வியாழன், 16 மார்ச், 2017

இயக்குநர் கே. சங்கர் பிறந்த தினம் மார்ச் 17.



இயக்குநர்  கே. சங்கர் பிறந்த தினம் மார்ச் 17.

கே. சங்கர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் , திரைக்கதை ஆசிரியர் மற்றும்
திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். 1926 மார்ச்சு 17 அன்று மலபாரில் (தற்போதைய
கேரளம் ) பிறந்த இவர் 80க்கும் தமிழ் ,
தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு
திரை வாழ்க்கை

இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான
ஏவிஎம் தயாரிப்பகத்தில்
படத்தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், பின்னர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் டாக்டர் என்னும் சிங்கள மொழித் திரைப்படமாகும். [2] இவர், எம். ஜி. இராமச்சந்திரன் நடித்த குடியிருந்த கோயில், அடிமைப் பெண் , என். டி. ராமராவ் நடித்த பூகைலாஷ் ,
ஜெயலலிதா நடித்த கௌரி கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக தென்னிந்தியாவின் மூன்று முதல்வர்கள் நடித்த திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர்.
பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பின்னர் தாய் மூகாம்பிகை , வருவான் வடிவேலன் உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார்.  இவர்,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம்
தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப் பெற்றுள்ளார்.


திரைப்பட விபரம்
இது முழுமையான பட்டியல் அல்ல.
ஆண்டு திரைப்படம் பங்காற்ற
இயக்கம் படத்த
1953 லட்கி
1954 சங்கம்
1954 பெண்
1954
சிறீ காளகசுதீசுவரா மகாத்யம்
1956 நாக தேவதை
1958 பூகைலாஷ்
1958 பூகைலாஷ்
1959 சிவகங்கை சீமை
1960 கவலை இல்லாத மனிதன்
1960 கைராசி
1961 அரப்பவன்
1962 சூலா
1962 பாத காணிக்கை
1962 ஆலயமணி
1962 ஆடிப்பெருக்கு
1963 ஏழை பங்காளன்
1963 பணத்தோட்டம்
1963 பரோசா
1963 இது சத்தியம்
1964 ராஜ்குமார்
1964 ஆண்டவன் கட்டளை
1964 வீரக்கனல்
1965 பஞ்சவர்ணக் கிளி
1965 கலங்கரை விளக்கம்
1965 அன்புக்கரங்கள்
1966 சந்திரோதயம்
1966 கௌரி கல்யாணம்
1968 குடியிருந்த கோயில்

மறைவு

தனது மனைவி மற்றும் 8 குழந்தைகளுடன் வசித்து வந்த சங்கர், மாரடைப்பின் காரணமாக 2006 மார்ச்சு 5 அன்று இரவு 7 மணியளவில் தனது 80 ஆவது அகவையில் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக