ஞாயிறு, 19 மார்ச், 2017

நடிகர் சோபன் பாபு நினைவு தினம் மார்ச் 20, 2008.



நடிகர் சோபன் பாபு நினைவு  தினம் மார்ச் 20, 2008. (ஜெயலலிதாவின் காதலர்)
சோபன் பாபு (சனவரி 14, 1937 – மார்ச் 20, 2008) இந்திய திரைப்பட நடிகராவார். இவர்
தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்தார். நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருது, ராஸ்டிரிபதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
விருதுகள்
சனாதிபதி விருது நடிப்பிற்காக ([பங்காரு பஞ்சாரம் (1969).
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்:
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - (1974)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - ஜீவன ஜோதி (1975)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - சுகடு (1976)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு- கார்த்திக தீபம் (1979)
சிறந்த நடிகருக்கான நந்தி விருது
ஜீவன ஜோதி (1975)
சரட (1973)
காலம் மாறிப்போயிந்தி (1972)




நடிகர் சோபன் பாபு பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
இங்கு நடிகர் சோபன் பாபு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் அவரது வாழ்க்கை பற்றி கூறப்பட்டுள்ளது.
தெலுங்கு திரை உலகின் முக்கிய நாயகர்களில் மறக்க முடியாத நடிகர் சோபன் பாபு . ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வறுமையை உணர்ந்து, சட்டப்படிப்பு படித்துக் கொண்டே நடிப்பில் வாய்ப்பு தேடி, பல தடைகளை கடந்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொண்ட நடிகர்.
பிறப்பு!
சோபன் பாபு 1937 ஜனவரி 14-ம் நாள் பிறந்தவர். இவரது தாய்மொழி தெலுங்கு. இவரது தந்தை பெயர் உப்பு சூர்யா நாராயண ராவ், தாய் ராம துளசம்மா. நடிகர் சோபன் பாபுவின் இயற்பெயர் உப்பு சோபன சலபதிராவ்.
குழந்தை பருவம்!
ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் தான் சோபன் பாபு. வீட்டில் இவர் தான் மூத்த மகன். இவரது தந்தை சூர்ய நாராயண ராவ் ஒரு விவசாயி. அம்மா துளசம்மா வீட்டு மனைவி. இவருக்கு மூன்று தங்கைகள் ஒரு தம்பி. சிறு வயதிலேயே பொருளாதார பிரச்சனைகள் பற்றி பெரிதும் அறிந்தவர் சோபன் பாபு. இதனால் தனது கடமைகளை நன்கு உணர்ந்தே வளர்ந்தார்.


சினிமா!
தெலுங்கு சினிமா உலகில் முக்கிய கதாநாயகனாக திகழ்ந்தவர் சோபன் பாபு. ஆனால், இந்த சினிமா பயணத்தின் பாதை எப்படி துவங்கியது என தானே அறியவில்லை என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தனது சினிமா பாதை ஒரு நாடக மேடையில் துவங்கியதாகவும் சோபன் பானு கூறியிருந்தார்.
தடைகள்!
சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே பல ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு தேடி அலைந்த காலம். காலையில் கல்லூரி, மதியத்திற்கு மேல் வாய்ப்பு தேடி தெருக்களில் சுற்றியதாக சோபன் பாபு கூறியிருக்கிறார்.
புகைப்படங்கள்...
கையில் தனது புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை ஏந்திக் கொண்டு வாய்ப்புகள் தேடி பல இடங்கள் ஏறி இறங்கியதாகவும் சோபன் பாபு கூறியுள்ளார். அனைத்திற்கும் பலனாக 1959-ல் ராமாராவ் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை தழுவியது.
சோபன் பாபுவை காப்பற்றிய நடிகர்கள்!
தெலுங்கு சினிமா உலகின் சூப்பர்ஸ்டார்கள் ராமாராவ், நாகேஸ்வர ராவ் தான் தன்னை காப்பாற்றினர். அவர்கள் தான் என்னை ஊக்கவித்து நடிக்க கதாபாத்திரங்கள் கொடுத்து உதவியதாகவும் சோபன் பாபு கூறியுள்ளார்.


வெற்றிக்கு பிறகு!

வீரா அபிமன்யு எனும் சூப்பர்ஹிட் படம் அளித்த பிறகு 1965 - 1969 வரை என நான்கு ஆண்டுகள் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்தார் சோபன் பாபு. இதற்கு காரணம் தான் மட்டுமே வாழ்க்கை அல்ல, தனது குடும்பத்திற்காகவும் வாழவேண்டும் அதற்காக தான் நான்கு ஆண்டுகள் இடைவேளை. நடிப்பு ஒரு புறம் இருந்தாலும், குழந்தைகள் வளர்ப்பு, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதும் முக்கியம் என்று சோபன் பாபு கூறி இருந்தார்.

200 படங்கள்!
1959 முதல் 1996 வரை சோபன் பாபு மொத்தம் 230 படங்கள் நடித்துள்ளார். இதில் 200 படங்களுக்கும் மேல் கதையின் முதன்மை நாயகனாக நடித்தவை ஆகும்.
விருதுகள்!
நான்கு முறை பிலிம் பேர் விருதுகளும், ஐந்து முறை நந்தி விருதுகளும் பெற்றுள்ளார் சோபன் பாபு. இது போக மதராஸ் பிலிம் ஃபேன்ஸ் விருதை 9 முறை பெற்றுள்ளார் சோபன் பாபு.

மரணம்!
மார்ச் 20, 2008-ல் சென்னையில் தனது 71 வது வயதில் காலமானார் நடிகர் சோபன் பாபு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக