திங்கள், 20 மார்ச், 2017

நடிகை ஷோபனா பிறந்த நாள் - மார்ச் 21, 1966.



நடிகை ஷோபனா பிறந்த நாள் - மார்ச் 21, 1966.

ஷோபனா (பிறப்பு - மார்ச் 21, 1966) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.
மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர் ஷோபனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும் கூட.

எனக்குள் ஒருவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷோபனா, தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் மோகன்லால், சுரேஷ்கோபியுடன் இவர் நடித்த ‘மணிசித்ரதாழ்’ திரைப்படம் (தமிழில் ‘சந்திரமுகி’) இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. சமீபகாலமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து, பரதநாட்டியத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார் ஷோபனா. மறைந்த நடிகை நாட்டிய பேரொளி பத்மினி இவரது உறவினர். நாட்டியத்திற்காக எனது வாழ்க்கையை அர்பணித்து விட்டேன், என்று சில வருடங்கள் முன்பு கூறினார் ஷோபனா.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள் சில...

இது நம்ம ஆளு
தளபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக