புதன், 24 அக்டோபர், 2012

நடிகை அசின் பிற‌ந்த‌ நாள் அக்டோபர் 26,


அசின்தொட்டும்கல் , (பிறந்தது அக்டோபர் 26, 1985 கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
2001 ஆம் ஆண்டில் வெளியான நரேந்திரா மகான் ஜெயகாந்தன் வகா என்ற திரைப்படத்தில் தன் நடிப்பு அறிமுகத்தைப் பெற்றார். தனது முதல் வர்த்தக வெற்றியை 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழா அம்மயி என்ற திரைப்படத்தில் பெற்றார். அந்த படத்தினால் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். ஏராளமான படங்களுக்குப் பிறகு, தனது இரண்டாவது தமிழ்ப் படமான கஜினி திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் தென்னிந்திய சிறந்த நடிகை விருதை இரண்டாம் முறையாக பெற்றார்.
கஜினி (2005), வரலாறு (2006) ஆகிய வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான கஜினி யின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால்பதித்தார், இதன்மூலம் பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை அவர் வென்றார்.
குடும்பம்
கேரள மாநிலத்தின் கொச்சியில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் ஜோசப் தொட்டும்கல், செலின் தொட்டும்கல் ஆவர். தொடுபுழாவைச் சேர்ந்த இவரது தந்தை ஜோசப் தொட்டும்கல் பல வர்த்தகங்களை நிர்வகித்து வந்தார். தனது வர்த்தகங்களை நிர்வகிப்பதை விடுத்து தனது மகளின் நடிப்பு வாழ்க்கையை நிர்வகிக்க முடிவு செய்தார். அசினின் வெளிநாட்டு படப்பிடிப்புகளில் அசினுடன் செல்கிறார். அசினின் தாயார் செலின் தொடும்கல் தனது மகளுடன் வசிப்பதற்காக கொச்சியிலிருந்து சென்னைக்கும் அங்கிருந்து மும்பையிற்கும் தொடர்ந்து இடம் மாறினாலும், தனது அறுவைச் சிகிச்சை தொழிலை தொடர்கிறார்.
தனது பெயரின் பொருள் "தூய்மையானது, களங்கமில்லாதது" என்று அசின் கூறியிருக்கிறார். தனது பெயரில் இருக்கும் முதலெழுத்து '' சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் அதற்கு "இல்லாதது" என்று பொருள் என்றும், சின் என்பது ஆங்கிலத்தில் இருந்து வந்தது என்றும் கூறினார்.
அறிமுகம்
சத்யன் அந்திக்காட்டின் மலையாளத் திரைப்படமான நரேந்திரா மகான் ஜெயகாந்தன் வகா (2001) படத்தில், 15 வது வயதில் ஒரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமானார்.
ஒரு ஆண்டு தனது படிப்பை தொடர்ந்த, அசின் ஒரு நடிகையாக தனக்கு திருப்புமுனையாக அமைந்த அம்மா நானா ஓ தமிழா அம்மாயி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார்..
தனது முதல் தெலுங்கு மொழிப் படமான இதில் ரவி தேஜாவுக்கு இணையாக, தமிழ்ப் பெண் பாத்திரத்தில் நடித்தார், இப்படம் இவருக்கு தெலுங்கின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுத் தந்தது. அதே ஆண்டிலேயே, சிவமணி, என்ற தனது இரண்டாவது தெலுங்குத் திரைப்படத்தில் நாகார்ஜூனாவுக்கு இணையாக இவர் நடித்ததற்கு மகிழ்ச்சி மிகுந்த நடிகைக்கான விருதினை வென்றார்.
அதனையடுத்து அவர் நடித்த, லஷ்மி நரசிம்மா மற்றும் கர்சனா ஆகிய இரண்டு தெலுங்கு திரைப்படங்களிலும், காவல்துறை அதிகாரிகள் காதல் கொள்ளும் பெண் வேடத்தில் அவர் நடித்தார், இவை இரண்டும் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்ததோடு தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக அவரது இடத்தை வலுப்படுத்தியது.
தமிழ் மொழியில் அசினின் முதல் படம் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, இதில் இவர் ஜெயம் ரவிக்கு இணையாக நடித்தார். தனது அம்மா நன்னா ஓ தமிழா அம்மயி படத்தில் தனது பாத்திரத்தையே இந்த தழுவல் திரைப்படத்திலும் அசின் செய்தார்.
தெலுங்கு படத்தில் தமிழ் பேசும் பெண்ணாக நடித்ததற்கு பதில் இந்த படத்தில் அவர் மலையாளம் பேசும் பெண்ணாக நடித்தார். 2004 இல் பெரும் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்த இப்படம் அசினை தமிழ்த் திரைப்பட உலகிலும் காலூன்றச் செய்தது. சக்ரம் திரைப்படத்திற்காக மீண்டும் தெலுங்கு திரைப்பட உலகத்தின் பக்கம் சென்ற இவர், உள்ளம் கேட்குமே யில் தோன்றினார். 2002 இல் துவக்கப்பட்ட இந்த படம் தான், உண்மையில் அசின் கதாநாயகியாக நடிக்க முதலில் வெளிவருவதாக திட்டமிடப்பட்டிருந்தது, இதில் ஆர்யா மற்றும் பூஜா உமாசங்கர் புதுமுகமாக அறிமுகமாயினர். ஜீவா இயக்கிய இந்த கல்லூரி காதல் கதை மிகுந்த தாமதத்திற்குள்ளானது, ஆனாலும் இது கடைசியில் வர்த்தகரீதியில் வெற்றி பெற்று, அசினுக்கும் படத்தின் பிற முக்கிய நடிகர்களுக்கும் பரந்த வாய்ப்புகளை உருவாக்கித்தந்தது.
திருப்புமுனை, 2005 - 2007
உள்ளம் கேட்குமே வெளிவந்ததன் பிறகு, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு ஆகிய திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி அசின் ஒரு முன்னணி கதாநாயகியாகக் கருதப்பட்டார். அசினுக்கு திருப்புமுனையை வழங்கிய படம் கஜினி. சூர்யா மற்றும் நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார், இது சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதை அவருக்கு வென்று தந்தது. கல்பனா என்னும் கலகலப்பான இளம்பெண்ணாக அவர் நடித்திருந்தார். "அனைவரும் நேசிக்கும் ஒரு வாயாடிப் பெண்ணாக" இந்த படத்தில் அவரது நடிப்பு "அற்புதமாக" இருந்தது என்று சிஃபி.காம் (sify.com) அவரைப் பாராட்டியது, "காதல் காட்சிகளில் அசாத்திய திறமையுடன் தனது பாத்திரத்தைக் கையாண்டுள்ளார், சிறு வயது பெண்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் நுட்பமான உருக்கமான காட்சிகளும், படத்தில் அவரது கோர முடிவும் மனதை உருக்குவதாக அமைகின்றன". அடுத்து வந்த 2005 தீபாவளிக்கு, சிவகாசி மற்றும் மஜா ஆகிய அவரது இரண்டு திரைப்படங்கள் வெளியாயின. மஜா சுமாராகத் தான் ஓடியது, சிவகாசி படத்தில் அசினின் பாத்திரம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் வர்த்தக ரீதியாக வெற்றிப்படமானது.
அடுத்த ஆண்டில், அஜித் குமாருக்கு ஜோடியாக இவர் நடித்து, மிகத் தாமதமாக வெளிவந்த வரலாறு திரைப்படம், தமிழ் திரையுலகில் 2006 ஆம் ஆண்டின் மிகப் பெரும் வெற்றிப்படமானது. கதாநாயகனை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் அசினின் பாத்திரம் மிக அழுத்தமானதாய் இல்லை என்றாலும், படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப் பெற்றது.[11] பவன் கல்யாணின் அன்னாவரம் திரைப்படத்திலும் அசின் நடித்தார், மற்றொரு வெற்றிப்படமாக அமைந்த இதிலும் அசினுக்கு பிரமாதமான பாத்திரம் இல்லை. ஜனவரி 2007 இல், அஜித் குமார் மற்றும் விஜய்க்கு இணையாக முறையேஆழ்வார், போக்கிரி ஆகிய திரைப்படங்களில் அசின் நடித்தார், போக்கிரி வெற்றி பெற்றது, ஆழ்வார் தோல்விப் படமானது. ஆழ்வார் படத்தில் அசினின் பாத்திரம் விமர்சிக்கப்பட்டது என்றாலும், போக்கிரியில் அவரது நடிப்பு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. அந்த ஆண்டில் தனது இறுதி படமாக ஹரி இயக்கிய வேல் திரைப்படத்தில் அவர் நடித்தார், 2007 தீபாவளிக்கு அது வெளியானது, இதனையடுத்து தொடர்ந்து மூன்றாவது தீபாவளிக்கும் அவர் நடித்து வெளியான படம் வெற்றி பெற்றிருந்தது. ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளராக இந்த படத்தில் நடித்திருந்த அசின், இப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டைப் பெற்றார்.
வெற்றி, 2008 - இன்று வரை
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான தசாவதாரத்தில் கமலஹாசனுக்கு இணையாக அசின் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்தார், இதில் கமலஹாசன் பத்து வேடங்களில் நடித்தார். செப்டம்பர் 2006 முதல் தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் தான் இன்றைய தேதி வரை அசினின் மிகப் பெரிய படமாக இருக்கிறது. கமலஹாசனின் பத்து வேடங்களால் இவரது பாத்திரத்திற்கு அதிகமான வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும், இந்த படத்தில் அசின் ஏற்ற பாத்திரங்கள் தான் "இன்று வரை" அவரது மிகச் சிறந்ததெனப் பாராட்டைப் பெற்றிருக்கிறது, அந்த வேடங்களில் ஒன்று 12 ஆம் நூற்றாண்டின் வைஷ்ணவப் பெண்; இன்னொரு வேடம் சிதம்பரத்தில் வசிக்கும் ஒரு பிராமணப் பெண்.தென்னிந்திய திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக தசாவதாரம் ஆனது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதன் பிறகு, தேசிய அளவில் அறியப்படும் பொருட்டு அசின் இந்தித் திரையுலகிற்கு செல்ல முடிவெடுத்தார். இந்தியில், அவர் நடித்த முதல் படம், அமீர் கானுக்கு இணையாக அவர் நடித்த கஜினி, இது அதே பெயரில் தமிழில் வந்த அசினுக்கு திருப்புமுனையாக அமைந்த படத்தின் தழுவல்.
படம் வெளியான சமயத்தில், விமர்சகர்கள் மற்றும் சாதாரண பார்வையாளர்கள் இரு தரப்பிலிருந்தும் படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றது, படத்தில் அசினின் "அற்புதமான" நடிப்பிற்காக அவர் பிரத்யேகமாக பாராட்டைப் பெற்றார். பிரபல விமர்சகரான தரண் ஆதர்ஷ் அசினின் இந்தி அறிமுகம் "அற்புதம்" என்று கூறுகிறார், "அமீர் கான் போன்ற ஒரு பெரிய நடிகருக்கு ஜோடியாக நடித்து, அப்படியிருந்தும் படம் முடிந்த பிறகும் உங்கள் நினைவில் தங்குவது என்பது சாதாரணமாக முடிவதல்ல. பளிச்சென்ற தோற்றமும் புகைப்படத்திற்கான அழகும் கொண்டிருக்கும் அசின் தனது பங்கை அற்புதமாய் நடித்திருக்கிறார்" என்று கூறி அசினின் நடிப்பிற்கு ஒரு நேர்மறையான விமர்சனத்தை அளித்திருக்கிறார்.விபுல் ஷாவின் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் சல்மான் கான் மற்றும் அஜய் தேவ்கான் உடன் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் வருவாய் ஈட்டுவதில் வெற்றி பெறவில்லை. இதனால் அசினுக்கு இந்தியில் பட வாய்ப்புகள் பறிபோனது. இதையடுத்து, 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்க அசின் ஒப்பந்தமாகி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக