வியாழன், 14 ஜூலை, 2016

இசையமைப்பாளர், பாடலாசிரியர் எம். கே. ஆத்மநாதன் நினைவு தினம் ஜூலை 15


இசையமைப்பாளர், பாடலாசிரியர் எம். கே. ஆத்மநாதன் நினைவு தினம்  ஜூலை 15
எம். கே. ஆத்மநாதன் (இறப்பு: சூலை 15, 2013, அகவை 88) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் ஆவார். 120 இற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

எழுதிய சில பாடல்கள்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே,
ஆண்டவன் ஒருவன் இருக்கிறான்,
தடுக்காதே என்னை தடுக்காதே,
குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா.

தமிழ் திரையுலகம் எளிதாய் மறந்து விட்ட ஒரு பெயர். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர் எனப் பல துறைகளில் பரிமளித்தவர். மிகக் குறைந்த பாடல்களே (120) எழுதி யிருந்தாலும் அனைத்துமே முத்தான பாடல்கள்.

உனக்காக எல்லாம் உனக்காக — (புதையல்)
தடுக்காதே என்னை தடுக்காதே — (நாடோடி மன்னன்)
இன்று போய் நாளை வாராய் – (சம்பூர்ண ராமாயணம்)
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு .. திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு (அமரதீபம்)

இவர் டி.கே. எஸ். நாடகங்களுக்கும், எஸ்.வி. சகஸ்ரநாமம் நாடகங்களுக்கும் இசை அமைத்தவர். நாலு வேலி நிலம், ரத்த பாசம் உட்பட 20 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

டி.கே. எஸ். மீது கொண்டிருந்த அன்பை அறிந்து, அவரது நூற்றாண்டு விழாவில் ஆத்மநாதனுக்கு பரிசு வழங்கிக் கெளரவித்தனர். கலைமாமணி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளவர். 88 வயதான அவர் ஜூலை 15 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

இவரது விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே (புதையல்) பாடலை மீண்டும் கேட்டுப் பாருங்கள்.

சங்கீதத் தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் கொள்ள உள்ளம் நாடுதே

என நாயகன் பாட,

மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்பகீதம் பாடுவோம் வாழ்விலே

என நாயகி படும் நாகரீகமான வரிகள்.

நன்றி -விக்கிபீடியா   பனிப்பூக்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக