வெள்ளி, 22 நவம்பர், 2019

கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் நினைவு தினம் நவம்பர் 22.


கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் நினைவு தினம் நவம்பர் 22.

*06/07/1930 — 22/11/2016*

 பாலமுரளி கிருஷ்ணா சில குறிப்புகள் .

தந்தை பட்டாபிராமைய்யா - இசை கலைஞர், இசை ஆசான்

தாய் சூர்யகாந்தம் - வீணை இசை கலைஞர்

இசை ஆசான் - பாருபள்ளி ராமக்ரிஷ்ணய்யா பந்துலு

இசை அரங்கேற்றம் - எட்டு வயதில்

வாசிக்கத் தெரிந்த வாத்தியங்கள் - வயோலா, வயலின், மிருதங்கம், கஞ்சிரா

வயலின் கலைஞராக அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்யநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், ஜி என் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு பக்க வாத்தியம் வாசித்துள்ளார்.

வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றிய அனுபவம் உடையவர்

திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்

இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றவர்

பின்னணி பாடகருக்கான தேசிய விருதையும் பெற்றவர்

72 மேளகர்த்தா ராகங்களிலும்  கிருதிகளை உருவாக்கி உள்ளார்

பண்டிட் பீம்சென் ஜோஷி உள்ளிட்ட பிரபல ஹிந்துஸ்தானி கலைஞர்களுடன் இணைந்து ஜுகல் பந்தி

பிரபல நடிகர் கமல்ஹாசன், பாடகர் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு இசை கற்றுத்  தந்த ஆசான்

பிரபலமான தமிழ் பாடல்கள்

தங்க ரதம் வந்தது வீதியிலே-கலைக்கோவில் திரைப்படத்தில்

ஒரு நாள் போதுமா -திருவிளையாடல்

புத்தம் புது மேனி - சுப தினம்

சின்னக் கண்ணன் அழைக்கிறான்- கவிக்குயில்

ஆயிரம் கோடி காலங்களாக- கவிக்குயில்

மௌனத்தில் விளையாடும் -நூல் வெளி

தாயே மூகாம்பிகேயே - தாய் மூகாம்பிகை (எம் எஸ் வி, சீர்காழி உடன் திரைப்படத்தில் தோன்றி  பாடியது )

அருட்ஜோதி தெய்வம் -திசை மாறிய பறவைகள்

பாஞ்சாலி கதறுகிறாள் - சிகரம்

ரகுவரா நின்னு - இசை பாடும் தென்றல்

வித்தியாசமான பாடல் -புரட்சித் தலைவருக்காக குன்னக்குடி இசையில் நவரத்தினம் திரைப்படத்தில்  குருவிக்கார எனத் தொடங்கும் பாடல்

இறுதி வரை சுருதி விலகாத சாரீரத்தை கொண்டிருந்தவர்

சுமுகம், மஹதி ஆகிய நான்கு ஸ்வரங்களை கொண்ட ராகங்கள், சர்வ ஸ்ரீ , ஓம் காரி ஆகிய மூன்று ஸ்வரங்களை கொண்ட ராகங்கள், பிரதி மத்யமாவதி உள்ளிட்ட ராகங்கள் இவர் உருவாக்கியவை.

இறை அருளால் இசை தந்த மகான். திருவிளையாடல் படத்தில் கவியரசர் இவர் பாடுவதாக எழுதிய வரிகள்- கானடா....இசை தெய்வம் நானடா ...மிகையில்லைகர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா
. பாரம்பரிய
இசைக்கு தனிப் பரிமாணம்
கொடுத்தவர்
பாலமுரளிகிருஷ்ணா. மகிழ்வின்
பாவனைகளைப் பதிவிடுவதில் அவர்
தனித்திறமை கொண்டவர். துயரும்
அவருடைய குரலில் குழைவைக்
கொண்டிருந்தது....'நீ தய
ராதா...'  'சின்ன கண்ணன் அழைக்கிறான் ....'அவருடைய குரலில் சிறப்புப்
பெற்றது....

   இவருக்கு வயது 86. பத்ம விபூஷன், செவாலியே விருது பெற்றுள்ளார்.2 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் கர்நாடக சங்கீதத்தில் ஏராளமான கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். திரைப்படபாடல்களும் பாடியுள்ளார்.இளையராஜாவின் இசையில் சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலையும் பாடியுள்ளார். பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக