புதன், 30 ஆகஸ்ட், 2017

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் ஆகஸ்ட் 31 , 1979.



இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் ஆகஸ்ட்  31 , 1979.

யுவன் சங்கர் ராஜா ( ஆங்கிலம் : Yuvan Shankar Raja ; பிறப்பு: ஆகஸ்டு 31 , 1979 ) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். .பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது திரைப்படமாகும். இவர் இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறினார்.


திருமண வாழ்க்கை
2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
2007 ஆம் ஆண்டு சுஜன்யாவிடமிருந்து விவாகரத்து செய்தார்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பதியில் ஷில்பா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஷில்பாவை விவாகரத்து செய்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்று அன்று ஜபருன்னிசாவைத் திருமணம் செய்தார்.


இவர் இசையமைத்துள்ள திரைப்படங்கள்

தமிழில்
அரவிந்தன் (1997) (அறிமுகம்)
வேலை (1998)
கல்யாண கலாட்டா (1998)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
தி பிளாஸ்ட் (திரைப்பட இசையல்லாத இசைக்கோப்பு)
உனக்காக எல்லாம் உனக்காக (1999)
ரிஷி (2000)
தீனா (2000)
துள்ளுவதோ இளமை (பாடல்கள் மாத்திரம்) (2001)
மனதை திருடி விட்டாய் (2001)
நந்தா (2001)
ஜூனியர் சீனியர் (2002)
காதல் சாம்ராஜ்ஜியம் (2002)
ஏப்ரல் மாதத்தில் (2002)
பாலா (2002)
மௌனம் பேசியதே (2002)
புன்னகைப் பூவே (2002)
பாப் கார்ன் (2002)
வின்னர் (2003)
காதல் கொண்டேன் (2003)
புதிய கீதை (பாடல்கள் மாத்திரம்) (2003)
தென்னவன் (2003)
குறும்பு (2003)
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2003)
உள்ளம் (2004)
எதிரி (2004)
பேரழகன் (2004)
7 ஜி ரெயின்போ காலனி (2004)
மன்மதன் (2004)
போஸ் (2004)
அது (பின்னணி இசை மாத்திரம்) (2004)
ராம் (2005)
அறிந்தும் அறியாமலும் (2005)
தாஸ் (2005)
ஒரு கல்லூரியின் கதை (2005)
கண்ட நாள் முதல் (2005)
சண்டக்கோழி (2005)
கள்வனின் காதலி (2005)
அகரம் (2005)
புதுப்பேட்டை (2005)
பட்டியல் (2006)
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)
கேடி (2006)
வல்லவன் (2006)
திமிரு (2006)
பருத்திவீரன் (2006)
தாமிரபரணி (2006)
தீபாவளி (2007)
சென்னை 600028 (பாடல்கள் மாத்திரம்) (2007)
சத்தம் போடாதே (2007)
தொட்டால் பூ மலரும் (2007)
கண்ணாமூச்சி ஏனடா (2007)
கற்றது தமிழ் (2007)
வேல் (2007)
மச்சக்காரன் (2007)
பில்லா 2007 (2007)
வாழ்த்துகள் (2008)
சரோஜா (2008)
யாரடி நீ மோகினி (2008)
ஏகன் (2008)
சிலம்பாட்டம் (2008)
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009)
சிவா மனசுல சக்தி (2009)
சர்வம் (2009)
வாமணன் (2009)
முத்திரை (2009)
யோகி (2009)
பையா (2009)
தீராத விளையாட்டு பிள்ளை (2009)
கோவா (2010)
பாணா காத்தாடி (2010)
காதல் சொல்ல வந்தேன் (2010)
தில்லாலங்கடி (2010)
நான் மகான் அல்ல (2010)
பாஸ் (எ) பாஸ்கரன் (2010)
பதினாறு (2010)
வானம் (2011)
அவன் இவன் (2011)
ஆரண்ய காண்டம் (பின்னணி இசை மாத்திரம்) (2011)
மங்காத்தா (2011)
ராஜபாட்டை (2011)
வேட்டை (2012)
கழுகு (2012)
பில்லா 2 (2012)
சமர் (பாடல்கள் மாத்திரம்) (2013)
அமீரின் ஆதிபகவன் (2013)
மூன்று பேர் மூன்று காதல் (2013)
கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013)
தில்லு முல்லு (2013) ( ம. சு. விசுவநாதனுடன் இணைந்து)
தங்க மீன்கள் (2013)
ஆதலால் காதல் செய்வீர் (2013)
ஆரம்பம் (2013)
பிரியாணி (2013)
வானவராயன் வல்லவராயன் (2014)
இவர் இசையமைத்து வெளிவரவுள்ள திரைப்படங்கள்
பேசு (2013)
காதல் 2 கல்யாணம் (2013)
வேட்டை மன்னன் (2014)
வை ராஜா வை (2014)
சிப்பாய் (2014)
வடக்கறி (2014)
தரமணி (2014)
விருதுகள்
சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (2006)
சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - 7 ஜி ரெயின்போ காலனி (2004)
விருப்பமான பாடலுக்கான விஜய் விருது - "என் காதல் சொல்ல" - பையா (2010)

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் ஆகஸ்ட் 30 , 1957


கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் ஆகஸ்ட் 30 , 1957

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ( நவம்பர் 29 , 1908 - ஆகஸ்ட் 30 , 1957 ) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியவர்.
காந்தியடிகளிடமும் , காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

கொலைக் குற்றச்சாட்டு

அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த
தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.


இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்.

பைத்தியக்காரன் (1947)
நல்ல தம்பி (1949)
அமரகவி (1952)
பணம் (1952)
டாக்டர் சாவித்திரி (1955)
நம் குழந்தை (1955)
முதல் தேதி (1955)
காவேரி (1955)
மதுரை வீரன் (1956)
நன்நம்பிக்கை (1956)
கண்ணின் மணிகள் (1956)
ஆசை (1956)
சக்கரவர்த்தி திருமகள் (1957)
புது வாழ்வு (1957)
அம்பிகாபதி (1957)
தங்கப்பதுமை (1959)
தோழன் (1960)
67-ல் என். எஸ். கிருஷ்ணன் (1967) (என்.எஸ்.கே.நடித்த படங்களின் தொகுப்பு)
இவர் இயக்கிய படங்கள்
பணம் (1952)

மணமகள்

இவர் பாடிய பாடல்கள்

ஜெயிலிக்குப் போய் வந்த (பைத்தியக்காரன்)
பணக்காரர் தேடுகின்ற (பைத்தியக்காரன்)
ஆசையாக பேசிப் பேசி (பைத்தியக்காரன்)
ஒண்ணுலேயிருந்து (முதல்தேதி)
இடுக்கண் வருங்கால் (முதல்தேதி)
சங்கரியே காளியம்மன் (ரங்கோன் ராதா)
ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)
காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)
ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)
ஆரவல்லியே (ஆர்ய மாலா)
கண்ணா கமலக் கண்ணா (கண்ணகி)
கண்ணனெந்தன் (கண்ணகி)
இருக்கிறது பார் கீழே (மங்கையற்கரசி)
கண்ணே உன்னால் (அம்பிகாபதி)
சந்திர சூரியர் (அம்பிகாபதி)
தீனா...மூனா...கானா...(பணம்)
உன்னருளால் (ரத்னமாலா)
என் சாண் உடம்பில் (ரத்னமாலா)
சிரிப்பு இதன் சிறப்பை (ராஜா ராணி)
நாலுக் கால் குதிரை (ஆசை)
தாலி பொண்ணுக்கு வேலி (ஆசை)
சங்கரியே காளியம்மா (நன்னம்பிக்கை)
வாதம் வம்பு பண்ண (டாக்டர் சாவித்திரி)]
காசிக்கு போனா கருவுண்டாகுமென்ற (டாக்டர் சாவித்திரி)
கிந்தன் சரித்திரமே (நல்ல தம்பி)
ஏண்டிக் கழுதை (உத்தமபுத்திரன்)
தளுக்கான வால வயசு (உத்தமபுத்திரன்)
விடுதியில் மேய்திடுவோம் (ஜகதலப்ரதாபன்)
பெண்ணுலகிலே பெருமை (கிருஷ்ணபக்தி)
சங்கர சங்கர சம்போ (கிருஷ்ணபக்தி)
நித்தமும் ஆனந்தமே (பவளக்கொடி)
விஜய காண்டிப வீரா (பவளக்கொடி)
அன்னம் வாங்கலையோ (பவளக்கொடி)
இவனாலே ஓயாத தொல்லை (பவளக்கொடி)
சொந்தமாக நெனச்சு (வனசுந்தரி)
ஊன்னு ஒரு வார்த்தை (மனோன்மணி)
இன்னிக்கு காலையிலே (சகுந்தலை)
வெகுதூரக்கடல் தாண்டி (சகுந்தலை)
நல்ல பெண்மணி (மணமகள்)
ஆயிரத்திதொள்ளாயிரத்தி (மணமகள்)
சுதந்திரம் வந்ததுண்ணு (மணமகள்)
குடி கெடுத்த குடியொழிஞ்சுது (நல்லதம்பி)
மழையில்ல சீமையில் (தக்ஷயக்ஞம்)
சிவானந்த ரஸம் (தக்ஷயக்ஞம்)
இருவரும் ஒன்றாய் (தக்ஷயக்ஞம்)
சோனா இல்லன்னா (லைலா மஜ்னு)
சும்மா இருக்காதுங்க (நல்லகாலம்)

மறைவு

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் 1957 ஆகத்து 30 அன்று தனது 49வது வயதில் காலமானார். கிருஷ்ணன்-மதுரம் தம்பதிகளின் புதல்வி கலைச்செல்வி 1948 மே 18 அன்று காலமானார்.  மனைவி டி. ஏ. மதுரம் 1974 இல் காலமானார்.

கலைவாணர் அரங்கம்
தமிழ்நாடு அரசு கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த
கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது.



சிரிப்பு மருத்துவர் கலைவாணர் என்.எஸ்.கே நினைவு தின சிறப்பு பகிர்வு!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவுநாள் இன்று (ஆகஸ்ட் 30). நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்
டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.
நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்

திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.
அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.
என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நாடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .
என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்
Advertisement
என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.
அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் .
” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு
ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டு தான் இறந்து போனார்.



என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
என்.எஸ். கிருஷ்ணன்... தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!...

நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!
வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணரின் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம்!
ஆனந்த விகடனில் தான் எழுதிய
' சதிலீலாவதி ' தொடரை அதே பெயரில் படமாக்கினார் என்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம் ஆனால், ' சதி லீலாவதி' யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே. அடுத்து நடித்த ' மேனகா' படமே முதலில் திரைக்கு வந்தது. மொத்தம் 122 படங்களில் நடித்திருக்கிறார்!
' வசந்தசேனா ' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது ப ட த்தின்
தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதம் பூத்தது!
தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை மணந்தார் என்.எஸ்.கே கலைவாணருக்கு ஏற்கெனவே திருணமான விஷயத்தை அவரது குழுவில் இருந்த புளிமூட்டை ராமசாமி என்பவர் மதுரத்திடம் போட்டு உடைக்க, இதனால் சில நாட்கள் கலைவாணரிடம் மதுரம் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்!
என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே,
' பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது,
' நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம். சாப்பிட வாங்க! ' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்! ' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.
என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!
' மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் ' நாட்டியப் பேரொளி ' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!
உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்.
' உடுமலைக்கவியை ' கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.
1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். ' இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள் ' என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!
' இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். 'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்! ' – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!
சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு ' கலைவாணர் '
என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த ' ராஜமுக்தி '
படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், ' எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.! '
என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!
'' என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்! '' என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!
கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல் அனுப்பினார், 'நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன்.
ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், ' எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, ' இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார்!
' தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்! '
என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!
தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கல் சொல்லவே, ' அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே ' என்பாராம்!
கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.
சென்னையில் ' சந்திரோதயம் ' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. ' நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்! '
என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே. 'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!
சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, ' மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்!
ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30- ம் தேதி காலமானார். தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் மூழ்கிய தினம் அது!



காரோட்டிக்கு பாராட்டுவிழா எடுத்த கலைமேதை என்.எஸ்.கிருஷ்ணன்!

1950 களின் மத்தியில் பிரம்மாண்டமாக நடந்தது அந்த விழா. விழாவில் பங்குபெற்றோர் அந்நாளைய பிரபல நட்சத்திரங்கள். அந்த விழாவை எடுத்து நடத்தியதும், அந்நாளில் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நட்சத்திரம்தான். ஆனால் இத்தனை அம்சங்களுடன் நடந்த அந்த விழாவின் நாயகன், பிரபல நட்சத்திரமோ, பிரபலமான பிரமுகரோ அல்ல: ஒரு சாதாரண கார் ஓட்டுநர்.
தனக்கு கார் ஓட்டிய ஒரு ஊழியருக்கு பாராட்டு விழா எடுத்த அந்த மனிதர் வேறு யாருமல்ல; “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர்தான்” என மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட என்.எஸ். கிருஷ்ணன்தான் அது!

அவரது நினைவுநாள் இன்று...
நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில், 1908 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை, தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!
வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணர் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்தினார். பிறகு, நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம். பின்னாளில் நாடகங்களில் நடித்துவந்தார். ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் எஸ்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம். ஆனால், 'சதிலீலாவதி'யை முந்திக்கொண்டு அவரது 2 வது படமான 'மேனகா' வெளிவந்தது.
மேனகாவின் வெற்றியால், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவை மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களான பி.யு சின்னப்பா, தியாகராஜபாகவதர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரையுலகில் புகழடைந்தபின், தானே சொந்தமாக தனது பாத்திரத்தன்மையை வடித்து, அதை படங்களில் பயன்படுத்தினார் கலைவாணர்.
திரைப்படத் துறையில் பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வெறுமனே சிரிக்க மட்டுமின்றி, சிந்திக்க வைக்கக்கூடியதாகவும், மேதமையாக இருந்தது அவரது நகைச்சுவை
காட்சிகள். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு, ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறவிடவே, வழிச் செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசியை தீர்த்தார் கலைவாணர். அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதல் பூத்தது. மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். கலைவாணர்- மதுரம் ஜோடி திரையுலகில் பெரிதும் பேசப்பட்ட ஜோடி.




நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல், அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.
என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம், சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவரது மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.
ஒருமுறை என்.எஸ்.கே ரஷ்யப் பயணம் மேற்கொண்டார். அதுபற்றி நிருபர்கள் கேட்க, ' ரஷ்யாவில் அக்ரஹாரமும் இல்லை...சேரியும் இல்லை' என்று நறுக் என்று பதில் அளித்தார்.
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். தனது படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என அவர் நகைச்சுவையாகவும், அதே சமயம் தீர்க்க சிந்தனையோடும் காட்சிகளை அமைத்தார். ஆச்சர்யமாக அத்தனையும் நடந்தேறியது. கலைவாணரின் தீர்க்க சிந்தனையை மக்கள் போற்றினர்.
திமுக மீதும், அதன் தலைவர்கள் மீதும் அன்பு கொண்டவராக இருந்தாலும் எக்காலத்திலும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்குரியவராக கலைவாணர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. எல்லா கட்சியிலும் அவரது அன்புக்குரியவர் இருந்தார்கள். “கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன். அவன் மக்களின் ரசிகன்” என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.
'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி, அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பைப் பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்.

கலைவாணர் புகழின் உச்சியில் இருந்தபோது அவரது வாழ்க்கையை முடக்கிப்போட்டது ஒரு வழக்கு.
'இந்து நேசன்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாக கூறி இருவரும் கைதானார்கள். பல்வேறு மாதங்களுக்கு பின், லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப்பின்னும் விடுவிடுவென படங்களில் நடிக்கத் துவங்கினார் கலைவாணர்.
'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்த அன்று காருக்கு பெட்ரோல் போட்டதுக் கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார். - கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போதெல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பாராம்.
சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில்தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே.சம்பந்தம் முதலியார்.
மேதைமையான அவரது நகைச்சுவையால் கலைவாணர், தென்னாட்டு சார்லி சாப்ளின் என அழைக்கப் பட்டார். ஆனால் இதற்கு கலைவாணரின் கருத்து என்ன தெரியுமா? "என்னைச் சிலர் தமிழ்நாடு சார்லி சாப்ளின்னு சொல்றாங்க. சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!" என்றார் என்.எஸ்.கே.தன்னடக்கமாக.
தன்னைத் தேடி வருபவர்களின் துயரங்களை கேட்டு, அவர்களுக்கு உதவுவதில் அக்கறை காட்டும் மனிதாபிமானி என்.எஸ். கே. ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது இறுதிநாட்களில், அவரிடம் வேலை செய்த ஒருவர், 'தன் மகளுக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது ஒரு விலையுயர்ந்த வெள்ளி கூஜா. அதை எடுத்துக்கொடுத்து, 'என்னிடம் பணமாக கொடுக்க எதுவும் இல்லை. இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார். கண்ணீர் பீறிட்டது அந்த ஊழியரிடம் இருந்து.
தன் மனைவி மதுரத்திடம், “எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்று கூறும் நிலை வந்தால், நான் உயிரோடு இருக்கக் கூடாது!' என்று அடிக்கடி கூறுவாராம்.
இவரால் சினிமாவில் அடையாளம் காணப்பட்டவர்கள் பலர். குமரி மாவட்டம் இப்போதைய கேரளாவோடு இருக்கும் போது, தமிழர்கள் தாய் தமிழகத்தோடு இணைய வேண்டும் என போராடிய தமிழ் உணர்வாளர்களுக்கு ஆதரவாக நின்றவர்.
தினமும் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். ஏதோதோ காரணம் சொல்லி பணம் கேட்க, இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுகிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, ' ஏமாத்தி அவன் என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத் தானே சாப்பிடப் போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம். அத்தனை மனிதாபிமானி என்.எஸ்.கே
காந்தியை மிகவும் நேசித்த கலைவாணர், நாகர்கோவில் நகராட்சி பூங்காவில் தனது சொந்த செலவில் காந்தி நினைவுத் தூணை எழுப்பி அதில் கவிமணியின் கவிதைகளை இடம்பெறச் செய்தார். இது இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான கலைவாணர், அதற்காக தன் சொந்த நிலத்தையும் வழங்கியவர்.

சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா. கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின. நகைச்சுவை மேதையான அவர், அதையும் தன் பாணியில், 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே!" என்றாராம்.
ஒரு கட்டத்தில் கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார் என்.எஸ்.கே. ஆனால் தொடர்ந்து உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 49-வது வயதில் காலமானார். தன் நகைச்சுவையால் தமிழகத்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை மேதை தமிழர்களை ஒரே முறை தன் இறப்பின் மூலம் அழவைத்தார்.
உலகிலேயே நகைச்சுவை நடிகர்களில் இருவருக்கு மட்டும்தான் சிலை அமைக்கப்பட்ட பெருமை உண்டு. ஒருவர் சார்லின் சாப்ளின், மற்றொருவர் கலைவாணர்.
நன்றி விகடன்.விக்கிப்பீடியா.

நடிகை ரிச்சா பலோட் பிறந்த நாள் ஆகஸ்ட் 30.



நடிகை ரிச்சா பலோட் பிறந்த நாள் ஆகஸ்ட்  30.

ரிச்சா பலோட்  இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் இந்தி, தமிழ் , தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதலாவதாக லம்மே என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். 2000 ஆம் ஆண்டு நுவ்வே கவாளி என்ற தொலுங்குப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமான பலோட் சாஜாகான் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.
திரைப்படத்துறை
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொ
1991 லம்மே பூஜா இந்தி
1997 பர்தேஸ் இந்தி
2000 நுவ்வே கவாளி மது தெலு
2001
சிரு ஜாலு
ராதிகா பிரசாத் தெலு
சாஜாகான் மாயே தமிழ்
2002
அல்லி அர்ஜுனா சாவித்திரி தமிழ்
குச் தும் கவோ குச் அம் கயேயின்
மங்களா சோலங்கீ இந்தி
ஓலி சந்தியா தெலு
2003
காதல் கிருக்கன் மாகா தமிழ்
தும்சே மில்கே ரோங் நம்பர்
மாயி மாதுர் இந்தி
2004
சப்பாலே ஜானு கண்ண
அக்னி பங்க் சுர்பீ இந்தி
கோன் ஏய் ஜோ சப்னோ மெயின் ஆயா
மயேக் இந்தி
2005
ஜோட்டா நந்தினி கண்ண
நீல்ல என் நிக்கீ சுவீடீ இந்தி
2006
சம்திங் சந்திங் உனக்கும் எனக்கும்
லலிதா தமிழ்
2008 நல்வரவு தமிழ்.


உடல் ஒரு கோயில்!- நடிகை ரிச்சா பலோட் சிறப்பு பேட்டி

விஜய் நடித்த 'ஷாஜகான்' படத்தில் 'அச்சச்சோ புன்னகை' பாடல் மூலம் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் ரிச்சா பலோட். தற்போது 'யாகாவாராயினும் நாகாக்க' படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…
'யாகாவாராயினும் நாகாக்க' வாய்ப்பு எப்படி அமைந்தது?
முதலில் நான் உங்கள் ரசிகன். பிறகுதான் இயக்குநர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு கதையைச் சொன்னார் இயக்குநர் சத்யா. கதையைக் கேட்ட இரவன்று எனக்குத் தூக்கமே வரவில்லை. மறுநாள் காலை அவருக்கு போன் செய்து இப்படத்தை நான் பண்ணுகிறேன் என்று தெரிவித்துவிட்டேன். இப்படத்தில் நான் நாயகனுக்கு அக்கா. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு பெண் மாட்டிக்கொண்டால் என்ன செய்வாள் என்ற சவாலுக்குரிய பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
தமிழில் ஏன் தொடர்ச்சியாகப் படங்கள் பண்ணவில்லை?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துவிட்டேன். இதனால் தொடர்ந்து வெவ்வேறு மொழிப் படங்களின் படப்பிடிப்பு இருக்கும். உங்களுக்கு இங்கு மட்டும் பார்க்கும்போது, நான் ஏதோ நடிப்பை விட்டுப் போய்விட்டது போல தோன்றியிருக்கலாம்.
தவிர எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகிவிட்டது. காதல் திருமணம்தான். என்னுடைய கணவர் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர். மிகவும் அமைதியானவர், திரையுலகைச் சார்ந்தவர் அல்ல. அகமதாபாதில் பொறியாளராக இருக்கிறார். அவருடைய பெயர் ஹிமாஞ்சி பஜாஜ். திருமணமான உடனே “உனக்கு நடிப்புப் பிடிக்கும். ஆகையால் நடிப்பதை நிறுத்தாதே” என்று கூறிவிட்டார்.
காதல் மலர்ந்த கதையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
எனது கணவருக்கு உடலமைப்பைப் பேணுவது என்பது மிகவும் பிடிக்கும். உடல் ஒரு கோயில் என்பார். நானும் உடலமைப்பு விஷயத்தில் அப்படிதான். நாங்கள் சந்தித்ததே உடற்பயிற்சிக் கூடத்தில்தான். அது காதலிக்க ஏற்ற இடம் அல்ல. நண்பர்களான உடன் “நீங்கள் என்ன பண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.
“நடிகை” என்றேன். அவருக்கு நான் ஒரு நடிகை என்பதே நாங்கள் பேச ஆரம்பித்த பிறகுதான் தெரியும். காதலிக்க ஆரம்பித்தவுடன், எங்கள் இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்தார்கள். அவரிடம் எனக்குப் பிடித்ததே, ‘‘உனக்கு என்ன பிடிக்குமோ அப்படிதான் நீ இருக்க வேண்டும்’ என்று அவர் கூறுவதுதான்.
அண்ணி, அக்கா வேடங்களுக்குத் தயாராக இருக்கிறீர்களா?
எனக்கு நல்ல வேடங்கள் வந்தால் தொடர்ச்சியாக நடிப்பேன். கொஞ்சம் வித்தியாசமான பாத்திரங்களை தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாம். நீங்கள் கூறுவதைப் போல் திருமணத்துக்குப் பிறகு அண்ணி, அக்கா வேடங்கள்தான் வரும் என்பார்கள்.
நான் அதை மாற்ற நினைக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பது நான் சொன்ன பிறகுதான் உங்களுக்கே தெரிகிறது இல்லையா? இத்தனை ஃபிட்டாக இருக்கும்போது நல்ல கதாபாத்திரங்களை, ஏன் நாயகி வாய்ப்பைக்கூட, எதிர்பார்ப்பது தவறில்லையே?
அப்படியானால் இன்று யாருக்கு ஜோடியாக நடிக்க ஆசை?
எனக்கு அஜித்தின் புதிய லுக் மிகவும் பிடித்திருக்கிறது. ‘ஷாஜகான்' முடிந்தவுடன் அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ணும் வாய்ப்பு வந்தது. ஆனால், அப்படம் கைவிடப்பட்டது. எனக்கு அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசையாக இருக்கிறது.
விளம்பரங்களை ஒப்புக்கொள்ளும்முன் நட்சத்திரங்களுக்குப் பொறுப்பு இருக்கிறதா இல்லையா ?
நாங்கள் ஒரு நிறுவனத்தின் பொருட்களை விளம்பரப்படுத்துகிறோம் என்றால், அந்த உணவில் என்ன விஷயங்களெல்லாம் கலந்திருக்கின்றன என்பதை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? பொருட்களில் என்னென்ன கலந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் இல்லையே நாங்கள். ஆனால், இந்த விஷயங்களில் நாங்கள் இனிமேல் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

நன்றி விக்கிப்பிடியா.தி இந்து தமிழ்.

நடிகை ஆனந்த் பாபு பிறந்த நாள் ஆகஸ்டு 30 , 1963.



நடிகை ஆனந்த் பாபு பிறந்த நாள் ஆகஸ்டு 30 , 1963.

ஆனந்த் பாபு (பிறப்பு: ஆகஸ்டு 30 , 1963 ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நன்கறியப்பட்ட தமிழ் நடிகர் நாகேஷின் மகனாவார். இவரது நன்றாக நடனமாடும் திறனுக்காகவும் அறியப்படுகிறார். இவர் 1983 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர். 2009ஆம் ஆண்டு முதல் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆனந்த் பாபு 1985 திசம்பர் 8 அன்று சாந்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவரது இளைய மகனான
கஜேஷ் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். போதைப் பழக்கத்திற்கு ஆளானதால் 2006 ஆவது ஆண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் மொழி
1983 தங்கைக்கோர் கீதம் தமிழ்
1984 கடமை தமிழ்
1984 புயல் கடந்த பூமி தமிழ்
1984 நியாயம் கேட்கிறேன் தமிழ்
1985 பாடும் வானம்பாடி தமிழ்
1985 வெற்றிக்கனி தமிழ்
1985 உதய கீதம் தமிழ்
1985 பார்த்த ஞாபகம் இல்லையோ தமிழ்
1985 விஸ்வநாதன் வேலை வேண்டும் தமிழ்
1985 இளமை தமிழ்
1985 பந்தம் தமிழ்
1985 அர்த்தமுள்ள ஆசைகள் தமிழ்
1986 மௌனம் கலைகிறது தமிழ்
1986 பலேமித்ருடு தெலுங்கு
1988 கடற்கரை தாகம் தமிழ்
1989 தாயா தாரமா தமிழ்
1990 புரியாத புதிர் தமிழ்
1990 புது வசந்தம் தமிழ்
1990 எங்கள் சுவாமி அய்யப்பன் தமிழ்
1990 எதிர் காற்று தமிழ்
1990 புதுப்புது ராகங்கள் தமிழ்
1991 சிகரம் தமிழ்
1991 சேரன் பாண்டியன் தமிழ்
1991 இதய ஊஞ்சல் தமிழ்
1991 எம்ஜிஆர் நகரில் தமிழ்
1991 புத்தம் புது பயணம் தமிழ்
1991 அன்பு சங்கிலி தமிழ்
1991 ஈஸ்வரி தமிழ்
1991 ஒன்னும் தெரியாத பாப்பா தமிழ்
1991 தாயம்மா தமிழ்
1991 மாமஸ்ரீ தெலுங்கு
1991 இல்லு இல்லளு பிள்ளலு தெலுங்கு
1992 வானமே எல்லை தமிழ்
1992
ரெண்டு பொண்டாட்டி காவல்காரன்.


தமிழ்
1992 காவலுக்கு கண்ணில்லை தமிழ்
1992 செவிலியர் மிகயல் மலையாளம்
1993 நான் பேச நினைப்பதெல்லாம் தமிழ்
1993 சூரியன் சந்திரன் தமிழ்
1993 என் இதய ராணி தமிழ்
1993 மா வறிகி பெல்லி தெலுங்கு
1994 மணிரத்னம் தமிழ்
1994 பட்டுக்கோட்டை பெரியப்பா தமிழ்
1994 வாட்ச்மேன் வடிவேலு தமிழ்
1994 கிஷ்கிந்தா கந்தா தெலுங்கு
1995 பதிலி தெலுங்கு
1996 லத்தி சார்ஜ் தெலுங்கு
1996 மெருப்பு தெலுங்கு
1996 வீட்டுக்குள்ளே
1997 ரோஜா மலரே தமிழ்
1998 சந்தோசம் தமிழ்
1998 சேரன் சோழன் பாண்டியன் தமிழ்
1999 அன்புள்ள காதலுக்கு தமிழ்
2009 ஆதவன் தமிழ்
2009 மதுரை சம்பவம் தமிழ்
2009 ஒளியும் ஒலியும் தமிழ்
2012 ஏதோ செய்தாய் என்னை தமிழ்
2014 1 நினொக்கதினே தெலுங்கு

நடிகை ஜமுனா பிறந்த நாள் ஆகஸ்ட் 30.


நடிகை ஜமுனா பிறந்த நாள் ஆகஸ்ட் 30.

ஜமுனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். 1953ல் புட்டிலு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
எல். வி. பிரசாதின் மிஸ்ஸம்மா திரைப்படத்தில் நடித்தபிறகு இவர் புகழ்பெற்றார்.

இளமைக்காலம்
ஜமுனா கர்நாடகாவில் உள்ள ஹம்பி எனுமிடத்தில் நிப்பானி சீனிவாச ராவ்- கவுசல்யா தேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலா எனுமிடத்தில் வளர்ந்தார். நடிகை
சாவித்திரி இவருடைய வீட்டில் தங்கியிருந்தார். அதனால் சாவித்திரி ஜமுனாவை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார்.

தொழில்
ஜமுனா பள்ளியில் மேடை நடிகராக இருந்துள்ளார். அவருடைய அன்னை ஹார்மோனியம் போன்றவற்றை இசைக்க கற்றுத் தந்தார். டாக்டர் காரிகாபதி ராஜா ராவ் மா பூமி என்ற ஜமுனாவின் நாடகத்தினைப் பார்த்தவர், தன்னுடைய புட்டிலு திரைப்படத்தில் நடிகையாக்கினார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த ஜமுனா, அரசியலிலும் இணைந்தார். 1980களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ராஜமிந்திரி மக்களவைத் தொகுதியில் 1989ல் தேர்வு செய்யப்பட்டார். 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விருது
1968: சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - மில்லன்
2008: என்டிஆர் தேசிய விருது
திரைப்படங்கள்
தமிழ்
1. தங்கமலை ரகசியம் (1957)
2. நிச்சய தாம்பூலம் (1962)
3. குழந்தையும் தெய்வமும் (1965)
4. நல்ல தீர்ப்பு
5. மருத நாட்டு வீரன்
6. தாய் மகளுக்கு கட்டிய தாலி 7
7. மனிதன் மாறவில்லை (1962)
8. தூங்காதே தம்பி தூங்காதே (1983)
9. பூமி கல்யாணம்
10. மிஸ்ஸம்மா (1955).


தென்னாட்டு நர்கீஸ் ,ஆந்திர நடிகை " ஜமுனா "
புராணப் படங்களின் ஆதிக்கம் குறையாத ஐம்பதுகளில் தெலுங்கு சினிமாவை சீர்திருத்த சினிமாவாக மாற்றிக்காட்டிய சினிமா சிற்பிகளில் முக்கியமானவர் கரிகாபட்டி ராஜா  ராவ். புகழ்பெற்ற மருத்துவராகவும் இருந்த இவர், நாடகம், சினிமா இரண்டையும் சீர்திருத்தக் கருவியாகக் கையாண்டவர்.
இவரது பெருமைமிகு அறிமுகம்தான் 'ஆந்திராவின் நர்கீஸ்' என்று புகழப்படும் ஜமுனா. தெலுங்கு சினிமாவின் காவிய கால சு+ப்பர் ஸ்டார்கள் என்.டி.ஆர்., அக்னிநேனி நாகேஷ்வர ராவில் தொடங்கி அறுபதுகளின் முன்னணிக் கதாநாயகர் அத்தனை பேருடனும் சுமார் 200 தெலுங்குப் படங்களில் நடித்தவர்.
தமிழில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் நடித்திருந்தாலும்
சிவாஜி ,எம்ஜியார் ,ஜெய்சங்கர்  வரையிலும்
ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களை ஈர்த்த காந்தக் கண்களுக்குச் சொந்தக்காரர். தெலுங்கு, தமிழ் மொழிகளைக் கடந்து இந்திப் பட உலகிலும் வெற்றிக்கொடி நாட்டிய கன்னடத்துப் பெண்.
ஜமுனாவின் தந்தை சீனிவாச ராவ் ஆந்திராவின் குண்டூர்  மாவட்டத்தில் உள்ள துக்கிராலா என்ற ஊரில் குடியேறியவர். அந்த ஊரின் கறிமஞ்சள் உலகப்புகழ் பெற்றது. அதையும் பருத்தி இழைகளையும் ஏற்றுமதி செய்யும் வெற்றிகரமான வியாபாரியாக இருந்தார். இவரது மனைவி கௌசல்யாதேவி கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்தவர்.
ஜமுனா வட கர்நாடகத்தின் ஹம்பியில் பிறந்தபோது அவரது நட்சத்திரத்தை மனதில் வைத்து அவருக்கு ஜமுனா என்ற நதியின் பெயரை வைத்தார்கள். அம்மரிடம் இளமையிலேயே வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். பிறகு பரதம் பயின்றார்.
தெலுங்கு சினிமாவில் பின்னாளில் நடிகராக உயர்ந்த 'கொங்கரா ஜக்கையா'' ஜமுனாவின் பாடசாலை ஆசிரியர். ஜமுனாவின் நடிப்புத் திறனைக் கண்ட பாடசாலை ஆசிரியர் ஜக்கையா, ~~உங்கள் மகளை நீங்கள் நாடகங்களில் நடிக்க வைக்கலாமே" என்று அவரது அம்மாவிடம் எடுத்துக் கூற, ஜமுனா பத்து வயது முதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
படிப்பிலும் படுசுட்டியாக இருந்ததால் அவரை டொக்டருக்குப் படிக்க வைக்க விரும்பினார் அவரது அப்பா. இதற்காகத் தன் குடும்ப நண்பரான டொக்டர் கரிகாபட்டி ராஜா ராவிடம் மகளை அழைத்துச் சென்று ஆலோசனை கேட்டார்.
ஜமுனாவின் அழகைக் கண்ட அவரோ தனது 'மா பு+மி' என்ற நாடகத்தில் கதாநாயகியின் தங்கையாக நடிக்க வைத்தார். நாடகத்தில் அவரது நடிப்பைக் கண்ட ராஜh ராவ், ஜமுனாவைப் புகைப்படங்கள் எடுத்து அவற்றை இந்திப்பட உலகில் புகழ்பெற்ற கெமராமேனாக இருந்த தம் நண்பர் வி. என். ரெட்டிக்கு அனுப்பிவைத்தார்.
"நான் முதல்முறையாகத் தயாரிக்க இருக்கும் படத்துக்கு இந்தப் பெண்ணைக் கதாநா யகியாக்கலாம் என்று நினைக்கிறேன். உன் அபிப்ராயம் என்ன?" என்று கேட்டு எழுதினார். ஆனால் இரண்டு மாதங்களாகியும் வி. என். ரெட்டியிடமிருந்து பதில் இல்லை. இனியும் தாமதிக்க முடியாது என்று எண்ணி, வேறு கதாநாயகியைத் தேட ஆரம்பித்தார்.
அப்போது ரெட்டியிடமிருந்து ஒரு தந்தி வந்தது. அதில் 'இந்தப் பெண் ஆந்திராவின் நர்கீஸ்' என்று புகழ் பெறுவாள்' என்று செய்தி அனுப்பியிருந்தார். இதற்கு மேலும் தயங்குவாரா கரிகாபட்டியார். உடனடியாக ஜமுனாவைத் தனது படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்.
1953-ல் வெளியான 'புட்டில்லூ' என்ற அந்தத் தெலுங்குப் படத்தில் ஜமுனாவின் நடிப்புக்குப் பாராட்டு மழை பொழிந்தது. அடுத்துவந்த மூன்று ஆண்டுகளில் தெலுங்கு சினிமாவின் முன்னணிக் கதாநா யகியாக உயர்ந்தார். அறிமுகப் படம் வெளியான அடுத்த ஆண்டே 1954-ல் வெளியான 'பணம் படுத்தும் பாடு' படத்தின் மூலம் தமிழில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார்.
எச்.எம்.ரெட்டி தனது 'ரோகிணி பிக்சர்ஸ்' பட நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்த நகைச்சுவைப் படம் இது. என்.டி. ராமராவ் - சௌகார் ஜhனகி ஜோடியாக நடித்திருந்த இந்தப் படத்தில் ஜமுனா இரண்டாவது கதாநாயகி. நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலுவுக்கு ஜோடி.
தமிழில் அறிமுகப் படம் தோல்வியடைந்தாலும் 1955-ல் விஜயா - வாகினி ஸ்^டியோ தயாரித்த 'மிஸ்ஸியம்மா' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை ஜமுனாவுக்குப் பெற்றுத் தந்தார் சாவித்திரி. nஜமினி கணேசனும் சாவித்திரியும் நடித்து ரசிகர்களை உருக்கிய இந்தப் படத்தின் இயக்குநர் எல்.வி.பிரசாத்.
கொட்டக் கொட்ட உருளும் காந்தக் கண்களைக் கொண்டு குழந்தைத்தனம் கொண்ட சீதா என்ற ஜமீன்தார் மகள் வேடத்தில் ஜமுனா பிரமாதமாக நடித்திருந்தார்.
'தமிழ்ப் படவுலகம் ஒரு நல்ல நடிகையைப் பெற்றுக்கொண்டது' என ஆனந்த விகடன் எழுதியது. தெலுங்கிலும் வெளியாகி வெற்றிபெற்ற இந்தப் படத்தை ஏவி.எம். நிறுவனம் இந்தியில் தயாரிக்க அங்கேயும் வெற்றிபெற்று 'யாரிந்தப் பெண்மணி?' எனக் கேட்க வைத்தது.
'மிஸ்ஸியம்மா' மூலம் கிடைத்த புகழ் ஜமுனாவைத் தென்னகத்தின் முன்னணிக் கதாநாயகியாக்கியது. ‘
சாவித்திரி, சரோஜh தேவி, பானுமதி, அஞ்சலி தேவி என ஐம்பதுகளில் nஜhலித்த கதாநாயகிகளில் யாருடைய திறமையிலும் கடுகளவும் சளைத்தவர் அல்ல என்று பெயர் பெற்றார் ஜமுனா. நளினமான நடனம், கண்ணியம் மீறாத கிளாமர், கண்களால் பேசி நடிக்கும் திறன் என்று கலக்கிய ஜமுனா, 1957-ல் சிவாஜpகணேசனுடன் 'தங்கமலை ரகசியம்' படத்தில் நடித்தார்.
அந்தப் படத்தில் சுசீலாவின் தேன் குரலில் ஜமுனா பாடுவது போல் இடம்பெற்ற 'அமுதைப் பொழியும் நிலவே' என்ற பாடலில் அவரது பவ்யமான நடிப்பைக் கண் குளிரக் கண்டு, அந்தப் பாடலை பாடாத ஆண், பெண் ரசிகர்களே அன்று இல்லை என்று சொல்லும் விதமாக அனைவரும் பாடிப் பாடி, ஜமுனாவைக் கொண்டாடினார்கள்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து சிவாஜpயுடன் பல படங்களில் நடித்த ஜமுனா, அண்ணா கதை வசனம் எழுதிய 'தாய் மகளுக்கு கட்டிய தாலி' படத்தில் எம்.ஜp.ஆருக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கு சினிமாவில் ஜமுனாவின் நடிப்புக்குப் பல படங்கள் உதாரணமாக இருக்க, தமிழில் அவரது நடிப்புத்திறன் முழுமையாக வெளிப்பட்டு நின்ற படம் 'குழந்தையும் தெய்வமும்.' ஏவி.எம். தயாரிப்பான இந்தப் படத்தில் ஜமுனாவுக்கு ஜோடியாக நடித்தவர் nஜய்சங்கர்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு தெலுங்குப் பட உலகுக்குத் திரும்பி அங்கே 15 ஆண்டுகள் கதாநாயகியாக நடித்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் கமலுக்கு அம்மாவாக நடித்தார்.
மங்காத புகழுடன் வாழும் ஜமுனாவை 1983-ல், அரசியலுக்கு வருமாறு அழைத்தார் அந்நாளின் பிரதமர் இந்திரா காந்தி. காங்கிரசில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்தல் களம் வென்று மக்கள் பணி புரிந்த ஜமுனா, புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தர்.
தற்போது அரசியலில் இருந்து விலகி வாழும் ஜமுனா, 1965-ல் கல்லூரிப் பேராசிரியர் ரமண ராவை மணந்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு வம்சி கிருஷ்ணா, ஸ்ரவந்தி ஆகிய வாரிசுகள் உள்ளனர்.

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

நடிகர் எம். கே. ராதா நினைவு தினம் ஆகஸ்டு 29.


நடிகர் எம். கே. ராதா நினைவு தினம் ஆகஸ்டு 29 ,

எம். கே. ராதா (20 நவம்பர் 1910 - 29 ஆகஸ்டு 1985), இந்தியத் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். ஜெமினி நிறுவனத்தில் நிரந்தர நடிகராகப் பணியாற்றியவர். இவர், அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து முத்திரை பதித்தார். மொத்தம் 50 திரைப்படங்களில் நடித்தார்.
இளமைக் காலம்
எம். கே. ராதா சென்னை, மைலாப்பூரில் எம். கந்தசாமி முதலியார் என்பவருக்குப் பிறந்தார்.
நாடகம்
தன் தந்தை கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் சேர்ந்து, எம். ஜி. ஆருடன் எம்.கே.ராதா நடித்து வந்தார்.
திரைப்படம்
1936இல் எஸ். எஸ். வாசன் எழுதிய சதிலீலாவதி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படத்தில் எம். ஜி. ஆர். ஒரு சிறு வேடத்தில் நடித்தார். பின்னர் மாயா மச்சேந்திரா, துளசிதாஸ் ஆகிய படங்களில் ராதா நடித்தார். அதை அடுத்து "இலங்கைக்குயில்" தவமணிதேவியுடன் வனமோகினி திரைப்படத்தில் நடித்தார்.
ஜெமினியின் தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி முதலான படங்களில் ராதா நடித்தார்.
1948இல் ஜெமினியின் சந்திரலேகா படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் இந்தியில் தயாரிக்கப்பட்ட சந்திரலேகாவிலும் கதாநாயகனாக நடித்தார்.
ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எம். கே. ராதா கதாநாயகனாக, பானுமதியுடன் இணைந்து இரட்டை வேடத்தில் நடித்தார்.
பின்னர் ஜெமினியின் சம்சாரம் படத்தில் புஷ்பவல்லியுடன் இணைந்து நடித்தார். ஜெமினியின் அவ்வையார் திரைப்படத்தில் பாரி மன்னனாக நடித்தார். பின்னர் நல்லகாலம், போர்ட்டர் கந்தன், கற்புக்கரசி, வணங்காமுடி, பாசவலை, கண்ணின் மணிகள் முதலிய படங்களில் நடித்தார்.
பிற திரைப்படங்கள்
சந்திர மோகனா அல்லது சமுகத்தொண்டு 1936
அனாதைப் பெண் 1938
சதி முரளி 1940
தாசி அபரஞ்சி 1944
ஞானசௌந்தரி (1948 திரைப்படம்) 1948
சௌதாமணி 1951
மூன்று பிள்ளைகள் 1952
நல்லகாலம் 1954
கிரகலெட்சுமி 1955
புதையல் 1957
நீலமலைத்திருடன் 1957
உத்தம புத்திரன் 1958
விருதுகளும் சிறப்புகளும்
1973இல் தமிழக அரசின் கலைமாமணி பட்டம்
2004இல் இந்திய அஞ்சல் துறை எம். கே. ராதா நினைவாக அவரது உருவப் படத்துடன் சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டது.
எம். கே. ராதாவின் நினைவைப் போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு, சென்னை, தேனாம்பேட்டை அருகில் உள்ள பகுதிக்கு எம். கே. ராதா நகர் என்று பெயரிட்டது.
குடும்பம் & மறைவு
எம்.கே.ராதாவுக்கு ஞானாம்பாள், ரத்தினம் என்ற 2 மனைவிகள். 6 மகன்கள், 2 மகள்கள். 29 ஆகஸ்டு 1985 அன்று மாரடைப்பால் காலமானார்.


//
சர்ச்சைக்கு நடுவே அறிமுகமான சாகச நடிகர்: எம்.கே. ராதா.
வரிசையாக மூன்று படங்கள் ஓடிவிட்டால் போதும். ஐந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கதாநாயகன் 5 கோடி சம்பளம் கேட்கும் காலம் இது. 1950களில் நிலைமையே வேறு. தியாஜராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என்று பெரிய நடிகர்கள் கோலோச்சிய கால கட்டத்தில், இவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் பெற்ற முன்னணி நாயகன். அதுவும் ஒரு ஆண்டோ இரு ஆண்டோ அல்ல; 1941-ல் தொடங்கி 1954 வரை சுமார் 13 ஆண்டுகள்.
அவர் ஜெமினி நிறுவனத்தின் கம்பெனி நடிகராக இருந்து பல புகழ்பெற்ற படங்களில் நடித்த ‘பத்மஸ்ரீ’ எம்.கே. ராதா. தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்டப் படமாகிய ‘சந்திரலேகா’விலும், ரசிகர்களை வாய்பிளக்க வைத்த இரட்டை வேடப் படமாகிய ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திலும் நடித்தார். திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சினிமாவுக்குள் வந்து பெயர் பெற்றவர்களே அதிகம். ஆனால் தன் அழகிய தோற்றத்துக்காக ‘சுந்தர புருஷன்’ என்று அழைக்கப்பட்ட எம்.கே. ராதா சென்னையில் பிறந்து வளர்ந்து சினிமாவில் நுழைந்து தலைநிமிர்ந்து நின்றவர். அவர் பெயரின் முன்னெழுத்தில் உள்ள எம், மெட்ராஸைக் குறிக்கிறது.
கலைக் குடும்பம்
புகழ்பெற்ற நாடகாசிரியராக இருந்தவர் எம். கந்தசாமி முதலியார். அவரது மகன்தான் எம்.கே. ராதா. 1909-ம் ஆண்டு பிறந்த ராதாவுக்கு அப்பாவின் நாடகக் கம்பெனி பெரும் தாக்கத்தை உருவாக்கியது. வீட்டில் நடக்கும் நாடக ஒத்திகைகள் அவருக்குள் மனப்பாடம் ஆகின. இன்றைய வடசென்னையின் ஒரு பகுதியாகிவிட்ட தங்கசாலையில் இருந்த ‘ஹிந்து பயலாஜிக்கல் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்தார். ஆனால் படிப்பில் ஆர்வம் செல்லாமல் நாடகத்தில் மேலோங்கிய மகனின் ஈடுபாட்டைக் கண்டு 9 வயதில் லோகிதாசன் வேடம் கொடுத்தார் அப்பா. வளர வளர வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் ராதா. கந்தசாமி முதலியாரின் நாடகக் கம்பெனியில் பிரகாசித்த பல நடிகர்கள் பின்னாளில் சினிமா உலகில் நுழைந்து புகழ்பெற்றார்கள். எனவே எம்.கே. ராதாவும் திரையில் நுழைய விரும்பியதில் ஆச்சரியமில்லை.
பரபரப்பான அறிமுகம்
மகன் சினிமாவில் நடிக்க விரும்புவதை அறிந்ததும் சினிமாவுக்கு ஏற்ற கதையைத் தேடினார் கந்தசாமி முதலியார். அப்போது கே.பி. கேசவன் நடித்து வந்த கிருஷ்ணசாமிப் பாவலரின் ‘பதி பக்தி’ என்ற நாடகம் புகழ்பெற்று விளங்கியது. அந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்றுப் படவேலைகளைத் தொடங்கினார். ஆனால் திடீரென்று உரிமையை ரத்து செய்தார் கே.பி. கேசவன். தன் நடிப்பில் அந்த நாடகத்தை சினிமாவாகத் தயாரிக்க கேசவன் விரும்பியதுதான் காரணம்.
கந்தசாமி அசரவில்லை. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான எஸ்.எஸ்.வாசன், தனது ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிவந்த ‘சதிலீலாவதி’ என்ற தொடர்கதை கவர்ந்தது. கந்தசாமி அதைப் படமாக்க விரும்பினார். கோயம்புத்தூர் மருதாசமல் செட்டியார் தயாரிக்க முன்வந்தார். கந்தசாமி வசனம் எழுதினார். பின்னாளில் ஜெமினி பிக்ஸர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி சாதனைகள் படைத்த வாசனுக்கு இதுவே முதல் படம். எம்.கே.ராதா முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்க, 19 வயது எம்.ஜி.ஆர். ‘ரங்கையா நாயுடு’ என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அறிமுகமானார். என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்கள். இயக்குநர் எல்லீஸ். ஆர். டங்கனுக்கும் அதிகாரபூர்வமான முதல் படமும் இதுவே.
படம் ரிலீஸுக்குத் தயாரானபோது கேசவன் தங்களது ‘பதி பக்தி’ கதையை திருடி ‘சதி லீலாவதி’ படத்தை எடுத்துவிட்டதாக வழக்குத் தொடுத்து படத்தின் வெளியீட்டைத் தடுத்தார். ஆனால் கதாசிரியர் வாசன் நீதிமன்றத்தில் “சதி லீலாவதி படத்தின் கதை ஹென்றி வுட் என்ற ஆங்கிலப் பெண் எழுத்தாளர் எழுதிய ‘டேன்ஸ்பரி அவுஸ்’ என்ற (Henry Wood's Danesbury House) நாவலின் தாக்கத்தில் எழுதப்பட்டது” என்று தெளிவுபடுத்தினார். பிரச்சினை தீர்ந்தது. தமிழ் சினிமாவில் கதையால் ஏற்பட்ட முதல் சர்ச்சையும் இதுவே.
இத்தனை பரபரப்புக்கு நடுவே 28.3.1936 ல் வெளியான ‘சதி லீலாவதி வெற்றி பெற்றது. படத்தின் நாயகி எம்.எஸ். ஞானாம்பாளையே காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் எம்.கே. ராதா.
பிரம்மாண்ட நாயகன்
சதி லீலாவதியின் வெற்றிக்குப் பிறகு அடுத்து வந்த இரு வருடங்களில் ‘மாயா மச்சீந்திரா’, ‘சந்திரமோகனா’ ‘துளசிதாஸ்’, ’ சதிமுரளி’ ஆகிய படங்களில் நடித்தார் . எல்லாம் சுமாரான வெற்றியைப் பெற்றன. அப்போது ‘இலங்கைக் குயில்’ என்று அழைக்கப்பட்ட சிங்களத் தாரகை தவமணிதேவியுடன் இணைந்து ‘ வனமோகினி’ என்ற படத்தில் நடித்தார். ஹாலிவுட்டில் அப்போது பிரபலமாக இருந்த டார்ஜான் வகைப் படமாக முழுக்க முழுக்கக் காட்டிலேயே படமாக்கப்பட்ட அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது.
இந்தச் சமயத்தில் ஜெமினி ஸ்டூடியோவைத் தொடங்கிய வாசன் தனது கம்பெனியின் நிரந்தர நடிகராக எம்.கே. ராதாவை ஒப்பந்தம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்டத் தயாரிப்பாக ஜெமினி தயாரித்த ‘சந்திரலேகா’ படத்தின் நாயகனாக ராதா நடித்தார். ‘சந்திரலேகா’ வரலாறு காணாத வெற்றிபெற்றது. ராதாவுக்குப் பெரும்புகழையும் கொண்டுவந்து சேர்த்தது. ராதாவும், வில்லனாக நடித்த ரஞ்சனும் மோதும் கத்திச் சண்டைக் காட்சியைப் பார்த்து மிரண்ட ரசிகர்கள் திரும்பத் திரும்ப திரையரங்கு நோக்கிக் குவிந்தனர். தமிழ் சினிமாவின் முதல் சாகச நாயகன் (ஆக்ஷன் ஹீரோ) என்றும் எம்.கே. ராதாவைப் பேச வைத்தது இந்தப் படம்.
‘சந்திரலேகா’வை இந்தியிலும் தயாரித்த வாசன் அதிலும் ராதா - டி.ஆர். ராஜகுமாரி ஜோடியை நடிக்கவைத்து பாலிவுட்டிலும் பெரிய வெற்றியை ஈட்டினார். அதன் பின்னர் மீண்டும் ஒரு பிரமாண்டமாக ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தைக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்தார் வாசன். ராதா, விஜயன் - விக்ரமன் என்ற இரட்டையர்கள் வேடம் ஏற்றார். பானுமதி கதாநாயகியாக நடித்த இந்தப் படத்தில் ஆர். நாகேந்திர ராவ் என்ற கன்னட நடிகர் வில்லனாக அறிமுகமானார்.
1940-ல் பி.யு. சின்னப்பா நடிப்பில் வெளியான ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் ‘ மேன் இன் தி அயன் மாஸ்க்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேடப் படமாக வெளிவந்தது. ஆனால் ஆங்கிலப் படத்தில் பயன்படுத்தப்பட்ட கேமரா தந்திரங்களைத் தமிழில் துல்லியமாகக் கையாள முடியவில்லை. ஆனால் ‘அபூர்வ சகோதரர்கள்’ அந்தக் குறையைப் போக்கியது. ரசிகர்கள் இரட்டை வேடக் காட்சிகளை கண்டு வியந்தனர். விஜயனாகவும் விக்ரமனாகவும் வேறுபாடு காட்டிய ராதாவின் நடிப்பு உயர் தரமாக இருந்தது.
சமூக நடிப்பிலும் சாதனை
சந்திரலேகாவுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் படத்துக்குப் பிறகு பல சமூகக் கதைகளிலும் நடித்து சாதனை படைத்தார் ராதா. கம்பீரமான ராஜா வேஷங்களில் அசத்திய இவர் ‘சம்சாரம்’ என்ற படத்தில் சாமானிய மனிதனாக, நாடக பாணி நடிப்பின் தாக்கம் இல்லாமால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார்.
ராஜேந்திர ராவ் இயக்கிய ‘அன்பே தெய்வம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்த ராதாவுக்கு இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவின் தயாரான சந்தியா ஜோடியாக நடித்தார். 50 படங்களில் நடித்திருக்கும் இவர் மீது அளப்பரிய பாசமும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை விழா ஒன்றில் எம்.கே. ராதாவின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றார். மத்திய அஞ்சல் துறை ராதாவின் உருவப் படத்தை அஞ்சல் உறையில் வெளியிட்டு கவுரவம் செய்தது.
அபூர்வ தகவல்கள் - எம்.கே.ராதா
எம்.கே.ராதா நாயகனாக நடித்த முதல் படம் சதிலீலாவதி (1936), இதே படம்தான் எம்.ஜி.ஆருக்கும் முதல்படம். இப்படத்தில் எம்.ஜி.ஆர். துணை வேடத்தில் அறிமுகமானார். அதேபோல் நடிகர் டி.எஸ். பாலையாவுக்கும் இதுதான் முதல்படம். அத்துடன், இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனுக்கும் இது முதல் பட வாய்ப்பாக அமைந்தது.


 
பி.ஒய்.அல்டேகர் இயக்கத்தில் கே.பி.கேசவன் நடித்த பதிபக்தி (1936) என்ற படமும், சதிலீலாவதி படமும் ஒரே கதையைக் கொண்ட படங்களாக இருந்தன. இது சம்மந்தமாக இப்படத் தயாரிப்பாளர்களுக்குள் கோர்ட்டில் வியாஜ்ஜியம் (வழக்கு) நடந்தது. சினிமா கதை சம்மந்தமாக நடைபெற்ற முதல் வழக்கு இது.
 
எம்.கே.ராதாவுடன் சதிலீலாவதி, மாயா மச்சீந்திரா ஆகிய இரு படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்.
 
சிவாஜி நடித்த அம்பிகாபதி படத்தில் சிவாஜியின் தந்தை கம்பராக எம்.கே.ராதா நடித்தார். சிவாஜி இரு வேடங்களில் நடித்து பெரு வெற்றி பெற்ற "உத்தம புத்திரன்' படத்திலும் சிவாஜியின் தந்தையாக எம்.கே.ராதா நடித்திருந்தார். இவை தவிர, சிவாஜி நடித்த வணங்காமுடி, புதையல் ஆகிய படங்களிலும் எம்.கே.ராதா சிவாஜியுடன் நடித்துள்ளார்.
 
மற்றும் பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், என்.எஸ்.கிருஷ்ணன், ஏ. நாகேஸ்வரராவ், ரஞ்சன், ஜெமினி கணேசன், டி.ஆர்.ராஜகுமாரி, பி.பானுமதி, அஞ்சலிதேவி ஆகிய பிரபல நடிகர் நடிகைகளுடன் நடித்துள்ளார் எம்.கே.ராதா.
 
அரசு ஊழியர்களே மாத ஊதியமாக ரூ.100 பெற்று வந்த காலத்தில், ராதாவுக்கு மாத ஊதியமாக ரூ.300 வழங்கிய ஜெமினி ஸ்தாபனம் அவரைத் தங்கள் நிறுவனத்தின் நிரந்தர நடிகராக வைத்திருந்தது.
 
எம்.கே. ராதா நடித்த 30 படங்களில், தாஸி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி, ஞானசெüந்தரி, சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், மூன்று பிள்ளைகள், ஒüவையார் ஆகிய 8 படங்கள் ஜெமினி நிறுவனம் தயாரித்த படங்களாகும். சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், ஒüவையார் ஆகிய 4 படங்களும் ஜெமினி நிறுவனத்தின் வெற்றிப் படங்களாகி வசூலைக் குவித்தன.
 
1948 ஆம் ஆண்டிலேயே 30 லட்சம் ரூபாய்கள் செலவில், 1500 நடிகர்களை நடிக்க வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படம் சந்திரலேகா. டிக்கட் கெüண்டரில் சர்க்கஸ் செய்தாவது இப்படத்தின் சர்க்கஸ் காட்சியைக் கண்டு களித்தார்கள் ரசிகர்கள். ட்ரம் டான்ஸ் காட்சியில் ட்ரம்மிலிருந்து வந்த வீரர்கள், விரோதிகளை மட்டுமா தாக்கினார்கள், ரசிகர்களையும் அல்லவா தாக்கிவிட்டுச் சென்றார்கள். ராதாவும் ரஞ்சனும் செய்யும் கத்தி சண்டையானது, பிரிஸினர் ஆஃப் ஜெண்டா என்ற ஆங்கிலப் படத்தில் ரெனால்ட் கோல்மென் செய்யும் சண்டைக்கு நிகராக இருந்ததாக அப்போது விமர்சிக்கப்பட்டது.
 
நல்ல காலம் என்ற படம் வெளியானபோது, ராதாவின் பெயருடன் "அகில உலகப் புகழ்' என்ற அடை மொழி இணைந்து வந்துள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சந்திரலேகா படம் கண்ட வெற்றியின் விளைவாக வந்த பரிசுதான் இந்த அடைமொழி.
 
எம்.கே. ராதா நடித்த 16 படங்கள் சமூகக் கதையமைப்பினைக் கொண்ட படங்களாகவும், 14 படங்கள் சரித்திர கதையமைப்பினைக் கொண்ட படங்களாகவும் அமைந்துள்ளன.
 
23 படங்களில் நாயகனாகவும், 7 படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார் எம்.கே.ராதா. இவர் இரு வேடங்களில் நடித்தது அபூர்வ சகோதரர்கள் படம் மட்டுமே.
 
நாடகமேடைத் தாக்கம் இன்றி இயல்பாக நடிக்கக் கூடிய இவரின் அழகு, சினிமாவின் சுந்தர புருஷன் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது. திரைத் துறையில் இவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். இவருடன் நடிக்கும் மூத்த கலைஞர்கள் ஸ்டுடியோவிற்குள் வரும் பொழுது, இவர் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் சொல்வார்.
 
எம்.கே.ராதாவின் தந்தையார் கந்தசாமி முதலியார் நடத்திய நாடகக் கம்பெனியில் எம்.ஜி.ஆர். நடித்து வந்தார். குருவின் மைந்தர் ராதாவை எம்.ஜி.ஆர்., "அண்ணன்' என்று மரியாதையாகவே அழைப்பார். அந்த மரியாதையின் வெளிப்பாடாக, விழா ஒன்றில் ராதாவின் தாள்தொட்டு வணங்கினார் எம்.ஜி.ஆர்.
 
சதி லீலாவதி படத்தில் நாயகியாக நடித்த எம்.ஆர்.ஞானாம்பாளையே மணந்து கொண்டார் ராதா. முதல் மனைவி ஞானாம்பாளுக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி ரத்தினத்திற்கு 6 புதல்வர்களும் 2 புதல்விகளும் உள்ளனர். மனோகரன், ராஜா, கமலாசரன், விஜயன் ஆகிய நான்கு புதல்வர்கள் பொறியாளர்கள். ரவீந்திரன் என்ற புதல்வர் ஒளிப்பதிவாளராகவும், சுகுமார் என்ற புதல்வர் மருத்துவராகவும் உள்ளனர். கமலாம்பாள் என்ற ராதாவின் புதல்வி, நடிகை எம்.ஆர்.சந்தானலக்ஷ்மியின் மருமகளாவார். இந்திரா என்ற ராதாவின் புதல்வி, நடிகையும் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் துணைவியுமான ஈ.வி.சரோஜாவின் உறவினராவார்.
 
மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய கே.ஆர்.சுந்தரேசன் என்பவர் தயாரித்து இயக்கிய ரேவதி (அல்லது) தியாக உள்ளம் (1960) படத்தில் எம்.கே. ராதா, பி.எஸ்.சரோஜா, ஜமுனா ஆகியோர் நடித்தனர். தியாக உள்ளம் என்ற இப்படத்தின் தலைப்பு நான்கு முறை தியாகத்திற்கு உள்ளானது. சந்திப்பு என்ற பெயரில் இப்படம் தொடங்கப்பட்டது. தியாக இதயம் என்ற பெயரில் தணிக்கையானது. பின்பு தியாக உள்ளம் என்ற பெயரில் மலேசியாவில் திரையிடப்பட்டது. ரேவதி என்ற பெயரில் மறு தணிக்கைக்குள்ளாகி மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படியெல்லாம் நடந்தும் இப்படம் சென்னையில் திரையிடப்படவில்லை.
 
பாரதியாரின் கவிதையை நினைவூட்டும் தலைப்பில் அமைந்த கண்ணம்மா என் காதலி படத்திற்கு வசனம் பாடல்கள் எழுதி இயக்கியவர் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு. உலகப்போர் பின்னணி கதையமைப்பினைக் கொண்ட இப்படத்தில் ராதாவின் ஜோடியாக நடித்தவர், கொத்தமங்கலம் சுப்புவின் மனைவி எம்.எஸ்.சுந்தரிபாய்.
 
சதி லீலாவதி, பதி பக்தி படப்போட்டியில் இரு படங்களுமே வெற்றி இலக்கையடைந்தன. ஆனால், சிட்டாடல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஆர்.மகாலிங்கமும் எம்.வி.ராஜம்மாவும் நடித்து 21.05.1948 இல் திரைக்கு வந்த ஞானசெüந்தரி படத்துக்கு போட்டியாக, ஜெமினி தயாரிப்பில் எம்.கே.ராதாவும் வி.என்.சுசிலாவும் நடித்து 18.06.1948 இல் திரைக்கு வந்த ஞானசெüந்தரி படு தோல்வியடைந்தது. இரண்டும் ஒரே கதை. வரலாற்றுக் கதைகளுக்கு வழக்கும் தொடுக்க இயலாது. ராதாவுக்கு வேறொருவரின் கட்டைக் குரல் டப்பிங், கிறிஸ்துவ வரலாற்றுக் கதையில் அம்மதத்திற்கு சம்மந்தமே இல்லாத மாற்று கலாசார வசனம், போன்ற காரணங்களால் படம் தோல்வியடைந்தது. படத்தில் அளவுக்கதிகமாக ஒலித்த பாடல்களினால், இப்படத்தை கானசெüந்தரி என்று விமர்சித்தனர். தோல்வியைத் தாங்காத எஸ்.எஸ்.வாசன், படத்தின் அனைத்து தடயங்களையும் அப்பொழுதே அழித்து விட்டார்.
 
தரிசனம் படத்தின் ஏ.வி.எம்.ராஜன் போன்று, குடும்பச் சுமை தாளாமல் குடும்பத்தை விட்டு "சம்சாரம்' பட நாயகன் ஓடிப் போனது, சம்ஸ்காரமாய் விமர்சிக்கப்பட்டாலும், படம் சம்சாரங்களால் விரும்பப்பட்டு, ஜெமினிக்கு வசூலை வாரித் தந்தது. ஜெமினிக்கு வசூலைத் தந்தது போலவே, பிச்சைக்காரர்களுக்கும் வசூலைப் பெருக்க ஒரு வாய்ப்பளித்தது இப்படம். அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே என்ற இப்படப்பாடலை ரயில்களில் பாடியபடி பல ஆண்டுகளுக்கு தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டார்கள் பிச்சைக்காரர்கள்.
 
சினிமா உலகில் சுந்தர புருஷனாக இருந்த இவர், போர்ட்டர் கந்தன் படத்தில் சிரமப்படும் கூலி ஆளாக பொலிவற்ற தோற்றத்துடன் நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை. படம் தோல்வியில் அமைந்தது.
 
ஒüவையார் படத்தில் பாரி வள்ளல், தாஸி அபரஞ்சி படத்தில் விக்கிரமாதித்தன், பக்த துளஸிதாஸ் படத்தில் துளஸிதாஸர், ஞானசெüந்தரி படத்தில் பிலேந்திரன், அம்பிகாபதி படத்தில் கம்பர் போன்ற வேடங்களில் நடித்த ராதா, இவ்வேடங்கட்கு நேர் மாறான வேடங்களான குடிகாரன், திருடன், பொறுப்பில்லாதவன் போன்ற வேடங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையினை நன்கு வெளிப்படுத்தினார்.
 
கலைஞர் மு. கருணாநிதி வசனம் எழுதிய புதையல் படத்தில் நடித்துள்ளார் எம்.கே.ராதா., சந்திரலேகா படத்தில் நாடோடிப் பெண்ணாக நடித்துள்ளார் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி., சதிலீலாவதி, மாயா மச்சீந்திரா ஆகிய இரு படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்., ஆக, மூன்று தமிழக முதலமைச்சர்களுடன் கலைத் தொடர்பு கொண்டுள்ளார் எம்.கே.ராதா.
எம்.கே. ராதா நடித்த படங்கள்
சதிலீலாவதி (1936) சந்திரமோகனா (அல்லது) சமூகத் தொண்டு (1936) பக்த துளஸிதாஸ் (1937) அனாதைப் பெண் (1938) மாயா மச்சீந்திரா (1939) சதி முரளி (1940) வனமோகினி (1941) பிரேமபந்தன் (1941) 9. தாஸி அபரஞ்சி (1944) 10. கண்ணம்மா என் காதலி (1945) ஞானசெüந்தரி (1948) சந்திரலேகா (1948) அபூர்வ சகோதரர்கள் (1949) செüதாமினி (1951) சம்சாரம் (1951) மூன்று பிள்ளைகள் (1952) ஒüவையார் (1953) நல்ல காலம் (1954) போர்ட்டர் கந்தன் (1955) கிருஹலட்சுமி (1955) கண்ணின் மணிகள் (1956) பாசவலை (1956) நீலமலைத் திருடன் (1957) அன்பே தெய்வம் (1957) அம்பிகாபதி (1957) புதையல் (1957) கற்புக்கரசி (1957) வணங்காமுடி (1957) உத்தம புத்திரன் (1958) ரேவதி (அல்லது) தியாக உள்ளம் (1960).
சென்னை மயிலாப்பூரில் 1910 ஆம் ஆண்டில், நாடக ஆசான் கந்தசாமி முதலியாரின் மைந்தராக பிறந்தார், மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன் என்ற எம்.கே.ராதா. சென்னை தங்கசாலையிலுள்ள இந்து பயாலஜிகல் போர்டு ஹை ஸ்கூலில் படித்தார். 9 வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் துவங்கினார். இவரது தந்தை நாடக ஆசானாக இருந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, மற்றும் பாலமோகன ரஞ்சன சபா, டி.கே.எஸ். நாடக சபா ஆகிய நாடக கம்பெனியில் நடித்தார் ராதா.
ராதா தமது 75 ஆம் அகவையில் 29.08.1985 இல் மாரடைப்பினால் காலமானார். அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், அவர் துணைவியார் வி.என்.ஜானகியும் மற்றும் அரசியல் கலையுலக பிரமுகர்களும் ராதாவிற்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்கள்.
1960 இல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்தது. 1971 இல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்தது. இவரை கெüரவிக்கும் விதமாக, சென்னை சங்கரதாஸ் சுவாமிகள் மன்றம் இவரது பெயரில் "எம்.கே.ராதா விருது' வழங்கி கலைஞர்களை கௌரவித்து வருகிறது.
நன்றி -விக்கிபீடியா ,தி இந்து தமிழ்,சினிமா எஸ்பிரஸ்

நடிகர் நாகார்ஜூனா பிறந்த தினம் ஆகஸ்டு 29 .


நடிகர் நாகார்ஜூனா பிறந்த தினம் ஆகஸ்டு 29 .

அக்கினேனி நாகார்ஜூனா தெலுங்கு : ఆక్కినేని నాగార్జున ஓர் இந்தியத் திரைப்படநடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஆந்திரத் திரைப்படத்துறையில் முதன்மையாக பணிபுரிகிறார், ஒரு சில பாலிவுட் மற்றும் தமிழ் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் குடும்பம்
நாகார்ஜூனா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் தெலுங்கு  நடிகர் அக்கினேனி நாகேசுவர ராவ் மற்றும் அன்னபூர்ணா அக்கினேனியின் மகனாவார். அவர்களின் ஐந்து குழந்தைகளில் நாகார்ஜூனா கடைசியாவார். பின்னர் அவரது குடும்பம் ஐதராபாதத்திற்கு குடிபெயர்ந்தது அங்கு தனது ஆரம்பக் கால கல்வியை ஐதராபாத் பொதுப்பள்ளியிலும் பின்னர் பள்ளி இடைநிலைக் கல்வியை லிட்டில் பிளவர் இளநிலைக்கல்லூரியிலும் கற்றார்.
நாகார்ஜூனா இருமுறை திருமணம் செய்துள்ளார். அவரது முதல் மனைவி, லஷ்மி ராமா நாயுடுவை 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி மணந்தார். அவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டி. ராமா நாயுடுவின் மகளும் தெலுங்கு திரை நட்சத்திரம் வெங்கடேசின் சகோதரியுமாவார். நாகார்ஜூனா லஷ்மியினரின் மகன் நாக சைத்தன்யா (1986 ஆம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்த இடம் -
ஹைதராபாத் ) ஜோஷ் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் துவங்கினார், அது 2009 ஆம் ஆண்டில் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளிவந்தது.
பின்னர் நாகார்ஜூனா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை அமலாவை மணந்தார். அமலா இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், ஐரிஷ் தாய் மற்றும் பெங்காலி தந்தை ஆகியோருக்கு பிறந்தார். அவரது இயற்பெயர் அமலா முகர்ஜியாகும். நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் இந்தியாவின் முன்னணி விலங்குகள் நல ஆர்வலராக உள்ளார். இருவரும் 1992 ஆம் ஆண்டில் ஜூன் 11ம் தேதி திருமணம் செய்தனர். மேலும், அவர்கட்கு அகில் எனும் பெயர் கொண்ட ஒரு மகன் உள்ளான் (1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி - பிறந்த இடம் சான் ஜோஸ் , அமெரிக்க ஒன்றியம்). அகில், சிசிந்திரி எனும் படத்தில் தவழும் குழந்தையாக நடித்தார்.
டோலிவுட் திரைப்படம்
1986-2004
நாகார்ஜூவின் முதல் படம் விக்ரம் 1986 ஆம் வருடம் மே மாதம் வெளிவந்தது. அது
ஹிந்தி திரைப்படமான ஹீரோ வின் மறுதயாரிப்பாகும். படத்தின் மீது சாதகமற்ற விமர்சனங்கள் இருப்பினும் படம் வெற்றிபெற்றது. அதன் பின் நான்கு தோல்விப் படங்களுக்குப் பிறகு, அவர் வெற்றிப் படமான மஜ்னூவில் துன்பியல் கதாநாயகனாக நடித்தார். அது போன்ற பாத்திரங்கள் அவரது தந்தையின் தனித் திறனுடைய நடிப்புகளால் அறியப்பட்டவையாகும். இத்திரைபடம் அவரது தந்தையின் நீண்ட கால இயக்குநர்
தாசிரி நாராயண ராவினால் தயாரிக்கப்பட்டது, அது அவரை ஒரு சிறந்த நடிகராக நிறுவியது. அவர் பின்னர் அவரது தந்தையுடன் வெற்றிப் படமான
கலெக்டர் காரி அப்பாயியில் சேர்ந்து நடித்தார். அவரது அடுத்த வெற்றிப்படமாக
ஸ்ரீதேவியுடன்' இணைந்து நடித்த ஆக்கரி போராட்டம் அமைந்தது. இது கே. ராகவேந்திர ராவினால் இயக்கப்பட்டது. அவரது திரைப்படங்களான விக்கிதாதா, கிரைதாதா, முரளி கிருஷ்ணடு, ஜானகி ராமுடு, அக்னி புத்ருடு ஆகியவற்றில் நடித்தார். அவரது திரைவாழ்க்கையில் பெறும் மாற்றம் ஒரு ஆண்டுக்கு பின் நிகழந்தது. பிரபல தென்னிந்திய இயக்குநர் மணிரத்தினத்தால் இயக்கப்பட்ட காதல் கதையான கீதாஞ்சலி வணிக மற்றும் வியாபார ரீதியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் தமிழ் மொழிமாற்றமும் இதற்கு இணையான வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டில், நாகார்ஜூனா வெற்றிப்பட இயக்குநரான
ராம் கோபால் வர்மாவினால் இயக்கப்பட்ட ஒரு அதிரடிப் படமான ஷிவாவில் நடித்தார். அது தெலுங்கு திரைப்படத் துறையில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது. பின்னர் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் அவருடைய முதல் திரைப்பபடமாக அதே பெயரில் (ஷிவா)வின் ஹிந்தி மறு தயாரிப்பை உருவாக்கினார். அது அனைத்திந்தியாவிலும் பெரும் வெற்றிப்படமாக மாறியது. பாலிவுட் இயக்குநரான ராம் கோபால் வர்மாவின் வாழ்க்கையினைத் தொடங்க மிகப்பெரிய அளவில் உதவியது. ஷிவாவிற்குப்
பிறகு , அவரது அடுத்த திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்புக்கள் மிக அதிகமாக இருந்தன. அத்தகைய காலகட்டத்தில் சில வேறுபட்ட பாத்திரங்களை கில்லர், நிர்ணயம் போன்ற திரைப்படங்களில் செய்தார்.
நாகார்ஜூனா தொடர்ச்சியான வணிக ரீதியான தோல்விகளையும் பின்னடைவுகளையும் 1993 ஆம் ஆண்டு வெளியீடான" பிரசிடெண்ட் காரி பெல்லம் , முன்பு பெற்றார். அவர் அதன் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களான வரசுடு , கரானா புல்லோடு மற்றும் அல்லாரி அல்லுடு , கிரிமினல் மற்றும் சிசிந்திரி போன்ற பெயர் சொல்லக் கூடியவற்றோடு செய்ய முடிந்தது. 1994 ஆம் ஆண்டில், அவர் நகைச்சுவையை முதல் முறையாக
ஹல்லோ பிரதரில் முயற்சித்தார் . ஹல்லோ பிரதர் போன்றதொரு தடையுடைப்பு வெற்றிப்படம் பின்னர் சல்மான் கானை நட்சத்திரமாகக் கொண்டு ஹிந்திப் படமாக
ஜூட்வா என மறு தயாரிப்புச் செய்யப்பட்டது. 1996 ஆம் ஆண்டில், நாகார்ஜூனா நடித்து தயாரித்த நின்னே பெல்லதூதா, கிருஷ்ண வம்சியால் இயக்கப்பட்டது. மேலும் தேசிய விருது பெற்ற ஹிந்தி நடிகையும் தெலுங்கில் உயர்ந்த சம்பளம் பெற்றவருமான டபுவை இணை நட்சத்திரமாகக் கொண்டதாகும் .
நாகார்ஜூனா கிருஷ்ண வம்சியை பத்தே நிமிடங்கள் சந்தித்தும், அதுவரை வெளிவராத வம்சியின் துவக்கப்படமான
குலாபியை பார்க்காமலும் ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக வதந்திகள் கூறின .
அது அவ்வருடத்தைய பெரும் வெற்றியாக மாறியது, அதே போல இசையமைப்பாளர்
சந்தீப் சோட்டாவின் வாழ்க்கைத் தொழிலை துவக்கியும் இருந்தது. பின்னர் நாகார்ஜூனா சவாலான பாத்திரத் தோற்றமான அன்னமாச்சார்யாவை , 15 ஆம் நூற்றாண்டு தெலுங்கு பாடகர் மற்றும் கவிஞரை அன்னமய்யாவில் ஏற்றார் . ஷிவா ,
மற்றும் கீதாஞ்சலி போல அன்னமய்யாவும் ஆனது. அந்தப் படத்தில் அவரது பாத்திரத்திற்காக நாகார்ஜூனா இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருது பெறச் சென்றார். 1999 ஆம் ஆண்டில் அவர் அவிட மா அவிடே வைச் செய்தார். நாகார்ஜூனா ஒவ்வொருவராலும் நீண்ட காலம் மறக்கப்பட்ட (திரைப்பட) வகையை மீண்டும் தெலுங்கு திரைக்கு கொண்டு வந்ததற்கு பாராட்டப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் சீதாராம்ராஜூவின் வெற்றிப் படமான, நாகார்ஜூனா நடித்த நுவ்வு வாஸ்தாவாணிதடையுடைப்பு படமாக மாறியது . அவரது அவ்வருடத்திய தொடர்ச்சியான திரைப்படங்கள் , நின்னே பிரேமிஸ்தா மற்றும் ஆஸாத்தும் கூட வணிக ரீதியிலான வெற்றியைப் பெற்றன . பின்னர், அவர் காதல் நகைச்சுவை படங்களான , சந்தோஷம் மற்றும் மன்மதூதூ ,
இரண்டும் வருவாயில் பெரிய வெற்றியைப் பெற்றவையாகும் .
ஷிவமணி நாகார்ஜூனாவிற்கு ஆறு தொடர்ச்சியான பொன்னான வெற்றிகளை, வணிகத்தில் ஒரு சில இணைகளேயுடைய சாதனையை கைப்பற்றித் தந்தார் . அப்போதைய காலத்தில், அவர் தடையுடைப்புப் படமான
சத்யத்தை , அவரது மருமகன் சுமந்த்தின் நடிப்பு வாழ்க்கைத் தொழிலுக்காக உதவத் தயாரித்தார் .
2004ம் ஆண்டிலிருந்து தற்போது வரை
2004 ஆம் ஆண்டில், நாகார்ஜூனா இரண்டு வெளியீடுகளை நென்னேநானு மற்றும்
மாஸ் ஆகியவற்றைக் கொண்டார். முன்னது, விமர்சகர்களின் கடுமையையும் தாண்டி வருவாயில் வென்றது. மாஸ் , நாகார்ஜூனா தானே தயாரித்து புதிய இயக்குநரும் முன்னணி நடன இயக்குநருமான
லாரன்ஸ்சால் இயக்கப்பட்டது அவரது வாழ்க்கைத் தொழிலில் உயர்ந்த வருவாயை பெற்றுத் தந்ததாக ஆனது. [1] மீண்டும் ஒருமுறை, நாகார்ஜூனா புதிய திறன்களைத் கண்டறியும் நல்லப் பார்வையினைக் கொண்டிருப்பதை நிரூபித்தார். 2005 ஆம் ஆண்டில், நாகார்ஜூனா சூப்பர் ரை நடித்து தயாரித்தார், எதிர்பார்த்தப்படி அது அடையவில்லை சராசரி வெற்றியையேப் பெற்றது. பின்னர் 2006 ஆம் ஆண்டில், நாகார்ஜூனா அன்னமய்யா இயக்குநர் கே. ராகவேந்திர ராவ்வுடன் மறுபடியும் இனைந்தார், ஸ்ரீ ராமதாஸு திரைப்படத்தில் நடித்தார், அது அவரது இரண்டாவது வரலாற்றுச் சித்திரம், 18 ஆம் நூற்றாண்டில் அதே பெயரினைக் கொண்ட தெலுங்கு துறவி பாடகரை அடிப்படையாகக் கொண்டதாகும். நாகார்ஜூனா நந்தி விருதினை சிறந்த நடிகருக்காகப் பெற்றார். ஸ்ரீ ராமதாஸு அவரது முந்தைய அன்னமய்யா போன்று நாகார்ஜூனாவிற்கு விமர்சன மற்றும் வணிக வெற்றியையும் பெற்றுத் தந்தது. அவரது சமீப திரைப்படங்கள், "டான்" மற்றும் "கிங்" சிறந்த விமர்சனங்களை குறைவாகப் பெற்றும் வணிக ரீதியாக வெற்றிப் பெற்றவையாகும்.
எதிர்காலப் படங்கள்
நாகார்ஜூனா தற்போது இரு படங்களில் நடித்து வருகிறார் கேடி (அதில் அவர் சீட்டு விளையாடுவதில் நிபுணரான பாத்திரத்தில் நடிக்கிறார்) மற்றும் பயணம் (அதில் அவரது முந்தைய படங்களின் போதான ரயில் தொடர்பான நிகழ்வுகளை மறு நினைவு கூர்கிறார்).
நாகார்ஜூனா இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் இரு மொழிப்படமான "கேடி"யில் நடிக்கிறார்.

பாலிவுட் திரைப்படங்கள்
நாகார்ஜூனா பல பாலிவுட் திரைப்படங்களான ஷிவா, துரோஹி (1992), குதா ஹவா (1992), கிரிமினல் (1995), திரு. பேச்சேரா (1996), ஸாகிம் (1998), அங்காரே (1998), எல் ஓ சி கார்கில் (2003) முதலியவற்றில் நடித்துள்ளார். ஷிவா அது தயாரிக்கப்பட்ட பெரும்பாலான மொழிகளில் பெரும் வெற்றியினைப் பெற்றது. குதா ஹவா, கிரிமினல், ஸாகிம் ஆகியவையும் வருவாயில் வெற்றிப் பெற்றன. அவர் அவரது தெலுங்கு மொழி திரைப்படங்களை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்தார். அவர் பல ஹிந்தி படங்களில் கௌரவத் தோற்றங்களில் தேன்றியுள்ளார். நாகார்ஜூனா தமிழின் வெற்றிப்படமான ரக்ஷகன் தெலுங்கில் ரக்ஷடுவாக தயாரிக்கப்பட்டப் போது நடித்தார். தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட அவரது இதர திரைப்படங்களில் ஷிவா "உதயம்" எனும் பெயரில் வெளிவந்தது, ஒரு தடையுடைப்பு படமாகும். அவரது தெலுங்கின் வசூல் படமான கீதாஞ்சலியும் கூட தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது, பிற வெற்றிகரமான படங்களான அன்னமய்யா, சிசிந்திரி & ஹல்லோ பிரதர் ஆகியவையும் ஹிந்தியிலும் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டன. அவர் தென்னிந்தியாவில் வெற்றிகரமான கதாநாயகனாவார்.
கூடுதல் தகவல்
நாகார்ஜூனா திரைப்படங்களுக்கு வெளியே வணிக ரீதியிலான முயற்சிகளை குறிப்பாக வீடு-மனைத் தொழிலில் வைத்துள்ளார். 2003 ஆம் ஆண்டில், தாழ்வார மதுபானக் கடையான 'டச்' சை ஏற்படுத்தினார். அவர் பின்னர் சில வருடங்கள் கழித்து அதை விற்றார் மேலும் ஒரு சிறு சிற்றுண்டிக் கடை உரிமையாளராகும் துணிச்சலான முயற்சியில் இறங்கினார். அவர் தற்போது ஹைதராபாத்தில் மதுபான- சிற்றுண்டிக் கடையான 'N' ன்னில் இணையுரிமைப் பெற்றுள்ளார். அவர் மிகப் பிரபலமான தெலுங்கு செயற்கைக்கோள் தொலைக்காட்சியான 'மா' தொலைக்காட்சியை மேம்படுத்தும் இருவரில் ஒருவராக முந்தைய ஆண்டுகளின் தொழில் சகாவும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
விருதுகள்
தேசிய சினிமா விருதுகள்
வெற்றி பெற்றது
1998 - தேசிய திரைப்பட விருது சிறப்பு நடுவர் அன்னமய்யா
நந்தி விருது
வெற்றி பெற்றது
1997 - சிறந்த நடிகர் அன்னமய்யா
1999 - கம்ஸ்யா (வெண்கலம்) நந்தி விருது
பிரேம் கதா தயாரிப்பு
2002 - சிறந்த நடிகர் சந்தோஷம்
2002 - சுவர்ணா (தங்கம்) நந்தி விருது மன்மதூதூ தயாரிப்பு
2006 - சிறந்த நடிகர் ஸ்ரீ ராமதாஸு
பிலிம்பேர் விருதுகள்
1990 - பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது
(தெலுங்கு) சிவா
1997 - பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது )தெலுங்கு அன்னமய்யா
திரைப்பட விவரங்கள்
நடிகராக
ஆண்டு திரைப்படம் பாத்தி
1986
விக்ரம் விக்ரம்
காப்டன் நாகார்ஜூனா நாகார்ஜூ
1987
அரயான்கண்டா
மஜ்னூ
சங்கீர்த்தனா
கலெக்டர் காரி அப்பாயி
அக்னி புத்ருடு
கிரை தாதா
1988
ஆக்ரி போராட்டம் விஹரி
சின்ன பாபு
முரளி கிருஷ்ணடு முரளி கிருஷ்ண
ஜானகி ராமுடு ராமு
1989
சிவன் சிவன்
அக்னி
கீதாஞ்சலி பிரகாஷ்
விக்கி தாதா விக்ரம்
விஜய் விஜய்
1990
சிவன் சிவன்
நேட்டி சித்தார்தா சித்தார்தா
இத்தரு இதாரே
பிரேம் யுத்தம்
1991
ஜயத்ரயாத்ரா விஜய்
சாந்தி கிராந்தி கிராந்தி
சைதன்யா சைதன்யா
நிர்ணயம் வம்சி கிருஷ்ண
1992
பிரெசிடெண்ட் கார் பெல்லம் ராஜா
துரோஹி ராகவ்/சேக
அந்தம் ராகவ்
குடா கவா இன்ஸ்பெக் ராஜா மிர்
கில்லர் ஈஷ்வர்
1993
அல்லாரி அல்லுடு கல்யாண்
வரசுடு வினய்
ரக்ஷனா போஸ்
1994
கிரிமினல் டாக்டர். அஜ குமார்
ஹலோ பிரதர் தேவா/ரவ வர்மா
கோவிந்தா கோவிந்தா சீனு
1995
சிசிந்திரி ராஜா
கிரிமினல் டாக்டர்.அஜ குமார்
காரன புல்லுடு ராஜூ
1996
நின்னெ பெல்லதூதா சீனு
வஜ்ரம் சக்ரி
ராமுடோச்சடு ராம்
1997 ரட்சகன் அஜய்
அன்னமய்யா அன்னமய்ய
1998
ஸாகிம் ராமன் தேச
சந்தரலேகா சீதா ராமா
அங்காரே ராஜா
ஆட்டோ டிரைவர் ஜகன்
ஆவிட மா ஆவிடே விக்ரந்த்
1999 ரவோயி சந்தமாமா சஷி
சீதாராமராஜூ ராமராஜூ
2000
ஆசாத் ஆசாத்
நின்னே பிரேமிஸ்தா ஸ்ரீநிவாஸ்
நுவ்வு வாஸ்தாவானி
சின்னி கிருஷ்ண
2001
ஸ்நேஹமந்தே இதேரா அரவிந்த்
ஆகாச வீதிலோ சாந்து
பாவா நாச்சடு அஜய்
எடுருலேனி மனிஷி
சூர்யா மூர்த்தி, ச மூர்த்தி
2002
மன்மதூதூ அபிராம்
அக்னி வர்ஷா யாவ்க்ரி
சந்தோஷம் கார்த்திக்
2003 எல் ஒ சி கார்கில் மேஜ்.பத்மப ஆச்சார்யா
சிவமணி 9848022338 ஷிவமணி
2004 மாஸ் மாஸ், கண
நென்னேநானு வேணு
2005 சூப்பர் அகில்
2006
ஸ்டைல் மாஸ்
ஸ்ரீ ராமதாஸு கோபண்ண ஸ்ரீ ராமதா
பாஸ் - ஐ லவ் யூ கோபால் கிருஷ்ண
2007 டான் டான், சூரி
2008
கிருஷ்ணார்ஜூனா கிருஷ்ண காட்)
கிங்
பொட்டு சீ என்ற கிங் எ சரத்
2010 கேடி
2011 மங்காத்தா: உள்ளே வெளியே
தயாரிப்பாளராக
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1979 கல்யாணி
1980 பில்ல ஸமீந்தாரு
1980 புச்சிபாபு
1981 பிரேம கனுகா
1981 பிரேமாபிஷேகம்
1982 யுவராஜூ
1983 ஸ்ரீ ரங்கநீதலு
1995 சிசிந்த்ரி
1996 நின்னே பெல்லதாதா
1998 ஆஹா
1998
ஸ்ரீ சீதாராம கல்யானம் சூடாமுராரண்டி
1998 சந்திரலேகா
1999 பிரேம கதா
1999 சீதாராமராஜூ
2000 யுவகுடு
2002 மன்மதூதூ
2003 சத்யம்
2004 மாஸ்
2005 சூப்பர்

நடிகர் விஷால் பிறந்த நாள் ஆகஸ்ட் 29 ,


நடிகர் விஷால் பிறந்த நாள் ஆகஸ்ட் 29 , 

விஷால் கிருஷ்ணா ரெட்டி (பிறப்பு - ஆகஸ்ட் 29 , சென்னை ) தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர்
அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
தொழில்
கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம் வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார்.
திருட்டு விசிடிகளுக்கு எதிராக ஆதாரப் பூர்வமாகக் குற்றச்சாட்டுகள் வைத்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று செய்தியாளர்களின் மத்தியில் பேட்டி அளித்தார். விஷாலின் அடுத்த கவனம் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. ஒரு தயாரிப்பாளராக அவர் அங்கும் உறுப்பினர் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு என்டர்டெயின்மென்ட் காத்திருக்கிறது. அனல் பறக்க புரட்சியாய் சுற்றித்திரியும் புரட்சித் தளபதிக்கு இந்த நன்னாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம் .

வாழ்க்கை
விஷால் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார். இவரது குடும்பம் சென்னையில் வசிக்கிறது. இவர் தொன் போசுகோ பள்ளியிலும் இலயோலா கல்லூரியிலும் பயின்றார்.இவரது பேராசிரியர் ச. ராஜநாயகம் அளித்த ஊக்கத்தினால் நடிக்க வந்துள்ளார் .

திரைப்பட வரலாறு
எண் ஆண்டு திரைப்படம் கதாபாத்
1 2004 செல்லமே ரகுனாத
2 2005 சண்டக்கோழி பாலு
3 திமிரு கணேஷ்
4 2006 சிவப்பதிகாரம் சத்திய மூ
5 2007 தாமிரபரணி பரணிபுத்
6 மலைக்கோட்டை அன்பு
7 2008 சத்தியம் சத்தியம்
8 2009 தோரணை முருகன்
9 2010
தீராத விளையாட்டுப் பிள்ளை
கார்த்திக்
10 2011 அவன் இவன் வால்ட்டர் வணங்காம
11 வெடி பிரபாகர
12 2013 பாண்டிய நாடு
13
2014
நான் சிகப்பு மனிதன்
14
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
15 பூஜை வாசு
16
2015
ஆம்பள சரவணன்
17 மதகஜ ராஜா

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

நடிகர் பிரசன்னா பிறந்த நாள் : ஆகஸ்ட் 28 , 1982 .



நடிகர் பிரசன்னா பிறந்த நாள் : ஆகஸ்ட் 28 , 1982 .

பிரசன்னா (பிறப்பு: ஆகஸ்ட் 28 , 1982 ) வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.

வாழ்க்கை

பிரசன்னாவின் பிறப்பிடம்
திருச்சிராப்பள்ளியாகும். இவரின் தந்தை
பெல் நிறுவனத்தில் வேலை செய்தார். 11 மே 2012ல் நடிகையான சினேகாவைத் திருமணம் செய்துகொண்டார்.
திரை வாழ்க்கை
ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள்
2002 5 ஸ்டார் கனிகா
2003 ரகசியமாய்
2004 காதல் டாட் காம்
2004 அழகிய தீயே நவ்யா நாயர்,
பிரகாஷ் ராஜ்
2005 கஸ்தூரி மான் மீரா ஜாஸ்மின்
2005 கண்ட நாள் முதல்
லைலா ,
கார்த்திக் குமார்
2007 சீனா தானா 001 ஷீலா
2008 சாது மிரண்டா
காவ்யா மாதவன் ,அப்பாஸ்
2008 அஞ்சாதே நரேன் ,
விஜயலட்சுமி
2008 கண்ணும் கண்ணும்
உதயதாரா ,
வடிவேல்
2009 மஞ்சள் வெயில் சந்தியா
2009 அச்சமுண்டு! அச்சமுண்டு! சினேகா
2010 நாணயம்
2010 கோவா ஜெய் ,சினேகா
2010 பாணா காத்தாடி
2010 முரன் சேரன்

நடிகர் சுமன் பிறந்த நாள் ஆகஸ்ட்
சுமன் ஓர் தென்னிந்திய திரைப்பட நடிகர். 1980களில் தெலுங்கு , தமிழ் மலையாள மொழிகளில் அதிரடி திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தெலுங்கில் சித்தாரா, தரங்கணி ,
நேதி பாரதம் ஆகியன குறிப்பிடத் தக்கன. மலையாள மொழியில் சாகர் அலையசு ஜாக்கி என்ற திரைப்படத்தில் வில்லனாகவும் வரலாற்றுச் சித்திரமான
பழசி இராசாவில் பழயம்வீடன் சாந்து வாகவும் நடித்துப் புகழ் பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீளவும் நடிக்க வந்தபிறகு 2007இல் வெளியான
சிவாஜி: த பாஸ் படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்துப் பரவலானப் பாராட்டைப் பெற்றார். குருவி , ஏகன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

சுமன்
பிறப்பு ஆகத்து 28, 1959
(அகவை 57)
மங்களூரு , இந்தியா
பணி நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள்
1977 - நடப்பு
வாழ்க்கைத் துணை
சிறீசா

பாடகி ஏ. பி. கோமளா பிறந்த தினம் ஆகஸ்ட் 28.





பாடகி ஏ. பி. கோமளா பிறந்த தினம் ஆகஸ்ட் 28.

ஏ. பி. கோமளா ( A. P. Komala , பிறப்பு: 28 ஆகத்து 1934) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.  இவர் தமிழ் ,மலையாளம் , தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார்.
ஜி. ராமநாதன் , கே. வி. மகாதேவன் , எஸ். வி. வெங்கட்ராமன் , ம. சு. விசுவநாதன் ,
சி. எஸ். ஜெயராமன் , எஸ். எம். சுப்பையா நாயுடு , டி. ஆர். பாப்பா , வெ. தட்சிணாமூர்த்தி , ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.
பெண் மனம் , தங்கப்பதுமை , தங்கமலை ரகசியம் , மாமியார் மெச்சின மருமகள்,
பொம்மை கல்யாணம் , எங்கள் குடும்பம் பெரிசு , ஸ்ரீ வள்ளி , தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏ.பி.கோமளா – பின்னணிப் பாடகி
திரைப்படங்களில் பின்னணி பாடும் முறை ஆரம்பித்த காலகட்டத்திலேயே திரையிசையில் அறிமுகமானவர் தாய்மொழி தெலுங்காக இருந்தபோதும், தமிழ்ப் பாடல்களை அழகான உச்சரிப்புத் திறமையினால் மெருகூட்டியவர் ஏ.பி.கோமளா.
மிகச் சிறிய வயதிலேயே வானொலிக் கலைஞராகச் சேர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவரது தந்தை பார்த்தசாரதி கர்நாடக இசை வகுப்புகள் நடத்தி வந்தார். தந்தை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதைக் கேட்டு தானே பாடத்தொடங்கியவர் ஏ.பி.கோமளா. ஆறாவது வயதிலேயே இசை ஞானம் அவருக்குத் தானாகவே வந்தது. 9-ஆவது வயதில் வானொலி இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தார். மற்றொரு வானொலிக் கலைஞரான கே.வி.ஜானகி அப்போது திரைப்படங்களில் பின்னணிப் பாடி வந்தார். ஏ.பி.கோமளாவை இவரிடம் அறிமுகம் செய்து வைத்தனர்.
ஜூபிடர் பிக்சர்ஸ் 1949-களில் தயாரித்த “வேலைக்காரி” படத்தில் பாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினார் சி.ஆர்.சுப்பராமன். உடன் இசை அமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இதில் ஏ.பி.கோமளா முதல் முதலில் பாடியது ‘உலகம் பலவிதம் அதிலேதான் ஒரு விதம்’ என்ற பாடல். இப்பாடலைப் பாடும்போது ஏ.பி.கோமளாவுக்கு வயது 13. அதே ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் மந்திரிகுமாரி வெளிவந்தது. அந்தப் படத்தில் ஜி.ராமனாதனின் இசை அமைப்பில் ஒரு பாடலைப் பாடினார். திரையிசையில் 1950-களிலேயே கர்நாடக இசையோடு இந்துஸ்தானி, மேற்கத்திய இசைகளும் கையாளப்பட்டு வந்தன. 1950-இல் வெளிவந்த ‘விஜயகுமாரி’ படத்தில் வைஜயந்திமாலாவுக்காக மேற்கத்திய இசையில் கே.டி.சந்தானத்தின் வரிகளில் சி.ஆர்.சுப்பராமனின் இசையில் லாலு லாலு லாலு லாலு இன்பம் என்றும் தங்கும் என்று எண்ணாதே துன்பம் வந்தால் சஞ்சலம் கொள்ளாதே’ என்ற பாடலைப் பாடினார்.
1952-இல் “பெண் மனம்” என்ற படத்தில் ரி.ஏ.மோதியுடன் இணைந்து அறஞ்செய்ய விரும்பு ஆறுவது சினம் என்று ஔவை சொன்னாளே என்ற இனிமையும் இளமையும் நகைச்சுவையும் ததும்ப அந்தப் பாடலைப் பாடினார். 1953-இல் பி.பானுமதியின் தயாரிப்பில் வெளிவந்த “காதல்” என்ற படத்தில் ஸ்ரீரஞ்சனி என்ற நடிகைக்காக ஆனந்தமே ஆகா ஆனந்தமே என்று ஏ.பி.கோமளா பாடினார்.
பழம்பெரும் தெலுங்கு இயக்குநர் ரெட்டியின் தயாரிப்பில் 1953-இல் வெளிவந்தது வஞ்சம் என்ற படம். இந்தப் படத்தில் ரி.ஏ.கல்யாணம் இசையமைப்பில் ’வரப்போறார் இதோ வரப்போறார்’ என்ற பாடலைப் பாடினார். இது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்ணை கேலி செய்து பாடுவதாக அமைந்த பாடல்.
1954-இல் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் சுகம் எங்கே. இந்தப் படத்தில் தையற்கலையின் மகிமையைச் சொல்லும் ஒரு பாடல். ‘கண்ணைக் கவரும் அழகு வலை, கலைகளில் சிறந்தது தையற்கலை என்ற பாடலை கே.ஆர்.ராமசாமியுடன் சேர்ந்து ஏ.பி.கோமளா பாடினார்.
1955-இல் மீண்டும் பி.பானுமதியின் தயாரிப்பில் வெளிவந்த ”கள்வனின் காதலி” படத்திலும் ’அல்லி மலர்ச் சோலையிலே இந்த வள்ளி இவள்’ என்ற பாடலை பி.பானுமதியுடன் சேர்ந்து பாடினார். ஏ.பி.கோமளா தனியாக பாடிய பாடல்களைவிட மற்றவர்களுடன் இணைந்து பாடிய பாடல்களே அதிகம்.
1956-இல் வெளிவந்த “நான் பெற்ற செல்வம்” என்ற படத்தில் இரண்டு பாடல்கள் பாடினார். மாதா பிதா குரு தெய்வம் அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம் மற்றும் திருடாதே பொய் சொல்லாதே பிச்சை எடுக்காதே என்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும். கா.மு.ஷெரீப்பின் வரிகள்.இசை ஜி.ராமனாதன்.
1958-இல் ‘உத்தம புத்திரன்’ படத்தில் பாலசரஸ்வதி தேவியோடு ஏ.பி.கோமளா இணைந்து ஜி.ராமனாதனின் இசை அமைப்பில் முத்தே பவளமே…… ஆளப் பிறந்த என் கண்மணியே என்ற பாடலைப் பாடினார். இவ்வாறு எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரிக்காக ஒரு பாடலைப் பாடினார் ஏ.பி.கோமளா. அதுவரை தனக்குரிய பாடல்களைத் தானே பாடி வந்தார் ரி.ஆர்.ராஜகுமாரி ரி.ஜி.லிங்கப்பாவின் இசையில் ஏ.பி.கோமளா ரி.ஆர்.ராஜகுமாரிக்கு பின்னணிப் பாடினார். அந்த பாடல் ‘யவ்வனமே என் யவ்வனமே அன்பொடு காதல் அள்ளி வழங்கும் சீதனமே என்ற பாடல்.
ஏ.பி.கோமளா தமிழ்த் திரையுலகில் கடைசியாக பாடியது 1969-இல் வெளிவந்த “மன்னிப்பு” என்ற படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் ‘குயிலோசையை வெல்லும்’ என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடியதே. தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியது போலவே மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மலையாளத்தில் கே.பி.ஏ.சி நாடகக்குழுவுக்காக இவர் பாடிய பாடல்களைப் பல இளந்தலைமுறையினர் மேடைகளில் பாடி வருகின்றனர். மலையாளத்தில் மிகவும் பிரபலமான பாடல் ‘சக்கரைப்பந்தலில் தேன் மழைப் பொழியும் சக்ரவர்த்தி குமாரா’ என்ற பாடல்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வர்த்தக சேவையில் 14.11.2015 அன்று திருமதி.விசாலாக்ஷி ஹமீது அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட “இன்னிசைச் சுவடிகள்” நிகழ்ச்சியிலிருந்து மேற்கண்ட விவரங்கள் திரட்டப்பட்டன.
http://www.m3db.com/artists/205