ஞாயிறு, 15 ஜூலை, 2012

இயக்குநர் இமயம் பாரதிராஜா பிற‌ந்த‌ நாள் ஜுலை 17.


தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயமாகத் திகழும் பாரதிராஜா தமிழ்நாட்டில், மதுரை மாவட்டம் அல்லி நகரத்தில் 1941- ம் வருடம் ஜூலைத் திங்கள் 17- ஆம் தேதி பிறந்தவர். இவருடைய தந்தை பெரிய மாயத் தேவர், தாயார் மீனாட்சியம்மாள் ( எ ) கருத்தம்மாள். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி, செல்லப் பெயர் பால்பாண்டி. இளம்வயதில் மான் வேட்டையிலும், இலக்கியங்களிலும் ஈடுபாடுக் கொண்டிருந்த பாரதிராஜா, பின் நாட்களில் நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் ஆர்வம் காட்டினார். "ஊர் சிரிக்கிறது", "சும்மா ஒரு கதை" எனும் அவர் எழுதிய நாடகங்களை தேனி, பழனி, செட்டிப்பட்டி கிராமங்களில் திருவிழா சமயங்களில் அரங்கேற்றியுள்ளார். ஆரம்ப நாட்களில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்த பாரதிராஜா, பள்ளிநாட்களிலிருந்தே தான் நேசித்து வந்த சினிமா ஆசையில் - தன் அம்மாவின் ஆசீர்வாதத்தையும், முந்நூற்று ஐம்பது ரூபாயையும் எடுத்துக் கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினார். சென்னையின் ஆரம்ப நாட்களில் மேடைநாடகம் ( "அதிகாரம்" ), வானொலி நிகழ்ச்சிகள், பெட்ரோல் பங்க் வேலை என இருந்தபடியே திரையுலகில் நுழைய முயற்சித்தவர் முதலில் இயக்குனர் பி. புல்லையாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து அவரின் பிரதான சீடரானார். அதன்பின் 1977- ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் திருப்புமுனை 'டிரெண்டு செட்டர்' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட "16 வயதினிலே" படத்தின் மூலம் இயக்குனராகி, இன்று இயக்குனர் இமயமாய் திகழ்கிறார். பாரதிராஜாவின் மனைவி பெயர் சந்திரா லீலாவதி, மகன் மனோஜ், மகள் ஜனனி, மருமகள் நந்தனா மற்றும் பேத்தி.
இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய படங்கள்.
திரைப்படத்தின் பெயர் வெளியான ஆண்டு ஓடியநாட்கள்
16 வயதினிலே 1977 30 வாரம்
கிழக்கே போகும் ரயில் 1978 52 வாரம்
சிகப்பு ரோஜாக்கள் 1978 25 வாரம்
புதிய வார்ப்புகள் 1979 25 வாரம்
நிறம் மாறாத பூக்கள் 1979 100 நாள்(இலங்கையில் 52 வாரம்)
ஸோல்வா ஸாவன்(ஹிந்தி) 1979 கல்கத்தாவில் 25 வாரம்
யார் குலாபி(தெலுங்கு) 1979
கல்லுக்குள் ஈரம்(கதாநாயகன்) 1980
நிழல்கள் 1980
நிறம் மாறாத பூக்கள்(மலையாளம்) 1980
ரெட் ரோஸஸ்(ஹிந்தி) 1980
அலைகள் ஓய்வதில்லை 1981 25 வாரம்
சீதாகோகா சில்லகே(தெலுங்கு) 1981 100 நாள்
டிக் டிக் டிக் 1981
காதல் ஓவியம் 1982
ராகமாலிகா 1982 100 நாள்
வாலிபமே வா வா 1982 131 நாள்
மண்வாசனை 1983 286 நாள்
லவ்வர்ஸ் (ஹிந்தி) 1983
புதுமைப்பெண் 1984 100 நாள்
மெல்லப் பேசுங்கள்(தயாரிப்பு) 1984 100 நாள்
சவரே வாலி கரடி(ஹிந்தி) 1984
தாவணிக் கனவுகள்(நடிப்பு மட்டும்) 1984 100 நாள்
ஒரு கைதியின் டைரி 1985 100 நாள்
முதல் மரியாதை 1985 130 நாள்
யுவதரம் பிலிசிந்தி(தெலுங்கு) 1985
ஈதரம் இல்லாளு(தெலுங்கு) 1985
கைதிபேட்டா (தெலுங்கு) 1985
கடலோரக் கவிதைகள் 1986 100 நாள்
நீதானா அந்தக் குயில்(திரைக்கதை மட்டும்) 1986 100 நாள்
வேதம் புதிது 1987
ஜமதக் கனி(தெலுங்கு) 1987 100 நாள்
கொடி பறக்குது 1988
நாற்காலிக் கனவுகள்(டப்பிங்) 1988
என் உயிர்த் தோழன் 1990
புது நெல்லு புது நாத்து 1991
நாடோடித் தென்றல் 1992
கேப்டன் மகள் 1993
கிழக்குச் சீமையிலே 1993
கருத்தம்மா 1994
பசும்பொன் 1995
தமிழ் செல்வன் 1996
அந்தி மந்தாரை 1996
தாஜ்மகால் 1999
கடல் பூக்கள் 2000
ஈர நிலம் 2003
கண்களால் கைது செய் 2004
கோதா ஜீவித்தாலு(தெலுங்கு)
ஆராதனா(தெலுங்கு)
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விருதுகளும் பாராட்டுகளும்.
திரைப்படத்தின் பெயர் வெளியான ஆண்டு விருதுகள்
16 வயதினிலே 1977 மத்திய அரசின் சிறந்த பாடலுக்கான தேசிய விருது. பாடல்-செந்தூரப்பூவே
கிழக்கே போகும் ரயில் 1978 சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது
புதிய வார்ப்புகள் 1979 தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது
கல்லுக்குள் ஈரம்(கதாநாயகன்) 1980 எஸ்.ஐ.எஃப்டி-யின் சிறந்த தொழில் நுட்பக் கலைஞருக்கான விருது
நிழல்கள் 1980 இந்தியன் பனோரமாவில் பிரவேசம்
அலைகள் ஓய்வதில்லை 1981 தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது
சீதாகோகா சில்லகே(தெலுங்கு) 1981 1. சிறந்த இயக்குநருக்கான ஸ்வர்ண கமலம் மற்றும் சித்தாரா விருது
2. ஆந்திர மாநில அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது
3. தெலுங்கில் சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான விருது
புதுமைப்பெண் 1984 சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது
முதல் மரியாதை 1985 சிறந்த இயக்கநர், தமிழில் சிறந்த மாநில மொழித் திரைப்படம் மற்றும் சிறந்த பாடலை இயற்றியது ஆகியவற்றுக்கான தேசிய விருது
கடலோரக் கவிதைகள் 1986 இந்தியன் பனோரமாவில் பிரவேசம்
வேதம் புதிது 1987 சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட சிறந்த படத்திற்கான தேசிய விருது
கருத்தம்மா 1994 குடும்பம் மற்றும் சமூக பொதுநலனைக் கொண்ட சிறந்த படத்திற்கான தேசிய விருது
அந்தி மந்தாரை 1996 சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது
கடல் பூக்கள் 2000 1. சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது
2. சாந்தாராம் விருது: 7 விருதுகள்(சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட)
தமிழக அரசின் கலைமாமணி விருது
இவற்றுடன் சாந்தோம். சதங்கை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், ரோட்டரி கிளப், ஜெய்சி போன்ற சமூக அமைப்புகள், இலக்கிய அமைப்புகள்,
சினிமா சங்கங்கள் வழங்கிய பல்வேறு பரிசுகளும் விருதுகளும்
தமிழ் சினிமா மற்றும் கலாசாரம் ஆகியவற்றுக்கு இவர் தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டி, முரசொலி அறக்கட்டளை இவருக்கு 'அண்ணா விருது'ம் ரூ.10,000/- ரொக்கமும் வழங்கியுள்ளது.
இயக்குநர் பாரதிராஜா அறிமுகப் படுத்திய நடிகர், நடிகையர்கள்.
சத்யஜித் (16 வயதினிலே) சுதாகர்
பட்டாளத்து விஜயன் நிழல்கள் ரவி
டைரக்டர் (ராபர்ட்) ராஜசேகர் கே. பாக்யராஜ்
டைரக்டர் ரா. சங்கரன் கவுண்டமணி
ஜனகராஜ் சந்திரசேகர்
கல்லாப்பெட்டி சிங்காரம் கே.கே. சௌந்தர்
ஷியாம் சுந்தர கார்த்திக்
கண்ணன் 'மண்வாசனை' பாண்டியன்
தியாகராஜன் லல்லு அலெக்ஸ்
தீபன் ராஜா (வெங்கடேஷ்)
டாக்டர் ராஜசேகர் மலேசியா வாசுதேவன்
தாசரதி ராஜா
வசீகரன் மனோஜ்
ராதிகா ரத்தி அக்னிஹோத்ரி
வடிவுக்கரசி உஷா
ராதா ரேவதி
அருணா விஜயசாந்தி
ரோகிணி சுபத்ரா
அனிதாபதன் ஸ்ரீலதா
லட்சுமிகலா ரஞ்சனி
ரேகா ஜென்ஸி
பானுப்ரியா கமலா காமேஷ்
அனுராதா வாசுதேவ் ரஞ்சிதா
உமா சிந்து
பிரியாமணி பாலகுரு
மணிவண்ணன கே. ரெங்கராஜ்
மனோபாலா ஜே. ராமு
சித்ரா லட்சுமணன் மனோகரன்
க. சந்திரசேகர் திலகர் மருது
நிவாஸ் கணேச பாண்டியன்
பி. கண்ணன் லதா ரஜினி காந்த்.

பாரதிராஜா பற்றி சுவையான சிறு குறிப்புகள்.
வேர்களை வெளிச்சமிட்டுக் காட்டிய கலைஞன். தமிழ் சினிமாவைப் புதிய திசைக்கு செலுத்திய இயக்குநர் பாரதிராஜாவின் பெர்சனல் பக்கங்கள்....
·         பாரதிராஜா அல்லிநகரத்தில் பிறந்தது 1941-ல் பெரிய சம்சாரிக் குடும்பம். அக்கா இரண்டு பேர், அண்ணன்கள் இருவர், ஒரு தம்பி, ஒரு தங்கை எனப் பெரிய குடும்பம். பெரிய மாயத்தேவர் – கருத்தம்மாவின் ஜந்தாவது வாரிசு!
·         சினிமாவுக்கு வருவதற்கு முன் `ஊர் சிரிக்கிறது’ `அதிகாரம்’ `சும்மா ஒரு கதை’ என நாடகங்கள் எழுதி திருவிழா காலங்களில் இயக்கி நடித்திருக்கிறார். பிறகு தான், புட்டண்ணா கனகலிடம் சினிமா கற்றார்!
·         சென்னையில் ஆரம்பத்தில் சேர்ந்து தங்கியிருந்த நண்பர்கள் இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ், கச்சேரித் தெருவில் சிறு வீட்டில் இருந்து இவர்களின் பயணம் தொடங்கியது. இப்பவும் கூடிப் பேசினால் அவர்களின் அனுபவங்கள் மேலே விரிந்து பரவும்!
·         இது வரை தமிழில் 31 படங்களும், தெலுங்கில் நான்கு படங்களும், இந்தியில் நான்கு படங்களும் இயக்கியிருக்கிறார் பாரதிராஜா!
·         பாரதிராஜா அறிமுகப்படுத்திய புதுமுகங்கள், பாக்யராஜ், ராதிகா, விஜயன், நிழல்கள் ரவி, கார்த்திக் ராதா, ரேவதி,பாபு, நெப்போலியன், ரஞ்சிதா என நீங்களும். அவரது உதவியாளர்கள் சினிமாவில் ஆதிக்கம் செய்த வரலாறும் அதிகம்!
·         சுடச்சுட சமைத்த நாட்டுக் கோழிக் குழம்புக்கு பாரதிராஜா அடிமை. நண்பர்களை ஞாயிற்றுக்கிழமை விருந்துக்கு அழைத்து உண்டு, பேசிச் சிரித்து மகிழ்வார்!
·         பாரதிராஜாவின் படைப்புலக வெற்றிக்கு தேசிய விருது, தமிழக அரசு விருது, ஆந்திர அரசு விருது, பத்மஸ்ரீ, கலைமாமணி, டாக்டர் பட்டம் என ஏராளமாகப் பெற்றிருக்கிறார்!
·         பாரதிராஜாவுக்கு அப்போது பிடித்த நடிகர் சிவாஜி, இப்போது ஆல் டைம் ஃபேவரைட் கமல் தான். இன்றைக்கும் வெளியிட்டால் பரபரப்பாக ஓடுகிற படமாக `16 வயதினிலே’ தான் இருக்கிறது!
·         மனைவி சந்திரலீலா, மாமன் மகள்தான், மனோஜ் கே.பாரதி, ஜனனி ஜ்ஸ்வர்யா என இரண்டு குழந்தைகள். ஜனனி திருமணமாகி சிங்கப்பூர் போய் விட மனோஜ் டைரக்டராகும் தீவிரத்தில் இருக்கிறார்!
·         பாரதிராஜாவின் படங்களில் அவருக்கே பிடித்தது `16 வயதினிலே’, `முதல் மரியாதை’, `வேதம் புதிது’, ஆத்ம திருப்தியாகப் பிடித்தது `காதல் ஓவியம்’, இனி எடுக்க இருக்கிற `அப்பனும் ஆத்தாளும்’ தான் உலக சினிமாவில் வைக்க வேண்டிய படம்  என நம்புகிறார் இயக்குநர்!
·         பாரதிராஜாவின் படங்களில் வெள்ளை உடை தரித்த பெண், சூர்யாகாந்திப் பூ, மலை அருவி, செம்மண், மாட்டு வண்டி, ஒற்றைப் பள்ளிக்கூடம், அதில் ஒற்றை வாத்தியார் கண்டிப்பாக இடம் பெறுவார்கள்!
·         புலிகள் தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்த இயக்குநர் பாரதிராஜா, ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை பாரதிராஜாவால் எடுக்க முடியும் என்று நம்பினார் பிரபாகரன். அதை இயக்குநரிடம் கேட்கவும் செய்தார். பாரதிராஜாவும் சம்மதம் சொன்னது வரலாறு!
·         எப்பவும் விரும்புகிற டிரெஸ் டி-ஷாட், ஜீன்ஸ் பேண்ட் சமீப காலமாக வெள்ளை ஜிப்பா, பேண்டைத் தேர்ந்தெடுக்கிறார்!
·         ரஷ்யா , அமெரிக்கா போன்ற நாடுகளின் அழைப்பின் பேரில் அங்கு சினிமாபற்றி வகுப்பு எடுத்து உரையாடி வந்திருக்கிறார் அல்லிநகரம் பாரதிராஜா!
·         `குற்றப் பரம்பரை’, `அப்பனும் ஆத்தாளும்’ என இரு படங்களின் திரைக்கதையை வடிவமைக்கிற வேலையில் தீவிரமாக இருக்கிறார். அநேகமாக அவரே பெரிய கேரக்டரில் நடித்துவிடுவார் எனப் பேசிக் கொள்கிறார்கள்!
·         அதிகம் வெளியில் தெரியாத விஷயம், சிறப்பாக ஓவியம் வரைவார். அதை நெருக்கமான நண்பர்களிடம் காட்டி மகிழ்வார். காட்சி அமைப்புகளை வரைந்துவைத்துக்கொள்கிற அளவுக்கு அவரது ஓவியம் நுட்பமானது!
·         1991 –ல் சிக்ரெட் புகைப்பதை நிறுத்தினார் பாரதிராஜா. நுரையீரல் பாதிக்கப்பட்டு. சிறு ஆபரேஷன் வரைக்கும் போனதுதான் அதற்குக் காரணம். இப்போது புகை இல்லாத உலகம் அவருடையது!
·         மத்திய அரசு, இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டி பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டீலும் அதைப் பெற்றுக் கொண்டு,ஒப்புதல்பெற்று கடிதம் எழுதினார்!
·         1986 –ல் தாஷ்கண்ட் படவிழாவில் `முதல் மரியாதை’ திரைப்படத்தை திரையிட்டார்கள். சப்டைட்டில் போட்டும் அந்தப் படத்தைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள் மக்கள். விழாவுக்குப் போயிருந்த ராஜ்கபூர், ரஷ்ய மொழியில் முழுக்க முழுக்க ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தார். பாராட்டினர் மக்கள். கண்கள் நனைந்தது பாரதிராஜாவுக்கு!
·         கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெ., என மூன்று முதல்வர்களிடமும் நெருங்கிய பழகியவர். எம்.ஜி.ஆர் அன்புடன் அழைப்பது `வாங்க டைரக்டரே’, கலைஞர் `என்னப்பா பாரதி’ ஜெ.... `மிஸ்டர் பாரதிராஜா’, அரசியலுக்கு அப்பாற்பட்டு நெருக்கமாக இருந்தார் பாரதிராஜா!
·         `16 வயதினிலே’ வில் ஆரம்பித்து `புதிய வார்ப்புக்கள்’ வரை பார்த்துவிட்டு எல்.வி.பிரசாத் தன்னை உதவி இயக்குநராக சேர்த்துகொள்ள முடியுமா என்று கேட்டதைத் தனது உச்சபட்ச கெளரவமாக எடுத்துக்கொள்வதாகச் சொல்வார் பாரதிராஜா!
·         பாரதிராஜாவைப் பாதித்த இயக்குநர்கள் ஸ்ரீதர், பாலசந்தர், பிடித்த இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், அகத்தியன், சேரன், பாலா, அமீர், பாலாஜி, சக்திவேல், வசந்தபாலன், வடக்கில் சாந்தாராமின் படைப்புக்கள்!
·         தன் அம்மாவின் பெயரில் எடுத்த `கருத்தம்மா’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, தன் தாயாரையே விருது வாங்கச் செய்தார் பாரதிராஜா. அந்தத் தாய் பெருமிதப்பட்டு மேடையிலேயே உணர்ச்சி வசப்பட்டது அருமையான நிகழ்வு!
·         நினைத்தால் தேனிக்குப் போய் அம்மா சமாதியில் உட்கார்ந்து தியானத்தில் இறங்கிவிடுவார் பாரதிராஜா. `அம்மா என்னை சின்ன வயதில் குளிக்கவெச்சு சாப்பாட்டு ஊட்டிவிட்டது அதையே அம்மா படுக்கையிலே கிடந்தபோது... நான் செய்து பெற்ற கடனை நிறைவேற்றினேன்’ என நெகிழ்வார் பாரதிராஜா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக