நடிகர் சூர்யா பிறந்த நாள் ஜூலை 23
சூர்யா (பிறப்பு - ஜூலை 23, 1975), தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார்.[3] மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று மணந்து கொண்டார். இவர்களிற்கு ஓர் பெண்குழந்தை 10 ஏப்ரல் 2007 இல் பிறந்தது.
தனிப்பட்ட வாழ்க்கை
சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது (2012-13) சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.
திரைப்பட வாழ்க்கை
இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார். இவர் நந்தா திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினை வென்றுள்ளார்.
பொது வாழ்க்கை
பொதுச்சேவை மற்றும் தொண்டு
அகரம் எனும் பெயரில் ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள் இயக்குனர் பாத்திரத்தின் பெயர்
2015 சிங்கம் 3 ஹரி துரைசிங்கம்
2015 24 சமந்தா ருத் பிரபு விக்ரம் குமார்
2015 மாசு என்கிற மாசிலாமணி நயன்தாரா , பிரணிதா சுபாஷ் வெங்கட் பிரபு மாசிலாமணி, சக்தி
2014 அஞ்சான் சமந்தா லிங்குசாமி ராஜு பாய்,கிருஷ்ணா
2013 சிங்கம் 2 அனுஷ்கா செட்டி , ஹன்சிகா மோட்வானி ஹரி துரைசிங்கம்
2012 மாற்றான் காஜல் அகர்வால் கே. வி. ஆனந்த் விமலன், அகிலன்
2011 ஏழாம் அறிவு சுருதி ஹாசன் ஏ. ஆர். முருகதாஸ் போதிதர்மர், அரவிந்த்
2010 ரத்த சரித்திரம் பிரியாமணி ராம் கோபால் வர்மா சூரி
2010 சிங்கம் அனுசுகா செட்டி ஹரி துரைசிங்கம்
2009 ஆதவன் நயன்தாரா கே. எஸ். ரவிக்குமார் மாதவன்/ஆதவன்
அயன் தமன்னா கே. வி. ஆனந்த் தேவா
2008 வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா கௌதம் மேனன் சூர்யா, கிருஷ்ணன்
2007 வேல் அசின் ஹரி வெற்றிவேல், வாசு
2006 சில்லுனு ஒரு காதல் ஜோதிகா, பூமிகா சாவ்லா என். கிருஷ்ணா கௌதம்
ஜூன் ஆர் ஜோதிகா ரேவதி எஸ். வர்மா ராஜா
2005 ஆறு திரிஷா ஹரி ஆறு
கஜினி அசின் ஏ. ஆர். முருகதாஸ் சஞ்சய் ராமசாமி
மாயாவி ஜோதிகா சிங்கம்புலி பாலையா
2004 ஆய்த எழுத்து ஈஷா தியோல் மணிரத்னம் மைக்கேல்
பேரழகன் ஜோதிகா சசி சங்கர் சின்னா, கார்த்திக்
2003 பிதாமகன் லைலா பாலா சக்தி
காக்க காக்க ஜோதிகா கௌதம் மேனன் அன்புச்செல்வன்
2002 மௌனம் பேசியதே திரிஷா, லைலா அமீர் கௌதம்
ஸ்ரீ ஸ்ருதி நரசிம்மன் ஸ்ரீ
உன்னை நினைத்து சினேகா, லைலா விக்ரமன் சூர்யா
2001 நந்தா லைலா பாலா நந்தா
பிரெண்ட்ஸ் விஜயலட்சுமி சித்திக் சந்த்ரு
2000 உயிரிலே கலந்தது ஜோதிகா கே.ஆர். ஜெயா சூர்யா
1999 பூவெல்லாம் கேட்டுப்பார் ஜோதிகா வசந்த் கிருஷ்ணா
பெரியண்ணா மானசா எஸ். ஏ. சந்திரசேகர் சூர்யா
சந்திப்போமா பிரீதா விஜயகுமார் ரமேஷ்குமார் சந்துரு
1998 காதலே நிம்மதி கவிதா இந்திரன் சந்த்ரு
1997 நேருக்கு நேர் சிம்ரன் வசந்த் சூர்யா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக