புதன், 11 ஜூலை, 2012

கவிஞர் வைரமுத்து பிற‌ந்த‌ நாள் ஜூலை 13,


வைரமுத்து (ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு இரு மகன்கள்,பெயர்கள் மதன் கார்க்கி, கபிலன்.
படைப்புகள்
கவிதைத் தொகுப்பு
வைகறை மேகங்கள்
சிகரங்களை நோக்கி
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
தமிழுக்கு நிறமுண்டு
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
இதனால் சகலமானவர்களுக்கும்
இதுவரை நான்
கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
பெய்யென பெய்யும் ம‌ழை
நேற்று போட்ட கோலம்
ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
ஒரு மெளனத்தின் சப்தங்கள்
நாவல்
தண்ணீர் தேசம்
கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
விருதுகள்
சாகித்ய அகாதமி விருது
சிறந்த பாடலாசிரியருக்கன தேசிய விருது (ஆறு முறை). விருது பெற்ற திரைப்படங்கள் (பாடல்கள்)
முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா)
ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை)
கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...)
சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)
கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)
தென்மேற்கு பருவக்காற்று (பாடல்:கள்ளிக்காட்டில் பிறந்த தாயே)
கலைமாமணி விருது (1990)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக