ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

'முந்தானை முடிச்சு' புகழ் நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம் பிப்ரவரி 25.



'முந்தானை முடிச்சு' புகழ் நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம் பிப்ரவரி 25.
நடிகர் தவக்களை மாரடைப்பால் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று மரணம் அடைந்தார்.
1983ம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படம் மூலம் நடிகர் ஆனவர் தவக்களை. ஆள் குள்ளமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தி ரசிகர்களின் மனதில் உயர்ந்தவர்.
அவர் சென்னை வடபழனியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 42.
தவக்களை 496 படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி ஆகிய 6 மொழி படங்களில் நடித்துள்ளார்.
தவக்களையின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Thavakkalai” Chittibabu
1983 ஆம் ஆண்டு ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.பாக்கியராஜின் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ’முந்தானை முடிச்சு’ படத்தைப் பார்த்திருப்பவர்கள் அதில் கதாநாயகி பரிமளமாக நடித்திருந்த ஊர்வசியையும் அவருடன் இணைந்து நடித்திருந்த மூன்று பொடியன்களான சின்ன சுரேஷ், மாஸ்டர் சுரேஷ், தவக்களை சிட்டிபாபு முதலியவர்களையும் நிச்சயம் மறந்திருக்கமாட்டார்கள். இப்பொடியன்களை விலக்கி வைத்துவிட்டு அப்படத்தை நிச்சயமாக எவராலும் ரசித்திருக்கமுடியாது. அவ்வாறு ஒரு வெற்றிக் கூட்டணியாக படம் முழுக்க கலாய்த்தவர்கள் இச்சிறுவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்தான் இந்த தவக்களை என்ற சிறுவன். இவரது இயற்பெயர் சிட்டிபாபு. படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘தவக்களை’. அந்தக் கதாபாத்திரத்தின் பெயரே பின்னாளில் அவருக்கு நிலைத்துவிட்டது. அத்துடன் ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேல் ஓஹோவென படங்களில் கொடிகட்டி பறந்தவர் இந்த தவக்களை. பார்ப்பதற்குத்தான் பொடியன். ஆனால் 1983-லியே இச்சிறுவனின் வயது 13.
இப்படத்தில் இடம்பெற்ற ‘நான் புடிச்ச மாப்பிள்ள தான், நாடறிஞ்ச மன்மதன் தான்’ என்ற பாடல் காட்சியில் ஊர்வசியுடன் இவர் போடும் ஆட்டமும் பாடலின் இடையிடையே வரும் வயதுக்கு மீறிய இச்சிறுவனின் வசனங்களும் அன்றைய ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. அடுத்து அவ்வூருக்கு ஆசிரியராக பொறுப்பேற்க வரும் பாக்கியராஜை வரவேற்று அவரிடத்தில் பலவிதமான கேள்விகளைக் கேட்டு குடைந்துவிட்டு பாக்கியராஜுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே ஊர்வசி அவர் கொண்டுவந்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக திருடி இப்பொடியன்களிடம் கொடுக்க அவற்றை இவர்கள் கடத்தும்போது குழந்தைக்கு வைத்திருக்கும் பால் புட்டியை எடுத்துச் சப்பும் தவக்களையின் அடாவடித்தனங்கள் எளிதில் மறக்கவியலாது.
இவரது தாய் மொழி தெலுங்கு. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணிக் கலைஞர்களுடன் நடித்துள்ளான். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், நவாபேட்டை. இவருக்கு நன்றாக நடனமாட வரும். நடிகை அனுராதாவின் தந்தை கிருஷ்ணகுமாரிடம் நடனம் கற்றிருக்கிறார்.
தாயின் பெயர் சுப்புலட்சுமி, தந்தை பெயர் விஜயகுமார். இவரும் ஒரு நடிகர். முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க வருவதற்கு முன்னரே தமிழ், தெலுங்கு மொழிகளில் குரூப் டான்சில் சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். பயணங்கள் முடிவதில்லை தமிழில் சிட்டிபாபுவை ஓரளவிற்கு அடையாளம் காண வைத்த படம்.
‘பொய் சாட்சி’ படத்தின் துணை நடிகர் முகவராக இவனது தந்தை இருந்த காரணத்தால் ஒரு நாள் அருணாசலம் ஸ்டுடியோவிற்கு படப்பிடிப்பின்போது தந்தையுடன் சென்றிருக்கிறார். அப்போது நடிகர் குள்ளமணிதான் இவனை நடிகர் பாக்கியராஜிடம் சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இயக்குநர் கே.பாக்கியராஜ் சென்னையில் தான் எப்போதோ பார்த்த இச்சிறுவனை ஞாபகத்திற்குக் கொண்டு வந்து ‘முந்தானை முடிச்சு’ படத்திற்குத் தேர்வு செய்தார். ஏவி.எம்மிற்கு அழைத்துச் சென்றார். கோபிச்செட்டிப் பாளையத்திற்கும் அழைத்துச் சென்றார். படம் வெளிவந்த பின் பையன் ஏகத்துக்கும் பிஸியாகிவிட்டான். ‘முந்தானை முடிச்சு’ ஆரம்ப, அறிமுக, பாராட்டு விழாக்களில் பங்கேற்றான். ஒரே வருடத்தில் பல மேடைகளைப் பார்த்து பெரிய ஆளாகிவிட்டான்.
தமிழ்ப் படங்களில் நடிக்கத் துவங்கும் முன்பே இவர் ‘நேனு மாஅவிடே’ [1981] போன்ற சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடித்த மேலும் சில படங்கள்:
ஓசை, என் இரத்தத்தின் இரத்தமே,  நீங்கள் கேட்டவை, தங்கமடி தங்கம், நாலு பேருக்கு நன்றி, பொண்ணு பிடிச்சிருக்கு, நேரம் நல்ல நேரம், ஆத்தோர ஆத்தா, மணந்தால் மஹாதேவன்.
நவம்பர் 1983 பேசும் படம் இதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

நடிகர் மா கா பா ஆனந்த் பிறந்த நாள் பிப்ரவரி 26 .


நடிகர் மா கா பா ஆனந்த் பிறந்த நாள் பிப்ரவரி 26 .

மா கா பா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார். ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவராவார்.

நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் நடித்தார்.

திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2014 வானவராயன் வல்லவராயன் வல்லவராயன்
2016 நவரச திலகம் மூர்த்தி
2016 கடலை மாணிக்கம்
2016 அட்டி பவா
2017 பஞ்சுமிட்டாய் படப்பிடிப்பில்
2017 மாணிக் படப்பிடிப்பில்

திரைப்படத் தயாரிப்பாளர் பி. நாகிரெட்டி நினைவு தினம் பிப்ரவரி 25


திரைப்படத் தயாரிப்பாளர் பி. நாகிரெட்டி நினைவு தினம் பிப்ரவரி 25 .

பி. நாகிரெட்டி என அழைக்கப்படும் பொம்மிரெட்டி நாகிரெட்டி (ஆங்கிலம்:Bommireddy Nagi Reddy) (டிசம்பர் 2 1912 - பெப்ரவரி 25 2004) இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர் மற்றும் சமூக சேவகரும் ஆவார். வெங்காய ஏற்றுமதியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய நாகிரெட்டி, தென்கிழக்கு ஆசியாவிலேயே பிரமாண்டமான விஜயா- வாகினி ஸ்டூடியோவை உருவாக்கினார். பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, எங்கவீட்டுப்பிள்ளை உள்பட 50 வெற்றிப் படங்களைத் தயாரித்தவர்.

வரலாறு
நாகிரெட்டி ஆந்திர மாநிலத்தில் கடப்பை மாவட்டம் பொட்டிம்பாடு என்ற கிராமத்தில் டிசம்பர் 2, 1912-ம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் பிறகு சென்னையில் குடியேறியது. இவருடைய தந்தை, வெளிநாடுகளுக்கு வெங்காயம் முதலான விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்து வந்தார். இந்த தொழிலில் நாகிரெட்டி தமது 18-வது வயதில் ஈடுபட்டார். ஒரு முறை, வெங்காயம் ஏற்றிச்சென்ற கப்பல் கடலில் மூழ்கியதால் நட்டம் ஏற்பட்டது. எனவே 'பி.என்.கே' என்ற அச்சகத்தை தொடங்கினார். 'ஆந்திரஜோதி' என்ற தெலுங்கு மாத இதழைத் தொடங்கினார். நாகிரெட்டியின் மனைவி பெயர் சேசம்மா. வேணுகோபாலரெட்டி, விசுவநாத் ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி என்ற 3 மகன்களும் ஜெயம்மா, சாரதா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இதழியலாளர்
குழந்தைகளுக்காக தெலுங்கில் 'சந்தமாமா' என்ற சிறுவர் இதழைத் தொடங்கினார். இது பின்னர் 'அம்புலிமாமா' என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்டது. அது வெற்றியடையவே, பல்வேறு மொழிகளிலும் வெளியாயிற்று. ஆந்திராவைச் சேர்ந்த சக்ரபாணி என்ற எழுத்தாளர். அம்புலிமாமா இதழில் கதை எழுதி வந்தார். அப்போது நாகிரெட்டியுடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். சினிமாத்துறையில் ஈடுபட விரும்பி, வடபழனி அருகே நிலம் வாங்கி, வாகினி ஸ்டூடியோவைத் தொடங்கினார்கள்.

திரைப்படத் தயாரிப்பாளர்
இங்கு தயாரான படங்கள் வெற்றிகரமாக ஓடின. நாகிரெட்டியின் மகள் பெயர் விஜயா. அவர் பெயரால் 'விஜயா புரொடக்ஷன்ஸ்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நாகிரெட்டியும், சக்ரபாணியும் தொடங்கி, 'பாதாள பைரவி' என்ற படத்தைத் தயாரித்தனர். என். டி. ராமராவ், கே.மாலதி, கிரிஜா, எஸ். வி. ரங்காராவ் ஆகியோர் நடித்த இந்தப்படம், தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் தயாராகியது. தமிழ்ப்படத்துக்கான வசனத்தையும், பாடல்களையும் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார்.

இசை கண்டசாலா 17-5-1951-ல் வெளியான 'பாதாள பைரவி' தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெற்றிப்படமாக அமைந்தது. பிறகு 'கல்யாணம் பண்ணிப்பார்' என்ற படத்தை நாகிரெட்டியும், சக்ரபாணியும் தயாரித்தனர். இந்தப் படத்தில் என்.டி.ராமராவ், ஜி.வரலட்சுமி ஜோடியாக நடித்தார்கள். சிறிய வேடங்களில் நடித்து வந்த சாவித்திரி, இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார்.

அடுத்து ஜெமினிகணேசன் -சாவித்திரி இருவரும் இணைந்து நடித்த 'குணசுந்தரி' (1954), 'மிஸ்ஸியம்மா' (1955) ஆகிய படங்கள் விஜயா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டது. இதில் 'மிஸ்ஸியம்மா' மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. பிறகு 10 ஆண்டுகள் தமிழ் படம் எதையும் நாகிரெட்டி தயாரிக்கவில்லை. 1965-ல் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவியை வைத்து, 'எங்கவீட்டுப் பிள்ளை'யை தயாரித்தார். சக்திகிருஷ்ணசாமி வசனம் எழுத, சாணக்யா இயக்கினார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப்படத்தை தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் தயாரித்தார்.

இந்தி படத்தில் திலீப்குமார் கதாநாயகனாக நடித்தார். இந்தப்படம், வடநாட்டில் பல ஊர்களில் வெள்ளி விழா கொண்டாடியது. பிறகு எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த 'நம் நாடு' படத்தை 1969-ல் வெளியிட்டார். இந்த படமும் வெற்றிப் படமாகும். 1974-ல் சிவாஜிகணேசன் - வாணிஸ்ரீ நடித்த 'வாணி ராணி' படத்தையும் தயாரித்தார். தமிழ், இந்தி உள்பட பல மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட சினிமா படங்களை தயாரித்தார். வாகினி ஸ்டூடியோவின் பெயர், விஜயா -வாகினி ஸ்டூடியோ என்று பிறகு மாறியது.

தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக இது திகழ்ந்தது. இந்த ஸ்டூடியோவிலும், நாகிரெட்டி தயாரித்த படங்களிலும் சக்ரபாணி பங்குதாரராக இருந்தார். சிறந்த நட்புக்கு எடுத்துக் காட்டாக இவர்கள் விளங்கினார்கள். அக்காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிப்படங்களும் சென்னையில்தான் தயாரிக்கப்பட்டன. ஸ்டூடியோக்கள் சென்னையில்தான் இருந்தன. ஆந்திராவில் ஒரு ஸ்டூடியோ கூட கிடையாது. ஆந்திராவில் முதல்-மந்திரிகளாக இருந்த சஞ்சீவரெட்டி, பிரமானந்தரெட்டி ஆகியோர், 'உங்கள் ஸ்டூடியோவை ஆந்திராவுக்கு கொண்டுவந்து விடுங்கள். எல்லா வசதிகளும் செய்து தருகிறோம்' என்று அழைத்தார்கள்.

ஆனால், நாகிரெட்டி மறுத்துவிட்டார். 'தமிழ் மண்தான் என்னை வாழவைத்தது. கடைசி மூச்சு உள்ளவரை தமிழ்நாட்டில்தான் வாழ்வேன்' என்று கூறிவிட்டார். திரைப்படத் தயாரிப்பு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டு, பட அதிபர்கள் வெளிப்புறக் காட்சிகளை அதிகம் படமாக்கத்தொடங்கவே, ஸ்டூடியோக்களில் வேலை குறைந்தது. இதனால் ஸ்டூடியோக்களை நடத்த முடியாமல், ஒவ்வொரு ஸ்டூடியோவாக மூடப்பட்டு வந்தன. நாகிரெட்டி, தன் ஸ்டூடியோவை மக்களுக்கு பயனுள்ள முறையில் மாற்ற விரும்பினார்.

இறுதிக்காலம்
ஸ்டூடியோ இருந்த இடங்களில் விஜயா ஆஸ்பத்திரி, விஜய சேச மகால் திருமண மண்டபம் ஆகியவற்றைக் கட்டினார். தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர், இந்திய திரைப்படக் கழகத் தலைவர் போன்ற பதவிகளை பல முறை வகித்தவர் நாகிரெட்டி. 2 பல்கலைக்கழகங்கள் நாகிரெட்டிக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நாகிரெட்டி தனது நினைவாற்றலை இழந்தார். 25-2-2004 அன்று சென்னையில் நாகிரெட்டி மரணம் அடைந்தார்.

விருதுகள்
கலைமாமணி விருது 1972 - 1973
தாதாசாகெப் பால்கே விருது 1981

நடிகை திவ்யா பாரதி பிறந்த தினம் பிப்ரவரி 25


நடிகை திவ்யா பாரதி பிறந்த தினம் பிப்ரவரி 25 

திவ்யா ஓம்பிரகாஷ் பாரதி அல்லது திவ்யா பாரதி (இந்தி: दिव्या भारती), (25 பிப்ரவரி 1974 - 5 ஏப்ரல் 1993) ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார். அவர் போபிலி ராஜா திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் 1990 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படங்களிலிருந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பிறகு தென்னிந்தியாவில் சில திரைப்படங்கள் வெற்றிபெற்றன. அவர் 1992 ஆம் ஆண்டில் 'விஷ்வாத்மா' என்ற சராசரியாக ஓடிய ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் இந்தி திரைப்படங்களில் நுழைந்தார். அந்த நேரத்தில் மிகப்பிரபலமானதாக இருந்த, அவரை மிகவும் புகழ்பெறச் செய்த சாத் சமுந்தார் பார் என்ற அவருடைய பாடல் அவருக்கு பெரும் பாராட்டுதலைப் பெற்றுத்தந்தது. அவர் ஒரு வருடத்திற்குள்ளாக 14 இந்தித் திரைப்படங்களில் நடித்திருந்தார், 1992 மற்றும் மத்திய 1993 ஆம் வருடத்திற்கு இடையேயான காலகட்டம் அறிமுகமான ஒருவருக்கு மிகப்பெரிய சாதனையைப் பெற்றுத்தந்த ஒன்றாக இருந்தது. அது ஒரு வருடத்திற்குள்ளாக அதிகத் திரைப்படங்களில் நடித்தவர் என்ற உலக சாதனையை அவருக்குப் பெற்றுத்தந்தது என்பதுடன் அந்தச் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமலேயே இருக்கிறது. அவர் 1992 இல் சஜித் நதியத்வாலாவைத் திருமணம் செய்துகொண்டார். அவருடைய வாழ்க்கை 1993 ஆம் ஆண்டு ஏப்ரலில் தனது 19 ஆம் வயதில் ஏற்பட்ட அவருடைய துயர மரணத்தோடு முடிவுக்கு வந்தது. அவர் எப்படி இறந்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாததால் அவருடைய மரணம் புதிரானதாக அறியப்படாமலேயே எஞ்சியது, எனவே அவருடைய மரணத்தை எப்படித் தீர்ப்பது என்பது சிக்கலானதாக இருப்பது நிரூபிக்கப்பட்டதால் அந்த வழக்கும் 1998 இல் மூடப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்

திவ்யா இந்தியா மும்பையில் ஒரு காப்பீட்டு அலுவலரான ஓம்பிரகாஷ் பாரதிக்கும், மீரா பாரதிக்கும் (லோதி) மகளாகப் பிறந்தார். திவ்யா பாரதிக்கு(லோதி) குணால் என்ற இளைய சகோதரர் ஒருவர் இருக்கிறார். திவ்யாவின் தாயார் ஓம்பிராகாஷ் பாரதிக்கு இரண்டாவது மனைவியாவார்.

திவ்யா மும்பை ஜுஹூவில் உள்ள மானேக்ஜி கூப்பர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அங்கே திவ்யா 9 ஆம் வகுப்பை முடித்தார். திவ்யா தன்னுடைய பள்ளி நாட்களில் நடிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்கவில்லை. இருப்பினும், அவர் கணபதி திருவிழாவின்போது ஆடையலங்கார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என்பதோடு பள்ளியில் இருக்கும்போதே அதற்காக பல விருதுகளையும் வென்றிருக்கிறார்.

திவ்யா படிப்பில் சிறந்தவர், ஆனால் படிப்பு அல்லாத வேறு சில செயல்பாடுகளிலும் அவர் சிறந்து விளங்கினார். திவ்யாவும் அவருடைய சகோதரரும் மிகச்சிறந்த நீச்சல் வீரர்கள். அவர்கள் கார் ஜிம்கானா எனப்படும் மும்பையைச் சேர்ந்த கிளப்பிற்கு சாம்பியன்களாவர். திவ்யா கார் ஓட்டுவதிலும் தேறியவராவார். அவர் தன்னுடைய பதினான்காம் வயதிலேயே கார் ஓட்டக் கற்றுக்கொண்டார்.

திரைத்துறை வாழ்க்கை
பாலிவுட்டில் திருப்பம்
திவ்யாவுக்கு நடிப்பு வாய்ப்புகள் வரத்தொடங்கியபோது அவர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அவருடைய முகம் அந்த நேரத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்த ஸ்ரீதேவியின் முகத்தை நினைவூட்டுவதாக இருந்தது என்பதால் அவரை பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கவனிக்கத் தொடங்கினர். இதற்கு அவருடைய பெற்றோர்கள் முதலில் தயங்கினர், திவ்யாவும்கூட இதில் ஆர்வமில்லாமல் இருந்தார். டில் நந்து துலானி அவருக்கு குனாகன் கா தேவ்தாவில் வாய்ப்பு வழங்கினார். இறுதியாக, அவருடைய தாயார் அவரிடம் அவர் தன்னுடைய படிப்பை விட்டுவிட வேண்டியிருக்கும் என்று சொன்னபோது இதனால் மகிழ்ச்சியுற்ற திவ்யா திரைப்படத்துறையில் இறங்க உடன்பட்டார். 1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திவ்யாவிற்கு பதினான்கரை வயது.

அதேசமயத்தில், அதன்க் ஹை அதன்க் மற்றும் ருத்ர அவதார் ஆகிய படங்களில் அமீ்ர் கானுக்கு இணையாக ஒரு புதுமுகம் தலிப் ஷங்கருக்கு தேவைப்படுகிறது என்பதை ஒரு நண்பரின் வழியாக திவ்யா தெரிந்துகொண்டார். அவருடைய பெற்றோர்களின் ஒப்புதலோடு திவ்யா இரண்டு படங்களுக்கும் கையெழுத்திட்டார். அந்த நேரத்தில் கோவிந்தாவின் சகோதரரான கீர்த்தி குமார் வசீகரமான திவ்யாவை ஒரு வீடியோ லைப்ரரியில் பார்த்தார். அவரை வீடுவரை பின்தொடர்ந்து சென்ற அவர், அதற்கும் அடுத்திருந்த கட்டிடத்தில் வசித்து வந்த இயக்குநரான நந்து துலானியை அழைத்து திவ்யாவைப் பற்றி விசாரித்தார்.

ராதா கா சங்கம் அத்தியாயம்

பாரதி குடும்பம் தெரிந்துகொண்ட அடுத்த விஷயம் கீர்த்தி குமார் திவ்யாவை ராதா கா சங்கத்தில் கோவிந்தாவுடன் நடிக்க வைக்க விரும்புகிறார் என்பதுதான். தலிப் ஷங்கரை தனிப்பட்ட முறையில் சென்று சந்தித்த கீர்த்தி அவர்களுடைய ஒப்பந்தத்திலிருந்து திவ்யாவை விடுவிக்கச் செய்தார். ஷோடைம் பத்திரிக்கையில் கீர்த்தி "நான் தலிப்பிடம் அவர் வேறு எந்த பெண்ணை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் ஆனால் என்னால் மற்றொரு ராதாவை கண்டுபிடிக்க இயலாது என்று கூறினேன்" என்று தெரிவித்திருந்தார். கீர்த்தி அவருடைய பெயரை திவ்யா என்பதிலிருந்து ராதாவாக மாற்றினார். தயாரிப்பாளர் கீர்த்தி அவரை வைத்து நிறைய நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்தியா முழுவதும் தேடிய பின்னர் தான் எப்படி முழுமையான ராதாவைக் கண்டுபிடித்தேன் என்று அவர் பேட்டிகள் அளித்தார். பிறகு முதல் காட்சி படம்பிடிக்கப்படும் முன்பு அவரை கவர்ச்சிகரமானவராக மாற்ற முயற்சித்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் திவ்யா "ராதா" பாரதி அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜூஹி சாவ்லா நியமிக்கப்பட்டார். இந்தப் பிரச்சினைக்கு இரு தரப்பிலிருந்தும் சொல்லப்பட்ட காரணங்கள் வெவ்வேறாக இருந்தன.

இந்த நீக்கத்தின் பின்னணி குறித்து பல்வேறு பத்திரிக்கைகள் வெவ்வேறுவிதமாக எழுதின. "கீர்த்தி அவர் மீது மிகையான அன்பு கொண்டிருந்தார்" என்று கூறினர், மற்ற சிலரோ "இந்தப் படத்தை இயக்குவதாக இருந்த லாரன்ஸ் டிஸோசா இதிலிருந்து விலகிவிட்டார். அதனால் கீர்த்தியே இந்தப் படத்தை இயக்குவதென்று தீர்மானித்தார். இயக்கத்திற்கு புதியவரான அவர் தான் புதிதாக நடிக்க வந்தவரை இயக்க முடியாது என்பதால் திவ்யாவை நீக்கிவிட்டார்", என்று கூறினர், மற்ற பத்திரிக்கைகள் "திவ்யாவுக்கு கோவிந்தாவுடன் காதல் உறவு இருந்தது, இதை கீர்த்தியால் சகித்துக்கொள்ள முடியவில்லை" என்று எழுதின. மற்ற பத்திரிக்கைகளோ "திவ்யாவின் முதிர்ச்சியின்மைதான் அவரை இந்தப் படத்திலிருந்து நீக்கச் செய்தது" என்று எழுதின.

மறு-போராட்டம்

அவர் மற்ற இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு பச்சை விளக்கு காண்பிக்கப்பட்டது. அவர் போனி கபூர், மகேஷ் பட், ஷப்னம் கபூர், சேகர் கபூர் மற்றும் சுபாஷ் கை போன்ற பெரிய திரைத்துறையினரால் திரைச்-சோதனைக்கு அழைக்கப்பட்டார். அவர்கள் அனைவரும் அவரைப் பாராட்டிப் பேசினார் ஆனால் யாரும் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை, இதற்கு காரணமாக அவருடைய குழந்தைத்தனமான தோற்றம் முன்னின்றதாக வதந்தி பரவியது. பத்திரிக்கைகளில் அவர் இஷ்டம்போல் நடந்துகொள்கின்ற வெகுளித்தனமானவராக பெயர் பெற்றார். உண்மையில், தன்னுடைய பெரிய பட்ஜெட் படமான பிரேமில் போனி கபூர் திவ்யாவை ஒப்பந்தம் செய்தார். எட்டு நாட்களுக்குப் பின்னர் திவ்யா வெளியேற்றப்பட்டு தபு மறுஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் ஆமிர் கானுக்கு இணையாக சௌதாகர் படத்திற்கு அவரை சுபாஷ் கை அழைத்திருந்தார், 20 நாட்களுக்குப் பின்னர் அவர் வெளியேற்றப்பட்டு மனிஷா கொய்ராலாவும் விவேக் முஷ்ரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதன் காரணமாக இந்த மறுப்புக்கள் பதினைந்து வயதான திவ்யாவை பாதித்தது. அவர் ஏற்கனவே பள்ளியை வி்ட்டு வெளியேறிவிட்டதால் அவர்கள் அவரை மீண்டும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதன் காரணமாக அவர் சும்மாவே உட்கார்ந்திருந்தார். அதிர்ஷ்டவசமாக, தெலுங்கு சினிமாவின் பெரிய தயாரிப்பாளர்களுள் ஒருவரான டி.ராம்நாயுடு திவ்யாவின் கதவுகளைத் தட்டினார். அவர் தகுபதி வெங்கடேஷிற்கு இணையாக போபிலி ராஜா என்ற தெலுங்கு திரைப்படத்தில் திவ்யாவிற்கு வாய்ப்பளித்தார். உடனடியாக திவ்யாவிற்கு ஒரு தமிழ் திரைப்படமும் கிடைத்தது என்பதுடன் ராஜீவ் ராய் அவரை விஷ்வாத்மா திரைப்படத்திற்காக அணுகினார்.

தெலுங்கு சினிமாவில் நட்சத்திரமாக உயர்வு

பல பெரிய திரைப்படத் திட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் திவ்யா மன உளைச்சலுக்கு ஆளானார் என்பதோடு மும்பையை விட்டும் வெளியில் சென்றிருந்தார். அவர் திரும்பிவந்த மாலையில் போபிலி ராஜாவின் தயாரிப்பாளர் அவரைத் தேடி தன்னுடைய ஆட்களை அனுப்பியிருந்தார். அவர்கள் திவ்யா அன்று இரவே புறப்பட்டு வரவேண்டும் என்றனர். 1991 ஆம் ஆண்டு நவம்பர் "மூவி" பத்திரிக்கையில் தெரிவித்திருந்தபடி, "நான் போக விரும்பவில்லை. நான் இல்லை என்றேன் அம்மா ஆமாம் என்றார்கள். கற்பனை செய்துபாருங்கள், அந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது என்பதுடன் நான் சூப்பர்ஸ்டார் ஆனேன்". இது முற்றிலும் பலன் தந்தது. போபிலி ராஜா 1990ஆம் ஆண்டு கோடையில் வெளியிடப்பட்டு பிரம்மாண்டமான வெற்றிபெற்றது. அவர் புயலாக வந்து தென்னிந்தியாவைப் பிடித்தார், அங்கே அவர் ஒரு தேவதை. அவர் பெயரில் ஒரு கோயில்கூட கட்டப்பட்டிருக்கிறது. நிறைய வெற்றிப்படங்களோடு, அவர் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவரானார். பாக்ஸ்-ஆபீஸ் தரவரிசையில், போட்டியே இல்லாத விஜயசாந்திக்கு அடுத்தபடியாக வந்தார். அவருடைய சம்பளம் தி இன்சைடரின் கூற்றுப்படி ஒரு திரைப்படத்திற்கு 25 லட்சத்தைத் தொட்டது என்பதுடன் ஒவ்வொரு கூடுதலான நாளுக்கும் (படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டால் தென்னிந்திய தயாரிப்பாளர்கள் 15 நாளுக்கு 15 லட்ச ரூபாய் தந்தனர்) 1 லட்சம் என்ற அளவில் இருந்தது, இது 1991ஆம் ஆண்டில் மிகப்பெரிய தொகையாகும். பாலிவுட்டில், மாதுரி தீட்சித் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் மட்டுமே இந்த அளவிற்கு சம்பளம் பெற்றவர்களாவர். 1991ஆம் ஆண்டில் திவ்யா தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மற்றும் மோகன் பாபு உள்ளிட்ட சூப்பர்ஸ்டார்களுடன் ரவுடி அல்லுடு, தர்ம ஷேத்ரம் மற்றும் அசெம்பிளி ரவுடி உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றிகளைத் தந்தார். வட இந்தியாவில் அவர் தெலுங்கு சினிமாவின் ஸ்ரீதேவியாக பிரபலமடைந்திருந்தார். ஆனால், திவ்யா தேடியது இது அல்ல. அவர் இதை மும்பையில் செய்துகாட்ட விரும்பினார். அவர் ஒரு புதிய தீர்மானத்துடன் திரும்பி வந்தார். அதேசமயத்தில், அவர் தன்னுடைய தெலுங்கு ரசிகர்களை ஏமாற்ற விரும்பாமல் வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவிற்கு குறைத்துக்கொண்டார்.


பாலிவுட்டில் நட்சத்திரமாக உயர்வு
ராஜீவ் ராய் தனது விஷ்வாத்மா திரைப்படத்திற்கு சன்னி தியோலுக்கு இணையாக புதுமுகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்று திவ்யா கேள்விப்பட்டபோது, அவர் தன்னுடைய சுயவிவரத்துடன் துணிச்சலோடு ராஜீவ் ராயின் அலுவலகத்திற்கே சென்றார். அதே நாளில் அவர் அந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ராஜீவ் தனது திரிதேவ் வெற்றிப்படத்தை அடுத்து அதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார்.

இந்தத் திரைப்படம் மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான திரைப்படத் தயாரிப்பாளர்களான திருமூர்த்தி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெடால் தயாரிக்கப்பட்டது. அவர்களுடைய திரைப்படங்கள் தற்போது சூப்பர்ஸ்டார்களாக இருக்கும் ஹேமா மாலினியை ஜானி மேரா நாம் மற்றும் அமிதாப்பச்சனை தீவார் ஆகிய திரைப்படங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. விஷ்வாத்மா பிரம்மாண்டமான முறையில் 1990ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. திரைப்பட நடிகர் தர்மேந்திரா தன்னுடைய மஹுரட் காட்சியை வழங்கினார். விரைவிலேயே திவ்யா நைரோபியில் ஒரு நீண்டகால வெளிப்புறப் படப்பிடிப்பிற்கு சென்றார். திவ்யா திரும்பிவந்த நேரத்தில் அவருக்கு பட வாய்ப்புக்கள் குவியத்தொடங்கின. இதுவரையில் ஒரு படம்கூட இல்லாதிருந்த திவ்யா 14 படங்களில் கையெழுத்திட்டார். அவர் ஷாரூக்கானின் முதன்மைக் கதாநாயகி என்ற பெயரையும் பெற்றிருந்தார், இவர்தான் தன்னை தீவானா மற்றும் தில் ஆஸ்னா ஹை ஆகிய திரைப்படங்களில் புகழ்பெறச் செய்தார் என்று ஷாரூக்கான் கூறியிருக்கிறார்.

1992ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி திவ்யாவிற்கு ஒரு மறக்கமுடியாத நாளாக இருந்தது. தன்னுடைய திரைப்படம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என அவர் விரும்பியதற்கு பல காரணங்கள் இருந்தன. விஷ்வாத்மா நன்றாக ஓடியது என்றாலும் இந்தப் படத்தின் வெற்றி திரிதேவின் வெற்றிக்கு அருகில் வரவில்லை என்பதால் தோல்விப்படமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் முதல்நாள் திரையிடலில் அமிதாப் பச்சன், யாஷ் சோப்ரா, ஜாக்கி ஷெரஃப், ஜூஹி சாவ்லா, ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சன்க்கி பாண்டே உள்ளிட்ட நிறைய திரைப்பட ஆளுமைகள் கலந்துகொண்டனர். இருப்பினும், திவ்யா நடித்திருந்த "சாத் சமுந்தார் பார்" பாடல் பெரிய வெற்றி பெற்றது என்பதுடன் இன்றும்கூட ரசிகர்கள் அவரை இந்தப் பாடலால் நினைவு கூர்கின்றனர்.

ஏழு நாட்களுக்குப் பின்னர் திவ்யாவின் இசைத்தொகுப்பான தில் கா கியா கஸூர் வெளியிடப்பட்டது. இது அவரை ஒரு புகழ்பெற்ற கதாநாயகியாக உருவாக்கியிருக்கக்கூடியது என்றாலும் திரையரங்குகள் வெறிச்சோடி கிடந்தன. இந்தப் படம் இந்த அளவிற்கு மோசமான தோல்வியடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் தோல்வியுற்றது என்றாலும், ஃபிலிம்ஃபேர் பத்திரிக்கைகள் திவ்யாவை 1992 ஆம் ஆண்டின் முதல் பத்து சிறந்த நடிகைகள் பட்டியலில் சேர்க்கத் தொடங்கியிருந்தன. ஆச்சரியப்படும்படியாக, தற்போது நன்கு அறியப்பட்டுள்ள புதுவரவுகள் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் திவ்யாவின் அறிமுகமே பத்திரிக்கையின் தலைப்புச்செய்தியாக இருந்தது, வெற்றிப்படங்களில் நடித்திருந்த பூல் அவுர் கான்டேயில் மது மற்றும் சனம் பேவஃபாவில் சாந்தினி, ஆகியோர் நட்சத்திரமாகவில்லை, ஆனால் திவ்யாவின் தோல்விப்படம் அவரை ஒரு நட்சத்திரமாக்கியது. திவ்யா "நான் என்னை நிரூபிக்கவே விரும்புகிறேன். ஆனால் என் முகத்தின் மீதே வீழ்கிறேன். இப்போது, நான் மீண்டும் முற்றிலும் புதிதாக தொடங்கியிருக்கிறேன். ஒருநாள் வெற்றி என்னுடையதாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை", என்று கூறி தன்னை தற்காத்துக்கொண்டார் (ஸ்டார்டஸ்ட், மார்ச் 1992).

மேலும், திவ்யாவும்கூட இவ்வாறு புதுவரவுகள் மீதிருந்த நம்பிக்கையை நீக்கிக்கொண்டவராகக் காணப்பட்டார். பின்னர் பேலஜ் நிலானியின் ஷோலா அவுர் ஷப்னம் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் வெற்றிபெற்றது என்பதுடன் திவ்யா மீண்டும் உச்சத்திற்குச் சென்றார். இது திவ்யாவிற்கு மேன்மையான கதாப்பாத்திரத்தை மட்டுமின்றி கோவிந்தாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை வழங்கியதோடு டேவிட் தவானை ஒரு இயக்குநராக அங்கீகரிக்கச் செய்தது.

நான்கு மாதங்களுக்குப் பின்னர், ராஜ் கன்வரின் காதல் கதையான தீவானா 1992ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் அவர் ரிஷி கபூருடனும், இந்தப் படத்தில் அறிமுகமானவரும், பின்னாளில் பாலிவுட் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய சினிமாவின் அடையாளமாகவும் ஆன ஷாரூக்கானுடனும் நடித்திருந்தார். தீவானாவின் பெரிய வெற்றியால் திவ்யா தன்னுடைய புதுவரவு பட்டியலிலிருந்து விலகி முதல்நிலைப் பட்டியலில் இடம்பெற்றார். தீவானாவில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதே நேரத்தின்போது, திவ்யாவின் மற்ற படங்களான சுனில் ஷெட்டியுடன் பல்வான், கோவிந்தாவுடன் ஜான் சே பியாரா வெளியாகி நன்றாக ஓடின. அந்த வருடத்தின் முடிவில் ஹேமா மாலினியின் தில் ஆஷ்னா ஹை வெளியானது, அதில் திவ்யா தன்னுடைய தாயைத் தேடும் பார் நடனக்காரியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் தோல்வியடைந்தது என்றாலும் அவருடைய நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

திடீரென்று, அவரிடம் இருந்த பெரிய வெற்றிப்படங்களால் திவ்யா திரைத்துறையில் ஒரு மிகப்பெரிய சொத்தாகப் பார்க்கப்பட்டார். அவர் இந்த முதல்நிலைத் தகுதியை நீண்டநாட்களுக்கு தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று பலரும் கணித்தனர். உண்மையில் "மூவி", "ஸ்டார்டஸ்ட்" மற்றும் "ஃபிலிம்ஃபேர்" போன்ற திரைப் பத்திரிக்கைகள் செப்டம்பரில் அவரை சம்பளம், பிரபலம் மற்றும் மாதுரி தீ்ட்சித் மற்றும் ஸ்ரீதேவிக்கு அடுத்த நிலையில் இருப்பது ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு மூன்றாவது இடத்தை அளித்திருந்தன. ஆனால் விதி வேறு திட்டங்களை வைத்திருந்தது, 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 என்ற ஒரு விதிவசமான நாளில், பத்தொன்பது வயதே ஆகியிருந்த நிலையில் திவ்யா அவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]
16 வயதே ஆன நிலையில், தன்னுடைய நண்பரான கோவிந்தாவைப் பார்ப்பதற்கு ஃபிலிம்சிட்டி படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சஜித் நதியத்வாலாவை 1990 இல் திவ்யா சந்தித்தார். ஷோலா அவுர் ஷப்னம் படப்பிடிப்பு தளத்தில் திவ்யா கோவிந்தா அஹூஜாவுடன் படப்பிடிப்பில் இருந்தார். கோவிந்தா தான் சஜித்தை திவ்யாவிற்கு அறிமுகம் செய்துவைத்தார். விரைவிலேயே படப்பிடிப்பு தளங்களில் படக்குழுவினர் தினமும் சஜித்தைப் பார்ப்பது தொடர்ந்தது.

1993 ஆம் ஆண்டு ஜூன் மூவி இதழில் சஜித் குறிப்பிட்டதன்படி "1992 ஆம் ஆண்டு ஜனவரி 15 இல் எங்கோ ஒரு இடத்தில் திவ்யா என்னிடம் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்". அடுத்த நாளே அவர் தன்னுடைய பெயர் எல்லா கதாநாயர்களுடனும் இணைத்துப் பேசப்படுவதாக படபடப்பில் இருந்தார். அவர் திருமணம் செய்துகொண்டு இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர விரும்பினார். நான் எல்லோருடனும் உறவு கொண்டிருப்பவளாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

பிறகு 1992 ஆம் ஆண்டு மே 20 இல் திவ்யா சஜித்தின் வெர்ஸோரா குடியிருப்பில் இருக்கும் துள்சி அடுக்ககத்தில் அவருடைய சிகையலங்கார நிபுணரான சந்தியா, அவருடைய கணவர் மற்றும் ஒரு இஸ்லாமிய சடங்காளரின் முன்னிலையில் சஜித்தை திருமணம் செய்துகொண்டார். அவர் இஸ்லாமிற்கு மதம் மாறியதோடு "சானா" என்ற புதிய பெயரையும் வைத்துக்கொண்டார். "அவருடைய திரைத்துறை வாழ்க்கையை இது பாதிக்கும் என்பதால் நாங்கள் இதை ரகசியமாகவே வைத்திருந்தோம். அவருடைய தயாரிப்பாளர்கள் அச்சமடைந்திருக்கக்கூடும். கடந்த காலங்களை நினைக்கையில் நாங்கள் இந்த உண்மையை சொல்லியிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். திவ்யா நாங்கள் திருமணம் செய்துகொண்டதை அறிவிக்கவே விரும்பினார் நான்தான் இன்னும் கொஞ்சநாள் போகட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். நான் அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவருடைய திரைப்படத்திற்கு முண்டியடிக்கும் கூட்டத்தைப் பார்த்து அவர், "இது தோற்றுப்போய் மக்கள் என்னை விலகும்படி கேட்டுக்கொள்வார்கள்" என்று முனகுவார். ஆனால் அது நடக்கவே இல்லை, அவருடைய திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிபெற்றன. 1993 ஆம் ஆண்டின் முடிவில் அவர் தன்னுடைய திரைப்பட வேலைகள் அனைத்தையும் முடித்திருப்பார்" என்று சஜித் குறிப்பிட்டிருந்தார்.

இறப்பு
1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவு, மும்பையில் திவ்யா தன்னுடைய கணவரின் அடுக்குமாடிக் குடியிருப்பான துள்சி 2 இல் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார். திவ்யாவின் இந்த திடீர் முடிவு குறித்து ஊடகத்தில் பல்வேறுவிதமான யூகங்கள் நிலவின, அதற்கு விபத்து, மரணம், தற்கொலை மற்றும் கொலையாகக்கூட இருக்கலாம் என்ற காரணங்கள் கற்பிக்கப்பட்டன. திவ்யாவின் ஆடை வடிவமைப்பாளர் அவர் மரணமடைந்த நேரத்தில் அந்த அடுக்ககத்தில் இருந்தார் என்று நம்பப்பட்டது, ஆனால் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் தவிர்க்க இயலாததாக இருந்தது. காவல்துறை அவர் மரணம் குறித்த விசாரணையை 1998ஆம் ஆண்டில் மூடியது, ஆனால் அவர் இறந்துபோன சூழ்நிலைகள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன.

அவருடைய உடல் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 இல் வழங்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. வெள்ளித்திரையில் மிக இளவயது கதாநாயகியாக இருந்தவரின் இறுதிச்சடங்கில் அனில் கபூர், கோவிந்தா, கமல் சாதனா, ராஜ் பப்பர், யாஷ் சோப்ரா, ஜிம்மி நிருலா, சுதாகர் போகதே, முகேஷ் துக்கால், மகேஷ் ஆனந்த், அருணா இரானி, ராஸா முரத், விகாஸ் ஆனந்த், வெங்கடேஷ், ராம் மோகன், ஜாவத் கான், ராஜ் கன்வர், நிதின் மன்மோகன் மற்றும் அவருடைய முதல் வெற்றிப்படமான ஷோலா அவுர் ஷப்னத்தை உருவாக்கிய பேலஜ் நிலானி உள்ளிட்டவர்களும், ஹேமமாலினி, ஜெய பாதுரி, ஊர்மிளா மடோன்கர், சயிஃப் அலி கான், ஷாரூக்கான், ஷில்பா ஷிரோத்கர், சோனு வாலியா, சோமி அலி, பபிதா, கரிஷ்மா கபூர், சங்கீதா பிஜ்லானி, தபு, மனிஷா கொய்ராலா மற்றும் ஆஷா பரேக் உள்ளிட்ட பெரிய திரை ஆளுமைகள் உட்பட 500 பேர் கலந்துகொண்டனர் என்பதோடு அவருடைய குடும்பத்தினருக்கு தங்களுடைய இரங்கல்களையும் தெரிவித்தனர். அவருடைய குடும்பத்தினரும் ஒரு நேர்காணலில், என்னுடைய மகள் போதை மருந்துகளை எடுத்திருந்தாலும் குடித்திருந்தாலும் அவரால் எப்படி ஒரு வருடத்திற்குள்ளாக 14 படங்களை முடித்திருக்க முடியும், இதுவே என்னுடைய திவ்யா குடிக்கவில்லை அல்லது போதைமருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது, அவள் முற்றிலும் குற்றமற்றவள் மற்றவர்களுக்கும் அவள் குற்றமற்றவள் என்றும் திறமையான பெண் என்றும் தெரியும் என்று குறிப்பிட்டனர்.

அவர் தன்னுடைய மரணத்திற்கு முன்பு மோரா , லாட்லா , அந்தோலன் , அங்க்ராக்ஷாக் ,கார்தவ்யா (1995), மற்றும் விஜபாத் ஆகிய படங்களில் நடிக்க திட்டமிட்டிருந்தார்; அவருடைய கதாபாத்திரங்கள் பின்னர் மாற்றியமைக்கப்பட்டன. திவ்யா தன்னுடைய மரணத்திற்கு முன்பு ஏறத்தாழ லாட்லா திரைப்படத்தின் 80 சதவிகிதத்தை முடித்துவிட்டார், ஆனால் அந்த முழுப்படமும் ஸ்ரீதேவியை வைத்து மீண்டும் எடுக்கப்பட்டது. அவர் நிறைவு செய்த அந்தத் திரைப்படத்தின் காட்சித்தொகுப்புகள் பல வருடங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டன. திவ்யா நிறைவு செய்த இந்தப் படம் 1993 இல் வெளியிடப்படுவதாக இருந்தது, ஆனால் இறுதியில் 1994 இல் வெளியிடப்பட்டது.

திவ்யா இறுதியாக நிறைவு செய்த இரண்டு திரைப்படங்களான ரங் மற்றும் ஷத்ரன்ஞ் அவர் இறந்த சில மாதங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டன. இந்தத் திரைப்படங்கள்-மேலும் அவருடைய கணவர் சஜித் நதியத்வாலா தயாரித்த சில படங்களும்-அவருடைய நினைவுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

1998
1998ஆம் ஆண்டில், அவருடைய துயர மரணத்திற்கான உண்மையான காரணம் நிரூபிக்கப்பட இயலாததாக இருந்ததால் இந்த வழக்கு மூடப்பட தீர்மானிக்கப்பட்டது, ஆனால் இப்போதுவரை அவருடைய மரணம் ஒரு புதிராகவே இருக்கிறது என்பதுடன் இன்றும்கூட நினைவு கூறப்படும் அவருடைய ஆளுமையும் நடிப்பும் மறக்கப்பட முடியாததாகவே இருக்கிறது. மிகச் சிறப்பான நடிப்பால் அவர் இன்றும் விரும்பப்படுபவராகவும் மக்களால் நினைவு கூறப்படுபவராகவும் இருக்கிறார்.

திரைப்பட விவரங்கள்
ஆண்டு தலைப்பு உடன் நடித்தவர் மொழி வர்த்தகரீதியான வசூல்
1990 நிலா பெண்ணே ஆனந்த் தமிழ் தோல்வி
1990 போபிலி ராஜா வெங்கடேஷ் தெலுங்கு பெரிய வெற்றி
1992 ரவுடி அல்லுடு சிரஞ்சீவி தெலுங்கு பெரிய வெற்றி
1992 தர்ம ஷேத்ரம் பால்கிருஷ்ணா தெலுங்கு சராசரி
1992 அசெம்பிளி ரவுடி மோகன் பாபு தெலுங்கு பெரிய வெற்றி
1992 விஷ்வாத்மா சன்னி தியோல் இந்தி சராசரி
1992 ஷோலா அவுர் ஷப்னம் கோவிந்தா இந்தி பெரிய வெற்றி
1992 தில் கா கியா கஸூர் ப்ரித்வி இந்தி சராசரி
1992 ஜான் ஸே பியாரா கோவிந்தா இந்தி வெற்றி
1992 தீவானா ஷாருக் கான் மற்றும் ரிஷி கபூர் இந்தி பெரிய வெற்றி
1992 பல்வான் சுனில் ஷெட்டி இந்தி வெற்றி
1992 துஷ்மன் சமானா அர்மான் கோலி இந்தி தோல்வி
1992 தில் ஆஸ்னா ஹை ஷாருக் கான் இந்தி சராசரி
1992 கீத் அவினாஷ் தோரத், நாஷிக் இந்தி சராசரி
1992 சித்தமா மோகுடு மோகன் பாபு தெலுங்கு தோல்வி
1993 தோலி முத்து பிரசாந்த் தெலுங்கு வெற்றி
1993 நா இல்லே நா சொர்க்கம் கிருஷ்ணா, ரமேஷ் தெலுங்கு தோல்வி
1993 தில் ஹை டு ஹை ஜாக்கி ஷெராப் இந்தி வெற்றி
1993 காஸ்த்ரியா சஞ்சய் தத் இந்தி சராசரி
1993 ரங் கமல் சாதனா இந்தி வெற்றி
1993 சத்ரன்ஜ் ஜாக்கி ஷெராப் இந்தி சராசரி

விருதுகள்
ஃபிலிம்ஃபேர் விருது
முன்னர்
Raveena Tandon
for Patthar Ke Phool லக்ஸ் புதுமுக விருது
for Deewana
1992 பின்னர்
Mamta Kulkarni
for Hindi Movie

முடிக்கப்படாத படங்கள்\மற்ற நடிகைகளைக் கொண்டு முடிக்கப்பட்டது

Year Of release தலைப்பு உடன் நடித்தவர் மாற்றீடுகள் வர்த்தகரீதியான வசூல்
1993 தவான் அஜய் தேவ்கான் கரிஷ்மா கபூர் சராசரி
1994 மோரா அக்சய் குமார் மற்றும் சுனில் ஷெட்டி ரவீணா டாண்டன் பெரிய வெற்றி
1994 லாட்லா அனில் கபூர் ஸ்ரீதேவி வெற்றி
1994 விஜபாத் அஜய் தேவ்கான் தபு வெற்றி
1995 அந்தோலன் கோவிந்தா மம்தா குல்கர்னி சராசரி
1995 கர்தவ்யா சஞ்சய் கபூர் ஜூஹி சாவ்லா தோல்வி
1995 அங்ராக்ஷக் சன்னி தியோல் பூஜா பட் தோல்வி
1995 ஹல்ச்சல் அஜய் தேவ்கான் கஜோல் சராசரிக்கும் கீழே
1995 கன்யாதான் ரிஷி கபூர் மனிஷா கொய்ராலா நின்றுபோனது
1995 தோ கதம் சல்மான் கான் படம் தயாரிக்கப்படவில்லை
1995 பரிணாம் அக்‌ஷய் குமார் படம் தயாரிக்கப்படவில்லை
1995 சல் பே சல் ஜாக்கி ஷெராப் படம் தயாரிக்கப்படவில்லை

குறிப்புகள்

முடிக்கப்படாத படங்களின் பட்டியல் அனைத்தும் ஃபிலிம்ஃபேர் மற்றும் சினிபிளிட்ஸ் பத்திரிக்கைகளால் 1993 ஆம் ஆண்டு மேயில் பதிப்புரிமை பெறப்பட்டிருக்கிறது.


வியாழன், 23 பிப்ரவரி, 2017

நடிகர் தனுஷ் பிறந்த நாள் பிப்ரவரி 25 .


நடிகர் தனுஷ் பிறந்த நாள் பிப்ரவரி 25 .

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.


சொந்த வாழ்க்கை

தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர், 2004-ஆம் ஆண்டில், நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.

திரைப்பட வரலாறு
நடிகராக
2000த்தில்
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்பு
10.05.2002 துள்ளுவதோ இளமை மகேஷ் தமிழ்
04.07.2003 காதல் கொண்டேன் வினோத் தமிழ் பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
05.09.2003 திருடா திருடி வாசு தமிழ்
14.01.2004 புதுக்கோட்டையிலிருந்து சரவணன் சரவணன் தமிழ்
23.07.2004 சுள்ளான் சுப்பிரமணி (சுள்ளான்) தமிழ்
12.11.2004 ட்ரீம்ஸ் சக்தி தமிழ்
14.01.2005 தேவதையைக் கண்டேன் பாபு தமிழ்
01.09.2005 அது ஒரு கனாக்காலம் சீனு தமிழ்
26.05.2006 புதுப்பேட்டை கொக்கி குமார் தமிழ்
15.12.2006 திருவிளையாடல் ஆரம்பம் திருக்குமரன் தமிழ்
27.04.2007 பரட்டை என்கிற அழகுசுந்தரம் அழகுசுந்தரம் தமிழ்
08.11.2007 பொல்லாதவன் பிரபு தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்)
04.042008 யாரடி நீ மோகினி வாசு தமிழ் வெற்றி : விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் கேளிக்கையாளர்)
பரிந்துரை: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரை: விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்)
01.08.2008 குசேலன் அவராகவே தமிழ் கவுரவ தோற்றம்
14.01.2009 படிக்காதவன் ராதாகிருஷ்ணன்(ராக்கி) தமிழ்
2010 களில்
வருடம் திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்பு
14.01.2010 குட்டி குட்டி தமிழ்
05.11.2010 உத்தமபுத்திரன் சிவா தமிழ்
14.01.2011 ஆடுகளம் கே.பி.கருப்பு தமிழ் வெற்றி, சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது
25.02.2011 சீடன் சரவணன் தமிழ் கவுரவ தோற்றம்
08.04.2011 மாப்பிள்ளை சரவணன் தமிழ்
08.07.2011 வேங்கை செல்வம் தமிழ்
25.11.2011 மயக்கம் என்ன கார்த்திக் தமிழ்
30.03.2012 3 (திரைப்படம்) ராம் தமிழ்
25.01.2013 கமத்&கமத் மலையாளம் கவுரவ தோற்றம்
01.05.2013 எதிர்நீச்சல் தமிழ் கவுரவ தோற்றம்
28.06.2013 அம்பிகாபதி (ராஞ்சனா) குந்தன் இந்தி, தமிழ்
19.07.2013 மரியான் மரியான் விஜயன் ஜோசப் தமிழ்
11.10.2013 நய்யாண்டி சின்ன வண்டு தமிழ்
2014 வேலையில்லா பட்டதாரி ரகுவரன் தமிழ்
2015 அனேகன் முருகப்பன்,இளமாறன்,காளி,அஷ்வின் தமிழ்
2015 ஷமிதாப் இந்தி
2015 மாரி மாரி தமிழ்
2016 தங்க மகன் தமிழ்
2016 தொடரி பூச்சியப்பன் தமிழ்
2016 கொடி கொடி , அன்பு தமிழ் 2016 தீபாவளி வெளியீடு

தயாரிப்பாளராக

வருடம் திரைப்படம் இயக்குனர்
2012 3 ஐஸ்வர்யா தனுஷ்
2013 எதிர்நீச்சல்
2014 காக்கா முட்டை
2014 வேலையில்லா பட்டதாரி
2015 காக்கி சட்டை
2015 நானும் ரவுடி தான்
பாடகராக[தொகு]
வருடம் பாடல்(கள்) திரைப்படம் இசையமைப்பாளர் குறிப்புகள்
2004 நாட்டு சரக்கு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் யுவன் சங்கர் ராஜா
2005 துண்ட காணும் தேவதையைக் கண்டேன்
2006 எங்க ஏரியா உள்ள வராத புதுப்பேட்டை யுவன் சங்கர் ராஜா
2010 உன் மேல ஆசைதான் ஆயிரத்தில் ஒருவன் ஜி.வி.பிரகாஷ்
2011 ஓட ஓட ஓட தூரம் & காதல் என் காதல் மயக்கம் என்ன ஜி.வி.பிரகாஷ்

இயக்குனர் ஏ. பி. நாகராசன் பிறந்த நாள் பிப்ரவரி 24 .


இயக்குனர் ஏ. பி. நாகராசன் பிறந்த நாள் பிப்ரவரி 24 .

அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன் (எ) ஏபிஎன் (Akkamappettai Paramasivam Nagarajan பெப்ரவரி 24, 1928–1977), தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்றவர்களில் ஒருவர். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகப் பங்களிப்பு தந்தவர்.

தொடக்ககால வாழ்க்கை
ஏ. பி. நாகராஜன் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது ஏழாவது அகவையிலேயே டிகேஎஸ் சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு என்பனவற்றில் பயிற்சி பெற்றார். அக்குழுவில் பல சிறப்பான வேடங்களில் நடித்து வந்தார். ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தார்.

திரைப்படத் துறை பங்களிப்புகள்
1953ஆம் ஆண்டில் இவரது நாடகம் "நால்வர்" திரைப்படமாக்கப்பட்டபோது அதில் திரைக்கதை, வசனம் எழுதினார். இதுவே அவரது திரைப்பட நுழைவாக அமைந்தது. நால்வர் திரைப்படத்தில் கதைத்தலைவனாக நடித்தார். 1955ஆம் ஆண்டின் நம் குழந்தை மற்றும் நல்ல தங்காள் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1956இல் சிவாஜி கணேசன் நடித்த நான் பெற்ற செல்வம் திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியபோது அதில் நடித்த சிவாஜி கணேசனுடன் அறிமுகமானார். திருவிளையாடல் படத்தில் ஏ. பி. நாகராஜன் புலவர் நக்கீரர் வேடத்தில் நடித்தார். மாங்கல்யம் படத்தில் திரைக்கதை வசனத்தை எழுதியதுடன் நடித்தார்.

1957ஆம் ஆண்டில் நடிகர் வி. கே. ராமசாமியுடன் இணைந்து ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ் என்ற பெயரில் மக்களைப் பெற்ற மகராசி , நல்ல இடத்துச் சம்பந்தம் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். துவக்கத்தில் தற்கால சம்பவங்களையொட்டி இயக்கிய நாகராஜன் 1960களின் இடையில் புராணக் கதைகளை ஒட்டி "சரஸ்வதி சபதம்", "திருவிளையாடல்", கந்தன் கருணை", திருமால் பெருமை" போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் 25. ஐந்து திரைப்படங்களுக்கு கதை ஆசிரியராகவும், 3 திரைப்படங்களில் நடித்துமுள்ளார்.

இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்
வடிவுக்கு வளைகாப்பு (1962)
குலமகள் ராதை (1963)
நவராத்திரி (1964)
திருவிளையாடல் (திரைப்படம்) (1965)
சரஸ்வதி சபதம் (1966)
திருவருட்செல்வர் (1967)
கந்தன் கருணை (1967)
சீதா (1967)
தில்லானா மோகனாம்பாள் (1968)
திருமால் பெருமை (1968)
குருதட்சணை (1969)
வா ராஜா வா (1969)
பாலராஜு கதா (1970)
திருமலை தென்குமரி (1970)
விளையாட்டுப் பிள்ளை (1970)
கண்காட்சி (1971)
அகத்தியர் (1972)
திருப்பதி கன்னியாகுமாரி யாத்ரா (1972)
காரைக்கால் அம்மையார் (1973)
ராஜராஜ சோழன் (1973)
திருமலை தெய்வம் (1973)
குமாஸ்தாவின் மகள் (1974)
மேல்நாட்டு மருமகள் (1975)
ஜெய் பாலாஜி (1976)
நவரத்தினம் (1977)
ஸ்ரீ கிருஷ்ணலீலா (1977)
கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]
நீலாவுக்கு நெறஞ்ச மனசு
மாங்கல்யம் (1954)
பெண்ணரசி (1955)
ஆசை அண்ணா அருமை தம்பி (1955)
நல்ல தங்கை (1955)
நான் பெற்ற செல்வம்

திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்
சம்பூரண இராமாயணம்

கதை எழுதிய திரைப்படங்கள்
டவுன் பஸ் (1955)

பெற்ற விருதுகள்
திருவிளையாடல் (1965) - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
தில்லானா மோகனாம்பாள் (1968) - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது.

இயக்குனர் ஆர். சி. சக்தி நினைவு தினம் பிப்ரவரி 23


இயக்குனர் ஆர். சி. சக்தி நினைவு தினம் பிப்ரவரி 23 

ஆர். சி. சக்தி இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தர்ம யுத்தம், விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு, கமலஹாசன் நடித்த உணர்ச்சிகள், மற்றும் ராஜேஷ், லட்சுமி நடித்த சிறை ஆகிய திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்றார்.

வரலாறு
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த புழுதிகுளத்தில் பிறந்த ஆர்.சி.சக்தி, சிறுவயதிலேயே, கல்வியில் கவனத்தை செலுத்தாமல், சினிமாவில் ஆசையில் இருந்தார். இளைஞராக இருந்தபோதே, நண்பர்களுடன் இணைந்து நாடகக்கம்பெனியை துவங்கினார் சென்னை வந்த சக்தி, சுப்பு ஆறுமுகம் குழுவில் சேர்ந்து, திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிவந்தார். தீவிர முயற்சிக்கு பிறகு, பொற்சிலை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் டான்ஸ் மாஸ்டர் தங்கத்துடன் இணைந்து, அன்னை வேளாங்கண்ணி படத்தில் திரைக்கதை எழுதினார். 1972ஆம் ஆண்டு, உணர்ச்சிகள் படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்தார். தனது முதல் படத்திலேயே, பால்வினை நோய்களை மையமாகக்கொண்டு படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. உணர்ச்சிகள் திரைப்படம் நடிகரான கமலஹாசனை உயரச்செய்தது.

இயக்கிய படங்கள்
ஆண்டு படத்தின் பெயர்
1976 உணர்ச்சிகள்
1978 மனிதரில் இத்தனை நிறங்களா?
1979 தர்மயுத்தம்
மாம்பழத்து வண்டு
1981 ராஜாங்கம்
1982 ஸ்பரிசம்
1983 உண்மைகள்
1984 சிறை
தங்கக்கோப்பை
1985 நாம்
சந்தோஷக் கனவுகள்
தவம்
1986 மனக்கணக்கு
1989 வரம்
1987 கூட்டுப்புழுக்கள்
தாலி தானம்
1989 வரன்
1990 அம்மா பிள்ளை
1993 பத்தினிப்பெண்

திங்கள், 20 பிப்ரவரி, 2017

நடிகர் எம். ஆர். ராதா பிறந்த தினம் பெப்ரவரி 21 , 1907.




நடிகர் எம். ஆர். ராதா பிறந்த தினம் பெப்ரவரி 21 , 1907.
எம். ஆர். ராதா ( பெப்ரவரி 21 , 1907 –
செப்டம்பர் 17 , 1979 ) தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார்.
பிறப்பு
எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு
சென்னையில் பிறந்தார். மதராஸ் ராசகோபால் அவர்களின் மகன் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவவீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார்.
சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார்.
குடும்பம்
நாடகத்தில் தன்னுடன் நடித்த பிரேமாவதி என்பவர் ராதாவுடன் ஒத்த அரசியல் மற்றும் கருத்துச் சாய்வு கொண்டிருந்தார். அவரைக் காதலித்து மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவர் அம்மை நோயால் இறந்து விட்டார். அதே நோயினால் அவரது மகன் தமிழரசனும் இறந்து விட்டான். பின்னர் தனலெட்சுமி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் கீதா என்னும் இலங்கைப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர் மகன்களான
எம்.ஆர்.ஆர்.வாசு , ராதாரவி, மகள்களான
ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோர் திரைப்படத்துறையில் நடித்துள்ளனர்.
எம். ஜி. ஆர். கொலை முயற்சி
முதன்மை கட்டுரை: ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967
1967, சனவரி 12 ஆம் நாள் எம். ஜி. ஆரை அவரது இராமவரம் வீட்டில் எம். ஆர். இராதா சுட்டார். அந்த எம். ஜி. ஆர். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற இராதா
1967 பிப்ரவரி 12 ஆம் நாள் முதல் 1971 ஏப்ரல் 27 ஆம் நாள் முதல் சிறையில் இருந்தார். அப்பொழுது இராதாவின் மகளான ராணி என்றழைக்கப்பட்ட ரஷ்யாவுக்கு திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.
காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, ஈ.வெ.இராமசாமி தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன் -
சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
1968 இறுதியில் இராதாவிற்கு
திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை ,
ரத்தக்கண்ணீர் , லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக
கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் ஈ.வெ.இராமசாமியின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மு. க. முத்து நடிப்பில் வந்த
சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975 -ல்
இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக
ஈ.வெ.இராமசாமியுடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு
மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.
அதன்பின் சிங்கப்பூரிலும்
மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17 -ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.
நடிப்பு
ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937 -ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு
1942 வரை ஐந்து படங்கள் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.
பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து
1954ல் திருவாரூர் கே.தங்கராசு என்பவர் எழுதிய ரத்தக்கண்ணீர் என்ற வெற்றி நாடகத்தை திரை வெளியீடாக
ரத்தக்கண்ணீர் என்ற படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார். 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது ' இழந்தகாதல்' என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது.
எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.
அரசியல் வாழ்வு
துவக்கத்தில் ஈ.வெ.இராமசாமியுடன் தொழில் அடிப்படையில் சில மோதல்கள் ஏற்பட்டாலும், பின்னாளில் அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு
திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளராக இருந்தார். காமராஜரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்த இவர் ஈ.வெ.இராமசாமி காங்கிரசை ஆதரித்தபோது காமராஜருக்காக தேர்தலில் வாக்குசேகரித்தார். இவரது
அரசியல் சாய்வினாலும் தொழிலும் எம். ஜி. ஆருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
தனது சீர்திருத்தக் கருத்துக்களையும்,
பிராமணர் எதிர்ப்பு கருத்துக்களையும், திராவிட இயக்கக் கருத்துக்களையும் இவர் தனது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வெகுவாகப் பரப்பினார். இருந்தும் இவரது எதிர்ப்பாளர்களும்கூட இவரது நடிப்பை ரசித்தனர்.
நடித்த படங்கள்
எம். ஆர். ராதா நடித்து வெளிவந்த சில திரைப்படங்கள்:
ராசசேகரன்
பம்பாய் மெயில்
ரத்தக்கண்ணீர்
ஆயிரம் ரூபாய்
கை கொடுத்த தெய்வம்
பாவ மன்னிப்பு
சித்தி
புதிய பறவை
பலே பாண்டியா
பெற்றால்தான் பிள்ளையா
தாய்க்குப்பின் தாரம்
குமுதம்
கற்பகம்
தாயை காத்த தனயன்
பாகப்பிரிவினை
பணம் பந்தியிலே
நல்லவன் வாழ்வான்
எழுதிய நூல்கள்
ராமாயணத்தை தடை செய் (நூல்)
ராமாயணமா?கீமாயணமா?
இவற்றையும் பார்க்கவும்
எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967
......................................................................
எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்
சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா!
மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர்மன் போர்க்கப்பலான ' எம்டன் ' சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்பதால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடிச் சம்பவங்கள் நிறைய!
அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத்தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியானவர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாகவைத்து இருப்பார் ராதா!
சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. ' நான் ஓர் அநாதை' என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம்
' நாடகத்தில் நடிக்கச் சொல்லிக் கொடுத்தது ஜெகநாதய்யர்தான் ' என்பார்!
ராதா நடித்த முதல் படம் ' ராஜசேகரன்' (1937),
கடைசிப் படம் ' பஞ்சாமிர்தம் ' (1979), சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா - நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!
' உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள் '
என்று சொல்லி, அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டிவிட்டுத்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!
ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன!
ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப் பல கார்களை வைத்திருந்தார். இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். ' நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போக முடியும்? ' என்று கேட்டார்!
நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பார். ' நேற்று பேடிகள் விட்டுச்சென்ற சாமான்கள் ' என்று அதில் எழுதிவைப்பார்!
எம்.ஜி.ஆரை ' ராமச்சந்திரா' என்றும், சிவாஜியை 'கணேசா ' என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!
இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு சபை வளாகத்துக்குப் போய் விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!
என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர்பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, ' நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும் ' என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டுவைக்கப் போய் வெடி மருந்தைக் காயவைத்து, அது வெடித்துச் சிறு விபத்தான சம்பவமும் உண்டு!
எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. ' நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது? ' என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!
நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக்கொண்ட கைதி ஒருவர், ஒரு நாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பிட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போனது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந்தது!
' அடியே காந்தா... ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்... நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்க', ' ஊருக்கு ஒரு லீடர்... அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம்.... நான் சென்ஸ்' - இப்படி ராதாவின் வார்த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்!
ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடித்தவர். 'கீமாயணம் ' என்று நாடகம் போட்டார். ராமன் வேடத்தில் இருக்கும்போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். ' மனம் புண்படுபவர்கள் யாரும் வர வேண்டாம் ' என்று விளம்பரம் கொடுத்தார்!
' நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்? '
என்று கேட்டபோது. ' எதிர்ப்பில்தான், மக்கள் எதை விரும்புகிறார்களோ... அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம் ' என்றார்!
ராதாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எவ்வளவு நீளமான வசனங்களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்குள் ஏற்றிக்கொள்வார். அவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டவை சிறு சிறு வெளியீடுகளாக அந்தக் காலத்தில் வெளிவந்தன. ' அண்ணாவின் அவசரம் ', ' ராமாயணமா? கீமாயணமா? ' என்ற இரண்டும் அதிக சர்ச்சையைக் கிளப்பிவை!
ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்து காட்டிய படங்கள், 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்!
மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை 'கலைஞர் கருணாநிதி ' என்று அழைத்துப்பட்டம் கொடுத்தவர். ' நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும் ' என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்!
'' திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதாதான் கலைத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் '' என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா, 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்!
தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்கள் வந்தால் விரட்டுவார். '' போய்ப் படிங்கடா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடா ''
என்பது அவரது அழுத்தமான கருத்து!
விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும் தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார். ' ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர்... அதனால ஏத்துக்கிறேன் ' என்று அங்கும் கர்ஜித்தார் ராதா!
' மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை'
என்று சொன்னவர் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்!
'' சுட்டாள்.... சுட்டான்.. சுட்டேன் '' என்ற தலைப்பில் நாடகமும் சினிமாவும் எடுக்கத் திட்டமிட்டார். வி.என். ஜானகி சுட்டாள், எம்.ஜி.ஆர்.சுட்டான், நான் சுட்டேன்... என்று விஷயம் அறிந்தவர்களால் விளக்கம் சொல்லப்பட்டது!
'' தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும் '' என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்!

சனி, 18 பிப்ரவரி, 2017

பாடகர் மலேசியா வாசுதேவன் நினைவு தினம் பிப்ரவரி 20



பாடகர் மலேசியா வாசுதேவன் நினைவு தினம் பிப்ரவரி 20

மலேசியா வாசுதேவன் (சூன் 15, 1944 - பெப்ரவரி 20, 2011) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் நடிகரும் ஆவார். எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர்.

வாழ்க்கைக் குறிப்பு
கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் - அம்மாளு தம்பதியருக்கு 8வது மகனாகப் பிறந்தார் வாசுதேவன். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்

மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு, சென்னை வந்து திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார்.

பின்னணிப் பாடகராக
ஜி. கே. வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா... என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." என்ற அவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.

அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன.

நடிகராக
ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார் மலேசியா வாசுதேவன். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப்படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் "சிலந்தி வலை" உட்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை" என்ற படத்துக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

விருதுகள்
தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்குக் கிடைத்தது.

மறைவு
சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011 பெப்ரவரி 20 ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார். அவருக்கு மனைவியும், யுகேந்திரன் என்ற மகனும், பிரசாந்தினி என்ற மகளும் உள்ளனர். யுகேந்திரன் நடிகராகவும் பின்னணிப் பாடகராகவும் உள்ளார். பிரசாந்தினியும் இப்போது பின்னணி பாடி வருகிறார்.

இவர் நடித்த சில திரைப்படங்கள் 

வருடம் திரைப்படம் கதாபாத்திரம் இயக்குனர்
2007 பிறகு
2007 நினைத்து நினைத்து பார்த்தேன்
2007 அடாவடி
2006 கொக்கி
2003 நிலவில் கலங்கமில்லை
2003 கையோடு கை
2002 புன்னகை தேசம்
2001 பத்ரி
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
1999 பூப்பரிக்க வருகிறோம்
1998 தினந்தோறும்
1996 கோபாலா கோபாலா
1996 சும்மா இருங்க மச்சான் சும்மா இருங்க மச்சான்
1996 பூவே உனக்காக
1994 பாண்டியனின் ராஜ்ஜியத்தில்
1994 ஜல்லிக்கட்டு காளை
1994 அமைதிப்படை
1993 கருப்பு வெள்ளை
1993 திருடா திருடா காவல் அதிகாரி l
1990 நீ சிரித்தால் தீபாவளி
1990 எங்கள் சுவாமி ஐயப்பன்
1989 தர்ம தேவன்
1989 அன்னக்கிளி சொன்ன கதை
1989 தென்றல் சுடும்
1988 தெற்கத்தி கள்ளன்
1988 தம்பி தங்க கம்பி
1988 ராசாவே உன்னை நம்பி
1988 கதா நாயகன்
1988 பூந்தோட்ட காவல்காரன்
1987 தீர்த்த கரையினிலே
1987 பரிசம் போட்டாச்சு
1987 ஊர்க்காவலன்
1987 ஜல்லிக்கட்டு
1987 இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
1987 பேர் சொல்லும் பிள்ளை
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு
1986 உன்னிடத்தில் நான்
1986 முதல் வசந்தம்
1985 கொலுசு
1985 ஒரு கைதியின் டைரி
1984 ஆயிரம் கைகள்
1983 எத்தனை கோணம் எத்தனை பார்வை
1982 நிழல் சுடுவதில்லை
1982 இதோ வருகிறேன் இதோ வருகிறேன்
1981 பாக்கு வெத்தலை
1980 சாமந்திப் பூ
1979 வெள்ளி ரத்னம்
1978 நெஞ்சில் ஆடும் பூ ஒன்று l
1977 அவர் எனக்கே சொந்தம்

உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விடங்களில்  கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து கொண்டிருக்கும் குரல் மலேசியா வாசுதேவனுடையது .  தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாசுதேவனின் குரலும் ஜானகியின்  குரலும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன . தமிழிசையோடு கலந்துவிட்ட குரல்கள் அவை . வாசுதேவன் பாடிய உயிரோட்டமான  பாடல்கள் , நமக்கு மகிழ்ச்சியையும் ,சோகத்தையும் , மனதிற்கு இதத்தையும் ,கொண்டாட்டத்தையும் , ஆறுதலையும் ,வாழ்வதற்கான நம்பிக்கையையும் தரக்கூடியவை .

மலேசியாவில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கு தமிழக கிராமிய பாணியிலான பாடும் முறை எப்படி வாய்த்தது ? இளையராஜா முக்கிய காரணமாக இருக்ககூடும் .வாசுதேவன் , வார்த்தை உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் . எல்லாவிதமான பாடல்களிலும் மிகத் தெளிவான வார்த்தை உச்சரிப்பு . கிராமிய பாடல்களில் கிராமத்தான் போன்ற உச்சரிப்பு அவரது காலத்தில் இவரால் மட்டுமே முடிந்திருக்கிறது . எந்த மாதிரியான படாலாக இருந்தாலும் அதற்கேற்றவாறு தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு அந்தக் குறிப்பிட்ட பாடலுக்கு உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளார் .

அவர் பாடிய எந்தப்பாடலாக இருந்தாலும் முதல் இரண்டு வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள் . முதல் இரண்டு வார்த்தைகளிலேயே  அந்தப்பாடலுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகிறார் .அதன் பிறகு, பாடல் முடியும் வரை நாம் அந்தக்குரலின் கட்டுப்பாட்டில் தான் இருப்போம் . தெரிந்தோ தெரியாமலோ சினிமாவில் பாடுவதில் சமத்துவத்தைக் கொண்டுவந்தவர் , வாசுதேவன் அவர்கள் . ஆம் , அவர் கதாநாயகர்களுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை , துண்டு துக்கடா வேடங்களில் நடிப்பவர்கள் ,குணச்சித்திர நடிகர்கள் மற்றும்  நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் அவரது குரல் ஒலிக்கிறது . அதிகமான திருவிழாப் பாடல்கள் பாடியவர் இவராகத் தான் இருப்பார் . 80 ,90 களில் வெளிவந்த பாடல்களில் கோவில் முன்பு ஒரு குழு ஆடத் தயாரானாலே நாம் முடிவு செய்து விடலாம் அடுத்து ஒலிக்கும் குரல் வாசுதேவன் குரலாகவே இருக்கும் .

நடிகரின் பெயராலோ , இசையமைப்பாளரின் பெயராலோ , படத்தின் பெயராலோ மட்டுமே அவரது அநேக பாடல்கள் கேட்கப்படுகின்றன . மலேசியா வாசுதேவன் பற்றி இசை விமர்சகர் ஷாஜி எழுதிய கட்டுரை அந்தப்போக்கை மாற்றியமைத்தது என்றே சொல்லலாம் . மிகச்சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை அது . அந்த ஒரு கட்டுரைக்காக நிறைய உழைத்திருக்கிறார் . அந்தக்கட்டுரை - மலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன் . எல்லோரும் அவரை மறந்திருந்த வேளையில் வாசுதேவன் பற்றி மிக விரிவாக எழுதப்பட்ட கட்டுரையிது . உயிர்மையில் வெளிவந்த இந்தக்கட்டுரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . அவரை முற்றிலுமாக மறந்திருந்த திரையுலகமும் சற்றே திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் முகத்தைத் திரும்பிக்கொண்டது .

ஷாஜி ," இசையின் தனிமை " - என்ற தனது புத்தக கலந்துரையாடல் மூலமாக மலேசியா வாசுதேவனைப் பாராட்டி மகிழ்ந்தார் . அரிதாக அந்த நிகழ்வில் பங்குபெறும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது . அந்த நிகழ்வு பற்றி நான் ஷாஜிக்கு  எழுதிய மின்னஞ்சலை அவரது வலைப்பதிவில் பிரசுரித்தார் . அந்தப் பதிவு - வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள்  . அன்று பேசிய மலேசியா வாசுதேவன் " புகழ் நிலையற்றது "  என்று கூறினார் . இதற்கு அவரது வாழ்க்கையே மிகச் சிறந்த உதாரணம் .

 2010 டிசம்பர் மாதம் பொதிகை தொலைக்காட்சியில் அவரது பேட்டி ஒளிபரப்பானது . அந்தப் பேட்டியில் பாதியை மட்டுமே பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது .அந்தப் பேட்டியில் அவர்,
" நாம் கலைஞர்களை உருவாக்க வேண்டும் , இளையராஜா என்னை உருவாக்கியதைப்போல, இன்று புதுப் பாடகர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை , இரண்டு மூன்று பாடல்கள் மட்டுமே பாட வாய்ப்புக் கிடைக்கின்றன. எல்லா வகையான (சோகம் ,தத்துவம் )  பாடல்களைப்  பாட வாய்ப்பு கிடைப்பதில்லை . சோகம் ,தத்துவம் நிறைந்த பாடல்கள் இன்றைய படங்களில் இல்லை . சோகப்பாடல்கள் மட்டுமே மனிதனின் உணர்வுகளை ஊடுருவும் . புதுப் பாடகர்கள் எந்த மொழியில்  பாடினாலும்  வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க வேண்டும். இந்த  மாதிரியான  தொலைக்காட்சியில் பேசக் கிடைக்கும் வாய்ப்புகள் எனது ஆதங்கத்தை
வெளிப்படுத்தஉதவுகின்றன. ஒரு பாடல் மட்டும் பாடினால் போதும் என்று
தான் சென்னை வந்தேன் . 5000 பாடல்கள் பாடிவிட்டேன்  இதற்குமேல்  என்ன வேண்டும் " என்று கூறினார் .

20-02-2011 அன்று  மலேசியா வாசுதேவன் மரணமடைந்தபோது கூட பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை . அவரது மரணம் ரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் பாதித்தது . இவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு மரணம் வரும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. திரையுலகின் அன்பும் , ஆதரவும் அவருக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருப்பார் . திரையுலகம் செய்யாததை ஷாஜி செய்தார் .ஷாஜியின் அன்பு அவருக்கு நிச்சயம் ஆறுதலாய் இருந்து இருக்கும் . மலேசியா வாசுதேவன்
பற்றிய  ஷாஜியின் கட்டுரையின் அதிர்வுகள் இன்னும் என்னுள்  ஒலித்துக்கொண்டே இருக்கின்றன .

ஆனந்த விகடன் இதழில் ஒரு ஓரத்தில் வெறும் ஒரு பக்கத்தில் மட்டுமே மலேசியா வாசுதேவன் மரணம் பற்றிய குறிப்பு இருந்தது . உண்மையில் அவரது மரணத்தை விட அதிகமாக வலித்தது . ஒரு உன்னதமான இசைக்கலைஞனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை  இவ்வளவுதானா ?. இதே ஆனந்த விகடனில் ஒன்னுக்கும் உருப்படாத விசயங்கள்  எல்லாம்  பக்கத்தை நிரப்பும் போது வாசுதேவன் அவர்களுக்காக ஒரு மூனு பக்கம் கூட ஒதுக்க முடியவில்லை .எந்த மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம் ? வெறும் வணிகம் மட்டும் தான் வாழ்க்கையா ? மற்ற இதழ்களில் அந்த ஒரு பக்கமும் இடம் பெறவில்லை என்றே நினைக்கிறேன் .

நான் பார்த்த வரையில்  பொதிகை தொலைக்காட்சி மட்டுமே வாசுதேவன் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை இரவு 10 . 15 க்கு என்றும் இனிமை பகுதியில் ஒளிபரப்பியது . ஆனால் , அவரது பாடல்களால் பயன் பெரும் அனைவரும் அவரை மறந்து விட்டனர் . அவரது இறப்பை விட வருத்தமான விசயம் ,
 இறந்த பின்பும் அவரை  புறக்கணிக்கும் இந்த உலகம் தான் .

வரலாற்றில் , தனித்துவம் மிக்கவர்களுக்கு எப்போது  முக்கியத்துவம்
கொடுத்துள்ளோம் ? அவர்கள் வாழ்ந்த  காலத்திற்கு பிறகு தான் அவர்களைக்  கொண்டாடி வந்துள்ளோம்  . வாசுதேவன் அவர்களின் மரணச் செய்தியைக் கேட்ட போது எனக்கு மகாகவி பாரதி தான் நினைவுக்கு வந்தார் . அவரை எப்படிப்  புறக்கணித்தார்களோ , அது போலவே வாசுதேவன் அவர்களையும் புறக்கணித்து உள்ளோம் . இன்று எப்படிப்  பாரதியை இந்த உலகம் கொண்டடுதோ , அதுபோலவே  நாளை வாசுதேவன் அவர்களையும் இந்த உலகம் கொண்டாடத்தான் போகிறது .

பூங்காற்று திரும்பத் தான் போகிறது . அதை நாம் பார்க்கத்தான் போகிறோம் . எனக்கு தெரிந்த வரையில் தமிழ் மண்ணோடு கலந்துவிட்ட  இரண்டு  ஆண்  குரல்கள் ஒன்று T.M.சவுந்தர்ராஜன்,  இன்னொன்று மலேசியா வாசுதேவன் .தமிழ், இயல் , இசை , நாடகம்  என்னும்  மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது .
இசைத்தமிழில் இவர்கள் இருவருக்கும் நிச்சயம் இடம் இருக்கும் . காலத்தால் அழிக்க முடியாத குரல்கள் . இவர்களுக்கு யாருமே மாற்று இல்லை .  மரணம், வாசுதேவன் அவர்களின் உடலுக்குத்தான் .
அவரது பாடல்களுக்கு இல்லை .

கலைஞனுக்கு என்றுமே அழிவில்லை !

அவர்கள் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் !
நன்றி --விக்கிபிடியா ,மானிடன்

நடிகை சதா பிறந்த நாள் பெப்ரவரி 17, 1984.


நடிகை சதா பிறந்த நாள் பெப்ரவரி 17, 1984.

சதா (பிறப்பு - பெப்ரவரி 17, 1984; இயற்பெயர் - சதாஃவ் முகமது சையது), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ் தெலுங்கு கன்னட மொழிப்படங்களை நடித்துள்ளார்.இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும்.

சதா நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்...

ஜெயம்
எதிரி
வர்ணஜாலம்
அன்னியன்
பிரியசகி
திருப்பதி
உன்னாலே உன்னாலே

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த தினம் பிப்ரவரி 17


நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த தினம் பிப்ரவரி 17 

சிவகார்த்திகேயன் (ஆங்கிலம்:Sivakarthikeyan) என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். திருச்சி ஜெஜெ இஞ்சினியரிங் கல்லூரியில் பயின்றவர். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார். இவர் விளம்பர நிறுவனத்திற்காக மூன்று நாட்கள் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கவுள்ளார்.

திரைப்பட விபரம்
நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2012 மெரினா செந்தில் நாதன்
2012 3 குமரன்
2012 மனம் கொத்திப் பறவை கண்ணன்
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா பட்டை முருகன்
2013 எதிர்நீச்சல் குஞ்சிதபாதம் என்னும் ஹரீஷ்
2013 வருத்தபடாத வாலிபர் சங்கம் போஸ் பாண்டி
2014 மான் கராத்தே பீட்டர்
2015 காக்கி சட்டை மதிமாறன்
2016 ரஜினி முருகன் ரஜினி முருகன்
2016 ரெமோ' SK(சிவகார்த்திகேயன்) & ரெமோ (ரெஜினா மோத்வானி)

பாடிய பாடல்கள்

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர்
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் டி. இமான்
2014 மான் கராத்தே ராயபுரம் பீட்டர் அனிருத் ரவிச்சந்திரன்
2014 காக்கி சட்டை ஐயம் சோ கூல் அனிருத் ரவிச்சந்திரன்
2015 ரஜினி முருகன் ரஜினி முருகன் டி. இமான்
2015 மாப்பிள்ள சிங்கம் எதுக்கு மச்சான் என். ஆர். ரகுநந்தன்