2012

நாகேஷ் நினைவு நாள் ஜனவரி 31,




நாகேஷ் நினைவு நாள் ஜனவரி 31,
நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 - ஜனவரி 31, 2009) த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ர். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.
வாழ்க்கைச் சுருக்கம்.
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்.
தாராபுரத்தில் தனது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.
நடிப்புத் துறையில்
நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.
1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். [[தாமரைக்குளம் (திரைப்படம்)|தாமரைக்குளம்] என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்
திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
நீ‌ர்‌க்கு‌மி‌ழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும், இதுவும் கமலஹாசன் படமாகும்.
நாகேஷ் பற்றி சுவையான சிறு குறிப்புகள்...
நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்.. தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!....
·        பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வீட்டுச் வளர்ந்த தொட்டில்!
·         பெற்றோர் கிருஷ்ணராவ்- ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் –குண்டப்பா!
·         பள்ளி நாடகத்தில் நாகேஷீக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
·        இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
·         முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
·         கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!
·         ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்.... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
·         இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
·         முதல் படம் `தாமரைக்குளம்’ ஷீட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!
·         `அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்!
·         முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
·         எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
·        `திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
·        நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’ ல் வில்லன், மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!
·         `அபூர்வ ராகங்கள்’ ஷீட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ். கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸீக்கு இது ஒரு சாம்பிள்!
·         இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!
·         டைரக்‌ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்!’
·         பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
·         `சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!
·        `நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமல்ஹாசன்!
·         `பஞ்சதந்திரம்’ ஷீட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’
·         `தசாவதாரம்’ கடைசி நாள் ஷீட்டிங்க்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured – டா கமல்!’
·         தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!
·         இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்!
·         30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!

ந‌ன்றி‍- விக்கிபிடியா,ஆன‌ந்த‌விக‌ட‌ன்.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிற‌ந்த‌ நாள் ஜனவரி 19,


சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (ஜனவரி 19, 1933 - மார்ச் 24, 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு.
பெயர் :சி.கோவிந்தராசன்
பிறப்பு:19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988.
பெற்றோர்:சிவசிதம்பரம்,அவையாம்பாள்
ஆரம்ப கல்வி:வாணிவிலாஸ் பாடசாலை,சீர்காழி
இளமைப் பருவத்தில் விரும்பிப்பாடிய பாடல்கள் சில:
தியானமே எனது -தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
வதனமே சந்திர பிம்பமோ-தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
செந்தாமரை முகமே-பி.யூ.சின்னப்பா பாடிய பாடல்
கோடையிலே இளைப்பாறி-எல்.ஜி.கிட்டப்பா பாடிய பாடல்
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா,பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்:இசைமணி,சங்கித வித்வான்
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்:1953 இல் பொன்வயல் என்வற படத்துக்காக சிரிப்புதான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஒளவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார்,திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
பிடித்த ராகங்கள்:லதாங்கி,கல்யாணி,சங்கராபரணம்
சிவசிதம்பரம், அவையாம்பாள் ஆகியோருக்கு சீர்காழியில் பிறந்த கோவிந்தராசன் தனது ஆரம்பக்கல்வியை சீர்காழி வாணிவிலாஸ் பாடசாலையில் பயின்றார்.
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா,பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்:இசைமணி, சங்கீத வித்வான்
திரைப்படப் பாடகர்
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த அவ்வையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
திரைப்படத்துக்காக பாடிய பிரபல பாடல்கள் சில...
பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
அமுதும் தேனும் எதற்கு - படம்:தை பிறந்தால் வழி பிறக்கும்,இசை :கே.வி.மகாதேவன்
மாட்டுக்கார வேலா - படம்:வண்ணக்கிளி,இசை :கே.வி.மகாதேவன்
வில் எங்கே கணை இங்கே - படம்:மாலையிட்ட மங்கை,இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்,இராமமூர்த்தி
வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே - படம்:கோமதியின் காதலன்,இசை :ஜி.இராமநாதன்
கொங்கு நாட்டுச் செங்கரும்பே - படம்:கோமதியின் காதலன்,இசை :ஜி.இராமநாதன்
மலையே என் நிலையே - வணங்காமுடி ,இசை :ஜி.இராமநாதன்
ஜக்கம்மா - வீரபாண்டிய கட்டபொம்மன்,இசை :ஜி.இராமநாதன்
பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில..
பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை
காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை
ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு!)
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கானஅனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.
நிலவோடு வான்முகில்,இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)
வண்டு ஆடாத சோலையில் ,ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
சிரிப்பது சிலபேர் ,யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)
ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்)ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
அழுத்தமான தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களை ஈர்த்த பாடல்கள்...
ஒற்றுமையாய் வாழ்வதாலே (பாகப்பிரிவினை 1959)
எங்கிருந்தோ வந்தான் (படிக்காத மேதை 1960)பாரதியார் பாடல் ,இசை:கே.வி.மகாதேவன்
ஓடம் நதியினிலே (காத்திருந்த கண்கள்)
கோட்டையிலே ஒரு ஆலமரம் (முரடன் முத்து)
நல்ல மனைவி நல்ல பிள்ளை (நம்ம வீட்டு லட்சுமி 1966)
பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா (அக்கா தங்கை 1969)
கண்ணான கண்மணிக்கு அவசரமா(ஆலயமணி 1962)
கண்ணன் வந்தான் (ராமு)
பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்...
கண்ணன் வந்தான் (படம் ராமு)(உடன் பாடியவர் டி.எம்.சௌந்திரராஜன்)
தேவன் வந்தான் (படம் குழந்தைக்காக) (உடன் பாடியவர் டி.எம்.சௌந்திரராஜன் மற்றும் பி.பி.ஸ்ரீனிவாஸ்)
வெள்ளிப் பனிமலையின் (படம் கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர் திருச்சி லோகநாதன்)
இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்)
ஆயிரம் கரங்கள் நீட்டி (படம் கர்ணன்) (உடன் பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ்)
நன்றி :))) விக்கிபிடியா .

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

கே. ஜே. யேசுதாஸ்..பிற‌ந்த‌ நாள் ஜ‌ன‌வ‌ரி 10




கே. ஜே. யேசுதாஸ்.
கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம் , தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.திரையிசைத் தவிர,கருநாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார்.மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.இவரை கான கந்தர்வன் என்று இவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்.
இளமை வாழ்க்கை.
யேசுதாஸ் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும் அலைசுகுட்டிக்கும் மகனாக கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் பிறந்தார். அவரது தந்தை அனைவரும் அறிந்த மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். துவக்கத்தில் இசைப்பயிற்சியை அவரிடமே கற்ற யேசுதாஸ் பின்னர் திருப்புனித்துறையில் இருந்த இசை அகாதெமியில் தமது இசைக் கல்வியைத் தொடர்ந்தார். சற்றுகாலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம் பயின்ற பின்னர் கருநாடக இசைமேதை செம்பை வைத்தியநாத பாகவதரிடம் மேல்நிலைப் பயிற்சி பெற்றார். இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றார்.
திரைவாழ்வு
யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார் . தமிழ் திரைப்படங்களில் எஸ. பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக "நீயும் பொம்மை,நானும் பொம்மை" என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற திரைப்படத்திற்கு பாடினார்.ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக "சோடிசி பாத்" அமைந்தது. இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.
சொந்த வாழ்க்கை
யேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத்,விஜய், விசால் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பாடகராக விளங்குகிறார். இக்குடும்பம் சென்னை மற்றும் திருவனந்தப்புரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.தவிர ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா மற்றும் டெக்சாசில் நிலங்கள் வணிக நோக்கோடு வைத்துள்ளார்.
ந‌ன்றி‍ விக்கிபிடியா

வியாழன், 5 ஜனவரி, 2012

ஏ. ஆர். ரகுமான் பிறந்த நாள் ஜனவரி 06


ஏ. ஆர். ரகுமான் பிறந்த நாள் ஜனவரி 06 
அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே. 2010-ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.
இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.
81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
ரகுமான் ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார்.அதன் பின் குடும்மத்தில் வருமானம் இல்லாதனிலையில் தன் தந்தயின் இசைகருவிகலை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில்கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.
பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:
1993 யோதா (மலையாளம்)
1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்)
2003 Tian di ying xiong (சீன மொழி)
1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு).
திரைப்பட அல்லாத இசையமைப்புகள்
Return of the Thief of Baghdad (2003)
தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
செட் மீ ஃப்ரீ (1991)
வந்தே மாதரம் (1997)
ஜன கன மன (2000)
பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)
Tamilaந்.
இவர் பெற்ற விருதுகள்
2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, (9 முறை தொடர்ந்து பெற்றார்) ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது, ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
சிகரமாக, இந்திய குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டது.
ஏர். ஆர்.ரஹ்மான் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
அன்பா...வெறுப்பா? என வாழ்க்கை கேட்டபோது, அன்பைத் தேர்ந்தெடுத்த ஆஸ்கர் தமிழன். காதலின் கூச்சலையும் கடவுளின் மெளனத்தையும் இசையாக்கிய கலைஞன். எல்லைகளை உடைத்தெறிந்து இசையில் இறைவனைத் தரிசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பர்சனல் நோட்ஸ்...
 *ரஹ்மானுக்கு என்று எந்தச் செல்லப் பெயரும் கிடையாது அம்மா, சகோதரிகள் அனைவரும் வாய் நிறைய ‘ரஹ்மான்’ என்றுதான் அழைப்பார்கள்!
* குடும்பச் சூழல் காரணமாக பத்மா சேஷாத்ரி பள்ளியில் அவர் படித்தது ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே!.
* தனது ஜனவரி 6-ம் தேதி பிறந்த நாளை ரஹ்மான் விமரிசையாகக் கொண்டாடுவது இல்லை. அதிகாலைத் தொழுகை, ஆதரவற்றோர் இல்ல விசிட் என ஆழ்ந்த அமைதியுடன் கழியும் அந்த நாள்!
* பசியாறுவதற்கு எந்த உணவாக இருந்தாலும் போதும் சமயங்களில் ரசம் சாதம் மட்டுமே போதும்!
* தங்க நகைகள் மீது துளியும் ஆர்வம் கிடையாது ரஹ்மானுக்கு. மெலிதான பிளாட்டினம் மோதிரம் மட்டும் சமயங்களில் அணிந்திருப்பார். கையில் கடிகாரமும் கட்டிக் கொள்ள மாட்டார்!
* எம்.ஜி.ஆர், சிவாஜி படப் பாடல்களை அடிக்கடி விரும்பிக் கேட்பார். சமயங்களில் அவரே வாய்விட்டுப் பாடுவதை வீட்டில் உள்ளவர்கள் மட்டும் கேட்க முடியும்!
 *ஒரு படத்தின் இசைக்கோர்ப்புப் பணிகளின்போது, கைகளை விரித்துக்கொண்டு புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது’ என ரஹ்மான் பாடினால், அந்தப் படத்துக்கான அவர் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன என்று அர்த்தம்!
 *குழந்தைகளுக்கு லீவு கிடைத்தால் குடும்பத்துடன் வெளிநாடு போவார். ஆனால், அங்கும் இசைசேர்ப்பு வேலைகள் உள்ளடக்கி இருக்கும்!
* சமீபத்தில் ரஹ்மான் இசையமைத்து இருக்கும் couples Retreat  ஆல்பம் 100 மில்லியன் டாலர்கள் வசூலித்திருக்கிறது. சமீபத்திய ரஹ்மானின் பிரமாண்ட ஹிட்டான் அதில் தமிழ்ப் பாடல்களும் உண்டு!
* குடும்பத்துடன் ஹைதராபாத், நாகூர் தர்ஹாக்களில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் சிறப்புத் தொழுகை மேற்கொள்வார்!
முக்கியமான இசை விழாக்களில் தோன்ற உடைகள் தேர்ந்தெடுப்பதில் அதிகக் கவனம் கொள்வார் ரஹ்மான். அவருக்கு ஆடை தேர்வு செய்பவர்கள் மனைவி சாய்ராவும், மும்பையின் பிரபல டிசைனர் தீபக்கும்!
 *கதீஜா, ரஹிமா என இரண்டு பெண் குழந்தைகள், அமீன் என ஓர் ஆண் குழந்தை. அமீன் சினிமாவில் பாட வருவான் போல!
* ஹஜ் யாத்திரைக்கு இரண்டு முறை தன் தாயார் கரீமா பேகத்தோடு சென்று வந்திருக்கிறார்!
 *தன் தந்தை சேகர் படத்தை வணங்கி விட்டுத்தான் வெளியில் எங்கும் புறப்படுவார். இறைவனுக்கு நிகரான பக்தியைத் தனது தாயிடமும் வெளிப்படுத்துவார் ரஹ்மான்!
 *ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வெளி வந்த முதல் படம் ‘ரோஜா’ என்பது தமிழில்தான். ஆனால், அவர் இசையில் திரையைத் தொட்ட முதல் படம் ‘யோதா’ மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம்!
* பென்குவின் பதிப்பகம் ஏ.ஆர்.ரஹ்மானின் சுயசரிதையை வெளியிட்டு இருந்தது. ஆனால், பல காரணங்களால் அதைத் தன் சரியான் சரிதையாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் ரஹ்மான்!
* இயக்குநர் மணிரத்னம் எந்த நொடி நினைத்தாலும் ரஹ்மானைச் சந்திக்க முடியும். தன்னை அறிமுகப்படுத்தியவர் மீது ரஹ்மானுக்கு அவ்வளவு அபிமானம்!
* மிகவும் குறைவாகப் பேசுவார். ஆனால், மிக நெருங்கிய நண்பர்களிடம் ரொம்பவே குதூகலமாகச் சிரித்துப் பேசுவார். ரஹ்மான் இசையோடு மட்டும் எப்பொதும் தொடர்புகொண்ட தனிமை விரும்பி!
* நெருக்கமான நண்பர்கள் எனப் பெரிய பட்டியல் ஏதும் கிடையாது. பாடகரும் நண்பருமான சாகுல் ஹமீது மறைவில் அதிகம் வருந்தியவர்!
* ரஹ்மான் எல்லா வகை இசையையும் விரும்புவார். ஒரே ஒருவருக்குப் பிடித்திருந்தாலும் அது நல்ல இசைதான் என நம்புபவர். பிற இசையமைப்பாளர்களைக் கண்டால் அவரது இசையில் தன்னைக் கவர்ந்த பாடலின் இசைக்கோர்ப்பைத் தயக்கம் இல்லாமல்  பாராட்டுவார்!
 *தியேட்டர், பொழுதுபோக்கு இடங்கள், பார்ட்டிகள் என எங்கும் ரஹ்மானைப் பார்க்க முடியாது. ஓய்வு நேரங்களைக் கழிக்க விரும்புவது குடும்பத்தினரோடு மட்டும்தான்!
 *தனது சகோதரிகள் ரெஹானா, பாத்திமா, இஸ்ரத் ஆகியோரிடம் எந்த நிலையிலும் பாசத்தைப் பொழியும் சகோதரர் ரஹ்மான்!
* சமுகப் பணிகளில் அதிக ஆர்வம், தான் செய்யும் எந்த உதவியையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்!
* காபி குடிக்கும்போது கோப்பையின் கால்வாசி அளவுக்குச் சர்க்கரை சேர்த்துக் கொள்வார். அவரோடு புதிதாகக் காபி அருந்துபவர்களுக்கு இது அதிசய ஆச்சர்யம்!
* இசைக்கு அடுத்து ரஹ்மானின் விருப்ப ஈர்ப்பு வீடியோ கேம்ஸ், அவருடைய விளையாட்டுத் தோழர்கள் மகள் கதீஜா, ரஹிமா, மகன் அமீன்!


இயக்குனர் கே.பாக்கியராஜ் பிறந்த நாள் ஜனவரி 07 
கே.பாக்கியராஜ் (1953ஆம் ஆண்டு பிறந்தவர்), தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகத் திரைப்படக்கலை பயின்ற இவரது அந்த ஏழு நாட்கள் திரைப்படம் தமிழில் எளிய, ஆயினும், பொருள் வாய்ந்த அழுத்தமான திரைக்கதைக்கு ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுகிற திரைப்படங்களில் ஒன்று.
திரையுலக வாழ்க்கை.
1970ஆம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியில், குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறிக் கொண்டிருந்த இயக்குனர் பாரதிராஜாவின் பட்டறையில் தமது திரை வாழ்க்கையை பாக்கியராஜ் துவங்கினார். பாரதிராஜாவின் முதல் படமான பதினாறு வயதினிலே படத்தில் தயாரிப்பு தொடர்பான சிறு சிறு வேலைகளைக் கவனித்து வந்த அவர், பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதி ராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் இரண்டு காட்சிகளில் தோன்றும், ஆனால் நினைவில் நிற்பதான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசன உதவியும் அவர் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்கியராஜின் பெயர் முதன் முதலாகத் திரையில் மிளிர்ந்த படம் இது.
தமது அடுத்த படமான புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் பாரதிராஜா பாக்கியராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார். ரத்தி அக்னிஹோத்ரி (பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் முன்னணிக் கதாநாயகியாக உருவாகி, கமலஹாசனுடன் ஏக் துஜே கேலியே திரைப்படத்தில் இணைந்து நடித்தார்) அவரது இணையாக நடித்த இப்படம் வெற்றிக் கொடி நாட்டவே, இதன் பிறகு பாக்கியராஜிற்கு திரையுலகில் ஏறுமுகம்தான்.
ஒரு இயக்குனராக தமது முதல் படமாக பாக்கியராஜ் உருவாக்கியது சுவர் இல்லாத சித்திரங்கள். (இடைக்காலத்தில் அவர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமான கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் வில்லன் வேடம் ஏற்று தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார்). இதில், சுதாகர் கதாநாயகனாகவும் சுமதி நாயகியாகவும் நடிக்க, ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தை பாக்கியராஜ் ஏற்றிருந்தார். நகைச்சுவையும், சோகமும் சரிபாதியாக அமைந்திருந்த இப்படம் பெருவெற்றி பெறவில்லை எனினும், பாக்கியராஜிற்கு புகழைப் பெற்றுத் தந்தது. அடுத்து, ஒரு கை ஓசை திரைப்படம் துவங்கி பாக்கியராஜின் முத்திரை பதியலானது.
பொதுவாக அப்பாவியான இளைஞன்; ஆயினும், சிக்கல்கள் நேர்கையில் அதைத் தனது தனி வழி கொண்டு சமாளிக்கும் திறமையும் கொண்டவன் என்னும் கருத்துரு ஒன்றை பாக்கியராஜ் தமக்காக இத்திரைப்படத்திலிருந்து அமைத்துக் கொண்டார். அஸ்வினி இணைந்து நடித்த இப்படத்தில் அவர் வாய் பேச் இயலாத ஊமைக் கதாநாயகனாக மேற்கொண்ட பாத்திரம் இரசிகர்களின் மனம் கவர்ந்தது. இப்படத்தின் முடிவு கவிதையாக அமைந்ததாக குமுதம் பத்திரிகை பாராட்டியிருந்தது.
இதை அடுத்து ஒரு மர்மங்கள் மற்றும் அதிரடி கொண்ட அதேசமயம் தனது முத்திரையுடனும் கூடிய ஒரு படமாக விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தைப் பாக்கியராஜ் இயக்கி நடித்தார். ஆயினும், அவர் முன்னரே உருவாக்கி வைத்திருந்த அப்பாவி இளைஞன் என்னும் பிம்பத்துடன் பொருந்தாமையால், இது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதை அடுத்து வெளியான இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள் ஆகியவை பாக்கியராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு, மாபெரும் வெற்றிப் படங்களாயின. பாக்கியராஜின் முத்திரை முழுமையாகப் பதிந்து, மாபெரும் வெற்றி ஈட்டிய திரைப்படம் 1982ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது. இதில் பாக்கியராஜ் கையாண்ட சில விடயங்கள் (முருங்கைக்காய் போன்றவை) இன்றளவும் பரபரப்பாக பேசப்படுபவை.
1990ஆம் ஆண்டுகள் துவங்கி பாக்கியராஜின் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. சில பெரும் அளவில் தோல்வியுற்றன. மிஸ்டர் இந்தியா என்னும் இந்தித் திரைப்படத்தைத் தழுவி அவர் இயக்கி நடித்த ரத்தத்தின் ரத்தமே தோல்வியுற்றது. தனது மகன் சாந்தனுவை சிறுவனாக அறிமுகம் செய்து அவர் இயக்கி நடித்த வேட்டிய மடிச்சுக்கட்டு படமும் தோல்வியுற்றது. பாக்கியராஜின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது போல ஒரு தோற்றம் உருவாகலானது.
2003ஆம் ஆண்டில் அவர் தனது மகள் சரண்யாவை நாயகியாக அறிமுகம் செய்து இயக்கிய பாரிஜாதம் திரைப்படம் மாறுபட்ட ஒரு திரைக்கதை அமைப்பைக் கொண்டிருப்பினும், வெற்றிப்படமாகத் திகழவில்லை. சரண்யாவும் முன்னணி நடிகையாகவில்லை.
தற்போது கலைஞர் தொலைக்காட்சியில், பாக்கியராஜின் திரைக்கதை அமைப்பில் விளக்கு வெச்ச நேரத்திலே என்னும் தொடர் வெளியாகி வருகிறது.
சொந்த வாழ்க்கை
தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்கியராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரவீணா என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்கியராஜின் இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், பாமா ருக்மிணி ஆகிய சில படங்களிலும் நடித்தவர். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்கியராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்கியராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருந்தார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு சக்கரக்கட்டி என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி வளர்ந்து வருகிறார்.
அரசியல் ஈடுபாடு
துவக்கம் முதலே தன்னை எம். ஜி. ஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்கியராஜ், ருத்ரா திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அ.தி.மு.க. கட்சியில் இணைந்திருந்தார். இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சி ஒன்றைத் துவக்கினார். பின்னர், நாளடைவில் அது கலையவே, தற்போது, தி.மு.க. கட்சியில் உள்ளார்.
இலக்கிய ஈடுபாடு..
இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர் பாக்கியராஜ். முற்றிலும் நகைச்சுவைப் படமான 'இன்று போய் நாளை வா' என்னும் திரைப்படத்தில் கூட ஜெயகாந்தன் எழுதிய 'சமூகம் என்பது நாலு பேர்' என்னும் சிறு கதையைப் பற்றிய ஒரு குறிப்பு வருமாறு அமைத்திருந்தவர் பாக்கியராஜ். பல ஆண்டுகளாக மேலாக, பாக்யா என்னும் பத்திரிகையை நடத்தி வருகிறார்.
பாக்கியராஜ் உருவாக்கிய இயக்குனர்கள்.
தமது குருவான பாரதிராஜாவைப் போலவே, பாக்கியராஜும், பல திறமையான இயக்குனர்களை உருவாக்கினார். இவர்களில், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் வெற்றிகரமான இயக்குனர்களாகத் திகழ்ந்தனர்.
பாக்கியராஜ் இயக்கி நடித்தவை
சுவரில்லாத சித்திரங்கள்
ஒரு கை ஓசை
விடியும் வரை காத்திரு
இன்று போய் நாளை வா
மௌன கீதங்கள்
டார்லிங் டார்லிங் டார்லிங்
தூறல் நின்னு போச்சு
அந்த ஏழு நாட்கள்
முந்தானை முடிச்சு
சின்ன வீடு
தாவணிக் கனவுகள்
எங்க சின்னராசா
ஆராரோ ஆரிராரோ
சுந்தர காண்டம்
வீட்ல விசேஷங்க
பவுனு பவுனுதான்
ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி
அம்மா வந்தாச்சு
வேட்டிய மடிச்சுகட்டு
ரத்தத்தின் ரத்தம்
பாரிஜாதம்
ராசுக்குட்டி
சொக்கத்தங்கம்
பிறரின் இயக்கத்தில் பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்
கிழக்கே போகும் ரயில்"
சிகப்பு ரோஜாக்கள்"
புதிய வார்ப்புகள்"
கன்னிப் பருவத்திலே"
பாமா ருக்மிணி'
பொய் சாட்சி
அன்புள்ள ரஜினிகாந்த் (கௌரவ வேடம்)
ருத்ரா
இது நம்ம ஆளு (எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கிய ஒரே படம்)
நடிகராக
பாக்கியராஜ் ஒரு நடிகராகத் தமது எல்லைகளை உணர்ந்தவராக விளங்கினார். அவர் தமக்கெனவே உருவாக்கிக் கொண்ட பாத்திரத்தை அப்பாவித்தனமும் சாமர்த்தியமும் சம அளவில் கலந்தோடிய ஒரு பண்புக்கூறாக வடித்திருந்தார். இப்பண்புக்கூறு மிகப் பெரும் அளவில் வெளியாகி வெற்றி பெற்றவற்றில், முந்தானை முடிச்சு, தூறல் நின்னு போச்சு, அந்த ஏழு நாட்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தம்மைத் தாமே கேலி செய்து கொள்ளும் ஒரு அரிய பண்பு அவரது குணச்சித்திரமாக அவரது படங்களில் வெளிப்பட்டு, ஒரு தனிப்பாணியை உருவாக்கின. ஒரு சராசரித் திரை நாயகனுக்கான இலக்கணங்களிலிருந்து விடுபட்டு, யதார்த்த உலகின் அன்றாட வாழ்க்கையில் பலங்களும் பலவீனங்களூம் நிறைந்த மனிதனைச் சித்தரிப்பதாக அவரது பாத்திரங்கள் அமைந்தன.(கண்ணாடி அணிந்து நடித்த முதல் நாயகன் அவரே; பின்னர் இதுவே ஒரு நடைமுறைப் பாணியாகக் கொஞ்ச காலம் நிலவியது. இதைக் கொண்டே சின்னவீடு படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சியையும் அமைத்ததே அவரது ஆற்றல்).
திரைக்கதை அமைப்பாளராக
இந்தியாவின் சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என 1980ஆம் ஆண்டுகளில் பாக்கியராஜ் போற்றப்பட்டார். திரைக்கதை அமைப்பில் அவர் கொண்டிருந்த ஆளுமைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான அவசர போலிஸ் 100. 1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், அண்ணா நீ என் தெய்வம். இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்துத் தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து பாக்கியராஜ் உருவாக்கிய அவசர போலிஸ் 100 வெற்றிப்படமாக விளைந்தது. கல்கி (இதழ்) மாபெரும் தொழில்நுட்பவாளர் (Master Craftsman) என்று அவரைப் பாராட்டியது.
கமலஹாசன் நடித்த ஒரு கைதியின் டைரி திரைப்படத்திற்கு பாக்கியராஜ் திரைக்கதை அமைத்திருந்தார். ஒரளவே வெற்றி பெற்ற இப்படத்தைப் பின்னர் இந்தியில் அமிதாப் பச்சன் இரட்டை வேடத்தில் நடிக்க ஆக்ரி ராஸ்தா என்னும் பெயரில் இயக்கினார். இது மாபெரும் வெற்றி அடைந்தது.
இயக்குனராக
நகைச்சுவையை முதன்மையாகக் கொண்டிருப்பினும், பாக்கியராஜ் தாம் இயக்கிய திரைப்படங்களில் யதார்த்தமும் மனித நேயமும் அடிநாதமாக விளங்குமாறு அமைத்திருந்தார். 'என்னுடைய காத்லி உங்கள் மனைவி ஆகலாம்; ஆனால், உங்கள் மனைவி எனக்குக் காதலி ஆக முடியாது' என்று உயர் பண்பினை வெளிப்படுத்திய அந்த ஏழு நாட்கள், தனது காதலிக்காகப் பொறுமையுடன் காத்திருக்கும் வேளையில், பண்பையும் காத்திருந்த தூறல் நின்னு போச்சு, தனது இளமைக்காலத் தோழிக்காக பொறுமையுடன் அவமானங்களைச் சகித்துக் கொள்ளும் டார்லிங் டார்லிங் டார்லிங் இராணுவத்தில் சேர்ந்து விட்ட தனது மாமனை மணக்கக் காத்திருக்கும் கிராமத்துப் பெண்ணிடம் காதல் கொள்ளும் பவுனு பவுனுதான் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
பாக்கியராஜ் பாசாங்குகளற்ற, யதார்த்தமான ஒரு இயக்குனர். தமது படங்களின் வழியாகத் தம்மை ஒரு அறிவுஜீவி என நிலை நிறுத்திக் கொள்ள அவர் முயன்றதில்லை. பெரிய தொழில் நுட்பங்களையும் அவர் சார்ந்திருக்கவில்லை. அநேகமாக அவர் படங்களில் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளோ, வெளி நாட்டுப் படப்பிடிப்புகளோ இருந்ததில்லை. அவர் முழுக்க முழுக்க, தாம் தமக்கென அமைத்துக் கொண்ட பாணி, தமது திறமைகள், திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பித் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இந்த வகையில் இந்தி நடிகர்/ இயக்குனர் ராஜ் கபூருக்கு ஈடாக பாக்கியராஜைக் குறிப்பிடலாம். (சங்கம் போன்ற ராஜ்கபூரின் சில திரைப்படங்கள் பிரம்மாண்டமாக அமைந்தவை எனினும், அவரது துவக்க காலத் திரைப்படங்களான, ஆவாரா, ஜாக்தே ரஹோ, ஸ்ரீ 420 போன்றவை இப்பாணியில் அமைந்தவையே). ராஜ் கபூர் இந்தியாவின் மிகப் பெரும் காட்சியாளர் (Greatest Showman) எனவும், இந்தியாவின் சார்லி சாப்ளின் எனவும் புகழப் பெற்றவர். இப்பாராட்டுக்கள் பாக்கியராஜுக்கும் பொருந்துபவையே.
தமிழில், இது போன்ற எளிமையான, அழுத்தமான பாணியைக் கையாண்ட பிற இயக்குனர்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பீம்சிங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், இவர்கள் நடிகராகத் திகழவில்லை. இரண்டையும் செவ்வனே செய்த மிகச் சில இயக்குனர்களில் ஒருவர் பாக்கியராஜ்.
இசையமைப்பாளராக
இளையராஜாவுடன், இடையில் ஏற்பட்ட ஒரு சிறு மனத்தாபம் காரணமாக, இது நம்ம ஆளு திரைப்படத்திற்குப் பாக்கியராஜே இசை அமைத்து, ஒரு பாடலையும் பாடியிருந்தார். ஆயினும், இதை அவர் தொடரவில்லை. அவர் இசை அமைத்த ஒரே படம் இதுவேயாகும்.
விமர்சனங்கள்
பாக்கியராஜ் தமது படங்களில் பாலியலை முன்னிறுத்துவதாக ஒரு விமர்சனம் எழுவதுண்டு. இதற்கு உதாரணமாக, மாபெரும் வெற்றி பெற்ற முந்தானை முடிச்சின் முருங்கைக்காய், சின்ன வீடு படத்தின் சில காட்சிகள், இது நம்ம ஆளு போன்றவற்றைக் குறிப்பிடுவதுண்டு. ஆயினும், பாக்கியராஜ், பாலியல் நெருக்கம் ஆபாசமாகத் தோன்றாதவாறு இவை அனைத்தையும் கணவ்ன- மனைவிக்கு இடையிலான நெருக்கமாக வெளிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இது இரசிக்கத் தக்கதாகவே அமைந்தது. வர்த்தக ரீதியிலான வெற்றிக்குத் தேவையான கூறுகளைக் கொண்டு, அதே நேரம் அவற்றை அருவருப்பின்றி, இரசிப்பிற்கு உரியதாக அமைக்கும் பாக்கியராஜின் திறமைக்கு இது ஒரு சான்று.
தமது அனைத்துப் படங்களிலும், தாம் உருவாக்கிய அப்பாவி இளைஞன் என்னும் கருத்துருவையே முன்னிறுத்தியதால், பாக்கியராஜால் மாறுபட்ட வேடங்களைத் தாங்கி நடிக்க இயலவில்லை. அவ்வாறு மாறுபட்டு அவர் நடித்த விடியும் வரை காத்திரு படம் வெற்றி பெறவில்லை. இது குறித்து, ஒரு இயக்குனர் என்ற முறையில் தமக்குப் பின்னடைவே என அண்மையில் ஒரு நேர்காணலில் பாக்கியராஜ் கூறியிருந்தார்.
உடன் நடித்த நாயகியர்
பாக்கியராஜின் திரைப்படங்கள் அனைத்தும் அவரது பாத்திரத்தை முன்னிறுத்தியவையாகவே அமைந்தமையால், நாயகியருக்குப் பொதுவாக, பெருமளவில், அவற்றில் பணி இருந்ததில்லை. இருப்பினும், அந்த ஏழு நாட்கள் படத்தில் அம்பிகா மற்றும் மௌன கீதங்கள் திரைப்படத்தில் சரிதா ஆகியோர் தமது பாத்திரங்களில் திறம்பட நடித்து நற்பெயர் பெற்றனர்.
பிரவீணா, பூர்ணிமா ஜெயராம் (இவர்கள் இருவரும் பாக்கியராஜுடன் வாழ்விலும் இணைந்தவர்கள்), ரதி அக்னி ஹோத்ரி (பாக்கியராஜின் முதல் நாயகி), ராதிகா, ஊர்வசி (பாக்கியராஜின் அறிமுகமான இவரும் நகைச்சுவை மிளிரும் நடிப்பிற்குப் பெயர் பெற்றார்), பானுப்பிரியா, குஷ்பூ, மீனாஷி சேஷாத்திரி ஆகியோர் பாக்கியராஜின் திரை நாயகியரில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
இந்தியில் பாக்கியராஜின் திரைப்படங்கள்.
இந்தியில் பாக்கியராஜ் இயக்கிய திரைப்படம் ஆக்ரி ராஸ்தா. ஆயினும், அவரது பல படங்கள் தமிழில் வெற்றிக் கொடி நாட்டியமையால் இந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டன. இவற்றில் பலவற்றில் இந்தி நடிகர் அனில் கபூர் நடித்திருந்தார். சிலவற்றில் கோவிந்தாவும், முந்தானை முடிச்சின் மறுவாக்கத்தில் ராஜேஷ் கன்னாவும் நடித்திருந்தனர். இவற்றில் இந்தியில் ஓ சாத் தின் என்ற பெயரில் வெளியான அந்த ஏழு நாட்கள் மற்றும் பேட்டா என்ற பெயரில் வெளியான எங்க சின்ன ராசா ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றி அடைந்தன.
நன்றி ::)விக்கிபிடியா .