ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

பாடகி எஸ். ஜானகி பிறந்த நாள்: ஏப்ரல் 23 , 1938 .


பாடகி எஸ். ஜானகி பிறந்த நாள்: ஏப்ரல் 23 , 1938 .

எஸ். ஜானகி (பிறப்பு: ஏப்ரல் 23 , 1938 ) இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின்
குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார்.
நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த
விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி , துளு ,
சௌராஷ்டிரம் , இந்தி , வங்காளம் ,
சமஸ்கிருதம் , சிங்களம் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.
1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.


குடும்பம்

இவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன்
சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். .

2010களில்

ஜானகி சிறிய கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடல்கள் பாடியுள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் அம்மா அம்மா ௭ன்ற பாடலைப் பாடியிருக்கிறார். மேலும் இவர் பேபி, திருநாள் மற்றும் புதிய திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.திருநாள் திரைப்படத்தில் தந்தையும் யாரோ தாயாரும் யாரோ பாடலைப் பாடியுள்ளார்.

விருதுகள்

1986 இல் தமிழ்நாடு அரசின்
கலைமாமணி விருது
2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது
நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது
1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும்,
1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்மபூஷண் விருது மறுப்பு
௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.

இந்திய தேசிய விருதுகள்

வருடம் திரைப்படம் பாடல் மொழி
1976 பதினாறு வயதினிலே
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே தமிழ்
1980 ஒப்போல் ௭ட்டுமனூரம்பழத்தில் மலையாளம்
1984 சித்தாரா வென்னெல்லோ கோடாரி அந்தம் தெலுங்கு
1992 தேவர் மகன் இஞ்சி இடுப்பழகா   தமிழ்

எஸ்.ஜானகி பாடிய சில பாடல்கள்

ஆண்டு திரைப்படம் பாடல் உடன் பாடியவர்கள் இசையமைப்பாளர் பாடலாசிரியர் குறிப்புகள்
1962 கொஞ்சும் சலங்கை
சிங்கார வேலனே தேவா
எஸ் எம் சுப்பையா நாயுடு
கு. மா. பாலசுப்பிரமணியம் ஆபேரி ராகம்
1962 பாதகாணிக்கை பூஜைக்கு வந்த மலரே வா பி. பி. ஸ்ரீனிவாஸ் எம்.எஸ்.வி, டி.கே. ராமமூர்த்தி கண்ணதாசன்
1962 சுமைதாங்கி
எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில்
பி. பி. ஸ்ரீனிவாஸ் எம்.எஸ்.வி, டி.கே. ராமமூர்த்தி கண்ணதாசன்
1962 ஆலயமணி தூக்கம் உன் கண்களை
எம்.எஸ்.வி, டி.கே. ராமமூர்த்தி கண்ணதாசன்
1962 போலீஸ்காரன் மகள்
இந்த மன்றத்தில் ஓடிவரும் பி. பி. ஸ்ரீனிவாஸ் ௭ம் ௭ஸ் வி ராமமூர்த்தி
1963 நெஞ்சம் மறப்பதில்லை
அழகுக்கும் மலருக்கும் பி. பி. ஸ்ரீனிவாஸ் ௭ம் ௭ஸ் விஸ்வநாதன் கண்ணதாசன்
1965 திருவிளையாடல் பொதிகை மலை உச்சியிலே பி. பி. ஸ்ரீனிவாஸ் கே. வி மகாதேவன் கண்ணதாசன்
1969 அடிமைப்பெண் காலத்தை வென்றவன் நீ பி சுசீலா கே.வி.மகாதேவன் கண்ணதாசன்
1970 என் அண்ணன்
நீலநிறம் வானுக்கும் கடலுக்கும்
டி. எம். சௌந்தரராஜன் கே வி மகாதேவன் கண்ணதாசன்
1970 எங்கிருந்தோ வந்தாள்
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
ம. சு. விசுவநாதன் கண்ணதாசன்
1973 பொண்ணுக்கு தங்க மனசு
தஞ்சாவூர் சீமையிலே
பி. ௭ஸ். சசிரேகா,
சீர்காழி எஸ். கோவிந்தராஜன்
ஜி. கே. வெங்கடேஷ் முத்துலிங்கம்
1974 அவள் ஒரு தொடர்கதை
கண்ணிலே ௭ன்னவுண்டு
௭ம் ௭ஸ் விஸ்வநாதன் கண்ணதாசன்
1976 அன்னக்கிளி மச்சான பாத்தீங்களா இளையராஜா பஞ்சு அருணாச்சலம்
1976 உறவாடும் நெஞ்சம்
ஒருநாள் உன்னோடு
௭ஸ் பி பாலசுப்பிரமணியம் இளையராஜா
1977 அவர்கள் காற்றுக்கென்ன வேலி
௭ம் ௭ஸ் விஸ்வநாதன் கண்ணதாசன்
1977 கவிக்குயில் குயிலே கவிக்குயிலே இளையராஜா
1978 அச்சாணி மாதா உன் கோவிலில் இளையராஜா வாலி
1978 சிகப்பு ரோஜாக்கள் நினைவோ ஒரு கமல்ஹாசன் இளையராஜா வாலி
1978 பிரியா ஏ பாடல் ஒன்று ராகம்
கே. ஜே. யேசுதாஸ் இளையராஜா பஞ்சு அருணாசலம்
1979 தர்மயுத்தம் ஆகாய கங்கை பூந்தேன்
மலேசியா வாசுதேவன் இளையராஜா ௭ம் ஜி வல்லவன்
1980 மூடுபனி பருவகாலங்களின் கனவு நெஞ்சில்
மலேசியா வாசுதேவன் இளையராஜா
1980 ஜானி காற்றில் ௭ந்தன் கீதம் இளையராஜா கங்கை அமரன்
1981 கிளிஞ்சல்கள் விழிகள் மேடையாம் டாக்டர் கல்யாண் டி. ராஜேந்தர் டி. ராஜேந்தர்
1981 அலைகள் ஓய்வதில்லை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
௭ஸ் பி பாலசுப்பிரமணியம் இளையராஜா வைரமுத்து
1982 காதல் ஓவியம் நாதம் ௭ன் ஜீவனே இளையராஜா வைரமுத்து
1982 பயணங்கள் முடிவதில்லை
மணியோசை கேட்டு
௭ஸ் பி பாலசுப்பிரமணியம் இளையராஜா முத்துலிங்கம்
1983 ஆனந்த கும்மி ஒரு கிளி உருகுது ௭ஸ் பி சைலஜா இளையராஜா
1983 மூன்றாம் பிறை பொன்மேனி உருகுதே இளையராஜா
1983 இன்று நீ நாளை நான்
மொட்டுவிட்ட முல்லைகொடி ௭ஸ் பி சைலஜா இளையராஜா
1984 உன்னை நான் சந்தித்தேன்
தாலாட்டு மாறிப் போனதே
1985 கற்பூரதீபம் காலம் காலமாய் கங்கை அமரன்
1985 ஆண்பாவம் ௭ன்னை பாடச் சொல்லாதே இளையராஜா வாலி
1985 இதய கோவில் வானுயர்ந்த சோலையிலே
௭ஸ் பி பாலசுப்பிரமணியம் இளையராஜா
1985 குங்குமச்சிமிழ் நிலவு தூங்கும் நேரம்
௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம் இளையராஜா வாலி
1985 அந்த ஒரு நிமிடம் சிறிய பறவை சிறகை விரிக்க
௭ஸ். பி. பாலசுப்பிரமணியம் இளையராஜா
1986 வசந்தராகம் கண்ணன் மனம் ம. சு. விசுவநாதன்
1987 வேதம் புதிது மந்திரம் சொன்னேன் மனோ தேவேந்திரன் வைரமுத்து
1988 அக்னி நட்சத்திரம் ரோஜாப்பூ நாடி வந்தது இளையராஜா வாலி
1988 தாய் மேல் ஆணை மல்லியப்பூ பூ பூத்திருக்கு
௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம் சந்திரபோஸ்
1988 ௭ன் ஜீவன் பாடுது கட்டிவச்சுக்கோ ௭ந்தன்
மலேசியா வாசுதேவன்
1989 அபூர்வ சகோதரர்கள்
வாழவைக்கும் காதலுக்கு ஜே
எஸ் பி பாலசுப்பிரமணியம் இளையராஜா வாலி
1989 ஆராரோ ஆரிரரோ
தானாத் தலையாடுண்டு கே. பாக்யராஜ்
1989 கரகாட்டக்காரன் மாங்குயிலே பூங்குயிலே
௭ஸ் பி பாலசுப்பிரமணியம் இளையராஜா கங்கை அமரன்
1991 புது நெல்லு புது நாத்து கறுத்த மச்சா இளையராஜா முத்துலிங்கம்
1992 குணா உன்னை நானறிவேன் கமல்ஹாசன் இளையராஜா வாலி
1992 வண்ண வண்ண பூக்கள்
கோழி கூவும் நேரத்துல
௭ஸ் பி பாலசுப்பிரமணியம் இளையராஜா
1993 அரண்மனைக்கிளி
ராசாவே உன்னைவிட மாட்டேன்
இளையராஜா வாலி
1993 ஜென்டில்மேன் ஒட்டகத்த கட்டிக்கோ
௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஏ ஆர் ரகுமான்
1993 ௭ஜமான் ஒருநாளும் உனை மறவாத
௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம் இளையராஜா ஆர். வி. உதயகுமார்
1994 காதலன் ௭ர்ராணி குர்ரதானி
௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஏ ஆர் ரகுமான்
1995 கர்ணா மலரே மௌனமா ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் வித்யாசாகர் வைரமுத்து
1998 உயிரே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஏ. ஆர். ரகுமான்
1999 முதல்வன் முதல்வனே சங்கர் மகாதேவன் ஏ. ஆர். ரகுமான் வைரமுத்து
1999 சங்கமம் மார்கழி திங்களல்லவா ஏ ஆர் ரகுமான்
1999 ஜோடி காதல் கடிதம் தீட்டவே உன்னிமேனன் ஏ. ஆர். ரகுமான் வைரமுத்து
2014 வேலையில்லா பட்டதாரி அம்மா அம்மா தனுஷ் அனிருத் ரவிச்சந்திரன் தனுஷ்
2016 திருநாள்
தந்தையும் யாரோ தாயாரும் யாரோ


"நான் ஒழுங்கா படிச்சிருந்தா, என் குரல் வீட்டைத் தாண்டியிருக்காது...!?'' எஸ்.ஜானகி #HBDSJanaki

'60 ​​​​​​ஆண்டுகளாக இசைத் துறையில் ஜொலித்த இசை அரசி, எஸ்.ஜானகியின் பிறந்த தினம் இன்று'. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றிலும் ஒலித்த இவரது குரலுக்கு மயங்காதோர் இல்லை.

" 'வயசான காலத்துலேயும் ஏன் பாடிக்கிட்டு இருக்காங்க. குரலில் தடுமாற்றம் வந்துடுச்சு'னு ஒரு குரல் ஒலிக்கும் முன்பே, கெளரவத்துடன் இசைத் துறையில் இருந்து விலகிக்கிறேன்'' என அதிரடியாக முடிவெடுத்தவர் எஸ்.ஜானகி. யாரும் எந்தச் சூழலிலும் தன்னை குறைசொல்லிவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருப்பவர். இந்திய இசையமைப்பாளர்கள் பெரும்பாலானவர்களின் இசையில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய இவர், இசைத்துறைக்கு வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.
ஆந்திர மாநிலம் பள்ளப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். ஒவ்வோர் ஊரிலும் சில ஆண்டுக்காலம் என மாறி மாறி வசிக்கும் இளமைக் காலம். தந்தை ஆசிரியராக இருந்தாலும், ஜானகிக்குக் கல்வியில் பெரிய அளவில் நாட்டம் இல்லை. அப்பாவிடம் அடியும் திட்டும் வாங்கியபோதும் தனக்குப் பிடிக்காத கல்வியிடம் இருந்து விலகியே இருந்தார். இளம் வயது முதலே ஒரு முடிவு எடுத்தால், அதில் விடாப்பிடியாக இருப்பது ஜானிகியின் குணம். 'இனி என்னதான் செய்றது? படிக்க மாட்டேன்னு சொல்றாள். இனி அவளோட தலையெழுத்தை அவளே முடிவு செய்யட்டும்' என அவரது அப்பா சொல்லிவிட்டார்.

படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தாலும், இசைஞானம் ஜானகியைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. மூன்று வயதிலேயே கேள்வி ஞானத்துடன் கடினமான பாடல்களையும் பாடி அசத்தினார். இவரது ஆர்வத்தைப் பார்த்து, எட்டாவது வயதில் பைடிசாமி என்கிற நாதஸ்வர வித்வானிடம் இசை கற்க அனுப்பினார் தந்தை. ஆர்வமுடன் இசை கற்றுவந்த ஜானகியிடம், 'நீ சங்கீதம் கத்துகிட்டது போதும். நீயே சங்கீதம்தான். இனி உனக்குச் சங்கீதம் கத்துக்கொடுக்கத் தேவையில்லை' என பத்தே மாதங்களில் குருநாதர் வாழ்த்தி அனுப்பினார்.
சென்னைக்கு குடிபெயர்ந்த நிலையில், ஏவிஎம் ஸ்டுடியோவில் பணிக்குச் சேர்ந்தவருக்கு, படிப்படியாகச் சினிமா பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. 1957-ம் ஆண்டு, 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் 'பெண் என் ஆசை பாழானது ஏனோ' என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து அவரது குரலில் ஏராளமான வெற்றிப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. குறிப்பாக, 1962-ம் ஆண்டு 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் இவர் பாடிய 'சிங்கார வேலனே தேவா' பாடலை இன்றளவும் பிற பாடகர்கள் பாட அச்சப்படுவர். அவ்வளவு கடினமான பாடலை இளம் வயதிலேயே பாடி அசத்தினார் ஜானகி. தெலுங்கு, இந்தி மொழிகளைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார். கன்னடம், மலையாள மொழிகளை நன்றாகப் பேசுவார். இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடல்களை ஓய்வின்றி பாடினார்.
தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தபோதும், 70-களின் இறுதியில்தான் எஸ்.ஜானகிக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. பல வெரைட்டியான பாடல்களையும் பாடும் திறமை இருந்தும், அதற்கான முழுமையான வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தது நேரம் உருவானது புதுக்கூட்டணி. 1976-ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' திரைப்படம், ஜானகிக்குத் தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத புகழைக் கொடுத்தது. அந்தப் படத்தில் இவர் பாடிய எல்லாப் பாடல்களும் செம ஹிட். இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தொடர்ந்து ஜானகியின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். அதனால், எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி, தொண்ணூறுகள் வரை, இளையராஜா இசையமைப்பில் எஸ்.ஜானகி பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இளையராஜா இசைடமைப்பில் எஸ்.ஜானகி - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய டூயட் பாடல்கள் இன்றளவும் காதல் மனங்களை வருடும் கீதங்கள். தொடர்ந்து 90-களில் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி தற்போதைய அனிருத் வரையில் எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.
சோலோ, டூயட், தாலாட்டு, குத்து, பக்தி என எல்லா வகையான பாடல்களையும் பாடி, இன்றளவும் சாதனையில் முன்னிலையில் இருக்கும் தென்னிந்திய பின்னணிப் பாடகி இவரே. கஷ்டமான பாடலாக இருந்தாலும், கண்களை மூடாமல், கைகளை அசைக்காமல், முகபாவனைகளில் கஷ்டப்படாமல் மிக எளிதாகப் பாடுவது இவருக்கே உரிய சிறப்பு. குழந்தைக் குரலில், ஆண் குரலில் பாடி எல்லோரையும் ஆச்சர்யப்படவைப்பார். அதிகமான இந்தி மொழிப் பாடல்களைப் பாடிய ஒரே தென்னிந்திய பாடகியும் இவரே. நான்கு தேசிய விருதுகள், பல்வேறு மாநிலங்களின் முப்பதுக்கும் அதிகமான விருதுகளை வென்றவர் ஜானகி. புகழ் உச்சியில் இருந்தபோது மத்திய அரசின் பத்ம விருதுகள் கிடைக்கவில்லை. எனவே, 2013-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த 'பத்ம பூஷண்' விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தென்னிந்திய கலைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை தைரியமாகச் சொன்னார்.
1992-ம் ஆண்டு, தேவர் மகன் படத்தில் பாடிய 'இஞ்சி இடுப்பழகா' பாடலுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதைப் பெற டெல்லி சென்றிருந்த சமயம். ஜானகியைப் பேட்டி எடுத்த செய்தியாளர்களிடம், 'இதே ஆண்டில் 'ரோஜா' படத்தில் 'சின்னச் சின்ன ஆசை பாடலை பாடகி மின்மினி மிகத் திறமையாகப் பாடியிருந்தார். எனக்குக் கிடைத்த தேசிய விருது அந்தப் பொண்ணுக்கு கிடைத்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்' என கூறி நெகிழவைத்தவர். அந்த அளவுக்குத் திறமையான கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் முன்னோடியாக இருந்தவர் ஜானகி.
நடிகர் கமல்ஹாசன் பின்னணிப் பாடகராக இவருடன் இணைந்து பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட். நடிகர் ரஜினிகாந்த் பாடிய ஒரே பாடலான, 'மன்னன்' படத்தின் 'அடிக்குது குளிரு' பாடலில் இனைந்து பாடியவரும் ஜானகிதான்.
எந்த அலங்காரமும் செய்துகொள்ளாத, நகைகள் அணியும் பழக்கம் இல்லாத எளிமையான தோற்றம். எப்போதும் வெள்ளை நிறச் சேலையுடன், கழுத்துவரை நீண்ட ரவிக்கையுடன் இருப்பது ஜானகியின் அடையாளம். 'ஒருவேளை எனக்குப் படிப்பில் ஆர்வம் வந்து படிக்கச் சென்றிருந்தால், வேறொரு துறைக்குப் போயிருப்பேன். என் குரல் வீட்டைத் தாண்டிருக்காது. இப்போ இத்தனை பேர் என் பாடல்களை ரசிச்சுக்கிட்டு இருக்க மாட்டாங்க. கடவுள் எனக்குக் கொடுத்த அன்புப் பரிசு இசைஞானம். நான் சின்ன வயசுல இருந்து ஒரு முடிவெடுத்தால், அது சரியாகத்தான் இருக்கும்' என அடிக்கடிச் சொல்வார்.
''திறமை இருக்கிறது, வாய்ப்பு வருகிறது என நாம் மட்டும் பாடி புகழையும் பணத்தையும் சம்பாதிச்சுக்கிட்டு இருப்பது நியாயமில்லை. அதனால், வருங்கால சந்ததியினருக்கு வழிவிட வேண்டும். அதன்படி மற்றவர்கள் யாரும் என்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறை சொல்லும்முன், என் வருங்கால தலைமுறையினரும் புகழ்பெற வேண்டும்
என நான் அமைதியாக இசைத் துறையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன்'' எனக் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படியே ஓய்வுக் காலத்தை இசையுடனே கழித்து வருகிறார், எஸ்.ஜானகி.
79-ம் பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் எஸ்.ஜானகி, இன்னும் பல்லாண்டுகள் நீடித்த ஆயுளுடனும் புகழுடனும் வாழ வாழ்த்துவோம்!


கண்ணீருடன் விடைப் பெற்றார் 'இசையரசி' எஸ் ஜானகி!

மைசூரு: சினிமா, மேடைக் கச்சேரி அனைத்திலுமிருந்து ஓய்வு பெற்றதாக கண்ணீருடன் அறிவித்தார் இசையரசி எஸ் ஜானகி.
இந்திய சினிமாவில் மிக அதிகம் பாடிய பாடகிகளுள் ஒருவர் எஸ் ஜானகி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக

1952-ல் தொடங்கிய எஸ்.ஜானகியின் இசைப் பயணம் கடந்த ஆண்டு வரை தொடர்ந்தது. பல குரல் வித்தகியாகத் திகழ்ந்தார். இவருக்கு இணையான இன்னொரு குரலைச் சொல்வது கடினம். அப்படியொரு இனிய, பாவமிக்க குரலுக்குச் சொந்தக்காரர் ஜானகி.
பாடுவதை நிறுத்தினார்
சில ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.ஜானகி திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துவிட்டார். மேடைக் கச்சேரிகளையும் குறைத்துக் கொண்டார். டெலிவிஷன் ஷோக்களில் மட்டும் எப்போதாவது தோன்றுவார்.

ஓய்வு பெறுகிறேன்

80 வயதை கடந்த எஸ்.ஜானகி தனது முதுமை காரணமாகவும் இளையவர்களுக்கு வழி விடுவதற்காகவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது எல்லோருக்குமே அதிர்ச்சிதான்.

கடைசி கச்சேரி

இந்த நிலையில் மைசூரில் எஸ்.ஜானகியின் கச்சேரியை நடத்த தொழிலதிபர் மனுமேனன் ஏற்பாடு செய்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் ஜானகி ஒப்புக் கொண்ட கச்சேரியாம் இது.

இசைமழை

இதைதொடர்ந்து நேற்று மைசூருமான கங்கோத்ரியிலுள்ள திறந்தவெளி அரங்கில் எஸ்.ஜானகியின் இசைக் கச்சேரி நடந்தது. சுமார் 4 மணிநேரம் இன்னிசை மழை பொழிந்தது. மிகவும் உணர்வுப்பூர்வமாக கண்ணீர் மல்க அவர் பாடல்களைப் பாடினார். சூரு ராஜ குடும்பத்தினர், கன்னட திரையுலக நடிகர், நடிகைகள் என்று பலரும் இதில் பங்கேற்றனர்.

இனி பாடமாட்டேன்

இறுதியில் கண்ணீருடன் விடை கொடுத்தார் எஸ் ஜானகி. இதுதான் தனது கடைசி இசை நிகழ்ச்சி என்றும் இனி சினிமாவிலும் பாடப் போவது இல்லை என்று கூறியபோது அவரது ரசிகர்களில் பலர் அழுதுவிட்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக