வெள்ளி, 30 செப்டம்பர், 2016

நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் நினைவு தினம் அக்டோபர் 01,

நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் நினைவு தினம் அக்டோபர் 01,  ( 2008 )

பூர்ணம் விஸ்வநாதன் (இறப்பு:
அக்டோபர் 1, 2008 ) தமிழ்நாட்டின்
பழம்பெரும் நாடக, மற்றும் திரைப்பட
நடிகர்.
நாடக வாழ்வு
தனத 18வது வயதில் நாடகங்களில்
நடிக்கத்தொடங்கினார்.
சிறிதுகாலம் புது தில்லியில் வாழ்ந்த
விஸ்வநாதன் 1945 இல் அகில இந்திய
வானொலியில் செய்தி
வாசிப்பாளராக தன் பணியைத்
தொடங்கினார். 1947இல் அகில
இந்திய வானொலியில் முதலாக
இந்தியா விடுதலைச் செய்தியை
கூறியுள்ளார்  . மேடை நாடகங்களில்
நடிக்க ஆரம்பித்து கலைத்துறையில் நுழைந்தார்.
பூர்ணம் தியேட்டர்ஸ் என்ற நாடக குழுவை
ஆரம்பித்து ஏராளமான நாடகங்களை
மேடை ஏற்றினார். அந்த நாடகக் குழுவின்
பெயராலேயே சாதாரண
விஸ்வநாதனாக இருந்த அவர், பூர்ணம்
விஸ்வநாதன் என்று அழைக்கப்பட்டார்.
எழுத்தாளர் சுஜாதா வின் 10
நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதன் மேடை
ஏற்றி உள்ளார். 1979ம் ஆண்டு துவங்கி
1997ம் ஆண்டு வரை அவர் நாடகங்களை
நடத்தி வந்தார். அடிமைகள், கடவுள்
வந்திருக்கிறார், அன்புள்ள அப்பா,
வாசல், ஊஞ்சல், சிங்கம் அய்யங்காரின்
பேரன், பாரதி இருந்த வீடு உள்ளிட்ட 10
நாடகங்களை சுஜாதா எழுதி பூர்ணம்
விஸ்நாதன் மேடை ஏற்றினார்.
அண்டர் செகரெட்டரி, 50=50
போன்ற நாடகங்களை தானே எழுதியும்
நடித்துள்ளார். கடைசியாக 1997 ஆம்
ஆண்டு திருவல்லிக்கேணியில் பாரதி இருந்த
வீடு என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.
அதன்பின்னர், அவரது குழுவைச்
சேர்ந்தவர்கள் கோகுலம் ஒரிஜினல் பாய்ஸ்
கம்பெனி என்ற பெயரில்
நாடகங்களை தொடர்ந்து நடத்தி
வந்தனர்.
டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய
நகரங்களில் இவர் நாடகம்
நடித்துள்ளார்.
திரைப்படங்களில்
86 படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
1. வருஷம் 16
2. வறுமையின் நிறம் சிவப்பு
3. தில்லு முல்லு
4. மகாநதி
5. விதி
6. மூன்றாம் பிறை
7. புதுப்புது அர்த்தங்கள்
8. கேளடி கண்மணி
9. ஆண்பாவம்
விருதுகள்
1. சங்கீத நாடக அகாதமி விருது[2]
மறைவு
சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த
பூர்ணம் விஸ்வநாதன் 2008 , அக்டோபர் 1
மாலை 3.30 மணி அளவில் உயிரிழந்தார்.
மறைந்த பூர்ணம் விஸ்நாதனுக்கு சுசீலா
என்ற மனைவியும், உமா, பத்மஜா என்ற
மகள்களும், சித்தார்தா என்ற மகனும்
உள்ளனர். இவருடைய அண்ணன், முள்ளும்
மலரும் உட்பட பல தமிழ் நாவல்கள்
எழுதிய எழுத்தாளர் உமாசந்திரன் .

**********************************
தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில
நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம்
விஸ்வநாதன். 1945ல் ஆல் இந்தியா
ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக
தன் பணியைத் தொடங்கிய
விஸ்வநாதன், தன் குரல் வளத்தால்
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த
செய்தியை ஆல் இந்தியா ரேடியோவின்
தமிழ்ச் செய்தியில் முதன் முதலில்
கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த
பெருமை இவருக்கு உண்டு.
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்களைக்
குளமாக்கும் இரக்க சுபாவமுள்ள பல
பாத்திரங்களில் நடித்த பெருமையும் இவரை
சாரும்.
ரஜினியுடன் இவர் வித்தியாசமாக நடித்த
தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும் படங்கள்
இன்றும் மறக்க முடியாதவை.
கமல்ஹாசனுடன் மகாநதி, மூன்றாம் பிறை
படங்களில் மிக அற்புதமாக நடித்து
ரசிகர்களின் பாராட்டுக்களைப்
பெற்றார்.
விதி, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை,
புதுப்புது அர்த்தங்கள், கேளடி கண்மணி, ஆண்
பாவம் என இவர் பங்கேற்ற மிகச் சிறந்த
படங்களின் எண்ணிக்கை ஏராளம்.
சினிமாவைத் தவிர, நாடகத்திலும் மிகுந்த
ஈடுபாடு காட்டியவர் விஸ்வநாதன். தனது
பூர்ணம் தியேட்டர்ஸ் மூலம் பல
நெகிழ்ச்சியூட்டும், அர்த்தமுள்ள
நாடகங்களைத் தந்தவர்.
மறைந்த எழுத்துலக மேதை சுஜாதா, பூர்ணம்
விஸ்வநாதனுக்காகவே எழுதிய
நாடகங்கள் அன்புள்ள அப்பா, ஊஞ்சல்,
அப்பாவின் ஆஸ்டின் கார்... இன்னும் பல.

இசையமைப்பாளர் பாபநாசம் சிவன் நினைவு தினம் அக்டோபர் 01,

இசையமைப்பாளர் பாபநாசம் சிவன் நினைவு தினம் அக்டோபர் 01,

பாபநாசம் சிவன்  (செப்டம்பர் 26,
1890 - அக்டோபர் 1, 1973) கருநாடக இசையில்
பல இராகங்களில் 2500 க்கும்
அதிகமான கிருதிகளை இயற்றிய இசை
அறிஞர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
இவர் ராமாமிருத ஐயர் - யோகாம்பாள்
அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது
மகனாகப் பிறந்தார். இவர்
தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள
போலகம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது
இயற்பெயர் ராமசர்மன்.
பெற்றோர் இவரை ராமய்யா என
அழைத்தனர். ராமய்யா பிற்காலத்தில்
பாபநாசம் சிவன் என்ற பெயருடன்
20 ஆம் நூற்றாண்டின் சிறந்த தமிழ்
வாக்கேயக்காரராக விளங்கினார்.
இவர் அதிகாலையில் சிவன் கோயிலின் முன்
நின்று உருகி நாள்தோறும் பாடியதால்
சிவபெருமானே கைலாசத்தில் இருந்து
இளைஞர் வடிவம் கொண்டு
இறங்கிவந்ததாகப் புகழ்ந்து
தஞ்சாவூரில் உள்ள கணபதி
அக்கிரகாரத்தில் உள்ளவர்கள்
பாபநாசம் சிவன் என்று அழைத்தனர்.
தனது ஏழாம் வயதில் தந்தையை
இழந்ததினால் வறுமை காரணமாக,
தாயுடன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த
தன் மூத்த தமையனார் ராஜகோபாலனிடம்
வந்து சேர்ந்தார். மற்றவர்கள்
கொடுக்கும் அன்னதானத்தின்
மூலம் உணவுண்டு தமது இள வயது
வாழ்க்கையைக் கழித்தார். அங்கு
தங்கியிருந்த வேளையில் இவர் மலையாளம்
பயின்று மகராஜ சமசுகிருதக் கல்லூரியில்
சேர்ந்து 1910 இல் வையகர்ண பட்டதாரி
ஆனார்.
சிறந்த குரல்வளத்தையும், இசை உள்ளறிவையும்
கொண்டிருந்ததால் இசையின்
ஆரம்பப் பயிற்சிகளை ஆஸ்தான
வித்துவான் நூரணி மகாதேவ
ஐயர்,சம்பபாகவதர் ஆகியோரிடமிருந்து
பெற்றார். பஜனை செய்வதின்
மூலம் இவரது இசைப்புலமை மெருகேறியது.
ஒருநாள் கோனேரி ராஜபுரம் வைத்தியநாத
ஐயரின் கச்சேரியைக் கேட்டபின், அவரை அணுகி
தன்னை அவரின் மாணவனாக ஏற்கும்படி
கேட்டுக் கொண்டார். அவர்
சம்மதிக்கவே அவருடன் 7 வருடம் தங்கி இசை
நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். இதன்
பின் தனது குருவின் பாணியிலே ஆலாபனை,
நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரம் என்பவற்றைப்
பாடத் தொடங்கினார்.
1917இல் சுப்பரமணிய ஐயரின்
முயற்சியினால் இவரது திருமணம் நடந்தது.
நீலா ராமமூர்த்தி, ருக்மணி ரமணி என்ற
இரு பெண் குழந்தைகள் இவருக்குப்
பிறந்தனர்.
1918 ஆம் ஆண்டு திருவையாற்றில் நடந்த
தியாகராஜர் ஆராதனையில் சிவன்
தனது முதற் கச்சேரியை நிகழ்த்தினார். இதன்
பின்னர் பாபநாசம் சிவன்
தென்னிந்தியா முழுவதிலும் வட
இந்தியாவின் சில பகுதிகளிலும் தனது
கச்சேரிகளை நடத்தினார்.
இசைப் பணி
பாபநாசம் சிவன் தனது முத்திரையாக
"ராமதாஸ" என்பதை வைத்து கிருதி,
வர்ணம்,பதம், இசைநாடகங்கள், ஜாவளி
ஆகிய பல இசை வடிவங்களை
இயற்றியுள்ளார். கோயில்களின் முன்னின்று
பல பாடல்களை இயற்றினார்.
இப்படியாக இவர் இயற்றிய பாடல்களை,
புகழ்பெற்ற கருநாடக பாடகர்கள்
பலரும் தங்கள் இசை நிகழ்ச்சிகளில்
பாடியுள்ளனர். கருநாடக
மும்மூர்த்திகளுக்குப் பிறகு வந்த
இசைப்பாடல்கள் இயற்றியவர்களில்
முக்கியமானவர் பாபநாசம் சிவன்.
1921 இல் சிவன் சென்னைக்கு வந்து
தங்கிவிட்டார். இவருடைய ஆக்கங்களை ஆறு
தொகுப்புகளாக இவருடைய மகள்
ருக்மணி ரமணி வெளியிட்டுள்ளார்.
இயற்றிய நூல்கள்
1934 இல் 100 கிருதிகளைக்
கொண்ட இவரது முதல் நூலான
கீர்த்தன மாலை வெளியிடப்பட்டது.
இதன் பின் 31 ஆண்டிகளுக்குப் பிறகு 100
பாடல்களைக் கொண்ட
இரண்டாவது நூலை வெளியிட்டார்.
பிறகு 101 பாடல்களைக் கொண்ட
மூன்றாவது தொகுதியை சிவனின் 2
ஆவது மகள் ருக்மணி ரமணி
வெளியிட்டார்.
10 ஆண்டுகள் உழைத்து 1952 இல்
வடமொழி சொற்கடல்
(சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரா)
என்னும் நூலை ஆக்கினார்.
இராமாயணத்தைச் சுருக்கி 24
இராகங்களில் 24 பாடல்களாக ஸ்ரீ
ராம சரித கீதம் என்னும் நூலை
ஆக்கினார்.
காரைக்கால் அம்மையார் சரிதம்
என்னும் இசை நாடக நூலை எழுதினார்.
திரைப்படத் துறை
பங்களிப்புகள்
பாடலாசிரியராக,
இசையமைப்பாளராக, ஒரு நடிகராகவும்
தமிழ்த் திரையுலகிற்கு தனது பங்களிப்பினைத்
தந்துள்ளார் சிவன். ஏறத்தாழ 70
திரைப்படங்களுக்கு மொத்தமாக
800 பாடல்களை எழுதியுள்ளார்.
இசையமைத்த திரைப்படங்கள்
சீதா கல்யாணம்
பக்த குசேலா (1936)
அம்பிகாபதி (1937)
சிந்தாமணி (1937)
சேவாசதனம் (1938)
திருநீலகண்டர் (1939)
தியாக பூமி (1939)
அசோக் குமார் (1941)
சிவகவி (1943)
கன்னிகா (1947)
திரைப்படங்களுக்கென
எழுதப்பட்ட பாடல்கள் விவரம்
சீதா கல்யாணம் - 22 பாடல்கள்
பவளக்கொடி - 60 பாடல்கள்
அசோக் குமார் - 19 பாடல்கள்
சிவகவி - 29 பாடல்கள்
மீரா
திரைப்படங்களுக்காக எழுதிய
பாடல்களில்
புகழ்பெற்றவை
மன்மதலீலையை வென்றார் உண்டோ...
ராதே உனக்கு கோபம்... ( சிந்தாமணி
1937 )
அம்பா மனங்கனிந்து... ( சிவகவி 1943 )
நடித்த திரைப்படங்கள்
பக்த குசேலா - இந்தப் படத்தில் பாடி
நடித்திருந்தார்.
தியாகபூமி
சேவாசதனம்
குபேரகுசேல
மறைவு
1973 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 அன்று
அதிகாலை நான்கு மணியளவில்
காலமானார்.
பட்டங்களும் விருதுகளும்
சங்கீத சாகித்ய கலா சிகாமணி,
1950; வழங்கியது:இந்திய பைன் ஆர்ட்ஸ்
சொசைட்டி
சிவ புண்ய கான மணி, 1951, காஞ்சி
காமகோடி சங்கராச்சாரியார்
வழங்கியது
சங்கீத கலாசிகாமணி விருது, 1950 &
1969, வழங்கியது: தி ஃபைன் ஆர்ட்ஸ்
சொசைட்டி[2]
சங்கீத கலாநிதி விருது, 1971;
வழங்கியது: மியூசிக் அகாதெமி ,
சென்னை
இசைப்பேரறிஞர் விருது [3] , 1965; வழங்கியது:
தமிழ் இசைச் சங்கம்
பத்ம பூஷன் விருது; வழங்கியது: இந்திய
அரசு
இயற்றிய
கீர்த்தனைகளின்
பட்டியல்
கருணாகரனே...சிவசங்கரானே...!
குருவாயூரப்பா...குழந்தாய்...
முகுந்தா...
ஏறெடுத்தும் பாராத காரணம்
என்னவோ?...
கற்பகமே கண் பாராயும்...
கணபதே, மகாமதே...
காணக்கண் கோடி வேண்டும்... - காம்போதி
கா வாவா கந்தா வாவா... -
வராளி
ஸ்ரீ வள்ளி தேவ சேனாதிபதே... - நடபைரவி
தாமதமேன்... - தோடி
கடைக்கண்... - தோடி
கார்த்திகேயா காங்கேயா... - தோட
..............

கர்னாடக இசை மேதை, திரைப்படப் பாடல்
ஆசிரியர், இசையமைப்பாளர் என்று
பன்முகத் திறன் கொண்ட
பாபநாசம் சிவன் (Papanasam
Sivan) பிறந்த தினம் இன்று
(செப்டம்பர் 26). அவரைப் பற்றிய
அரிய முத்துக்கள் பத்து:
l அன்றைய தஞ்சை மாவட்டம் போலகம்
கிராமத்தில் (1890) பிறந்தார்.
இயற்பெயர் ராமசர்மா. 7
வயதில் தந்தையை இழந்தார்.
இதையடுத்து, பிள்ளைகளுடன்
திருவனந்தபுரத்தில் குடியேறினார்
தாய். மஹாராஜாவின்
ஏற்பாட்டால் இலவச உணவுடன்,
கல்வியும் கிடைத்தது.
l மலையாளம், சமஸ்கிருதமும்
பயின்றார். இளம் வயதிலேயே இசையில்
ஆர்வமும் திறமையும்
கொண்டிருந்தார்.
மஹாராஜா சமஸ்கிருதக்
கல்லூரியில் சேர்ந்து பட்டம்
பெற்றார்.
l தாய் மறைவுக்குப் பிறகு,
அண்ணனுடன் தஞ்சை மாவட்டம்
பாபநாசம் வந்தார். நெற்றி
நிறைய திருநீறு பூசியபடி சிவன் கோயில்
முன்பு மனமுருகிப் பாடுவார்.
பரமசிவனே பாடுவதாக கருதிய
மக்கள் ‘பாபநாசம் சிவன்’
என்றனர். அதுவே பெயராக
நிலைத்தது.
l வித்வான் நூரணி மகாதேவ ஐயர்,
சாம்ப பாகவதரிடம் முறைப்படி இசை
பயின்றார். கோனேரிராஜபுரம்
வைத்தியநாத ஐயரிடம்
மாணவனாகச் சேர்ந்தார். 7
ஆண்டுகள் அவருடன் தங்கி, பல இசை
நிகழ்ச்சிகளுக்குச் சென்றார்.
திருவையாறு தியாகராஜர்
ஆராதனையில் 1918-ல் இவரது முதல்
கச்சேரி நடைபெற்றது.
தொடர்ந்து பல இடங்களில்
கச்சேரிகள் நடத்தினார்.
l கிருதி, வர்ணம், பதம், ஜாவளி என
பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார்.
‘என்ன தவம் செய்தனை’, ‘கற்பகமே
கண் பாராய்’, ‘நான் ஒரு
விளையாட்டு பொம்மையா’
போன்றவை இவரது புகழ்பெற்ற
கீர்த்தனைகள். இசைக் கலைஞர்களால்
‘தமிழ் தியாகய்யர்’ என்று
போற்றப்பட்டார்.
l வீணை எஸ்.பாலச்சந்தரின் தந்தை
சுந்தரம் மூலம், 1934-ல் ‘சீதா
கல்யாணம்’ என்ற திரைப்படத்துக்கு
பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது.
தொடர்ந்து அசோக்குமார்,
சாவித்திரி, நந்தனார், சிவகவி,
ஜகதலப்பிரதாபன், அம்பிகாபதி
உள்ளிட்ட பல திரைப்படங்களில்
பாடல்கள் எழுதினார்.
l காலத்தால் அழியாத
பாடல்களான ‘மன்மத லீலையை’,
‘ராதே உனக்கு’, ‘அம்பா
மனங்கனிந்து’ ஆகியவை இவர்
இயற்றியவை. பாடல் எழுதும்போதே
மெட்டும் அமைத்துவிடும் திறன்
பெற்றவர்.
l ‘பக்த குசேலா’, ‘அம்பிகாபதி’ உட்பட
பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பல படங்களில் பாடி நடித்துள்ளார்.
70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்காக
800 பாடல்களை எழுதியுள்ளார். 100
கிருதிகளைக் கொண்ட இவரது
முதல் நூலான ‘கீர்த்தன மாலை’ 1934-
ல் வெளிவந்தது.
l 10 ஆண்டுகள் பாடுபட்டு 1952-ல்
‘சமஸ்கிருத பாஷா ஷப்த சமுத்ரா’
என்ற நூலை எழுதினார்.
ராமாயணத்தை சுருக்கி, 24
ராகங்களில் 24 பாடல்களாக
‘ராமசரித கீதம்’ என்னும் நூலை
படைத்தார். 75 வயதிலும் மார்கழி
மாதக் குளிரில் அதிகாலை நேரத்தில்
வீதிகளில் பஜனை பாடிச்
செல்வார். மிக எளிமையானவர்.
இவரது சகோதரர் ராஜகோபால்
ஐயரின் மகள்தான் எம்ஜிஆரின்
மனைவி வி.என்.ஜானகி.
l பத்மபூஷண், சங்கீத கலாநிதி, இசைப்
பேரறிஞர், சங்கீத சாகித்ய கலா
சிகாமணி, சிவபுண்ய கானமணி,
சங்கீத கலாரசிகமணி என பல்வேறு
விருதுகளைப் பெற்ற பாபநாசம்
சிவன் 83-வது வயதில் (1973)
மறைந்தார்.

வியாழன், 29 செப்டம்பர், 2016

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த தினம் அக்டோபர் 01,

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த தினம் அக்டோபர் 01,

சிவாஜி கணேசன் ( ஆங்கிலம் : Sivaji
Ganesan; அக்டோபர் 1, 1927 - ஜூலை
21 , 2001 ) புகழ் பெற்ற தமிழ்
திரைப்பட நடிகர் ஆவார்.
விழுப்புரம்
சின்னையாப்பிள்ளை கணேசன்
என்பது இவரது இயற்பெயர். இவர்,
பராசக்தி என்ற திரைப்படத்தின்
மூலம் தமிழ்த் திரையுலகில்
அறிமுகமானார்.
வாழ்க்கைக்
குறிப்பு
'சிவாஜி' கணேசன், சின்னையா
மன்றாயர் - ராஜாமணி அம்மாள்
ஆகியோருக்கு மகனாக
பிறந்தார். இவர் மனைவி பெயர்
கமலா; மகன்கள், ராம்குமார்
மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி
மற்றும் தேன்மொழி.
திரைப்பட வாழ்க்கை
'சிவாஜி' கணேசன்,
திரையுலகுக்கு வரும் முன்னர்
மேடை நாடகங்களில் நடித்து
வந்தார். சிவாஜி கண்ட இந்து
ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர்
சிவாஜியாக நடித்த கணேசனின்
நடிப்புத்திறனை மெச்சிய தந்தை
பெரியார் , அவரை 'சிவாஜி'
கணேசன் என்று அழைத்தார்.
அன்றிலிருந்து அந்த பெயரே
நிலைத்தது.
'சிவாஜி' கணேசன் 300க்கும்
மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில்
நடித்துள்ளார். ஒன்பது
தெலுங்குத் திரைப்படங்கள்,
இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள்
மற்றும் ஒரு மலையாளத்
திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
நல்ல குரல்வளம், தெளிவான,
உணர்ச்சி பூர்வமான தமிழ்
உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன்
ஆகியவை இவரின்
சிறப்புகளாகும். நடிகர் திலகம் ,
நடிப்புச் சக்கரவர்த்தி என்று
பெரும்பாலான மக்களால்
அழைக்கப்பட்டார். எனினும்,
நாடகத்தின் மூலம்
திரைப்படங்களுக்கு
அறிமுகமானதாலோ என்னவோ,
இவருடைய நடிப்பில்
நாடகத்துக்குரிய தன்மைகள்
அதிக அளவில் தென்படுவதாகக்
குறை கூறுவோரும் உண்டு.
குறிப்பாக, அக்கால மேடை
நாடகங்களில் தொழில்நுட்பக்
குறைபாடுகளின் காரணமாக
உணர்ச்சிகளை மிகைப்படுத்திக்
காட்டினால் தான்
பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகரா ,
வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற
திரைப்படங்கள் வசனத்திற்காகப்
பெயர் பெற்றவை. இராஜராஜ
சோழன் , கப்பலோட்டிய தமிழன்
போன்ற வீரர்களினதும் தேசத்
தலைவர்களினதும்
பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச்
செய்தார். பாசமலர், வசந்த
மாளிகை போன்ற திரைப்படங்கள்
மற்றும் பல பக்திப் படங்கள் இவரது
உணர்ச்சிப்பூர்வமான
நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
அரசியல் வாழ்க்கை
1955 வரை திராவிட இயக்க
அரசியலில் ஈடுபாடு
கொண்டிருந்த இவர், 1961 முதல்,
காங்கிரஸ் கட்சியில் இணைந்து
செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற
மேலவை உறுப்பினர் ஆனார்.
1987ல் காங்கிரஸ் கட்சியுடன்
ஏற்பட்ட கருத்து
வேறுபாடுகளைத் தொடர்ந்து,
அதை விட்டு விலகி, தமிழக
முன்னேற்ற முன்னணி என்ற
புதிய கட்சியொன்றை
தொடங்கினார். எனினும்
நடிகனாக அவருக்குக் கிடைத்த
செல்வாக்கு அரசியலுக்குத்
துணைவரவில்லை.
இறுதிக்காலத்தில் அவர்
அரசியலிலிருந்து
ஒதுங்கியிருந்தார்.
புகழ்
எகிப்து அதிபர் கமால் அப்தெல்
நாசர் இந்தியாவிற்கு வருகை
தந்த போது, அப்போதைய இந்திய
பிரதமர், ஜவகர்லால் நேரு
அனுமதி வழங்கப்பட்ட தனி நபர்
சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம்
ஆண்டு சிவாஜி கணேசன்
அமெரிக்க அரசாங்கத்தின்
கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின்
கீழ் அமெரிக்கா சென்ற
இந்தியாவில் இருந்து முதல்
கலைஞர், இருந்தது. சிவாஜி
கணேசன், இந்திய கலாச்சார தூதர்
பாத்திரத்தில் அங்கு அப்போதைய
அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப்
கென்னடியை சந்தித்தார்.
அப்போது அவரை
கவுரவப்படுத்தும் விதமாக
அவரை ஒரு நாள் நயாகரா
நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக
நியமித்து அவரிடம் அதற்கான
சாவியையும் கொடுத்தனர்.
பெற்ற
விருதுகளும்,
சிறப்புகளும்
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட
விழாவில் ( கெய்ரோ ,1960), சிறந்த
நடிகருக்கான விருது.
கலைமாமணி விருது (1962 -
1963)
பத்ம ஸ்ரீ விருது, 1966
பத்ம பூஷன் விருது, 1984
செவாலியர் விருது, 1995
தாதாசாகெப் பால்கே விருது,
1996
1962இல் அமெரிக்க நாட்டின்
சிறப்பு விருந்தினராக
சுற்றுப்பயணம் மேற்கொண்ட
போது, நயாகரா மாநகரின் 'ஒரு
நாள் நகரத்தந்தையாகக்'
கௌரவிக்கப்பட்டார். [3]
சென்னை மெரினா கடற்கரை
சாலையில் சிவாஜி கணேசன்
சிலை 21 ஜூலை 2011 அன்று
அமைக்கப்பட்டது.
நடித்த
திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
சிவாஜி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

சிவாஜி கணேசன் நடித்த தமிழ்த்
திரைப்படங்கள் வரிசை
பின்வருமாறு: (இது
முழுமையான பட்டியல் அல்ல.)
303
வ.எண் ஆண்டு திரைப்படம்
1
1952
பராசக்தி
2 பணம்
3
1953
பரதேசி
4 பூங்கோதை
5 திரும்பிப் பார்
6 அன்பு
7 கண்கள்
8 பெம்புடு
கொடுக்கு
9 மனிதனும்
மிருகமும்
10
1954
மனோகரா
11 இல்லற ஜோதி
12 அந்த நாள்
13
கல்யாணம்
பண்ணியும்
பிரம்மச்சாரி
14 துளி விஷம்
15 கூண்டுக்கிளி
16 தூக்குத் தூக்கி
17 எதிர்பாராதது
18
1955
காவேரி
19 முதல் தேதி
20 உலகம் பலவிதம்
21 மங்கையர் திலகம்
22 கோடீஸ்வரன்
23 கள்வனின் காதல
24
1956
நான் பெற்ற
செல்வம்
25 நல்ல வீடு
26 நானே ராஜா
27 தெனாலி ராமன்
28 பெண்ணின்
பெருமை
29 ராஜா ராணி
30 அமரதீபம்
31 மர்ம வீரன்
32 வாழ்விலே ஒரு
நாள்
33 ரங்கூன் ராதா
34
1957
மக்களைப்பெற்ற
மகராசி
35 வணங்காமுடி
36 புதையல்
37 மணமகன் தேவை
38 தங்கமலை ரகசிய
39 பாக்யவதி
40 ராணி
லலிதாங்கி
41 அம்பிகாபதி
42
1958
பொம்மலா
பெல்லி
43 உத்தம புத்திரன்
44 பதிபக்தி
45 சம்பூர்ண
ராமாயணம்
46 பொம்மை
கல்யாணம்
47 எங்கள் குடும்பம்
பெரிசு
48 அன்னையின்
ஆணை
49 சாரங்கதாரா
50 சபாஷ் மீனா
51 காத்தவராயன்
52
1959
தங்கப்பதுமை
53 நான் சொல்லும்
ரகசியம்
54 வீரபாண்டிய
கட்டபொம்மன்
55 மரகதம்
56 அவள் யார்
57 பாகப்பிரிவின
58
1960
இரும்புத்திரை
59 ராஜபக்தி
60 குறவஞ்சி
61 தெய்வப்பிறவி
62 படிக்காத மேதை
63 குழந்தைகள் கண்
குடியரசு
64 பெற்ற மனம்
65 பாவை விளக்கு
66 விடிவெள்ளி
67
1961
பாவ மன்னிப்பு
68 புனர் ஜென்மம்
69 பாசமலர்
70 எல்லாம் உனக்கா
71 ஸ்ரீ வள்ளி
72 மருத நாட்டு வீர
73 பாலும் பழமும்
74 கப்பலோட்டிய
தமிழன்
75
1962
பார்த்தால் பசி
தீரும்
76 நிச்சய தாம்பூல
77 வளர் பிறை
78 படித்தால் மட்டும்
போதுமா
79 பலே பாண்டியா
80 வடிவுக்கு
வளைகாப்பு
81 செந்தாமரை
82 பந்த பாசம்
83 ஆலயமணி
84
1963
சித்தூர் ராணி
பத்மினி
85 அறிவாளி
86 இருவர் உள்ளம்
87 நான் வணங்கும்
தெய்வம்
88 குலமகள் ராதை
89 பார் மகளே பார்
90 குங்குமம்
91 இரத்தத் திலகம்
92 கல்யாணியின்
கணவன்
93 அன்னை இல்லம்
94
1964
கர்ணன்
95 ராம தாசு
96 பச்சை விளக்கு
97 ஸ்கூல் மாஸ்டர்
98 ஆண்டவன் கட்டள
99 கை கொடுத்த
தெய்வம்
100 புதிய பறவை
101 முரடன் முத்து
102 நவராத்திரி
103
1965
பழனி
104 அன்புக்கரங்கள்
105 சாந்தி
106 திருவிளையாட
107 நீலவானம்
108
1966
மோட்டார்
சுந்தரம்பிள்ளை
109 தாயே உனக்காக
110 சரஸ்வதி சபதம்
111 மகாகவி
காளிதாஸ்
112 செல்வம்
113
1967
கந்தன் கருணை
114 நெஞ்சிருக்கும்
வரை
115 பேசும் தெய்வம்
116 தங்கை
117 பாலாடை
118 திருவருட்செல்
119 இரு மலர்கள்
120 ஊட்டி வரை
உறவு
121
1968
திருமால்
பெருமை
122 லட்சுமி
கல்யாணம்
123 கலாட்டா
கல்யாணம்
124 என் தம்பி
125 தில்லானா
மோகனாம்பாள்
126 எங்க ஊர் ராஜா
127 அரிச்சந்திரா
128 உயர்ந்த மனிதன்
129
1969
அன்பளிப்பு
130 குரு தட்சணை
131 தங்கச் சுரங்கம்
132 காவல் தெய்வம்
133 அஞ்சல் பெட்டி 520
134 நிறைகுடம்
135 தெய்வமகன்
136 திருடன்
137 சிவந்த மண்
138
1970
எங்க மாமா
139 விளையாட்டுப்
பிள்ளை
140 பாதுகாப்பு
141 வியட்நாம் வீடு
142 எங்கிருந்தோ
வந்தாள்
143 எதிரொலி
144 ராமன் எத்தனை
ராமனடி
145 சொர்க்கம்
146 தார்தி
147
1971
இரு துருவம்
148 தங்கைக்காக
149 அருணோதயம்
150 குலமா குணமா
151 பிராப்தம்
152 சுமதி என்
சுந்தரி
153 சவாலே சமாளி
154 தேனும் பாலும்
155 மூன்று
தெய்வங்கள்
156 பாபு
157
1972
ராஜா
158 ஞான ஒளி
159 பட்டிக்காடா
பட்டணமா
160 தவப்புதல்வன்
161 தர்மம் எங்கே
162 வசந்த மாளிகை
163 நீதி
164
1973
பங்காரு பாபு
166 பாரத விலாஸ்
167 ராஜ ராஜ சோழ
168 பொன்னூஞ்சல்
169 பக்த துக்காராம்
170 எங்கள் தங்க ராஜ
171 கௌரவம்
172 மனிதரில்
மாணிக்கம்
173 ராஜபார்ட்
ரங்கதுரை
174
1974
சிவகாமியின்
செல்வன்
175 வாணி ராணி
176 தங்கப் பதக்கம்
177 தாய்
178 என் மகன்
179 அன்பைத்தேடி
180
1975
அவன்தான்
மனிதன்
181 மனிதனும்
தெய்வமாகலாம்
182 சினிமா
பைத்தியம்
183 மன்னவன்
வந்தானடி
184 அன்பே ஆருயிர
185 வைர நெஞ்சம்
186 டாக்டர் சிவா
187 பாட்டும் பரதமும்
188
1976
கிரஹபிரவேசம்
189 சத்யம்
190 உத்தமன்
191 சித்ரா பௌர்ண
192 ரோஜாவின்
ராஜா
193 உனக்காக நான்
194
1977
அவன் ஒரு
சரித்திரம்
195 தீபம்
196 இளைய
தலைமுறை
197 சாணக்ய
சந்திரகுப்தா
198 நாம் பிறந்த மண்
199 அண்ணன் ஒரு
கோயில்
200 ஜீவன டீரலு
202
1978
அந்தமான் காதல
203 என்னைப்போல்
ஒருவன்
204 தியாகம்
205 வாழ்க்கை
அலைகள்
206 புண்ணிய பூம
207 ஜெனரல்
சக்ரவர்த்தி
208 தச்ஹோலி அம்ப
209 பைலட் பிரேம்நா
210 ஜஸ்டிஸ்
கோபிநாத்
211
1979
திரிசூலம்
212 கவரிமான்
213 நல்லதொரு
குடும்பம்
214 இமயம்
215 நான்
வாழவைப்பேன்
216 பட்டாகத்தி
பைரவன்
217 வெற்றிக்கு
ஒருவன்
218
1980
ரிஷிமூலம்
219 நட்சத்திரம்
220 தர்மராஜா
221 எமனுக்கு எமன்
222 இரத்த பாசம்
223 விஷ்வரூபம்
224
1981
மோகனப்
புன்னகை
225 சத்ய சுந்தரம்
226 அமரகாவியம்
227 கல்தூண்
22 லாரி டிரைவர்
ராஜாக்கண்ணு
228 மாடி வீட்டு ஏழ
229 கீழ்வானம்
சிவக்கும்
230
1982
ஹிட்லர் உமாநா
231 ஊருக்கு ஒரு
பிள்ளை
232 வா கண்ணா வா
233 கருடா
சௌக்கியமா
234 சங்கிலி
235 வசந்தத்தில் ஒரு
நாள்
236 தீர்ப்பு
237 நிவுறு கப்பின
நிப்பு
238 தியாகி
239 துணை
240 பரீட்சைக்கு
நேரமாச்சு
241 ஊரும் உறவும்
242 நெஞ்சங்கள்
243
1983
உருவங்கள்
மாறலாம்
244 பெசவாட
பெப்புலி
245 நீதிபதி
246 இமைகள்
247 சந்திப்பு
248 சுமங்கலி
249 மிருதங்க
சக்கரவர்த்தி
250 வெள்ளை ரோஜ
251 சூரக்கோட்டை
சிங்கக்குட்டி
252
1984
திருப்பம்
253 சிரஞ்சீவி
254 தராசு
255 வாழ்க்கை
256 சரித்திர நாயகன்
257 சிம்ம சொப்பணம்
258 எழுதாத சட்டங்க
259 இருமேதைகள்
260 தாவணிக்
கனவுகள்
261 வம்ச விளக்கு
262
1985
பந்தம்
263 நாம் இருவர்
264 படிக்காத
பண்ணையார்
265 நீதியின் நிழல்
266 நேர்மை
267 முதல் மரியாத
268 ராஜரிஷி
269 படிக்காதவன்
270
1986
சாதனை
271 மருமகள்
272 ஆனந்தக்கண்ணீர்
273 விடுதலை
274 தாய்க்கு ஒரு
தாலாட்டு
275 லட்சுமி வந்தாச்ச
276 மண்ணுக்குள்
வைரம்
277
1987
குடும்பம் ஒரு
கோயில்
278 முத்துக்கள்
மூன்று
279 வீரபான்டியன்
280 ராஜ மரியாதை
281 அன்புள்ள அப்பா
282 தாம்பத்யம்
283 அக்னி புத்ருடு
284 கிருஷ்ணன்
வந்தான்
285 ஜல்லிக்கட்டு
286 விஸ்வநாத
நயகுடு
287
1988
புதிய வானம்
288 என் தமிழ் என்
மக்கள்
289 1991 ஞானப் பறவை
290
1992
நாங்கள்
291 சின்னமருமகள்
292 முதல் குரல்
293 தேவர் மகன்
294 1993 பாரம்பரியம்
295 1995 பசும்பொன்
296 1996 ஷ்வர்ணச்சமரம்
297
1997
ஒன்ஸ்மோர்
298 ஒரு
யாத்ராமொழி
299 1998 என் ஆசை
ராசாவே
300
1999
மன்னவரு
சின்னவரு
301 படையப்பா
302 பூப்பறிக்க
வருகிறோம்.

தெலுங்கு
திரைப்படங்கள்

சானக்ய சந்திரகுப்தா
(தெலுங்கு) (1977)
தால வன்சானி வீருடு
(தெலுங்கு) (1957)
பக்த துகாரம் (தெலுங்கு)
(1973) .... சிவாஜி
பங்காரு பாபு (தெலுங்கு)
(1972)
பவித்ர பிரேமா (தெலுங்கு)
(1962)
பில்லலு தெச்சின சாலனி
ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
பெம்புடு கொடுக்கு
(தெலுங்கு) (1953) .... மோகன்
வேடம்
ராமதாசு (தெலுங்கு) (1964)
விஷ்வனாத நாயக்குடு
(தெலுங்கு) (1987)
மலையாளத்
திரைப்படங்கள்
ஒரு யாத்ர மொழி (மலையாளம்)
(1997)

*********************************
அபூர்வ தகவல்கள் சிவாஜி

**********************************
* நடிகர் திலகம் சிவாஜி
கணேசனின் முதல் திரைப்
பிரவேசம், 1952ஆம் ஆண்டில்
"பராசக்தி' மூலமாகத்தான் என்பதில்,
ஒரு சிறு திருத்தம்
மேற்கொள்ளலாம். ஹெச்.எம்.ரெட்டி
என்பவர் தயாரித்து - இயக்கிய
"நிரபராதி' என்ற படத்தில், நாயகனாக
நடித்த முக்காமலா
கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு,
நமது நடிகர் திலகம் பின்னணிக்
குரல் கொடுத்ததன் மூலமாக,
"பராசக்தி'க்கு முன்பே 1951 ஆம்
ஆண்டிலேயே திரையுலகப்
பிரவேசம் செய்துவிட்டார்.
("நிரபராதி' தெலுங்கிலிருந்து
தமிழுக்கு மொழி மாற்றம்
செய்யப்பட்ட படம்.)
* கே.வி.மகாதேவனின் உதவியாளர்
டி.கே.புகழேந்தி தனித்து
இசையமைத்த (4 படங்களில்) ஒரு படம்,
"குருதட்சணை' என்ற சிவாஜி
கணேசன் நடித்த படமாகும்.
* சிவாஜி கணேசனுக்கு
இயக்கவும் தெரியும் என்றால் நம்ப
முடிகிறதா? அவர் ஒரு
திரைப்படத்தை இயற்றி இருக்கிறார்.
அவர் முழுப் படத்தையும்
இயக்கவில்லை என்றாலும், ஒரு
படத்தை இயக்கியுள்ளார் என்று
வைத்துக் கொள்ளலாம். "ரத்தபாசம்'
என்ற படத்தை இயக்கியவர், பாதி
படத்திற்கு மேல் இயக்க
முடியாததால், மீதிப் படத்தை
சிவாஜியே இயக்கினார். படத்தின்
எழுத்துப் பகுதியில் (டைட்டில்)
இயக்கம் என்ற பெயர் வர வேண்டிய
இடத்தில் எவரது பெயரும்
திரையில் வராமல், சிவாஜி
கணேசனின் குளோசப்
போட்டோக்கள் மட்டுமே திரையில்
காண்பிக்கப்படும்.
* நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
நடித்த "இரு துருவம்' என்ற படத்தின்
கதையை எழுதியவர் இந்தி நடிகர்
திலிப்குமார். இது "சங்கா உடுடு'
என்கிற இந்திப் படத்தைத் தழுவி
எடுக்கப்பட்டது.
* நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
நடித்த "சரித்திர நாயகன்' என்ற
படத்தின் கதையை, தெலுங்கு
நடிகர் என்.டி.ராமாராவ்
எழுதியுள்ளார். தெலுங்குப்
படத்தில் என்.டி.ஆர்.தான்
கதாநாயகன். அதன் தழுவலாக
எடுக்கப்பட்ட படம் "சரித்திர நாயகன்'.
* சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி
கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா,
பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.செüந்தர
ராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,
மலேசியா வாசுதேவன் ஆகியோர்
சிவாஜி கணேசனுக்காக ஒரு
படத்தில் யாராவது ஒருவர் மட்டும்
பின்னணி பாடியிருப்பார்கள்.
ஆனால், "வணங்காமுடி' என்ற
படத்தில் மட்டும் சிவாஜிக்கு
சீர்காழி கோவிந்தராஜன்,
ஏ.எம்.ராஜா, டி.எம்.செüந்தரராஜன்
ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு
பாடல்களுக்குப் பின்னணி
பாடியிருப்பார்கள். அதேபோல,
"கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரி'என்ற படத்தில் மட்டும்
சிவாஜிக்கு ஜே.பி.சந்திரபாபு,
ஏ.எம்.ராஜா, வி.என்.சுந்தரம் ஆகிய
மூன்று பேர் பின்னணி
பாடியிருப்பார்கள்.
* நடிகர் திலகம் சிவாஜி
கணேசனுக்காக, வி.என்.சுந்தரம்
இரண்டு பாடல்களை பின்னணி
பாடியுள்ளார். "வீரபாண்டிய
கட்டபொம்மன்' என்ற படத்தில் வெற்றி
வடிவேலனே என்ற பாடலையும்,
"கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரி' என்ற படத்தில் ஒரு
பாடலையும் பாடியுள்ளார்.
* நடிகர் திலகம் சிவாஜி
கணேசனுக்காக எஸ்.சி.கிருஷ்ணன்,
"ராஜா ராணி' என்ற படத்தில்
(கண்ணற்ற தகப்பனுக்கு) பூனை
கண்ணை மூடினால் என்ற ஒரே ஒரு
பாடலை மட்டுமே பின்னணி
பாடியுள்ளார்.
* நடிகர் திலகம் சிவாஜி
கணேசனுக்காக அஜித்சிங் என்பவர்,
"தவப்புதல்வன்' என்ற படத்தில் லவ் ஈஸ்
ஃபைன் டார்லிங் என்ற ஒரே ஒரு
ஆங்கிலப் பாடலை பின்னணி
பாடியுள்ளார்.
* நடிகர் திலகம் சிவாஜி
கணேசனுக்காக, இசையமைப்பாளர்
கண்டசாலா, "கள்வனின் காதலி' என்ற
படத்தில் வெய்யிற்கேற்ற
நிழலுண்டு என்ற ஒரே ஒரு
பாடலை மட்டும் பின்னணி
பாடியுள்ளார்.
* நடிகர் திலகம் சிவாஜி
கணேசனுக்காக தெலுங்கு
பின்னணிப் பாடகர் எம்.சத்தியம்
என்பவர், "மங்கையர் திலகம்' என்ற
படத்தில் "நீ வரவில்லை எனில்
ஆதரவேது' என்ற ஒரே ஒரு பாடலை
மட்டும் பின்னணி பாடியுள்ளார்.
* நடிகர் திலகம் நடித்த படங்களில்,
பாரதியார் பாடல்கள் மட்டுமே
பயன்படுத்தப்பட்ட ஒரே படம்,
"கப்பலோட்டிய தமிழன்.'
* பூஜ்ஜியம் என்ற சொல் இடம்பெற்ற
ஒரே பாடல், (நடிகர் திலகம் நடித்த
"வளர்பிறை' படத்தில் வரும்)
"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை" என்ற பாடலாகும்.
* பன்னிரண்டு மாதங்களின்
பெயர்களும் இடம்பெற்ற இரு திரைப்
பாடல்களில் ஒன்று, நடிகர் திலகம்
நடித்த "ராஜராஜ சோழன்' படத்தில்
இடம்பெற்ற, "மாதென்னைப்
படைத்தான்' என்ற பாடலாகும்.
* சிவாஜி நடித்த படங்களில்
பாடல்கள் இருந்தும், சிவாஜி
பாடாமல் இருக்கும் படங்கள் "மோட்டர்
சுந்தரம் பிள்ளை', "தில்லானா
மோகனாம்பாள்' ஆகிய
படங்களாகும்.
* பாடல்களே இல்லாத முதல் தமிழ்த்
திரைப்படம் நடிகர் திலகம் நடித்த
"அந்தநாள்' படமாகும்.
* இலங்கை நடிகை மாலினி
பொன்சேகா நடித்த ஒரே தமிழ்ப் படம்,
நடிகர் திலகம் நடித்த "பைலட்
பிரேம்நாத்' என்பதாகும்.
* எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ்
படங்களை மட்டுமே இயக்கிய
இயக்குநர் எம்.ஏ.திருமுகம், நடிகர்
திலகம் நடித்த "தர்ம ராஜா' என்ற ஒரே
ஒரு படத்தை மட்டுமே
இயக்கியுள்ளார்.
* மனோரமா, நடிகர் திலகத்தின்
ஜோடியாக நடித்த ஒரே படம், "ஞானப்
பறவை' மட்டுமே.
* தமிழ் சினிமாவின் முதல் அகன்ற
திரைப் (சினிமா ஸ்கோப்) படம்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
நடித்த 'ராஜராஜ சோழன்' திரைப்
படமாகும்.
* தமிழில் தயாரிக்கப்பட்ட முதல்
முழு நீள ஈஸ்ட்மென் வண்ணப் படம்,
நடிகர் திலகம் நடித்த "வீரபாண்டிய
கட்டபொம்மன்' (1956) படமாகும். (1952
இல் திரையிடப்பட்ட "ஆன்' (கௌரவம்)
என்ற படம், முழு நீள டெக்னிக்
வண்ணப் படம் என்றாலும், அது
இந்தியிலிருந்து தமிழுக்கு
மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப் பட்ட
படமாகும். (எம்.ஜி.ஆர். நடித்த
"அலிபாபாவும் 40
திருடர்களும்' (1956) என்ற படம், தமிழ்
சினிமாவின் முதல் முழு நீள
கேவா வண்ண படமாகும்).
* நடிகர் திலகம் கெüரவ வேடத்தில்
நடித்த தமிழ் படங்கள் மர்ம வீரன்,
குழந்தைகள் கண்ட குடியரசு,
தாயைப் போல பிள்ளை நூலைப்
போல சேலை, தாயே உனக்காக,
சினிமா பைத்தியம், உருவங்கள்
மாறலாம், நட்சத்திரம், தாவணிக்
கனவுகள், மருமகள், சின்ன மருமகள்,
பசும்பொன், ஒன்ஸ்மோர், தேவர் மகன்,
என் ஆச ராசாவே, மன்னவரு
சின்னவரு, புதிய வானம்,
ஜல்லிக்கட்டு, படையப்பா, பூப்பறிக்க
வருகிறோம் ஆகியவை.
* நடிகர் திலகம் இரு வேடங்களில்
நடித்த படங்கள் உத்தம புத்திரன், எங்க
ஊர் ராஜா, கெüரவம், என் மகன்,
மனிதனும் தெய்வமாகலம், சந்திப்பு,
ரத்த பாசம், சிவகாமியின் செல்வன்,
பாட்டும் பரதமும், என்னைப் போல்
ஒருவன், புண்ணிய பூமி,
எமனுக்கு எமன், விஸ்வரூபம்,
வெள்ளைரோஜா, பலே பாண்டியா
(3 வேடங்கள்), தெய்வ மகன் (3
வேடங்கள்), திரிசூலம் (3 வேடங்கள்),
நவராத்திரி (9 வேடங்கள்) .
* "பராசக்தி' படத்தை இயக்கிய
கிருஷ்ணன் பஞ்சு முதல்,
பூப்பறிக்க வருகிறோம் படத்தை
இயக்கிய ஏ.வெங்கடேஷ் வரை,
சுமார் 100 இயக்குநர்களின்
இயக்கத்தில் நடிகர் திலகம்
நடித்துள்ளார். சிவாஜியை
வைத்து அதிக படங்களை
இயக்கியவர்கள் ஏ.சி.திருலோகசந்தர்
(20 படங்கள்), ஏ.பீம்சிங் (17 படங்கள்) .
* படத் தயாரிப்பைப் பொறுத்த
வரையில் நடிகர் திலகத்தை
வைத்து அதிக (17 படங்கள்) படங்களை
தயாரித்தவர் நடிகர் கே.பாலாஜி
மட்டுமே.
* பண்டரிபாய் முதல் சுமார் 55
கதாநாயகிகள் சிவாஜியுடன்
இணைந்து நடித்துள்ளார்கள்.
இவர்களில் கே.ஆர்.விஜயா 40
படங்களிலும், பத்மினி 38
படங்களிலும் இணைந்து
நடித்துள்ளார்கள்.
* ஜெயலலிதாவின் தாயார் சந்தியா
அவர்கள், "பலே பாண்டியா' படத்தில்
நடிகர் திலகத்துக்கு
ஜோடியாகவும், "சாந்தி' படத்தில்
தாயாகவும் நடித்துள்ளார்.
* ஜெயலலிதா, "மோட்டார் சுந்தரம்
பிள்ளை' படத்தில் நடிகர்
திலகத்துக்கு மகளாகவும், பல
படங்களில் நடிகர் திலகத்துக்கு
ஜோடியாகவும், "பாட்டும் பரதமும்'
படத்தில் நடிகர் திலகத்துக்கு
தாயாகவும் நடித்துள்ளார்.
* நடிகை லட்சுமியின் தாயார்
குமாரி ருக்மணி, "கப்பலோட்டிய
தமிழன்'படத்தில் நடிகர் திலகத்துக்கு
ஜோடியாகவும், "ரோஜாவின்
ராஜா' படத்தில் தாயாகவும்,
"விளையாட்டுப் பிள்ளை' படத்தில்
மாமியாராகவும் நடித்துள்ளார்.
* நடிகை லட்சுமி, எதிரொலி,
தங்கைக்காக, அருணோதயம் ஆகிய
படங்களில் நடிகர் திலகத்துக்கு
தங்கையாகவும், ராஜராஜ சோழன்
படத்தில் மகளாகவும், உனக்காக
நான், தியாகம், நெஞ்சங்கள்,
ராஜரிஷி, ஆனந்தக் கண்ணீர் ஆகிய
படங்களில் ஜோடியாகவும்
நடித்துள்ளார்.
* நடிகை ஸ்ரீதேவி, நடிகர்
திலகத்தின் மகளாக பைலட்
பிரேம்நாத் படத்திலும், ஜோடியாக
விஸ்வரூபம், சந்திப்பு ஆகிய
படங்களிலும் நடித்துள்ளார்.
* நடிகை சுமித்ரா, அண்ணன் ஒரு
கோயில் படத்தில் நடிகர்
திலகத்துக்கு தங்கையாகவும், வீர
பாண்டியன் படத்தில்
ஜோடியாகவும் நடித்துள்ளார்.
* விஜயகுமாரி, பார் மகளே பார்
படத்தில் நடிகர் திலகத்துக்கு
மகளாகவும், குங்குமம், ராஜராஜ
சோழன் ஆகிய படங்களில் நடிகர்
திலகத்துக்கு ஜோடியாகவும்,
பச்சை விளக்கு படத்தில் நடிகர்
திலகத்துக்கு தங்கையாகவும்,
அன்பைத் தேடி படத்தில் நடிகர்
திலகத்துக்கு அக்காவாகவும்
நடித்துள்ளார்.
* தம்மை விட வயதில் மூத்தவரான
பி.பானுமதியுடன் சில படங்களில்
சிவாஜி இணைந்து நடித்துள்ளார்.
* குங்குமம், லாரி டிரைவர்
ராஜாக்கண்ணு ஆகிய இரு
படங்களில் சிவாஜி பெண்
வேடங்களில் நடித்துள்ளார்.
* பாபு, சம்பூர்ண ராமாயணம்,
லட்சுமி கல்யாணம், காவல் தெய்வம்,
படிக்காத பண்ணையார், மூன்று
தெய்வங்கள் இன்னும் சில படங்களில்
சிவாஜி நடித்த பாத்திரங்களுக்கு,
கதாநாயகிகள் கிடையாது.
* மராட்டிய மாமன்னர் வீர
சிவாஜியாக நடிகர் திலகம் முழுப்
படத்தில் நடிக்கவில்லை என்றாலும்
"ராமன் எத்தனை ராமனடி' படத்தில்
ஒரு காட்சியில் மட்டும்
சிவாஜியாக சிவாஜி
நடித்திருக்கிறார்.
* தமிழ் சினிமா வரலாற்றிலேயே
முதன் முதலாக 80 அடி உயர விளம்பர
பலகை (கட் அவுட்) வைக்கப்பட்டது,
சிவாஜி நடித்த வணங்காமுடி (1957)
படத்திற்கே.
* "திரையுலக இளவரசன்' நடிக்கும்
என்ற விளம்பரத்துடன், மாடர்ன்
தியேட்டர்ஸ் தயாரித்த திரும்பிப்
பார் (1953) என்ற படத்திற்குதான்,
தமிழ் சினிமா வரலாற்றிலேயே
முதன் முதலாக பட முன்னோட்டம்
(டிரெய்லர்) காட்டப்பட்டது.
* இலங்கை வானொலியில் நல்ல
தமிழ் கேட்போம் என்ற தலைப்பில்,
வாரத்தில் ஒரு நாள் 30
நிமிடங்களுக்கு புகழ் பெற்ற
திரைப்படங்களின் கதை -வசனங்களை
ஒலி பரப்புவார்கள். அந்த
நிகழ்ச்சியில் சக்தி கிருஷ்ணசாமி,
ஏ.பி.நாகராஜன், மு.கருணாநிதி,
இளங்கோவன், தஞ்சை
ராமையாதாஸ், எஸ்.டி.சுந்தரம்
போன்ற சிறந்த படைப்பாளிகளின்
திரைக்கதை வசனங்கள் ஒலிபரப்பப்
படும். சிவாஜி நடித்த
திருவிளையாடலில் தருமியும்
சிவனும் பேசும் வசனம், வீரபாண்டிய
கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன்
துரையிடம் கட்டபொம்மன் பேசும்
வசனம், பராசக்தியில் நீதிமன்றக்
காட்சி, ராஜா ராணியில் உள்ள
சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன்
நாடகங்கள் ஆகிய வசனங்களே அதிக
தடவை ஒலிபரப்பப்பட்டுள்ளன.
- சிவ.குகன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
நடித்த மொத்த படங்கள் - 306
கதாநாயகனாக நடித்த
தமிழ் படங்கள் - 262
கதாநாயகனாக நடித்த
பிறமொழி படங்கள் - 14
கெüரவ வேடத்தில் நடித்த
தமிழ் படங்கள் - 19
கெüரவ வேடத்தில் நடித்த
பிறமொழி படங்கள் - 11
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
பெற்ற விருதுகள்
1960 இல் கெய்ரோவில் நடந்த ஆசிய,
ஆப்பிரிக்க பட விழாவில், சிறந்த
நடிகருக்கான விருதை சிவாஜி
கணேசனுக்கு "வீரபாண்டிய
கட்டபொம்மன்' படம் பெற்று தந்தது.
1966 இல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
1969 இல் தமிழக அரசு வழங்கிய
சிறந்த நடிகர் விருது பெற்றார்.
1969 இல் தமிழக அரசு வழங்கிய
கலைமாமணி விருது பெற்றார்.
1984 இல் பத்மபூஷன் விருது
பெற்றார்.
1986 இல் அண்ணாமலைப்
பல்கலைக்கழகம் இவருக்கு கெüரவ
டாக்டர் பட்டம் அளித்தது. நடிகர்
திலகம், சிம்மக் குரலோன், கலைக்
குரிசில் - என்ற பட்டப்
பெயர்களாலும் ரசிகர்களால்
அழைக்கப்பட்டார். இந்திய அஞ்சல்
துறையானது, இவரின் படம் பதித்த 4
ரூபாய்க்கான அஞ்சல் தலையை
வெளியிட்டு நடிகர் திலகத்தை
கெüரவம் செய்தது. "கப்பலோட்டிய
தமிழன்' படத்திற்கு, அரசு
வரிவிலக்கு அளித்து, வ. உ.சி
அவர்களையும், நடிகர் திலகம்
அவர்களையும் கெüரவம் செய்தது.
1995 இல் பிரான்ஸ் நாட்டில் வழங்கப்
பட்ட செவாலியே விருது பெற்றார்.
1996 இல் குடியரசுத் தலைவரிடம்
தாதாசாகிப் பால்கே விருது
பெற்றார்.

***********************************