நடிகை எம். சரோஜா நினைவு தினம் ஏப்ரல் 2 , 2012 .
எம். சரோஜா (இறப்பு: ஏப்ரல் 2 , 2012 ) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவை வேடங்களில் தமது கணவர் கே. ஏ. தங்கவேலுவுடன் 1950 முதல் 1970 வரை பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படத்துறை
தன்னுடைய 14-ம் வயதில் இயக்குநர் கே. சுப்பிரமணியம் அவர்களால் எம். ஜி. ஆருடன் சர்வாதிகாரி (திரைப்படம்) மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். . தமிழ், இந்தி , தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் 300க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களாக
கல்யாணப் பரிசு , அறிவாளி ,
வணங்காமுடி , மருதநாட்டு வீரன் ,
பூலோக ரம்பை , அரசிளங்குமரி ,
வண்ணக்கிளி , தேன் நிலவு , திருடாதே உள்ளிட்டவை அமைந்தன. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி நாடகங்களிலும் நடித்துள்ளார்.
இல்வாழ்க்கை
நடிகர் கே. ஏ. தங்கவேலுவும் சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தார்.
மரணம்
சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த சரோஜா ஏப்ரல் 2 , 2012 அன்று தமது 82வது அகவையில் மாரடைப்பால் காலமானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக