வியாழன், 5 ஜனவரி, 2012

ஏ. ஆர். ரகுமான் பிறந்த நாள் ஜனவரி 06


ஏ. ஆர். ரகுமான் பிறந்த நாள் ஜனவரி 06 
அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே. 2010-ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.
இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.
81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
ரகுமான் ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார்.அதன் பின் குடும்மத்தில் வருமானம் இல்லாதனிலையில் தன் தந்தயின் இசைகருவிகலை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில்கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.
பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:
1993 யோதா (மலையாளம்)
1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்)
2003 Tian di ying xiong (சீன மொழி)
1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு).
திரைப்பட அல்லாத இசையமைப்புகள்
Return of the Thief of Baghdad (2003)
தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
செட் மீ ஃப்ரீ (1991)
வந்தே மாதரம் (1997)
ஜன கன மன (2000)
பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)
Tamilaந்.
இவர் பெற்ற விருதுகள்
2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, (9 முறை தொடர்ந்து பெற்றார்) ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது, ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
சிகரமாக, இந்திய குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டது.
ஏர். ஆர்.ரஹ்மான் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
அன்பா...வெறுப்பா? என வாழ்க்கை கேட்டபோது, அன்பைத் தேர்ந்தெடுத்த ஆஸ்கர் தமிழன். காதலின் கூச்சலையும் கடவுளின் மெளனத்தையும் இசையாக்கிய கலைஞன். எல்லைகளை உடைத்தெறிந்து இசையில் இறைவனைத் தரிசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பர்சனல் நோட்ஸ்...
 *ரஹ்மானுக்கு என்று எந்தச் செல்லப் பெயரும் கிடையாது அம்மா, சகோதரிகள் அனைவரும் வாய் நிறைய ‘ரஹ்மான்’ என்றுதான் அழைப்பார்கள்!
* குடும்பச் சூழல் காரணமாக பத்மா சேஷாத்ரி பள்ளியில் அவர் படித்தது ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே!.
* தனது ஜனவரி 6-ம் தேதி பிறந்த நாளை ரஹ்மான் விமரிசையாகக் கொண்டாடுவது இல்லை. அதிகாலைத் தொழுகை, ஆதரவற்றோர் இல்ல விசிட் என ஆழ்ந்த அமைதியுடன் கழியும் அந்த நாள்!
* பசியாறுவதற்கு எந்த உணவாக இருந்தாலும் போதும் சமயங்களில் ரசம் சாதம் மட்டுமே போதும்!
* தங்க நகைகள் மீது துளியும் ஆர்வம் கிடையாது ரஹ்மானுக்கு. மெலிதான பிளாட்டினம் மோதிரம் மட்டும் சமயங்களில் அணிந்திருப்பார். கையில் கடிகாரமும் கட்டிக் கொள்ள மாட்டார்!
* எம்.ஜி.ஆர், சிவாஜி படப் பாடல்களை அடிக்கடி விரும்பிக் கேட்பார். சமயங்களில் அவரே வாய்விட்டுப் பாடுவதை வீட்டில் உள்ளவர்கள் மட்டும் கேட்க முடியும்!
 *ஒரு படத்தின் இசைக்கோர்ப்புப் பணிகளின்போது, கைகளை விரித்துக்கொண்டு புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது’ என ரஹ்மான் பாடினால், அந்தப் படத்துக்கான அவர் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன என்று அர்த்தம்!
 *குழந்தைகளுக்கு லீவு கிடைத்தால் குடும்பத்துடன் வெளிநாடு போவார். ஆனால், அங்கும் இசைசேர்ப்பு வேலைகள் உள்ளடக்கி இருக்கும்!
* சமீபத்தில் ரஹ்மான் இசையமைத்து இருக்கும் couples Retreat  ஆல்பம் 100 மில்லியன் டாலர்கள் வசூலித்திருக்கிறது. சமீபத்திய ரஹ்மானின் பிரமாண்ட ஹிட்டான் அதில் தமிழ்ப் பாடல்களும் உண்டு!
* குடும்பத்துடன் ஹைதராபாத், நாகூர் தர்ஹாக்களில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் சிறப்புத் தொழுகை மேற்கொள்வார்!
முக்கியமான இசை விழாக்களில் தோன்ற உடைகள் தேர்ந்தெடுப்பதில் அதிகக் கவனம் கொள்வார் ரஹ்மான். அவருக்கு ஆடை தேர்வு செய்பவர்கள் மனைவி சாய்ராவும், மும்பையின் பிரபல டிசைனர் தீபக்கும்!
 *கதீஜா, ரஹிமா என இரண்டு பெண் குழந்தைகள், அமீன் என ஓர் ஆண் குழந்தை. அமீன் சினிமாவில் பாட வருவான் போல!
* ஹஜ் யாத்திரைக்கு இரண்டு முறை தன் தாயார் கரீமா பேகத்தோடு சென்று வந்திருக்கிறார்!
 *தன் தந்தை சேகர் படத்தை வணங்கி விட்டுத்தான் வெளியில் எங்கும் புறப்படுவார். இறைவனுக்கு நிகரான பக்தியைத் தனது தாயிடமும் வெளிப்படுத்துவார் ரஹ்மான்!
 *ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வெளி வந்த முதல் படம் ‘ரோஜா’ என்பது தமிழில்தான். ஆனால், அவர் இசையில் திரையைத் தொட்ட முதல் படம் ‘யோதா’ மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம்!
* பென்குவின் பதிப்பகம் ஏ.ஆர்.ரஹ்மானின் சுயசரிதையை வெளியிட்டு இருந்தது. ஆனால், பல காரணங்களால் அதைத் தன் சரியான் சரிதையாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் ரஹ்மான்!
* இயக்குநர் மணிரத்னம் எந்த நொடி நினைத்தாலும் ரஹ்மானைச் சந்திக்க முடியும். தன்னை அறிமுகப்படுத்தியவர் மீது ரஹ்மானுக்கு அவ்வளவு அபிமானம்!
* மிகவும் குறைவாகப் பேசுவார். ஆனால், மிக நெருங்கிய நண்பர்களிடம் ரொம்பவே குதூகலமாகச் சிரித்துப் பேசுவார். ரஹ்மான் இசையோடு மட்டும் எப்பொதும் தொடர்புகொண்ட தனிமை விரும்பி!
* நெருக்கமான நண்பர்கள் எனப் பெரிய பட்டியல் ஏதும் கிடையாது. பாடகரும் நண்பருமான சாகுல் ஹமீது மறைவில் அதிகம் வருந்தியவர்!
* ரஹ்மான் எல்லா வகை இசையையும் விரும்புவார். ஒரே ஒருவருக்குப் பிடித்திருந்தாலும் அது நல்ல இசைதான் என நம்புபவர். பிற இசையமைப்பாளர்களைக் கண்டால் அவரது இசையில் தன்னைக் கவர்ந்த பாடலின் இசைக்கோர்ப்பைத் தயக்கம் இல்லாமல்  பாராட்டுவார்!
 *தியேட்டர், பொழுதுபோக்கு இடங்கள், பார்ட்டிகள் என எங்கும் ரஹ்மானைப் பார்க்க முடியாது. ஓய்வு நேரங்களைக் கழிக்க விரும்புவது குடும்பத்தினரோடு மட்டும்தான்!
 *தனது சகோதரிகள் ரெஹானா, பாத்திமா, இஸ்ரத் ஆகியோரிடம் எந்த நிலையிலும் பாசத்தைப் பொழியும் சகோதரர் ரஹ்மான்!
* சமுகப் பணிகளில் அதிக ஆர்வம், தான் செய்யும் எந்த உதவியையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்!
* காபி குடிக்கும்போது கோப்பையின் கால்வாசி அளவுக்குச் சர்க்கரை சேர்த்துக் கொள்வார். அவரோடு புதிதாகக் காபி அருந்துபவர்களுக்கு இது அதிசய ஆச்சர்யம்!
* இசைக்கு அடுத்து ரஹ்மானின் விருப்ப ஈர்ப்பு வீடியோ கேம்ஸ், அவருடைய விளையாட்டுத் தோழர்கள் மகள் கதீஜா, ரஹிமா, மகன் அமீன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக