ஞாயிறு, 12 ஜூன், 2016

நடிகர் காக்கா இராதாகிருஷ்ணன் நினைவு நாள் ஜூன் 14


காக்கா இராதாகிருஷ்ணன் அல்லது காகா ராதாகிருஷ்ணன் (இறப்பு: சூன் 14, 2012) தமிழ்த் திரைப்பட உலகின் ஒரு பழம்பெரும் நடிகர். 1940களில் இருந்து திரைப்படங்கள் மற்றும் மேடை நாடக நடிகராகத் திகழ்ந்தவர். சிவாஜி கணேசனை மேடை நாடகத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தவர். 1949ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இராதாகிருஷ்ணன் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆறு அகவையில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்த ராதா கிருஷ்ணன், பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் நாடக குழுவில் சேர்ந்தார். இராதாகிருஷ்ணன் தன்னுடைய முதல் திரைப்படமான மங்கையர்க்கரசியில், வேலையில் சேர்வதற்காகக் காக்காப் பிடிக்க வேண்டி அவருடைய தாயார் கூறியதும், உண்மையான காகத்தைப் பிடித்துக் கொண்டு போய் வேலை கேட்பார். அக்காலத்தில் அந்நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலம். அதன் காரணமாகவே, இவர் காகா இராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார்..

அறுபது வயதுக்குப் பிறகும் திரைப்படங்களில் நடித்த இவரது அண்மையத் திரைப்படங்களான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், உன்னைத்தேடி, காதலுக்கு மரியாதை, மாயி ஆகியவற்றில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து மக்களை கவர்ந்தவர். இவரது பிற குறிப்பிடத்தக்கப் படங்களாக நல்லதம்பி, வண்ணசுந்தரி,‌ சந்திர கிரி, மங்கையர்க்கரசி, உத்தமபுத்திரன், மனோகரா, தாய் மகளுக்கு கட்டியதாலி, தாய்க்குப்பின் தாரம், வந்தாளே மகராசி ஆகியன உள்ளன.

மறைவு
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராதாகிருஷ்ணன், சூன் 14, 2012 மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்[7]. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். 2 மகன்கள், 4 மகள்கள் இருக்கிறார்கள். இராதாகிருஷ்ணன் சென்னை தி.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல், ஆனால் வளர்ந்தது திருச்சி அருகே உள்ள சங்கிலியாண்டபுரம். பிறகு சென்னைக்குக் குடி பெயர்ந்தார்.

குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்
வருடம் திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1949 நல்லதம்பி
1951 வண்ணசுந்தரி
1954 மனோகரா வசந்தன்
1991 குணா
1992 தேவர் மகன்
1997 இருவர்
காதலுக்கு மரியாதை
1998 உதவிக்கு வரலாமா
1999 உனக்காக எல்லாம் உனக்காக
உன்னைத்தேடி
ஹலோ
ரோஜாவனம்
2001 விண்ணுக்கும் மண்ணுக்கும்
மனதை திருடிவிட்டாய்
2004 மானஸ்தன்
வசூல் ராஜா MBBS
2006 இதய திருடன்
2010 என் உயிரும் மேலான

நடிகர் ராதாகிருஷ்ணன் பெயருடன் 'காகா' என் என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பது குறித்து ஒரு சுவையான ப்ளாஷ்பேக். இந்த ப்ளாஷ்பேக்கை சொன்னவரும் ராதாகிருஷ்ணன்தான்.  "மங்கையர்க்கரசி' படத்தில் ஒரு டயலாக் வரும். மதுரம்மா (டிஏ மதுரம்) என்கிட்ட 'நீ அரசாங்கத்துல போய் எப்படியாவது, காக்கா பிடிச்சாவது வேலைல சேர்ந்துடு'ன்னு சொல்லுவாங்க. உடனே நான் அம்மா சொல்லிட்டாங்களேன்னு, ஒரு காக்காவப் புடிச்சுகிட்டுப் போய் வேலை கேட்பேன். வேலை கிடைக்காது. திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொல்லுவேன். நீ சொன்ன மாதிரியே காக்காவப் புடிச்சுக்கிட்டு போய் வேலை கேட்டேன், அப்பவும் கிடைக்கலம்மா. இங்க பாரு காக்கா'ன்னு சொல்லுவேன். அந்த காமெடி அப்போ ரொம்ப பேசப்பட்டது. அதிலிருந்துதான் காக்கா ராதாகிருஷ்ணன்னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சாங்க..." என்றார் ராதாகிருஷ்ணன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக