செவ்வாய், 8 மே, 2018

இயக்குநர் டி. ராஜேந்தர் பிறந்த நாள் மே 9, 1955 .


இயக்குநர் டி. ராஜேந்தர் பிறந்த நாள் மே 9, 1955 .

டி. ராஜேந்தர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குனரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.

விஜய டி. ராஜேந்தர்
பிறப்பு மே 9, 1955 (அகவை 63)
மயிலாடுதுறை
வேறு பெயர் டி. ஆர்
நடிப்புக் காலம் 1980 லிருந்து தற்போது வரை
துணைவர் உசா ராஜேந்தர்
பிள்ளைகள் சிலம்பரசன்.,குறளரசன் .இலக்கியா.

அரசியல் வாழ்க்கை

திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை
பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

2004ல் திமுகவிலிருந்து விலகி
அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2013 ஆம் ஆண்டு இறுதியில், லட்சிய திமுக கட்சியை கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.

திரைப்படங்கள்

இவர் இயக்கி நடித்த சில படங்கள்.
உயிருள்ளவரை உஷா
மைதிலி என்னைக் காதலி
தங்கைக்கோர் கீதம்
உறவைக்காத்த கிளி
தாய் தங்கை பாசம்
ஒரு தாயின் சபதம்
சொன்னால் தான் காதலா
மோனிசா என் மோனலிசா
15வது மக்களவைக்கு நடந்த தேர்தலில்
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 8,211 வாக்குகள் பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக