புதன், 1 ஜூன், 2016

நடிகர் ஜெய்சங்கர் நினைவு நாள் ஜூன் 03


ஜெய்சங்கர் (1938 - ஜூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.


திரைப்படங்கள்
பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார். ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் விவரம் பார்க்க, ஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

சக நடிகர்கள்
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார்.

ரசிகர்கள் அளித்த பட்டப் பெயர்கள்
ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும் காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர். இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.

பெற்ற விருதுகள்
கலைமாமணி விருது
மரணம்
2000-ஆம் ஆண்டு ஜூன் 3- ஆம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62-ஆம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார்.[2] இவரது மறைவிற்கு பின்னர் இவரது மகன் டாக்டர் விஜய் சங்கர், தனது தந்தையின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கினார்.

ஜெய்சங்கர் படங்களில் இடம்பெற்ற சில பாடல்கள். ….

இவர் ஒரு அழகிய பூஞ்சிட்டு
வயசு  ஈரொன்பது பதினெட்டு
உடலது பனிவிழும் மலர்மொட்டு
பேசும் ஒவ்வொரு சொல்லும் தேன்சொட்டு –  காதல் படுத்தும் பாடு
http://www.youtube.com/watch?v=u-DcDKA8PDY

அவள் ஒரு பச்சை குழந்தை
பாடும் குழந்தை
பருவம் பதினாறு – நீ ஒரு மகாராணி

http://www.youtube.com/watch?v=Zdg78yqoaBA

அங்கம் புதுவிதம்
அழகினில் ஒரு விதம்
நங்கை முகம் நவரச நிலவு – வீட்டுக்கு வீடு

http://www.youtube.com/watch?v=JqD6SRwLHuE


மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே  என் கண்ண ஒம்மேலதான் – பாலாபிசேகம்

http://www.youtube.com/watch?v=YC7CWywsuwc

புன்னகையோ பூமழையோ பொங்கிவரும் தாமரையோ
மானினமோ நாடகமோ மாதரசி யார் உறவோ
http://www.youtube.com/watch?v=gfitdf680wE
நித்தம் நித்தம் ஒரு
புத்தம் புதிய சுகம் நான் தேடினேன்
இளமை கொஞ்சும் விழி
தலைமை தாங்கும் உனை என்றும் நாடினேன் – நூற்றுக்கு நூறு

http://www.youtube.com/watch?v=FgDnA_jPldw


சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
அன்பு வெட்கத்தில் விளங்கும் விளக்கம் – குலமா குணமா

http://www.youtube.com/watch?v=xsaZW8MVlys


கண்டேன் கல்யாணப்  பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம் – மேயர் மீனாக்க்ஷி

http://www.youtube.com/watch?v=5pXBJ-irfWk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக