ஞாயிறு, 5 ஜூன், 2016

இயக்குனர் பாலு ஆனந்த் நினைவு நாள் ஜூன் 02



பாலு ஆனந்த்

பிரபல டைரக்டர் ஆர்.சுந்தரராஜனிடம், ‘பயணங்கள் முடிவதில்லை’ உள்பட பல படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர், பாலு ஆனந்த். விஜயகாந்த் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி,’ சத்யராஜ் நடித்த ‘அண்ணாநகர் முதல் தெரு’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் டைரக்டராக பிரபலமானார்.

‘ரசிகன் ஒரு ரசிகை,’ ‘உனக்காக பிறந்தேன்,’ ‘ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட காத்தவராயன்,’ ‘சிந்துபாத்’ உள்பட் 20-க்கும் மேற்பட்ட படங் களை பாலு ஆனந்த் டைரக்டு செய்து இருந்தார். கடைசியாக, பவர் ஸ்டார் சீனிவாசனை வைத்து, ‘ஆனந்த தொல்லை’ என்ற படத்தை இயக்கினார். அந்த படம் வெளிவரவில்லை. ‘ராஜாதிராஜா,’ ‘வானத்தைப்போல,’ ‘மனிதன்’ உள்பட பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் இருக்கிறார்.

மாரடைப்பால் மரணம் 

பாலு ஆனந்தின் சொந்த ஊர், கோவை பேரூர் அருகில் உள்ள காளம்பாளையம். சமீபகாலமாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அவர், சொந்த ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஏற்கனவே அவருக்கு ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஜூன் 02   இரவு 11-30 மணிக்கு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். வீட்டில் நாற்காலியில் அமர்ந்த நிலையில், அவர் உயிர் பிரிந்தது. அவருடைய உடல் தகனம், கோவை அருகில் உள்ள வீரகேரளம் மின்சார மயானத்தில் நடந்தது.

குடும்பம் 

மரணம் அடைந்த டைரக்டர்-நடிகர் பாலு ஆனந்துக்கு வயது 61. அவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், ஸ்ரீவேலுமணி என்ற மகளும், ஸ்ரீசரவணன் என்ற மகனும் இருக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக