ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

நடிகர் சிவாஜி கணேசன் : Sivaji Ganesan; பிறந்த தினம் அக்டோபர் 1 , 1927


நடிகர் சிவாஜி கணேசன்   : Sivaji Ganesan; பிறந்த தினம்  அக்டோபர் 1 , 1927 

சிவாஜி கணேசன் ( ஆங்கிலம் : Sivaji Ganesan; அக்டோபர் 1 , 1927 - ஜூலை 21 , 2001 ) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர்,
பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.


வாழ்க்கைக் குறிப்பு

'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், இராம்குமார் பிரபு மற்றும்; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.
திரைப்பட வாழ்க்கை
முதன்மை கட்டுரை: சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார் , அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது
தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு
ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு
மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும்.
நடிகர் திலகம் , நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகரா , வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை.
இராஜராஜ சோழன் , கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர் , வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்
கூண்டுக்கிளி திரைப்படத்தில் சிவாஜி மற்றும் எம் ஜி ஆர்
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் "பாசமலர் ", " பாவ மன்னிப்பு ", "பார்த்தால் பசி தீரும்", " வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன்
மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்.


அரசியல் வாழ்க்கை

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

புகழ்
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசனின் சிலை
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் ( கெய்ரோ ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
கலைமாமணி விருது (1962 - 1963)
பத்ம ஸ்ரீ விருது, 1966
பத்ம பூஷன் விருது, 1984
செவாலியர் விருது , 1995
தாதாசாகெப் பால்கே விருது , 1996
1962இல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது.

நடித்த திரைப்படங்கள்

முதன்மை கட்டுரை: சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்

சிவாஜி கணேசன் 275 தமிழ் திரைப்படங்களிலும், 10 தெலுங்கு திரைப்படங்களிலும், 2 இந்தி திரைப்படங்களிலும், 1 மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவை தவிர 19 திரைப்படங்களில் கௌரவ நடிகராகத் தோன்றி நடித்துள்ளார்.
உள்ளடக்கம்
சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
1950–1959
1960–1969
1970–1979
1980–1989
1990–1999
நடித்த திரைப்படங்கள்
1950–1959
வரிசை எண்
வெளியான நாள் திரைப்படம்
1 17. அக்டோபர் 1952 பராசக்தி
2 27. திசம்பர் 1952 பணம்
3 14. சனவரி 1953 பரதேசி
4 7. பெப்ரவரி 1953 பூங்கோதை
5 10. சூலை 1953 திரும்பிப் பார்
6 24. சூலை 1953 அன்பு
7 5. நவம்பர் 1953 கண்கள்
8 13. நவம்பர் 1953 பெம்புடு கொடுகு
9 4. திசம்பர் 1953 மனிதனும் மிருகமும்
10 3. மார்ச் 1954 மனோகரா
11 9. ஏப்ரல் 1954 இல்லற ஜோதி
12 13. ஏப்ரல் 1954 அந்த நாள்
13 13. ஏப்ரல் 1954 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
14 3. சூன் 1954 மனோகரா
15 3. சூன் 1954 மனோகர்
16 3. சூலை 1954 துளி விஷம்
17 26. ஆகத்து 1954 கூண்டுக்கிளி
18 26. ஆகத்து 1954 தூக்குத் தூக்கி
19 9. திசம்பர் 1954 எதிர்பாராதது
20 13. சனவரி 1955 காவேரி
21 12. மார்ச் 1955 முதல் தேதி
22 14. ஏப்ரல் 1955 உலகம் பலவிதம்
23 26. ஆகத்து 1955 மங்கையர் திலகம்
24 13.11.1955 கோடீஸ்வரன்
25 13. நவம்பர் 1955 கள்வனின் காதலி
26 14. சனவரி 1956 நான் பெற்ற செல்வம்
27 14. சனவரி 1956 நல்ல வீடு
28 25. சனவரி 1956 நானே ராஜா
29 3. பெப்ரவரி 1956 தெனாலி ராமன்
30 17. பெப்ரவரி 1956 பெண்ணின் பெருமை
31 25. பெப்ரவரி 1956 ராஜா ராணி
32 20. சூன் 1956 அமரதீபம்
33 21. செப்டம்பர் 1956 வாழ்விலே ஒரு நாள்
34 1. நவம்பர் 1956 ரங்கோன் ராதா
35 11. சனவரி 1957 பராசக்தி
36 27. பெப்ரவரி 1957 மக்களைப்பெற்ற மகராசி
37 12. ஏப்ரல் 1957 வணங்காமுடி
38 10. மே 1957 புதையல்
39 17. மே 1957 மணமகன் தேவை
40 29. சூன் 1957 தங்கமலை ரகசியம்
41 21. செப்டம்பர் 1957 ராணி லலிதாங்கி
42 22. அக்டோபர் 1957 அம்பிகாபதி
43 27. திசம்பர் 1957 பாக்கியவதி
44 11. சனவரி 1958 பொம்மல பெல்லி
45 7. பெப்ரவரி 1958 உத்தம புத்திரன்
46 14. மார்ச் 1958 பதிபக்தி
47 14. ஏப்ரல் 1958 சம்பூர்ண ராமாயணம்
48 3. மே 1958 பொம்மை கல்யாணம்
49 4. சூலை 1958 அன்னையின் ஆணை
50 15. ஆகத்து 1958 சாரங்கதாரா
51 3. அக்டோபர் 1958 சபாஷ் மீனா
52 7. நவம்பர் 1958 காத்தவராயன்
53 10. சனவரி 1959 தங்கப்பதுமை
54 7. மார்ச் 1959 நான் சொல்லும் ரகசியம்
55 16.-5.1959 வீரபாண்டிய கட்டபொம்மன்
56 21. ஆகத்து 1959 மரகதம்
57 30. அக்டோபர் 1959 அவள் யார்
58 31. அக்டோபர் 1959 பாகப்பிரிவினை


1960–1969

59 14. சனவரி 1960 இரும்புத்திரை
60 4. மார்ச் 1960 குறவஞ்சி
61 13. ஏப்ரல் 1960 தெய்வப்பிறவி
62 27. மே 1960 ராஜபக்தி
63 25. சூன் 1960 படிக்காத மேதை
64 19. அக்டோபர் 1960 பாவை விளக்கு
65 19. அக்டோபர் 1960 பெற்ற மனம்
66 31. திசம்பர் 1960 விடிவெள்ளி
67 16. மார்ச் 1961 பாவ மன்னிப்பு
68 21. ஏப்ரல் 1961 புனர் ஜென்மம்
69 27. மே 1961 பாசமலர்
70 1. சூலை 1961 எல்லாம் உனக்காக
71 1. சூலை 1961 ஸ்ரீ வள்ளி
72 24. ஆகத்து 1961 மருதநாட்டு வீரன்
73 9. செப்டம்பர் 1961 பாலும் பழமும்
74 7. நவம்பர் 1961 கப்பலோட்டிய தமிழன்
75 14. சனவரி 1962 பார்த்தால் பசி தீரும்
76 9. பெப்ரவரி 1962 நிச்சய தாம்பூலம்
77 30. மார்ச் 1962 வளர் பிறை
78 14. ஏப்ரல் 1962 படித்தால் மட்டும் போதுமா
79 26. மே 1962 பலே பாண்டியா
80 7. சூலை 1962 வடிவுக்கு வளைகாப்பு
81 14. செப்டம்பர் 1962 செந்தாமரை
82 27. அக்டோபர் 1962 பந்த பாசம்
83 23. நவம்பர் 1962 ஆலயமணி
84 9. பெப்ரவரி 1963 சித்தூர் ராணி பத்மினி
85 1. மார்ச் 1963 அறிவாளி
86 29. மார்ச் 1963 இருவர் உள்ளம்
87 12. ஏப்ரல் 1963 நான் வணங்கும் தெய்வம்
88 7. சூன் 1963 குலமகள் ராதை
89 12. சூலை 1963 பார் மகளே பார்
90 12. ஆகத்து 1963 குங்குமம்
91 14. செப்டம்பர் 1963 இரத்தத் திலகம்
92 20. செப்டம்பர் 1963 கல்யாணியின் கணவன்
93 15. நவம்பர் 1963 அன்னை இல்லம்
94 14. சனவரி 1964 கர்ணன்
95 3. ஏப்ரல் 1964 பச்சை விளக்கு
96 12. சூன் 1964 ஆண்டவன் கட்டளை
97 18. சூலை 1964 கை கொடுத்த தெய்வம்
98 12. செப்டம்பர் 1964 புதிய பறவை
99 3. நவம்பர் 1964 முரடன் முத்து
100 3. நவம்பர் 1964 நவராத்திரி
101 14. சனவரி 1965 பழநி
102 19. பெப்ரவரி 1965 அன்புக்கரங்கள்
103 22. ஏப்ரல் 1965 சாந்தி
104 31. சூலை 1965 திருவிளையாடல்
105 10. திசம்பர் 1965 நீலவானம்
106 26. சனவரி 1966 மோட்டார் சுந்தரம் பிள்ளை
107 19. ஆகத்து 1966 மகாகவி காளிதாஸ்
108 3. செப்டம்பர் 1966 சரஸ்வதி சபதம்
109 11. நவம்பர் 1966 செல்வம்
110 14. சனவரி 1967 கந்தன் கருணை
111 2. மார்ச் 1967 நெஞ்சிருக்கும் வரை
112 14. ஏப்ரல் 1967 பேசும் தெய்வம்
113 19. மே 1967 தங்கை
114 16. சூன் 1967 பாலாடை
115 28. சூலை 1967 திருவருட்செல்வர்
116 1. நவம்பர் 1967 இரு மலர்கள்
117 1. நவம்பர் 1967 ஊட்டி வரை உறவு
118 16. பெப்ரவரி 1968 திருமால் பெருமை
119 11. ஏப்ரல் 1968 ஹரிச்சந்திரா
120 12. ஏப்ரல் 1968 கலாட்டா கல்யாணம்
121 7. சூன் 1968 என் தம்பி
122 27. சூலை 1968 தில்லானா மோகனாம்பாள்
123 21. அக்டோபர் 1968 எங்க ஊர் ராஜா
124 15. நவம்பர் 1968 லட்சுமி கல்யாணம்
125 29. நவம்பர் 1968 உயர்ந்த மனிதன்
126 1. சனவரி 1969 அன்பளிப்பு
127 28. மார்ச் 1969 தங்கச் சுரங்கம்
128 1. மே 1969 காவல் தெய்வம்
129 14. சூன் 1969 குருதட்சணை
130 27. சூன் 1969 அஞ்சல் பெட்டி 520
131 8. செப்டம்பர் 1969 நிறைகுடம்
132 5. செப்டம்பர் 1969 தெய்வமகன்
133 10. அக்டோபர் 1969 திருடன்
134 10. நவம்பர் 1969 சிவந்த மண்


1970–1979

135 14. சனவரி 1970 எங்க மாமா
136 6. பெப்ரவரி 1970 தார்தி
137 20. பெப்ரவரி 1970 விளையாட்டுப் பிள்ளை
138 11. ஏப்ரல் 1970 வியட்நாம் வீடு
139 27. சூன் 1970 எதிரொலி
140 15. ஆகத்து 1970 ராமன் எத்தனை ராமனடி ர
141 29. அக்டோபர் 1970 எங்கிருந்தோ வந்தாள்
142 29. அக்டோபர் 1970 சொர்க்கம்
143 27. நவம்பர் 1970 பாதுகாப்பு
144 14. சனவரி 1971 இரு துருவம் ர
145 6. பெப்ரவரி 1971 தங்கைக்காக
146 5. மார்ச் 1971 அருணோதயம்
147 26. மார்ச் 1971 குலமா குணமா
148 14. ஏப்ரல் 1971 பிராப்தம்
149 14. ஏப்ரல் 1971 சுமதி என் சுந்தரி ம
150 3. சூலை 1971 சவாலே சமாளி
151 22. சூலை 1971 தேனும் பாலும்
152 14. ஆகத்து 1971 மூன்று தெய்வங்கள்
153 18. அக்டோபர் 1971 பாபு
154 26. சனவரி 1972 ராஜா
155 11. மார்ச் 1972 ஞான ஒளி அ
156 6. மே 1972 பட்டிக்காடா பட்டணமா
157 15. சூலை 1972 தர்மம் எங்கே
158 26. ஆகத்து 1972 தவப்புதல்வன்
159 29. அக்டோபர் 1972 வசந்த மாளிகை
160 7. திசம்பர் 1972 நீதி
161 24. மார்ச் 1973 பாரத விலாஸ் க
162 31. மார்ச் 1973 ராஜ ராஜ சோழன்
163 15. சூன் 1973 பொன்னூஞ்சல்
164 15. சூலை 1973 எங்கள் தங்க ராஜா
165 25. அக்டோபர் 1973 கௌரவம்
166 7. திசம்பர் 1973 மனிதரில் மாணிக்கம்
167 22. திசம்பர் 1973 ராஜபார்ட் ரங்கதுரை ர
168 26. சனவரி 1974 சிவகாமியின் செல்வன்
169 7. மார்ச் 1974 தாய்
170 14. ஏப்ரல் 1974 வாணி ராணி
171 1. சூன் 1974 தங்கப்பதக்கம் எ ச
172 21. ஆகத்து 1974 என் மகன்
173 13. நவம்பர் 1974 அன்பைத்தேடி
174 11. சனவரி 1975 மனிதனும் தெய்வமாகலாம்
175 11. ஏப்ரல் 1975 அவன்தான் மனிதன்
176 2. ஆகத்து 1975 மன்னவன் வந்தானடி
177 29. சூலை 1975 அன்பே ஆருயிரே
178 2. நவம்பர் 1975 டாக்டர் சிவா
179 2. நவம்பர் 1975 வைர நெஞ்சம்
180 6. திசம்பர் 1975 பாட்டும் பரதமும்
181 26. சனவரி 1976 உனக்காக நான்
182 10. ஏப்ரல் 1976 கிரஹபிரவேசம்
183 6. மே 1976 சத்யம்
184 25. சூன் 1976 உத்தமன்
185 22. அக்டோபர் 1976 சித்ரா பௌர்ணமி
186 15. திசம்பர் 1976 ரோஜாவின் ராஜா
187 14. சனவரி 1977 அவன் ஒரு சரித்திரம்
188 26. சனவரி 1977 தீபம்
189 28. மே 1977 இளைய தலைமுறை
190 7. அக்டோபர் 1977 நாம் பிறந்த மண்
191 10. நவம்பர் 1977 அண்ணன் ஒரு கோயில்
192 26. சனவரி 1978 அந்தமான் காதலி
193 4. மார்ச் 1978 தியாகம்
194 19. மார்ச் 1978 என்னைப்போல் ஒருவன்
195 12. மே 1978 புண்ணிய பூமி
196 16. சூன் 1978 ஜெனரல் சக்ரவர்த்தி
197 27. அக்டோபர் 1978 தச்சோலி அம்பு
198 30. அக்டோபர் 1978 பைலட் பிரேம்நாத்
199 16. திசம்பர் 1978 ஜஸ்டிஸ் கோபிநாத்
200 27. சனவரி 1979 திரிசூலம்
201 6. ஏப்ரல் 1979 கவரிமான்
202 3. மே 1979 நல்லதொரு குடும்பம்
203 21. சூலை 1979 இமயம்
204 10. ஆகத்து 1979 நான் வாழவைப்பேன் ர
205 19. அக்டோபர் 1979 பட்டாகத்தி பைரவன்
206 8. திசம்பர் 1979 வெற்றிக்கு ஒருவன்


1980–1989

207 26. சனவரி 1980 ரிஷிமூலம் ச
208 26. ஏப்ரல் 1980 தர்மராஜா
209 16. மே 1980 எமனுக்கு எமன்
210 14. சூன் 1980 ரத்த பாசம்
211 6. நவம்பர் 1980 விஸ்வரூபம்
212 14. சனவரி 1981 மோகனப் புன்னகை
213 21. பெப்ரவரி 1981 சத்ய சுந்தரம்
214 24. ஏப்ரல் 1981 அமரகாவியம்
215 1. மே 1981 கல்தூண்
216 3. சூலை 1981 லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
217 22. ஆகத்து 1981 மாடி வீட்டு ஏழை
218 26. அக்டோபர் 1981 கீழ்வானம் சிவக்கும்
219 26. சனவரி 1982 ஹிட்லர் உமாநாத்
220 5. பெப்ரவரி 1982 ஊருக்கு ஒரு பிள்ளை
221 6. பெப்ரவரி 1982 வா கண்ணா வா
222 25. பெப்ரவரி 1982 கருடா சௌக்கியமா
223 14. ஏப்ரல் 1982 சங்கிலி
224 7. மே 1982 வசந்தத்தில் ஒரு நாள்
225 21. மே 1982 தீர்ப்பு
226 24. சூன் 1982 நிவுரு கப்பின நிப்பு
227 3. செப்டம்பர் 1982 தியாகி
228 1. அக்டோபர் 1982 துணை
229 14. நவம்பர் 1982 பரீட்சைக்கு நேரமாச்சு
230 14. நவம்பர் 1982 ஊரும் உறவும்
231 10. திசம்பர் 1982 நெஞ்சங்கள்
232 14. சனவரி 1983 பெஜவாட பெபுலி
233 26. சனவரி 1983 நீதிபதி
234 12. ஏப்ரல் 1983 இமைகள்
235 16. சூன் 1983 சந்திப்பு
236 12. ஆகத்து 1983 சுமங்கலி
237 24. செப்டம்பர் 1983 மிருதங்க சக்கரவர்த்தி
238 4. நவம்பர் 1983 வெள்ளை ரோஜா (திரைப்படம்)
239 14. சனவரி 1984 திருப்பம்
240 17. பெப்ரவரி 1984 சிரஞ்சீவி
241 16. மார்ச் 1984 தராசு
242 14. ஏப்ரல் 1984 வாழ்க்கை
243 26. மே 1984 சரித்திர நாயகன்
244 30. சூன் 1984 சிம்ம சொப்பனம்
245 15. ஆகத்து 1984 எழுதாத சட்டங்கள்
246 14. செப்டம்பர் 1984 இருமேதைகள்
247 14. செப்டம்பர் 1984 தாவணிக் கனவுகள்
248 23. அக்டோபர் 1984 வம்ச விளக்கு
249 26. சனவரி 1985 பந்தம்
250 8. மார்ச் 1985 நாம் இருவர்
251 23. மார்ச் 1985 படிக்காத பண்ணையார்
252 13. ஏப்ரல் 1985 நீதியின் நிழல்
253 3. மே 1985 நேர்மை
254 15. ஆகத்து 1985 முதல் மரியாதை ம
255 20. செப்டம்பர் 1985 ராஜரிஷி வ ம
256 11. நவம்பர் 1985 படிக்காதவன்
257 10. சனவரி 1986 சாதனை
258 26. சனவரி 1986 மருமகள்
259 7. மார்ச் 1986 ஆனந்தக் கண்ணீர்
260 11. ஏப்ரல் 1986 விடுதலை இ ர
261 16. சூலை 1986 தாய்க்கு ஒரு தாலாட்டு
262 1. நவம்பர் 1986 லட்சுமி வந்தாச்சு
263 12. திசம்பர் 1986 மண்ணுக்குள் வைரம்
264 14. சனவரி 1987 ராஜ மரியாதை
265 26. சனவரி 1987 குடும்பம் ஒரு கோவில்
266 6. மார்ச் 1987 முத்துக்கள் மூன்று
267 14. ஏப்ரல் 1987 வீரபாண்டியன்
268 16. மே 1987 அன்புள்ள அப்பா
269 ??.05.1987 விஸ்வநாத நாயக்குடு
270 14. ஆகத்து 1987 அக்னி புத்ருடு
271 28. ஆகத்து 1987 கிருஷ்ணன் வந்தான்
272 28. ஆகத்து 1987 ஜல்லிக்கட்டு ர
273 20. நவம்பர் 1987 தாம்பத்யம்
274 2. செப்டம்பர் 1988 என் தமிழ் என் மக்கள்
275 10. திசம்பர் 1988 புதிய வானம்

1990–1999

276 11. சனவரி 1991 ஞானப் பறவை சி
277 13. மார்ச் 1992 நாங்கள் சத
278 23. மே 1992 சின்னமருமகள்
279 14. ஆகத்து 1992 முதல் குரல்
280 25. அக்டோபர் 1992 தேவர் மகன் ப
281 13. நவம்பர் 1993 பாரம்பரியம்
282 14. ஏப்ரல் 1995 பசும்பொன் து த
283 4. சூலை 1997 ஒன்ஸ்மோர் ச
284 13. செப்டம்பர் 1997 ஒரு யாத்ராமொழி
285 28. ஆகத்து 1998 என் ஆசை ராசாவே
286 15. சனவரி 1999 மன்னவரு சின்னவரு
287 10. ஏப்ரல் 1999 படையப்பா பட தந்
288 17. செப்டம்பர் 1999 பூப்பறிக்க வருகிறோம்

கௌரவ நடிகராக நடித்த திரைப்படங்கள்
வரிசை எண்
வெளியான நாள் திரைப்படம்
01 3. ஆகத்து 1956 மர்ம வீரன் ம ஸ்
02 31. சனவரி 1958 எங்கள் குடும்பம் பெரிசு
03 14. ஏப்ரல் 1959 தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
04 1. சூலை 1960 பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்யம்
05 26. சூலை 1960 மக்கள ராஜ்ய பத் பி
06 29. சூலை 1960 குழந்தைகள் கண்ட குடியரசு
08 1. பெப்ரவரி 1964 ராமதாசு வி ஃப
09 3. ஏப்ரல் 1964 ஸ்கூல் மாஸ்டர்
10 26. ஆகத்து 1966 தாயே உனக்காக ஸ்ரீ
11 25. மார்ச் 1973 பங்காரு பாபு
12 5. சூலை 1973 பக்த துக்காராம்
13 31. சனவரி 1975 சினிமா பைத்தியம்
14 12. ஆகத்து 1977 ஜீவன தீரளு ம கம்
15 25. ஆகத்து 1977 சாணக்ய சந்திரகுப்த
16 14. ஏப்ரல் 1978 வாழ்க்கை அலைகள்
17 12. ஏப்ரல் 1980 நட்சத்திரம் ஸ்ரீ சா
18 14. சனவரி 1983 உருவங்கள் மாறலாம்
19 00.00.1996 ஸ்வர்ணசாமரம் வி ஃப

தெலுங்கு திரைப்படங்கள்

பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953) .... மோகன் வேடம்
தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)
பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
ராமதாசு (தெலுங்கு) (1964)
பங்காரு பாபு (தெலுங்கு) (1972)
பக்த துகாரம் (தெலுங்கு) (1973) .... சிவாஜி
சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
மலையாளத் திரைப்படங்கள்
ஒரு யாத்ர மொழி (மலையாளம்) (1997)


சிவாஜி 25
சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...
* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
* தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
* விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!
* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!
* கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!



சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை !

“இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.
அவரது நடிப்பை மிகை நடிப்பு என்று விமரிசிப்பவர்கள் கூட சிவாஜியின் திரையுலகச் சாதனையை மறுப்பதில்லை. பொதுவில் அவரது வாழ்க்கையைப் பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் அரங்கில் பிழைக்கத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார்.
ஆனால் அவரது சமகால வரலாறும், அவரது திரைப்படங்களும், அதில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களும், அவரால் உருவாக்கப்பட்ட நடிப்பு பாணியும், ஒரு நட்சத்திரமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவர் செய்த முயற்சிகளும், அதையொட்டி மாறிய அவரது அரசியல் வாழ்க்கையும், ‘இமேஜ்’ கரைந்து போன பிற்காலத்தில் அவர் நடித்த கேவலமான படங்களும், வளர்ப்பு மகன் திருமணத்தில் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதரைப் போன்று பங்கேற்றதும், 80 – களின் இறுதியில் வேறு வழியின்றி அரசியல் துறவறம் மேற்கொண்டதும் – நமக்கு வேறு ஒரு மதிப்பீட்டைக் காண்பிக்கின்றன.
அவை சிவாஜி பற்றிய பாராட்டுரைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதோடு தவறு என்பதையும் தெரிவிக்கின்றன. கூடவே திராவிட இயக்கங்களின் அரசியலையும் – அதையொட்டிய திரையுலகத்தையும், அவையிரண்டின் வளர்ச்சியையும் – சமரசத்தையும் அதிலிருந்து பிரிக்க முடியாத சிவாஜி எனும் கலைஞனின் வாழ்க்கையையும் நமக்கு புரிய வைக்கின்றன.


பராசக்தி கால சமூகப் பின்னணி!
‘பராசக்தி’ தயாரிப்பளாருக்கு பண உதவி செய்த ஏ.வி.எம் செட்டியாருக்கு, புதுமுகமான சிவாஜியின் நடிப்பு பற்றி நம்பிக்கையில்லை. அதையும் மீறி கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனமெழுத 1952 – இல் வெளியான இப்படம் பெரும் வெற்றியடைந்தது. மேடை நாடகங்களில் கணீரென வசனம் பேசிக் கொண்டிருந்த சிவாஜிக்கு இப்பட வாய்ப்பு தற்செயலாக கிடைத்திருந்தாலும், பராசக்தியின் வெற்றிக்குத் தேவைப்பட்ட அவசியமான சூழ்நிலைகள் அப்போது உருவாகியிருந்தன.
அன்றைய திரையுலகம் பாட்டிலிருந்து வசனத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. புராணக் கதைகளில் சிக்கியிருந்த திரைக்கதை, பார்ப்பனியத்தின் அநீதியை எடுத்துரைக்கும் சமூக நோக்கம் கொண்டதாக விரிவடைய ஆரம்பித்திருந்தது. மவுசிழந்த தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா போன்ற நட்சத்திரங்களுக்குப் பதிலாக, திராவிட இயக்கக் கலைஞர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர்.
கலையுலகின் இம்மாற்றத்திற்கு முன்பாகவே அரசியல் உலகமும் மாறத் துவங்கியிருந்தது. காங்கிரசின் மேட்டுக்குடி நலனுக்கான அரசியல் பின்தங்கி, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு முன்னணிக்கு வந்தது. இன்னொரு புறம் மொழிவழி மாநிலங்களுக்கான போராட்டப் பின்னணியில் திராவிட இயக்கமும் வளர ஆரம்பித்திருந்தது. மொழி – இனப் பெருமையை வைத்து, சாமானிய மக்களின் குரலாக உருவெடுத்து, விரைவிலேயே தமிழ் மக்களின் பிரதிநிதியாக இவ்வியக்கம் தன்னை முன்னிருத்திக் கொண்டது. அதற்கு அவ்வியக்கத் தலைவர்கள் தமது பிரச்சாரத்தை எளிய வடிவில் மக்களிடம் கொண்டு சென்றது ஒரு முக்கியமான காரணமாகும்.
திராவிட இயக்கமும் திரைப்பட முதலாளிகளும் !
1967 – இல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் வரை முதன்மையான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகளை அபாயமாகக் கருதிய முதலாளிகள், திராவிட இயக்கத்தை தமக்கு சாதகமானது என்று சரியாகவே கருதினர். சமூக அரங்கில் வரவேற்பைப் பெற்றிருந்த திராவிட இயக்க படைப்புக்களை திரையுலகில் ‘ஸ்பான்சர்’ செய்வதற்கு முதலாளிகள் தயாராயினர். இரு பிரிவினரும் தமது அரசியல் நலனைக் காப்பாற்றிக் கொண்டு பண ஆதாயம் பெறுவது உறுதி செய்யப்பட்டது.
அப்போதே அண்ணாவும், கருணாநிதியும் தமது வசனங்களுக்காக ஆயிரக்கணக்கில் ஊதியம் பெற்றனர். சிவாஜி தவிர எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.இரேசேந்திரன், கே.ஆர்.ராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன் போன்ற திராவிட இயக்க நடிகர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர். 47 – க்குப் பின் பிரச்சினையின்றி தனது படத்தில் பாரதி பாடலைச் சேர்த்த ஏ.வி.எம். செட்டியார் போன்ற முதலாளிகள் தயாரிப்பாளரானார்கள். ‘பராசக்தி’ காலப் படங்களில் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூகப் பிரச்சினைகளும் வீரம் – காதல் – கற்பு – பாசம் போன்ற ‘தமிழ் நெறி’களின் பின்னணியில் வெளிப்பட்டன. அந்தத் ‘தமிழ் நெறி’ அற்ப உணர்வாகவும், இனப்பெருமை சவடாலாகவும் சீரழிய அதிக காலம் ஆகவில்லை. அதுவே திராவிட இயக்கத்தின் அரசியல் வழிமுறையாகவும் உறுதியானது.

நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி !
இதனிடையே சிவாஜியின் சிம்மக்குரல் கர்ஜனையில் பணம், மனோகரா, இல்லற ஜோதி போன்ற படங்கள் வெளிவந்தன. இவை அவரது பாணி நடிப்பு – வசனமுறை உருவாவதற்கும், சிவாஜி என்ற நட்சத்திரம் உதிப்பதற்கும் அடித்தளமிட்டன. 50 -களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார் என்ற நிலை மாறி, 60 – களில் சிவாஜிக்கு ஏற்ற கதைகள் எழுதுவது தொடங்கியது. அப்போது அவர் ‘இமேஜ்’ முழுமையடைந்த ஒரு உயர் நட்சத்திரமாகிவிட்டார்.
அவரது ‘இமேஜூ’க்குப் பொருத்தமான, அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றியே ஏனைய நடிகர்கள், ஒலி, ஒளி, பாடல், இசை, இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர், ரஜினி, அமிதாப் தொடங்கி ஹாலிவுட்டின் நடிகர்கள் வரை அனைத்து ‘சூப்பர் ஸ்டார்’ களுக்கும் இதுவே இலக்கணம்.
எம்.ஜி.ஆர் – ரஜனியின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப் பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். கமலஹாசனுககு ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்ட கதையும், வித்தியாசமான மேக் – அப்பும், மணிரத்தினம் – ஷங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை – தனது நடிப்பாற்றலால் – தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.
இத்தகைய நட்சத்திர நடிகர்கள், தமது ஒரு சில படங்களின் வெற்றியை வைத்து, வெற்றி பெரும் கதை, மக்களின் ரசனை, தமது திறமையின் மகிமை போன்றவை இன்னதுதான் என தமக்குத்தானே தீர்மானிக்கின்றனர். உலகமே தம்மை மேதைகளாக மதிப்பதாகவும் கருதிக் கொள்கின்றனர்.
திரையுலகில் திறமையும் – சமூக நோக்கமும் கொண்டவர்கள் நுழைய முடியாமல் இருப்பதும், இருந்தால் ஒழிக்கப்படுவதும் மேற்படி நட்சத்திர முறையின் முக்கிய விளைவுகளாகும். திரையுலகத்தைக் கோடிகளைச் சுருட்டும் மாபெரும் தொழிலாக மாற்றிவிட்ட முதலாளிகளுக்கு,இந்த ‘சூப்பர் ஸ்டார்கள்’ நம்பகமான மூலதனமாக இருப்பதால், நட்சத்திரங்களை அவர்களே திட்டமிட்டு உருவாக்கவும் செய்கின்றனர்.
நடிகர்களின் திறமை, முதலாளிகளின் ஆதரவு போக இந்த நட்சத்திரங்கள் எழுவதற்கும், குறிப்பிட்ட காலம் மின்னுவதற்கும், பின்னர் மங்குவதற்கும் குறிப்பான – சமூக வரலாற்றுக் காரணங்களும் தேவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரசின் மேட்டுக்குடி அரசியலுக்கு மாற்றாக தமிழினப் பெருமை பேசி வந்த திராவிட இயக்கம், உழைக்கும் மக்களின் ஏக்கப் பெருமூச்சாய் சில பத்தாண்டுகள் நீடித்தது. அதனால்தான் தி.மு.க.வின் தமிழ்ப் பண்பான காதல், வீரம், கற்பு, தாய்ப் பாசம், மொழி – இனப் பெருமை போன்றவை கலந்து ஒரு நாட்டுப்புற வீரனாய் உருவெடுத்த எம்.ஜி.ஆரின் இமேஜ் செல்வாக்குடன் பல ஆண்டுகள் நீடித்தது.
உயர்குடி மாந்தராக சிவாஜியின் இமேஜ் !
இதே காலப் பின்னணியில் உருவான சிவாஜியின் இமேஜ் வேறு ஒரு பின்புலத்தைக் கொண்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் – அதன் பின்னரும் பின்தங்கிய நிலவுடைமைச் சமூகம் மெல்ல மெல்ல மாறத் துவங்கியிருந்தது. தொழில் துறை – நகரங்களின் வளர்ச்சி, பழைய சமூக உறவுகளை அப்படியே நீடிப்பதற்கு அனுமதிக்கவில்லை. பார்ப்பன – பார்ப்பனரல்ல்லாத மேல்சாதிகளும், மேல்தட்டு வர்க்கங்களும் இந்த மாற்றத்தின் பொருளாதார ஆதாயங்களைப் பெற்றாலும் மறுபுறம், தமது பிற்போக்கான, பழமையான சமூக மதிப்பீடுகள் அழிவதாகவும் அரற்றிக் கொண்டன. இந்த முரண்பாட்டில் சிக்குண்ட மேல்தட்டு மனிதர்கள் மற்றும் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதர்களின் பெருமை, ஏக்கம், புலம்பல், இத்யாதிகளை, சற்று அழுத்தமான மிகை நடிப்பில் வெளிப்படுத்துவதற்கு ஒரு சிவாஜி தேவைப்பட்டார்.
பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்.
ஆண்டான் அடிமை படங்களும் ஜப்பானிய இரசனையும் !
ஜப்பானில் முத்து, எஜமான், அண்ணாமலை போன்ற ரஜினி படங்கள் வெற்றிகரமாக ஓடியது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கலாம். காட்சி உலகின் அதிநவீனக் கருவிகளை உலகிற்களிக்கும் முன்னேறிய ஜப்பான் நாட்டு மக்கள், ரஜினியின் ஆண்டான் – அடிமைக் காட்சிளை ரசிப்பது எங்ஙனம்? 19 – ஆம் நூற்றாண்டு வரை விவசாய நாடாக இருந்த ஜப்பான் பெரும் சமூகப் புரட்சிகள் ஏதுமின்றியே தொழில்துறை நாடாக மாறியது. எனவே ராஜ விசுவாசம், பழமைவாதம், அடிமைத்தனம், மூத்தோர் பக்தி, முதலாளி மரியாதை போன்ற நிலவுடைமைப் பண்புகள் மீதான மயக்கம் இன்றளவும் ஜப்பானில் நீடிக்கக் காண்கிறோம்.
“சோம்பேறிகள் இல்லாத உழைப்பாளிகளின நாடு, வேலை நிறுத்தம் கிடையாது, பழுதான எந்திரங்களைச் சரி செய்யாத பொறியியலாளர்கள் கூட தற்கொலை செய்வார்கள்” போன்ற முதலாளிகளின் சுரண்டலை மறைக்கும் மோசடியான கருத்துக்கள் உலவுவதற்கும் இதுவே அடிப்படை. எனவேதான் அடிமைத்தனமும் – அற்ப உணர்வுகளும் கொண்ட ரஜினியின் படங்கள் ஜப்பானிய மக்களை வசியம் செய்ய முடிந்திருக்கின்றது.
சாதரண மக்களும் உயர்குடி உணர்ச்சியும் !
ஆகவே முன்னேறிய ஜப்பானுக்கே கதி அதுவென்றால், இன்னமும் பின் – தங்கிய விவசாய நாடாக இருக்கும் இந்திய சமூகத்தின் அடிமை மனப்பான்மை பற்றிச் சொல்லவே வேண்டாம். மேலும் வரலாறு முழுவதும் இன்று வரை ஆளும் வர்க்கமே ஆளப்படும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. நமது நாட்டுப்புறக் கலைகளின் கதைகளோ, தற்போதைய நவீனக் கலைகளின் கதைகளோ எதுவும் உயர்குடி மாந்தர்களின் வாழ்வோடும் – உணர்ச்சியோடும்தான் நம்மை ஒன்ற வைக்கின்றன.
இன்றும் ஒரு பார்ப்பனன் பிச்சை எடுப்பதும், ஒரு பண்ணையார் தெருவில் நடப்பதும், இந்திராவைப் பறிகொடுத்த ராஜீவின் சோகமும், கேளிக்கைச் சீமாட்டி டயானவின் மரணமும், மூப்பனார் சைக்கிள் ஓட்டியதும், ஜெயலலிதாவை மன்னிக்கலாம் என்ற கருணையும், கருணாநிதியின் ‘ஐயோ’வும் -போன்ற உயர்குடி மனிதர்களின் அவலம், சோகம், எளிமை, வறுமை, இரக்கம் போன்ற உணர்ச்சிகள் சாதாரண மக்களின் சொந்த உணர்ச்சியில் கலந்து விடுகின்றன. ஆனால் இதே நெருக்கடிகளுக்கு ஆளாகும் சாதாதரண மனிதர்களின் அவலத்தை, மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவை உழைக்கும் மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன; உயர்குடி மனிதர்களுக்கோ விலக்களிக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி விலக்களிக்கப்பட்ட உயர்குடி மனிதர்களின் வாழ்க்கையைத்தான் சிவாஜி மட்டுமல்ல அவரது சமகாலத் திரையுலகம், இயக்குநர்கள், நடிகர்கள் அனைவரும் பிரதிபலித்தனர். அப்போது இத்தகைய ‘குடும்பப் படங்கள்’ எனும் மதிப்புடன் வெளிவந்த கதைகளே வெற்றிக்குரிய சூத்திரமாகக் கருதப்பட்டன. அதில் சிவாஜி மட்டும் குறிப்பிடத் தகுந்த வகை நடிப்பைக் கொண்டிருந்தார் என்பதே அவருக்குரிய பங்காகும்.
சிவாஜியும் மிகை நடிப்பும்!
அதை மிகை நடிப்பு என்பாரின் விமரிசனமும், நமது கலைமரபின் தொடர்ச்சி என்பாரின் பாராட்டும், நடிப்பை மட்டும் கவனிக்கின்றன. கூத்தும், அதன் வளர்ச்சியான நாடகத்திலும் தொலைவிலிருக்கும் பார்வையாளருக்கு குரலையும், உடலசைவையும் உணர்த்திக் காட்ட மிகை நடிப்பு தேவைப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடக மரபுகளும் மிகை நடிப்பையே கொண்டிருப்பதால் இது நமக்கு மட்டுமே உள்ள மரபு அல்ல. எனவே நாடகப் பின்னணியில் தோன்றிய திரையுலகம் மட்டுமே சிவாஜியின் மிகை நடிப்புக்கு காரணம் என்று கூறிவிட முடியாது.
மேன்மக்களின் பாத்திரமேற்று நடித்த சிவாஜியின் சமகால நடிகர்களில் பலர் அவரைப் போல மிகையாய் நடிக்கவில்லை. உயர்குடி மாந்தர்களின் உணர்ச்சிகளையும், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மிகைப்படுத்தி அவையே சமூகத்தின் பிரச்சினைகள் என்று நம்ப வைத்தன திரைக்கதைகள். அந்த ஜாடிக்கேற்ற மூடியாகப் பொருந்தி விட்டது சிவாஜியின் மிகை நடிப்பு.
தி.மு.க.வின் சவடால் அரசியலுக்கு ஏற்ற அலங்கார நடை அடுக்குத் தொடர் வசனங்கள் என்ற ஜாடிக்கும் இந்த மிகை நடிப்பு ஒரு பொருத்தமான மூடியாகவே இருந்தது.
முதலில் ஜாடிக்கேற்ற மூடி; பிறகு மூடிக்கேற்ற ஜாடி என்றவாறு அதாவது கதைக்கேற்ற நடிப்பு, பிறகு நடிகருக்கேற்ற கதை என்றவாறு அது முற்றத் தொடங்கியது.
கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும் !
சிவாஜி தனது நடிப்புத் திறனை எப்படி வளர்த்துக் கொண்டார்? அவரே கூறியிருப்பது போல பலரது வாழ்க்கைப் பாணிகளை பார்த்துப் பதிந்து கொண்டதுதான். ஆனால் யாரை – எதை பார்க்கப் பழகியிருந்தார் என்பதுதான் பிரச்சினை. சிவாஜியின் படங்களைப் போல அவரும் சமகால சமூகத்தைப் பற்றியும், அது மாறி வந்தது குறித்தும், மக்களின் யதார்த்தமான வாழ்க்கை – பிரச்சினைகளையும் அறியாதவராகவே இருந்தார். அப்படித் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை அவரது படங்களும் – பாத்திரங்களும் கோரவில்லை. கூடவே அவரது அரண்மனை வீடும், காங்கிரசின் மேட்டுக்குடி நட்பும், திரைப்பட முதலாளிகளின் சூழலும் – உயர்குடி மனிதர்களைப் பற்றியே சிந்திக்க வைத்திருக்க முடியும். நடிப்பும் – வாழ்க்கையும், இமேஜூம் – கற்பனையும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன.
ஆகவே சிவாஜி கற்றுக் கொணடு நிகழ்த்திக் காட்டிய ஸ்டைலாக – புகைவிடுவது, கம்பளியுடன் இருமுவது, தலையைப் பிய்த்து நிம்மதி தேடுவது, தரை அதிரவோ – நளினமாகவோ நடந்து வருவது போன்ற ஜோடனைகளுக்கும், சர்க்கஸ் வித்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. சீனியர் சங்கராச்சாரியையப் பார்த்து அப்பராக நடித்ததைப் பெருமையுடன் குறிப்பிடும் சிவாஜி, தனது வித்தியாசமான வேடங்கள் பலவற்றையும் எங்கிருந்து கற்றார் என்பதை எங்கேயும் கூறியதில்லை.
வீழ்ந்த நட்சத்திரம் !
சிவாஜி கால உயர்குடி மிகை யதார்த்தப் படங்களுக்கான வரலாற்றுக் காரணங்கள் மாறத் துவங்கிய போது அவரது நட்சத்திர இமேஜ் மங்கத் தொடங்கியது. அதைச் சரிகட்ட சிவாஜியும் – எம்.ஜி.ஆரும் 70 – களின் வண்ணப் படங்களில் நாயகிகளைத் துகிலுரிவதிலும், காதலைக் காமமாக மாற்றுவதிலும் போட்டியாக ஈடுபட்டனர். இதன் பின்னர் 80 – களின் துவக்கத்தில் பேரன் – பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ‘தர்மராஜா’வில் ஸ்ரீதேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடன் ஆடிப் பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.
இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை, தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப் பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90-களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இளைய தளபதி விஜயின் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார். இதுபோக அவர் பெரியாராக நடிக்க விரும்பிது நிறைவேறவில்லையே என்று சிலர் வருத்தப்படுகின்றனர். பெரியார் பிழைத்தார் என்று நாம் மகிழ்ச்சியடைவோம்.
சிவாஜியும் அரசியலும் !
அடுத்து ‘ அரசியலில் மட்டும் சிவாஜி தோல்வியடைந்தார்’ என்ற கருத்தைப் பரிசீலிக்கலாம். முதலில் இந்த மதிப்பீடே நேர்மையற்ற மதிப்பீடு. காரணம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அரசியலில் ஈடுபடும் ஒருவர் தோல்வியடைந்தால் அப்படி மதிப்பிடலாம். மாறாக தனது ‘நடிகர் திலகம்’ இமேஜைத் தக்க வைக்கவும், விரிவுபடுத்தவும், அதன்மூலம் அரசியலிலும் புகழடைய வேண்டும் என்ற சிவாஜியின் நோக்கமே பச்சையான சுயநலமாகும். இது பெருங்கனவாக வளருவதற்கு எம்.ஜி.ஆரின் போட்டி ஒரு காரணமாக இருந்தது.
திராவிட இயக்கத்தின் முன்னணிக் கலைஞராக வளர்ந்த சிவாஜி 1955- இல் திடீரென திருப்பதி சென்று வழிபட்டார். கொதித்தெழந்த உடன்பிறப்புகளோ “திருப்பதி கணேசா! திரும்பிப் பார் நடந்துவந்த பாதையை, நன்றி கெட்டுப்போனாயே நல்லதுதானா?”என்று கேட்டனர். திராவிட அரசியலும் -நாத்திகமும் தனது இமேஜை குறுக்கிவிடும் என்று கருதிய சிவாஜி தேசியமும் – தெய்வீகமும் உள்ளவராகக் காட்டிக் கொண்டார். அதன்படி அடுத்த சில ஆண்டுகளில் ஏ.பி.நாகராஜனின் புராணப் படங்களில் நடித்து, 50களில் புதையுண்டு போயிருந்த புராணப் புரட்டல்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
இதே ஏ.பி.நாகராஜன்தான் திராவிட இக்கங்களைப் பல படங்களில் கொச்சைப்படுத்தி கேலி செய்தவர். பராசக்தியில் சிவாஜியுடன் நடித்த எஸ்.எஸ். இராசேந்திரன் போன்றோர் புராண, கடவுள் படங்களில் நடிப்பதில்லை என்று உறுதியுடன் கடைபிடித்தார்கள். இந்தக் குறைந்த பட்ச நாணயம் கூட சிவாஜியிடம் இல்லை.
காங்கிரசில் சேர்ந்த ‘கூத்தாடி’ !
திரையுலகில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கினால் காழ்புணர்ச்சியடைந்த காங்கிரசு கட்சி நடிகர்களை ‘கூத்தாடிகள் ’ என்று கேவலப்படுத்தியது. கோபக்கார நடிகரான சிவாஜி இதில் மட்டும் ரோசமின்றி 62 – இல் காங்கிரசில் பகிரங்கமாகச் சேர்ந்து, 67 தேர்தலில் பிரச்சாரமும் செய்தார். ஒரு வகையில் சாதாரண பாத்திரங்களிலிருந்து உயர்குடி மாந்தர்களின் வேடங்களுக்கு மாறிய சிவாஜிக்கு இந்த மாற்றம் பொருத்தமாகவே இருந்தது.
50-களில் ‘தாராசிங் – கிங்காங்கை’ வைத்து மல்யுத்தக் காட்சிகள் நடத்திப் புகழ் பெற்ற சின்ன அண்ணாமலை என்ற காங்கிரசுக்காரர், 60 – களில் நடிப்புடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த சிம்மக் குரலோனை வைத்து அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் உருவாக்கினார். புதுப்படங்களுக்கு பூசை, தோரணம், அபிஷேகம், ஊர்வலம், ஒவ்வொரு படத்தின் பெயரிலும் ரசிகர்மன்றம் என்று ரசிகர்களை பொய்யான உணர்ச்சியில் மூழ்கடித்து, சினிமாவை முக்கியமான சமூக நிகழ்வாக மாற்றி சீரழித்ததில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சம பங்காற்றினர். இந்த ரசிகர் மன்ற நோய் பரவுவதற்கு, திரையுலகின் புகழையும், செல்வாக்கையும், கவர்ச்சியையும், அரசியலுக்கு கேடாகப் பயன்படுத்திய தி.மு.க.வும் காரணமாக இருந்தது.
பால்கனி, பெஞ்சு டிக்கட் என்ற இரு பிரிவையும் கவர்ந்த சிவாஜிக்கு சாதிகளைக் கடந்த ரசிகர்களே அதிகம். இருப்பினும் தேவர் சாதி மக்கள் இருக்கும் ஊர்களில் சிவாஜி மன்றாடியார் – தேவர்மகன் சிவாஜி ரசிகர் மன்றங்களாக இருந்ததை அவர் ஆதரித்தார். 70 – களின் சில படங்களில் ‘நான் தேவன்டா’ என்று அடிக்கடி வலிந்து பேசி தன் பெருமிதத்தைக் காட்டிக் கொண்டார். இவ்வளவு இருந்தும் பின்னாளில் அவர் ஆரம்பித்த தனிக் கட்சிக்கு டெபாசிட் வாங்கிக் கொடுத்த சில தொகுதிகளில் தேவர்சாதி மக்கள் அதிகம் கிடையாது.

பார்ப்பனர்களிடம் பறி கொடுத்த பிரஸ்டீஜ் !
அதே சமயம் தன் புகழ் உச்சத்திலிருக்கும் போதும் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்தும் போயிருக்கிறார். 71 – ஆம் ஆண்டில் அவரது ‘களம் கண்ட கவிஞன்’ எனும் நாடகத்திற்கு சென்னையின் ‘அவாள்’ சபாக்கள் இடம் கொடுக்கவில்லை. பார்ப்பனக் குடும்பக் கதைகளை மட்டும் நாடகங்களாக நடத்தும் சபாக்களின் விதிப்படி தனது நாடகத்தை விடுத்து, ‘வியட்நாம் வீடு’ என்ற நாடகத்தை சிவாஜி அரங்கேற்றினார். இதில் ‘பிரஸ்டீஜ் பத்மநாப அய்யராக’ நடித்து அவாளின் உள்ளம் கொள்ளை கொண்ட நடிகர் திலகம் தன்னுடைய ‘பிரஸ்டீஜ்’ பறி போனது குறித்து கவலைப்படவில்லை.
இக்காலத்தில் வெளியான ‘ராஜபார்ட் ரங்கதுரையில்’ தூக்கு மேடையேறும் பகத்சிங் “காந்தி வாழ்க” என்று பேசத் தொடங்கி அலையோசை, நவசக்தி போன்ற காங்கிரஸ் பத்திரிகைகளுக்கு விளம்பரம் செய்து கயிற்றில் தொங்குவார். இப்படி பகத்சிங்கையும் தன் பங்குக்கு கேவலப்படுத்தினார்.

அரசியல் வேண்டாம், ஆளை விடுங்கப்பா !
இடையில் இந்திராவிடமிருந்து பிரிந்து ஸ்தாபனக் காங்கிரஸ் ஆரம்பித்த காமராஜருடன் சேர்ந்தார். காமராஜர் இறந்ததும் இந்திராவிடம் திரும்பினார். 80 – களில் இவருக்கும் மூப்பனாருக்கும் நடந்த காங்கிரஸ் குழுச் சண்டையில் தோற்றார். எம்.ஜி.ஆர். இறந்ததும் அடுத்த புரட்சித் திலகம் நாம்தான் என்று முடிவு செய்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதுக்கட்சி ஆரம்பித்தார். 88 தேர்தலில் “234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 3 -இல் மட்டும் டெபாசிட் பெற்றது ” எனுமளவுக்கு கேவலமாகத் தோற்றார்.
அப்போதும் சளைக்காமல் வி.பி.சிங்கின் ஜனதா தளத்தில் சேர்ந்து மாநிலத் தலைவரானார். அந்தக் கட்சியும் கட்டெறும்பாக கரைந்த நிலையில் ‘அடங்கொப்புரானே, அரசியலும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் ’ என்று அரசியல் துறவறம் மேற்கொண்டார். சிவாஜியின் அரசியல் சந்தர்ப்பவாதம் இத்தனை விகாரமாகத் தெரியக் காரணம், அதையே நேர்த்தியாக செய்யும் திறமை அவருக்கில்லை என்பதுதான்.
அண்ணாவும், தம்பி கணேசனும், நண்பர் கருணாநிதியும் !


அந்தத் திறமை அடுக்கு மொழியில் சவுடால் அரசியல் செய்து வந்த தி.மு.கவிடம் இருந்தது. திருப்பதிக்குப் போன சிவாஜியை உடன்பிறப்புகள்தான் எதிர்த்தனர். ‘அறிஞர்’ அண்ணாவோ ‘தம்பி கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று தந்திரமாக சமரசம் செய்து கொண்டார். காரணம் அப்போது அண்ணா எழுதிய சில படங்களில் நடிப்பதற்கு சிவாஜி தேவைப்பட்டார். அதன் பின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பகுத்தறிவுக்கு அவர் சமாதி எழுப்பிய பின் திரையுலகில் கொள்கையுமில்லை – வெங்காயமுமில்லை என்ற வணிகப் பண்பு நிலைபெற்றது.
அதனால்தான் பராசக்தி படத்தில் ஏழைகளின் துன்பத்தை எழுதி பேசிய கருணாநிதி – சிவாஜி ஜோடி, 1981 இல் ‘மாடிவீட்டு ஏழை’ படத்தில் இலட்சாதிபதியின் துன்பத்தை எடுத்துரைத்தது. அப்போது இருவரும் இலட்சாதிபதிகளாக இருந்தார்கள் என்ற விசயம் அவர்களது கொள்கையின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் இருவரும் கட்டிப்பிடித்து அழுதார்கள். எதை நினைத்து அழுதார்களோ தெரியவில்லை!
உயர்ந்த மனிதனின் இறுதிக் காட்சி !
இனியும் இந்தக் கட்டுரையை நீட்டினால் மிகையாகி விடும் என்பதால், புகழ் பெற்ற வளர்ப்பு மகன் திருமணக் காட்சியுடன் முடித்து விடுவோம். இத் திருமணத்தின் போது தமிழக மக்களால் வெறுக்கப்படும் முதல் நபராக ஜெயலலிதா இருந்தார். தமிழகத்தையே கொள்ளையடித்த ஜெயா-சசி கும்பல் தனது டாம்பீகத்தைக் காட்ட நினைத்த இத்திருமணத்தில் சிவாஜிக்கு தனது பேத்தியைக் கொடுப்பதில் முழு சம்மதமில்லை என்று கிசுகிசுக்கள் வெளியாயின. சிவாஜி அதை பகிரங்கமாக உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை. தனது நடிப்பு சாம்ராஜ்ஜியத்தில் அடங்கிக் கிடந்த நடிகையும், புதுப் பணக்காரியாக உருவெடுத்த நடிகையின் உயிர்த்தோழியும், பரம்பரைப் பணக்காரரான தன்னுடன் சரிக்கு சமமாக எப்படி சம்பந்தம் செய்யலாம் என்ற வேதனையாக இருக்கக் கூடும்.
இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் கூடிய அந்த மாபெரும் ‘வரலாற்றுப் புகழ் மிக்க’ நிகழ்ச்சியில், தூய வெள்ளை ஆடையுடன், அதிகம் பேசாமல், ஒரு வாய் கூட சாப்பிடாமல், சோகத்துடன் நின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இங்கும் ‘வாழ்ந்து கெட்ட உயர்குடி மனிதராகவே’ காட்சியளித்தார் – நடிக்கும் தேவை எற்படவில்லை.

2 கருத்துகள்:

  1. 1988ல் திரு.சிவாஜி கணேசன் அவர்களது தமிழக முன்னேற்ற முன்னணி 50 இடங்களில் போட்டியிட்டது.

    பதிலளிநீக்கு
  2. தமிழர்கள் தன் சுய அடையாளங்களை மீட்க திராவிடர் எனும் திருடர்களின் பாதை அழிக்கப்படவேண்டும் ! என்று தொழையும் உந்தன் திராவிடம் என்பதே எங்கள் தமிழர்களின் எதிர்பார்ப்பு !

    பதிலளிநீக்கு