புதன், 26 செப்டம்பர், 2018

இசை அமைப்பாளர் புகழேந்தி பிறந்த தினம் செப்டம்பர் 27, 1929.


இசை அமைப்பாளர் புகழேந்தி பிறந்த தினம் செப்டம்பர் 27, 1929.

புகழேந்தி (செப்டம்பர் 27, 1929 – பிப்பிரவரி 27, 2005) என்பவர் திரைப்பட இசை அமைப்பாளர். தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 600 படங்களுக்கு இசை அமைத்தார்.
திருவனந்தபுரத்தில் பிறந்த புகழேந்தியின் இயற்பெயர் வேலப்பன் நாயர். தந்தை கேசப்பிள்ளை, தாய் சானகி அம்மாள். புகழேந்தியின் இசை ஆசிரியர் எம்.பி.சிவம் ஆவார். புகழ் பெற்ற திரைப்பட இசை அமைப்பாளர் கே. வி. மகாதேவனிடம் சென்று எம்.பி.சிவம் தம் சீடர் புகழேந்தியை அறிமுகம் செய்து வைத்தார். கே. வி. மகாதேவன் அவர்களிடம் புகழேந்தி உதவி இசை அமைப்பாளராக 250 படங்களில் பணியாற்றினார். முதன் முதலாக முதலாளி என்ற மலையாளப் படத்துக்கு இவர் இசை அமைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக