நடிகர் அர்ஜூன் பிறந்த நாள் - ஆகஸ்ட் 15 , 1962.
அர்ஜூன் (பிறப்பு - ஆகஸ்டு 15 , 1962 ) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ் , தெலுங்கு ,
கன்னடம் , மலையாளம் , மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.
இவர் நடித்துள்ள படங்கள் சில
முதல்வன்
ரிதம்
குருதிப்புனல்
ஜென்டில்மேன்
ஜெய்ஹிந்த்
நன்றி
சேவகன்
வாத்தியார்
மருதமலை
ஏழுமலை
மனைவி ஒரு மாணிக்கம்
யார்
சுயம்வரம்
வேதம்
கொண்டாட்டம்
கோகுலம்
மங்காத்தா
கர்ணா
தாயின் மணிக்கொடி
ஒற்றன்
கடல்
மூன்று பேர் மூன்று காதல்
பிரசாந்த் (கன்னடத் திரைப்படம்)
விருதுகள்
கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது. (பிரசாந்த் என்ற கன்னடத் திரைப்படத்திற்காக)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக