புதன், 30 நவம்பர், 2016

பாடகர் உதித் நாராயண் பிறந்த நாள் டிசம்பர் 1.

பாடகர் உதித் நாராயண் பிறந்த நாள் டிசம்பர் 1.

உதித் நாராயண் எனப் பரவலாக அறியப்படும் உதித் நாராயண் ஜா ( நேபாளி: उदित नारायण) வணிக ரீதியான இந்தி , உருது , தமிழ் ,தெலுங்கு , மலையாளம், கன்னடம் ,
ஒரியா , அஸ்ஸாமி மற்றும்
நேபாளி மொழித்
திரைப்படங்களில் பாடிவரும்
பின்னணிப் பாடகர் ஆவார்.
நாராயண் 500க்கும் மேற்பட்ட இந்தி
திரைப்படங்களில் மற்றும் 30
மாறுபட்ட மொழிகளில் 15,000
க்கும் மேற்பட்ட பாடல்கள்
பாடியிருக்கிறார். அவர்
இந்தியாவின் உயரிய
குடிமக்களின் கெளரவ விருதான
பத்மஸ்ரீ விருதினை 2009 ஆம்
ஆண்டில் பெற்றார்.
தொழில்
வாழ்க்கை
உதித் நாராயண் ஜா நேபாளத்தில்
பிராமின் விவசாயி ஹரே
கிருஷ்ண ஜா மற்றும் தாயார்
புவனேஸ்வரி தேவி
ஆகியோருக்கு அவரது தாய்வழி
பாட்டன்பாட்டிகள் இல்லத்தில்
டிசம்பர் 1, 1955 ஆம் ஆண்டில்
பிறந்தார். அவர் தெற்கு
நேபாளத்தில் சப்தாரி
மாவட்டத்தில் ராஜ் பிஜாரி
சிறுநகரத்தில் பிறந்தார் என
வதந்திகளும் நிலவுகின்றன.
திரு. நாராயண் அதனை
மறுக்கிறார்.
நாராயண் குணாலி பஜாரில்
(சஹார்சா,தற்போது சுபால்,
பீகார்) பயின்றார். அங்கு அவர்
அவரது எஸ்.எல்.சி. இல் தேறினார்.
மேலும் பின்னர்  ரத்னா
ராஜ்ய லக்ஸ்மி கேப்பஸில்
(காட்மண்டு) அவரது இடைநிலைப்
படிப்பை நிறைவு செய்தார்.
உதித் நாராயண் நேபாளத்தில்
அவரது தொழில் வாழ்க்கையை
மைதிலி மற்றும் நேபாள
நாட்டுப்புறப் பாடல்களுக்கான
நிலையக் கலைஞராக காட்மண்டு
வானொலி நிலையத்தில்
பாடியதன் மூலம் தொடங்கினார்.
அதில் எட்டு ஆண்டுகள்
பணியாற்றிய பிறகு, இந்தியத்
தூதரகம் அவருக்கு பம்பாயில்
மதிப்பு மிக்க, பாரதிய வித்யா
பவனில் இசை ஊக்கத்தொகையில்
மரபார்ந்த இசையைப்
பயில்வதற்கான வாய்ப்பை
வழங்கியது. அவர் 1978 ஆம் ஆண்டில்
பம்பாயுக்கு இடம்பெயர்ந்தார்.
1980 ஆம் ஆண்டில் அவர் அவரது
முதல் முன்னேற்றத்தை,
குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்
ராஜேஷ் ரோஷன் அவரது இந்தி
திரைப்படம் உனீஸ் பீஸ் இல்
பாடுவதற்காக கேட்ட போது
அடைந்தார், அதில் அவர் முகமது
ரஃபி மீதான அவரது ஈர்ப்பினால்
அந்த வாய்ப்பைப் பெற்றார்.
எனினும், உண்மையில் அவரது
தொழில் வாழ்க்கை வெற்றிக்கதை
1988 ஆம் ஆண்டில் வெற்றிகரமான
பாலிவுட் திரைப்படம் கயாமத் சே
கயாமத் தக் உடன் ஆரம்பமானது,
அது அவருக்கு பிலிம்ஃபேர்
விருதினைப் பெற்றுத்தந்தது.
அந்தத் திரைப்படத்தினால், நடிகர்
அமீர் கான் , நடிகை ஜூஹி
சாவ்லா மற்றும் பின்னணிப்
பாடகி ஆல்கா யாக்னிக்
ஆகியோரும் நட்சத்திர அந்தஸ்து
பெற்றனர். கயாமத் சே கயாமத்
தக்கின் வெற்றிக்குப் பிறகு, அவர்
இந்தியத் திரைப்படத்துறையில்
முன்னணிப் பின்னணிப்
பாடகர்களில் ஒருவராக
மாறினார்.
அதே நேரத்தில், அவர்
நேபாளத்தில் நன்கு அறியப்பட்ட
பிரபலமாகவும் மாறினார்
மேலும் பல பிரபலமான நேபாளத்
திரைப்படங்களுக்காகப்
பாடியுள்ளார். அவர் குசுமெ
ரூமல் மற்றும் பிராடி போன்ற
சில நேபாளத் திரைப்படங்களில்
நடிக்கவும் செய்திருக்கிறார்.
ஆனால் அதில் பெருமளவில்
வெற்றியடையவில்லை. அவர்
நேபாளியத் திரைப்படங்களிலும்
பணியாற்றி இருக்கிறார்,
குறிப்பாக இசையமைப்பாளர்
ஷாம்பூஜீத் பாஸ்கோடாவுடன்
பணியாற்றி இருக்கிறார். அவரது
ஆரம்ப பாடகர் தொழில்
வாழ்க்கையில், அவர் ஷிவ ஷங்கர்,
நாடிகாஜி மற்றும் கோபால்
யோன்சான் ஆகியோரால்
இசையமைக்கப்பட்ட பாடல்களைப்
பாடியிருக்கிறார். 2004 ஆம்
ஆண்டில், அவர் அவரது முதல்
தனிப்பட்ட நேபாளிய ஆல்பமான
உபஹார் ஐ வெளியிட்டார், அதில்
அவர் அவ்வரது மனைவி தீபா
ஜாவுடன் இணைந்து
ஜோடிப்பாடலும்
பாடியிருக்கிறார்.
அவர் ராகுல் தேவ் பர்மன், ஏ. ஆர்.
ரகுமான், ஜக்ஜித் சிங், அனு
மாலிக், ஜதின் லலித்,
லக்ஸ்மிகாந்த்-பியாரிலால்,
கல்யாண்ஜி-ஆணந்த்ஜி, பப்பி
லஹரி, விஷால் பரத்வாஜ், நடீம்-
ஸ்ராவன், ராஜேஷ் ரோஷன், சங்கர்
மகாதேவன், ஹிமேஸ் ரெஷமியா,
பிரீதம் சக்ரவர்த்தி, விஷால்-சேகர்
போன்றை இசைக் கலைஞர்கள்
மற்றும் யாஷ் சோப்ரா, சஞ்சய் லீலா
பண்சாலி, அஷூடோஸ் குவாரிகர்
மற்றும் கரண் ஜோஹர் போன்ற
முன்னணி இயக்குனர்களுடனும்
சுனிதி ஷௌஹான்,மஹாலஷ்மி
ஐயர் போன்ற பாடகர்களுடனும்
பணியாற்றி இருக்கிறார். அதில்
லகான், டார், தில்வாலே
துல்ஹனியா லேஜாயெங்கே,
குச் குச் ஹோத்தா ஹை, தில் டு
பாகல் ஹாய், மொகபத்தீன்,
தேவ்தாஸ், கல் ஹோ ந ஹோ,
ஸ்வதேஸ் மற்றும் வீர் ஜாரா
உள்ளிட்டவை அடங்கும்.
2004 ஹிட்ஸ் எஃப்எம் விருதுகளில்,
அவர் ஆண்டின் சிறந்த பதிவு
மற்றும் ஆண்டின் சிறந்த ஆல்பம்
ஆகிய இரண்டு முக்கிய
பிரிவுகளில் வென்றார்.
பஜன் சங்கம்,
பஜன் வாடிகா, ஐ லவ் யூ, தில்
தீவானா , யே தோஸ்தி, லவ் இஸ்
லைஃப் , ஜும்கா டே ஜும்கா ,
சோனா நோ காடுலோ, துலி
கங்கா மற்றும் மா தாரினி
போன்றவை நாராயணின் மற்ற
பிற தனிப்பட்ட ஆல்பங்கள் ஆகும்.
அவர் சோனி டிவியில் பாடகர்
கரானாவின் (பாடகர்களின்
குடும்பம்) கூடுதல் சார்ந்த
ரியாலிட்டி நிகழ்ச்சியான வார்
பரிவாருக்கான நீதிபதிகளில்
ஒருவராக இருந்தார். அவர் சக
பின்னணிப் பாடகர் குமார் சானு
மற்றும் பிரபல இசை இரட்டையர்கள்
ஜதின்-லலித் ஆகியோரில்
ஒருவரான ஜதின் பண்டிட்
ஆகியோருடன் இணைந்து
அப்பணியை மேற்கொண்டார்.
நாராயண் இந்தியாவிலும்
வெளிநாட்டிலும் பல மேடை
நிகழ்ச்சிகளிலும் பங்கு
பெற்றிருக்கிறார். மேலும் அவர்
பல்வேறு விருதுகளைப்
பெற்றிருக்கிறார். அதில் ஸ்க்ரீன்
வீடியோகான் விருது, எம்.டி.வி
சிறந்த வீடியோ விருது மற்றும்
பிரைட் ஆஃப் இந்தியா கோல்ட்
விருது உள்ளிட்டவையும்
அடங்கும்.
தனிப்பட்ட
வாழ்க்கை
நாராயண் மும்பையில் வசித்து
வருகிறார். அவர்
திருமணமானவர், அவருக்கு ஒரு
மகன் இருக்கிறார். அவரது
மனைவி தீபா நாராயனை
(கொல்கத்தாவைச் சேர்ந்தவர்) அவர்
1985 ஆம் ஆண்டில் திருமணம்
செய்து கொண்டார். அவர் ஒரு
பெங்காளிப் பாடகி ஆவார்.
மேலும் இருவரும் இணைந்து
தில் தீவானா என்ற பெயரில்
ஆல்பம் பதிவு
செய்திருக்கின்றனர்.
அவரது மகன் ஆதித்யா நாராயண்
1990 ஆம் ஆண்டுகளில் இந்தித்
திரைப்படங்களில் குழந்தை
நட்சத்திரங்களுக்குப் பாடுபவராக
அவரது தொழில் வாழ்க்கையைத்
தொடங்கினார். மிகவும் சமீபத்தில்,
அவர் இந்தியத் தொலைக்காட்சி
பாட்டுப் போட்டியான ச ரீ க ம பா
இன் இறுதி 2 பருவங்களைத்
தொகுத்து வழங்கினார்.
20 ஏப்ரல் 2006 ஆம் ஆண்டில், பீகாரின்
சுபால் மாவட்டத்தில்
வசித்துவரும் ரஞ்சனா ஜா,
உதித்நாராயணின் முதல்
மனைவி என சர்ச்சையைக்
கிளப்பினார். நாராயண்
முதலில் அவரது குற்றச்சாட்டை
மறுத்த போதும், பின்னர் அவர்
அவரது குற்றச்சாட்டை
நிரூபிப்பதற்கான புகைப்படங்கள்
மற்றும் ஆவணங்களை வழங்கிய
பின்னர், இறுதியாக அவரை
இவரது முதல் மனைவியாக
ஏற்றுக் கொண்டார். மேலும்
அவருடன் உடன்படிக்கைக்கு
முன்வந்தார்.
சில
குறிப்பிடத்தக்க
இந்தி பாடல்கள்
"பாபா கெஹ்டெ ஹாய்" - க்யாமட்
செ கயாமத் டக் (1988)
"ஒயெ ஒயெ" - ட்ரிதெவ் (1989)
"முஜே நீட் நா அயெ"- தில் (1990)
"ஹம் நெ கார் சோரா ஹாய்"-
தில் (1990)
"ஹம் பாயர் கர்னெ வாலெ"- தில்
(1990)
"மெரா தில் டெரெ லியே தடக்ட
ஹாய்" - ஆஷிகுய் (1990)
"பின் டெரெ சனம்" - யாரா
டில்டாரா (1991)
"எக் டூஸ்ரெ செ கர்டெ ஹெயின்
ப்யார் ஹம்" - ஹம் (1991)
"பெஹ்லா நாஷா" - ஜோ ஜீடா
ஊஹி சிக்கந்தர் (1992)
"ஜவானி தீவானி" - சமத்கர் (1992)
"தக் தக் கர்னெ லகா" - பீடா (1992)
"ஜாடோ டேரி நசர்" - டர் (1993)
"டு மெரெ சம்னெ" - டர் (1993)
"பூலோ சா செரா டெரா" -
அனாரி (1993)
"டு சீஸ் படி ஹாய் மஸ்ட் மஸ்ட்" -
மோஹ்ரா (1994)
"ருக் ஜா ஓ தில் தீவானெ" -
தில்வாலெ துல்ஹனியா லே
ஜாயேங்கெ (1995)
"ஹோ கயா ஹார் டுஜ்கோ டு
ப்யார் சஜ்னா" - தில்வாலே
துல்ஹனியா லே ஜாயேங்கே
(1995)
"ராஜா கோ ரானி செ ப்யார்
ஹோ கயா" - அகெலெ ஹம்
அகெலெ டம் (1995)
"க்யா கரன் கெ நா கரன்" - ரங்கீலா
(1995)
"யாரூம் சுன் லொ ஜரா" -
ரங்கீலா (1995)
"பர்தேசி பர்தேசி" - ராஜா
இந்துஸ்தானி (1996)
"ஆயே ஹோ மெரெ ஜிந்தகி
மெயின்" - ராஜா இந்துஸ்தானி
(1996)
"ஹோ நஹின் சாக்டா" -
தில்ஜாலெ (1996)
"தில் கி தட்கன் கெஹ்டி ஹாய்" -
மொஹப்பத் (1997)
"மொஹப்பத் கி நஹி ஜாடி" -
ஹீரோ நம்பர். 1 (1997)
"சோனா கிட்னா சோனா ஹாய்"
- ஹீரோ நம்பர். 1 (1997)
"ஆரே ரெ ஆர்" - தில் டு பாகல்
ஹாய் (1997)
"தில் டு பாகல் ஹாய்" - தில் டு
பாகல் ஹாய் (1997)
"போலி செ சூரத்" - தில் டு
பாகல் ஹாய் (1997)
"லே காயி" - தில் டு பாகல்
ஹாய் (1997)
"இஷ்க் ஹ்வா கைசே ஹ்வா" -
இஷ்க் (1997)
"ஏ அஜ்னபி" -தில் சே (1998)
"சந்த் சுப்பா" - ஹம் தில் தே
சுகே சனம் (1999)
"தால் சே தால் மிலா" - தால்
(1999)
"சஹா ஹாய் துஜ்கோ" - மான்
(1999)
"மேரே மான்" - மான் (1999)
"நாஷா யெ ப்யார் கா நாஷா" -
மான் (1999)
"குஷியன் அவ்ர் காம்" - மான்
(1999)
"சாஹா ஹாய் துஜ்கோ" - மான்
(1999)
"ஹம் சாத்-சாத் ஹெயின்" - ஹம்
சாத்-சாத் ஹெயின் (1999)
"சோட்டே சோடே பாயியோன்
கெ"" - ஹம் சாத்-சாத் ஹெயின்
(1999)
"மாரே ஹிவ்டா"" - ஹம் சாத்-சாத்
ஹெயின் (1999)
"தில் நே யே கஹா ஹாய் தில்
சே" - தட்கன் (2000)
சுப்கே செ சன், சோகோ கெ
ஜீலோன் கா - மிசன் காஷ்மீர் (2000)
"போலே சுடியன்" - கபி குஷி
கபீ காம் (2001)
"உத்ஜா காலே காவா" - காடார்
(2001)
"ராதா கைசே நா ஜாலே" -
லகான் (2001)
"மித்வா" - லகான் (2001)
"கானன் கானன்" - லகான் (2001)
மஹாதேவன்,ஷான்.
"ஓ ரி சோரி" - லகான் (2001)
"சலக் சலக்" - தேவ்தாஸ் 2002)
"ஊ சந்த் ஜாசி" - தேவ்தாஸ் (2002)
ஜோ பாய் காஸ்மெயின் - ராஸ்
(2002 திரைப்படம்) 2002)
கிட்னா பெசெயின் ஹோகெ"-
காசூர் (2002)
ஜிந்தகி பான் காயே ஹோ டம்"-
காசூர் (2002)
கோய் மில் கயா - கோய் மில்
கயா (2003)
தேரே நாம் - தேரே நாம் (2003)
தும்சே மில்னா - தேரே நாம்
(2003)
சந்த் - தேரே நாம் (2003)
இதார் சாலா மெயின் உதர்
சாலா - கோய் மில் கயா (2003)
மெயின் யாஹான் ஹூன் - வீர்
ஜாரா (2004)
ஆங்கேன் பந்த் கார்க் - ஐட்ராஸ்
(2004)
வோஹ் டஸ்ஸாவர் - ஐட்ராஸ் (2004)
முஜ்சே சாதி கரோகி - முஜ்சே
சாதி கரோகி (2004)
லால் டுபாட்டா - முஜ்சே சாதி
கரோகி (2004)
ராப் கரே - முஜ்சே சாதி
கரோகி (2004)
ஐசா தேஸ் ஹாய் மெரா -வீர்
ஜாரா (2004)
யே ஹம் ஆ கயே ஹாய் கஹன் -
வீர் ஜாரா (2004)
யே டாரா வோஹ் டாரா -
ஸ்வதேஸ் (2004)
யுன் ஹை சலா சல் - ஸ்வதேஸ்
(2004)
க்யோன் கி - க்யோன் கி (2005)
ஃபாலக் டேகூன் - கரம் மசாலா
(2005)
கைய்கே பான் பனாரஸ்வாலா -
டான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன்
(2006)
முஜே ஹாக் ஹாய் - விவா (2006)
ஈகைர் சிலகம்மா - பங்காரம் (2006)
மிலன் அபி அதா அதுரா ஹாய்-
விவா (2006)
டு யூ வான்னா பார்ட்னர் -
பார்ட்னர் (2007)
தீவாங்கி தீவாங்கி - ஓம் சாந்தி
ஓம் (2007)
ஃபாலக் டக் சால் சாத் மேரே -
டாஷன் (2008)
தில் டேன்ஸ் மேரே - டாஷன்
(2008)
மெயின் ஹவான் கெ - மேரே
பாப் பெஹ்லே ஆப் (2008)
சாவ் ஜனம் - வாட்'ஸ் யூவர் ராசி?
(2009)
யார் மிலா தா - ப்ளூ (2009)
ஓம் ஜாய் ஜக்தீஷ் ஹரே (ஆர்த்தி
பஜன்) (2009) (ஸ்னேஹா பண்டிட்
உடன்)
சில
குறிப்பிடத்தக்க
தமிழ் பாடல்கள்
சஹானா - சிவாஜி: தி பாஸ்
(2007)
எங்கேயோ பார்த்த - யாரடி நீ
மோஹினி (2008)
தேன் தேன் - குருவி (2008)
விருதுகள்
மற்றும்
பரிந்துரைகள்
பத்ம ஸ்ரீ
2009: பத்ம ஸ்ரீ, இந்தியாவின்
4வது உயரிய குடிமக்கள்
கெளரவம்.
பிலிம்ஃபேர் விருதுகள்
பிலிம்ஃபேர் சிறந்த ஆண்
பின்னணிப் பாடகர் விருது
(வென்றது):
1988: "பாபா கெஹ்தே ஹாய்" -
கயாமத் சே கயமத் டக்
1995: "மெஹந்தி லகாகே ரக்னா" -
தில்வாலே துல்ஹனியா லே
ஜாயங்கே
1996: "பர்தேசி பர்தேசி" - ராஜா
இந்துஸ்தானி
1999: "சந்த சுபா பாடல் மெயின்" -
ஹம் தில் தே சுகே சனம்
2001: "மித்வா" - லகான்
பிலிம்ஃபேர் சிறந்த ஆண்
பின்னணிப் பாடகர் விருது
(பரிந்துரைக்கப்பட்டது):
1988: "ஏ மேரே ஹம்சஃபர்" - கயாமத்
சே கயமத் டக்
1991: "கூன் டாடா போட்
1992: "பெஹ்லா நாஷா" - ஜோ
ஜீடா ஊஹி சிக்கந்தர்
1993: "பூலோன் சா செஹ்ரா
தேரா" - அனாரி
1993: "ஜாடூ தேரி நசர்" -
[மொஹ்ரா
1995: "ராஜா கோ ராணி சே" -
அகேலே ஹம் அகேலே டம்
1996: "ஹோ நஹின் சாக்டா" -
தில்ஜாலெ
1996: "கார் சே நிகால்டே ஹை" -
பாபா கெஹ்டே ஹெயின்
1997: "தில் டு பாகல் ஹாய்" - தில்
டு பாகல் ஹாய்
1997: "போடி சை சோரத்" - தில்
டூ பாகல் ஹாய்
1998: "குச் குச் ஹோட்டா ஹை" -
குச் குச் ஹோட்டா ஹை
2000: "தில் நே யே காஹா" -
தட்கன்
2001: "உத்ஜா காலே காவா" -
காடார்
2003: "தேரே நாம்" - தேரே நாம்
2003: "இதார் சாலா மெயின் உதர்
சாலா" - கோய் மில் கயா
2004: "மெயின் யாஹான் ஹூன்" -
வீர் ஜாரா
2004: "யே டாரா வோஹ் டாரா" -
ஸ்வதேஸ்
தேசிய சினிமா
விருதுகள்
சிறந்த ஆண் பின்னணிப்
பாடகருக்கான தேசிய திரைப்பட
விருது:
2002: "மித்வா" - லகான்
2003: "சோடே சோடே சப்னே" -
ஜிந்தகி கூப்சூரத் ஹாய்
2005: "யே டாரா வோ டாரா" -
ஸ்வதேஸ்
ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள்
சிறந்த ஆண் பின்னணி
பாடகருக்கான ஸ்டார் ஸ்க்ரீன்
விருது:
1996: "ஆஹே ஹோ மேரி ஜிந்தகி
மெயின்" - ராஜா இந்துஸ்தானி
2002: "வோஹ் சந்த் ஜெய்சி லட்கி" -
தேவ்தாஸ்
ஜீ சினி விருதுகள்
ஆண் - சிறந்த பின்னணிப்
பாடகருக்கான ஜீ சினி விருது:
2000: "சந்த் சுபா பாடல் மெயின்" -
ஹம் தில் தே சுகே சனம்
இஃபா விருதுகள்
இஃபா சிறந்த ஆண் பின்னணிப்
பாடகர் விருது:
2000: "சந்த் சுபா பாடல் மெயின்" -
ஹம் தில் தே சுகே சனம்
பாலிவுட் திரைப்பட
விருதுகள்
1998: "குச் குச் ஹோத்தா ஹை" -
குச் குச் ஹோத்தா ஹை

செவ்வாய், 29 நவம்பர், 2016

நடன இயக்குநர் ரகுராம் நினைவு தினம் நவம்பர் 30 2013.

நடன இயக்குநர் ரகுராம் நினைவு தினம்  நவம்பர் 30  2013.

ரகுராம் (1948 - 30 நவம்பர் 2013) பிரபல
திரைப்பட நடன இயக்குநரும், நடிகரும்
ஆவார். தமிழ், தெலுங்கு,
மலையாளம் உள்ளிட்ட பல
மொழிப் படங்களிலும் நடன
இயக்குனராக சுமார் 1000
பாடல்களுக்கு மேல் நடனம்
அமைத்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
பாரம்பரிய கலைக் குடும்பத்தில் 1948-ஆம்
ஆண்டு பிறந்தவர் ரகுராம்.
சொந்த ஊர் கும்பகோணம் .
இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் பேரன்.
தனது 6 வயதில் நடனம் கற்கத்
தொடங்கினார். ஆரம்பத்தில்
கதகளியும் , பின்னர் தனது சித்தி பத்மா
சுப்பிரமணியத்துடன் இணைந்து கே. ஜே. சரசா
என்பவரிடம் பரத நாட்டியம் பயின்றார்.
மேடை நாடகங்களிலும், பத்மா
சுப்பிரமணியத்தின் நடனக் குழு, நடிகைகள்
லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளின்
நடனக் குழு, வைஜெயந்திமாலாவின்
நடனக்குழு ஆகியவற்றிலும் நடனமாடி
வந்தார். நடன இயக்குநர்
தங்கப்பனிடம் உதவியாளராகப்
பணியாற்றிய போது, அங்கு
மற்றொரு உதவியாளராக
இருந்த கிரிஜா என்பவரைக் காதலித்து
திருமணம் செய்து
கொண்டார். கிரிஜா பிரபல
நடன இயக்குனர் கலா மாஸ்டரின்
சகோதரி ஆவார்.  இவர்களுக்கு சுஜா
(நடிகை), காயத்ரி ரகுராம் (நடன
இயக்குனர், நடிகை) ஆகிய இரு மகள்கள்
உள்ளனர்.
திரைப்படங்களில்
1960 ஆம் ஆண்டில் படிக்காத மேதை
திரைப்படத்தில் படத்தின் மூலம் குழந்தை
நடிகராக இவர் அறிமுகமானார்.
தொடர்ந்து அருணகிரிநாதர்
திரைப்படத்தில் பாலமுருகன் வேடத்தில்
நடித்தார்.
நடன இயக்குநராக
பல திரைப்படங்களில் நடித்துவந்த ரகுராம்
நடன இயக்குநர் சோப்ராவிடம்
உதவியாளராக பணியாற்றினார்.
1974-ஆம் ஆண்டு "கன்ன வயசு" என்ற
தெலுங்குத் திரைப்படத்தில் நடன
இயக்குநராக முதன் முதலில்
அறிமுகமானார். தொடர்ந்து
"மதுரகீதம்', "வாழ்வு என் பக்கம்'
உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு
நடனம் அமைத்தார்.
வி. சி. குகநாதனுடன் இணைந்து மணிப்பூர்
மாமியார், கண்ணா நீ வாழ்க
உட்படப் பல திரைப்படங்களைத்
தயாரித்தார். ரஜினிகாந்தின் நடிப்பில்
வெளிவந்த பாக்ய தேவ்தா என்ற
வங்காள மொழித் திரைப்படம்,
விஸ்வநாதன் வேலை வேண்டும் ஆகிய
திரைப்படங்களை இயக்கினார். இயக்குநர் கே.
பாலசந்தரின் பல திரைப்படங்களுக்கு
நடனம் அமைத்துள்ளார். நடிகை
ஜெயலலிதாவுடன் "காவிரி தந்த
கலைச்செல்வி" என்ற நாடகத்தில்
இவர் நடித்துள்ளார்.
விருதுகள்
தமிழக அரசின் கலைமாமணி விருது,
தேவர் மகன் படத்துக்காக தமிழக
மாநில அரசு விருது
நடனக் கலைக்காக
அமெரிக்காவில் வழங்கப்பட்ட
டாக்டர் பட்டம

நடிகர் டி. ஆர். இராமச்சந்திரன் நவம்பர் 30, 1990 .

நடிகர் டி. ஆர். இராமச்சந்திரன்  நவம்பர் 30, 1990 .

டி. ஆர். இராமச்சந்திரன் ( சனவரி 9 ,
1917 - நவம்பர் 30, 1990 ) பழம்பெரும்
தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில்
கதாநாயகனாகவும், பிற முக்கிய
வேடங்களிலும், துணை வேடங்களிலும்
நடித்துள்ளார். எந்த வேடத்தில்
நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே
இவரின் நடிப்பு பெரும்பாலும்
அமைந்திருந்தது.
வாழ்க்கைச் சுருக்கம்
இராமச்சந்திரனின் கரூர்
மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில்
விவசாயியாக இருந்த ரங்காராவ்,
ரங்கம்மாள் ஆகியோருக்கு 1917 சனவரி 9
இல் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள்.
நான்கு வயதிலேயே தாய் இறக்கவே தந்தை
மறுமணம் செய்து
கொண்டார். இராமச்சந்திரன்
பாட்டியாரின் ஊரான குளித்தலையில்
உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தார்.
நாடகங்களில் நடிப்பு
இராமச்சந்திரனுக்குப் படிப்பில் ஈடுபாடு
இருக்கவில்லை. குடும்ப நண்பர்
இராகவேந்திரராவ் என்பவரின் நாடக
அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு
நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது.
தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம்
ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர்
நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத
சபா‘ என்ற நாடகக் கம்பனி
கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது
அவர்களது நாடகங்களில் சிறிய
வேடங்களில் நடித்தார். இக்கம்பனி சில
காலத்திலேயே மூடப்பட்டதை அடுத்து உள்ளூரைச்
சேர்ந்த மணி ஐயர் என்பவர் இக்கம்பனியை
நடத்தி வந்தார். இவருடன் நாடகக்
கம்பனியில் பணியாற்றிய எஸ்.வி.வெங்கட்ராமன் (பின்னாளில்
பிரபலமான இசை அமைப்பாளர்)
புதிதாகத் தொடங்கிய நாடகக்
கம்பெனி ஒன்றில் ராமச்சந்திரனும்
அவரது குழுவினரும் சேர்ந்தனர்.
கருநாடகத்தில் கோலார் நகரில்
தங்கியிருந்து நாடகங்களை நடத்தினர்.
அங்கும் அவர்களுக்குப் பெரும் நட்டம்
ஏற்படவே, வெங்கட்ராமன் திரைப்பட
வாய்ப்புகளை எதிர்பார்த்து
பெங்களூர் சென்றார்.
திரைப்படங்களில் நடிப்பு
வெங்கட்ராமன் பெங்களூரில் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரை
சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ்
திரைப்பட நிறுவனம் நந்தகுமார் என்ற
திரைப்படத்தை தயாரித்து வந்தது.
இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு
வெங்கட்ராமனின் நாடகக்
கம்பெனி நடிகர்கள் அனைவரும்
ஒப்பந்தம் செய்யப்பட்டனர். டி. ஆர்.
ராமச்சந்திரன் டி. ஆர். மகாலிங்கத்திற்கு
நண்பனாக நடித்தார்.1938 இல்
வெளிவந்த இப்படம் வெற்றி
பெற்றது. அதன் பின்னர்
இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும்
இல்லாமல் காலத்தைக் கழித்த
இராமச்சந்திரனுக்கு, வாயாடி
திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு
வாய்ப்புக் கிடைத்தது.  பின்னர் நவீன
மார்க்கண்டேயா, திருவள்ளுவர்,
வானரசேனை, ஆகிய படங்களில் நடித்தார்.
1941-ல், மெய்யப்ப
செட்டியாரின் தயாரிப்பில்
வெளியான சபாபதி என்ற முழு நீள
நகைச்சுவைத் திரைப்படத்தில்
கதாநாயகனாக நடித்தார். இப்படம்
பெரு வெற்றி பெற்றதை அடுத்து
டி. ஆர். இராமச்சந்திரனின் புகழும்
பரவியது. தொடர்ந்து பல
படங்களில் நடித்த இராமச்சந்திரன்,
ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல்
தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை
வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949)
என்ற வெற்றிப் படத்தில்
வைஜயந்திமாலாவுக்கு சோடியாக
நடித்தார். பி. ஆர். பந்துலு தயாரித்த
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன்
கதாநாயகனாக நடித்தார். சிவாஜி
கணேசன் இரண்டாவது
கதாநாயகனாக நடித்தார்.
படங்கள் தயாரிப்பு
ராமச்சந்திரன் 1954 ஆம் ஆண்டில்
சொந்தத்தில் படக்கம்பெனி
தொடங்கி ‘பொன் வயல்’
என்ற படத்தைத் தயாரித்தார். இதில்,
ராமச்சந்திரனின் ஜோடியாக அஞ்சலிதேவி
நடித்தார். இத்திரைப்படத்திலேயே சீர்காழி
கோவிந்தராஜன் பின்னணிப் பாடகராக
அறிமுகமானார். எழுத்தாளர் தேவன்
எழுதிய கோமதியின் காதலன் என்ற கதையை
அதே பெயரில் திரைப்படமாகத்
தயாரித்து, சாவித்திரியுடன் சோடியாக
நடித்தார்.
சொந்த வாழ்க்கை
டி. ஆர். இராமச்சந்திரனின் திருமணம்
1948-ல் நடந்தது. ஜெயந்தி, வசந்தி
என்று 2 மகள்கள். திரைப்படத்துறையில் இருந்து
ஓய்வு பெற்ற பின்னர்,
அமெரிக்காவில் மகளுடன் வசித்து
வந்தார். அங்கு அவர் 1990 ஆம் ஆண்டில்
காலமானார். [6]
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு படம் பாத்
1938 நந்தகுமார்
1940 வாயாடி கணவன்[
1941 சபாபதி சபாபதி
1942 கண்ணகி
1943 திவான் பகதூர்
1944 பிரபாவதி
1945 மானசம்ரட்சணம்
1945 ஸ்ரீ வள்ளி
1946 அர்த்தனாரி
1946 லவங்கி
1946 சகடயோகம்
1946 வித்யாபதி
1946 விஜயலட்சுமி
1946 விகடயோகி
1947 நாம் இருவர்
1947 கடகம்
1947 குண்டலகேசி
1947 மகாத்மா
உதங்கர்
1947 ருக்மாங்கதன்
1948 கோகுலதாசி
1948 சம்சார நௌகா
1949 வாழ்க்கை
1949 கீத காந்தி
1949 நவஜீவனம்
1951 சௌதாமினி
1951 சிங்காரி
1952 மாப்பிள்ளை
1954
கல்யாணம்
பண்ணியும்
பிரம்மச்சாரி கணபதி [1
1954 பொன்வயல்
1954 ராஜி என் கண்மணி
1955 எல்லாம் இன்ப
மயம்
1955 கோமதியின் காதலன்
1955 கள்வனின் காதலி கமலபதி
1955 மேதாவிகள்
1957 மணமகன் தேவை
1957 சமய சஞ்சீவி
1957 தங்கமலை ரகசியம்
1957 யார் பையன்
1958 அன்பு எங்கே
1958 கடன் வாங்கி
கல்யாணம்
1958 நீலாவுக்கு
நெறஞ்ச மனசு
1959 நல்ல தீர்ப்பு
1959 பத்தரமாத்து தங்கம்
1959 பிரசிடெண்ட்
பஞ்சாட்சரம்
1959 ராஜ சேவை
1959 வண்ணக்கிளி
1960 பாக்தாத் திருடன் எம்ஜிஆர்
நகைச்சுவை
வேடத்தில்
1960 அடுத்த வீட்டுப்
பெண் கதாந
1960 படிக்காத மேதை துணை நடிக
1960 விடிவெள்ளி
1961 புனர் ஜென்மம்
1962 ஆலயமணி
1963 அறிவாளி
1963 நான் வணங்கும்
தெய்வம்
1966 அன்பே வா புண்ணிய
( சரோஜாதே
தந்தை)
1966 சாது மிரண்டால்
1968 தில்லானா
மோகனாம்பாள்
வரதன்,
மிருதங்கம்
வாசிப்ப
1968 திருமால் பெருமை
1982 தேவியின்
திருவிளையாடல்
பெற்ற விருதுகள்
கலைமாமணி விருது
************************************
டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ,
சிவாஜி செகண்ட் ஹீரோ
- டி.ஆர்.ஆர் நினைவு தினக்
கட்டுரை நன்றி விக்கிபீடியா.விகடன்.

'கண்ணால பேசிப் பேசிக்
கொல்லாதே...காதால கேட்டுக்
கேட்டுச் செல்லாதே...'என்ற பாடலில்
நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல்
மொழியை ரசிக்காதவர்களே இருக்க
முடியாது. 1940-ம் ஆண்டுகளில் தமிழ்
சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில்
கோலோச்சியவர் டி.ஆர். செல்வந்தர் குடும்ப
இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான
கதாபாத்திரங்களில் வெளுத்துக்
கட்டியவர். முட்டாள்தனம்,
புத்திசாலித்தனம், குறும்புத்தனம்,
அப்பாவித்தனம், வெட்கம் கலந்த
காதல் உணர்ச்சி என கலவையான உடல்
மொழிக்குச் சொந்தக்காரர்.
ஒருவிதமான பதற்றம் கலந்த இவரது
நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக்
கட்டிப் போட்டது.
காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை
எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே
தொடங்கிவைத்தவர் டி.ஆர். இவர்
ஹீரோவாக நடித்த, 'கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரி' படத்தில் சிவாஜியே
செகண்ட் ஹீரோதான். இந்தப் படத்தில்
சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால், டி.ஆர்க்கு
ஜோடி ராகினி. வைஜெயந்திமாலா,
அஞ்சலிதேவி, சாவித்ரி எனப் பல முன்னணி
கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக
நடிக்கத் தயங்கவில்லை.
கரூர், திருக்காம்புலியூர் கிராமத்தில் 1917ம்
ஆண்டு பிறந்தார் டி.ஆர். ராமச்சந்திரன்.
அப்பா ரங்காராவ் விவசாயி.
சிறுவயதிலேயே அம்மாவை இழந்த டி.ஆர்.க்கு
பள்ளிப் படிப்பு சுத்தமாகவே பிடிக்கவில்லை.
திண்ணைப் பள்ளியில் படிக்கப் பிடிக்காமல்
காணாமல் போய்விடுவார். பிறகு தேடிப்
பிடித்துக் கூட்டி வருவார்கள். பிறகு
குளித்தலையில் உள்ள குருகுலப் பள்ளியில்
சேர்க்கப்பட்டார். ' எனக்கு படிப்பு வேண்டாம்.
நாடகத்தில் நடிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை
வைத்தார். காரணம். குடும்ப நண்பர்
இராகவேந்திரராவ் என்பவரின் நாடக
அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு
நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது.
பரீட்சை முடிந்து விடுமுறைக்கு
வரும்போதெல்லாம், மகனை
வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள
வைத்தார் அப்பா. வாய்ப்பாட்டுடன்
ஆர்மோனியமும் கற்றுக்கொடுத்தவர்
கரூர் ராகவேந்திராவ். இவர் நாடகங்களில்
பின்பாட்டுப் பாடும் பாடகர். அவர் நடிப்பது
போன்ற பாவனைகளுடன் பாடக்
கற்றுக்கொடுக்க, ராமச்சந்திரனுக்கு
நடிப்புமீது காதல் வந்துவிட்டது. பிறகு அப்பா
அனுமதியுடன் ராகவேந்திரராவுடன்
ஒட்டிக்கொண்ட ராமச்சந்திரன்
திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று நாடகக்
குழுக்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார். பிறகு
மதுரையில் தங்கியபோது அங்கே நாடகக்
கம்பெனியில் சேர அனுமதி கேட்டு
அப்பாவுக்குக் கடிதம் எழுத, மகனின்
விருப்பத்துக்கு அவர் தடை போடவில்லை.
தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம் ஆண்டில்
மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த
‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘ என்ற
நாடகக் கம்பெனி
கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது,
அவர்களது நாடகங்களில் சிறிய வேடங்களில்
நடித்தார். ஜெகன்நாத ஐயர்
வாத்தியாராகவும் முதலாளியாகவும்
இருந்து நடத்திவந்த இந்த நாடகக் குழுவில்
ஸ்திரீ பார்ட் போடுபவர்களுக்குத் தோழியாக
நடிக்க ஆரம்பித்தார் ராமச்சந்திரன். தங்க
இடம், மூன்று வேளை சாப்பாடு உட்பட மாதம்
3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத்
தொடங்கினார். இவரது
நடிப்புத்திறமையைக் கண்ட சக நடிகரான
எஸ்.வி. வெங்கடராமன் (மீரா
படத்துக்கு இசையமைத்தவர்) பின்னாளில்
தனியாக நாடக கம்பெனி
தொடங்கியபோது 25 ரூபாய்
சம்பளத்துடன் ராமச்சந்திரனை அழைத்துக்
கொண்டு வந்தார். அங்கும்
அவர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படவே,
வெங்கட்ராமன் திரைப்பட வாய்ப்புகளை
எதிர்பார்த்து பெங்களூர்
சென்றார்.
வெங்கட்ராமன், பெங்களூரில் ஏ.
வி. மெய்யப்பச் செட்டியாரை
சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ் திரைப்பட
நிறுவனம் நந்தகுமார் என்ற திரைப்படத்தைத்
தயாரித்து வந்தது. இத்திரைப்படத்தில்
நடிப்பதற்கு வெங்கட்ராமனின் நாடகக்
கம்பெனி நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம்
செய்யப்பட்டனர். காரைக்குடியில்
வெங்கட்ராமன் குழு திறமையைக்
கண்டார் ஏ.வி.மெய்யப்பச்
செட்டியார். அதிலும், தனித்துத் திறமையைக்
காட்டிய ராமச்சந்திரனை
செட்டியாருக்கு ரொம்பவே
பிடித்துப் போய்விட்டது. டி.ஆர். ராமச்சந்திரன், டி.
ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக
நடித்தார். 1938 இல் வெளிவந்த
இப்படம் வெற்றி பெற்றது. அதன்
பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும்
இல்லாமல் காலத்தைக் கழித்த
இராமச்சந்திரனுக்கு, வாயாடி
திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு
வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் நவீன
மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை
ஆகிய படங்களில் நடித்தார்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள்
மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த
நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு
நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த
மெய்யப்பச் செட்டியார், பம்மல்
சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை
நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில்
படமாக்குவது என்று முடிவு செய்தார்.
ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த
ராமச்சந்திரனை நாயகனாக்கினார்
செட்டியார்.
1941-ல், மெய்யப்ப செட்டியாரின்
தயாரிப்பில் வெளியான சபாபதி
என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில்
கதாநாயகனாக நடித்தார். இப்படம்
வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர்.
இராமச்சந்திரனின் புகழும் பரவியது.
தொடர்ந்து பல படங்களில் நடித்த
இராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன்
முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர்
படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.
வாழ்க்கை (1949) என்ற வெற்றிப்
படத்தில் வைஜயந்திமாலாவுக்கு ஜோடியாக
நடித்தார்.
படத்தின் ஹீரோ என்றால், நல்ல
பலசாலியாக, வாள்வீச்சு
தெரிந்திருக்க வேண்டும் என்கிற
கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர்.
சபாபதி படத்திற்காக 140 ரூபாய் சம்பளம்
தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட
இப்படம் வெற்றிப் படமாகி பெரும்
புகழ் தந்தது. இந்தப் படத்தில் 5 பாடல்களை
சொந்தக் குரலில் பாடினார் டி.ஆர்.
சபாபதி படத்திற்கான மொத்த
பட்ஜெட் 32,000 ரூபாய்.
டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில்
இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல்
படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில்
நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே
முதல் படமாக அமைந்தது. வானம்பாடி
(1963) படத்தில் "யாரடி வந்தார் என்னடி
சொன்னார்' என்ற பாடல்
காட்சியில் நடனமாடியதன் மூலம்
ஜோதிலட்சுமி, தனது முதல் திரைப்பயணத்தை
துவங்கினார். வித்யாபதி (1946)
படத்தில்தான் முதன் முதலாக
எம்.என்.நம்பியார் அறிமுகமானார்.
சகடயோகம் படமே வி.என்.ஜானகி
நாயகியாக நடித்த முதல் படம்.
பொன்வயல் படத்தில்தான்
சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில்
பாடினார். தயாரிப்பாளர்
ஏவி.மெய்யப்ப செட்டியார்
இயக்கிய முதல் படம் சபாபதி (1941)
(செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர்
ஏ.டி.கிருஷ்ணசாமி).
திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின்,
அமெரிக்காவில் தன் மகள்கள்
ஜெயந்தி, வசந்தி ஆகியோருடன் வசித்து
வந்தார். 1990-ம் ஆண்டு, இதய அறுவை
சிகிச்சையின்போது காலமானார். அவர்
மறைந்தாலும் அவரது உருண்டையான
கண்களையும் வித்தியாசமான உடல்
மொழியையும் ரசிகர்களால் மறக்கவே
முடியாது.