திங்கள், 2 ஏப்ரல், 2018

நடிகர் பிரபுதேவா பிறந்த நாள் ஏப்ரல் 3 , 1973 ,


நடிகர் பிரபுதேவா பிறந்த நாள் ஏப்ரல் 3 , 1973 , 

பிரபுதேவா ( ஏப்ரல் 3 , 1973 , சென்னை ) இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார்.
மின்சாரக் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.
நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை
ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி , வில்லு உட்பட பல
தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தேசியவிருது

மின்சாரக் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலமாக சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

சென்னையில் பிறந்த  பிரபுதேவா ராம்லாத் (லதா) என்ற பெண்ணைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள், ஆனால் மூத்த ஆண் குழந்தை 2008 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக இறந்தது.  பிரபுதேவா நடிகை நயன்தாராவுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை அவருடன் சேர்ந்து வாழ விடும் படியும் மனைவி ராம்லாத் வழக்குத் தொடர்ந்தார்.  அத்துடன், ராம்லாத் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அச்சுறுத்தல் விடுத்தார். ராம்லாத்திற்கு ஆதரவாக பெண்கள் அமைப்புகள் பல குரல் கொடுத்தன.  2012 ஆம் ஆண்டில் நயன்தாரா தாம் பிரபுதேவாவிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விட்டதாக அறிவித்தார்.  பிரபுதேவா பின்னர் மும்பைக்குக் குடிபெயர்ந்து, பின்னர் சென்னையில் தங்கி பல படங்களில் நடித்துவருகிறார்.

திரையுலகில்

பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக
அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் ஆடியிருந்தாலும், முரளி நடித்த இதயம் திரைப்படத்தின் ஏப்ரல் மேயிலே பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். இந்த பாடல் நல்ல புகழ்பெற்றாலும் அதன்பின்னர்
ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இவரது சிறந்த நடனம் இவரை முன்னுக்கு அனுப்பியது. அப்படத்தின் சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. இயக்குனர்
மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலிற்குப் பின்னணியில்
ராஜூ சுந்தரத்துடன் நடனமாடினார். இத்திரைப்படத்திற்கு இவரது தந்தையே நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து
ஷங்கரின் இயக்கத்தில் உருவான காதலன் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இது தமிழில் மட்டும் அன்றி பிறமொழிகளில் வெளியான இதன் மொழிபெயர்ப்புகளும் வெற்றியடைந்தன. இவர் பலபடங்களில் நடித்தபோதும் இவரது நடிப்புத்திறமை ஏழையின் சிரிப்பிலே திரைப்படத்திலேயே வெளிக்காட்டப்பட்டது. இப்படத்திலே இவர் ஓர் பேருந்துகூலி வேலையாளாக நடித்தார். மும்பை : டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் பிரபுதேவா என்று ஏபிசிடி 2 இந்தி படத்தின் ஹீரோ வருண் தவான் தெரிவித்துள்ளார். ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா, சல்மான் யூசுப் கான் உள்ளிட்டோர் நடித்த ஏபிசிடி படம் சூப்பர் ஹிட்டானது. முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஏபிசிடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்து ரெமோ ஏபிசிடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.
நடித்த சில திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி
1988 அக்னி நட்சத்திரம்
"ராஜா ராஜாதி" பாடலில் நடனமாடும் குழுவில் ஒருவராக
தமிழ்
1991 இதயம்
ஏப்ரல் மேயிலே பாடலில் நடனமாடும் குழுவில் ஒருவராக
தமிழ்
1992
உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
உட்டா லங்கடி பாடலில் நடனமாடும் குழுவில் ஒருவராக
தமிழ்
1992 சூரியன்
"லாலக்கு டோல் டப்பிமா" பாடலுக்கு நடனம் ஆடுபவர்களில் முதன்மையானவராக
தமிழ்
1993 பிரதாப்
"மாங்கா மாங்கா" பாடலுக்கு நடனம் ஆடுபவர்களில் முதன்மையானவராக
தமிழ்
1993 ரக்சனா
"கல்லு மந்தி பாசு" பாடலுக்கு நடனம் ஆடுபவர்களில் முதன்மையானவராக
தெலுங்கு
1993 ஜென்டில்மேன்
"சிக்குபுக்கு ரயிலு" பாடலுக்கு நடனம் ஆடுபவர்களில் முதன்மையானவராக
தமிழ்
1993 வால்டர் வெற்றிவேல்
"சின்ன ராசாவே" பாடலுக்கு நடனம் ஆடுபவர்களில் முதன்மையானவராக
தமிழ்
1994 இந்து பட்டாசு தமிழ்
1994 காதலன் பிரபு தமிழ்
1995 ராசய்யா ராசய்யா தமிழ்
1996 லவ் பேர்ட்ஸ் அருண் தமிழ்
1996 மிஸ்டர். ரோமியோ
ரோமியோ
மெட்ராஸ் தமிழ்
1997 மின்சார கனவு தேவா தமிழ்
1997 வி. ஐ. பி. குரு தமிழ்
1998 நாம் இருவர் நமக்கு இருவர்
பிரபு
தேவா தமிழ்
1998 லவ் ஸ்டோரி வம்சி தெலுங்கு
1998 காதலா காதலா சுந்தரலிங்கம் தமிழ்
1999 நினைவிருக்கும் வரை
ஜானகிராமன் (ஜானி) தமிழ்
1999 சுயம்வரம்
கண்ணா
"சிவ சிவசங்கரா" பாடலில் பாடகராகவும்
தமிழ்
1999 டைம் சீனிவாச மூர்த்தி தமிழ்
2000 வானத்தைப் போல செல்வக் குமார் தமிழ்
2000 ஏழையின் சிரிப்பில் கணேசன் தமிழ்
2000 புகார் சிறப்புத் தோற்றம் இந்தி
2000 ஜேம்ஸ்பாண்ட் ஜேம்ஸ் தமிழ்
2000 பெண்ணின் மனதை தொட்டு சுனில் தமிழ்
2000 டபுள்ஸ் பிரபு தமிழ்
2001 உள்ளம் கொள்ளை போகுதே அன்பு தமிழ்
இயக்குனராக
ஆண்டு திரைப்படம் நடிகர்கள் மொழி
2005 நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா
சித்தார்த் ,
திரிஷா தெலுங்கு
2006 பௌர்ணமி பிரபாஸ் ,
திரிஷா தெலுங்கு
2007
போக்கிரி விஜய் , அசின் தமிழ்
சங்கர்தாதா சிந்தாபாத்
சிரஞ்சீவி ,
கிரிஸ்மா கோடாக்
தெலுங்கு
2009
வில்லு விஜய் ,
நயன்தாரா தமிழ்
வான்டட் சல்மான் கான் ,
ஆயிசா இந்தி
2011
எங்கேயும் காதல் ஜெயம் ரவி ,
ஹன்சிகா தமிழ்
வெடி விஷால் ,
சமீரா ரெட்டி தமிழ்
2012 ரவ்டி ரதோர்
அக்சய் குமார் ,
சோனாக்சி சின்கா
இந்தி
2013
ராமையா வஸ்தாவையா
கிரிஷ் குமார் ,
சுருதிகாசன்
இந்தி
ஆர்... ராஜ்குமார்
சாகித் கபூர் ,
சோனாக்சி சின்கா
இந்தி
2014 ஆக்சன் ஜாக்சன்
அஜய் தேவ்கன் ,
சோனாக்சி சின்கா
இந்தி
நடனமாடுபவராக
இதயம் (தமிழ்)
வால்டர் வெற்றிவேல்
பாபா (தமிழ்)
சூரியன் (தமிழ்)
ஜெண்டில்மேன் (தமிழ்)
லக்ஷ்ய ( ஹிந்தி)
புகார் (ஹிந்தி)
ஸக்தி: தி பவர் (ஹிந்தி)
நுவ்வஸ்தானண்டே நேனொத்தண்டானா (தெலுங்கு)
அக்கினி நட்சத்திரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக