செவ்வாய், 5 ஜூலை, 2016

இயக்குநர் பாலா பிறந்த நாள் ஜூலை 11


இயக்குநர்  பாலா பிறந்த நாள் ஜூலை 11
பாலா (ஜூலை 11, 1966.), ஒரு குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

இயக்கிய திரைப்படங்கள்
சேது (1999)
நந்தா (2001)
பிதாமகன் (2003)
நான் கடவுள் (2009).
அவன் இவன் (2011)
பரதேசி (2012)
'இருட்டிண்ட ஆத்மா’னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் 'சேது’. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் 'நந்தா’. ஜெயகாந்தனோட  'நந்தவனத்தில் ஒரு ஆண்டி’தான் 'பிதா மகன்’. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்’, ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து 'நான் கடவுள்’, ரெட் டீ’ நாவலைத்தான் 'பரதேசி' என்று ஒரு படத்துக்கான கதையை முடிவு செய்ததாக பாலா கூறுகிறார்.

புத்தகங்கள்
இவன் தான் பாலா (2004)

பாலா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

மகா கோபத்தையும் மனித நேயத்தையும் திரையில் சிறைப்பிடித்த உக்கிர உணர்வாளன். தமிழ் சினிமா இன்று பயணிக்கும் யதார்த்தத் திசைக்கு வெளிச்சம் பாய்ச்சிய பாலாவின் பெர்சனல் பக்கங்களில் இருந்து..........
*பாலாவின் பெயர், பாலசுப்ரமணியன்.ஆனால், வீட்டில் அனைவரும் அழைப்பது ‘அபேஸ் பாலையா’. வீட்டில் காசு முதற்கொண்டு பொருட்கள் திடீர் திடீரெனக் காணாமல் போனதினால் கிடைத்த சிறப்புப் பட்டம் !
*பாலு மகேந்திராவுக்கும் சிவக்குமாருக்கும் பாலா ‘மூத்த மகன்’. சேரனுக்கு,‘மருமகனே’..... சீமானுக்கு, ‘இளையவரே’.......ரோஹிணிக்கு,‘மகனே’...விக்ரமுக்கு, ‘டார்லிங்’....சூர்யாவுக்கு, ‘அண்ணா’ !
*மணிரத்னம், பாலாவின் ரசிகர்.பாலாவோ.....மணிரத்னத்தின் பக்தர்.இந்த அபூர்வ நட்பு அதிகம் வெளியே தெரியாது. பாலாவைச் சர்வதேச வெளிச்சத்துக்குத் தெரியாது. பாலாவைச் சர்வதேச வெளிச்சத்துக்குத் தள்ளுவதில் மணி சாருக்கு ஏனோ பிரியம் !
*இரண்டாவது வகுப்பு படிக்கும்போதே பீடி குடித்தவர்.....இப்போதும் புகைக் பழக்கம் தொடர்கிறது. யார் முன்னும் தயங்காமல் புகைப்பவர். மனைவி முன் மட்டும் சிகரெட்டைத் தொடவே மாட்டார் !
*விழா, நிகழ்ச்சி என பாலாவைக் கூப்பிட்டால், ஓடி ஒளிவார். மைக் முன் நிறுத்திவிட்டால், ‘வாழ்த்துக்கள்’ என ஒற்றைச் சொல்லோடு மேடையில் இருந்து இறங்கிவிடுவார் !
*பாலா,எப்போதுமே அப்பா பிள்ளை. அப்பாவியாகவே வாழ்ந்த, ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன அப்பாவின் நினைவு மேலெழும்பினாலோ, அவரைப்பற்றிய பேச்சு கிளம்பினாலோ, கண்ணீரில் நனைந்து அழுகையில் முடிவார் !
*மனிதப் பற்களால் ஆன கபால மாலையும்,ஸ்படிக மாலையும் அணிந்திருப்பார். காசி சென்று திரும்பிய பிறகு ஏற்பட்ட மாற்றம் இது !
நான்கு சர்வதேச விருதுகள்,இரண்டு தேசிய விருதுகள், ஐந்து மாநில விருதுகள், II ஃபிலிம்பேர் விருதுகள்....இதுவரை பாலா இயக்கியிருக்கும் நான்கு படங்களுக்காகக் கிடைத்த விருதுகள் இவை !
*தியேட்டரில் படம் பார்க்கும்போது செல்போனில் பேசினாலோ, எஸ்.எம்.எஸ். ஒலி எழும்பினாலோ பாலாவுக்குப் பிடிக்காது. செல்போனில் பேசுவதை நிறுத்துமாறு யாருடனும் சண்டை போடுகிற எல்லைக்குக்கூடச் செல்வார் !
*எப்பவும் காலில் அணிவது ரப்பர் காலணிகள் தான். வேறெந்த வகைக் காலணிகளையும் உபயோகிக்க மாட்டார் !
*அதிரடி ஹ்யூமர் சென்ஸ் உள்ளவர் பாலா.நண்பர்களோடு சேர்ந்தால், பழைய சினிமா பாடல்களும், அதிரடி மிமிக்ரியுமாகக் கலகலப்பு தான் !
*பாலா தீவிரமான நாத்திகர். ஆனால், அவர் மனைவி எப்போது, எந்தக் கோயிலுக்கு அழைத்தாலும் மறுக்காமல் கிளம்பிப் போவார் !
*பாலாவுக்கு டி.வி. நிகழ்ச்சிகளில் பிடித்தவை. விஜய் டி.வி-யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர். சன் டி.வி-யின் ‘கலக்கப்போவது யாரு? வீட்டில் இருந்தால் இரண்டு நிகழ்ச்சிகளையும் தவறாமல் பார்ப்பார் !
*அதிகாலையில் பாலாவைத் துயிலெழுப்ப துணை ராணுவப் படையே தேவைப்படும்.அவரை எழுப்பி ஷீட்டிங்குக்குத் தயாராக்கக் குறைந்தது நான்கு பேராவது மெனக்கெட வேண்டும் !
*பாலாவுக்கு மிகவும் பிடித்தது தனிமை.அதே அளவுக்கு வேடிக்கை பார்ப்பது,வம்பிழுப்பது, ஊர் சுற்றுவதும் பிடிக்கும் !
*ஈழத் தமிழர் மீது மிகுந்த அனுதாபம் உடையவர். புலித் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாகச் சொல்லப்பட்ட போது, மனசு தாங்காமல் அழுதுகொண்டே இருந்தார். ஆனால், பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறவர்களில் பாலாவும் ஒருவர் !
*பாலாவின் திருமண ஏற்பாடுகளின் போது அவரது மாமனார் கொஞ்சம் தயக்கம் காட்ட, விளையாட்டாக ‘பிதா மகன்’ வில்லன் ரோலுக்கு ‘மகாதேவன்’ என்று மாமனார் பெயரை வைத்தது அக்மார்க் பாலா குறும்பு !
*பாலாவின் படத்தில்‘சன்ரைஸ் ஷாட்’ டை நீங்கள் பார்க்கவே முடியாது. அதிகாலையில் எழும் பழக்கம் இல்லாததால் நேர்ந்தது இது.ஆனால், சன்செட் காட்சிகள் ஏகமாகவே இருக்கும் !
*நண்பர்கள் மேல் பெரும் மரியாதையும், அன்பும் வைத்திருப்பவர். சமூகத்தின் பெரிய அந்தஸ்தில் ஆரம்பித்து, சாதாரண நிலைவரை நிறைய நண்பர்கள் அவர் தரப்பில் இருக்கிறார்கள் !
*பாலாவின் ஒருநாள் மெனு இதுதான்.காலையில் இரண்டு இட்லி,மதியம் ஒரு கைப் பிடிச் சாதம்,இரவு இரண்டு தோசை, ‘ராத்திரி ரெண்டு தோசை சாப்பிட்டேன் !’ என கண்கள் விரித்துச் சொல்வார் !
*சற்று இடைவேளைக்குப் பிறகு ஆர்யா, விஷால் நடிக்க கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் படம் செய்கிறார் பாலா. நிச்சயம் குறுகிய காலத் தயாரிப்பு. கலக்கலான காமெடிப் படமாமே !
*‘நான் கடவுள்’ படத்துக்காக ஆர்யா, பூஜா இருவரின் உழைப்புக்கு உறுதியான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேசிய விருதுகள் குறித்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார் !
*இயக்குநர் மணிரத்னம், பின்னணிப் பாடகி சித்ரா ஆகியோரின் மலர்ந்த சிரிப்பினில் ‘உயிரைத் தரிசிக்கிறேன்’ என்பார் பாலா. பாலாவுக்கு இஷ்டமான புன்னகை தெய்வங்கள் இவர்கள் !
*அப்பா பழனிச்சாமி,சிவ பக்தர். அவர் 50 வருடங்களாகப் பூஜை செய்துவந்த குட்டி சிவலிங்கம் மட்டுமே பாலா இப்போது பொக்கிஷமாகப் பாதுகாக்கும் ஒரே பொருள் !
*மிகவும் பிடித்த இடம் பெரிய குளம். பின்னால் உறைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் விநோத அமைதியை எப்பவும் ரசிப்பவர் பாலா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக