புதன், 31 ஜனவரி, 2018

இயக்குநர் ஏ. நாராயணன் நினைவு தினம் பிப்ரவரி 1, 1939



இயக்குநர் ஏ. நாராயணன் நினைவு தினம் பிப்ரவரி 1, 1939

சிவகங்கை ஏ. நாராயணன் (1900 - பெப்ரவரி 1, 1939) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் தமிழகத்தின் முதல் பேசும் பட ஒலிக் கலையகத்தை அமைத்தவர். இவர் இயக்கித் தயாரித்த ‘சீனிவாச கல்யாணம்’ உட்பட ஐந்து பேசும் படங்களுக்கு இவரது மனைவி
மீனாம்பாள் ஒலிப்பதிவு செய்தார். இதன் மூலம் முதல் இந்தியத் திரைப்பட பெண் ஒலிப்பதிவாளர் என்ற பெருமையை மீனாம்பாள் பெற்றார்.

வாழ்க்கை

தமிழ்நாட்டின் சிவகங்கையில் 1900 ஆம் ஆண்டு ஏ. நாராயணன் பிறந்தார். பட்டப் படிப்புவரை படித்து முடித்த இவர், பின்னர் பம்பாயில் ஆயுள் காப்பீட்டு முகவராக பணியில் சேர்ந்தார். அங்கே அந்நிய மவுனப் படங்களை வாங்கி இந்தியா முழுவதும் விநியோகித்துவந்த கே.டி.பிரதர்ஸ் & கோ என்ற நிறுவனத்துடன் நாராயணனுக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நட்பால் மவுனப் படங்களை வாங்கி
கல்கத்தாவில் விநியோகிக்கத் தொடங்கினார். கல்கத்தாவில் பிரபலமான திரையரங்கான ‘க்வின்ஸ் சினிமா’ என்ற அரங்கை குத்தகைக்கு எடுத்து சிலகாலம் நடத்தி, பின்னர் மதராஸ் திரும்பினார்.

திரைப்பட வாழ்வு

மதராஸ் திரும்பியபின் ‘எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ்’ என்ற பெயரில் தென்னிந்தியாவின் முதல் பட விநியோக நிறுவனத்தைத் தொடங்கி மவுனப் படங்களை வாங்கித் தென்னகமெங்கும் திரையரங்குகளுக்கு விநியோகித்து, திருவல்லிக்கேணியில் திரையரங்கை நடத்தினார். இந்தத் தொழில்களில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் நாராயணனுக்கு படங்களைத் தயாரிக்க வேண்டும், இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 1928 ஆம் ஆண்டு ஹாலிவுட் சென்று அங்கே ஓராண்டு காலம் தங்கி திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். ஹாலிவுட் செல்லும்போது ‘அனார்கலி’யின் கதையை அதே பெயரில் மவுனப் படமாக எடுத்துச் சென்று ஹாலிவுட்டில் திரையிட்டார். சென்னை திரும்பிய நாராயணன் 1929 ஆம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையில், ‘ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற திரைப்பட படப்பிடிப்புத் தளத்தை தொடங்கினார். அடுத்துவந்த மூன்று ஆண்டுகளில் (1927-30) சுமார் இருபதுக்கும் அதிகமான மவுனப் படங்களைத் தயாரித்தார். பேசும் படங்கள் வந்த பிறகு பல தமிழ் பேசும் படங்களை இயக்கினார்.

இயக்கிய மௌனப் படங்கள்

கருட கர்வபங்கம் (1929)
இயக்கிய பேசும் படங்கள்
திரௌபதி வஸ்திராபகரணம்
மாதா சம்பிரானி
தெனாலிராமன்
ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி
மச்சாவதாரம்
துளசி பிருந்தா
விப்ர நாராயணா
விஸ்வாமித்ரா
ராஜாம்பாள்
கிருஷ்ண துலாபாரம்
ஸ்ரீ ராமானுஜர்
ஞானசௌந்தரி
மீராபாய்
தாராச சங்கம்
ஸ்ரீநிவாச கல்யாணம்
தூக்குத் தூக்கி


சென்னையில் உருவான முதல் தமிழ் பேசும் படத்தின் தயாரிப்பாளர் சிவகங்கை ஏ.நாராயணன்

தமிழ்சினிமாவின் ஆளுமைகள் பற்றிய இந்த கட்டுரைகளில் ஒன்றை நாம் தெரிந்துகொள்ளமுடியும். அறிவியல் வளர்ச்சியின் ஆரம்பநாளில் கண்டுபிடிக்கப்பட்ட சினிமா காமிரா, உலக மக்கள் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. மேலைநாடுகளில் மக்களின் இந்த ஆச்சர்யத்தை, வணிகநோக்கில் பயன்படுத்தி வெற்றிக்கண்டனர் பலர்.
ஆனால் தென்னிந்தியாவில் அதை கலையம்சமாக கருதி கையாண்டனர். மக்கள் மத்தியில், சினிமா வெற்றிகரமான வியாபாரம் என்று தெரிந்த பின்னரும், அதை கலைநோக்கில்தான் அணுகினர் நம்மவர்கள். இதுதான் இன்றைய சினிமாபெற்ற வெற்றிக்கு அடித்தளம்.
ஊமைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வந்த அக்காலத்தில், ஒரு முழு நீள ஊமை படத்தை தயாரிப்பதற்கான அன்றைய செலவு, அதிகபட்சம் ரூ.5000 முதல் 6000/- வரை. ஆனால் திரைப்படங்களின் மீது காதல் கொண்டு திரிந்த ஒருவர், தான் விரும்பியபடி படம் தயாரிக்க அதிகட்சமாக செலவிட்டார்.
''ஜி.டபிள்யூ.எம்.ரேனால்டு எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட
மிங்கிரேலியத் தாரகை அல்லது
லைலா என்ற 20 ரீல்கள் கொண்ட திரைப்படம், முழுக்க முழுக்க சென்னையில் தயாரிக்கப்பட்டது. இதற்காக அதன் தயாரிப்பாளர் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா?... ரூ. 75,000 /- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஊமைப் படங்கள் எதற்கும், இவ்வளவு தொகை செலவிடப்பட்டதாக புள்ளிவிவரம் இல்லை. அந்த தயாரிப்பாளர் சிவகங்கை ஏ.நாராயணன் . முதல் தமிழ் பேசும் படத்தை தயாரித்த பெருமைக்குரியவர்.
இன்சூரன்ஸ் ஏஜென்ட்
சிவகங்கையில் ஜனவரி 1900 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நடுத்தரமான குடும்பத்தில் பிறந்த ஏ.நாராயணன், ஒரு பி.ஏ.பட்டதாரி. சினிமா தொழிலுக்கு வருவதற்கு முன்னர் பம்பாயில் ஒரு வங்கியில் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக பணியாற்றியவர். ஆங்கிலப் படங்களின் விநியோகஸ்தர்களான கே.டி.சகோதரர்களோடு இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. 1922-ஆம் ஆண்டு கல்கத்தாவில் 'க்வின்ஸ் சினிமா' என்ற டாக்கீஸை நடத்தினார். பின்னர் சென்னை வந்து திருவல்லிக்கேணியில் இவர் பாப்புலர் சினிமாவை (ஸ்டார் டாக்கீஸ்) நடத்தினார்.
அதே சமயத்தில் ஆங்கில மொழி துண்டுப் படங்களையும், டிராமாக்களையும் சென்னையில், தான் நடத்தி வந்த 'எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ், சென்னை' என்ற கம்பெனி மூலம் விநியோகம் செய்து வந்தார். 1927 ஆம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையில், 'ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்' என்ற பெயரில் ஒரு சினிமா ஸ்டுடியோவை துவக்கினார். மூன்று ஆண்டுகளில் (1927-30) இவர் 20 க்கும் மேற்பட்ட ஊமைப் படங்களைத் தயாரித்ததாக தெரிகிறது. தென்னிந்திய பிலிம் தொழிலின் தந்தை என ஏ.நாராயணன் அழைப்படுகிறார்.
நாராயணன் தமது படங்களை, தம் சொந்தக் கம்பெனியான எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ் மூலமாகவும், அதன் பம்பாய், டில்லி, ரங்கூன், சிங்கப்பூர் கிளைகள் மூலமாகவும் விநியோகம் செய்தார். கல்கத்தாவில் அரோரா பிலிம் கார்ப்பரேஷன், வங்காள விநியோகத்தை மேற்கொண்டது. 1928 ல் ஹாலிவுட் சென்றார்.
இந்த நாளில்தான் மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா 20 ரீல்களில் சென்னையில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் ஒரே நேரத்தில் சென்னை வெலிங்டன் தியேட்டரிலும், பம்பாய் சூப்பர் சினிமாவிலும், ரங்கூன் சினிமா டி-பாரிஸ் தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு 6 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்த வெற்றி படமாகும். நேர்த்தியான இதன் தயாரிப்பிற்காக நாராயணன், பத்திரிக்கைகளால் அந்நாளில் பெரிதும் பாராட்டப்பட்டார்.
1929-ல் நாராயணன் கோவலனும் காற்சிலம்பும் என்ற ஒரு ஊமைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்கான வெளிப்புறக் காட்சிகள் சென்னை துறைமுகத்தில் படமாக்கப்பட்டன.

விவசாய உணர்வு என்ற 8000 அடி துண்டு படத்தை, இம்பீரியல் கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டிற்காக இவர் தயாரித்தார்.
பிரசவமும குழந்தை நலனும் , மேக நோய் (பால்வினை நோய்) ஆகிய டாக்குமென்ட்ரி படங்களை சென்னை பொது சுகாதார இலாகாவிற்காக தயாரித்து கொடுத்தார். 1929-ல் சென்னையில் செயல்பட்டுவந்த வர்மா எண்ணெய் கம்பெனிக் கிடங்கு தீப்பற்றி பலமணிநேரம் எரிந்தது. இதை டாகுமெண்டரி படமாக எடுத்து வெளியிட்டார் ஏ.நாராயணன்.
தென்னகத்தின் முதல் ஸ்டுடியோ சீனிவாஸ் சினிடோன்
1930களில் தென்னிந்தியர்கள் தங்கள் திரைப்படங்களைத் தயாரிக்க பம்பாய்க்கும், கோலாப்பூருக்கும், கல்கத்தாவுக்கும், நடிக நடிகையர்கள், பாடகர்கள் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களோடும், பல மாதங்கள் தங்கி படத்தை முடித்துக் கொண்டு வரத் தேவையான மூட்டை முடிச்சுகளோடு போய்க் கொண்டிருந்தார்கள். இந்த நிலையைப் போக்க எண்ணிய நாராயணன், தென்னகத்தின் முதல்பேசும் பட ஸ்டுடியோவை 1934-ல் சென்னையில் உருவாக்கினார். சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் நிறுவப்பட்ட அந்த ஸ்டுடியோவின் பெயர்
சவுண்ட் சிட்டி என்கிற சீனிவாஸ் சினிடோன் .
வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற அளவில் தன் சினிமா ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாத ஏ. நாராயணன், 'ஹிந்து' நாளேட்டில் சினிமாவைப் பற்றிய கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டு, மக்கள் மத்தியில் மௌனப் படத்தின் கலை நுணுக்கங்களை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியவர்.
முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை வெளிநாட்டில் திரையிட்ட பெருமையும் ஏ.நாராயணனையே சாரும்.
அனார்கலி என்ற மௌனப் படத்தை எடுத்து சென்று அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் அமெரிக்கர்களுக்கு திரையிட்டு காட்டினார்.
1931-க்கு பின் பேசும் படங்கள் சென்னையில் வெளிவர ஆரம்பித்தன. இவரால் ஆரம்பிக்கப்பட்ட 'சவுண்ட் சிட்டி ஸ்டுடியோ' வில் சென்னையில் தயாரிக்கப்பட்ட தமிழின் முதல் பேசும் படமான சீனிவாச கல்யாணம் 1934 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை தொடர்ந்து "தூக்கு தூக்கி", "தாராசசாங்கம்", "ஞானசுந்தரி", "துளசிபிருந்தா", "விக்கிரமாதித்தன்", "ராஜாம்பாள்", "விசுவாமித்ரா", "சிப்பாய் மனைவி", "விப்ரநாராயணா", "கிருஷ்ண துலாபாரம்", "ராமானுஜர் ", ஆகிய படங்களை தயாரித்தார்.
இவர் தயாரித்த சிப்பாய் மனைவி என்ற படத்தின் கதாநாயகன், ஓர் போர்வீரன். அவன் போருக்கு போய்விட்டுத் திரும்பி வருவதற்குள், அவனுடைய மனைவியை ஓர் உயர் அதிகாரி 'பெண்டாள' நினைப்பார். படத்தில் இடம் பெற்றிருந்த இக்காட்சிக்கு பெரும் எதிர்ப்பு தோன்றியது. அந்த நாளில் இப்படம் பொது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மட சாம்பிராணி என்ற பெயரில் ஒரு நகைச்சுவை துண்டுப் படம் இவரால் தயாரிக்கப்பட்டது. ஏ.நாராயணனின் சீனிவாஸ் சினிடோனின் படம் மட சாம்பிராணி அல்லது அச்சுபிச்சு இதில் ஒரு பாடல்; கிச்சு பாடுகிறான்...
மாமனாராத்தைப்போல்
ஆனந்தம் வேறில்லை!
மாட்டுக் கொட்டாய் சாணி
வாசனைக்கீடில்லை!"
பலே! -
அந்தக் காலத்தில் சராசரி இளைஞனின் மாமனார் வீட்டைப் பற்றிய கருத்து இது!
இப்படத்தின் ராமுலு-சீனு என்ற இரண்டு நடிகர்கள் அச்சு, பிச்சு என்ற நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தனர். நகரத்தின் நாகரீக மோகத்தில் சிக்கி, அச்சு பிச்சு இருவரும் தங்களின் பூணூல்களைக் கூட கழற்றி வீசி எறிந்துவிடுவார்கள். இறுதியில் நகரத்தில் கஷ்டப்பட்டு, மீண்டும் சொந்த ஊருக்குப் போய்விடுவார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை துண்டுபடமான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது.
நாராயணனுக்கு ஈடான திறமையும், சினிமா மீது பெரிதும் ஆர்வமும் கொண்டவரான அவரது துணைவியார் மீனாம்பாள், ஐந்து படங்களுக்கு ஒலிப்பதிவு செய்தவர் என்பது வரலாறு நினைவுபடுத்தாமல் விட்ட செய்தி. சினிமா படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த முதல் இந்திய பெண்மணி மீனாம்பாள் நாராயணன்.
சிறந்த இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கிய ஏ.நாராயணனிடம் பயிற்சி பெற்று பின்னாளில் பிரபல டைரக்டர்களாக உருவெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஆர்.பிரகாஷ், ஜித்தன் பானர்ஜி, பி.சி.புல்லையா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவர் தயாரித்த மௌன படங்களின் விவரம் (இயக்குனர் பெயர் அடைப்புக்குறிக்குள்)
படத்தின் பெயர் (டைரக்டர்கள்)
1. தர்மபத்தினி (ஏ.நாராயணன்)
2. ஞானசௌந்தரி (ஏ.நாராயணன்)
3. கோவலன் (ஏ.நாராயணன்)
4. கருட கர்வபங்கம் (ஏ.நாராயணன்)
5. லங்கா தகனம் (ஆர்.பிரகாஷ்)
6. பாண்டவ நிர்வாகன் (ஒய்.வி.ராவ்)
7. கஜேந்திர மோட்சம் (ஆர்.பிரகாஷ்)
8. சாரங்கதாரா (ஒய்.வி.ராவ்)
9. காந்தாரி வதம் (ஆர்.பிரகாஷ்)
10. பிரமீளா அர்ஜூனன் (எஸ்.கோபாலன்)
11. போஜராஜன் (ஒய்.வி.ராவ்)
12. பாண்டவ அஞ்ஞான வாசம் (ஒய்.வி.ராவ்)
13. ராஜஸ்தான் ரோஜா (ஆர்.பிரகாஷ்)
14. நரநாராயணன் (ஆர்.பிரகாஷ்)
15. விசவாமித்ரா (ஜிதன் பானர்ஜி)
16. பவழராணி (ஆ.பிரகாஷ்)
17. மாயா மதுசூதனன் (ஜிதன் பானர்ஜி)
18. மிங்கிரேல்லியத்தாரகை அல்லது லைலா (ஆர்.பிரகாஷ்)
19. பீஷ்மர் பிரதிக்ஞை (ஆர்.பிரகாஷ்)
20. மச்சாவதாரம் (ஆர்.பிரகாஷ்)
சென்னையில் தயாரான முதல் தமிழ் பேசும் படத்தை தயாரித்த பெருமைக்குரிய ஏ.நாராயணன், தமிழ் சினிமா உலகம் மறந்த ஒரு முன்னோடி. 1939 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 1 ஆம் நாள் எதிர்பாராதவிதமாக மறைந்தார்.
இவர் தயாரித்த எந்த மௌனப்படங்கள் இன்று காட்சிக்கு கிடைக்கவில்லை. இந்தியர்களின் அலட்சியத் தால் நாராயணனின் மௌனப்படங்களில் எதுவும் மிஞ்சவில்லை; அனைத்தும் அழிந்து போயின. தமிழ்சினிமாவின் சாபக் கேடுகளில் ஒன்று தங்கள் முன்னவர்களின் படைப்புகளை பாதுகாக்காதது. அவர்களின் புகழை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லாதது.
ஹாலிவுட்டுக்கு போய் சினிமா "ரகசியங்களை அறிந்து கொண்டு வந்த சில இந்தியர்களில் இவரும் ஒருவர். இவர் தொடங்கிய ' சீனிவாஸ் ஸினிடோன் ' என்ற ஸ்டுடியோவிற்கு 'சப்த நகரம்' என்று கூட பெயர் உண்டு. "தமிழ் சினிமா பிரபஞ்சத்தின் ஆதிகர்த்தா மிஸ்டர் (ஏ) நாராயணன் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்“ என ஏ.நாராயணனுக்கு புகழ் வார்த்தைகளால் அஞ்சலி செலுத்தியது ஆனந்த விகடன் - 1939 ஆம் வருட இதழ்.
- பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன்

நடிகை கோபிகா பிறந்த நாள்: பிப்ரவரி 1, 1985.


நடிகை கோபிகா பிறந்த நாள்: பிப்ரவரி 1, 1985.

கோபிகா (பிறப்பு: பிப்ரவரி 1, 1985) தமிழ் ,தெலுங்கு , கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் இயற்பெயர்
கேர்ளி அண்டோ ஆகும். இவர் கேரளாவில் பிறந்தார், இவரின் தந்தை ஹன்டோ பிரான்சிஸ் மற்றும் தாய் டெசி ஹன்டோவின் ஆகியோர்கள் ஆவார். தனது பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளிப்படிப்பை
கேரளா மாநிலம், திருச்சூரில் உள்ள செயிண்ட் ராப்பெல்ஸில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தார். பின்னர் தன் மேற்ப்படிப்பை
கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சமூகத்துவியல் படிப்பை படித்து முடித்தார்.


திருமண வாழ்க்கை

அஜிலேஷ் சாக்கோ என்பவரை 2008 ஆம் ஆண்டு மணந்தார். இவர்களது திருமணம் சூலை 27, 2008 அன்று கேரளாவில் நடந்தது. இவர்களுக்கு எமி, எய்தீன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.


கோபிகா நடித்த திரைப்படங்கள்

தமிழ்
2007 - வீராப்பு
2006 - எம் மகன்
2006 - அரண்
2005 - தொட்டி ஜெயா
2005 - பொன்னியின் செல்வன்
2005 - கனா கண்டேன்
2004 - ஆட்டோகிராப்
2004 - 4 ஸ்டூடெண்ட்ஸ்
கன்னடம்
கனசின லோகா
தெலுங்கு
லேத்த மனசுலு
மலையாளம்
கிர்திச்சக்கரா
சாந்துப்பொட்டு
பச்சக்குதிரா
ஃபோர் த பீப்பில்
பிரனயமனிதூவல்

செவ்வாய், 30 ஜனவரி, 2018

நடிகை பிரீத்தி சிந்தா பிறந்த நாள் ஜனவரி 31 , 1975 .



நடிகை பிரீத்தி சிந்தா பிறந்த நாள் ஜனவரி 31 , 1975 .

பிரீத்தி சிந்தா ( ஆங்கிலம் : Preity Zinta , பிறப்பு: ஜனவரி 31 , 1975 ) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. இவர் பாலிவுட் என்கின்ற இந்தி திரைப்படங்களிலும் அதேபோல் தெலுங்கு , பஞ்சாபி மற்றும்
ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். குற்றநடத்தை உளவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின், 1998இல் தில் சே திரைப்படத்தில் அறிமுகமானார்.


பிரீத்தி சிந்தா at the Jaan-E-Mann and UFO tie-up party (2006).
பிறப்பு 31 சனவரி 1975 (அகவை 43)
சிம்லா , இமாச்சல பிரதேசம் , இந்தியா
பணி திரைப்பட நடிகை
செயல்பட்ட
ஆண்டுகள்
1998–தற்போது
துணைவர் நெஸ் வாடியா (2005–09)


நடிகை பிரீத்தி ஜிந்தா தன்னுடைய அமெரிக்க காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா. மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் உள்ளார் ப்ரீத்தி.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், தன்னுடைய தொழில் கூட்டாளியுமான நெஸ் வாடியாவுக்கும், பிரீத்தி ஜிந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவை சேர்ந்த ஜெனி குட்எனப் என்பவருக்கும் ப்ரீத்திக்கும் காதல் மலர்ந்தது. ஆனாலும் இந்தக் காதல் குறித்து ரகசியம் காத்து வந்தார் ப்ரீத்தி. இந்த நிலையில், அவர் ஜெனி குட்எனப்பை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரகசியமான முறையில் திருமணம் செய்து கொண்டார்.


எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய தோழியும், ஆடை வடிவமைப்பாளரும் ஆன பராகான் அலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலை பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய நண்பரும், இந்தி நடிகருமான கபிர் பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சக நடிகையான சுஷ்மிதா சென் இந்த திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

நடிகை பண்டரிபாய் நினைவு தினம் ஜனவரி - 29. 2003.


நடிகை பண்டரிபாய் நினைவு தினம் ஜனவரி - 29. 2003.

பண்டரிபாய் (18 செப்டம்பர் 1928 - 29 ஜனவரி 2003) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர், கன்னடத் திரைப்பட உலகின் முதற் கதாநாயகியாகக் கருதப்படுகிறார் . கன்னடம் , தெலுங்கு ,
தமிழ் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
1. மனிதன் (1953)
2. நீலாவுக்கு நெறஞ்ச மனசு (1958)
3. ஸ்ரீ ராகவேந்திரா (1985)
4. வீர பாண்டியன் (1987)
5. எங்க வீட்டுப் பிள்ளை
6. நம்ம குழந்தை
7. காத்திருந்த கண்கள்
8. வேதாள உலகம்
9. குடியிருந்த கோயில்
10. இரும்புத்திரை
11. காவல் பூனைகள்
12. நாலு வேலி நிலம்
13. பாவை விளக்கு
14. செல்லப்பிள்ளை
15. அர்த்தமுள்ள ஆசைகள்
16. ராகங்கள் மாறுவதில்லை
17. மனைவியே மனிதனின் மாணிக்கம்
18. கெட்டிமேளம்
19. குறவஞ்சி
20. பதில் சொல்வாள் பத்ரகாளி
21. மாணவன்
22. கண்கள்
23. மகாலட்சுமி
24. வாழப்பிறந்தவள்
25. குலதெய்வம்
26. மனோகரா
27. பக்த சபரி
28. பராசக்தி

பாடகர் சி. எஸ். ஜெயராமன் நினைவு தினம் - 29, ஜனவரி 1995.


பாடகர் சி. எஸ். ஜெயராமன் நினைவு தினம்  - 29, ஜனவரி 1995.

சி. எஸ். ஜெயராமன் (6, தை 1917 - 29, சனவரி 1995) எனப் பொதுவாக அறியப்படும்
சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் ஒரு நடிகரும், இசையமைப்பாளரும், பிரபல திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் பாடிய பாடல்கள் 1940க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான பல திரைப்படங்களில் இடம்பெற்றன.
இளமைக்காலம்
ஜெயராமன் கோயில் நகரமான சிதம்பரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சுந்தரம்பிள்ளை பிரபலமான கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர். இவர் தி. மு. க தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார். தொடக்கத்தில் கருணாநிதி ஒரு திரைக்கதை எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் ஜெயராமன்.
திரைப்படத்துறை பங்களிப்புகள்
நடிகர்
ஜெயராமன் 1917 ஆண்டு தை மாதம் 6 நாள் பிறந்தார். ஜெயராமன், கிருஷ்ண லீலா (1934), பக்த துருவன் (1935), நல்ல தங்காள் (1935), லீலாவதி சுலோச்சனா (1936), இழந்த காதல் (1941), பூம்பாவை (1944), கிருஷ்ண பக்தி (1948) ஆகிய படங்களில் நடித்தார்.
இசையமைப்பாளர்
உதயனன் வாசவதத்தா (1946), ரத்தக்கண்ணீர் (1954) ஆகிய இரண்டு படங்களுக்குத் தனியாக இசையமைத்துள்ளார்.
விஜயகுமாரி (1950), கிருஷ்ண விஜயம் (1950) ஆகிய படங்களில் இணை இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
பின்னணிப் பாடகர்
திரைப்படத்துறையில் ஒரு பின்னணிப் பாடகராகவே இவர் புகழ் பெற்றார். இவரது இசைத்திறமை காரணமாக இவர் தமிழிசைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவர் தமிழில் மட்டுமன்றிச் சில கன்னடப் பாடல்களையும் பாடியுள்ளார்.

சி. எஸ். ஜெயராமன் பாடிய சில பாடல்கள் ...

1. கா கா கா (பராசக்தி 1952) - பாடல் : உடுமலை நாராயணகவி, இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்
2. நெஞ்சு பொறுக்குதில்லையே (பராசக்தி 1952) - பாடல் : பாரதியார், இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்
3. அன்பினாலே (பாசவலை 1956) - பாடல் : அ.மருதகாசி, இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி, தயாரிப்பு : மார்டன் தியேட்டர்ஸ்
4. உள்ளம் ரெண்டும் ஒன்று (புதுமைப்பித்தன் 1957) - பாடல் : T.N.ராமைய்யாதாஸ், இசை : G.ராமநாதன், தயாரிப்பு : சிவகாமி பிக்சர்ஸ்
5. விண்ணோடும் (புதையல் 1957) உடன் பாடியவர் : பி.சுசிலா - பாடல் : ஆத்மநாதன், இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி, தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்
6. குற்றம் புரிந்தவன் (ரத்தக்கண்ணீர் 1958) - பாடல் : ஆத்மநாதன், இசை : C.S.ஜெயராமன், தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்
7. ஈடற்ற பத்தினியின் (தங்கப்பதுமை 1958) - பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி, தயாரிப்பு :ஜீபிடர் பிக்சர்ஸ்
8. இன்று போய் நாளை (சம்பூர்ண ராமாயணம் 1958) - பாடல் : ஆத்மநாதன், இசை : K.V.மகாதேவன், தயாரிப்பு : M.A.V பிக்சர்ஸ்
9. தன்னைத் தானே (தெய்வப்பிறவி 1960) - பாடல் : உடுமலை நாராயணகவி, இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்
10. அன்பாலே தேடிய (தெய்வப்பிறவி 1960) - பாடல் : உடுமலை நாராயணகவி, இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்
11. சிரித்தாலும் (களத்தூர் கண்ணம்மா 1960) - பாடல் : கண்ணதாசன், இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : AVM
12. நீ சொல்லாவிடில் (குறவஞ்சி 1960) - பாடல் : R.கிருஷ்ணமூர்த்தி, இசை : T.R.பாப்பா, தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்
13. பெண்ணே உன் கதி (பொன்மாலை 1960) - பாடல் : மாயவநாதன், இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்
14. வண்ணதமிழ் (பாவைவிளக்கு 1960) - பாடல் : அ.மருதகாசி, இசை : K.V.மகாதேவன், தயாரிப்பு : ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்
15. காவியமா (பாவைவிளக்கு 1960) - பாடல் : அ.மருதகாசி, இசை : K.V.மகாதேவன், தயாரிப்பு : ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்
மறைவு
ஜெயராமன் 1995 ஆம் ஆண்டு சனவரி 29 ஆம் தேதி காலமானார்.


சி.எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு

‘காவியமா நெஞ்சில் ஓவியமா’, ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்….’, ‘இன்று போய் நாளை வாராய்…’, ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’ போன்ற பாடல்களில் இசையின் மேன்மையையும் பாடல்களில் வெளிப்படும் வளமான கற்பனையையும் மீறி வசீகரிக்கவைக்கிறது சி.எஸ்.ஜெயராமனின் குரல்.
தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி அளித்தவர் சி.எஸ்.ஜெ. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ வரை பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் ‘இசைச் சித்தர்’ சி.எஸ். ஜெயராமன் தான்.
கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் தெலுங்கில் என்.டி.ஆருக்கும் எண்ணற்ற திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை சி.எஸ்.ஜெ. பாடியிருக்கிறார். மிகச் சிறப்பான பாடகர்; இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, சி.எஸ்.ஜெ. டேபிள் டென்னிஸ், கேரம் போன்ற விளையாட்டுகளில் நிபுணத்துவமும் பெற்றிருந்தார். குறிப்பாக கேரம் விளையாட்டுப் போட்டிகளில் சி.எஸ்.ஜெயராமன் இருமுறை தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.
இந்த அரிய கலைஞரின் நூற்றாண்டு இது.1917-ம் ஆண்டு தை மாதம் 6-ம் நாள் சி.எஸ்.ஜெயராமன் பிறந்தார். சி.எஸ்.ஜெ. பற்றிப் பல பிரபலங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பை ‘ஓர் அரிய இசைப் பயணம்’ என்னும் நூலாக சி.எஸ்.ஜெயராமனின் மகள் சிவகாமசுந்தரி சமீபத்தில் வெளியிட்டார். தந்தையின் நினைவுகள் குறித்தும் பல பிரமுகர்கள் தந்தையைக் குறித்து அவரிடம் பகிர்ந்துகொண்ட முக்கியமான சம்பவங்களைக் குறித்தும் சிவகாமசுந்தரி நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
தமிழ்ப் பற்றும் தேசப் பற்றும்
இசையிலும் தமிழிலும் ஆத்மார்த்தமான ஈடுபாடு கொண்டவர். திருக்குறளுக்கு இசையமைத்து மேடையில் பாடியிருக்கிறார். மற்ற மொழிப் பாடல்களையும் பாடினால் நிறைய வாய்ப்புகள் வரும் என்ற நிலை இருந்த அந்த நாளிலும், தமிழ் மொழிப் பாடல்களையே மேடையில் பாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அப்பாவுக்கு தேசபக்தி அதிகம். அந்நாளில் ‘வெள்ளையனே வெளியேறு’ பாடலை ஒரு நாடகத்தில் பாடியதற்காக ஆங்கிலேய அரசால் கைதுசெய்யப்பட்டார். கச்சேரி மேடைகளில் ‘வாழிய செந்தமிழ்’ பாடலைப் பாடித்தான் கச்சேரியை முடிப்பார். ஒரு முறை சிதம்பரத்தில் மாலை 6 மணிக்குத் தொடங்கி காலை 6 மணிவரை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.
கேரம் டபுள்ஸ்
நாகசுர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்னம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், தங்கவேலு ஆகியோர் அவளுக்கு ஆத்மார்த்தமான நண்பர்கள். எங்களின் வீட்டுக்கு அவர்கள் வந்துவிட்டால் திருவிழா போல்தான் இருக்கும். இசைப் பணியில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தாலும் எங்களிடம் மிகவும் அன்பாக இருப்பார். அதிலும் என்னைத்தான் அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்குக் கூட்டிச் செல்வார். இசையைப் போன்றே அப்பாவுக்கு விளையாட்டிலும் அதிக ஆர்வம் இருந்தது. கேரம்போர்டு விளையாட்டில் சாம்பியனாகவே இருந்தார்.
ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்த கலைவாணர், மதுரம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் கேரம்போர்டில் டபுள்ஸ் ஆடினர். கலைவாணரும் மதுரமும் ஒரு செட். எம்.எஸ்.சுப்புலட்சுமியும் அப்பாவும் ஒரு செட். அப்பாவிடம் ஸ்டிரைக்கர் வந்தால் அடுத்து இருப்பவருக்கே வாய்ப்பு இருக்காதாம். அவரின் ஆட்ட நேர்த்தியைப் பார்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமி “என்ன மாயம்னா இது” என்று பாராட்டினாராம்.
அப்பா ஒரு கார் பிரியர். புதிதாக அறிமுகமாகும் காரை உடனே வாங்கிவிடுவார். அப்படித்தான் பிளேஸர் என்னும் கார் அறிமுகமானதாம். அதை மெட்ராஸில் வாங்கிய இரண்டாவது நபர் அப்பாதான். 8 கார்கள், பல ஏக்கரில் வீடு, தோட்டம் என இருந்தாலும், அவருக்கு ஏழை - பணக்காரன் வித்தியாசம் எல்லாம் இருந்ததில்லை. மிகப் பெரிய பிரபலமாக இருந்த அவர், தகரக் கட்டிலில் படித்துத் தூங்கிய சம்பவங்களும் உண்டு.
யார் இந்த பிரபலம்?
1982-ம் ஆண்டு. மாதம் ரூபாய் 500 மட்டுமே சம்பாதிக்கும் ஓர் இளைஞர். இதில் அறை வாடகைக்கு ரூபாய் 150 போய்விடும். சைதாப்பேட்டை, சேசாஷல முதலித் தெருவில் இருந்த மெட்ராஸ் பில்டிங்கின் அறை எண் 22-ல்தான் அந்த இளைஞர் தங்கியிருந்தார்.
ஒருநாள் பிற்பகல் 3 மணி அளவில் அந்த இளைஞரின் லாட்ஜுக்கு எதிரில் சிவப்புச் சுழல் விளக்கு பொருத்திய வெள்ளை நிற அம்பாசிடர் காரிலிருந்து பட்டு வேட்டி, பட்டு முழுக்கை சட்டை அணிந்த ஒருவர் வந்து இறங்கினார். அவரைப் பார்த்த அந்த இளைஞருக்கு நிச்சயமாக அவர் ஒரு பிரபலம் என்பது புரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை. காரை விட்டு இறங்கிய அந்தப் பிரமுகர் விறுவிறுவென லாட்ஜுக்கு எதிர்ப்புறத்திலிருந்த வீட்டுக்குள் விரைந்து சென்றார். அந்த இளைஞருக்கு இருப்புக் கொள்ளவில்லை. யாரென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. மெதுவாகச் சென்று கார் ஓட்டுநரிடம் விசாரித்தார். தமிழக அரசால் இசைக் கல்லூரிக்கு முதல்வராக அறிவிக்கப்பட்ட பெரிய பாடகர் அவர் என்று சொல்லியிருக்கிறார் கார் ஓட்டுநர்.
தகரக் கட்டிலில் தூக்கம்
அதற்குள் அந்தப் பிரமுகர் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவரிடம் அந்த இளைஞர் ‘நான் உங்களின் ரசிகன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியா என்றபடி அந்த இளைஞரின் தோளில் கைபோட்டபடி, சிறிது நேரம் உரையாடியிருக்கிறார். அதன் பின், “தம்பி உங்க ரூம்ல போய்க் கொஞ்ச நேரம் உட்காரலாமா?’’ என்று கேட்டார். அந்த இளைஞருக்கோ தயக்கம். அவர் தடுமாறுவதற்குள், அந்தப் பிரமுகர் லாட்ஜுக்குள் நுழைந்துவிட்டார். அந்த இளைஞர் அவருடைய அறையைக் காட்ட, அறைக்கு உள்ளே ஒரு தகரக் கட்டில், கிழிந்த பாய், நைந்த தலையணை, அழுக்கேறிய போர்வைதான் இருந்தது. அந்த இளைஞருக்கு என்ன செய்வது என்றே தெரியாத நிலையில், “டீ, காப்பி ஏதாவது குடிக்கிறீங்களா?’’ என்று கேட்டிருக்கிறார்.
“கொஞ்சம் குடிக்கத் தண்ணி இருந்தா போதும் தம்பி’’ என்ற அந்தப் பிரமுகர், அந்த இளைஞர் வெளியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு போவதற்குள் அந்தத் தகரக் கட்டிலிலேயே படுத்து உறங்கிப் போயிருந்தார். அரைமணி நேரத்துக்குப் பின் லேசான சலனத்துடன் சிறு இருமலுடன் எழுந்தார். “கொஞ்சம் அசதியாஇருந்திச்சு தூங்கிட்டேன்’’ என்றபடி, அந்த இளைஞர் எடுத்துவந்த தண்ணீரைக் குடித்துத் தாகம் தணிந்த பின், அந்த இளைஞரிடம், “தம்பி இங்க தூங்கிட்டிருந்த கொஞ்ச நேரத்துல கொஞ்சம் நிம்மதியா இருந்திச்சு. ஆட்கள் தொந்தரவு இல்ல. நட்புகளின் நச்சரிப்பு இல்ல. உறவினர்களின் அடாவடித்தனம் இல்ல. அமைதியா இருக்கு. உங்க அறையில கொஞ்ச நேரம் தூங்குனது நிம்மதியா இருந்துச்சு. இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் உங்க அறையில நான் ஓய்வெடுத்துக்கலாமா?” என்று கேட்டிருக்கிறார்.
நினைவுகளின் தொகுப்பு
அந்த இளைஞரும் அந்தப் பிரமுகரிடம் “எப்ப வேணாலும் வாங்கய்யா… என் அறைக்குப் பூட்டே கிடையாது. நீங்க வந்து ஓய்வெடுக்கலாம்’’ என்று சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகும் அந்தப் பிரமுகர் நான்கைந்து முறை அந்த இளைஞரின் அறையில் ஓய்வெடுத்திருக்கிறார். சில நேரங்களில் அந்த இளைஞர் இருக்கும் போதும், சில நேரங்களில் அந்த இளைஞர் இல்லாத போதும். அந்தப் பிரமுகர் என்னுடைய அப்பா சி.எஸ்.ஜெயராமன். அந்த இளைஞர் வீ.கே.டி.பாலன்.
அப்பாவின் நூற்றாண்டை ஒட்டி சிலரிடம் பேசியபோது வீ.கே.டி.பாலனைப் போல் பலரும் அப்பாவுடனான விதவிதமான சம்பவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டனர். என்னுடைய தந்தையின் நினைவுகளைப் பற்றி நான் எழுதுவதைவிடப் பலரின் அனுபவங்களைச் சேகரித்து ஒரு தொகுப்பாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துதான் ‘சிதம்பரம் எஸ். ஜெயராமன்: ஓர் இனிய இசைப் பயணம்’ எனும் நூலை வெளியிட்டேன்.
டெல்லி, மும்பை போன்ற மாநிலங்களில் இருக்கும் அப்பாவின் ரசிகர்கள் பலர் அவர் பாடி வெளிவராத பாடல்கள் சிலவற்றையும் எனக்கு அனுப்பியிருக்கின்றனர். எதிர்காலத்தில் இந்தப் பாடல்களை ஆல்பமாக வெளியிடும் எண்ணமும் இருக்கிறது என்றார் சிவகாமசுந்தரி.

நடிகர் எஸ். வி. சுப்பையா நினைவு தினம் ஜனவரி 29 ,1980.


நடிகர் எஸ். வி. சுப்பையா நினைவு தினம் ஜனவரி 29 ,1980.

எஸ். வி. சுப்பையா ஒரு இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் மொழி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தார். அவர் பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். எஸ். வி. சுப்பையா (இறப்பு: 29 சனவரி 1980) தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
விஜயலட்சுமி (1946)
கஞ்சன் (1947)
ஏகம்பவாணன் (1947)
ராஜகுமாரி (திரைப்படம்) (1947)
திருமழிசை ஆழ்வார் (1948) [1]
மாயாவதி (1949)
வேலைக்காரன் (1952)
ராணி (1952)
புதுயுகம் (1954)
சுகம் எங்கே (1954)
போர்ட்டர் கந்தன் (1955)
வள்ளியின் செல்வன் (1955)
மங்கையர் திலகம் (1955)
கோகிலவாணி (1956)
நானே ராஜா (1956)
ரம்பையின் காதல் (1956)
சௌபாக்கியவதி (1957)
மணாளனே மங்கையின் பாக்கியம் (1957)
அவன் அமரன் (1958)
நான் வளர்த்த தங்கை (1958)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (1959)
நான் சொல்லும் ரகசியம் (1959)
பாகப்பிரிவினை (1959) [3]
வாழவைத்த தெய்வம் (1959)
இரும்புத்திரை (1960)
பார்த்திபன் கனவு (1960)
களத்தூர் கண்ணம்மா (1960)
பாதை தெரியுது பார் (1960)
பெற்ற மனம் (1960)
யானைப்பாகன் (1960)
கப்பலோட்டிய தமிழன் (1961)
பாவ மன்னிப்பு (1961)
கண் கண்ட தெய்வம் (1967)
காவல் தெய்வம் (1969)

சனி, 27 ஜனவரி, 2018

நடிகை மியா பிறந்த நாள் ஜனவரி 28, 1992.


நடிகை மியா பிறந்த நாள் ஜனவரி 28, 1992.

மியா என்றறியப்படும் மியா ஜார்ஜ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துணை நடிகையாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். டாக்டர் லவ் , ஈ அடுத்த காலத்து ஆகிய மலையாளத் திரைப்படங்களில் ஏற்ற சிறு வேடங்களின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2012 ஆவது ஆண்டில் சிறந்த கேரள அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில்
செட்டயீசு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் 2014 ஆவது ஆண்டில் வெளியான அமர காவியம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.


பிறப்பு கிமி ஜார்ஜ்
28 சனவரி 1992
(அகவை 25)
தானே , மும்பை ,
மகாராட்டிரம் ,
இந்தியா
இருப்பிடம் பாலை , கோட்டயம்,
கேரளம் , இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்
அல்போன்சா கல்லூரி, பாலை
செயின்ட் தாமஸ் கல்லூரி, பாலை
பணி நடிகை
செயல்பட்ட
ஆண்டுகள்
2010– நடப்பு
சமயம் கிறிஸ்தவம்

நடிகை சுருதிஹாசன் Shruti Haasan , பிறந்த நாள்: ஜனவரி 28 , 1986 .


நடிகை சுருதிஹாசன்  Shruti Haasan , பிறந்த நாள்: ஜனவரி 28 , 1986 .

சுருதிஹாசன் ( Shruti Haasan , பிறப்பு: சனவரி 28 , 1986 ) பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.

இளமைப்பருவம்

சுருதிஹாசன் 1986, சனவரி 28 இல்
சென்னை நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும்,
மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார்.  பின்பு அமெரிக்கா
கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.
கலைத்துறை
பாடகர்
சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும்  , ஹேராம் ( தமிழ் மற்றும் இந்தி ), என்மன வானில்,
வாரணம் ஆயிரம் , லக் (இந்தி) மற்றும்
உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
நடிப்பு
இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்ப்பார்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.
இசையமைப்பு
2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.


பாடிய பாடல்கள்
ஆண்டு பாடல் படம்
1992 போற்றிப் பாடடி பெண்ணே தேவர் மகன்
1997 சாகோ கோரி சாச்சி 420
2000 ராம் ராம் ஹேராம்
2002
ரோட்டோர பாட்டுச்சத்தம் கேட்குதா
என்மன வானி
2008 அடியே கொல்லுதே வாரணம் ஆயிர
2009
ஆசுமா லக்
உன்னைப்போல் ஒருவன் உன்னைப்போ ஒருவன் வானம் எல்லை
அல்லா சானே
அல்லா சானே
ஈநாடு ஈநாடு
நிங்கி ஹட்டு
2010
செம்மொழியான தமிழ் மொழியாம்
நெனபிடு நெனபிடு (Nenapidu Nenapidu)
ப்ரித்வி
பெயொண்ட் த ச்னகே (Beyond The Snak)
ஹிச்ச்ஸ் (Hisss)
2011
இவான் இவான் உதயன் (தெலுங்கு)
எல்லே லாமா 7ஆம் அறிவு
ஸ்ரீசைதன்யா ஜூனியர் கல்லூரி
ஓ மை பிரண்ட்
சொக்குபொடி முற்பொழுது உன் கற்பனை
2012
கண்ணழகா காலழகா 3
தன் யே மேரா 3 (ஹிந்தி)
கண்ணுலதா காலுலதா 3 (தெலுங்கு)
2013
அல்விட டீ டே (D Day)
ஷட் அப் யுவர் மௌத்
என்னமோ ஏதோ
நடித்த படங்கள்
ஆண்டு படம்
கதா பாத்திரத்தின் பெயர்
2000 ஹேராம் ஷ்ருதி ராஜேஷ்
2009 லக்
ஆயிஷா குமார்,
நடாஷா குமார்
2011
அனகனாக ஒ தீறுடு பிரியா
தில் தோ பச்சா ஹை ஜி நிக்கி நரங்க்
ஏழாம் அறிவு சுபா ஸ்ரீனிவாசன்
ஓ மை ஃப்ரிஎண்ட் ஸ்ரீ சந்தன
2012 3 ஜனணி
காப்பர் சிங் பாக்யலக்ஷ்மி
2013
ராமையா வாஸ்தவையா சோனா
வலுப்பு ஷ்ருதி
டீ டே சுரையா
இராமய்யா வாஸ்தவாய்யா அமுல்லு
2014
யெவடு
ரேஸ் குர்ரம்
ஆகடு
பூஜை திவ்யா
2015
தேவர்
காப்பர் தேவகி
வெல்கம் பேக் ரஞ்ச்கன
ஸ்ரிமந்துடு சருசீல
புலி பவழமல்லி
ராக்கி ஹண்ட்சாம்
யாரா
வேதாளம்
இசையமைத்த படங்கள்
ஆண்டு படம்
2009 உன்னைப்போல் ஒருவன்

நடிகை மாளவிகா அவினாஷ் பிறந்த நாள் ஜனவரி 28, 1976.



நடிகை மாளவிகா அவினாஷ்  பிறந்த நாள் ஜனவரி 28, 1976.

மாளவிகா அவினாஷ் (பிறப்பு 28 ஜனவரி 1976) திரைப்பட மற்றும்
தொலைக்காட்சி நடிகையாவார். இவர் தமிழ் பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர். கணேசன் சாவித்ரி தம்பதியினருக்கு மகளாக 28 ஜனவரி 1976 ல் பிறந்தார்.
கைலாசம் பாலசந்தர் அவர்களின் அண்ணி நாடகம் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.

மாளவிகா அவினாஷ்
பிறப்பு 28 சனவரி 1976
(அகவை 41)
பணி திரைப்பட நடிகை ,
தொலைக்காட்சி நடிகை ,
சமயம் இந்து
பெற்றோர் கணேசன்
சாவித்ரி கணேசன்
வாழ்க்கைத்
துணை அவினாஷ்


தமிழ்த் திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் ம
2003 ஜே ஜே ஜமுனாவின் சகோதரி தம
2005 ஆறு கலாபவன் மணி மனைவி தம
2006 டிஷ்யூம் சந்தியாவின் தாய் தம
2006 ஆதி ராமச்சந்திரன் மனைவி தம
2006 கள்வனின் காதலி
ஹரிதாவின் அண்ணி தம
2008 ஜெயம் கொண்டான் சந்திரிகா தம
2010 இரண்டு முகம் திலகவதி தம
2011 வந்தான் வென்றான்
அர்ஜூன் மற்றும் ரமணாவின் தாய்
தம
தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
ஆண்டு நாடகம் கதாப்பாத்திரம் ம
2001–2003 அண்ணி த
2004–2006
நிலவைப் பிடிப்போம் த
2004–2006
சிதம்பர ரகசியம் த
2004–2006
ராஜ ராஜேஷ்வரி ராஜி த
2008–2009
காமெடி காலனி த
2008–2009 அரசி மதுரை திலகவதி த
2009-2013 செல்லமே முத்தழகி த

வெள்ளி, 26 ஜனவரி, 2018

ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் பிறந்த நாளா ஜனவரி 26.




ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் பிறந்த நாளா ஜனவரி 26.

பி. சி. ஸ்ரீராம் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஆவார். இவர், சென்னை திரைத்துறைப் பயிலகத்தின் மாணவர்களுள் ஒருவராவார். இவர் இயக்கிய ' குருதிப்புனல் ' எனும் திரைப்படம், ஆஸ்கார் விருதிற்காக அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. இயக்குனர்
மணிரத்னத்துடன் இணைந்து நாயகன் ,
அலைபாயுதே, மௌன ராகம் , அக்னி நட்சத்திரம் திரைப்படங்களில் பணியாற்றினார்.

வாழ்க்கையும், கல்வியும்

இவரின் பூர்வீகம் பாலக்காடு. பிறந்தது 1956 இல். படித்தது வளர்ந்தது சென்னையில். இவரது பெற்றோர்: சந்திரமௌலி - சாந்தா. சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கான பயிற்சியை முடித்தார்.

பணிமுறை

இவரது ஒன்பது வயதில் இவரின் தாத்தா பரிசளித்த 'பிரெளனி' கேமராவில் ஆரம்பித்தது இவரது ஒளிப்பதிவு. விளம்பரப் படங்கள், போஸ்டர்கள் என்று இவருக்கு பிடித்தமாதிரியாக இவருடைய திறமையை பயன்படுத்தி வருபவர்.

ஒளிப்பதிவாளராக

பி. சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த திரைப்படங்களின் பட்டியல்:
யாவரும் நலம் - 2009
கண்ட நாள் முதல் - 2005
வானம் வசப்படும் - 2004
குஷி - 2001
அலைபாயுதே – 2000
முகவரி - 2000
காதலர் தினம் - 1999
முகம் - 1999
குருதிப்புனல் - 1995
மே மாதம் – 1994
திருடா திருடா - 1993
தேவர் மகன் - 1992
மீரா - 1992
கோபுர வாசலிலே - 1991
கீதாஞ்சலி – 1989
அபூர்வ சகோதரர்கள்- 1989
அக்னி நட்சத்திரம் - 1988
தூரத்து பச்சை - 1987
நாயகன் - 1987
மௌன ராகம் - 1986
பூவே பூச்சூடவா - 1985
மீண்டும் ஒரு காதல் கதை – 1984
ஒரு வாரிசு உருவாகிறது - 1983
நன்றி மீண்டும் வருக - 1982
வா இந்தப் பக்கம் - 1982
தமிழ்த் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களான ஜீவா , கே. வி. ஆனந்த் , கே. வி. குகன் ஆகியோர் பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளர்களாக பணிபுரிந்துள்ளனர்.

இயக்குனராக

1992ஆம் ஆண்டில் 'மீரா' எனும் தமிழ்த் திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார்.
தொடர்ந்து 'குருதிப்புனல்' எனும் திரைப்படம் (1995).
ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘வானம் வசப்படும்’ எனும் திரைப்படம் (2004)

விருதுகள்

1988 ஆம் ஆண்டு - சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய திரைத்துறை விருது - 'நாயகன்' திரைப்படத்திற்காக

புதன், 24 ஜனவரி, 2018

நடிகை ஊர்வசி பிறந்த நாள்: ஜனவரி 25, 1967.



நடிகை ஊர்வசி பிறந்த நாள்: ஜனவரி 25, 1967.

ஊர்வசி (பிறப்பு: ஜனவரி 25, 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி . திரையுலகில் இவருடைய ஊர்வசி என்ற பெயரே மிகப் பிரபலமானது. இவர்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாளம் , தமிழ் , தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர்
கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.


குடும்பம்

இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவருடனான சச்சரவு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் தனிமையில் வாழ்ந்த அவர் 2014ஆம் ஆண்டு தனது 50ஆம் வயதில் சிவ பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.


செவ்வாய், 23 ஜனவரி, 2018

நடிகர் வி.எஸ்.ராகவன் V. S. Raghavan பிறந்த தினம் ஜனவரி - 24 .2015



நடிகர் வி.எஸ்.ராகவன் V. S. Raghavan பிறந்த தினம்  ஜனவரி - 24 .2015

வி.எஸ்.ராகவன் ( V. S. Raghavan, 1 சனவரி 1925 - 24 சனவரி 2015) பழம்பெரும் தமிழ் நாடக மற்றும் திரைப்பட , தொலைக்காட்சி நடிகர். 1954 ஆம் ஆண்டில் வைரமாலை எனும் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி, 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களையும் இவர் இயக்கி உள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை

தமிழ்நாடு காஞ்சிபுரம் அருகேயுள்ள வெம்பாக்கம் என்ற ஊரில் பிறந்த இராகவன், பி. எஸ். உயர்நிலைப் பள்ளியிலும்,
செங்கல்பட்டு புனித கொலம்பசு பள்ளியிலும் கல்வி கற்று, சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் இரண்டாண்டுகள் கற்றார். கல்லூரிப் படிப்பை முடிக்கும் போது, தந்தை இறந்து விடவே, இராகவன் தாயாருடன்
புரசைவாக்கத்தில் உள்ள சகோதரியுடன் சென்று வசித்து வந்தார்.

நாடகத்துறையில்

வி. எஸ். ராகவன், துவக்கத்தில் கே. பாலசந்தர் இயக்கிய பல மேடை நாடகங்களில் நடித்தார். நகையே உனக்கு நமஸ்காரம் என்ற பெயரில் நடித்த நாடகம் அந்த நாட்களில் மிகவும் பிரபலமானது

குடும்பம்

வி.எஸ். ராகவனுக்கு கே.ஆர்.சீனிவாசன், கே.ஆர்.கிருஷ்ணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மனைவி தங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இயக்கிய மற்றும் நடித்த திரைப்படங்களில் சில...

சந்திரிகா (1951) - இயக்குனர்
வைரமாலை (1954)
பொம்மை
நெஞ்சில் ஓர் ஆலயம்
கள்வனின் காதலி 1955
காலம் மாறிப்போச்சு (1956 திரைப்படம்) (1956)
சமய சஞ்சீவி (1957) – நடிகர் & இயக்குனர்
சாரங்கதாரா (1958)
மனைவியே மனிதனின் மாணிக்கம் (1959)
காத்திருந்த கண்கள் (1962)
காதலிக்க நேரமில்லை (1964)
கர்ணன் (திரைப்படம்) (1964)
சங்கே முழங்கு
சவாலே சமாளி
வசந்த மாளிகை
பட்டணத்தில் பூதம் (1967)
கல்லும் கனியாகும் (1968)
இரு கோடுகள் (1969)
பாலன் (1970)
உயிர் (1971)
புன்னகை (1971)
குறத்தி மகன் (1972)
உரிமைக்குரல் (1974)
குமாஸ்தாவின் மகள் (1974)
எல்லோரும் நல்லவர்களே (1975)
ஆயிரம் ஜென்மங்கள் (1978)
கல்யாணராமன் (1979)
தம்பிக்கு எந்த ஊரு
குரோதம் (1982)
ருசி (1984)
சுமை தாங்கி
நல்ல தம்பி (1985)
ஸ்ரீ ராகவேந்திரர் (1985)
நானும் ஒரு தொழிலாளி (1986)
உன்னால் முடியும் தம்பி (1988)
அவசர போலீஸ் 100 (திரைப்படம்) (1990)
ஹே ராம் (2000)
பூவெல்லாம் உன் வாசம் (2001)
காமராசர் (திரைப்படம்) (2004)
இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) (2006) – அரண்மனை சோதிடர்
அறை எண் 305ல் கடவுள் (2008)
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் (2010) (cameo)
மகிழ்ச்சி (2010)
நகரம் மறுபக்கம் (2010)
கலகலப்பு (திரைப்படம்) (2012) -
சகுனி (தமிழ்த் திரைப்படம்) (2012)
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்) (2013)
ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் (2014)
ஆல் இன் ஆல் அழகு ராஜா
நடித்த தொலைக்காட்சித் தொடர்கள்
ரேகா ஐபிஎஸ் {2008 - 2009}
பைரவி (2012)
வள்ளி _ சுவாமி நாதன்

நடிகை ரியா சென் பிறந்த நாள் ஜனவரி 24, 1981.



நடிகை ரியா சென் பிறந்த நாள் ஜனவரி 24, 1981.

ரியா சென் ( வங்காள: রিয়া সেন; இந்தி :रिया सेन, உச்சரிப்பு பெயர் [ˈrɪ.aː ˈʃeːn] ) (பிறப்பில் ரியா தேவ் வர்மா ஜனவரி 24, 1981) ஒரு இந்திய திரைப்பட நடிகையும் மாடலும் ஆவார். பாட்டி சுசித்ரா சென் , தாய் மூன் மூன் சென் மற்றும் சகோதரி ரெய்மா சென் ஆகிய திரை நட்சத்திரங்களின் குடும்பத்தில் இருந்து வந்தவரான ரியா சென் தனது நடிப்பு வாழ்க்கையை 1991 ஆம் ஆண்டில்
விஷ்கன்யா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் துவக்கினார். வர்க்கரீதியாக அவரது நடிப்புலக வாழ்க்கையின் முதல் வெற்றிப் படம்
ஸ்டைல் , 2001 ஆம் ஆண்டில் இந்தியில் வெளிவந்த இப்படம் என். சந்திரா இயக்கிய ஒரு செக்ஸ் காமெடி திரைப்படம் ஆகும். தயாரிப்பாளர் பிரிதிஷ் நந்தி இயக்கிய
இசைப் படமான ஜான்கார் பீட்ஸ் (2001), இந்தி மற்றும் ஆங்கிலக் கலப்பாக ஹிங்கிலிஷில் வெளிவந்த ஷாதி நம்பர். 1 (2005), மலையாள திகில் படமான ஆனந்தபத்ரம் (2005) ஆகியவை அவர் நடித்த பிற படங்களில் சில.
ஃபால்கனி பதக்கின் இசை வீடியோவான
யாத் பியா கீ ஆனே லகி யில் பதினாறு வயதில் நடித்த போது அவர் முதலில் ஒரு மாடலாகத் தான் அறியப்பட்டார். அப்போது முதல், அவர் இசை வீடியோக்களிலும்,
தொலைக்காட்சி விளம்பரங்களிலும், ஃபேஷன் ஷோக்களிலும், மற்றும்
பத்திரிகை அட்டைகளிலும் தோன்றியுள்ளார்.
ரியா ஒரு பொது ஆர்வலராகவும் இருந்து, எய்ட்ஸ் நோய் குறித்து மக்களிடம் இருந்த தவறான கருத்துகளை அகற்றும் நோக்கில், எய்ட்ஸ் விழிப்புணர்வு இசை வீடியோ ஒன்றில் தோன்றினார். குழந்தைகள் கண் பாதுகாப்புக்கும் அவர் நிதி திரட்ட உதவினார். நடிகர் அஷ்மித் படேலுடனான எம்எம்எஸ் வீடியோ துண்டு , புகைப்பட நிபுணர் தபூ ரத்னானியின் வருடாந்திர காலண்டரில் அரை நிர்வாண புகைப்படம், மற்றும் கலாச்சார பழம்பெருமை மிக்க இந்திய திரைத் துறையில் துணிச்சலான திரை முத்தங்கள் ஆகிய சர்ச்சைகளை ரியா சந்தித்துள்ளார்.

நடிப்பு வாழ்க்கை
முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில்
விஷ்கன்யா திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக ரியா தோன்றினார், அதில் அவர் இளம் வயது பூஜாவாக நடித்தார். 15 வயதில் அவர், தேசிய திரைப்பட விருதுகள் வென்ற இயக்குநர்
பாரதிராஜாவின் தாஜ்மஹால் (2000) என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்தார், ஆனால் இப்படம் வர்த்தகரீதியாக வெற்றி பெறவில்லை.  அக்ஷய் கன்னா ஜோடியாக லவ் யூ ஹமேசா திரைப்படத்தின் மூலம் அவரது பாலிவுட் அறிமுகம் நடைபெற இருந்தது; ஆனால் அந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டதால், 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த என்.சந்திராவின்
ஸ்டைல் திரைப்படம் அவரது முதல் இந்தி திரைப்படமாக அமைந்தது.  குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்த செக்ஸ் காமெடி திரைப்படம் தான் அந்த இயக்குநருக்கு பத்துவருட காலத்தில் முதல் வெற்றி திரைப்படமாக அமைந்தது.  சக புதுமுகங்களான
ஷர்மான் ஜோஷி, ஷாகில் கான் மற்றும் ஷில்பி முத்கல் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து ரியா நடித்த இந்த படம் ரியாவுக்கு ஒரு அறிமுக தளத்தை அமைத்துக் கொடுத்ததோடு, இந்தியாவில் குறைந்த பட்ஜெட் படங்கள் வர்த்தகரீதியாக வெற்றி பெறும் போக்கிற்கு ஒரு முன்னோடியாகவும் அமைந்தது.  ஸ்டைல் திரைப்படத்தின் தொடர்ச்சி அத்தியாயமாக வந்த
எக்ஸ்கியூஸ் மீ திரைப்படத்தில், ரியா மற்றும் படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு பதிலாக வளரும் நடிகைகளான சுனாலி ஜோஷி மற்றும் ஜெயா சீல் ஆகியோர் நடித்தனர்.

அவரது அடுத்த வெற்றித் திரைப்படம்
ஜான்கார் பீட்ஸ் , இது பழம்பெரும் இசையமைப்பாளரான ஆர் டி பர்மனின் இசையைச் சுற்றி நடக்கும் ஒரு காமெடிப் படம், இதில் அவர் ஷயான் முன்ஷி, ஜூஹி சாவ்லா , ராகுல் போஸ், ரிங்கி கன்னா மற்றும் சஞ்சய் சூரி ஆகியோருடன் இணைந்து ஒரு சிறிய கவர்ச்சி பாத்திரத்தில் நடித்திருந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் வெளியீட்டு இயக்குநராக இருந்த பிரிதிஷ் நந்தியால் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், 25 மில்லியன் ரூபாய் (525,000 அமெரிக்க டாலர்கள் ) பட்ஜெட்டில் தயாரானது, பிரிதிஷ் நந்தி கம்யூனிகேஷன்ஸ் (PNC) தயாரித்த சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களில் ஆறாவதாய் இது அமைந்தது. வித்தியாசமான கதையம்சத்துடன் ஒரு அலை போல் வெளிவந்த திரைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக இருந்தது, இத்தகைய திரைப்படங்கள் பெரும்பாலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமல் போயின என்றாலும்,  இத்திரைப்படம் வெளிவரும் சமயத்தில் மக்கள் கவனத்தைப் பெற்றதால், குறிப்பிட்ட வகை பார்வையாளர்களை மட்டும் கருத்தில் கொண்டு இருபது நகரங்களில் தேர்ந்தெடுத்து வெளியிட்டதில் இந்த படம் வர்த்தகரீதியான வெற்றியைக் கண்டது.
ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து பேசும் ஹிங்கிலீஷில் வெளிவந்த முதல் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.  2005 ஆம் ஆண்டில் இவர் ஷாதி நம்பர் 1 திரைப்படத்தில் நடித்தார், இதில் கதாநாயகிகளே இல்லை.  நவீன திருமணங்களை கருவாகக் கொண்ட இந்த காமெடி படம், இந்த வகையான படங்கள் எடுப்பதில் புகழ்பெற்ற ஒரு இயக்குநராக இருந்த, டேவிட் தவான் இயக்கத்தில் வந்ததாகும்.
ஸ்டைல் , ஜான்கார் பீட்ஸ் போன்ற திரைப்படங்கள் வர்த்தகரீதியாக வெற்றி பெற்றன என்றாலும், அவரது பிந்தைய கால திரைப்படங்கள் குறைந்த அளவு வருமானத்தையே தந்தன. அவற்றில் ஏராளமான படங்கள் முடிக்கப்படாமலேயும் இருக்கின்றன. அவரது படங்கள் பலவற்றிலும் அவர் கவர்ச்சி நடிகையாகவோ அல்லது கொஞ்ச நேரம் வந்து போகும் பாத்திரங்களிலோ தான் நடித்திருந்தார் என்றாலும்,  அவர் கதாநாயகியாக நடித்த சில திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களாகவே இருந்திருக்கின்றன. தில் வில் பியார் வியார் (2002), கயாமத் (2003) மற்றும்
பிளான் (2004) ஆகிய திரைப்படங்களில் அவர் சிறு பாத்திரங்கள் தான் ஏற்றிருந்தார் என்றாலும், இந்த மூன்று படங்களிலுமே அவரது கவர்ச்சி பாடல்கள் பெரும் கவனத்தை ஈர்த்தது, அதிலும் குறிப்பாக கயாமத் படத்தில் அவர் குமிழ்-குளியல் செய்யும் காட்சி.  இவை தவிர, ராம் கோபால் வர்மா கேட்டுக் கொண்டதன் பேரில் ஜேம்ஸ் (2005) திரைப்படத்திலும் அவர் கவர்ச்சி நடிகையாக நடித்தார், சமீரா ரெட்டி , இஷா கோபிகர் மற்றும் கோயனா மித்ரா போன்ற நடிகை-மாடல்களை இதே போன்ற பாத்திரங்களில் நடிக்க வைத்த வரலாறு ராம் கோபால் வர்மாவுக்கு உண்டு.  இது போக, சஜித் கானின் ஹே பேபி (2007) திரைப்படத்திலும் அவர் ஒரு நடனக் காட்சியில் பங்குபெற்றார், இந்த திரைப்படத்தில் ஏழு பிரதான பாலிவுட் நடிகைகள் நடித்திருந்தனர்.
இந்தியல்லாத திரைப்படங்கள்
பாலிவுட் திரைப்படங்கள் தவிர, ரியா
பெங்காலி , தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களிலும் தோன்றினார். மனோஜ் பாரதிராஜா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்த பாரதிராஜாவின்
தாஜ்மஹால் , பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த மனோஜ் பட்னாகரின் குட்லக் ஆகிய தமிழ் திரைப்படங்கள் மூலம் மிகப் பிரகாசத்துடன் அவரது சினிமா வாழ்க்கை துவங்கியது. இரண்டு திரைப்படங்களுமே வர்த்தகரீதியாக தோல்வியுற்றன, அதற்குப் பின் என்.மகாராஜனின் அரசாட்சி திரைப்படத்தில் ஒரேயொரு பாடல் காட்சிக்கு ஆடி தமிழ் திரைப்படங்களில் அவரது குறுகிய மறுபிரவேசம் அமைந்தது.
அவரது முதல் ஆங்கில மொழி திரைப்படம்
இட் வாஸ் ரெய்னிங் தேட் நைட் என்பதாகும், இது சுதேஷ்னா ராய் எழுதி மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கிய ஹேய் ப்ரிஷ்திர் ராத் எனும் பெங்காலி திரைப்படத்தின் தழுவலாகும். இந்த திரைப்படத்தில் அவர் தாய் மூன் மூன் சென் உடன் நடித்தார். பெங்காலி ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் தயாரான அஞ்சன் தத்தாவின்
தி போங் கனெக்ஷன் திரைப்படத்தில் ரியா தனது சகோதரியுடன் நடிப்பதாக இருந்தது, ஆனால் இறுதியில் அவர் இப்படத்திலிருந்து கழற்றி விடப்பட்டு அவருக்கு பதிலாக பியா ராய் சவுத்ரி இடம்பெற்றார். [32] இரண்டு சகோதரிகளும் பின்னர் இயக்குநர் அஜய் சின்ஹாவின் தி பேச்சலர் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர், இந்த பெங்காலி திரைப்படம், 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, இன்னும் முடிவடையாததாக இருந்தது.
இந்தியல்லாத மொழிகளில் அவரது திரைப்படங்களில் பெரிய வெற்றி பெற்றது சந்தோஷ் சிவனின் ஆனந்தபத்ரம் (2005) திரைப்படமாகும். ரியா மற்றும் சிவன் இருவருக்குமே முதல் மலையாளத் திரைப்படமாக அமைந்த இது,விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. கேரள மாநில விருதுகள் ஐந்தினை வென்ற இந்த திரைப்படம் அந்த ஆண்டில் மிகப் பெரும் வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது
அதில், திகாம்பரன் எனும் கொடிய மந்திரவாதியால் ஏமாற்றப்படும் கிராமத்துப் பெண் பாமா பாத்திரத்தை இவர் ஏற்றிருந்தார், மந்திரவாதியாக மனோஜ் கே. ஜெயன் நடித்தார். பாமாவை திகாம்பரன் மந்திரச் சடங்குகளுக்கான ஒரு ஊடகமாக மாற்றும் பாடல் நடனக் காட்சியில், நடன இயக்குநர் அபர்ணா சிந்தூர் கதகளி அசைவுகளை ஏராளமாகப் பயன்படுத்தியிருந்தார்.  கலாச்சார நடன மறுமலர்ச்சியின் ஒரு உயர்ந்த அம்சமாக கதகளியைப் பயன்படுத்துவதென்பது,
ஷாஜி கருணின் வானபிரஸ்தம் (1999) மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணனின்
காலமண்டலம் ராமன்குட்டி நாயர் (2005) உள்ளிட்ட மற்ற பெரிய இந்திய திரைப்படங்களிலும் இருந்திருக்கிறது. ரியாவின் முதல் தெலுங்கு திரைப்படமான நேனு மீகு தெலுசா....? படத்தில் மனோஜ் மஞ்சுவுக்கு ஜோடியாக அவர் நடித்தார்.
மாடலிங் வாழ்க்கை
பிரபல பாடகர்களின் இசை வீடியோக்களில் தோன்றியதையடுத்து ரியா ஒரு பிரபலமான மாடலாக இருந்தார், ஃபல்குனி பதக்கின் யாத் பியா கீ ஆனே லகி (வேறொரு தலைப்பு: சுடி ஜோ கன்காயி ), ஆஷா போஸ்லேயின் ஜூம்கா கிரா ரே , ஜக்ஜித் சிங் மற்றும் போஸ்லேயின் ஜப் சாம்னே தும் மற்றும்
கஹின் கஹின் சே , லதா மங்கேஷ்கர் , போஸ்லே மற்றும் சிங்கின் தில் கஹின் ஹோஷ் கஹின் , சோனு நிகமின் ஜீனா ஹை தேரே லியே மற்றும் ஷானின்
சுட்டா மரோ ஆகியவை இந்த வீடியோக்களில் அடக்கம். தனது முதல் இசை வீடியோவான யாத் பியா கீ ஆனே லகீ க்கு பதினாறு வயதில் அவர் நடித்தார். இதனால் அவரது ஆரம்ப தொழில் வாழ்க்கையில் அவர் முதன்மையாக இசை வீடியோக்களுக்கான ஒரு நடிகையாக அடையாளம் காணப்பட்டார்,  இந்த ஒரு பிம்பத்தை போக்க வேண்டும் என்று 2005 இல் அவர் விரும்பினார். ஃபெமினா , எலான் ,
மேன்'ஸ் வேர்ல்டு ,கிளாட்ராக்ஸ் ,
ஸேவி மற்றும் எலே , மாக்சிம் மற்றும்
காஸ்மோபொலிட்டன் ஆகியவற்றின் இந்திய பதிப்புகள் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளில் அட்டைப்படங்களிலும், அத்துடன் லக்மே ஃபேஷன் வீக் (2005-07) மற்றும் வில்ஸ் ஃபேஷன் வீக் (2006-07)போன்ற பெரும் ஃபேஷன் ஷோக்களின் காட்சிநடைகளிலும் ரியா இடம்பெற்றிருக்கிறார். தனது மூத்த சகோதரியான ரெய்மா சென்னுடன் இணைந்து இவர் ஃபேஷன் ஷோக்களில் பங்குபெற்றிருக்கிறார்.  மாடலிங் தவிர, விளம்பர உலகிலும் ரியா முயற்சி செய்திருக்கிறார். அவரது மாடலிங் வாழ்க்கையின் ஒரு உச்ச கட்டம் 2006 ஆம் ஆண்டில் வந்தது, அந்த ஆண்டில் அவர்
தீபிகா படுகோனேவுக்கு பதிலாக குளிர்பானமான லிம்காவின் விளம்பரத் தூதரானார். கோல்கேட் , டாபர் வாடிகா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் , காட்பரி டெய்ரி மில்க் சாக்கலேட், மற்றும் நிர்மா ஆகியவையும் அவர் தூதராக இருந்த பிற முக்கியமான விளம்பரங்களாகும்.
2004 ஆம் ஆண்டில், இந்தியாவின் முன்னணி புகைப்பட நிபுணரான தபூ ரத்னானியின் வருடாந்திர காலண்டரில் அவர் பாதி நிர்வாணமாக காட்சி தந்தார், இது இந்திய கவர்ச்சி உலகில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது. [53][54] தபூ கூற்றின் படி, "அவரது தாயார் காலண்டர் வெளிவந்த பிறகு தாமதமாகத் தான் பார்த்தார். அது ரொம்பவும் கவர்ச்சியாக இருப்பதாகவும் ரியா அதனை செய்திருக்கக் கூடாது என்றும் அவர் நினைத்தார். ஆனால் இந்த புகைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. தனது அடுத்த விளம்பர படத்திலும், இதில் செய்ததைப் போன்ற அதே வெளிச்சத்தில் தன்னைக் காட்டும் படி என்னை கேட்டுக் கொள்ளும் அளவுக்கு ரியா மிகவும் மகிழ்ச்சியுற்றார்." ஒரு மாடல் நடிகையின் தொழில்வாழ்க்கையின் சிறப்பம்சமாக, ரத்னானி அவரை தனது வருடாந்திர காலண்டருக்கென மூன்று வருடங்கள் ஒப்பந்தம் செய்வதற்கு அது இட்டுச் சென்றது. [57] காலண்டரில் அடுத்தடுத்து ஐந்து வருடங்கள் (2003-07) தொடர்ந்து இடம்பிடித்த ஒரே பெண் இவர் தான்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம்
மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா நகரில் ஜனவரி 24, 1981 இல் பிறந்த ரியா சென் முன்னாள் நடிகை மூன் மூன் சென்னின் மகளாவார், பெங்காலி சினிமாவில் ஒரு பழம்பெரும் நடிகையான சுசித்ரா சென்னின் பேத்தி. மும்பைக்கு இடம்பெயரும் முன்னதாக, கொல்கத்தாவில் தனது பெற்றோர் மற்றும் சகோதரி ரெய்மா சென்னுடன் அவர் வசித்து வந்தார், ரெய்மா சென்னும் ஒரு நடிகையே. அவரது தந்தை பாரத் தேவ் வர்மா திரிபுராவின் ராஜ குடும்ப உறுப்பினராவார். அவரது தந்தை வழி பாட்டியான இலா தேவி, கூச் பேஹார் சமஸ்தானத்தின் இளவரசி, அவரது இளைய சகோதரியான காயத்ரி தேவி
ஜெய்பூர் மகாராணி. அவரது தந்தை வழி பாட்டியான இந்திரா தான் பரோடா மகாராஜா மூன்றாம் சயோஜிராவ் கேக்வாட்டின் ஒரே மகள். ரியாவின் தாய்வழி கொள்ளுத்தாத்தாவான ஆதிநாத் சென் ஒரு புகழ்பெற்ற கொல்கத்தா வணிகர், அவரது தந்தை தினாநாத் சென் - இவர் முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரான அஷோக் குமார் சென்னின் உறவினராவார் - திரிபுரா மகாராஜாவிடம் திவான் அல்லது மந்திரியாக இருந்தார். பாட்டியின் ஆரம்ப பெயர் தான் இந்த சகோதரிகளுக்கு திரையில் கொடுக்கப்படுகிறது, ஆயினும் அவர்களது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எல்லாம் தேவ் வர்மா என்னும் துணைப் பெயர் தான் உள்ளது.
ரியா தனது பள்ளிப் படிப்பை லோரெடோ ஹவுஸ் மற்றும் ராணி பிர்லா கல்லூரியில் முடித்தார், இவை இரண்டுமே கொல்கத்தாவில் தான் உள்ளன. அதற்குப் பின் தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப கழகத்தில் படித்த அவர்,  நகை வடிவமைப்பை தனது பொழுதுபோக்காக கொண்டார். திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் தான் அணியும் ஆடைகளில் அநேகமானவை இவரே வடிவமைப்பதாகும்.  கதக்கில் ரியா பயிற்சி பெற்றுள்ளதோடு இப்போதும் விஜய்ஸ்ரீ சவுத்ரியிடம் அதனைத் தொடர்ந்து பயின்று வருகிறார், மற்றும்
குத்துச்சண்டையிலும் பயிற்சி எடுக்கிறார், ( பெல்லி நடனத்தின் 5 நிலைகளில் முதலாவது நிலையை நிறைவு செய்துள்ளார்).  பகுதி நேர மாடலிங் வாய்ப்புகள் மூலம் திரைப்படத் துறையில் நுழைந்த ரியா, தனது ஆரம்ப கால வாழ்க்கையில் கொல்கத்தாவிற்கும் மும்பைக்கும் இடையே பொதுப் போக்குவரத்தின் மூலமே பயணம் செய்து வந்தார். திரைப்படத் துறையில் கால்பதித்ததும், தெற்கு கொல்கத்தாவில் இருக்கும் பாலிகன்கே சர்குலர் சாலையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தார். ஜூஹூவில் உள்ள குடும்ப வீட்டிற்கு இடம்பெயர்ந்த அவர், தனது சகோதரியுடன் அங்கு வசித்து வருகிறார். [73][75] அவர் மும்பையில் தங்கியிருந்த போது, ஊடகங்கள் அவரை மாடல் மற்றும் நடிகராக இருக்கும் ஜான் ஆபிரகாமுடன் இணைத்து பேசின. இந்தி திரையுலக பத்திரிகைகளில், 2008 ஆம் ஆண்டில், அவர் நாவல் எழுத்தாளரான
சல்மான் ருஷ்டியுடன் இணைத்து பேசப்பட்டார், ஆனாலும் இருவரும் தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே என்று கூறினர்.
ரியா ஏராளமான எதிர்பாராத சம்பவங்களில் சிக்கியுள்ளார். பிரான்சில்
ஷாதி நம்பர் 1 படப்பிடிப்பின் போது, ஒரு
சண்டைக்காட்சி நடிகரின் மோட்டார்பைக் எதிர்பாராது மோதியதில் அவர் சுய உணர்வில்லாத நிலைக்கு சென்று விட்டார், ஆனாலும் அவருக்கு மோசமான காயம் எதுவும் ஏற்படவில்லை. ரியா தனது ஆண் நண்பரான அஷ்மித் படேலுடன் இணைந்து நடித்த சில்சிலே திரைப்படம் வெளியாவதற்கு கொஞ்சம் முன்னால்,
மல்டிமீடியா குறுஞ்செய்தி சேவையிலும் (MMS) இணையத்திலும், இருவரும் படுநெருக்கமாக இருக்கும் ஒரு 90 விநாடி வீடியோ கிளிப் ஒன்று புழங்கியது. கேமரா கைபேசிகளைப் பயன்படுத்தி பிரபலங்களை இதுபோன்ற சூழ்நிலைகளில் படம்பிடித்து வெளியான ஏராளமான சர்ச்சைகளில் இதுவும் ஒன்றாக இருந்தது.  அந்த எம்எம்எஸ் வீடியோவில் இருப்பது தானல்ல என்று ரியா மறுத்த போதிலும், இந்த சம்பவத்திற்கு பிறகு, இருவரும் பிரிந்து விட்டனர். [81] இந்த வீடியோ செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒரு விளம்பர பல்டி என்று ஒரு விமர்சகர் கருத்து தெரிவித்தார். 2007 ஆம் ஆண்டில், சாக்கலேட் மயக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு பாங்காக்கில் அவர் ஒரு குறுகிய போதையகற்ற அமர்வை எடுத்துக் கொண்டார்.
பொது ஆளுமை
ரியாவின் திரைப்பட நடிப்பு அவரை இந்தியாவில் ஒரு பால் அடையாளமாகவும் (செக்ஸ் சிம்பல்) இளைஞர்களின் முன்னோடி உருவமாகவும் ஸ்தாபித்திருக்கிறது.
 திரைப்படத் துறையில் நுழைந்தது முதல், ஷாதி நம்பர் 1  திரைப்படத்தில் நீச்சலுடையில் தோன்றியதற்காகவும், சில்சிலே திரைப்படத்தில் அஷ்மித் படேலுடனும்
ஸ்டைல் படத்தில் ஷர்மான் ஜோஷி உடனும் திரையில் முத்தக்காட்சியில் நடித்ததன் மூலம் அவர் கவனம் பெற்றிருக்கிறார். இந்திய சினிமா ஓரளவு பழமை கலாச்சாரத்தில் ஊறியது என்பதாலும், இது போன்ற காட்சிகள் குறித்த ரியாவின் சொந்த கருத்துகளாலும் இத்தகைய சம்பவங்கள் எல்லாம் கவனத்தை பெற்றன. சினிமா பிரபலமாகும் முன்பே, பார்ட்டிகளில் நிறைய கலந்து கொள்ளும் பெயர் அவருக்கு இருந்தது, இது அவரது பதினைந்தாம் வயதில் தொடங்கி விட்டது. ரியாவின் பொது ஆளுமை அவரது தாயார் மூன் மூன் சென் உடன் ஒப்பிடப்படுகிறது, அவரது காலத்தில் அவரும் பால் அடையாளமாகவே காணப்பட்டார், ரியாவின் சகோதரி ரெய்மா பெரும்பாலும் அவரது பாட்டியான சுசித்ராவுடன் ஒப்பிடப்படுகிறார்.
அவரது திரைத்துறை வாழ்க்கை இன்னும் பெரிய அளவிலான வெற்றிகளை சாதித்து விடவில்லை என்றாலும், ரியா பெருமளவில் ஊடக கவனம் பெற்றவராக இருக்கிறார். பெமினா பத்திரிகையின் செப்டம்பர் 2007 பதிப்பில் வெளியான
பெமினா 50 மிக அழகிய பெண்கள் பட்டியலில் ரியா ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். மிஸ்டர் இந்தியா போட்டியின் 2008 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் அவரும் தீர்ப்புக் குழுவில் உறுப்பினராக இருந்தார். ஹாத் ஸே ஹாத் மிலா , என்னும் எச்ஐவி/எயிட்ஸ் விழிப்புணர்வு இசை வீடியோவில் பாலிவுட் நட்சத்திரங்களான வஹீதா ரஹ்மான்,
ஷில்பா ஷெட்டி , தியா மிர்ஸா , ரவீனா தாண்டன் , ஜாக்கி ஷெராப், நஸ்ருதீன் ஷா, தபு மற்றும் லாரா தத்தாவுடன் சேர்ந்து ரியாவும் தோன்றினார்.  2003 ஆம் ஆண்டில் உலக குழந்தையர் வாரத்தின் போது (நவம்பர் 14-20) குழந்தைகள் கண் பாதுகாப்பிற்காக மெக்டொனால்டு இந்தியா நடத்திய நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் அவர் பங்குபெற்று உதவினார்.
திரைப்பட விவரம்
ஆண்டு திரைப்படம் இயக்குநர் ப
1991 விஷ்கன்யா ஜக் முந்த்ரா இ
1999
தாஜ் மஹால் பாரதிராஜா கத
குட்லக் மனோஜ் பட்னாகர் பி
2001 ஸ்டைல் என்.சந்திரா ஷீ
2002
தில் வில் பியார் வியார்
ஆனந்த் மஹாதேவன்
கவ ந
2003
சாஜீஸ் ரஜத் ரவய்ல் —
கயாமத் : சிட்டி அன்டர் த்ரட்
ஹாரி பவேஜா ஷீ
ஜான்கார் பீட்ஸ் சுஜாய் கோஷ் பி
2004
தில் னே ஜிஸே அப்னா கஹா
அதுல் அக்னிஹோத்ரி க
ப்ளான் ஹிரிடே ஷெட்டி ஷ
அரசாட்சி என்.மகாராஜன் இர வ
2005
ஆனந்தபத்ரம் சந்தோஷ் சிவன் ப
ஷாதி நம்பர் 1 டேவிட் தவான் ம
தும்... ஹோ நா!
என்.எஸ்.ராஜ் பரத் ரீம
ஜேம்ஸ் ரோகித் ஜூக்ராஜ் —
சில்சிலே காலீத் முகமது அ
இட் வாஸ் ரெய்னிங் தேட் நைட்
மகேஷ் மஞ்ச்ரேகர் —
2006
அப்னா அப்னா மணி மணி
சங்கீத் சிவன் ஷ
தி பேச்சலர் அஜய் சின்ஹா நி
ரோக்தா ரமேஷ் கோதார் —
லவ் யூ ஹமேஷா
கைலாஷ் சுரேந்திரநாத் ம
2007 ஹே பேபி சாஜித் கான் —
2008
நேனு மீகு தெலுசா....? அஜய் சாஸ்திரி —
ஹீரோஸ் —
ஜோர் லகா கே... ஹயா
கிரிஷ் கிரிஜா ஜோஷி
லவ் கிச்டி ஸ்ரீனிவாஸ் பாஷ்யம் —
2009 பேயிங் கெஸ்ட்ஸ்
பரிதோஷ் பெயிண்டர் ஆ

திங்கள், 22 ஜனவரி, 2018

நடிகை விமலா ராமன் பிறந்த நாள் ஜனவரி 23, 1984 .



நடிகை விமலா ராமன் பிறந்த நாள் ஜனவரி 23, 1984 .

விமலா ராமன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். கே. பாலச்சந்தர் இயக்கிய பொய் ( 2007 ) திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும், இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா,
ஜெயலட்சுமி கந்தையாவிடம் முறைப்படி
பரத நாட்டியம் பயின்று 2000வது ஆண்டில் அரங்கேறினார். கணினித்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற விமலா தரவுத்தள ஆய்வாளராகத் தொழிலாற்றுகிறார். 2006 ஆண்டில் இவர் ஆஸ்திரேலிய இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

பிறப்பு சனவரி 23, 1984 (அகவை 34)
சிட்னி , ஆஸ்திரேலியா
பணி திரைப்பட நடிகை
செயல்பட்ட
ஆண்டுகள்
2006–இன்று
உயரம் 1.68 மீட்டர்

திரையுலகில்
2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் பொய் தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விமலா ராமன் 2007 ஆம் ஆண்டில் டைம் என்ற மலையாளப் படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்து மலையாளத் திரைக்கு அறிமுகமானார். நஸ்ரானி என்ற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடனும் ,
மோகன்லாலுடன் காலேஜ் குமரன் படத்திலும் நடித்தார். பொய் படத்திற்குப் பின்னர் ராமன் தேடிய சீதை என்ற தமிழ்த் திரைப்படத்தில் சேரனுடன் இணைந்து நடித்தார். டேம் 999 என்ற பன்னாட்டு ஆங்கிலத் திரைப்படத்தில் சோகன் ராய் இயக்கத்தில் நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
படம் மொழி இயக்குநர்
பொய் தமிழ் கே. பாலசந்தர்
டைம் மலையாளம் ஷாஜி கைலாஸ்
பிரணயகாலம் மலையாளம் உதயன்
சூரியன் மலையாளம் வி.எம்.வினு
நஸ்ராணி மலையாளம் ஜோஷி
ரோமியோ மலையாளம் ராஜசேனன்
கல்கத்தா நியூஸ் மலையாளம் பிளெசி
காலேஜ் குமரன் மலையாளம்
ராமன் தேடிய சீதை தமிழ் ஜகன்சி
டுவெண்டி:20 மலையாளம்
அபூர்வா மலையாளம்
எவரெய்னா எப்புடெய்னா தெலுங்கு
கன்னடம்
சுக்களாந்தி அம்மை சக்கனைனா அப்பாய்
தெலுங்கு
ரங்கா த டொஙா தெலுங்கு
காயம் 2 தெலுங்கு
டேம் 999 ஆங்கிலம் [2] சோகன் ராய்
விருதுகள்
2004 - Miss India Australia 2004 விருது
Miss India Australia CyberQueen

நடிகை நிரோஷா பிறந்த நாள்: ஜனவரி 23, 1971


நடிகை நிரோஷா பிறந்த நாள்: ஜனவரி 23, 1971

நிரோஷா (பிறப்பு: ஜனவரி 23, 1971) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடைய தகப்பனார் எம். ஆர். ராதா ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ராதிகா , மோகன் ராதா ஆகியோர். இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் ராதா ரவி , எம். ஆர். ஆர். வாசு, ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.
இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார்.


நடித்த திரைப்படங்கள்
ஆண்டு படம் கதாப்பாத்திர
1988 அக்னி நட்சத்திரம் அனிதா
1988 செந்தூரப்பூவே பொன்னி
1988 சூரசம்ஹாரம் சுதா
1988 பட்டிக்காட்டு தம்பி
1989 என் கணவர்
1989 கை வீசம்மா கை வீசு
1989 சொந்தக்காரன்
1989 பொறுத்தது போதும்
1989 பாண்டி நாட்டுத் தங்கம் ராதா
1990 இணைந்தக் கைகள் ஜூலி
1990 பறவைகள் பலவிதம்
1990 மருது பாண்டி
1990 காவலுக்குக் கெட்டிக்காரன் அறிவுக்கொட
1990 மைந்தன்
1993 பாரம்பரியம்
2008 சிலம்பாட்டம்
2009 படிக்காதவன்
2010 அம்பாசமுத்திரம் அம்பானி

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

நடிகர் சந்தானம் பிறந்த நாள் ஜனவரி 21. 1980.


நடிகர் சந்தானம் பிறந்த நாள் ஜனவரி 21. 1980.

சந்தானம் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர்
மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
சந்தானம் என்றென்றும் புன்னகை படத்தில் பேசிய வசனம் சர்ச்சைக்குள்ளானது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

பிறப்பு 21 சனவரி 1980
(அகவை 38)
சென்னை , தமிழ்நாடு,
இந்தியா
தேசியம் இந்தியன்
பணி மேடைச் சிரிப்புரை , தொலைக்காட்சி நடிகர், திரைப்பட நடிகர், நகைச்சுவையாளர்.
செயல்பட்ட
ஆண்டுகள்
2004 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
உஷா
தொலைக்காட்சிப் பங்களிப்புகள்
1999 - டீ கடை பெஞ்சு
2002–2010 - சகளை vs ரகளை
2001–2004 - லொள்ளு சபா
திரைப்பட வரலாறு
நடித்துள்ள படங்கள்
ஆண்டு படத்தின் பெயர் கதாப்பாத்த
2002
பேசாத கண்ணும் பேசுமே
காதல் அழிவதில்லை
2004 மன்மதன் பாபி
2005
இதயத் திருடன் மகேஷ்
பிப்ரவரி 14
இங்கிலீஷ்காரன்
ஒரு கல்லூரியின் கதை
சச்சின் சந்தானம்
அன்பே ஆருயிரே
2006
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் அறிவு
சில்லுனு ஒரு காதல் ராஜேஷ்
வல்லவன் பல்லவன்
ரெண்டு சீனு
2007
வீராசாமி
வியாபாரி
முதல் கனவே
பரட்டை என்கிற அழகுசுந்தரம் சந்தோஷ் (சன்
கிரீடம் பாலசுப்பிரம
வீராப்பு
தொட்டால் பூ மலரும்
அழகிய தமிழ் மகன்
மச்சக்காரன்
பொல்லாதவன் சதீஷ்
பில்லா கிருஷ்ணா
2008
காளை
தீக்குச்சி
வைத்தீஸ்வரன்
கண்ணும் கண்ணும்
சந்தோஷ் சுப்பிரமணியம் சீனிவாசன்
அறை எண் 305-இல் கடவுள் ராசு
குசேலன் நாகர்கோவில் நாகராஜ்
ஜெயம்கொண்டான் பவானி
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
சிலம்பாட்டம் சாமா
2009
சிவா மனசுல சக்தி விவேக்
தோரணை வெள்ளைச்சா
மாசிலாமணி பழனி
வாமணன் சந்துரு
மோதி விளையாடு கடுகு
மலை மலை விமலகாசன்
கண்டேன் காதலை மொக்கை ரா
கந்தகோட்டை
பலம்
2010
தீராத விளையாட்டுப் பிள்ளை
குமார்
குரு சிஷ்யன்
மாஞ்சா வேலு மாணிக்கம்
தில்லாலங்கடி டாக்டர். பால்
மாஸ்கோவின் காவிரி தேவராஜ்
பாஸ் என்ற பாஸ்கரன் நல்லதம்பி
எந்திரன் சிவா
மந்திரப் புன்னகை செந்தில்
சிக்கு புக்கு கிருஷ்ணா
அய்யனார்
ஆட்டநாயகன்
குட்டி சாத்தான் சயிண்டிஸ்ட் வ
2011
சிறுத்தை காட்டுப்பூச்ச
தம்பிக்கோட்டை சைச
சிங்கம் புலி புச்சி பாபு
வானம் "டண்டனா டன்"
கண்டேன் சாமி
உதயன் முகுந்தன்
பத்ரிநாத்
தெய்வத் திருமகள் வினோத்
வேலாயுதம்
லீலை
முப்பொழுதும் உன் கற்பனைகள்
வேலூர் மாவட்டம்
யுவன் யுவதி
வந்தான் வென்றான்
ஒரு கல் ஒரு கண்ணாடி பார்த்தசாரதி
2012
இஷ்டம்
கலகலப்பு
வேட்டை மன்னன்
2013
கண்ணா லட்டு தின்ன ஆசையா கலியபெரும
அலெக்ஸ் பாண்டியன் காளையன்
சேட்டை நாகராஜ் (நடு நக்கி)
தீயா வேலை செய்யணும் குமாரு
மோகியா
தில்லு முல்லு அமெரிக்கன் மாப்பிள்ளை
சிங்கம் 2 சூசை
பட்டத்து யானை பூங்காவனம் (கௌரவம்)
தலைவா லோகு
ஐந்து ஐந்து ஐந்து கோபால்
யா யா ராஜ்கிரன் (ச
ராஜா ராணி சாரதி
வணக்கம் சென்னை நாராயணன்/பில்லா
ஆல் இன் ஆல் அழகு ராஜா
கல்யானம்/காளியண்ணகரீனா சோப்ர
என்றென்றும் புன்னகை பேபி
2014
வீரம் பெய்ல் பெரு
இங்க என்ன சொல்லுது ஏழுமுகம்
இது கதிர்வேலன் காதல் மயில்வாகனம்
பிரம்மன் நந்து
தலைவன் கண்ணன்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சக்தி [3]
வானவராயன் வல்லவராயன்
அரண்மனை பால்சாமி

வியாழன், 18 ஜனவரி, 2018

பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த நாள் ஜனவரி 19 ,193


பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த நாள் ஜனவரி 19 ,1933 -

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் ( ஜனவரி 19 ,1933 - மார்ச் 24 , 1988 ) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
பெயர் : சி. கோவிந்தராசன்
பிறப்பு: 19 ஜனவரி 1933
இறப்பு: 24 மார்ச் 1988.
பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்
பிறப்பிடம்: சீர்காழி
ஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி
இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:
தியானமே எனது - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
வதனமே சந்திர பிம்பமோ - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
செந்தாமரை முகமே - பி. யூ. சின்னப்பா பாடிய பாடல்
கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்
பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம்
திரைப்படப் பாடகர்
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
திரைப்படத்துக்காக பாடிய பாடல்கள்
( பட்டியல் முழுமையானதன்று )
எண் பாடல் பாடலாசிரியர்
1 பட்டணந்தான் போகலாமடி ... எ
2
அமுதும் தேனும் எதற்கு ...
க ம
3 மாட்டுக்கார வேலா ...
க ம
4 வில் எங்கே கணை இங்கே ...
எ வ இ
5
வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே ...

6
கொங்கு நாட்டுச் செங்கரும்பே ...
மாயவநாதன் ஜ
7 மலையே என் நிலையே ... ஜ
8 ஜக்கம்மா ... ஜ
9 பட்டணந்தான் போகலாமடி ... எ
10 ஒற்றுமையாய் வாழ்வதாலே ...
க ம
11 எங்கிருந்தோ வந்தான் ... பாரதியார் க ம
12 ஓடம் நதியினிலே ...
13 கோட்டையிலே ஒரு ஆலமரம் ...
14 நல்ல மனைவி நல்ல பிள்ளை ...
15
பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா ...
16
கண்ணான கண்மணிக்கு அவசரமா ...
17 கண்ணன் வந்தான் ...
பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில
பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை
காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை
ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு )
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.
நிலவோடு வான்முகில், இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)
வண்டு ஆடாத சோலையில் , ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
சிரிப்பது சிலபேர், யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)
ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்) - ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்
கண்ணன் வந்தான் (படம்: ராமு)(உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
தேவன் வந்தான் (படம்: குழந்தைக்காக) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்)
வெள்ளிப் பனிமலையின் (படம்: கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர்: திருச்சி லோகநாதன்)
இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
ஆயிரம் கரங்கள் நீட்டி (படம்: கர்ணன்) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)

விருதுகள்

சங்கீத நாடக அகாதமி விருது , 1980
இசைப்பேரறிஞர் விருது , 1984


பிளாஷ் ஃபேக்:சீர்காழி கோவிந்தராஜன் பாட மறுத்த பாடல்

கணீர் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் ஒரு பக்தி பழம், சிறந்த பாடகர் என்பதுதான் அதிகம் பேருக்கு தெரியும். ஆனால் அவர் சுயமரியாதை மிக்கவர் என்பது பலர் அறிந்திராத அவரின் மறுபக்கம். அதற்கு இரண்டு உதாரணங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.சிவாஜி நடித்த குங்குமம் படத்தில் இடம் பெற்ற பாடல் “சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொன்னதம்மா...” பலவித பிருகா பிரயோகங்களை வைத்து இசை அமைப்பாளர் மகாதேவன் இந்த பாடலை உருவாக்கி இதனை சீர்காழி கோவிந்தராஜ்தான் இதற்கு பொருத்தமானவர் என்று அவரை பாடவைத்து பாடலை பதிவு செய்துவிட்டார்.
இதை கேள்விப்பட்ட சிவாஜி கொதித்துப்போனார். காரணம் அப்போது சிவாஜிக்கு அனைத்து பாடல்களையும் டி.எம்.சவுந்தர்ராஜன்தான் பாடிக் கொண்டிருந்தார். அதனால் இந்தப் பாடலையும் டி.எம்.எஸ்தான் பாடவேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் மகாதேவனும் சீர்காழிக்கு பதிலாக டி.எம்.எஸ்சை பாட வைத்தார். விஷயத்தை கேள்விப்பட்ட சீர்காழி கோவிந்தராஜன். சிவாஜிக்கு போன் பண்ணி “அண்ணே மற்றவங்களுக்கு சாப்பாடு போடுங்க வேணாம்னு சொல்லலை. ஆனால் எச்சில் இலையில் போடாதீங்க” என்றார். சிவாஜியையே எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியமும், தன்மானமும் அவருக்கு இருந்தது.
திருவிளையாடல் படத்தில் “ஒரு நாள் போதுமா இன்னொரு நாள் போதுமா...” என்ற பாடல் இடம்பெற்றது. இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன்தான் பாட வேண்டும் என்று இயக்குனர் ஏ.பி.நாகராஜன் கேட்டார். அதற்கு சீர்காழி “என் பாட்டு எப்போதும் தோற்காது. தோற்கிற மாதிரியான பாடலை நான் பாட மாட்டேன்” என்று மறுத்துவிட்டார் பின்னர் அந்தப் பாடலை பாலமுரளி கிருஷ்ணா பாடினார். சீர்காழியை எப்படியாவது படத்தில் பாட வைக்க வேண்டும் என்று கருதிய ஏ.பி.நாகராஜன் அவரை படத்தின் முதல் பாடலான “தேவா சம்போ மகாதேவா...” பாடலை பாட வைத்தார்.


வெண்கலக் குரலோன் புகழ்பெற்ற பிரபல கர்னாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (Sirkazhi S.Govindarajan) பிறந்த தினம் இன்று (ஜனவரி 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l நாகை மாவட்டம் சீர்காழியில் (1933) பிறந்தவர். தந்தை நடத்தும் ராமாயண இசை நாடகத் தில் சிறு வயது ராமனாக நடித்து பாடல்கள் பாடி அனைவரையும் கவர்ந்தார் குழந்தையாக இருந்த கோவிந்தராஜன்.
l சீர்காழி வாணிவிலாஸ் பாட சாலையில் பயின்றார். இளம் வயதில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கிட்டப் பாவின் பாடல்களை விரும்பிக் கேட்டு தானும் பாடுவார். தேவி நாடகக் குழு, பாய்ஸ் நாடக கம்பெனியில் இணைந்து நடிப்புத் திறன், இசைத் திறனை வளர்த்துக்கொண்டார்.
l ‘சினிமா உலகம்’ என்ற பத்திரிகையை நடத்திவந்த பி.எஸ்.செட்டியார், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் துணை நடிகராக இவரை சேர்த்துவிட்டார். ஓய்வு நேரத்தில் இவர் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும், இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று வாழ்த்தினார்கள்.
l பி.எஸ்.செட்டியார் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். 1949-ல் இசைமாமணி பட்டம், 1951-ல் சங்கீத வித்வான் பட்டம் பெற்றார். சிறந்த புல்லாங்குழல் கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடம் பயிற்சி பெற்று இசைத் திறனை வளர்த்துக்கொண்டார்.
l கச்சேரிகளுக்கு இவரையும் உடன் அழைத்துச் செல்லும் சுவாமிநாத பிள்ளை, இவரை தன் மகன் என்றே மற்றவர்களிடம் அறிமுகம் செய்வாராம். கடும் உழைப்பாளியான சீர்காழி, அயராத சாதகம் மூலம் இசை உலகில் நிலைத்த இடம் பெற்றார். சென்னை மியூசிக் அகாடமியில் 1951-ல் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.
l 1953-ல் பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் ‘சிரிப்புத்தான் வருதையா’ என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதற்கு முன்னரே ஔவையார் திரைப்படத்துக்காக ‘ஆத்திச்சூடி’ பாடியிருந்தார்.
l ‘பட்டணந்தான் போகலாமடி’, ‘அமுதும் தேனும் எதற்கு’, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’, ‘கண்ணன் வந்தான்’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, ‘தேவன் கோவில் மணியோசை’ போன்ற பாடல்கள் இவருக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுத் தந்தன. ஏராளமான பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.
l சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்ம உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1983-ல் சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. சென்னை தமிழ் இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.
l இசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்களையே பாடியவர். இலங்கை, லண்டன், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
l 30 ஆண்டுகளுக்கு மேல் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் மாரடைப்பால் (1988) காலமானார்.