மனோ (பிறப்பு அக்டோபர் 26, 1965) தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியுள்ள ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடியுள்ளார்.தமது திரைவாழ்வை நடிகராகத் துவங்கி பின்னர் பின்னணிப் பாடகராக புகழ்பெற்றார்.சின்னதம்பி என்ற படத்தில் "தூளியிலே" என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்றுள்ளார்.
இளமை வாழ்வும் திரைவாழ்வும்.
மனோ ஓர் தெலுங்கு இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தார்.இவரது இயற்பெயர் நாகூர் பாபு ஆகும்.இவரது பெயரை பிற்காலத்தில் மனோ என்று இளையராஜா மாற்றினார். தமது கருநாடக இசைப் பயிற்சியை பிரபல பாடகர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றார்.
துவக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து 15 தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய குழுவில் துணை புரிய சென்னை அழைத்துக்கொண்டார்.அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.1984ஆம் ஆண்டு தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் தொடங்கினார்.1984ஆம் ஆண்டு கற்பூரதீபம் என்ற படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம்,பி. சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார்.1986ஆம் ஆண்டு இளையராஜா பூவிழி வாசலிலே என்றத் தமிழ்த் திரைப்படத்தில் "அண்ணே அண்ணே" என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் திருப்புமுனை தந்த "செண்பகமே", "மதுரை மரிக்கொழுந்து வாசம்" மற்றும் வேலைக்காரன் படத்தில் "வா வா கண்ணா வா","வேலையில்லாதவன்" போன்ற பாடல்கள் மூலம் பரவலாக அறியப்படத் தொடங்கினார்.சிங்காரவேலன் படத்தில் ஓர் வேடமேற்று நடித்துள்ளார்.
காதலன் படத்தில் "முக்காலா முக்காபலா" , முத்து படத்தில் "தில்லானா தில்லானா" மற்றும் உள்ளத்தை அள்ளித் தா படத்தில் "அழகிய லைலா" போன்ற பாடல்கள் பெருவெற்றி பெற்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக