பாடகர் திருச்சி லோகநாதன் பிறந்த தினம் ஜூலை 25.
திருச்சி லோகநாதன் (பிறப்பு ஜூலை 25.இறப்பு: நவம்பர் 17, 1989) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். பல திரையிசைப் பாடல்களைப் பாடியவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
திருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப்பதாகும்.
நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.
திரைப்படங்களில்
இவர் பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல், எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.
இவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948) திரைப்படத்தில் இடம்பெற்ற இனி வசந்தமாம் வாழ்விலே என்ற பாடல்.
திருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள்
கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)
ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்)
அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி)
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (கப்பலோட்டிய தமிழன்)
உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி)
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)
வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபகாவலி)
பொன்னான வாழ்வு (டவுன்பஸ்)
பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்[தொகு]
பட்டினத்தார் (1962 திரைப்படம்)
குடும்பம்
லோகநாதன் நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு டி. எல். மகராஜன், தீபன் சக்கரவர்த்தி ('பூங்கதவே தாள் திறவாய்' என நிழல்கள் படத்தில் பாடியவர்), தியாகராஜன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
குறிப்பிட தகுந்த இரண்டு நிகழ்வுகள்
நகைச்சுவை நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொலுவில் மதுரை சோமு பாடிய பாடலை இரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியைப் பரிசளித்தார்.
சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தைக் குறைக்கச் சொல்ல மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர் டி. எம். செளந்தரராஜன்.
திருச்சி லோகநாதன் பாடல்கள்
* ஆசையே அலைபோலே
* சின்ன அரும்பு மலரும்
* சின்னக் குட்டி நாத்தனா
* அடிக்கிற கைதான் அணைக்கும்
* உண்மை ஒரு நாள் வெளியாகும்
* மண்மீது மானம் ஒன்றே ப்ரதானம்
* நிலவே நீதான் தூது செல்லாயோ?
* இந்த வாழ்வே சொந்தமானால்
* இனிதாய் நாமே இணைந்திருப்போமே
* வெள்ளிப் பனி மலையின்
* கண்களும் கவி பாடுதே
* வாராய் நீ வாராய்
* வஞ்சமிதோ வாஞ்சையிதோ?
* வான மீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே
* வாழ்க்கையின் பாடம்
* உலவும் தென்றல் காற்றினிலே
* திருவெண்காடா
* சாட்டையில்லா பம்பரம் போல்
* சகாயம் யாருமல்லடா
* புருஷ்ன் வீட்டில் வாழப்போகும்
* பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
* பறந்து வந்த பைங்கிளியே
* மாநிலமேல் சில மானிடரால்
* கூவாமல் கூவும் கோகிலம்
* கன்னிப் பருவம் துள்ளுதுங்க
* மாயாபஜார்
* கையில வாங்கினேன் பையிலே போடல்லே
* இன்பம் எங்கும் இங்கே
* இளந்தமிழா உனைக் காண
திருச்சி லோகநாதன் - தமிழ் திரையில் முதல் பின்னணிப்பாடகர். நடராஜன் என்பவரிடம் முறையாக சங்கீதம் பயின்றவர். ஆனால் சம்பள விடயத்தில் கறார் பேர்வழி. இவரைப்பற்றிய இரண்டு விடயங்கள் சுவராஸ்யமானவை.
அவை :
1) நகைச்சுவை நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொலுவில் மதுரை சோமு பாடிய பாடலை இரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலை பெட்டியை திருச்சி லோகநாதன் பரிசளித்தார்.
2) சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூபா 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச் சொல்ல மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்.
திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர் டி. எம். செளந்தரராஜன். ( நன்றி விக்கிபிடியா )
அவர் சுட்டிக்காட்டிய டி.எம்.எஸ். இன் பிரமாண்ட எழுச்சி அதற்குப்பின் பல தசாப்தங்களாக இசைஞானியின் வருகை வரை, மிகத்திறமைசாலியான அவரைத்தாண்டி, எவராலும் முன்னேவர முடியாத ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தத் திருச்சி லோகநாதனுக்கு மூன்று மகன்கள். ..அவர்களும் பாடகர்களே. அவர்களில் மூத்தவர்கள் இருவரான ரி.எல். மகாராஜனையும் அடுத்தவரான தீபன் சகரவர்த்தியையும் ஓரளவுக்கு இசை ரசிகர்களுக்குத் தெரியும் ஆனால் மூன்றாமவரான தியாகராஜன் என்றொருவர் இருக்கிறார்.. அவரைப் பற்றி எவருக்காவது தெரியுமா? அவர் பாடிய பாடலொன்றைப் பற்றித்தெரியுமா ? அதைப்பற்றிய பதிவுதான் இது.
சில பாடல்கள் திடீரென எதிர்பாராத இசையமைப்பாளர்களிடத்திலிருந்து எதிர்பாராத பாடகர் பாடி வெளிவரும்.. சில நாட்களில் மிக. மிகப்பிரபலமாகும், ஆனால் அந்தப் பாடல் இடம்பெற்ற படம் வெளிவராமலோ வெற்றியடையாமலோ போய் அல்லது இசை அறிவில் வறட்சியான இயக்குனரின் படமாக்கலால் அந்தப்பாடல் அநியாயமாக இருந்த இடம் தெரியாமலேயெ மறைந்துவிடும். என் பார்வையில் அப்படிப்பட்ட பாடல்களை சபிக்கப்பட்ட பாடல்களாகவே பார்க்கிறேன்.
ஒரு இசையமைப்பாளரானவர் தான் ஆசையாக உருவாக்கிய மெட்டுக்குள் ரசித்து ரசித்துச் இசை அரெஞ்மெண்ட் செய்வது ஒர் சிற்பியானவன் தனது சிற்பத்தை ரசித்து ரச்சித்துச் செதுக்குவதற்கு ஒப்பானது.
அப்படி ஆசையாக செதுக்கிய ஒரு பாடல் அதன் தாற்பரியம் தெரியாத ஒரு இயக்குநரால் படமாக்கப்பட்டு சிதைக்கப்படுவதால், அல்லது பொருத்தமற்ற நடிகர்களின் தரமற்ற நடிப்பால், அல்லது தரமற்ற, வெளிவராத படத்தில் இடம்பெற்றதால் குரங்குக் கை பூமாலையாகிறது. அவற்றில் ஒரு பாடல்தான் அமுத மழை பொழியும் முழு நிலவிலே..
80 களின் நடுப்பகுதியில் வெளிவந்து பிரபலமாகியிருந்தது இப்பாடல். இந்தப்பாடலை யார் பாடியது என்பது நீண்டகாலமாக ஒரு புரியாத புதிராகவே இருந்தது.
சமீபத்தில்தான் இந்தப்பாடலைப் பாடிய பாடகர் தியாகராஜன் என்றும் இவர் திருச்சி லோகநாதனின் மகன்களில் ஒருவர் என்றும் கேள்விப்பட்டிருந்தேன்.
இவரின் அண்னன்களான ரீ.எல்.மகராஜனும், தீபன் சக்கரவர்த்தியும் ஏற்கனவே தமிழ்த் திரைப்பாடல்களைப்பாடியிருந்தும் அவர்களாலும் நிலையான ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. அதிலும் தீபன் சக்கரவர்த்தி திருமதி உமா ரமணன் அவர்களுடன் பாடிய செவ்வந்திப்பூக்களில் செய்த வீடு, மற்றும் பூங்கதவே தாழ் திறவாய், சுசீலா அம்மாவுடன் பாடிய அரும்பாகி மொட்டாகி பூவாகி .. போன்ற பாடல்கள் அற்புதமான பாடல்கள். இருந்தும் அவராலும் ஒரு இடத்தைப்பிடிக்க முடியவில்லை. அதேநிலைதான் தம்பிக்கும்.
இந்தப் பாடல் படமாக்கப்பட்டிருக்கவில்லையென்றே படுகின்றது. இதன் இசையமைப்பாளர் யார் என்பதும் தெரியவில்லை. எந்த நடிகர்க்காக உருவாக்கப்பட்டது என்பதும் புரியவில்லை.
சில காலங்களின் பின் அநியாயமாகக் காணாமலேயே போய்விட்டது.
எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் தூக்குத் தூக்கியில் சம்பளத்தில் கறாராக இருந்ததால் தமிழ் திரை இசைக்கு டி.எம்.எஸ். உருவாகுவதற்கு விரும்பியோ விரும்பாமலோ காரணமாக இருந்தார் திருச்சி லோகநாதன். இன்று அவரது மகன்கள் திறமைசாலிகளாக இருந்தும் எவ்வளவுதான் முயன்றாலும் அந்தச் சந்தர்ப்பம் நழுவிக் கொண்டே செல்கின்றது.
நன்றி-விக்கிபீடியா ,மெட்ரோ நியூஸ் ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக