புதன், 20 ஜூலை, 2016

நடிகை ஸ்ரீவித்யா பிறந்த தினம் ஜூலை 24 .


நடிகை ஸ்ரீவித்யா  பிறந்த தினம் ஜூலை 24 .
ஸ்ரீவித்யா (1953 - 2006) ஒரு புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகள். இவர் 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை நடித்து வந்தார். 2003ஆம் ஆண்டு மார்புப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 2006, அக்டோபர் 19ஆம் தேதி இறந்தார்.

நடித்த திரைப்படங்கள்
இவர் நடித்த சில திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ்
அபூர்வ ராகங்கள்
கண்ணெதிரே தோன்றினாள்
காதலுக்கு மரியாதை
நம்பிக்கை நட்சத்திரம்
ஆசை 60 நாள்
ஆறு புஷ்பங்கள்
துர்க்கா தேவி (திரைப்படம்)
ரௌடி ராக்கம்மா
இளையராணி ராஜலட்சுமி
அன்புள்ள மலரே
எழுதாத சட்டங்கள்
இவர்கள் வித்தியாசமானவர்கள்
நன்றிக்கரங்கள்
சித்திரச்செவ்வானம்
இமயம் (திரைப்படம்)
கடமை நெஞ்சம்
சிசுபாலன்
டில்லி டு மெட்ராஸ்
உறவுகள் என்றும் வாழ்க
தங்க ரங்கன்
திருக்கல்யாணம்
ராதைக்கேற்ற கண்ணன்
தளபதி

கமலின் நெஞ்சை விட்டு நீங்காத் தோழி ஸ்ரீ வித்யா;
கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் “ சொல்லத்தான் நினைக்கிறேன்”. 1973ல் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான செல்லுலாய்டில் பூத்த க்ளாசிக் காதல். அதன் பின் 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படம் கமல்- ஸ்ரீவித்யாவின் நட்பை உறுதிசெய்த திரைப்படம். இருவருக்குமான ஜோடி திரைப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் வெற்றியையும் தந்தது.
இப்படத்தின் அதிசய ராகம் என்ற பாடல் காட்சி இன்று வரையிலும் பேசப்படுகிறது. தொடர்ந்து 1976ல் சமஸ்யா என்ற மலையாளப் படத்திலும் பின்னர் ஸ்ரீவித்யாவுடன் உணர்ச்சிகள், அன்னை வேளாங்கண்ணி படத்திலும் இணைகிறார்.

வாணியுடன் கமலுக்கு திருமணம் நடைபெறுகிறது. அதன்பின் எட்டு வருடங்கள் கழித்து 1986ல் புன்னகை மன்னன் படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் பத்மினியாக வரும் ஸ்ரீவித்யா, சாப்ளின் செல்லப்பாவாக வரும் கமல்ஹாசனுடன் நட்பையும் நடிப்பையும் மீண்டும் உறுதிசெய்கிறார். தொடர்ந்து 1989ல் அபூர்வ சகோதரர்கள்,  இந்திரன் சந்திரன், நம்மவர், கடைசியாக காதலா காதலா என்று அவருக்கும் கமலுக்குமான படங்கள் இருக்கின்றன. தொடர்ந்து சில படங்கள், மீண்டும் கேரளாவிற்கே திரும்புகிறார் ஸ்ரீவித்யா.  நோயால் அவதிப்படும் ஸ்ரீவித்யாவின் கடைசி நாட்களில் அவரை மருத்துவமனையிலேயே சென்று சந்தித்து பாசத்தையும், நட்பையும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர் கமல்ஹாசன்.

ஸ்ரீவித்யாவின் அந்திமக் காலத்தில் உங்களைச் சந்திக்கவேண்டும் என்று அவர் விரும்பியதாகவும், நீங்கள் சந்தித்ததாகவும் கேள்விப்பட்டேன். அந்த நட்பு பற்றிக் கூறுங்கள் என்று கமலிடம் கேட்டபோது, “ அவள் இறந்தாலும் இறவா நட்பு” என்று கூறினார். கமலின் மறக்கமுடியாத ஒரே தோழி ஸ்ரீவித்யாவாகத்தான் இருக்கும்.
நன்றி-விக்கிபீடியா ,விகடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக