வியாழன், 30 மார்ச், 2017

திரைப்படத் தயாரிப்பாளர் இராம. அரங்கண்ணல் பிறந்த தினம் மார்ச் 31 , 1928 .


திரைப்படத் தயாரிப்பாளர் இராம. அரங்கண்ணல் பிறந்த தினம்  மார்ச் 31 , 1928 .

இராம. அரங்கண்ணல் ( மார்ச் 31 , 1928 - ) ஒரு தமிழக எழுத்தாளார், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

அரங்கண்ணல் தஞ்சை மாவட்டம் கோமல் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் இராமகிருஷ்ணன் - ருக்மணி. பள்ளி நாட்களில் காங்கிரசு ஆதரவாளராக இருந்தவர். பின் திராவிட இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டார். பள்ளி இறுதி வகுப்புத் தேறியவுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்பில் (இண்டர்மீடியேட்) சேர்ந்தார். ஆனால் அதனை முடிக்க வில்லை. பதினெட்டாவது வயதில் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ ஏடான
முஸ்லிம் இதழில் துணை ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார்.
1949 முதல் திராவிடநாடு இதழில் பணியாற்றினார். பின் ”அறப்போர்” என்ற இதழையும் தாமே நடத்தினார். 1949 இல்
திராவிடர் கழகத்திலிருந்து
அண்ணாதுரை வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் (திமுக) தொடங்கிய போது அவரை ஆதரித்த முக்கிய தலைவர்களுள் அரங்கண்ணலும் ஒருவர். 1950களிலும் 60களிலும் இவர் எழுதிய சிறுகதைகள் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்ட போது அவற்றுக்குத் திரைக்கதை, வசனமும் எழுதினார். அவ்வாறு வெளியான திரைப்படங்கள்: செந்தாமரை , மகனே கேள்,
பொன்னு விளையும் பூமி, பச்சை விளக்கு மற்றும் அனுபவி ராஜா அனுபவி. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
1962 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். 1967 தேர்தலில் மீண்டும் இதே தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 தேர்தலில்
எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1976 இல் திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பின்னர்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இணைந்தார். 1984 இல் மீண்டும் திமுகவில் சேர்ந்தார்.
2007-08 ஆம் ஆண்டு இவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.
கலைமாமணி விருது வழங்கியும் சிறப்பித்துள்ளது.

படைப்புகள்

(முழுமையானதல்ல)
புதினங்கள்
வெண்ணிலா
அறுவடை
கடிகாரம்
நினைவுகள்
இதய தாகம்
சிறுகதைகள்
பச்சை விளக்கு
மகளே கேள்
செந்தாமரை
அபுனைவு
நினைவுகள் (தன்வரலாறு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக