புதன், 3 அக்டோபர், 2012

டி. ராஜேந்தர் பிற‌ந்த‌ நாள் அக்டோப‌ர் 03


டி. ராஜேந்தர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குனரும், பாடகரும், இசைக் கலைஞரும்,தமிழக அரசியல்வாதியும், ஆவார். வீராசாமி, மற்றும் வேறு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் பிள்ளை சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனி சிறப்பாகும். திமுகவில்இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்துள்ளார். 1996ல் பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைதலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2004ல் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் இயக்கி நடித்த சில படங்கள்.
உயிருள்ளவரை உஷா
மைதிலி என்னைக் காதலி
தங்கைக்கோர் கீதம்
உறவைக்காத்த கிளி
சொன்னால் தான் காதலா
மோனிசா என் மோனலிசா
15வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 8,211 வாக்குகள் பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக