திங்கள், 20 ஆகஸ்ட், 2018

நடிகை ராதிகா பிறந்த நாள் ஆகஸ்ட் 21, 1963.


நடிகை ராதிகா பிறந்த நாள் ஆகஸ்ட் 21, 1963.

இராதிகா , (பிறப்பு: ஆகத்து 21, 1963) தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
இலங்கையில் கொழும்பு நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும் , அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா , திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.
ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான
சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.


இராதிகா நடித்துள்ள சில திரைப்படங்கள்

கிழக்கே போகும் ரெயில்
நிறம் மாறாத பூக்கள்
இன்று போய் நாளை வா
போக்கிரி ராஜா
மூன்று முகம்
ரெட்டை வால் குருவி
பூந்தோட்ட காவல்காரன்
தைப் பொங்கல்
ஊர்க்காவலன்
கிழக்குச் சீமையிலே
வீரபாண்டியன்
தெற்கத்தி கள்ளன்
சிப்பிக்குள் முத்து
நல்லவனுக்கு நல்லவன்
தாவணி கனவுகள்
பசும் பொன்
நானே ராஜா நானே மந்திரி
தூங்காதே தம்பி தூங்காதே
கேளடி கண்மணி
நினைவுச் சின்னம்
பவித்ரா
ராசைய்யா
வீரத்தாலாட்டு
சூர்ய வம்சம்
ஜீன்ஸ்
தாஜ்மகால்
அமர்க்களம்
பூமகள் ஊர்வலம்
ரோஜா கூட்டம்
கண்ணா மூச்சி ஏனடா
பந்தயம்
சகுனி (தமிழ்த் திரைப்படம்)
இரண்டாம் உலகம் (திரைப்படம்)
அமர்க்களம்
இராதிகா நடித்துள்ள சில தொலைக்காட்சி தொடர்கள்
சித்தி
அண்ணாமலை
செல்வி
அரசி
செல்லமே
வாணி ராணி

1 கருத்து:

  1. Jammy Monkey Slots - Casino - JTM Hub
    Jammy Monkey 상주 출장샵 Slots Jammy Monkey Casino. 777 Casino Way, Macau, Macau. 의정부 출장샵 Phone: +1 (0) 870 908060. More Info. 용인 출장마사지 Game Description: Jammy Monkey Slot Game 익산 출장안마 is one 계룡 출장샵 of the newest online slot games available to

    பதிலளிநீக்கு