நடிகை எம். எஸ். சுந்தரிபாய் நினைவு தினம் மார்ச் 12 .2006).
சுந்தரிபாய் அல்லது எம். எஸ். சுந்தரிபாய் (M. S. Sundari Bai or Sundarabai) (1923 - 12 மார்ச்சு 2006) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி பின் கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர். சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை. இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவரது பெற்றோர்கள், முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுத் தந்தனர்.
திரைப்படங்கள்
1937இல் சுகுணசரசா என்ற படத்தில் முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. ஜெமினி நிறுவனத்தின் முதல் படமான மதனகாமராஜன் படத்தில் கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். பின் கொத்தமங்கலம் சுப்புவின் மூன்றாவது மனைவியானார் சுந்தரிபாய்.
1945இல் ஜெமினி நிறுவனத்தார் தயாரித்த கண்ணம்மா என் காதலி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம். கே. ராதா நடித்தார்.
1948இல் ஜெமினி நிறுவனத்தின் மிகப்பெரிய தயாரிப்பான சந்திரலேகா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
ஜெமினியின் வெற்றிப்படமான சம்சாரம் திரைப்படத்தில் வில்லி வேடத்தில் நடித்தார். வள்ளியின் செல்வன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
பிற திரைப்படங்கள்
ஆத்மி (1939)[2]
நந்தனார் (1942)
தாசி அபரஞ்சி (1944)
மிஸ் மாலினி (1947)
மூன்று பிள்ளைகள் (1952)
அவ்வையார் (1953)
பொம்மை கல்யாணம் (1958)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
தெய்வப்பிறவி (1960)
படிக்காத மேதை (1960)
அன்னை இல்லம் (1963)
மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966)
செல்வம் (1966)
கணவன் (1968)
தேனும் பாலும் (1971)
அரங்கேற்றம் (1973)
நினைத்ததை முடிப்பவன் (1975)
சில நேரங்களில் சில மனிதர்கள் (1976)
மறைவு
உடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய் 12 மார்ச்சு 2006இல் காலமானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக